கணக்குவேலம்பட்டி தீர்த்தங்கரர் சிற்பம்

35 views
Skip to first unread message

dorai sundaram

unread,
Sep 3, 2018, 1:45:33 AM9/3/18
to mintamil

கணக்குவேலம்பட்டி தீர்த்தங்கரர் சிற்பம்

”டைம்ஸ் ஆஃப் இந்தியா”  (TIMES OF INDIA)  நாளிதழில் வந்துள்ள செய்தியை நூ.த.லோ.சு. ஐயா பகிர்ந்துள்ளதைப் பார்த்தேன். அதில், சென்னையிலிருக்கும் ஜைனம் சார்ந்த “அகிம்சை நடை” அமைப்பினர், தம் மரபு நடைப்பயணத்தின்போது கணக்குவேலம்பட்டி தீர்த்தங்கரர் சிற்பத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் பிழையான செய்தி. இதன் பின்னணியை இங்கே சொல்லவேண்டியுள்ளது.

அரவக்குறிச்சி அருகில் புங்கம்பாடி என்றொரு சிற்றூர். குடகனாற்றின் அருகில் அமைந்துள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த சுகுமார் பூமாலை என்பவர் வரலாற்று ஆர்வலர். சென்னையில் ஒளிப்படக் கலைஞராய்ப் பணி. ஊர்ப்பக்கம் வந்தால், வண்டியை எடுத்துக்கொண்டு அரவக்குறிச்சியின் சுற்றுப்புறங்களில் தொல்லியல் தடயங்கள், பழங்கோயில்கள் என்று களப்பணியில் சுற்றித் திரிந்துகொண்டிருப்பவர். அரவக்குறிச்சியின் சுற்றுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் கணக்குவேலம்பட்டி. அங்கு சிறு சிறு பாறைகளும், ஓரிரு பெரிய பாறைகளும், தரை மட்டத்திலிருந்து சற்றே உயர்ந்த பெரிய பாறைப்பரப்பும், பாறைப்பரப்புக்கு இடையில் ஓரிரு சுனைக்குழிகளும் (அவற்றில் நீர் எப்போதும் தேக்கியிருக்கும்) அமைந்த பகுதி ஒன்றுண்டு. அந்த இடத்தில் பெரிய பாறையின் சரிவு சுவரெழுப்பியது போல் காணப்படும். இந்தச் சுவர்ப்பகுதியின் மேற்பகுதியில் மூன்று உருவங்கள் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. ஓர் ஆண் உருவம்; இரு மருங்கிலும் இரு பெண்ணுருவங்கள். உள்ளூர் மக்கள் நெடுங்காலமாக “மொட்டையாண்டவர் கோயில்” என்னும் பெயரில் முருகன் – வள்ளி – தெய்வானை என்று வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் ஒருமுறை கூடித் விழாக் கொண்டாடி மகிழ்கின்றனர். மேற்படி சிற்பம், சுகுமாரின் வரலாற்று ஆர்வப்பார்வையில் வேறுபட்டுத் தெரிந்தது. மேலும், சற்று மேலேயுள்ள  பாறைத் தளத்தில் ஒரு பாறையின் கீழ் படுக்கை போல் வெட்டப்பட்ட அமைப்பும், பாறையின் மேல் பழங்காலச் செங்கல் கட்டுமானம் ஒன்றும் இருப்பது கண்டு அவர், இந்த இடம் சமணத் தடயங்களைக்கொண்டது என்று உணர்ந்தார்.

எனவே, அவர், சென்னையில் அவருக்குத் தெரிந்த, தொல்லியல் துறையில் பணியிலிருந்த இராமச்சந்திரன் அவர்களை அழைத்துவந்து காண்பித்துள்ளார். இராமச்சந்திரன் அவர்கள், இந்த இடத்தைச் சமணத் தடயங்கள் உள்ள இடம் என்றும், புடைப்புச் சிற்பத்தைத் தீர்த்தங்கரர் சிற்பம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார். ஆனால், இது பற்றிச் செய்திகள் எவையும் வெளியிடப்படவில்லை. சிறிது கால இடைவெளியில், சுகுமார் பூமாலை  இக்கட்டுரை ஆசிரியரை அணுகி நேரில் வந்து பார்க்குமாறு அழைப்பு விடுத்தார். கூடுதலாக, அரவக்குறிச்சியின் அருகில் அமைந்துள்ள மலைக்கோவிலூர் மலைக்கோவிலில் உள்ள கல்வெட்டுகள், மற்றும் ஓரிரு நடுகற்கள், குடகனாற்றுக் கரைப்பகுதியில் உள்ள பாறைக்கல்வெட்டு ஆகியவற்றைக் காட்டுவதும் அவர் நோக்கம். கட்டுரை ஆசிரியர் 30-01-2018 அன்று அரவக்குறிச்சி சென்று சுகுமாருடன் இணைந்து மேற்குறித்த இடங்களையெல்லம் பார்வையிட்டும், கல்வெட்டுகள் சிலவற்றைப் படித்தும் விரிவாகச் செய்திக்கட்டுரை ஒன்றை எழுதி சுகுமாருக்கு அனுப்பிவைத்தார். அனுப்புமுன்னரே, அவர் தொடர்பு வைத்திருக்கும் வட்டத்தில் சமணச் சிற்பம் பற்றிய கருத்துப் பகிர்வை மேற்கொண்டார். இக்கருத்துப் பகிர்வின்போதே திரு. அஜித தாஸ் எனக்கு அறிமுகம் ஆனார். ஆய்வின் முதல் நிலையில், சிற்பத்தில் உள்ளவர் பாகுபலி என்பதான கருதுகோள் முன்வைக்கப்பட்டாலும் பின்னர் அமெரிக்கா வாழ் தமிழறிஞர் நாக. கணேசன் அவர்கள் முன்வைத்த, தீர்த்தங்கரர் ஆதிநாதர், அவரது பெண் மக்களான பிராமி, சுந்தரி இருவருக்கும் எண்ணும் எழுத்தும் கற்பிப்பதைக் குறிக்கும் வகையில் அமைந்த சிற்பம் என்னும் கருதுகோளைச் சேர்த்து எழுதப்பெற்ற புதுக்கட்டுரையைக் கட்டுரை ஆசிரியர் அவரது வலைப்பூவில் பின்னர் இணைத்தார். மேற்படிக் கருத்துப்பகிர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தவர்கள் :

திரு. பானுகுமார், சமண வரலாற்றாளர், சென்னை.

திரு. நாக. கணேசன், தமிழறிஞர், வரலாற்றாளர், அமெரிக்கா.

திரு. அஜித தாஸ், சமண வரலாற்றாளர், (அகிம்சை நடை) சென்னை.

இந்நிலையில், நாடு தழுவிய அளவில் அச்சு ஊடகத்தாரின் மைய அமைப்பாக இயங்கும்  PTI (Press Trust of India) அமைப்புடன் தொடர்புடைய சுகுமார் பூமாலை, பாகுபலி கருதுகோள் அடங்கிய கட்டுரைச் செய்தியை (Press Trust of India) அமைப்புக்கு அனுப்பிவைக்கவே, அந்த அமைப்பிலிருந்து பல்வேறு அச்சு ஊடகங்கள் செய்தியை எடுத்துக்கொண்டு தத்தம் இதழ்களில் வெளியிட்டுள்ளனர். இது நடந்தது 2018, மார்ச், 25.  செய்தி வெளியிட்ட ஒரு சில ஊடகங்களின் பெயர்கள் கீழே:

1)    DNA Mar 25, 2018, 01:06 PM IST

2)  THE HINDU  KARUR: , MARCH 25, 2018 13:25 IST

3)      India Today. 25 March 2018.

4)     The Ne w Indian Express. 25 March 2018.

5)     The Outlook

தமிழ்நாட்டில் ஒரு சமணத்தடயம் கண்டறியப்பட்டு அது பற்றிய வரலாற்றுச் செய்திகளை அச்சு ஊடகத்தைச் சேர்ந்த ஆங்கில இதழைச் சேர்ந்தவர்கள் மட்டுமே, PTI (Press Trust of India) அமைப்பிலிருந்து பெற்றுப் பயன்படுத்தியுள்ளனர். தமிழ்மொழி சார்ந்த எந்த ஊடகத்தாரும் தமிழகம் தொடர்பான மேற்படி வரலாற்றுச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளவில்லை எனத்தெரிகிறது. (தமிழ் இதழ்களில் வெளியிட்டமை தெரிந்தோர் சுட்டலாம்). இந்நிலையில், சென்னையில் இயங்கும் “அகிம்சை நடை” அமைப்பினர் தாம் நடத்திவரும் “முக்குடை” இதழில், நாக. கணேசன் அவர்கள் கணக்குவேலம்பட்டித் தீர்த்தங்கரர் சிற்பம் பற்றி – ஆதிநாதரும் அவரது மகள்களும் என்னும் கருத்தை உள்ளடக்கி - எழுதிய கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.

 “அகிம்சை நடை” அமைப்பினர், அவ்வப்போது சமணம் சார்ந்த இடங்களுக்குக் குழுவாகப் பயணம் செய்துவருகின்ற நிலையில், கணக்குவேலம்பட்டித் தீர்த்தங்கரர் சிற்பத்தையும் காணவிழைந்ததால், கட்டுரை ஆசிரியரைத் தொடர்புகொண்டு கணக்குவேலம்பட்டிக்குச் செல்லும் வழி கேட்டறிந்தார்கள். வெள்ளோட்டமாகச் சிலர் அங்குச் சென்று பார்த்துத் திரும்பித் தங்கள் குழுவினரை ஆகஸ்ட், 5-ஆம் நாள் அன்று அழைத்துச் சென்று காண்பிக்கத் திட்டமிட்டுள்ளனர்.  கணக்குவேலம்பட்டித் தீர்த்தங்கரர் சிற்பத்தைப் பார்வையிடும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கட்டுரை ஆசிரியரையும் அழைத்தனர். கோவையிலிருந்து அந்த அமைப்பைச் சார்ந்த இருவர் செல்ல இருந்ததால், கட்டுரை ஆசிரியரை அவர்களே அழைத்துச் சென்று திரும்பக் கோவையில் விடுப்பது எளிதானது எனக் கூறப்பட்டதால், இந்நிகழ்ச்சியில் கட்டுரை ஆசிரியரும் இணைந்துகொண்டார். நிகழ்வில், தீர்த்தங்கரர் செய்தியை வெளியிடக் காரணமாயிருந்த கட்டுரை ஆசிரியரைப் பாராட்டிப் பேசினர்.

இத்துணை நிகழ்வுகளுக்குப் பின்னரும், இச்செய்தி தற்போது ”டைம்ஸ் ஆஃப் இந்தியா”  (TIMES OF INDIA)  நாளிதழில் புதிய கண்டுபிடிப்பு போன்ற கோணத்தில் வெளியானது சரியா? என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி. “அகிம்சை நடை”க் குழுவினர் தீர்த்தங்கரர் சிற்பத்தைத் தம் நடைப்பயணத்தின்போது கண்டுபிடித்ததாகச் செய்தி வெளியிட்டமை நேர்மையான அணுகுமுறை ஆகாது.  ஏற்கெனவே வெளிப்படுத்திவிட்ட ஒரு மரபுச் சின்னத்தைக் காணச் சென்ற குழு அமைப்பினர், தாம் சென்று கண்டு மகிழ்ந்த செய்தியைத் தமிழகம் முழுதும் உள்ள தம்மைச் சார்ந்த மக்களும் தெரிந்துகொள்ளவேண்டி ஒரு பகிர்வுச் செய்தியாக – நடப்புச் செய்தியாக – இதழ்களில் வெளியிடுவது சிறப்பானதாயிருக்கும். கழுகுமலைக்குச் சென்றோம், திருநாதர் குன்றுக்குச் சென்றோம் என்று பரபுச் சின்னங்களைச் சென்று பார்த்த நிகழ்வினைச் செய்தியாக வெளியிடுவதுபோல், கணக்குவேலம்பட்டிச் செய்தியும் வெளிடப்பட்டிருக்குமேயானால் யாரும் பிழை காணார். தீர்த்தங்கரர் சிற்பத்தைக் கண்டறிந்த முன்னோடிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, ஒரு மரபு நடைச் செய்தியாக வெளியிட்டிருப்பின் எத்துணைச் சிறப்பாய் இருந்திருக்கும்! அதை விடுத்து, நடைப்பயணத்தினர் தம் பயணத்தின்போது கண்டுபிடித்ததாகச் (the discovery) செய்தி வெளியாகியுள்ளது பெரும்பிழை அல்லவா? பிழை யார் இழைத்தாரோ அறியோம். ஆங்கில நாளிதழில் எழுதுவோருக்கு அவர் எழுதும் சொற்களுக்கும் சொற்றொடருக்கும் பொருள் புரியாமலாயிருக்கும்?  நாளிதழில் வெளியான செய்தியில் உள்ள came upon என்னும் தொடரையும், made the discovery என்னும் தொடரையும் காண்க.

 “A team of jain scholars and heritage enthusiasts recently came upon a bas relief….”

“He was part of the group that made the discovery during the 56th Ahimsa wak.”

came upon என்னும் தொடருக்கு அகராதிகள் தரும் பொருள் கீழே தரப்பட்டுள்ளது.

Cambridge dictionary

to find or meet someone or something, espunexpectedly:

Collins dictionary

If you come upon someone or something, you meet them or find them by chance.

Dictionary.com

to meet or encounter unexpectedly

discovery என்னும் தொடர் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

காடும் மேடும் சுற்றியலைந்து களப்பணியாற்றும் வரலாற்று ஆர்வலர்களின் கண்டுபிடிப்புகளை வேறொருவர் உரிமையாக்கிக்கொள்வது எங்ஙனம் நேர்மையாகும்? வரலாற்றுச் செய்திகளை வெளியிடுகையில், அச்சு ஊடகத்தார் மிகுந்த கவனத்துடன் செய்தியின் மெய்யான பின்னணியை வெளியிடவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கவேண்டும். அண்மையில், வைரமுத்து அவர்கள், கால்டுவெல் பற்றிய ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்ட, “கால்டுவெல் ஒப்பிலக்கண நூலை 1856-ல் வெளியிட்ட பிறகுதான், தென்னிந்திய மொழிகள் சம்ஸ்கிருதவழிப்பட்ட இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தோடு தொடர்பில்லாத தனி மொழிக் குடும்பம் என்பதை அறிவுலகம் உணர்ந்தது” என்னும் கூற்று சரியல்ல. கால்டுவெல் தம் நூலை வெளியிடுவதற்கு நாற்பதாண்டுகளுக்கு முன்னரே 1816-லேயே ­ எல்லிஸ் இதை நிறுவிவிட்டார் என்று வரலாற்றுப் பிழையைச் சுட்டிக்காட்டிய செய்தியைக் கண்டிருக்கிறோம். அதுபோலவே, தொல்லியல் கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தோர் ஒருவர்; உரிமை ஆக்கிக்கொள்வோர் மற்றொருவர் என்ற பிழையும் நேரக்கூடாது.

கணக்குவேலம்பட்டித் தீர்த்தங்கரர் சிற்பத்தைப் பற்றிய செய்திப்பிழைக்கு ”டைம்ஸ் ஆஃப் இந்தியா”  (TIMES OF INDIA)  நாளிதழ் என்ன மறுமொழி கூறப்போகிறது என்பது தெரியவில்லை. இந்த விளக்கத்தையும் எவ்வாறு ”டைம்ஸ் ஆஃப் இந்தியா”  (TIMES OF INDIA)  நாளிதழ் ஊடகத்தாருக்குக் கொண்டு சேர்ப்பது? இந்த விளக்கத்தின் ஒரு படியை அரவக்குறிச்சி சுகுமார் பூமாலைக்கே அனுப்பியுள்ளேன். அவர் இதை PTI (Press Trust of India) அமைப்பினர்க்கு அனுப்பிவைத்து, அந்த அமைப்பினர் வழி மறுமொழி ஏதும் வந்தால் நல்லது.

துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி :  9444939156.

Banukumar Rajendran

unread,
Sep 3, 2018, 2:04:54 AM9/3/18
to மின்தமிழ், Kanaka Ajithadoss
On Mon, Sep 3, 2018 at 11:15 AM dorai sundaram <doraisu...@gmail.com> wrote:

கணக்குவேலம்பட்டி தீர்த்தங்கரர் சிற்பம்

”டைம்ஸ் ஆஃப் இந்தியா”  (TIMES OF INDIA)  நாளிதழில் வந்துள்ள செய்தியை நூ.த.லோ.சு. ஐயா பகிர்ந்துள்ளதைப் பார்த்தேன். அதில், சென்னையிலிருக்கும் ஜைனம் சார்ந்த “அகிம்சை நடை” அமைப்பினர், தம் மரபு நடைப்பயணத்தின்போது கணக்குவேலம்பட்டி தீர்த்தங்கரர் சிற்பத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் பிழையான செய்தி. இதன் பின்னணியை இங்கே சொல்லவேண்டியுள்ளது.

அரவக்குறிச்சி அருகில் புங்கம்பாடி என்றொரு சிற்றூர். குடகனாற்றின் அருகில் அமைந்துள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த சுகுமார் பூமாலை என்பவர் வரலாற்று ஆர்வலர். சென்னையில் ஒளிப்படக் கலைஞராய்ப் பணி. ஊர்ப்பக்கம் வந்தால், வண்டியை எடுத்துக்கொண்டு அரவக்குறிச்சியின் சுற்றுப்புறங்களில் தொல்லியல் தடயங்கள், பழங்கோயில்கள் என்று களப்பணியில் சுற்றித் திரிந்துகொண்டிருப்பவர். அரவக்குறிச்சியின் சுற்றுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் கணக்குவேலம்பட்டி. அங்கு சிறு சிறு பாறைகளும், ஓரிரு பெரிய பாறைகளும், தரை மட்டத்திலிருந்து சற்றே உயர்ந்த பெரிய பாறைப்பரப்பும், பாறைப்பரப்புக்கு இடையில் ஓரிரு சுனைக்குழிகளும் (அவற்றில் நீர் எப்போதும் தேக்கியிருக்கும்) அமைந்த பகுதி ஒன்றுண்டு. அந்த இடத்தில் பெரிய பாறையின் சரிவு சுவரெழுப்பியது போல் காணப்படும். இந்தச் சுவர்ப்பகுதியின் மேற்பகுதியில் மூன்று உருவங்கள் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. ஓர் ஆண் உருவம்; இரு மருங்கிலும் இரு பெண்ணுருவங்கள். உள்ளூர் மக்கள் நெடுங்காலமாக “மொட்டையாண்டவர் கோயில்” என்னும் பெயரில் முருகன் – வள்ளி – தெய்வானை என்று வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் ஒருமுறை கூடித் விழாக் கொண்டாடி மகிழ்கின்றனர். மேற்படி சிற்பம், சுகுமாரின் வரலாற்று ஆர்வப்பார்வையில் வேறுபட்டுத் தெரிந்தது. மேலும், சற்று மேலேயுள்ள  பாறைத் தளத்தில் ஒரு பாறையின் கீழ் படுக்கை போல் வெட்டப்பட்ட அமைப்பும், பாறையின் மேல் பழங்காலச் செங்கல் கட்டுமானம் ஒன்றும் இருப்பது கண்டு அவர், இந்த இடம் சமணத் தடயங்களைக்கொண்டது என்று உணர்ந்தார்.

எனவே, அவர், சென்னையில் அவருக்குத் தெரிந்த, தொல்லியல் துறையில் பணியிலிருந்த இராமச்சந்திரன் அவர்களை அழைத்துவந்து காண்பித்துள்ளார். இராமச்சந்திரன் அவர்கள், இந்த இடத்தைச் சமணத் தடயங்கள் உள்ள இடம் என்றும், புடைப்புச் சிற்பத்தைத் தீர்த்தங்கரர் சிற்பம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார். ஆனால், இது பற்றிச் செய்திகள் எவையும் வெளியிடப்படவில்லை. சிறிது கால இடைவெளியில், சுகுமார் பூமாலை  இக்கட்டுரை ஆசிரியரை அணுகி நேரில் வந்து பார்க்குமாறு அழைப்பு விடுத்தார். கூடுதலாக, அரவக்குறிச்சியின் அருகில் அமைந்துள்ள மலைக்கோவிலூர் மலைக்கோவிலில் உள்ள கல்வெட்டுகள், மற்றும் ஓரிரு நடுகற்கள், குடகனாற்றுக் கரைப்பகுதியில் உள்ள பாறைக்கல்வெட்டு ஆகியவற்றைக் காட்டுவதும் அவர் நோக்கம். கட்டுரை ஆசிரியர் 30-01-2018 அன்று அரவக்குறிச்சி சென்று சுகுமாருடன் இணைந்து மேற்குறித்த இடங்களையெல்லம் பார்வையிட்டும், கல்வெட்டுகள் சிலவற்றைப் படித்தும் விரிவாகச் செய்திக்கட்டுரை ஒன்றை எழுதி சுகுமாருக்கு அனுப்பிவைத்தார். அனுப்புமுன்னரே, அவர் தொடர்பு வைத்திருக்கும் வட்டத்தில் சமணச் சிற்பம் பற்றிய கருத்துப் பகிர்வை மேற்கொண்டார். இக்கருத்துப் பகிர்வின்போதே திரு. அஜித தாஸ் எனக்கு அறிமுகம் ஆனார். ஆய்வின் முதல் நிலையில், சிற்பத்தில் உள்ளவர் பாகுபலி என்பதான கருதுகோள் முன்வைக்கப்பட்டாலும் பின்னர் அமெரிக்கா வாழ் தமிழறிஞர் நாக. கணேசன் அவர்கள் முன்வைத்த, தீர்த்தங்கரர் ஆதிநாதர், அவரது பெண் மக்களான பிராமி, சுந்தரி இருவருக்கும் எண்ணும் எழுத்தும் கற்பிப்பதைக் குறிக்கும் வகையில் அமைந்த சிற்பம் என்னும் கருதுகோளைச் சேர்த்து எழுதப்பெற்ற புதுக்கட்டுரையைக் கட்டுரை ஆசிரியர் அவரது வலைப்பூவில் பின்னர் இணைத்தார். மேற்படிக் கருத்துப்பகிர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தவர்கள் :

திரு. பானுகுமார், சமண வரலாற்றாளர், சென்னை.

திரு. நாக. கணேசன், தமிழறிஞர், வரலாற்றாளர், அமெரிக்கா.

திரு. அஜித தாஸ், சமண வரலாற்றாளர், (அகிம்சை நடை) சென்னை.

இந்நிலையில், நாடு தழுவிய அளவில் அச்சு ஊடகத்தாரின் மைய அமைப்பாக இயங்கும்  PTI (Press Trust of India) அமைப்புடன் தொடர்புடைய சுகுமார் பூமாலை, பாகுபலி கருதுகோள் அடங்கிய கட்டுரைச் செய்தியை (Press Trust of India) அமைப்புக்கு அனுப்பிவைக்கவே, அந்த அமைப்பிலிருந்து பல்வேறு அச்சு ஊடகங்கள் செய்தியை எடுத்துக்கொண்டு தத்தம் இதழ்களில் வெளியிட்டுள்ளனர். இது நடந்தது 2018, மார்ச், 25.  செய்தி வெளியிட்ட ஒரு சில ஊடகங்களின் பெயர்கள் கீழே:

1)    DNA Mar 25, 2018, 01:06 PM IST

2)  THE HINDU  KARUR: , MARCH 25, 2018 13:25 IST

3)      India Today. 25 March 2018.

4)     The Ne w Indian Express. 25 March 2018.

5)     The Outlook

தமிழ்நாட்டில் ஒரு சமணத்தடயம் கண்டறியப்பட்டு அது பற்றிய வரலாற்றுச் செய்திகளை அச்சு ஊடகத்தைச் சேர்ந்த ஆங்கில இதழைச் சேர்ந்தவர்கள் மட்டுமே, PTI (Press Trust of India) அமைப்பிலிருந்து பெற்றுப் பயன்படுத்தியுள்ளனர். தமிழ்மொழி சார்ந்த எந்த ஊடகத்தாரும் தமிழகம் தொடர்பான மேற்படி வரலாற்றுச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளவில்லை எனத்தெரிகிறது. (தமிழ் இதழ்களில் வெளியிட்டமை தெரிந்தோர் சுட்டலாம்). இந்நிலையில், சென்னையில் இயங்கும் “அகிம்சை நடை” அமைப்பினர் தாம் நடத்திவரும் “முக்குடை” இதழில், நாக. கணேசன் அவர்கள் கணக்குவேலம்பட்டித் தீர்த்தங்கரர் சிற்பம் பற்றி – ஆதிநாதரும் அவரது மகள்களும் என்னும் கருத்தை உள்ளடக்கி - எழுதிய கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.

 “அகிம்சை நடை” அமைப்பினர், அவ்வப்போது சமணம் சார்ந்த இடங்களுக்குக் குழுவாகப் பயணம் செய்துவருகின்ற நிலையில், கணக்குவேலம்பட்டித் தீர்த்தங்கரர் சிற்பத்தையும் காணவிழைந்ததால், கட்டுரை ஆசிரியரைத் தொடர்புகொண்டு கணக்குவேலம்பட்டிக்குச் செல்லும் வழி கேட்டறிந்தார்கள். வெள்ளோட்டமாகச் சிலர் அங்குச் சென்று பார்த்துத் திரும்பித் தங்கள் குழுவினரை ஆகஸ்ட், 5-ஆம் நாள் அன்று அழைத்துச் சென்று காண்பிக்கத் திட்டமிட்டுள்ளனர்.  கணக்குவேலம்பட்டித் தீர்த்தங்கரர் சிற்பத்தைப் பார்வையிடும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கட்டுரை ஆசிரியரையும் அழைத்தனர். கோவையிலிருந்து அந்த அமைப்பைச் சார்ந்த இருவர் செல்ல இருந்ததால், கட்டுரை ஆசிரியரை அவர்களே அழைத்துச் சென்று திரும்பக் கோவையில் விடுப்பது எளிதானது எனக் கூறப்பட்டதால், இந்நிகழ்ச்சியில் கட்டுரை ஆசிரியரும் இணைந்துகொண்டார். நிகழ்வில், தீர்த்தங்கரர் செய்தியை வெளியிடக் காரணமாயிருந்த கட்டுரை ஆசிரியரைப் பாராட்டிப் பேசினர்.

இத்துணை நிகழ்வுகளுக்குப் பின்னரும், இச்செய்தி தற்போது ”டைம்ஸ் ஆஃப் இந்தியா”  (TIMES OF INDIA)  நாளிதழில் புதிய கண்டுபிடிப்பு போன்ற கோணத்தில் வெளியானது சரியா? என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி.

சரியில்லை. மிகவும் கண்டிக்கத்தக்கது. எங்கே பிழை நேர்ந்திருக்கிறது என்று தெரியவில்லை. திருவாளர்.கனக.அஜிததாஸ் 
அவர்களுக்கும் இம்மடலை முற்செலுத்தியிருக்கிறேன். 

இதுபோன்று செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது. முன்பே கண்டுப்பிடித்தவைகளை புதிதாக கண்டுப்பிடித்ததைபோல்
செய்திகளைப்போடுகிறார்கள். இவைகளை எவ்வாறு சரி செய்வது என்றும் தெரியவில்லை.

இரா.பானுகுமார்
பெங்களூரு

“அகிம்சை நடை”க் குழுவினர் தீர்த்தங்கரர் சிற்பத்தைத் தம் நடைப்பயணத்தின்போது கண்டுபிடித்ததாகச் செய்தி வெளியிட்டமை நேர்மையான அணுகுமுறை ஆகாது.  ஏற்கெனவே வெளிப்படுத்திவிட்ட ஒரு மரபுச் சின்னத்தைக் காணச் சென்ற குழு அமைப்பினர், தாம் சென்று கண்டு மகிழ்ந்த செய்தியைத் தமிழகம் முழுதும் உள்ள தம்மைச் சார்ந்த மக்களும் தெரிந்துகொள்ளவேண்டி ஒரு பகிர்வுச் செய்தியாக – நடப்புச் செய்தியாக – இதழ்களில் வெளியிடுவது சிறப்பானதாயிருக்கும். கழுகுமலைக்குச் சென்றோம், திருநாதர் குன்றுக்குச் சென்றோம் என்று பரபுச் சின்னங்களைச் சென்று பார்த்த நிகழ்வினைச் செய்தியாக வெளியிடுவதுபோல், கணக்குவேலம்பட்டிச் செய்தியும் வெளிடப்பட்டிருக்குமேயானால் யாரும் பிழை காணார். தீர்த்தங்கரர் சிற்பத்தைக் கண்டறிந்த முன்னோடிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, ஒரு மரபு நடைச் செய்தியாக வெளியிட்டிருப்பின் எத்துணைச் சிறப்பாய் இருந்திருக்கும்! அதை விடுத்து, நடைப்பயணத்தினர் தம் பயணத்தின்போது கண்டுபிடித்ததாகச் (the discovery) செய்தி வெளியாகியுள்ளது பெரும்பிழை அல்லவா? பிழை யார் இழைத்தாரோ அறியோம். ஆங்கில நாளிதழில் எழுதுவோருக்கு அவர் எழுதும் சொற்களுக்கும் சொற்றொடருக்கும் பொருள் புரியாமலாயிருக்கும்?  நாளிதழில் வெளியான செய்தியில் உள்ள came upon என்னும் தொடரையும், made the discovery என்னும் தொடரையும் காண்க.

 “A team of jain scholars and heritage enthusiasts recently came upon a bas relief….”

“He was part of the group that made the discovery during the 56th Ahimsa wak.”

came upon என்னும் தொடருக்கு அகராதிகள் தரும் பொருள் கீழே தரப்பட்டுள்ளது.

Cambridge dictionary

to find or meet someone or something, espunexpectedly:

Collins dictionary

If you come upon someone or something, you meet them or find them by chance.

Dictionary.com

to meet or encounter unexpectedly

discovery என்னும் தொடர் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

காடும் மேடும் சுற்றியலைந்து களப்பணியாற்றும் வரலாற்று ஆர்வலர்களின் கண்டுபிடிப்புகளை வேறொருவர் உரிமையாக்கிக்கொள்வது எங்ஙனம் நேர்மையாகும்? வரலாற்றுச் செய்திகளை வெளியிடுகையில், அச்சு ஊடகத்தார் மிகுந்த கவனத்துடன் செய்தியின் மெய்யான பின்னணியை வெளியிடவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கவேண்டும். அண்மையில், வைரமுத்து அவர்கள், கால்டுவெல் பற்றிய ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்ட, “கால்டுவெல் ஒப்பிலக்கண நூலை 1856-ல் வெளியிட்ட பிறகுதான், தென்னிந்திய மொழிகள் சம்ஸ்கிருதவழிப்பட்ட இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தோடு தொடர்பில்லாத தனி மொழிக் குடும்பம் என்பதை அறிவுலகம் உணர்ந்தது” என்னும் கூற்று சரியல்ல. கால்டுவெல் தம் நூலை வெளியிடுவதற்கு நாற்பதாண்டுகளுக்கு முன்னரே 1816-லேயே ­ எல்லிஸ் இதை நிறுவிவிட்டார் என்று வரலாற்றுப் பிழையைச் சுட்டிக்காட்டிய செய்தியைக் கண்டிருக்கிறோம். அதுபோலவே, தொல்லியல் கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தோர் ஒருவர்; உரிமை ஆக்கிக்கொள்வோர் மற்றொருவர் என்ற பிழையும் நேரக்கூடாது.

கணக்குவேலம்பட்டித் தீர்த்தங்கரர் சிற்பத்தைப் பற்றிய செய்திப்பிழைக்கு ”டைம்ஸ் ஆஃப் இந்தியா”  (TIMES OF INDIA)  நாளிதழ் என்ன மறுமொழி கூறப்போகிறது என்பது தெரியவில்லை. இந்த விளக்கத்தையும் எவ்வாறு ”டைம்ஸ் ஆஃப் இந்தியா”  (TIMES OF INDIA)  நாளிதழ் ஊடகத்தாருக்குக் கொண்டு சேர்ப்பது? இந்த விளக்கத்தின் ஒரு படியை அரவக்குறிச்சி சுகுமார் பூமாலைக்கே அனுப்பியுள்ளேன். அவர் இதை PTI (Press Trust of India) அமைப்பினர்க்கு அனுப்பிவைத்து, அந்த அமைப்பினர் வழி மறுமொழி ஏதும் வந்தால் நல்லது.

துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி :  9444939156.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba

unread,
Sep 3, 2018, 3:23:48 AM9/3/18
to மின்தமிழ், Kanaka Ajithadoss, Subashini Kanagasundaram
ஒருவர் ஆய்வு செய்து கண்டுபிடித்ததை பத்திரிக்கைச் செய்தியில் அவர் பெயரோடு ஒளிவு மறைவின்றி கூறவேண்டும். இந்த சமணச் சிற்பம் பற்றிய பதிவுகள் நாம் பெப்ரவரி மாதம் அங்கு சென்றபோது எடுத்த படங்களெல்லாம் வலைப்பக்கத்தில் இருக்கின்றன. அப்படியிருந்தும் புதிதாக இக்குழு கண்டுபிடித்ததாகச் சொல்வது மிக வருந்தத்தக்க விசயம். அவர்களுக்கு நாம் இதனை வெளிப்படையாக அறிவுறுத்துவதுதேவை.

சுபா

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி

dorai sundaram

unread,
Sep 3, 2018, 4:35:33 AM9/3/18
to mintamil
பானுகுமார் ஐயாவுக்கும், சுபாவுக்கும் நன்றி. 
தமிழ் மொழி அச்சு ஊடகங்கள் எவையும் 
PTI (Press Trust of India) அமைப்பினரரிடமிருந்து 
செய்தியைப்  பெற்று வெளியிடவில்லை என்பதாகச்
சுகுமார் பூமாலை தெரிவித்தார். இதுவும் வருத்தமளிப்பதாகவே
உள்ளது.
சுந்தரம்.

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Banukumar Rajendran

unread,
Sep 3, 2018, 4:45:31 AM9/3/18
to மின்தமிழ், dorai sundaram, Kanaka Ajithadoss
உயர்திரு. பேரா.கனக. அஜிததாஸ் அவர்களின் கருத்தை இங்கு பதிக்கிறேன்.
//
“என்
 எழுதப் போகிறார்கள், எவ்வாறு செய்தி வெளிவரும் என்பதை அறிய வாய்ப்பில்லாமையால் இந்த பிழைகள். ..”
//

 ”டிஓஐ” யின் பொறுப்பற்றத்தனமாகத் தெரிகிறது.

இரா.பானுகுமார்.  

---------- Forwarded message ---------
From: Kanaka Ajithadoss <ajith...@gmail.com>
Date: Mon, Sep 3, 2018 at 1:38 PM
Subject: Re: [MinTamil] கணக்குவேலம்பட்டி தீர்த்தங்கரர் சிற்பம்
To: Banukumar Rajendran <banuk...@gmail.com>

அய்யா, வணக்கம்.  ஆப் இந்தியா நாளிதழில் வந்த கணக்கு வேலன் பட்டி மொட்டை ஆண்டவர் கண்டுபிடிப்பு பற்றிய முழுத்தகல்வல்கள் திரு. கோவை. சுந்தரம் கட்டுரை (திரு. பூமாலை சுகுமார் அவர்கள் வாயிலாக அவருடன்ந்து அன்னார் சென்றது, பின்னர், சிற்பத்தின் அடையாளம் பற்றி 'பாகுபலி' 'ஆதிநாதர் 'என்பதான திரு. சுந்தரம் அய்யா, திரு. கணேசன் அய்யா அவர்களது கட்டுரைகள், அதன் விவரங்கள்,ஆகியவற்றை விளக்கியதுடன், முக்குடை யிலும் இதுபற்றி திரு. கணேசன்அய்யா அவர்களே கட்டுரை எழுதி உதவுமாறு கேனதையு அதுவும் வெளியானது. இவற்றை TOI கட்டுரையாளரிடம் கூறியிருந்தேன். யாவும் கைபேசி வாயிலாக, பரிமாரிக்திகொள்ருளப்பட்டன. துரை. சுந்தரம் அவர்களை அந்ந 56 அகிம்சை நடைக்கு தொலைபேசி வாயிலாக அழைத்து அன்னார் பல பணிகள், உடல் நலம், தரமான பயணம் எதையும் பொருட்படுத்தாமல் வருகை தந்தார்கள்உ. அவருடைய இந்த வருகைக்கு யாவரும்ள் நன்றி தெரிவித்தனர் . சிறந்த உரை ஒன்றை ஆற்றினார்கள்.  சமணம் பற்றிய நூல்ன் ஒன்றை அளித்து மகிழும் வாய்ப்பு அமைந்தது. கணக்க்காகு வேலன் பட்டிக்கான   வழியையும்யையும் கூறி உதவினார்கள். இந்த அரிய சிற்பம் உள்ளதை தமிழ் சமணர்கள் காண, யாவரும் அறிந்திட முழுமுதற்காணர்கள் அவர்களே. இதில் அகிம்சை நடையாளர் எவரும் (TOI யில் , குறிப்பிட்டுள்ள திரு பிரசாத் அவர்களோ முன்னிலப்படுத்திக்கொள்ள  கண்டுபிடித்ததாக விவரங்களைக் கொடுக்கவில்லை. ஓர் அரிய, இலாஞ்சனமில்லா சிற்பம், தீர்த்தங்கரர் சிற்பத்திற்கு இணையான அளவில் சாமரம் வீசுவோர் சிற்பங்களை இதுவரை கண்டதில்லை.  எழுத்தறிவிக்கும் இறைவனாக தொலைதூரத்தில்  காணப்பட்டாலும் நெருக்கத்தில் அது சாமரைதாரியோடு கூடிய தீர்த்தங்கரர். அது ஆதிபகவன் எனவும் கூறலாம். என்பதே அளிக்கப்பட்ட தகவலின் சாராம்சம். அகிம்சை நடை அங்கு சென்று வந்ததை குறிப்பிட வைண்டியதாயிற்று. , முதன்முதலாக அப்போததான் கண்டறியப்பட்டதாக, தாங்கள் வருத்தமடையும் விதத்தில் பிழையாக வந்துற்றதற்கு வருந்துகிறேன். என்
 எழுதப் போகிறார்கள், எவ்வாறு செய்தி வெளிவரும் என்பதை அறிய வாய்ப்பில்லாமையால் இந்த பிழைகள். திரு. பூமாலை சுகுமாரன் அய்யா, திரு. கோவை. சுந்தரம் அய்யா அவர்கள் தவறாக எண்ண வேண்டாம். பிறர் அரிய பணியை மறைத்து பெநர்கொள்ள அணுவளவும் எண்ணவில்லை. மிக்க நன்றி அன்பு நண்பர் அவர்களுக்கு 

தேமொழி

unread,
Sep 3, 2018, 5:08:02 AM9/3/18
to மின்தமிழ்

On Monday, September 3, 2018 at 1:45:31 AM UTC-7, இரா.பா wrote:
உயர்திரு. பேரா.கனக. அஜிததாஸ் அவர்களின் கருத்தை இங்கு பதிக்கிறேன்.
//
“என்
 எழுதப் போகிறார்கள், எவ்வாறு செய்தி வெளிவரும் என்பதை அறிய வாய்ப்பில்லாமையால் இந்த பிழைகள். ..”
//

 ”டிஓஐ” யின் பொறுப்பற்றத்தனமாகத் தெரிகிறது.

இரா.பானுகுமார்.  

---------- Forwarded message ---------
From: Kanaka Ajithadoss <ajith...@gmail.com>
Date: Mon, Sep 3, 2018 at 1:38 PM
Subject: Re: [MinTamil] கணக்குவேலம்பட்டி தீர்த்தங்கரர் சிற்பம்
To: Banukumar Rajendran <banuk...@gmail.com>

அய்யா, வணக்கம்.  ஆப் இந்தியா நாளிதழில் வந்த கணக்கு வேலன் பட்டி மொட்டை ஆண்டவர் கண்டுபிடிப்பு பற்றிய முழுத்தகல்வல்கள் திரு. கோவை. சுந்தரம் கட்டுரை (திரு. பூமாலை சுகுமார் அவர்கள் வாயிலாக அவருடன்ந்து அன்னார் சென்றது, பின்னர், சிற்பத்தின் அடையாளம் பற்றி 'பாகுபலி' 'ஆதிநாதர் 'என்பதான திரு. சுந்தரம் அய்யா, திரு. கணேசன் அய்யா அவர்களது கட்டுரைகள், அதன் விவரங்கள்,ஆகியவற்றை விளக்கியதுடன், முக்குடை யிலும் இதுபற்றி திரு. கணேசன்அய்யா அவர்களே கட்டுரை எழுதி உதவுமாறு கேனதையு அதுவும் வெளியானது. இவற்றை TOI கட்டுரையாளரிடம் கூறியிருந்தேன். யாவும் கைபேசி வாயிலாக, பரிமாரிக்திகொள்ருளப்பட்டன. துரை. சுந்தரம் அவர்களை அந்ந 56 அகிம்சை நடைக்கு தொலைபேசி வாயிலாக அழைத்து அன்னார் பல பணிகள், உடல் நலம், தரமான பயணம் எதையும் பொருட்படுத்தாமல் வருகை தந்தார்கள்உ. அவருடைய இந்த வருகைக்கு யாவரும்ள் நன்றி தெரிவித்தனர் . சிறந்த உரை ஒன்றை ஆற்றினார்கள்.  சமணம் பற்றிய நூல்ன் ஒன்றை அளித்து மகிழும் வாய்ப்பு அமைந்தது. கணக்க்காகு வேலன் பட்டிக்கான   வழியையும்யையும் கூறி உதவினார்கள். இந்த அரிய சிற்பம் உள்ளதை தமிழ் சமணர்கள் காண, யாவரும் அறிந்திட முழுமுதற்காணர்கள் அவர்களே. இதில் அகிம்சை நடையாளர் எவரும் (TOI யில் , குறிப்பிட்டுள்ள திரு பிரசாத் அவர்களோ முன்னிலப்படுத்திக்கொள்ள  கண்டுபிடித்ததாக விவரங்களைக் கொடுக்கவில்லை. ஓர் அரிய, இலாஞ்சனமில்லா சிற்பம், தீர்த்தங்கரர் சிற்பத்திற்கு இணையான அளவில் சாமரம் வீசுவோர் சிற்பங்களை இதுவரை கண்டதில்லை.  எழுத்தறிவிக்கும் இறைவனாக தொலைதூரத்தில்  காணப்பட்டாலும் நெருக்கத்தில் அது சாமரைதாரியோடு கூடிய தீர்த்தங்கரர். அது ஆதிபகவன் எனவும் கூறலாம். என்பதே அளிக்கப்பட்ட தகவலின் சாராம்சம்.

///எழுத்தறிவிக்கும் இறைவனாக தொலைதூரத்தில்  காணப்பட்டாலும் நெருக்கத்தில் அது சாமரைதாரியோடு கூடிய தீர்த்தங்கரர். அது ஆதிபகவன் எனவும் கூறலாம். ///

சாமரைதாரி?  

சாமரைதாரி படத்தில் சாமரைதாரி எங்கே உள்ளார்?

..... தேமொழி

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

dorai sundaram

unread,
Sep 3, 2018, 1:14:21 PM9/3/18
to mintamil
//இவற்றை TOI கட்டுரையாளரிடம் கூறியிருந்தேன். 
யாவும் கைபேசி வாயிலாக, பரிமாரிக்திகொள்ருளப்பட்டன. //

இங்குதான் தாஸ் ஐயா பிழை செய்துள்ளார். செய்தியாளரிடம் 
செய்தியை எப்போதும் நாமே எழுதி எழுத்துவடிவில்தான் தர
வேண்டும். செய்திக்கட்டுரை சுருக்கமாக இருப்பினும், விரிவாக
இருப்பினும் நாம் எழுதியவற்றை வெளியிடுமாறுதான் கேட்கவேண்டும். 
என் வழக்கம் இதுதான். இந்த முறையில், சில போது செய்திகள் 
சுருக்கப்பட்டுவிடும். சிலபோது, செய்தியாளர், நாளிதழில்
அவருக்கு ஒதுக்கப்பட்ட இட அளவுக்குள்  தம் பதிவை இடவேண்டிய 
நெருக்கடியில், நாம் கட்டுரையில் சேர்த்த கண்டுபிடிப்பாளர்
பெயரையோ உதவி செய்தவர் பெயரையோ குறிக்கத்தவறுவது
உண்டு. ஆனால், செய்தியில், நாம் தரும் 
விளக்கம் ஓரளவேனும் வெளியாகும். நம் எழுத்தை அவர் புரிந்துகொள்வதில்
குறை ஏற்பட்டால், சிலபோது செய்திப்பிழையும் நேரும். பல காரணங்கள்;
பல விளைவுகள். 
ஆனால், இங்கே செய்தியாளர்
செய்தியைச் சரியாகக் காதுகொடுத்துக் கேட்கவில்லை எனவும்; சுருக்கெழுத்துக்
குறிப்பெடுக்கவில்லை எனவும் தெரிகிறது. தொழிலில் அவர் காட்டும் 
அக்கறையின்மையும் பொறுப்பில் அவர் கொண்டுள்ள ஒதுக்கல் போக்கும்
நன்கு புலனாகியுள்ளது என்றே எண்ணவேண்டியுள்ளது. 
சுந்தரம். 

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages