குடியரசு தின வாழ்த்துகள் ! ..குடியரசு என்றால் என்ன ?

58 views
Skip to first unread message

துரை.ந.உ

unread,
Jan 26, 2012, 12:35:52 AM1/26/12
to Groups

13.jpg03.jpg16.jpg

குடியரசுதின நல்வாழ்த்துகள் 

குடியரசு என்றால் என்ன ?

குடியரசு நாளே முழுமையாய் நாம்நம்
விடுதலையைப் பெற்றடைந்த நாள்
(#என்குறள்)

ஒருவிளக்கம் : 
( #என்போன்ற தெரியாதவர்களுக்கு மட்டும் )

1947 ஆக., 15ல் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு விடுதலை என்ற பெயரில் டொமினியன் அந்தஸ்து தான் வழங்கியது
 (இது விடுதலைக்கான ஆரம்ப அறிவிப்பு வெளியான நாள் )
(#டொமினியன் =ஆங்க்கிலேய மேலாதிக்கத்துக்கு உட்பட்ட சுய ஆட்சி. இதன்படி நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை ஆகியவற்றை அவர்கள் தான் நிர்வகிப்பர். அதன்படி, பிரிட்டிஷார் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருப்பார்). 

விடுதலைக்குப் பின், நம்மை நாமே ஆளும் வகையிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு செயல்படும் வாய்ப்புகளைக் கட்டுப்படுத்தவும் ,83 நாடுகளின் அரசியல் சட்டங்களை அராய்ந்து , தேர்ந்து , திருத்தம் செய்து இந்திய அரசியலமைப்பு புதியதாக உருவாக்கப்பட்டது . அந்த அரசியலமைப்பு, 1949 நவ., 26ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950, ஜன., 26ல் நடைமுறைக்கு வந்தது. பிரிட்டிசாரின் கவர்னர் ஜெனரல் பதவி நீக்கப்பட்டு, புதிதாக மக்கள் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி பதவி(மறைமுகமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும்)  உருவாக்கப்பட்டது.
இந்தியக் குடியரசு உருவானது 
(இதுதான் உண்மையான / முழுமையான விடுதலை நாள் )


வாழ்க உறவுகள் 

--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.com
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral



13.jpg
03.jpg
16.jpg

N. Kannan

unread,
Jan 26, 2012, 6:07:52 AM1/26/12
to mint...@googlegroups.com
நீண்ட நாட்களுக்குப் பிறகு குடியரசுவிழா ஊர்வலம் பார்த்தேன்
(டிவியில்தான்!) ‘ஜனகணமன’ ஒலிக்கும் போது கூட வாய் திறவா ஒரு பிரதமரை
இப்போதுதான் பார்த்தேன். ஏனிப்படியொரு முகம்! ஐயா! தேசம் மகிழ்ச்சியாக
உள்ளது என்பதை பிரதமர் முகம் காட்ட வேண்டாமோ!!

நா.கண்ணன்

பிகு: தூ.த காட்டிய கிழடுகளெல்லாம் தூங்கி வழிந்து கொண்டு இருந்தன.
கொஞ்சம் மகிழ்ச்சியைக் காட்டிய கிழடு சோனியாதான் :-)

விஜயராகவன்

unread,
Jan 26, 2012, 6:20:43 AM1/26/12
to மின்தமிழ்
On Jan 26, 12:07 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
>
> கொஞ்சம் மகிழ்ச்சியைக் காட்டிய கிழடு சோனியாதான் :-)

ஏன் மகிழ்ச்சி இருக்காது ? ஒரு வேலையும், ஒரு தகுதியும், ஒரு ஜனநாயக
பொறுப்பும் இல்லாமல், மற்றவர்கள் உங்கள் உத்தரவுக்காக காத்திருந்தால்,
உங்களுக்கு மகிழ்ச்சி வரதா? எல்லோருக்கும் கிளுகிளுக்கும்.

வகொவி

Geetha Sambasivam

unread,
Jan 26, 2012, 7:36:37 AM1/26/12
to mint...@googlegroups.com
வேறொரு குழுமத்தில் இப்போத் தான் இவங்களைத் திட்டிட்டு வந்தேன். :)))))

2012/1/26 விஜயராகவன் <vij...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

360.gif

கி.காளைராசன்

unread,
Jan 28, 2012, 11:08:28 AM1/28/12
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா,

2012/1/26 N. Kannan <navan...@gmail.com>

‘ஜனகணமன’ ஒலிக்கும் போது கூட வாய் திறவா ஒரு பிரதமரை
இப்போதுதான் பார்த்தேன்.
வாய் அசைத்துவிட்டால் போதும்,
வாயை இப்படித்தான் அசைத்திருக்க வேண்டும்,  ஆனால் அவர் இப்படி யில்லாம் அப்படி அசைத்து விட்டார் என்று எழுதுவார்கள்.
பிரதமரைச் ஒரு சிறிய பேனாவும் கிண்டலடிக்கும்.

அடுத்த கூட்டத்தொடரில் இதுதான் பேசப்படும்,
அப்படியே கூட்டத் தொடர் முழுவதும் முடிந்துவிடும்,

அன்பன்
கி.காளைராசன்

Reply all
Reply to author
Forward
0 new messages