எங்க வீட்டு இளவரசி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் (31-07-2026) வாழ்த்துப் பாடலும்...

10 views
Skip to first unread message

முனைவென்றி நா. வேல்முருகன் சேர்வை

unread,
Jul 30, 2026, 3:26:42 AM (2 days ago) Jul 30
to
பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ  - https://youtube.com/shorts/T0tlz_2vJgs?feature=share

எங்கள் வீட்டு குட்டி இளவரசி நிறைமதிக்கு எட்டாவது பிறந்தநாள் (31-07-2026).

என் முதல் மகள் ரிதன்யா வுக்கு பெயர் வைக்கும் உரிமையை என் மனைவி எடுத்துக் கொண்டு என் மூத்த மகளுக்கு ரிதன்யா என்று பெயர் வைத்தாள்.

என் இளைய மகள் பிறந்தபோது ஹரிணி என்று என் மனைவி பெயர் முடிவு செய்து விட்டாள். ஆனால், இளைய மகளுக்குப் பெயர் வைக்கும் உரிமையை என் மனைவியிடம் போராடிப் பெற்றுக் கொண்டேன்.

கடந்த 2010 ஆம் ஆண்டு "நிலவழகி" என்றபெயரில் எழுதிய கவிதை இது.

எனக்கும்
நம் குழந்தைகளுக்கும்
நிலாச்சோறு
ஊட்டிக்கொண்டிருக்கும்
உன் அழகைப்
பார்த்து இரசிக்க
மேகக் கூட்டங்களை
விலக்கியபடியே
முந்தியடித்துக் கொண்டு
வந்து நிற்கிறது
அந்த நிலா!!

ஆதலால், என் இளைய மகளுக்கு நிலவழகி என்று பெயர் வைக்க முடிவு செய்தேன். என் அப்பா தான் நிறைமதி என்று பெயர் வை. நிலவழகி, நிறைமதி இரண்டுமே நிலாவைக் குறித்த பெயர்கள் தான் என்றார்.

நிறைமதி என்ற பெயருக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன.

1. பௌர்ணமி (முழு நிலா).
2. நிறைய அறிவு உடையவள் ( நிறை - நிறைந்த, முழுமையான, பூரணத்துவமான,   மதி - நிலா, அறிவு ).

2008 மற்றும் 2014 ஆகிய கால கட்டங்களுக்கிடையில் நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். என் அம்மாவுக்கு நள்ளிரவில் தொடர்ந்து விடாமல் பலமுறை phone calls செய்து "இங்கு எனக்கு இருக்கவே பிடிக்கவில்லை. நீ ஏன் என்னிடம் பேசவில்லை" என்றெல்லாம் அம்மாவைத் திட்டும் அளவிற்கு மன அழுத்தத்தில் இருந்த காலமெல்லாம் உண்டு. ஆனால், என் குழந்தைகள் பிறந்தவுடன் "நான் யார் யாருடைய அன்பு கிடைக்காமல், பிரிவைத் தாங்க முடியாமல் அழுதேனோ, மன அழுத்தத்தில் முடங்கிப் போனேனோ அவர்கள் அனைவரின் மொத்த உருவங்களை என் குழந்தைகள் உருவில் பார்த்துப் பார்த்துக் கொஞ்சி வருகிறேன்.அவர்கள் என்னை நினைத்தாலும், மறந்தாலும் அவர்கள் நினைவை நான் பொக்கிஷமாகப் பாதுகாத்துக் கொண்டு வருகிறேன். அவர்கள் இங்கு இந்த மண்ணில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் நினைவு எனக்குள்ளே இருந்து கொண்டே தான் இருக்கிறது.

என் குழந்தைகள் தூங்குவதற்கு முன் எனக்குக் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு என்னிடமிருந்து முத்தம் வாங்கிக்கொண்டு "Good night அப்பா, sweet dreams, I love you அப்பா" என்று சொல்லி விட்டுத் தான் தூங்குகிறார்கள்.

கடந்த ஆறு ஆண்டுகளாக work from home உடன் என் குழந்தைகளை நான் வளர்த்து பராமரித்துக் கொண்டிருக்கிறேன். என் குழந்தைகளைப் பிரியாமல் என் கண்களுக்கு எட்டும் தூரத்தில் வளர்ப்பது என்பது எனக்குக் கிடைத்த வரம்.

இந்தப் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலில் "எங்க வீட்டு தேவதேவதையே" என்று வரும் மெட்டைப் பாடும்போதெல்லாம் ஏதோ திருவிழாவில் துள்ளிக் குதித்து ஆடுவது போன்றதொரு மகிழ்ச்சி.

முதல் இரண்டு வரிகளுக்கு ஒரு விதமான மெட்டு, அடுத்த நான்கு வரிகளுக்கு வேறு விதமான மெட்டு, அடுத்த நான்கு வரிகளுக்கு வேறு விதமான மெட்டு.



--

=================
=  அன்பே கடவுள்  =
=================
முனைவென்றி நா.  வேல்முருகன் சேர்வை,
த/பெ த. நாகராசன் சேர்வை,
௭/௨௧௫-௧ (7/215-1), தேவராஜன் நகர் முதல் தெரு,
எமனேஸ்வரம் - ௬௨௩௭௦௧ (623701),
பரமக்குடி வட்டம்,
இராவணநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு.
அலைபேசி: ௮௭௫௪௯௬௨௰௬ (8754962106). 
வலைப்பூ - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/
-------------
Munaivendri N. Velmurugan servai,
S/O T. Nagarajan servai,
7/215-1, Devarajan Nagar 1st street,
Emaneswaram - 623701,
Paramakudi Taluk,
Ravananathapuram District,
Thamizhnadu.
Mobile: 8754962106
*** 
இராவணனே தமிழர்களாகிய நம்முடைய கடவுளரில் ஒருவர். இராமன் என்பவன் தமிழரை அழிக்கப் புறப்பட்டு வந்த யூதனாவான். எனவே, என்னுடைய மாவட்டம் இராவணநாதபுரம் ஆகும். கடல் சூழ்ந்த தீவிற்கு பெயர் இராவணேஸ்வரம் என்பதே உண்மை.
***
Reply all
Reply to author
Forward
0 new messages