Re: [MinTamil] Digest for mintamil@googlegroups.com - 3 updates in 2 topics

1 view
Skip to first unread message

WHO AM I

unread,
1:05 PM (1 hour ago) 1:05 PM
to mint...@googlegroups.com

On Tue, Jul 7, 2026, 1:07 PM <mint...@googlegroups.com> wrote:
தேமொழி <jsthe...@gmail.com>: Jul 06 11:09AM -0700

Magudeswaran Govindarajan
<https://www.facebook.com/magudeswaran.govindharajan?__cft__[0]=AZZfc6-Knaa_r81_v0fHCFqVp3UctHQ89TMYThsRtOoWKRO24Ik8OoNVtLb6UuJZTkMMNHOwtviUUSHIuilgrPWEkcAVjbHrhBAnEvhxdzjLI7flNrxFWyphzheJiyYfiwneshvlqLGLzZS2uCfasARRoTYmQseL-l9iKSIAuu_WpgyBLPj9QeNqig_bMVWq1NI&__tn__=-UC%2CP-R>
 
https://www.facebook.com/photo?fbid=27793054946972964&set=a.278177815554048
 
- கவிஞர் மகுடேசுவரன்
 
[image: grammar.jpg]
நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாளில் ‘பொன்னகர்’ இலக்கணக்
குறிப்பு கூறுக - என்று ஒரு வினாவைக் கண்டேன்.
அதற்குத் தந்திருந்த விடை வாய்ப்புகள் இவை :
(A). இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
(B). நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
(C). பண்புத் தொகை.
(D). உவமைத் தொகை.
இவ்விடை வாய்ப்புகள் யாவுமே முழுச்சொற்றொடர் அமைப்பில் அமையாத ‘பொன்னகர்’
என்பதற்கு விடையாகப் பொருந்தும்.
(A). பொன்னை
விற்கும்/வாங்கும்/விளைவிக்கும்/உருக்கும்/மதிக்கும்/கொண்டிருக்கும் நகர் -
என்றால் இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
அருகில் உள்ள பொன்னகர்க்குச் சென்று வளையல், கம்மல் எல்லாம் வாங்கி வந்தாள் -
இங்கே பொன்னகர் என்பது பொன்னை விற்கும் நகர்.
(B). பொன்னுக்குக் கிடைத்த/வாங்கிய/கொடுத்த/ஏங்குகின்ற நகர் என்றால் அது
நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
போரில் வென்ற மன்னனுக்கு ஈடாகப் பொன்னகர் ஒன்று தரப்பட்டது. இங்கே பொன்னகர்
என்பது பொன்னுக்கு ஈடாகக் கிடைத்த நகர்.
(C). பொன்னகர், வெள்ளிநகர், வைரநகர், முத்துநகர், மாணிக்க நகர் என அருகருகே பல
நகரங்கள் இருந்தால் அது இருபெயரொட்டுப் பண்புத் தொகையும் ஆகும்.
(D). பொன்னைப் போன்ற நகர் என்று உவமைத் தொகையாகவும் கொள்ள முடியும். நாங்கள்
வாழும் நகரைப் பற்றி என்ன ஏளனமாக நினைத்தீர்கள் ? பொன்னகராக்கும் அது.
பொன்போன்ற நகர் என்ற பொருளில் உவமைத்தொகை.
இவ்வாறு எந்தச் சொற்றொடர் அமைப்பையும் தாராமல் ஒரு தொகைநிலைத் தொடர்க்கு
இலக்கணக் குறிப்பு கேட்பது தமிழறிவையும் மொழியடிப்படைகளும் மேலோட்டமாகக்
கையாளும் மொழிக்குழு ஒன்றினால்தான் முடியும்.
இலக்கணக் குறிப்பு சொல்வது என்பது ஒன்றுக்கு மட்டுமே சொல்வதன்று. நீராரும்
கடலுடுத்த... என்ற தமிழ்த்தாய் வாழ்த்தின் அனைத்துத் தொடரமைப்புக்கும்
இலக்கணக் குறிப்பு சொல்லும்படி ஒருவரின் தமிழறிவு இருக்கவேண்டும்.
எடுத்துக்காட்டாக வாழ்த்துப்பாவின் ஈரடிகட்கு மட்டும் இருசொல் அமைப்புகளாகப்
பிரித்து இலக்கணக் குறிப்பு சொல்கிறேன், பாருங்கள்.
நீர் ஆரும் - எழுவாய்த் தொடர்
ஆரும் கடல் - பெயரெச்சத் தொடர்
கடல் உடுத்த - இரண்டாம் வேற்றுமைத் தொகை.
உடுத்த நிலம் - பெயரெச்சத் தொடர்
நிலமடந்தை - உருவகம்.
மடந்தைக்கு எழில் - நான்காம் வேற்றுமைத் தொடர்
எழில் ஒழுகும் - எழுவாய்த் தொடர்
ஒழுகும் சீர் - பெயரெச்சத் தொடர்
சீர் ஆரும் - எழுவாய்த் தொடர்
ஆரும் வதனம் - பெயரெச்சத் தொடர்
வதனம் எனத் - எழுவாய்த் தொடர்
எனத் திகழ் - வினையெச்சத் தொடர்
திகழ்பரதம் - வினைத்தொகை
பரதக்கண்டம் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை
கண்டம் இதில் - எழுவாய்த் தொடர்
இவ்வாறு முழுப்பாட்டுக்கும் இலக்கணக் குறிப்பு சொல்ல முடியும். சொல்லவேண்டும்.
அதற்கு முழுப்பாடலும் நமக்குத் தெரியவேண்டும். வெறுமனே ஒரு கேள்வியும்
இலக்கணக் குறிப்புமாய் இருந்தால் எந்தப் படிப்பனையும் சேர்வதாய் ஆகாது.
முழுப்பாட்டுக்கும் இலக்கணக் குறிப்பு சொல்லிவிட்டால் அவரைத்
தமிழ்த்துறைக்குத் தலைவர் ஆக்கவேண்டும். தமிழ்ச் சங்கத்துப் பொறுப்புகளில்
இத்தகைய தகுதியுடையோர் அமரவேண்டும்.
இலக்கணக் குறிப்பினை எங்கேயிருந்து தொடங்கவேண்டும் தெரியுமா ? உங்கள்
பெயரிலிருந்து தொடங்கவேண்டும்.
உங்கள் பெயர்க்கு என்ன இலக்கணக் குறிப்பு ? உங்கள் பெயரும் சொற்றொடர்தானே ?
அவரவர் பெயர்க்கு இரண்டு செய்திகள் முதலில் அவரவர்க்குத் தெரிந்திருக்க
வேண்டும்.
அந்தப் பெயரின் பொருள். அந்தப் பெயரின் இலக்கணக்குறிப்பு. (இலக்கணக் குறிப்பு
என்பது மொழியிலக்கணத்தில் அத்தகைய தொடரமைப்பு பெற்றிருக்கும் பெயர்.)
சுசீலா, லதா, எனில் என்ன பொருளென்றே தெரியாமல் வழங்கிக்கொண்டிருப்பவர்கள்தாமே
நாம் ?
சு - தூய்மை. சீலா - குணம். சுசீலா - தூய நற்பண்பினள்
லதா - கொடி. புஷ்பலதா - பூங்கொடி.
தமிழில் மிகச்சிறந்த இலக்கணக் கட்டமைப்போடு இலக்கணக் குறிப்பினைக்
கொண்டிருக்கின்ற சில பெயர்களைக் கூறுகிறேன், பாருங்கள் ! (இவற்றைத் தமிழ்
வகுப்பு மாணாக்கர்கட்குச் சொல்லிக் கொடுத்தேன்.)
வடிவேல் – வினைத்தொகை (வடித்த வேல்)
வளர்மதி - வினைத்தொகை (வளரும் மதி)
வடிவுக்கு அரசி – நான்காம் வேற்றுமைத் தொடர்
அடியார்க்கு நல்லார் – நான்காம் வேற்றுமைத் தொடர்
மங்கையர்க்கு அரசி - நான்காம் வேற்றுமைத் தொடர்
நச்சினார்க்கு இனியார் - நான்காம் வேற்றுமைத் தொடர்
நாவுக்கு அரசர் – நான்காம் வேற்றுமைத் தொடர்
வணங்கா முடி – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத் தொடர்
சிந்தாமணி - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத் தொடர்
சூடாமணி - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத் தொடர்
மாசிலா மணி - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத் தொடர்
பொய்யாமொழி - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத் தொடர்
இளையராஜா – குறிப்புப்பெயரெச்சத் தொடர்
பிறைசூடன் – இரண்டாம் வேற்றுமைத் தொகை
(பிறையைச் சூடியவன்- சிவன்.)
வைரமுத்து – உம்மைத்தொகை
செந்தமிழ் – பண்புத்தொகை
செந்தாமரை – பண்புத்தொகை
பொன்னன் – குறிப்பு வினைமுற்று
தமிழ் வாழ்நன் = மூன்றாம் வேற்றுமைத் தொகை
(தமிழ் வாணன் என்று புணரும். தமிழால் வாழ்நன்)
பொன்வண்ணன் = உவமைத்தொகை
(பொன்னைப் போன்ற வண்ணன்)
பாரதி(க்குத்) தாசன் – நான்காம் வேற்றுமைத் தொகை
மகுடேசுவரன் என்ற என் பெயர்க்கு என்ன இலக்கணக் குறிப்பு ?
‘மகுடத்தை அணிந்த ஈச்சரன்’ என்ற பொருளில் இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்க தொகை.
உங்கள் பெயர்க்கு என்ன பொருள், என்ன இலக்கணக் குறிப்பு என்று முதலில்
தெரிந்துகொள்ளுங்கள் !
 
On Saturday, June 27, 2026 at 11:27:21 AM UTC-7 தேமொழி wrote:
 
தேமொழி <jsthe...@gmail.com>: Jul 06 08:22AM -0700

[image: Thailand.jpg]
 
தாய்லாந்தில் நடந்த அகழ்வாராய்ச்சி யில் கிடைத்த தங்க மோதிரத்தில் இந்தியாவின்
பிராமி எழுத்துகள்
 
தாய் மற்றும் கீழை மொழிகள் துறை,
தொல்லியல் பீடம், சில்பகோர்ன் பல்கலைக்கழகம்,
பெட்சாபுரி மாநிலம்
 
காணொளி: https://youtu.be/rTu1Qn5OyNA?si=iRUCYmuCO8Dbzugg
 
[image: puthiya thalaimurai.jpg]
 
---
தேமொழி <jsthe...@gmail.com>: Jul 06 08:48AM -0700

AI response :
 
The word "Pusarakhitasa" itself does not name a famous Buddhist deity or
story, it has very strong contextual and linguistic connections to Buddhist
culture and the spread of Buddhism. [1]
The name is a blend of ancient Indian astrology and Buddhist naming
traditions.
------------------------------
1. The Linguistic Connection ("Rakkhita")
The name breaks down into two parts in ancient Prakrit/Pali (the languages
used in early Buddhism): Pusa (Pushya star) and Rakhita (Protected). [2]
 
The suffix "-rakhita" (or Rakkhita in Pali / Rakshita in Sanskrit) means
"protected by".
This naming style was immensely popular among early Buddhists.
In famous early Buddhist texts (like the Mahavamsa), the great Emperor
Ashoka sent out Buddhist missionaries across Asia, and many of these monks
had names ending in "-rakkhita" (such as Maharakkhita, Dhammarakkhita, and
Yonavildhammarakkhita). [3, 4, 5]
 
2. The Link to Emperor Ashoka and Pushya
In Buddhist history, the Pushya (Pusa) constellation holds an important
place: [6, 7]
 
According to the Asokavadana (a famous collection of beautiful Buddhist
legends), Emperor Ashoka's birth star was associated with Pushya. [8]
Ancient Indian merchants who traveled to Southeast Asia often took names
blessed by this constellation for safe travels over the dangerous oceans.
[9, 10, 11]
 
3. Early Merchants Were the First "Missions" of Buddhism
The gold ring belonged to an Indian merchant (Vaishya caste) who traveled
to Thailand. [6]
 
During this era (1,900 to 2,100 years ago), it was Indian merchants who
first brought Buddhism to Thailand and the rest of Southeast Asia. [12, 13]
Monks often traveled on the very same ships as these traders.
A trader carrying a signet ring with an ancient Brahmi name like
Pusarakhitasa represents the exact generation of people who introduced
Buddhist thoughts, scripts, and art styles to the Thai peninsula. [10, 13]
 
------------------------------
 
 
[1]
[https://encyclopediaofbuddhism.org](https://encyclopediaofbuddhism.org/wiki/Puru%E1%B9%A3a)
[2]
[https://www.encyclopedia.com](https://www.encyclopedia.com/reference/encyclopedias-almanacs-transcripts-and-maps/prakrit-literature)
[3]
[https://shaktitva.org](https://shaktitva.org/blog/festivals/rakshabandhan-whose-protection)
[4]
[https://www.divinity.cam.ac.uk](https://www.divinity.cam.ac.uk/files/media/who_is_the_buddha_-_session_4_-_the_buddha_in_buddhist_practice.pdf)
[5]
[https://www.cliffsnotes.com](https://www.cliffsnotes.com/tutors-problems/Religious-Studies/52817762-Religion-scholars-have-classified-Hinduism-as-an-ethnic-religion/)
[6]
[https://abcnews.com](https://abcnews.com/International/wireStory/gold-rings-2000-years-found-dig-thailand-archaeological-134509265)
[7]
[https://www.indy100.com](https://www.indy100.com/science-tech/thailand-gold-rings-don-yai-thong)
[8]
[https://www.livehistoryindia.com](https://www.livehistoryindia.com/story/eras/ashoka-from-guilty-to-great-269-bce-232-bce)
[9] [https://www.instagram.com](https://www.instagram.com/p/DacWg9IGQEd/)
[10] [https://www.instagram.com](https://www.instagram.com/p/DacRoYriM7x/)
[11]
[https://www.newworldencyclopedia.org](https://www.newworldencyclopedia.org/entry/Buddhism)
[12] [https://www.instagram.com](https://www.instagram.com/p/DacWg9IGQEd/)
[13]
[https://huahintoday.com](https://huahintoday.com/hua-hin-news/ancient-gold-ring-found-at-phetchaburi-archaeological-site/)
 
On Monday, July 6, 2026 at 8:22:57 AM UTC-7 தேமொழி wrote:
 
You received this digest because you're subscribed to updates for this group. You can change your settings on the group membership page.
To unsubscribe from this group and stop receiving emails from it send an email to mintamil+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages