இலெமூரியா: தமிழரின் கடைசிக் கண்டம், தொலைந்த கண்டம்

541 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Oct 14, 2012, 4:53:59 AM10/14/12
to seshadri sridharan


இலெமூரியா: தமிழரின் கடைசிக் கண்டம், தொலைந்த கண்டம் 




இலெமூரியாக் கண்டம் அல்லது வேறுவகையில் குமரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டு வரும் நிலப்பரப்பு இந்நாள்களில் அறிஞர் கைகளில் மிகப் பெரும் கவனம் பெற்று வருகின்றது. இக்கள ஆய்வில் முன்னோடியானவர் பசுமலை சோமசுந்தர பாரதியார். அவரைப் பின்பற்றி எம். எசு. பூர்ணலிங்கம் பிள்ளை நெடுங்காலத்திற்கு முன்னம் 'தமிழ் இந்தியா' என்ற நூலை யாத்தார். க. அப்பாதுரையும் இப் பொருண்மைக்கூறு (subject) ஆய்வில் பங்களிப்பு ஆற்றியவர் தாம். இலெமூரியாக் கண்டம் குறித்து முனைவர் பட்டத்திற்கு வழிநடத்துகின்ற ஆய்வேடுகளும் உள்ளன.


தமிழ் மக்களின் தோற்றமும் அவரது பண்பாடும் குறித்த புதிர்மறைவுச் (mystery) செய்தியின் மடிப்பானது இலெமூரியாக் கண்ட நிலைப்படலைச் சுற்றிச்சூழ்ந்த புதிர்மறைவு வெடித்துவெளிப்பட்டு அதோடு அதன் உணமைத் தரவும் உறுதிப்படுமானால் அவிழ்ந்துவிடும். வேதம், தமிழின் செம்மொழிச் சங்க இலக்கியங்கள், கல்வெட்டியல், நிலவரைவியல் (geography) நிலத்தியல் (geology), மற்றும் நிலவடிவியல் (geomorphology) ஆய்வுகள் சிறிதளவு வெளிச்சத்தையும், அதோடு இப்பொருண்மைக்கூறு பற்றிய ஓர் அளவுபட்ட பருமத்திற்கு பருப்பொருளையும் (sizeable volume of material)  எறிந்துள்ளன. ஆயினும் அவை பொறுப்பதிகாரத்தில் உள்ளோரின், மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படாததால் அகன்ற அளவில் அறியப்படவில்லை. கடந்த ஓர் இலக்கம் (1,00,000) ஆண்டுகளில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்கள் குறித்த நிலத்தியல் ஆய்வுகள் அறிவியலாளர்களை கி.மு.80,000 முதல் கி.மு. 2,600 வரையிலாக ஐந்து பெரும் படுவீழ்ச்சிக்குரிய (cataclysmic) மாற்றங்களை வரிசைப்பட்டியிட (table) இயல்வித்தன. இறுதிப் பேரிடர் கி.மு. 3ஆம் ஆயிரஆண்டுகளின் (millenium) இடைக்காலத்தில் நிகழ்ந்தது, இதுவே தமிழ் இலக்கியஙகளில் பதியப்பட்டு உள்ளது. அடிக்கடலுக்குள் குமரிக்கண்டத்தின் அமிழ்வு நிகழ்வானது பின்வருமாறு பல்வேறு கட்டங்களைக் கடந்துள்ளது.


  1. முதல் நிலை         16,000 கி.மு. ஊழிவெள்ளம் (deluge) தொடங்கி இலெமூரியாவின் பெரும்பகுதி அமிழ்ந்தது.
  2. இரண்டாம் நிலை 14,000 கி.மு. இலெமூரியாவின் இன்னம் சில பகுதிகள் அமிழ்ந்தன.
  3. மூன்றாம் நிலை     9,500 கி.மு. மீண்டும் எஞ்சியவற்றில் பெரும் பகுதி அமிழ்ந்தது.
  4. நான்காம் நிலை    3,000 - 2,400  மாந்தர் நாகரிகத் தொடக்கம் பற்றி.கட்டியம் (heralds) கூறுகின்றது. 
  5. இறுதி நிலை           1,700 கி.மு. கடைசி சங்க காலத்துடன் ஒன்றிப்பாகின்றது.  


இலங்கையின் நிகழ்ச்சிக்கோவையான மகாவமிசத்தின்படி, இலங்கைக்கு தெற்கே அமைந்த நிலம் 4,900 கல்தொலைவுகள் (miles) இதாவது 700 காவதம் வரை பரவி இருந்தது. இருந்தபோதிலும், இலங்கையின் கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் அதன் துலக்கமான பரவல் இன்னமும் நிறுவப்பட வேண்டி உள்ளன. 


தமிழ் மரபுகள் மூன்று பெருஞ் கழக(சங்க)ங்கள் முறையே தென் மதுரை, கபாடபுரம் மற்றும் மதுரையில் செயற்பட்டதாகப் பதிவு செய்கின்றன. ஆயினும் அவை கடலால் விழுங்கப்பட்டுவிட்டன.


பண்டைக் காலத்தே ஏழு தமிழ்க் கழகங்கள் செயற்பட்டதாக மகாவமிசம் குறிப்பிடுகின்றதுமேலும்இற்றை மதுரை நகரம்தான் மூன்றாம் தமிழ்க் கழகத்தை ஓம்பியது (hosted) என்பது நிறுவப்பட வேண்டியுள்ளது. கழக(சங்க) இலக்கியங்கள் வண்ணிக்கின்ற விந்திய மலைக்குத் தெற்கே கிடக்கின்ற நிலத்தையும் தீவுகளையும்  குறிப்பறிவது ஆர்வமூட்டவதாய் உள்ளதுஇது இலெமூரியாக் கண்டத்தினுட்படுவதாகலாம்அதன் குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.    


  1. மணிமேகலை தமிழகத்திற்கு அருகே இருந்த சம்புத் தீவையும் அதே போல் சம்புத் தீவு எனப்படும் ஒரு மிகப் பெருந்தீவையும் குறிக்கின்றது.
  2. 7 ஆம் நூற்றாண்டு நாயன்மாரான அப்பர் நாவலந்தீவில் வாழ்ந்த மக்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.


மேற்சொன்ன மேற்கோள்களின்படி நாவலன்தீவு என்பது இந்திய மற்றும் அயலக அறிஞர்களால் இலெமூரியா என அடையாளங் காணப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும், இற்றைத் தென்னிந்தியா அதிலும் குறிப்பாகத் தமிழ்நாடு தொலைந்துபோன இந்தியப் பேராழிக் கண்டத்தின், வேறுவகையில் இலெமூரியா அல்லது குமரிக்கண்டம் என்று அழைக்கப்படுவதன் மீந்தமிச்சமாக உள்ளது.


வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின்குடக்கும் (புற. 6)


செந்நீர் பசும்பொன் உயரியர்க் கீந்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர் பஃறுளி மணலினும் பலவே (புற. 9)


அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலம்பு. 11-17-22)


மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்று மேற்சென்று மேவார் நாடு இடம்படப்
புலியொடு வில் நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன் (கலி: 104-1-4)


(குமரி என்பது குமரி ஆற்றையும் குறிப்பதாகலாம்)


அகழாய்வுகளின் மூலம் மேற்கொள்ளப் பெறும் நிலத் தொல்லியலால் தமிழ் நாட்டின் ஆழமான தொன்மையை, இதாவது முந்து வரலாற்றுக் காலத் தொன்மையை மெய்ப்பிக்க இயலாமல் போகலாம். நாம் பண்டைய நாகரிகங்கள் மெசபெட்டோமியா, எகிபது மற்றும் சிந்துவெளியில்  நிலைப்பட்டிருந்தமையைக் கண்டு வியக்கிறோம். இருந்தபோதிலும், பெரும் நாகரிகங்கள் முந்து வரலாற்று உலகில், குறிப்பாக  இந்தியாவில் கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்னம் செழிப்புற்றிருந்தன. இந்தியாவைச் சுற்றிச்சூழ்ந்து நிலைப்பட்டிருந்த கண்டத்தின் புதிர்மறைவைத் (mystery) தோண்டிஎடுப்பதும், அதன் மடிப்பைஅவிழ்ப்பதும் (unfold) மிகக் கடினமானது. ஆயினும் இன்று கடலடியில் தொலைந்துபோன அரசியத்தின், கண்டத்தின் மீதங்களைத் தோண்டிஎடுக்க அடிக்கடல் தொல்லியல் அகழாய்வுகள் நடைமுறைபட்டு வருகின்றன.  நம்மை, மூழ்கிய நிலங்களின் புகழ்மிகுக் காட்சியை ஊடுநோக்கச் செய்கின்ற பேராழியில் (oceanography) அல்லது கட்டமைவுக்குலைவு (tectonic) அறிவியல் அமெரிக்காவிலும் ரசியாவிலும் வளர்ந்துள்ளன. இதனால் இலெமூரிய மற்றும் அட்லாண்டிகு போன்ற தொலைந்த கண்டங்கள் பற்றிய பல உண்மைகள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டு மக்கள் கவனத்திற்கு செல்லும்.


இலெமூரியா 


இலெமூரியா இந்தியப் பேராழியின் "தொலைந்த கண்டம்" என்று அடிக்கடி குறிக்கப்பெறுகின்றது. இந்த அமிழ்ந்த நிலப்பரப்பு குறித்துத் தான் இந்தியத் தொல்லியலாளர் இடையேயும் அதே போல் அயலக எழுத்தாளரிடையேயும் பெருத்த ஊகங்கள் நிலவுகின்றன. விசர் எசு. கார்வியின்படி (Wisher S. Carve) 'இலெமூரியா - பசிபிக்கின் தொலைந்த கண்டம்' என்ற அவரது வியத்தகு நூலுள் தொலைந்த இலெமூரியாக் கண்டம்  அட்லாண்டிகு, பசிபிக்கு மற்றும் இந்தியப் பேராழியின் பெரும் பரப்பை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும் என்று அவர் நோக்குகிறார். இலெமூரியர்களை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொலைவான மவுண்ட்டு சாஸ்தா பகுதிகளில் காணவியலும் என்று அவர் மேலும் விரித்துரைத்து உள்ளார். அவருடைய கொள்கை பல மேலை மற்றும் அமெரிக்க அறிஞர்களிடமிருந்து ஆதரவைப் பெற்று உள்ளது. அயல்நாட்டு எழுத்தாளர்கள் இலெமூரியாக் கண்டமானது இற்றைய இந்தியப் பேராழியுடன் தொடர்புடையது என்று நம்பினர்.


கழகக்(சங்க) காலத்து உள்நாட்டு இலக்கிய ஆக்கங்களும், அப்பர்த் தேவாரமும் விந்தியத்திற்குத் தெற்கே நிலைப்பட்டிருந்த ஒரு தீவு பற்றிய விளக்கமான வண்ணனையை கொண்டுள்ளன. இத்தீவு அல்லது நிலப்பரப்பே 'சம்புத்தீவு', 'நாவல் பெருந்தீவு' மற்றும் 'நாவலம் பொழில்' என்றும் பலவாறாக அழைக்கப்படுகின்றது. 


மேற்சொன்ன தீவுகள் குறித்த சங்க இலக்கிய வண்ணனை பின்வருமாறு செல்கிறது:


"சம்புத் தீவினுட் டமிழக மருங்கில்"                        மணிமேகலை

"இமிழ் கடல் வரைப்பிற் தமிழக மனிய"                 சிலப்பதிகாரம்    

"இஅமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்க"              பதிற்றுப்பத்து

"நாவலொடு பெயரிய மாபெருந் தீவத்து"               மணிமேகலை


அப்பர் இத்தீவை பெரு நாவல் தீவு என்று அழைக்கிறார். 


"நாவலும் பெருந் தீவினில் வாழ்பவர்"


இந்தோ- பேராழிக் கண்டம் தென் இந்தியாவை அதன் ஒரு மீந்தபோன, பிணைந்த பகுதியாகவே கொண்டுள்ளது. சம்புத்தீவை திருச்செந்தூரில் தமிழ்க் கழகம் (சங்கம்) நிறுவியதாக நம்பப்படும் ஒரு தமிழ் அரசனே ஆண்டதாக ஊகங்கள் உள்ளன. அவன் ஒரு பேரறிஞன் என்பதோடு அறிஞர்களையும் புரப்பவன். அவன் ஒரு பெரும் முருக பக்தன் என்பதோடு முருகப் பெருமானின் ஆளுமையைப் புகழ்ந்தும் தமிழ் இலக்கணம் மற்றும் சொற்பிறப்பியல் குறித்தும் நூல்கள் பல ஆக்கியவன். தமிழ்க் கடவுள் முருகனது பெருந் தோற்றத்தின் அடியில் பல செவிவழிச் செய்திகளும் மரபுகளும் வளர்ந்தன. அந்த ஆட்சியாளன் குமரவேல் என்று அழைக்கப்பட்டான். 


முதல் தமிழ்க் கழகம் (சங்கம்) தென்மதுரையில் செயற்பட்டது என்பது அறியப்பட்டதொரு உண்மையாகும். இரண்டாம் தமிழ்க் கழகம், தென்பாண்டிய நாடு அமிழ்ந்துவிட்ட பிறகு தென்மதுரையில் இருந்து இடம்மாற்றப்பட்டு கவாடபுரத்தில் செயற்பட்டது. மீண்டும் நிகழ்ந்த இன்னொரு ஊழிவெள்ளம் பாண்டிய அரசன் முடத்திருமாறனை கவாடபுர நகரைக் கைவிடும்படியான கட்டாய நிலைக்குத் தள்ளி, அவன் புதுநகர் மதுரையைத் தலைதநகராய்த் தேர்ந்தெடுத்து அதனையே தமிழ்க் கழகத்தின் தலைமை இருக்கை ஆக்கினான் போலத் தெரிகின்றது.


மேற் சொன்ன நிகழ்வுகள் இந்தியப் பேராழியில் அடிக்கடல் புலனாய்வுகளுக்கான தேவையைத் தெளிவாகச் குறிக்கின்றன.


ஊழிவெள்ளத்திற்கான (deluge) காரணங்கள் பன்மடிப்பானவை (manifold). ஊழிவெள்ளத்திற்கு எல்லாம்வல்லானைக் (almighty) காரணங்காட்டும் மதமுகாமை வாய்ந்த பல கொள்கைகள் உள்ளன. தொன்மக் கதைகள் அறிவியலாளர்களை நம்பகப்படுத்தாமல் (convince) போகலாம். "பெரு வெள்ளம்" போன்று ஓர் இயற்கைத் துன்பியல் (tragedy) நிகழ்வு முந்து வரலாற்று நாகரிகங்களை அழித்திருக்கலாம் என்ற மற்றொரு பார்வையும் உள்ளது. 


அறிவியல், நிலக்கோளமானது ஒரு வால்மீனால் (comet) மோதப்பட்டு அதன் மட்கற்புதைமண்ணை (dirt bed) இடம்பெயர்த்தியதால் நாகரிகங்கள் அழித்துள்ளன என்று விளக்குகின்றது. அத்தகு இடப்பெயர்வு அரிதாகப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழும்.


1968 இல் இந்தியப் பேராழியின் நடுமோட்டின் (central ridge) மேல் விளக்கமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் இந்தியப் பேராழியில் காந்த விலக்கங்கள் நிலைப்பட்டிருந்ததை நிறுவியது. இந்த ஆய்வு ஆப்பிரிக்காவும் தென் அமெரிக்காவும் 18 கோடி ஆண்டுகள் முன்னம் வரை கோண்டுவானாக் கண்டத்தின் ஒரு பகுதியாகப் பூட்டிப் பிணைந்திருந்ததை வெளிப்படுத்தியது  தொன்மையான கோண்டுவானா நிலத்திலிருந்து முறிந்துபிரிந்த பின்பு இந்தியாவை ஏந்திய நிலவட்டாரம் வடகிழக்குமுகமாக விரைந்து நகரத் தொடங்கியது. இது ஒரு கண்டப் பெயர்வு நிகழ்ச்சி ஆகும். இந்தியா, ஆப்பிரிக்கா, அண்டார்டிகா மற்றும் ஆத்திரேலியா ஆகியனவற்றின் மூலப் பொருத்தம் (original fit) இதுகாறும் நிறுவப்படவில்லை.


மேற்சொன்ன கண்டப் பெயர்வு, மோதல் முதலாயன உலகம் 18 கோடி ஆண்டுகள் முன்னமும், 12.5 கோடி ஆண்டுகள் முன்னமும், 5.5 கோடி ஆண்டுகள் முன்னமும், 4 கோடி அண்டுகள் முன்னமும் நிலைப்பட்டிருந்ததை வெளிப்படுத்துகின்றது. (National Geographical Association Atlas)


மேலுள்ள கலந்துரையாடலின் வெளிச்சத்தில், முந்து -வரலாற்றின் கடந்த காலத்துக்குள் ஊடுநோக்க (peep) உலகின் பல்வேறு பகுதிகளில் ஒரு
முழுமையான பேராழி அளக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கருத்துரைக்கலாம். அடிக்கடல் தொல்லியல் அகழாய்வுகள் இந்தியப் பேராழியில் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தப் பதிவைப் (record) பொருத்தமட்டில், கடந்த நூற்றாண்டின் இறுதிக் காற்பங்கில் (last quarter) அமிழ்ந்து போன துவாரகை நகரையும் பூம்புகார் நகரையும் இடமறிவதற்கு ஏற்கெனவே ஒரு சிறு தொடக்கம் மேற்கொள்ளப்பட்டாகிவிட்டது.



பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, "Lemuria : The Last and the Lost Continent of Tamils" என்ற தலைப்பில் வரைந்த கட்டுரையின் தமிழாக்கம் இது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடான "அருங்கலைச் சொல் அகரமுதலி" உதவியோடு தமிழாக்கித் தட்டச்சு செய்தவர் சேசாத்திரி. பின் வரும் தனிக் கட்டுரையும் இலெமூரியாவுடன் தொடர்புடையதால் இக்கட்டுரையுடன் இணைத்து வழங்கப்படுகின்றது.




தமிழகமும் இந்தியப் பேராழியும்




கன்னியாகுமரிக்குத் தெற்கே கிடக்கின்ற இந்தியப் பேராழியின் கொந்தளிப்புக் கடல்நீர் கிறித்து ஊழிக்கு முன்னீடு பல ஆயிரஆண்டுகள் (millenniums) செழித்திருந்த தமிழருடைய ஒரு கனத்த தொன்னிலைசார் நாகரிகத்தின் மீதிமிச்சங்களை தன் ஆழத்தே மறைத்துக் கொண்டு உள்ளது.  இந்தியாவின் இடக்கிடப்பியல் (topography) பண்டை நாளைய நிலம் மற்றும் நீரின் அமைவால் இந்நாளைய நிலம் மற்றும் நீரின் அமைவில் இருந்து வேறுபட்டிருந்தது. தமிழ் நாடு நாவலந்தீவு என அறியப்பட்ட ஒரு பெருந் தீவின் மீதென் பகுதியாக இருந்தது.  


இத்தீவு வடக்கே விந்திய மலைகளால் கட்டுவரம்பிடப்பட்டு தெற்கே ஆத்திரேலியா வரையும், மேற்கே தென் ஆப்பிரிக்கா வரையும் விரிந்திருந்தது. இத்தீவு இந்தியப் பேராழியில் 5,000 கல்தொலைவுகளுக்கு (miles) மேலாகவே அகற்சி பெற்றிருந்தது. கங்கைச் சமவெளி ஒரு பெரும்பரப்பான மாக்கடல் நீர்ப்போர்வையால் மூடியிருந்த காலம் ஒன்றும் இருந்தது அதோடு இரசபுத்தாரவைச் சுற்றிலும் பல ஆயிரம் ஆண்டுளுக்கு ஊழிவெள்ளம் நீடுநிலைத்திருந்தது. இது திரு எச். ஜி. வெல்சு (H.G.Wells) என்பாரால் "Outline of History" என்ற நூலுள்  உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அவர் தென்இந்தியாவானது பஞ்சாபு, காசுமீர், காந்தாரம் ஆகியவற்றிடம் இருந்து அரபிக்கடலையும் வங்காள விரிகுடாவையும் இணைக்கின்ற ஒரு பெரும்பரப்பு மாக்கடல் தொடரால் துண்டிக்கப்பட்டிருப்பதை காட்டினார். கங்கைச் சமவெளியை கடல் மூடியிருந்த போது இதுவே இந்தியாவின் இடக்கிடப்பியலாக சற்றொப்ப 25,000 முதல் 35,000 ஆண்டுகளுக்கு முன்னம்  இருந்தது. நிலத்தியல் (geological) சான்றுகளின்படி, தென்இந்தியாவானது தொடக்க காலங்களில் கிழக்கில் மியான்மர் முதல் தென்சீனம் வரை கிழக்குமுகமாகவும் மேற்கில் தென்ஆப்பிரிக்கவும் வடக்கில் விந்திய மலைகளிலிருந்தும், தெற்கே ஆத்திரேலியா வரையுமாக விரிந்திருந்த ஒரு பெரும் பரப்புடைய கண்டத்தின் பகுதியாகவே இருந்துள்ளது. அசாம் மூலமாகத் தென்இந்தியா இமயத்தோடு சிறிது தொடர்பு கொண்டிருந்திருக்காலம் என்று அவர் சொன்ன செய்தியைக் அது கொண்டுள்ளது. இக் கண்டம் வடக்கில் அசாமில் இருந்து விரிந்து, கி.பி. முதல் நூற்றாண்டில் செவ்விலக்கிய எழுத்தாளர்களால் எரித்திரியக் கடல் என்று அழைக்கப்பட்ட அரபிக் கடலோடு இணையும் நெடிது நீண்டக் கடலால் கட்டுவரம்பிடப்பட்டு இருந்தது. சற்றொப்ப 82,000 ஆண்டுகளுக்கு முன்னம் உயர் நாகரிகமுற்றிருந்த நிலங்களில் போதிய மாற்றங்களை நிகழ்த்தியபடி காந்த அலைத் தொடர்கள் உலகைச் சுற்றிலும் கிழக்கில் இருந்து மேற்கு முகமாக நகர்ந்தன என்று  நிலத்தியலாளரும், அறிவியலாளரும் சொல்லியுள்ளனர். இதன்போது ஆசியாவையும் ஆப்பிரிக்காவையும் இணைக்கின்ற இலெமூரியாக் கண்டம் தன்னை ஒரு சின்னஞ்சிறு அளவினதாகக் குறைத்துவிடும்படியாக சற்றே மூழ்கத் தொடஙகியது, அதன் விளைவாக கண்டத்தின் மேற்குப் பகுதிகள் ஆத்திரேலியா, ஆப்பிரிக்கா, சுமத்திரா, சாவா மற்றும் போர்னியோவை நோக்கிப் பல்வேறு திசைகளில் பிரிந்து சிதறியன.


இலெமூரிய மக்கள் நீல்ஆற்றுச் சமவெளி முதலாய, ஆப்பிரிக்க பகுதிகளுக்கு புலம்பெயர்ந்தனர். அவர்களே பாபிலோன், அசீரியா மற்றும் சுமேரியாவிற்கு நகர்ந்தனர் என்றும் அங்கு பெரும் நாகரிகங்களை நிறுவினர் என்றும் சொல்லப்படுகின்றனர்.


வேறொரு கருத்தின அறிஞர்களின்படி (school of scholars) பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னம் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆத்திரேலியாவை உட்கொண்டு தென் அரைக்கோளத்தில் (hemisphere) விரிந்திருந்ததாகத் தெரிகின்ற கோண்டுவானா எனப்படும் ஒரு திரண்ட பெருங்கண்டம் இருந்துள்ளது. இந்த கோண்டுவானா நிலம் பல நூறாயிரம் ஆண்டுகள் முன்னமே பிரிந்து போய்விட்டது என்பதோடு பின்னீடு இந்தியப் பேராழியில் அமிழ்ந்து போன இலெமூரியா இந்த கோண்டுவானா நிலத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. இந்தக் கண்டம் தான் மாந்த இனத்தின் மீதொடக்கத் தாயகமாக இருந்தது என்பதோடு குரங்கு போன்ற விலங்குகளின் வாழிடமாகவும் அது இருந்தது. அதைமுன்னிட்டு, இலெமூரியா மாந்தக்குரங்கினத்தினின்று (anthopoid apes) முதன்முதலாக வெளிப்பட்டு வளர்ந்த மாந்த இனத்தின் தாயகமாகவே கருதப்படுகின்றது. ஆனால் கெடுவாய்ப்பாக (unfortunately), இக்கால் அக்கண்டம் இந்தியப் பேராழி மேற்பரப்பிற்கு அடியில் மூழ்கிவிட்டது. இந்தியப் பேராழி தன் சிறகுகளான பெரும்பரப்பான நீர்ப் போர்வையை இந்தியா வரையான தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவின் தென்கிழக்குக் கடற்கரை நெடுகலும் பரப்பி உள்ளது. கண்டத்தின் பெரும்பால் பகுதிகளின் சரிந்தமிழ்விற்கு (subsidence) முகாமையான காரணங்கள் ஒன்றனுள் கடும் அழிவெள்ளங்களும் (cataclysms) நிலநடுக்க விசைகளுமே ஆகும். அதைமுன்னிட்டு, மிகச் சேய்மையானக் காலந்தொட்டே மக்கள் தோன்றி வாழ்ந்த நிலத்தின் பெரும் பகுதிகள் பேராழியின் அடியில் அமிழ்ந்து போயின. மேலும், இரசபுத்தாராக் கடலின் நிலயெழுச்சியும் கூட இதே விசைகளால் நிகழ்ந்ததே.


இக்கால் உலகம் மாந்தவுயிரைப் பல நூறாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து நிலைக்கவித்துக் கொண்டுள்ளது என்பதோடு கதிரவ மண்டலத்தில்  நிகழும் சிறுமையான பிரிகைகளின் (divergencies) காரணமாக மேலே குறிப்பிட்ட கடும்  இயல்புக்குலைவுகளுக்கு ஆட்பட்டு வந்துள்ளது. செவிவழிச் செய்திகளும் மரபுகளும் கூட 13,000 ஆண்டுகள் முன்னம் மண்ணுலகைத் தழுவிக் கொண்ட பேரழிவைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. அக்காலங்களில் அட்லாண்டிக்கையும் இலெமூரியாவையும் அழித்தபடி கடல் சுண்டியெறிந்தும் வீழ்ந்தும், பெரும் ஓத அலைகளாய், வெள்ளமாய் எழும்பியது. நடைமுறையில் இந்த அழிவெள்ளமே உலகின் முடிவாக இருந்தது. பல்வேறு சீன, இந்திய, அமெரிக்க மற்றும் பாலிநேசியச் செவிவழிச் செய்திகளும் தொன்மங்களும் இந்நிகழ்வை குறிப்பிடத்தக்க ஒப்புமையுடன் வண்ணிக்கின்றன. 


மேலுள்ள கலந்துரையாடலின் வெளிச்சத்தில் தொல்பழமையில் இலெமூரியாவின் தென்கண்டத்தில் தமிழர்களுடைய ஒரு பண்டைய நாகரிகத்தின் மறுக்கமுடியாத சுவடுகள் இருந்தன என்று சொல்லலாம். இக்கண்டத்து மக்கள் காட்டுவிலங்காண்டிகள் (Barbarians) அல்லர் ஆனால் பெரு நகரங்களையும் நகர நாகரிகத்தையும் கட்டிஎழுப்பிய நாகரிக மக்கள் ஆவர்.


இந்தியப் பேராழியின் திரிவாக்கம் (Evolution of Indian Ocean): 


இந்தியப் பேராழியில் ஞாயிறு தீவு (sun island) போலவும்,  பென்ஹையா தீவு போலவும் பல்வேறு தீவுகள் நிலைப்பட்டிருந்தன. பின்னீடு  ஒரு பெருந்திரண்ட நிலப்பரப்பு துண்டு துண்டாகக் கடலடியில் மறைந்து போனது அதோடு இந்தியாவையும் மடகாசுகரையும் இணைக்கின்ற நிலப் பாலம் முறிந்து சிதைந்விட்டது. அதுவே இற்றைத் தீவுகளின் நிலைப்பட்டிருத்தலுக்குக் காரணமாகியது; அவை  இலெமூரியாவின் மீதங்களாக இருந்தவை.


இந்திய மற்றும் மேலை அறிஞர்களால் எழுப்பப்பட்ட வினா திராவிடர்களின் மூல தாயகக் கொள்கையை நடுப்படச் சுற்றுகின்றது; அது அவருடைய தாயக நிலம் இந்தியப் பேராழியின் அடியில் மூழ்கிப்போனதா? அல்லது மூலதிராவிடர்கள் ஆப்பிரிக்கக் கடற்கரைக்கும் அதேபோல் வடக்குநோக்கி இந்தியக் கடற்கரைக்கும் பாரசீகக் குடாவிற்கும் இடம்பெயர்ந்தனரா? என்பதே. இலெமூரியாக் கண்டத்தின் ஊழ் (fate) மற்றும் அதன் மூலக்குடிவாணர் குறித்த இவ் வினாக்களுக்கும் புதிரிகளுக்கும் விடையளிக்கப்பட வேண்டும், இதற்கு மிகஆழ்மான பகுப்பாய்வும் இந்தியப் பேராழி மேற்பரப்பு பற்றிய ஒரு ஆழ்ந்த ஆய்வுமே வேண்டியுள்ளது. கடலடி அகழாய்வுகள் இலெமூரியக் கடைசிக் கண்டத்துடன் பிணைப்புற்றுள்ள பண்டைத் தமிழரது பண்பாட்டுச் சுவடுகளின் மேல் கவனம் செலுத்துவதற்கு உயிர் போன்று விளங்குகின்றன.


மேலே கலந்துரையாடிய கொள்கைக்குச் சார்பாகவும் எதிராகவும் இப் பொருண்மைக்கூறு (subject) குறித்த தம் நோக்குகளை வெளிப்படுத்துகின்ற மேன்மைமிகு அறிஞர்களும் உள்ளனர். அவருள் உரூசல் வாலசு (Russel Wallace), எடுவர்டு லென்சர் (Edward Lancer), விசர் எசு. கார்வி (Wisher S. Carve), ஃபெர்டினாண்டு குன் (Ferdinand Kunn), நய் எர்ரண்டு (Knigh Errant), பி. சி மசூம்தார் (B.C. Mazumdar), டி. டபுல்யூ. ஓல்டெர்நெசு (T.W. Holderness), வி.பி. கேட்கர் (V.B. Ketkar),  வாடியா மற்றும் பிற பெரும் அறிஞர்கள் அடங்குவர். இலங்கை வரலாற்றியலர் திரு குலரெத்தின, 'இலங்கையானது இற்றைய தீவக்குறை (peninsular) இந்தியா, பெரும் பகுதி ஆப்பிரிக்கா, மேலை ஆத்திரேலியா மற்றும் பிரேசில் ஆகியன அடங்கிய கோண்டுவானா நிலம் எனப்படும் ஒரு பெரும்பரப்பு மூழ்கிவிட்ட கண்டத்தின் பகுதியாக விளங்கியது' என்று சொன்னார். 


முக்காலமும் உணர்ந்தவராக அறியப்படுகின்ற தந்திரஓகி திரு. பிரபாத் ரஞ்சன் சர்க்கார் என்பவர் "Human society is one and indivisible - Part 1" என்ற தம் நூலுள் "விந்திய மலைகளுக்கு வடக்காக திபெத்து வரை கிடக்கின்ற இற்றைய வட இந்தியப் பரப்பு முந்து-வரலாற்றுக் காலத் தொன்மையில் பேராழிக்கடியில் அமிழ்ந்திருந்தது. விந்திய மலைகளுக்கு தெற்கே தென்இந்தியாவையும், இற்றைய அரபிக் கடல், பாலிநேசியத் தீவுகள், மலேசியத் தீவுத்திட்டுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றை உளளடக்கிய பரப்பு கோண்டுவானா நிலம் என்னும் ஒரு பெரும்பரப்பு வட்டாரமாக விளங்கியது. ஆத்திரிக்கு (Austrics) மரபின மக்கள் கோண்டுவானா நிலத்தின் வடபகுதியிலும், நீக்கிரோ மரபின மக்கள் அதன் தென் பகுதியிலும் வாழ்ந்திருந்தனர். அதன் நடுப்பகுதியில் ஆத்திரிக்குகளும், நீக்கிரோக்களும் ஆகிய இருசாராரும் வாழ்ந்திருந்தனர். இக்காலத்து திராவிடர்கள் இந்த ஆத்திரிக்கோ - நீக்கிராய்டு மக்களின் வழிதோன்றல்கள் ஆவர்" என்று கூறியுள்ளார்.   


இலெமூரியர்கள் 



இலெமூரியக் கண்டத்துடன் தொடர்புடைய பண்டைய எகிபதின் கையெழுத்துச்சுவடி மூலங்கள் இலெமூரியர்களின் உடலுயரம் (stature), இயல்பு குறித்து ஒரு கவர்ந்தீர்க்கும் குறிப்பை வெளிப்படுத்தி உள்ளன. அம்மூலங்களின்படி, அதில் விளங்காப்புதிர்கள் (Mysteries), மெய்ந்நிகழ்ச்சிகள் (Facts) மற்றும் புனைவங்கள் (Fictions) ஆகியன இலெமூரியரின் வழித்தோன்றல்களைச்  சுற்றிச்சூழ்ந்து இருந்தன.  இலெமூரியர்கள் வழக்கமாக மலைச் சரிவுகளின் உச்சியில் தம் மனைகளையும், கோவில்களையும், குடியேற்றப் பகுதிகளையும்.கட்டி இருந்தனர். அவர்கள் வலுவானவர்களாகவும் (strong), கரடானவாகுடையவர்களாகவும் (sturdy) இருந்தனர். உருவில் செவ்விந்தியரை ஒத்திருந்தனர், அவர்தம் தோல் மங்கிய நீல மென்சாயம் கொண்டதாய் இருந்தது. அவர்கள் இயல்புவிஞ்சிய பெருந்தலையையும் நெற்றியையும் கொண்டிருந்தனர். நெற்றியின் நடுவே கற்கனிப்பருப்பு (walnut) போன்று 'மூன்றாம் கண்' என்று சொல்லப்படுகின்ற முன்துருத்தம் (protrusion)  இருந்தது. இச் சிறப்புக்கூறுகள் தொலைவிலுணர்தல் (telepathy) மற்றும் ஆறாம் அறிவுணர்வு ஆகியனவற்றை வளர்க்கும் உயர் வளர்ச்சி பெற்ற மன ஆற்றல்களைச் சுட்டும். இவ்வகை நெற்றி சிவபெருமானது நெற்றியையும் அதோடு சங்க இலக்கியத்தில் புலவர் நக்கீரரால் குறிக்கப்படும் நெற்றிக் கண்ணையும் நினைவூட்டுகின்றது. சங்க இல்க்கியத்திலிருந்து தெரிவிக்கப்படும் இவ் உண்மைகள் பலநூறாயிரம் ஆண்டுகள் முன்பாக வாழ்ந்த இலெமூரியர்களின் உடலமைப்பிற்கு சில ஒப்புமைகளை ஏந்தி உள்ளன.  


மலைஉச்சிகள், இமயம் முதல் இந்தியப்பேராழி (குமரி) வரை வாழும் மக்களால் வழிபடப்படுகின்றன. அமெரிக்கப் பழங்குடிகளும் கூட மலை உச்சிகளை வழிபடுபவர்தாம். இதனால் இலெமூரியர்களுக்கும் அட்லாண்டிக்குகளுக்கும் தொடர்புகள் இருந்தாற் போல் தெரிகின்றது. மறக்கப்பட்ட இக்கண்டத்தினுடைய வியப்பார்ந்த கமுக்கங்கள் (secrets) இன்னமும் அந்த மருட்டும் கடலில் மறைந்துள்ளன, புதையற்பொருளாய் காப்புற்றுள்ளன.




சேசாத்திரி


பார்வை நூல்கள்:


Alexander kondratov    :  Riddle of the Three Oceans

Dr. Rober L. Fisher      :  The Central Ridge of the Indian Ocean in 1968

H.G. Wells                  :  Outline of Histroy

Henry Yule. CB, FRGS : The Wonders of the east (translated from the latin original), London

Schoff, W.H                 :  Periplus of the Erythraean Sea, Oriental Books reprint corporation, 1974, second edition

Wishar S Carve            :  Lemuria - The Lost continent of the Pacific

seshadri sridharan

unread,
Oct 15, 2012, 10:33:57 PM10/15/12
to mintamil
நீரஞ்சன் நீங்கள் கேட்டிருந்த குமரிக் கண்ட படம் ஏதும் என்னிடம் இல்லை. ஆனால் தீவுக் கூட்டமாக காணப்படும் அந்த படம் நம் ஒரிசா பாலுவிடம்  உள்ளது. அது ஒரு செய்மதிப் (satellite) படம். அவரிடம் கோரினால் உங்களுக்கு அனுப்புவார் எனக் கருதுகிறேன்.

Gondwana archipelago என்ற சொல் கோண்டுவானாத் தீவுக் கூட்டம் எனப் பொருள்படுவதை நோக்குக

In the pre-historic past the entire North India – that is, the entire area north of the Vindhya Hills up to Tibet – was under the sea. The area south of the Vindhyas, the present Arabian Sea, South Africa, Australia and Southeast Asia formed the Gondwana archipelago. The Austrics inhabited the southern portion of Gondwanaland, the Negroes inhabited the southwestern portion and the Austrico-Negroids, the Dravidians of today, inhabited the central portion. The bio-racial structure of different ethnic groups indicates the race to which they belong.

 

by P R Sarkar, January 1970 RU, Patna, Published in: Prout in a Nutshell Part 21 , chapter: How to Unite Human Society


சேசாத்திரி




2012/10/15 Niranjan Bharathi <niranjan...@gmail.com>
அய்யா,

//வணக்கம். தங்கள் கட்டுரை மிகவும் அருமை. பெரும்பாலனவர்க்கு இது பற்றித் தெரியாது//. 

இது பேராசிரியர் சா. குருமூர்த்தியின் கட்டுரை. நான் தமிழில் மொழி பெயர்த்தேன் அவ்வளவே.
 


உங்கள் கட்டுரையில் எனக்கு 2 சந்தேகங்கள் இருக்கின்றன. அவை பின்வருமாறு


//இலெமூரியாவும் குமரிக்கண்டமும் ஒன்றா அல்லது வேறு வேறா ?//

இலெமூரிய என்பது மேலை அறிஞர்களது கருத்தாக்கம். குமரிக் கண்டம் என்பது தமிழ் இலக்கியக் குறிப்பீடு. நிலப் பரப்பளவு வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம் மற்றபடி குமரிக் கண்டம் என்பது இலெமூரியாவின் ஒரு பகுதி என்பதில் தவறு இல்லை.


//35 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கோண்ட்வானா நில  நடுக்கத்தால் சிதறிய போது  இலமூரியா உருவானது.  இதில் தென் இந்தியாவும், கிழக்கிந்திய தீவுகளும் தென்னிந்தியாவிற்குத் தெற்கே நில நடுக்கோடு வரை கடலுக்குள் மூழ்கிப்போன நிலப் பகுதிகளும் தென் ஆப்பிரிக்காவும் அடங்கும்.  

இலெமூரியாக் கண்டர் சிதைவுக்குப் பின் இந்தியா, பகுசுத்தான் மற்றும் தக்காணத்திற்குத் தென்பாலுள்ள பகுதிகளையும், வங்கம் - அரபிக்கடலுள்ள தீவுகளையும் அவை சார்ந்து கடலுக்குள் மூழ்கிப் போன  நிலப் பகுதிகளையும், இந்துக் கடலுள் தமிழகம் சார்ந்த நிலப் பகுதிகளையும் அந்நிலப்பகுதி மாலத்தீவைத் தொடர்ந்து மடகாசுக்கர் வரையுள்ள நிலப்பகுதிகளையும் தமிழகத்தின் கிழக்கே சந்தா தீவு வரை நீண்டு கிடந்த  நிலப்பகுதியையும் கொண்டதையே குமரிக்கண்டம் என்று கூறுகிறார்கள். //

இலெமூரியா என்பது ஒன்றிணைந்த ஒரு பெருங் கண்டம் ஆனால் இது ஒரேயடியாக மூழ்கிவிடவில்லை. மாறாக பல லட்சக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக தாழ்வான நிலங்கள் மட்டும் நீரில் அமிழ்ந்து அங்காங்கே தீவு போன்ற பல நிலங்களாய் அது திரிந்தது. இந்தத் தீவுகள் ஆழமில்லாத நீரால் சூழப்பட்டதால் மக்கள் கழுத்தளவு நீரில் நடந்தே ஒரு தீவில் இருந்து மற்றொரு தீவிற்கு பெயர்ந்தனர் என்கிறார் பிரபாத் ரஞ்சன சர்க்கார்.   இப்படித்தான் நீக்ரோக்களும் ஆத்திரிக்குகளும் நண்நிலக்கோட்டில் ஒன்று கலந்தனர் என்கிறார் அவர். அந்த கலப்பினத்தவரே திராவிடர். இந்த நிகழ்வு 70,000 ஆண்டுகளுக்கும் 40,000 ஆண்டுகளுக்கும் இடைப்பட்டதாக நிகழ்ந்திருக்கலாம். எனவே குமரிக் கண்டம் என்பது  நீங்கள் கீழே ஒட்டியுள்ள நிலம் போல் பெரும் நிலப்பரப்பாக இல்லாமல் தீவுக் கூட்டமாக இருந்த நிலப்பரப்பே.  இந்தோனேசியா பாப்புவா நியுகினியா இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. 

கோண்டுவானா என்பதும் மேலை அறிஞர்களின் கருத்தாக்கம் தான். 

 

Inline image 2


இதைப் பற்றிக் கொஞ்சம் வரைபடம் மூலம் தெளிவு படுத்த இயலுமா ?


//எனினும், குமரியர் -  நாவலந்தீவின் உரிமை மாந்தர் வரலாறு என்ற நூலில் "ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே டேதிசு கடலின் உள்ளிருந்து இமயமலையும் அதைச் சார்ந்த ராக்கிமலை, காஷ்மீர், நேபாளம் ஆகியவை தோன்றின. ஆயினும், இதை நாவலந்தீவு என்றனர்.  வடக்கில் தக்காணம் முதல் தெற்கில் இந்து மாக்கடல் பகுதிக்குள்ளிலும் கிழக்கில் சந்தா தீவு முதல் மேற்கில் மடகாசுகர் வரையிலும் பரவிக்கிடந்த  நிலப்பகுதியை நாவலந்தீவு என்று கூறுவோருமுளர். வரலாற்று நிகழ்ச்சியை நோக்கும் போது சிந்து சமவெளியிலுள்ள மொஹஞ்சோதாரோ, பாகிஸ்தான்,  நாகலாந்து , பர்மா,  நேபாளம்  ஆகியவை  நாலவம் தீவுக்குள் அடக்கம்."

இது மேற்கூறிய தங்களின் கருத்துக்கு மாறாக உள்ளதே. இதைப் பற்றிக் கூற  முடியுமா ?//


நாவலந்தீவு என்பது உண்மையில் காசுமீரத்தை முதலில் குறித்து பின் காசுமீரம் உள்ளிட்ட தென்குமரிமுனை வரையான இந்தியப் பகுதியைச் சுட்டியது. ஆனால் நாவலந்தீவு என்பதை தெற்கே இந்தியப் பேராழியில் இருந்த குமரிக் கண்டமாக தப்பாக பொருள் கொண்டுள்ளனர் தமிழறிஞர்.



//இவை அனைத்தையும் படிக்கும் போது சற்று குழப்பம் ஏற்படுகிறது. //

மேற்சொன்ன என் விளக்கம் உங்களைத் தெளிவு படுத்தி இருக்கும் என நம்புகிறேன். 


//ஆதலால், குமரிக்கண்டம், லெமூரியா,  நாவலம் தீவு ஆகியவை ஒன்றா இல்லை வெவ்வேறா// ?
 
இலெமூரிய என்பது துண்டுபடாத ஒரு பெரு நிலம் அதன்போது மனிதனே தோன்றவில்லை. குமரிக் கண்டம் மூழ்கிய இலெமூரியாவின் எச்சப்பகுதியான தீவுக் கூட்டங்களே. 

நாவலந்தீவு குமரிக் கண்டத்தை குறிப்பதல்ல மாறாக 1947 ஆண்டைய இந்திய நிலப்பரப்பைக் குறிப்பது.

இதுவே நான் கொண்டுள்ள குமரிக் கண்டக் கொள்கை. இதற்கு பிரபாத் ரஞ்சன் சர்க்காரே காரணகர்.
Kumari Kandam 2.jpg

seshadri sridharan

unread,
Oct 16, 2012, 10:34:31 PM10/16/12
to mintamil

அம்மணிகள் சுபா, கீதா மற்றும்  செல்வன் ஆகியோர் கவனத்திற்கு இந்த கட்டுரையை தமிழ்மரபு விக்கியில் பேரா. சா. குருமூர்த்தியின் பகுப்பில் இட வேண்டுகிறேன்.

Singanenjam Sambandam

unread,
Oct 17, 2012, 7:55:48 AM10/17/12
to mint...@googlegroups.com
இதுதான் லெமூர் . இன்றும் மடகாஸ்கரில் அதிகமாகக் காணப்படும் மரநாய் வகை விலங்கு.
இந்த விலங்கின் தொல்லுயிர் எச்சங்கள் , மடகாஸ்கர், தென் ஆப்ரிகா, இந்தியா
ஆகிய நாடுகளில் கண்டு. பிடிக்கப்பட்டது, புவியியல் ஆய்வாளர்களால்.
இதன் காரணமாக, இந்த மூன்று நிலா பரப்புகளையும் இணைத்தது போன்ற ஒரு நிலப்
பரப்பு அல்லது- நிலப்பாலம் ஒன்று இருந்திருக்கக் கூடும் என்கிற எண்ணம்
Ernest Heinrich ஹெகல் என்ற புவியியலாளுருக்கு 1860
ஆம் ஆண்டு ஏற்பட்டது.இவர் Darwin (1809-1882) கொள்கைகளில் மிகுந்த
ஈடுபாடு உடையவர்.ஆக லெமுரியா கோட்பாடு என்பது ஒரு புவியியலாலரால்
உருவாக்கப்பட்டது என்பதை அறிக.
அவர் மனதில் உருவான அந்த "எண்ண நிலப் பரப்பிற்கு" PHILIP L.SCLATER எனும்
உயிரியலாளர் "LEMURIA LAND " என பெயரிட்டார்.
வரலாற்றியல் -தொல்லியல் துறை வல்லுனர்களின் சிந்தையில் உதித்தது அல்ல லெமுரியா.
இனி, கோண்டுவான பற்றி நாளை பார்ப்போம்.

2012/10/17 seshadri sridharan <ssesh...@gmail.com>


>
>
> அம்மணிகள் சுபா, கீதா மற்றும் செல்வன் ஆகியோர் கவனத்திற்கு இந்த கட்டுரையை தமிழ்மரபு விக்கியில் பேரா. சா. குருமூர்த்தியின் பகுப்பில் இட வேண்டுகிறேன்.
>
> சேசாத்திரி
>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Doc9.doc

seshadri sridharan

unread,
Oct 17, 2012, 8:03:16 AM10/17/12
to mint...@googlegroups.com
தொடருங்கள் ஐயா! படிக்க ஆவலாக உள்ளேன்.

சேசாத்திரி

2012/10/17 Singanenjam Sambandam <singa...@gmail.com>

செல்வன்

unread,
Oct 17, 2012, 12:31:01 PM10/17/12
to mint...@googlegroups.com
சேசாத்திரியாரே..இன்று மதியம் பதிவேற்றி விடுகிறேன்

--
செல்வன்


seshadri sridharan

unread,
Oct 19, 2012, 5:25:35 AM10/19/12
to mint...@googlegroups.com
செல்வன்! என்னவாயிற்று நீங்கள் சொன்னபடி பதிவேறவில்லை போல் தெரிகின்றது.

சேசாத்திரி

செல்வன்

unread,
Oct 19, 2012, 2:12:23 PM10/19/12
to mint...@googlegroups.com
சேசாத்திரி..நேற்று முக்கால்மணிநேரம் முயன்றும் பதிவேற்ற முடியவில்லை. கேட்டகரி எனும் பிரிவை அழுத்தியவுடன் தளம் ப்ரீஸ் ஆகி நின்றுவிட்டது. நாலைந்து தடவை தளத்தை மறுபடி திறந்து மறுபடி காப்பி,பேஸ்ட், அலைன்மென்ட் எல்லாம் செய்தும் மறுபடி,மறுபடி ப்ரீஸ் ஆகிவிட்டது. கட்டுரையின் நீளம் அதிகமாக இருந்தது காரணமா என தெரியவில்லை. இன்று இரவு அல்லது நாளை மறுபடி முயல்கிறேன்

2012/10/19 seshadri sridharan <ssesh...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Singanenjam Sambandam

unread,
Oct 22, 2012, 9:07:04 AM10/22/12
to mint...@googlegroups.com
“குமரிக் கண்டம் "


"குமரிக்கண்டம்தான் லெமுரியா -லெமுரியாதான் குமரிக் கண்டம் " - என்று
முன்பெல்லாம் சில தமிழ் அறிஞர்களும்- ஆர்வலர்களும்
எண்ணியும்-பேசியும்-எழுதியும் வந்தனர். இன்றும் சிலர் இதை செய்து
வருகிறார்கள். இது சரியல்ல.
அண்மைக் காலங்களில் வரும் நூல்களில் குமரிக் கண்டம் பற்றி எழுதும் தமிழ்
ஆர்வலகள் குமரிக்கண்டம் எனும் சொல்லைத் தொடர்ந்து அடைப்புக் குறிக்குள்
கோண்டுவானா என்று எழுதுகிறார்கள். ஆய்வரங்ககளிலும் -கூட்டங்களிலும் உரை
நிகழ்த்தும்போது ‘குமரிக்கண்டம் அல்லது கோண்டுவானா’ என்று
குறிப்பிடுகிறார்கள்."குமரிக்கண்டம்-லெமுரியா -கொண்டுவனா" ஆகிய மூன்றும்
ஒன்றல்ல.
லெமுரியா பற்றி சிறு குறிப்பு ஒன்று சில நாட்களுக்கு முன்
எழுதியிருந்தேன்.அதைத் தொடர்வதற்கு முன் "கோண்டுவானா" பற்றி ஒரு சிறு
குறிப்பு.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் கண்டு பிடிக்கப்பட்ட ரயில்
வண்டி, 1850 களில் பல நாடுகளிலும் பரவத் தொடங்கியது. அப்போது ரயில்
என்ஜினை இயக்கத் தேவைப் பட்ட எரிபொருளாகிய நிலக்கரியை தேடிக் கண்டு
பிடிக்கும் பணியில் புவியியல் அறிஞர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். நம்
இந்தியத் துணைக் கண்டத்தில் 1853 ஆம் ஆண்டு , கிழக்கிந்தியக் கம்பனியரால்
ரயில் வண்டி அறிமுகப் படுத்தப்பட்டது. 1851 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட
எங்கள் "இந்தியப் புவியியல் ஆய்வுத் துறை"(ஜியலாஜிக்கல் சர்வே ஆப்
இந்தியா), யை சேர்ந்த புவி அறிவியலாளர் 'மேட்லிகாட்’ நம் நாட்டின்
கிழக்குப் பகுதியில் தாமோதர் பள்ளத்தாக்கிலும், கிழக்கு மத்தியப்
பிரதேசம் , ஜார்க்கன்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் நிலக்கரி
படிவங்கள் இருப்பதைக் கண்டு பிடித்தார். இப் படிவங்கள் அடங்கிய படிவப்
பாறைகளில் (SEDIMENTARY ROCKS ) GLOSSOPTERIS எனப்படும் தொல்தாவர
எச்சங்கள் (PLANT FOSSILS ) உள்ளதை அவர் கண்டறிந்தார். இலத்தின் மொழியில்
GLASSA என்றால் நாக்கு என்று பொருள். இந்தத் தாவர இலைகள் நாக்கு போன்று
இருந்ததால் இந்தப் பெயர் வந்தது. GLOSSOPTERIS FOSSILS உள்ள பாறைப்
படிவங்கள் , மேற்சொன்ன மாநிலங்களில் உள்ள அடர்ந்த வனப் பகுதிகளில் கண்டு
பிடிக்கப்பட்டன. அந்த வனங்களில் 'GOND ' என அழைக்கப்படும் பழங்குடியினர்
வாழ்ந்து வருகிறார்கள். 'கோண்டு ' இன மக்கள் வாழும் வனப் பகுதியில் உள்ள
படிவப் பாறைகளுக்கு ' மேட்லிகட் ' 'கோண்டுவானப் பாறைகள் ' என
பெயரிட்டார். இதுதான் "கோண்டுவானா " பெயர் வந்த வரலாறு.
பாறைகளுக்கு வைத்த பெயர் எப்படி ஒரு நிலப்பகுதிக்கு சூட்டப்பட்டது என்பதை
பின்னர் பார்ப்போம்.


2012/10/19 செல்வன் <hol...@gmail.com>:

Doc6.doc

seshadri sridharan

unread,
Oct 22, 2012, 9:21:28 AM10/22/12
to mint...@googlegroups.com
தொடருங்கள் ஐயா! தொடருங்கள் !


2012/10/22 Singanenjam Sambandam <singa...@gmail.com>

seshadri sridharan

unread,
Oct 22, 2012, 10:21:05 AM10/22/12
to mint...@googlegroups.com
சுப்பிரமணியன்! நான் நீரஞ்சன் பாரதிக்கு தனிமடலில் அனுப்பிய செய்தியை இங்கு ஒட்டுகிறேன். 
 
 
2012/10/15 Niranjan Bharathi <niranjan...@gmail.com>
அய்யா,

//வணக்கம். தங்கள் கட்டுரை மிகவும் அருமை. பெரும்பாலனவர்க்கு இது பற்றித் தெரியாது//. 

இது பேராசிரியர் சா. குருமூர்த்தியின் கட்டுரை. நான் தமிழில் மொழி பெயர்த்தேன் அவ்வளவே.
 


உங்கள் கட்டுரையில் எனக்கு 2 சந்தேகங்கள் இருக்கின்றன. அவை பின்வருமாறு


//இலெமூரியாவும் குமரிக்கண்டமும் ஒன்றா அல்லது வேறு வேறா ?//

இலெமூரிய என்பது மேலை அறிஞர்களது கருத்தாக்கம். குமரிக் கண்டம் என்பது தமிழ் இலக்கியக் குறிப்பீடு. நிலப் பரப்பளவு வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம் மற்றபடி குமரிக் கண்டம் என்பது இலெமூரியாவின் ஒரு பகுதி என்பதில் தவறு இல்லை.


//35 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கோண்ட்வானா நில  நடுக்கத்தால் சிதறிய போது  இலமூரியா உருவானது.  இதில் தென் இந்தியாவும், கிழக்கிந்திய தீவுகளும் தென்னிந்தியாவிற்குத் தெற்கே நில நடுக்கோடு வரை கடலுக்குள் மூழ்கிப்போன நிலப் பகுதிகளும் தென் ஆப்பிரிக்காவும் அடங்கும்.  

இலெமூரியாக் கண்டர் சிதைவுக்குப் பின் இந்தியா, பகுசுத்தான் மற்றும் தக்காணத்திற்குத் தென்பாலுள்ள பகுதிகளையும், வங்கம் - அரபிக்கடலுள்ள தீவுகளையும் அவை சார்ந்து கடலுக்குள் மூழ்கிப் போன  நிலப் பகுதிகளையும், இந்துக் கடலுள் தமிழகம் சார்ந்த நிலப் பகுதிகளையும் அந்நிலப்பகுதி மாலத்தீவைத் தொடர்ந்து மடகாசுக்கர் வரையுள்ள நிலப்பகுதிகளையும் தமிழகத்தின் கிழக்கே சந்தா தீவு வரை நீண்டு கிடந்த  நிலப்பகுதியையும் கொண்டதையே குமரிக்கண்டம் என்று கூறுகிறார்கள். //

இலெமூரியா என்பது ஒன்றிணைந்த ஒரு பெருங் கண்டம் ஆனால் இது ஒரேயடியாக மூழ்கிவிடவில்லை. மாறாக பல லட்சக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக தாழ்வான நிலங்கள் மட்டும் நீரில் அமிழ்ந்து அங்காங்கே தீவு போன்ற பல நிலங்களாய் அது திரிந்தது. இந்தத் தீவுகள் ஆழமில்லாத நீரால் சூழப்பட்டதால் மக்கள் கழுத்தளவு நீரில் நடந்தே ஒரு தீவில் இருந்து மற்றொரு தீவிற்கு பெயர்ந்தனர் என்கிறார் பிரபாத் ரஞ்சன சர்க்கார்.   இப்படித்தான் நீக்ரோக்களும் ஆத்திரிக்குகளும் நண்நிலக்கோட்டில் ஒன்று கலந்தனர் என்கிறார் அவர். அந்த கலப்பினத்தவரே திராவிடர். இந்த நிகழ்வு 70,000 ஆண்டுகளுக்கும் 40,000 ஆண்டுகளுக்கும் இடைப்பட்டதாக நிகழ்ந்திருக்கலாம். எனவே குமரிக் கண்டம் என்பது  நீங்கள் கீழே ஒட்டியுள்ள நிலம் போல் பெரும் நிலப்பரப்பாக இல்லாமல் தீவுக் கூட்டமாக இருந்த நிலப்பரப்பே.  இந்தோனேசியா பாப்புவா நியுகினியா இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. 

கோண்டுவானா என்பதும் மேலை அறிஞர்களின் கருத்தாக்கம் தான். 

 

Inline image 2


இதைப் பற்றிக் கொஞ்சம் வரைபடம் மூலம் தெளிவு படுத்த இயலுமா ?


//எனினும், குமரியர் -  நாவலந்தீவின் உரிமை மாந்தர் வரலாறு என்ற நூலில் "ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே டேதிசு கடலின் உள்ளிருந்து இமயமலையும் அதைச் சார்ந்த ராக்கிமலை, காஷ்மீர், நேபாளம் ஆகியவை தோன்றின. ஆயினும், இதை நாவலந்தீவு என்றனர்.  வடக்கில் தக்காணம் முதல் தெற்கில் இந்து மாக்கடல் பகுதிக்குள்ளிலும் கிழக்கில் சந்தா தீவு முதல் மேற்கில் மடகாசுகர் வரையிலும் பரவிக்கிடந்த  நிலப்பகுதியை நாவலந்தீவு என்று கூறுவோருமுளர். வரலாற்று நிகழ்ச்சியை நோக்கும் போது சிந்து சமவெளியிலுள்ள மொஹஞ்சோதாரோ, பாகிஸ்தான்,  நாகலாந்து , பர்மா,  நேபாளம்  ஆகியவை  நாலவம் தீவுக்குள் அடக்கம்."

இது மேற்கூறிய தங்களின் கருத்துக்கு மாறாக உள்ளதே. இதைப் பற்றிக் கூற  முடியுமா ?//


நாவலந்தீவு என்பது உண்மையில் காசுமீரத்தை முதலில் குறித்து பின் காசுமீரம் உள்ளிட்ட தென்குமரிமுனை வரையான இந்தியப் பகுதியைச் சுட்டியது. ஆனால் நாவலந்தீவு என்பதை தெற்கே இந்தியப் பேராழியில் இருந்த குமரிக் கண்டமாக தப்பாக பொருள் கொண்டுள்ளனர் தமிழறிஞர்.



//இவை அனைத்தையும் படிக்கும் போது சற்று குழப்பம் ஏற்படுகிறது. //

மேற்சொன்ன என் விளக்கம் உங்களைத் தெளிவு படுத்தி இருக்கும் என நம்புகிறேன். 


//ஆதலால், குமரிக்கண்டம், லெமூரியா,  நாவலம் தீவு ஆகியவை ஒன்றா இல்லை வெவ்வேறா// ?
 
இலெமூரிய என்பது துண்டுபடாத ஒரு பெரு நிலம் அதன்போது மனிதனே தோன்றவில்லை. குமரிக் கண்டம் மூழ்கிய இலெமூரியாவின் எச்சப்பகுதியான தீவுக் கூட்டங்களே. 

நாவலந்தீவு குமரிக் கண்டத்தை குறிப்பதல்ல மாறாக 1947 ஆண்டைய இந்திய நிலப்பரப்பைக் குறிப்பது.

இதுவே நான் கொண்டுள்ள குமரிக் கண்டக் கொள்கை. இதற்கு பிரபாத் ரஞ்சன் சர்க்காரே காரணகர்.

சேசாத்திரி

//ஐயா நீங்கள் கோண்டுவானா, லெமூரியா, குமரி நாடு வேரு என்கிறீர்கள்.  நான் ஊகித்தது சரியோ? 
தென்காசி சுப்பிரமணியன்

//
Kumari Kandam 2.jpg

seshadri sridharan

unread,
Oct 23, 2012, 3:58:01 AM10/23/12
to mint...@googlegroups.com
இந்த  கட்டுரையை தமிழ் மரபு விக்கியில் பதிவேற்ற முயன்ற செல்வன், பதிவேற்றீய கீதா அம்மணி ஆகியோர்க்கு என் நன்றி.

சேசாத்திரி

2012/10/19 செல்வன் <hol...@gmail.com

Singanenjam Sambandam

unread,
Oct 23, 2012, 5:59:22 AM10/23/12
to mint...@googlegroups.com
பாறைகளுக்கு வைத்த பெயர் எப்படி ஒரு நிலப்பகுதிக்கு சூட்டப்பட்டது என்பதை
பார்ப்போம். அதற்க்கு முன் "GOND '
இன மக்கள் பற்றி சில தகவல்கள்.
இந்த இன மக்கள் மத்ய பிரதேசம்,ஒரிசா , வட ஆந்திரப் பிரதேசம் ஆகிய
பகுதிகளில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்திய அரசு இவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துள்ளது.
தற்போது சுமார் பத்து லட்சம் GOND இன மக்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்த பழங்குடியினர்.
இவர்கள் பேசும் GONDI மொழி தென் மத்ய திராவிட குடும்பத்தை சேர்ந்தது.
இவர்கள் பசுவை அர்ப்பணித்து பூசை செய்ததால் 'கோ வந்தன ' மக்கள் என
அழைக்கப்பட்டார்கள்.
'கோ வந்தன ' பின்னர் 'கோண்டுவானா ' ஆயிற்று என சொல்வோரும் உளர்.
இந்திய வரலாற்று ஆசிரியர்கள் GOND எனும் பெயர் , 11 -12 ஆம்
நூற்றாண்டுகளில் வந்த ஆப்கானிஸ்தானிய வணிகர்கள் வைத்த பெயர் எனக்
கருதுகிறார்கள்

இனி,
HENRY BENDICT MEDLICOTT (1870 ) (படத்தில் பின் நிற்பவர்களில்
வலமிருந்து இரண்டாவதாக இருப்பவர்)
டின் கண்டுபிடிப்புகள் 1876 ஆம் ஆண்டு அச்சேறின. 'கோண்டுவான ' எனும் சொல்
அச்சேறியது அப்போதுதான். ஆண்டு 1876 (படம்).அசெற்றியவர் 'OTTOKAR
FEISTMANTLE '
எனும் ஆங்கிலேயர்.
ஒன்பது ஆண்டுகள் கழித்து , வியென்னா பல்கலைக் கழகப் பேராசிரியர் 'EDVARD
SUESS ' தான் எழுதிய நூலில் இந்திய, மடகாஸ்கர், தென் ஆப்ரிக்கா , தென்
அமெரிக்கா , ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் அடங்கிய நிலத்
தொகுப்புக்கு'கோண்டுவானா லேன்ட் ' என்று பெயரிட்டார். லெமுரியா அந்த
காலத்தில் பரபரப்பாகக் பேசப் பட்டு வந்தாலும் -அது ZOOLOGICAL பெயர்.
'கோண்டுவானா ' ஒரு GEOLOGIST ஆல் வழங்கப்பட்ட GEOLOGICAL பெயர். SUESS
புவியியல் பேராசிரியர். எனவே அவர் 'லெமுரியா 'விற்கு பதிலாக 'கோண்டுவானா’
வை தேர்ந்தெடுத்தார். இப்படித்தான் தென் கண்டங்கள் அனைத்திலும்
கோண்டுவானா படிவப்பாறைகள் இருப்பதால் , அவை அனைத்தும் அடங்கிய நிலத்
தொகுப்புக்கு 'கோண்டுவானா லேன்ட்'என பெயரிடப்பட்டது.
பின்னர் 1912 இல் ALFRED WAGNER என்ன செய்தார் என்பதை பிறகு பார்ப்போம்
படம்-GSI யின் புவி ஆய்வாளர்கள்(முதல் குழு)1860
படம்-இன்றய GOND இனத்தவருடன் ஆங்கில ஆய்வாளர்.
படம்-GSI பதிவேடு (GONDUWANA -அச்சேறியது)


2012/10/23 seshadri sridharan <ssesh...@gmail.com>:

GOND 2.doc
GOND 0.doc
GOND 1.doc

Singanenjam Sambandam

unread,
Oct 23, 2012, 7:37:25 AM10/23/12
to mint...@googlegroups.com
ALFRED WEGENER பற்றி பார்க்கும் முன் , நம் குமரிக் கண்டம் பற்றி
கொஞ்சம் பார்க்கலாம்., எர்னெஸ்ட் ஹெயன்றிச் ஹெக்கல் எனும்
புவியியளாலரின் கருத்தில் உதித்து பிலிப் எல் . ச்ச்லட்டேர் எனும்
உயிரியளாலரால் நாமகரணம் சூட்டப்பட்ட லெமுரியா தான் கடலில் மூழ்கிய
குமரிக் கண்டம் என சிலபல தமிழ் ஆர்வலர்கள் உறுதியாக நம்புகின்றனர். இந்த
குமரிக் கண்ட கோட்பாட்டிற்கு வித்திட்டவர்கள் இடைக் காலத்து (9 - 10 ஆம்
நூற்றாண்டு ? ) உரை ஆசிரியர்கள் ஆகிய இளம்பூரணார், அடியார்க்கு நல்லார்
போன்றவர்களே என்பது என் பணிவான கருத்து., இளங்கோ சிலம்பில், “நெடியோன்
குன்றமும், தொடியோள் பௌவமும், தமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு,
மாட மதுரையும், பீடு ஆர் உறந்தையும், கலி கெழு வஞ்சி்யும், ஒலி புனல்
புகாரும்,'', (புகார்-வேனிர்காதை-1 -4 ), என தமிழ் நாடு பற்றி நேராக
-தெளிவாக குறிப்பிட்டுள்ளார். தொடியோள் என்றால் குமரி-பவ்வம் என்றால்
கடல் என நேரடியாகப் பொருள் கொள்ளாமல் , “நெடியோன் குன்றமும் தொடியோள்
நதியு மென்னாது பௌவ மென்றது என்னையெனின், முதலூழியிறுதிக்கண் தென்மதுரை
யகத்துத் தலைச் சங்கத்து அகத்தியனாரும் இறையனாரும் குமரவேளும்
முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும் என்றிவருள்ளிட்ட
நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் எண்ணிறந்த பரிபாடலும்
முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரையும் உள்ளிட்டவற்றைப் புனைந்து
தெரிந்து நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு இரீஇயினார்
காய்சினவழுதி முதற் கடுங்கோனீறா யுள்ளார் எண்பத்தொன்பதின்மர் ; அவருட்
கவியரங்கேறினார் எழுவர் பாண்டியருள் ஒருவன் சயமா கீர்த்தியனாகிய நிலந்தரு
திருவிற் பாண்டியன் தொல்காப்பியம் புலப்படுத்து இரீஇயினான். அக் காலத்து
அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லை யாகிய
பஃறுளியென்னுமாற்றிற்கும் குமரியென்னு மாற்றிற்குமிடையே நாலாயிரத்து
நானூற்று நாற்பதிற்றியாண்டு இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்கநாடும்
ஏழ் மதுரைநாடும் ஏழ் முன்பாலைநாடும் ஏழ் பின்பாலைநாடும் ஏழ் குன்றநாடும்
ஏழ் குணகாரைநாடும் ஏழ் குறும்பனைநாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது
நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும், நதியும், பதியும்,
தடநீர்க் குமரி வட பெருங் கோட்டின்காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய
பௌவ மென்றா ரென்றுணர்க.”, என்று அடியார்க்கு நல்லார் உரை எழுதியுள்ளார்.
தொடர்ந்து, இஃது என்னை பெறுமாறெனின் 1"வடிவே லெறிந்த வான்பகை பொறாது,
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக், குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள"
என்பதனானும், கணக்காயனார் மகனார் நக்கீரனாருரைத்த இறையனார்
பொருளுரையானும், உரையாசிரியராகிய இளம்பூரணவடிகள் முகவுரை யானும்,
பிறவாற்றானும், பெறுதும்.] என்றும் பேசுகிறார் உரை ஆசிரியர்., இது சரியா
என அன்பர்கள் எண்ணிப் பாருங்கள்., சிலம்பிற்கு முற்பட்ட எந்த
இலக்கியத்திலாவது "குமரிக் கண்டம்" - "குமரி ஆறு",ஆகிய தொடர்கள்
வந்துள்ளனவா?, சிந்தியுங்கள்., இந்த நாலாயிரத்து நானூற்று
நாற்பத்தொன்பதின்மர் ,நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு
,ஏழ்தெங்கநாடும் ஏழ் மதுரைநாடும் ஏழ் முன்பாலைநாடும் ஏழ் பின்பாலைநாடும்
ஏழ் குன்றநாடும் ஏழ் குணகாரைநாடும் ஏழ் குறும்பனைநாடும் என்னும் இந்த
நாற்பத்தொன்பது நாடு" கதை எல்லாம் எங்கிருந்து வந்தன?, யோசிக்க
வேண்டும்., அடியார்க்கு நல்லார் உரை "கடுகளவும் கட்டுச் செய்தியாய்
இருக்க முடியாது " ,என முழங்குகிறார் மொழி ஞாயிறு நம் பாவணர்., "இன்றைய
குமரி முனைக்குத் தெற்கே ஈராயிரம் மைல் நீல நிலப் பரப்பு இருந்தது.-அதன்
தென் கோடியில் பஹுரிளியாறும்-வட கோடியில் குமரி ஆறும் பாய்ந்தோடின
-குமரிக் கண்ட தென்கோடியில் பனிமலை தொடர் போலும் பன்மலை அடுக்கத்து
குமரித்தொடர் இருந்தது.இந்த குமரி கண்டத்தில் தான் தமிழ்
தோன்றியது-தமிழன் தோன்றினான் " என பாவாணர் உறுதியாக நம்புகிறார்., ஆனால்
இவையெல்லாம் உணர்ச்சி வயப்பட்டு உந்துதலால் சொல்லப்பட்ட சொற்களாகவே
தெரிகின்றன. இவை எதற்கும் புவியியல் ஆதாரங்கள் ஏதும் இல்லை., பாவாணர்
கூறும் கடல் கோள் பற்றி அடுத்து பேசுவோம்.

2012/10/23 Singanenjam Sambandam <singa...@gmail.com>:

Nagarajan Vadivel

unread,
Oct 25, 2012, 8:41:05 AM10/25/12
to mint...@googlegroups.com
https://www.youtube.com/watch?v=yl8bMHjR6jY

உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு!
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான்.
அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார
உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின்
வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய "முதற்தாய் மொழி"
வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம்
கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்
படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர்,
பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டினர்.
குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம்
அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும்
தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும்
நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா
கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம்,
திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப்
பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள்
குமரிக்கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.
இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு
என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட
நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான்
உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள்
தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும்
சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும்,
தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச்
சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன.
கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக
எடுத்துக்காட்டலாம்.

https://www.youtube.com/watch?v=auNmfvqj8zs

நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று
அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக
இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள
ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு
தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் " குமரிக்கண்டம்
".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை நாடு,ஏழுபின்பலை நாடு,ஏழுகுன்ற
நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது
நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது
!!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!.
தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள்
இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன்
நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் "
இறையனார் அகப்பொருள் " என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990
வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த
கடலடியில் உள்ள " தென் மதுரையில் " கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் ,
சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, " பரிபாடல்,
முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம் " ஆகிய நூல்களை
இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச்
சங்கம் " கபாடபுரம் " நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன் "
அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம் " ஆகிய நூல்களை
இயற்றப்பட்டது . இதில் " தொல்காப்பியம் மட்டுமே நமக்கு
கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய " மதுரையில் " கி.மு 1850
இல் 449 புலவர்கள்களுடன் " அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள் "
ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை
பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த

நாகராசன்

2012/10/23 Singanenjam Sambandam <singa...@gmail.com>:

Singanenjam Sambandam

unread,
Oct 25, 2012, 9:07:31 AM10/25/12
to mint...@googlegroups.com
நண்பர் நாகராஜன் அய்யா அவர்களுக்கு நன்றி. குமரிக் கண்டம்-குமரி ஆறு-
போன்ற சொற்றொடர்களோ அல்லது இவை பற்றியோ குறிப்புகளோ உரை ஆசிரியர்கள்
காலத்திற்கு முற்பட்ட இலக்கியங்களில் எங்கேனும் காணப்படுகின்றனவா ? ஆம்
-எனில் எங்கே என்று
சொல்லுங்கள்.
பெரியவர்கள் பலர் சொன்னார்கள் என்பதற்காக அவற்றை அப்படியே
ஏற்றுக்கொள்ளுதல் சரிதானா ?
அன்றைக்கு அந்தக் கருத்து சரியாக இருந்திருக்கலாம் -அது இன்றய புவியியல்
கண்டு பிடிப்புகளுடன் ஒத்துப் போகிறதா என சிந்திக்க வேண்டாமா
அணுவியலின் தந்தை டால்டன் அன்று சொன்னது " 1) All matter is made of
atoms. Atoms are indivisible and indestructible.'-இன்றைக்கும் நாம் இதை
ஏற்றுக் கொள்கிறோமா?
Continental Drift , Ocean floor spreading , Plate TECTONICS ஆகியவை
வந்தபின் Land bridge கருத்து சுத்தமாக அடி பட்டுப் போனது.
என்ன நிகழ்ந்திருக்கலாம் என்பது பற்றி போகப் போக பேசுவோம் .

2012/10/25 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

Nagarajan Vadivel

unread,
Oct 25, 2012, 9:36:12 AM10/25/12
to mint...@googlegroups.com
உங்களின் மேலான கருத்தை மறுப்பின்றி ஏற்றுக்கொள்கிறேன்.

வழக்கில் உள்ள வரலாற்றுத் தகவலின் நம்பகத்தன்மையை நிறுவும் பணியில்
பெரியவர் சொன்னார் ஒரு காலத்தில் சொன்னார் என்பது ஏற்புடைத்தல்ல

அதே நேரம் அறிவுத் தேடலில் ஈடுபட்ட முந்தைய அறிஞர்களின் செயல்
பார்வைக்கோணம் பயன்படுத்திய ஆவணங்கள் ஆகியவற்றை இன்றைக்குப்
பொருந்துவதில்லை என்பதால் முற்றும் தவறென்று புறம் தள்ளுவது தேவையில்லை
என்பது என் கருத்து

பாவாணர் தான் வாழ்ந்த காலத்தில் அவர் பயன்படூத்திய வளங்கள் அவர் ஒரு
குறிப்பிட்ட கருத்துக்கொள்கையை ஒரு புலம் சார்ந்து பற்றிநின்று ஆய்ந்த
செயல் திட்டம் ஆகியன இன்றைய ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படுமல்லவா

புதிய விதிகள் நிறுவப்படும்போது பழைய விதிகள் காலாவதியானாலும் அவை ஒரு
குமுகத்தின் வரலாற்றின் அறிவுத் தேடலில் ஒரு மைல்கல்

அந்த ஆய்வாளரை தவறிழைத்தார் என்று குறை கூறுவதைவிட அவர் செயலை ஆய்ந்து
அவரது நல்ல கருத்துக்களை ஏற்றுக்கொள்ளலாமல்லவா?

நாகராசன்

2012/10/25 Singanenjam Sambandam <singa...@gmail.com>:

Singanenjam Sambandam

unread,
Oct 28, 2012, 3:40:11 AM10/28/12
to mint...@googlegroups.com
சரியாக சொல்லியிருக்கிறீர்கள். மொழி ஞாயிறு பாவாணர் அய்யா மீது பற்று
வைத்துள்ள பலரில் நானும் ஒருவன்.
அவரின் குமரிக் கண்ட கருத்துக்கள் அனைத்தயும் பல முறை படித்துள்ளேன்.
ஆனால், புவி அறிவியல் காட்டும் உண்மைகள் வேறு மாதிரியாக இருக்கும் போது,
அவற்றை சுட்டிக் காட்டுவது என் கடமை என கருதுகிறேன்.
இனி விரிவாக இது பற்றி எழுதுவேன்.

Niranjan Bharathi

unread,
Nov 3, 2012, 1:47:11 PM11/3/12
to mint...@googlegroups.com
அடுத்த கட்டுரை எப்போது.
ஆவலோடு காத்திருக்கிறேன். 

2012/10/28 தென்காசி சுப்பிரமணியன் <tenkasisu...@gmail.com>
சிங்கநெஞ்சன் அவர்கலுக்கு வணக்கம். நான் முன்பு பதிந்த இழையை நீங்கல் பார்த்தீர்களா என்பது தெரியவில்லை. நீங்கல் கேட்ட குமரி ஆறு சிலம்பின் உரையாசிரியர்கள் காலத்துக்கு முன் இருந்ததா என்பதற்கு கீழ் வரும் இழையில் பதிலலித்துளேன். ஏற்கனவே பார்த்திருந்தால் சரி.

ஆனால் நீங்கல் கூரியது போல் அறிவியல் ரீதியாக குமரிக்கன்டம் அவ்வள்வு பெரிய நிலப்பரப்பா என்பதில் எனக்கும் கேள்விகல் பல உள்லது. இப்போது உள்ளத எல்லாம் ஊகங்கள் தான். எனக்கு ஆப்பிரிக்க தென்னமேரிக்க equatorilal forest பகுதிகளில் (நிலநடுக்கோட்டு பகுதியில்) மேல் பகுதியிலும் கீழ் பகுதியிலும் ஏதாவது பகுதிகல் மாறி மாறி பாலைவனங்கலாக அகுமா என்பதை தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

குமரிக்கண்டம் குமரி ஆறு போன்ற சொற்கள் உரையாசிரியர்கள் காலத்துக்கு முன் உள்ளதா? 

-----------------

ஏழ் "முன்"பாலை நாடுகளும் ஏழ் 'பின்"பாலை நாடுகளும் 


------------------

Suba.T.

unread,
Sep 17, 2014, 5:37:56 PM9/17/14
to மின்தமிழ், Subashini Tremmel
ஒரு விழியப் பதிவை பார்க்க நேர்ந்தது. 
லெமூரியா குமரிக்கணடம்.. மறைந்த பாண்டிய அரசின் நகரங்கள் என விவரிக்கப்பட்டு தொடர்ந்து இலங்கை பற்றிய விஷயங்களும் என்ற வகையில் அமைந்த ஒரு பதிவு இது.

இத்துறை அறிஞர்கள் தங்கள் கருத்துக்களையும் பதிந்தால் உதவும்.

சுபா

Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

bala subramani

unread,
Sep 18, 2014, 1:43:56 AM9/18/14
to மின்தமிழ்
குமரி கடல் அதில் மூழ்கி உள்ள மனிதர்கள்  வாழ்ந்த இடம் என்பது 1917 இல் சுப்ரமணிய சாஸ்திரி என்ற தமிழ் ஆசிரியர் மடகாஸ்கர் பாப்புவா  நியூ குணியா   தென் தமிழ்நாட்டை இணைத்த கோடுகள் மற்றும் பொள்ளாச்சி மகாலிங்கம் மற்றும் அவரின் நிதி உதவியால் எழுதிய குழுவினர் மற்றும் குழந்தை போன்றவர்கள் இலக்கிய மேற்கோள்களை வைத்து எழுதிய தரவுகளை தான் இந்த படம் சுட்டுகிறது 

எங்களை போன்ற கடல் சார் மேலாண்மை மற்றும் கடல் பயணத்தில் ஆய்வு செய்து சொன்னது உள்ள இடங்களை பற்றிய குறிப்புகள் இல்லை 



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba.T.

unread,
Sep 18, 2014, 2:47:53 AM9/18/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-09-18 7:43 GMT+02:00 bala subramani <sunke...@gmail.com>:
குமரி கடல் அதில் மூழ்கி உள்ள மனிதர்கள்  வாழ்ந்த இடம் என்பது 1917 இல் சுப்ரமணிய சாஸ்திரி என்ற தமிழ் ஆசிரியர் மடகாஸ்கர் பாப்புவா  நியூ குணியா   தென் தமிழ்நாட்டை இணைத்த கோடுகள் மற்றும் பொள்ளாச்சி மகாலிங்கம் மற்றும் அவரின் நிதி உதவியால் எழுதிய குழுவினர் மற்றும் குழந்தை போன்றவர்கள் இலக்கிய மேற்கோள்களை வைத்து எழுதிய தரவுகளை தான் இந்த படம் சுட்டுகிறது 

எங்களை போன்ற கடல் சார் மேலாண்மை மற்றும் கடல் பயணத்தில் ஆய்வு செய்து சொன்னது உள்ள இடங்களை பற்றிய குறிப்புகள் இல்லை 

​முக்கியக் கருத்தை முன் வைத்திருக்கின்றீர்கள்.
உங்கள தரவுகளின் அடிப்படியில் இப்படி ஒரு ​
 
​விழியப்படத்தை தயாரிப்பது அவசியம் என்றும் நினைக்கின்றேன்.
உங்கள் தொலைகாட்சி நீகழ்ச்சிகளின் பதிவுகள் யூடியூபில் வலையேற்றப்பட்டிருந்தால் அவற்றின் லிங்க்களைப் பெற்று இங்கு பகிர்ந்து கொள்கின்றீர்களா? இவை தொடர்ந்து அறிவியல் பூர்வமாக நாம் இந்த விஷயங்களை அணுகவும் துணை செய்யும் என்று கருதுகிறேன்.

சுபா
Reply all
Reply to author
Forward
0 new messages