பேயாழ்வார்

377 views
Skip to first unread message

DEV RAJ

unread,
Nov 11, 2013, 11:26:52 AM11/11/13
to mint...@googlegroups.com
சீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள்
காரார் கருமுகிலைக் காணப்புக்கு -ஓராத்
திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் சூழலே
உரைக்கண்டாய் நெஞ்சே யுகந்து.

           மூன்றாம் திருவந்தாதி

மருந்தும் பொருளும் அமுதமும் தானே,
திருந்திய செங்கண்மா லாங்கே, - பொருந்தியும்
நின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால்,
அன்றுலகம் தாயோன் அடி.

படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று,
அடிவட்டத் தாலளப்ப நீண்ட - முடிவட்டம்,
ஆகாய மூடறுத் தண்டம்போய் நீண்டதே,
மாகாய மாய்நின்ற மாற்கு.

இசைந்த அரவமும் வெற்பும் கடலும்,
பசைந்தங் கமுது படுப்ப, - அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சிவெஃ காவில்,
கிடந்திருந்து நின்றதுவும் அங்கு.

ஓர்த்த மனத்தராய் ஐந்தடக்கி யாராய்ந்து,
பேர்த்தால் பிறப்பேழும் பேர்க்கலாம், - கார்த்த
விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி,
நிரையார மார்வனையே நின்று.

சென்றநாள் செல்லாத செங்கண்மா லெங்கள்மால்,
என்றநா ளெந்நாளும் நாளாகும், - என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே யாளாய்,
மறவாது வாழ்த்துகவென் வாய்.

பேயாழ்வார் திருவடிகளே சரணம்

Dhivakar

unread,
Nov 11, 2013, 11:43:33 AM11/11/13
to மின்தமிழ்
//சென்றநாள் செல்லாத செங்கண்மா லெங்கள்மால்,
என்றநா ளெந்நாளும் நாளாகும், //

யாராவது இன்னிக்கி நாள் சரியில்லேப்பா’ன்னு சொன்னா, இந்தப் பாடலைப் படிக்கச் சொல்ல வேண்டும்.

’நாராயணா என்னாத நாவென்ன நாவோ’

இளங்கோ ஆழ்வாருக்குப் பின் தமிழைத் தாங்கியவர்களில் முதல்வர் பேயாழ்வார்.

2013/11/11 DEV RAJ <rde...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Innamburan S.Soundararajan

unread,
Nov 11, 2013, 11:43:36 AM11/11/13
to mintamil
'...மருந்தும் பொருளும் அமுதமும் தானே,
திருந்திய செங்கண்மா லாங்கே…'

~ நானும் தெண்டன் சமர்ப்பிவித்த விஞ்ஞாபனம்.

--

ரா.கிருஷ்ணன்

unread,
Nov 11, 2013, 1:03:50 PM11/11/13
to mint...@googlegroups.com
எல்லாவற்றையும் அவனுக்கு அர்ப்பணித்து விட்டார் திரு.தேவ்.

2013/11/11 DEV RAJ <rde...@gmail.com>
சீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள்

--

shylaja

unread,
Nov 11, 2013, 9:25:39 PM11/11/13
to mintamil
ஐப்பசி மாதம் அடுத்தடுத்த  திருநட்சத்திரங்களில் அவதரித்தவர்கள்  மூன்று ஆழ்வார்கள் முதலாழ்வார்கள் என்ப்படும் இவர்களில்  பொய்கைஆழவாரும் பூதத்தாழ்வாரும் முறையேஇடர் நீக்கும் இன்ப விளக்கும் ஞானச்சுடர்வீசும் நல்விளக்கும் ஏற்றினர். அந்த ஒளியில் ஆழிவண்ணனின் அழகிய திருமேனியை தன் அகக்கண்ணால் கண்டார் பேயாழ்வார்.
 
உடனேயே ‘திருக்கண்டேன் பொன் மேனிகண்டேன்’ என்று பரவசத்துடன் பாட ஆரம்பித்தார்.
 
கருவிலே திரு உடையார்  என்பவர்கள்  தாயின் கர்ப்பத்திலேயே  பெருமானின் 
அருளுக்குப்பாத்திரமானவர்கள்.  முதலாழ்வார்களில் முதல்வரான பூதத்தாழ்வாரும்,’ ‘அன்று  கருவரங்கத்துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன் திருவரங்க மேயான் திசை’ என்று  அருளினார்.
முதலாழ்வார்களில் இரண்டாமவரான பூதத்தாழ்வாரும் ‘அன்று கருக்கோட்டியுள் கிடந்து கைதொழுதேன் கண்டேன் iிதருக்கோட்டி எந்தை நிறம்’ என்கிறார்.
 
முதலாழ்வார்கள் அயோநிஜர்கள் கர்ப்பவாசம் செய்தவர்களில்லை கருவிலே திரு உடையார்களைத்தம் மேல் ஏற்றிக்கொண்டு கருவிலே எம்பெருமான் செய்யும் அனுக்ரஹத்தை போற்றிப்புகழ்கிறார்கள். 
 
பேயாழ்வார் பெருமானைப்பற்றிய தேவ் அவர்களின் இழையில்  பங்கு கொள்ள  இன்று பேயாழ்வார் திருநட்சத்திரத்தில் அமைந்ததும்  பேறுதான்.

2013/11/11 DEV RAJ <rde...@gmail.com>
சீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
 
. .

Reply
Forward
 
ருத்ரா இ.பரமசிவன்

unread,
Nov 12, 2013, 2:49:46 AM11/12/13
to mint...@googlegroups.com

செங்கண் மால்...
===============================ருத்ரா

பேயாழ்வார் 
"பேர்த்திடுவார்"
பிரபஞ்சந்தனையே
பெருமாளின் பேரையே
நினைந்து நினைந்து.

செங்கண் மாவிசும்பு
அகலும் விரியும்.
அகச்சிவப்புக் கதிர்களாகி
விண்படலம் எங்கணுமே
விம்மும் விம்மும்.

ஹப்பில் என்கின்ற‌
விஞ்ஞானி கண்ட‌
"ரெட் ஷிஃப்ட்" இதுவே.
அண்ட விரிவே 
அவன் வடிவு.

செங்கண் மாலே
"ஹப்பில்" 
தொலைநோக்கி
பேயாழ்வான் நம்
மெய் விஞ்ஞானி.

"பேய் வீக்கம்
பிரபஞ்ச வீக்கம்"
ஆலன் குத் எனும்
அமெரிக்கன் சொன்னதும்
"பேயாழ்வம்" தான்.

//"படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று,
அடிவட்டத் தாலளப்ப நீண்ட - முடிவட்டம்,
ஆகாய மூடறுத் தண்டம்போய் நீண்டதே,
மாகாய மாய்நின்ற மாற்கு."//

=========================================================

PRASATH

unread,
Nov 12, 2013, 2:58:33 AM11/12/13
to mint...@googlegroups.com
சீரான் சுழலே என வந்திருக்க வேண்டுமா ஐயா...

2013/11/11 DEV RAJ <rde...@gmail.com>

DEV RAJ

unread,
Nov 12, 2013, 3:34:48 AM11/12/13
to mint...@googlegroups.com
On Tuesday, 12 November 2013 13:28:33 UTC+5:30, பிரசாத் வேணுகோபால் wrote:
சீரான் சுழலே என வந்திருக்க வேண்டுமா ஐயா...

சூழல் சரிதான்.
சூழலாவது விரகு - உபாயம்;
செங்கண் மால்தன் திறம் காண்பதற்குரிய உபாயம்.
நாலாயிரத்திலும், உரைகளிலும் பயிலும் நுடி. 

எங்கள்மால் என்றநாள் எந்நாளும் நாளாகும் - திவாகர் சார்
பாயிண்டை பிடித்து விட்டார். ‘இ’ ஐயா, கிருஷ்ணன் அவர்கள்,
ஷைலு ஜீ, ருத்ரா ஜீ அனைவருக்கும் நன்றி.

அன்பர்கள் இந்த அளவு ஈடுபட்டுகப்பது வியப்பளிக்கிறது

அன்புடன்
தேவ்

PRASATH

unread,
Nov 12, 2013, 3:42:24 AM11/12/13
to mint...@googlegroups.com
ஐயா,
 
நான் வினவ வந்தது,
 
சீரான் சூழலே உரைக்கண்டாய் 
 
என பாடலை எழுதும் பொழுது தளை தட்டுகிறது. அதனால் சீரான் சூழலே என்பதை பொருள் மாறாமல் கவிதைக்காய் வேண்டி சீரான் சுழலே என எழுத வேண்டுமா என்பதைத் தெளிவு படுத்திக் கொள்ள ஐயா...

2013/11/12 DEV RAJ <rde...@gmail.com>

DEV RAJ

unread,
Nov 12, 2013, 3:58:42 AM11/12/13
to mint...@googlegroups.com
On Tuesday, 12 November 2013 14:12:24 UTC+5:30, பிரசாத் வேணுகோபால் wrote:
சீரான் சூழலே உரைக்கண்டாய்  
என பாடலை எழுதும் பொழுது தளை தட்டுகிறது. அதனால் சீரான் சூழலே என்பதை பொருள் மாறாமல் கவிதைக்காய் வேண்டி சீரான் சுழலே என எழுத வேண்டுமா என்பதைத் தெளிவு படுத்திக் கொள்ள ஐயா...

அந்த அளவு அடியேன் அறியேன், ஐயா.
பாடல் திருக்குருகைக் காவலப்பன் எனும்
யோகியார் அருளியது; இவர் நாதமுனிகளின்
சீடர். பல பிரதிகளிலும் இதுபோன்றே உள்ளது.
TVA தளத்திலும் அவ்வாறே

தேவ் 

PRASATH

unread,
Nov 12, 2013, 4:06:04 AM11/12/13
to mint...@googlegroups.com
ஐயா,
 
கோபமென்றால் வைது விடுங்கள்... இந்த சிறியவனை ஐயா என தாங்கள் அழைப்பது ஏதோ மாதிரி இருக்கிறது. தாங்கள் என்னை பெயரிட்டே அழைக்கலாம்...  
 
நாம் குறிப்பிடும் பாடல் வெண்பாவுக்கான இலக்கணங்களோடு எல்லா இடத்திலும் பொருந்தி அந்த ஒரு இடத்தில் மட்டும் சற்று இடறுவதால் எழுந்த சந்தேகமே அன்றி வேறேதும் இல்லை ஐயா...
 
இணையவெளியில் வேறு ஏதேனும் பதிப்பு கிடைக்கிறதா எனத் தேடி பார்க்கிறேன் ஐயா,
 
நன்றி,
பிரசாத் வேணுகோபால்.

2013/11/12 DEV RAJ <rde...@gmail.com>

PRASATH

unread,
Nov 12, 2013, 4:08:12 AM11/12/13
to mint...@googlegroups.com
ஐயா,
 
மேற்கண்ட சுட்டியில் இதற்கான விளக்கம் கிடைத்தது.
 
அது சீரான் கழலே... என இருக்க வேண்டுமாம்...

2013/11/12 PRASATH <pras...@gmail.com>

DEV RAJ

unread,
Nov 12, 2013, 4:24:45 AM11/12/13
to mint...@googlegroups.com
On Tuesday, 12 November 2013 14:36:04 UTC+5:30, பிரசாத் வேணுகோபால் wrote:
ஐயா, 
கோபமென்றால் வைது விடுங்கள்... இந்த சிறியவனை ஐயா என தாங்கள் அழைப்பது ஏதோ மாதிரி இருக்கிறது.

கழல் - சரியான பாடமாக இருக்கலாம்.

வரவாற்றில் அடியார்கள் யாராயினும் நீர், நீவிர் என்றே
அழைக்க வேண்டும். மிக்குயர் நிலையிலிருந்த உடையவரே
கடைப்பிடித்து வந்த மரபு. இது புலமை வெளிப்பாட்டிற்கான
இழையுமன்று. பகவத் குணாநுபவமே முதன்மை. 
மாலவனைப் பாடியதால் தான் வளர்த்த கிளியைத் தானே 
கைகூப்பி வணங்கினாளாம் ஒரு பக்தை -

முளைக்கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா
          மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய
          அந்தணனை அந்தணர்தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தை திருத்தண்காவில்
          வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்தனால் பயன்பெற்றேன் வருக என்று
          மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே !

தேவ்
 
PRASATH

unread,
Nov 12, 2013, 4:29:16 AM11/12/13
to mint...@googlegroups.com
நல்லது ஐயா...

2013/11/12 DEV RAJ <rde...@gmail.com>
 
ரா.கிருஷ்ணன்

unread,
Nov 12, 2013, 4:48:16 AM11/12/13
to mint...@googlegroups.com
திரு.தேவ்

திரு, பிரசாத் கண்டுபிடித்தது வெறும் இலக்கணப் பிழை மட்டுமல்ல. குருகை காவலப்பனின் வழியே வந்த சொல்லும் அங்கே போய்விடுகிறது. மஹநீயர்களின் ஒவ்வொரு சொல்லும் முக்கியமல்லவா?
அங்கே கழல் என்பதற்குப் பதில் சூழல் என்று வரும்போது நிறைய மாறிவிடுகிறது.

எனவே திரு.பிரசாத் மூலம் நமக்கு கிடைத்தது நல்ல விஷயமே.

2013/11/12 DEV RAJ <rde...@gmail.com>
On Tuesday, 12 November 2013 14:36:04 UTC+5:30, பிரசாத் வேணுகோபால் wrote:

--

meenavan2

unread,
Nov 12, 2013, 5:00:43 AM11/12/13
to mint...@googlegroups.com

அய்யா பிரசாத் வேணுகோபால்  அவர்களே

சீரான் கழலே  என்பதுதான் சரியானது
பிரபந்த மூலத்தை நோக்குக.

காப்பியக் க்விஞர்.நா.மீனவன்

DEV RAJ

unread,
Nov 12, 2013, 7:19:57 AM11/12/13
to mint...@googlegroups.com
On Tuesday, 12 November 2013 15:18:16 UTC+5:30, krishnanrnava wrote:
திரு, பிரசாத் கண்டுபிடித்தது வெறும் இலக்கணப் பிழை மட்டுமல்ல. குருகை காவலப்பனின் வழியே வந்த சொல்லும் அங்கே போய்விடுகிறது. மஹநீயர்களின் ஒவ்வொரு சொல்லும் முக்கியமல்லவா?
அங்கே கழல் என்பதற்குப் பதில் சூழல் என்று வரும்போது நிறைய மாறிவிடுகிறது.
எனவே திரு.பிரசாத் மூலம் நமக்கு கிடைத்தது நல்ல விஷயமே.

ஆம், கட்டாயமாக.
சூழல் விரகெனும் பொருளில்
கையாளப்படுவதால் மாலவன் திறம் 
காட்டும் சூழலைச் சொல்லும் அப்பாடம்
ஏற்புடையது என நினைத்தேன்

தேவ்
 
DEV RAJ

unread,
Nov 12, 2013, 9:20:59 AM11/12/13
to mint...@googlegroups.com
உலகோர்க்குச் சொன்னால் கேட்பரோ மாட்டாரோ !
ஆழ்வார் தம் மனத்தையே விளித்துப் பேசுகிறார் -

உளன்கண்டாய் நன்னெஞ்சே ! உத்தம னென்றும்
உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத் துளன்கண்டாய்,
விண்ணொடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான்,
மண்ணொடுங்கத் தானளந்த மன்.

உளன் - அவனது இருப்பை ஒப்புக்கொண்டாலும்,
மறுத்தாலும் நம்மைக் காப்பதிலேயே முயற்சி
உடையவன் என்கிறது உரை.

இந்த ஆழ்வாருக்குத் திருமால் உலகளந்த 
வைபவத்தில் மட்டுமே அளவு கடந்த ஈடுபாடோ
என்று தோன்றுகிறது. 

எளிய தமிழில் ராஜாஜி எழுதிய முதல் மூவர் 
நினைவுக்கு வருகிறது, என்றோ படித்தது. 
அது எதிர்மறை விமர்சநத்துக்கும் 
உள்ளானது. 

தேவ்

shylaja

unread,
Nov 12, 2013, 10:06:08 AM11/12/13
to mintamil
பூததாழ்வாரும்  இதேபோல்  பாசுரம் அருளி இருக்கிறார்
 
உறும்கண்டாய் நல் நெஞ்சே  உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண்கமலம் தன்னால் உறும் கண்டாய்
ஏத்திப்பணிந்து அவன் பேர் ஈர் ஐநூறு எப்பொழுதும்
சாற்றி உரைத்தல் தவம்.
 
2013/11/12 DEV RAJ <rde...@gmail.com>
உலகோர்க்குச் சொன்னால் கேட்பரோ மாட்டாரோ !

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

ரா.கிருஷ்ணன்

unread,
Nov 12, 2013, 10:19:16 AM11/12/13
to mint...@googlegroups.com
'நன்னெஞ்சே' என்ற சொல் முக்கியமானது.

அதனால்தான் அவன் உளன். 

2013/11/12 DEV RAJ <rde...@gmail.com>
உலகோர்க்குச் சொன்னால் கேட்பரோ மாட்டாரோ !

--

shylaja

unread,
Nov 12, 2013, 10:32:20 AM11/12/13
to mintamil
பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்
 
பாரதி பாடலும் நினைவுக்கு வருகிறது.

2013/11/12 ரா.கிருஷ்ணன் <krishn...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Nov 12, 2013, 10:36:09 AM11/12/13
to mintamil
வணக்கம்.

திரு.பிரசாத் அவர்களுக்குப் பாராட்டுகள்.
பண்டிட்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.
TVA தளத்தில் திருத்தம் செய்ய வேண்டுமெனக் கடிதம் எழுத வேண்டும்.

அன்பன்
கி.காளைராசன்

2013/11/12 DEV RAJ <rde...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

DEV RAJ

unread,
Nov 12, 2013, 11:48:24 AM11/12/13
to mint...@googlegroups.com
On Tuesday, 12 November 2013 20:36:08 UTC+5:30, Shylaja N wrote:
பூததாழ்வாரும்  இதேபோல்  பாசுரம் அருளி இருக்கிறார் 
 
உறும்கண்டாய் நல் நெஞ்சே  உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண்கமலம் தன்னால் உறும் கண்டாய்
ஏத்திப்பணிந்து அவன் பேர் ஈர் ஐநூறு எப்பொழுதும்
சாற்றி உரைத்தல் தவம்.

பொய்கையாழ்வாரும் இதேபோல் பாசுரம் அருளி இருக்கிறார், 
அம்மா.  

உளன்கண்டாய் நன்னெஞ்சே, உத்தமன் என்றும்
உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத் - துளன்கண்டாய்,

வெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும்,
உள்ளத்தி னுள்ளானென் றோர்.
99

DEV RAJ

unread,
Nov 13, 2013, 12:14:03 AM11/13/13
to mint...@googlegroups.com
தனக்குவமை இல்லாத அவ்விறைவனின்
விசுவரூபத்தை எளிமையாக விளக்குகிறார் 
ஆழ்வார் -

தானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவும்,
தானே தவவுருவும் தாரகையும், - தானே
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்
திருசுடரு மாய இறை.

அண்டத்திற்கும், அதிலுள்ள உயிர்களுக்கும் அவனே
ஆன்மாவாக இருப்பதோடு , அவையனைத்தும் அவனுக்கான 
உடல்களாகவும் விளங்கும் தனித்தன்மையும் அவனிடம் 
இருப்பதால் - தானே தனக்குவமன்

அவனுக்கு இணை வைக்கும்படியான பொருள் யாதொன்றுமில்லை
எனும் இறையியல் கருத்து ஒருபுறம்; இலக்கிய நோக்கில் பார்க்கப்
புகுந்தால் இது  அநந்வய அலங்காரம் எனும் அணியாகவும் ஆகிறது

தேவ்

DEV RAJ

unread,
Nov 13, 2013, 10:16:20 PM11/13/13
to mint...@googlegroups.com
ஒருசில பாசுரங்களை விவரிக்கும் எண்ணமிருந்தது.
அன்பர்கள் பார்க்கிறார்களா தெரியவில்லை.
ஆழ்வாரின் இன்சொற்களை அடியேனின் புன்சொற்கள்
மலினப்படுத்துகின்றனவோ என்றும் தயக்கம்.
ஆயினும் சில செய்திகளைப் பதிவு செய்து இழையை
நிறைவு செய்கிறேன்.

ஞானியர் உடல் - உலக நினைவின்றிப் பரத்தில்
தோய்ந்தவராய்ச் சிறார் போலவும், பித்தர் போலவும்,
பேயால் மருண்டவர் போலவும் [பால - உந்மத்த - பிசாசவத்]
திரிவர் என நூல்கள் பகரும். அதானால்தான் இந்த ஆழ்வாருக்குப்
பேயாழ்வார்  எனும் திருநாமம் என எண்ணியிருந்தேன்.
ஆனால் சங்கதத் தனியன் இவ்வாழ்வாரை ‘மஹதாஹ்வயர்’ 
[பெரியவர் எனும் பெயர் படைத்தவர்எனும் சொற்கொண்டு 
விளிக்கிறது. வைணவ மரபில்‘பெரியாழ்வார்’ ஒருவர்தானே ! 
இவரையும் பெரியாழ்வார் என்பது கூடுமோ எனும் ஐயம் 
தோன்றியது. 

தமிழில் பேய் பெரியது எனவும் பொருள் தரும் என்பது
பின்னர் புலப்பட்டது. பெரிய அளவில் காணப்படும்
வனத் தாவரங்களைப் பேய் எனும் அடைமொழியால் 
நாம் பிரித்துப் பேசுகிறோம். [எ கா] பேயகத்தி, பேய்ச்சுண்டை,
பேயாத்தி. பேய் ஓணான் என்றும் ஒரு சொல் இருப்பது
தெரிய வந்தது.

இந்நோக்கில் ஞானச்சுடர் விளக்கேற்றி எம்பெருமானை
உடனே கண்டு, ஆழ்பொருளை அறிவித்த இவ்வாழ்வாரைப்
பேயாழ்வார் என விளிக்கிறது வைணவ மரபு என்று
தேர்ந்தேன்.

தேவ்

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 13, 2013, 11:51:02 PM11/13/13
to mintamil

2013/11/14 DEV RAJ <rde...@gmail.com>

ஒருசில பாசுரங்களை விவரிக்கும் எண்ணமிருந்தது.
அன்பர்கள் பார்க்கிறார்களா தெரியவில்லை.
ஆழ்வாரின் இன்சொற்களை அடியேனின் புன்சொற்கள்
மலினப்படுத்துகின்றனவோ என்றும் தயக்கம்.

தங்கள் சொற்கள் நன்சொற்களே திரு தேவ். 

சிறப்பான தேர்ச்சி. நுட்பமாகப் பொருள் உணர்ந்து உரைத்துள்ளீர்கள்.
நன்றி
சொ.வினைதீர்த்தான். 

mariappan balraj

unread,
Nov 13, 2013, 11:26:48 PM11/13/13
to mint...@googlegroups.com
திரு.தேவ்

நீங்கள் கொடுத்த சொற்களுக்குப் பொருள் சொல்ல முடியுமா?

பேயகத்தி = ????
பேய்ச்சுண்டை = பெரிய சுண்டை
பேயாத்தி = ???
பேய் ஓணான் = பெரிய ஓணான்

அகராதியில் இதுபோன்ற சில சொற்களையும் கண்டேன்.

பேய்க்கடம்பை
பேய்க்கடுக்காய்
பேய்க்கண்டல்
பேய்க்கருங்காலி
பேய்க்கரும்பு
பேய்க்களா
பேய்க்கற்றாழை
பேய்க்கனி
பேய்க்காலெறும்பு
பேய்க்காளான்
பேய்க்குருந்து
பேய்க்குன்றி

அன்புள்ள
பா.மாரியப்பன்

2013/11/14 DEV RAJ <rde...@gmail.com>

--

DEV RAJ

unread,
Nov 14, 2013, 4:24:28 AM11/14/13
to mint...@googlegroups.com
On Thursday, 14 November 2013 10:21:02 UTC+5:30, சொ.வினைதீர்த்தான் wrote:

ஊக்கமளிகும் தங்கள் சொற்களுக்கு நன்றி, ஐயா

சிறப்பான தேர்ச்சி. நுட்பமாகப் பொருள் உணர்ந்து உரைத்துள்ளீர்கள்.

பேய் எனும் சொல்லின் பொருள் நுட்பத்தை அறிந்த நம் பெரியோர் 
அதை அப்படியே சங்கதத்திற்கு மாற்றி, தனியனோடு இணைத்துக்
கல்வெட்டாக்கி  இருப்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
நாலாயிரம் ஓதத் தொடங்குமுன் 
 பூ₄தம் ஸரஶ்ச  மஹதா₃ஹ்வய  ப₄ட்டநாத₂.....
எனும் சுலோகம் சொல்லப்பட்டு வருகிறது.

நன்குணர்ந்து உரைத்தது நம் பெரியவர்களே

தேவ்

ரா.கிருஷ்ணன்

unread,
Nov 14, 2013, 4:24:51 AM11/14/13
to mint...@googlegroups.com
நான் படிக்கிறேன். எழுதுங்கள்!

நான் இடை இடையே எழுதினால் இடையூறாக ஆகிவிடுமோ என அமைதியாக இருந்தேன்.

நானும் என்னால் முடிந்த அளவு பங்கு கொள்கிறேன்.

நல்ல விஷயம் நிற்க வேண்டாம்.

2013/11/14 DEV RAJ <rde...@gmail.com>

--

DEV RAJ

unread,
Nov 14, 2013, 4:35:30 AM11/14/13
to mint...@googlegroups.com
வருக திரு மாரியப்பன் பால்ராஜ். 
ஆழ்வார் உங்களை வரவழைத்து விட்டார்
போலும் ! நீங்களும் இணைந்து கொண்டதில்
மகிழ்ச்சி

பேயகத்தி = ????

பேய் அகத்தி
 
பேயாத்தி = ???

 பேய் ஆத்தி  - wild fig

தேவ்

Geetha Sambasivam

unread,
Nov 14, 2013, 4:47:29 AM11/14/13
to மின்தமிழ்
அருமையான பகிர்வுகள்.  நிறையத் தெரிந்து கொள்கிறேன்.  நன்றி.

2013/11/14 DEV RAJ <rde...@gmail.com>
ut.

mariappan balraj

unread,
Nov 14, 2013, 4:59:09 AM11/14/13
to mint...@googlegroups.com
திரு.தேவ்

விளக்கமளித்தமைக்கு மிக்க நன்றி.

அகத்தி - அகத்திக்கீரை சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் அகத்தி மரத்தை நேரில் பார்த்ததில்லை. 

ஆத்தி - அத்திக் காய் விளைகிற மரம் அத்தி மரம். எப்படி குறில் நெடிலானது?

DEV RAJ

unread,
Nov 14, 2013, 5:33:31 AM11/14/13
to mint...@googlegroups.com
On Thursday, 14 November 2013 15:29:09 UTC+5:30, mariappan.balraj wrote:
அகத்தி - அகத்திக்கீரை சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் அகத்தி மரத்தை நேரில் பார்த்ததில்லை. 

ஆத்தி - அத்திக் காய் விளைகிற மரம் அத்தி மரம். எப்படி குறில் நெடிலானது?

பேயத்தி - பேய் அத்தி சரி.
நெடிலாகியது தவறுதான், மன்னிக்கவும்

தேவ் 

DEV RAJ

unread,
Nov 14, 2013, 5:36:58 AM11/14/13
to mint...@googlegroups.com
அருமையான பகிர்வுகள்.  நிறையத் தெரிந்து கொள்கிறேன்

அடியேனும் நிறையத் தெரிந்து கொள்கிறேன், அம்மா.
முறையாக மொழி கற்காத பெரும் பிழையை
ஒவ்வொரு நாளும் உணர்கிறேன்

தேவ்

ரா.கிருஷ்ணன்

unread,
Nov 14, 2013, 5:41:42 AM11/14/13
to mint...@googlegroups.com
என் மடலைத் திரு.தேவ் கண்டு கொள்ளவில்லை. 

On Thu, Nov 14, 2013 at 4:06 PM, DEV RAJ <rde...@gmail.com> wrote:
அருமையான பகிர்வுகள்.  நிறையத் தெரிந்து கொள்கிறேன்

அடியேனும் நிறையத் தெரிந்து கொள்கிறேன், அம்மா.
முறையாக மொழி கற்காத பெரும் பிழையை
ஒவ்வொரு நாளும் உணர்கிறேன்

தேவ்

On Thursday, 14 November 2013 15:17:29 UTC+5:30, myself wrote:
அருமையான பகிர்வுகள்.  நிறையத் தெரிந்து கொள்கிறேன்.  நன்றி.

2013/11/14 DEV RAJ <rde...@gmail.com>
ut.

DEV RAJ

unread,
Nov 14, 2013, 5:50:52 AM11/14/13
to mint...@googlegroups.com
krishnanrnava - KriShNArNava என்றே மனத்தில்
பதிவாகி விட்டது.  க்ருஷ்ண அர்ணவம் - கடல்
கண்ணில் படாமல் இருக்குமா :))

தேவ்

mariappan balraj

unread,
Nov 14, 2013, 5:53:58 AM11/14/13
to mint...@googlegroups.com
ஆத்தி என்ற மரவகையும் உள்ளது போல. ஆனால் அத்தியும் ஆத்தியும் வேறு வேறு மரங்கள் போலத் தெரிகிறது. 

பேயத்தி என்ற சொல் அகராதியில் காணப்படுகிறது. பேயாத்தி அகராதியில் இல்லை. பேயத்திக்கு Devil Fig என்பது சரியான ஆங்கில மொழிபெயர்ப்பா?

பேயத்தி pēy-atti
n. <id.+.
Devil fig, s. tr., Ficus hispida;
அத்திவகை. (L.)

அத்தி 1atti
n. [T. K. M. atti, Tu. arti.]
Country fig, l.tr., Ficus glomerata;
மரவகை.

ஆத்தி 3ātti
n.
1. Common mountain ebony, s.tr., Bauhinia racemosa;
மரவகை.

2. Holy mountain ebony, m.sh., Bauhinia tomentosa;
திருவாத்தி. சம்பமகிழாத்தி (சைவச. பொது.29).

அன்புள்ள
பா.மாரியப்பன்

2013/11/14 DEV RAJ <rde...@gmail.com>
On Thursday, 14 November 2013 15:29:09 UTC+5:30, mariappan.balraj wrote:

--
--

DEV RAJ

unread,
Nov 14, 2013, 6:17:23 AM11/14/13
to mint...@googlegroups.com
பிற ஆழ்வார்கள் வாத்ஸல்ய பாவத்திலும், சிருங்கார ரஸம் மிகுந்த
நாயிகா பாவத்திலும் பாடியிருக்க, யோகியரான முதலாழ்வார்கள் 
சாந்த ரஸத்தில் அந்தர்யாமியை அநுபவிக்கும் விதமாகப் பாக்களை 
அமைத்துள்ளனர் -

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,
மறையாய், மறைபொருளாய், வானாய் - பிறைவாய்ந்த
வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்
உள்ளத்தி னுள்ளே உளன்.

தேவ்

DEV RAJ

unread,
Nov 14, 2013, 6:33:21 AM11/14/13
to mint...@googlegroups.com
On Thursday, 14 November 2013 16:23:58 UTC+5:30, mariappan.balraj wrote:
பேயத்தி என்ற சொல் அகராதியில் காணப்படுகிறது. 
 
Wild fig -

The Courtyard of Cape Town

Geetha Sambasivam

unread,
Nov 14, 2013, 7:32:55 AM11/14/13
to மின்தமிழ்
//முறையாக மொழி கற்காத பெரும் பிழையை
ஒவ்வொரு நாளும் உணர்கிறேன்.//

கற்காமலேயே இவ்வளவு பாண்டித்தியம் இருக்கையில் கற்றால் எவ்வளவு இருந்திருக்கும்!  உங்கள் தன்னடக்கத்தைப் பாராட்டுகிறேன்.  அதே சமயம் நீங்களே இப்படிச் சொன்னால் மொழியைக் குறித்து எதுவுமே கற்காத/அறியாத நான் என்ன சொல்றது!  

N D Logasundaram

unread,
Nov 14, 2013, 7:38:21 AM11/14/13
to mintamil
அன்புள்ள தேவ் 

பேய்  எள்ளு 

எனவும் உண்டு = NIGER SEED என்பார் ஆங்கலத்தில் 
ஆப்பிரிக்காவில் விளையும் ஓர் எண்ணை வித்து 

நூ த லோ சு 
மயிலை 

2013/11/14 DEV RAJ <rde...@gmail.com>

--

DEV RAJ

unread,
Nov 14, 2013, 8:13:49 AM11/14/13
to mint...@googlegroups.com
On Thursday, 14 November 2013 18:08:21 UTC+5:30, selvi...@gmail.com wrote:
பேய்  எள்ளு  எனவும் உண்டு = NIGER SEED என்பார் ஆங்கலத்தில் 
ஆப்பிரிக்காவில் விளையும் ஓர் எண்ணை வித்து 

ஆம் ஐயா.

பேய்த்தக்காளி, பேய்ப்பிரண்டை இவையும்
இருப்பதாகத் தெரிகிறது. சாகுபடி செய்யாமல்
உருவில் பெரிதாகத் தாமே வளரும் தாவர
வகைகளாக இருக்கும் எனத் தெரிகிறது

தேவ்

mariappan balraj

unread,
Nov 14, 2013, 8:56:01 AM11/14/13
to mint...@googlegroups.com
திரு.தேவ்

நீங்கள் எழுதியவற்றுள் பல சொற்களின் பொருள் எனக்குத் தெரியவில்லை. இணையத்தைப் பயன்படுத்தித் தெரிந்து கொண்டேன்.

பிற ஆழ்வார்கள் மிகுதியான அன்புடன் இன்பச் சுவை மிகுந்த தன்னைப் பெண்ணாக பாவித்துப் பாடியிருக்க யோகியரான முதலாழ்வார்கள் அமைதியாக எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை அநுபவிக்கும் விதமாகப் பாக்களை அமைத்துள்ளனர்.

நான் கொண்ட பொருள் சரியா? 

அன்புள்ள
பா.மாரியப்பன்

2013/11/14 DEV RAJ <rde...@gmail.com>
பிற ஆழ்வார்கள் வாத்ஸல்ய பாவத்திலும், சிருங்கார ரஸம் மிகுந்த

--

ரா.கிருஷ்ணன்

unread,
Nov 14, 2013, 8:59:26 AM11/14/13
to mint...@googlegroups.com
சைவ பெரியாரான காரைக்கால் அம்மையாரும் பேயுருக் கொண்டதாக வரும்.
 
பெரியோர் நிஜமாகவே பேயுரு கொள்வதும் உண்டு.
 
மிக வீரியமாக உள்ளனவற்றை சித்த மருத்துவத்தில் பேய் எனும் prefix இட்டு அழைப்பார்.
 
சாதாரணப் பிரண்டையை விட பேய் பிரண்டையின் தன்மை மிக வீரியமானது; வேறானது; சாதாரண மூலிகைப் போல் கட்டுக்குள் அடங்க மறுப்பது.
 
எனவே பேயாழ்வார் விஷயம் நாம் நினைப்பதை விட இன்னும் மேலானதாக இருக்கும் என தோன்றுகிறது.

2013/11/14 DEV RAJ <rde...@gmail.com>

--

DEV RAJ

unread,
Nov 14, 2013, 9:26:57 AM11/14/13
to mint...@googlegroups.com
On Thursday, 14 November 2013 19:26:01 UTC+5:30, mariappan.balraj wrote:
பிற ஆழ்வார்கள் மிகுதியான அன்புடன் இன்பச் சுவை மிகுந்த தன்னைப் பெண்ணாக பாவித்துப் பாடியிருக்க யோகியரான முதலாழ்வார்கள் அமைதியாக எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை அநுபவிக்கும் விதமாகப் பாக்களை அமைத்துள்ளனர்.
நான் கொண்ட பொருள் சரியா ?

பொதுவாக ஆழ்வார்கள்  "ஞானத்தில் தன்பேச்சு, 
ப்ரேமத்தில் பெண்பேச்சு" எனும் ரீதியில்
பாடியுள்ளனர் என்றாலும், முதலாழ்வார்களும்,
மழிசைப் பிரானும் பெண்ணின் நிலையை ஆரோபித்துக்
கொண்டு பாடவில்லை. பரம் - வ்யூஹம் - விபவம் -
அந்தர்யாமி - அர்ச்சை எனும் ஐந்து இறை நிலைகளில்
அவதாரங்களெனும் விபவத்தையும், திவ்ய தேச 
அர்ச்சைகளையும், உள்ளுறையும் அந்தர்யாமியையும் 
முதலாழ்வார்கள் பாடியுள்ளனர் என்று எடுத்துக்
கொள்ளலாம்

தேவ்

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 14, 2013, 9:27:08 AM11/14/13
to mintamil
பேய்க்கரும்பு திருவொற்றியூரில் இனித்ததாகப் பட்டினத்தார் கதையில் படித்தேன். பேய்க் கரும்பு என்றால் கரும்பில் ஒருவகைக் கசப்புக் கரும்பா?
அல்லது திரு கிருஷ்ணன் கூறுவது போன்ற மேலான ஒன்றா?
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2013/11/14 ரா.கிருஷ்ணன் <krishn...@gmail.com>

DEV RAJ

unread,
Nov 14, 2013, 10:47:20 AM11/14/13
to mint...@googlegroups.com
திவ்ய தேசச் சிறப்புக்களை வாய் வெருவிய வண்ணம்
சாந்த பாவத்தில் பரம சாதுவாகப் பாடிவரும்
இந்த ஆழ்வார் ஓரிடத்தில் கேலி தொனிக்கவும்
பேசியுள்ளார்; அதுவும் அந்தாதிக்குச் சுவை சேர்க்கிறது.

நான் பிறப்பதற்கு முன்பெல்லாம் பெருமானுக்குப் பாற்கடல்,
வைகுந்தம், திருவேங்கடம், கடிகை, திருவிண்ணகர் என்று 
இடம் தேடித்  தேடிப்போய்க் குடிபுகத் தேவையிருந்தது - பண்டெல்லாம்.
நான் பிறந்தபின் என் மனமே அவனுகந்து உறையும்
ஆலயமாகி விட்டது என்கிறார் - 

பண்டெல்லாம் வேங்கடம், பாற்கடல், வைகுந்தம்
கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல் - வண்டு
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை,
இளங்குமரன் றன்விண் ணகர்.

தேவ்

mariappan balraj

unread,
Nov 14, 2013, 10:57:34 AM11/14/13
to mint...@googlegroups.com
இங்கு கடிகை, திருவிண்ணகர் என்றால் என்ன? 

பாற்கடல் - வியூகம் 
வைகுந்தம் - பரம் 
திருவேங்கடம் - அர்ச்சை

அன்புள்ள
பா.மாரியப்பன்

2013/11/14 DEV RAJ <rde...@gmail.com>
திவ்ய தேசச் சிறப்புக்களை வாய் வெருவிய வண்ணம்

--

DEV RAJ

unread,
Nov 14, 2013, 11:15:22 AM11/14/13
to mint...@googlegroups.com
On Thursday, 14 November 2013 21:27:34 UTC+5:30, mariappan.balraj wrote:
இங்கு கடிகை, திருவிண்ணகர் என்றால் என்ன? 

கடிகை - கடிகாசலம், சோளிங்கர் 

திருவிண்ணகர்  - ஒப்பிலியப்பன் கோயில் [குடந்தை அருகில்]

ரா.கிருஷ்ணன்

unread,
Nov 14, 2013, 12:29:14 PM11/14/13
to mint...@googlegroups.com
மிக அருமையான கேள்வி திரு.வினைதீர்த்தான்.

பேய் கரும்பு சாதாரண கரும்பின் அளவுதான் கிட்டத்தட்ட இருக்கும். ஆனால் கசக்கும்.

மருத்துவ குணம் கொண்டது. வீரியம் மிகுந்தது.

அதை போல் பேய் சுரைக்காய் என்று உண்டு. அதுவும் கசக்கும். ஆனால் அந்த செடியின் அளவிலோ, காயின் அளவிலோ பெரிய வித்தியாசம் இருக்காது. 

2013/11/14 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Nov 14, 2013, 8:44:39 PM11/14/13
to mintamil
பண்டிட்ஜி அவர்களுக்கு வணக்கம்.

2013/11/14 DEV RAJ <rde...@gmail.com>
தமிழில் பேய் பெரியது எனவும் பொருள் தரும் என்பது
பின்னர் புலப்பட்டது. பெரிய அளவில் காணப்படும்
வனத் தாவரங்களைப் பேய் எனும் அடைமொழியால் 
நாம் பிரித்துப் பேசுகிறோம். [எ கா] பேயகத்தி, பேய்ச்சுண்டை,
பேயாத்தி. பேய் ஓணான் என்றும் ஒரு சொல் இருப்பது
தெரிய வந்தது.

இந்நோக்கில் ஞானச்சுடர் விளக்கேற்றி எம்பெருமானை
உடனே கண்டு, ஆழ்பொருளை அறிவித்த இவ்வாழ்வாரைப்
பேயாழ்வார் என விளிக்கிறது வைணவ மரபு என்று
தேர்ந்தேன்.

பேயாழ்வார் பெயருக்கு அருமையானதொரு விளக்கம்.
பாராட்டுகள் ஐயா.

அன்பன்
கி.காளைராசன்

seshadri sridharan

unread,
Nov 14, 2013, 9:25:06 PM11/14/13
to mintamil

2013/11/14 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>

பேய்க்கரும்பு திருவொற்றியூரில் இனித்ததாகப் பட்டினத்தார் கதையில் படித்தேன். பேய்க் கரும்பு என்றால் கரும்பில் ஒருவகைக் கசப்புக் கரும்பா?

இது கருப்பு நிறக் கரும்பைக் குறிக்கும். வெள்ளை நிறக் கரும்பு உள்ளதையும் அறிந்திருப்பீர்கள். அடி கரும்பு இனிக்கும் ஆனால் நுனி கரும்பு இனிக்காது. பட்டினத்தார்க்கு திருவொற்றியூரில் நுனி கரும்பு இனித்தது என்று படித்துள்ளேன். நான் திருவொற்றியூரிலேயே 30 ஆண்டுகள் வாழ்ந்ததால் பட்டினத்தார் சமாதிக்கு 30 - 40 முறை சென்று வந்துள்ளேன். அங்கு சுவர் ஓவியத்தில் பட்டினத்தார் பிடித்துள்ள கரும்புக்கு கருப்பு வண்ணம் தீட்டப்பட்டிருந்தது. 

சூரங்குடி / நாட்டு  / தனூராந / கையம் / ஊர்கிழவன் / ஸ்ரீ வேழா / ன் சீலப்பு / கழான்  / லியுகக்கண் / டடி தன் /  செட்டிக்கு / கோன் நோ / ற்றி தலை / தந்தான்

 கிழவன் - ஊர்த்தலைவன்வேள் > வேழ் - சிற்றரசன்சீலம் - நல்ஒழுக்கம்கண்டடி (கண்டு + அடி) - அடிக்கரும்புநோற்றி - நோன்பு இருந்துதலைதந்தான் -தலைப்பலி கொடுத்தான்.

எட்டயபுரப் பகுதியில் இருந்த சூரங்குடி நாட்டின் பகுதியான ஆதனூரின் கையமூர் எனும் ஊருக்கு வேள் ஸ்ரீ வேழான் சீலப்புகழான் கலியுகக் கண்டடி என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் தன்ம செட்டிக்கு நலம் வேண்டி கோன் என்பவன் நோன்பு இருந்து தன் தலையை வெட்டிப் பலி தந்து உள்ளான்.

சேசாத்திரி

K. Loganathan

unread,
Nov 14, 2013, 9:27:01 PM11/14/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பர்களே

நான் காரைக்கால் பேயார் பாடல்களை ஆய்ந்தபோது, ஏன் அம்மையார் பேயுரு வேண்டிப் பெற்ற்ரர் எனபதை விளங்கிக்கொள்ள முயன்றேன். அப்பொழுது  காமத்தை வென்று, அந்த காமத்தைத் தூண்டும் உடலை மறந்து ஆனால் இறைவனோடு ஒன்றித்து அந்த பேரின்பத்தில் நிலைப்பெற்று வாழ்வதே பேயுரு அடைதல் என்று உணர்ந்ந்தேன்

இல்லற வாழ்க்கையில் பல சோதனைக்ளைக் கண்ட புனிதவதியார் இதனால் கணவன் வழி வரும் காமத்தை துறக்க எண்ணியே ஊன் பொருந்திய வனப்பு நிறைந்த  சதை பிண்டத்து உடலை போக்கி எலும்பும் தோலுமாகிய பேயுடம்பைப் பெற்றார் என்று நினைக்கின்றேன்

பேயுருவிற்கு இதுவும் ஓர் பொருளாக இருக்கலாம்/

உலகன்

2013/11/15 கி.காளைராசன் <kalair...@gmail.com>

DEV RAJ

unread,
Nov 14, 2013, 10:45:34 PM11/14/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
'பேய்’ என்பது பெரியதைக் குறிக்கிறதா,
பிசாசைக் குறிக்கிறதா என்பது சர்ச்சையன்று.
அது இரண்டையுமே  குறிக்கலாம். வைணவ
மரபு ‘மஹத்’ சப்தத்தால் [மஹத் ஆஹ்வய]
பெரிதான தன்மையை முன்னிட்டுப் பேசுவதாகவே 
படுகிறது.

யாராவது தம்மைப் பேயர் என இகழ்ந்தாலும்
ஆழ்வார்கள் சினம் கொள்ளப் போவதில்லை;
அவர்கள் உலகோர் தரும் மரியாதையை
ஒரு பொருட்டாகக் கருதி மதிப்பளித்ததும் 
கிடையாது. அவர்கள் உலக இன்பங்களை
நாடி, அதன்பின் பேயாக அலைபவரைப்
பேயர் என அழைக்கின்றனர் -

பேய ரேயெனக் கியாவரும் யானுமோர்
பேய னேயெவர்க் கும்இது பேசியென் !
ஆய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
பேய னாயொழிந் தேனெம்பி ரானுக்கே.

பேய் வீரியத்தைக் குறித்தாலும்
தவறில்லை; பேயாழ்வாரின் ஞான
வீரியம் பேரிருளில் விளக்கேற்றி
எம்பெருமானைக் காண உதவியதோடு,
திரு மழிசை ஆழ்வார் எனும் மற்றுமோர்
ஆழ்வாரையும் தந்தது. ஞான மிகுதியால்
மஹத் ஆஹ்வயரானார் என முடிவு 
கட்டலாம்.

காரைக்கால் அம்மையார் பேயுருவை
வேண்டிப் பெற்றதற்குச் சமூகக்
காரணங்கள் உண்டு; இல்வாழ்க்கைக்கு
ஒரு காரணத்தால் முற்றுப்புள்ளி விழுந்ததால்,
தனித்து வாழ இளமை தடையாகும் என 
அம்மையார் கருதினார்

தேவ்

K. Loganathan

unread,
Nov 14, 2013, 11:17:46 PM11/14/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
திரு தேவ் அவர்களே

தங்கள் கூற்று

//இல்வாழ்க்கைக்கு
ஒரு காரணத்தால் முற்றுப்புள்ளி விழுந்ததால்,
தனித்து வாழ இளமை தடையாகும் என 
அம்மையார் கருதினார்//

காமத்தோடு கூடிய இல்வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி விழுந்தது உண்மை தான். அவர் கணவன் இன்னொரு பெண்னை மனந்து ஓர் மகளை ஈன்றெடுத்டுள்ளான்.  தனது வனப்பு மிகுந்த உடலும் இளமையும் தனித்து ஓர் ஆணதுணையின்றி வாழ தடையாகும் எனும் போது  காமவேட்க்கைதானே உண்மையானத் தடை?

காமவேட்கைதான் மெய்யானத் தடை.  ஆக காம வேட்கையை இழப்பது அல்லது மடைமாற்றம் செய்து அதனை ஞான வேட்கையாக மாற்றுவது பேயுரு அடைவதாக இருக்கலாம்.

பிறந்து மொழி பயின்ற போதெல்லாம் காதல் சிறந்து சிவபெருமானையே காதலித்த புனிதாவிற்கு தனிமை வாழ்க்கை இல்லை.  இறைவனோடு நெருங்கி காதலன்பில் வாழாத வாழ்க்கைதான் அவர் வாழ்ந்தது. அதற்குத் த்டையாக இருந்தது அற்ப உடலால் அதன் பந்தத்தால் எழும் காம வேட்கைதான்.

அதனை இழந்து ஆனால் உடலோடு வாழ்வது பேயுரு பெற்று வாழ்வது என்று அக்காலத்தில் ஓர் வழக்கு வந்திருக்கலாம். இது பேயாழ்வார் பூதத்தாழ்வார் போன்றோருக்கும் பொருந்துவதாக இருக்கலாம்.

பட்டினத்தரின் பேய்க்கரும்பு இப்படிப்பட்ட  ஓர் உளளுறைப் பொருளைக் கொண்டதாக இருக்கலாம். தோற்றத்தில் கரும்பு ஆனால் கரும்பின் இனிமை இல்லாத கரும்பு என்பதின் பேய்க்கரும்பு என்பட்டது போலும்

புனிதவதியார் தோற்றத்தில் இளமையோடு திகழ்ந்த ஓர் பெண். ஆனால் அந்த இளமைக்குரிய காமவின்பம் தரவல்ல தன்மை இழந்ததால் ஓர் பேய்ப் பெண் ஆகிவிட்டார் போலும்

உலகன்

2013/11/15 DEV RAJ <rde...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

DEV RAJ

unread,
Nov 14, 2013, 11:40:20 PM11/14/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Friday, 15 November 2013 09:47:46 UTC+5:30, K.Loganathan wrote:
காமத்தோடு கூடிய இல்வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி விழுந்தது உண்மை தான். அவர் கணவன் இன்னொரு பெண்னை மனந்து ஓர் மகளை ஈன்றெடுத்டுள்ளான்.  தனது வனப்பு மிகுந்த உடலும் இளமையும் தனித்து ஓர் ஆணதுணையின்றி வாழ தடையாகும் எனும் போது  காமவேட்க்கைதானே உண்மையானத் தடை?

அவ்வாறு நினைக்க இடமில்லை. அம்மையார் புதிதாகப் புலனடக்கி ஆன்மிக சாதனைகள்
செய்ய வேண்டிய நிலையில் இல்லை. அவர்தம் உழுவலன்பு மிக இயல்பானது. 
ஏற்கெனவே இறை அநுபவம் முற்றிய நிலையில், அதை வெளிக்காட்டாமல் இல்வாழ்க்கையை
ஒரு கடமையாகவே ஏற்று நடத்தியவர் அவர். அது அவரைப் பொறுத்தமட்டில் காமம் 
கலந்த வாழ்க்கையன்று;கடமை நிறைந்த வாழ்க்கை. அவருக்கு இறையருளால் 
மாங்கனியையும் பெற முடிந்தது.

இல் துறந்து தல யாத்திரை செய்து எஞ்சிய வாழ்நாளைக் கழிப்பதற்குக் கட்டாயம்
இளமை தடையாகும் என்று அவர் முடிவெடுத்தார். மாங்கனி நாடகமும், தம்பதியர் 
இணை பிரிந்ததும், அம்மையார் இல் துறந்ததும் இறைவன்  செய்த ஏற்பாடுகளே.

முடிவில் குடத்து விளக்கு குன்றில் இட்ட விளக்கானது

தேவ்

mariappan balraj

unread,
Nov 15, 2013, 12:12:55 AM11/15/13
to mint...@googlegroups.com
ஏற்கனவே காரைக்கால் அம்மையாருக்கு புலனடக்கம் சாத்தியமாகியதால், இளமையான அழகான ஒரு பெண் தனியாக யாத்திரை செல்வது பாதுகாப்பான ஒன்றல்ல என்பதையே திரு.தேவ் அவர்கள் கூறுகிறார் என்று நினைக்கிறேன்.

அன்புள்ள
பா.மாரியப்பன்

2013/11/15 DEV RAJ <rde...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

DEV RAJ

unread,
Nov 15, 2013, 12:32:28 AM11/15/13
to mint...@googlegroups.com
On Friday, 15 November 2013 10:42:55 UTC+5:30, mariappan.balraj wrote:
ஏற்கனவே காரைக்கால் அம்மையாருக்கு புலனடக்கம் சாத்தியமாகியதால், இளமையான அழகான ஒரு பெண் தனியாக யாத்திரை செல்வது பாதுகாப்பான ஒன்றல்ல என்பதையே ........

அதே, அதே

K. Loganathan

unread,
Nov 15, 2013, 1:52:16 AM11/15/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
திரு தேவ் அவர்களே

மாங்கனிக் கதையை நினைவு படுத்தியமைக்கு மிக்க நன்றி.  காரைக்காலில் இன்னும் இந்த மங்கனித் திருவிழா நடப்பதாக் அறிகின்றேன்.

இந்த மாங்கனி ஆகமவுளவியலின் தருத்தேர்வில் மிக விரிவாக ஆயப்பட்டுள்ள ஒன்று,

வாழைக் கனி காமம் போக்கிய இன்ப நிலையைக் காட்ட மாங்கனியோ காம் இன்பம் வேட்கப்படுவதைக் காட்டும் இதனை யாரும் தருத் தேர்வு செய்து உறுதி படுத்தலாம்.. கள ஆய்விற்கு உரியது

இந்த மாங்கனி  திருவிழாவில் கணவனைத் தேடும் இளம் பெண்கள் தாம் விரும்பும் இளைஞர்கள் மேல் மாங்கனிகளை எறிந்து விளையாடுவார்களாம். கருத்து தனக்கு  காம இன்பம் தரவல்ல தக்க ஓர் ஆண் துணை இறையருளால் அமையும் என்பதே.

புனிதாவின் வாழ்க்கையிலும் அகப் போராட்டமே காமப் போராட்டம் தானே?  புனிதாவின் தெய்விகப் பண்புகளைக் கண்டு அவளைக் காமக் கண்ணோடு அணுக முடியாது தவித்து அவளைவிட்டு அகன்று இன்னொரு சாதாரணப் பெண்ணை மணந்தான் அவள் கண்வன்

ஏற்கனவே இரண்டுங்கெட்டான் நிலையில் இருந்த புனிதா இதனால் சாதாரண காமத்து இல்லற வாழ்க்கையைலிருந்து விடுபட்டு இறைவனையே காதலிக்கும் சிவஞான வாழ்க்கையை விரும்பி அதனை வாழத்தொடங்கினார்.  இங்கு ஓர் உள்ளுறை உவமப் பொருளாக  சுடலையாடியாக சிவன் ஆடும் சுடுகாட்டில் தானும் பேயுரு கொண்டு ஆடுவதாக அவரும் பாடுகின்றார்.

இங்கு வர்ணிக்கபப்டும் பேயுரு அவரது உணமையான உருவம் அல்ல. அவரது காமம் போக்கிய காமவேடகையை எழுப்பவல்ல வனப்பு உடம்பு இழந்த நிலையும் ஆகும்

கரும்பு பேய்க்கரும் ஆகுதல்

காண்க

1.

கொங்கை   திரங்கி நரம்பெழுந்து  குண்டுகண் வெண்பல் குழிவயிற்றுப்
பங்கி சிவந்து இரு பற்கள் நீண்டு பரடுயர் நீள்கணைகால் ஒர் பெண்பேய்
தங்கி அலறி உலறு காட்டில் தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தனல் ஆடும் எங்கள் அப்பன் இடம் திரு ஆலங்காடே

அ-உ (திரு வி. க)

திரங்கி  - சுருண்டு, சுருங்கி. குண்டு  -  உருண்டை; குழி எனினுமாம் . பங்கி - மயிர். பரடு - கால்கணு. கணைக்கால்  -- முழங்காலின் கீழது, பரட்டுக்கு மேலது, திரண்டிருப்பது. உலறு -- கோபக் குறிப்புடன் கூவும் ( உலறல் - சினக் குறிப்புத் தோன்ற ஒலித்தல்)

உரை ( கி. லோகநாதன்)
 
அனைத்தையும் அழிக்கும் திருநோக்கின் சங்காரத் தாண்டவமாடும்  எங்கள் அப்பனது இடம் யாதெனில்,  முலைகள் சுருங்கி திரங்கியவாறும், நரம்புகள் புடைத்தெழுந்து அழகினைக் கெடுத்தவாறும்,.   குழி விழுந்த கண்களோடும், கூரிய வெண்பற்களோடும்,  ஆழந்து அடங்கிய குழி வயிற்றோடும் , தலைமுடி கட்டவிழ்ந்து கிடந்தவாறும், பற்களில் கீறிபற்கள் இரண்டும் விலங்கினது போல நீண்டவாறும்,  கணைகால் தசையினை இழந்து நீண்டு கிடந்தவாறும் ஓர் பெண் பேய் தங்கி அலறியும் உலறியும்  அச்சமூட்டி  திரிகின்ற ஆலங்காடு ஆகும். அக்காட்டில்  அழிக்க வேண்டிய அனைத்தையும் அழிக்கும் திருநோக்குடன் என் அப்பன் விரிந்த சடை எல்லா திக்குகளிலும் சென்றாட , அருள் நோக்கின் அங்க குளிர நெருப்பினை வீசி அயராது ஆடுகின்றான்! என்னே அவன் திருவருள்!

2013/11/15 DEV RAJ <rde...@gmail.com>

ரா.கிருஷ்ணன்

unread,
Nov 15, 2013, 3:25:58 AM11/15/13
to mint...@googlegroups.com
பேயாழ்வார் என்ற பெயர் விசாரம் ஒரு விஷயத்தை மீண்டும் வெளிப்படுத்துகிறது.

இத்தகைய மகத்துக்களுக்கு  பெயர் வைப்பது எப்போதுமே பாண்டித்யம் மிகுந்தவர்  என்பது போல் ஒரு எண்ணம் நிலவுகிறது.

பெரும்பாலானோருக்கு அத்தகு பெயரை இடுவது சாமான்ய மக்களே. அவர்களின் எளிமையும், பக்தியும், நம்பிக்கையும் இணையில்லாதது.

என் நம்பிக்கை என்னவெனில், பேயாழ்வார் என அழைத்தது சாமான்ய, எளிய அடியார்களாய் இருக்கலாம்.

அந்த எளிய மக்கள் தம் மனதிற்குகந்த வகையில் பெயரிட்டு அழைப்பர்.

எனவே பெயர் விஷயத்தில் பாண்டித்த்ய விசாரம் சாமான்ய மக்களின் பங்கெடுப்பை கவனிக்காது விட்டு விடும்.

பேயாழ்வார் பாடல்களில் திரு.தேவ் விசாரத்தை வைத்தால் விருந்து கிடைக்கும். பெயர் விசாரம் முக்கிய விஷயத்தை விட்டு விலக வைத்து விடும் என்பது என் பணிவான கருத்து.

2013/11/15 K. Loganathan <k.ula...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

கி.காளைராசன்

unread,
Nov 15, 2013, 5:09:03 AM11/15/13
to mintamil
பண்டிட்ஜி அவர்களுக்கு வணக்கம்.
வீட்டில் முகூர்த்தக்கால் ஊன்றியிருந்தால் அந்த வீட்டில் விழா நடைபெறவுள்ளது என ஊரார் அறிந்து கொள்வர்.
அந்த வீட்டில் உள்ளோரிடம் அமங்கலச் செய்திகளைப் பேச மாட்டார்கள்.  உதாரணமாக,  ஊரில் யாரேனும் இறந்திருந்தால் அந்தச் செய்தியை அந்த வீட்டில் உள்ளோரிடம் சொல்ல மாட்டார்கள்.
அமங்கல ஊர்வலங்களை அந்த வீடு உள்ள வீதிகளில் நடத்த மாட்டார்கள்.

வீட்டின் வாயிலில் கோலம் போடவில்லை என்றால் அந்த வீட்டில் ஏதோ ஒரு காரணத்தினால் இறைவழிபாடு நின்றுள்ளது என்பதை அறிந்து கொள்வர்.  அந்த வீட்டில் உள்ளோரிடம் சுபச் செய்திகளைப் பேசமாட்டார்கள்.  யாரும் அந்த வீட்டில் தர்மம் (பிச்சை) ஏற்க மாட்டார்கள்.

இது போல் அம்மை போட்ட வீட்டின் வாயிலில் வேப்பிலை வைத்திருப்பர்.

இவ்வாறான செயல்கள் மற்றவர்களுக்கு அவர்களின் நிலையை உணர்த்துவதற்காகச் செய்யப்படுபவன ஆகும்.

இதேபோல் தான் காரைக்கால் அம்மையாரும் செய்து கொண்டார் என்று கருதுகிறேன்.

ஓர் சிறு வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து இறைவன் அந்தக் கணமே ஓடிவந்து மாம்பலம் அருளும் அளவிற்குத் தவவலிமை மிகுந்த அந்த அம்மையார் தனது நிலையை ஊரோருக்குக் காட்டிக் கொள்வதும் அவசியமாகிறது.  

எனவே இறையருள் பெற்ற இந்த அம்மையார் இவ்வாறு பேய் உருவம் பெற்றது தனது பாதுகாப்பிற்காக அல்ல என்றும், பிறருடைய கருத்திற்காகவே என்றும் கருதுகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

DEV RAJ

unread,
Nov 15, 2013, 7:27:19 AM11/15/13
to mint...@googlegroups.com
திரு கிருஷ்ணன் அவர்கள் சொல்வது சரியே.
மஹாபுருஷர்கள் பெயரிலும், பட்டத்திலும்
கவனம் செலுத்துவதில்லை. வால்மீகி முனி,
கும்ப முனி , மண்டூக முனி இவை மிகச்
சாமானியமான பெயர்களே. பல பெயர்கள்
காரணப் பெயர்களே. 

பரமஹம்ஸரை ராம - க்ருஷ்ணர்களின் அவதாரம் 
என நிறுவியபோதும் அவர் அதைப் பெரிதாக
எடுத்துக்கொள்ளவில்லை; ’எனக்குப்
பைத்தியம் என்று முடிவு கட்டாமல்
விட்டீர்களே , அதுவே போதும்’ என்று
கூறிச் சிரித்தாராம்.

மஹத் சப்தத்தோடு ‘பேய்’ என்பதை
ஒப்பிடமுடியவில்லை; இரு சொற்களுக்கும்
தொடர்பில்லாமல் தென்பட்டதால்
ஒரு சிறு முயற்சி. அவ்வளவுதான்.

மடலாடலில் பல திருப்பங்கள்
ஏற்படுவது தவிர்க்க இயலாது; 
காரைக்கால் அம்மையார் விவரமும்
இந்த இழைக்குத் தொடர்பில்லாததே

தேவ்

DEV RAJ

unread,
Nov 15, 2013, 8:20:39 AM11/15/13
to mint...@googlegroups.com
பக்தி ஞானத்திலும் மேம்பட்டது;
அந்த பக்திக்கான இலக்கு கண்ணன்
கழல் இணைகளே -

பொலிந்திருண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி,
மலிந்து திருவிருந்த மார்வன் - பொலிந்து
கருடன்மேல் கொண்ட கரியான் கழலே,
தெருடன்மேல் கண்டாய் தெளி.

[தெருடன் மேல் - தெருள்தன் மேல்]

கார்முகிலின் நடுவில் தோன்றும் மின்னல்போல்
பெருமானின் கார்மேனியின்கண் பிராட்டியார் நீங்காது 
வீற்றிருக்கிறாள். அகலாது உறையும் பிராட்டியாரின்
பேரொளி, கணநேரம் தோன்றி மறையும் மின்னலுக்கு
நிகரா என்றால் அது உவமையின் குறைபாடு.

தெருள்தன் மேல்கண்டாய் –‘தெருள்‘ஞானத்திற்குப் பெயர், 
‘கர்மம் - ஞாநம் - பக்தி‘ என்று சொன்னாலும், வைணவ நூல்கள் 
சொல்லும் ‘பரபக்தி - பரஞாந - பரமபக்தி‘என்றாலும் 
ஞாநத்திற்கும் மேலாக பக்தி சொல்லப்பட்டிருப்பதால், 
இங்கே தெருள்தன் மேல் என்று ,அவனது திருவடிகளையே பக்திக்கு 
இலக்காக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார் ஆழ்வார். 

தேவ்

ரா.கிருஷ்ணன்

unread,
Nov 15, 2013, 9:55:06 AM11/15/13
to mint...@googlegroups.com
<<<<...பக்தி ஞானத்திலும் மேம்பட்டது;....>>>

இப்படி சொல்பவரைக் காண்பதே அரிது. வியப்பாக இருக்கிறது. 

2013/11/15 DEV RAJ <rde...@gmail.com>

DEV RAJ

unread,
Nov 15, 2013, 10:13:52 AM11/15/13
to mint...@googlegroups.com
On Friday, 15 November 2013 20:25:06 UTC+5:30, krishnanrnava wrote:
<<<<...பக்தி ஞானத்திலும் மேம்பட்டது;....>>>
இப்படி சொல்பவரைக் காண்பதே அரிது. வியப்பாக இருக்கிறது. 
 
இதுபற்றி விரிவாகப் பேசுவோர் இன்மையால்
சற்று அரிதுபோல் தோற்றம், அவ்வளவே.

பக்தி ரூப ஆபந்ந ஜ்ஞாநத்தை மராட்டியப் பதிவொன்று
அழகுபடச் சொல்கிறது.
भक्तिरूपापन्न ज्ञान -
भक्तिभावनेबरोबरच त्याला ज्ञानाचीही जोड (भक्तिरूपापन्न ज्ञान) आवश्यक आहे.

தேவ்
 
ரா.கிருஷ்ணன்

unread,
Nov 15, 2013, 10:36:49 AM11/15/13
to mint...@googlegroups.com
எனக்குத் தெரிந்து நிறைய பேருக்கு இதில் கருத்து மாறுபாடு உண்டு, திரு.தேவ்.

2013/11/15 DEV RAJ <rde...@gmail.com>
On Friday, 15 November 2013 20:25:06 UTC+5:30, krishnanrnava wrote:

--

shylaja

unread,
Nov 15, 2013, 11:02:14 PM11/15/13
to mintamil
பேயாழ்வார் எனும் திருநாம்ம் ஆழ்வார் பெருமானுக்கு எப்படி வந்தது என  பல நாட்களாய்   சிந்தனை செய்துகொண்டிருந்தேன்  வாசித்தவரை  புத்தகங்களில் தகவல் தென்படவில்லை தேவ் ஜீ யால்  தெளிவுற்றேன் நன்றி.
 ஆழ்வார் பாசுரங்களை  மேலும் ஆராதிப்போம் இந்த இழையில்  !

2013/11/14 DEV RAJ <rde...@gmail.com>
ஒருசில பாசுரங்களை விவரிக்கும் எண்ணமிருந்தது.
அன்பர்கள் பார்க்கிறார்களா தெரியவில்லை.
ஆழ்வாரின் இன்சொற்களை அடியேனின் புன்சொற்கள்
மலினப்படுத்துகின்றனவோ என்றும் தயக்கம்.
ஆயினும் சில செய்திகளைப் பதிவு செய்து இழையை
நிறைவு செய்கிறேன்.

ஞானியர் உடல் - உலக நினைவின்றிப் பரத்தில்
தோய்ந்தவராய்ச் சிறார் போலவும், பித்தர் போலவும்,
பேயால் மருண்டவர் போலவும் [பால - உந்மத்த - பிசாசவத்]
திரிவர் என நூல்கள் பகரும். அதானால்தான் இந்த ஆழ்வாருக்குப்
பேயாழ்வார்  எனும் திருநாமம் என எண்ணியிருந்தேன்.
ஆனால் சங்கதத் தனியன் இவ்வாழ்வாரை ‘மஹதாஹ்வயர்’ 
[பெரியவர் எனும் பெயர் படைத்தவர்எனும் சொற்கொண்டு 
விளிக்கிறது. வைணவ மரபில்‘பெரியாழ்வார்’ ஒருவர்தானே ! 
இவரையும் பெரியாழ்வார் என்பது கூடுமோ எனும் ஐயம் 
தோன்றியது. 

தமிழில் பேய் பெரியது எனவும் பொருள் தரும் என்பது
பின்னர் புலப்பட்டது. பெரிய அளவில் காணப்படும்
வனத் தாவரங்களைப் பேய் எனும் அடைமொழியால் 
நாம் பிரித்துப் பேசுகிறோம். [எ கா] பேயகத்தி, பேய்ச்சுண்டை,
பேயாத்தி. பேய் ஓணான் என்றும் ஒரு சொல் இருப்பது
தெரிய வந்தது.

இந்நோக்கில் ஞானச்சுடர் விளக்கேற்றி எம்பெருமானை
உடனே கண்டு, ஆழ்பொருளை அறிவித்த இவ்வாழ்வாரைப்
பேயாழ்வார் என விளிக்கிறது வைணவ மரபு என்று
தேர்ந்தேன்.

தேவ்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
 
. .

Reply
Forward
 
DEV RAJ

unread,
Nov 15, 2013, 11:15:57 PM11/15/13
to mint...@googlegroups.com
On Friday, 15 November 2013 21:06:49 UTC+5:30, krishnanrnava wrote:
எனக்குத் தெரிந்து நிறைய பேருக்கு இதில் கருத்து மாறுபாடு உண்டு

ஆழ்வார்கள் அருளிய இந்த பேதக் கட்டமைப்பின் துணை
கொண்டுதான் பாரதத்தின் பக்தி இயக்கமே வளர்ச்சியுற்றது, ஐயா. 

பக்திக்கு அடிப்படை பேதம்;
நாராயணனே பரன், நாம் அவனுக்கு நிலையடியோம் எனும் 
இடையறாத ஞானமே பக்தியாக மலர்ச்சி பெறுகிறது;
பிரபத்தி என்பது எளிய நேரடியான விரகு.

அதி₄கம் து பே₄த₃நிர்தே₃ஶாத் । [வ்யாஸ ஸூத்ரம்]

த₃ர்ஶநம் பே₄த₃  ஏவ | [தேவப் பெருமாள் இளையாழ்வாருக்குச் 
                                                   சொன்ன நல்வார்த்தை]

சங்கதம் தவிர்த்து இழையைக் கொண்டு செல்லும் எண்ணம்.
விளக்கம் தேவையாவதால் சில வார்த்தைகள் சொல்ல நேர்கிறது; 
அன்பர்கள் பாண்டித்ய ப்ரதர்சநம் என்று கொள்ளற்க.
ஆழ்வார்களின் தர்சநத்தை பிற மொழிகளின் பக்தி இலக்கியங்களில்
வெளிப்படையாகக் காண முடிகிறது. ஒன்றின் தாக்கம் மற்றதில்
என்பதை ஏற்க எல்லோருக்குமே நீங்காத மனத்தடை

தேவ்

Madhurabharati

unread,
Nov 15, 2013, 11:40:54 PM11/15/13
to MinTamil
ஆஹா! இங்கு நடைபெறும் கருத்துப் பரிமாற்றம் தேனாக இனிக்கிறது.

அனைத்துப் பெரியோருக்கும் நன்றியும் பாதத்தில் சிரந்தொட்ட வணக்கமும்.

அன்புடன்
மதுரபாரதி

2013/11/16 DEV RAJ <rde...@gmail.com>

--

DEV RAJ

unread,
Nov 16, 2013, 12:09:24 AM11/16/13
to mint...@googlegroups.com
On Saturday, 16 November 2013 09:32:14 UTC+5:30, Shylaja N wrote:
பேயாழ்வார் எனும் திருநாம்ம் ஆழ்வார் பெருமானுக்கு எப்படி வந்தது என  பல நாட்களாய்   சிந்தனை செய்துகொண்டிருந்தேன்  வாசித்தவரை  புத்தகங்களில் தகவல் தென்படவில்லை 

நன்றி அம்மா

பூதத்தாழ்வார் பெயரிலுள்ள ‘பூதம்
என்பதும் பக்தர், அடியார் எனும்
பொருளைத் தருவதாக எடுத்துக்
கொள்ள இப்பாசுரம் துணை
செய்கிறது -

திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து,
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருக,
கரிய முகில்வண்ண னெம்மான் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,
இரியப் புகுந்திசை பாடி எங்கும் இடங்கொண் டனவே.

கடல்வண்ணன் பூதங்கள் என்றது எம்பெருமான் அடியார்களை.

முதலாழ்வார்கள் ஆதி பூதங்களாக அவதரித்து, தாம் பெரிய 
யோகியராக விளங்கிய போதிலும் மிகச் சாமானியரும் உய்யும் 
பொருட்டுத் தெள்ளு தமிழில் உபாய உபாயங்களை
வெளியிட்டுச் சென்றனர் என முடிவு செய்யலாம்

தேவ்

shylaja

unread,
Nov 16, 2013, 12:20:27 AM11/16/13
to mintamil

2013/11/16 DEV RAJ <rde...@gmail.com>
>>>>  அழகுற  விளக்கினீர்கள் தேவ் ஜீ
 
கடல் மல்லைத்தலசயனம்  என்கிற கவின் மிகு கலைநகராம்  மகாபலிபுரத்தில் ஒரு மல்லிகைப்புதரின் நடுவே நீலோற்பல மலரில்  நெடுமாலி்ன்  ஐந்து படைகளில் நிகரற்று விளங்கும்
 கௌமோதகி என்னும் கதாயுதத்தின் அம்சமாக அவதரித்தவர் பூதத்தாழ்வார் என்று  கேள்விப்பட்டிருக்கிறேன்
அன்பினை அகலாக அளப்பரும் ஆர்வத்தை நெய்யாக இன்பம்   இயைந்து இருக்கும்
  சிந்தையை  திரியாகக்கொண்டு பெருமானுக்கு ஞானத்தமிழால் ஞானசுடர் என்னும் விளக்கேற்றிய ஆழ்வாரின் பாசுரங்கள்  அடியார்க்கு நல்வழியைக்காட்டும்!
 
தேவ்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

DEV RAJ

unread,
Nov 16, 2013, 12:36:44 AM11/16/13
to mint...@googlegroups.com
 உபாய உபாயங்களை
 *உபாய உபேயங்களை*

Nagarajan Vadivel

unread,
Nov 16, 2013, 12:43:12 AM11/16/13
to மின்தமிழ்
இதெல்லாம் கொஞ்சம் மிகப்பட உரைத்தலில் அடங்கும்.  சைவசமய வரலாறுபோல் ஒரு சீரான வழியில் ஆழ்வார்கள் வரலாறு இன்னமும் நெறிப்படுத்தப்படவில்லை.  பல்லவ நாட்டில் பிறந்து பல்லவர்களின் தொண்டை மட்டல்த்துக்குழ் வாந்த மூவரில் ஒருவர் என்று வரலாறு எளிதில் சுருக்கப்பட்டுவிட்டது எனலாம். 

தற்போது வழக்கில் உள்ள செய்திகள் கற்பனைக் கலப்பை நீக்கி வரலாற்றுப் பார்வையில் ஆய்ந்தவர்கள் பொய்கை, பூதம் மற்றும் பேயாழ்வார் ஆகிய மூவரும் வாழ்ந்த  காலம் ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்றும் பேயாழ்வார் காலத்தே திருப்பதி மலையில் திருவேங்கடனுக்கு சிவ விஷ்ணு தோற்றம் அமைந்திருந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்

மிஞ்ஞானி

2013/11/16 DEV RAJ <rde...@gmail.com>

DEV RAJ

unread,
Nov 16, 2013, 1:34:58 AM11/16/13
to mint...@googlegroups.com
On Saturday, 16 November 2013 11:13:12 UTC+5:30, மிஞ்ஞானி wrote:

அப்படியே வைத்துக்கொண்டாலும் 7ம்
நூற்றாண்டுக்குப்பின் தோன்றிய பிற
மொழிகளின் பக்தி இலக்கியங்களோடு
ஒப்பிடுவதற்கான வாய்ப்பு நிறையவே
உள்ளது; கருத்துப் பகிர்வுக்கான கால
இடைவெளியும், வாய்ப்புகளும் மிகுதியாக
உள்ளன.

முதலாழ்வார்களும், மழிசைப்பிரானும் 
தோன்றியது தொண்டை மண்டலத்தில் அன்று 
என இந்த இழையில் யாராவது
சொல்லியுள்ளார்களா ? இல்லையே.

மிகைக்கூற்று எதில் ?
கற்பனைக் கலப்பு எந்தப் பதிவில் ?

தேவ்

shylaja

unread,
Nov 16, 2013, 1:35:59 AM11/16/13
to mintamil
ஏழாம் நூற்றாண்டுதான் முதலாழ்வார்களின் காலம் என்பது தெரிநததுதானே?  நம்மாழ்வார் 9ம் நூற்றாண்டு 

2013/11/16 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

DEV RAJ

unread,
Nov 16, 2013, 1:52:12 AM11/16/13
to mint...@googlegroups.com
On Saturday, 16 November 2013 11:13:12 UTC+5:30, மிஞ்ஞானி wrote:
இதெல்லாம் கொஞ்சம் மிகப்பட உரைத்தலில் அடங்கும்.  சைவசமய வரலாறுபோல் ஒரு சீரான வழியில் ஆழ்வார்கள் வரலாறு இன்னமும் நெறிப்படுத்தப்படவில்லை.  

திருமூலர் காலம் முடிவாகி விட்டதா ? 
பெரிய புராணம் சொல்லும் செய்திகளை
நவீன ஆராய்ச்சியாளர் அப்படியே
ஏற்கின்றனரா ?

காலத்தால் முற்பட்ட காரைக்கால்
அம்மையார் பாடல்களைச் சங்க
இலக்கியத்தோடு சேர்ப்பதில்
தடை என்ன ? 

தேவ்

Geetha Sambasivam

unread,
Nov 16, 2013, 5:00:04 AM11/16/13
to மின்தமிழ்
மாணிக்கவாசகர் காலமும் சர்ச்சைக்கு உரியதாகவே இருந்து வருகிறது.

திருமங்கை ஆழ்வாரோடு திருஞானசம்பந்தர் காலத்தையும் சேர்த்துச் சொல்வதும் சரியா?  இருவரும் வெவ்வேறு காலம் அல்லவோ?

2013/11/16 DEV RAJ <rde...@gmail.com>

திருமூலர் காலம் முடிவாகி விட்டதா ? 
பெரிய புராணம் சொல்லும் செய்திகளை
நவீன ஆராய்ச்சியாளர் அப்படியே
ஏற்கின்றனரா ?

காலத்தால் முற்பட்ட காரைக்கால்
அம்மையார் பாடல்களைச் சங்க
இலக்கியத்தோடு சேர்ப்பதில்
தடை என்ன ? 

தேவ்

--

Dr. N.Kannan

unread,
Nov 16, 2013, 7:14:41 AM11/16/13
to mint...@googlegroups.com
நல்ல விளக்கம்!

க.>

Sent from Samsung Mobile

2013/11/14 DEV RAJ <rde...@gmail.com>
தேவ்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
 
. .

Reply
Forward
 
--

DEV RAJ

unread,
Nov 17, 2013, 11:06:56 AM11/17/13
to mint...@googlegroups.com
புலன்களைப் பெருமானிடம் ஈடுபடுத்துமாறு
அறிவுறுத்துகிறார்  ஆழ்வார் -

நாமம் பலசொல்லி நாராய ணாவென்று,
நாமங்கை யால்தொழுதும் நன்னெஞ்சே - வா,மருவி
மண்ணுலக முண்டுமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்,
கண்ணனையே காண்கநங் கண்.

நாமங்கை யால்தொழுதும் - அம் கையால் நாம் தொழுதும்.

                                        ------------------

தாமரைக் கண்ணானின் கரங்களும்,
திருவடிகளும் தாமரை போன்றவையே -

கண்ணுங் கமலம் கமலமே கைத்தலமும்,
மண்ணளந்த பாதமும் மற்றவையே,  - எண்ணில்
கருமா முகில்வண்ணன் கார்கடல்நீர் வண்ணன்,
திருமா மணிவண்ணன் தேசு.

மதுரபாரதி அவர்களின் மொழி தென்றலாகக் குளிர்விக்கிறது;
முசுவாக இருக்கும் முனைவர் கண்ணனும் அருளிச்செயலில்
அவர்க்கு இருக்கும் மாறாத காதலால் தலைகாட்டிச் செல்வது
மகிழ்ச்சியளிக்கிறது. இவர்கள் மேலும் பங்குகொள்ளலாம்

தேவ்

Dr. N.Kannan

unread,
Nov 17, 2013, 9:06:37 PM11/17/13
to mint...@googlegroups.com

Sent from Samsung Mobile

-------- Original message --------
From: DEV.
மதுரபாரதி அவர்களின் மொழி தென்றலாகக் குளிர்விக்கிறது;
முசுவாக இருக்கும் முனைவர் கண்ணனும் அருளிச்செயலில்
அவர்க்கு இருக்கும் மாறாத காதலால் தலைகாட்டிச் செல்வது
மகிழ்ச்சியளிக்கிறது. இவர்கள் மேலும் பங்குகொள்ளலாம்
>%
பயணத்தை அவன் நாமங்கள்! அகலகில்லேன் என்று அவன் நம் நெஞ்சில் குடிகள் இவ்விடுகைகள் துணை! 

கண்ணன்

தேவ்

meenavan2

unread,
Nov 18, 2013, 2:05:16 AM11/18/13
to mint...@googlegroups.com
அன்பர் காளைராசன் அவர்களே

புடலையில்  பேய்ப்புடலை  என்ற ஒன்றும் உள்ளது.
தகவலுக்காக

காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

On Monday, November 11, 2013 9:56:52 PM UTC+5:30, DEV RAJ wrote:
சீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள்
காரார் கருமுகிலைக் காணப்புக்கு -ஓராத்
திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் சூழலே
உரைக்கண்டாய் நெஞ்சே யுகந்து.

           மூன்றாம் திருவந்தாதி

மருந்தும் பொருளும் அமுதமும் தானே,
திருந்திய செங்கண்மா லாங்கே, - பொருந்தியும்
நின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால்,
அன்றுலகம் தாயோன் அடி.

படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று,
அடிவட்டத் தாலளப்ப நீண்ட - முடிவட்டம்,
ஆகாய மூடறுத் தண்டம்போய் நீண்டதே,
மாகாய மாய்நின்ற மாற்கு.

இசைந்த அரவமும் வெற்பும் கடலும்,
பசைந்தங் கமுது படுப்ப, - அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சிவெஃ காவில்,
கிடந்திருந்து நின்றதுவும் அங்கு.

ஓர்த்த மனத்தராய் ஐந்தடக்கி யாராய்ந்து,
பேர்த்தால் பிறப்பேழும் பேர்க்கலாம், - கார்த்த
விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி,
நிரையார மார்வனையே நின்று.

சென்றநாள் செல்லாத செங்கண்மா லெங்கள்மால்,
என்றநா ளெந்நாளும் நாளாகும், - என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே யாளாய்,
மறவாது வாழ்த்துகவென் வாய்.

பேயாழ்வார் திருவடிகளே சரணம்

Rajagopalan

unread,
Nov 18, 2013, 3:47:45 AM11/18/13
to mint...@googlegroups.com
 
நிரந்தரம் பகவதநுபவ ஆனந்தத்தால் திருமேனியில் மயிர்க்கூச்செறிந்து,ஆனந்தக்கண்ணீர் சோர, நரக பீதி இல்லாதவராய், நர்த்தனம் செய்துகொண்டு, "அழுவன், தொழுவன், ஆடிக்காண்பன், பாடியலற்றுவன்", "காலாழும், நெஞ்சழியும், கண்சுழலும்' என்கிற படியே, பகவதநுபவ பித்தேறினவராய் இருக்கையிலே 'பேயாழ்வார்' என்கிற திருநாமமே நிரூபகமாக உடையவராயிருப்பர். இது 'குருபரம்பரா ப்ரபாவத்தில்' உள்ளபடி.
 
அ.ரா

On Saturday, 16 November 2013 09:32:14 UTC+5:30, Shylaja N wrote:

ரா.கிருஷ்ணன்

unread,
Nov 18, 2013, 3:52:03 AM11/18/13
to mint...@googlegroups.com
இது பொருத்தமாக இருக்கிறது.

Subashini Tremmel

unread,
Nov 18, 2013, 4:28:17 AM11/18/13
to மின்தமிழ், Subashini Tremmel
செய்யுளும் விளக்கப் பொருளும் என எளிய அழகான தமிழில் திரு.தேவ் அவர்களின் இந்த பேயாழ்வார் இழை மிக அருமையாக அமைந்திருக்கின்றது.  நன்றி.

சுபா

2013/11/11 DEV RAJ <rde...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
DEV RAJ

unread,
Nov 18, 2013, 5:11:47 AM11/18/13
to mint...@googlegroups.com
On Monday, 18 November 2013 14:17:45 UTC+5:30, Rajagopalan wrote: 
நிரந்தரம் பகவதநுபவ ஆனந்தத்தால் திருமேனியில் மயிர்க்கூச்செறிந்து,ஆனந்தக்கண்ணீர் சோர, நரக பீதி இல்லாதவராய், நர்த்தனம் செய்துகொண்டு, "அழுவன், தொழுவன், ஆடிக்காண்பன், பாடியலற்றுவன்", "காலாழும், நெஞ்சழியும், கண்சுழலும்' என்கிற படியே, பகவதநுபவ பித்தேறினவராய் இருக்கையிலே 'பேயாழ்வார்' என்கிற திருநாமமே நிரூபகமாக உடையவராயிருப்பர். இது 'குருபரம்பரா ப்ரபாவத்தில்' உள்ளபடி.

ஆம், இப்பொருளையும் முதலில் எடுத்துக்காட்டியுள்ளேன். 

மஹத் ஆஹ்வய - இதுவும்  நெடுங்காலமாக ஆழ்வார்தம்
திருநாமமாகச் சொல்லப்பட்டு  வருகிறது. இது குறித்த
விளக்கத்தையும் பேசினோம். ‘பேய்’ சங்கதத் திருநாமத்துக்கும்
இசைவாக அமைந்துள்ளது என்பது இழையின் செய்தி. புதிய
கண்டுபிடிப்பு என்பதில்லை. உ. வே. கருணாகர ஆசார்யர்
இதை ஒப்புக்கொண்டு பேசியுள்ளதாக ஒரு நண்பர் கூறினார்.
ஆக இதைத் துறைவல்ல ஆன்றோர் ஏற்றுள்ளனர் என்றும்
தெரிகிறது 

தேவ்

DEV RAJ

unread,
Nov 18, 2013, 5:21:08 AM11/18/13
to mint...@googlegroups.com
அவதாரங்களில் ஈடுபடுகிறார் ஆழ்வார் -

அங்கற் கிடரின்றி அந்திப் பொழுதத்து,
மங்க இரணியன தாகத்தை - பொங்கி
அரியுருவ மாய்ப்பிளந்த அம்மா னவனே,
கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து.

அங்கற்கு [அங்கஜ -மகனுக்கு] இடரின்றி அந்திப் பொழுதத்தில்
இரணியனது ஆகத்தை மங்க அரி உருவமாய்ப் பொங்கிப் பிளந்த 
அம்மான்,  அவனே காய்ந்து கரி உருவம் கொம்பு ஒசித்தான்.

N. Kannan

unread,
Nov 19, 2013, 4:39:44 AM11/19/13
to மின்தமிழ்
2013/11/14 DEV RAJ <rde...@gmail.com>
பிற ஆழ்வார்கள் வாத்ஸல்ய பாவத்திலும், சிருங்கார ரஸம் மிகுந்த
நாயிகா பாவத்திலும் பாடியிருக்க, யோகியரான முதலாழ்வார்கள் 
சாந்த ரஸத்தில் அந்தர்யாமியை அநுபவிக்கும் விதமாகப் பாக்களை 
அமைத்துள்ளனர் -

ஐயா! இதுகூட சங்கத்தின் நீட்சியையே காட்டுகிறது. சங்கம் பேசும் திருமால் பெரியதற்கு பெரியவன், சிறியதிற்குச் சிறியவன் (திருவிக்கிரமன் - அந்தர்யாமி). பரிபாடல் காட்டும் திருமால் இத்தகையவனே.

திருமாலை வேதத்தின் வித்தாக, வேத முதல்வனாகக் காணும் நோக்கு பிற்சங்கப் பாடலான நற்றிணைப் பாடலில் வருகிறது. அது திருமாலை உலகின் காரணப் பொருள் என்றும், அவர் எங்கும் பரந்து நிற்கும் வியாபக நிலை உடையவர் என்றும், ஒவ்வொரு பொருளிலும் கரந்து நிற்கும் அந்தர்யாமி என்றும் சொல்கிறது:

மாநிலஞ் சேவடியாக.....
பசுங்கதிர் மதி
யமொடு சுடர் கண்ணாக
வியன்ற வெல்லாம் பயின்றகத் தடங்கிய
வேத முதல்வ னென்ப

தீதற விளங்கிய திகிரி யோனே  

இ.பா தனது கணையாழி கட்டுரை ஒன்றில் சங்கம் பேசும், ‘ஆர்வம்’ எனும் கருதுகோளே பின்னால், ‘பக்தி’ மரபாக மாறுவதாகச் சொல்வார்.

ஆண்டாள் தன்னை சங்கப்புலவர் என்று சொல்லிக்கொள்வது (சங்கத்தமிழ் மாலை முப்பதும்) இதனால்தான் என்று புரியும்.

நா.கண்ணன்

N. Kannan

unread,
Nov 19, 2013, 4:49:17 AM11/19/13
to மின்தமிழ்
2013/11/12 DEV RAJ <rde...@gmail.com>

அன்பர்கள் இந்த அளவு ஈடுபட்டுகப்பது வியப்பளிக்கிறது

சொல்பவர் சொன்னால் சுவை கூடுவது இயல்புதானே!

யாழின் இசையே, அமுதே
அறிவின் பயனே!
அரி ஏறே!

வாழ்த்துகள்! தேவ்ஜீ

நா.கண்ணன் 

DEV RAJ

unread,
Nov 19, 2013, 6:50:28 AM11/19/13
to mint...@googlegroups.com
வாழ்க்கையாவது திருமகளோடு ஒருநாளும் பிரியா நாதனின்
அடிசேரப்பெற்று வாழ்வதே -

வாழும் வகையறிந்தேன், மைபோல் நெடுவரைவாய்
தாழும் அருவிபோல் தார்கிடப்ப - சூழும்
திருமா மணிவண்ணன் செங்கண்மால், எங்கள்
பெருமான் அடிசேரப் பெற்று.

சூழும் திரு என்பது என்றும் அகலாத பிராட்டியாரைக் குறிப்பது.

பெருமானின் மல்லாண்ட திண்டோளின்கண் பொலியும் மாலையை, 
ஆழ்வார் கருத்த மலையிலிருந்து பெருகும் அருவியோடு ஒப்பிடும் 
நயம் மனத்தை மிகவும் கவர்கிறது -
மைபோல் நெடுவரைவாய் தாழும் அருவிபோல் தார்கிடப்ப

தேவ்

shylaja

unread,
Nov 19, 2013, 7:37:57 AM11/19/13
to mintamil

2013/11/19 DEV RAJ <rde...@gmail.com>
>>>>  சொல் நயம் பாருங்கள்  மைபோல  நெடு வரையாம். அண்ணலின் மேனி நிறத்திற்கு  இணையாக கருமலையைக்கொண்டுவருகிறார்   மிக அழகு இந்தபபாசுரம் தேவ்ஜீ!!   அண்மையில் ராமனின் பாதையில்  விஜய் டிவியில்  வேளுக்குடி திருகிருஷ்ணன்  வாலிவதம் நடந்த  மலைக்குகையைப்பற்றி சொல்லும்போது அங்குமட்டும்  மலைபபாறை சிவப்பாக  இருப்பதாக  சொன்னார்.
தேவ்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
 
. .

Reply
Forward
 
ரா.கிருஷ்ணன்

unread,
Nov 19, 2013, 8:31:40 AM11/19/13
to mint...@googlegroups.com

நெடுவரைவாய் தாழும் அருவி போல் தார்

அவர் பார்த்துவிட்டார். வேறெந்த விதத்திலும் இப்படி ஒரு வரி தோன்றாது 

DEV RAJ

unread,
Nov 19, 2013, 9:05:13 AM11/19/13
to mint...@googlegroups.com
சாதுர்யமாக மாவலியிடமிருந்து அமரர்க்குரியதைப்
பெற்றளித்த மாயவன் உறையும் வேங்கட மலையில்,
ஒரு பாறையின் மீது அமர்ந்துகொண்டிருக்கும்
பெண் குரங்கு வெண்மதியத்தை விரும்பி ,
தன்மீது காதல் கொண்ட ஆண் குரங்கிடம் 
அதைப் பிடித்துத் தருமாறு கேட்கிறதாம்.

இப்பாசுரத்தில் வேங்கடத்தின் எழிலை 
வர்ணிப்பதுபோல் அதன் விண்முட்டும் 
உயரத்தையும் ஆழ்வார் உணர்த்தி விடுகிறார் -

தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி,
அளிந்த கடுவனையே நோக்கி - விளங்கிய
வெண்மதியம் தாவென்னும் வேங்கடமே, மேலொருநாள்
மண்மதியில் கொண்டுகந்தான் வாழ்வு.

தேவ்

Hari Krishnan

unread,
Nov 19, 2013, 9:52:27 PM11/19/13
to mintamil

2013/11/19 DEV RAJ <rde...@gmail.com>

இப்பாசுரத்தில் வேங்கடத்தின் எழிலை 
வர்ணிப்பதுபோல் அதன் விண்முட்டும் 
உயரத்தையும் ஆழ்வார் உணர்த்தி விடுகிறார் -

அருமையான பதிவு ஐயா.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

krishnan

unread,
Nov 20, 2013, 4:24:42 AM11/20/13
to mint...@googlegroups.com

DEV RAJ

unread,
Nov 21, 2013, 5:02:01 AM11/21/13
to mint...@googlegroups.com
அமரர்க்கும் அரிய இப்பெருமானைத்
தொழுவதில் குற்றம் ஏதேனும் உண்டோ ?

தொழுதால் பழுதுண்டே தூநீ ருலகம்,
முழுதுண்டு மொய்குழலாள் ஆய்ச்சி - விழுதுண்ட
வாயானை மால்விடையேழ் செற்றானை, வானவர்க்கும்
சேயானை நெஞ்சே சிறந்து.

எல்லாம் சரிதான்; ஆனால் உலகியலில் ஆழ்ந்திருக்கும் 
நம் போல்வரின் உள்ளம் வேறு விதமாகக் கணக்குப் போடுகிறது -
இறை தொழுதால் என்ன கிடைக்கும் ? 
எல்லாம் கிடைக்கும் என்கிறார் ஆழ்வார் -

தேசும், திறலும், திருவும், உருவமும்,
மாசில் குடிப்பிறப்பும், மற்றவையும் - பேசில்
வலம் புரிந்த வான்சங்கம் கொண்டான் பேரோத,
நலம்புரிந்து சென்றடையும் நன்கு.

மேலும் சரீரம் விழுந்தபின் கலங்காப் பெருநகரான
வைகுந்தத்தில் வான் போகமும் எய்தலாம் -

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்,
அவனே யணிமருதம் சாய்த்தான் - அவனே
கலங்காப் பெருநகரம் காட்டுவான் கண்டீர்,
இலங்கா புரமெரித்தான் எய்து.

ஆகவே அது நல்லதா, இது நல்லதா ?
எதில் ஆதாயம் அதிகம் என்றெல்லாம்
சந்தேகப்பட்டுக் கால விரயம் செய்யாமல்
மது நிறைந்த தண் துழாய் மார்வனின் 
மலரடிகளையே தொழுது உய்வு பெறுவீராக -  

அதுநன் றிதுதீதென் றையப் படாதே,
மதுநின்ற தண்டுழாய் மார்வன் - பொதுநின்ற
பொன்னங் கழலே தொழுமின், முழுவினைகள்
முன்னங் கழலும் முடிந்து.

தேவ்

mariappan balraj

unread,
Nov 21, 2013, 5:33:11 AM11/21/13
to mint...@googlegroups.com
ஐயா 

மகிவும் அருமையான பதிவு.

1) மால்விடையேழ் செற்றானை - இந்தக் கதையையும் சொன்னால் நன்றாக இருக்குமே?

2) அணி மருதம் சாய்த்தான் - இந்தக் கதையையும் சொன்னால் நன்றாக இருக்குமே?

அன்புள்ள 
பா.மாரியப்பன்

2013/11/21 DEV RAJ <rde...@gmail.com>

--

DEV RAJ

unread,
Nov 22, 2013, 6:44:20 AM11/22/13
to mint...@googlegroups.com
On Thursday, 21 November 2013 16:03:11 UTC+5:30, mariappan.balraj wrote:
1) மால்விடையேழ் செற்றானை -

கண்ணபிரான் ஏழு காளைகளை அடக்கி நப்பின்னைப் 
பிராட்டியாரை மணந்து கொண்டதாகத் தமிழ் நூல்கள் கூறும்;
சிலம்பு பின்னையை ‘பிஞ்ஞை’ என்கிறது.

கண்ணபிரான் நப்பின்னையை மணந்து கொண்டதைச்
சீவக சிந்தாமணியும் சொல்கிறது -

குலம் நினையல் நம்பி கொழும் கயல் கண் வள்ளி
நலன் நுகர்ந்தான் அன்றே, நறும் தார் முருகன்
நில மகட்குக் கேள்வனும் நீள் நிரை நப்பின்னை
இலவு அலர் வாய் இன் அமிர்தம் எய்தினான் அன்றே. 

வைணவ நூல்கள் நப்பின்னையை ஆயர் மடமகள் என்று கூறும்.

2) அணி மருதம் சாய்த்தான் - இந்தக் கதையையும்......

நளகூபர - மணிக்ரீவர் எனும் இரு கந்தர்வர்கள்
அங்கு வந்த நாரத முனிவரை மதிக்காமல்
சுர மகளிருடன் நீர் விளையாட்டில் ஈடுபட,
அதனால் வெகுண்ட முனிவர் அவர்களை
மரங்களாகுமாறு சபிக்கிறார். அவர்கள் நந்த பவனத்தில் 
புணர் மருதங்களாக வளர்கின்றனர்.
கண்ணனின் குறும்பு பொறாத அசோதையார்
உரலோடு பிணைக்கிறார். கண்ணன் உரலை இழுத்துக்கொண்டு
மருத மரங்களிடையே சென்று அவை முறியுமாறு
செய்ய, அவர்கள் சாபவிமோசனம் பெறுகின்றனர்.

’புணர் மருதம் இற நடந்த பொற் குன்றினை’ ஆழ்வார்கள்
போற்றுவது அதிசயமன்று; அருணகிரியாரும் முருகனோடு
கண்ணபிரானையும் சேர்த்துப் போற்றுவார் -

பரிவொடு மகிழ்ந்திறைஞ்சு மருதிடை தவழ்ந்து நின்ற
     பரமபத நண்ப ரன்பின் ...... மருகோனே 

தேவ்

கி.காளைராசன்

unread,
Nov 24, 2013, 9:04:20 AM11/24/13
to mintamil
பண்டிட்ஜி அவர்களுக்கு வணக்கம்.

“அழல்போலு மாலைக்குத் தூதாகி யாயன்
குழல்போலுங் கொல்லும் படை“

என்ற திருக்குறள் நப்பின்னையின் நிலையிலிருந்து பாடப் பெற்றுள்ளது நினைவிற்கு வருகிறது.

அன்பன்
கி.காளைரசான்

On 11/22/13, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Thursday, 21 November 2013 16:03:11 UTC+5:30, mariappan.balraj wrote:
>>
>> *1) மால்விடையேழ் செற்றானை -*

>>
>
> கண்ணபிரான் ஏழு காளைகளை அடக்கி நப்பின்னைப்
> பிராட்டியாரை மணந்து கொண்டதாகத் தமிழ் நூல்கள் கூறும்;
> சிலம்பு பின்னையை *‘பிஞ்ஞை’ *என்கிறது.

>
> கண்ணபிரான் நப்பின்னையை மணந்து கொண்டதைச்
> சீவக சிந்தாமணியும் சொல்கிறது -
>
> குலம் நினையல் நம்பி கொழும் கயல் கண் வள்ளி
> நலன் நுகர்ந்தான் அன்றே, நறும் தார் முருகன்
> *நில மகட்குக் கேள்வனும் நீள் நிரை நப்பின்னை*

> இலவு அலர் வாய் இன் அமிர்தம் எய்தினான் அன்றே.
>
> வைணவ நூல்கள் நப்பின்னையை *ஆயர் மடமகள் *என்று கூறும்.
>
>
> 2) அணி மருதம் சாய்த்தான் - *இந்தக் கதையையும்......*

>>
>
> நளகூபர - மணிக்ரீவர் எனும் இரு கந்தர்வர்கள்
> அங்கு வந்த நாரத முனிவரை மதிக்காமல்
> சுர மகளிருடன் நீர் விளையாட்டில் ஈடுபட,
> அதனால் வெகுண்ட முனிவர் அவர்களை
> மரங்களாகுமாறு சபிக்கிறார். அவர்கள் நந்த பவனத்தில்
> புணர் மருதங்களாக வளர்கின்றனர்.
> கண்ணனின் குறும்பு பொறாத அசோதையார்
> உரலோடு பிணைக்கிறார். கண்ணன் உரலை இழுத்துக்கொண்டு
> மருத மரங்களிடையே சென்று அவை முறியுமாறு
> செய்ய, அவர்கள் சாபவிமோசனம் பெறுகின்றனர்.
>
> *’புணர் மருதம் இற நடந்த பொற் குன்றினை’ *ஆழ்வார்கள்

> போற்றுவது அதிசயமன்று; அருணகிரியாரும் முருகனோடு
> கண்ணபிரானையும் சேர்த்துப் போற்றுவார் -
>
> பரிவொடு மகிழ்ந்திறைஞ்சு *மருதிடை தவழ்ந்து நின்ற*

>      பரமபத நண்ப ரன்பின் ...... மருகோனே
>
>
>
> தேவ்
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/groups/opt_out.
>

mariappan balraj

unread,
Nov 27, 2013, 4:21:39 AM11/27/13
to mint...@googlegroups.com
விளக்கங்களுக்கு மிக்க நன்றி திரு.தேவ்.

அன்புள்ள
பா.மாரியப்பன்

2013/11/24 கி.காளைராசன் <kalair...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages