இசைஅமைப்பாளர் எம். பி. சீனிவாசன் - கவிஞர் வாலி

301 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 11, 2014, 3:09:51 AM10/11/14
to santhav...@googlegroups.com, vallamai, mintamil
மறைந்த தொழிலதிபர் நா. மகாலிங்கம் அவர்களைப் பற்றி பொள்ளாச்சி தந்த பொதுவுடைமைக் கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் எழுதிய கவிதையை வாசித்தேன். என் எம் பங்களாவில் தான் தமிழ்ப் பேரா. கு. அருணாசலக் கவுண்டர் கவிஞர் கே.சி.எஸ் அவர்களை அறிமுகப்படுத்திவைத்தார். அப்போது அருட்செல்வர் சொல்லியதன்பேரில் அவரது தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் பூர்த்தி ஆவதன் முன்னமே இயற்கை அடைந்துவிட்டார். அவரது புகழ்பெற்ற பாடல் பாதை தெரியுது பார் (1960) திரைப்படத்தில் வந்த ‘சின்னச்சின்ன மூக்குத்தியாம்’. 
கேசிஎஸ்ஸின் புகழ்பெற்ற இட்டிலியே ஏன் இளைத்துப் போனாய்? - பாட்டு:

அப்போது தான் வாலி திரைப்படத்தில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

கவிஞர் வாலி திரைஇசையமைப்பாளர் எம். பி. சீனிவாசன் மேல்
2003-ல் குமுதத்தில் எழுதிய புதுக்கவிதை படித்தேன்.

நா. கணேசன்



-------------------------------------------------------------------
இவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள் 

சென்ற நூற்றாண்டில் தமிழ் மண் தரணிக்கு வழங்கிய மகத்தானவர்களின் மகோன்னத வரலாறு. மறைந்த இசை அமைப்பாளர் திரு.எம்.பி.சீனிவாசன் அவர்களைப் பற்றிய கவிஞர் வாலியின் அழகிய கவிதை இதோ:

‘திரைத்
துறையில் உள்ள -
இசைக் கலைஞருக்கெல்லாம்
இவர்தான் -
இன்றைக்கும் இதய தெய்வம்; நாங்கள் -
வாழுநாள் வரை – இவரை
வணங்குதல் செய்வம் !’

என்று -

என்னிடம் -

படத்துறையில்
பணிபுரியும் -

அனேக இசைக்கலைஞர்கள்

அந்தரங்க சுத்தியாக -
இவரைப் பற்றி -
இயம்பியது உண்டு;

அன்னணம்
அவர்கள் -
கூறிய
கூற்றை…

வழிமொழிகிறேன் நானும் – அது
வாய்மை என்பதைக் கண்டு!


நெருங்கிய -
நண்பர்களால்…
‘வாசு’ என்று

விளிக்கப் பெற்ற -
எம்.பி.சீனிவாசன
எளியவர்களின் தந்தை;

சிவப்புச்
சிந்தனைகள்
மேலோங்க நின்றது – அந்த
மாமனிதனின் சிந்தை!

நால் வருணத்தில் -
மேல் வருணம் எனப்படும் -
குலத்தில் பிறந்தும் - அவர்
குலம் கோத்திரங்களை -
வெறுத்தவர்; கொள்கை
வாளால் அவற்றை ஒறுத்தவர்!

ஜயகாந்தனின் சிந்தனையில் -
ஜனித்த…
‘தென்னங்கீற்று
ஊஞ்சலிலே…’

என்ற

ஏரார்ந்த பாட்டும்;
பொதுவுடைமைக் கட்சியின் -
புகழ்சால் கவிஞர் -
கண்ணியம் மிகுந்த
கே.சி.எஸ்.அருணாச்சலம்

ஆக்கி

அளித்த…

‘சின்னச்சின்ன
மூக்குத்தியாம்;
சிகப்புக்கல்லு
மூக்குத்தியாம்!’

எனும்

ஏற்றமிகு பாட்டும் ;

‘பாதை தெரியுது பார்’ எனும் -
படத்தில் இடம் பெற்று -
பட்டி தொட்டியெல்லாம்
பரவி நின்றது;

அந்த
அற்புத பாடல்களுக்கு -
இனிய

இசை -
ஏழை பங்காளன்
எம்.பி.சீனிவாசன் தந்தது!


கம்யூனிஸ்ட
கட்சியின் பால் -
எஞ்ஞான்றும் காதல் கொண்ட
எம்.பி.சீனிவாசன்..

இணையற்ற
இசை விற்பன்னரும் கூட;

பல படங்களில் -
அவரது
அளப்பரும் இசைஞானம்…
வெளிப்போந்து
வருடியிருக்கிறது -

நம்
நெஞ்சங்களை -
நாடி
நரம்புகளில் -
உவகைப் பெருக்கொன்று
ஊற்றெடுத்து ஓட!


இன்றும் -
இன்தமிழிலும் மலையாளத்திலும்..
எத்துணையோ படங்கள்
எம்.பி.சீனிவாசனின் -
மெல்லிசை
மேதமையை -
நமக்கு
நினைவூட்டி மகிழ்விக்கும்;
அவரது இசை
ஆர்நெஞ்சையும் நெகிழ்விக்கும்!


படத்துறையில்
பங்குபற்றும் எவரும்..
தனக்கென வாழ்கையில் -
தோழர் சீனிவாசன் மட்டுமே -
ஊர்க்கென
வாழ்ந்தார்;

உதிரத்தில்
ஊறியிருந்த -
பொதுவுடைமைச் சித்தாந்தத்தில்
பொழுதும் ஆழ்ந்தார்!

விரல் வலிக்க -
வயலின் வாசிப்பவர்களுக்கும் ;
குரல்வலிக்க
கானம் இசைப்பவர்களுக்கும்;
உடனுக்குடன்
ஊதியம் வழங்கப்படாத -
அவல நிலையை
அவர்தான் மாற்றினார்;
இருந்த

இசைக் கலைஞர்களையெல்லாம்…
ஒன்று சேர்த்து
ஒரு சங்கம் நிறுவி -
சங்கீத
சிற்பிகளின் -
வாழ்வில் -
விளக்கு ஏற்றினார்!

அதனால் -

அவர் …

பல

படாதிபதிகளின் -
அர்த்தமற்ற கோபத்திற்கு
ஆளானார்; அவருக்கு -
வருகின்ற
வாய்ப்புகள் -அவர்களால்
குறைந்தபோதும் -அதுபற்றிக்
கிஞ்சித்தும் கவலைப்படாது…
வாடிய கலைஞர்களின் -
வறுமையைச் சாய்க்கும் வாளானார்!

எம்.பி.எஸ்.
என்னும்..
மா மனிதன்
மதங்களைக் கடந்தவர்;
ஏற்ற கொள்கைவழி – சிங்க
ஏறென நடந்தவர்!

ஷைபுதீன் கிச்சுலூ – எனும்
சுதந்திர போராட்ட வீரரின்…
மகளை …
மணம் முடித்தார் -
மறையவர் குலத்தில்
முளைத்த சீனிவாசன்;

அவரினும்
ஆர் உளர்
அனைத்து உயிர்க்கும்
அன்பு காட்டும் சிறந்த நேசன்!
எம்.பி.சீனிவாசன்
ஏற்றிவைத்த விளக்காக..

இன்றும்
இசையோடு -
வடபழனியில்
விளங்குகிறது -
வலிவும்
பொலிவும் -
மிக்க
மாபெரும் சங்கமாக…

திரைப்பட -
இசைக்கலைஞர்களின் சங்கம் -
தகத்தகாயமாக; கோடையிலே -
தண்ணிழல் தரும் தருவாக!

அந்தமான் சென்றிருந்தபோது -
அங்கேயே…
எம்.பி.எஸ். உயிரை
எமன் உரித்தான்;

வானுலகுக்கும் அவர் சேவை -
வேண்டுமென வரித்தான்!

N. Ganesan

unread,
Feb 25, 2017, 11:10:27 PM2/25/17
to சந்தவசந்தம், vall...@googlegroups.com, mint...@googlegroups.com



கேசிஎஸ் அருணாசலம் பாடல் - ராசா மக போலிருந்தே

Song # 5
ALR & Chrs
Movie : Paadhai Theriyudhu Paar
Music: M B Srinivasan
Lyric : K C S Arunasalam

ராசா மக*
ராசாமக போலிருந்தே
நாலு பேரு பார்த்து உன்னே
லேசா எண்ணி லேசா எண்ணி
பேசலாச்சே பெண்மணி
உன் நெஞ்சும் கல்லா ?
உன் நெஞ்சும் கல்லா மாறி போச்சே கண்மணி
ராசா மக*
ராசா மக போலிருந்தே
நாலு பேரு பார்த்து உன்னே
லேசா எண்ணி லேசா எண்ணி
பேசலாச்சே பெண்மணி
உன் நெஞ்சும் கல்லா ?
உன் நெஞ்சும் கல்லா மாறி போச்சே கண்மணி

வட்டலெனும் குளம் தனிலே 
வாத்துக் கோழி போல் மிதந்த*
வட்டலெனும் குளம் தனிலே 
வாத்துக் கோழி போல் மிதந்த*
இட்டிலியே ஏன் இளைத்து போனாய் ?
நீயும் எந்த* ப*யல் மீது காத*லானாய்

அட*டா.டாடாட*டா..
இட்டிலியே ஏன் இளைத்து போனாய் ?
 ஆஆஆஆ..
நீயும் எந்த* ப*யல் மீது காத*லானாய்..ஆஆஆஆஆ..
இட்டிலியே ஏன் இளைத்து போனாய் ? 
நீயும் எந்த* ப*யல் மீது காத*லானாய்

இட்டிலியே ஏன் இளைத்து போனாய் ?
நீயும் எந்த* ப*யல் மீது காத*லானாய்


ராசா மக*
ராசா மக போலிருந்தே
நாலு பேரு பார்த்து உன்னே
லேசா எண்ணி லேசா எண்ணி
பேசலாச்சே பெண்மணி
உன் நெஞ்சும் கல்லா ?
உன் நெஞ்சும் கல்லா மாறி போச்சே கண்மணி

அள்ளி விழுங்கும்ப*டி ஆசை கொள்ளும் உன் அழ*கை
அள்ளி விழுங்கும்ப*டி ஆசை கொள்ளும் உன் அழ*கை
கொள்ளை கொண்டு போன* க*ள்வ*ன் யார*டி 
நீயும் கொஞ்ச*ம் கொஞ்ச*மாய் இள*ப்ப*தேன*டி

அட*ட*ட*டா டா டா 
இட்டிலியே ஏன் இளைத்து போனாய் ?
 ஆஆஆஆ..
நீயும் எந்த* ப*யல் மீது காத*லானாய்..ஆஆஆஆஆ..
இட்டிலியே ஏன் இளைத்து போனாய் ? 
நீயும் எந்த* ப*யல் மீது காத*லானாய்


மொளகாய் பொடி பூசி எண்ணெயில* த*லை முழுகி
மொளகாய் பொடி பூசி எண்ணெயில* த*லை முழுகி
அழ*காய் அதி கார*ம் ப*ண்ணினேன்
காலம் அப்ப*டியே இருக்குமின்னு எண்ணினேன்

அட*ட*ட*டா டா டா 
இட்டிலியே ஏன் இளைத்து போனாய் ?
 ஆஆஆஆ..
நீயும் எந்த* ப*யல் மீது காத*லானாய்..ஆஆஆஆஆ..
இட்டிலியே ஏன் இளைத்து போனாய் ? 
நீயும் எந்த* ப*யல் மீது காத*லானாய்


இட்டிலியே ஏன் இளைத்து போனாய் ? ஓஓஓஓஓ..
நீயும் எந்த* ப*யல் மீது காத*லானாய்..ஆஆஆஆஆ..
இட்டிலியே..

தேமொழி

unread,
Feb 25, 2017, 11:20:35 PM2/25/17
to மின்தமிழ்
வாலி  கண்ணதாசனிடம் இரவல் வாங்கியிருப்பாரோ!!!!



கல்லூரி இட்லியும், கவியரசர் கண்ணதாசனும்!

கவியரசர் கண்ணதாசன் ஒருமுறை லயோலா கல்லூரியின் தமிழ் மன்றத்தில் உரையாற்றச் சென்றிருந்தார். 
விழா துவங்குமுன்பாக, மாணவர்கள், கவியரசருக்கு தங்கள் கல்லூரி உணவு விடுதியில் சிறுண்டி வழங்கினார்கள்.

சூடாக இருந்த இட்லியைக் கவியரசர் விரும்பிச் சுவைத்தார்.

மாணவர்களில் ஒருவர்,”ஐயா நீங்கள் எதைப் பற்றியும் கவிதை எழுதுவீர்கள் இல்லையா?”
என்று கேட்கவும், கவியரசர், “ஆமாம்’” என்று பதில் சொன்னார்.

உட்னே, அந்த மாணவர், ”எங்கள் விடுதி இட்லியைப் பற்றி இரண்டு வரிகளில் சொல்லுங்கள் ஐயா!” என்றார்.

சட்டென்று அடுத்த நொடியே கவியரசர் இப்படிச் சொன்னார்:

“இட்டிலியே ஏன் இளைத்துவிட்டாய்? - எவனை
இங்கே நீ காதலித்தாய்?”


அதுதான் கவியரசர்!



..... தேமொழி

N. Ganesan

unread,
Feb 25, 2017, 11:39:30 PM2/25/17
to மின்தமிழ், vallamai


On Saturday, February 25, 2017 at 8:20:35 PM UTC-8, தேமொழி wrote:
வாலி  கண்ணதாசனிடம் இரவல் வாங்கியிருப்பாரோ!!!!

வாலி பாடல் அல்ல. பொள்ளாச்சிக் கவிஞர், கம்யூனிஸ்ட்
கேசிஎஸ் அருணாசலம் பாடல் இது. கேசிஎஸ் அருணாசலம்
தமிழரில் தொழில் முனைவோராக விளங்கிய ஒருவர் பற்றி
எழுதிய பாடலை ஸ்கான் செய்தேன். அடுத்த மடலில் தருகிறேன்.

வாலி அப்போது தான் நுழைய முயற்சித்துக் கொண்டிருந்த காலம் அது:

நா. கணேசன்

வாலியின் முதல் பாட்டு - பல போராட்டங்களை உள்ளடக்கியது! 

பெரிய போராட்டத்துக்குப் பின், சினிமாவில் பாட்டு எழுதும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது. அந்தப் பாடலை சுசீலா பாடினார்.

மிஸ் மாலினி, ஏழைபடும்பாடு, மகாத்மா உதங்கர் முதலிய படங்களில் நடித்தவர், வி.கோபாலகிருஷ்ணன். படங்களில் நடனம் மட்டும் ஆடிக்கொண்டிருந்த லலிதா -பத்மினி சகோதரிகள், முதன் முதலில் கதாபாத்திரம் ஏற்று நடித்த "ஏழைபடும்பாடு'' படத்தில், இவர்தான் பத்மினிக்கு ஜோடி.

கடிதப் போக்குவரத்து மூலம் கோபியின் நட்பை பெற்ற வாலி, ஒருமுறை ரேடியோ நாடகத்தில் நடிக்க திருச்சிக்கு வந்த கோபியிடம், "நான் சென்னைக்கு வந்து சினிமாவில் பாட்டு எழுத முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன்'' என்றார்.

"வாங்க, வாலி! நான் இருக்கிறேன். எதற்கும் கவலைப்பட வேண்டாம்'' என்று ஊக்கம் அளித்தார், கோபி.

1958 டிசம்பர் முதல் வாரத்தில், வாலி சென்னைக்கு வந்தார். திருவல்லிக்கேணியில் இருந்த ஸ்ரீரங்கத்து நண்பர் செல்லப்பாவின் அறையில் தங்கினார்.

அப்போது தியாகராய நகரில், சின்னையாப்பிள்ளை ரோட்டில் உள்ள வீட்டில் வி.கோபாலகிருஷ்ணன் வசித்து வந்தார். தன்னைத்தேடி வருவோருக்கு, முடிந்த உதவிகளை எல்லாம் செய்பவர் அவர்.

தினமும் திருவல்லிக்கேணியில் பஸ் பிடித்து, தி.நகர் வாணி மஹாலில் இறங்கி கோபாலகிருஷ்ணன் வீட்டுக்குப் போவார், வாலி. தன்னைப் பார்க்க வரும் திரை உலகப் பிரமுகர்களிடம் வாலியை கோபி அறிமுகப்படுத்துவார்.

அதுமட்டும் அல்ல. தன்னுடைய ஸ்கூட்டரின் பின்னால் வாலியை உட்கார வைத்துக்கொண்டு தினமும் யாராவது பட அதிபர்கள், டைரக்டர்கள், இசை அமைப்பாளர்களிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவார். "இவர் நல்ல கவிஞர். சினிமாவுக்கு பாட்டெழுத வாய்ப்பு தந்தால், பிரமாதமாக எழுதுவார்'' என்று கூறி, சான்ஸ் கேட்பார்.

வாலி, தன்னுடைய பாடல்கள் சிலவற்றை ஒரு நோட்டில் எழுதி வைத்திருப்பார். சிலர் அந்த நோட்டுப் புத்தகத்தை வாங்கி படித்துப் பார்த்துவிட்டு, புன்னகை புரிவார்கள். சிலர் படித்துப் பார்க்காமலேயே புன்னகை செய்வார்கள்.

இந்த புன்னகைகளால் வாலிக்கு எந்த பயனும் ஏற்படுவதில்லை.

அந்தக் காலக்கட்டத்தில், "பாதை தெரியுது பார்'' என்ற படத்தை, குமரி பிலிம்சார் எடுத்துக்கொண்டு இருந்தனர். இசை அமைப்பாளர் எம்.பி.சீனிவாசன்,, பொதுவுடமைக் கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம் எழுதிய "சின்னச் சின்ன மூக்குத்தியாம்'' என்ற பாடலை ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்.

எம்.பி.சீனிவாசனிடம் வாலியை அறிமுகப்படுத்திய கோபாலகிருஷ்ணன், பாதை தெரியுது பார் படத்தில் ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

"கோபி! கே.சி.எஸ்.அருணாசலம், ஜெயகாந்தன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகிய மூன்று பேரும்தான் இந்தப் படத்துக்கு பாட்டு எழுதுகிறார்கள். புதிதாக வேறு பாட்டை பயன்படுத்தக்கூடிய கட்டம் எதுவும் படத்தில் இல்லை. ஆனாலும், பொதுவுடமை கருத்தையும், சமூக விழிப்புணர்வையும் எடுத்துக் காட்டக்கூடிய பாட்டு எதுவும் இருந்தால், "டைட்டில் சாங்'' ஆகப் பயன்படுத்த முயற்சி செய்கிறேன்'' என்றார், சீனிவாசன்.

உடனே வாலி, தான் எழுதி வைத்திருந்த பாட்டை, அதற்கான மெட்டுடன் பாடிக்காட்டினார்.

பாட்டை கேட்ட சீனிவாசன், "மிஸ்டர் வாலி! இப்போது நீங்க பாடிக்காண்பித்த பாட்டு நன்றாக இல்லை என்று நான் சொல்லமாட்டேன். ஆனால், என்னை பெரிதாக கவரவில்லை. சாரி!'' என்று கூறிவிட்டு, உள்ளே போய்விட்டார்.

"கவலைப்படாதீங்க, வாலி! வேறு இடத்தில் முயற்சி செய்யலாம்'' என்று ஆறுதலாகக் கூறிவிட்டு, வாலியை வீட்டுக்கு அழைத்துச் சென்றார், கோபி.

(1958-ல் எம்.பி.சீனிவாசனால், நிராகரிக்கப்பட்ட பாடல், 1967-ல் எம்.ஜி.ஆர். படத்தில் இடம் பெற்று, மகத்தான வெற்றி பெற்று பட்டி தொட்டி எல்லாம் எதிரொலித்தது. அதுதான், "கொடுத்ததெல்லாம் கொடுத்தான், அவன் யாருக்காகக் கொடுத்தான்?'' என்ற பாடல். இந்தப் பாடல் இடம் பெற்ற படம் "படகோட்டி.'')

"மெல்லிசை மன்னன்'' எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைப்பில், ஏராளமான பாடல்கள் இயற்றி இருக்கிறார், வாலி.

ஆனால், முதன் முதலாக இவர்கள் சந்தித்துக் கொண்டபோது, வாலியின் பாடல் விஸ்வநாதனைக் கவரவில்லை.

அதுபற்றி, வாலி எழுதியிருப்பதாவது:-

"ஒருநாள், அதிகாலை என்னை ஒரு இசையமைப்பாளர் வீட்டுக்கு கோபி தன் ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றார். எனக்கு அந்த இசையமைப்பாளரிடம் ஏற்கனவே அளவு கடந்த அபிமானமும், மரியாதையும் உண்டு. அவர் மூலம் எனக்கு எப்படியும் படத்துறையில் பாட்டெழுதும் ஒரு வாய்ப்பைப் பெற்று தந்து விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவர் வீட்டுக்கு என்னைக் கூட்டிப் போனார், கோபி.

அந்த இசையமைப்பாளருக்கு கோபியிடம் மிகுந்த பிரியமுண்டு. கோபியை ஆரத்தழுவி அவர் வரவேற்றார். என்னை அவரிடம் கோபி அறிமுகப்படுத்திவிட்டு, என் ஊர், என் கல்வி இவை பற்றியெல்லாம் ஒரு சிறிய முன்னுரையை வழங்கிவிட்டு, என் பாட்டு நோட்டை என் கையிலிருந்து வாங்கி, அந்த இசையமைப்பாளரிடம் கொடுத்தார்.

அவர் அதை ஆர்வத்தோடு, வாங்கி, சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்து, நின்று நிதானமாகப் படித்தார். பிறகு, என் பாட்டு நோட்டை என்னிடம் திருப்பித் தந்துவிட்டு, காபி வரவழைத்து எங்கள் இருவருக்கும் வழங்கினார்.

பிறகு, கோபியை தனியாக அழைத்து அந்த இசையமைப்பாளர் சன்னமான குரலில் காதோடு காதாக ஏதோ சொன்னார்.

"வாங்க வாலி போகலாம்...'' என்று கோபி என்னை அழைத்து வந்துவிட்டார்.

ஸ்கூட்டரில் போகும்போது என்னைப் பற்றி அந்த இசையமைப்பாளர் என்ன சொன்னார் என்று கோபியைக் கேட்டேன். அவர் சொன்னதை கோபி அப்படியே என்னிடம் சொன்னார்:

"கோபி, இவர் எழுதியிருக்கிற பாட்டெல்லாம் ரொம்ப சுமாரா இருக்கு. சினிமாவில் முன்னுக்கு வர்றதுக்கான வாய்ப்பே இவருக்கு இருக்கிற மாதிரி தெரியவில்லை... பாவம்! மெட்ராசில் இவர் இருந்து கஷ்டப்படறதை விட, படிச்சவரா இருக்கிறதனாலே, சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு ஏதாவது வேலைக்குப் போகச் சொல்லுங்க...''

அந்த இசையமைப்பாளர் சொன்னதை ஒருவரி விடாமல் கோபி என்னிடம் சொல்லிவிட்டு மவுனமாக ஸ்கூட்டரை ஓட்டினார்.

அந்த இசையமைப்பாளர் வேறு யாருமல்ல. பிற்காலத்தில் என் முன்னேற்றத்திற்கு முழு முதற்காரணமாக விளங்கிய மெல்லிசை மன்னர் எமë.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்தான், அன்று என்னை வேறு வேலை தேடிப்போவது உசிதம் என்று தன் மனதில் பட்டதை வெளிப்படையாகக் கோபியிடம் சொன்னவர்.

நான் ஸ்ரீரங்கம் திரும்பிவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். ஓரிரு நாளில் மூட்டை முடிச்சோடு நான் ஊருக்குத் திரும்ப இருந்தபோதுதான், படத்தில் முதன் முதலாகப் பாட்டு எழுதும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது.

இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகத்தைச் சேர்ந்த பட அதிபரும், நடிகருமான கெம்பராஜ், "நளதமயந்தி'', "கற்கோட்டை'', "ராஜவிக்கிரமா'' ஆகிய படங்களைத் தயாரித்துவிட்டு, 1958-ல் "அழகர் மலைக்கள்ளன்'' என்ற படத்தைத் தயாரித்தார்.

ஒருநாள் காலை, கோபாலகிருஷ்ணன் காரில் வாலியை அவரிடம் அழைத்துச் சென்றார். தெலுங்கு இசை அமைப்பாளர் கோபாலம், ஆர்மோனிய பெட்டியுடன் அமர்ந்திருந்தார்.

வாலி அவருக்கு வணக்கம் செலுத்தினார்.

பாட்டுக்கான மெட்டை ஆர்மோனியத்தில் இசை அமைப்பாளர் வாசித்துக்காட்டினார். "ஒரு தாய் பாடும் தாலாட்டுப்பாட்டு இது'' என்று வாலியிடம், காட்சியை விளக்கினார்கள்.

உடனே வாலி, காகிதத்தை எடுத்தார். "நிலவும், தாரையும் நீயம்மா; உலகம் ஒரு நாள் உனதம்மா'' என்ற பல்லவியை எழுதிக் காட்டினார்.

அதைப் பார்த்துவிட்டு, இசை அமைப்பாளர் அசந்து போனார். இசையுடன் வார்த்தைகள் வெகுவாகப் பொருந்தின.

முக்கால் மணி நேரத்தில் முழுப்பாடலையும் எழுதி முடித்தார், வாலி. பட அதிபர் கெம்பராஜ் வந்து, பாட்டைக்கேட்டார். அவருக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. வாலியைத் தட்டிக்கொடுத்தார்.

"நாளை ரிக்கார்டிங். கார் அனுப்புகிறேன். வந்துவிடுங்கள்'' என்று சொன்னார். மகிழ்ந்து போனார், வாலி.

மறுநாள் கோல்டன் ஸ்டூடியோவில் சுசீலா பாட, வாலியின் முதல் பாடல் ஒலிப்பதிவு ஆகியது.

தேமொழி

unread,
Feb 26, 2017, 12:03:47 AM2/26/17
to மின்தமிழ்
ஓ ...ஆமாம்.. இழையின் தலைப்பைப் பார்த்துத் தவறாகக் கூறிவிட்டேன்.

பாடலுக்கு மேல் உள்ள பாடலாசிரியர்  குறிப்பைக் கவனிக்கத் தவறியிருக்கிறேன்.


..... தேமொழி
Reply all
Reply to author
Forward
0 new messages