வணக்கம் நண்பர்களே!
2001ஆம் ஆகஸ்ட் 27 அன்று தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு பிறந்தது. கடந்த ஆண்டு வெள்ளி விழா ஆண்டை வரவேற்கும் வகையில் 10 ஆய்வு நூல்களை வெளியிட்டு கருத்தரங்கை நிகழ்த்தினோம்.
இந்த ஆண்டு வெள்ளி விழாவைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி தமிழ்நாட்டின் சென்னையில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறோம். வெள்ளி விழா கொண்டாட்டத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கும் சிறப்பு இலச்சினை பல்வேறு வரலாற்றுச் சூழலின் பின்னணியோடு வருகின்ற நாட்களில் உங்களோடு பகிர்ந்து கொள்ளப்படும்.
இன்றைய காட்சி நமக்குச் சிந்து வெளி நாகரிகத்தைக் காட்டும் வகையில் அமைகிறது.
ஆகஸ்ட் 22ஆம் தேதி வரலாற்று ஆய்வரங்கத்தில் கலந்து கொள்ள இன்றே உங்கள் நாட்காட்டியில் பதிவு செய்து கொள்ளுங்கள்!
அன்புடன்
செயற்குழு, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு