"பூத்தொடுக்க வாரீகளா"

202 views
Skip to first unread message

Thamizth Thenee

unread,
Oct 23, 2012, 10:46:20 AM10/23/12
to மின்தமிழ்
நம் முன்னோர்கள் கற்று வைத்திருந்த பல கலைகளை நாம் மறந்துவிட்டோம்,
இந்தக் காலத்துப் பூவையருக்கு பழங்கலைகள் எதுவும் கற்றுக் கொள்ள நேரம்
இல்லை. ஆகவே நம் முன்னோர்கள் கற்று வைத்திருந்த பழங்கலைகளை ஒவ்வொன்றாக
செயல் வடிவம் கொடுத்து காணொலிகளாக்கி கற்பிக்கும் வகையில் காணொலிகளை
உருவாக்குகிறேன்.

1. பூத்தொடுக்க வாரீகளா

இந்தக் காணொலியை யூட்யூபில் காணுங்கள், http://thamizthenee.blogspot.com
என்னும் என்னுடைய வலைப்பூவிலும் காணலாம்

தொடுப்பு : http://youtu.be/fJs7fZ-huV4

அன்புடன்
தமிழ்த்தேனீ

Subashini Tremmel

unread,
Oct 23, 2012, 2:36:50 PM10/23/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அன்புள்ள தேனீயார் - பதிவு தெளிவாக வந்திருக்கின்றது. 

இதைப் பார்த்த போது ஒரு கருத்து மனதில் தோன்றியது... இதே பூதொடுத்தலை ஒருவரை பேச வைத்து விளக்கும் கொடுக்கும் வகையில் பதிவு செய்தாலும் நன்றாக இருக்கும். உதாரணமாக எந்தெந்த பூக்களை மாலை தொடுக்க பயன்படுத்தலாம்.. எந்தெந்த பூக்களை கலந்து சேர்க்கலாம். இலைகள் சேர்த்து மாலை தொடுத்தல் எப்படி செய்வது என கொஞ்சம் விரிவாக்கலாம்.

பூமாலைத் தொடுப்பது நல்ல ஒரு பொழுது போக்காகவும் சிறுவர்களுக்கு அமையும். பெற்றோர்கள் முனைந்தால் இதனைச் சுலபமாகக் கற்றுக் கொடுத்து மகிழலாம். 

சிறு வயதில் பூ மாலை தொடுக்க பயின்றதெல்லாம் இப்போதும் எனக்கு ஞாபகத்தில் இருக்கின்றது. மல்லிகை, கனகாம்பரம், டிசம்பர் பூ என பூக்களை மாலையாகத் தொடுத்திருக்கின்றேன். 

சுபா

2012/10/23 Thamizth Thenee <rkc...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
Tthamizth Tthenee

unread,
Oct 23, 2012, 11:26:21 PM10/23/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
நவராத்திரி கொலுவுக்கு வந்திருந்த என் மூத்த பெண் பூ தொடுத்துக்கொண்டிருந்தாள்

உடனே மூளையில் ஒரு மின்னல்

சரி என்று காணொலியாக்கினேன்.
 
நேரமும் பொரூமையும் தேவைப்படுகிறது
 
அதன் பிறகு எடிட்டிங் , இசை சேர்த்தல்   ஆனால் இவை போன்ற காணொலிகளை வருங்கால சந்ததிதகளுக்கு  வைத்துவிட்டு சென்றால் அவர்களும் கற்பார்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2012/10/24 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Oct 24, 2012, 2:24:14 AM10/24/12
to mint...@googlegroups.com
அருமையான பின்னணி இசையோடு கூடிய காணொலி.  நல்லா இருக்கு.  இங்கே அநேகமா நான் உதிரிப் பூக்கள் வாங்கியே தொடுக்கிறேன்.  கதம்பம் கூடப் பல்வேறு விதமான பூக்களை வாங்கியே கட்டுகிறேன். பலருக்கும் நேரம் இருப்பதில்லை என்கிறார்கள். வேறென்ன சொல்வது!

2012/10/23 Thamizth Thenee <rkc...@gmail.com>
323.gif

shylaja

unread,
Oct 24, 2012, 2:35:28 AM10/24/12
to mint...@googlegroups.com
நல்ல  காணொளி தேனி சார்.. பூத்தொடுக்கத்  தெரியாத பலர் இதைப்பார்த்துக்கற்றுக்கொள்ளலாம்.ஸ்ரீரங்கத்தில் வளர்ந்த  பெண்கள் பூத்தொடுக்கவும் தெருவை அடைத்துக்கோலம் போடத்   தெரிந்திருப்பதும் சகஜம். சாத்தாரவீதியில் தினசரி பூச்சந்தை நடக்கும்.. அங்கு கிடைக்காத பூக்கள் கிடையாது இன்னமும்  அந்ததெரு பூலோகமாகத்தான்  காலை நேரங்களில் காட்சி அளிக்கிறது. தாயார் சந்நிதியில்  கதம்பம் கட்டுவார்கள்  பாருங்கள் ஆஹா காணக்கண்கோடி வேண்டும்!  மனோரஞ்சிதபூவை நடு நடுவே வைத்து விருட்சிப்பூ  மரு சேர்த்து  அரங்கனுக்கென்றே  மாலை கட்டுவார்கள்.  விரல்களின் வித்தகம் வியக்க  வைக்கும்.  இருவாட்சி மல்லிகையை   இரட்டை நூல்கள்  போட்டு  இறுக்கமாய் செண்டு போல் தொடுத்துக்கட்ட  ஒரு பூக்காரியை தாஜா செய்து கற்றுக்கொண்டேன்!  பேனாவில் எழுதுவதுபோல  பூத்தொடுப்பதும் விரல்களுக்கு நல்ல பயிற்சி  ரத்த ஓட்டம் சீராகும் என்பார்கள்.
2012/10/24 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
shylaja
 
"எந்த நாளும் நின்மேல் - தாயே
இசைகள் பாடி வாழ்வேன்"
 
பாரதி

Narayan Swaminathan

unread,
Oct 24, 2012, 12:56:40 PM10/24/12
to mint...@googlegroups.com
நான் ஊசியில் நூல் கோர்த்து ஒவ்வொரு பூவாகத்
தொடுப்பேன். இதில் என்ன பிரச்னை என்றால் மாலை அறுந்து போனால் பூக்கள் எல்லாம் கொட்டி விடும்.
 
முடிச்சுப் போட்டுத் தொடுப்பது நல்ல யோசனை.
 
கொஞ்சம் ஸ்லோ மோஷனில் காட்டியிருக்கலாமோ
என்று தோன்றியது.
 
எனினும் காணொளிக்கு நன்றி.
 
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்

rajam

unread,
Oct 24, 2012, 1:17:48 PM10/24/12
to mint...@googlegroups.com

நான் ஊசியில் நூல் கோர்த்து ஒவ்வொரு பூவாகத்
தொடுப்பேன். இதில் என்ன பிரச்னை என்றால் மாலை அறுந்து போனால் பூக்கள் எல்லாம் கொட்டி விடும்.
 
உங்களை அந்தப் பூத்தொடுக்கும் கோலத்தில் கற்பனை செய்து மகிழ்ந்தேன், எல்லே அண்ணா!
நூலில் கோப்பதை/தொடுப்பதை விட, வாழை நாரில் தொடுப்பதே நல்லது. அப்படித்தான் நான் பழகினேன். சின்னக்கடைத் தெரு (அந்தக் கால மதுரைக்காரர்களுக்குத் தெரியும்) எங்கள் வீட்டுப் பக்கம். அங்கேயிருந்தும் பக்கத்துச் சந்தில் குடியிருந்தவர்களிடமிருந்தும் அம்மாவிடமிருந்தும் அந்தப் பூத்தொடுப்புக் கலையைப் பழகினேன். இப்போ, பூவைப் பறிக்கவே மனதில்லை! எல்லாம் செடியிலும் கொடியிலும். 
போன ஆண்டு மதுரையில், தோழி வீட்டில் எக்கச்சக்கப் பூ. தொடுக்க வாழை நார் கேட்டேன்; இல்லை. தோழி உங்களைப்போல நூலில் கோத்தாள். நுனி நாக்கு எச்சிலில் நூலைத் திருகி ஊசியில் நுழைத்து அந்த நூலில் அவள் கோத்த பூவை நீயே வச்சுக்கோ என்று சொல்லிவிட்டேன்.
உங்க எல்லே வீட்டுக் கொல்லையில் வாழைமரம் இருந்தால் கொஞ்சம் வாழைத் தண்டும் வாழை நாரும் அனுப்புங்கோ! :-) :-) :-) 

Geetha Sambasivam

unread,
Oct 25, 2012, 7:22:11 AM10/25/12
to mint...@googlegroups.com
இப்போதெல்லாம் தொடுப்பது கூட நூலில் தான் அம்மா.  அதற்கெனத் தனியாகப் பச்சை வண்ணக் கலர் நூல்கண்டு வந்துள்ளது.  வாழை நார் கேட்டால் , "நீ என்ன காட்டுமிராண்டியா?" எனக் கேட்காத குறைதான்.  இங்கே ஸ்ரீரங்கத்தில் எங்க வீட்டிற்கு வாடிக்கையாகப் பூப் போடும் பெண்மணியை உதிரிப் பூவும், வாழை நாரும் வாங்கிட்டு வந்து கொடுக்கச் சொன்னால் நூறு கிராமுக்கும் குறைச்சலாக உதிரி மல்லி, (சீசனிலேயே) வாழை நார் பத்து ரூபாய் எனத் தனித்தனியாகக் கணக்குக் காட்டிட்டு வாங்கிக் கொண்டாள்.  பூவும் காம்புகளோடு இருந்தன.  அதுக்கப்புறமா நேரிலேயே பூ மார்க்கெட்டுக்குக் போய் உதிரிப் பூக்கள் வாங்கி வந்துடறோம்.  அங்கே சில சமயம் கால் கிலோ பத்து ரூபாய்க்குக் கூடக் கிடைக்கும். சென்னை, மதுரையில் எல்லாம் உதிரிப்பூக்கள் வாசலில் வாங்கினால் கூட நார் அவங்களாவே கொடுத்துட்டுப் போயிடுவாங்க.  அதுக்குக் காசு கிடையாது. வாழை நார் காசு கொடுத்து வாங்கணும் என்பதையே ஸ்ரீரங்கம் வந்தே அறிந்தேன்.  மேலும் பல கோயில்களிலும் பொதுவாக நூலில் கட்டிய பூமாலைகளை ஏற்க மாட்டார்கள்.  வாழை நாரில் தான் கட்ட வேண்டும்.

2012/10/24 rajam <ra...@earthlink.net>

DEV RAJ

unread,
Oct 25, 2012, 7:30:23 AM10/25/12
to மின்தமிழ்
நன்கு காய்ந்த வாழை மட்டையை நீரில்
ஊற வைத்து உறுதியான மெல்லிய
நாரைப் பிரித்துக் கண்டாக்குவதுகூட
ஓர் அரிய கலை; என் அன்னையார்
இதிலும் தேர்ச்சி பெற்றவர். வெளியூர்
செல்லும்போதும் கண்டை எடுத்துச்
செல்வார்; பிறருக்கும் கொடுப்பார்

தேவ்

On Oct 25, 4:22 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> இப்போதெல்லாம் தொடுப்பது கூட நூலில் தான் அம்மா.  அதற்கெனத் தனியாகப் பச்சை
> வண்ணக் கலர் நூல்கண்டு வந்துள்ளது.  வாழை நார் கேட்டால் , "நீ என்ன
> காட்டுமிராண்டியா?" எனக் கேட்காத குறைதான்.  இங்கே ஸ்ரீரங்கத்தில் எங்க
> வீட்டிற்கு வாடிக்கையாகப் பூப் போடும் பெண்மணியை உதிரிப் பூவும், வாழை நாரும்
> வாங்கிட்டு வந்து கொடுக்கச் சொன்னால் நூறு கிராமுக்கும் குறைச்சலாக உதிரி
> மல்லி, (சீசனிலேயே) வாழை நார் பத்து ரூபாய் எனத் தனித்தனியாகக் கணக்குக்
> காட்டிட்டு வாங்கிக் கொண்டாள்.  பூவும் காம்புகளோடு இருந்தன.  அதுக்கப்புறமா
> நேரிலேயே பூ மார்க்கெட்டுக்குக் போய் உதிரிப் பூக்கள் வாங்கி வந்துடறோம்.
>  அங்கே சில சமயம் கால் கிலோ பத்து ரூபாய்க்குக் கூடக் கிடைக்கும். சென்னை,
> மதுரையில் எல்லாம் உதிரிப்பூக்கள் வாசலில் வாங்கினால் கூட நார் அவங்களாவே
> கொடுத்துட்டுப் போயிடுவாங்க.  அதுக்குக் காசு கிடையாது. வாழை நார் காசு
> கொடுத்து வாங்கணும் என்பதையே ஸ்ரீரங்கம் வந்தே அறிந்தேன்.  மேலும் பல
> கோயில்களிலும் பொதுவாக நூலில் கட்டிய பூமாலைகளை ஏற்க மாட்டார்கள்.  வாழை
> நாரில் தான் கட்ட வேண்டும்.
>
> 2012/10/24 rajam <ra...@earthlink.net>
>
>
>
>
>
>
>
>
>
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

Subashini Tremmel

unread,
Oct 25, 2012, 7:40:14 AM10/25/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel

2012/10/25 Geetha Sambasivam <geetha...@gmail.com>

இப்போதெல்லாம் தொடுப்பது கூட நூலில் தான் அம்மா.  அதற்கெனத் தனியாகப் பச்சை வண்ணக் கலர் நூல்கண்டு வந்துள்ளது.  வாழை நார் கேட்டால் , "நீ என்ன காட்டுமிராண்டியா?" எனக் கேட்காத குறைதான்.
ப்ரக்டிகலாக யோசிக்கும் போது இதெல்லாம் சென்னை போன்ற இடங்களில் தவிர்க்க முடியாத ஒன்றோ என்று தோன்றுகின்றது. அதுவே கிராமப் புராங்களில் வாழை மரங்கள் உள்ள வீடுகளில் உள்ளோர் மத்தியில் இந்தப் பழக்கம் இன்னமும் இருக்கத்தான் வேண்டும். மலேசியாவில் இருந்த சமயத்தில் எனது தாயார் எங்கள் வீட்டு வாழைமரத்தின் நாரிலிருந்து உரித்து அதைக் கொண்டு மாலைக் கட்டுவதைப் பார்த்திருக்கின்றேன். நான் செய்த அனுபவம் இல்லை. 

இதை விட எனக்கு பார்க்க பிடிக்காத ஒரு விஷயம் ப்லாஸ்டிக் பூக்களை பெண்கள் தலையில் அனிந்து செல்வது. மாலை தொடுக்க மல்லிகை பூக்கள் கிடைக்காத ஐரோப்பா போன்ற இடங்களில் என்றாலும் பரவாயில்லை.. ஆனால் தமிழகம் மலேசியா போன்ற ஊர்களில் வருடம் முழுதும் பூக்கள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கும் போது ப்ளாஸ்டிக் மல்லிகைப் பூச்சரத்தை தலையில்  அனிந்து கொள்வது என்பதை என் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது.
 
.. அதுக்குக் காசு கிடையாது. வாழை நார் காசு கொடுத்து வாங்கணும் என்பதையே ஸ்ரீரங்கம் வந்தே அறிந்தேன்.  
 
ஆமாம் ..காலம் மாறுகின்றது இல்லையா? மனிதர்களின் உழைப்புக்கு காசு கொடுப்பது பழகிப் போய்விட்ட நிலையில் இது அதிசயமல்ல என்றே தோன்றுகின்றது கீதா.

சுபா
 
மேலும் பல கோயில்களிலும் பொதுவாக நூலில் கட்டிய பூமாலைகளை ஏற்க மாட்டார்கள்.  வாழை நாரில் தான் கட்ட வேண்டும்.

2012/10/24 rajam <ra...@earthlink.net>

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Nagarajan Vadivel

unread,
Oct 25, 2012, 8:09:47 AM10/25/12
to mint...@googlegroups.com

shylaja

unread,
Oct 25, 2012, 9:37:57 AM10/25/12
to mint...@googlegroups.com
அடேயப்பா  எத்தனை அழகாய்  கலைநயமாய் கட்டுகிறார்கள்!  அந்தக்கலை உணர்வு பிரமிப்பாக  இருக்கிறது. எந்தநாட்டுக்காரங்க அந்தப்பெண்கள்? வண்ணமலர்களின் இதழ்களை  மிக அற்புதமாய்  இணைத்திருப்பது  அருமை

2012/10/25 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

--

Nagarajan Vadivel

unread,
Oct 25, 2012, 9:40:36 AM10/25/12
to mint...@googlegroups.com
ஒரு பையனும்தான் நல்லாப் பூத்தொடுத்தார்

அவரக் கண்டும் காணாம விட்டுட்டீங்களே

நாகராசன்

2012/10/25 shylaja <shyl...@gmail.com>:

Innamburan Innamburan

unread,
Oct 25, 2012, 10:00:13 AM10/25/12
to mint...@googlegroups.com
ஊர் மேலாண்மையில் எத்தனை தடபுடலோ,அத்தனை மென்மை பூத்தொடுப்பதில். 
வாழை நாரில் தான், கனவேகமாகத்தொடுப்பார். அப்போது அவரிடம் நைச்சியமாக
பேசி, வேண்டியதை வாங்கிக்கலாம். என் இன்னம்பூர் தாத்தாவை சொல்கிறேன். பெரிய மாலைகள் தொடுத்து.
குடலையில் எடுத்துகொண்டு அவர் அதை பெருமாளுக்கு சமர்ப்பிவிப்பதைக் காணக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.

அது சரி. இந்த பேராசியரோடு வாயாடிண்டு, இந்த ஷைலஜா தன் பாட்டி கதையை சொல்ல மாட்டேங்கிறா. என்னோட 'தளம்' எங்கே என்று வினவுகிறாள்! எல்லாம் பெங்களுரு சம்பங்கி வேலை
இன்னம்பூரான்

2012/10/25 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
03D.gif

shylaja

unread,
Oct 25, 2012, 10:20:45 AM10/25/12
to mint...@googlegroups.com

2012/10/25 Innamburan Innamburan <innam...@gmail.com>

ஊர் மேலாண்மையில் எத்தனை தடபுடலோ,அத்தனை மென்மை பூத்தொடுப்பதில். 
வாழை நாரில் தான், கனவேகமாகத்தொடுப்பார். அப்போது அவரிடம் நைச்சியமாக
பேசி, வேண்டியதை வாங்கிக்கலாம். என் இன்னம்பூர் தாத்தாவை சொல்கிறேன். பெரிய மாலைகள் தொடுத்து.
குடலையில் எடுத்துகொண்டு அவர் அதை பெருமாளுக்கு சமர்ப்பிவிப்பதைக் காணக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.

அது சரி. இந்த பேராசியரோடு வாயாடிண்டு, இந்த ஷைலஜா தன் பாட்டி கதையை சொல்ல மாட்டேங்கிறா. என்னோட 'தளம்' எங்கே என்று வினவுகிறாள்! எல்லாம் பெங்களுரு சம்பங்கி வேலை
இன்னம்பூரான்
>>>>>>>
 
இ சார் ..... என் பாட்டீகள் இருவரும்  திறமைசாலிகள்  இருவரைப்பற்றியும் ஒரே பதிவில் சொல்லிவிட நினச்சி என்னவோ  தாமதமாகிறது நடுல மறந்துவேறபோயிட்டேனா  அதான் மன்னிங்க  இசார்...  சீக்கிரமா எழுதிடறேன்.  பெங்கலூரு சம்பங்கி லேசா தலையை வலிக்கச்செய்யும்  அலாதி மணம் ஆனாலும்! 
03D.gif

rajam

unread,
Oct 25, 2012, 12:36:28 PM10/25/12
to mint...@googlegroups.com
On Oct 25, 2012, at 6:37 AM, shylaja wrote:

அடேயப்பா  எத்தனை அழகாய்  கலைநயமாய் கட்டுகிறார்கள்!  அந்தக்கலை உணர்வு பிரமிப்பாக  இருக்கிறது. எந்தநாட்டுக்காரங்க அந்தப்பெண்கள்? வண்ணமலர்களின் இதழ்களை  மிக அற்புதமாய்  இணைத்திருப்பது  அருமை
பேராசிரியர் உறுதிப்படுத்துவார். அது இந்தோனேசியப் பெண்கள். பின்னணி இசை கேட்டீர்களா -- கேமலான் (Gamelan): http://en.wikipedia.org/wiki/Gamelan . மிக இனிமையான இசை. அதோடு சேர்ந்த நடனமும் (பேராசிரியர் படம் போடுவார்) மிக அழகு, நளினமானது.
அப்பறம், அந்த வர்ணனையில் "மாலை/மால" என்ற சொல் அடிக்கடி வருகிறது, கேட்டீர்களா? அது மாலையா? மல்லிகையா? தெரியவில்லை. எல்லாத்தெயும் பேராசிரியர் உறுதிப்படுத்திடுவார். 

Nagarajan Vadivel

unread,
Oct 25, 2012, 1:38:30 PM10/25/12
to mint...@googlegroups.com
இந்த விழியக் காட்சிகள் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தது.

நாகராசன்

2012/10/25 rajam <ra...@earthlink.net>:

rajam

unread,
Oct 25, 2012, 1:45:08 PM10/25/12
to mint...@googlegroups.com
தெளிவுக்கு நன்றி, ஐயா.
தாய் என்று நினைத்தேன்.
ஆனாலும் தெளிவில்லாமல்
இருந்தது.
> unsub...@googlegroups.com

shylaja

unread,
Oct 25, 2012, 9:18:19 PM10/25/12
to mint...@googlegroups.com
நானும்  தாய்லாந்துப்பெண்கள் போல உள்ளார்களே என நினைத்தேன்..ஆனாலும்  உறுதியாக    அறிந்திருக்கவில்லை.

2012/10/25 rajam <ra...@earthlink.net>

For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may
like to
visit our Muthusom Blogs at:
http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
send
email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to

For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
Foundation.
Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit
our
Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To
post
to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to

For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to
visit our Muthusom Blogs at:
http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send
email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to

For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil

--
shylaja

"எந்த நாளும் நின்மேல் - தாயே
இசைகள் பாடி வாழ்வேன்"

பாரதி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to

For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to

For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

shylaja

unread,
Oct 25, 2012, 9:19:50 PM10/25/12
to mint...@googlegroups.com

2012/10/25 rajam <ra...@earthlink.net>

On Oct 25, 2012, at 6:37 AM, shylaja wrote:

அடேயப்பா  எத்தனை அழகாய்  கலைநயமாய் கட்டுகிறார்கள்!  அந்தக்கலை உணர்வு பிரமிப்பாக  இருக்கிறது. எந்தநாட்டுக்காரங்க அந்தப்பெண்கள்? வண்ணமலர்களின் இதழ்களை  மிக அற்புதமாய்  இணைத்திருப்பது  அருமை
பேராசிரியர் உறுதிப்படுத்துவார். அது இந்தோனேசியப் பெண்கள். பின்னணி இசை கேட்டீர்களா -- கேமலான் (Gamelan): http://en.wikipedia.org/wiki/Gamelan . மிக இனிமையான இசை. அதோடு சேர்ந்த நடனமும் (பேராசிரியர் படம் போடுவார்) மிக அழகு, நளினமானது.
அப்பறம், அந்த வர்ணனையில் "மாலை/மால" என்ற சொல் அடிக்கடி வருகிறது, கேட்டீர்களா? அது மாலையா? மல்லிகையா?>>>
 
அவ்வளவு  உன்னிப்பாய்  பார்த்த அளவு  கேட்கவில்லைமா...மறுபடி கேட்டுவிட்டு  வரேன்.
Reply all
Reply to author
Forward
0 new messages