இந்தியாவின் நாட்டுப்பண் தந்த இரவீந்திரநாத தாகூரால் பாஷாச்சாரியர் என்று அழைக்கப்பட்டவர் சுநீதிகுமாரர். தமிழில் குருதேவர் தெபொமீ அவர்களால் நன்னெறிமுருகன் எனத் தமிழில் கையெழுத்திட்டு வாழ்ந்து, மொழியியல் துறைக்கு ஒரு மூத்த பேராசிரியராக விளங்கியவர். வட இந்திய மொழிகளில் திராவிட மொழிகளின் தாக்கம் (முக்கியமாக, தம் தாய்மொழி வங்காளியில்) ஆழமாக இருப்பதை விஞ்ஞான பூர்வமாக ஆய்வேடுகள் எழுதி நிரூபித்தவர் நன்னெறிமுருகர். இந்திய தேசக் கொடியில் அறவாழி (தருமசக்கரம்) திகழக்
காரணமாக இருந்தவர். அவரது மாளிகை போன்ற இல்லம் கட்டிடக்கலையின் மாட்சிகளில் ஒன்று எனக் கல்கத்தாவில் பெயர் வாங்கியது.
இலக்குவனார் திருவள்ளுவன் நன்னெறி முருகன் பெயரை “சுநீர்குமார் சாட்டர்சி” எனக் குறிப்பிடுகிறார். திருத்தம் பெற்றால் இந்தியாவின் 20-ஆம் நூற்றாண்டுப் பாஷாச்சாரியாரின் பெயரும், தமிழ் மொழிபெயர்ப்பும் இணையத்தில் விளங்கும்.
”Friday, February 03, 2012
வளர்தமிழ் பேரார்வலர் டாக்டர் சுநீர்குமார் சாட்டர்சி ~ அறிவோம் அறிஞர்களை!”
தமிழர்கள் அறிஞர் நன்னெறிமுருகன் பணிகளை அறிதல் அவசியமே. கணியில் சேமித்த ஒரு பழைய கட்டுரை பகிர்கிறேன்.
விஷ்ணு பற்றிய ஆழ்வார்கள் பாடல்களுக்கும், குறளில் உள்ள சூரியன் பற்றிய பாடலுக்கும் பொருளால் உள்ள வேறுபாடுகளைப் பற்றி எடுத்துரைத்தேன்.
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.
- இக் குறளுக்கான எனது உரையில் பேரா. நன்னெறி முருகன் பற்றிச்
சில செய்திகள் காணலாகும்:
ஈழத்து விபுலானந்த அடிகள், (பூர்வாசிரமத்தில் எங்கள் உறவினர்), கீதை, திருவாசகம் உரைகள் கண்டு
(பல லட்சம் பிரதிகள் அச்சானது) சித்பவானந்த அடிகள் போன்றோர் இராமகிருஷ்ணமடத்தில் சேர்ந்து இளந்துறவிகள் ஆனவர்கள். சமற்கிருத விற்பன்னர்களாக இருந்தவர்கள் இருவரும். அவர்களுக்கு தீக்ஷை அளித்தவர் சிவானந்த மகராஜ் (அவர் ஒரு மருத்துவ டாக்டர்). விவேகானந்தர் (சச்சிதானந்த மகராஜ்) ஒருசாலை சீடர்கள். அவர்கள் குரு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறப்பில் ஒரு சாட்டர்ஜிதான். ராஜேந்திரசோழன் கங்கைகொண்டான், வங்க மஹாராஜா மகிபாலனை வென்றான். பின் வந்த பால, சேன மன்னர்கள் தமிழகத்திலிருந்து பல அந்தணர்களை அழைத்துச் சென்று சட்ட புஸ்தகங்கள் எழுதி அரசாண்டனர். சாட்டர்ஜிகள் பலர் தமிழகத்துக்கும், வங்கத்துக்கும் உள்ள பழைய உறவு எனக் கேட்டிருக்கிறேன்.
நா. கணேசன்
Suniti Kumar Chatterji
Chatterji, Suniti Kumar (1890-1977) linguist, educationist, litterateur, was born on 26 October, 1890 at Shivpur in Howrah, son of Haridas Chattopadhyay. Suniti Kumar was a meritorious student, and passed the Entrance (1907) from Motilal Free School, ranking sixth, and the FA from Scottish Church College, standing third. In both the BA Honours in English (1911) and MA (1913) examinations he stood first. For his performance in sanskrit, he got the premchand roychand studentship and the Jubilee Research Award. He did his diploma in Phonetics (1909) and DLitt (1921) from London University on an Indian government scholarship. In London, he studied Phonology, Indo-European Linguistics, Prakrit, Persian, old Irish, Gothic and other languages. He then went to Paris and did research at the Sorbonne in Indo-Aryan, Slav and Indo-European Linguistics, Greek and Latin. Returning to India in 1922, he joined Calcutta University as professor. After retirement he was made Professor Emeritus and, in 1963, National Professor.
Suniti Kumar accompanied rabindranath tagore to Malaya, Sumatra, Java, and Bali, where he delivered lectures on Indian art and culture. He represented Calcutta University at the second session of the International Conference on Phonetic Sciences in London and took part in conferences on linguistics in Asia, America, Australia and Africa. As a visiting professor he delivered lectures at both Indian and foreign universities.
He presided over the national language panel of the All-India Hindi Conference in Karachi. He was Speaker of the West Bengal Assembly (1952-58) and President (1969) of the Sahitya Academy.
Among his important publications on both language and literature are the origin and development of the bengali language, Bengali Phonetic Reader, Bangla Bhasatattver Bhumika (Introduction to Bangla Linguistics), Bharater Bhasa O Bhasa Samasya (Language and Language Problem of India), Jati Sangskrti Sahitya (Nation, Culture, Literature), Sangskrti Ki (What is Culture), Rabindra Sangame (Towards Unity with Raindranath), Pashchimer Yatri (Traveller to the West), Europe Bhraman (Travels in Europe), Dvipamay Bharat (India of Many Islands), etc. He was awarded the title of Bhasacharya by Rabindranath Tagore, Sahitya Vachaspati (1948) by Allahabad Hindi Literary Conference and Padmabibhusan (1948) by the Government of India. Suniti Kumar died on 29 May 1977 in Calcutta. [Badiuzzaman]