108 வைணவத் திருத்தலங்கள் -காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

519 views
Skip to first unread message

meenavan2

unread,
Oct 28, 2013, 5:44:18 AM10/28/13
to mint...@googlegroups.com


108 வைணவத் திருத்தலங்கள் -காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

சோழ நாட்டுத் திருப்பதிகள்

1.திருவரங்கம்

1.வண்டார்க்கும்  சோலை வரிமதில்சூழ் திருவரங்கம்
  கண்டார்கள்  உய்திபெற  அரவணைமேல் கண்வளர்வான்
  கொண்டேத்தும் அடியவர்தம் குலங்காக்கும்  நலமுடையான்
  விண்தோயும்  கோபுரம்சூழ் வித்தகனை வணங்குதுமே.

2.ஏழ்மதிலும்  ஏழுலகாய்  எண்திசையும் விரிந்திருக்கப்
   பாழ்நரகில்  அழுந்தாமல்  காக்கின்ற பரம்பொருளாய்
   வாழ்கின்ற பேரரங்கன் வளவயலும்  பூங்காவும்
   சூழ்கின்ற திருவரங்கச் சோதியினை வணங்குதுமே.

3.நவதீர்த்தம்  உள்ளபதி  ந்ம்பெருமான் நாமம்சொல்
   தவத்தோர் பலருக்குத் தரிசனங்கள் தந்தபதி 
   பவவினைநோய் அகற்றுமொரு  பரந்தாமன் திருவரங்கம்
   உவகையுடன் வணங்குபவர் உலகேத்த  விளங்குவரே.

4.புண்ணியர்கள் போற்றுமொரு பூலோக வைகுண்டம்
   பண்ணியல்சேர் பிரபந்தம் பாடியவர் பதினொருவர்
   விண்ணியல்வார்  வந்துதொழ  வியந்துருத்தி இடைத்துயிலும்
   திண்ணியதோள் திருவரங்கன் திருவடிகள் பணிந்திடுமே.

5.அழகியலும்  மணவாளன் நாச்சியார்  அருகிருக்க
   எழில்திகழும்  சோதியான்  எழுபிறப்பும் அடியவர்கள்
   தொழுதேத்தும்  திருவரங்கம்  துணையென்றே வணங்குபவர்
   கழலேத்தும்  திருப்பணியைக்  கைக்கொண்டார் வாழுவரே.

மூலவர் - திருவரங்க நாதன் - அழகிய மணவாளன்
தாயார்; - திருவரங்க நாச்சியார்
திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து 12 கி;மீ.

2.உறையூர் (எ) திருக்கோழி

1.கமலவல்லி  உடனிருக்கக் காட்சிதரும்  திருக்கோலம்
   நமக்கென்றே இருந்தருளும் நாயகனின் திருக்கோழி
   எமையாளும்  எந்தையென  இன்னமுதம்  தானுண்ட
   இமையவரும்  வந்துபணி  எழில்ஊரும்  உரையூரே.

2.பிள்ளையிலா  மன்னனுக்குத் திருமகளைப் பெண்ணாக்கிக்
  கொள்ளை அழகுடைய குமரியவள் தனைமணந்த
  வள்ளல் திருக்கோழி  வந்தமர்ந்தான்  சேவடிகள்
  உள்ளுவார் பெரும்பேற்றை உரைக்கவல்லார் யாருளரே.

3.பெருவேழம்  த்னையெதிர்த்துப் பேராண்மை  வலிகாட்டும்
   ஒருகோழி  தன்பெயரை உவந்தேத்தும்  உறையூராம்
   திருநகரை வணங்கிடுவார்  திருவுடனே  நலம்பெறுவார்
   பெருவாழ்வும்  தான்பெறுவார்  பேரடிகள் வணங்குதுமே.

4.திருவுடைய மார்பன் திகழ்கோழி யூர்உறைவான்
  மருவுடைய  துளவத்தார் மகிழ்ந்தணியும்  மாமாயன்
  மருதிடையில்  புகுந்தன்று  மரம்பிளந்தான்  மூவுலகும்
  திருவடியால்  அளந்தவனைத் தினம்வணங்கிப் போற்றுதுமே.

5ஆழிப்  படையுடையான் அழகியனநல் மணவாளன்
  கோழியூர்  வாழுமொரு கோவிந்தன் திருநாமம்
  வாழிஎன வாழ்த்துவார்  வையகத்தே  நலம்பெறுவார்
  ஆழநெடுங் கடல்உறைவான்  அடிமலர்கள் போற்றுதுமே.

மூலவர் - அழ்கிய மணவாளன்
தாயார் - கமலவல்லி நாச்கியார்
திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 4. கி.மீ.

காப்பியக் க்விஞர்.நா.மீனவன்.

Jana Iyengar

unread,
Oct 28, 2013, 5:59:33 AM10/28/13
to mintamil
நா மீ யின் 108 திருத்தல காப்பியம் - முதல் இரண்டு திவ்ய ஸ்தலங்களைப் பற்றியது - கிடைத்தது. உடனே சேமித்துக்கொண்டேன். முழுதானதும் அதை அடியேன் அச்சடிக்கலாமா? அனுமதி உண்டா?
அடியேன் ஜனா ராமானுஜ தாசன் 


2013/10/28 meenavan2 <meen...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
Jana

meenavan2

unread,
Oct 28, 2013, 7:38:28 AM10/28/13
to mint...@googlegroups.com

3.திருக்கரம்பனூர்(எ)உத்தமர் கோவில்

1.நான்முகனார் தான்வணங்க  நற்கதகம்பத் தருவாகி
  வானமரர்  தொழுதேத்த வாய்த்ததிருக் கரம்பனூர்
  தான்மர்ந்த நாரணன்தன் தாமரைப்பூச்  சேவடியைக்
  கானமர்ந்த துளவத்தான் காலடியைப் போற்றுதுமே.

2.உலகளந்த பெருமாள்வாழ்  உத்தமனார் திருக்கோயில்
   இலகுமருள் மும்மூர்த்தி  இருந்துபணி கின்றசீர்த்
   தலமிதனைப் பூங்காவில்  தாதூதும் வண்டினங்கள்
   நலம்பாட வீற்றிருக்கும்  நாயகன்தாள்  வணங்குதுமே.

3.மாதவங்கள் செய்வார்  ம்திக்கின்ற  மாணிக்கம்
   போதம்  தருமோர்நற் பூரண வ்ல்லியுடன்
   ஓதரிய புகழார்ந்த உத்தமனை  மூவுலகும்
   பாதத்தால் அன்ற்ளந்த பண்ணவனைத் தொழுதிடுமே.

4.முத்திலங்கும்  ஏழ்கடல்போல் முழங்குமொரு சங்கமுளான்
   உத்தமனார் கோயில்  உலகாள இருந்தருள்வான்
   எத்திறத்தான்  என்றறிய இயலாத பெருந்திற்லான்
   தத்துபுகழ்க் கரம்பனூர்த் தனிப்பதியை வணங்குமினே.

5.சுடராழி  வில்வீசச் சுரிச்ங்கம்  கையுடைய
   அடலேற்றை அன்றெதிர்த்தே அருள்செய்த பெருமானைச்
   சுடர்பவள வாயானை உத்தமனூர்ச் சுந்தரனை
   மடைதிகழும் வயற்கரம்பை ம்ன்னவனைப்  பணிகுதுமே.

மூலவர் - புருடோத்தமன்
தாயார் - பூரண வ்ல்லி

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 4.கி.மீ.

4,திருவெள்ளறை

1.புனையிழைகள் தானணிந்த பொற்கொடியின் மணவாளன்
   நினைவார்தம் மனமேறி நிலைத்திருக்கும் பெருமானைக்
   கனையாழிக் கடலரவில்  கண்வளரும்  பங்கயக்கண்
   தனையுடைய  வெள்ளறையான்  தாள்பணிவீர் உய்ந்திட்வே.

2.புண்ணியநற்  புனல்ராரும் புகழ்ஏழு  தீர்த்தங்கள்
   நண்ணுதிரு  வெள்ளறைசேர்  நலத்தானை ஆழ்வார்தம்
   பண்ணுருகு  பாசுரங்கள் படித்தாரை  வாழ்விக்கும்
   தண்ணாரும்  தாமரைக்கண்  ணாந்தாள் வணங்குதுமே.

3.இந்திரனார்  நான்முகனோ(டு) ஈசன்முதல் இமையவர்கள்
   மந்திரமா  மலர்தூவி  மனம்கனியப் பணிந்ததலம்
   சுந்தரச்செண் பகவல்லி  சுடர்க்கொடியாள்  உடனிருக்க
   இந்தநிலம்  இருந்தாளும்  எழில்மாலைப் போற்றுதுமே.

4.ஏர்சிறந்த வெள்ளறையில்  இருந்தமரர்  துயர்தீர்க்கும்
   கார்பிற்ங்கு மேனியனைக் கனகனுடல் கீண்டானைப்
   பாரோடு  வானள்ந்த பரந்தாமன்  திருவ்டியை
   யார்போற்றி வணங்கிடினும்  ஏற்றமுறல்  நிச்சயமே.

5.திருவருளை  நமக்களிக்கத் திகழுமெழில் வெள்ளறையில்
  அருள்சுமந்த பெருமானாய்  அடியவர்தம்  ஆருயிராய்த்
  தருவயல்சூழ் பதியிருந்து  தாமரைப்பூப்  போன்றிலங்கும்
  குரைகழலைப் பணிந்துநிதம்  கும்பிட்டு  வாழுமினே.

மூலவர் - தாமரைக் கண்ணன்
தாயார் - செண்பகவல்லி
திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 20.கி.மீ.

காப்பியக் கவிஞர்.நா.மீனவன்.

meenavan2

unread,
Oct 29, 2013, 3:13:36 AM10/29/13
to mint...@googlegroups.com

5.திரு அன்பில்

1.தேடரிய நெடுமால் திருஅன்பில் பதிஉகந்தான்
  பாடரிய திருமழிசை ஆழ்வாரின்  பாசுரங்கள்
  பீடுடைய மாலையெனப் பெற்றவனாய்  வாழ்பதியைத்
  தேடிநிதம் சேவித்தோர் திருவருளைப்  பெற்றோரே.

2.தண்ணீருள் மூழ்கித் தவமகிடந்த மண்டூகர்
   எண்ணுபுகழ்த் துர்வாசர்  இட்டதொரு சாபத்தால்
   உண்ணீருள் தவளையாய்  உருமாறி இருந்தவரை
   நண்ணிவரம்  தரும்அன்பில் நாயகனை வணங்குதுமே.

3.நான்முகனார் சிவபெருமான் நங்கைஎழில்  ஊர்வசியாள்
   தான்வணங்கிப்  பேறுபெற்ற தலமான அன்பிலிலே
   மானேந்தி  மைத்துனனார்  மங்க்கைஎழில் வல்லியுடன்
   தானமர்ந்தார்  நாம்வணங்கித் தலையாரப்  போற்றுதுமே.

4 மந்தரத்தால்  கடல்கடைந்தோர் ம்கிழ்ந்தமுதம்  உண்ணவைத்த
   சுந்தர  ரார்ன்ஓர்  சுடராழி  கைக்கொண்டான்
   அந்தரத்தார்  பெருந்தெய்வம்  அடியாலே  உலகளந்தான்
   வந்தருளும்  அன்பில்நகர் வருவார் வினையகல்வார்.

5.கார்கடலான்  செவ்விழியான்  கரகமலம்  நான்குடையான்
   ஏர்வயிற்றில் நான்முகனைக் கமலத்தில்  ஏந்தியவன்
   தார்துளவம்  எனக்கொண்டான் தனிவீரன் விசயனுக்குத்
   தேர்நடத்தி. அன்பில்நகர்  சேர்ந்தானை வாழ்த்துதுமே.

மூலவர் - சுந்தரராசன் (வடிவழகிய நம்பி)
தாயார் - அழகிய வ்ல்லி நாச்சியார்
திருச்சியில் இருந்து அன்பில் நகருக்குப் பேருந்து வசதி  உள்ளது.

6.கோவிலடி(எ)திருப்பேர் நகர்

1.நாவிலடித் தமிழ்நடத்தும்  நம்மாழ்வார்  பாடுபுகழ்க்
  கோவிலடி என்றதிருப் பேர்நகரைக்  கும்பிட்டுப்
  பாவிலடி இனியபடி பாடுதமிழ்ப் பரகாலன்
  ஆவியென  விளங்குமுயர் அழகனையாம்  வணங்குதுமே.

2அரங்கத்தில்  ஓர்அரங்கம்  அப்பால  ரங்கமிது
  வரங்கொடுக்கும் திருப்பேரான் வலியரக்கன் திறலழியக்
  குரங்குகளைப்  ப்டையாக்கி இராவணனைக் கொன்றபிரான்
  இரங்கியருள் கோவிலடி இன்றுமுதல் போற்றுதுமே.

3.அப்பக் குடத்தான் அழகுதிருப் பேருடையான்
   ஒப்பில் கமலவல்லி உடனாய செழுஞ்சோதி
   எய்ப்பில் தவமுடையார்  வீடுபெற  இருந்தருளும்
   அப்பன் திருவடியை அனவரதம்  போற்றுதுமே.

4.பேருடைய  தெய்வப்  பெரியாழ்வார்  பாடியநற்
   சீருடைய  திருமொழியைச் செவிகுளிரக் கேட்டபிரான்
   ஏருடைய  அரவணையான் இந்தநிலம்  தானளந்தான்
   பேர் ங்கராம் கோவிலடி  பிறப்பறுக்கும்  திருப்பதியே.

5.அழுதால்  வினையகலும்  அருச்சித்தால்  வீடுதரும்
   தொழுதால் பிணியகலும் துதித்தால் துயர்அகலும்
   ம்ழைசேர் கரியமுகில் மாயோன்நற் கோவிலடி
   தொழுவார்  வானமரர் தொழுதேத்த வாழ்ந்திடுவார்.

மூலவர் - அப்பக்குடத்தான்

தாயார்  - கமலவல்லி
திருச்சியில் இருந்து 15 கல் தொலைவு-கல்லணையிலிருந்து 4 மைல்


காப்பியக் கவிஞர்.நா.மீனவன்.


On Monday, October 28, 2013 3:14:18 PM UTC+5:30, meenavan2 wrote:

கி.காளைராசன்

unread,
Oct 29, 2013, 8:15:06 AM10/29/13
to mintamil
காப்பியக் கவிஞருக்கு வணக்கம்.

இனியொருமுறையேனும் இத்தலங்களுக்கெல்லாம் தங்களது பாக்களுடன் சென்று பரந்தாமனை வணங்கிப் பாடிப்பரவ வேண்டும் என்று விரும்புகிறேன்.

அருமையான பாடல்கள், வாழ்த்துகள் ஐயா.

அன்பன்
கி.காளைராசன்


2013/10/29 meenavan2 <meen...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

meenavan2

unread,
Oct 29, 2013, 9:38:02 AM10/29/13
to mint...@googlegroups.com

7.திருக்கண்டியூர்

1.திருக்கமல  நாதன் கமலவல்லி  உடனமர்ந்த
   திருக்கண்டியூர்  தொழுதால்  தேயும் வினையென்பார்
  மருக்கொண்ட துளவத்தார் மணிமார்பன் நமக்கெல்லாம்
  அருட்கொண்டல்  ஆகியே  ஆதரிப்பான் வணங்குதுமே.

2.அகத்தியனாம் குடமுனிக்கே அருள்செய்தான் நம்செயல்கள்
   பகுத்தறிந்து  பயன்கொடுப்பான் பார்த்தருளும் கண்டியூர்
   அகத்துடையார்  அருள்பெறுவார் அவனடியைத்  தவறாமல்
   அகத்துடையார் மகத்துவத்தை யாரிங்கே  அறிவரம்மா.

3. கையிலே ஓடேந்தும்  கண்ணுதலான்  கையோடு
    மெய்யாக நீங்கிடவே  மேன்மைசெய்  காரணத்தால்
    உய்யவரு கபால  உயர்தீர்த்தம் அமைந்திருக்கும்
    செய்யதிருக் கண்டியூர் சேருவார்  வாழுவரே.

4.செங்கண் கருமுகிலான் சேர்ந்ததிருக் கண்டியூர்
   எங்கட்(கு) இடம்என்பார் இனிப்பிறவி சேர்வார்காண்
   மங்கைதிரு மார்புடையான் மாவலியின் வீறழித்தான்
   இங்குறையும்  கண்டியூர் இனிஎன்றும் போற்றுதுமே.

5.நாட்டில்  பிறந்தார் நலம்காணும் கருத்தோடு
   நாட்டமது  மூன்றுடைய நாயகன்தன் மைத்துனனார்
   வாட்டும் பிறவி  வலையறுக்க வந்தானே
   வீட்டும் பவவினையை விரும்பிப் பணியுமினே.

மூலவர் - கமல நாதன்
தாயார் - கமல வல்லி
தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் வழி 6 ஆவது கல்

8.ஆடுதுறைப் பெருமாள் கோவில்(எ)திருக்கூடலூர்

1.பொன்னி  பெருக்கெடுக்க அதன்போக்கில் உய்யவந்தார்
   என்னும் பெருமான் பரதவர்கள் இட்டவலை
   தன்னிலே  சிக்கிஇவண் தான்கோவில் கொண்டஇடம்
   அன்னவயல்  சூழ்ந்திலகும்  ஆடுதுறை பணிகுதுமே.

2.கூட்டமாய்  இங்குவந்து  கும்பிட்ட முனிவர்குழாம்
   காட்டுநீ  அருளென்று  கால்மலரைத்  தாம்பணியக்
   கூட்டமாய்க் கூடியதால் கூடலூர் என்றமையப்
   பாட்டரசன் பரகாலன் பாடுதலம்  பணிந்திடுமே.

3.விண்வெளியில்  மாருதிசெல் வேளையிலே த்ரைநோக்கப்
   பண்விழைந்து  தான்பாடிப் பரவசத்தால் மக்களெலாம்
   மண்மகிழ்க் கும்பிட்ட மகத்துவத்தைத்  தான்கண்டே
   அண்ணலடி வணங்கியதோர் ஆடுதுறை வணங்குதுமே.

4.அம்பாலே  இறந்தகிளி  அதனுயிரை விடுங்காலை
   தம்பெயரை  ஓதியதால் தன்னுருவைக் காட்டியவன்
   உம்பரினம் உய்திபெற உதவுபத்மா சனியுடனே
   இம்பரிலே  கூடலூர் இருக்கின்றான்  ஏத்துகவே.

5.கண்ணனாம்  மாமாயன் கடல்துயிலும் கார்வண்ணன்
   விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும்  வீடருளும்  துவாரகையான்
   நண்ணுபுகழ்க் கூடலூர் நமககென்றே  இருந்தருளும்
   அண்ணலாம்  ஆடுதுறை அமர்ந்தானைப்  போற்றுதுமே.

மூலவர் - உய்யவந்தார்
தாயார் - பத்மாசனி
திருவையாற்றில் இருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ளது.


காப்பியக் கவிஞர்.நா.மீனவன்.


On Monday, October 28, 2013 3:14:18 PM UTC+5:30, meenavan2 wrote:

meenavan2

unread,
Oct 30, 2013, 5:04:57 AM10/30/13
to mint...@googlegroups.com

9.திருக்கவித்தலம் (எ)கபிஸ்தலம்

1.ஆற்றங்  கரைஇருக்கும்  அருளாளன்  அணிவயல்சேர்
   சேற்றில்  தவங்ங்கிடக்கும்  செந்தா மரையனையான்
   கூற்றனைய முதலைவாய்க்(கு)  உட்பட்ட  வேழமதை
   ஊற்றமுடன்  காத்தான் உறையுமிடம்  கவித்தலமே.

2.குஞ்சரத்தைக்  காத்தருளும் கோமானாம்  வைகுந்தன்
   தஞ்சமென  வ்ந்தோர் தலைமுறையைக்  காப்பாற்றும்
  அஞ்சனமை  மேனி  அரவிந்த  முகத்தழகன்
   கொஞ்சிவரும்  கவித்தலத்தைக்  கும்பிட்டுப்  போற்றுமினே.

3.மூலமே  எனவழைக்க முன்கரிக்கே  உதவியவன்
   சீலமுள  ஆழ்வார்தம்  செந்தமிழ்க்கே  தினம்மகிழ்வான்
  ஆலமுண்டான் மைத்துனனாம்  அரவணையான்  அழகுதிருக்
   கோலமுடன் கவித்தலத்தில் கூடினான் கும்பிடுமே.
 
4.தேன்பொதிந்த  பாசுரத்தால்  திருமழிசை  ஆழ்வார்தம்
   ஊனுருகப்  பாடியதை உவந்தேற்ற  சக்கரத்தான்
   தானமர்ந்த  கவித்தலத்தைத்  த்லைமேலே கொண்டேற்றி
   வானமரர்  தொழுதேத்த  வயங்கினான்  வணங்குதுமே.

5.ஆதியந்தம்  தானறியான்  அரவிந்தப்  பூவிழியான்
   ஓதிவரு  மாமறையின்  உட்பொருளாய் இலங்குபவன்
   மாதுரமா ம்ணிதழுவும்  மைவண்ணத்  தோளுடையான்
   தீதகலக் கவித்தலத்தைத் தேர்ந்தெடுத்தான்  வணங்குதுமே.

மூலவர் - கசேந்திர  வரதன்
தாயார் - பொற்றாமரையாள் (எ) ரமாமணி வல்லி
திருவையாற்றில் இருந்து குடந்தை செல்லும் பாதையில் உள்ளது.

10.திருப்புள்ளம் பூதங்குடி

1.சிறகசைக்கும்  வண்டினங்கள் சேர்ந்திசைக்கும்  இனியகுடி
   பற்வையினம்  வான்பற்க்கப் பச்சைவயல் செழித்திருக்கும்
   நறியமலர்த்  திருப்புள்ளம் பூதங் குடிநயந்தான்
   செறிதுளவத்  தார்மார்பன்  சேவடிகள் வ்ணங்குமினே.

2.வலியவில் இராமனுடன்  வயங்கும்பொற் ராமரையாள்
   அலைமருவு  கடலுற்ங்கும்  அரவணையான்  அக்கடல்வாய்
   ஒலிசங்கம் திருவாழி உடனிரண்டு  கையேந்திப்
   பொலியுமுயர் திருப்புள்ளம் பதியானைப்  போற்றுதுமே.

3.மறங்கொண்ட இராவணனார் மதிகெட்டுச்  சீதையினைச்
   சிறையெடுத்த  போதன்று  சிலிர்த்தெழுந்த கழுகரசை
  அறுத்துச்  சிறகொடித்த அந்நாளில் பூதவுடல்
   இறுபுள்ளம் பூதங்  குடியிதனைச் சேவிமினே.

4.ஒருமங்கை  மார்புடையான் ஓராழி  கையுடையான்
   புரிசங்கம  மறுகையான் புகலிடமாம்  அடியுடையான்
   திருமங்கை  பாசுரத்தில் தினம்களிக்கும் மனமுடையான்
   அருட்செங்கை மாலவனின்  அடிக்கமலம்  போற்றுதுமே.

5.புள்ளரையன்  பூதவுடல்  புகழ்சால் பரமபதம்
   கொள்ளுமிடம் இதுவென்று கும்பிட்டுப் போற்றிடுக
   புள்ளம்பூ தங்குடியான் புகழ்சுமந்த  பொற்புடையான்
   அள்ளற்  பழ்னவயல்  அழகனைநாம்  பாடுவமே.

மூலவர் - வல்வில்ராமன்
தாயார் - பொற்றாமரையாள்
திருவையாற்ரில் இருந்தும் குடந்தையில் இருந்தும் ஆதனூர் செல்லும் பேருந்தில் சென்று ஆதனூரில் இறங்கி அப்பதியை
வணங்கி அங்கிருந்து 3 பர்லாங்கு தொலைவில் உள்ளது.



On Monday, October 28, 2013 3:14:18 PM UTC+5:30, meenavan2 wrote:

meenavan2

unread,
Oct 30, 2013, 5:11:27 AM10/30/13
to mint...@googlegroups.com

அன்புள்ள ஜனா அவர்களே.வணக்கம்
தங்கள் வேண்டுகோள் எனக்கு மிக்க மகிழ்வைத் தருகின்றது.தாராளமாக அச்சேற்றுங்கள்.
அரங்கன் அருள்வான்.முயற்சி வெற்றிபெற இறைவனை இறைஞ்சுகின்றேன்.
காப்பியக் கவிஞர்.நா.மீனவன்.

Jana Iyengar

unread,
Oct 30, 2013, 5:42:37 AM10/30/13
to mintamil
நா மீ ஐயா, மிகவும் நன்றி.
அடியேன் ஜனா ராமானுஜ தாசன் 


2013/10/30 meenavan2 <meen...@gmail.com>



--
Jana

meenavan2

unread,
Oct 30, 2013, 11:24:58 PM10/30/13
to mint...@googlegroups.com


108 வைணவத் திருத்தலங்கள் தொடர்ச்சி

11.திரு ஆதனூர்

1.போதாரும் திருமகளைப் புல்லியநற் றோளுடையான்
   தாதாரும் வண்டினங்கள்  தான்பாடும்  பேறுடைய
   ஆதனூர்ப் பதியுறைவான் அஞ்சனம்சேர் மேனியினான்
   பாதமலர் தானபணிவோம் பரந்தாமன் அருள்பெறுவோம்.

2.ஆண்டளக்கும் ஐயன் அருளன்னை பார்க்கவியாள்
   வேண்டுவார்க்(கு) அருள்செய்யும்  வித்தகனைக் காவிரியும்
   தாண்டரிய கொள்ளிடமும்  தாள்வருடப் பார்முழுதும்
   ஆண்டானை  ஆதனூர் அமர்ந்தானைப் போற்றுதுமே.

3.மதிலெடுக்கும்  திருமங்கை மன்னனுக்குப்  பொருள்கொடுக்க்ப்
   புதியதொரு மரக்காலும் கணக்கெழுதப் புத்தேடும்
   இதுவென்று  காட்டியே இவ்ண்புகுந்த  பெருமானைப்
   பதிசிறந்த  ஆதனூர்ப்  பகலவனை வண்ங்குதுமே.

4.செப்பனைய  மார்பழகி  செங்கமலத் திருமடந்தை
   கைப்பிடித்த தோளான் கரியமா முகிலனையான்
   அப்பிருக்கும் பாம்பணையான்  ஆதனூர்ப் பதிதேடி
   எப்பொழுதும்  மகிழ்ந்திருப்பான்  இணையடிகள் போற்றுகினே.

5.கனல்திகிரி  வெண்சங்கம்  கதையுடனே சாரங்கம்
   பனிபுனல்சூழ்  உலகளந்த  பாதங்கள்  நாந்தகவாள்
   தனமகளின் மணமகளாய்த்  தாமரையாள்  நாயகனாய்
   மனம்மேவும்  ஆதனூர்  மாலடியைப்  போற்றுதுமே.

மூலவர் - ஆண்டளக்கும் ஐயன்
தாயார் - பார்க்கவி
தஞ்சையில் இருந்தும் குடந்தையில் இருந்தும் பேருந்து வசதி உண்டு.
சுவாமி ம்லயில் இருந்து 3.கி.மீ.
குடந்தையில் இருந்து 8 கி.மீ.

12.திருக்குடந்தை(எ)கும்பகோணகம்

1.அகமிருப்பான்  புறமிருப்பான் அனைத்திலுமே  தானிருப்பான்
   பகையரக்கர் இருளிரியப் படைதொடுத்த பெருந்திறலின்
   தகையறிந்து  வணங்கிடுவார்  தன்னடியைத் துதிக்கவென
   உகந்திந்தத் திருக்குடந்தை  உறைவானை  வணங்குதுமே.

2.ஆரா அமுதன் அழ்குதிருக் குடந்தைவாழ்
   சாரங்கக்  கையன்  சயனத் திருக்கோலம்
   பாருமென்  நாதமுனி  பணிந்ததலம்  த்னைஎன்றும்
   சேருமென ஆழ்வார்கள்  சேர்ந்தபதி  சேருமினே.

3.ஏமமுனி  வந்துதொழ  இசைந்துவரம்  தந்தபிரான்
   ஆமையாய்  ஏனமாய்  ஆலிலைமேற் கண்ணனாய்
   நாமுலகில்  தொழவென்றே  நாகமிசைக்  கிடப்பானைச்
   சேமமுறக் கோமளத்தாய் சேர்ந்தானைப் பணியுமினே.

4.உண்ணாமல்  உறங்காமல்  உலகிடையே  மாமுனிவோர்
   மண்ணன்வறு தின்றானை மறமதிகழு  தோளானைக்
   கண்ணென்று  கொண்டார்தம்  கண்ணின் கருமணியைப்
   பண்ணைவயல்  சூழ்குடந்தை பணிவாரைப்  போற்றுதுமே.

5.ஏராரும்  குடந்தைநகர்  இருந்தமரர் தொழுதேத்தப்
   பேரானை  இடர்தீர்த்த பெருமானை  வந்துதொழும்
   சீராள்ர்  குடிவிளங்கச்  சேவடியைக் காப்பாக்கும்
   பேரரங்கன்  சாரங்கன்  பேரடிகள்  ஏத்துமினே.

மூலவர் - ஆராவ்முதன் - சாரங்கபாணி
தாயார் - கோமளவல்லி
கும்பகோணத்தின் ந்டுவில் உள்ளது.


காப்பியக் கவிஞர்.நா.மீனவன்.

On Monday, October 28, 2013 3:14:18 PM UTC+5:30, meenavan2 wrote:

meenavan2

unread,
Oct 31, 2013, 1:43:08 AM10/31/13
to mint...@googlegroups.com


108.வைணவத் திருத்தலங்கள் - தொடர்ச்சி

13. திருவிண்ணகர் (எ) ஒப்பிலியப்பன் கோவில்

1.பாலாழி மிசைத்துயிலும் பரஞ்சுடரான் வேழமிடும்
  ஓலத்தால் புள்ளேறி உடன்வந்து காத்தபிரான்
  கோலத்தார் துளவமெனக் கொண்டான்வாழ் விண்ணகரம்
  பாலித்தார் அடியவராய்ப் பரமபதம் வைகுவரே.

2.என்றும் பதினாறாய் இருக்கின்ற மார்க்கண்டன்
   அன்று திருமகளை மகளாக அடைநாளில்
   நன்றுமணம் கொளவந்த நம்பியோ முனிவரிடம்
   இன்றுமுதல் உணவுண்ணேன் என்றுரைத்த தலமிதுவே.

3.கருடன்முதல் காவேரி காட்சிபெற அருளியவன்
  ஒருநாளும் உப்புண்ணா உப்பிலியான் வையமிசைப்
  பொருவரிய விண்ணகரம் போந்துறைவான் திருப்பாதம்
  சரணென்பார் நலம்பெறுவர் சந்ததமும் வணங்குமினே.

4.கரும்பனைய மென்சொல்லி கடல்தரளம் போல்முறுவல்
  அரும்பிவரும் இளநகையாள் அழகுமலர்ப் பூதேவி
  பெரும்பயனை நமக்களிக்கும் பேறுடைய விண்ணகரம்
  இரும்பிறவி போக்கவென இருப்பானைப் போற்றுமினே.

5.சேதிப் பதிவேந்தன் சிசுபாலன் போயொழிய
  ஆதியிலே பாண்டவர்க் கருள்செய்த அருட்கண்ணன்
  ஓதுதமிழ்ப் பாசுரத்தில் உளமகிழ்ந்த ஒப்பிலியான்
  பாதமலர் விண்ணகரில் பணிந்துய்ய வருவீரே.

  மூலவர் - உப்பிலியப்பன்
  தாயார்  -  பூமிதேவி
  கும்பகோணத்திலிருந்து பேருந்துகள் நிறைய உள்ளன.

14.திருநறையூர் (எ) நாச்சியார் கோவில்

1.கொம்பமரும் குரங்குகளைக் கூட்டியொரு படையாக்கிச்
  செம்பவள வாய்ச்சீதை சிறைமீட்ட காகுத்தன்
  வம்பமலர் மணம்பரப்பும் வளம்நிறைந்த திருநறையூர்
  செம்பியன்கோச் செங்கணான் செய்கோவில் சேருமினே.

2.நலம்தருமோர் நம்பிக்கை நாச்சியார் இருந்தருளும்
  தலமான திருநறையூர் தனிலமர்ந்தார் மணிமல்கு
  பலமாடம் சூழ்நகரப் பரந்தாமன் அழகுதிகழ்
  வலக்கரஞ்சேர் ஆழியனை வந்திங்கே பணிந்திடுமின்

3.சுகந்த வனநாதன் சோதி வடிவுடனே
  திகழும் நறையூர்த் திருநம்பி எழுமுனிவர்
  அகம்குளிரத் தவம்செய்ய அருளியவன் அரவின்மேல்
  மகிழ்ந்துதுயில் பரம்பொருளின் மலரடிகள் பரவுமினே.

4.இந்திரனின் கொடுஞ்சாபம் இல்லாது போகவென
  வந்தருளைச் செய்திட்ட வகுளமலர்த் தாருடையான்
  நந்தவனம் சூழ்ந்ததிரு நறையூர்வாழ் நம்பியவன்
  இந்துமுகப் பேரழகில் பேரின்பம் எய்துகவே.

5.மாதரசி திருமகட்கு மாலையிட்ட மணவாளன்
  போதிருந்து வண்டொலிசெய் பொன்னகரில் அமர்ந்திருக்கும்
  ஆதியந்தம் இல்லானாய் ஆநிரைகள் மேய்த்தவனைக்
  கோதகற்றி வாழ்வுதரக் கும்பிட்டுப் போற்றுமினே.

  மூலவர் - சுகந்தவனநாதன்

  தாயார் - பார்க்கவி

 தஞ்சையில் இருந்தும் கும்பகோணத்தில் இருந்தும் பேருந்து வசதி
 உண்டு.

சுவாமி மலையிலிருந்து 3 கி.மீ தொலைவு
கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ


காப்பியக் கவிஞர்.நா.மீனவன்.



On Monday, October 28, 2013 3:14:18 PM UTC+5:30, meenavan2 wrote:

கி.காளைராசன்

unread,
Oct 31, 2013, 2:24:21 AM10/31/13
to mintamil
காப்பியக் கவிஞருக்கு வணக்கம்.

அருமை. அருமையிலும் அருமை.
தொடர்ந்து படித்து வருகிறேன் ஐயா.

அன்பன்
கி.காளைராசன்



2013/10/31 meenavan2 <meen...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

meenavan2

unread,
Oct 31, 2013, 4:01:52 AM10/31/13
to mint...@googlegroups.com

108.திருத்தலங்கள் - தொடர்ச்சி

15.திருச்சேறை

1.மைவிரியும் மலரனையான்  மரகதப்பொன் மேனியினான்
   செய்விரியும் தாம்ரைகள் சேர்ந்தாடும்  வயல்நகரம்
   பைவிரியும் பமபணையான் பயில்கோயில்  திருச்சேறை
   கைவிரியும்  மலர்தூவிக் காலடிகள் வணங்குமினே.

2.காவிரிக்கு வரம்தந்த  கண்ணனெனும் பேராள்ன்
   பூவிரியும் திருச்சேறை  பொலிசார நாதனைத்தன்
   நாவிரியும் தமிழாலே  நலம்பாடும் திருமங்கை
   மாவிரதம் உடையோரின் மறைப்பொருளைப்  போற்றுதுமே.

3.நான்முகனார் திருச்சேறை நன்மண்ணால் கடம்செய்து
   நான்மறையை அதில்மறைத்து  ந்ல்லபடி காத்தபதி
   மான்போலும் விழிசார நாயகிதன்  ம்ணவாளன்
   கான்மணக்கும் துளவத்தார்க்  கார்முகிலை  வணங்குமினே.

4.மாமதலை தானென்று  மாதரசி காவிரிக்குத்
   தாமதலை  ஆனதொரு  தனிமுதலை  திருச்சேறைக்
   கோமகனை ஆயரமனைக் குலக்கொழுந்தைச் செவ்வாயால்
   தேமதுரக் குழலிசைப்பான் திருத்தாளைப் போற்றுமினே.

5.தேசுடைய மார்பில்  திருமகளும் குடியிருக்க்
   மாசுடைய ம்னத்தாரை  மாற்றுதிரு மாலரங்கன்
   பேசரிய புகழுடையான் பீடுபெறு திருச்சேறை
   ஆசையுடன் தொழுதேத்த அன்பர்களே வந்திடுமின்.

மூலவர் - சாரநாதன்
தாயார் - சாரநாயகி
குடந்தையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலை.

16.திருக்கண்ண மங்கை

1.பாலுக்குள் நெய்யானான்  பண்ணுக்குள் இசையானான்
   காலடிக்குள் பரமபதம் காட்டுதிரு அரங்கனெனும்
   மாலவனும்  நண்ணி ம்கிழ்ந்ததிருக் கண்ணமங்கை
   பாலடுத்தே  நாம்பரவிப் பணிந்தேத்த வாருமினே.

2.எக்கோடி இருப்பவரும்  இனியவராம் முப்பத்து
  முக்கோடி  தேவர்களும் முன்பணிய அருள்செய்தான்
  திக்கோடு  வானளந்தான்  திருக்கண்ண ம்ங்கைவளர்
  தக்கோனைக் கருங்கடலைத் தலையாரப் போற்றுமினே.

3.ஒருமங்கை உடனுறைவான் உயர்வினையே பாராட்டும்
   திருமங்கை மன்னன்சொல் திருமாலை சூடியவன்
   மருமணக்கும் துளவத்தான் மகிழ்ந்ததிருக் கண்ணமங்கை
   வருபவர்தம் தீவினைகள் வாராது விலகிடுமே.

4.பேருலகம் அளந்தமால் பெரும்புறக் கடல்என்னும்
  பேருடையான் அபிடேக வல்லியெனும் பெருமாட்டி
  மார்பிருக்கத் தான்ம்கிழும் மணவாளன் பல்குனனின்
  தேரோட்டி நம்நெஞ்சத் திருக்கோட்டி தாள்பணிமின்.

5.கற்பகக்கா தேனுமணிக் காவலர்க்கே அரசுதந்த
  தற்பரனை அரவரசன் தலைநிழற்கீழ் துயில்வானை
  முற்பவத்தின் தொடரகற்ற முனைந்ததிருக் கண்ணமங்கை
  அற்புதத்தின் திருவடியை அனுதின்மும் வணங்குதிரே.

மூலவர் - பெரும்புறக்கடல்
தாயார் - அபிடேக வல்லி

கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில்
திருச்சேறைக்கு அடுத்து அமைந்துள்ளது.

17.திருக்கண்ணபுரம்

1.மாதேந்தும் திருமார்பன் மணிநீல மேகத்தான்
  போதேந்து நறைபருகும் பொன்வண்டு பண்பாடத்
  தீதகற்றும் பதியான திருக்கண்ண புரத்துறையும்
  பாதங்கள் பற்றினார் பயமின்றி வாழுவரே.

2.கண்ணபுர நாயகியாள் கருத்துள் நிறைந்தானைத்
  தண்ணாரும் நறுந்துளவம் தரித்தானை இங்குறையும்
  மண்ணவர்தம் மாலகற்ற மாலாகி நின்றவனை
  எண்ணினார் எண்ணியதை இவண்பெறுவார் திண்ணமே.

3.மாசற்ற சோதியனை மரகதம்சேர் மேனியனை
  ஆசகற்றி நம்குலத்தை ஆட்கொண்ட நாயகனைத்
  தேசுடையார் வாழுதிருக் கண்ணபுர நாயகனை
  வாசமலர் வகுளத்தார் வள்ளலைநாம் வணங்குதுமே.

4.நாரணன்தன் சேவடியே நலங்காக்கும் என்றுசொலி
  ஆரணிய முனிவர்களும் ஆற்றலுள்ள புள்வேந்தும்
  சீரணியும் திருக்கண்ண புரச்செல்வர் சேவடியைப்
  பாரறியப் பணிந்துய்ந்தார் நாமுமினிப் பணிகுவமே.

5.கண்ணபுரம் வாழ்மாலைக் கருத்துள்ளே வைத்தவர்கள்
  எண்ணியதைப் பெற்றுய்வார் இணையடியாம் கமலங்கள்
  நண்ணியே தொழுதிடுவார் நலம்பெறுவார் என்றிங்கே
  பண்ணியலும் தமிழ்சொல்லும் பக்தர்களே  பணிந்துய்மின்.

மூலவர் - நீலமேகப் பெருமாள்
தாயார் - கண்ணபுர நாயகி

திருவாரூரில் இருந்து நேரே சென்று கோவிலில் இறங்கலாம்.
நன்னிலத்தில் இருந்துநாகை செல்லும் திருப்புகழூரில்
இறங்கினால் சுமார் 2.கி.மீ.தொலைவில் உள்ளது.

18.திருக்கண்ணங்குடி

1.கண்ணங் குடியதனில் கட்டுண்டான் முனிவர்க்காய்
  வெண்ணெய் வடிவில் விளங்குருவாய்த் தானமைத்து
  விண்ணோர் தொழும்வசிட்டன்  விரும்பி  வணங்கியநற்
  கண்ணன் திருவடியைக்  கைகுவித்து  வணங்குமினே.

2.நிகழ்நீல  மேகமென நெஞ்சுதவழ் உடையானைப்
   புகழுலக நாயகிதன் போற்றுதலுக்(கு) உரியவனை
   அகம்கிழும்  தாயாம் அரவிந்த நாய்கியை
   உகந்த  திருமாலை  உளமார வணங்குமினே.

3.தேவூர்நல் ஆபரண  தாரியுடன்  நன்றாய
   மூவர்தொழத் திருக்கண்ணங் குடிமுதலாய் ஐந்துதலம்
   சேவிக்க  இருந்தருளும்  சியாமளநல் மேனியனைத்
   தேவாதி  தேவனைத் திசைநோக்கித்  தொழுதிடுமே.

4.கண்ணவனம் என்றழைக்கும் கருணைவனம் இருந்தவனம்
   மண்ணளந்த நாயகன்வாழ் ம்கிழமரம் உள்ளஇடம்
   கண்ணமங்கை என்றதலம் கண்டபேர்  நலம்பெறுவார்
   திண்ணமென எண்ணிநீர் தினந்தோறும் தொழுதிடுமே.

5.தீராத வல்வழக்கு தினமுறங்காப் புளியமரம்
   ஊறாக்  கிணற்றுடனே  ஒருநாளும்  காயாத
   பேருடைய மகிழமரம் என்றபல பொருளையெலாம்
   சீராகக் கொண்ட்திருக் கண்ணவனம் வணங்குதுமே.

மூலவர் = நீலமேகவண்ணன்
தாயார் - உலக நாயகி - அரவிந்த நாயகி
திருவாரூரில் இருந்து நாகைப் பட்டினம் செல்லும் சாலையில் உள்ள ஆழியூரில் இற்ங்கிச்
சுமார் 5 ப்ர்லாங்கு நடந்து சென்று சேரலாம்.

meenavan2

unread,
Nov 1, 2013, 3:19:36 AM11/1/13
to mint...@googlegroups.com

108 வைணவத் திருத்தலங்கள் - தொடர்ச்சி

19.திருநாகை(எ)நாகைப்பட்டினம்

1.எழுநிலை  மாட்த்தில் எண்ணெய்விளக்(கு)  ஏற்றிவைத்து
   வழிகாட்டும்  விளக்கமென வங்கங்கள் பயன்பெறவே
   வழிகாட்டி ஒளிபொழியும் வளமார்ந்த  திருநாகை
   எழில்நீல  மேகனைநீர்  ஏற்றியே  போற்றுமினே.

2.நின்றும்  இருந்தும் நிலையாகத்  தான்கிடந்தும்
   என்றும்  அருள்செய்யும்  எம்பெருமான்  திருக்கோயில்
   நன்றாய  கடல்நாகை  நற்பதியில்  நாம்கண்டு
   மன்றாடிப்  பணிந்திடவே  மனம்கொண்டு  வந்திடுமின்.

3.சத்தியநல்  தாயார்  சவுந்தர  வல்லியுடன்
   நித்தலும்  நமக்கருளும்  நிமலன் திருநாகை
   பத்தியால்  தொழுவார்தம்  பழவினைகள்  போயொழியும்
   பத்தரீர்  வந்திவன்தன் பாதமலர்  தொழுமின்காள்.

4.வங்கக் கடல்வளைக்க வரியரவில்  துயின்றானை
   சங்கங்கைக்  கொண்டானைச் சாரங்க வில்லானை
   அங்கங்கள்  ஆ(று)ஐந்தாய்  அமைந்துள்ள  வேதங்கள்
   எங்கெங்கும்  தானுய்ய  எழுந்தானை  வணங்குதுமே.

5.துருவனெனும் தவமுடைய  தோன்றலுக்கும்  பாசுரம்சொல்
   திரும்ங்கை  ம்ன்னனுக்கும்  திகழ்ஆதி  வேடனுக்கும்
   உருக்காட்டி  மகிழ்வித்த  உயர்அரவப்  பாயலினான்
   அருள்நாகை அழகனைநீர்  அகங்குளிரப்  பணியுமினே.


மூலவர் - நீலமேகப் பெருமாள்
தாயார் - சவு ந்தரவல்லி
நாகைப்பட்டினம் நகரிலேயே உள்ளது.

20.திருத்தஞ்சை மாமணிக் கோவில்

1.தஞ்சைமா  மணிக்குன்றம்  தனிலமர்ந்த  நரசிம்மன்
   தஞ்சமென  வந்தாரைத்  தாங்குகிற்  கருடபுரி
   வஞ்சிதஞ்சை நாயகிக்கு  வாய்த்திட்ட  மணவாளன்
   வெஞ்சமரில்  இராவணனை வென்றானை வணங்குமினே.

2.அம்பினால்  அரக்கர்கள்தம்  அடல்வலியைத்  தகர்த்தபிரான்
   எம்பிரான்  என்றிங்கே  எல்லோரும்  தொழுதேத்தும்
   வம்புலாம்  சோலை  வளர்தஞ்சை யாளிநகர்
   தம்பதியாய்க்  கொண்டவன்தன்  தாள்மலரை  வணங்கிடுமே.

3.மாமதில்கள் சூழ்தஞ்சை மாமணிக்  கோயில்உளான்
   பூமலர்கள்  போல்மலர்ந்த  பொன்விழியாள்  ஏழுலகும்
   தாம்அதிரத் தேர்செலுத்தித்  தனிநீல  மேகமெனக்
   காமுற்றுச்  சென்றமர்ந்தான்  கழல்வணங்கி  உய்யுமினே.

4.மலர்ப்பொய்கை மாமணியும்  மணிக்குன்றம் எனும்பதியும்
   வலத்தஞ்சை யாளியுடன் வளர்நாகை  இருந்தருளும்
   வலத்தாழி  செங்கமல வல்லிக்கு  நாயகனாய்
   நிலம்பணிய வீற்றிருக்கும் நேசனையாம்  வணங்குதுமே.

5.நாகருடன்  சோழமன்னர் நற்பணியால்  தானமைந்த
  ஆகமஞ்சேர்  நற்கோயில்  அகமிருப்பான்  திருவடிகள்
   போகங்கள்  தரநாளும்  பொலிகின்ற  திறங்கண்டு
   கோகனக மலர்தூவிக் கும்பிட்டுப்  போற்றுதுமே.

மூலவர் - நீலமேகம்
தாயார் - செங்கமல வ்ல்லி
தஞ்சை நகரிலுள்ள வெண்ணாற்றங் கரையில் அமைந்துள்ளது.


காப்பியக் கவிஞர்.நா.மீனவன்.

On Monday, October 28, 2013 3:14:18 PM UTC+5:30, meenavan2 wrote:

கி.காளைராசன்

unread,
Nov 1, 2013, 9:43:11 AM11/1/13
to mintamil, meenavan2
காப்பியக் கவிஞருக்கு வணக்கம்.

2013/11/1 meenavan2 <meen...@gmail.com>


108 வைணவத் திருத்தலங்கள் - தொடர்ச்சி

19.திருநாகை(எ)நாகைப்பட்டினம்

1.எழுநிலை  மாட்த்தில் எண்ணெய்விளக்(கு)  ஏற்றிவைத்து
   வழிகாட்டும்  விளக்கமென வங்கங்கள் பயன்பெறவே
   வழிகாட்டி ஒளிபொழியும் வளமார்ந்த  திருநாகை
   எழில்நீல  மேகனைநீர்  ஏற்றியே  போற்றுமினே.
அருமை, அருமை.
நீர் ஏறி நீலமாகிய மேகனை நாம் ஏற்றிப் போற்றுவோம்.

2.நின்றும்  இருந்தும் நிலையாகத்  தான்கிடந்தும்
   என்றும்  அருள்செய்யும்  எம்பெருமான்  திருக்கோயில்
   நன்றாய  கடல்நாகை  நற்பதியில்  நாம்கண்டு
   மன்றாடிப்  பணிந்திடவே  மனம்கொண்டு  வந்திடுமின்.

3.சத்தியநல்  தாயார்  சவுந்தர  வல்லியுடன்
   நித்தலும்  நமக்கருளும்  நிமலன் திருநாகை
   பத்தியால்  தொழுவார்தம்  பழவினைகள்  போயொழியும்
   பத்தரீர்  வந்திவன்தன் பாதமலர்  தொழுமின்காள்.

4.வங்கக் கடல்வளைக்க வரியரவில்  துயின்றானை
   சங்கங்கைக்  கொண்டானைச் சாரங்க வில்லானை
   அங்கங்கள்  ஆ(று)ஐந்தாய்  அமைந்துள்ள  வேதங்கள்
   எங்கெங்கும்  தானுய்ய  எழுந்தானை  வணங்குதுமே.

5.துருவனெனும் தவமுடைய  தோன்றலுக்கும்  பாசுரம்சொல்
   திரும்ங்கை  ம்ன்னனுக்கும்  திகழ்ஆதி  வேடனுக்கும்
   உருக்காட்டி  மகிழ்வித்த  உயர்அரவப்  பாயலினான்
   அருள்நாகை அழகனைநீர்  அகங்குளிரப்  பணியுமினே.


மூலவர் - நீலமேகப் பெருமாள்
தாயார் - சவு ந்தரவல்லி
உற்சவர் - சௌந்தர்ய ராஜன்  கஜலெட்சுமி
தீர்த்தம் - ஸாரபுஷ்கரிணி
விமானம் - சௌந்தர்ய விமானம் (பத்ரகோடி விமானம்)
காட்சி கண்டவர்கள் - நாகராஜன் (ஆதிசேடன்), துருவன், திருமங்கை, சாலிசுகசோழன்.
நாகைப்பட்டினம் நகரிலேயே உள்ளது.
 
இத்தலம் பற்றி பிர்ம்மாண்ட புராணத்தின் உத்திர காண்டதத்தில் 10 ஆத்தியாயங்களில் சௌந்திர ஆரண்ய மகிமை என்று சூதபுராணிகர் தமது சீடர்களுக்கு உரைத்ததாகக் காண்படுகிறது.
காவிரியின் தென்கரை தொடங்கி திருமறைக்காடுவரை தென்வடல் கீழ்மேலாக பரந்துபட்ட காட்டின் 50 யோஜனை அளவுக்கு கிருஷ்ணாரண்யம் (கிருண்ணனின் காடு) என்று பெயர்.  இதன் கீழ்த்திசையில் 5 மைல் தொலைவுக்கு உள்ள பகுதியே சௌந்தர்ய ஆர்ணயம்.  மிகப்பழஞ்சுவடிகள் சுந்தராரண்யம் என்றே இப்பகுதியைப் பற்றிப் பேசுகின்றன.
இத்தலம் நான்கு யுகங்களில் பெருமை பெற்றுத் திகழ்ந்தது. கிரேதாயுகத்தில் இங்குள்ள ஸார புஷ்கரணி அருகாமையில் நாகங்களுக்குத் தலைவன் ஆதிசேடன் எம்பெருமானைக் குறித்து தவமிருந்து எம்பெருமான் காட்சி கொடுத்து, ஆதிசேடனை எப்போதும் தான் சயனமாக ஏற்றுக் கொள்வதாக அருளிய தலம்.
ஆதிசேடன் ஆகம விதிப்படி அஷ்டாங்க விதான முறையில் பெருமாளை ஆராதித்ததால் அவன் பெயராலோயே நாகன்பட்டினமாகி நாகபட்டினமாயிற்று.
திரேதாயுகத்தில் மாதேவியும், துவாபரயுகத்தில் மார்க்கண்டேயனும் பகவானைக் குறித்து தவமிருந்த தலம்.
இந்தச் சௌந்தரா ரண்யத்தைப் பற்றியும் (ஸாரம் என்றால் பாம்பு, பாம்பாகிய நாகராஜனால் உண்டாக்கப்பட்ட) ஸார புஷ்கரணி பற்றியும்,
“யப்பிரயஸ்தி கிருஷ்ணாதி  சௌந்தர் ஆரண்ய பூதலே தரவு பௌ புண்ய கர்மாணௌ பேத்தா ரென்ன சூர்யமண்டலம்“ என்றும்,  
“சாரபுஷ்கரிணி துரமத்ஸே சுந்தர்கான(க)ம் ஆவிர்ப்ப பூவ, பகவான் லட்சுமி ஷீர சாகராத்“
 அதாவது இப்பெருமாளை மனசுத்தியோடு வழிபட்டு இங்குள்ள ஸார புஷ்கரணியில் தீர்த்தமாடினால் அவர்கள் சூர்யமண்டலத்தை அடைவார்கள் என்று இந்தத் தலத்தின் மகிமையை எல்லாம் நாரதர் மூலம் கேட்ட துருவன் என்னும் சிறுவன் (உத்தான பாத மகாராஜனின் குமாரன் இவன்) இந்த உலகு முழுவதும் தனக்கே அடிமையாக வேண்டுமென்று திருமாலைக் குறித்து இவ்விடத்தே கடுந்தவம் செய்து, தவத்தில் உண்டான எண்ணற்ற இடையூறுகளை எல்லாம் கடந்து நிற்க, இறுதியில் எம்பெருமான் கருடாழ்வார் மீது பேரழகு பொருந்தியவராகக் காட்சி கொடுக்க, அப்பேரழகில் மயங்கி துருவன் தான் கேட்க வந்த வரத்தை (நிலஉலக ராஜயோகம்) வெறுத்து இறைவனது இப்பேரழகில் எப்போதும் திளைக்கும் மோட்சம் வேண்டுமென்று வேண்ட அவ்விதமே மோட்சமளித்து, அவனுக்கு காட்சி கொடுத்த சௌந்தர்யமான திருக்கோலத்திலேயே இவ்விடம் காட்சி தருகிறார்.

(காரைக்குடி, டாக்டர். வைணவச் சுடராழி ஆ.எதிராஜன் அவர்களது 108 வைணவ திவ்யதேச ஸ்தல வராலறு என்ற நூலில் 148, 149,150 பக்கங்களில் உள்ளபடி)


20.திருத்தஞ்சை மாமணிக் கோவில்

1.தஞ்சைமா  மணிக்குன்றம்  தனிலமர்ந்த  நரசிம்மன்
   தஞ்சமென  வந்தாரைத்  தாங்குகிற்  கருடபுரி
   வஞ்சிதஞ்சை நாயகிக்கு  வாய்த்திட்ட  மணவாளன்
   வெஞ்சமரில்  இராவணனை வென்றானை வணங்குமினே.

2.அம்பினால்  அரக்கர்கள்தம்  அடல்வலியைத்  தகர்த்தபிரான்
   எம்பிரான்  என்றிங்கே  எல்லோரும்  தொழுதேத்தும்
   வம்புலாம்  சோலை  வளர்தஞ்சை யாளிநகர்
   தம்பதியாய்க்  கொண்டவன்தன்  தாள்மலரை  வணங்கிடுமே.

3.மாமதில்கள் சூழ்தஞ்சை மாமணிக்  கோயில்உளான்
   பூமலர்கள்  போல்மலர்ந்த  பொன்விழியாள்  ஏழுலகும்
   தாம்அதிரத் தேர்செலுத்தித்  தனிநீல  மேகமெனக்
   காமுற்றுச்  சென்றமர்ந்தான்  கழல்வணங்கி  உய்யுமினே.

4.மலர்ப்பொய்கை மாமணியும்  மணிக்குன்றம் எனும்பதியும்
   வலத்தஞ்சை யாளியுடன் வளர்நாகை  இருந்தருளும்
   வலத்தாழி  செங்கமல வல்லிக்கு  நாயகனாய்
   நிலம்பணிய வீற்றிருக்கும் நேசனையாம்  வணங்குதுமே.

5.நாகருடன்  சோழமன்னர் நற்பணியால்  தானமைந்த
  ஆகமஞ்சேர்  நற்கோயில்  அகமிருப்பான்  திருவடிகள்
   போகங்கள்  தரநாளும்  பொலிகின்ற  திறங்கண்டு
   கோகனக மலர்தூவிக் கும்பிட்டுப்  போற்றுதுமே.

1. தஞ்சை மாமணிக் கோயில் 
மூலவர் - நீலமேகம்
தாயார் - செங்கமல வல்லி
தீர்த்தம் - கன்னிகா புஷ்கரணி, வெண்ணாறு
விமானம் - சௌந்தர்ய விமாமனம்
காட்சி கண்டவர்கள் - பராசர முனி

2. மணிக்குன்றம்
மூலவர் - மணிக்குன்றப் பெருமான். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்.
தாயார் - அம்புச வல்லி
தீர்த்தம் - ஸ்ரீ ராம தீர்த்தம்
விமானம் - மணிக்கூட விமானம்
காட்சி கண்டவர் - மார்க்கண்டேயர்

3. தஞ்சையாளி நகர்
மூலவர் - நரசிம்மன், கிழக்குநோக்கி வீறிருந்த திருக்கோலம்
தாயார் - தஞ்சை நாயகி
தீர்த்தம் - சூர்ய புஷ்கரணி
விமானம் - வேதசுந்தரவிமானம்
காட்சி கண்டவர்கள் - மார்க்கண்டேயர்
 
இத்தலம் பற்றியும் இந்நகர் பற்றியும் பிரம்மாண்ட புராணம் விளக்குகிறது.
கிரேதாயுகத்தில் மது என்னும் அரசனது மரபில் தஞ்சகன், தண்டகன், கஜமுகன் என்னும் அசுரர் மூவர் பிறந்து சிவனைக் குறித்து கடுந்தவம் செய்ய, சிவன் தோன்றி என்ன வரவேண்டுமெனக் கேட்க, அதற்கு அம் மூவரும் சாகா வரம் வேண்டுமென்று கேட்டனர்.  சாகா வரமளிக்கும் வல்லமை திருமால் ஒருவருக்கே உண்டு என்றும், என்னால் உங்கள் மூவருக்கும் மரணமில்லை என்றும் சிவன் அருளி மறைந்தார்.

இதனால் இம்மூவரும் மிகவும் செருக்குற்று இந்திரலோகத்தையும் அச்சுறுத்தி, முனிவர்களின் தவத்தையும் சிதைத்து கொடுமைகள் புரிந்துவந்தனர்.  அப்போது பராசுரர் என்னும் முனிவர் இவ்விடத்தில் தவம் செய்து வந்தார்.  அப்போது நாடெங்கும் கடும் பஞ்சம் உண்டாகி குடிப்பதற்கும் நீரின்றிப் போனது.
ஆனால் பராசர முனிவர் தவமிருக்கும் இடத்திற்கு அருகில் மட்டும் ஒரு சுனையில் நன்னீர் இருந்தது.  இம்மூவரும் வந்து அந்தத் தண்ணீரைப் பருகிக் கொண்டு அவ்வனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒருநாள் பராசரரின் தவத்தைக் கண்டதும் அவரைத் துன்புறத்தி அழிக்கலாயினர்.
பராசரர் ஹரி, ஹரி என்று அரியை அழைக்க, பக்தருக்கு இரங்கும் பரந்தாமன் தனது வாகனமான கருடனை அனுப்ப அம்மூவருக்குத் துணை நின்ற அரக்கர்களையெல்லாம் கருடன் அழித்துவிட அம்மூவர் மட்டும் எஞ்சி நின்றனர்.  இந்நிலைகண்ட எம்பெருமான் தானே நேரில் வந்து தஞ்சகன் எனும் அரக்கனை தனது சக்ராயுதத்தால் தலையைச் சீவினார்.  தவறுணர்ந்த தஞ்சகன் தன்னை மன்னிக்குமாறு வேண்டித் தன்பெயரிலேயே இந்நகரம் திகழவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டான்.  எனவே தஞ்சகனூர் ஆகி தஞ்சகூராகி, தஞ்சாவூராயிற்று.

இதன்பிறகு கஜமுகன் என்னும் அரக்கன் யானை வடிவம் கொண்டு திருமாலைத் தாக்க அவர் நரசிம்ம ரூபமெடுத்து அவனைக் கொல்ல இறக்கும் தருவாயில் தனக்கும் திருநாடு வேண்டுமெனக் கேட்க அவனுக்கும் திருநாடருளினார்.  இந்த தஞ்சையில் யாளியாகிய நரசிம்ம ரூபத்தில் நின்றதால் தஞ்சையாளி என்றே பெயராயிற்று.

“என் மனத்தேயிருக்கும் புகழ் தஞ்சை யாளியைப் பொன்பெய ரோன்றன்“ 

இவ்வாறு இரண்டு சகோதரர்களும் மாண்டுவிட்டதைக் கண்ட தண்டகாசுரன் மிக்க சினத்துடன் திருமாலுடன் பொருதி பாதாளத்திற்குள் புகுந்து மறைந்து கொண்டான்.  திருமால் உடனே வராக உருவங்கொண்டு பூமியைக் கீண்டு அவனைப் பின் தொடர்ந்து சென்று தன் முகக் கோட்டால் அவனது தலையைக் கிழித்து எறிந்தார்.  அவனும் தனது இறுதிக் காலம் வந்துற்றதை யெண்ணி எம்பெருமானின் பாதங்களில் வீழ்ந்து இவ்விடமும் தன் பெயரால் வழங்கப்பட வேண்டுமென வேண்டிக் கொள்ள அவ்வனம் “தண்டகாரண்யம்“ ஆயிற்று.  அதன் நடுவே திருமுட்டம் (ஸ்ரீமுஷ்ணம்) என்னும் திவ்ய ஷேத்திரத்தில் நிலத்தினின்று எழுந்த வண்ணம் ஸ்ரீ பூவராகப் பெருமாள் சுயம்பு வடிவாய் காட்சி தந்தார்.

இந்த வெண்ணாற்றங்கரையில் இப்போது மூன்று கோவில்கள் உள்ளன.  இந்த மூன்று தலங்களிலும் மூன்று பெருமான்கள் எழுந்தருளியுள்ளர்.  மூன்று தலங்கள் இருந்தாலும் ஒரு திவ்யதேசமாகவே மங்களா சாசனம் செய்யப்பட்டுள்ளது.  இம்மூன்றும் அருகருகே அமைந்துள்ளன.

(காரைக்குடி, டாக்டர். வைணவச் சுடராழி ஆ.எதிராஜன் அவர்களது 108 வைணவ திவ்யதேச ஸ்தல வராலறு என்ற நூலில் 153, 154, 155, 156 பக்கங்களில் உள்ளபடி)

தீபாவளி நல்வாழ்த்துகள் ஐயா.

Rathinam Chandramohan

unread,
Nov 2, 2013, 2:13:10 AM11/2/13
to mint...@googlegroups.com
arumai.. arumai..


2013/11/1 கி.காளைராசன் <kalair...@gmail.com>
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
Dr.R.Chandramohan
Principal
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India

krishnan

unread,
Nov 3, 2013, 6:36:35 AM11/3/13
to mint...@googlegroups.com

meenavan2

unread,
Nov 3, 2013, 10:54:33 PM11/3/13
to mint...@googlegroups.com

21.நாதன் கோவில் (எ) நந்திபுர விண்ணகரம்

1.நாதனார்  தான்வாழும்  நந்திபுர  விண்ணகரம்
   சீதமலர்  வதனத்துச்  செகந்நாதன்  உறையுமிடம்
   தாதாரும்  மலர்வண்டு  தக்கேசிப்  பண்பாடக்
   காதலினால்  தானமர்ந்தான்  தன்கழல்கள் பாடுமினே.

2.கவிகாள  மேகமெனும்  கார்முகிலான்  பிறந்தபதி
   செவியாட்டும்  நந்திபிணி  சீராக்கிக்  காத்ததலம்
   தவமிருந்த  செண்பகத்தைத்  தன்மார்பில்  ஏற்றஇடம்
   பவமகற்றும்  இதுவென்று  பணிந்துய்ய  வாருமினே.

3.பொன்னிநதிக்  காவலரின்  போர்ப்படைகள்  இருந்தஇடம்
   மன்னவர்கள்  தாம்வாழ்த்த  மாளிகைகள்  சூழ்ந்தஇடம்
   பொன்னகருக்(கு)  இணையாகப்  பொலிந்திருந்த நந்திபுரம்
   என்னுமிந்தத்  திருத்தலத்தில்  இருப்பானை  வணங்குதுமே.

4.மயிலாலும்  சோலை  மகிழ்ந்திங்கு  மாமரத்தில்
   குயில்பாடும்  இசைக்கிடையே குழ்லூதும்  கோவிந்தன்
   தயிருண்டு  பாலுண்டு  தாயார்கை  அடியுண்டு
   மயல்கொண்ட  நாதன்  மனங்கொண்டு  வாழுமினே.

5.தேவருக்கும்  எட்டாதான்  தெவ்வருக்கும்  கிட்டாதான்
  மூவருக்கும்  இவன்முதல்வன் மூவுலகும்  தானாளும்
   தேவன்  இருந்துறையும்  திருநந்தி  விண்ணகரம்
   பாவத்தைத்  தீர்க்குமெனப் பணிந்தீரேல்  பயன்பெறுவீர்.

மூலவர் - செகந்நாதன்
தாயார் - செண்பகவல்லி
கும்பகோணத்தில் இருந்து கொருக்கை  செல்லும் பேருந்தில் செல்ல வேண்டும்.
அங்கிருந்து  ஒன்ற்ரை மைல் தொலைவு நடந்து  செல்ல  வேண்டும்.
வலங்கைமானில் இருந்தும்  இதே தொலைவுதான்.

22.திருவெள்ளியங்குடி

1.உயர்வெள்ளி  தவமிருந்தே  ஒருகண்ணைப்  பெற்றதலம்
   மயர்வறுநல்  மதிநலத்தான்  மரகதமாம்  வல்லியுடன்
   உயிரனைத்தும்  காக்கின்ற ஒளிமுகத்துத்  திருநெடுமால்
   தயவருளும்  வெள்ளிகுடி  தானமர்ந்தான்  வணங்குமினே.

2.கோலவில்லி  இராமனையே  கொண்டாடும்  நாமத்தான்
   ஞாலத்தை  வாய்காட்டி  நால்வேதப்  பொருளாவான்
   ஓலமிட்டுக்  கரியழைக்க  ஓடிவந்த  குரைகழலான்
   ஆலிலைமேல்  கண்வளர்வான்  அருள்வேண்டி  வணங்குமினே.

3.நான்முகனும்  பார்க்கவனும்  ந்ல்லுலகாள் இந்திரனும்
  ஆனதொரு  பரசுடையான் அணிவிண்ணோர்   திரும்யனும்
  வானமொடு  வையகத்தை வந்தளந்த  விக்கிரமன்
   மாநாகக்  குடைபிடிப்பான்  மலரடியை வணங்குமினே.

4.கரம்நான்கு  தானுடைய  கருடன்தான்  உவந்தபதி
   தரமான தீர்த்தங்கள்  நான்குடைய  தனித்தபதி
  அருள்கொழிக்கும்  திருவெள்ளி  யங்குடியான்  இப்பதியில்
   இருந்தருளும்  காகுத்தன் இணையடிகள் ஏத்துமினே.

5.திருவினுக்கே  இடம்தந்த திருமார்பன்  தாமரைவாழ்
   திருவிடமே  மயங்க்கிஅவள்  திருவாயின்  அமுதுண்டோன்
   திருவெள்ளி  யங்குடியாம்  திருப்பதியை  நயந்தவனாய்
   வருமாலின்  திருவடிகள் வல்வினயை நீக்கிடுமே.

மூலவர் - கோலவில்லி இராமன்
தாயார் - மரகதவல்லி
கும்பகோணத்தில் இருந்தும்  ஆடுதுறையில் இருந்தும் பேருந்துகள் உள்ளன.


காப்பியக் கவிஞர்.நா.மீனவன்.



meenavan2

unread,
Nov 4, 2013, 9:46:50 PM11/4/13
to mint...@googlegroups.com


23.திருவழுந்தூர் (எ) தேரழுந்தூர்

1.பூமருவும்  வண்டினங்கள்  பூபாளம்  பாடிவர
  ஆமருவி  யப்பனாம்  அரங்கன்  எனும்தெய்வம்
   கோமான்நல்  திருவழுந்தூர்  கோவிந்தன்  கழல்நாடிச்
   சேமங்கள்  நாம்பெறவே  சேர்ந்திங்கே  வணங்குமினே.

2.தேரோடு  வான்மிசையில் திரிகின்ற்  திறனுடையான்
   தேர்விழவே  முனிவரெலாம்  திரண்டங்கே  சாபமிடத்
   தேரழுந்திப்  போனமையால்  தேரழுந்தூர்  என்றான
   சீர்பதிவாழ்  திருமாலின்  சேவடிகள்  போற்றுமினே.

3.நங்கள்மல  வேர்அறுப்பான்   நயந்துறையும்  சக்கரத்தான்
   செங்கமல  வல்லியுட்ன்  சேர்ந்தருளும்  இனியபதி
   கொங்குதேர்  வண்டினங்கள்  கூடியே  பண்மிழற்றும்
   தெங்குசூழ்  சோலைவளர்  தேரழுந்தூர்  வணங்குதுமே.

4.கம்பன் எனும்புலமைக்  கவியரசன்  பிறந்தஊர்
   இம்பர்புகழ்  காவிரியாள்  எழிற்புனலும்  சேர்ந்தஊர்
   கும்பமுனி  கருடன்முதல்  கும்பிட்டுத்  தொழுதஊர்
   எம்பெருமான்  தேரழுந்தூர்  இன்றுமுதல்  நினையுமினே.

5.மாமருதின்  இடைசென்ற மணிவயிற்றுத்  தாம்புடையான்
   பாமெத்த  ஆழ்வார்கள்  பாடல்களில்  மயங்கியவன்
   பூமெத்தை  போல்அரவப்  பொற்பாயல்  துயின்ற்பிரான்
   ஆமருவி  அப்பன்தாள்  அனுதினமும்  போற்றுமினே.

மூலவர் - ஆமருவியப்பன்
தாயார் - செங்கமலவல்லி
கும்பகோணத்தில் இருந்து  மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ளது.

24.திருச்சிறு புலியூர்

1.கனலுருவாய்ப்  புனலுருவாய்க்  கரியமா  முகிலுருவாய்
  அனைத்துருவும்  ஆனான்தான்  அமர்ந்ததிருச்  சிறுபுலியூர்
   எனும்பதிவாழ்  சலசயனன்  எனும்பெருமான்  தாமரைவாழ்
   நன்மகளின்  நாயகனைத்  தான்வணங்கி  வாழுமினே.

2.நல்லதிரு  மாமகளாம்  நாச்சியார்  உடனாய
  வில்லியான்  வியாசருடன்  வியாக்கிர  பாதருக்கும்
  ஒல்லைவந்(து)  உதவியருள்  உரகணையான்  உலகளந்த
  எல்லையிலாச்  சிறுபுலியூர்  என்றென்றும்  வணங்குமினே.

3.நாகத்தால்  வரும்பாவ  நலிவகற்றிக்  காப்பவனாய்
  வாகுடைய  புதல்வர்பெற்  வரமருளும்  பெருமானாய்
  மாகமுடன்  ம்ண்ணளந்தான்  சிறுபுலியூர்  மதித்திருந்தான்
  பாகனைய  சொல்லிமண  வாள்னைநீர்  பணியுமினே.

4.மண்ணவர்க்கே  அருள்கின்ற  மாகடலாய்ச்  சிறுபுலியூர்
   மண்ணுகந்தான்  திருமருவு  மார்புடையான்  சேவடிக்குப்
   பண்ணுகந்த  பரகாலன்  பாடுதமிழ்  கேட்டருளும்
   கண்ணனது  கழல்கண்டு  கைகுவுக்க  வாருமினே.

5.வண்ணக்  கொடிமாடம்  வயங்கும்  சிறுபுலியூர்
   நண்ணி  நமக்கருளும்  நாரணன்தன்  சேவடிகள்
   கண்ணலே  க்ண்டுநாம்  கரங்குவித்துச்  சேவித்தால்
   திண்ணமுடன்  அருள்தருவான்  திசைநோக்கித்  தொழுதிடுமின்.

மூலவர் - சலசயனப்பெருமாள்
தாயார் - திருமாகமகள் நாச்சியார்
மயிலாடுதுறையில் இருந்து கொல்லுமாங்குடி செல்லும் பேருந்தில் ஏறி
அங்கிருந்து  சுமார் 2 மைல் தொலைவு  நடந்து சென்று  சேரலாம்.

காப்பியக்  கவிஞர்.நா.மீனவன்.


On Monday, October 28, 2013 3:14:18 PM UTC+5:30, meenavan2 wrote:

meenavan2

unread,
Nov 5, 2013, 3:20:31 AM11/5/13
to mint...@googlegroups.com

108 வைணவத் திருத்தலங்கள் தொடர்ச்சி

25.தலைச்சங்க நாண்மதியம்

1.தண்ணார்பொன்  மலர்கமழும்  தலைச்சங்க  நாண்மதியம்
  விண்ணோர்கள் தொழநின்ற  வெண்சுடரான்  ஓராழி
  நண்ணுகரம்  கொண்டிட்ட  நாண்மதியப்  பெருமான்நம்
  கண்ணுளே  இருந்திடுவான்  கவலையின்ற்ப்  வாழுமினே.

2.திங்களுடன்  பகலவனார்  திசைஎட்டும்  ஒளிர்ந்தாற்போல்
   தங்கரத்தில்  சங்கேந்தித்  தலைச்சங்க  நாண்மதியம்
   செங்கமல  வ்ல்லியுடன்  சேர்ந்தே  இருக்கின்றான்
   மங்காத  செல்வம்  மனைசேர  வணங்குமினே.

3.காவிரியாள்  கலக்கின்ற  காவிரிப்பூம்  பட்டினத்தில்
   பூவிரியும்  சோலைவளர்  புதுமலர்கள்  மணம்பரப்பும்
   தேவர்தொழும்  செம்பவள்த் திருவாயான்  திருமங்கை
   பாவிரித்த  பாசுரத்தின்  பரம்பொருளைப்  போற்றுமினே.

4.குன்றையே  குடையாக்கும்  கோவிந்தன்  குழல்வாயன்
   கன்றாலே  விளவெறிந்த  கரியதிரு  மாணிக்கம்
   அன்றுலகம்  அளந்தமால்  அவனடியைப்  போற்றுபவர்
   என்றும்நல்  அருள்பெறுவார்  ஈடேற  வணங்குமினே.

5.சுடருமபொன்  வளையலணி  சோதியாம்  ஆண்டாளை
   வடவாலின்  கீழிருந்து  வந்துமண்ம்  புரிந்தானைப்
   படஅரவின்  மிசைத்துயிலும்  பரந்தாமன்  என்பான்தன்
  அடிதொழுதார்  உயர்வுபெறல்  அகிலத்தில்  நிச்சயமே.

மூலவர் - வெண்சுடரான் - நாண்மதியப் பெருமான்
தாயார் - செங்கமல வ்ல்லி
சீர்காழிக்குத் தென்கிழக்கே 12 மைல்-சீர்காழியில்  இருந்து  ஆக்கூர் செல்லும்
பேருந்தில் இத்தலத்தை அடையலாம்.

26.திரு இந்தளூர்

1.சந்திரனார்  பெற்றதொரு  சாபத்தைத்  தீர்த்தபதி
   இந்தளூர்  எனச்சொல்லும்  இந்தவோர்  திருப்பதியில்
   அந்தரத்தார்  வந்துதொழ  அஞ்சனமை  மேனியனாய்
   வந்தானைத்  தொழவம்மின்  வாழ்வில்அருள்  பெற்றுய்மின்.

2.பரிமள  ரெங்கனெனும்  பரந்தாமன்  இணைபிரியாப்
   பரிமள  ரெங்கநா யகியாம்நற்  பாவையுடன்
   திரும்ங்கை  பாசுரமாம்  தெய்வத்  தமிழ்மாந்தி
   ஒரும்ங்க்கை  மார்புடையான்  உய்விப்பான்  தாள்தொழுமின்.

3.செங்கால்  மடநாரை சேலருந்தும்  வாவிபல
   எங்குமே  சூழ்ந்திருக்கும்  இந்தளூர்  வாழுமொரு
   சங்கேந்தும்  கோவிந்தன்  சக்கரக்கைச்  சாரங்கன்
   மங்கலஞ்சேர்  திருவடியை  மனங்கொண்டு  போற்றுமினே.

4.கருங்கொண்டல்  கடலுறங்கும்  கார்மேக  மாணிக்கம்
   தரும்அருளால்  புவியாளும்  தாமரைவாய்  வேய்ங்குழலான்
   மருமணக்கும்  திருத்துளவ  மார்பழகன்  திருவடியை
   ஒருமுறைநீர்  வணங்கினால்  உய்திபெறல்  நிச்ச்யமே.

5.வில்லொன்றால்  அரக்கர்கள்தம்  வீறழித்தான்  திருவடியை
   அல்லும்  பலபகலும்  அருச்சித்து  வாழ்வுபெற
   எல்லோரும்  வம்மின்காள்  இந்தளூர்ப்  பதிதேடி
   நல்லவனாம்  கேசவனும்  நமைக்காப்பான்  நம்புமினே.

மூலவர் - பரிமளரெங்கன்
தாயார் - பரிமள ரெங்க நாயகி
ம்யிலாடுதுறை நகரத்தின் ந்டுவில் அமைந்துள்ளது.


காப்பியக்  கவிஞர்.நா.மீனவன்.

On Monday, October 28, 2013 3:14:18 PM UTC+5:30, meenavan2 wrote:

meenavan2

unread,
Nov 7, 2013, 9:40:34 PM11/7/13
to mint...@googlegroups.com


108 வைணவத தலங்கள் - தொடர்ச்சி

27.திருக்காவளம்பாடி (திரு நாங்கூர்)

1.மடவரலாம்  மங்கையுடன்  மகிழ்கின்ற  கோபாலன்
   தடமலர்சேர்  பொய்கைவளர்  தனிப்பதியாம்  திருநாங்கூர்
   இடங்கொண்டான்  இடங்கர்வாய் இருந்துகரி  தான்காத்துப்
   படஅரவில்  துயின்றான்தன்  பாதங்கள்  பற்றுமினே.

2.பத்திரிவாழ்  நாதனே  பதினோரு  நாரணனாய்
   இத்தலத்தில்  வந்தமர்ந்தான்  இனியமலர்த் திருவாயில்
   வைத்தூதும்  திருச்சங்கம்  வாழ்கரத்தான்  ந்மக்கருளும்
   கைத்தலத்தைப்  போற்றிநீர்  காலமெலாம் வாழுமினே.

3.தேன்சூழ்ந்த  சோலைத்  திருக்கா  வளம்பாடித்
   தான்சூழ்ந்த  அடியவர்கள்  தாள்பணிய  வந்தமர்ந்தான்
   மீனாய்நல்  ஆமையாய்  மேலான  பல்லுருவாய்
   ஆனான்தன்  திருவடியை  அனவரதம்  போற்றுமினே.

4.மாயத்தான்  பாற்கடலில்  மன்னினான்  திருநாங்கூர்
   மேயினான்  அரவணையின்  மேலுற்ங்கி  அற்றைநாள்
   ஆயர்தம்  குலக்கொழுந்தாய்  அச்சுதனாய்த்  தான்வளர்ந்தான்
   தூயவன்தன்  மலரடியைத்  தொழுமின்காள்  வினையறுமே.

5.பொய்த்தவங்கள்  செய்வார்தம் புலன்களுக்கும்  எட்டாதான்
   மெய்த்தவங்கள்  செய்கின்ற மெய்யர்க்கே  புலனாவான்
   மைத்தடங்கண்  ம்ங்கையாம்  மாம்களை மணங்கொண்டான்
   கைத்தலங்கள்  நமக்கபயம்  காட்டுவது  நிச்சயமே.

மூலவர் - கோபாலன்
தாயார் - மடவரல் மங்கை
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் உள்ளது.

28.சீர்காழி (எ) சீராம விண்ணகரம்

1.முன்னாளில்  ரோமச முனிவனார்  விழைந்தபடி
   தன்னுடைய  விக்கிரமத்  தனிக்கோலம்  காட்டியவன்
   பொன்லோக  நாயகியின்  புன்னகையில்  மால்கொண்டு
   தன்னிதயம்  வைத்ததனித்  தாடாளன்  தாள்பணிமின்.

2.மட்லவிழும்  குழலி  மகிழ்லோக  நாயகியைத்
   தொட்டுத்  தினம்மகிழ்வான்  ந்ப்பின்னை  தோளணைவான்
   ஒட்டாரை  ஓட்டியவன் ஒளிவண்ண  மேனியான்
   எட்டெழுத்தான்  இருப்பதுவோ சீராம  விண்ணகரம்.

3.தேன்விளங்கு  கமலங்கள்  திகழ்வயற்கண்  பாய்கயல்கள்
   தான்திகழும்  சீர்காழி  தனிலமர்ந்த  மாயவனை
   மீன்விழியாள்  திருமகளின்  மேலான  நாயகனை
   வானளந்த  பெருமானை  வாழ்வுபெற  வணங்குமினே

4.பார்த்தன்  உளமகிழப் பண்டுதேர்  செலுத்தியவன்
   தீர்த்தன்  சடகோபன்  திருவருளைப்  பெறவைத்தோன்
  ஆர்த்தவளைக்  கடலுறைவான்  அரக்கருக்கே  கூற்றானோன்
   தார்த்துளவன்  சீர்காழித்  தலைவனைநீர்  போற்றுமினே.

5.மால்அரிநற்  கேசவனை  மண்ணளந்த  மாதவனை
   நீலமலர்  நிறத்தானை  நீடாழிப்  படையானைக்
   கோலவிழித்  திருமகளின்  கூட்டுறவில்  மகிழ்ந்தானைக்
   காலமெலாம்  கடந்தானைக்  காதலால்  வணங்குமினே.

மூலவர் - திரிவிக்கிரமன் - தாடாளன்
தாயார் - லோக நாயகி - மட்டவிழ் குழ்லி
சீர்காழியில் உள்ளது.மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும்
பேருந்துகள் இவ்வூர் வழியே செல்லும்.

காப்பியக கவிஞர்.நா.மீனவன்.


On Monday, October 28, 2013 3:14:18 PM UTC+5:30, meenavan2 wrote:

meenavan2

unread,
Nov 8, 2013, 8:11:44 AM11/8/13
to mint...@googlegroups.com

29.திரு அரிமேய விண்ணகரம்

1.குடமாடு  கூத்தன்  குளிர்ம்ழையில்  நிரைகாத்தோன்
   படமாடும்  அரவணையான்  பவளநிறத் திருவாயான்
   நடமாடிக்  காளிங்கன்  வலியழித்த  நாரணன்தன்
   இடமான  எழில்தலமே  அரிமேய  விண்ணகரம்.

2.அமுதகட  வல்லியெனும்  அணங்கினுக்கு  ம்ணவாளன்
   தமதுகழல்  பணிவார்கள் தம்கழலை  நாம்பணிவோம்
   எமதுவினை  அகலவென  இங்குதித்த கருமுகிலை
   அமைதியுடன் பாசுரத்தால் அவனடிகள்  தொழுதிடுமின்.

3.அரிமேய  விண்ணகரம்  அதுபதிஎன்(று)  உகந்தானைத்
   திருநாங்கூர்  அமைந்துள்ள  திருநகராம்  இந்நகரில்
   பரிபூட்டு  தேர்நடத்திப்  பாண்டவரைக்  காத்தபிரான்
   கரிகாத்தான்  உறைகின்றான்  கழல்பணிந்து  வணங்குமினே.

4.நான்மறையின்  செம்பொருளாய்  நமக்கென்றும்  தனித்துணையாய்
   வானமரர்  குறைகளைய  வாமனனாய்  மதுராவின்
   கோனாகிக்  குன்றேந்தி   நிரைகாத்த  கோவிந்தன்
   ஆனிரையின்  கோவலனாய்  அமர்ந்தானை  வணங்குதுமே.

5.பரிமேய  தேர்செலுத்தும்  பார்த்தனுக்குச்   சாரதியை
   அரிநரனாய்  அவதரித்தே  அக்கனகன்  கதைமுடித்தோன்
   வரிமேய  வில்லினால்  அரக்கர்குலம்  வீட்டியவன்
   அரிமேய  விண்ணகரம்   அமர்ந்துள்ளான்  போற்றுமினே.

    மூலவர்-குடமாடு  கூத்தன்
    தாயார்-அமுதகடவல்லி
   
    சீர்காழியில்  இருந்து  கிழக்கே  5  மைல்  பூம்புகார்  செல்லும் 
    வழியில்  உள்ளது.

30.திருவண் புருடோத்தமம்

1.நல்லுந்தித்  தாமரையில்  நான்முகனைப்  பயந்தமால்
   வில்லொன்றால்  இராவணனை  வீழ்த்தியவன்  தாதையுரை
   சொல்லொன்றால்  நாடகன்ற  சோதியோன்  வாழ்வினிலே
   இல்லொன்றே  எனவாழ்ந்தான் இருந்தபுரு  டோத்தமமே.

2.நாங்கூர்வண்  புருடோத்  தமநா  யகியுடனே
   தேங்குபுகழ்ச்  சீராளன்  திருப்பாற்  கடல்நாதன்
   வாங்குகடல்  சூழ்இலங்கை  வல்லரக்கர்  நலமழிய
   ஓங்கியே  அம்பெய்த  உத்தமனை  வணங்குதுமே.

3.உற்றார்தம்  துன்பத்தை  உடன்மாற்றும்  இயல்புடையான்
   பற்றாசை  விட்டவரைப்  பாலிக்கும்  அருளுடையான்
   உற்றாலின்  இலைமேலே  ஒருகுழந்தை  எனக்கிடந்தான்
   நற்றாளைப்  பற்றிவிடின்  நாம்உய்தி  பெறலாமே.

4.உத்தமனாய்  வாழுமொரு  புருடோத்  தமநம்பி
   எத்திசையும்  அளந்தமால்  எழிற்சங்கம்  எடுத்துவாய்
   வைத்தூதும்  போதே  வ்ரும்பகைவர்  உளம்நடுங்க
   வைத்தமா  நிதிபோற்றி  வளம்பெற்றே உய்யுமினே.

5.பாருய்யப்  பிறந்திட்ட  பரந்தாமன்  நம்வாழ்வில்
   சீருய்ய  எழுந்திடுநற்  சிறீரங்கன் அரக்கர்களின்
   வேரறுத்த  கார்க்கடவுள்  விரும்பியே  உறைந்திடுவான்
   பேர்காத்த  பெருமானின்  பேரடிகள்  போற்றுமினே.

மூலவர் - புருடோத்த்மன்
தாயார் - புருடோத்தம நாயகி
இத்தலம் திருநாங்கூரில் உள்ளது.மயிலாடுதுறையில் இருந்தும்
சீர்காழியில்  இருந்தும் பேருந்து  வசதி உள்ளது.

Jana Iyengar

unread,
Nov 9, 2013, 7:36:42 AM11/9/13
to mintamil, meen...@gmail.com
கவிஞர் நா மீ அவர்களுக்கு நமஸ்காரம்.
21, 22 கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். தயவு கூரவும்.
அடியேன் ஜனா ராமானுஜ தாசன்.


2013/11/8 meenavan2 <meen...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
Jana

கி.காளைராசன்

unread,
Nov 9, 2013, 7:42:42 AM11/9/13
to mintamil, Jana Iyengar



2013/11/4 meenavan2 <meen...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

meenavan2

unread,
Nov 10, 2013, 8:57:50 PM11/10/13
to mint...@googlegroups.com, meen...@gmail.com
கும்பகோணத்தில் இருந்தும்  ஆடுதுறையில் இருந்தும் பேருந்துகள் உள்ளன.


காப்பியக் கவிஞர்.நா.மீனவன்.

Jana Iyengar

unread,
Nov 10, 2013, 11:20:20 PM11/10/13
to mintamil, meen...@gmail.com
கிடைத்தது கிடைத்தது கிடைத்தது ஐயா...நன்றி 
அடியேன் ஜனா ராமானுஜ தாசன் 

2013/11/11 meenavan2 <meen...@gmail.com>



--
Jana

meenavan2

unread,
Nov 13, 2013, 4:13:28 AM11/13/13
to mint...@googlegroups.com

108.வைணவத்  திருத்தலங்கள் தொடர்ச்சி

31.திருச்செம்பொன்செய் கோவில்

1.மாமறையோர்  வாழ்நாங்கூர்  மாநகரப்  பதிநடுவண்
   பாமறையின்  பொருளானான்  பகர்செம்பொன்  அரங்கனெனும்
  தூமறையோன்  அருளேநம்  துணையென்னும் காசியபன்
  தாமகிழ்ந்து  தொழச்செல்வம்  தந்தானை  வணங்குதுமே.

2.அல்லிமா  மலர் நாச்சி  அணையவரும்  தோளுடையான்
   வல்லரக்கர்  முடிந்தவுடன்  வந்திந்தத்  தலம்மேவி
   நல்லாவாம்  பொற்பசுவை  நான்மறையோன்  ஒருவ்னுக்கு
   நல்கினான்  அதனாலே  நன்கமைந்த  பொற்கோயில்

3 திருச்செம்பொன்  செய்கோவில்  தேடிவம்மின்  என்றுரைத்த
  அருட்செம்மல்  தாமரைக்கண்  ஆடரவப்  பாயலினான்
  திருக்கண்ணில்  பார்வைபெறத்  தேடியவன்  பொன்னடிகள்
  தரிசிக்க  வந்திடில்நீர். தாயன்பைப்  பெறலாமே.

4.புண்ணியராய்  அவனடியைப்  போற்றினார்  எல்லோரும்
  கண்ணியராய்  வாழவழி  காட்டுவான்  வாழ்கோவில்
  திண்ணியநல்  மதில்சூழ்ந்த  திருச்செமபொன்  செய்கோவில்
  நண்ணினார்  கழல்நாடி  நாளுமவற்  போற்றுமினே.

5.மடவரலைத்  திருமகளை  மார்பேற்ற  சீராள்ன்
  அடலரக்கர்  திறமழிய  அனற்பகழி  தொடுத்தபிரான்
  படஅரவில்  நடமிடுவான்  பாதங்கள்  பற்றிடின்நும்
  இடரகலும்  மிடியகலும்  எனவேநீர்  தொழுமின்காள்.

மூலவர்- - செம்பொன்  அர்ங்கர்
தாயார் - அல்லி மாமலர் நாச்சி
இதுவும் திருநாங்கூரில் உள்ளது.

32.திருமணி மாடக் கோவில்

1.மணிமாடத்  திருக்கோவில்  மகிழ்அன்னம்  வாழ்பழனம்
  அணிகாட்ட  அமைந்தபதி  அருள்மிக்க  பத்திரியான்
  பணமருவு  பாம்பணையான்  பகர்நந்தா  விள்க்கானான்
  குணமருவும்  அடியார்கள்  குலதனத்தை  வணங்குமினே.

2.கருடனார்  திருச்சேவை  காண்கின்ற பதியிதனை
   விரும்பியே  உகந்தமால் கன்றாலே  விளவெறிந்தோன்
  வருநோய்கள்  அகற்றவென  வந்தருளும்  கேசவனார்
   திருமணிமா டக்கோவில்  தேடிவந்து  தினம்பணிமின்.

3.கண்ணிறைந்த  செல்வனாம்  கரியமா  மணிக்கமலை
   உண்ணிறைந்த  பேரன்பால்  உளமுருகும்  அடியாரை
   நண்ணியவல்  வினைபோக்கும்  நாரணனார்  அழகமைந்த
   புண்டரிக  வல்லியுடன்  போந்திருந்தான்  வணங்குமினே.
  
4.முடிசார்ந்த  மன்னவரும்  முன்பணியும்  கண்ணபிரான்
   அடிசார்ந்த  பாண்டவர்தம்  ஆவியினைக்  காத்தருளிக்
   கொடிசார்ந்த  தேரோடு  குதிரைகளை  நடத்தியவன்
   படிசார்ந்த  திருமாடக்  கோவிலினைப்  பணியுமினே.

5.செந்நெல்  வயல்சூழ்ந்த  மணிமாடத்  திருக்கோவில்
   தன்னிலே  உறைவான்நல்  தாமரைப்பூஞ்  சேவடியான்
   கன்னன்தான்  மகிழத்தன்  பேருருவம்  காட்டியவன்
   நல்லடிகள்  பணிமின்காள்  ந்ற்பேறு  பெற்றிடவே.

மூலவர் - நந்தா விள்க்கு  -  நாரணனார்
தாயார் - புண்டரிக  வல்லி

இதுவும் திரு நாங்கூரில் உள்ளது.


காப்பியக் கவிஞர்.நா.மீனவன்


meenavan2

unread,
Nov 15, 2013, 10:24:30 PM11/15/13
to mint...@googlegroups.com

108.வைண்வத் திருத்தலங்கள் - தொடர்ச்சி

33.திருவைகுந்த விண்ணகரம்.

1.வண்ணமார்  பரமபத  வைகுந்த  நாதன்கார்
   வண்ணனாய்  வைகுந்த  வல்லியுடன்  வைகுந்த
   விண்ணகரம்  மேவியே  வெற்றிமிகு பரகாலன் 
   பண்ணிலே  இன்புறுவான்  பாதங்கள்  போற்றுமினே.

2.சங்குடனே  பகைவெல்லும்  சக்கரமும்  இருகரத்தில்
   தங்கியே  ஒளிகாட்டத்  தனைஎதிர்த்த  சிசுபாலன்
   அங்கமதைப் பிளந்தவனாம்  அருச்சுனனின்  மைத்துனனார்
   இங்கிந்த  விண்ணகரம்  இருக்கின்றான்  வாழ்த்துமினே.

3.வண்டொலிசெய்  பூம்பொழில்சூழ்  வைகுந்த  விண்ணகரம்
   கண்டருளி  உலகவரைக்  காக்குமொரு  தொழில்பூண்டான்
   பண்டிந்த  உலகளந்தான்  பாதத்தை  வணங்கினால்
   கொண்டவினை  தனைப்போக்கிக்  குலங்காப்பான்  வணங்குமினே.

4.மஞ்(சு)இவரும்  கோபுரங்கள்  மன்னிய்சீர்த்  திருமதில்கள்
  கொஞ்சிவ்ரும்  கிளிமிழற்றக்  குயில்பாடும்  குளிர்சோலை
  நெஞ்சிலே  ம்கிழ்வூட்ட  நின்றுகுழல்  ஊதுபிரான்
  நஞ்சரவம்  ஆட்டியவன்  ந்மக்கருள்வான்  வ்ண்ங்குமினே.

5.காமுறுநல்  அழ்குடையான்  கன்றுகளை  மேய்த்தபிரான்
   வாமனனாய்  மாவலியின்  வலியடக்கிப்  பேருருவாய்த்
   தாமெழுந்த விக்கிரமன்  தனிமூர்த்தி  முழுமுதலோன் 
   சேமத்தைத்  தருங்கண்ணன்  சேவ்டிகள்  போற்றுமினே.

மூலவர் - வைகுந்த நாதன்
தாயார் - வைகுந்த வல்லி
இத்தலமும்  திருநாங்கூரிலேயே  உள்ள்து

34.திருவாலி - திருநகரி
1.திருநகரி  மணவாளன்  திருவாலி  நாடனுக்குப்
   பொருவரிய  நங்கைஎழில்  பூரண  வல்லியாள்
   கரம்பற்றி  மணக்கோலம்  காட்டியநற்  கோபாலன்
   வரம்பெற்று  வாழவெனில்  வந்தடிகள்  பணியுமினே.

2.பொறிவண்டு  மலர்ஊதப்  பொற்குழ்லை  வாயூத
   நிறைவான  கன்றோடு  நிற்கின்ற  பசுவனைத்தும்
   அறியாத  வழிபோக அழகிய  சிங்கனாய்
   நெறிகாட்டும்  கோவலனை  நினைந்தால்நீர்  உய்வீரே.

3.மல்லாடும்  கஞ்சனுடல்  மாய்ந்துவிழ  அன்றடர்த்தான்
   வில்லோடு  என்றென்றும்  விள்ங்குதோள்  இராமபிரான்
   கல்லான்  அகலிகையைக் காலாலே  எழுப்பியவன்
   நல்லாவின்  நிரைகாத்த  நாயகனை  வணங்குதுமே.

4.குருந்தமரம்  தான்ழித்துக்  கொம்பானை  வ்லியடக்கி
   அருந்தப்பால் தரும்பேய்ச்சி  அவளுயிரைத்  தான்வாங்கி
   வருந்தவ்ரு பறவைவாய்  வகிர்ந்தாயர்  குலங்காத்த
   பெருந்தவனை  மாலவனைப்  பேரன்பால்  வணங்குமினே.

5.பால்வெண்ணெய்  தானுண்டான்  பற்றாது  போயந்த
   மால்மண்ணைத்  தானுண்டான்  மற்றவன்தாய்  வாய்பார்க்க
   நீல்வான்  விரிஉலகம்  நீர்சூழ்ந்த  கடல்காட்டும்
   கோலமால்  எனவந்த கோவலனை  வணங்குதுமே.

மூலவர் - அழகிய  சிங்கர்
தாயார் - பூரணவல்லி
சீர்காழியில்  இருந்து பேருந்து  வசதி  உண்டு.இங்கிருந்து சுமார் 6 மைல்

காப்பியக் கவிஞர்.நா.மீனவன்.

meenavan2

unread,
Nov 16, 2013, 5:57:08 AM11/16/13
to mint...@googlegroups.com

108.வைணவத் திருத்தலங்கள் - தொடர்ச்சி

35.திருத்தேவனார்த் தொகை

1.தேவர்புகழ்  சீருடைய  திருத்தேவ  நார்த்தொகைவாழ்
   மூவர்முதல்  தன்னிருப்பை  முதலையின்வாய்க்  கரிமீட்ட
   கோவலனை  யதுகுலத்துக்  கோவேந்தைத்  திருமங்கைப் 
   பாவலன்சொல்  மாலையணி  பரம்பொருளை  வணங்குமினே.

2.நானில்த்தார்  போற்றுமொரு  நம்தெய்வ  நாயகனை
   மானில்த்தார்  மதிக்கவ்ரு  மழைமுகிலை  அமரரெனும்
   மேனிலத்தார்  உய்திபெற  மெய்ஞ்ஞானம்   தந்தானைக்
   கானிலத்தில்   நிரைமேய்த்தான்  கால்மலரைப்  பணியுமினே.

3.கடல்மகளாம்  நாச்சியவள்  கரம்பிடித்த  மாதவனை
   அடல்முனையில்  நூற்றுவரின்  ஆற்றலினை  அழித்தானைப்
   படமணிகொள்  உரகமிசைப்  பாலாழி  கிட ந்தானை
   வடவாலின்  கீழிருக்கும்  வ்லியானை  வணங்குமினே.

4.மாதவனைக்  கேசவனை  மாவ்லியைத்  தொலைத்தானை
  ஆதவனை  ஆழியால் அமர்க்களத்தே  மறைத்தானைப்
  போதலரும்  தாமரைவாழ்  பொன்மகளின்  நாயகனைத்
  தூதாகி  நடந்தவன்தாள்  துணையென்று  தொழுதிடுமின்.

5.மானேந்து  கண்ணாளை  மாதவத்து  நாயகியைத்
   தேனேந்து  கமலஞ்சூழ் திருத்தேவ  னார்த்தொகைசேர்
   கான்போந்த  பாண்டவர்கள்  கையேந்தி  நிற்கையிலே
   தானேந்தி  அவர்க்கருளைத்  தந்தானை  வாழ்த்துதுமே.

மூலவர் - தெய்வ நாயகன்
தாயார் - கட்ல்மகள்  நாச்சியார்

திருநாங்கூரில் இருந்து சுமார் 1 மைல் தொலைவில்  உள்ளது.

36.திருத்தெற்றியம்பலம்

1.சீரணிந்த  செல்வத்துச்  செங்கண்மால்  பசுந்துளவத்
   தாரணிந்தான்  மைத்துனர்க்காய்த்  தானுதவ  வண்ணமணித்
   தேரணிந்த  பரிநடத்தித்  திருத்தெற்றி  அம்பலத்தே
   காரணிந்த  மேனியனாய்க்  காண்பானை  வணங்குமினே.

2.சேடன்மேல்  சயனித்த  செல்வமலி  திருவரங்கன்
   மாடமேல்  மஞ்சுலவ  மஞ்சிடையில்  மதிஉலவ
   நீடுவான்  தொடுகோயில்  நின்றிலங்கி  அருள்வான்தாள்
   கூடுவார்  பயன்பெறுவார்  கும்பிட்டு  வாழுமினே.

3.வல்லியெனும்  செங்கமல  வ்ல்லியுடன்  ஏந்திழையார்
   எல்லாரும்  கூடியிவன்  இசைகுழற்கு  மயங்கிடுவார்
   வல்லானை  அளப்பரிய  வ்டிவானை  அடையலர்க்குப்
   பொல்லானைக்  கோபாலன்  பொன்னடியைப்  போற்றுமினே.

4.பகலவனின்  திருமதலை  படுகளத்தில்  விழுங்காலை
   அகமுருகிப்  புண்ணியங்கள்  அத்தனையும்  வேண்டியவன்
   நகமெடுத்த  நாரணனார்   தாள்மலரை  நண்ணியவர்
   அகமிருப்பான்  புகழ்பேசி  ஆரணங்கள் ஓதுமினே.

5.பூமாதைத்  தான்புணர்ந்த  புண்டரிகக்  கண்ணானை
   நாமாதைப்  புணர்தேவன் நாபியிலே  வந்தானைக்
   கோமானாய்  வந்தவர்கள்  கும்பிடுநற்  றாளானை
   ஆமாவின்  நிரைகாத்த  அச்சுதனை  வணங்குதுமே.

மூலவர்.- செங்கண்மால்
தாயார் - செங்கமல வல்லி

இதுவும் திருநாங்கூரில்  உள்ளது

Subashini Tremmel

unread,
Nov 16, 2013, 2:35:51 PM11/16/13
to மின்தமிழ், Subashini Tremmel
அருமையான தொகுப்பாக வந்து கொண்டிருக்கின்றது. விரைவில் நம் வலைப்பக்கத்தில் இணைத்து வைக்கின்றேன்.

சுபா


2013/11/16 meenavan2 <meen...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

meenavan2

unread,
Nov 16, 2013, 9:18:30 PM11/16/13
to mint...@googlegroups.com

108.வைணவத் திருத்தலங்கள் - தொடர்ச்சி

37.திருமணிக் கூடம்

1.திருமா  மகள்என்னும்  தெய்வத்தாய்  மணவாளன்
  திருநாங்கூர்  சார்ந்ததிரு  மணிக்கூடத்  திருநகரில்
  வருமானை  அழைத்தக்கால் வந்துய்த்த  வடிவழகுப்
  பெருமானை  வணங்கிநீர்  பிற்விநோய்  அகற்றுமினே.

2.அண்டமதை  அளந்தசுடர்  அடிபரவ  வாருமென்று
   தொண்டரெலாம்  பரவவரு  துணைத்தாளான்  கருடனின்மேல்
   அண்டரெலாம்  தொழநின்ற் அரியவனை  இப்பதியில்
   கண்டுதொழ்  வம்மின்காள்  கதிபெறுதல்  நிசசயமே.

3.திரைதவழும்  பாற்கடலில்  தினந்தோறும்  கண்வள்ர்வான்
   பரியிலகு  தேர்ப்பார்த்த  சாரதியாய்  உலகளந்த
   திருமகனை  ஆய்ர்குலத்  தெய்வதத்தைப்  பாண்டவர்க்கே
   உரியநிலம்  கொடுத்தானை  உத்தமர்காள்  வணங்குமினே.

4.மணிக்கூட  நாயகனை  மார்பிலெழில்  திருமகளை
  அணியாகக்  கொண்டவனை  அஞ்சனமை  மேனியனைப்
  பணியரவில்  ந்டனமிடும்  பச்சைமால்  மாயவனை
  அணிவளையார்  கலைகவர்ந்த  ஆரமுதைப்  போற்றுமினே.

5.பேராளன்  நந்தனது  பிள்ளையென  வளர்ந்தானை
   ஊராளும்  கஞ்சனுயிர்  ஒருநொடியில்  கவர்ந்தானைச்
   சீராளும்  மார்பழகன்  சிந்துரத்தின்  வலியடக்கிப்
   பாராளும்  அய்யனைப்  பரம்பொருளை  வணங்குமினே.

மூலவர் - மணிக்கூட  நாயகன்
தாயார் - திருமாமகள்
இதுவும் திருநாங்கூரில்  உள்ளது.அங்கிருந்து சுமார் 4 பர்லாங்குத் தொலைவு

38.திருவெள்ளக் குளம்

1.துந்துமகன்  சுவேதனுக்குத்  தோன்றியருள்  செய்தபதி
  அந்தமிலான்  சீறுகடல்  அலைகடந்தான்  கூனியெனும்
  மந்தரையால்  அரக்கரினம்  மடியவைத்தான்  ந்மக்கருள
  இந்தவூர்  இருந்தானை  எஞ்ஞான்றும்  வணங்குமினே.

2.கொந்தாரும்  சோலையிலே  குயில்பாடும்  இப்பதிக்கே
   வந்தாள்வான்  இடக்கரத்தில்  வலம்புரியான்  சென்னியின்மேல்
   இந்தாரும்  சிவனுக்கே  என்றுமிவன்  மைத்துனனாய்
   மந்தார வதனமுகம்  மலர்வானை  வாழ்த்துமினே.

3.பொருவெள்ள  ஊழியிலும்  போற்றிஉயிர்  காப்பவனாய்த்
   திருவெள்ளக்  குளத்தமர்ந்தான்  திருவாழும்  மார்பழகன்
  அருள்வெள்ளம்  பொழிகின்ற  அல்ர்மேலு  ம்ங்கையுடன்
  இருள்வெள்ளம்  மறைசுடராய்  எழுந்தானை  வணங்குமினே.

4.பண்ணார்ந்த  இசைபாடும்  பகரில்ங்கை  இராவணனார்
  அண்ணலாம்  இராமபிரான்  அருமைத்  துணையான
  கண்ணழகி  சீதையினைக்  கடத்தினான்  என்பதனால்
  விண்ணவர்கள்  தாம்காண்  வீழ்த்தினான்  தாள்பணிமின்.

5.மறைசிலம்பும்  திருவடியான்  மாணிக்கத்  திருமுடியான்
  அறைவண்டு  திகழ்சோலை  அண்ணன்  பெருமானைப்
  பொறிகொண்ட  நாகமிசைப்  பொலிகின்ற்  நம்பியினை
  நறைகொண்ட  மலர்தூவி  நாம்வணங்கிப்  போற்றுதுமே.

மூலவர் - அண்ணன் பெருமாள்
தாயார் - அலர் மேல் மங்கை
சீர்காழியில் இருந்து  சுமார் 8 கி.மீ..பேருந்து வசதி உண்டு

meenavan2

unread,
Nov 17, 2013, 2:55:10 AM11/17/13
to mint...@googlegroups.com

108.வைணவத் திருத்தலங்கள் - தொடர்ச்சி

39.திருப்பார்த்தன் பள்ளி

1.குவளைக்கண்  நெடுமாலைக்  கொம்பொசித்த  கோவேந்தைத்
   தவளநெடு  மாடங்கள்  தான்பொலியும்  பொற்கொடியாம்
   பவளவாய்ச்  சீதையினைப்  பார்த்தன்பு  கொண்டானை
   உவணத்தின்  மேலேறும்  உத்தமனை  வணங்குமினே.

2.காவலரின்  குலம்முடிக்கக் கனற்பிறந்த  பாஞ்சாலி
   பாவியராம் கௌரவரால்  பட்டதுயர்  நீக்கியவன்
   ஆவியெனும்  பார்த்தனுக்கே  அற்றைநாள்  தேரோட்டிச்
   சேவைசெய்த  மாதவனைச்  சேவித்து  வணங்குமினே.

3.தாமரைவாழ்  நாயகியின்  தனித்துணைவன்  ஆனவனைத்
   தேமருவு  மாமலர்சூழ்  திருப்பார்த்தன்  பள்ளிவளர்
   பூமருவு  கண்ணனெனும்  புகழ்பார்த்த  சாரதியை
   நாமருவு  பாசுரத்தால்  நலம்பாடி  வணங்குமினே.

4.குடமுனிவர்  முதலாகக்  கோதமனார்  ஈறாக
   அடிபணியக காட்சிதந்த அரவிந்தம்  போல்விழியான்
   கொடித்தேர்  விசயனது  குழப்பங்கள்  நீங்கத்தேர்ப்
   ப்டியிருந்து  கீதையுரை  பகவானை  வணங்குமினே.

5.கண்ணனது  கையிருந்த  கத்தியினால்  நிலம்கீண்டு
   தண்ணீரை  உண்த்க்கித்  தந்திட்ட  பெருந்தீர்த்தம்
   புண்ணியத்தைத்  தருவதனால்  புகழ்பெற்ற  இத்தலத்தில்
   மண்ணுண்டான்  இருக்கின்றான்  மதித்தவனை  வணங்குமினே.

மூலவர் - பார்த்த சாரதி
தாயார் - தாமரை நாயகி

சீர்காழியில் இருந்து  பேருந்து  வசதி உண்டு.திருவெண்காட்டில் இருந்து
சுமார் 2 மைல் தொலைவில்  உள்ளது.

40.சிதம்பரம் (எ) சித்ர கூடம்

1.தேவாதி  தேவன்  திருச்சித்ர  கூடத்தான்
   பூவாதி  தூவியே  புண்டரிக  வல்லியுடன்
   மாவேத  மரையோர்தம்  மனத்துள்  நிறைந்தானைக்
   கோவிந்த  ராசனைநீர்  கும்பிட்டுப்  போற்றுமினே.

2.பசும்பொன்னார்  முத்துமணி  பல்லவனார்  கொண்டுதர
   விசும்பிருந்த  தேவர்களும்  விரைந்துபணி  திருத்தாளான்
   விசம்பரவும்  அரவதனை  விரித்ததிலே  கிடப்பானைக்
   கசிந்துருகி  வணங்குதற்கே  கைகுவித்து  வாருமினே.

3.கடலாழி  சயனித்துக்  கையாழி  கொண்டருளி
  அடலாழி  எனவிளங்கும்  அல்லிமலர்  விழியானைத்
  திடவாளி  விசயனுக்குத்  தேர்நடத்து  திறலானை
  அடிவாழி  என்வணங்க  அன்புடையீர்  முந்துமினே.

4.ஆடலான்  கூத்தனவன்  அருள்தில்லைத்  திருச்சித்ர
   கூடத்தான்  கோவிந்தன்  கோபாலன்  கோபியர்கள்
   பாடத்தான்  இருந்தருளும்  பரந்தாமன்  காளியன்மேல்
   ஆடித்தான்  காக்கவந்த  அருளமுதைப்  போற்றுமினே.

5.மணிகொண்ட  நாகம்தன் மலர்த்தலையால்  குடைபிடிக்க
   அணிகொண்ட  திருநெடுமால்  அரவமிசைத்  துயில்கொள்ள
   பணிகொண்ட  ஆழ்வார்தம்  பாசுரங்கள்  செவிமடுத்துப்
   பிணிகொண்டார்க்(கு)  அருள்கின்ற  பெருமான்தாள்  பணிந்துய்மின்.

மூலவர் - கோவிந்த ராசன் - தேவாதி  தேவன் - திருச்சித்ர கூடத்தான்
தாயார் - புண்டரிக வல்லி.

சிதம்பரம் நகரில் உள்ளது.


காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

meenavan2

unread,
Nov 17, 2013, 6:05:32 AM11/17/13
to mint...@googlegroups.com

நடு நாட்டுத்திருத்தலங்கள்

41.திருவயிந்திபுரம்

1.முழுமுதலை  ஆதியினை  மூவரிலே  ஒருவனெனத்
   தொழுமுதலைக்  கானாறும்  துளவத்தார்  மாலையனை
   எழுமுகிலைத்  திருமலையை  ஏனமாய்  நின்றானை
   மழைமுகிலை  மாயவன்தன்  மலரடியை  வணங்குமினே.

2.திருவயிந்தி  புரமென்னும்  திருத்தலத்தில்  உறைவானைப்
   பருவயிரம்  தானணியும்  பார்க்கவியின்  துணையானைப்
   பெருவயிர  முடியானைப்  பிநாகத்தான்  மைத்துனனை
   ஒருமுறைநீர்  வணங்கவரின்  உம்வினைகள்  தீர்ந்திடுமே.

3.மாநாகம்   திருவான  மண்வாலால்  தான்பிளந்து
   தேனான  நீர்கொடுக்கத்  திருவகிர்ந்தான்  ஆதலினால்
   பூநாகக்  குடைக்கீழே  பொலிந்தானை  நாம்பணியில்
   மேநாள்நாம்  செய்தவினை  மெல்லத்தான்  நீங்கிடுமே.

4.ஒருகுலத்தில்  ஊழ்வினையால்  உண்டான  பகைதீர்க்கக்
   குருகுலத்தார் சந்துபடத்  தூதான்  கோவிந்தன்
   வருகுலத்தில்  யாதவர்கள்  வாழ்வுபெற்ச்  செய்தபிரான்
   அருள்கலந்து  தருகின்றான்  அணுகித்தான்  உய்யுமினே.

5.வேய்மருவு  குழ்லூதும் வித்தகனை  அரவமெனும்
   பாய்மருவித்  துயில்கொண்டு  பாரதப்போர்  கண்டவனைத்
   தாய்மருவு  பிள்ளையெனத்  தாம்தழுவி  நாம்பணியின்
   சேய்மருவு  தாயாவான்  சேவடியைச்  சிந்திமினே.

மூலவர் - மூவரில்  ஒருவன்
தாயார் - பார்க்கவி

கடலூரில்  இருந்து சுமார் 3 கல்  தொலைவில்  உள்ளது.

42.திருக்கோவலூர்

1.உய்கைக்கே  வழிகாட்டும்  உயர்ந்ததிருக்  கோவலூர்
   பொய்கையார்  பாடல்பெறு  பூங்கோதை  நாச்சியார்
   மெய்தழுவ்  வீற்றிருக்கும்  மேலாள்ன்  விக்கிரமன்
   அய்வர்  உயிர்காத்த  ஆயனடி  வணங்குதுமே.

2.முதலாழ்வார்  மூவருக்கும்  முற்காட்சி  அருளியவன்
   கதமுற்ற  கும்பனது  கரசிரங்கள்  வெட்டியவன்
   நிதமுற்ற  அடியவரின்  நெஞ்சுறைவான்  கஞ்சனையே
   வதம்செய்த  ஆழியனை  வந்தடிகள்  தொழுமிங்காள்.

3.வாமனனாய்ப்  பேருருவாய்  வரவேண்டித்  தொழுதமுனி
   ஆமந்த  மிருகண்டன்  அகம்குளிர  உருக்காட்டிப்
   பூமியினை  ஓரடியால்  புகழ்வானை  ஓரடியால்
   தாமளந்தான்  கோவலூர்த்  தலமிருந்தான்  போற்றுமினே.

4.கோபாலன்  கோவிந்தன்  குழலூதும்  மாமாயன்
   பூபாலன்  கன்னனுக்குப்  போற்றுபதம்  ஈந்தபிரான்
   மாபா  ரதப்போரில்  மைத்துனனின்  தேரோட்டிப்
   பூபாரம்  தீர்த்தவனின்  பொன்னடிகள்  போற்றுமினே.

5.நீருண்ட  நெடுமேகம்  நின்றெழுந்த  தோற்றமெனப்
   பாருண்ட  மால்மார்பில்  பகல்காட்டும்  சீவத்சம்
   காருண்ட  மேனியான்  கவுத்துவம்கொள்  க்ண்டமுடன்
   பேருருவம்  காணவைத்த பெரியானைப்  போற்றுமினே.

மூலவர் - திரிவிக்கிரமன்
தாயார் - பூங்கோதை நாச்சியார்

திருச்சியில் இருந்து வேலூர்  செல்லும்  பேருந்துகள் இவ்வூர் வழி செல்லும்.
கடலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து நிறையப் பேருந்துகள் உள்ளன.

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 17, 2013, 6:17:06 AM11/17/13
to mintamil
 தாய்மருவு  பிள்ளையெனத்  தாம்தழுவி  நாம்பணியின்
   சேய்மருவு  தாயாவான்  சேவடியைச்  சிந்திமினே.

அருமை!

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2013/11/17 meenavan2 <meen...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Nov 17, 2013, 6:47:51 AM11/17/13
to mintamil
காப்பியக் கவிஞருக்கு வணக்கம்.


2013/11/17 meenavan2 <meen...@gmail.com>
மூன்று முறை சென்று வணங்கி வந்துள்ளோம்.
மலை மேல் உள்ள அருள்மிகு ஹயக்கீரிவரையும் வணங்கிப் பலன் பெற்றுள்ளோம்.

தங்களது இந்தப் பதிவு அருமை, அருமையிலும் அருமை ஐயா.

meenavan2

unread,
Nov 18, 2013, 3:26:44 AM11/18/13
to mint...@googlegroups.com

108.வைணவத் திருத்தலங்கள் - தொடர்ச்சி

தொண்டை நாட்டுத் திருத்தலங்கள்

43.திருக்கச்சி அத்திகிரி (காஞ்சிபுரம்)

1.அழகுபொலி  திருக்கச்சி  அத்திகிரி  வாழிறைவன்
   எழில்பொழியும்  பேரருளான்  இயல்வரதன்  எனும்பெருமாள்
   கழையெனும்தோட்  பெருந்தேவி காதலிக்கும்  மணவாளன்
   அழியாத  பேரழகன்  அருல்பெறநீர்  முந்துமினே.

2.வேதத்தின்  மெய்ப்பொருளாய்  விளங்குபேர்  உடையவர்தம்
   பாதத்தைப்  போற்றியே  பரவியருள்  பெற்றமையால்
   காதலுடன்  இப்பதியைக் கைகுவித்துத்  தாள்வணங்கி
   மாதவனே  அருள்கவென  மனதார  வணங்குமினே.

3.அமரர்கள்தம்  அதிபதியாய்  அறவாழிப்  படையுடனே
   தமருகந்தார்  அனைவரையும்  தாள்காட்டி  ஆட்கொண்டான்
   சமருகந்த  களத்திலன்று  சாரதியாய்  உருமாறி
   அமருகந்த  கண்ணபிரான்  அடிவணங்கிப்  போற்றுமினே.

4.மாயப்  பிறவிதனை  மாற்றுமொரு  வல்லாளன்
   நேயத்தாள்  நப்பின்னை  நெஞ்சுகந்த  மணவாளன்
   தேயத்தார்  அடிவணங்கத்  திருவடியால்  உலகளந்தோன்
   மாயத்தால்  அனைவரையும்  மாற்றுவான்  வணங்குமினே.

5.வண்டுண்ணும்  துளவத்தார்  வள்ளல்  ஒருநாள்மண்
   பண்டுண்டான்  தாய்காண்நீ  பாருலகம்  என்றுவாய்
   கண்டவளும்  வணங்கக்  காட்டியவன்  அழகுடைய
   வண்துவரைக்  கண்ணனையே  வணங்கிநிதம்  போற்றுமினே.

மூலவர் - வரதன்  -  பேரருளான்
தாயார் - பெருந்தேவி
காஞ்சிபுரம்  சின்னக் காஞ்சி என்ற பகுதியில் உள்ளது.

44.திருவட்ட புயகரம்

1.அட்ட  புயகரத்தான்  ஆயர்குலக்  கொழுந்தாவான்
   மட்டார்  குழல்அலர்மேல்  மங்கையாள்  உடனமர்ந்தான்
   பட்டர்  மகள்கோதை  பாசுரத்தால்  மாதவனைக்
   கட்ட  மகிழ்ந்த  கருமுகிலைப்  பாடுமினே.

2.அருள்ஆதி  கேசவனை  ஆரணநற்  பரம்பொருளைக்
   குருமூர்த்தி  எனவந்த  கோவிந்த  மாதவனைக்
   கருமணியை  யசோதை  கண்மணியை  அடியவர்தம்
   பெருந்துயரம்  நீக்கியநம்  பெருமானைப்  பணியுமினே.

3.தேசுடைய  பரகாலன்  திருவாலி  ம்ங்கைதமிழ்ப்
   பாசுரங்கள்  பரவுபுகழ்ப்  பேயாழ்வார்  தம்முடைய
   மாசகலச்  சாதித்த  ம்ங்கலஞ்சேர்  பாசுரங்கள்
   நேசமுடன்  கேட்டானை  நிதம்வணங்கி  உய்யுமினே.

4.தொண்டையர்கோன்  தான்வணங்கும்  தூயரங்கன்  துணைமலர்த்தாள்
   கண்டுபணி  கின்றபணி  கட்னென்று கொண்டாரைக்
   கண்டுவரும்  காகுத்தன்  கனவயிர  நீள்முடியான்
   தொண்டருக்குத்  துணையாவான்  துணைமலர்த்தாள்  தோயுமினே.

5.பூந்துழாய்  முடியழகன்  பொன்னாழிச்  சங்கரியான்
   ஏந்துவாள்  நாந்தகமாம்  எழில்சாபம்  சாரங்கம்
   மாந்துநா  லாயிரத்தால்  மகிழ்வான்தன்  திருவடியை
   ஏந்தியே  பணிவார்கள்  இருநிதியம்  பெறுவாரே.

மூலவர் - ஆதிகேசவன் - கசேந்திர வரதன்

தாயார் - அலர்மேல்  மங்கை

காஞ்சிபுரத்தில்  சின்னக் காஞ்சி என்ற பகுதியில்  உள்ளது.

காப்பியக்  கவிஞர்.நா.மீன்வன்.

meenavan2

unread,
Nov 18, 2013, 8:48:39 AM11/18/13
to mint...@googlegroups.com

108.வைணவத் திருத்தலங்கள் - தொடர்ச்சி

45.திருத்தண்கா

1.நான்முகனார்  செய்வேள்வி  நலிவடையப்  பெருந்தீயாய்த்
   தானெழுந்த  அரக்கனையே  தன்கையில்  விளக்காக்கி
   மேன்மைமிகு  வேள்விநலம்  மேலடைய  வைத்தவனை
   நோன்பிருந்து  பணிபவர்கள்  நோயடையார்  நம்புமினே.

2.பாப்புனையும்  தேசிகனார்  பாசமுடன்  அவதரித்த
   தூப்புல்லார்  இருக்குமிடம்  துயர்களையும்  திருத்தண்கா
   காப்பென்று  கொண்டவர்கள் கனதனங்கள்  தான்பெறுவார்
   நாப்பதிந்த  பாடல்களால்  நாளுமினி  வணங்குமினே.

3.மாணிக்க  வ்ண்ணனை  மரகதத்தை  அடியவரைப்
   பேணிக்கை  கொடுப்பவனைப்  பெற்றங்கள்  மேய்த்தானை
   வீணைக்  கொடியானை  விழ்வைத்த  வில்லானைக்
   கோணாகம்  துயில்வானைக்  கும்பிட்டுப்  போற்றுமினே.

4.பண்பாடும்  வண்டினங்கள்  பயில்கின்ற  குளிர்சோலை
   விண்பறக்கும்  பறவையினம்  விளையாடும்  அழகுதிருத்
  தண்காவை  இடமாக்கித்  தானருளும்  திருவாளன்
  கண்பார்த்து  வணங்குபவர்  காலமெலாம்  நல்ம்பெறுவார்.

5.அமுதனைய  பெருமாளாம்  அரங்கத்தான்  அருள்ஒழுகும்
   குமுதவிழி  மரகதத்தைக்  குளிர்தீபப்  பிரகாசன்
   கமலவெண்  கலைமகளின்  கணவனுக்கே  ஒளிதந்த
   அமரர்கோன்  தாள்பணிமின்  அம்புயப்பொன்  அடிபணிமின்.

மூலவர் - தீபப்பிரகாசன் - விளக்கொளிப்  பெருமாள்
தாயார் - மரகதவல்லி
இப்பதியும்  சின்னக் காஞ்சிபுரத்திலேயே உள்ளது.

46.திருவேளுக்கை

1.வண்ணமலர்ச்  சோலைதிரு  வேளுக்கை  வந்தமர்ந்தான்
   விண்ணிருக்கும்  அமரர்குழாம்  தாழ்ந்துபணி  விண்ணகரம்
   பண்ணொழுகு  பேயாழ்வார்  பாசுர்ங்கள்  கேட்டுமகிழ்
   மண்ணளந்த  மாயன்தன்  மலரடிகள்  போற்றுமினே.

2.முகுந்தனாம்  ந்ரசிங்கன்  மூலவனாய்  வீற்றிருக்கும்
   வைகுந்தன்  வேளுக்கை  வ்ல்லியுடன்  அருள்பொழியும்
   மையுகந்த  மேனியான் மலர்ஏந்து  நாபியினான்
   வைகும்தம்  சிந்தைக்குள்  வந்தானை  வணங்குமினே.

3.அரந்தைகெட  இரணியனை  அன்றடர்த்த  கரதலத்தான்
   உரங்கீறிப்  பொங்கிஎழும்  உதிரத்தைக்  குடித்தெழுந்த
   அரிநரனைப்  பெருமுதலை  ஆயர்குலக்  காவலனை
   இருநிலத்தீர்  நாமுய்ய  என்றென்றும்  வணங்குமினே.

4.வலந்தாங்கு  சக்கரத்தான்  வளைதாங்கு  திருமகளின்
   நலந்தாங்கி  அடியவரை  நாள்தோறும்  நனிதாங்கிக்
   குலந்தாங்கி  அவரவர்தம்  குடிதாங்கி  ஆட்செய்வான்
   நிலந்தாங்கும்  பெருமானை  நிதம்வணங்கி  உய்யுமினே.

5.அடியார்ந்த  வையமதை  அன்றுண்ட மாமாயன்
   படியார்ந்த  அடியவரைப்  பதம்காட்டி  ஆட்கொள்வான்
   அடிசார்ந்து  வணங்குவதால்  அருள்சுரப்பான்  மணிவண்ணன்
   முடிசார்ந்த  கண்ணனைநீர்  முன்வந்து  வணங்குமினே.

மூலவர் - ந்ரசிம்மர் - முகுந்தன்
தாயார் - வேளுக்கை வல்லி
இப்பதியும் சின்னக் காஞ்சிபுரத்திலேயே உள்ளது.

காப்பிய்க் கவிஞர்.நா.மீனவன்.

krishnan

unread,
Nov 19, 2013, 4:24:24 AM11/19/13
to mint...@googlegroups.com

meenavan2

unread,
Nov 20, 2013, 5:43:08 AM11/20/13
to mint...@googlegroups.com

108 வைணவத் திருத்தலங்கள் - தொடர்ச்சி

47.திரு நீரகம்

1.தலமில்லை  மூலவர்  தானுமில்லை  ஆனாலும்
  சலமானான்  ஊரகத்துச் சந்நதியான்  நமக்கென்றும்
  பலமாவான்  செகதீசன்  பாண்டவர்கள்  அரசுபெற்
  நிலமங்கை  உடன்நின்ற  நீரகத்தை  வணங்குமினே.

2.நீர்வண்ணன்  நீயானாய்  நிருபர்தொழும்  முதலானாய்
   கார்வண்ண  மேனியனே  கைவண்ணம்  வில்காட்டும்
   தார்வண்னம்  துழாய்காட்டும்  தாள்வண்ணம்  கால்காட்டும்
   போர்வண்ணம் தேர்காட்டும்  புண்ணியனைப்  போற்றுமினே.

3.வாசவனும்  நாரதரும்  வானத்தார்  அமரர்களும்
   தேசுடைய  கண்ணன்  திருவடிகள்  வணங்குகிறார்
   மாசுடையான்  கனகனின்முன் மடங்கலென  வந்தானைக்
   கேசவனை  உலகுய்யக்  கிட்ந்தானை  வணங்குமினே.

4.பைகொண்ட  தலைஐந்து  படைத்துலவு  பன்னகப்பாய்
   கைகொண்ட அறிதுயிலான்  கானிலத்துப்  பெருங்கடவுள்
   மைகொண்ட  ம்ரகதமால்  மலைகுடையாய்க்  கொண்டபிரான்
   வைகுந்தப்  பேர்ழகன்  வார்கழல்கள்  தொழுதிடுமின்.

5.கரிகாத்த   காளமுகில்  கைக்கொண்ட கார்முகத்தால்
   எரிகொண்ட  பஞ்சதென  எதிர்ப்படைகள்  தானழியப்
   பரிநடத்தும்  கள்வனன்று  பால்வெண்ணெய்  தயிருண்டு
   வரியரவில்  நடமிட்ட  வளையானை  வணங்குமினே.

மூலவர் - இல்லை
உற்வ்ர் - செகதீசன்
தாயார் - நிலமங்கை வல்லி.
இத்தலம் பெரிய காஞ்சிபுரத்தில்  உள்ளது.

47,திருப்பாடகம்

1.சீர்மிக்க மன்னன் செனமே  செயனென்பான்
   பாரதப்போர்  கைவ்குக்கப்  பாண்டவரின்  தூதாகி
  ஓரறிவும்  இல்லாதான்  உயர்அரவக்  கொடிக்கோமுன்
  பேருருவைக்  காட்டியதைப்  பெருமையுடன்  கண்டதலம்.

2.பாண்டவர்தம்  தூதனெனப்  பன்னுமுயர்  திருநாமம்
   காண்டீவன்  வெற்றிபெற்க்  கனகத்தேர்  செலுத்திப்போர்
   பூண்டாரைத்  தென்னுலகம்  போக்கியவன்  திருவில்லி
   ஆண்டாளை  மணந்தான்தன்  அடிமலரை  வணங்குமினே.

3.காடகத்தில்  நிரைமேய்த்தான்  கடிகமழும் மலர்ச்சோலைப்
   பாடகத்தில்  அமர்ந்தானைப் பகலவனின்  திசைநோக்கி
   ஆடகப்பொன்  ஆடையணி  அஞ்சனமால்  திருவடிநம்
   ஊடகத்தே  இருக்குமெனில்  உய்திபெற்ல்  நிச்சயமே.

4.உருக்குமணி  பாமாவோ(டு)  உடனிருக்க நமதுமனத்
   திருக்கோட்டும்  கடவுள்  திசைகடந்த  பேருருவம்
  அருள்காட்டப்  பாடகத்தில்  அமர்ந்தான்அக்  கண்ணனுக்கே
  உருக்காட்டி  வரம்தந்த  உத்தமனை  வணங்குதுமே.

5.நெடுமால்  எனவளர்ந்த  நெடியவனாய்  நம்வினைகள்
   அடுமால்  எனப்பொய்கை  ஆழ்வார்க்கே  உயிரானோன்
   படிமால்  அளந்துமகா பலிவலியை  அடக்கியவன்
   உடனாய்  இருந்துநமை  உய்விப்பான்  வணங்குமினே.

மூலவர் - பாண்டவர் தூதன்
தாயார் - ருக்குமணி - சத்தியபாமா

இப்பதி  பெரிய காஞ்சிபுரத்தில்  உள்ளது.

krishnan

unread,
Nov 22, 2013, 4:12:07 AM11/22/13
to mint...@googlegroups.com

meenavan2

unread,
Nov 23, 2013, 3:37:16 AM11/23/13
to mint...@googlegroups.com

49.திரு நிலாத் திங்கள் துண்டம்

1.திருவாலி  ம்ன்னன்  திரும்ங்கைக்  கோன்மனத்தில்
   உருவான  பாசுரங்கள்  உள்ளுபவர்  உள்ளத்தான்
   திருநிலா  நல்திங்கள்  துண்டத்தான்  திருவடியை
   ஒருமுறைநீர்  வணங்கினால்  உத்தமனின்  அருள்பெறலாம்.

2.நேரொருவர்  இல்லாத வ்ல்லியெனும்  நீள்நாமம்
   பேரென்று  கொண்ட்  பெருந்தாயார்  வானுலவு
   காரனைய  மேனியான் கண்ணனுக்குத்  துணையாவாள்
   பாரளந்த  செய்யமலர்ப்  பாதங்கள்  பணிந்திமிடுன்.

3.நெடியசிவன்  சடையணிந்த நிலாத்துண்டாய்  விழுந்தஇடம்
   படிமிசையில்  மேற்றிசயைப்  பார்த்திருக்கும்  இனியநிலம்
   கொடிகருடன்  எனக்கொண்ட  கோவிந்தன்  கோபாலன்
   அடிவிரவு  மலர்சூடி  அர்ங்கனைநீர்  பணிந்திடுமின்.

4.பெய்வளையார்  ஆய்ச்சியர்கள் பேணித்தன்  அகம்வைத்த
   நெய்தயிர்பால்  வெண்ணெய்களை  நின்றுண்ட  உரிதிருடி
   மைவிழியாள்  ந்ப்பின்னை  மனம்விரும்பிக்  காதலித்த
   பையரவப்  பாயலினான்  பாதங்கள்  ந்ம்புமினே.

5.செவ்வாயில்  வைத்தகுழல்  செவ்வழிப்பண்  பாடுகையில்
   அவ்வாய்  இருந்தநிரை  அத்தனையும்  ஓடிவரும்
   தெவ்வான  கஞ்சனவன்  தினமனுப்பும்  அரக்கருயிர்
   வவ்வினான்  திருவடிகள்  வாழ்வுபெற  வணங்குமினே.

மூலவர் - நிலாத்  திங்கள் துண்டத்தான்
தாயார் - நேரொருவர்  இல்லாத வ்ல்லி
இதுவும் பெரிய காஞ்சிபுரத்தில் உள்ளது

krishnan

unread,
Nov 23, 2013, 4:11:12 AM11/23/13
to mint...@googlegroups.com

meenavan2

unread,
Nov 24, 2013, 6:12:32 AM11/24/13
to mint...@googlegroups.com

108.வைணவத் திருத்தலங்கள்

50.திரு ஊரகம்

1.ஊரகத்தில்  கார்மேனி  உடையவனாய்  நீரகமும்
   காரகமும்  தானுடைய  கச்சியெனும்  பதிஉடையான்
   தாரழகன் அமுதவல்லித்  தாயார்  உடனான
   பூரணனைத்  திருவரங்கப்  பூபதியை  வணங்குமினே.

2.ஈரடியால்  மண்ணளந்தான்  இருவிரலைக்  காட்டிவைத்தான்
   ஓரடியால்  உலகளந்தான்  ஒருவிரலைக்  காட்டிவைத்தான்
   தாரடியில்  திருமகளும்  த்ங்கியருள்  செய்துவர
   மார்பிருந்தாள்  வணங்குமினே  மாதவனைப்  போற்றுமினே.

3.வரிவளையான்  புரிநூலான்  வணங்காரை  வாட்டுகின்ற
   எரிதழலான் சினங்கொண்ட ஏழ்எருதை அடக்கியவன்
   இருபதத்தால்  உலகளந்தான்  எழிலான  அமுதவல்லி
   பெருமனத்தில்  இருந்துறைவான் பேரடிகள் பேணுமினே.

4.அரியேறாம்  பொற்சுடரே  ஆமையாய்  மீனாகி
   அரிநரனாய்  வாமனனாய்  ஆயர்குலக்  கண்ணனாய்
   வரிவில்லான்  இராமனாய்  வலியபல ராமனாய்
   உருவான  பெருமானை  உள்ளத்தில்  கொள்ளுமினே.

5.கள்ளவிழும்  மலர்ச்சோலைக் காஞ்சிநகர்  ஊரகத்தே
   வெள்ளமென  அருள்வழங்க  வீற்றிருக்கும்  வித்தகனைத்
   தள்ளரிய  அருள்துணையைத்  தாங்கினான்  தனித்துணையை
   உள்ளத்தின்  ஒளிவிளக்கை  உயிரென்று  போற்றுமினே.

மூலவர் - உலகளந்த பெருமாள்
தாயார் - அமுதவல்லி
இதுவும்  பெரிய  காஞ்சிபுரத்தில்  உள்ளது.

காப்பியக் கவிஞர்.நா,மீனவன்

கி.காளைராசன்

unread,
Nov 24, 2013, 5:04:02 PM11/24/13
to mintamil
காப்பியக் கவிஞருக்கு வணக்கம்.

நாளும் நாரணன் நாமம் நவிலும் தங்களது பாக்களைப் படித்துப் பயனுகிறோம் ஐயா.

அன்பன்
கி.காளைராசன்


2013/11/24 meenavan2 <meen...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

krishnan

unread,
Nov 25, 2013, 9:25:43 AM11/25/13
to mint...@googlegroups.com

meenavan2

unread,
Nov 26, 2013, 5:29:35 AM11/26/13
to mint...@googlegroups.com

108.வைணவத் திருத்தலங்கள் தொடர்ச்சி

51.திருவெஃகா

1.பத்தனாம்  திருமழிசை பாட்டுக்கு  நாகப்பாய்
  அத்தினமே  சுருட்டி  அவர்வேண்டப்  பின்விரித்த
  முத்தன்  திருநெடுமால்  முன்னிற்கும் திருவெஃகா
  இத்தினமே  நீர்பணிந்தால் ஏற்றங்கள்  பெறலாமே.

2.சொன்னவண்ணம் செய்தபெரு  மாள்என்னும்  சுயஞ்சோதி
   பன்னகப்பாய்  சுருட்டிஅதைப்  பக்தருக்காய்  விரித்தானைத்
   தென்னிலங்கை  நாடழியத்  தீயிட்ட  அனுமனையே
   தன்னடியான்  எனக்கொண்ட  தாளானை  வணங்குதுமே.

3.வளைமுரலும்  வாயுடையான் வண்டார்க்கும்  குஞ்சியினான்
   அளைபயிலும்  ஆய்ச்சியர்கள்  அன்பிலே  கட்டுண்டான்
   களிபயிலும்  வண்டினம்சேர்  காளிந்திநதி  நதிநகரான்
   அளிமுரலும்  மலரடிகள் அருச்சித்து  வாழுமினே.

4.பேய்பொய்கை  திரும்ங்கை  பேராளன்  திருமழிசை
   மேயதமிழ்ப்  பாசுரத்தால் மின்னுருவன் தன்நிறத்தை
   ஓயாகல்  பாடியே  உல்மகிழ்ந்தார்  அதனால்நம்
   வாயுருகப்  பாடிஅவன்  வடிவழகைப்  பாடுவமே.

5.கொஞ்சும்  மயிற்சாயல்  கோமளத்தாய்  நாயகனைக்
   கஞ்சனுயிர்  போக்கிக்  கரிதனையும்  தீர்த்தானை
   வெஞ்சமரில்  பாண்டவர்கள்  வெல்லவழி  வகுத்தானைத்
   தஞ்சமென  நாமடைந்தால்  தாழ்வில்லை  வணங்குமினே.

மூலவர் - சொன்னவண்ணம்  செய்த பெருமாள்
தாயார் - கோமள வ்ல்லி
இதுவும் சின்னக் காஞ்சிபுரத்தில் உள்ளது.

52.திருக்காரகம்

1.நீரகத்தான்  பிறைஎன்னும்  நிலாத்திங்கள்  துண்டத்தான்
   ஊரகத்தான் திருவெஃகா  உறைகின்ற உத்தமனாம்
   காரகத்தான்  கரியமால்  காவிரியின்  தென்பாலான்
   பேரகத்தை  இடங்கொண்ட  பெருமானை  வணங்குதுமே.

2.கண்ணன்  எனும்தெய்வம்  கருணா  கரப்பெருமாள்
   விண்ணோர்  இடர்களைந்தான்  வேதத்தின்  பொருளானான்
   பண்ணழகு  நங்கையாள்  பத்மா  மணியவளை
   மண்ணகத்தார்  உய்திபெற  மணங்கொண்டான்  நாடுமினே.

3.வேய்பொருந்தும்  திருவாயான் விண்சுமக்கும்  பேரரவப்
   பாய்பொருந்தும்  கரியமால்  பண்டைவினை  தூசாக்கித்
   தாய்பொருந்தும்  சேயாகத்  தானிருக்கும்  ந்மக்கெல்லாம்
   வாய்பொருந்து  சங்கத்தான்  வளந்தருவான்  வாழ்த்துமினே.

4.அலைகடைந்த  பண்டைநாள் அமுதம்  வரக்கண்டு
   சிலைஎடுத்த  அமரர்களும்  சேர்ந்தறியா  அசுரர்களும்
   கலகமிட  மோகினியாய்க்  காசினியில்  உருவெடுத்து
   நலமோடு பங்குவைத்த நாரணனைப்  போற்றுமினே.

5.வாசமலர்த்  துழாய்முடியான்  வானாள்வார்  அடிவண்ங்கப்
   பாசகமுள்ள  பாண்டவர்க்குப்  பாராளித்த  பரந்தாம்ன்
   பாசுபதம்  பெற்றுவந்த பல்குனனின்  தேரோட்டி
   மாசறியாத்  திருவடியை  மறவாமல்  சேவிமினே.

மூலவர் - கருணாகரப்  பெருமாள்
தாயார் - பத்மாமணி
பெரிய காஞ்சியில் உள்ளது.(ஊரகத்தில்  உள்ளது)

காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 26, 2013, 8:43:01 AM11/26/13
to mintamil

2013/11/26 meenavan2 <meen...@gmail.com>

108.வைணவத் திருத்தலங்கள் தொடர்ச்சி

51.திருவெஃகா

1.பத்தனாம்  திருமழிசை பாட்டுக்கு  நாகப்பாய்
  அத்தினமே  சுருட்டி  அவர்வேண்டப்  பின்விரித்த
  முத்தன்  திருநெடுமால்  முன்னிற்கும் திருவெஃகா
  இத்தினமே  நீர்பணிந்தால் ஏற்றங்கள்  பெறலாமே.

சொன்ன வண்ணம் செய்த பெருமாளைப் பற்றிய பாடல் அருமையாக உள்ளது. கோட்டையூர் சொற்கேட்ட விநாயகர் பெயரும் எண்ணத்தில் எழுந்தது.
நன்றி.
சொ.வினைதீர்த்தான்.
 
  .பேய்பொய்கை  திருமங்கை  பேராளன்  திருமழிசை

   மேயதமிழ்ப்  பாசுரத்தால் மின்னுருவன் தன்நிறத்தை
   ஓயாமல்  பாடியே  உள்மகிழ்ந்தார்  அதனால்நம்

meenavan2

unread,
Nov 29, 2013, 6:55:40 AM11/29/13
to mint...@googlegroups.com

108.வைணவத் திருத்தலங்கள் தொடர்ச்சி

54.திருக்கார் வானம்

1.கார்வானப்  பதிஉறையும்  கள்வன்ஒரு  கருடப்புள்
   ஊர்வானாய்த்  தேவியுடன்  ஒருசங்கக்  கையானாய்
   பார்வானம்  அளந்தமால்  பச்சைநிறத்  திருமேனி
   சேர்வானைப்  பாராட்டிச் சிந்தைக்குள் ஏற்றுமினே.

2.திண்ணார் மதில்சூழ்  திருவரங்கக் கோமானைக்
   கண்ணாரக்  கண்டுநாம்  கையாரக்  கும்பிட்டுப்
   பண்ணார்  தமிழ்பாடிப்  பாராட்டி  நாம்என்றும்
   கண்ணா  எனச்சொல்லிக்  காலமெலாம்  போற்றுவமே.

3.பிறைமுடியான்  மைத்துனனைப்  பெரியானைப்  பனித்தகடல்
   துறையானை  எழுவனைய தோளானை  வண்டிமிரும்
   நறைதுளுவத்  தாரானைத்  தாம்ரையாள் நாயகனை
   மறைபுகழும்  மரகதத்து  மறைவண்ணன்  தாள்தொழுமே.

4.பொற்கமல  வ்ல்லியினைப்  புணர்ந்தானைப்  பாரதத்தில்
   விற்கோல  விசயனார் வெற்றியுறத்  தேர்நடத்தித்
   தற்கோலம்  கன்னனுக்குத்  தான்காட்டி  வீட்ளித்த
   நற்கோல மூர்த்தியினை  நாம்பணிந்து  போற்றுதுமே.

5.மடைத்தலையில்  மீன்பாய  மலரடிகள்  பண்பாடச்
   சுடர்க்கொடியாள்  ஆண்டாளின்  சொற்றமிழில்  மயங்கியவன்
   படத்தரவக்  காளியனாம்  பணித்தலையில் மிசையேறும்
   நடத்தரசாம்  நாரணன்தன்  நல்லடிகள்  வணங்குமினே.

மூலவர் - கள்வர்
தாயார் - கமலவல்லி - தாமரையாள்
பெரிய காஞ்சியில் ஊரகம் தலத்திற்குள்  உள்ள்து.

54.திருக்கள்வனூர்

1.உமையவளும்  திருமகளும்  உடன்கலந்தே  உரையாடத்
   தமைஒளித்துக்  கார்வண்ணன்  தாங்கேட்கக் காமாட்சி
   இமையவளும்  கள்வனென  இயம்பினாள்  முகில்வண்ணன்
   நமையாளும்  கள்வனாய்  நலம்புரிந்தான்   வணங்குமினே.

2.தேடரிய  பதியாம்  திருக்கள்வ  னூர்ப்பதியை
   நாடிவரும்  அன்பருக்கு  நலஞ்செய்யும்  கோவிந்தன்
   ஓடிவரக்  கிண்கிணிகள்  ஒலியெழுப்ப  ஆய்ச்சியர்கள்
   கூடிவந்து  தாள்பணியும்  கோவலனைப்  போற்றுமினே.

3.ஆதி  வராகனாய்  அஞ்சிலை  வல்லியுடன்
   பாத மலர்காட்டிப்  பாலாழி  கிடப்பானை
   ஓதக்  கடலரவ  ஓசைசெவி  மடுப்பானைச்
   சீதரன்  என்பானைச்  சேவித்துப்  பணியுமினே.

4.கூடாரை  வென்றிட்ட  கோவிந்தன்  கோபாலன்
   ஆடானை  மருப்பொசித்த  அம்புயக்கைத்  திருநெடுமால்
   மாடோடு  கன்றுகளை  மயக்குமிசைக்  குழலானைப்
   பீடாரும்  கண்ணனவன்  பேரருளை  வேண்டுமினே.

