கிழக்கிலங்கையில் வழக்கொழிந்து போன சில பொருட்கள்

7 views
Skip to first unread message

Sri Sritharan

unread,
Nov 8, 2009, 5:27:22 AM11/8/09
to Manram, STM, Minthamil, ulagam
பண்டைய பாரம்பரியம்,  நம்பிக்கைகள் பழம்பொருட்கள், பழக்க வழக்கங்கள் என்பன நிறைந்த பூமியே இலங்கையின் கிழக்கு மாகாணம். இவற்றில் பல வழக்கொழிந்துவிட்டன. சில மறைந்து வருகின்றன. வழக்கில் இருந்து மறைந்த சில பாவனைப் பொருட்கள் பற்றி இங்கே விரிவாக பேசுகிறார் கட்டுரையாளர் அருள்மணி:

உலக மயமாதல் என்பது ஒரு புறம் இருக்க, கிராமங்களில் ஏற்பட்டுவரும் சமூக ரீதியான மாற்றங்கள், நம் கண்முன்னே நடைபெறுகின்றன. ஆரையம்பதி கிராமத்திலும் அவ்வாறான சில மாற்றங்கள் ஏற்பட்டு, நடைமுறையிலிருந்த சில பழக்க வழக்கங்களை இல்லாமற் செய்துள்ளன. இவை தொழில் ரீதியாகவும், கலாசார பண்பாட்டு ரீதியாகவும் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றத்துக்கான முக்கிய காரணங்களில் ஒன்று கல்வி வளர்ச்சி என்றும் கூறலாம்.

கல்வியின் அடிப்படையில் சில தொழில்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அதன் நடைமுறைகள் மறைந்துள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

(1) சணல் நூல் வலை:

சணல் நூல் தயாரிப்பதற்கு ஒரு வகைப் புல் பயன்பட்டது. இது நாம் கடைகளில் பார்க்கும் சணலை விட வித்தியாசமானது உறுதியானது.

இந்தச் சணல் கம்புகளைக் கட்டுக்கட்டாக ஏற்றிவருவார்கள். குளத்தில் அவற்றை ஊறப் போடுவார்கள். சில நாட்கள் சென்றபின் அக்குளத்தில் இறங்கி இரு கைப்பிடி அளவு சணல் கம்புகளின் அடிப்பாகத்தை இரு கைகளாலும் இறுகப்பற்றிக் கொண்டு ஓங்கி ஓங்கிக் குளத்து நீரில் அடிப்பார்கள். சணல், கம்புகளிலிருந்து பஞ்சாகப் பிரியும். அதை அப்படியே எடுத்துவந்து வேலியில் பரவிக் காய வைப்பார்கள்.

காய்ந்தபின் அப்படியே வீட்டுக்கு எடுத்துச் சென்று சணல் வேறு, கம்புவேறாகப் பிரிப்பார்கள். இந்தக் கம்புகள் (சுள்ளிகள்) அடுப்புப் பற்றவைக்க உதவும்.

சணல் பஞ்சைக் கத்தை கத்தையாகப் பிரித்து ஒரு கையளவு சணலை, 2 அடி நீள பனைமட்டை சலாகையில் வைத்துக் கட்டி, அதன் ஒரு பகுதியை நூல் நூற்பதற்கு ஏதுவாக நீட்டிவைப்பார்கள். வடிக்கர் என்னும் ஒரு உபகரணத்தைப் பயன்படுத்தி சணல் பஞ்சை நூலாக்கி வடிக்கரில் சுற்றிக் கொள்வார்கள். பஞ்சு கட்டிய பனை மட்டையை கட்கத்தில் இடுக்கி வைத்துக் கொண்டே இவ்வாறு நூல் நூற்பார்கள். இந்த நூலைக் கொண்டு வலை தயாரிப்பார்கள். பின்னர் அதை ஒரு வகைப் பட்டை சாயத்தில் தோய்த்து உறுதியாக்கி மீன்பிடிக்கப் பயன்படுத்துவார்கள்.

வடிக்கரில் பருத்தி நூல் நூற்றல்

கடைகளில் பருத்தி நூலுக்கான மெல்லிய இழைகள் திரணையாகக் கிடைக்கும். இந்தத் திரணையை நூலாக்குவதற்கு நான்கு கம்புகளாலான ஒரு சட்டத்தில் போட்டு அதில் நூலின் ஒரு முனையைப் பிடித்து இழுத்து இழுத்து நான்கு விரல்கள் கொள்ளும் அளவு சுற்றிக் கொள்வார்கள். இதை ஒரு கைவிளா என்பார்கள். இவ்வாறான கைவிளாக்கள் பலவற்றை நீரில் ஊறப்போட்டு மறுநாள் காலையில் எடுத்து, முறுக்கி நூலாக்குவார்கள்.

இதற்கும் ஒரு வடிக்கர் பயன்படுத்தப்படும்.ஆனால் அது சணல் பஞ்சு நூலுக்கான வடிக்கர் போலல்லாது, சிறிய ஈயத்தாலான ஒரு வட்டத்தில் நடுவில் துளைபோட்டு ஒரு குச்சியின் முனையை அதில் பொருத்தி மறுமுனையில் கைவிளா நூலைக்கட்டி அந்த வடிக்கரை கிறுக்கி விடுவதன் மூலம் நூலுக்கு முறுக்கேற்றுவார்கள்.

அந்த வடிக்கரைச் சூழலவைக்கும் முறையும் வினோதமானது. ஒருவர் கொடுக்குக் கட்டிக்கொண்டு, வெற்று தொடையில் வடிக்கர் காம்பை வைத்து உள்ளங்கையால் உருட்டி விட்டால் வடிக்கர் வேகமாகச் சுற்றும் ஒவ்வொரு தடவையும் நூல் முறுக்கேறியதும் அதை வடிக்கரில் சுற்றுவார்கள். ஒரு கைவிளா நூல் முடியும் வரை இவ்வாறு நூல் சுற்றப்படும் இந்த நூல் சிறிய வலை பின்னுவதற்குப் பயன்படும்.

தும்புக் கயிறு திரித்தல் :

உரிமட்டைக் கோர்வைகளை அப்படியே குளத்தில் போட்டு ஊற வைப்பார்கள். ஒரு வாரம் சென்றதும், இளகிய உரிமட்டைகளை ஓலைப் பெட்டியில் நிறைத்து வீட்டுக்கு கொண்டுவருவார்கள். வீட்டு வளவில் ஒரு மூலையில் இதற்கென்று ஒரு இடம் ஒதுக்கப்படும்.

பெண்கள் இந்த உரிமட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து, பலமான ஒரு கட்டையில் வைத்து 1 1/2 அடி நீளமான ஒரு பொல்லால் ஓங்கி ஓங்கி அடிப்பார்கள். இவ்வாறு பலமுறை அடித்ததும் உரிமட்டை தும்பாகிவிடும். அதை எடுத்து உரிமட்டையின் புறத்தோலை உரித்துவிட்டு தும்பை மட்டும் திரணை திரணையாக வெயிலில் காயவைப்பார்கள்.

நன்றாகக் காய்ந்ததும் அந்தத் தும்பை கொஞ்சமாக எடுத்து ஒரு பானை அல்லது சட்டியை கவிழ்த்துப் போட்டு அதில் இரு கைகளாலும் உருட்டுவார்கள். அவ்வாறு உருட்டப்பட்ட தும்புக் கொட்டை சின்னவிரல் பருமணில் 1 1/2 அடி நீளத்தில் அமையும்.

கயிறு திரிக்கும் பெண்கள் இந்தத் தும்புக் கொட்டைகளை உள்ளங்கையில் வைத்துத் திரிப்பார்கள், தும்புக் கொட்டை முடிய முடிய ஒவ்வொன்றாகச் சேர்த்துத் திரிப்பார்கள். அது கயிறாக மாறி நீளும். இரவு நெடுநேரம் இந்த வேலையில் ஈடுபடும் ஏழைக் குடும்பங்கள் பல ஆரையம்பதியில் இருந்தன.

பனையோலைப் பாய் கடகம்:

பனையோலையை மட்டையிலிருந்து தனியாகப் பிரித்துக் காயவைத்து அதை ஒவ்வொரு ஓலையாகப் பிரித்து ஒரே +மிவில் வரிந்து கொள்வார்கள். இதைப் பாதத்தின் கீழே வைத்து, கிடுகுபின்னுவது போல் பின்னி 6 அடி நீளம் 3 அடி அகலம் உள்ள பாய் ஆக்குவார்கள். இந்தப் பாய் நெல் காய வைக்கவும், வேறு உணவுப் பொருட்கள் காயவைப்பதற்குப் பயன்படும். பாவனை முடிந்ததும் ஓலைப்பாயைச் சுருட்டி ஒரு ஏணையில் வைத்துவிடுவார்கள். யாழ்ப்பாணத்தில் பனாட்டுக் காயவைப்பதற்கும் இதே ஓலைப் பாய் பயன்படுகிறது.

ஆனால் படுப்பதற்கு இப்பாய் பயன்படுத்தப்படுவதில்லை.

இதேபோன்று பனை ஓலையைப் பயன்படுத்தி கடகம் (ஓலைப்பெட்டி) தயாரிப்பார்கள். அதன் வட்டமான விளிம்புக்குக் கனமான பனைமட்டை வாரைப் பயன்படுத்தி இறுக்கிப் பலமாக்குவார்கள்.

இவ்வாறே பனை ஓலையைப் பயன்படுத்தி வெற்றிலைத் தட்டான், தலைவாரப் பெட்டி (தலையில் அணிவது) மற்றும் பல பாவனைப் பொருட்களை இழைத்துப் பயன்படுத்துவார்கள். பனையோலையால் கைப்பை செய்து பயன்படுத்துவதும் உண்டு. மார்க்கெட்டுக்கு சென்று பொருட்கள் வாங்குவதற்கு இந்தப் பனைஓலைப் பைகள் பயன்பட்டன.

சாப்பை :

சாப்பை என்ற ஒரு வகைப்புல்லைக் கொண்டு அடர்த்தியாகப் பின்னிய ஆள் உயரத்துக்கு அமைக்கப்பட்ட பாய் இதுவாகும். ஆனால் இதில் உயரவாக்கில் ஒரு பக்கம் முற்றாகத் திறந்திருக்கும். மழைக்காலத்தில் ஒருவர் இதைத் தலையில் கவிழ்த்துக் கொண்டால் மழை நீர் சிறிதும் உடலில் விழாது. மீனவர்களே இத்தகைய சாப்பையைப் பெரிதும் பயன்படுத்துவார்கள். அந்தக் காலத்தில் மழை பெய்யும் போதுஇவ்வாறு சாப்பையைத் தலையில் கவிழ்த்துக் கொண்ட மனிதர்கள் தெருவில் நடமாடுவது சர்வசாதாரணமான காட்சி ஆகும்.

தலைவாரப்பெட்டி :

ஏற்கனவே நாம் குறிப்பிட்ட இத்தலைவாரப் பெட்டி பனை ஓலையால் இழைக்கப்பட்டது நாற்கோணம், நடுவில் ஒரு கூம்பு. தலையில் கவிழ்த்துக் கொண்டால் மழையிலிருந்து தலை நனையாமல் பாதுகாக்கலாம்.

இதுவும் பெரும்பாலும் மீனவர்களாலேயே பயன்படுத்தப்பட்டது. மீன்பிடிக்க ஆற்றுக்குச் செல்லும் போதும், ஆற்றிலிருந்து திரும்பும் போதும் மழை பெய்யும் போது இவ்வாறு தலைவாரப் பெட்டியைத் தலையில் கவிழ்த்துக் கொண்டு சில வேளைகளில் கோவணத்துடன் அவர்கள் நடமாடுவார்கள்.

மிரிவடி (மிதியடி) :

இக்காலத்தில் பாட்டா சிலிப்பர் அணிந்து நடமாடுவதுபோல் ஒரு காலத்தில் மக்கள் இந்த மிதியடியை அணிந்து நடமாடினார்கள். மிதியடி என்பது ஒரு பாதத்தின் அளவுக்கு மரத்தால் செய்து பாதத்தைச் செருகுவதற்கு வசதியாக ஒரு தோல் துண்டு பொருத்தப்பட்ட பாத அணியாகும். இதில் செருப்புப் போல கால் பெருவிரலைத் தனியாகவும் ஏனைய கால் விரல்களைத் தனியாகவும் செருகக் கூடிய வகையில் சில மிதியடிகள் இருக்கும். இவ்வாறன மிதியடியை வளர்ந்தோரும் அனைத்து விரல்களையும் ஒன்றாகச் செருகக் கூடிய மிதியடியை இளைஞர்களும் பயன்படுத்தினார்கள்.

இத்தகைய மிதியடிகளை பெரும்பாலும் இசுலாமிய சகோதரர்களே பயன்படுத்தினார்கள். காலப் போக்கில் தமிழர்களும் இவற்றைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். மழைக் காலங்களில் மிதியடி இல்லாமல் யாரும் வெளிச் செல்வதில்லை. சேற்றுப்புழுக் கடியைத் தவிர்ப்பதற்கும், தேங்கியுள்ள நீரில் நடப்பதற்கும் இந்த மிதியடிகள் பெரிதும் உதவின.

வெற்றிலைக்குட்டான் :

நாம் ஏற்கனவே குறிப்பிட்ட வெற்றி லைக்குட்டான் அடிப்புறத்தில் ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்திருக்கும். அதை மூடுவதற்கு ஒரு மூடியும் இருக்கும். இக்குட்டானின் மூன்று பகுதிகளிலும் வெற்றிலை, பாக்கு, புகையிலை என்பனவற்றை வெவ்வேறாக வைத்துக் கொள்ளலாம். பணத்தையும் இக்குட்டானில் சிலர் வைத்துக்கொள்வர்.

இந்தக் குட்டான் கவிதைகளிலும் இடம் பிடித்துள்ளது. கவிஞர் மூனாக்கானாவின் ஒருபாடல் வருமாறு :

வெற்றிலைக் குட்டானைத் தூக்குபுள்ள -

கொஞ்சம்

மெல்லிய சீவலாய்ச் சீவு புள்ள

பத்துப் பதினாறு பெற்றவள் போலவே

பார்க்காத என்னை நீ கண்டுமணி’

இந்தக் குட்டான் பல்வேறு அளவுகளில் இருந்தன. எந்த அளவில் இருந்தாலும், அதைப் பயன்படுத்துபவர் இடுப்பிலேயே அதைச் செருகிக் கொள்வார்.

யாழ்ப்பாணத்தில் பனம் வெல்லப் பாகை, சிறிய பனை ஓலைக் குவளையில் இட்டு வைப்பார்கள். இதைப் பனங்குட்டான் என அழைப்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது. எவ்வாறாயினும் ஆரையம்பதியில் வெற்றிலைக் குட்டானே அந்தக்கால மணிபர்ஸாகவும் பயன்பட்டது எனலாம்.

திருநீற்றுக் குடுகு:

திருநீற்றுக் குடுகு என்பது நன்றாகச் சீவிய ஒரு தேங்காயின் மேற்புறம் கால் பாதியை வெட் டிக் கழித்து மீதியுள்ள முக்கால் பாகத்தில் திருநீறு சேர்த்து வைக்கும் ஒரு குடுவையாகும். இக்குடுவை முன்விறாந்தை வளையில் ஒரு தொங்கலில் கொழுவப்பட்டிருக்கும். உள்ளே திரு நீறு நிறைந்திருக்கும். மூன்று விரல்களை விபூதியில் தோய்த்து சிவசிவா என்று கூறியபடி மூன்று விரல் பட்டையாகவோ அல்லது நெற்றி நிறையவோ விபூதியைப் பூசிக் கொள்வார்கள். இந்த விபூதி சைவ முறைப்படி சாம்பலில் தயாரிக்கப்பட்டதல்ல. திருநீற்றுப் பழம் என்று விற்கப்படும் உருண்டையில் இருந்து பெறப்படுவதே அது.

திருநீற்றுப் பழம் :

சைவசமயத்தில் திருநீறு தயாரிப்பதற்கு சில விதிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்தக் காலத்தில் ஆரையம்பதியில் பெண்கள் பாலமுனை ஓடையில் நிறைந்திருந்த வெண்ணிற மான, களியை வடிகட்டி, அதைச் சிறுசிறு உருண்டையாக்கி காயவைத்து அவற்றைத் திருநீற்றுப் பழம் என்ற பெயரில் விற்பனை செய்வார்கள். இதையே அந்தக்காலத்தில் ஆரையம்பதி மக்கள் விபூதியாகப் பயன்படுத்தினார்கள். மனங் கொண்டது மாளிகை. எனவே இறைவனும் இவ்விபூதியை ஏற்றுக்கொண்டான் என்றே எண்ணத் தோன்றுகிறது.

பரஸ்பர மரியாதை :

அந்த நாளில் ஆரையம்பதியின் மக்கள் ஒரு பக்கத் தோளில் ஒரு சால்வையை மடித்துப் போட்டுக் கொண்டு வெளிச் செல்வார்கள். தெருவில் தெரிந்தவர் யாராவது வந்தால் அவரைத் தாண்டும் போது அந்தச் சால்வையைச் சற்று உயர்த்தி விட்டு போடுவார்கள் அவருக்கு சால்வை எடுத்து மரியாதை செய்வதற்கான அடையாளம் இது)

பிற்காலத்தில் பலர் சேட் அணியத் தொடங்கிவிட்டார்கள். தெருவில் தெரிந்தவர் யாராவது அவரைத் தாண்டும் போது அந்தச் சேர்ட் கொலரைச் சிறிது தூக்கிவிட்டுக் கொள்வார்கள். சால்வையை உயர்த்துவதற்கான அடையாளம் -ஜி.

இப்போது பார்க்கும் போது இது ஒரு அபத்தமான செயலாகத் தோன்றும். ஆனால் உள்ளார்ந்து பார்த்தால் அதில் அடங்கியுள்ள நல்லெண்ணத்தின் வெளிப்பாட்டை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

பாதையில் குறுக்கறுப்பவர் வேண்டாதவராக இருந்தால் இந்த சால்வை மரியாதை அவருக்குக் கிடைக்காது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர் வீட்டுக்குச் சென்றதும், வீட்டிலுள்ளவர்களிடம், அவன் செய்த அவமரியாதையை இட்டு காரசாரமாக விமர்சிப்பதும் உண்டு.

இப்போது அந்த வழக்கமே இல்லை.

கிழக்கிலங்கையின் ஆரையம்பதி ஊர் பற்றிய விக்கிப்பீடியா கட்டுரை:


அன்புடன்
சிறீதரன்
http://ta.wikipedia.org
http://ta.wikinews.org

f8.jpg
f81.jpg

விஜயராகவன்

unread,
Nov 8, 2009, 12:34:30 PM11/8/09
to மின்தமிழ்
சிறீதரன்

நல்ல கட்டுரை, மட்டக்களப்பு மகாணத்தில் பல அரசியல்/பொருளாதார சக்திகளால்
மங்கி வரும் தமிழ் மரபை காட்டும் நல்ல கட்டுரை. இப்படி மட்டக்களப்பில்
உள்ள பல நகரம்/கிராமங்களைப் பற்றி எழுதுங்கள்.

இவ்வளவு சிரமத்துடன் எழுதிய கட்டுரைக்கும் தமிழ்விக்கியில் ‘இக்கட்டுரை
விக்கிபீடியாவின் நடைக்கேற்ப
எழுதப்படவேண்டியுள்ளது............................” என்று ஒரு அறிஞர்
எழுதியுள்ளார். அது தமிழ் விக்கியில் கிரந்த எழுத்துக்கள எடுக்க வேண்டும்
என்பதன் குறிசொல் (code word)

மரபு விக்கியிலும் அதை எழுதுங்கள்.


விஜயராகவன்


On 8 Nov, 10:27, "Sri Sritharan" <kstha...@bigpond.com> wrote:
> பண்டைய பாரம்பரியம்,  நம்பிக்கைகள் பழம்பொருட்கள், பழக்க வழக்கங்கள் என்பன நிறைந்த பூமியே இலங்கையின் கிழக்கு மாகாணம். இவற்றில் பல வழக்கொழிந்துவிட்டன. சில மறைந்து வருகின்றன. வழக்கில் இருந்து மறைந்த சில பாவனைப் பொருட்கள் பற்றி இங்கே விரிவாக பேசுகிறார் கட்டுரையாளர் அருள்மணி:
>
> உலக மயமாதல் என்பது ஒரு புறம் இருக்க, கிராமங்களில் ஏற்பட்டுவரும் சமூக ரீதியான மாற்றங்கள், நம் கண்முன்னே நடைபெறுகின்றன. ஆரையம்பதி கிராமத்திலும் அவ்வாறான சில மாற்றங்கள் ஏற்பட்டு, நடைமுறையிலிருந்த சில பழக்க வழக்கங்களை இல்லாமற் செய்துள்ளன. இவை தொழில் ரீதியாகவும், கலாசார பண்பாட்டு ரீதியாகவும் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றத்துக்கான முக்கிய காரணங்களில் ஒன்று கல்வி வளர்ச்சி என்றும் கூறலாம்.
>
> கல்வியின் அடிப்படையில் சில தொழில்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அதன் நடைமுறைகள் மறைந்துள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
>
> (1) சணல் நூல் வலை:
>
> சணல் நூல் தயாரிப்பதற்கு ஒரு வகைப் புல் பயன்பட்டது. இது நாம் கடைகளில் பார்க்கும் சணலை விட வித்தியாசமானது உறுதியானது.
>

> இந்தச் சணல் கம்புகளைக் கட்டுக்கட்டாக ஏற்றிவருவார்கள். குளத்தில் அவற்றை ஊறப் போடுவார்கள். சில நாட்கள் சென்றபின் அக்குளத்தில் இறங்கி இரு கைப்பிடி அளவு சணல் கம்புகளின் அடிப்பாகத்தை இரு கைகளாலும் இறுகப்பற்றிக் கொண்டு ஓங்கி ஓங்கிக் குளத்து நீரில் அடிப்பார்கள். சணல், கம்புகளிலிருந்து பஞ்சாகப் பிரியும். அதை அப்படியே எடுத்துவந்து வேலியில் பரவிக் காய வைப்பார்கள்.
>
> காய்ந்தபின் அப்படியே வீட்டுக்கு எடுத்துச் சென்று சணல் வேறு, கம்புவேறாகப் பிரிப்பார்கள். இந்தக் கம்புகள் (சுள்ளிகள்) அடுப்புப் பற்றவைக்க உதவும்.
>
> சணல் பஞ்சைக் கத்தை கத்தையாகப் பிரித்து ஒரு கையளவு சணலை, 2 அடி நீள பனைமட்டை சலாகையில் வைத்துக் கட்டி, அதன் ஒரு பகுதியை நூல் நூற்பதற்கு ஏதுவாக நீட்டிவைப்பார்கள். வடிக்கர் என்னும் ஒரு உபகரணத்தைப் பயன்படுத்தி சணல் பஞ்சை நூலாக்கி வடிக்கரில் சுற்றிக் கொள்வார்கள். பஞ்சு கட்டிய பனை மட்டையை கட்கத்தில் இடுக்கி வைத்துக் கொண்டே இவ்வாறு நூல் நூற்பார்கள். இந்த நூலைக் கொண்டு வலை தயாரிப்பார்கள். பின்னர் அதை ஒரு வகைப் பட்டை சாயத்தில் தோய்த்து உறுதியாக்கி மீன்பிடிக்கப் பயன்படுத்துவார்கள்.
>
> வடிக்கரில் பருத்தி நூல் நூற்றல்

> கடைகளில் பருத்தி நூலுக்கான மெல்லிய இழைகள் திரணையாகக் கிடைக்கும். இந்தத் திரணையை நூலாக்குவதற்கு நான்கு கம்புகளாலான ஒரு சட்டத்தில் போட்டு அதில் நூலின் ஒரு முனையைப் பிடித்து இழுத்து இழுத்து நான்கு விரல்கள் கொள்ளும் அளவு சுற்றிக் கொள்வார்கள். இதை ஒரு கைவிளா என்பார்கள். இவ்வாறான கைவிளாக்கள் பலவற்றை நீரில் ஊறப்போட்டு மறுநாள் காலையில் எடுத்து, முறுக்கி நூலாக்குவார்கள்.

> http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%...


>
> அன்புடன்
> சிறீதரன்http://ta.wikipedia.orghttp://ta.wikinews.org
>

>  f8.jpg
> 31KViewDownload
>
>  f81.jpg
> 22KViewDownload

Reply all
Reply to author
Forward
0 new messages