சிவகாசி வட்டார வாய்மொழிப் பாடல்கள்

7,715 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Jul 24, 2018, 3:25:08 AM7/24/18
to mintamil
 பங்குனி மாதமும், சித்திரை மாதமும்; முறையே  மாரியம்மனுக்கும், காளிஅம்மனுக்கும் நிகழ்த்தும் கோயில் திருவிழாக்களின் போது பெண்கள்  விடியுமுன்னே  பாடிக்கொண்டு  கரகநீர் எடுத்துச் சென்று அம்மனுக்கு ஊற்றி(பலிபீடத்திலும், கொடிமரத்திலும் ஊற்றுவர்.) வழிபடுவர்.அப்போது பாடப்படும் பாடல்கள் ' கும்பிடானப் பாட்டு ' என்று அழைக்கப் பெறும்.   
மாசி மாதம் தெருக்கட்டுப் பொங்கலின் போது; இதே பாடல்களை பாடிக் கும்மி அடிப்பர். ஊரிலுள்ள ஒவ்வொரு தெருவிலும் அவரவர் கூடி நாளை முடிவு செய்து ;வரி வசூலித்து , காப்பு கட்டி,விரதம் இருந்து, வீட்டில் முளைப்பாரி (முளைப்பாலிகை )வளர்த்து, முச்சந்தி/நாற்சந்திக் கோயில்களில் பொதுப் பொங்கல் வைத்தும் , அவரவர் வீட்டின் முன் தனிப்பொங்கல் வைத்தும் கொண்டாடும் போது இப்பாடல்களைப் பாடுவர். (இப்பொங்கலை ஜாதி அடிப்படையில் தனித் தனியாக கொண்டாடும் போக்கும் நான் வாழும் பகுதியில் உள்ளது. அதில் போட்டி நிகழ்வதையும் கண்கூடாகப் பார்க்கிறேன்.)இறுதியில் விடிய விடிய நடக்கும் தெருக்கூத்துடன் பொங்கல்விழா முடிவுக்கு வரும்.
இன்றைய வேகம் நிறைந்த சமுதாய மாற்றத்தில் பாடுவோரும் கும்மி அடிப்போரும் குறைந்து வருகின்றனர் என்பதை மறுக்க முடியாது.  
அப்பாடல்களை மின்தமிழில் பதிவு செய்ய விழைகிறேன்.

கயிலை மலையிலே சஞ்சரித்து 
கரடி புலிகளை வேட்டையாடி -களைச்சு 
வர்ற பேச்சியம்மாவுக்கு  கனகக்  
குஞ்சம் போட்டு வீசுங்கம்மா .

வெள்ளி மலையிலே சஞ்சரித்து 
வேங்கை புலிகளை வேட்டையாடி -வேர்த்து 
வர்ற பேச்சியம்மாவுக்கு  வெள்ளிக்
குஞ்சம் போட்டு வீசுங்கம்மா.

வேப்ப மரத்த தூருங்கம்மா நல்ல 
வெத்தலக் கட்டையும் பரப்புங்கம்மா 
வேர்த்து வர்ற நம்ம பேச்சியம்மாவுக்கு 
வெள்ளிக் குஞ்சம் போட்டு வீசுங்கம்மா 

பொன்னு  மலையில ஸ்நானம் செஞ்சி
பொங்கப் பானைல பொங்க வச்சி 
பொறுத்து வர்ற பத்திரகாளிக்கி 
பொன்னு குஞ்சம் போட்டு வீசுங்கம்மா .

தங்க மலையில ஸ்நானம் செஞ்சி 
தாமிரப் பானைல பொங்க வச்சி 
தவிச்சி   வர்ற பத்திரகாளிக்கு 
தங்க  குஞ்சம் போட்டு வீசுங்கம்மா  

தங்க முக்காலி மேலிருப்பா 
தைலம் தேச்சித்  தலைமுழுகி 
                                                        (குழு ) அம்மா தைலம் தேச்சி தல முழுகி 
தண்ணி படாத பத்திர காளிக்கி 
தங்க குஞ்சம் போட்டு வீசுங்கம்மா 

பொன்னு  முக்காலி மேலிருப்பா 
புனுகு தேச்சி தல முழுகி 
                                                         (குழு)அம்மா புனுகு தேச்சி தல முழுகி
புனுகு படாத பத்திர காளிக்கி 
பொன்னு  குஞ்சம் போட்டு வீசுங்கம்மா  
(இன்னும் வரும் )
கண்மணி 

Dr.Chandra Bose

unread,
Jul 24, 2018, 4:43:26 AM7/24/18
to mint...@googlegroups.com
அருமை. தொடருங்கள்.

சந்திர போஸ்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Innamburan S.Soundararajan

unread,
Jul 24, 2018, 7:44:21 AM7/24/18
to mintamil
இன்னும் வரட்டும். மின் தமிழில் இத்தகைய இலக்கிய நோக்கில் அமையும் பதிவுகளை காண்பது அரிது ஆகிவிட்டது.
பாடலின் அருமை போற்றத்தக்கது.
நன்றி, வணக்கம்.

kanmani tamil

unread,
Jul 25, 2018, 12:39:37 AM7/25/18
to mintamil
ஊக்குவித்த இ ஐயா அவர்களுக்கும், திரு .சந்திரபோஸ்  அவர்களுக்கும் நன்றி 
கண்மணி 

--

kanmani tamil

unread,
Jul 25, 2018, 1:11:06 AM7/25/18
to mintamil
மிட்டாய்ப்பெட்டி முறுக்குப்பெட்டி 
கசக்குதும்பா பேச்சி -அம்மா கசக்குதும்பா பேச்சி 
கை  நிறைய வேப்பங்குழை இனிக்குதும்பா பேச்சி 

கட்டிப்பாலும் கறந்தபாலும்
கசக்குதும்பா பேச்சி -தாயே கசக்குதும்பா பேச்சி 
கை  நிறைய வேப்பங்குழை இனிக்குதும்பா பேச்சி

செடிக்குச் செடி பூவெடுத்து 
பூமாலை கெட்டி-  அம்மா பூமாலை கெட்டி
பூமாலை கனக்குதுன்னு மயங்குறாளாம் நம்ம பேச்சி  

செடிக்குச் செடி பூவெடுத்து 
செண்டு மாலை கெட்டி- அம்மா செண்டுமாலை கெட்டி 
செண்டுமாலை கனக்குதுன்னு மயங்குறாளாம் நம்ம பேச்சி 

சக்தியுள்ள பேச்சியம்மன் 
சப்பரத்தில் மேலே- தாயே சரம் சரமா மாலை 
மாலை கனக்குதுன்னு மயங்குறாளாம் நம்ம பேச்சி 

ஆத்து மணலிலே சோறாக்கி 
ஆவாரம் பூவிலே கறி சமைச்சி 
மின்னட்டாம் பூச்சியில் விளக்கேத்தி 
வேடிக்கை பாக்குறா நம்ம பேச்சி 

முக்குக்கு முக்குக்கு காந்த லைட்டு 
முன்னூறு முக்குக்கு காந்தலைட்டு 
காந்தலைட்டு காணாம 
கவலைப்படுறா நம்ம பேச்சி

பேச்சியம்மன் கோவிலிலே மாதம் ஒரு வெள்ளி 
அது மாதாந்த வெள்ளி 
வந்திருந்த ஜனங்களுக்கு 
வரங்கொடுப்பா  பேச்சி 

அம்மன் கோவில் முன்பாக 
நந்தவனம் கூண்டு- அது ஆதியிலே உண்டு 
அதிலிருந்து உத்தரவு தருவா நம்ம பேச்சி 
இன்னும் வரும் 
கண்மணி      

Message has been deleted

kanmani tamil

unread,
Jul 25, 2018, 11:25:34 PM7/25/18
to mintamil
No, Isaiyiniyan. 
It was collected by me and my students. 
Sk 

On Wed, 25 Jul 2018 11:32 am இசையினியன், <pitchaim...@gmail.com> wrote:
அருமை கண்மணி. சிறந்த தாெகுப்பு. இக்காலத் தேவை என்பதும் உண்மைதான். தாெடருங்கள்.

இங்கு பதியப்படுவது அச்சில் உள்ளதா?
அல்லது மக்கள் பாட பதியப் பெற்றதா? என்ற சந்தேகம் வந்துவிட்டது எனக்கு.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Message has been deleted

kanmani tamil

unread,
Aug 2, 2018, 6:11:44 AM8/2/18
to mintamil
சென்ற பதிவின் இறுதி அடியில் ஒரு எழுத்துப்பிழை 
"அதுக்கு மேல கோபம் வந்தா பானக்கரம் கேப்பா " என்று திருத்திக் கொள்ள வேண்டும்.
***********************************************************************************************************************
ஆத்துக்குள்ள அடை காக்கும் அஞ்சுதல நாகம் 
அம்மா அஞ்சு தல நாகம்  
ஆளக்கண்டா படமெடுக்கும் அம்மனோட சக்தி .

ஆட்டுத்தலை மாட்டுத்தலை அடங்காத சூரன் 
அம்மா அடங்காத சூரன் 
சூலாயுத குத்தப்பட்டு சுழண்டு போறான் சூரன்

அக்கா தங்கை படுத்துறங்கும் தங்கரத்தின மேடை 
அது தங்கஇரத்தினமேடை
எழுந்திருச்சா சலசலக்கும் வேப்பமரச்சோலை

காளியம்மா படுத்துறங்கும் ரத்தினகிரி மேடை 
அம்மா ரத்தினகிரி மேடை -கல்பதிக்க ஓலை 
எந்திரிச்சா சலசலக்கும் நாகரத்தின மேடை

சக்தி உள்ள பேச்சியம்மன் சப்பரத்தின் மேலே
அம்மா சப்பரத்தின்  மேலே-சரம் சரமா மாலை
இருபுறமும் தீபம் 
எந்திரிச்சா சலசலக்கும் நாகரத்தின மேடை    

தங்கக் குமிழ் கதவாம் சந்தனப்பூமேடை 
அம்மா சந்தனப்பூமேடை 
தனித்து இருக்க வருவாள் என்று 
தனிவைரக்கதவு

தங்கத்தினால் கொடிமரமாம் எங்கும் பிரகாசம் 
அம்மா எங்கும் பிரகாசம்- சாந்து பன்னீர் வாசம்
சுடர் ஒளியால் கொழுந்துவிட்டு எரியும்பார் தீபம் 

காளியம்மன் கோயிலிலே கருவளையல்  தூணு   
அம்மா கருவளையல்  தூணு
கதளி  வாழைப்பழத்திற்கெல்லாம் கண்ட கிளி லாபம்.

உத்தமியாம் காளியம்மா உயர்ந்த ரதம் ஏறி 
அம்மா உயர்ந்த ரதம் ஏறி- அங்கே 
ஊஞ்சலிலே  வைத்து வாழ்த்தி வண்ண லச்சம் கோடி 
அம்மா வண்ண லட்சம் கோடி  

வாராரம்மா வாராரு -நம்ம வைரவரு வாராரு 
கவலைகளைத் தீத்து வைத்து காத்தருள வாராரு 
வாராரம்மா வாராரு -நம்ம கருப்பசாமி வாராரு 
வேட்டை நாயைக் கைப்பிடிச்சி வீதி சுத்தி வாராரு 
(தொடரும் )
கண்மணி 

2018-08-01 15:19 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
தேங்கா ஒடைக்கவே தண்ணி சிதறவே 
தெப்பக்குளம் ரெண்டும் தெத்தளிக்க 
மதுரை மீனாச்சி மன்னவன் தங்கச்சி 
தேரோடி வாறாளாம் தெப்பம் பாக்க 

அம்மனும் அம்மனும் பொன்னால -அந்த 
ஆவுடை அம்மனும் பொன்னால 
வடக்க இருக்கும் பேச்சியம்மாவுக்கு 
வலது கொண்டையும் பொன்னால 

மூணாத்துக்கு உள்ளிருக்கும் முத்துமாரித் தாயே 
அம்மா முத்து மாரித்தாயே 
எங்க இன்னல்களைத் தீத்து வைத்து 
காத்தருள வாயேன்.

முத்தாலம்மா கோயிலிலே முத்துவிளையாடல் 
அம்மா முத்து விளையாடல் 
முத்தெடுத்து விலை மதிப்பாள் 
முத்தாலம்மன் தாயே 

பிள்ளையில்லாதவர் சொல்லுங்கம்மா -நல்ல 
புத்துமண்ணைக் கையில்  ஏந்துங்கம்மா 
பிள்ளையும் தருவா பிணிகளும் தீப்பா 
புண்ணிய தேவதை பேச்சியம்மா .

நந்தவனத்திலே நாலுகிளி -நாலொரு மாதமா வந்த கிளி 
கொண்டை பெருத்தி பேச்சியம்மாவிற்கு 
கோதி முடியுமா ரெண்டுகிளி

கொடிமரமாம் திருமதிலாம் கோபுரம் போல் வளந்து 
அம்மா கோபுரம் போல் வளந்து 
குழந்தை முதல் கயறுகுத்து
கூட இருந்து காப்பா 

காளிக்கு கோபம் வந்தா பொங்கப்பான கேப்பா 
அதுக்குமேல கோபம்வந்தா ஆட்டுத்தல கேப்பா 
மாரிக்கி கோபம் வந்தா மஞ்சப்பாலு கேப்பா 
அதுக்குமேல கோபம் வந்தா பணக்கார கேப்பா
(இன்னும் வரும் ) 
கண்மணி 
    
2018-07-31 9:41 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
எலுமிச்சங்கா மாலை போட்டு இருபுறமும் வருவா -தாயி 
இருபுறமும் வருவா 
சூலாயுதம் கைப்பிடிச்சி வீதி சுத்தி வருவா 

தங்கக்  கொடபிடிச்சி தனிவழியே வருவா -அம்மா 
தனிவழியே வருவா 
தஞ்சமென்று வந்தவர்க்கு தகுந்தவரம் தருவா

பொன்னுக் கொட பிடிச்சி பொழுதிருக்க வருவா -அம்மா 
பொழுதிருக்க வருவா
போயிப் பணிஞ்சவர்க்கு புஷ்பவரம் கொடுப்பா 

சப்பர மூஞ்சி ரதம் ஏறி சாயங்காலம் வருவா -அம்மா 
சாயங்காலம் வருவா 
சனங்களெல்லாம் பாப்பா -அம்மா 
சனங்களெல்லாம்  பாத்தவுடன்  தங்க ஊஞ்சல் கேப்பா

கோபுர மூஞ்சி ரதம் ஏறி குளுந்தநேரம் வருவா -அம்மா 
குளுந்த நேரம் வருவா 
கோடிசனம் பாப்பா -அம்மா 
கோடிசனம் பாத்தவுடன் குளுந்த நெழல் கேப்பா

அக்கினிச்சட்டி நெருநெருங்க- ஆவேசமா விளையாடி        
தாயே ஆவேசமா விளையாடி 
கோட்டையைச்சுத்தி எறக்கி வச்சா 
கேட்ட வரம் கொடுப்பா -தாயி கேட்ட வரம் கொடுப்பா 

(இன்னும் வரும் ) 
கண்மணி 

2018-07-30 23:33 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
ஆல இலைபோல அடிவயிறராம் 
ஆனந்த நெற்றியும் புருவக்கட்டாம்.
சோலைக்கிளி போல பேச்சியம்மாவிற்கு 
சொந்தத் தெருவும் முருகன் காலனி 

முருகன் காலனி வாழ் பேச்சியம்மன் -சாந்தி வழங்க வருகிறாள் 
சஞ்சலங்கள் தீர்ப்பதற்கு - சாம்பவியும் வருகிறாள் 
சோட்டானிக்கரை பகவதியும் -சோகம் தீர்க்க வருகிறாள் 
சொர்க்க போக வாழ்வை வழங்க -பேச்சி ஓடி வருகிறாள் 

நம்ம ஊரு பேச்சி -அவள் நாடு புகழும் ஜோதி 
வாருங்கம்மா தோழியரே -தினமும் அவளைப் பணிவோம் 

வேப்பங்கொளை கைபிடித்து வீதி சுத்தி வருவா 
அம்மா விளையாடி வருவா 
சிவகாசி முருகன் காலனிக்கு -சீக்கிரமா வருவாள் .
(இன்னும் வரும் )
கண்மணி 

2018-07-30 1:20 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
பேச்சியம்மன் கோவிலிலே 
மஞ்சப் பிள்ளைகள் நூறு -மாவிளக்கு நூறு 
கூட வந்து கும்மியடிக்கும் 
தண்டிதப் பிள்ளைகள் நூறு.

செம்பு நிறைய தண்ணிகொண்டு கோயிலுக்கு போவோம் 
தாயே கோயிலுக்கு போவோம் 
கோயிலிலே  இறக்கி வைத்து 
கூடிக்கும்மி அடிப்போம்

குடம் நிறைய தண்ணி கொண்டு கோவிலுக்கு வருவோம் 
அம்மா கோவிலுக்கு வருவோம்.
கோவிலிலே இறக்கி வைத்து 
குலவை கும்மிகள் அடிப்போம்.

 சருவத்திலே தண்ணி கொண்டு சன்னதிக்கு போவோம் 
அம்மா சன்னதிக்கு போவோம் 
சன்னதியில் இறக்கி வைத்து 
சதுரக் கும்மி அடிப்போம் .
(இன்னும் வரும்)
கண்மணி 

2018-07-29 10:36 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
மேற்கே விழுந்த சடை முத்துமாரியம்மா 
அவ மேல்கடலு  நீராடும் 
கண்ணே நூறு காளி 

வடக்கே விழுந்த சடை முத்துமாரியம்மா 
அவ வடகடலு நீராடும் 
கண்ணே நூறு காளி 

உச்சியில் விழுந்த சடை முத்துமாரியம்மா 
அவ உலகமெங்கும்  நீராடும் 
கண்ணே நூறு காளி.

 கிழக்கே விழுந்த சடை முத்துமாரியம்மா 
அவ கீக்கடல் நீராடும் 
கண்ணே நூறு காளி.

தெக்கே விழுந்த சடை முத்துமாரியம்மா 
அவ தென்கடல் நீராடும் 
கண்ணே நூறு காளி.

பக்கச்  ச டையிலும் முத்துமாரியம்மா 
அவ பாம்பு வந்து கூத்தாடும் 
கண்ணே நூறு காளி 

ஓரச் சடையிலும் முத்துமாரியம்மா 
அவ குயிலிருந்து கூத்தாடும் 
கண்ணே நூறு காளி .

முழங்காலு அக்கினிய -அம்மா முத்து மாரி 
அவ முகத்தோட தான் அணைப்பா 
கண்ணே நூறு காளி.

கணுக்காலு அக்கினிய -அம்மா முத்துமாரி 
அவ கழுத்தோட தான் அணைப்பா 
கண்ணே நூறு காளி . 

ஆறு வண்டி நூறு சட்டம் முத்து மாரியம்மா 
அசையா மணித்தேரு  அவ 
கண்ணே நூறு காளி .

தேர் அசைய மணி குலுங்க முத்து மாரியம்மா 
தேசத்தார்  கையெடுக்க 
கண்ணே நூறு காளி .

பார்ப்பார் வடம் பிடிக்க முத்து மாரியம்மா 
பத்தினியாள் தேரேறி 
கண்ணே நூறு காளி .

ஊர்க்காரர் வடம் பிடிக்க முத்துமாரியம்மா 
உத்தமியாள் தேரேறி 
கண்ணே நூறு காளி .

பச்சைப் பட்டுடுத்தி முத்துமாரியம்மா
பாவையாள் தேரேறி
கண்ணே நூறு காளி .

மேகவண்ணப் பட்டுடுத்தி முத்துமாரியம்மா 
நிச்சயமாய் தேரேறி 
கண்ணே நூறு காளி .
(இன்னும் வரும் )
கண்மணி   

2018-07-28 19:06 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:

ரயிலு போறதப் பாருங்கம்மா -ரயிலு 
சுத்திப் போறதப் பாருங்கம்மா 
ரயிலுத் தடம் போல பேச்சியம்மாவுக்கு 
ரவிக்கை மின்னலப் பாருங்கம்மா .

பஸ்ஸு போறதப் பாருங்கம்மா -பஸ்ஸு 
பாஞ்சு போறதப் பாருங்கம்மா 
பஸ்ஸுத் தடம்போல பேச்சியம்மாவுக்கு 
பல்லு வரிசையப் பாருங்கம்மா.

மோட்டார் போறதப் பாருங்கம்மா -மோட்டார் 
மோதிப் போறதப் பாருங்கம்மா 
மோட்டார் தடம் போலப் பேச்சியம்மாவுக்கு 
முத்து வரிசையப் பாருங்கம்மா .

காரு போறதப் பாருங்கம்மா -காரு 
கவுந்து போறதப் பாருங்கம்மா 
காருத்தடம் போல பேச்சியம்மாவுக்கு 
கழுத்து அட்டிய பாருங்கம்மா 

சைக்கிள் போறதப் பாருங்கம்மா -சைக்கிள் 
சாஞ்சு போறதப் பாருங்கம்மா 
சைக்கிள் தடம் போல பேச்சியம்மாவுக்கு 
சலங்க மணிக பாருங்கம்மா 

குதிரை போறதப் பாருங்கம்மா- குதிரை
குதிச்சிப் போறதப் பாருங்கம்மா
குதிரைத்தடம் போல பேச்சியம்மாவுக்கு 
குஞ்சத்தழகைப் பாருங்கம்மா 

யான வர்றதப் பாருங்கம்மா -யான 
அசஞ்சி வர்றதப் பாருங்கம்மா 
யானத் தடம் போல பேச்சியம்மாவுக்கு 
அழகுச்  சங்கிலி  பாருங்கம்மா 

பாம்பு போறத பாருங்கம்மா 
பாம்பு பதுங்கிப் போறதப் பாருங்கம்மா 
பாம்புத் தடம்போல பேச்சியம்மாவுக்கு 
பதக்க மின்னலப் பாருங்கம்மா .

நெருஞ்சி பூத்ததப் பாருங்கம்மா -நெருஞ்சி              
நெருக்கிப் பூத்ததப் பாருங்கம்மா 
நெருஞ்சிப் பூப்போல பேச்சியம்மாவுக்கு 
நெத்திச் சூடியப் பாருங்கம்மா .

கத்திரி பூத்ததைப் பாருங்கம்மா -கத்திரி 
கலந்து பூத்ததப் பாருங்கம்மா 
கத்திரிப் பூப்போல பேச்சியம்மாவுக்கு 
கழுத்தில் மணிமால பாருங்கம்மா .

கோவ படந்ததைப் பாருங்கம்மா -கோவ 
கோத்துப் படந்ததைப் பாருங்கம்மா 
கோவைப்பழம் போல பேச்சியம்மாவுக்கு 
கொண்டையழகப் பாருங்கம்மா 

பாவ படந்ததைப் பாருங்கம்மா- பாவ  
பத்திப் படந்ததைப் பாருங்கம்மா 
பாவப்பழம் போல பேச்சியம்மாவுக்கு 
பாத அழகப் பாருங்கம்மா 

சேரப்படைந்ததப்  பாருங்கம்மா -சேர 
சுத்திப் படந்ததைப் பாருங்கம்மா 
சேரப் பழம் போல பேச்சியம்மாவுக்கு 
சொக்கட்டா மேடையைப் பாருங்கம்மா .
(இன்னும் வரும் ) 
கண்மணி 

2018-07-28 11:18 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:

///எழுதும் பாேது, வாய் மாெழிப்பாட்டை வாய்மாெழி வடிவில் இல்லாமல், இலக்கிய எழுத்து வடிவமாக மாற்றப்படுகிறது.

எங்கே? எப்போது ? யார் மாற்றினார்கள்?

ஒவ்வாெரு இடத்துக்கும் ஒவ்வாெரு சாெல்லாடல் உண்டு அல்லவா? இலக்கிய நடைக்கு மாற்றும் பாேது அந்த நடை அழிக்கப்படுகிறது அல்லவா?

உதாரணமாக
ஒற்றையடிப் பாதை என்பதை
ஒத்தையடிப்பாதை என்பதுதான் வாய்மாெழிப்பாட்டாக இருக்கும்.

ஆனால் இதை இலக்கிய நடையாக மாற்றுவது என்பது, ஏற்புடையதா என்ற கேள்வி மிகு நீண்ட நாளாக இருக்கிறது.

ஏற்புடையது இல்லை.ஏனெனில் அந்தப் பேச்சுமொழி உயிரோட்டமுடையது. அந்த உயிர்ப்பைக் கெடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை.

தாங்களே கூறுங்களேன். வாய்ப்பாட்டை, தமிழ் இலக்கண வரம்புகளுக்குரிய சாெற்களாக மாற்றுவது என்பது...

வாய்மாெழிப் பாட்டின் தன்மையை மாற்றுமா? இல்லையா?

மக்கள் பாடிய சாெல்லை அப்படியே எழுதுவது நல்லதா? அல்லது தமிழ் இலக்கண வரம்பை அவர்களின் வார்த்தைகளுக்கு காெடுப்பது நன்றா?

யாராவது அப்படி மாற்றினால் அவர்களுக்கு நாட்டார் இலக்கியத்தின்(வாய் மொழி இலக்கியத்திற்குத்  தமிழுலகில் எங்கள் முன்னோர் கொடுத்திருக்கும் பெயர்.)  அருமை தெரியவில்லை என்று பொருள். இந்த நாட்டார் இலக்கியம் பல சமூக வரலாறுகளைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் பொக்கிஷம் .
அது மட்டுமல்ல; இந்த பாமரத் தமிழை உச்சரிக்கும் போது ஒலி எழுமிடத்திலும் , ஒலி உருவாக்கும் உறுப்பிலும் ஏற்படும் சுகமான அனுபவத்தை வேறு       எந்தச் செவ்வியல் இலக்கியத்திலும்  கூடப் பெற முடியாது. ஒவ்வொரு பாடலும் ஒரு உருண்டை வெண்ணெயை விழுங்குவது போல இதமாக இருக்கும்.
கண்மணி  

2018-07-26 9:34 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
I'll explain on 10th August. 
Wait. 
Sk

On Thu, 26 Jul 2018 9:25 am PitchaiMuthu, <pitchaim...@gmail.com> wrote:

சரி கண்மணி அவர்களே.

எழுதும் பாேது, வாய் மாெழிப்பாட்டை வாய்மாெழி வடிவில் இல்லாமல், இலக்கிய எழுத்து வடிவமாக மாற்றப்படுகிறது.

On Jul 26, 2018 8:55 AM, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
No, Isaiyiniyan. 
It was collected by me and my students. 
Sk 

On Wed, 25 Jul 2018 11:32 am இசையினியன், <pitchaim...@gmail.com> wrote:
அருமை கண்மணி. சிறந்த தாெகுப்பு. இக்காலத் தேவை என்பதும் உண்மைதான். தாெடருங்கள்.

இங்கு பதியப்படுவது அச்சில் உள்ளதா?
அல்லது மக்கள் பாட பதியப் பெற்றதா? என்ற சந்தேகம் வந்துவிட்டது எனக்கு.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/q-VGGCEZ7JU/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Suba

unread,
Aug 2, 2018, 6:15:14 AM8/2/18
to மின்தமிழ்
அருமை

இதன் முதல் அறிமுகப் பகுதியை நான் வாசிக்கவில்லை.
எந்த நூல்? எந்த ஊர் வழக்கில் உள்ள பாடல் இது என்ற தகவல் சொல்ல முடியுமா?
பாடலின் பின்னனி அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
சுபா
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி

kanmani tamil

unread,
Aug 2, 2018, 6:20:02 AM8/2/18
to mintamil
இது சிவகாசியில் முருகன் காலனியில் சேகரித்த பாடல் தொகுப்பு .மாசிமாதம் தெருக்கட்டுப் பொங்கலிலும், பங்குனி மாதம் மாரியம்மன் கோயிலுக்கு கரகநீரெடுத்துச் செல்லும் போதும், சித்திரை மாதம் காளியம்மன் கோயிலுக்குச்  செல்லும் போதும் பாடப்படும்.கும்புடானப்பாடல் என்று சொல்வர். 
கண்மணி 

Suba

unread,
Aug 2, 2018, 6:26:56 AM8/2/18
to மின்தமிழ்
2018-08-02 12:19 GMT+02:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
இது சிவகாசியில் முருகன் காலனியில் சேகரித்த பாடல் தொகுப்பு .மாசிமாதம் தெருக்கட்டுப் பொங்கலிலும், பங்குனி மாதம் மாரியம்மன் கோயிலுக்கு கரகநீரெடுத்துச் செல்லும் போதும், சித்திரை மாதம் காளியம்மன் கோயிலுக்குச்  செல்லும் போதும் பாடப்படும்.கும்புடானப்பாடல் என்று சொல்வர். 
கண்மணி 

நன்றி🌻

kanmani tamil

unread,
Aug 3, 2018, 5:25:28 AM8/3/18
to mintamil
பேச்சியம்மன் கோயிலிலே கருவளையல்  வைப்போம் 
கருங்காடாவும் வெட்டி நம்ம பேச்சி பெயர் வைப்போம்.
கருப்பசாமி கோயிலிலே கருவளையல் வைப்போம் 
கருங்கடாவும் வெட்டி நம்ம பேச்சிபெயர் வைப்போம் .

நெய் ஊத்தி மாவிளக்கு நெட்டு நெட்டாய் வைப்போம் 
அம்மா நெட்டு நெட்டாய் வைப்போம் 
நெனச்ச வரம் கேப்போம் -தாயே நெனச்ச வரம் கேப்போம் .

ஆலமரத்த வெட்டுங்கம்மா 
ஆளுக்கொரு கட்டா கட்டுங்கம்மா 
அசஞ்சு வரும் நம்ம பேச்சியை
 கூப்பிட்டுக் கூலி கேளுங்கம்மா 

அல்லும்பகலுமாக சிந்தையாக பணிந்து 
சிறுபாலரெல்லாம் துணிந்து - இன்பமுள்ள
கும்பிடானம் போட வருவோம் அம்மா

(இத்துடன் சிவகாசி முருகன்காலனியில் சேகரித்த பாடல்கள் முற்றும்.)
இனி வருவன  முளைப்பாரிப் பாடல்கள்
கண்மணி    

PitchaiMuthu

unread,
Aug 3, 2018, 12:22:32 PM8/3/18
to kanmani, Mintamil

"ஆலமரத்த வெட்டுங்கம்மா "

நிச்சயமாய் வெட்டுங்க என இருந்திருக்காது கண்மணி அவர்களே.

ஆலமரத்தை வெட்டும் பழக்கம் தமிழருக்கு இல்லை. அதுவும் காேவில் திரு விழாவில் இப்படி பாடி இருக்க முடியாது என்பது எனது சிந்தை.

வேறு ஏதும் மரப்பெயர் இருந்திருக்கலாம்.

kanmani tamil

unread,
Aug 4, 2018, 12:31:24 AM8/4/18
to mintamil
நாட்டுப்புறப் பாடல்கள் வாய்வழியாக காலாகாலமாக வழங்கி வருவதால் அதில் சொற்கள் பல திரிந்து வழங்குவது உண்மை தான்.
ஆனாலும் இந்த குறிப்பிட்ட அடியில் எனக்கு ஐயம் எழவில்லை.
ஏனென்றால் தமிழ்ச் சொலவடைகள் ஆலங்குச்சியின் மகிமையை இன்றுவரை காப்பாற்றி வந்துள்ளன.
"ஆலும்வேலும் பல்லுக்குறுதி "
"ஆலப்போல் வேலப்போல் ஆலம்விழுது போல் மாமன் நெஞ்சில் நானிருப்பேனே "(இந்தக்காலத்துச் சினிமாப்பாட்டு இதுக்கு மேல மனசுல பதியல.......அது யாரு?ஹும்! மீனா வாயசைத்து  ரஜினியோடு பாடும் டூயட்) கட்டுக்கட்டா எவ்வளவு ஆலங்குச்சியை ஒடித்துக் கொடுக்கிறாள் ! அவள் மாமாவுக்குப் பல்வலியாம் . திரைக்கதையின் கற்பனை தான் ; என்றாலும் தமிழர் ஆலங்குச்சியை மருந்துப் பொருளாகப் பாவித்தவர்.
'ஆலமரத்தை வெட்டுங்கம்மா'னு பாடினவுடன் கோடாலி ,கடப்பாரை, மம்பட்டியுடன் போய் வெட்டுவதாக எண்ணக்கூடாது................இது இலக்கியம் .இதில் கற்பனை இருக்கத்தான் செய்யும். தேவைக்கேற்ப ஒரு தடுப்பணையைப் போட்டுக் கொண்டு தான் பொருள் கொள்ள வேண்டும்.
"பொன்னோ  பொருளோ போர்க்களம் எதற்கு ? பூப்பறிக்கக் கோடரி எதற்கு?"  இது இலக்கியம் ; இப்படித்தான் இருக்கும்.
கண்மணி       

kanmani tamil

unread,
Aug 4, 2018, 1:41:36 AM8/4/18
to mintamil
                                                                                                                          முளைப்பாரிப்பாடல் 

ஒன்னாம் நாளு பாக்கும்போது- ஒசந்திருப்பார் அம்மன் முளை 
ரெண்டாம் நாளு பாக்கும்போது- ரெண்டெலையும் கொண்டிருப்பா 
மூனா நாளு பாக்கும்போது -முத்துப்போல எறங்கிருப்பா 
நாலா நாளு பாக்கும் போது -நாகரத்தினம் போலிருப்பா 
அஞ்சா நாளு பாக்கும்போது -பஞ்சவர்ணக்கிளி இருப்பா 
ஆறா நாளு பாக்கும்போது -அலங்காரமாய்க் கொண்டாடுவாள் 
ஏழாம் நாளு பாக்கும்போது- எடுத்துவைப்பாள் அம்மன்முளை 
எட்டாம்நாளு பாக்கும்போது- கொட்டு முழங்குதல்லோ 
குலவைச்சத்தம் கேட்டுதல்லோ
குழு  
தானானே தானானே தானத்தந்தம் தானானனே 
தானானே தானானே தானைத்தந்தம் தானானனே 
  
வாராளம்மா வாராளே -முத்தாலம்மா வாராளே
சந்தனம் இது சந்தனம் -எங்க முத்தாலம்மா சந்தனம் 
சந்தனத்தை அணிபவர்க்கு சங்கடங்கள் தீருமே 
விபூதி இது விபூதி -எங்க முத்தாலம்மா விபூதி 
விபூதியை அணிபவர்க்கு வினைகள் யாவும் தீருமே 
குங்குமம் இது குங்குமம் -எங்க  முத்தாலம்மா குங்குமம்
குங்குமத்தை அணிபவர்க்கு குறைகள் யாவும் தீருமே  
ஜவ்வாது இது ஜவ்வாது -எங்க  முத்தாலம்மா ஜவ்வாது
ஜவ்வாது அணிபவர்க்கு சங்கடங்கள் தீருமே 
பூமாலை இது பூமாலை-எங்க  முத்தாலம்மா பூமாலை 
பூமாலை அணிபவருக்கு புது வாழ்வு அவள் தருவாள் 
பாமாலை இது பாமாலை -எங்க  முத்தாலம்மா பாமாலை 
பாடியவர் அனைவருக்கும் பக்கத்துணை அவள் இருப்பாள் 
குழு 
தானானே தானானே தானதந்தம் தானானனே 
தானானே தானானே தானதந்தம் தானானனே   
 கண்மணி 
  
PitchaiMuthu

unread,
Aug 4, 2018, 5:59:06 AM8/4/18
to kanmani, Mintamil

சரி, ஆனா உண்மை ஒன்று இருக்கிறது. அதை மட்டுமே குறிப்பிட்டேன்.

ஆனா பாெருட் பிழையுடன் இப்பாடல் இருக்கட்டும் என்க.

kanmani tamil

unread,
Aug 5, 2018, 4:26:18 AM8/5/18
to mintamil
                                                                                                                               கருப்பசாமி பாடல்
கருப்பன் வாரான்  கருப்பன் வாரான் கருப்பசாமி 
கார்மேகம் போல வாரான் கருப்பசாமி  (கருப்பன் )

முன்கொண்டைக்காரன் அவன் கருப்பசாமி 
வில்லுப்பாட்டு பாடி வாரான் கருப்பசாமி 
விதவிதமாய் ஆடி வாரான் கருப்பசாமி (கருப்பன் )

சந்தனப்பொட்டுக்காரன் கருப்பசாமி 
சபரிமலைக்காவல்காரன் கருப்பசாமி 
கச்சையைக்கட்டி வாரான் கருப்பசாமி 
கை  அரிவாள் காட்டி வாரான் கருப்பசாமி (கருப்பன் )

மீசையை முறுக்கி வாரான் கருப்பசாமி 
மின்னல் போல ஓடிவாரான் கருப்பசாமி 
பந்தம் பிடித்து வாரான் கருப்பசாமி 
பாரி வேட்டை ஆடி வாரான் கருப்பசாமி (கருப்பன் )

கும்பிடாத பேர்களில்லை கருப்பசாமி -உன்னைக் 
குவலயம் தன்னில் தானே கருப்பசாமி 
மண்ணுலகைக் காக்க வாரான் கருப்பசாமி 
மன்றாடிக் கும்பிடுவோம் கருப்பசாமி (கருப்பன் )

பம்பைப்பாலன் காவல்காரன் கருப்பசாமி  
பதினெட்டாம் படிக்காவல் கருப்பசாமி 
பிறந்ததெங்கே வளந்ததெங்கே கருப்பசாமி 
பேரு ஊருசொல்ல வாரான் கருப்பசாமி (கருப்பன் )

ஒத்தக்காலு  மண்டி போட்டு கருப்பசாமி 
ஒய்யாரமா ஆடிவாரான்  கருப்பசாமி
அந்தா  வாரான் இந்தா  வாரான் கருப்பசாமி 
அய்யப்பனின் காவல்காரன் கருப்பசாமி (கருப்பன் )

வெண்பட்டு உடுத்தி வாரான் கருப்பசாமி 
வெள்ளைக்குதிரை ஏறி வாரான் கருப்பசாமி 
சங்கிலி கருப்பனாம் கருப்பசாமி
சகல கலா வல்லவனாம் கருப்பசாமி (கருப்பன்)

ஜவ்வாது பொட்டுக்காரன் கருப்பசாமி 
அவன் சாஸ்தாவின் காவல்காரன் கருப்பசாமி 
கோடாங்கி கருப்பனாம் கருப்பசாமி 
குலக்காவல் நீ தானே கருப்பசாமி (கருப்பன் ) 
கண்மணி  

kanmani tamil

unread,
Aug 11, 2018, 2:59:18 AM8/11/18
to mintamil
                                                                                                                   முத்துமாரியம்மன் பாடல்

மாரியம்மன் கோயிலிலே மாதம் ஒரு வெள்ளி -அது மாதாந்த வெள்ளி 
வந்த வந்த சனத்துக்கெல்லாம் வரம் கொடுப்பா மாரி 

அக்காளும் தங்கையும் ஆண்ட சிவகாசி -தாயே ஆண்ட சிவகாசி 
அடுத்த ஊரு விருதுநகரை ஆளுறாளாம் மாரி 

பெரிய பெரிய மூங்கிலிலே பெரிய சப்பரம் கட்டி -அம்மா பெரிய சப்பரம் கட்டி 
அதில வர்ற சந்தனமாரிக்கி அதட்டிப் போடுங்க கொலவ

சின்னச்சின்ன மூங்கிலிலே சின்ன சப்பரம் கட்டி -அம்மா சின்ன சப்பரம் கட்டி 
அதில வர்ற சந்தன மாரிக்கி சேந்து போடுங்க கொலவ

வெள்ளி மலையில கல்லுருட்டி வெண்கலப் பானைல பொங்கலிட்டு 
வேர்த்து வர்ற மாரியம்மாவுக்கு வெள்ளிக்குஞ்சம் போட்டு வீசுங்கம்மா 

தங்க மலையில கல்லுருட்டி தாமிரப் பானைல பொங்கலிட்டு
தவிச்சு வர்ற மாரியம்மாவுக்கு தங்க குஞ்சம் போட்டு வீசுங்கம்மா   

   வெள்ளி முக்காலியில் உக்காந்து வென்னி கேப்பாளாம் மாரியம்மா 
வென்னி பொறுக்காத மாரியம்மாவுக்கு வெள்ளிக்குஞ்சம் போட்டு வீசுங்கம்மா 

தங்க முக்காலியில் உக்காந்து தைலம் தேப்பாளாம் மாரியம்மா 
தைலம் பொறுக்காத மாரியம்மாளுக்கு தங்க குஞ்சம் போட்டு வீசுங்கம்மா 

நெய்யூத்தி மாப்பெனெஞ்சி நெட்டுநெட்டா வைப்போம் ;நெனச்ச வரம் கேப்போம் 
அஞ்சி ரூவா எளனி வாங்கி கண் தொறந்து வப்போம் .

தண்ணி ஊத்தி மாப்பெனஞ்சி தட்டு தட்டா வப்போம் -தகுந்த வரம் கேப்போம் 
அஞ்சி ரூவா எளனி வாங்கி கண் தொறந்து வப்போம் 

எலுமிச்சங்கா மால போட்டு இருபுறமும் வருவோம் -தாயே ஒரு வரமும் கேப்போம் 
வந்த வந்த சனத்துக்கெல்லாம் வரங்குடுப்பா மாரி 

கொடியாம் கொடித்தடையாம் எங்கமுத்து மாரி -தாயேதங்கமுத்து மாரி 
கொடியவிட்டு கீழிறங்க கோடிலட்சம் கேப்போம் 

படியாம் படித்துரையாம் எங்க முத்து மாரி -தாயே தங்கமுத்து மாரி 
படியவிட்டு கீழிறங்க பத்து லச்சம் தருவோம்.   

2018-08-09 15:45 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
 
                                                                                                                முளைப்பாரிப்  பாடல்-2
முந்தி விநாயகரே முருகா சரஸ்வதியே 
கந்தனுக்கு முன்பிறந்த கணபதியே  முன்நடவா 
தொந்திக்கணபதியே தோகை மயில் வாகனனே 
ஐயா கணபதியே ஆறுமுக வேலவரே 
மஞ்சள் ஒரசி வச்சு மங்கையர்க சுத்திவந்து 
மகுமையில பாருங்களே 
செங்க ஒரசி வச்சு சிறுபிள்ளை சுத்தி வந்து 
சிறுபிள்ளைக சுத்தி வர ;சுத்துரத பாருங்களேன் 
இடி இடியா மழை பெய்ய; இருகரையும் பெருகிவர -அந்த 
பெருகிவந்த தண்ணியிலே; பெண்களெல்லாம் நீராட 
நீராடி நீர் தொளிச்சி ; நீலவர்ண பட்டுடுத்தி 
கோலாடி கோலடிச்சி கோலவர்ண பட்டுடுத்தி -அங்கு 
வாழைமரம் கொண்டுவந்து ;வாசலிலே வந்திறங்கி 
அந்த அகத்திமரம் கொண்டு வந்து அழகாக பந்தலிட்டு 
அந்த பச்ச ரயிட்ட கொண்டுவந்து பக்குவமா கட்டுங்களேன் 
அந்த சிவப்பு ரயிட்ட கொண்டுவந்து சீக்கிரமா கட்டுங்களேன் 
அந்த கோலவர்ண ரயிட்டுகள கொண்டுவந்து கோளாறா கட்டுங்களேன்   

என்னகச்ச இடுப்பிலிட்டு வண்ணப்பொட்டி தலையிலிட்டு 
அங்க பெரியவீடு இன்னு சொல்லி பிச்சை கேட்டு வந்தோம் அம்மா 

அந்தப்பூமியிலே வெளஞ்ச பண்டம்; புதுப்  பண்டம் போடுங்கம்மா
அந்த நாட்டிலே வெளஞ்ச பண்டம் ;நல்ல பண்டம் போடுங்கம்மா 
நம்ம காணியிலே வெளஞ்ச பண்டம் ; கலந்த பண்டம் போடுங்கம்மா 

அவர துவர மொச்ச அஞ்சுவகை ஆமணக்கு 
எள்ளு சிறுபயறு ஏத்த மணிப்பயறு 
கடல சிறுபயறு காரமணிப் பயறு 

வாங்கிவந்த பயறுகள வாளியில ஊறப்போட்டு 
கொண்டுவந்த பயறுகள  கொடத்துல ஊறப்போட்டு 
ஆசாரி அழச்சு வந்து அழகா ஓடொடச்சி 
கொசவனோட சில்லையில கொடத்தோட ஓடொடச்சி     
 ஆட்டாம் சிறுவர்களே ; ஆடு மேய்க்கும் பாலர்களே 
ஆட்டாந்தொளி தொறங்க ;ஆட்டெருவெ வாரிவர 
மாட்டாஞ்சிறுவர்களே ;மாடு மேய்க்கும் பாலர்களே 
மாட்டாந்  தொளிதொறங்க ;மாட்டெருவெ வாரிவர 
அந்த வாரிவந்த எருவுகள வயசுப்பிள்ள தானிடிச்சி    
அந்த கொண்டுவந்த எருவுகள கொழந்தப்புள்ள தானிடிச்சி 
சம்சாரி படப்பேறி சம்பா வைக்கெ தானெடுத்து 
முதலாளி படப்பேறி முத்து வைக்கெ தானெடுத்து 
கம்பந்தட்ட ரெண்டெடுத்து கணுக்கணுவா மொளி நெருக்கி 
சோளத்தட்ட ரெண்டெடுத்து சோகையோட மொளி நெருக்கி 
சீராக எருவெடுத்து சிறப்பாக வைக்கலமிக்கி 
வட்ட ஓடெடுத்து திட்டமுள்ள முளை பரப்பி 
முளைபோட்ட மூனாம்நாளு முளைச்சதும்மா பயறுவகை 
முத்து முளை தெரிக்க மோதிரக்கை சீராட
பவள முளை தெரிக்க  பாதசரம் சீராட
மலடி வந்து மொளை  தெளிப்பா ; மாணிக்கத்த பெத்தெடுப்பா 
இருசி வந்து மொளை தெளிப்பா ;இளஞ்சியத்தைப் பெத்தெடுப்பா 

ஒன்னான நாப்பொழுது ;ஊசி நெறம் ஆயிருவா 
ரெண்டான நாப்பொழுது ரெட்ட நெறம் ஆயிருவா 
மூனான நாப்பொழுது முத்து நெறம் ஆயிருவா 
நாலான நாப்பொழுது நல்ல நெறம் ஆயிருவா 
அஞ்சான நாப்பொழுது மஞ்ச நெறம் ஆயிருவா 
ஆறான நாப்பொழுது அழகா சொரிஞ்சிருப்பா 
ஏழான நாப்பொழுது எல்லோர்க்கும் தங்கிருப்பா 
எட்டான நாப்பொழுது எல்லையில தங்கிருப்பா 
ஒம்போதா நாப்பொழுது ஊரைவிட்டுக் கெளம்பிருவா 
கொட்டு சத்தம் கேப்பாளோ ;கொலவ சத்தம் கேப்பாளோ              
பத்தான நாப்பொழுது சாலகிணறு தேடிருவா 

சிந்தாம செதறாம வளத்த நம்ம தாய 
சித்தாத்து தண்ணிக்கு போறயாமா தாயே 
ஒன்ன வாடாம வசங்காம வளத்தனம்மா  தாயே 
கோணாம கொணங்காம வளத்தேனம்மா தாயே 
நீ கூடார சோலைக்கு போறயம்மா தாயே
(தொடரும் )
கண்மணி     

2018-08-06 19:09 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
                                                                                                                          கருப்பசாமி பாடல் -2

கருமலையான் சன்னதியிலே 
கருங்கல்லாக சிலை வளந்துமே 
பொதிமாட்டுக்காரன் கூட 
புறப்பட்டுமே வாராராம் .
ஆரணியாம் வீரணியாம் 
அணித் தோப்பு மண்டபமாம் 
இடையில் ஒரு வல்லயமாம் 
தேரடி வந்து சேர்ந்தார் 
தெய்வக்  கருப்பசாமி -கருப்பனுக்கு 
ஈக்கி கம்பி வேட்டிகளாம் 
முழுச் சிவப்பு கம்மல் நிறம் 
வேட்டை நாயை கைப்பிடிச்சி 
விடியற்காலை நேரத்திலே 
வேட்டைக்கு போறாரம்மா 
காட்டையும் கலைச்சாராம்
கடிநாயை ஏவி விட்டார் 
யானையைக் கொன்னுமே 
அங்கேயே நிலைநிறுத்தி 
சிங்கத்தைக் கொன்னுமே 
என் தகப்பன் கருப்பன் 
ஜெயம் கொண்டு வாராராம் 
வணங்குகிற பக்தர்களுக்கு 
வரங்கொடுக்கும் கருப்பசாமி
மீனாட்சியம்மனுக்கும், மேலான சொக்கருக்கும் 
கோதண்ட ராமருக்கும், குமரவடிவேலருக்கும்
பார்வதி அம்மனுக்கும், படியளக்கும் பரமனுக்கும்
எங்கும் நிறைந்திருக்கும் -என் அப்பனை நானழைத்தேன் .    
(தொடரும் )
கண்மணி 

2018-08-05 19:04 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
நன்றி ஐயா 
கண்மணி 
--

Suba

unread,
Aug 12, 2018, 3:37:19 AM8/12/18
to மின்தமிழ்
அருமை. தொடருங்கள்.

kanmani tamil

unread,
Aug 12, 2018, 1:03:52 PM8/12/18
to mintamil
நன்றி சுபா 
SK

kanmani tamil

unread,
Aug 12, 2018, 2:17:32 PM8/12/18
to mintamil
(இப்பாடலில் குறிப்பிடத்தக்க செய்தி :மாரியம்மனுக்கு சலாம் செய்வது பற்றிப் பேசுவது; சில அடிகள் தெளிவே இல்லாது இருந்தாலும் சலாம் போடும் இசுலாம் இனத்தவருக்கு மாரியம்மன் வழிபாட்டில் இருக்கும் தொடர்பை எடுத்துக்காட்டுகிறது. பங்குனிப் பொங்கலன்று அம்மன் நோயிலிருந்து சுகம் பெற வேண்டி சில இசுலாமியப் பெண்கள் முகத்தை மறைத்துக் கொண்டு---தம்மை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மாரியம்மன் கோவிலுக்கு வந்து போவதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.) 
ஆதிபராசக்தி அருள் கணபதியைப் போற்றி -மயில் ஆறுமுகனை வாழ்த்தி 
அன்னை மாரிஅம்மனைப் பணி மாலை சூட்டி 
சந்தி விநாயகரை சந்நிதியைப் பாரும் -இந்த ஜவுளிக்கடை தீரும் 
சாய்ந்திருக்கும் அக்கினியை .............................................

 தங்கத்தினாலே கலசத் தேரு -மணி எந்திரமா சுத்தும் 
..............................................................................................

வடக்கத்தியாம் சந்நிதியான் -வர்ணப்பூத்துண்டு தலகாணி 
படுத்துறங்குற மாரியம்மாளை -எழுப்பிச் செலாம் செய்வோம் .

துருவப் பாசம் -அது துலங்கும் தெப்பக்குளமாம் 
இந்தத் தோகையர்கள் கூடிவந்து தீர்த்தமாடும் குளமாம் 

பிள்ளையைப் பெற்றெடுத்து பூவையவளைப் பணிவோம்  
தலைமுடியை எறக்கி வச்சி தாயின் பெயரை வைப்போம் .

அரிசிக்கடை மண்டபத்தில் ஆழியாறு தூணும் 
அது அடுக்கடுக்காய் தோணும் 
அதிசயத்தைப் பார்ப்பவர்க்கு ஆயிரங்கண் வேணும் 

பாலசுப்ரமண்யர் கோவிலிலே சேவல்கொடி ஆடும் 
எங்கிருந்து பாத்தாலும் ஏழடுக்காய் தோணும் 

நிறைய நிறையக் குவித்திருக்கும் நெல்லுக்கடைவீதி 
நெறஞ்சி நிக்கும் ஜோதி -அந்த 
நிலத்தில் நிக்கும் சுப்பிரமணியர் ஆலயமெங்கும் ஜோதி 

அம்மனும் பொன்னால -ஆவுடை அம்மனும் பொன்னால 
வடக்க நிக்கிற பத்திரகாளிக்கி வலது கொண்டையும் பொன்னால 

தேருக்கு ஊசிகள் தான் நிறைத்து -சிங்காரச் சட்டங்கள் வளை ஓடி 
தேரின் மேல்நின்று பந்தடிப்பாள் -தேவியானவள் மாரியம்மா.

பாதசரமுன்னா பாதசரம் -பத்துப்பவுனுல பாதசரம் 
இருட்டு வேளைக்கி  போட்டுப்போனா -எங்கும் துலங்கும் பாதசரம்
(தொடரும் )
கண்மணி    

kanmani tamil

unread,
Aug 13, 2018, 10:04:31 AM8/13/18
to mintamil
மாரியம்மன் கோவிலிலே மாவிளக்கு ஏத்தி 
நல்ல மாதர்களும் கூடி- அங்க
மவுசுடனே ஆடிப்பாடி மங்கலமாய் வருவோம் .

செவ்வாக்கெழமன்னைக்கு செம்புநீராடி -செவந்த பூக்கள் சூடி
சேந்து ஆடிக் கும்மி அடிப்போம் செல்வப் பெண்டுகள் நாங்க 

வெள்ளிக் கெழமன்னைக்கு வென்னி நீராடி -விதவிதப் பூச்சூடி 
வேண்டி நின்ற பேருக்கெல்லாம்  வரம் கொடுப்பா மாரி 

மல்லிகை முல்லை பிச்சி மலர்களையும் எடுத்து -அதை மாலையாகத் தொடுத்து
மவுசுடனே மாரிக்கு மங்கலமாய் சாத்த .....

காயாத மரமும் காய்க்க வேணும் -காயில ஒன்னு கனிய வேணும் 
பூக்காத மரமும் பூக்க வேணும் -பூவுல ஒன்னு காய்க்க வேணும்.

ஊருசுத்தி பூவெடுத்து ஒசந்தமால கட்டி -தாயே ஒசந்தமால கட்டி 
ஒசந்தமால காணலேன்னு கோவித்தாளாம் மாரி .

ஆத்துக்கு அங்கபோனா அடுக்குமல்லி ரொம்ப -தாயே அடுக்கு மல்லி ரொம்ப 
அடுக்கு மல்லியத் தொடுக்கப் போன அம்மாமார எங்க ?

கொளத்துக்கு அந்தப்பொறம் குண்டுமல்லி ரொம்ப -தாயேகுண்டுமல்லி ரொம்ப
  குண்டுமல்லிய தொடுக்கப்போன கொழந்தமாரை எங்க?

காரக்கோட்ட மேலிருந்து கண்ண விட்டு பாப்பா -தாயே கவலை எல்லாம் தீப்பா 
பிள்ளையில்லா ஈஸ்வரிக்கி பிள்ளவரம் தருவா 

கண்ணாடிப் பட்டுடுத்தி கவுறு குத்த வருவோம் -தாயே கவுறு குத்த வருவோம்
 கோயிலுள்ள குடியிருக்கும் ....................மாரி 

கொழந்த பிள்ள கவுறு  குத்த கூடவந்து நிப்பா
சப்பரத்து மேலிருந்து சனத்த எல்லாம் பாப்பா 
வந்த வந்த சனத்தினிடம் பணிந்து கவுந்து நிப்பா 

ஒரெல்ல ரெண்டெல்ல ஒன்ற லச்சம் பேரெல்ல
சாணம் தெளிக்கையில சாம்புராணி காட்டயில 
சக்தியுள்ள மாரியம்மா சுத்திவாரா வீதியில . 

யாரோடி வந்தாலும் தேரோடி -மன்னவன் வந்தாலும் தேரோடி 
வடக்க இருக்க பத்திரகாளி வந்து நின்னா தேரோடும்          
(தொடரும் )
கண்மணி 

kanmani tamil

unread,
Aug 15, 2018, 10:00:48 AM8/15/18
to mintamil
                                                                                                             முருகன் வள்ளி கும்மிப்பாட்டு
(தன்னானே தானனன்னே தானதனம் னானே -தன னானனன்னே னானே
தனனானானே னானனன்னே   தானேனன்னே னானே)

செந்தில் வடிவேலவனோ சிந்து தமிழ் பாட -முன்னால் 
வந்த வினையும் ஓட வரம் தந்திடும் கைகூட-இசை 
செஞ்சமிக தஞ்சவெள்ள குஞ்சரமே காப்பு 

தீராத வல்வினையே தீர்க்கும் வடிவேலன் -உமை 
காக்கும் அனுகூலன் பரன் ஓர்க்கும் அனுசீலன் -இந்த 
வளையல் செட்டியான் கதைக்கு மாட்டகத்தாள் துணையே .

மஞ்சுலவும் தினைப்புனத்தில் வள்ளியின் மேல் நினைவோ -சுகம் 
கொள்ள மனம் துணிவோ புரம் உள்ளமிகும் துணிவோ -இந்த 
வளையல் செட்டியான் கதைக்கு மாட்டகத்தாள் துணையே .

தினைப்புனத்தைக் காக்க வள்ளி சீக்கிரமாய் வர -உடன் 
பரணு மேல ஏற கவண் கல்லாலே ஏறிய -இதை 
கண்டவுடன் பச்சி எல்லாம் காதவழி ஓட      

ஆலோலம் என்று வள்ளி அன்னங்களை விரட்ட -அது 
அன்புடனே நடக்க  கொஞ்சம் அசஞ்சிஅசஞ்சி   நடக்க- இதை
 அறிந்த வள்ளி கோபத்தோடு பரணை விட்டு இறங்க  

இதை பாத்திருந்த வேலவரும் பலவேசம் எடுத்தார் 
இது குணம் என்று நினைத்தார் ;அந்த பரணை நோக்கி 
வருகின்றாராம் பாலகராம் முருகன் 

என்னா வடிவம் அங்கே எடுத்துட்டாரு கந்தன் -அங்கே 
எடுத்த வேசம் என்ன ? அது வாகானதென்ன ?-வளையல்
 செட்டி போல ஒரு வேசம் அங்கே எடுத்தார்.

வளையல் வளையல் என்று சத்தமிட்டார் கந்தன் -ஒரு 
சத்தமிட்டார் கந்தன் ;அந்த வள்ளி பரணடியில் போயி 
வளையல் விற்றார் கந்தன்

(இப்பாடலின் எஞ்சிய பகுதி கிடைக்கவில்லை )

கண்மணி       

kanmani tamil

unread,
Aug 17, 2018, 9:49:17 AM8/17/18
to mintamil
                                                                                                                                    காதல் பாட்டு

சதுரகிரி மலையோரம் சாஞ்சிருக்கும் திருகு கள்ளி 
திருகு கள்ளிப் பூவெடுக்க -சந்தனப் பொட்டளகா
நாம திரிஞ்சிருந்தோம் சில காலம் -குங்குமப் பொட்டளகா 

நாட்டுக்கு நாட்டு மட்டம் நாம ரெண்டும் சோடி மட்டம் 
கோட்டுக்கே போயிட்டாலும் -சந்தனப் பொட்டளகா
கோடிசனம் கையெடுக்கும் -குங்குமப் பொட்டளகா

எட்டுநாள் ஒருவாரம் ஏகக்கூட்டம் தேனி சந்த 
தப்புனா வரச் சொல்லுங்கோ -சந்தனப் பொட்டளகா
அந்த தையல்கட வீதிக்கல்லோ -குங்குமப் பொட்டளகா

வட்டவட்டப் பாறையிலே மட்டநெல்லு குத்தையிலே 
ஆர்கொடுத்த சாயச் சேல -சந்தனப் பொட்டளகா
ஆலவட்டம் போடுறதே -குங்குமப் பொட்டளகா

நெத்திப் புருவத்துக்கு நேரான சாயலுக்கு
உன் ஆடுபுருவத்துக்கு -சந்தனப் பொட்டளகா
நான் ஆசைகொண்டேன் ஒம்மேலே -குங்குமப் பொட்டளகா
கண்மணி              
  
kanmani tamil

unread,
Aug 17, 2018, 2:03:29 PM8/17/18
to mintamil
                                                                                                                    கரகமும் பால்குடமும்

ஒன்னாங் கரகமம்மா எடுத்தாடும் பால்குடம் 
ரெண்டாங் கரகமம்மா எடுத்தாடும் பால்குடம் 
மூனாங் கரகமம்மா எடுத்தாடும் பால்குடம் 
நாலாங் "   "              "             "        "    "      "    " " "
அஞ்சாங் " "       "         "      "    "    " " " " " " " " " " " " " " " " "
ஆறாங் " "    "                "         "     "         "        "        "    " "
......................................................................................
.................................................................................................
.................................................................................................
பத்தாங் கரகமம்மா எடுத்தாடும் பால்குடம் .
கண்மணி  

kanmani tamil

unread,
Sep 12, 2018, 2:25:45 PM9/12/18
to mintamil
                                                                                                             பாண்டிமுனி பாடல் 
'அருள்மிகு பாண்டிமுனீஸ்வரர் கோயில்-ஓர் ஆய்வு' என்ற தலைப்பில் மு.தமிழரசி என்பவர்  மதுரை காமராசர் பல்கலைக்கழக எம்.ஃபில். பட்டத்திற்காக 1984ல் அளித்த ஆய்வேடு (தியாகராசர் கல்லூரி,மதுரை) பாண்டிமுனி கோயில் பற்றி ஆய்ந்து சொல்கிறது.   பொதுமக்கள் மேலமடைக்கண்மாய் என்று அழைக்கும் ஒரு குளத்தின் மேற்குக் கரையில் உள்ள கே.கே.நகர் அருகில் முள்மரக்காட்டின் இடையில் உயர்ந்த மேடையைக் கருவறையாகக் கொண்டு; வெள்ளிக் காப்பிட்ட கண்கள், மீசை, தாடியுடன் சப்பணமிட்டு நிமிர்ந்து அமர்ந்த நிலையில் பாண்டிமுனி காட்சி அளிக்கிறார். இது குளக்கரையில் நிறுவப்பட்ட ஒரு அய்யனார் கோயில் ஆகலாம் என்று அவர் கருத்துரைக்கிறார். இச்சிலை ஒரு சமணத் தீர்த்தங்கரரின் சிலையாகலாம் என்னும் கருத்து நிலவுவதை அவரது ஆய்வேடு சுட்டிச் செல்கிறது. (இன்று சுற்றுச் சாலை இடப்பட்ட பின்னர் முள்மரக்காடு அழிந்து விட்டது.) இப்பாண்டிமுனி பற்றிய பாடல் வருமாறு :
  
பரமனுடைய சடையில் பாண்டி அவதரித்தார் 
ஒற்றைச் சடையினிலே உற்பத்தி ஆனவராம் 
உலகமே உற்பத்தியான மூன்று நாளைக்கு 
முந்தியும்  தானே வாராரே பாண்டிமுனி 

பாரச் சடையழகன் பாண்டிமுனி வாராராம்.
சந்தனம் சவ்வாதாம் என் தகப்பன் 
அத்தர் புணுகாம் என் அப்பா பாண்டி
அதுக்கேத்த வாசனையாம் பேரையூர் சந்தனமாம்  
பெரியகடை பிச்சிப்பூவாம் 
வெள்ளைநிறக் குதிரை தானாம் 
பாரச்சடையழகன் பாண்டிய ராஜனும் 
வாராராம் வாராராம் 

கோலச் சடையழகன் பாண்டியுமே 
குதிரை மேலே வாராராம் 
மதுரையிலே உள்ளதொரு 
மொட்டை கோபுரத்தை 
தேடியுமே வாராராம் 
தேடியுமே வந்து நல்லோ 
கோபுரத்தில் அமர்ந்து நல்லோ 
ஆண்டு நல்லோ வாராரம்மா 

சொக்கரும் மீனாட்சியும் சொக்கட்டான் ஆடையிலே
எட்டி எட்டிப் பார்த்தாராம் பாண்டிய ராஜனும் 
என் பிறவி பாண்டியராஜா 
நீ எட்டியுமே பார்த்ததாலே 
உனக்கிங்கு எல்லையில்லை 
என்று என் தாயி மீனாட்சியும் 
இயல்பாகச் சொன்னாளே 
ஊருக்கு அந்தப்புறம் 
நீ போகவே வேண்டுமென்றாள் 

கீழமாசிவீதியிலே கிருபானந்தம் வாங்கினாராம் 
போதை வெறி கொண்டவராம் 
பொல்லாத பாண்டியனுமே போறாராம் தாசி வீடு 
எங்க ஈஸ்வரனும் வாராருன்னு 
தாசியுமே அங்கு தானே எதிர்பார்த்து நிக்குறாளாம் 
சந்தனம் ஜவ்வாது சாம்பிராணி 
வாசத்துடன் வழிபார்த்து நிக்கிறாளாம்
அடுக்குமல்லி தொடுக்குமல்லி ஆனந்தமாய் பிச்சி ரோஜா 
வாசத்துடன் என் அப்பன் பாண்டிய ராசனுமே 
தாசிவீடு சேர்ந்தாராம்

கருவைக் கருவழிப்பான் ; கண்ணிப் பெண்ணைச் சீரழிப்பான் 
உருவைக் குலைத்திடுவான் ; உத்தமியைச் சீரழிப்பான் 
நிறை வயித்துப் பிள்ளையையும் குறை வயிறா ஆக்கிடுவான் 
அறைக்குள்ளே இருக்கும் பெண்ணை முச்சந்தியில் ஆட வைப்பார் 

தான் இருக்க வேண்டிய எல்லையைத் 
தேடியே போறாரம்மா வயக்காட்டு மந்தையிலே 
ஆலமரத்தடியில் அரசாளும் பாண்டிய ராசனுமே 
வணங்கிடும் மக்களுக்கு வரம் கொடுக்கும் ஈசனவன் 
கும்பிட்ட மக்களுக்கு குறைவில்லாமல் வரங்கொடுப்பான் 
பிள்ளையில்லா மக்களுக்கு பிள்ளைவரம் தான்கொடுத்து 
பேரூரத் தானே வாங்கிடுவார் பேர்போன பாண்டி ஈசுவரன்.      

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Sep 12, 2018, 11:15:59 PM9/12/18
to mintamil

கண் முன் நின்று கொண்டு அழகழகாப்பேசி நம் மனஸை கவரும் பாடல்கள், இவை. சேகரத்தில் வைத்துக்கொண்டு, மனப்பாடம் செய்து அவ்வப்பொழுது மனநிறைவு
பெறுவேன்.

kanmani tamil

unread,
Sep 13, 2018, 12:44:18 AM9/13/18
to mintamil
நான் தட்டிய பாடல்கள் உங்கள் மனதைக் கவர்ந்தது எனக்கு மகிழ்ச்சி ஐயா.
கண்மணி 

Suba

unread,
Sep 13, 2018, 4:57:53 AM9/13/18
to மின்தமிழ்
இது யாரைப் பார்த்து பாடுகின்றார்கள்?
பாண்டி முனியா?

மக்கள் சிந்தனையின் வெளிப்பாடு பாடலாக வெளிவருவது தான் நாட்டுப்புறக் கலையின் தனிச்சிறப்பு. நல்ல பணி செய்கின்றீர்கள். தொடருங்கள்.
சுபா

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

kanmani tamil

unread,
Sep 18, 2018, 11:20:12 AM9/18/18
to mintamil
                                                                                                                               சக்கம்மாள் பாட்டு
தானானே தானானே 
என்தாயே சக்கம்மா 

ஏழை நான் பாடப் போறேன் 
பாடவும் வகையறியேன் 

பாடவும் வகையறியேன் 
வரலாறும் நானறியேன் 

வரலாறும் நானறியேன் 
பாலனான நானும் உன்னைப் 

பாடிப் பணிவதற்கு
உன்னுடைய வரலாறு 

சொல்லிப் படிப்பதற்கு 
உன்னுடைய கிருபையாலே 

சொல்வாக்கு தந்திடம்மா 
என் தாயே வீரமல்லு 

குளித்து முழுகியுமே 
குளக்கரை தன்னிலே

சேலையையும் காயப்போட 
காலைக்கண்ணும் ஓடிவந்து 

வீரமல்லு சேலையையும் 
தாண்டியே போயிருச்சு 

எந்தாயி  வீரமல்லு 
கர்ப்பமாக ஆனாளம்மா 

ஒன்னாவது மாத்தையிலே 
உண்பதை மறந்தாளாம்

ரெண்டாவது மாத்தையிலே 
நெனச்ச பண்டம் சாப்பிட்டாளாம் 

மூணாவது மாத்தையிலே 
முகமெல்லாம் வெளுத்தாளாம் 

நாலாவது மாத்தையிலே 
நல்ல பண்டம் சாப்பிட்டாளாம் 

அஞ்சாவது மாத்தையிலே 
அடிவயிறும் கனத்ததம்மா 

ஆறாவது மாத்தையிலே - என்தாயே வீரமல்லு 
அண்ணன்மார் சந்தேகப்பட்டார் 

இப்படியே விட்டோமானால் 
கேவலமெ என்று சொல்லி 

அன்புத்தங்கை வீரமல்லை 
வெட்டிவிட வேணுமின்னு 

வீரமல்லு வீரசின்னை 
மாடு மேய்க்கப் போனாங்க 

மலைக்காட்டில் வீரமல்லை 
வெட்டியே போட்டாங்கம்மா 

கண்மணி 
(தொடரும் )  
   
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Sep 18, 2018, 1:59:07 PM9/18/18
to mint...@googlegroups.com
மாத்தையிலே = மாதத்தில்?

இன்றும் வீரமல்லைகளை வெட்டிப்போடும் குடும்பத்தார்  கதைகள் தொடர்கிறது. 

<div class="gmail_e

kanmani tamil

unread,
Sep 18, 2018, 8:23:07 PM9/18/18
to mintamil
ஆம், 
மாத்தையிலே=மாதத்தில் 
சக 

On Tue, 18 Sep 2018 11:29 pm தேமொழி, <jsthe...@gmail.com> wrote:
மாத்தையிலே = மாதத்தில்?

இன்றும் வீரமல்லைகலை வெட்டிப்போடும் குடும்பத்கார்  கதைகள் தொடர்கிறது. 

--

kanmani tamil

unread,
Sep 20, 2018, 1:04:07 AM9/20/18
to mintamil
என் தாயி வீரமல்லை 
மலையிலேயே வெட்டினார்கள் 
            வீரமல்லு வயித்தையும்
            கிழித்து நல்லா பாக்கையிலே 
காளைக்கன்னு வயித்துக்குள்ளே 
இருப்பதைப் பாத்ததுமே 
             அண்ணன் தம்பி ஏழு பெரும் 
             அழுது புலம்பி நல்லே 
தவித்துமே போனார்களே 
வீண்பழி சொல்லியும் 
            நம் தங்கை வீரமல்லை 
            வெட்டியுமே போட்டோமே 
என் தாயி வீரமல்லு
அண்ணன்மார் குடும்பத்தையும் 
            கருவில் உள்ள கருவை எல்லாம் 
            கருவழித்து விட்டாளம்மா
என் தாயி வீரமல்லு 
ஓலை அணியும் தெய்வமம்மா 
            காதோலை கருகமணி 
            என் தாயி வீரமல்லுக்கு 
மாராடி பாசிக்காரி 
என் தாயி வீரமல்லு 
            பார்ப்பார் பாசிக்காரி 
            பத்தினி தெய்வமம்மா 
உத்தமியாம் பத்தினியாம் 
ஒரு சொல்லு வாசகியாம் 
           பத்தினி தெய்வமம்மா 
           என் தாயி வீரமல்லு 
பழிச் சொல்லு கேட்டியேம்மா 
வீண் சொல்லு கேட்கவே 
            விதிச்சானே உடையவனும் 
            பழிச்சொல்லு கேட்கவே 
பகலானும் விதிச்சாரோ 
என் தாயி வீரமல்லு 
            தேடி அழைக்கிறேனே 
             வீரமல்லு வீரச்சின்னா 
தெய்வ வடிவழகி 
வருந்தி அழைக்கிறேனே 
             என் தாயி வீரமல்லு 
             வனக்கிளியே வந்திடம்மா 
வாராளாம் வீரமல்லு 
வனமாம் வனம் கடந்து 
             மண் கோட்டை தாரோமம்மா 
             என் தாயே வீரமல்லு 
மண் கோட்டை வேண்டாமம்மா 
கல்கோட்டை தாரோமம்மா 
             என்தாயே வீரமல்லு 
             கல்கோட்டை வேண்டாமம்மா 
காந்தக்கோட்டை தாரோமம்மா 
என் தாயே வீரமல்லு 
             காந்தக்கோட்டை வேண்டாமம்மா 
             எலந்த முள்ளு கோட்டையிலே 
இருந்து நல்லா குடியிருப்பேன்  

kanmani tamil

unread,
Sep 20, 2018, 2:49:31 AM9/20/18
to mintamil
அனுப்பங்குளம்; பேராபட்டி 
ஆண்டு வந்தாள் காடம்மாள்  
         பேராபட்டி ஊரிலுமே 
         பேர் போக வரங்கொடுத்தாள் 
ஒட்டர  மரத்தடியில் 
 எந்தாயி  வீரமல்லு 
          கம்பளியைத் தான் விரிச்சி 
          சக்தி கடா காவுகொண்டு 
என் தாயி வீரமல்லு 
சக்கம்மானு பேரு கொண்டா 
          குட்டிக்கடா காவு கொண்டு 
          கூசாமல் வாக்குத் தராள் 
பாம்புன்னு சொன்னதால 
பாம்படம்மானு பெரு கொண்டி 
           நாகமின்னு சொன்னதால 
           நாகம்மானு பேரு கொண்டா 
பூச்சியின்னு சொன்னதால 
பூச்சியம்மானு பேரு கொண்டா 
          எலந்தமுள்ளு கோட்டைக்குள்ளே 
          என் தாயி சக்கம்மாவும் 
இருந்து நல்லா வரங்  கொடுப்பா
நாகம் குடை பிடிக்கும் 
         அம்மா சக்கம்மா உனக்கு 
         நல்ல பாம்பும் தாலாட்டும் 
அஞ்சு தலை நாகமம்மா 
என் தாயே ஜக்கம்மாவே 
         ஆடி நின்னு தாலாட்டும் 
         பத்து தலை நாகம்மாவே 
என் தாயே சக்கம்மாவே 
உனக்கு பாடிநின்னு தாலாட்டும் 
         கருநாகம் செந்நாகம் அம்மா 
         கலந்து நின்னு தாலாட்டும் 
அம்மா உன் மார் மேலே நாகம்மா 
உன் மடி மீதும் புரண்டாடும் 
          தோளு மேலே நாகம்மா 
          உன் துடை மேலே புரண்டாட 
ஒம்பது கம்பளத்தில் 
என் தாயி ஜக்கம்மா
(தொடரும்)
கண்மணி    

kanmani tamil

unread,
Sep 20, 2018, 10:22:20 AM9/20/18
to mintamil
ஓலையணியும் தெய்வம்மா 
கையிலிடும் கருவளையல் 
              என் தாயே ஜக்கம்மா 
              கம்பளத்தில் பிறந்தவளாம் 
மாராடி பாசிக்காரி 
என் தாயே ஜக்கம்மாளே 
              உன் ஏழைக் குழந்தையம்மா 
              கூப்பிட்டு நான் அழைச்சேன்.
                                                            (சக்கம்மா பாட்டு முற்றும்)

                                                                                                                                        ஒப்பாரிப்பாட்டு
நான் வீடு மெழிகி  வெளிவாசல் தான் மெளிகி
தாவரம் மெளுகையிலே -எனக்கு
தந்தி வந்து சேர்ந்ததம்மா -நான் 
யாரோட தந்தியின்னு அவசரமா 
அவுத்துப் பிரிச்சிப் பாக்கையிலே 
தருமருட தந்தியின்னு தல மேல விழுந்ததம்மா 

எட்டுமலைக்கி அங்கிட்டு எழநிமல ஊட உண்டு 
எளனி மலையோரம் எலந்தே பழுத்திருக்கும் 
இன்னைக்கி எட்டுரகப் பச்சக்கிளி 
எர பெறக்க வந்தக்கால் -நான் 
இருசி வாய் தொறந்தா எரையும் பெறக்காது
எல விட்டுப் பறக்காது 

பத்து மலைக்கி அங்கிட்டு பழநிமல ஊட உண்டு 
பழனி மலையோரம் பாவ பழுத்திருக்கும் 
இன்னைக்கி பத்துரகப் பச்சக்கிளி 
பழம் பெறக்க வந்தக்கால் -நான் 
பாவி வாய் தொறந்தா பளமும் பெறக்காது
பறந்துமே போகாது 

ஆத்துக்கு அந்தப்பொறம் ஆகாச தந்திமரம் 
இன்னைக்கி ஆன நெழலும் இல்ல-என்ன 
ஆதரிப்பார் யாரும் இல்ல 

ஆத்தெ குறுக்கடச்சு அழகுசம்பா நாத்துநட்டி
ஆத்துத் தண்ணி குறுக குறுக நாங்க 
அழகுசம்பா வாடுறமே 

கொளத்தே குறுக்கடச்சு கொலவாள  நாத்து நட்டி 
கொளத்துத் தண்ணி குறுக குறுக நாங்க 
கொலவாள  வாடுறமே 

உருண்ட மலையோரம் நான் உளுந்த காயப்போட்டேன்
உளுந்தள்ளி வருமுன்னே -நம்ம வாசலிலே இன்னைக்கி 
உரி சத்தம் கேட்குதம்மா 

சாஞ்ச மலையோரம் நான் சாமெ  காயப்போட்டேன் 
சாமெ   அள்ளிவருமுன்னே -நம்ம வாசலிலே 
சங்கு சத்தம் கேக்குதம்மா 

கருத்த ரயிலேறி  காரக்குடி போயிறங்கி -நீங்க 
காசெ  விளையாடையிலே ஒங்க காசெ பரிச்சாக 
கைவெலங்கு மாட்டுனாக -நீங்க 
காசெக் குடுத்து கைவெலங்கெ மீட்டி 
காணியாள வாறதெப்போ? 

சின்ன ரயிலேறி நீங்க தூத்துக்குடி போயிறங்கி 
துட்டெ வெளையாடயில-ஒங்க துட்டெ பறிச்சாக 
ஒங்களுக்கு தோள்வெலங்கு மாட்டுனாக -நீங்க 
துட்டெ குடுத்து தோள் வெலங்கெ மீட்டி 
பூமியாள வாறதெப்போ ?  
             கண்மணி 

தேமொழி

unread,
Sep 20, 2018, 12:58:45 PM9/20/18
to மின்தமிழ்
தந்தி, இரயில் எல்லாம் வருகிறதே இந்த நாட்டார் பாடலில் !!!

kanmani tamil

unread,
Sep 20, 2018, 1:47:24 PM9/20/18
to mintamil
ஆம் தேமொழி ............அடுத்தது ..............
                                                                               தாலாட்டு(1) 

கண்ணே உறங்கு -என் அம்மா /ஐயா நீ கானமயில் கண்ணுறங்கு 
பொன்னே உறங்கு -என் அம்மா/ஐயா நீ பூமரத்து வண்டுறங்கு 

யாரடிச்சி நீயழுத ?-அம்மா/ஐயா- நீ அடிச்சார சொல்லியழு 
பாட்டி அடிச்சாளோ -அம்மா/ஐயா- ஒன்னப் பாலூட்டும் சங்காலே 
தாத்தா அடிச்சாரோ -அம்மா/ஐயா- ஒன்ன தாமரப்பூந்தண்டாலே
மாமா அடிச்சாரோ -அம்மா/ஐயா- ஒன்ன மல்லியப்பூப்பந்தாலே 
அத்தை அடிச்சாளோ- அம்மா/ஐயா- ஒன்ன அரளிப்பூங்கொத்தாலே
சித்தி அடிச்சாளோ - அம்மா/ஐயா- ஒன்ன சிவந்திப்பூச்சரத்தாலே 
அண்ணே அடிச்சானோ -அம்மா/ஐயா- ஒன்ன அல்லிப்பூச்செண்டாலே
ஆரடிச்சி நீயழுத ?-அம்மா/ஐயா -நீ அடிச்சார சொல்லி அழு 

யாரும் அடிக்கவில்லை -பெற்றாளை ஐவிரலால் தீண்டவில்லை 
நானா அழுது வந்தேன் -நான் தாயார் மடி தேடி   

                                                                                                   தாலாட்டு (2)

கண்ணே கமலப்பூ -அம்மா/ஐயா ஒங்கண்ணு ரெண்டும் தாமரப்பூ 
மேனி மகிழம்பூ -அம்மா/ஐயா நீ ஊர் மணக்கும் தாழம்பூ 

கண்ணான கண்ணுக்கு -அம்மா/ஐயா நான் கருஞ்சாந்து போட்டு வச்சி 
உறங்காத கண்ணுக்கு- அம்மா/ஐயா நான் ஓல கொண்டு மையெழுதி 
தூங்காத கண்ணுக்கு -அம்மா /ஐயா நான் துரும்பு கொண்டு மையெழுதி 
மையெழுதிப் பொட்டெழுதி அம்மா/ஐயா நீ விளையாடப் போகையில ....

வங்காரக் கொக்கு நம்ம வயலேறி   மேயுதின்னு
சிங்கார வில்லெடுத்து நீ சிறகொடிய எய்தாயோ 
மாடுகட்டிப் போரடிச்சா மாளாது ன்னுசொல்லி 
யான கட்டிப் போரடிக்கும் ஐயா நீ பாண்டியனார் வம்புசமோ 
கிரீச் மிதியடியாம்; உங்களம்மான் கீக்கண்ணு பார்வையாம் 
கோர்ட்டுக்கா போனாரு; உங்களம்மான் தந்தி சொல்ல மந்திரியாம்.   
கண்மணி 

On Thu, 20 Sep 2018 at 22:28, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
தந்தி, இரயில் எல்லாம் வருகிறதே இந்த நாட்டார் பாடலில் !!!

Innamburan S.Soundararajan

unread,
Sep 20, 2018, 11:56:22 PM9/20/18
to mintamil
தந்தி, இரயில் எல்லாம் வருகிறதே இந்த நாட்டார் பாடலில் !!!

~நமது தளத்தில் பாதர் வெள்ளை என்றதொரு மிகப்பழைய நாட்டார் பாடல் மின்னாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில் டீ பார்ட்டி, சோல்ஜர், சபாஷ், ஜெனெரல் எல்லாம் வரும்.

kanmani tamil

unread,
Sep 24, 2018, 3:31:21 PM9/24/18
to mintamil
                                                                  சிவகாசிக்கொள்ளை பற்றிய தகவல்களும் அது தொடர்பான பாடலின் 36 அடிகளும் .
                  அது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி--- என் தாய்வழிப் பாட்டியின் அம்மா புதிதாகத் திருமணமாகி சிவகாசியில் புகுந்த வீட்டிற்கு வந்து குடித்தனம் நடத்தத்  தொடங்கிய காலமாம்--- அப்போது சிவகாசி மிகச் சிறிய ஊர். இப்போது இருப்பது போல் தொழிற்சாலைகளோ, அச்சகங்களோ, கிடையாது. கரிசல் காட்டில் இருக்கும் தோட்டங்களை நம்பிய வாழ்க்கை. வானம் பார்த்த கந்தக பூமி. ஊரை ஒட்டிய பெரிய குளமும், கமலைகளை வைத்து நீர் இறைக்கும் கேணிகளும்.
                  சிவகாசி கோயிலை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய ஒரு சிற்றூர். தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டியன் காசிக்குச் சென்று பிடிமண் எடுத்து வந்து தென்காசியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது திருத்தங்கலை அடுத்த இப்பகுதியில் பாடி அமைத்துத் தங்கினானாம். அவனது தேவி அப்போது பூப்பு எய்த; அது நல்ல சகுனம் என்பதால் அவ்விடத்தில் ஒரு சிறு கோயிலைக் கட்டி அங்கு ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபாட்டிற்கு உரியதாக்கினானாம்.
அதுவே சிவகாசி ஆயிற்று. இங்குள்ள இறைவனுக்கு காசி விஸ்வநாதர் என்றே பெயர். இவ்வூரில் பிறந்த என் பாட்டி அடிக்கடி சொல்லிக் காட்டுவார் :
                                                 "வடக்க வடகாசி 
                                                  தெக்க தெங்காசி 
                                                  நடுவில சிவகாசி 
                                                  காசியடி காசி -அது 
                                                  கருமந் தீக்கும் ...." என் பாட்டி பிறப்பதற்கு முன்னால் அவரது தாயாரின் இளமைக் காலத்தில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம் பற்றி சில செய்திகளாக அவர் கூறியதை நினைவுறுத்தியும், நான் சேகரித்த சில தகவல்களை வைத்தும் இங்கு பதிவு செய்கிறேன்.
                 வரலாற்று ஆவணங்களில் பதிவான இக்கொள்ளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் தலையாயது கோயில் நுழைவு. பராக்கிரம பாண்டியன் கட்டிய சிவன் கோயிலுக்குள் நுழையும் உரிமை 'A' சமூகத்தவர்க்கு அளிக்கப்படவில்லை.('B'சமூகத்தவர் தான் இன்றும் இக்கோயிலுக்கு தர்மகர்த்தாக்கள்.) 'A'சமூகத்தவர் தமக்கு கோயிலுக்குள் நுழையும் உரிமை உண்டு என்று லண்டன் ப்ரிவி கவுன்சிலில் வழக்கு தொடுத்தனர். அந்த உரிமையை நிலைநாட்ட லண்டனுக்குச் சென்று அங்கு கோர்ட்டில் காயத்ரி மந்திரத்தை ஜெபித்துக் காட்டி நியாயம் கேட்டனராம். 'A', 'B'என்ற இரு சமூகங்களுக்கு இடையில் எழுந்த மோதலில் நேரடியாக ஈடுபடாமல் பின்னிருந்து தூண்டிய சமூகத்தினரும் இருந்தனராம்.
                  மற்றுமொரு காரணம் 'A'சமூகத்தவர் 'B'சமூகத்துப் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டமை. சிவகாசியிலிருந்து சிறிது தொலைவில் வடமேற்கே வடபட்டி என்று ஒரு கிராமம்('B' சமூகத்தவரின் ஊர்) இன்றும் உள்ளது. அந்த ஊரிலிருந்து இரண்டு பெண்கள் பருத்தி மாருக்கட்டுகளைச் சுமந்து விற்கச் சென்ற போது 'A'சமூகத்து ஆண்கள் இருவர் "மாருக்கட்டு என்ன விலை?" என்று கேட்டது; இருபொருள்பட இருந்ததால்; அப்பெண்கள் அழுது கொண்டே; தாம் வந்த வேலையைப் பார்க்காமலேயே ஊருக்குத் திரும்பி விட்டனராம். தம் குலப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல் போனது அவர்களைக் கொள்ளைக்குத் தூண்டியதாம்.    
                  'B'சமூகத்தவர் கொள்ளை நடக்கப்போகும் நாளை முன்கூட்டி சுவரொட்டி மூலம் தெரிவித்தே கொள்ளையில் ஈடுபட்டனராம். வரப்போகும் ஆபத்தை உணர்ந்த 'A' சமூகத்தவர் அரசின் உதவியைப் பாதுகாப்பிற்கு நாடினராம். அத்து மீறினால் துப்பாக்கிச் சூட்டிற்கும் அனுமதி அளித்திருந்ததாம் அரசு. இந்த பரபரப்பான சூழலில் 'A' சமூகப் பெண்களுக்கு ஆபத்து என்பதே மிகுந்த பயத்தை ஏற்படுத்தியதாம். பெண்கள் எல்லோரும் குறிப்பிட்ட நாளில் வீட்டிற்குள்ளேயே இருக்கக் கூடாது என்றும், எந்தப் பெண்ணும் தனியாகவும் இருக்கக் கூடாது என்றும், குழுவாகச் சேர்ந்தே மொட்டைக்காரையில் கூடி இருக்க வேண்டும் என்றும் ஊரார் ஒருங்கு கூடி முடிவெடுத்து ; அவ்வண்ணமே இருந்தனராம். அப்போது பாதுகாப்பிற்கு இடித்த மஞ்சள் பொடியும், மிளகாய்ப்பொடியும் எல்லோரும் கைவசம் வைத்து இருந்தார்களாம். கொள்ளையின் போது துப்பாக்கிச்சூடும் நடந்தது. 'B'சமூகத்தில் இதனால் உயிரிழப்பும் ஏற்பட்டதாம். தம்மை இக்கட்டிலிருந்து காப்பாற்றிக்கொள்ள சிவகாசியிலேயே குடியிருந்த 'B' சமூகத்தவர் துணையை 'A' சமூகத்தவர் நாடினர். உள்ளூர் 'B' சமூகத்தவர் செய்த உதவியை இன்றும் நன்றியுடன் சொல்லிச் சொல்லி சுமுகமாகவே இரு சமூகத்தவரும்  இருக்கின்றனர்.
                 வடபட்டி கிராமத்திலிருந்து இன்று மேற்படிப்புக்காக பெண்கள்,ஆண்கள் என இருபாலரும் சிவகாசிக்கு வந்து அறிவொளி பெறுகின்றனர். கரிசல் காட்டு விவசாயம் முற்றிலும் ஒழிந்துவிட எல்லோரும் சிவகாசித் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு வருகின்றனர். கிறித்துவ ஊழியம் இப்பகுதிக்குள் நடைபெறுவதும் தெரிகிறது. இக்கொள்ளை பற்றி ம.கா.பல்கலை வரலாற்றுத் துறையில் முனைவர் ஷோபனன் என்பவர் ஆய்வேடு சமர்ப்பித்துப் பட்டம் பெற, அவரது ஆய்வேடு நூல் வடிவமும் பெற்றுள்ளது. "Temple Entry And The Sivakasi Riots" என்ற நூலை மொழிபெயர்ப்பின் இன்னும் மிகுதியாகக் கருத்துக்களைத் தெரிந்து கொள்ளலாம்.இக்கொள்ளை தொடர்பாக வடபட்டியைச் சேர்ந்த என் மாணவிகள் தொகுத்துக் கிண்டு வந்த பாடல் பகுதி இதோ: 
.....................................................................
சித்திரை மாத்தையிலே 
ஒசந்த செவ்வாய்க்கிழமையிலே 
ஒம்பதாம் தேதியிலே அய்யாத்துரை 
உசுரு கொடுக்கப் போனாரே 
நாளும் மூணும் ஏழு -இந்த 
இருளாண்டித் தேவரைக் கேளு
சாப்பிட்டுக் கை கழுவி 
சகுனம் பாத்து வெடியெடுத்து 
போறானாம் அய்யாத்துரை 
பொன்னுசுரப் போக்கழிக்க 
நாலு மூணும் ஏழு -அந்த 
நாக்கியராக கேளு .
ஏறினார் வில்லு வண்டி 
எறங்குறார் வேங்கப்புடை
சாராய போதையினால் 
சாஞ்சு விட்டார் அய்யாத்துரை 
கூடப்பிறந்தவனாம் 
குடிகாரன் சங்கரனாம் 
குடிக்க தண்ணி கேட்டதுக்கு 
குதித்து விழுந்து ஓடினானாம் 
பணத்தை செலவழிக்க 
படைகளெல்லாம் முன்னே விட்டு 
பின்னால் போகச்சொல்லி 
பின்னடித்தான் கருணாலபாண்டி 
பழிப்பாட்டம் குத்தகையார் 
பாண்டிய மன்னன் அய்யாத்துரை 
பங்கு வாங்கப் போகப் போயி 
பழி விழுந்து மாண்டாரய்யா 
ஜாதியில் மறக்குலமாம் 
சாந்தகுண அய்யாத்துரை 
பண்டாரச் செட்டியல்ல 
பட்டு மடிந்தாரய்யா 
பழனியாண்டி தேவர்மகன் 
பாண்டிய மன்னன் அய்யாத்துரை 
பங்கு வாங்கப் போகப் போயி 
பழி விழுந்தே மாண்டாரய்யா 
ஆளிலேயும் நல்லாளு 
..........................................................."
'B' சமூகத்தவரிடமிருந்து மட்டும் தான் கொள்ளை பற்றிய பாடலடிகள் கிடைத்துள்ளன. 'A' சமூகத்தவரிடமிருந்து இந்த அளவு கூடக் கிடைக்கவில்லை. வாயால் சொல்லப்படும் தகவல் கூடபுதிதாக ஏதும் கிடைக்கவில்லை. ஒருவேளை இந்த சம்பவத்தால் அவர்களுக்கு ஏற்பட்ட பயம் அவர்களை ஊமையாக்கி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. 
கண்மணி 
                     
--

kanmani tamil

unread,
Oct 1, 2018, 11:17:19 AM10/1/18
to mintamil
                                                                                                            விளையாட்டுப்பாடல்கள்  
1)              மக்கா சுக்கா பால் பரங்கி 
                 ஆட்டுமை கூட்டுமை சீ சல் 
                 சல்லத் தூக்கி மேல போட்டா செட்டியார் வீட்டு நண்டு 
                 நண்டத் தூக்கி மேல போட்டா நாகரத்தினப் பாம்பு 
                 பாம்பத் தூக்கி மேல போட்டா பாளையங்கோட்டை ராஜாவுக்கு விடிய விடியக் கல்யாணம் 
இது ஒரு குழு விளையாட்டின் போது பாடப்படும் பாட்டு.
பாட்டில் ஏதோ குறிப்புப் பொருள் உள்ளது என்று இப்போது புரிகிறது. ஆனாலும் தெளிவாகத் தெரியவில்லை.
சிறு வயதில் பொருள் புரியாமலேயே இதை பாடிக்கொண்டு விளையாடுவதுண்டு.
எத்தனைபேர் வேண்டுமானாலும் சேரலாம்.
வட்டமாக அமர்ந்து இரண்டு கைகளையும் கவிழ்த்து வைக்க வேண்டும்.
விளையாட்டை நடத்திச் செல்பவர் ஒரு கையை மட்டும் கவிழ்த்து வைத்து மறு கையின் ஆள்காட்டி விரலால் எல்லோருடைய கவிழ்த்த கையையும் வரிசையாகத் தொட்டுக் கொண்டே இப்பாட்டைச் சொல்வார். பாட்டு முடியும் போது யாருடைய கையின் மேல் ஆட்காட்டிவிரல் இருக்கிறதோ அந்தக் கையைப் புரட்டி மல்லாக்க வைக்க வேண்டும். மீண்டும் பாட்டு தொடரும்....கடைசியில் கை  புரளும்...இப்படியே தொடர்ந்து செய்ய... மல்லாந்த கையில் பாட்டு முடிந்தால் அந்தக்கையைப்  பின்னெடுக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு கையாகக் கழித்துக்கட்டி இறுதியாக எந்தக்கை பின்னெடுக்காமல் உள்ளதோ அவர்தான் தோற்றவர்.... அவர்தான் நொண்டி அடித்து வந்து மற்றவர்களைத் தொட வேண்டும்.    

2)                  பிஸ்கட் பிஸ்கட் ஜாம் பிஸ்கட் 
                     என்ன ஜாம் ரா ஜாம் 
                     என்ன ரா கோ ரா 
                     என்ன கோ டீ கோ 
                     என்ன டீ பாட்டி
மேற்சுட்டிய விளையாட்டுக்கு இப்பாட்டையும் பாடி விலக்கி இறுதியில் ஒருவரை நொண்டி அடிக்கத்  தேர்வு செய்வது உண்டு.

3)                   ஒரு பத்தி இரு பத்தி ஓரி யா மங்களம் 
                      சீப்பு சிணுக்கரி சின்னப்பிள்ள லாலாச்சி ---சிச்சிக்கோ 
இப்பாடலும் ஒருவர் தவிரப் பிறரை விலக்கி நொண்டி அடிக்க ஆள் தேர்வு செய்யப் பாடப்படும். இதில் எதோ நகைச்சுவைக் கருத்து பொதிந்துள்ளது என்று மட்டும் தெரிகிறது. ஆனாலும் தெளிவுபடவில்லை.
கண்மணி  

kanmani tamil

unread,
Oct 1, 2018, 12:42:36 PM10/1/18
to mintamil
குழுவாகச் சேர்ந்து நின்று இருபுறமும் அடுத்திருப்பவர் கைகளைப் பற்றிக் கொண்டு வட்டமடித்துச் சுற்றிக்கொண்டே பாடும் பாடல்கள் சில உள்ளன.
4)                              கோனாரய்யா கோனாரு 
                                 கொளத்துக்குப் போனாரு.
                                 நண்டப் பிடிச்சாரு 
                                 நாழிக்குள்ள போட்டாரு 
                                 சுட்டுத் தின்னாரு 
                                 சுருங்கிப் போனாரு.

5)                              பண்டாரம் படபடக்க -பான சட்டி குடுகுடுக்க 
                                  எம்பான ஓட்டப் பான -எடுத்தவங்க குடுத்துருங்க 

6)       அமர்ந்த நிலையில் குழுவாகச் சேர்ந்து விளையாடுவது :
                          1,2,3 ஆகிய எண்ணிட்ட ஏதேனும் ஒரு விளையாட்டில் இறுதியாகத் தோற்பவர் ஆட்டத்தை நிகழ்த்துபவர் மடியில் குப்புறப் படுத்துக் கொள்ள வேண்டும். பிறர் எல்லாம் தம் கைகளை அவரது முதுகில் விரித்து வைப்பர். சிறு துரும்பு ஒன்றை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டே ஆட்டம்நடத்துபவர் ஒவ்வொரு கையிலும் அத்துரும்பை வைத்து வைத்து எடுத்துக் கடைசியில் ஒருவரிடம் வைத்தே விடுவார்.அப்போது "அடுப்புல கெடந்த மிதுக்கம்பழத்த
                                                         யாரெடுத்தா? எவரெடுத்தா?
                                                         காமன் எடுத்தான் ;காமன் தலையில 
                                                         கொள்ளி  வைக்க ; உருண்டை தெரண்டை
                                                                                             உருண்டை தெரண்டை ......"என்று பாடிக் கொண்டே எல்லோரும் நிமிர்ந்து இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றோடொன்று சேர்த்து தேய்த்துக் கொண்டே இருப்பர். எந்த உள்ளங்கையில் துரும்பு இருக்கிறது என்று நிமிர்ந்தவர் கண்டுபிடிக்க வேண்டும். அது தான் அவருக்கு வெற்றி. கண்டுபிடிக்க இயலவில்லை என்றாலும்; தவறாகக் கூறினாலும் மீண்டும் குப்புறப் படுக்க வேண்டும். 

இருவர் சேர்ந்து விளையாடும் ஆட்டங்கள் பின்வருமாறு :
7)           ஒருவர் இருகைகளையும் சேர்த்து தாமரைப்பூ போல மலர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும். மற்றோருவர் தனது ஒரு உள்ளங்கையை   மடக்கி எதிரில் இருப்பவர் கைகளுக்குள் குத்த வேண்டும். பின்வரும் பாட்டைப் பாடி முடித்து பிடிகொழுக்கட்டை  என்று சொல்லும் போது குத்துபவர் கையைக் குத்து வாங்குபவர் பிடிக்க வேண்டும் .பிடிபடாமல் தப்பிப்பது குத்துபவர் சாமர்த்தியம்.
                                    மாக்கொழக்கட்டை -
                                    மஞ்சக்கொழக்கட்டை 
                                    மாமியார் கொடுத்த 
                                    பிள்ளையார் கொழக்கட்டை 
                                    பிடி கொழக்கட்டை.    

8)               ஒருவர் தன்  கை ஒன்றைக்  கவிழ்த்து வைத்து அமர; மற்றவர் எதிரில் அமர்ந்து தன் கையைக் குவித்து மடக்கி; கவிழ்ந்திருக்கும் கையின் இரு புறமும் குத்தி பின்னர் கை மேலே குத்த வேண்டும். குத்து வாங்காமல் தப்பிப்பது அவரது சாமர்த்தியம். தப்பாமல் குத்துவது இவரது சாமர்த்தியம். இவ்வ்விளையாட்டின் போது சொல்லப்படும் வாசகம் :
                                                                         "தத்தக்கா -புத்தக்கா - தவக்களை "
'தத்தக்கா, புத்தக்கா' என்று சொல்லும் போது கையின் இருபுறமும் அடுத்தடுத்து குத்துவர். 'தவக்களை' என்று சொல்லும் போது கைமேல் குத்து விழும். 
கண்மணி    

kanmani tamil

unread,
Oct 1, 2018, 12:59:24 PM10/1/18
to mintamil
9)        கடற்கரையில் அமர்ந்திருக்கும் போதோ, / ஆற்றங்கரையில் அமர்ந்திருக்கும் போதோ;அல்லது ஆற்று மணல் கொட்டிக் கிடைக்கும் போதோ இருவர் மட்டும் சேர்ந்து விளையாடும் ஆட்டம் இது:
மண்ணில் நெடுக இரண்டு வரிசையாகப் பள்ளங்கள் அமைத்துக் கொள்வர். ஒருவர் தம் கையில் சிறு துரும்பை எடுத்துக் கொண்டு அதை ஒவ்வொரு குழியிலும் ஒளித்து வைப்பது போல் பாவனை செய்து கொண்டே 
                                                           "கிச்சு கிச்சு தாம்பாளம் ; கியா கியா தாம்பாளம் "
 என்று பாடிக் கொண்டு இறுதியில் சாமர்த்தியமாக ஒரு குழிக்குள் மறைத்து விடுவார். எந்தக் குழிக்குள் அவர் வைத்தார் என்பதைக் கூறுவது தான் மற்றவரின் சாமர்த்தியமான வெற்றி .
கண்மணி       

kanmani tamil

unread,
Oct 2, 2018, 4:50:34 AM10/2/18
to mintamil
10)                                                                                           கபடிப்பாடல்
பளீஞ்சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு .................
தங்கப் பெரம்பெடுத்டுத் தாலி கட்ட வாரேன் 
வெள்ளிப் பெரம்பெடுத்து வெளையாட வாரேன் வாரேன் வாரேன் ..........
தோ தோ தோ தோ தோ தோ தோ தோ தோ ....................  

11)இரண்டு குழுவாகப் பிரிந்து ஆடும் விளையாட்டு:
                   முதலில் குழுத்தலைவர் என இருவர் இருக்க வேண்டும். அவர்கள் உத்தி கேட்கும் தகுதி உடையவர்.
எஞ்சியிருப்பவர் எல்லாம் இருவர் இருவராகப் பிரிந்து சென்று தம் இருவருக்கும் தனித்தனியாக ஒரு ரகசியப் பெயர் வைத்துக் கொள்ள வேண்டும். தலைவர் முன்னால் வந்து " உத்தி உத்தி யார் உத்தி?" என்று கேட்க வேண்டும். அதாவது தம் ரகசியப் பெயர்களை இன்னார்க்குரியது என்று காட்டிக் கொள்ளாமல் சொல்லி; இருவரில் யார் யாருடைய அணி என்று உறுதி செய்யும் முறை இது. இரண்டு தலைவர்களும் அடுத்தடுத்து மாறி மாறி தம் முறை வரும் போது உத்தி கேட்க வேண்டும். (சான்றாக உத்தி பிடித்த இருவரும் ஒருவருக்கு மல்லிகை என்றும்; இன்னொருவருக்கு ரோஜா என்றும் ரகசியப் பெயர் வைத்திருக்கலாம். உத்தி கேட்பவர் முன் "மல்லிகை வேண்டுமா? ரோஜா வேண்டுமா? என்று கேட்க வேண்டும். கேட்பவர் 'ரோஜா' என்று பதில் சொன்னால் அப்பெயரை வைத்துக் கொண்டவர் உத்தி கேட்பவர் அணியைச் சேர்ந்தவர்; எஞ்சியவர் மற்றவரின் அணியைச் சேர்ந்தவர். இந்த ரகசியப் பெயர் வைப்பதில் சிறுவரின் கற்பனைக்கும் புதுமை புனைதலுக்கும் வேலை இருக்கும்.)இப்படிக் கேட்டு இரண்டு அணியாகப் பிரிந்த பின்னர் ஒவ்வொரு அணியினரும் எதிரெதிராக வரிசையாக நின்று கொள்ள வேண்டும். இரு புறமும் அருகருகே இருப்பவரின் கையுடன் கை கோத்துக் கொண்டு பின்வருமாறு ராகத்தோடு எல்லோரும் சேர்ந்து முன்னே அடி எடுத்து வைத்து கேள்வி கேட்டுப் பதிலும் சொல்லிக் கொள்வர். கேள்வியும் பதிலும் வருமாறு:
                            "பூப்பறிக்க வருகிறோம்; பூப்பறிக்க வருகிறோம் இந்த மாதத்தில்" 
                            "எந்தப் பூவைப் பறிக்க வருகிறீர்கள் இந்த மாதத்தில் ?  
                            " ---------------- பூவைப் பறிக்க வருகிறோம் இந்த மாதத்தில் "
                            "யாரை விட்டு அனுப்புகிறீர்கள் இந்த மாதத்தில்?"
                            "------------------ஐ விட்டு அனுப்புகிறோம் இந்த மாதத்தில்". 
பதில் சொல்லும் குழு தன் விருப்பத்திற்கேற்ப எதிரணியில் ஒரு பெயரையும், தன் அணியில் ஒரு பெயரையும் உரக்கச் சொல்லும்.
இருவரும் ஒருவரை ஒருவர் தம் பக்கம் இழுக்கும் பலப்பரீட்சையில் ஈடுபடுவர். வலுத்த கை  உடையவர் வெற்றி பெறுவார். இழுக்கப்பட்டவர் வெளிச்செல்ல வேண்டும்.கேள்வி கேட்பதும் பதில் உரைப்பதும் இரு அணிக்கும் மாறி மாறி வரும் வாய்ப்பாகும். பிறகு மீண்டும் கேள்வியும் பதிலுமாகப் பாடல் தொடர்ந்து அடுத்த பலப்பரீட்சை ..........என விளையாட்டு தொடரும். எதோ ஒரு அணி ஆளில்லாமல் எல்லோரும் வெளியேறும் போது விளையாட்டு முற்றுப் பெறும்.
கண்மணி 
     
kanmani tamil

unread,
Oct 3, 2018, 1:21:20 PM10/3/18
to mintamil
12) வட்டமாக அமர்ந்தும் ஓடியும் ஆடும் விளையாட்டு:
                                                             "கொலகொலையா முந்திரிக்கா --- நெறைய நெறைய சுத்தி வா 
                                                               கொள்ளையடிச்சவ எங்கிருக்கா ---கூட்டத்திலே பார் கண்டுபிடி "
விளையாட்டு 1/ 2/ 3ஐ ஆடி ஒருவரைத் தேர்ந்தெடுத்த பின்னர் எஞ்சிய எல்லோரும் வட்டமாக அமர்வர். தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒரு மரத்தின் தளிர் / பூங்கொத்து / ஒரு கைக்குட்டையைக் கையில் வைத்துக் கொண்டு வட்டத்தின் வெளியே சுற்றி வர வேண்டும். அப்போது மேற்சுட்டிய கண்ணியின் முதலடியில் முதல் பாதியைச் சொல்ல மற்றவர் எல்லோருமாகச் சேர்ந்து அடுத்தபாதியை ராகத்தோடு சொல்வர். சுற்றி வரும் நபர் தன்  கையிலிருப்பதைத்  தான் தேர்ந்தெடுக்கும் ஒருவரின் முதுகுப்புறம் போட்டுவிட்டுச் சுற்றுவதைக் கண்டவுடன்; அவரவர் முதுகின் பின்னே சுவாதீனத்தோடு சோதித்து....தனக்குப் பின்னிருக்கும் கைக்குட்டையை எடுத்துக் கொண்டு வேகமாகச் சென்று போட்டவரைத் தொட முயல்வர். அவர் தொடுவதற்கு முன் அவரது இடத்தில் இவர் அமர்ந்து விட்டால் ....பின்னர் கொள்ளைப் பொருளைக் கையில் வைத்திருப்பவர் சுற்றி வர வேண்டும்.
கண்மணி       
 
kanmani tamil

unread,
Oct 4, 2018, 1:41:32 PM10/4/18
to mintamil
குழந்தையோடு பொழுது போக்கும் போது பாடும் பாடல்கள்:
13) மூன்று மாதக் குழந்தை காற்றில் கைகளைத் துழாவும் போது குழந்தையைக் கொஞ்சுபவர் தானும் கைகளைப் பூப்போல் வைத்துக் காட்டிக் கொண்டு பாடும் பாடல்--- நாம் கைகளைஅசைப்பது போலவே குழந்தையும் அசைக்க முயலும். 
                    "தாம்பு;தாமரைப்பூ - தாயார் குடுத்த தாழம்பூ 
                    மாம்பூ;மகிழம்பூ - மாமா குடுத்த மல்லிகைப்பூ"  

14)குழந்தை தலை தாங்கிய பின்னர் எடுத்து நிறுத்தும் போது; ஒரு நிலையில் இல்லாமல் ஆடும் ---அப்போது பாடும் பாடல் 
                      "சங்கு சக்கர சாமி வந்து --- சிங்கு சிக்குன்னு ஆடுச்சாம்"
  
15)ஆறு  மாதத்திற்குப் பின் குழந்தை அமர்ந்து கைகொட்டும் போது; முன்னால்  இருப்பவரும்  கைகொட்டிக் கொண்டு பாடும் பாடல்
                     "தானான கொட்டும் பிள்ள; தயிருஞ்சோறும் உங்கும் பிள்ள 
                     ஆப்பஞ்சுட்டா மொக்கும் பிள்ள; அவலிடிச்சா திங்கும் பிள்ள"

16)குழந்தை நடை பயிலத் தொடங்கும் போது -- அவ்வப்போது தவறி விழுவதும்; தாங்கிப் பிடிப்பதுமாக உள்ள நிலையில் பாடுவது 
                          "தத்தக்கா புத்தக்கா நாலு காலு 
                           தாங்கி நடைக்கையில நழுவுங்காலு"

17)குழந்தை நன்கு ஓடி ஆடும் நிலையில் பிற குழந்தைகளோடு சேர்ந்து  விளையாடும் போது கண்ணைப் பொத்திப்  பாடும் பாடல்.
                             "கண்ணாமூச்சாரே ; காதடைச்சாரே 
                              எத்தன முட்டை இட்டே ?"         
குழந்தை விரல்களைக் காட்டி பதில் சொன்ன பின்னர் ,
"எல்லா முட்டையும் தின்னுட்டு ஒரே ஒரு மஞ்சக்கார முட்டையைக் கொண்டு வா " என்று சொல்லி ஒளிந்திருக்கும் பிற குழந்தைகளுக்கு அறிவிப்பு கொடுக்கும் முகமாக "கோழிக்குஞ்சே ; ஒளிஞ்சுக்கோ 
                                                                                              கோழிக்குஞ்சே; ஒளிஞ்சுக்கோ..................."என்று தொடர வேண்டும் குழந்தை ஒளிந்திருப்பவரைத் தேடி ஒருவரைத் தொட்டுவிடின் தொடப்பட்ட குழந்தை கண்ணைப் பொத்தி ஆட்டத்தைத் தொடர வேண்டும். 
கண்மணி  

kanmani tamil

unread,
Oct 10, 2018, 8:52:15 AM10/10/18
to mintamil
அம்மன் கோயில் பொங்கல் விழாவின் போது பெண்கள் பாடும் பாடல்கள் பலவற்றை இந்த இழையில் பதிந்துள்ளேன். ஆண்கள் போடும் கோஷத்தை இந்த மடலில் பதிகிறேன். சிறுவர் சிறுமியரும், ஆடவரும் பொங்கல் விழாவன்று தம் முகத்தை அலங்கோலமாகப் புனைந்து வேஷமிடுவர். அடுப்புக்கரி & திருநீறு கொண்டு கரும்புள்ளிகளையும் வெண்புள்ளிகளையும்; முகத்திலும் உடலிலும் (இடுப்பில் ஓராடை மட்டுமே அணிந்து கொள்வர்.) இட்டுக் கோரமாக்குவர். இதற்கு சிரங்கு வேஷம் என்று பெயர். தமக்கு தோல் வியாதி வரக்கூடாது என்பதற்காகவும்; அழகு ஆரோக்கியம், செல்வம் பெருக வேண்டும் என்பதற்காகவும் இப்படி வேஷமிட்டு வேப்பங்குழைகளைக் கையிலேந்தி, இடையிலும் செருகிக் கொண்டு பின் வருமாறு ஒரு ராகத்தோடு கூட்டம் கூட்டமாக கத்திச் செல்வர்.
                                                                                                       ஆஹோ -------ஐயாகோ 
                                                                                                       ஆத்தாத்தா ------பெரியாத்தா 
                                                                                                       அம்பது மக்கள -------பெத்தாத்தா
                                                                                                        எனக்கு நாலு ....................போடாத்தா   
                                                                                                        ஆகோ ---------ஐயாகோ 
                                                                                                        காளியாத்தா கும்பம் -------கறியும் சோறும் திம்போம் 
                                                                                                        மாரியாத்தா கும்பம் ---------மாவிடிச்சா திம்போம் 
                                                                                                        பேச்சியாத்தா கும்பம் -------பெசஞ்சி வச்சா திம்போம்
விழாவுக்கான நோன்பு முடியும் நாள் என்பதை உணர்த்துவதாகவும், பிள்ளைவரம் கேட்பவருக்கு கொடுக்கக் கூடியவள் மாரியம்மன் என்ற நம்பிக்கையோடும்; இந்த குழுப்பாட்டு அமைந்துள்ளது. ரதவீதி முழுவதும் சுற்றி, கோயிலுக்குள் சென்றவுடன் கையோடும், இடுப்பில் செருகியும் அடுத்துச் சென்ற வேப்பங்குழைகளை அம்மனுக்குச் செலுத்திவிட்டு அந்தக் குவியலில் படுத்துப் புரளவும் செய்வர். வேம்பின் மருத்துவ குணத்தால் தம்மை நோய் அணுகாது என்ற நம்பிக்கை.
கண்மணி      
ஆகோ --------------ஐயாகோ      

kanmani tamil

unread,
Oct 10, 2018, 9:12:13 AM10/10/18
to mintamil
                                                                                                   அக்கா-தங்கை சக்தியைப் புலப்படுத்தும் கதை  
காளியம்மன் தான் அக்கா; மாரியம்மன் தங்கை .
காளியம்மனுக்கு குழந்தைகள் இல்லை;ஆனால் செல்வம் மிகுந்தவள் .
மாரியம்மன் வசதி குறைந்தவள்; ஆனால் அவளிடம் பிள்ளைச்செல்வம் மிகுதி.
பிள்ளை இல்லாத காளியம்மன் தங்கையின் குழந்தைகளைக் காண ஆவலோடு அவள் இருப்பிடத்திற்கு வந்து போவாளாம்.
மாரியம்மனுக்கோ அக்கா தன்  பிள்ளைகளை இப்படி அடிக்கடி வந்து பார்த்தால்; கண்ணேறு பட்டு நோயுறுற்று விடுவரே என்று கவலை வந்து விட்டதாம்.
ஒருநாள் அக்கா பிள்ளைகளைப் பார்க்க வருகிறாள் என்று தெரிந்தவுடன் குழந்தைகள் எல்லோரையும் ஒருங்கு கூட்டி பெரிய பஞ்சாரக்கூடையைக் கவிழ்த்து வைத்து மறைத்து விட்டாளாம்; குழந்தைகள் வெளியே விளையாடப் போய் உள்ளனர் என்று பொய் கூறி விட்டாளாம் மாரியம்மன். காளியம்மனுக்கோ தங்கையின் மனக்கிடக்கை புரிந்து வருத்தமுற்றாளாம். ஆனாலும் தங்கையிடம் தன்  வருத்தத்தைக் காட்டிக் கொள்ளாமல் கிளம்பித் தன் வீடு திரும்பினாளாம்.
அக்கா அப்பால் நகர்ந்தவுடன் பஞ்சாராக் கூடையைத் தூக்கிய மாரியம்மனுக்கோ அதிர்ச்சி; தூக்கி வாரிப் போட்டதாம். அவளது குழந்தைகள் எல்லாம் கோழிக் குஞ்சுகளாக மாறி இருந்தனராம். அப்புறம் அக்காவிடம் சென்று மனம் வருந்திக் கெஞ்சி மீண்டும் குழந்தைகளை மீட்டாளாம். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் முந்தைய மடலில் கூறிய ஆண்களின் கோஷமும் அமைகிறது.
கண்மணி         

Suba

unread,
Oct 10, 2018, 9:32:39 AM10/10/18
to மின்தமிழ்
On Wed, Oct 10, 2018 at 3:12 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

அருமை.
மின் தமிழுக்கு வளம் சேர்க்கும் பதிவுகள்.

சுபா

kanmani tamil

unread,
Oct 10, 2018, 9:40:16 AM10/10/18
to mintamil
பாராட்டுக்கு நன்றி சுபா 
சக 

kanmani tamil

unread,
Oct 11, 2018, 4:40:38 AM10/11/18
to mintamil
                                                                                 அங்காள ஈஸ்வரி அம்மன் கதைப்பாடல்(முத்தாலம்மன் கதைப் பாடல்) 
தகவல் தந்தவரும் திரட்டியவரும் அங்காள ஈஸ்வரி அம்மன் பாடல் என்று தான் தலைப்புக் கொடுத்து உள்ளனர். ஆனால் உள்ளே அந்தப் பெயரே இல்லை. முத்தாலம்மன் என்ற பெயர் தான் உள்ளது. அதனால் தான் அடைப்புக்குறிக்குள் அப்பெயரை இட்டு உள்ளேன்.

தானானே தானானே தாணத்தந்தம் தானானே
தொந்திக் கணபதியே கந்தனுக்கு முன்பிறந்த
கணபதியே வாருமையா
முன்னடக்கம் பிள்ளையார்க்கு கண்ணடக்கம் பொன்னாலே
கண்ணடக்கம் பொன்னாலே காற்சிலம்பு முத்தாலே
முத்தாலே தண்டைகொஞ்ச  முன்நடவாய் பிள்ளையாரே
சொல்வாக்கு தப்பாதே சக்கம்மாள் தாயாரே

மாராடி பாசிக்காரி மகிழ்வுடனே வரம்கொடம்மா
முள்கோட்டைத் தாயேநீ முன்நின்று வரம்கொடம்மா
சேவல்கொடி அழகன்அவன் திருச்செந்தூர் வேலன்அவன் (10)
தமிழுக்கு அதிபதியாம்  நல்லதமிழ் தாருமைய்யா
முருகா சரஸ்வதியே சதுர்முகனார் தேவியரே
என்நாவில் குடியிருந்து நல்லோசை தாருமைய்யா
காளியம்மன் தன்கதையை கருத்துடனே நான்பாட
மாரியம்மன் தன்கதையை மனம் மகிழ்ந்து நான்பாட
என்தாயே ஈஸ்வரியே  வலதுபும் வந்திடம்மா
வனத்தில் பிறந்தவளாம் வனபூஜை கொண்டவளாம்
பச்சரிசி வனத்திலேயும் மகிடனும் ஆண்டு வந்தான்
எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணுரானே மகிடனுமே
அரக்கிமகன் அரக்கனாம் அரனேசிவனே யென்று (20)
அருந்தவமும் செய்யுறானாம்
கரக்கண்டரைப் பார்க்கவே கடுந்தவமும் செய்யுறானாம்
ஈஸ்வரனை தான்நினைச்சு இருந்துதவம் செய்யுறானாம்
மகிடனோட தவபூஜை  தானறிந்தார் ஈஸ்வரனும்
கைலாச லோகம் விட்டு கரக்கண்டரும் வாராராம்
தவத்திலிருக்கும் மகுடனே தகுந்தவரம் கேளு என்றார்
என்குழந்தை பாலகனே என்னவரம் வேண்டுமென்றார்
என்னைப்போல் ஆண்பிள்ளை எனக்கு எதிரியும் ஆகவேண்டாம்
ஆண் பிள்ளை கையாலே  எனக்கு அழிவே வேண்டாமையா
என்று தானே மகிடனுமே வரமுந்தானே கேட்டானாம் (30)
கேடு கெட்ட அரக்கனுக்கு கேட்ட வரம் கொடுத்தாராம்
அவன் ஆடுறானாம் பாடுறானாம் அட்டகாசம் பண்ணுறானாம்
தவம்செய்யும் முனிவரோட தவத்தை யெல்லாம் அழிக்கிறானாம்
முப்பத்து முக்கோடி  முனிவர்களும் தேவர்களும்
ஒன்றாக சேர்ந்து கொண்டு மகுடன் செய்யும் கொடுமைதனை
எம்பெருமான் கண்ணனிடம் முறையிடவே போறாகளாம்
வைகுண்டம் போறாகளாம் பார்த்தாரே எம்பெருமான்
ஆண்பிள்ளை கையாலே அழிவில்லை மகுடனுக்கு
பெண்பிள்ளை கையாலே அழிவுண்டு என்று தானே
முறையாகத் தெரிந்து கொண்டு ஏது செய்வோம் என்று தானே(40)
எம்பெருமான் பார்க்கையிலே சிவனாரின் பூஜைக்கு
தரணிதனில் பூவெடுத்தாள் என் தாயே நாக கன்னி
நாககன்னி நாகராசா செய்துவரும் பூஜைதனை
தானறிந்தார் மாயவனும்
கையினால் பூவெடுத்தால் காம்பழுகி போகுமுன்னு
விரலாலே பூவெடுத்தால் வெந்தழுகி போகுமுன்னு
தங்கத்தினால் ஊசி கொண்டு  தனி மலரும் தானெடுத்தாள்
என்தாயே நாககன்னி
வெள்ளியினால் ஊசி கொண்டு விழி மலரும் தானெடுத்தாள்
என்தாயே நாககன்னி (50)
தண்ணியையும் திரட்டினாளாம் அரனோட பூஜைக்கு
என்தாயே நாககன்னி நாககன்னி நாகராசா
சிறப்புடனே பூஜைதனை  செய்துவரும் வேளையிலே
கொங்கு பெருத்த வனம் கொன்றைகள் பூத்த வனம்
மூங்கில் பெருத்த வனம் முனிவர்கள் ஆளும் வனம்
ஏலக்காய் காய்க்கும் வனம் ஈஸ்வரியாள் ஆண்ட வனம்
சாதிக்காய் காய்க்கும் வனம் தவ முனிவர் ஆண்ட வனம்
அந்த வனத்திலேயும்  அண்ணனும் தங்கையுமாய்
நாககன்னி நாகராசா பூஜைசெய்யும் வேளையிலே
வட்டமிடும் கருடனுடன் வாராரே எம்பெருமான்(60)
பார்த்தாளே நாககன்னி என்தாயே நாககன்னி
வயத்துல கர்ப்பமாச்சி என்தாயே நாககன்னி
அழுது புலம்பினாளாம்  என்தாயே நாககன்னி
அண்ணனிடம் வந்தாளாம் பார்த்தாரே நாகராசா
பூஜைக்கு வேண்டாமென்று அடித்தல்லோ விரட்டிவிட்டார்
என்தாயே நாககன்னி அழுது புலம்பிக் கொண்டு
ஒட்டாரம் காட்டுக்குள்ளே பரிதவிச்சி நின்னாளாம்
என்தாயே நாக கன்னி
ஒன்னாவது மாத்தையிலே உடம்பெல்லாம் நோகுதின்னா
2வது மாத்தையிலே தலையும் தான் சுத்துதின்னா(70)
3வது மாத்தையிலே  முகமெல்லாம் வெளுத்து நின்னா
4வது மாத்தையிலே நடையும் தளர்ந்து விட்டா
5வது மாத்தையிலே அடிவயிறும் கனக்குதின்னா

6வது மாத்தையிலே அரனாரை நினைச்சாளாம்
என்தாயே நாக கன்னி
7வது மாத்தையிலே ஏங்கி நின்னு அழுதாளாம்
8வது மாத்தையிலே எட்டெடுத்து வைக்கவில்லை
என் தாயே நாக கன்னி
9வது மாத்தையிலே தவங்கிநின்னு தான்அழுதாள்
10வது மாத்தையிலே பார்வதியைத் தான்நினைச்சா (80)
என்தாயே நாககன்னி பார்த்தாளே பார்வதியும்
குறிசொல்லும் பாப்பாத்தி  வேடம்கொண்டு பார்வதியும்
கூடை இடுப்பில்கொண்டு பிரம்பும்தான் கையில்கொண்டு
என்தாயே ஈஸ்வரியே வாராளே பார்வதியும்
என்தாயே ஈஸ்வரியே அழுவவேண்டாம் கலங்கவேண்டாம்
வலதுபுறம் நான்இருக்கேன் என்றுசொல்லி பார்வதியும்
தன்னையும் தான்காட்டினாளாம் கருத்தையும்தான் மாத்தினாளாம்
ஒட்டாரம் காட்டுக்குள்ளே ஒத்தநல்ல குலவைபோட்டு
என் தாயே ஈஸ்வரியே ஏழுபேரும் பிறந்தாளாம்  
1வது பிறந்தவளாம் காளியம்மன் பிறந்தாளாம்(90)
2வது பிறந்தவளாம் மாரியம்மன் பிறந்தாளாம்
3வது பிறந்தவளாம்  முத்துமாரி பிறந்தாளாம்
4வது பிறந்தவளாம் ராக்காச்சி பிறந்தாளாம்
5வது பிறந்தவளாம் துர்க்கையம்மன் பிறந்தாளாம்
6வது பிறந்தவளாம் பேச்சியம்மன் பிறந்தாளாம்
7வது பிறந்தவளாம் முத்தாலம்மன் பிறந்தாளாம்
என்தாயே ஈஸ்வரியே
அவள்அழகு பிறந்தஇடம் அயோத்திநகர் பட்டினமாம்
என்தாயே ஈஸ்வரியே
பம்பை பிறந்தஇடம் பளிங்குமா மேடையிலே (100)
என்தாயே ஈஸ்வரியே
பிரம்பு பிறந்த இடம் பிச்சாண்டி சன்னதியாம்
சடையே பிறந்ததம்மா சதுரகிரி மேடையிலே

என்தாயே ஈஸ்வரியே
சிலம்போ பிறந்ததம்மா சிவசக்தி மேடையிலே

உடுக்கை பிறந்ததம்மா உத்திராட்ச மேடையிலே
என்தாயே ஈஸ்வரியே நாககன்னி நாககன்னி
கடமையும்தான் முடிஞ்சிருச்சு நல்லபதவி தாரேன்என்று
சொல்லியே பார்வதியும்  சிவலோகம் அனுப்பிவைச்சா
என்தாயே ஈஸ்வரியே (110)
அக்காதங்கை ஏழுபேரும் அடங்காத தேவகன்னி
ஊட்டுநல்ல வேண்டுமென்று பரமனையும் பார்க்கப்போனாள்
என்தாயே ஈஸ்வரியே மலையாம் மலைகடந்து

வனமாம் வனம்கடந்து வந்தாளே எழுபேரும்

என்தாயே ஈஸ்வரியே
எமனோட வாசலிலே எருமைக்கடா காவுகொண்டாள்
பரமனோட வாசலிலே பால்பசுவை காவுகொண்டாள்
என்தாயே ஈஸ்வரியே
பார்த்தாரே பரமனுமே மோசம்போனோம் என்று சொல்லி
தர்ப்பப்புல்லை புடுங்கினாரே வைரவனை படைச்சாரே(120)

வைரவனை கையில்கொண்டு வாராளே வனப்பளிச்சி
என்தாயே ஈஸ்வரியே
பச்சரிசி வனத்துலேயும் மகிடாசுரன் உறங்குறானே
அவனையும்தான் கொன்றுவாம்மா
வரமும் தாரேன் என்று பரமனுமே சொன்னாரே
என்தாயே ஈஸ்வரியே
போனாளே ஏழுபேரும்  உறங்குறான் மகிடாசுரன்
என்தாயே ஈஸ்வரியே
பனை மரத்தை தான் புடுங்கி பந்துபோல வீசினாளாம்
என்தாயே ஈஸ்வரியே(130)  
மகிடனோட சண்டைபோட்டா
மணிக்குடலைத் தான்பிடுங்கி மாலைபோல் போட்டாளே
என்தாயே ஈஸ்வரியே
எலும்பையும் தான்முறிச்சி இரத்தத்தையும் குடிச்சாளாம்
என்தாயே ஈஸ்வரியே
அக்காதங்கை ஏழுபேரும் கைலைமலை போறாளே
கோபத்தோட வாராளே  என்தாயே ஈஸ்வரியே
பரமனிடம் வந்தாளே மகுடனை அழித்துவிட்டோம்
வரமுந்தானே வேண்டுமின்னு என்தாயே ஈஸ்வரியே
பார்த்தாரே பரமனுமே ஒருவண்டி முத்தெடுத்து(140)
காளியிடம் கொடுத்தாரே என்தாயே ஈஸ்வரியே
பச்சைமுத்தை தான்எடுத்து  பவளம்போல கொடுத்தாரே
முத்துக்களைத் தானெடுத்து பூலோகம் போகச் சொல்லி
பரமனும் சொன்னாரே என்தாயே ஈஸ்வரியே
பார்த்தாளே ஏழுபேரும் ஏச்சிப்புட்டான் என்றுசொல்லி
பச்சைமுத்தைத் தான்எடுத்து பரமனுக்கே போட்டாளே
என்தாயே ஈஸ்வரியே
உச்சியிலே போட்டமுத்து உடம்பையும்தான் துளைக்குதின்னார்
மார்புல போட்டமுத்து மார்பையும்தான் துளைக்குதின்னார்
கணுக்காலில் போட்டமுத்து  காலெல்லாம் நோகுதின்னார்(150)
கண்ணுல போட்டமுத்து கண்ணே தெரியலன்னார
காந்துதே காந்துதே காந்தாரி போட்ட முத்து  
எரியுதே எரியுதே ஏழுபேரும் போட்ட முத்து
என்றுசொல்லி பரமனுமே ஏங்கிநின்னு அழுதாரே
என்தாயே ஈஸ்வரியே  பார்த்தாளே பார்வதியும்
தலைவாழை இலைவிரிச்சு சங்கரனை படுக்கவைச்சா
ஈனாத வாழையிலே ஈஸ்வரரை படுக்கவைச்சா
அண்ணனையும் தான்நினைத்தாள் என்தாயி பார்வதியும்
பார்த்தாரே மாயக்கண்ணன் குழலோடு வந்தாரே
காராம் பசுவும் கொண்டு  கக்கத்திலே கம்பளியாம்(160)
எங்கமாயக் கண்ணனுக்கு கடைவாயில் சங்குழலாம்
எங்கமாயக் கண்ணனுக்கு
நானூறு மாட்டுலேயும்  நடுப்பாலை பீச்சி வந்தார்
எங்கமாயக் கண்ணன் கெண்டியிலே பாலெடுத்து
எங்கமாயக்கண்ணன் கடைவாயில் ஊத்தினாராம்
என்தாயே ஈஸ்வரியே
பச்சைமுத்தைத் தான்வாங்கி வறுத்துநல்லோர் கொடுத்தாரே

முந்தியையும் தான்ஏந்தி முழங்காலும் தானும்போட்டு
பார்வதி தேவியுமே மடிப்பிச்சை கேட்டாளே
வேர்வையும் வழித்துப் போட்டா வேப்பமரம் ஆனதுல்ல(170)
வேப்பக்குலையை தான்ஒடிச்சி  பரமனுக்கு வீசிவிட்டா.
என்தாயே ஈஸ்வரியே
பார்த்தாளே ஏழுபேரும் அடங்காத தேவகன்னி
முத்தையும்தான் இறக்கினாளாம்  பரமனுமே எழுந்துவிட்டார்
என்தாயே ஈஸ்வரியே
பரமனிடம் விடையும்பெற்று பூலோகம் காக்கப்போறோம்
என்றுசொல்லி ஏழுபேரும்  பூலோகம் போய்ச்சேர்ந்தார்.
என்தாயே ஈஸ்வரியே
ஒட்டாரம் காட்டோரம் ஓலை பறிகொடுத்தா

தில்லைவனக் காட்டுக்குள்ளே சேலை பறிகொடுத்தா(180)
என்தாயே ஈஸ்வரியே
வந்து இறங்கினாளாம் மக்களுக்கு முத்து போட
என்தாயே ஈஸ்வரியே
பார்த்தார்கள் பெரியவர்கள் நாட்டுப் பெரியவர்கள்
நல்லமனிதர் ஒன்றுகூடி ஏதுசெய்வோம் என்றுஎண்ணி
எம்பெருமானை வேண்டிநிற்க  எம்பெருமான் அருளாலே
அக்காதங்கை ஆறுபேர்க்கும் அவரவர்க்கு ஏற்றதொரு
ஆலயமும் ஏற்படுத்தி ஆறுகால பூஜைகளும்
ஆண்டுக்கொரு திருவிழாவும் அனைவருமே சேர்ந்துவந்து
ஆலயத்தில் கூடிமகிழ உலகத்  தாயான(190)
எங்க முத்தாலம்மனுக்கு
தனித்துநின்ன தாயான தங்கமுத்தா லம்மனுக்கு
வாருமம்மா முத்தாளம்மா உனக்கேத்த ஆலயமும்
நாங்கள் அமைத்துதாறோம் என்றுசொல்லி மக்களெல்லாம்

சொல்லி வருகையிலே என்தாயே முத்தாளம்மா
எனக்கேத்த கோயிலும் எங்குமே இல்லையே
எனக்கேத்த இடமும்தான் முச்சந்தியாம் என்றுசொல்லி
என்தாயே முத்தாளம்மா அன்றுபிறந்து அன்றழிவேன்
மக்கள் செய்யும் பூஜையிலே  மனமுவந்து வந்திடுவேன்
என்றுமே சொன்னாளாம் அன்றுபிறந்து அன்றழிவேன்(200)
வணங்கிநின்ற மக்களுக்கு வரங்களும் நான்கொடுப்பேன்
செட்டியாரு செய்துவரும் உருவத்திலே நான்வருவேன்
அன்றுபிறந்து அன்றுஅழிவா என்றுதானே அறிந்துகொண்டு
7வது தாயான  எங்க முத்தாலம்மனுக்கு
ஏற்றதொரு இடமுந்தானே முச்சந்தியாம் என்றுசொல்லி
என்தாயி முத்தாளைக்கு மக்கள்செய்யும் பூஜையிலே
அக்காதங்கை ஆறுபேரின் அருள்வாக்கும் கிடைத்திடுமாம்
என்றுமே அறிந்துகொண்டு அம்மாவந்து இறங்கியிருக்கா
குளுமையும் தான்செய்ய வேண்டும்  என்தாயே ஈஸ்வரியே
என்று பெரியவர்கள் உண்மையாகப் பேசிக்கொண்டு(210)
முளைப்பாரி போடவேண்டும் சாம்பானைக் கூப்பிட்டு
ஒருவீடு தப்பாம சாட்டிவாடா சாம்பாகுட்டி
என்று நல்லோர் சொன்னார்கள் என்தாயே ஈஸ்வரியே
திருமுகத்து பெண்களெல்லாம்  ஒருமுகமாய் கூடிநின்று
சின்னகொட்டான் பெட்டிகொண்டு தெருக்களெல்லாம் பயிரெடுத்து
வாங்களம்மா தோழிமாரே அம்மாவுக்கு முளைபோட
என்தாயே ஈஸ்வரியே
காரா மணிபயிறு கலந்துவைச்ச தட்டpபயறு
சிறு பயறும் தானெடுத்து என்தாயே ஈஸ்வரியே  
கம்பங் கொல்லையிலே கம்பந்தட்டை எடுத்துவந்து(220)
சம்சாரி படப்புலயும் சம்பாவைக்க ரெண்டெடுத்து
என் தாயே ஈஸ்வரியே
ஆட்டாந் தொழுதிறந்து ஆட்டெருவ தான்எடுத்து
மாட்டாந் தொழுதிறந்து மாட்டெருவ தான்எடுத்து
என்தாயே ஈஸ்வரியே

குசவனாரு சுல்லையிலே குடத்தோடு எடுத்துவந்து
வட்டவட்ட ஓடுதட்டி என்தாயே ஈஸ்வரியே
ஆட்டெருவ கீழ்பரப்பி  அம்மாமுத்த மேல்பரப்பி
மாட்டெருவ கீழ்பரப்பி மாரிமுத்தை மேல்பரப்பி
என்தாயே ஈஸ்வரியே(230)
முளைபோட்ட மூணாம்நாளு  முளைகளெல்லாம் பீலிவிட
பீலியிட்ட சத்தம்கேட்டு பெண்களெல்லாம் நீராடி
நீராடி நீர்தெளித்து நீலவர்ணப் பட்டுடுத்தி
வாங்களம்மா தோழிமாரே வளைஞ்சிநின்னு கும்மியடிப்போம்
என்தாயே முத்தாளம்மா
வெள்ளிக் கிழமையன்று வெள்ளிரதம் போலிருப்பா
என் தாயே முத்தாளம்மா
சனிக்கிழமை இரவுகொண்டு சல்லிவேரும் போட்டிடுமாம்
ஞாயிற்று கிழமையன்று நல்லமுளை கொண்டிடுமாம்
என்தாயி முத்தாளைக்கு என்தாயி ஈஸ்வரிக்கு(240)
பச்சைமண்ணை எடுத்துத்தானே பாங்குடனே பீடம்செய்து
என்தாயி முத்தாளைக்கு  என்தாயி ஈஸ்வரிக்கு
ஈரமண்ணை எடுத்துத்தானே இன்பமுடன் பீடம்செய்து
பாலரெல்லாம் ஒன்றுசேர்ந்து பாங்குடனே பீடம்கட்டி
பாசத்துடன் அழைத்திடுவோம் என்தாயி முத்தாளையும்
செட்டியொரு தானாக செய்துவரும் உருவத்திலே
துள்ளியே வந்திடுவாள் பாலர்கள் செய்துவைத்த
பீடத்திலும் வீற்றிருப்பாள் என்தாயி முத்தாளையும்
செவ்வாய் கிழமையன்று வெளியேற நினைச்சிடுவா
என்தாயே முத்தாளம்மா  பெண்களெல்லாம் ஒன்றுகூடி(250)
குளித்து திலகமிட்டு என்தாயே முத்தாளம்மா
தூத்து தொளிக்கச்சொன்னா தோரணங்கள் கட்டச்சொன்னா
வேப்பிலையும் தோரணமும் வாங்கரும்பும் சாத்துவாராம்
மாவிலையாம் தோரணமாம் எங்கமுத்தா லம்மனுக்கு
கோழி கொழுக்கட்டையாம்  முட்டை முருங்கைக்காயாம்
என்தாய்க்குப் படைச்சிவச்சி உறுமிக்கொட்டும் தான்முழங்க
கொட்டுமேளம் தான்முழங்க முளைப்பாரி தலையில்வைச்சி
ரதவீதி சுத்திவந்து என்தாயி முத்தாளம்மா
முச்சந்தியில் வீற்றிருப்பா காதோலை கருகமணி
இடதுபுறம் வீற்றிருக்க  மஞ்சளையும் குங்குமமும்(260)
வலதுபுறம் வீற்றிருக்க என்தாயி முத்தாளைக்கு
பானக்காரம் கரைச்சிவைச்சி வேப்பம்பாலும் கரைச்சிவைச்சி
துள்ளுமாவும் இடிச்சிவைச்சி என்தாயி முத்தாளைக்கு
இளநீர்க்கண் திறந்துவைச்சி சித்தாடை உடுத்திவைச்சி
எலுமிச்சை மாலைபோட்டு  நிறமாலை தானும்சாத்தி
என்தாயி முத்தாளைக்கு
தென்னம்பூவை சிரசில்வைச்சி கும்பக்கலயம் தானும்வைச்சி
முத்துப்போல இலங்குறாளாம்  எங்கள் முத்தாளம்மா
வெண்பொங்கல் தானும்வைச்சி அழைக்கிறோம் மாதாவே
வருந்தி அழைக்கிறேனே வனக்கிளியே வந்திடம்மா(270)
கூப்பிட்டு நான்அழைச்சேன் குயில்மொழியே வந்திடம்மா
என்தாயே முத்தாளம்மா மஞ்சள் சேலைக்காரி
மாராடி பாசிக்காரி  மடிநிறைந்த மகிழம்பூவாம்
அடுக்குமல்லி தொடுக்குமல்லி ஆனந்தமாய் பிச்சிரோஜா
என்தாயே ஈஸ்வரியே
கூப்பிட்ட சத்தமும்தான்  கோவிலுக்கு கேக்கலையோ
அழைக்கிற சத்தமுந்தான் ஆலையமும் கேக்கலையோ
கல்லான உன்மனசு கரையவேணும் இந்தநேரம்
இரும்பான உன்மனது இளகவேணும் இந்தநேரம்
என்தாயே முத்தாளம்மா ஆறுபேரும் வாராளாம்(280)
பம்பையும் தான்முழங்க  உறுமிக் கொட்டும் தான்முழங்க
ஆனந்தமா வாராளே வாராளே வாராளே
மாகாளி வாராளம்மா சிலம்போசை கேட்குதம்மா
காவிநல்ல பட்டுடுத்தி காளியம்மன் வாராளே
மஞ்சள்நல்ல பட்டுடுத்தி மாரியம்மன் வாராளே
முகத்து அழகுக்காரி  முத்துமாரி வாராளே
அரக்குநல்ல பட்டுடுத்தி ராக்காச்சி வாராளே.
சிவப்புநல்ல பட்டுடுத்தி துர்க்கையம்மன் வாராளே
பச்சைநல்ல பட்டுடுத்தி பேச்சியம்மன் வாராளே
முத்துமுத்தாய் பட்டுதுலங்க முத்தாளம்மா வாராளே(290)
என்தாயே ஈஸ்வரியே
ஏற்றதொரு பட்டுடுத்தி ஏழுபேரும் வாராளே
ஒத்தநல்ல குலவைபோட்டு ஓங்காரி வாராளம்மா
குற்றம்குறை இருந்தாலும் ஏழைமக்கள் பூஜையம்மா
குணமயிலே ஏத்துக்கம்மா என்தாயி முத்தாளம்மா
சாமக்கோழி கூவையிலே சேவலையும் காவுகொண்டா
மஞ்சள்பாலைத் தான்குடிச்சா பானக்காரம் தான்குடிச்சா
துள்ளுமாவும் சாப்பிட்டாளாம் வெண்பொங்கலும் சாப்பிட்டாளாம்
என்தாயி ஈஸ்வரியாள்  வயிறுநல்லா குளிர்ந்திருச்சி
பசியும்நல்லா அடங்கிருச்சி மனசும்நல்லா நிறைஞ்சிருச்சி(300)
மக்களுக்கு நல்லவரம் தந்தேன் என்று  
என்தாயே ஈஸ்வரியாள்
மஞ்சளையும் காக்கவேணும் குங்குமத்தைக் காக்கவேணும்
உழைக்கிற மக்களுக்கு உள்ளம்மகிழ வரம்கொடம்மா
என்தாயே முத்தாளம்மா நாளைக்கு பயணமின்னு
ஏங்கிநின்னு அழுதாயோ முகம்கோணி நின்னாயோ
என்தாயி முத்தாளம்மா  வருந்தாதம்மா ஏங்காதம்மா
வருகிற வருசத்திலே வளரும்பிறை நாளையிலே
உன்னையும் தான் அழைக்கிறோமே
முளைப்பாரி தானும்போட்டு  குளுமையும் தான்செய்திடுவோம்(310)
என்று சொல்லி மக்களெல்லாம் ஒரு முகமாய் நிக்கையிலே
என் தாயி முத்தாளம்மா என்தாயி ஈஸ்வரியாள்
மனம்மகிழ்ந்து போறாளே மகிழ்ச்சியுடன் போறாளே
என்தாயே முத்தாளம்மா
அன்றுபிறந்து அன்றழிவா அரசிலையில் வீத்திருப்பா
ஒரு நாளிருந்துமே
உலகமே ஆண்டிடுவா உத்தமியாம் முத்தாளம்மா
சித்திரைத்தேர் ஓடுதம்மா சிவகாசி வீதியிலே
சிவகாசி பத்ரகாளி சேவிப்போர்க்கு வரம்தருவா
ஆயிரங் கண்ணுடையாள் அனைவரையும் காத்திடுவாள்(320)
சக்கம்மா தாயிஅம்மா  சமயம்வந்து வரம்கொடுப்பா
சிவகாசி மாரியம்மா சீக்கிரம் வரம்கொடுப்பா
இருக்கன்குடி மாரியம்மா இருந்துநல்லா வரம்கொடுப்பா
சமயபுரம் மாரியம்மா சாய்ந்திருந்து வரம்கொடுப்பா
கண்ணபுர மாரியம்மா கண்ணையும்தான் கொடுத்திடுவா
வேற்காட்டு மாரியம்மா வேண்டும்வரம் தான்கொடுப்பா
கடும்பாடி மாரியம்மா கருத்தையும்தான் கொடுத்திடுவா
கோவியனூர் மாரியம்மா கேட்டவரம் தான்கொடுப்பா
பாளையத்து மாரியம்மா பார்த்திருந்து வரம்கொடுப்பா
முன்னிருக்கும் முத்தாளம்மா பூடத்தின் அருகினிலே (330)
நின்றுபாடும் அருந்தவப் புதல்வி யம்மா
என்தாயே முத்தாளம்மா
மங்களமாம் மங்களம் எங்கும் நிறைந்திருக்கும்

மங்களம் .
(முற்றும்) கண்மணி 
Message has been deleted

தேமொழி

unread,
Oct 11, 2018, 4:54:13 AM10/11/18
to மின்தமிழ்
இணையத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை....

அதனால் இணைப்பாக மீண்டும் ஒரு முறை 

<span style="font-size:10.5pt;font-family:"Courier New";color:rgb(0,0,0);font-variant-numeric:normal;font-variant-east-asian:nor

முத்தாலம்மன் கதைப் பாடல்.txt

kanmani tamil

unread,
Oct 11, 2018, 6:14:42 AM10/11/18
to mintamil
இதோ தேமொழி 
மொத்தம் 333 அடிகள் தான்.
நான் திறந்து பார்க்கும் போது முழுமையாகத் தான் உள்ளது.
மீண்டும் Word doc.ஆக...... 
சக 

--
முத்தாலம்மன் கதைப் பாட்டு .docx

kanmani tamil

unread,
Oct 11, 2018, 2:30:36 PM10/11/18
to mintamil
                                                                                                                இழை காட்டும் போது பாடும் பாடல் 
              பிறந்த குழந்தைக்கு இழை கட்டுவது தவறாமல் எல்லா மக்களாலும் பின்பற்றப்படும் பழக்கம் ஆகும். குழந்தை பிறந்த ஏழாம் நாள் அல்லது; பதினோராம் நாள் அல்லது; பதினேழாம் நாள் அல்லது; இருபத்தோராம் நாள் அல்லது; முப்பதாம் நாள் குழந்தைக்கு இழை கட்டுவர். எந்நேரமும் குழந்தை அழுது கொண்டே இருந்தால் சீக்கிரம் இழை கட்ட முடிவு செய்வர். எக்காரணம் கொண்டும் முப்பது நாட்களுக்கு மேல் பிந்த மாட்டார்கள். 
              இழை என்பது மஞ்சளில் நனைத்த நூலிழை ஆகும். இதைக் குழந்தையின் இடுப்பில் கட்டும் உரிமை அக்குழந்தையின் தகப்பனுடன் பிறந்த சகோதரிக்கும் (அப்பன் கூடப் பிறந்த கப்பலரசி என்று வேடிக்கையாக அழைக்கப்படுவாள்), தந்தைவழித் தாத்தாவுடன் பிறந்த சகோதரிக்கும் உண்டு. அப்படிப்பட்ட உறவுமுறையில் யாரும் இல்லை என்றால் தந்தையின் குடும்பத்துப் பெரிய மனுஷியாக யார் கருதப்படுகிறாரோ அவர் கட்டுவார். குழந்தையின் தாய்வழிச் சொந்தம் யாருக்கும் இழை காட்டும் உரிமை கிடையாது.  சடங்கை நிகழ்த்த குழந்தையின் தந்தைவழித் தாத்தாவும், பாட்டியும் தம் உறவினர், நண்பர் அனைவரையும் அழைத்துக் கொண்டு சம்பந்தி வீட்டிற்கு வருவர். வரும்போது குழந்தைக்குச் சீரும் கொண்டு வருவர். இது அவரவர் வசதியைப்  
பொருத்தது. பேரன்/பேத்திக்கு தங்கத்தில் இடுப்புக்கொடியும், புத்தாடையும்,எடுத்து வருபவரும் உள்ளனர். அது போதாதென்று எண்ணுபவர் கழுத்துக்கு, கைக்கு, விரல்களுக்கு, கணுக்காலுக்கு என எல்லா உறுப்புகளிலும் அணியக்கூடிய அணிகலன்களையும் சேர்த்துக் கொண்டு வருவதும் உண்டு. மங்களப் பொருட்களான இனிப்பு, பழம், வெற்றிலைபாக்கு என கொண்டு வந்த அனைத்தையும் தாம்பாளத் தட்டுகளில் பரப்பி வைப்பர். சீர்த் தட்டுகளின் எண்ணிக்கை ஒற்றைப் படையில் இருக்கவேண்டும்.(ஐந்து தட்டுகள் தவிர்க்கப்படும்---அஞ்சோ! நஞ்சோ! என்று அதற்கொரு காரணமும் சொல்வர்.)           
                   குழந்தை பெற்ற மகளின் பெற்றோர் ஒரு சுளகின் அகலமான பகுதியில் உப்பு, வற்றல், இனிப்பு(அந்தக்காலம் கருப்பட்டி வட்டு தான் வைப்பர். இப்போது அப்பழக்கம் மாறிவிட்டது.) முதலியவற்றை வைத்து அதற்குமேல் குழந்தையுடைய தாய் மாமனின் பட்டு வேஷ்டியை விரித்து வைத்திருப்பர். தாய்மாமன் இல்லையெனில் தாய்வழித் தாத்தாவின் பட்டு வேஷ்டியை விரிப்பர்.(பட்டு வேஷ்டி இல்லாத பட்சத்தில் தான் பருத்தி வேஷ்டியை விரிப்பர்.) தாய்மாமனும் இல்லை; தாய்வழித் தாத்தாவும் இல்லையெனும் பொழுது தாயின் திருமணச்சேலை விரிக்கப்படும். அந்த விரிப்பின்மேல் குழந்தையைப் படுக்க வைப்பர்.
குழந்தையின் இடுப்பில் உரிமைப்பட்டவர் இழையைக் கட்டியவுடன் குழந்தையின் தந்தைவழிச் சொந்தமுள்ள பெண்கள் மூன்றுபேர் அல்லது ஐந்துபேர் அந்தச் சுளகைப் பிடித்திருப்பர். அந்தச் சுளகில் வைத்து குழந்தையைப்  புடைப்பர். அப்படிப் புடைக்கும் போது ஒவ்வொரு முறை புடைத்தவுடன் சுளகை ஒரு சுற்று சுற்றி அதற்குப் பின்னர் அடுத்த புடைப்பு என; மொத்தம் மூன்று முறை. அப்புடைப்பின் போது ஒரு பாட்டு பாடும் மரபு உள்ளது. அப்பாடல் இதோ:
                                                                                      சொளகு நெறைய தந்த தாயே ---உலகம் ஆள வரமும் தா 
                                                                                      உலகம் ஆள வந்தவனே/வந்தவளே ---சொளவு நெறைய வந்தவனே /வந்தவளே 
                                                                                      மடி நெரப்பித் தந்தவனே/தந்தவளே ---உலகம் போற்ற வந்தவனே/வந்தவளே 
                                                                                      உறவு மெச்ச, ஊரு மெச்ச, நாடு மெச்ச      
                                                                                      பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழணும்

                                                                                      அங்குட்டு கேக்குறத இங்கிட்டு சொல்லக் கூடாது 
                                                                                      இங்கிட்டு கேக்குறத அங்குட்டு சொல்லக்கூடாது 
                                                                                      அக்கம் பக்கம் பாத்துப் பேசணும்.
சுளகில் போட்டுப் புடைக்கும் சம்பிரதாயம் குழந்தையை காத்து கருப்புகிட்ட இருந்து காப்பாற்றச் செய்யும் சடங்கு எனலாம். பாடலின் இறுதி மூன்று அடிகள் இரு வீட்டாரின் உறவு முறியாமல் இருக்க உதவும் செயல்பாட்டுமுறை ஆகும். இது குழந்தைக்குச் சொல்வதுபோல் அதன் தாய்க்குச் சொல்வது ஆகும்.
                     இழை கட்டியவர் குழந்தையை அதன் தாயிடம் கொடுப்பார். தாய் தன்  குழந்தையைப் புகுந்த வீட்டுப் பெரியோர் அனைவரிடமும்(தன் கணவன் உட்பட) கொடுத்து ஆசீர்வாதம் வாங்குவாள். பின்னர் தன் தாய்வழிச் சொந்தங்களிடம் கொடுத்து அவ்வண்ணமே வாழ்த்துக்களைப் பெறுவாள். பட்டு வேஷ்டி/சேலைக்கு அடியில் வைக்கப்பட்டிருக்கும் உப்பு &வற்றலை எடுத்து குழந்தையையும் தாயையும் தலையைச் சுற்றி திருஷ்டி கழிப்பர். எல்லோருக்கும் இனிப்பு வழங்குவர். அதற்குப் பிறகு வந்த விருந்தினருக்கு உணவு பரிமாறப்படும்.  
கண்மணி 

.

kanmani tamil

unread,
Oct 28, 2018, 1:44:43 PM10/28/18
to mint...@googlegroups.com
 சென்ற பதிவில் ஒரு  பிழைதிருத்தம் 
                      இழை காட்டும் போது பாடும் பாடல் ---கட்டும்
சக   

kanmani tamil

unread,
Oct 29, 2018, 1:44:20 AM10/29/18
to mint...@googlegroups.com

---------- Forwarded message ---------
From: kanmani tamil <kanmani...@gmail.com>
Date: Sat, Jul 28, 2018 at 7:06 PM
Subject: Re: [MinTamil] சிவகாசி வட்டார வாய்மொழிப் பாடல்கள்
To: pitchaimuthu2050 <pitchaim...@gmail.com>

ரயிலு போறதப் பாருங்கம்மா -ரயிலு 
சுத்திப் போறதப் பாருங்கம்மா 
ரயிலுத் தடம் போல பேச்சியம்மாவுக்கு 
ரவிக்கை மின்னலப் பாருங்கம்மா .

பஸ்ஸு போறதப் பாருங்கம்மா -பஸ்ஸு 
பாஞ்சு போறதப் பாருங்கம்மா 
பஸ்ஸுத் தடம்போல பேச்சியம்மாவுக்கு 
பல்லு வரிசையப் பாருங்கம்மா.

மோட்டார் போறதப் பாருங்கம்மா -மோட்டார் 
மோதிப் போறதப் பாருங்கம்மா 
மோட்டார் தடம் போலப் பேச்சியம்மாவுக்கு 
முத்து வரிசையப் பாருங்கம்மா .

காரு போறதப் பாருங்கம்மா -காரு 
கவுந்து போறதப் பாருங்கம்மா 
காருத்தடம் போல பேச்சியம்மாவுக்கு 
கழுத்து அட்டிய பாருங்கம்மா 

சைக்கிள் போறதப் பாருங்கம்மா -சைக்கிள் 
சாஞ்சு போறதப் பாருங்கம்மா 
சைக்கிள் தடம் போல பேச்சியம்மாவுக்கு 
சலங்க மணிக பாருங்கம்மா 

குதிரை போறதப் பாருங்கம்மா- குதிரை
குதிச்சிப் போறதப் பாருங்கம்மா
குதிரைத்தடம் போல பேச்சியம்மாவுக்கு 
குஞ்சத்தழகைப் பாருங்கம்மா 

யான வர்றதப் பாருங்கம்மா -யான 
அசஞ்சி வர்றதப் பாருங்கம்மா 
யானத் தடம் போல பேச்சியம்மாவுக்கு 
அழகுச்  சங்கிலி  பாருங்கம்மா 

பாம்பு போறத பாருங்கம்மா 
பாம்பு பதுங்கிப் போறதப் பாருங்கம்மா 
பாம்புத் தடம்போல பேச்சியம்மாவுக்கு 
பதக்க மின்னலப் பாருங்கம்மா .

நெருஞ்சி பூத்ததப் பாருங்கம்மா -நெருஞ்சி              
நெருக்கிப் பூத்ததப் பாருங்கம்மா 
நெருஞ்சிப் பூப்போல பேச்சியம்மாவுக்கு 
நெத்திச் சூடியப் பாருங்கம்மா .

கத்திரி பூத்ததைப் பாருங்கம்மா -கத்திரி 
கலந்து பூத்ததப் பாருங்கம்மா 
கத்திரிப் பூப்போல பேச்சியம்மாவுக்கு 
கழுத்தில் மணிமால பாருங்கம்மா .

கோவ படந்ததைப் பாருங்கம்மா -கோவ 
கோத்துப் படந்ததைப் பாருங்கம்மா 
கோவைப்பழம் போல பேச்சியம்மாவுக்கு 
கொண்டையழகப் பாருங்கம்மா 

பாவ படந்ததைப் பாருங்கம்மா- பாவ  
பத்திப் படந்ததைப் பாருங்கம்மா 
பாவப்பழம் போல பேச்சியம்மாவுக்கு 
பாத அழகப் பாருங்கம்மா 

சேரப்படைந்ததப்  பாருங்கம்மா -சேர 
சுத்திப் படந்ததைப் பாருங்கம்மா 
சேரப் பழம் போல பேச்சியம்மாவுக்கு 
சொக்கட்டா மேடையைப் பாருங்கம்மா .
(இன்னும் வரும் ) 
கண்மணி 

2018-07-28 11:18 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:

///எழுதும் பாேது, வாய் மாெழிப்பாட்டை வாய்மாெழி வடிவில் இல்லாமல், இலக்கிய எழுத்து வடிவமாக மாற்றப்படுகிறது.

எங்கே? எப்போது ? யார் மாற்றினார்கள்?

ஒவ்வாெரு இடத்துக்கும் ஒவ்வாெரு சாெல்லாடல் உண்டு அல்லவா? இலக்கிய நடைக்கு மாற்றும் பாேது அந்த நடை அழிக்கப்படுகிறது அல்லவா?

உதாரணமாக
ஒற்றையடிப் பாதை என்பதை
ஒத்தையடிப்பாதை என்பதுதான் வாய்மாெழிப்பாட்டாக இருக்கும்.

ஆனால் இதை இலக்கிய நடையாக மாற்றுவது என்பது, ஏற்புடையதா என்ற கேள்வி மிகு நீண்ட நாளாக இருக்கிறது.

ஏற்புடையது இல்லை.ஏனெனில் அந்தப் பேச்சுமொழி உயிரோட்டமுடையது. அந்த உயிர்ப்பைக் கெடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை.

தாங்களே கூறுங்களேன். வாய்ப்பாட்டை, தமிழ் இலக்கண வரம்புகளுக்குரிய சாெற்களாக மாற்றுவது என்பது...

வாய்மாெழிப் பாட்டின் தன்மையை மாற்றுமா? இல்லையா?

மக்கள் பாடிய சாெல்லை அப்படியே எழுதுவது நல்லதா? அல்லது தமிழ் இலக்கண வரம்பை அவர்களின் வார்த்தைகளுக்கு காெடுப்பது நன்றா?

யாராவது அப்படி மாற்றினால் அவர்களுக்கு நாட்டார் இலக்கியத்தின்(வாய் மொழி இலக்கியத்திற்குத்  தமிழுலகில் எங்கள் முன்னோர் கொடுத்திருக்கும் பெயர்.)  அருமை தெரியவில்லை என்று பொருள். இந்த நாட்டார் இலக்கியம் பல சமூக வரலாறுகளைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் பொக்கிஷம் .
அது மட்டுமல்ல; இந்த பாமரத் தமிழை உச்சரிக்கும் போது ஒலி எழுமிடத்திலும் , ஒலி உருவாக்கும் உறுப்பிலும் ஏற்படும் சுகமான அனுபவத்தை வேறு       எந்தச் செவ்வியல் இலக்கியத்திலும்  கூடப் பெற முடியாது. ஒவ்வொரு பாடலும் ஒரு உருண்டை வெண்ணெயை விழுங்குவது போல இதமாக இருக்கும்.
கண்மணி  

2018-07-26 9:34 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
I'll explain on 10th August. 
Wait. 
Sk

On Thu, 26 Jul 2018 9:25 am PitchaiMuthu, <pitchaim...@gmail.com> wrote:

சரி கண்மணி அவர்களே.

எழுதும் பாேது, வாய் மாெழிப்பாட்டை வாய்மாெழி வடிவில் இல்லாமல், இலக்கிய எழுத்து வடிவமாக மாற்றப்படுகிறது.

ஒவ்வாெரு இடத்துக்கும் ஒவ்வாெரு சாெல்லாடல் உண்டு அல்லவா? இலக்கிய நடைக்கு மாற்றும் பாேது அந்த நடை அழிக்கப்படுகிறது அல்லவா?

உதாரணமாக
ஒற்றையடிப் பாதை என்பதை
ஒத்தையடிப்பாதை என்பதுதான் வாய்மாெழிப்பாட்டாக இருக்கும்.

ஆனால் இதை இலக்கிய நடையாக மாற்றுவது என்பது, ஏற்புடையதா என்ற கேள்வி மிகு நீண்ட நாளாக இருக்கிறது.

தாங்களே கூறுங்களேன். வாய்ப்பாட்டை, தமிழ் இலக்கண வரம்புகளுக்குரிய சாெற்களாக மாற்றுவது என்பது...

வாய்மாெழிப் பாட்டின் தன்மையை மாற்றுமா? இல்லையா?

மக்கள் பாடிய சாெல்லை அப்படியே எழுதுவது நல்லதா? அல்லது தமிழ் இலக்கண வரம்பை அவர்களின் வார்த்தைகளுக்கு காெடுப்பது நன்றா?

On Jul 26, 2018 8:55 AM, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
No, Isaiyiniyan. 
It was collected by me and my students. 
Sk 

On Wed, 25 Jul 2018 11:32 am இசையினியன், <pitchaim...@gmail.com> wrote:
அருமை கண்மணி. சிறந்த தாெகுப்பு. இக்காலத் தேவை என்பதும் உண்மைதான். தாெடருங்கள்.

இங்கு பதியப்படுவது அச்சில் உள்ளதா?
அல்லது மக்கள் பாட பதியப் பெற்றதா? என்ற சந்தேகம் வந்துவிட்டது எனக்கு.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/q-VGGCEZ7JU/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Oct 29, 2018, 1:49:01 AM10/29/18
to mint...@googlegroups.com
---------- Forwarded message ---------
From: kanmani tamil <kanmani...@gmail.com>
Date: Sun, Jul 29, 2018 at 10:36 AM
Subject: Re: [MinTamil] சிவகாசி வட்டார வாய்மொழிப் பாடல்கள்
To: pitchaimuthu2050 <pitchaim...@gmail.com>

மேற்கே விழுந்த சடை முத்துமாரியம்மா 
அவ மேல்கடலு  நீராடும் 
கண்ணே நூறு காளி 

வடக்கே விழுந்த சடை முத்துமாரியம்மா 
அவ வடகடலு நீராடும் 
கண்ணே நூறு காளி 

உச்சியில் விழுந்த சடை முத்துமாரியம்மா 
அவ உலகமெங்கும்  நீராடும் 
கண்ணே நூறு காளி.

 கிழக்கே விழுந்த சடை முத்துமாரியம்மா 
அவ கீக்கடல் நீராடும் 
கண்ணே நூறு காளி.

தெக்கே விழுந்த சடை முத்துமாரியம்மா 
அவ தென்கடல் நீராடும் 
கண்ணே நூறு காளி.

பக்கச்  ச டையிலும் முத்துமாரியம்மா 
அவ பாம்பு வந்து கூத்தாடும் 
கண்ணே நூறு காளி 

ஓரச் சடையிலும் முத்துமாரியம்மா 
அவ குயிலிருந்து கூத்தாடும் 
கண்ணே நூறு காளி .

முழங்காலு அக்கினிய -அம்மா முத்து மாரி 
அவ முகத்தோட தான் அணைப்பா 
கண்ணே நூறு காளி.

கணுக்காலு அக்கினிய -அம்மா முத்துமாரி 
அவ கழுத்தோட தான் அணைப்பா 
கண்ணே நூறு காளி . 

ஆறு வண்டி நூறு சட்டம் முத்து மாரியம்மா 
அசையா மணித்தேரு  அவ 
கண்ணே நூறு காளி .

தேர் அசைய மணி குலுங்க முத்து மாரியம்மா 
தேசத்தார்  கையெடுக்க 
கண்ணே நூறு காளி .

பார்ப்பார் வடம் பிடிக்க முத்து மாரியம்மா 
பத்தினியாள் தேரேறி 
கண்ணே நூறு காளி .

ஊர்க்காரர் வடம் பிடிக்க முத்துமாரியம்மா 
உத்தமியாள் தேரேறி 
கண்ணே நூறு காளி .

பச்சைப் பட்டுடுத்தி முத்துமாரியம்மா
பாவையாள் தேரேறி
கண்ணே நூறு காளி .

மேகவண்ணப் பட்டுடுத்தி முத்துமாரியம்மா 
நிச்சயமாய் தேரேறி 
கண்ணே நூறு காளி .
(இன்னும் வரும் )
கண்மணி   

kanmani tamil

unread,
Oct 29, 2018, 1:53:01 AM10/29/18
to mint...@googlegroups.com
---------- Forwarded message ---------
From: kanmani tamil <kanmani...@gmail.com>
Date: Mon, Jul 30, 2018 at 1:20 AM
Subject: Re: [MinTamil] சிவகாசி வட்டார வாய்மொழிப் பாடல்கள்
To: pitchaimuthu2050 <pitchaim...@gmail.com>

பேச்சியம்மன் கோவிலிலே 
மஞ்சப் பிள்ளைகள் நூறு -மாவிளக்கு நூறு 
கூட வந்து கும்மியடிக்கும் 
தண்டிதப் பிள்ளைகள் நூறு.

செம்பு நிறைய தண்ணிகொண்டு கோயிலுக்கு போவோம் 
தாயே கோயிலுக்கு போவோம் 
கோயிலிலே  இறக்கி வைத்து 
கூடிக்கும்மி அடிப்போம்

குடம் நிறைய தண்ணி கொண்டு கோவிலுக்கு வருவோம் 
அம்மா கோவிலுக்கு வருவோம்.
கோவிலிலே இறக்கி வைத்து 
குலவை கும்மிகள் அடிப்போம்.

 சருவத்திலே தண்ணி கொண்டு சன்னதிக்கு போவோம் 
அம்மா சன்னதிக்கு போவோம் 
சன்னதியில் இறக்கி வைத்து 
சதுரக் கும்மி அடிப்போம் .
(இன்னும் வரும்)
கண்மணி 

kanmani tamil

unread,
Oct 29, 2018, 1:54:22 AM10/29/18
to mint...@googlegroups.com
---------- Forwarded message ---------
From: kanmani tamil <kanmani...@gmail.com>
Date: Mon, Jul 30, 2018 at 11:33 PM
Subject: Re: [MinTamil] சிவகாசி வட்டார வாய்மொழிப் பாடல்கள்
To: pitchaimuthu2050 <pitchaim...@gmail.com>

ஆல இலைபோல அடிவயிறராம் 
ஆனந்த நெற்றியும் புருவக்கட்டாம்.
சோலைக்கிளி போல பேச்சியம்மாவிற்கு 
சொந்தத் தெருவும் முருகன் காலனி 

முருகன் காலனி வாழ் பேச்சியம்மன் -சாந்தி வழங்க வருகிறாள் 
சஞ்சலங்கள் தீர்ப்பதற்கு - சாம்பவியும் வருகிறாள் 
சோட்டானிக்கரை பகவதியும் -சோகம் தீர்க்க வருகிறாள் 
சொர்க்க போக வாழ்வை வழங்க -பேச்சி ஓடி வருகிறாள் 

நம்ம ஊரு பேச்சி -அவள் நாடு புகழும் ஜோதி 
வாருங்கம்மா தோழியரே -தினமும் அவளைப் பணிவோம் 

வேப்பங்கொளை கைபிடித்து வீதி சுத்தி வருவா 
அம்மா விளையாடி வருவா 
சிவகாசி முருகன் காலனிக்கு -சீக்கிரமா வருவாள் .
(இன்னும் வரும் )
கண்மணி 

kanmani tamil

unread,
Oct 29, 2018, 1:56:43 AM10/29/18
to mint...@googlegroups.com
---------- Forwarded message ---------
From: kanmani tamil <kanmani...@gmail.com>
Date: Wed, Aug 1, 2018 at 3:19 PM
Subject: Re: [MinTamil] சிவகாசி வட்டார வாய்மொழிப் பாடல்கள்
To: pitchaimuthu2050 <pitchaim...@gmail.com>

தேங்கா ஒடைக்கவே தண்ணி சிதறவே 
தெப்பக்குளம் ரெண்டும் தெத்தளிக்க 
மதுரை மீனாச்சி மன்னவன் தங்கச்சி 
தேரோடி வாறாளாம் தெப்பம் பாக்க 

அம்மனும் அம்மனும் பொன்னால -அந்த 
ஆவுடை அம்மனும் பொன்னால 
வடக்க இருக்கும் பேச்சியம்மாவுக்கு 
வலது கொண்டையும் பொன்னால 

மூணாத்துக்கு உள்ளிருக்கும் முத்துமாரித் தாயே 
அம்மா முத்து மாரித்தாயே 
எங்க இன்னல்களைத் தீத்து வைத்து 
காத்தருள வாயேன்.

முத்தாலம்மா கோயிலிலே முத்துவிளையாடல் 
அம்மா முத்து விளையாடல் 
முத்தெடுத்து விலை மதிப்பாள் 
முத்தாலம்மன் தாயே 

பிள்ளையில்லாதவர் சொல்லுங்கம்மா -நல்ல 
புத்துமண்ணைக் கையில்  ஏந்துங்கம்மா 
பிள்ளையும் தருவா பிணிகளும் தீப்பா 
புண்ணிய தேவதை பேச்சியம்மா .

நந்தவனத்திலே நாலுகிளி -நாலொரு மாதமா வந்த கிளி 
கொண்டை பெருத்தி பேச்சியம்மாவிற்கு 
கோதி முடியுமா ரெண்டுகிளி

கொடிமரமாம் திருமதிலாம் கோபுரம் போல் வளந்து 
அம்மா கோபுரம் போல் வளந்து 
குழந்தை முதல் கயறுகுத்து
கூட இருந்து காப்பா 

காளிக்கு கோபம் வந்தா பொங்கப்பான கேப்பா 
அதுக்குமேல கோபம்வந்தா ஆட்டுத்தல கேப்பா 
மாரிக்கி கோபம் வந்தா மஞ்சப்பாலு கேப்பா 
அதுக்குமேல கோபம் வந்தா பானக்கரம் கேப்பா
(இன்னும் வரும் ) 
கண்மணி 
    
2018-07-31 9:41 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
எலுமிச்சங்கா மாலை போட்டு இருபுறமும் வருவா -தாயி 
இருபுறமும் வருவா 
சூலாயுதம் கைப்பிடிச்சி வீதி சுத்தி வருவா 

தங்கக்  கொடபிடிச்சி தனிவழியே வருவா -அம்மா 
தனிவழியே வருவா 
தஞ்சமென்று வந்தவர்க்கு தகுந்தவரம் தருவா

பொன்னுக் கொட பிடிச்சி பொழுதிருக்க வருவா -அம்மா 
பொழுதிருக்க வருவா
போயிப் பணிஞ்சவர்க்கு புஷ்பவரம் கொடுப்பா 

சப்பர மூஞ்சி ரதம் ஏறி சாயங்காலம் வருவா -அம்மா 
சாயங்காலம் வருவா 
சனங்களெல்லாம் பாப்பா -அம்மா 
சனங்களெல்லாம்  பாத்தவுடன்  தங்க ஊஞ்சல் கேப்பா

கோபுர மூஞ்சி ரதம் ஏறி குளுந்தநேரம் வருவா -அம்மா 
குளுந்த நேரம் வருவா 
கோடிசனம் பாப்பா -அம்மா 
கோடிசனம் பாத்தவுடன் குளுந்த நெழல் கேப்பா

அக்கினிச்சட்டி நெருநெருங்க- ஆவேசமா விளையாடி        
தாயே ஆவேசமா விளையாடி 
கோட்டையைச்சுத்தி எறக்கி வச்சா 
கேட்ட வரம் கொடுப்பா -தாயி கேட்ட வரம் கொடுப்பா 

(இன்னும் வரும் ) 
கண்மணி 

kanmani tamil

unread,
Oct 29, 2018, 1:58:22 AM10/29/18
to mint...@googlegroups.com
---------- Forwarded message ---------
From: kanmani tamil <kanmani...@gmail.com>
Date: Mon, Aug 6, 2018 at 7:09 PM
Subject: Re: [MinTamil] சிவகாசி வட்டார வாய்மொழிப் பாடல்கள்
To: Muduvai Hidayath <muduvai...@gmail.com>

                                                                                                                          கருப்பசாமி பாடல் -2

கருமலையான் சன்னதியிலே 
கருங்கல்லாக சிலை வளந்துமே 
பொதிமாட்டுக்காரன் கூட 
புறப்பட்டுமே வாராராம் .
ஆரணியாம் வீரணியாம் 
அணித் தோப்பு மண்டபமாம் 
இடையில் ஒரு வல்லயமாம் 
தேரடி வந்து சேர்ந்தார் 
தெய்வக்  கருப்பசாமி -கருப்பனுக்கு 
ஈக்கி கம்பி வேட்டிகளாம் 
முழுச் சிவப்பு கம்மல் நிறம் 
வேட்டை நாயை கைப்பிடிச்சி 
விடியற்காலை நேரத்திலே 
வேட்டைக்கு போறாரம்மா 
காட்டையும் கலைச்சாராம்
கடிநாயை ஏவி விட்டார் 
யானையைக் கொன்னுமே 
அங்கேயே நிலைநிறுத்தி 
சிங்கத்தைக் கொன்னுமே 
என் தகப்பன் கருப்பன் 
ஜெயம் கொண்டு வாராராம் 
வணங்குகிற பக்தர்களுக்கு 
வரங்கொடுக்கும் கருப்பசாமி
மீனாட்சியம்மனுக்கும், மேலான சொக்கருக்கும் 
கோதண்ட ராமருக்கும், குமரவடிவேலருக்கும்
பார்வதி அம்மனுக்கும், படியளக்கும் பரமனுக்கும்
எங்கும் நிறைந்திருக்கும் -என் அப்பனை நானழைத்தேன் .    
(தொடரும் )
கண்மணி 

2018-08-05 19:04 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
நன்றி ஐயா 
கண்மணி 
---------- Forwarded message ---------
From: kanmani tamil <kanmani...@gmail.com>
Date: Sun, Aug 5, 2018 at 12:26 PM
Subject: Re: [MinTamil] சிவகாசி வட்டார வாய்மொழிப் பாடல்கள்

                                                                                                                               கருப்பசாமி பாடல்
கருப்பன் வாரான்  கருப்பன் வாரான் கருப்பசாமி 
கார்மேகம் போல வாரான் கருப்பசாமி  (கருப்பன் )

முன்கொண்டைக்காரன் அவன் கருப்பசாமி 
வில்லுப்பாட்டு பாடி வாரான் கருப்பசாமி 
விதவிதமாய் ஆடி வாரான் கருப்பசாமி (கருப்பன் )

சந்தனப்பொட்டுக்காரன் கருப்பசாமி 
சபரிமலைக்காவல்காரன் கருப்பசாமி 
கச்சையைக்கட்டி வாரான் கருப்பசாமி 
கை  அரிவாள் காட்டி வாரான் கருப்பசாமி (கருப்பன் )

மீசையை முறுக்கி வாரான் கருப்பசாமி 
மின்னல் போல ஓடிவாரான் கருப்பசாமி 
பந்தம் பிடித்து வாரான் கருப்பசாமி 
பாரி வேட்டை ஆடி வாரான் கருப்பசாமி (கருப்பன் )

கும்பிடாத பேர்களில்லை கருப்பசாமி -உன்னைக் 
குவலயம் தன்னில் தானே கருப்பசாமி 
மண்ணுலகைக் காக்க வாரான் கருப்பசாமி 
மன்றாடிக் கும்பிடுவோம் கருப்பசாமி (கருப்பன் )

பம்பைப்பாலன் காவல்காரன் கருப்பசாமி  
பதினெட்டாம் படிக்காவல் கருப்பசாமி 
பிறந்ததெங்கே வளந்ததெங்கே கருப்பசாமி 
பேரு ஊருசொல்ல வாரான் கருப்பசாமி (கருப்பன் )

ஒத்தக்காலு  மண்டி போட்டு கருப்பசாமி 
ஒய்யாரமா ஆடிவாரான்  கருப்பசாமி
அந்தா  வாரான் இந்தா  வாரான் கருப்பசாமி 
அய்யப்பனின் காவல்காரன் கருப்பசாமி (கருப்பன் )

வெண்பட்டு உடுத்தி வாரான் கருப்பசாமி 
வெள்ளைக்குதிரை ஏறி வாரான் கருப்பசாமி 
சங்கிலி கருப்பனாம் கருப்பசாமி
சகல கலா வல்லவனாம் கருப்பசாமி (கருப்பன்)

ஜவ்வாது பொட்டுக்காரன் கருப்பசாமி 
அவன் சாஸ்தாவின் காவல்காரன் கருப்பசாமி 
கோடாங்கி கருப்பனாம் கருப்பசாமி 
குலக்காவல் நீ தானே கருப்பசாமி (கருப்பன் ) 
கண்மணி  

On Sat, 4 Aug 2018 3:29 pm PitchaiMuthu, <pitchaim...@gmail.com> wrote:

சரி, ஆனா உண்மை ஒன்று இருக்கிறது. அதை மட்டுமே குறிப்பிட்டேன்.

ஆனா பாெருட் பிழையுடன் இப்பாடல் இருக்கட்டும் என்க.

On Aug 4, 2018 10:01 AM, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
நாட்டுப்புறப் பாடல்கள் வாய்வழியாக காலாகாலமாக வழங்கி வருவதால் அதில் சொற்கள் பல திரிந்து வழங்குவது உண்மை தான்.
ஆனாலும் இந்த குறிப்பிட்ட அடியில் எனக்கு ஐயம் எழவில்லை.
ஏனென்றால் தமிழ்ச் சொலவடைகள் ஆலங்குச்சியின் மகிமையை இன்றுவரை காப்பாற்றி வந்துள்ளன.
"ஆலும்வேலும் பல்லுக்குறுதி "
"ஆலப்போல் வேலப்போல் ஆலம்விழுது போல் மாமன் நெஞ்சில் நானிருப்பேனே "(இந்தக்காலத்துச் சினிமாப்பாட்டு இதுக்கு மேல மனசுல பதியல.......அது யாரு?ஹும்! மீனா வாயசைத்து  ரஜினியோடு பாடும் டூயட்) கட்டுக்கட்டா எவ்வளவு ஆலங்குச்சியை ஒடித்துக் கொடுக்கிறாள் ! அவள் மாமாவுக்குப் பல்வலியாம் . திரைக்கதையின் கற்பனை தான் ; என்றாலும் தமிழர் ஆலங்குச்சியை மருந்துப் பொருளாகப் பாவித்தவர்.
'ஆலமரத்தை வெட்டுங்கம்மா'னு பாடினவுடன் கோடாலி ,கடப்பாரை, மம்பட்டியுடன் போய் வெட்டுவதாக எண்ணக்கூடாது................இது இலக்கியம் .இதில் கற்பனை இருக்கத்தான் செய்யும். தேவைக்கேற்ப ஒரு தடுப்பணையைப் போட்டுக் கொண்டு தான் பொருள் கொள்ள வேண்டும்.
"பொன்னோ  பொருளோ போர்க்களம் எதற்கு ? பூப்பறிக்கக் கோடரி எதற்கு?"  இது இலக்கியம் ; இப்படித்தான் இருக்கும்.
கண்மணி       

2018-08-03 21:52 GMT+05:30 PitchaiMuthu <pitchaim...@gmail.com>:

"ஆலமரத்த வெட்டுங்கம்மா "

நிச்சயமாய் வெட்டுங்க என இருந்திருக்காது கண்மணி அவர்களே.

ஆலமரத்தை வெட்டும் பழக்கம் தமிழருக்கு இல்லை. அதுவும் காேவில் திரு விழாவில் இப்படி பாடி இருக்க முடியாது என்பது எனது சிந்தை.

kanmani tamil

unread,
Oct 29, 2018, 1:59:52 AM10/29/18
to mint...@googlegroups.com
---------- Forwarded message ---------
From: kanmani tamil <kanmani...@gmail.com>
Date: Thu, Aug 9, 2018 at 3:45 PM
Subject: Re: [MinTamil] சிவகாசி வட்டார வாய்மொழிப் பாடல்கள்
To: Muduvai Hidayath <muduvai...@gmail.com>

                                                                                                                முளைப்பாரிப்  பாடல்-2
முந்தி விநாயகரே முருகா சரஸ்வதியே 
கந்தனுக்கு முன்பிறந்த கணபதியே  முன்நடவா 
தொந்திக்கணபதியே தோகை மயில் வாகனனே 
ஐயா கணபதியே ஆறுமுக வேலவரே 
மஞ்சள் ஒரசி வச்சு மங்கையர்க சுத்திவந்து 
மகுமையில பாருங்களே 
செங்க ஒரசி வச்சு சிறுபிள்ளை சுத்தி வந்து 
சிறுபிள்ளைக சுத்தி வர ;சுத்துரத பாருங்களேன் 
இடி இடியா மழை பெய்ய; இருகரையும் பெருகிவர -அந்த 
பெருகிவந்த தண்ணியிலே; பெண்களெல்லாம் நீராட 
நீராடி நீர் தொளிச்சி ; நீலவர்ண பட்டுடுத்தி 
கோலாடி கோலடிச்சி கோலவர்ண பட்டுடுத்தி -அங்கு 
வாழைமரம் கொண்டுவந்து ;வாசலிலே வந்திறங்கி 
அந்த அகத்திமரம் கொண்டு வந்து அழகாக பந்தலிட்டு 
அந்த பச்ச ரயிட்ட கொண்டுவந்து பக்குவமா கட்டுங்களேன் 
அந்த சிவப்பு ரயிட்ட கொண்டுவந்து சீக்கிரமா கட்டுங்களேன் 
அந்த கோலவர்ண ரயிட்டுகள கொண்டுவந்து கோளாறா கட்டுங்களேன்   

என்னகச்ச இடுப்பிலிட்டு வண்ணப்பொட்டி தலையிலிட்டு 
அங்க பெரியவீடு இன்னு சொல்லி பிச்சை கேட்டு வந்தோம் அம்மா 

அந்தப்பூமியிலே வெளஞ்ச பண்டம்; புதுப்  பண்டம் போடுங்கம்மா
அந்த நாட்டிலே வெளஞ்ச பண்டம் ;நல்ல பண்டம் போடுங்கம்மா 
நம்ம காணியிலே வெளஞ்ச பண்டம் ; கலந்த பண்டம் போடுங்கம்மா 

அவர துவர மொச்ச அஞ்சுவகை ஆமணக்கு 
எள்ளு சிறுபயறு ஏத்த மணிப்பயறு 
கடல சிறுபயறு காரமணிப் பயறு 

வாங்கிவந்த பயறுகள வாளியில ஊறப்போட்டு 
கொண்டுவந்த பயறுகள  கொடத்துல ஊறப்போட்டு 
ஆசாரி அழச்சு வந்து அழகா ஓடொடச்சி 
கொசவனோட சில்லையில கொடத்தோட ஓடொடச்சி     
 ஆட்டாம் சிறுவர்களே ; ஆடு மேய்க்கும் பாலர்களே 
ஆட்டாந்தொளி தொறங்க ;ஆட்டெருவெ வாரிவர 
மாட்டாஞ்சிறுவர்களே ;மாடு மேய்க்கும் பாலர்களே 
மாட்டாந்  தொளிதொறங்க ;மாட்டெருவெ வாரிவர 
அந்த வாரிவந்த எருவுகள வயசுப்பிள்ள தானிடிச்சி    
அந்த கொண்டுவந்த எருவுகள கொழந்தப்புள்ள தானிடிச்சி 
சம்சாரி படப்பேறி சம்பா வைக்கெ தானெடுத்து 
முதலாளி படப்பேறி முத்து வைக்கெ தானெடுத்து 
கம்பந்தட்ட ரெண்டெடுத்து கணுக்கணுவா மொளி நெருக்கி 
சோளத்தட்ட ரெண்டெடுத்து சோகையோட மொளி நெருக்கி 
சீராக எருவெடுத்து சிறப்பாக வைக்கலமிக்கி 
வட்ட ஓடெடுத்து திட்டமுள்ள முளை பரப்பி 
முளைபோட்ட மூனாம்நாளு முளைச்சதும்மா பயறுவகை 
முத்து முளை தெரிக்க மோதிரக்கை சீராட
பவள முளை தெரிக்க  பாதசரம் சீராட
மலடி வந்து மொளை  தெளிப்பா ; மாணிக்கத்த பெத்தெடுப்பா 
இருசி வந்து மொளை தெளிப்பா ;இளஞ்சியத்தைப் பெத்தெடுப்பா 

ஒன்னான நாப்பொழுது ;ஊசி நெறம் ஆயிருவா 
ரெண்டான நாப்பொழுது ரெட்ட நெறம் ஆயிருவா 
மூனான நாப்பொழுது முத்து நெறம் ஆயிருவா 
நாலான நாப்பொழுது நல்ல நெறம் ஆயிருவா 
அஞ்சான நாப்பொழுது மஞ்ச நெறம் ஆயிருவா 
ஆறான நாப்பொழுது அழகா சொரிஞ்சிருப்பா 
ஏழான நாப்பொழுது எல்லோர்க்கும் தங்கிருப்பா 
எட்டான நாப்பொழுது எல்லையில தங்கிருப்பா 
ஒம்போதா நாப்பொழுது ஊரைவிட்டுக் கெளம்பிருவா 
கொட்டு சத்தம் கேப்பாளோ ;கொலவ சத்தம் கேப்பாளோ              
பத்தான நாப்பொழுது சாலகிணறு தேடிருவா 

சிந்தாம செதறாம வளத்த நம்ம தாய 
சித்தாத்து தண்ணிக்கு போறயாமா தாயே 
ஒன்ன வாடாம வசங்காம வளத்தனம்மா  தாயே 
கோணாம கொணங்காம வளத்தேனம்மா தாயே 
நீ கூடார சோலைக்கு போறயம்மா தாயே
(தொடரும் )
கண்மணி     
Reply all
Reply to author
Forward
0 new messages