5.மீனமாய்  ஆமையாய்  மேலான  வாமனனாய்
   ஏனமாய்ப்  பேருருவாய்  இராமனாய்ப்  பல்லுருவம்
   ஆனானை  அற்றைநாள்  அடிச்சகடம்  உதைத்தானை
   மோனமா  தவத்தோர்க்கு  முதலானை  வணங்குமினே.

மூலவர் - ஆதிவராகன்
தாயார் - அஞ்சிலைவல்லி
பெரிய காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆலயத்திற்குள்  உள்ளது.

காப்பியக் கவிஞர்.நா.மீனவன்.

கி.காளைராசன்

unread,
Nov 29, 2013, 8:52:12 AM11/29/13
to mintamil
காப்பியப் புலவர் அவர்களுக்கு வணக்கம்.

2013/11/29 meenavan2 <meen...@gmail.com>

.மடைத்தலையில்  மீன்பாய 
மடைகளில் மீன்பாய்வதை நேரில் பார்த்துள்ளேன். 
பார்த்துக் கொண்டே இருந்துள்ளேன்.

அருமையான சொல்லமைப்பு.
பாராட்டுகள் ஐயா.

அன்பன்
கி.காளைராசன்

meenavan2

unread,
Dec 2, 2013, 5:16:32 AM12/2/13
to mint...@googlegroups.com

108.வைணவத் திருத்தலங்கள் தொடர்ச்சி

55.திருப்பவள வண்ணம்

1.இடப்பாலில்  மடப்பாவை  ஈசனுக்கு  மாலுக்கோ
   தடமார்பில்  பவளவல்லி  தான்வைத்த பவளவண்ணன்
   படப்பாந்தள்  சுமககின்ற  படிமிசையில்  தூதாகி
   நடப்பானை  ஏத்துவதே நமக்கிட்ட  பணியன்றோ.

2.தாடகையாள் பேரரக்கி  தடமார்பில்  ஊடுருவப்
   போடுகணை  அதனாலே  போயொழிந்தாள் கௌசிகன்செய்
   பீடுபெறு  தவம்காத்தோன்  பெற்றவனின்  ஆணைனால்
   காடுறைந்த  காகுத்தன்  கழலடிகள்  போற்றுமினே.

3.சக்கரமாம்  தீர்த்தத்தான்  சகடத்தை  உதைத்தகால்
   எக்காலும்  அடியவர்க்கே  இனித்தகால்  தானாகித்
   தக்கபேர்  உருக்காட்டித்  தமிழ்மறையாம் பிரபந்தம்
   அக்கார  அடிசிலென  அருந்துவான்  பணிமின்காள்.

4.சேல்பாய்  வயல்தோறும்  சேர்ந்துவரும் நதிவெள்ளம்
   கால்வாய்  வழியோடிக் கழனிக்கு  வளம்சேர்க்கும்
   பால்வாய்க்  குழற்கண்ணன்  திருப்பவள  வண்ணமதில்
   வால்வாய்ச்  சங்கொலிக்க வாழ்கின்றான்  வாழ்த்துமினே.

5.ஆர்த்தஎம்  பிறவியினை அகற்றுகின்ற  மாமாயன்
   கூர்த்த  மதியாள்ர்  கும்பிட்டுப்  பயன்காணச்
   சேர்த்த  கரத்தாராய்ச்  சேவிக்க  வருந்தன்மை
   பார்த்துக்  கருணைதரும்  பட்டுடையான்  தாள்பணிமின்.

மூலவர்-பவள வண்ணன்
தாயார் -  பவள வ்ல்லி
பெரிய  காஞ்சியில்  உள்ளது.

56.திருப்பரமேச்சுர  விண்ணகரம்

1.பாராள  மகன்வேண்டிப்  பார்வேந்தன்  தவம்செய்ய
   ஊராள்வோன்  துயர்தீர்க்க ஒன்றுக்(கு)  இரண்டுமகன்
   சீராளத்  தந்தான்  திருப்பரம  பதநாதன்
   காராளும்  மேனியான்  கால்தொழுது  நலம்பெறுமினே.

2.பாவம்  அகற்றுதிருப்  பரமேச விண்ணகரக் 
   கோவில்  இருப்பானைக்  கோளரியைத்  திருமங்கை
   தாவில்  வைகுந்த  வல்லியெனும்  தாயாரைச்
   சேவிக்க நின்றார்நற்  செல்வவளம்  பெறுவாரே.

3.உள்ளார்ந்த  பக்தியுடன்  ஓடிவரும்  பக்தர்களைத்
   தள்ளாமல்  காக்கின்ற  தாமரையாள்  நாயகன்தன்
   கள்ளார்ந்த  பூமாலை  காதலித்த  ஆண்டாளை
   அள்ளியே  அணைத்தானை  அனுதினமும்  பணிந்திடுமின்

4.மானோக்கி  நப்பின்னை  மகிழ்ந்தணைக்கும்  நாயகன்தன்
   வானார்ந்த  பேருருவம்  வணங்கியதால்  பல்குனனும்
   தானாக  வெற்றிபெற்த்  தனித்தேர் கடவியவன்
   கானாரும்  துளவத்தார்க்  காதலனை  வணங்குமினே.

5.பார்போற்றும்  முனிவரராம்  பரத்துவாசர்  தவங்குலைக்க
   ஏர்பெறற கந்தருவர்  ஏந்திழையாள்  வரக்கண்டு
   பேர்பெற்ற  முனிமயங்கிப்  பெற்றமகன்  பரமேசன்
   ஊராளும்  மன்னனென உதவுமால்  தலமிதுவே.

மூலவர் - பரமபத நாதன்
தாயார் - வைகுந்த  வல்லி
இதுவும்  பெரிய காஞ்சியிலேயே  உள்ளது.

meenavan2

unread,
Dec 3, 2013, 12:27:31 AM12/3/13
to mint...@googlegroups.com

108.வைணவத் திருத்தலங்கள் தொடர்ச்சி

57.திருப்புட்குழி

1.பங்கயங்கள்  வாயவிழப்  பனிஅல்லி  இதழ்குவிய
   எங்கும்  கதிரொளிதான்  ஏற்றமுறத்  திகழ்பரிதி
   தங்கள்  குலம்பிறந்து  தாடகையின்  மார்புருவி
   நங்கைசிறை  மீட்டானை  நாம்பாடிப்  பணிகுவமே.

2.எண்னரிய  புகழுடைய  இராமா  னுசமுனிவன்
   நண்னிப்  பயின்றஇடம்  ந்ல்லதிருப்  புட்குழியில்
   மண்ணள்ந்த  மாயவனார்  மரகத  வ்ல்லியுடன்
   வண்ணவாள்  முகத்தோடு  வாழ்கின்றான்  வாழ்த்துமினே.

3.பத்துத்  தலையான்பால்  பாவை  படுதுயரம்
   மெத்த வருத்தியதால்  மேல்பறந்து  இராவணனைக்
   கொத்தியநற்  பற்வைக்  குலத்தரசும்  அற்றைநாள்
   இத்தலத்தில் அமைதியுற்றான்  இப்பதியை  வணங்குமினே.

4.வெற்றிவில்  தோள்தாங்கும்  விசய இராகவன்தன்
   பற்றானாய்  வந்திட்ட  பத்துமுடி  இராவணனைச்
   சுற்றமுடன்  வேரறுத்த சொல்லரிய  புகழான்தாள்
   பற்றிநாம் வணங்கினால்  பாவங்கள் பொடிபடுமே.

5.பூதபுரி  என்ற்ழைக்கும்  புன்னைவனம்  ஆனபதி
   மாதரசி  சீதை  மணவாளன்  அருளுபதி
   வேதபதி  யானதோர்  வித்தகனை  இப்பதியில்
   தீதகலச்  சேவித்துத்  திருவடிகள்  வ்ணங்குமினே.

மூலவர் - விசயராகவப் பெருமாள்
தாயார் - மரகத வல்லி
சென்னயில் இரு ந்து வேலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள
பாலு செட்டி சத்திரம் என்ற் இடத்தில் இறங்கிச் சுமார் 1 கி.மீ.ந்டந்து
சென்று இத்தலத்தை அடையலாம்.

58.திரு நின்றவூர்

1.காண்டீவன்  கைத்தனுவால்  கனல்பற்றப்  பண்டைநாள்
   காண்டவமாம்  வனமெரித்த கண்ணனவன்  நின்றவூர்
   தாண்டித்  திருமங்கை  தான்பாடு  பாசுரத்தை
   வேண்டியே  பெற்றமால்  விளங்குபதி  வணங்குமினே.

2.கடலரசன்  மீதொருநாள்  கதம்கொண்ட   திருமகன்பாற்
   கடல்நீத்து  நின்றவூர்  கன்னிதிரு  நின்ற்வூர்
   படஅரவில்  துயில்கின்ற்  பக்தவத் சலப்பெருமாள்
   உடனருளும்  திருத்தலத்தை  உள்ங்கொண்டு  போற்றுமினே.

3.என்னையே  பெற்றவளாம்  எழில்தாயார்  சுதாவல்லி
   தன்னையே  மணங்கொண்டான்  தருதுயரம்  தடுப்பனெனப்
   பன்னியே  தமிழ்பாடும்  ஆலிநகர்ப்  பரகாலன்
   சொன்னதொரு  தமிழ்கேட்ட சுந்தரனை  வணங்குதுமே.

4.செஞ்சோதித்  தாமரைபோல்  சிவந்திருக்கும்  பொற்பாதன்
   அஞ்சூர்கள்  கேட்டவனும்  அடிபடிமேல் பட நடந்தான்
   மஞ்சூரும்  வானமதை  மணிமுடிகள்  தொடஎழுந்தான்
   பஞ்சடியாள்  உருக்குமணி  பதியானான்  பணிந்திடுமின்.

5.மத்துற்ற  தயிர்மாந்தி  மண்குடத்துப்  பால்வெண்ணெய்
   அத்தனையும்  தானுண்டான்  அங்கண்மா  உலகளந்தான்
   பத்துற்ற  சென்னியனும்  படக்கணைகள்  பலதொடுத்தான்
   முத்துற்ற  திருமார்பில்  முயங்கினான்  தொழுதிடுமே.

மூலவர் - பக்தவத்சலப் பெருமாள்
தாயார் - என்னைப் பெற்ற தாயார் - சுதாவல்லி
சென்னையில் இருந்து  நகரப்  பேருந்துகள்  உள்ளன.அரக்கோணம்
புகைவண்டி நிலையத்தில் இருந்து சுமார் 1.கி.மீ.தூரத்தில் உள்ள்து.

59.திருவள்ளூர்(திரு எவ்வுள்)

1.இலங்கைக்கோன்  தலைசிதைத்த இராமபிரான்  திருஎவ்வுள்
   தலங்கண்டு  கனகவல்லித்  தாயார்  உடனிருக்கக்
   கலங்குவார்  மனத்துயரம்  களைந்தவரைக்  காப்பாற்ற
   இலங்கினான் திருவள்ளூர்  இருந்தானைப்  போற்றுதுமே.

2.முன்சாலி  கோத்திர  முனிவனுக்குத் தானருளிப்
   பின்னர்த்  திருமழிசைப்  பிரானாரின்  பாசுரங்கள்
   தென்னன்  தமிழ்சொல்லும்  திருமங்கை  பாசுர்ங்கள்
   பொன்னென்று  கருதியவன்  பூவடிகள் போற்றுமினே.

3.கரியமால்  திருமகளைக்  கலந்தமால்  காண்பதற்கே
   அரியமால்  வையம்  அளந்தமால்  பெருவடிவ்ப்
   பெரியமால்  வெஞ்சிறையில்  பிறந்தமால்  அடியவர்க்கே
   உரியமால்  திருவள்ளூர்  உகந்தானைப்  பாடுமினே.

4.தென்றல்  தவழ்சோலைத்  திருவ்ள்ளூர்த்  தலமுகந்தான்
   கன்றுடனே  பசுக்களெலாம்  கனிந்துருகக்  குழலூதிக்
   குன்றால்  மழைகாத்த  குளிர்வீர  ராகவனாய்
   நன்றறிந்து  தருவானை  நயந்துநீர்  வணங்குமினே.

5.செழுநீர்க்  கடல்வண்ணன்  செந்திருவின்  நாயகனார்
   தொழுநீர்ப்  புனற்கங்கை  தொட்டணைக்கும்  திருவடியான்
   பழனநீர்ச்  சேற்றுவயல்  பயில்கின்ற  திருவள்ளூர்
   வழிவழியாய்  ந்மையாள வந்தவன்தாள்  பணிந்திடுமின்.

மூலவர் - வீரராகவப் பெருமாள்
தாயார் - கனக வல்லி
சென்னையில் இருந்து இப்பதிக்கு  எண்ணற்ற பேருந்துகள்  உள்ள்ன.


காப்பியக் கவிஞர்.நா.மீனவன்


சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 3, 2013, 2:02:15 AM12/3/13
to mintamil


அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2013/12/3 meenavan2 <meen...@gmail.com>

--

Subashini Tremmel

unread,
Dec 3, 2013, 2:26:03 AM12/3/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/12/3 meenavan2 <meen...@gmail.com>




3.கரியமால்  திருமகளைக்  கலந்தமால்  காண்பதற்கே
   அரியமால்  வையம்  அளந்தமால்  பெருவடிவ்ப்
   பெரியமால்  வெஞ்சிறையில்  பிறந்தமால்  அடியவர்க்கே
   உரியமால்  திருவள்ளூர்  உகந்தானைப்  பாடுமினே.

4.தென்றல்  தவழ்சோலைத்  திருவ்ள்ளூர்த்  தலமுகந்தான்
   கன்றுடனே  பசுக்களெலாம்  கனிந்துருகக்  குழலூதிக்
   குன்றால்  மழைகாத்த  குளிர்வீர  ராகவனாய்
   நன்றறிந்து  தருவானை  நயந்துநீர்  வணங்குமினே.

5.செழுநீர்க்  கடல்வண்ணன்  செந்திருவின்  நாயகனார்
   தொழுநீர்ப்  புனற்கங்கை  தொட்டணைக்கும்  திருவடியான்
   பழனநீர்ச்  சேற்றுவயல்  பயில்கின்ற  திருவள்ளூர்
   வழிவழியாய்  ந்மையாள வந்தவன்தாள்  பணிந்திடுமின்.

அழகான சொற்களில் செய்யுள் மனதைக் கவர்கின்றது. காலையில் இன்றைய பதிவின் பாடல்களை வாசித்து மகிழ்ந்தேன். நன்றி.

சுபா
 

சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 3, 2013, 2:43:56 AM12/3/13
to mintamil, Meenavan M

2013/12/3 meenavan2 <meen...@gmail.com>

108.வைணவத் திருத்தலங்கள் தொடர்ச்சி

57.திருப்புட்குழி

3.பத்துத்  தலையான்பால்  பாவை  படுதுயரம்
   மெத்த வருத்தியதால்  மேல்பறந்து  இராவணனைக்
   கொத்தியநற்  பறவைக்  குலத்தரசும்  அற்றைநாள்

   இத்தலத்தில் அமைதியுற்றான்  இப்பதியை  வணங்குமினே.

58.திரு நின்றவூர்

1.காண்டீவன்  கைத்தனுவால்  கனல்பற்றப்  பண்டைநாள்
   காண்டவமாம்  வனமெரித்த கண்ணனவன்  நின்றவூர்
   தாண்டித்  திருமங்கை  தான்பாடு  பாசுரத்தை
   வேண்டியே  பெற்றமால்  விளங்குபதி  வணங்குமினே.
.

3.என்னையே  பெற்றவளாம்  எழில்தாயார்  சுதாவல்லி
   தன்னையே  மணங்கொண்டான்  தருதுயரம்  தடுப்பனெனப்
   பன்னியே  தமிழ்பாடும்  ஆலிநகர்ப்  பரகாலன்
   சொன்னதொரு  தமிழ்கேட்ட சுந்தரனை  வணங்குதுமே.


59.திருவள்ளூர்(திரு எவ்வுள்)

2.முன்சாலி  கோத்திர  முனிவனுக்குத் தானருளிப்
   பின்னர்த்  திருமழிசைப்  பிரானாரின்  பாசுரங்கள்
   தென்னன்  தமிழ்சொல்லும்  திருமங்கை  பாசுர்ங்கள்
   பொன்னென்று  கருதியவன்  பூவடிகள் போற்றுமினே.


4.தென்றல்  தவழ்சோலைத்  திருவள்ளூர்த்  தலமுகந்தான்

   கன்றுடனே  பசுக்களெலாம்  கனிந்துருகக்  குழலூதிக்
   குன்றால்  மழைகாத்த  குளிர்வீர  ராகவனாய்
   நன்றறிந்து  தருவானை  நயந்துநீர்  வணங்குமினே.

ஆழ்வார்கள் வழி நின்று அண்ணன் அவர்கள் விசயராகவனுக்கும், வீரராகவனுக்கும், பக்தவசக்தச்சலனுக்கும் பாடல் இசைத்துப் பரவியுள்ளார்கள். சடாயுவுக்கு இறுதிக் கடன் ஆற்றியது போன்ற தலத்திற்குரிய செய்திகளைப் பொதிந்த பாடல்கள்;
(திருநின்றவூர் சென்றபோது என்னைப் பெற்ற தாயாருக்கு வடமொழியில் ஒரு பெயர் சொன்னார்கள். ‘என்னைப் பெற்ற தாயார்’ மிகவும் கவர்ந்து மனதில் இடம் பிடித்துவிட்டதால் அந்த வடமொழிப் பெயர் நினைவிலில்லை.)

நன்றறிந்து தருவானை மீனவனாரோடு சேர்ந்து நயந்து வணங்கிக்கொள்கிறேன். 
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

கி.காளைராசன்

unread,
Dec 3, 2013, 6:07:43 PM12/3/13
to mintamil
காப்பியப் புலவருக்கு வணக்கம்.

தொடர்ந்து படித்துப் பயனடைந்து வருகிறேன் ஐயா.
நன்றியுடையேன்.

meenavan2

unread,
Dec 4, 2013, 9:36:23 PM12/4/13
to mint...@googlegroups.com

108.வைணவத் திருத்தலங்கள் தொடர்ச்சி

60.திருவல்லிக்கேணி

1.திருமார்பன்  சக்கரமும் திருச்சங்கும்  கையுடையான்
   பொருமார்பன் பார்த்தனுக்குப்  பொற்றேரைச் செலுத்தியவன்
   ஒருமானைக் கையேந்தும்  உமைகேள்வன்  மைத்துனனாய்
   வருமாயன்  வாழ்அல்லிக் கேணியனை வணங்குதுமே.

2.உடையவனார்  அவதரிக்க உதவியேநற்  பெரும்பதியில்
   இடைவாளும் முடியழகும்  எழில்வதனப் பேரழகும்
   உடையபிரான்  பார்த்தனுக்கோர்  சாரதியாய்  உதவுபிரான்
   அடிமருவு திருவல்லிக் கேணிபுகழ் அறையுமினே.

3.தேரோட்டிக்  கீதைவழி  திறமுரைத்த வழிகாட்டி
   வேரோடு  கவுரவரை  வீழ்த்தியவன் துளவநறுந்
   தாராடு  மார்பன்  தனிப்பார்த்த சாரதியாய்ப்
   பாராட்சி  தருமனுக்குப்  படைத்தவனை  வணங்குதுமே.

4.வேதவல்லித்  தாயவளை  விரும்பியே ம்ணங்கொண்டான்
   சீதமலர்  அல்லிபல செழித்தோங்கும் திருக்கேணி
   போதலரும்  திருமுகத்தில் வீடுமனார் போட்டகணை
   தீதுறுத்த வடுக்கொண்டு திகழ்கின்றான்  போற்றுமினே.

5.கடலமுதாய்  அதன்சுவையாய்க் காராளும்  மேனியனாய்
   மடவரலாம்  திருமகள்தன்  மார்பிருக்கும்  அழகனுமாய்க்
   கடியரவக்  காளியனின்  கதமட்க்கிக் காத்தவனாய்ப்
   படர்துரகச் சாரதியாய்ப் பரிமளித்தான்  தாள்துணையே.

மூலவர் - பார்த்தசாரதி
தாயார் - வேதவல்லி
இத்தலம்  சென்னையில்  உள்ளது.


காப்பியக் க்விஞர்.நா.மீனவன்.



Dhivakar

unread,
Dec 4, 2013, 11:29:58 PM12/4/13
to மின்தமிழ்
திரு அல்லிக்கேணி பார்த்தசாரதியான் பின் வந்தோன்,
துளசிங்கமே ஆதி, ஆழ்வாரும் அவரைத்தான் பாடினர்.
துளசிங்கத்தையும் போற்றி ஒரு வெண்பா பாடி விடுங்களேன்..

அன்புடன்
திவாகர்

--

meenavan2

unread,
Dec 5, 2013, 7:26:33 AM12/5/13
to mint...@googlegroups.com

108.வைணவத் திருத்தலங்கள் தொடர்ச்சி

61.திருநீர் மலை

1.திருநீர்  மலைஎன்னும்  தெய்வத் திருமலைக்கண்
   ஒருநீர்நல் வண்ணனென  உயர்ந்தோங்கி  நின்றானைத்
   திருத்துழாய்  அலங்கரிக்கத் திருப்பாயல்  கிடந்தானை
   இருதாள்கள் தொழுமாறங் கிருந்தானை  ஏத்துமினே.

2.நீலமுகில்  வண்ணனாய்  நின்றான்அம்  மலைய்டியில்
   கோலப் பிராட்டியுடன்  குளிர்ந்தநர  சிம்மனாய்ச்
   சீலமுடன் இருந்தானைச் சீரங்கன்  எனக்கிடந்த
   மாலோனாம்  திருநீர்  மலையானை  வணங்குதுமே.

3.தோயாத் திரிமலையான்  தூவெள்ளைப்  பாற்கடலான்
   ஆயஎழிற்  கோலமுள் அணிமா  மலர்நங்கைத்
   தாயார்  இருக்கின்ற  தனியகலப்  பேறுடையான்
   காயாம்  பூநிறத்தன்  கடல்வண்ணன்  அடிதொழுமே.

4.தொண்டைமான்  வால்மீகி  தூயமலர்  அடிவணங்கக்
   கண்டமால் அழகுபொலி  காண்டவநல் வனம்உறைந்தான்
   பண்டைநாள்  போர்கருதும்  பாண்டவர்க்கு  வரம்அருளித்
   தண்டுமுனைத்  தேரோட்டும்  தனியானை  வணங்குதுமே.

5.வணங்குவார்  வாணாளைக்  கூட்டுதலம்  வந்துதொழும்
   மணமக்கள்  வாழ்வுபெற மாற்றுதலம்  மற்றிங்கே
   இணங்கித்  தமதடியை  ஏற்றுவார்  போற்றுதலம்
   பணங்கொண்ட  பாம்பணையான்  பாதங்கள்  போற்றுமினே.

மூலவர் - நீர்வண்ணன் - நீலமுகில் வண்ணன்(நின்ற திருக்கோலம்)
சாந்த நரசிம்மர்.(பிராட்டியை இதயத்தில் ஏற்ற கோலம்) ரங்கநாதன் -
(கிடந்த திருக்கோலம்)
தாயார் - அணிமா மலர் மங்கை
சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் இருந்து மேற்கே 5.கி.மீ
சென்னயில் இருந்து  பேருந்து  வசதி உண்டு.

62.திருவிடவெந்தை

1.செழித்தகடல்  அமுதுடனே  சேர்ந்தங்கே  பூமடந்தை
   எழத்தாங்கும்  திருமார்பன் இன்னிசைசேர் குழல்மாயன்
   பழித்தலைய  கவுரவர்கள்  படவென்ற பாண்டவர்கள்
   தொழ்த்தக்க  பேறுடையான்  துணைமலர்த்தாள்  வணங்குதுமே.

2.ஏதமிலாக் குணநிதியன்  இலக்குமி  வராகனெனப்
   போதுமொரு  நாமத்தான்  புகழ்க்கோ  மளவல்லி
   மாதவளை மார்பேற்று  மணப்பேறு  தருகின்ற்
   நாதன்  திருவடிகள்  ந்மதென்று  போற்றுமினே.

3.திருவான  இலக்குமிக்கே திகழ்மார்பில் இடந்தந்தே
   அருள்கின்ற  எந்தையென  அணிநாமம்  கொண்டபதி
   பெருநித்ய  கல்யாணப் பெருமாள்  உவந்ததலம்
   திருவாழும்  அவன்பதியைத்  தேடிவந்து  பணியுமினே.

4.காலவமா  முனிக்கருளிக் கவிச்சிங்கன் திருமங்கை
   கோலத் தமிழ்கொண்டு  கூறிவைத்த பாசுரங்கள்
   மாலவன்தன்  மாலையென  மார்பேற்றுக்  களித்தபிரான்
   ஆலிலையில்  கிடந்தபிரான்  அவனருளை  வேண்டுமினே.

5.ஓரடியைப் பூமியின்மேல்  ஓரடியைச்  சேடனின்மேல்
   சேரும்  இடத்தொடையில்  தேவியினை  வைத்தபிரான்
   காரளந்த  மேனிக் கரியமால்  பாண்டவர்க்குப்
   பாரளித்த  மைவண்ணன்  பாதங்கள்  பணியுமினே.

மூலவர் - இலட்சுமி வராகன் - நித்ய கல்யாணப் பெருமாள்
தாயார் - கோமள வல்லி
சென்னையில் இருந்து  மாமல்லபுரம் செல்லும் சாலையில்
கோவளத்திற்கு அடுத்து உள்ளது.

காப்பியக் கவிஞர்.நா.மீனவன்.

meenavan2

unread,
Dec 5, 2013, 9:16:42 PM12/5/13
to mint...@googlegroups.com

அன்பு நண்பர் திவாகர் அவர்களுக்கு
தாங்கள் விரும்பியபடி துளசிங்கப் பெருமானுக்கு ஒரு வெண்பாவைப்
பாடியுள்ளேன்.

அல்லிவளர் கேணியிலே ஆதிப் பெருமானாய்
எல்லாம் தருகின்ற எம்பெருமான் - பல்லுயிர்க்கும்
தோன்றாத் துணையாம் துள்சிங்க மூர்த்தியே
தோன்றிநீ  வாராய்  துணை.


காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

meenavan2

unread,
Dec 5, 2013, 9:48:16 PM12/5/13
to mint...@googlegroups.com

63.திருக்கடல் மல்லை (மாமல்லபுரம்)

1.உலகுய்ய நின்றானை  உத்தமனைப் போரேற்றை
   அலைபரவு  கடல்மல்லை அணிசெய்யும் சீரானைக்
   கலை நிலவு  மல்லைநகர் கலங்கள்பல  விள்ங்குபதித்
   தலசயனப் பெருமானின்  தாமரைத்தாள்  போற்றுவமே.

2.நவமணியும்  பலபொருளின்  ந்ற்குவையும் கொண்டிழியும்
   தவப்பெரிய  கலங்கள்பல  தழைத்துலவு  கடல்மல்லைத்
   தவமுனிவர்  தொழநின்ற தலசயனத் திருக்கோலம்
   பவமகற்றும்  என்பதனால் பணிந்துய்ய  வாருமினே.

3.குலம்ங்கை  தொழுதேற்றும் குமுதவாய்த்  தாயான
   நிலமங்கை  அருள்சுரக்கும் நிகரில்பதி மாமல்லை
   மலைமங்கை  இடங்கொண்டான்  மைத்துனனைத்  தயரதனார்
   தலைமகனைப்  பணிபவர்கள்  தரைமிசையில்  வாழுவரே.

4.கடல்நாரை  மீன்கவ்விக்  ககனத்தே  பாய்ந்திடுங்கால்
   அடர்த்துவரும்  கடலலைகள்  அதைப்பிடிக்கத்  தாவுகின்ற
   இடகான  கடல்மல்லை  எனதுபதி  என்றிருக்கும்
   தடந்தோளான்  பரமபதம்  தானுகந்தான்  அருள்பெறுமே.

5.ஒலிபுனல்சேர்  கடல்மல்லை  உயர்சிற்பக்  கலைக்கோயில்
   மலிகரையில்  தலசயன  மாம்பதியை  நினைந்தார்தம்
   நலிவகலும்  வாழ்விலே  நலம்தொடரும் பக்தியெனும்
   பொலிவுமிகும்  ஆதலினால் பொற்றாளைப்  போற்றுவமே.

மூலவர் - தலசயனப் பெருமாள் - உலகுய்ய நின்றான்
தாயார் - நிலமங்கை நாச்சியார்
மாமல்லபுரம் கடற்கரையில் உள்ளது
சென்னையில்  இருந்து  நிறையப் பேருந்துகள்  உள்ளன.

காப்பியக் கவிஞர்.நா.மீனவன்.

meenavan2

unread,
Dec 6, 2013, 5:47:44 AM12/6/13
to mint...@googlegroups.com

108.வைணவத் திருத்தலங்கள் தொடர்ச்சி

64.சோளிங்கர்(சோள்சிம்மபுரம்) திருக்கடிகை

1.மறைவிரிக்கும்  திருவிளக்காய்  மனத்தகத்தே  மலர்ந்திடுவான்
   நறைபொழியும்  தாமரைவாழ்  நாயகியாம் அமிர்தவல்லி
   இறையோக நரசிம்மர்  இதயமிருந்(து)  இன்பமுறும்
   சிறைவண்டு  பண்மிழற்றும்  திருக்கடிகை  சேருமினே.

2.தவமிருந்து  மனமடக்கும்  தவத்தோரை  உய்வித்துப்
   பவமகற்றும்  சோளிங்கப் பதியுறைவான்  திருவடிகள்
   நவையகற்றும்  நமதுவினை  ந்லிவிக்கும்  என்றுகரம்
   குவியநிதம்  நீர்வந்து  கும்பிட்டு  வாழ்த்துமினே.

3.அழகுபொலி  மாருதியும்  அருவமாய்  அமர்ந்ததலம்
   கழல்தொழுவார்  உய்யவழி  காட்டுவான் முகில்சுமந்த
   மழைபோல அருள்வழங்கும்  மாணிக்கச்  சேவடியின்
   நிழலிருந்து  பயன்பெறவே  நீர்திரண்டு  வாருமினே.

4 திருக்கடிகை  என்றமலை  திருப்பதிபோல்  இருக்குமலை
   அருள்அக்கா  ரக்கனியாய் அரங்கன்வந்(து). அமர்ந்தமலை
   திருச்செய்ய  கமலத்தில்  தேனுண்டு  பண்பாடும்
   பருப்பதமாம்  இதைவண்ங்கப் பழவடியீர் வாருமினே.

5.நாதமுனி  திருக்கச்சி  நம்பி  மணவாளர்
  ஓதரிய  மாமுனியாம்  உடையாரும்  வழிபட்ட
  தீதில்  திருக்கடிகைத் திருப்பதிவாழ்  ந்ரசிம்மன்
  பாதமல்ர் தான்போற்றிப்  பணிந்துபுகழ்  பாடுமினே.

மூலவர் - யோக நரசிகம்மர் - அக்காரக்கனி
தாயார் - அமிர்தவல்லி
அரக்கோண்ம் புகைவண்டி நிலையத்தில் இருந்து 25.கி.மீ.
இங்கிருந்து  பேருந்து  வசதி  உண்டு.

கேரள நாட்டுத் திருப்பதிகள்

65.திருநாவாய்

1.நாவாய்  முகுந்தன்நம்  நாரா  யணன்என்றே
   பூவால்  அருச்சித்துப்  பொழுதெல்லாம்  தான்வணங்கி
   நாவால்  புகழ்ந்தேத்தி  நன்றாய மலர்மங்கை
   ஓவாதே  உடன்உறையும்  உத்தமன்பேர்  ஓதுமினே.

2.மலையாழம்  என்னும் மகத்தான  தவப்பூமி
   சிலையேந்து  கையுடைய  சீராமன்  பால்தோற்ற
   பலராமன் தேசத்துப்  பதிகளிலே  சிறந்தபதி
   அலைமகளும் தனியிருந்தே  அருள்செய்தாள்  போற்றுமினே.

3.மண்மடந்தை  பெரும்பாரம்  மாற்றவென  அவதரித்த
   கண்ணன்  மதுசூதன்  கரிவந்து  வழிபட்ட
   அண்ணல்  திருமங்கை  அருளுடைய்  நம்மாழ்வார்
   பண்ணிசைத்து  வழிபட்ட திருநாவாய்  பணியுமினே.

4.அங்கண்  மல்ர்த்துழாய்  அணிகின்ற அச்சுதனாய்
   திங்களும்  ஞாயிறும்போல்  திகழ்கின்ற பஞ்சுடராய்ப்
   பொங்குகார்  முகில்களையே  பொருநிறத்துத் திருநெடுமால்
   நங்கள்  குறைதீர்க்கும்  நாரணனை  வணங்குமினே.

5.சித்திரத்தேர்  வலவனாய்ச் சீராழி  சங்குடனே
   பத்தராம்  பாண்டவரைப்  பாலித்த  கோவிந்தன்
   வித்தகங்கள் போற்றி  விழுந்தே  அடிவணங்கி
   இத்தரையில்  அமைதிபெற  இருகையால்  வணங்குமினே.

மூலவர் - நாவாய் முகுந்தன் - நாராயணன்
தாயார் - மலர்மங்கை
சென்னை - கள்ளிக்கோடடைப் புகைவண்டித் தடத்தில் திருநாவாய்
என்ற் பெயரில் புகைவண்டி நிலையம் உள்ளது.அங்கிருந்து  சுமார்
1.கி.மீ.தொலைவில் உள்ளது.

கி.காளைராசன்

unread,
Dec 6, 2013, 8:31:51 AM12/6/13
to mintamil
காப்பியக் கவிஞருக்கு வணக்கம்.


2013/12/6 meenavan2 <meen...@gmail.com>

63.திருக்கடல் மல்லை (மாமல்லபுரம்)

1.உலகுய்ய நின்றானை  உத்தமனைப் பேரேற்றை
   அலைபரவு  கடல்மல்லை அணிசெய்யும் சீரானைக்
   கலை நிலவு  மல்லைநகர் கலங்கள்பல  விளங்குபதித்

   தலசயனப் பெருமானின்  தாமரைத்தாள்  போற்றுவமே.

2.நவமணியும்  பலபொருளின்  நற்குவையும் கொண்டிழியும்

   தவப்பெரிய  கலங்கள்பல  தழைத்துலவு  கடல்மல்லைத்
   தவமுனிவர்  தொழநின்ற தலசயனத் திருக்கோலம்
   பவமகற்றும்  என்பதனால் பணிந்துய்ய  வாருமினே.

3.குலமங்கை  தொழுதேற்றும் குமுதவாய்த்  தாயான

   நிலமங்கை  அருள்சுரக்கும் நிகரில்பதி மாமல்லை
   மலைமங்கை  இடங்கொண்டான்  மைத்துனனைத்  தயரதனார்
   தலைமகனைப்  பணிபவர்கள்  தரைமிசையில்  வாழுவரே.

4.கடல்நாரை  மீன்கவ்விக்  கனத்தே  பாய்ந்திடுங்கால்

meenavan2

unread,
Dec 7, 2013, 4:19:06 AM12/7/13
to mint...@googlegroups.com

66.திருவித்துவக்கோடு

1.நாட்டைத் துறந்துஅந்த  நாரணனே  புகல்என்று
   பாட்டில்  தொழுது  பணிந்தகுல  சேகரன்பா
   வேட்டுத்  தமிழ்கேட்ட  வித்துவக்  கோட்டம்மானை
   வாட்டங்கள் அகலவென வந்திங்கு  பணியுமினே.

2.உய்யவந்த  பெருமாள்  உயர்வித்வக் கோட்டுவ்ல்லி
   மெய்யணைக்க விளஙகுமுயர்  மேலாளன்  திருவாழி
   கையெடுத்த பெருமாள் கவலைக்கு மருந்தாவான்
   அய்யன் பரந்தாமன்  அவனடியை  வணங்குமினே.

3.பாம்பணையான்  தேவியாம் பத்மா  சனியென்னும்
   காம்பணைந்த  தோளி  கரியமால்  மார்பிருந்து
   நாம்பணிய  வீற்(று)இருக்கும்  ந்ல்வித்வக் கோடதனில்
   வாம்பரிதேர் செலுத்தியநல்  வாசவனை  வணங்குமினே.

4.ஏழுலகும்  தொழநின்றான்  எருதேழும்  அடக்கியவன்
   ஆழியால்  சிசுபாலன்  அழகுசிரம்  சேதித்தான்
   பாழியந்  தோளுடைய பத்மநா  பன்எனும்
   ஊழி  முதல்வனாம்  உத்தமனைப்  போற்றுதுமே.

5.உத்தமர்தம்  சிந்தை  உறைவான்  வாவியெலாம்
   நத்தியலும்  செல்வ  நலங்கொழிக்கும்  பதியான
   வித்துவக்கோட்  டம்மானை  வேதத்  திருமுதலை
   எத்தினமும்  போற்றிடுதல்  ஏற்றதெனக்  கொள்ளுமினே.

மூலவர் - உய்யவந்த  பெருமாள்
தாயார் - வித்துவக கோட்டு வல்லி - பத்மாசனி நாச்சியார்
சென்னை - கள்ளிக்கோட்டைப் புகைவண்டித் தடத்தில் உள்ள
பட்டாம்பிப் புகைவண்டி நிலையத்தில் இற்ங்கிச் சுமார் 2 மைல்
தூரம் சென்று அடைய வேண்டும்.

67.திருக்காட்காரை

1.அப்பன்  எனும்நாமம்  அடைந்ததோர்  வாமனனாய்
   ஒப்பில்  திருக்காட்  காரையப்பன்  ஓணத்தான்
   எய்ப்பிலொரு  வைப்பாய்  இருந்துதவும்  பெருமானை
   எப்பொழுதும்  கண்டுதொழ  இப்பதியை  நண்ணுமினே.

2.தெய்வத்  திருமதலை  தேவகிதன்  வயிறுதித்த
   மையார்  பெருஞ்செல்வ  நாயகிதன்  மணவாளன்
   பையார்  அரவமணிப்  பாயலினான்  திருவடியைக்
   கையால்  வணங்கிக் களிப்படைய  வாருமினே.

3.அடிபணிந்த  பாண்டவர்கள்  அமரிலே  வெற்றிபெற்
   குடியாத பாஞ்சாலி  குழ்ல்முடிக்கத்  தேர்செலுத்திப்
   படியிலே  கவுரவர்கள்  படவைத்த  பரந்தாமன்
   அடிதொழவே  காட்காரை  அணைந்துய்ய  வந்திடுமின்.

4.வளமாரும்  சோலை  வாழுதிருக் காட்காரை
   உளமார  வந்துபணி  உத்தமரை  வாழ்விப்பான்
   களமேறும்  பாண்டவரைக்  கரையேற்றிக்  காத்தமால்
   துளவநறுந் தாமத்தான்  துணையடிகள்  போற்றுமினே.

5.ஆரணங்கள்  தின்ம்வணங்கும்  அப்பன் திருமாலே
   பூரணம்காண்  எனவணங்கும் புகழ்மிக்கோன் கஞ்சனது
   வாரணத்தை  அன்றுவதை  செய்திட்ட வலியாளன்
   தோரஞ்சேர்  கோயில்  துணையென்று  கொள்ளுமினே.

மூலவர் - அப்பன் - காட்காரை  அப்பன்
தாயார் - பெருஞ்செலவ நாயகி
இத்தலம் கேரளாவில் உள்ள சோரனூர் வழி எர்ணகுளம் புகை
வண்டித் தடத்தில் உள்ள இடைப்பள்ளிப் புகைவண்டி நிலையத்தில்
இருந்து  2 மைல் தூரம்.

காப்பியக் கவிஞர்,நா,மீனவன்
காப்பியக் க்விஞர்.நா.மீனவன்.

krishnan

unread,
Dec 7, 2013, 4:32:16 AM12/7/13
to mint...@googlegroups.com

Dhivakar

unread,
Dec 7, 2013, 4:35:42 AM12/7/13
to மின்தமிழ்
வித்துவக்கோட்டம்மானே:

வெங்கந்திண் களிறடர்த்தாய்! வித்துவக்கோட்டம்மானே!
எங்குபோய் உய்கேன் உன் இணை அடியே அடையலல்லால்
எங்கும்போய் கரைகாணா தெறிகடல்வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே..

பெருமாள் திருமொழியில் வித்துவக்கோட்டம்மாவை சரணடையும் குலசேகரப் பெருமாளாழ்வாரின் இந்தப் பாசுரத்தில் வரும் அந்தக் கடைசி  ‘வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே’ என்ற வரிகளில் உள்ள உவமை என்னை ஈர்த்தது போல வேறெந்த உவமையும் ஈர்த்ததா என்று யோசித்துப் பார்க்கிறேன்..

ஒரு பறவை நடுக்கடலில் திசை தெரியாதுத் தத்தளிக்கிறது. எந்தப் பக்கம் பார்த்தாலும் நீர் நீர்தான். நிலம் எங்கே, எந்தப் பக்கம், எத்தனை தூரம் இன்னும் பறந்து கொண்டே இருப்பது இறைவா என்ற மாபெரும் கவலையில் அல்லாடும் அந்தப் பறவைக்கு மட்டும் ஒரு பாய்மரக்கப்பல் கிடைத்துவிட்டால்.. எத்தனை ஆனந்தமோ..எத்துணை நிம்மதியோ..

ஆழ்வார் எங்கே கொண்டு போய் நம்மை வியக்கவைக்கிறார் என்று சற்று நினைத்துப் பார்த்தால்தான் புரியும்.

என் எம்டன் கதையில் இந்தப் பறவை வரும்..

--

meenavan2

unread,
Dec 7, 2013, 9:40:21 PM12/7/13
to mint...@googlegroups.com

108 வைணவத் திருத்தலங்கள் -காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

68.திருமூழிக்களம்

1.திருமூழிக் களத்தான்  திருக்குருகூர்ச்  சடகோபன்
   பொருமாழி  ஏந்தியவன்  பூந்துழாய்  மார்பழகன்
   வருமூழி  கடந்துலகை  வாழ்விப்பான்  வலியதோர்
   பெருமேழிப்  பலராமன்  பின்னோனை  வணங்குமினே.

2.மங்கையாள்  அழ்குலி  மகிழ்மதுர  வேணியுடன்
   சங்கநறுந்  தீர்த்தமெனும்  சால்புடைய  சிற்றாறு
   பொங்கியே  பாய்கின்ற புகழ்மிக்க  திருப்பதியில்
   சங்குடனே  இருக்கின்ற சக்கரத்தான்  தாள்பணிமின்.

3.பரதனை  ஐயுற்ற  பாவமது  தான்தீர
   அரியபுகழ் இல்க்குவனார்  அன்புடனே  பணிந்ததலம்
   கரியமால்  எனவந்த  கருணையால்  நமக்கென்றும்
   உரியமால்  திருவடிகள்  உயர்வென்று போற்றுமினே.

4.திருவரங்கப்  பெம்மான்  திருமூழிக் களத்தானைப்
   பெருவரங்கள் தரநின்ற  பெருஞான்  ஒளிவிளக்கைக்
   கருவிருந்த  துயர்நீக்கிக் காப்பாற்றும்  பசுமணியை
   அருகிருந்து  பணிந்துதொழ  அன்ப்ர்களே  வந்திடுமின்.

5.வண்குருகூர்ச்  சடகோபன்  வாய்மொழிந்த பாசுரங்கள்
   பண்கலந்து  பாடியவர்  பரமபத  நாதனது
   கண்கசியும்  கருனைமழை  கலந்தாடி  மகிழ்வரெனில்
   மண்ணுண்ட  மாயனடி  மறவாமல்  வணங்குமினே.

மூலவர் - திருமூழிக்  கள்த்தான்
தாயார் - மதுரவேணி நாச்சியார்
கேரளாவில் உள்ள ஆலவாயில் இருந்து எண்ணற்ற பேருந்துகள்
உள்ளன.

70.திருக்கடித்தானம்

1.அற்புதனாய்  நாரணனாய்  அழகான  குறள்னுமாய்க்
   கற்பகமாம்  வல்லியுடன்  கடித்தானம்  மேயானைப்
   பொற்புடைய  கோவிந்தன்  பூதேவி  நாயகனை
   விற்பிடித்த  கையானை  விரும்பிநாம்  வணங்குவமே.

2.கணப்பொழுதில்  தூயவராய்க் கடுந்தவங்கள்  செய்வார்க்கு
   மணிமார்பன்  வீட்ளிக்கும்  மகத்துவ்ஞ்சேர்  கடித்தானம்
   பணியரவப்  பாயலான்  பரந்தாமன்  உவக்குமெனில்
   அணிதிரண்டு  நாமெல்லாம்  அருள்பெறத்தான்  வேண்டாவோ.

3.வேதம்   தமிழ்செய்த  நம்மாழ்வார்  செந்தமிழில் 
   ஓதியநற்  பாசுரத்தின்  உட்பொருளாய்  இலங்குபவன்
   ஆதியாய்  அந்தமாய்  அனைத்துமாய்  ஆகியநல்
   நீதியான்  திருநாம்ம்  நெஞ்சுணர்ந்து  வாழுமினே.

4.மன்னுதிருக்  கடித்தானம்  மாலுகந்த திருத்தலத்தைப்
   பொன்னாள்  திருமகளின்  பூமார்பம்  புல்லியவன்
   கன்னனார்  வீடுபெற்க்  கருணையினால்  உவந்தளித்தோன்
   தன்னை  வணங்கிநீர்  தாரணியில்  வரம்பெறுமின்.

5.தானே  உலகானான்  தானே  படைத்தளித்தான்
  வானோர்  தொழுந்தகைய  வலிபடைத்த  இறையானான்
  நானே  அனைத்துமென  நற்கீதை  அன்றுரைத்தான்
  தானே  சரணென்று  தலையார  வனனங்குமினே.

மூலவர் - அற்புத நாரணன்
தாயார் - கற்பக வல்லி
கேரளாவில் உள்ள  கோட்டயத்தில் இருந்து  செங்கணாச்சேரி செல்லும்
வழியில் உள்ளது.பேருந்து  வசதி  உண்டு.

காப்பியக்  கவிஞர்.நா.மீனவன்,

meenavan2

unread,
Dec 8, 2013, 9:33:27 PM12/8/13
to mint...@googlegroups.com

108 வைணவத் திருத்தலங்கள் - தொடர்ச்சி

71.திருச்செங்குன்றூர் (திருச்சிற்றாறு)

1.இமையவர்தம்  அப்பன் எனவிளங்கும் செழுஞ்சோதி
   அமைத்தோளி  செங்கமல  வ்ல்லியெனும்  அன்னையாம்
   நமதமுதத்  தாயாரை  நன்மார்பில்  ஏந்தியபொன்
   அமுதத்தை  உகந்தானின் அருள்பெறநீர்  வணங்குமினே.

2.தருமம்  தவறாதான்  தருமனாம்  பாண்டவர்கோன்
  குருதுரோணர்  இறக்கவெனக் கூறியபொய்  அதனாலே
  வரும்பாவம்  போக்கவென  வந்துபணி  செங்குன்றூர்
  ஒருமுறைநீர்  பணிந்துய்ய  உத்தமனூர்  வந்துய்மின்.

3.ஆதியான்  என்றுலகம்  போற்றுகிற  அச்சுதனைத்
   தீதுடைய  கௌரவர்கள்  தென்னுலகம்  தனைச்சேரக்
   காதலினால்  தேரோட்டிக்  கன்னனுக்கு  வீடருளிச்
   சேதியனின்  சிரமறுத்தான்  சேவடியை  வணங்குமினே.

4.திருச்சிற்றா  றென்று  திகழ்திருச்செங் குன்றூரில்
  அருச்சித்தார்  பாவங்கள்  அடியோடு  பொடிசெய்யும்
  திருப்பவள  வாய்த்திருமால்  திருவடியே  சதமென்று
  வருவார்  பரமபதம் வருவார்  வணங்குமினே.

5.மதவேழம்  தனையடர்த்த மாமாயன்  கோவிந்தன்
   நதிவருடும்   பாதமுள்ள நாதன்  திருவரங்கன்
   பதிஇதனைப்  பணிந்தார்  சுகம்பெறுவார்  பக்தர்களே
   இதுதருணம்  வாருங்கள்  இணையடிகள் தொழுவதற்கே


காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

meenavan2

unread,
Dec 9, 2013, 3:40:43 AM12/9/13
to mint...@googlegroups.com


108 வைணவத் திருத்தலங்கள் - தொடர்ச்சி

72.திருப்புலியூர்(குட்ட நகர்)

1.மாமணி  மாடங்கள்  மலிந்திருக்கும்  திருக்கோலம்
   தூமணி  வ்ண்ணனாய்த் துலங்கும் திருக்கோலம்
   தாமநறுந்  துளவமாம்  தாருடையான்  திருப்புலியூர
   தாம்உகந்த  நாரணன்தாள் தலைக்கணியாய்க்  கொள்ளுமினே.

2.எழுமுனிவர்  தவங்கெடுத்தார்  இடர்நீக்க  இந்திரனை
   உழுவையாய்  வரச்செய்த ஒளிநீல  மணிவண்ணன்
   மழைமுகில்போல்  தான்திகழும்  மாயப்பி  பிரான்தனையே
   தொழவருவீர்  அடியவரே  துணைநமக்கிங்  கவன்தானே.

3.பொற்கொடியாள்  தன்கேள்வன்  புகழ்குட்ட  நாடுடையான்
   கற்படிவம்  பெண்ணாகக்  கால்வண்ணம்  காட்டியவன்
   மற்போரில்  மிகவல்ல மாண்புடைய  பீமனார்
   அற்புதமாய்ப்  புதுக்கிவைத்த  ஆல்ய்த்தைக்  காணுமினே.

4.பொன்னழகுத்  தாமரைகள்  சோதியெனப் பொலிவூட்டப்
   புன்னைமலர்ச்  சோலைகளோ  பூத்தூவி  வணங்கிவரும்
   நன்னகராம்  புலியூரை  நாம்பணிந்தோம்  ஆமாகில்
   என்னகுறை  ஒன்றுமிலை  என்பதனால்  போற்றுமினே.

5.மையார்கண்  நப்பின்னை  மண்வாளன்  கோலவளைக்
   கையார்கள்  மலர்தூவிக்  காதலால்  பணிந்தேத்திக்
   கையாழி  கொண்டதொரு  கருணைமால்  வாழ்புலியூர்
   அய்யா எனஅழைக்கும்  அருமைதனைப்  போற்றுமினே.

மூலவர் - மாயப்பிரான்
தாயார் - பொற்கொடி நாச்சியார்
திருச்செங்குன்றூரில்  இருந்து  பேருந்து  வசதி உண்டு.

73.ஆரம்முளா(எ)திருவாற்ன்விளை

1.தேனார்பூஞ்  சோலைத்  திருக்குற்ள்  அப்பனவன்
   மேனாள்  குருகுலத்தார்  மேன்மையுறத்  தேர்நடத்தி
   வானாரும்  கங்கை  வருடுகின்ற  தாளுடையான்
   தானேவ ந்(து)  ஆட்கொள்வான்  தான்னடிகள்  வணங்குதுமே.

2.பவளவாய்  அன்னையாம்  பத்மா சனித்தாயார்
   தவளநல்  மாட்ங்கள்  தானிலகு திருப்பதியில்
   உவணத்தான்  அருள்கின்றான்  உயர்ஆறம்  முளாவதனில்
   பவமகற்ற  இருக்கின்றான்  பணிந்துய்ய வாருமினே.

3.அங்கர்கோன்  தனைப்போரில்  அட்டபழி  அகலவெனத்
   துங்கவாம்  பரித்தேரில்  துலங்குபோர்  அருச்சுனனார்
   இங்குவந்து  வணங்கியே  ஏற்றமிகப்  பெற்றபதி
   மங்கலங்கள்  த்ருவதனால்  மனமுருகி  வணங்குமினே.

4.பம்பா  ந்திவந்து  ப்டர்ந்தோடும்  வடவாயில்
   அம்பார்  விசயன்வர  அருள்செய்த  திருக்கோயில்
   கொம்பார்  மலர்சொரியக்  கோகில்ங்கள்  இசைபாடச்
   செம்பதுமத்  தாள்கேள்வன்  சேவடியை  வணங்குமினே.

5.ஆர்த்த  புகழுடைய  அச்சுதனின்  கரத்தாழி
   சேர்த்த  பெருமையினான்  சித்திரத்தேர்  வலவனையே
   கூர்த்த  மதியாளர்  கொண்டாடி வண்ங்குகிறார்
   பார்த்துநாம்  அடிமலர்கள்  பணிந்திங்கு  வணங்குவமே.

மூலவர் - திருக்குறளப்பன்
தாயார் - பத்மாசனி
திருச்செங்குன்றூரில் இருந்து  கிழ்க்கே 10 மைல்
நிறையப் பேருந்து  வசதி  உள்ள்து.

கி.காளைராசன்

unread,
Dec 9, 2013, 4:25:02 AM12/9/13
to mintamil
காப்பியப் புலவருக்கு வணக்கம்.


108 வைணவத் திருத்தலங்கள் - தொடர்ச்சி

72.திருப்புலியூர்(குட்ட நகர்)

1.மாமணி  மாடங்கள்  மலிந்திருக்கும்  திருக்கோலம்
   தூமணி  வண்ணனாய்த் துலங்கும் திருக்கோலம்

   தாமநறுந்  துளவமாம்  தாருடையான்  திருப்புலியூர
   தாம்உகந்த  நாரணன்தாள் தலைக்கணியாய்க்  கொள்ளுமினே.

2.எழுமுனிவர்  தவங்கெடுத்தார்  இடர்நீக்க  இந்திரனை
   உழுவையாய்  வரச்செய்த ஒளிநீல  மணிவண்ணன்
   மழைமுகில்போல்  தான்திகழும்  மாயப்  பிரான்தனையே

   தொழவருவீர்  அடியவரே  துணைநமக்கிங்  கவன்தானே.

3.பொற்கொடியாள்  தன்கேள்வன்  புகழ்குட்ட  நாடுடையான்
   கற்படிவம்  பெண்ணாகக்  கால்வண்ணம்  காட்டியவன்
   மற்போரில்  மிகவல்ல மாண்புடைய  பீமனார்
   அற்புதமாய்ப்  புதுக்கிவைத்த  ஆலயத்தைக்  காணுமினே.


4.பொன்னழகுத்  தாமரைகள்  சோதியெனப் பொலிவூட்டப்
   புன்னைமலர்ச்  சோலைகளோ  பூத்தூவி  வணங்கிவரும்
   நன்னகராம்  புலியூரை  நாம்பணிந்தோம்  ஆமாகில்
   என்னகுறை  ஒன்றுமிலை  என்பதனால்  போற்றுமினே.

5.மையார்கண்  நப்பின்னை  மண்வாளன்  கோலவளைக்
   கையார்கள்  மலர்தூவிக்  காதலால்  பணிந்தேத்திக்
   கையாழி  கொண்டதொரு  கருணைமால்  வாழ்புலியூர்
   அய்யா எனஅழைக்கும்  அருமைதனைப்  போற்றுமினே.

மூலவர் - மாயப்பிரான்
தாயார் - பொற்கொடி நாச்சியார்
திருச்செங்குன்றூரில்  இருந்து  பேருந்து  வசதி உண்டு.

73.ஆரம்முளா(எ)திருவாற்ன்விளை

1.தேனார்பூஞ்  சோலைத்  திருக்குறள்  அப்பனவன்

   மேனாள்  குருகுலத்தார்  மேன்மையுறத்  தேர்நடத்தி
   வானாரும்  கங்கை  வருடுகின்ற  தாளுடையான்
   தானேவந்(து)  ஆட்கொள்வான்  தான்னடிகள்  வணங்குதுமே.


2.பவளவாய்  அன்னையாம்  பத்மா சனித்தாயார்
   தவளநல்  மாடங்கள்  தானிலகு திருப்பதியில்

   உவணத்தான்  அருள்கின்றான்  உயர்ஆறம்  முளாவதனில்
   பவமகற்ற  இருக்கின்றான்  பணிந்துய்ய வாருமினே.

3.அங்கர்கோன்  தனைப்போரில்  அட்டபழி  அகலவெனத்
   துங்கவாம்  பரித்தேரில்  துலங்குபோர்  அருச்சுனனார்
   இங்குவந்து  வணங்கியே  ஏற்றமிகப்  பெற்றபதி
   மங்கலங்கள்  தருவதனால்  மனமுருகி  வணங்குமினே.

4.பம்பா  நதிவந்து  படர்ந்தோடும்  வடவாயில்

   அம்பார்  விசயன்வர  அருள்செய்த  திருக்கோயில்
   கொம்பார்  மலர்சொரியக்  கோகிலங்கள்  இசைபாடச்

   செம்பதுமத்  தாள்கேள்வன்  சேவடியை  வணங்குமினே.

5.ஆர்த்த  புகழுடைய  அச்சுதனின்  கரத்தாழி
   சேர்த்த  பெருமையினான்  சித்திரத்தேர்  வலவனையே
   கூர்த்த  மதியாளர்  கொண்டாடி வணங்குகிறார்

   பார்த்துநாம்  அடிமலர்கள்  பணிந்திங்கு  வணங்குவமே.

மூலவர் - திருக்குறளப்பன்
தாயார் - பத்மாசனி
திருச்செங்குன்றூரில் இருந்து  கிழக்கே 10 மைல்
நிறையப் பேருந்து  வசதி  உள்ளது.

meenavan2

unread,
Dec 10, 2013, 3:33:50 AM12/10/13
to mint...@googlegroups.com

108 வைணவத் திருத்தலங்கள் - தொடர்ச்சி

74.திருவண் வண்டூர்

1.நல்லோராம்  பாண்டவரில்  நகுலர்பணி  செய்கோயில்
   பல்லலைகள் தாலாட்டும்  பாம்பணை  அப்பனவன்
   மல்லர்களைப்  புறங்கண்டான்  மனையான  நற்கமல
   வல்லியாள்  வாய்த்ததிரு  வண்வண்டூர்  வணங்குமினே.

2.கடியதாம் நச்சுடைய  காளிங்கன்  தலையேறி
   நடனமிடும்  திருக்ககோலம்  நமககென்றே  கொண்டவனாய்க்
   கடல்வண்ணன்  நிற்கின்ற காட்சியால்  நம்முடைய
   இடர்தீரும்  ஆதலினால் இவனடியைப்  போற்றுமினே.

3.நாரதர்க்குச்  சாபமிட்ட  நான்முகனார்  தனைப்பிரிந்த
   நாரதனும்  இப்பதியில்  நாரணன்பால்  வரம்பெற்று
   நாரதீயம்  என்னுமொரு  நலமான  நூல்செய்தான்
   ஊரான  வண்டூரை  உள்ங்கொண்டு  போற்றுமினே.

4.வேதப்  பொருள்விளங்க வேதியர்கள்  இசைபாடச்
   சீதக்  கடலலைமேல் சீறரவப்  பாயலிலே
   போதத்  துயில்கொள்ளும்  பூதேவி  நாயகன்தன்
   பாதத்  திற்ம்பாடிப் பரந்தாமன்  தாள்பணிமின்.

5.தென்னன்  சடகோபன்  தீந்தமிழ்த்தேன் செவிமாந்திக்
   கன்னல்  நெருங்கக் கதலியொடு  செஞ்சாலி
   துன்னிக் கிடக்கத்  துலங்குவயல்  வண்வண்டூர்
   மன்னன்  நெடுமால்தம்  மலரடிகள்  தொழுதிடுமின்.

மூலவர் - பாம்பணையப்பன் - கமல நாதன்
தாயார் - கமலவல்லி  நாச்சியார்
திருச்செங்குன்றூர்க்கும் திருவல்லாவுக்கும் இடையே எரிமேலிக்
கரைப் பாதையில் இருந்து  3.கி.மீ.தொலைவில் உள்ளது.

75.திருவனந்தபுரம்

1.தெய்வநதித்  தேனாறு திக்கெட்டும்  பாயந்துநமை
   உய்விக்கும்  திருவனந்தை  உறைபெருமான்  தன்னுடைய
   கையாழி  கொண்டன்று  கதிரவனை  மறைத்தபிரான்
   மையாரும்  மேனி  ம்ணிவண்ணன்  தாள்பணிமின்.

2.அனந்தன்  வனத்தில்  அழகிலுப்பை  மரப்பொந்தில்
   முனிவரெலாம்  தரிசித்த  முழுமுதலாய்  எல்லார்க்கும்
   இனியதிருப்  பொற்பாத  எழில்காட்டி ஆட்கொள்ளும்
   மனிதருக்கு  மணவாளன்  மலரடிகள்  தொழுதிடுமின்.

3.உருகாத  வெண்ணயினை  உடலணிந்த  மாருதியான்
   அருள்விரும்பித்  தென்புர்த்தில்  அமர்ந்திருக்க  வானுலவு
   பருதியென  விள்க்கொளிகள்  பகலாக்கி  ஒளிகாட்;டும்
   திருவனந்தைக்  கோமானின்  திருப்பாதம்  வணங்குமினே.

4.ப்ல்லோர்  தொழுமனந்த பத்ம்னாம் நாபனைஅவ்
   வில்லாண்மைப்  பாண்டவர்தம்  வெற்றிக்கு வழிசெய்த
   மல்லார்தோள்  வீரனை  ம்ல்ர்ந்தஅரி  லட்சுமியாம்
   நல்லாளை  மார்பேற்றான்  நற்றாளைத்  தொழுதிடுமின்.

5.மாங்காய்  படைத்திட்ட  மாமுனிவன்  வில்வமங்கன்
   பாங்காய்  வணங்கியநல்  பதியிதுவாம் திருவனந்தை
   ஈங்குற்றார்  நலம்பெறுவார்  இறைஞ்சுவார்  தீவினைகள்
   வாங்குவார் ஆத்லினால்  வணங்கிப்  பணியுமினே.

மூலவர் - அனந்த  பத்ம நாபன்
தாயார்  அரில்ட்சுமி
இது கேரள்த்தின் தலை நகரமாகும்.

காப்பியக்  கவிஞர்.நா.மீனவன்

DEV RAJ

unread,
Dec 10, 2013, 4:12:34 AM12/10/13
to mint...@googlegroups.com
கையாழி  கொண்டன்று  கதிரவனை  மறைத்தபிரான் 
மையாரும்  மேனி  மணிவண்ணன்  தாள்பணிமின்.

வரிகள் மனத்தை நெகிழ்வித்தன.
தல புராணத்தைப் புறக்கணிக்காமல் பாப்புனையும்
பாங்கு பாராட்டுக்குரியது. எழுத்துப் பிழைகளைத்
தவிர்க்கலாம். திரு பிரசாத் வேணுகோபால்
அவர்கள் பார்க்கிறாரா தெரியவில்லை
வாழ்க

அன்புடன்
தேவ்

 

krishnan

unread,
Dec 10, 2013, 4:14:13 AM12/10/13
to mint...@googlegroups.com

meenavan2

unread,
Dec 12, 2013, 5:10:29 AM12/12/13
to mint...@googlegroups.com

108 வைணவத் திருத்தலங்கள் - தொடர்ச்சி

76.திருவட்டாறு

1.அனந்தபுரம்  எனும்தலத்தின்  ஆதித்  திருத்தலமாம்
   அனந்தனாம்  அரவணையில்  அரிதுயில்கொள்  திருமாலைத்
   தனந்தரும்ஓர்  மரகதத்தாள் தன்னுடனே  பொலிந்தானை
   நனியருளும்  வட்டாற்று  நாயகனை  வணங்குவமே.

2.கேசனையும்  கேசியையும்  கீழே  விழவைத்தோன்
   கேசியின் துணைவியராம்  கிளர்கங்கை  பரணிஎனும்
   ஓசைநதி  ஓடிவர  உயர்பூமி  மேடாக்கி
   வாசம்லர்  மாலைகள்போல்  வந்தஇடம்  வட்டாறே.

3.வாட்டாற்றின்  பதிஉறைவான்  வாசநறுந்  தாரழகன்
   பாட்டாலே  நம்மாழ்வார்  பரவியே  துதித்தபதி
   தாட்டா  மரைதன்னைத் தலைமிசயில்  வைத்தருளும்
   தேட்டாளன்  திருமாலின்  திருவடியை  வணங்குமினே.

4.கடல்வாய்ப்  பெருந்தீர்த்தம்  கனிந்தருளும்  வாட்டாறு
   அடிகொண்டு  சகடத்தை  அன்றுதைத்த  ஆழியான்
   படியில்  இசைகொணட  பரந்தாமன்  தன்னுடைய
   அடிபரவி  இசைபெற்நீர்  அனவரதம்  வணங்குமினே.

5.வளமிக்க  வட்டாறு  வாழ்ஆதி  கேசவனாஎ
   களிதுஞ்சும்  துளவத்தார்க்  கண்ணன்  அருட்சோதி
   அளிமலர்மா  ம்ங்கைஎனும்  அம்புயத்தாள்  துணையாகக்
   களிகொள்ளும்  நாயகன்தன்  கால்டிகள் தொழுதிடுமின்.

மூலவர் - ஆதிகேசவப் பெருமாள்
தாயார் - மரகத வல்லி நாச்சியார்.
திருவனந்த  புரத்தில் இருந்தும் நாகர் கோவிலில் இருந்தும்

பேருந்து  வசதி உள்ளது.

77.திருவண் பரிசாரம்

1.உருவளரும்  சக்கரத்தான்  ஒலிசங்கம்  கைக்கொண்ட
   திருவாழும்  மார்பன்  திகழ்வண்  பரிசாரம்
   வருவார்  தமக்கிங்கே  வரம்தருவான்  அடியார்தம்
   குருமா  மணியான  கோவிந்தன்  தாள்பணிமின்.

2.காரி  மனையரசி  கவினார்  உடையநங்கை
   பாரில்  புதல்வனுக்காய்ப்  பாடு  கிடந்தபரி
   சாரம்  இருக்கின்ற  சாரங்க  வில்லாளி
   தாரம்  கமலவ்ல்லி  தாள்பணிய  வாருமினே.

3.தென்னிலங்கை  வீடணனார்  திருராமன்  அழகுருவம்
   தன்மேல்  மனம்வைத்துத்  தான்காண்  விரும்பியதால்
   பொன்னார்  திருக்கோலம் புலப்படவே  வைத்தபதி
   வன்னச்  செழுஞ்சுடரை  வந்திங்கு  போற்றுமினே.

4.ஆயர்  குலத்தானை  அஞ்சனநல்  மேனியனைத்
   தாயர் மகிழத்  தள்ர்நடைகள்  இட்டவனை
   வேயில்  தினம்ஊதும்  வித்தகனைப் பரிசார
   மாயன்  திருவடியை  மறவாது  போற்றுமினே.

5.சேரர்குல  சேகரனார்  சீர்செய்த  திருப்பதியை
   நேரும்  வலக்கரத்தில்  நேமி  பிடித்தவனைத்
   தாராய்த்  திருத்துளவம்  தாங்குமால்  ஆனவன்ஆ
   தாரம்  எனக்கொண்டு  தரைமிசையில்  இசைபெறுவீர்.

மூலவர் - திருவாழ்  மார்பன்
தாயார் - கமலவல்லி  நாச்சியார்
நாகர் கோயிலில் இருந்து சுமார் 2.கி.மீ. வ்ரை பேருந்து வசதி உண்டு.
இங்குள்ள ம்க்கள் இத்தலத்தைத் திருப்பதிசாரம்  என்றழைப்பர்.

காப்பியக் கவிஞர்.நா,மீனவன்.

meenavan2

unread,
Dec 13, 2013, 7:57:43 AM12/13/13
to mint...@googlegroups.com

108 வைணவத் திருத்தலங்கள் - தொடர்ச்சி

79.திருவரமங்கை(வானமாமலை)

1.தோத்தாத்திரி  நாதன்  துணைமலர்த்தாள்  காணவெனக்
   காத்திருப்பார்  தமைக்காணக் கண்திறக்கும்  என்னப்பன்
   தோத்தரிப்பார்  தமக்கெல்லாம்  துணையிருப்பான்   அருகிருந்து
   பார்த்திருக்கும்  சீதேவி  பாதமலர் பணிந்திடுமின்.

2.திருவரநல்  ம்ங்கை  சீதேவி  பிறந்ததலம்
   அரியமா  முனிவன்  அரசனுக்கே இடும்சாபம்
   உருவமது  நாயாக  உளம்வருந்தும்  காலத்தில்
   அரியவரம்  தந்தமால்  அணைந்தபதி  வணங்குமினே.

3.ஊர்வசியாள்  திலோத்தமையின்  உளமகிழ  வரம்தந்தான்
   பார்வசிப்பார்  அனைவருக்கும்  பாதமலர்  காட்டுபவன்
   மார்கசியும்  பாலுண்ட  மதலையென  ஆனவர்க்கு
   நீர்கசியும்  ஊற்றாகி  நிற்பானை  வணங்குதுமே.

4.மாவான  மாமலையான்  திருவரநல்  ம்ங்கையாம்
   பூவானாள்  வாழ்கின்ற பூதேவி  பதிவருவோர்
   நாவாலே  போற்றி  நலஞ்சேரப்  பணிவார்கள்
   காவாழும்  தலம்சேர்ந்து  காலமெலாம்  பயன்பெறுவீர்..

5.பால்பொழியும் ஆநிரைகள்  பார்த்துவரும்  கோவலனாய்
   மால்எடுத்த  அவதாரம்  மககள்தொழும் கோபாலன்
   பால்வந்து  அவன்பாதம்  ப்ணிவார்  உளம்கிழக்
   கால்தந்த  மாலோனின்  கருணைமுகம்  பாருமினே.

மூலவர் - தோத்தாத்திரி நாதன் - வானமா மலை
தாயார் - ஸ்ரீதேவி - பூதேவி.

திருநெல் வேலியில் இருந்து எண்ணற்ற பேருந்துகள் உள்ளன.
திருநெல் வேலியில் இருந்து நாகர் கோவில் வழி


காப்பியக் கவிஞர்.நா,மீனவன்.



கி.காளைராசன்

unread,
Dec 13, 2013, 6:08:01 PM12/13/13
to mintamil
காப்பியப் புலவருக்கு வணக்கம்.


2013/12/13 meenavan2 <meen...@gmail.com>

108 வைணவத் திருத்தலங்கள் - தொடர்ச்சி

79.திருவரமங்கை(வானமாமலை)

1.தோத்தாத்திரி  நாதன்  துணைமலர்த்தாள்  காணவெனக்
   காத்திருப்பார்  தமைக்காணக் கண்திறக்கும்  என்னப்பன்
   தோத்தரிப்பார்  தமக்கெல்லாம்  துணையிருப்பான்   அருகிருந்து
   பார்த்திருக்கும்  சீதேவி  பாதமலர் பணிந்திடுமின்.

2.திருவரநல்  மங்கை  சீதேவி  பிறந்ததலம்

   அரியமா  முனிவன்  அரசனுக்கே இடும்சாபம்
   உருவமது  நாயாக  உளம்வருந்தும்  காலத்தில்
   அரியவரம்  தந்தமால்  அணைந்தபதி  வணங்குமினே.

3.ஊர்வசியாள்  திலோத்தமையின்  உளமகிழ  வரம்தந்தான்
   பார்வசிப்பார்  அனைவருக்கும்  பாதமலர்  காட்டுபவன்
   மார்கசியும்  பாலுண்ட  மதலையென  ஆனவர்க்கு
   நீர்கசியும்  ஊற்றாகி  நிற்பானை  வணங்குதுமே.

4.மாவான  மாமலையான்  திருவரநல்  மங்கையாம்

   பூவானாள்  வாழ்கின்ற பூதேவி  பதிவருவோர்
   நாவாலே  போற்றி  நலஞ்சேரப்  பணிவார்கள்
   காவாழும்  தலம்சேர்ந்து  காலமெலாம்  பயன்பெறுவீர்.

5.பால்பொழியும் ஆநிரைகள்  பார்த்துவரும்  கோவலனாய்
   மால்எடுத்த  அவதாரம்  மக்கள்தொழும் கோபாலன்
   பால்வந்து  அவன்பாதம் பணிவார்  உளம்மகிழக்

meenavan2

unread,
Dec 14, 2013, 4:23:19 AM12/14/13
to mint...@googlegroups.com

108 வைணவத் திருத்தலங்கள் - தொடர்ச்சி

80.திருவைகுண்டம் (எ)ஸ்ரீவைகுண்டம்

1.கள்ளனாய்ப்  பத்தருக்குக் காட்சிதந்த கார்வண்ணன்
  வெள்ளத்(து)  அரவணையான்  வேதக் கடலனையான்
  கள்ளச்  சகடத்தின் கதைமுடித்த  கோவிந்தன்
  உள்ளதிரு  வைகுண்டம் உவந்தேத்தி வணங்குமினே.

2.படைப்பாளன்  கலசத்தில் பரணிநீர்  கொண்டாட்டப்
  படைப்புக்(கு) உரியமறை பாகத்தை உணர்த்தியவன்
  படப்பாயல் எனவிருந்த பாம்பரசன் குடைபிடிக்கும்
  கடப்பாடு  கொண்டதலம் கண்டேத்திப் பணியுமினே.

3.வள்ளலாய்  வந்தருளும்  வைகுந்த  நாதனாம்
   கள்ளப்  பிரானென்னும்  கருமணியான் பூதேவி
   உள்ளத்தில்  இடம்பிடித்தான்  ஓங்கி  உலகளந்தான்
   தள்ளாது  காப்பான்தன்  தளிரடிகள்  ஏத்துமினே.

4.வண்ணத்  திரும்ங்கை  வைகுந்த வல்லியுடன்
   எண்ணுவார்க்(கு)  அருள்சுரக்கும்  எந்தையிவன்  என்றடியார்
   நண்ணும்  படியான  நாதன்  நமக்கருளும்
   கண்ணன்  திருப்பாதம்  கண்டுதினம்  தொழுதிடுமின்.

5.இவனுடைய  திருமேனி  இங்குசெய்த  ஒருசிற்பி
   தவமுடைய  கண்ணன்  தனிவடிவை மோகித்தே
  அவனிவன்தன்  கன்னத்தில்  ஆசையுடன்  கிள்ளிய்தால்
   இவன்கன்னம்  ஏற்றவடு  தான் நோக்கி  இறைஞ்சுமினே.

மூலவர் -ஸ்ரீவைகுந்த நாதன் - கள்ளப்பிரான்
தாயார் -வைகுந்த வல்லி - பூதேவி

திரு நெல்வேலியில் இருந்து 28.கி.மீ.தொலைவு
திருச்செந்தூர்ச் சாலயில் உள்ளது.

81.திருவரகுண மங்கை

1.வையத்தார்  போற்றும்  வரகுணநல்  மங்கையுளான்
   உய்யத்தான்  விரும்புபவர்  உள்ளத்தான்  அவர்க்கருளும்
   கையைத்தான்  கண்டென்றும்  கண்களிலே  நீர்மல்கப்
   பொய்யற்ற  சடகோபன்  புகழ்வானைத்  தொழுமின்காள்.

2.வெற்றிக்கு  மூலம்  விசயா சனப்பெருமான்
   நற்றாயாம்  தேவகிக்கே  நலம்செய்த மாமாயன்
   உற்றானே  ஆகியிவண்  ஊழ்மாற்றும்  வித்தகனைக்
   கற்றாரே  தொழவம்மின்  கால்தொழுது நலம்பெறுமின்.

3.ஒன்பான் திருப்பதியும்  ஒன்றென்பார்  அடியவர்கள்
   அன்பால்  வரகுண  வல்லியெனும்  அன்னையினைத்
   தன்பால்  வைத்துகந்த தன்னேரில்  கேசவனை
   முன்பே  தொழுதாரை  முன்வந்து  தொழுமின்காள்.

4.சத்தியவான்  தனக்கிங்கே  சாவா  வரம்நல்கி 
   முத்திதரும்  மறைமுதல்வன்  மூவிரண்டோ(டு)  இரண்டெழுத்தை
   நித்தலுமே  நாம்ஓதி  நேசமவன்  பால்வைத்துப்
   பத்தராய்ப்  பணிமின்காள் பாவமது  நீங்கிடுமின்.

5.விண்ணவர்கோன்  இந்திர்னும்  வீழ்ந்து  வணங்குமொரு
   கண்ணன் கோதண்டன்  காகுத்தன்  வனமாலி
   பண்னைக்  குழலூதிப்  பரவசத்தைத் தருகின்ற்
   அண்ணல்  இவனடியை அன்பால்நீர்  வணங்குமினே.

மூலவர் - விசயாசன்ப் பெருமாள்
தாயார் - வைகு ந்தவல்லி
திருநெல்வேலி  மாவட்டத்தில் உளள ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து
கிழ்க்கே 1 மைல்.

காப்பியக்  கவிஞர்.நா.மீனவன்

meenavan2

unread,
Dec 14, 2013, 10:04:55 PM12/14/13
to mint...@googlegroups.com

108 வைணவத் திருத்தலங்கள் - தொடர்ச்சி

82.திருப்புளிங்குடி

1.இந்திரனார்  சாபத்தை  இத்தலத்தில்  போக்கியவன்
   முந்தித்  திருமகளும்  முரண்கொண்ட  பூமகளும்
   வந்தொன்றாய்ச் சேரவே  வைத்திடட்  பூபாலன்
   சிந்தைக்(கு)  இனியநம்  சேவகன்தாள் வணங்குமினே.

2.போற்றும்  இனியதிருப்  புளிங்குடிவாழ்  குலதனத்தைச்
   சேற்றுக்  கமலம்போல்  சிரிக்கின்ற  மலர்மகளை
   நாற்றுவயல்  சூழ்இடமாம்  ந்ல்லருள்சேர்  இத்தலத்தில்
   மாற்றறியாப்  பொன்போல்வான் மாலழகன்  தாள்பணிமின்.

3.மண்ணை  எடுத்துண்டான்  மலையால்  மழைதடுத்தான்
   விண்ணாள்  இந்திரனின்  விருந்துண்டான்  சுக்கிரன்தன்
   கண்ணைக்  குருடாக்கிக்  கலசத்து  நீர்பெற்றான்
   பண்ணும்  பெருமாயப்  பரவசத்தைப்  பாடுமினே.

4.கலிவயலான்  புளிங்குடியான்  கடுவினைக்கு  நஞ்சான
   வலிமையுளான் இந்திரர்க்கு  வாழ்வளித்தான் மலருறையும்
   மெடலியஇடை  மலைமகளை  மேவியே  பயன்பெற்றான்
   ந்லிவினைக்கு  மருந்தான  நாயகனைப்  பணிந்திடுமின்.

5.ஆரமுதாய்  அறபயனாய்  அரவணயின்  மேலிருந்த
   காரழகன்  நன்றுடைய  காசினி  வேந்தனாய்ப்
   பேரழகாய்  எவராலும்  பேசரிய  தத்துவமாய்ச்
   சீரங்கம்  தான்கிடப்பான்  சேவடிகள்  வணங்குமினே.

மூலவர் - காய்சின வேந்தன் (காசினி வேந்தன்)
தாயார் - மலர் மகள் - பூமிப்பிராட்டி

திருவரகுண மங்கையில் இருந்த அரை கிலோ மீட்டர்

meenavan2

unread,
Dec 15, 2013, 2:23:40 AM12/15/13
to mint...@googlegroups.com

108 வைணவத் திருத்தலங்கள் - தொடர்ச்சி

83.திருத்துலைவில்லி மங்கலம்
(இரட்டைத் திருப்பதியில் முதலாவது)

1.துலைவில்லி  மங்கலமாய்த்  தோன்றும்  முதல்தலத்தில்
   தலைவனென  வீற்றிருக்கும்  தனித்தபுகழ்த்  தேவர்பிரான்
   கலையழகு  நாச்சி  கரியதடங்  கண்ணியுடன்
   நிலைபெற்ற  பெருமானை  நெஞ்சகத்தால்  வணங்ககுமினே.

2.கனமரங்கள்  அடர் ந்தபெருங்  காட்டிடையே  அமைகோயில்
   மனமாசு  தனையகற்றும்  மாதவனார்  உறைபதியே
   தனமென்று  கொண்டவர்கள்  தவளவெண்  சங்குடையான்
   வன்மாலி  திருவடிகள்  வ ந்துபணிந்(து) உய்ந்திடுமின்.

3.நாடாளும்  இராகவனாய்  நன்னிரைகள்  மேய்ப்பவனாய்
   காடாளும்  வேணியனாய்க்  கையிலொரு  வில்லோடு
   வீடாளும்  தந்தைவரம்  வெற்றிபெற்க்  கான்போந்தான்
   ஏடாளும்  புகழுடையான்  இணையடிகள்  தொழுதிடுமின்.

4.கையாரும்  சக்கரத்தன்  கவிக்குலத்து வேந்தனெனும்
   எய்யாத புகழுடையன்  எழிற்பகலோன்  திருக்குமரன்
   உய்யவழி  செய்திங்கே  ஊராள  வந்தபிரான்
   மையாரும்  மேனியனை  மாதவனை  வணங்குதுமே.

5.கார்வண்ணன்  எங்கள் கமலத்  தட்ங்கண்ணன்
   ஏர்வண்ணக்  கோல்த்தை  இந்திரர்க்குக் காட்டியவன்
   சீர்வண்ண்ம்   தமிழாலே  செப்பிவைத்தான்  சடகோபன்
   தேர்வண்னச்  சாரதியைத்  தினந்தோறும்  வணங்குமினே.

மூலவர் - தேவர் பிரான்
தாயார் - கருந்தடங்கண்ணி

ஆழ்வார் திரு நகரியில் இருந்து திருச்செந்தூர் செல்லும்
சாலையில் கிழக்கே  2 மைல்.
தொலைவில் உள்ள கோமல் என்னும் இடத்தில் இறங்கித்
தாமிரபரணி ஆற்றைக் கடந்து இத்தலத்தை அடையலாம்.

Jana Iyengar

unread,
Dec 15, 2013, 4:56:57 AM12/15/13
to mintamil
அன்புக்கவிஞர் நா மீ அவர்களே 

திவ்யதேசங்கள் 69ம் 78ம் காணப்பெற்றிலேனே!

அடியேன் ஜனா ராமானுஜ தாசன் 


2013/12/15 meenavan2 <meen...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
Jana

meenavan2

unread,
Dec 16, 2013, 4:25:04 AM12/16/13
to mint...@googlegroups.com

69.திருவல்லவாழ்

1.திருவல்ல  வாழ்என்னும்  தெய்வத்  திருப்பதியில்
   திருவாழும்  மார்பன்  என்ததிக்ழும்  கோலப்பிரான்
   திருமகளாம்  செல்வத் திருக்கொழுந்து  நாச்சியுடன்
   அருள்கின்றான்  ஆதலினால்  அடியவரே  தொழவம்மின்.

2.நம்மாழ்வார் திருமங்கை  நலமுரைக்கும்  பாசுரத்தில்
   பெம்மானாம்  திருநெடுமால்  பெரிதும்  மனமகிழ் ந்து
   செம்மானாம்  திருமகளைச்  சீர்பூத்த மார்பேற்று
   நம்மைநிதம்  காப்பானை  நாளும்  வணங்குதுமே.

3.முரல்கின்ற வண்டினங்கள்  முன்வந்து  தேனருந்தும்
   மரகதம்போல்  பச்சிலைகள்  மருவுமணிப்  பூஞ்சோலை
   இருந்து  விளையாடும்  திருவல்ல வாழ்பதியில்
   பொருந்தும்  திருமாலைப்  பொழுதெல்லாம்  வழிபடுமின்.

4.பதிவிரதை தவம்கண்டு  பாழ்செய்த அசுரனையே
   வதைசெய்த  கண்ணன்வாழ்  திருவல்ல  வாழ்ஒன்றே
   கதியென்று  பணிவார்  கருணைமால்  அருள்பெறுவார்
   துதித்துய்ய  வேண்டுமெனில்  தொழுதுய்ய  வந்திடுமின்.

5.வானார்ந்த  கமுகுடனே  வண்டொலிசெய் மல்லிகையும்
   தேனார்ந்த  பலவும்  திகட்டுசுவை  மாங்கனியும்
   ஆனாத  அரம்பபையும்  அழகூட்டும்  திருத்தலத்தான்
   மீனாய்ப்  பிறந்தானின்  மேன்மைசொலி  வண்ங்குதுமே.

மூலவர் - திருவாழ் மார்பன் - கோல்ப்பிரான்
தாயார் - செல்வத் திருக்கொழுந்து  நாச்சியார்

கொல்லம் வழியே எர்ணாகுளம் செல்லும் புகைவண்டி ஏறித்
திருவல்லாப் புகைவண்டி நிலையத்தில் இறங்கிச் சுமார் 4,கி,மீ
தொலைவு .புகைவண்டி நிலையத்தில் இருந்து செல்லப் பேருந்து
வசதி உண்டு.

குறிப்பு - 68 க்குப்பின் விட்டுப் போனது.அதன்பின் சேர்த்துக் கொள்ளவும்
மீனவன்

பாண்டி நாட்டுத் திருத்தலங்கள்

78.திருக்குறுங்குடி

1.சிற்பத்தின்  அழ்குபொலி  கின்றதிருக் குறுங்குடியான்
   தெற்குத்  திருவிடமாம்  திருக்குறுங்  குடியிதுவே
   பொற்புடைய  திருமங்கை  திருநாடு  புகுந்தஇடம்
   அற்புத்ஞ்செய்  வடுகநம்பி  அவன்அடிகள் சேருமினே.

2.பன்றியுருக்  கொண்ட  பரந்தாமன்  உருச்சுருக்கி
   நன்றறியும்  தேவிநற்  குறுங்குடி  வல்லியுடன்
   நின்றதோர் ந்ம்பியான் நெடியபுகழ் வ்டுகநம்பி
   நின்றிட்ட  குறுங்குடியின்  நிலந்தொட்டு  வனங்குமினே.

3.நம்பாடு  வான்என்னும்  நலமிக்க கீழ்க்குலத்தோன்
   தம்பாட்டில்  பாடிவைத்த த்னித்த்சீர்க்  கைசிகப்பண்
   எம்பெருமான்  உளமுருக்கத்  திருநாட்டை  இனிதருளும்
   நம்பியாம்  மாலவன்தாள்  நயந்துதினம்  பணிகுவமே

4.அனந்தபுரப். பெம்மானும்  அன்(று)உவணன்  தனையழைத்தே
   எனைவணங்கும்  அடியனாம் இராமா  நுசன்தன்னை
   இனியபுகழ்க்  குறுங்குடியில்  இற்க்கிவிட ஆணையிட்டார்
   அனையபுகழ்ப்  பெருமானை  அன்புடன்நீர்  வணங்குமினே.

5.உதயமார்த்  தாண்டனார்  உண்டாக்கு  பநதரின்கீழ்
   மதிராம  தேவன்செய்  மணித்தவிசில்  வீற்றிருந்து
   கதியளிக்கும்  அம்பியின்தாள்  கருவினையைப்  போக்குவதால்
   விதியழிப்பான்  திருவடியை விரும்பிநீர்  பணியுமினே.

மூலவர் - நின்ற நம்பி - குறுங்குடி நம்பி - வடுக நம்பி
தாயார் = குறுங்குடி வல்லி
திருநெவேலியில் இருந்தும் நாகர் கோயிலில் இருந்தும்  பேருந்து
வசதி உண்டு.

77 இன் கீழ்ச் சேர்த்துக் கொள்க.

காப்பியக் கவிஞர்.நா,மீனவன்

meenavan2

unread,
Dec 16, 2013, 5:33:44 AM12/16/13
to mint...@googlegroups.com

108 வைணவத் திருத்தலங்கள் - தொடர்ச்சி

83.திருத்துலைவில்லி மங்கலம்
(இரட்டைத் திருப்பதியில் முதலாவது)

Jana Iyengar

unread,
Dec 16, 2013, 7:09:10 AM12/16/13
to mintamil

இரட்டை திருப்பதியான திருத்துலை வில்லிமங்களம் [83-வது] ஈறாக எல்லாமும் கிடைத்தன. விட்டுப்போன இரண்டையும் உடனேயே அனுப்பிவைத்ததற்கு கோடி நமஸ்காரங்கள். வாழ்க.
அடியேன் ஜனா ராமானுஜ தாசன் 


2013/12/16 meenavan2 <meen...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
Jana
Reply all
Reply to author
Forward
0 new messages