குறிஞ்சிப்பாட்டில் ஒரு குறிப்பு

282 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Jun 8, 2008, 5:28:57 PM6/8/08
to minT...@googlegroups.com
பத்துப்பாட்டுள் ஒன்று குறிஞ்சிப்பாட்டு. "ஆரிய ஆரசன் பிரகத்தனைத் தமிழறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு" எனும் சொற்றொடர் அதன் இறுதியில் காணப்படுகிறது.
 
இச்சொற்றொடரின் பொருள் யாது?
 
கபிலர் அகர முதல் னகர இறுதியாகவுள்ள தமிழ் எழுத்து முப்பதையும் கற்பித்தற்கு இதனைப் பாடினார் எனக் கொள்வதா?
 
அன்றி
 
ஆரிய ஆரசனைத் தமிழில் விருப்பமுறச்செய்யவே இதனைப் பாடினார் எனக் கருதுவதா?
 
தமிழில் விருப்பமுறச் செய்யவே இதனைப் பாடினார் என்று கொள்வதே பொருந்தும். "தமிழ் அறிவித்தற்கு" என்ற குறிப்பும் இதனையே வலியுறுத்தும். அவ்வரசன் தமிழ் மொழியில் விருப்பமுற வேண்டுமாயின், ஆரிய மொழியில் இல்லாதச் சிறப்பைக் கூறக் கபிலர் கடமைப்பட்டுள்ளார். இல்லையெனில், "எம் ஆரிய மொழியிலும் இஃதுண்டு" எனத் தமிழை அவன் தள்ளியிருப்பான்; போற்றியிருக்கமாட்டான். இதனால், ஆரிய மொழியில் இல்லாத ஒன்றை, தமிழுக்கே சிறப்பாக வாய்ந்த ஒன்றை, கபிலர் குறிஞ்சிப்பாட்டுள் பாடியிருக்க வேண்டும். எனவே, குறிஞ்சிப்பாட்டில் எதைக் கூறியுள்ளனரோ அதையே தமிழுக்குச் சிறந்தது எனக் கொள்ளலாம்.
 
அங்கனமாயின், குறிஞ்சிப்பாட்டுக் கூறுவது யாது?
 
செவிலித்தாய் தன் மகளது மெலிவைக் கண்டு வருந்துகிறாள். வெறியாடும் வேலனைக் கேட்கிறாள். அப்பொழுது தோழி செவிலித்தாயிடம் தம் ஒழுக்கத்திற்கும் பெண்மைக்கும் குறைவு வராமல் பீடிகையுடன் கூறுகிறாள்.
 
"தாயே நீயோ நோயை அறியாது மருந்தைத் தேடுகிறாய். தலைவி ஆராய்ந்து தெரிந்த கணவனைப் பற்றி நீயறிக. பெற்றோர் இசைந்தால் மணப்பாள்; இல்லையேல் அடுத்த பிறவியிலேனும் அவனை அடைவாள்."
 
மேலும் கேட்பாயாக: "தினைப்புனத்தைக் காத்துப் பொழுது சாய்ந்ததும் வருவீர்,"என்று அன்றொரு நாள் எம்மை அனுப்பினை. நாங்களும் ஆடிப்பாடி மரநிழலில் அமர்ந்திருக்க, ஓர் இளைஞன் வந்தான். அவனது வேட்டை நாய்கள் எங்களைக் கண்டு குரைத்தன. நடுங்கி வேறிடம் விரைந்தோம். எங்களைத் தேற்றி, அவன் "என் அம்புப்பட்ட யானை இவ்வழி வந்ததோ," என வினவினான். நாங்களோ ஒன்றும் பேசாது இருந்தோம். அதற்கு மிக நொந்தான். அங்ஙனம் இருக்க, எங்களை நோக்கிக் களிறு ஒன்று பிளிறி வந்தது. உயிர்தப்பும் வழியறியாது நாணத்தை மறந்து அவன் பக்கம் ஒடுங்கி நின்றோம். ஓர் அம்பு எய்து அதனைத் துரத்திவிட்டான். பின்னர் நீராடச் சென்றோம். அருவியில் கால் வழுக்கி நீர் இழுத்துச் செல்ல அவன் விரைந்து வந்து எங்களைக் காப்பாற்றி தலைவியின் நெற்றியை வருடி அபயமளித்துத் தழுவினான். "உன்னை மணந்து விருந்துண்டெஞ்சிய மிச்சிலை மிசையும் வாழ்க்கையுடையேனாவேன்," என்று கூறி முருகன் மீது ஆணையிட்டு மாலைவரை கூடியிருந்து "விரைவில் மணப்பேன்; மனம் வருந்தாதே,"என்று கூறி, ஊர் எல்லையில் எங்களை விட்டுப் பிரிந்தான்.
 
அன்று முதல் "நாளும் இரவு வந்து போகிறான். அவன் வரும் வழியின் கொடுமையை அஞ்சி இவளோ நாளும் கண்ணீர் வடித்து மெலிகின்றாள்," எனக் குறிஞ்சிப்பாட்டு முடிகின்றது. காதல் வாழ்க்கையைக் கூறும் அகத்திைைணயைக் குறிஞ்சிப்பாட்டு சிறப்பிக்கிறது.
 
காதல் வாழ்க்கை சிற்றின்பத்தைப் பெருக்குவதன்றோ? அதில் எச்சிறப்பிருக்கிறது?
 
பெருமைப்பட எவ்வியல்பிருக்கிறது? எனக் கேட்கலாம்.
 
காதல் வாழ்க்கையை, மயக்கத்தைப் பெருக்கும் வாழ்க்கையாகத் தமிழர் கருதவில்லை. இருவர் நடத்தப்போகும் அறவாழ்க்கையின் தொடக்கமாகக் கருதினர்.
 
ஒன்றை ஒன்று விரும்பா இரு உள்ளங்கள் இயைந்து அறம் செய்ய முடியுமா?
 
பிணக்கமுற்ற கணவன் மனைவியருக்கு அற நினைவு தோன்றுமா?
 
பிறர் துயருக்கு இரங்கும் மன நெகிழ்வுதான் ஏற்படுமா?
 
ஆதலால், ஒன்றிய உள்ளங்களுக்கே அற நினைவு பிறக்கும். பிறர் துயருக்கிரங்கும் இரக்கம் தோன்றும்.
 
  • பணத்தால் சில உள்ளங்கள் கூடும். ஆனால், அவை ஒன்றி இயைந்து நன்கு வாழ்ந்ததாக இதுவரை மனித வரலாற்றில் ஒரு சான்றில்லை.
  • அழகால் சில உள்ளங்கள் சேரும். அங்ஙனம் சேர்ந்த உள்ளங்களும், அவ்வழகு கெட்டதும் தாமே பிரிந்துவிடுகின்றன.

அழகு நிலையானதன்று. நிலையானது காதலே. ஒன்றுபட்ட உள்ளங்களை அக்காதல்தான் என்றென்றும் இணைபிரியாது இருக்கச் செய்யமுடியும். அது எங்ஙனம் முடியுமென வினவலாம்.

 
பதினாரு வயதினதான தலைவன், இறுமாப்புடன் பிற உயிர்களைக் கொல்வேன் என்னும் செருக்கோடு அம்பும் வில்லும் கையிற்கொண்டு திரிகின்றான். அவனுக்குக் கவலையில்லை. பிறர் துயர் யாதென அறியான். அங்ஙனம் வருபவன் தலைவியைத் தற்செயலாகக் காண்கிறான். மனம் அவளிடம் பதிகின்றது. அவளுக்காகவே தான் வாழ்வதாக நினைக்கிறான். தன் துன்பத்தையும் பொருட்படுத்தாது காடு நடந்து இரவில் அவள் துயர் துடைக்க வருகிறான். அவளும் அவன் பொருட்டு வாடுகிறாள். எனவே காதல் காரணமாக இருவரும் பிறர் நலமே விரும்புகின்றனர்; மணமாகின்றது; குழந்தை பிறக்கின்றது. இப்பொழுது இவ்வன்பு, குழந்தைமீது பரவுகின்றது.
 
குழந்தை நோவப் பொறுக்கும் தாய் தந்தையருண்டோ?
 
இங்ஙனம் தன் மனைவி மக்கள் மீது கொண்ட அன்பு உற்றார், உறவினர், அயலார் எனும் இவர்கள் மீதும் விரிந்து பரவுகிறது.
 
கோவலனைப் பிரிந்த கண்ணகி வருந்துகிறாள். தன் கணவனோடு கூடலின்பம் பெற முடியவில்லையே என்பதற்கன்று; பிறமனை நயந்துறைகிறானே என்பதற்குமன்று.
 
"அறவோர்க்களித்தலும் அந்தணர் ஓம்பலும் துறவோர்க்கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர்கோடலும்," இழந்தேன் என வருந்துகிறாள்.
 
அன்பு பெருக, அதன் குழந்தையாகிய அருள் வளருகிறது.
 
அத்தகைய அன்புடைய இல்லறத்தான் இன்சொற் பேசாதிருத்தல் இயலுமோ?
 
நடுநிலையில் நில்லாதிருத்தல் ஒல்லுமோ?
 
செய்நன்றியும், பொறுமையும், தீவினையச்சமும், ஒழுக்கமும் இல்லாதிருத்தல் முடியுமோ?
 
இவ்வுயர் நிலையில் மனிதனை ஆக்குவது காதல்தானே?
 
தலைவனது அன்பு, தலைவியின் அன்பு, அறஞ்செய்தல் ஆகிய பண்புகளைச் சிறப்பாகக் கொண்ட இல்லறத்தையே குறிஞ்சிப்பாட்டும் தெளிவாக்குகின்றது.
 
திருக்குறளும்,
 
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது (45)

எனக் குறிஞ்சிப்பாட்டின் கருத்தையே வற்புறுத்திக் கூறுகின்றது. திருக்குறள் இல்லறத்தின் பண்பைக் கூறுவதோடு நில்லாது மற்றுள்ள துறவறத்தையும் கூறி இவை இரண்டுள் எது மேல் என்றும் ஆராய்கிறது.

 
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று (49)

என்னும் பாவில் அறம் என்பது இல்வாழ்க்கை என்றும், இல்லறமே துறவறத்தின் மேலானது என்றும் ஐயமறக் கூறிப்போந்தார். மேலும்,

 
அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவ தெவன் (46)
 
ஆற்றி னொழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரி னோன்மை யுடைத்து (48)
 
இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான்
முயல்வாரு ளெல்லாந் தலை (47)
 
துறந்தாரிற் றூய்மை யுடைய ரிறந்தாரிவா
யின்னாச்சொ னோற்கிற் பவர் (159)
 
உண்ணாது நோற்பார் பெரியார் பிறர்சொல்லு
மின்னாச்சொ னோற்பாரிற் பின் (160)
 
ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை
மாற்றுவா பாற்றலிற் பின் (225)
 
என்றும், இவை போன்ற பல குறட்பாக்களிலும் இல்லறம், துறவறம் எனும் இரு அறங்களின் நிறைகுறைகளை ஆராய்ந்து வள்ளுவர் அறுதியிடுகிறார்.
 
இல்லறமே சிறந்தது எனும் முடிவையே இவற்றாலும் வலியுறுத்துகிறார்.
 
மிகக் கடினமான துறவறத்திற்கு முதன்மை தராது,
 
திருவள்ளுவர் இல்லறத்திற்கு முதன்மைத் தருவானேன்?
 
பதினைந்தாம் நூற்றாண்டிலே மேல் நாட்டில் நடந்த மதப்புரட்சி இதனைத் தெளிவாக்கும். மேல் நாட்டில் கத்தோலிக்க மதமே அன்று பரவியிருந்தது. போப்பாண்டவரே எல்லாக் கிருஸ்துவர்களுக்கும் மதாசாரியார். அவர் கொள்கைப்படி தூய கிருஸ்துவர்கள், புலனையடக்கி இறைவனடிக்கே தம்மைச் சமர்ப்பிக்க வேண்டும்.

புலன்களை அடக்க அடக்கத்தான் மனத்தெளிவு ஏற்பட்டுத் தெய்வச் சிந்தனை தோன்றும் என்பது அவர்கள் கொள்கை. புலன்கள் கட்டு மீறிச் செல்லுங்கால் தடுத்து நிறுத்த ஒவ்வொரு குருவும் தனக்குத் தரப்பட்ட கைச்சவுக்கால் தேகத்தில் அடிப்பாராம். ஆனால் இக்கொள்கை ஏட்டளவில் இருந்ததேயொழிய நடைமுறையில் வரவில்லை.

 
இந்நிலையில் ஜெர்மானிய நாட்டில் மார்ட்டின் லூதர் என்பார் குருவாக இருந்து புலனை அடக்கி தேகத்தை வதைத்து தெய்வச் சாதனையில் மூழ்க முற்பட்டார். முற்பட்ட அவர் முதலில் கண்ட உண்மை யாதெனில் புலனை வாட்ட வாட்ட மனத்தெளிவு கலையும் என்பதே. இவ்வுண்மையை உணர்ந்த அவர் மனத்தாலும், உடலாலும் இயற்கைக்கு மாறாக நடத்தல் கூடாது என்னும் முடிவை அடிப்படையாகக்கொண்ட பிராட்டஸ்டண்டு மதத்தைத் தோற்றுவித்தார். அவர் மதத்திலுள்ள எல்லா குருக்களையும் மணக்கக் கட்டளையிட்டார். தானும் மணந்துகொண்டார்.
 
மார்ட்டின் லூதர் பிற்காலத்தில் என்ன குறையைத் துறவறத்தில் கண்டாரோ அதனையே திருவள்ளுவர்,
 
"மனத்தது மாசாக மாண்டார் நீராடி,
 மறைந்தொழுகும் மாந்தார் பலர்." (278)
 
எனத் துறவறத்தைப் பற்றிக்கூறி,
 
"இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
 முயல்வாருள் எல்லாந்தலை." (47)
 
என்று இல்லறத்தைப் புகழ்கிறார்.
 
முனைவர் வ.அய். சுப்ரமணியம் - முன்னாள் துணைவேந்தர் - தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்
நன்றி: தினமணி

Narayanan Kannan

unread,
Jun 8, 2008, 8:25:00 PM6/8/08
to minT...@googlegroups.com
How to call a "Spade", a Spade!

உண்மையில் ஆரிய அரசனுக்கு எதைக் காட்டுகிறார் கபிலர்?

மிகவும் யோசிக்க வைக்கும் வரிகள், பாடல்.

கலாச்சாரம் என்று பார்க்கும் போது இன்று கிழக்கையும் மேற்கையும் பிரிக்க
வைப்பது மனித உறவு சார்ந்த விழுமியங்கள்தான்.

கிழக்கில் "திருமணம் என்பதே" இரு மானிடர்களுக்குள் ஏற்படும் உடலுறவை
அங்கீகரிக்கிறது. அதற்கு முன் ஏற்படும் உறவை "கூடா ஒழுக்கம்" என்று
இகழ்கிறது. பெண்களுக்கு அதுவே பெரும் தடைக்கற்களாக அமைகிறது. நமது
"கற்பு" என்பது திருமணத்திற்குப் பின்பே அதிகம் வலியுறுத்தப்படுகிறது.

ஆனால் மேலை உலகில் மண உறவு என்பது மிகவும் ஆழமாக யோசித்த பின்,
இத்திருமணம் உண்மையில் நிற்குமா? எனப் பல ஆண்டுகள் யோசித்த பின்பே
நடைபெறுகிறது. இவ்வளவு யோசித்தும் உறவு பாதிக்கப்படும் போது மண விலக்கு
என்பதும் ஒழுங்கு படுத்தப்பட்டிருக்கிறது. இது செயல்முறைப் படுத்தப்பட
வேண்டுமெனில் "திருமணத்திற்கு முன்பு கலவி" ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
Sexual compatibility என்பதை நம்மவர் ரஜ்ஜுப் பொருத்தம் என்பர். நாம்
வெறும் ஜாதகத்தை வைத்துக் கணித்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள்
சுதந்திரப் பாற்சேர்க்கையை நடைமுறையில் வைத்திருக்கின்றனர்.

கபிலர் காட்டும் காட்சியில், காதலி, காதலனைக் காண்கிறாள். கண்டதும்
காதல். உடனே உடலுறவு வைத்துக் கொள்கின்றனர். பின் அவளைக் காணத் தினமும்
"இரவில்" வருகின்றான் அவன். அப்பட்டமாக கல்யாணமாகாதவர் உடலுறவு கொள்ளலாம்
என்று காட்டுகிறது பாடல். இதுதான் தமிழர் சிறப்பு அம்சம் என்று கபிலர்
காட்டுகிறார் என்றால், ஆரிய வம்சத்தில் இப்பழக்கம் இல்லாமல் இருந்திருக்க
வேண்டும். எப்படி இப்போது நாம் மேற்குலகை advanced civilization என்று
காண்கிறோமோ, அது போல் பிரகத்தனுக்கு ஒரு முற்போக்கு சமூகத்தைக் காட்ட
விழைகிறார் கபிலர்! என்று கொள்ளலாமா?

இப்போது பிரச்சனைக்குள்ளாகி முற்போக்கெனக் கருத்தப்படும் ஒருபாற்
சேர்க்கை, பிற கூடா ஒழுங்குகள் நமது 'திணை' கோட்பாட்டில் சங்க காலத்தில்
இனம் காணப்பட்டிருக்கின்றன.

அப்படியெனில் சங்கச் சமூகம் என்பது ஒரு இயல்பான, முற்போக்கு சமூகமாக
இருந்திருக்கிறது. பின்னால் ஆரிய விழுமியங்களான "தர்மம்" (அறம்) என்பது
சங்கத் தமிழர்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஜைன, பௌத்த சமயங்களில்
மென்னியை முறிக்கும் வண்ணம் கெடுபிடிக்குள்ளாகியிருக்கிறது. அன்று
ஏற்பட்ட கெடுபிடியிலிருந்து தமிழகம் இன்று வரை மீளவில்லை என்பதே உண்மை.

தமிழகம் முற்போக்கு விழுமியங்களைக் கணடுபிடித்து காணாமல்
விட்டிருக்கிறது, பக்தியைக் கண்டு பிடித்து காற்றில் விட்டிருக்கிறது.
இப்படி இருப்பதை விட இழந்தவை அதிகம் என்று தோன்றுகிறது. இவ்வாசிரியர் கூட
சங்கத்தை முழுமையாய்ப் புரிந்து கொண்டு கட்டுரை எழுதவில்லை. கட்டுப்பட்ட
ஒரு மனோநிலையில் இருந்து கொண்டு எழுதுவதாலேயே அதிகம் 'இல்லறம்-துறவறம்'
என்று மழுப்ப வேண்டியுள்ளது!!

How to call a "Spade", a Spade?

கண்ணன்


2008/6/9 Kannan Natarajan <thar...@gmail.com>:

இரவா

unread,
Jun 9, 2008, 12:57:43 AM6/9/08
to minT...@googlegroups.com
கபிலர் காட்டும் காட்சியில், காதலி, காதலனைக் காண்கிறாள். கண்டதும் காதல்.

கண்டதும் காதல் என்றால், அதற்குமுன் அப்பெண் ஆடவர் எவரையும்
பார்க்கவில்லை என்று பொருள்.

உடனே உடலுறவு வைத்துக் கொள்கின்றனர்.

சங்கத்துப் பெண்கள் திருமணத்திற்கு முன் உடலுறவு வைத்திருந்தார்கள்
என்பதற்கு என்ன சான்று?

பின் அவளைக் காணத் தினமும் "இரவில்" வருகின்றான் அவன்.

இன்றைய கிராமத்திலேயே புதியவர் ஒருவர் கிராமத்துக்குள் வந்து சென்றார்
அவர் யார் எதற்கு எவரைப் பார்க்க வந்தால் என்றெல்லாம் அறிந்துவிடுவார்.
அப்படியிருக்க, குழுக்களாக வாழ்ந்து வந்த பழந்தமிழகத்தில் காதலர் இருவர்
பகலில் சந்திப்பது ஏலாதென்பதால் இரவில் சந்தித்து வந்தனர். அதுவும்
அனைவரும் உறங்கிய பின்னரே சந்தித்தனர். அது காதலின் செயல். அதனை உடலுறவு
கொள்ளவே சந்தித்தார்கள் என்று கூறுவது சங்க மரபு அறியாமல் கூறுவதாகும்.

அப்பட்டமாக கல்யாணமாகாதவர் உடலுறவு கொள்ளலாம் என்று காட்டுகிறது பாடல்.
இதுதான் தமிழர் சிறப்பு அம்சம் என்று கபிலர் காட்டுகிறார் என்றால்,

முனைவர் வ.அய்.சுப்பிரமணியம், மிகச் சிறந்த தமிழறிஞர்களுள் ஒருவர். அவர்
எதையும் நன்கு ஆராய்ந்து கூறும் பண்பினர்! என்பதால், "பதினாரு வயதினதான


தலைவன், இறுமாப்புடன் பிற உயிர்களைக் கொல்வேன் என்னும் செருக்கோடு

அம்பும் வில்லும் கையிற்கொண்டு திரிகின்றான்" என்று குறிப்பிடுகிறார்.
பதினாரு வயதுடைய ஒருவன் பண்ணிரண்டு வயதுடைய பெண்ணை புணர்ந்தான் என்று
இக்காலத்திலே கேட்பது அறிது. அவ்வாறிருக்க பண்பாட்டுக் களமாக விளங்கிய
பழந்தமிழகத்தில், காதலர்கள் உடலுறவு கொண்டார்கள் என்பது தெளிவாகாது.

ஆரிய வம்சத்தில் இப்பழக்கம் இல்லாமல் இருந்திருக்க வேண்டும்.

ஆரிய வம்சத்தில் காதலர்கள் உடலுறவு கொள்வது இல்லாதிருக்க வேண்டும் என்று
கற்பனை செய்யாதீர்கள். ஆரியர் பழக்கம் எப்படிப் பட்டது என்பதற்குச்
சான்றாகத் தொல்காப்பியச் சூத்திரம் இருக்கிறது. ஆரியர்களின் எண்வகைத்
திருமணமுறையில் காதலிக்காமல் வலிந்து ஒரு பெண்ணைப் புணரும் வழக்கம்
ஆரியருடையது! என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எப்படி இப்போது நாம் மேற்குலகை advanced civilization என்று காண்கிறோமோ,
அது போல் பிரகத்தனுக்கு ஒரு முற்போக்கு சமூகத்தைக் காட்ட விழைகிறார்
கபிலர்! என்று கொள்ளலாமா?

கி.மு.இரண்டாம் நூற்றாண்டளவில் உலகில் எந்த நாட்டுப் பண்பாடும் தமிழர்
பண்பாட்டைப் போன்று ஒழுக்கம் நிறைந்ததாக இல்லை. அதுவும் ஆரியர்
பண்பாட்டில் ஒழுக்கம் என்பதே இழுக்காக இருந்துள்ளது! என்பதற்குப் பெரிய
புராணம் சான்று.

ஆக, சங்க காலத்தைப் பற்றிய மதிப்பீடு செய்யுமுன் சங்க கால மரபையும்
பண்பாட்டையும் ஆழ்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.


2008/6/9, Narayanan Kannan <nka...@gmail.com>:


--
இருக்கும் வரை தமிழ் அணையில்
அன்புடன்
இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com

vj kumar

unread,
Jun 9, 2008, 1:46:55 AM6/9/08
to minT...@googlegroups.com
hi,

Currently travelling but this topic was of great interest, i read
about this in a old book. i couldnt get to type the reference verses
in tamil.

Home life among the tamils in the sangam age.
by K. Gnanambal

Such an union' brought about by divine ordinance or
pal as the Tamilians called it, was not mere courtship.
It was union in the full sense of the term and was considered
quite legal. The Tamilian society accepted it as a natural
union. There was no need for sacrificial rites or priests
or mantras to make the union valid in the eyes of the
public. Nature, the primary teacher of humanity, taught
them where true love existed. Without the sophistry born
out of lengthy considerations of sin and propriety their hearts
flowed out, as water seeks its level and united in the bliss.
ful union of youth and love. This first union where Nature
waa their officiating priest, birds their musicians, and trees
and hills their witnesses, was called '
lyarkai Punarchi '
natural consummation. What more is needed to affirm
this event \ Their security lay in the hills, in the birds
that chirped by, in the smiling streamlets and the glittering
stars which had winked at them.

Asked by her maid whowere all with her at her union, she says quite innocently :
" While I was playing with my maids on the shore, he
came with his chariot and chariot-driver, spoke words
weet as honey and wooed and left me thereafter. Who
then coud have been the witnesses of our union except the
sands, talai plants, and birds ?" l

This most natural form of union was not treated as a
youthful frivolity. It was as indissoluble as any other
union preceded by ceremonial rites. The maidens of the
Tamil land believed implicitly in its validity.* None of the
law-givers either Aryan or Tamilian have questioned its
legality. Tholljappiam says that it is the form of union
formed by love.

In Kuruntogai 366 the maid while explaining to the
foster-mother the love episode of her young mistress, says,
that it is not for them to judge the propriety of her actions
for which Fate alone could be held responsible/' The
passion and steadfastness of youthful and maidenly love
have always been the admiration of poets ; for, one of them
says
* could any one understand the mystery of her love ?
Like a tender stalk holding the heavy fruit her frail body
cherishes an immense love.'

This natural union which secured each other more
strongly than man-made law could, formed the theme of
Tamil poets throughout.

They called this phase of life as
* aham ' or subjective life and divided it into various phases
called ' turais '. It would be a valuable study if we could
know the origin of these turai.

even wonders whether the companion would follow her if
by any chance she were to be carried away by the current.
Some might have been
based on remote incidents of life while others might have
sprung from a vivid imagination combined with legend.
The first of these turais was, where the man after seeing
the girl and drawn to her by irresistible love, desires to
converse with her. He cannot in ordinary decency ask who
she is. He has to approach her in a manner that would
not offend her inherent delicacy or modesty. Therefore,
being a hunter, he goes to her companion and enquires
about the missed game ; or sometimes it so happens that
fate is partial to him. The girls, while bathing in the
ponds or rivers slip and he steps in and saves them and
thus contracts friendship. Sometimes his hunting dogs
may frighten the girl and drive her into his arms. 1 In all
These

It is this close association that prompts the man to seek
the help of the maid in his love adventure. He communicates
to her the cause of his malady. Often the maid
sympathised with him and informed her mistress about the
lover who was pining away ' heaving sighs like a furnace*.
The girl in all her virgin pride would not readily listen to
her friend. So the maid invented her own ways and'means
to meet the affair. Sometimes she might entertain a
suspicion about her friend's apparently innocent looks-
One maid said very naively to her young mistress,
' Look
here, thou with eyes like a blue lotus ! A man dressed
like a hunter with wreaths and bow used to pass by me
often as if he were looking for the foot-prints of some
missed game. He would never utter a word but his looks
betrayed his grief ;
for my

open my eyes. For I knew that the moment I opened my
eyes, he would release his hold lest some prowler should
witness the scene. Such is his decorum l'V Hearing this
it was quite probable that the young mistress would blush
if she had been herself guilty of such an act. Often, these
tricks of the maid were of no avail to bring out the mind of
the girl. As a final effort, she would ask the girl to come
and worship the crescent moon.2 From the day of her
choice, her husband becomes her god to a Tamilian girl.
His deity alone would she worship (cf. ufT^^^eS 15). In
such circumstances the girl could do nothing but refuse to
worship the moon. The maid has thus triumphed in learning
the truth. After this, the role of the maid becomes a
very important one. She has to maKe the bond valid,
otherwise it would be a shortlived happiness for the girl.
The mother and foster-mother and above all the scandalmongers
of the village had to be counted upon and this
made it imperative that the movements of the lovers should
be closely guarded and kept secret-
The maid now enters upon her duty of acting as an
intermediary between the lovers. Often the man would
bring a leaf dress and ask her to give it to her mistress3
. If
it was accepted by the maid, he felt sure that his suit was
welcome and that she would actively help him. Sometimes
the maid would refuse to take the dress simply in fun and
say "that these are not the kinds of leaves and flowers that
are common in our village. Won't our companions laugh
at us if we are to wear this new kind of leaf dress ? So
please take away your leaf dress."4 Acceptance was a form
of open acknowledgement of his love. The maid might not

have been an active agent in the first meeting of the lovers
but in the succeeding meetings she had to play the principal
part : it was she who arranged the hour and place for the
meeting of the lovers. The lovers often met and spent
their time in swimming and wandering among the groves
and hill-sides or bathing in the sea. 1 The maid seldom
joined in these pleasures. The tongue of scandal never
stopped wagging. Somehow people observed with curiosity
the sparkling eyes of the girl and her developing physique.
They were inquisitive to learn the cause of the stranger's
frequent visits to the village.
1 The maid fearing
exposure would ask him to change the time of his visit and
come during nights. Those nocturnal meetings had to be
in the proximity of the girl's house.5 Even some casual
slip might make the mother question the girl's movements.
Then it became necessary for the maid to exercise her wits
and save her friend : for in one instance the mother woke up
on account of the disturbance caused by the lovers, and
asked the maid whether she saw or heard anyone moving.
The maid, in all innocence, said,
u how could you think so,
mother? You know there are some supernatural beings in
these hills who assume the form of some of our beloved
ones and visit us. You must have seen one of
them ".* Even with all the help of the maid, this secret
meeting could not last for more than two months. When
she found that the man was delaying their marriage, she
would ask him, of course, in an indirect manner, to stop hi&
visits and make arrangements for the marriage. Sometimes
it might also happen that the mother noticing the

altered looks of the girl or hearing some gossip might have
kept her closely guarded in the house. In this circumstance
also, the maid had to implore the man to go and ask the
girl's parents for her hand. These meetings were known
as Pakar Kuri and Iravukkuri (meeting by day ; meeting
by night).

We get a beautiful picture of the gossip-mongers or
women of hell (u&>inuu Queasft^i) as the girl called them,
standing in the street talking in whispers. They exchanged
significant glances with their fingers on their noses, wondering
at the audacity of the girl. They dared not talk
openly because of the girl's status. She belonged to a great
family.
1
Occasionally some one bolder than the rest would voice
her duspicion quite loudly and it would reach the mother
who would then restrict her daughter's movements and
make her virtually a prisoner. The days following this
confinement were very bitter for the girl and her maid and
the latter had to run hither and thither, consoling the weeping
girl, and imploring the sluggish lover to hurry up and
marry her

Tthamizth Tthenee

unread,
Jun 9, 2008, 3:25:36 AM6/9/08
to minT...@googlegroups.com
அன்புள்ள நண்பர்களே
அந்தக் காலத்திலேயே பால்ய உடல் உறவு இருந்திருக்கிறது என்பதற்கு சான்றுகள் இருக்கிறதா என்று ஆராயாமல் ஒரு முடிவுக்கு வர முடியாது
ஆனனல் அந்தக் காலத்தில் சாத்திரங்களை மதித்தனர், என்பது திண்ணம்
 
சாத்திரப் ப்ராகாரமே
 
ஒரு பெண் ருதுவாகி திருமணம் செய்யும் ஆசை வந்து விட்டால் அந்தப் பெண்ணுக்கு
குறிப்பிட்ட காலவரைக்குள் அந்த தகப்பனால்
திருமணம் செய்து வைக்க முடியவில்லை என்றால், அந்தப் பெண் அவள் விரும்பியவனுடன் கூடலாம் என்று சொல்லுகிறது சாத்திரம்
 
அது மட்டுமல்ல உடல் பசி என்பது வயிற்றுப் பசி போன்றதே , ஆகவே தன்னைக் காப்பாற்றிய ஒருவன் , தன்னையே திருமணம் செய்து கொல்லுகிறேன் என்று சத்தியம் செய்த ஒருவனுக்காக, ஒரு பெண் அவனை நம்பி  உடலுறவில் ஈடுபட்டாலும் தவறில்லை
ஏனென்றால் அந்தக் காலத்தில் சத்தியங்களுக்கு மதிப்பிருந்தது
இப்போது அதெல்லாம் எடுபடாது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

Tthamizth Tthenee

unread,
Jun 9, 2008, 3:31:40 AM6/9/08
to minT...@googlegroups.com
மன்னிக்கவும் திருமணம் செய்து கொள்ளுகிறேன் என்று படிக்கவும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
2008/6/9 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

இரவா

unread,
Jun 9, 2008, 5:12:18 AM6/9/08
to minT...@googlegroups.com
சாத்திரப் ப்ராகாரமே

ஒரு பெண் ருதுவாகி திருமணம் செய்யும் ஆசை வந்து விட்டால் அந்தப் பெண்ணுக்கு
குறிப்பிட்ட காலவரைக்குள் அந்த தகப்பனால்
திருமணம் செய்து வைக்க முடியவில்லை என்றால், அந்தப் பெண் அவள்
விரும்பியவனுடன் கூடலாம் என்று சொல்லுகிறது சாத்திரம்


இங்கே பேசுவது, தமிழ் மரபு. சாத்திரம் அது இது என்று குழப்ப வேண்டாம்.

எந்த சாத்திரமும் தமிழ் மரபில் இல்லை!!


2008/6/9, Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Jun 9, 2008, 5:32:34 AM6/9/08
to minT...@googlegroups.com
ஆரிய வம்சத்தில் காதலர்கள் உடலுறவு கொள்வது இல்லாதிருக்க வேண்டும் என்று
கற்பனை செய்யாதீர்கள். ஆரியர் பழக்கம் எப்படிப் பட்டது என்பதற்குச்
சான்றாகத் தொல்காப்பியச் சூத்திரம் இருக்கிறது. ஆரியர்களின் எண்வகைத்
திருமணமுறையில் காதலிக்காமல் வலிந்து ஒரு பெண்ணைப் புணரும் வழக்கம்
ஆரியருடையது! என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
 
 
அன்புள்ள இரவா அவர்களே
ஆரியர்கள் என்று பேச ஆரம்பித்தாலே
சாத்திரம் தலை தூக்கி விடுகிறதே
அதன் பின்னர் சாத்திரம் என்று குழப்பாதீர்கள் என்றால் எப்படி...?
 
அப்படியானால் பழந்த தமிழர்கள் என்று மட்டுமே பேசுதல் வேண்டுமல்லவா
பழந்தமிழர்கள் ஆரிய திராவிட என்றெல்லாம் பேதமே இல்லாமல் சாத்திரத்தை மதித்தவர்தாமே
இப்போதுதான் நாம் ஆரியர் திராவிடர்
என்று பிரிக்கிறோம்
 
பழங்காலத்தில்  ஆரியமாவது திராவிடமாவது
ஒன்றும் செல்லுபடியாக வில்லை
சாத்திரம் மட்டுமே  மேலோங்கி நின்றகாலம் அது, பகுத்தறிவுப் பட்டரைகள் ஏற்பட்ட பின்னர்தான் ஆரிய திராவிட  பேதமெல்லாம்
அது வரை  எல்லாம் சாத்திர நம்பிக்கைதான்
ஆகவே சாத்திர அடிப்படையில்லாமல்
எந்த நாகரீகமும் இல்லை என்பது என்னுடைய
தழ்மையான கருத்து
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
2008/6/9 இரவா <vasude...@gmail.com>:

இரவா

unread,
Jun 9, 2008, 5:44:10 AM6/9/08
to minT...@googlegroups.com
தமிழ்த் தேனியார்க்கு மீண்டும் கூறுகிறேன்.

சாத்திரம் கோத்திரம் என்பதெல்லாம் ஆரியக் குப்பைகள்.

அது, சங்க கால தமிழ் இலக்கியத்தில் சாத்திரன் கோத்திரம் என்பதற்கான
தடயத்தைக் காட்ட முடியுமா?

கடவுள் வழிபாட்டையே புறநானூறு இழிவாகப் பேசுகிறது..

ஆரியர் கோட்பாட்டைப் பேச சங்க இலக்கியம் இடந்தராது!

2008/6/9, Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

prakash sugumaran

unread,
Jun 9, 2008, 12:13:38 PM6/9/08
to minT...@googlegroups.com
ekkalathilum pen penthan. aan annthan. andhantha kala kattathil irundha sattangaluku erpa padalgal ezhutha patirukka vendum. idhil sattangalai vida thani maitha vazhkai, vozhukam, sudhadiram patri solla pattavai kurithi anaivarum sindhikka, pesa vendum enbathe anaivarin asai.

ezhutha pattavai, etharkaga enbathu thirikkapaduvadhu kalam kalmaga thodarum izhivu.

Kannan Natarajan

unread,
Jun 18, 2008, 4:56:15 AM6/18/08
to minT...@googlegroups.com
கபிலர் தமிழுக்கே உரியது எனக் கூறுவதுபோல தமிழின் இயல்பைக் கூறும் குறிஞ்சிப்பாட்டிலே பெருமைப்படுத்தியுள்ள இல்லறத்தைத் திருவள்ளுவர் துறவறத்தினும் மேலானது எனக் காரணம் காட்டி நிரூபிக்கிறார். தமிழ் மொழியிலுள்ள அக இலக்கியங்கள் அனைத்தும் இல்லறத்தின் தொடக்கமாகிய காதல் வாழ்க்கையைச் சிறப்பிப்பன. அகவொழுக்கம் தமிழ் மொழிக்கே உரியது; சிறந்தது என்பதைப் பரிபாடலும் களவியலுரையும் தெளிவுறுத்துகின்றன.

தள்ளாப் பொருளியல்பின் தண்டமிழ் ஆய்வந்திலார்

   கொள்ளார் இக்குன்றுப் பயன் (9.25)

என்று பரிபாடலும், "இந்நூல் என்னுதலிற்றோ வெனின் தமிழ் நுதலிற்று," என்று இறையனார் களவியலுரையும் அகவொழுக்கத்தைத் தமிழ் என அழைத்தலால் தெளியலாம். இங்ஙனம் கபிலர் சிறப்பிப்பதாலும், அக இலக்கியங்கள் போற்றுவதாலும், பண்டை இலக்கியங்கள் தமிழென்றே பாராட்டுவதாலும்,

 

காதலை அடிப்படையாகக் கொண்ட இல்லற வாழ்க்கை தமிழர்க்கே உரியதா?

 

என்னும் ஐயம் எழலாம். அதேபோல் ஆரியர்களின் பண்டை இலக்கியங்கள் அனைத்தும் முற்றத்துறந்த முனிவர்களுக்கு மதிப்பும் சிறப்பும் தருவதால்,

 

துறவற வாழ்க்கை ஆரியருக்கே உரியதா?

 

என்னும் வினாவும் உடனெழலாம்.

இன்றைய இந்தியப் பண்பாடு பல இனத்தவர் கலப்பால் விளைந்தது. சிறப்பாக திராவிடர் ஆரியர் கலப்பால் பிறந்தது. அதில் எது திராவிடர்களுக்குரியது, எது ஆரியர்களுக்குரியது என்று திட்டவட்டமாகக் கூறமுடியாது. எனினும், ஆரியர்கள் மிகப் பழமையான நூற்களில் என்ன நிலை பேசப்படுகிறதோ அது ஆர்யர்களுக்குரியது என்று ஊகிக்கலாம். அதைப்போல் திராவிடர்களின் மிகப் பழைய இலக்கியங்களில் எது கூறப்படுகிறதோ அதைத் திராவிடர்களுக்குரியது எனக் கொள்ளலாம். ஆனால், இன்றுள்ள மிகப் பழைய திராவிட இலக்கியங்களிலும் ஆரியக் கலப்பு இல்லாமல் இல்லை, இதனால் எல்லாப் பாக்களும் ஆரியக் கலப்புள்ளவை என்று கூறுவதும் உண்மையன்று. கவனமாக ஆரியக் கருத்துகள் கலந்துள்ள பாடல்களைப் பிரித்துப் பார்த்தால் திராவிட நாகரிகக் கூறுகளை அறியலாம். அங்ஙனம் நோக்கின், ஆரியர்களின் மிகப் பழைய நூலாகிய "ரிக்" வேதத்தில், காதலால் ஒன்றி நடத்தும் இல்லறத்தைப் பற்றிப் பேச்சில்லை. ஆனால் நல்ல பெண், பணத்தைப் பாராது காதலுக்கு மதிப்பு தந்து, தன் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்வாள் எனும் பொருள்படும் குறிப்பு ஒன்று மட்டும் ( ல-27-12) காணப்படுகின்றது.

 

மனித இனம் அனைத்திற்கும் பொதுவான காதலுணர்ச்சியின் பெருமை கூறினும், அற வாழ்க்கைக்குக் காதல் மணமே இன்றியமையாததாக ஆரியர் கருதினர் என்று கொள்வதற்கு "ரிக்" வேதம் இடந்தரவில்லை. வடமொழிக் காவியங்களில் சிறப்பிக்கப்பட்ட மணமும், பல ஆடவர்களிடையே தன் மனத்திற்குகந்த ஒருவனை, மணப்பெண் தேர்ந்தெடுத்தலாகிய சுயம்வரமேயாகும்; காதல் மணமன்று. முதல் முதல் காதல் மணத்தைப் பற்றிப் பேசிய குறிப்பு வியாச மகாபாரதத்தில் கிடைக்கின்றது. அதில் வரும் சகுந்தலை-துஷ்யந்தன் கதை காந்தர்வ மணத்தில் தொடங்குகிறது. அக்கதையும் கந்தர்வ மணத்தினால் சகுந்தலை போல் துயருற நேரும் எனும் குறிப்பை உணர்த்துகின்றதேயொழிய காதல் மணமே இல்லறத்திற்கு இன்றியமையாத தொடக்கம் என வலியுறுத்தவில்லை.

 

காளிதாசன் எழுதிய குமாரசம்பவம் பிராசாபத்திய மணத்தின் பெருமையையும் சாகுந்தலம் காந்தர்வ மணத்தால் விளையும் குறைபாடுகளையும் உணர்த்துவன என்பதே வடமொழிப் புலமை நலங்கனிந்த சில ஆசிரியர்களின் கொள்கை. எனவே, ஆதி வடமொழி இலக்கியங்கள், காதல் மணத்தைச் சிறப்பிக்கவில்லை என்பதும் பின்னருள்ளவையே காதல் மணத்தைக் கூறுகின்றன என்பதும் அவையும் குறைபடக் கூறுகின்றனவேயொழிய தமிழ் இலக்கியங்களைப் போல் இன்றியமையாததாக்கிக் கூறவில்லை என்பதும் தெளிவாம்.

ஆரிய இலக்கியங்கள், துறவிகளையும் துறவறத்தையும் போற்றுவது யாவரும் அறிந்ததே. ஆனால் சங்க இலக்கியங்களில் இல்லறம் தீதெனத் துறந்தார் என்று கூற ஓர் எடுத்துக்காட்டேனும் காண இயலாது. ஒன்றிரண்டரசர்கள் புறப்புண் பட்டதை நினைத்து வருந்தியும் தம் மக்கள் மீது படையெடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டதே என்று எண்ணி வாழ்க்கையை வெறுத்தும் துறந்த அந்த செய்திகளே நமக்குக் கிடைக்கின்றன. பின்னருள்ள நூல்கள் துறவறத்தைப் பற்றிப் பேசுகின்றன. வடநாட்டில் தோன்றிய புத்த சமண சமயங்கள் தென்னாட்டிலும் பரவவே, இங்கும் துறவறத்தைக் கொள்வோர் மலிந்தனர். அப்பர் முதலானோர் முற்றுந்துறந்தவர்களாக வாழ்க்கை நடத்தியதை தமிழகம் அறியும். இங்ஙனம் துறவறம் தமிழகத்தில் பரவினமையால், திருவள்ளுவர் அதனையும் அமைத்துப் பாடியுள்ளார். பாடிய அவரும் இல்லறமே சிறந்தது என்றும் துறவறம் பிறரால் எளிதில் பழிக்கத்தக்க தவறுகள் பல உடையதென்றும் இவற்றால், இல்லறமே அறமென்றும் கூறுகிறார். தான் எடுத்துக்கொண்ட பொருளுக்குப் பெருமதிப்புத் தருதற்கும், வற்புறுத்திக் கூறுவதே திருவள்ளுவர் ஒவ்வொரு அதிகாரத்திலும் மேற்கொள்ளும் முறையாகளின், "தவம்" என்னும் அதிகாரத்தில் தவம் மேலென ஒரு குறளில் கூறியுள்ளார். இக்குறள் முன்னர் ஏற்றிக்கூறிய இல்லறத்திற்கு முரண்பாடாக முதலில் தோன்றும்.

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார் மற்றல்லா

   ரவஞ்செய்வா ராசையுட் பட்டு (255)

எனும் இப்பாவிலும், "அவஞ்செய்வார்" எனும் சொற்றொடர் இல்லறத்தாரைக் குறியாமை பரிமேலழகர் உரையால் தெளிவாகும். இது, வள்ளுவர் இல்லறத்தின் மீது கொண்டிருந்த மதிப்பைத் தெளிவாக்கும். அவ்வில்லறத்தையே கபிலர் தமிழருக்கே உரிய அறமாக, ஆரிய அரசன் கேட்டறியக் குறிஞ்சிப்பாட்டாகப் பாடியுள்ளார்.

இதனை மனதிற்கொண்டே கம்பரும், உயர்ந்த அற வாழ்க்கையாகிய இராமன் சீதை வாழ்க்கைக்கு காதல் மணமே தொடக்கமாக இருக்க வேணடும். அங்ஙனம் இருந்தால் தமிழர் ஏற்பர் என்று எண்ணி, வால்மீகி இராமாயணத்தில் இல்லாத சீதை இராமன் மதியுடன்பாட்டைத் தொல்காப்பிய உரையாசிரியர் எடுத்துக்காட்டியுள்ளதுபோல் தானும் கொண்டு "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்" எனக் காதல் மணமாக அதனை முடித்துள்ளார்.

 

துயருறு வாழ்க்கையையுடைய கோவலன் கண்ணகியர் வாழ்க்கைக்குத் தொடக்கமாகக் காதல் மணம் அமைத்தல் தக்கதன்று என்று எண்ணி இளங்கோவடிகளும் காதல் மணத்தைக் கூறாது, "மாமுது பார்ப்பான் மறைவழிக் காட்டிடத் தீவலஞ்செய்து மணந்தனர்" எனக் கூறித் தன் காப்பியத்தைத் தொடங்குகின்றார். இவற்றானும், காதல் அடிப்படையில் மேற்கொள்ளும் இல்லறம் தமிழர்க்குச் சிறந்தது என்பது வெளிப்படை. தமிழினத்தின் தனி நாகரிகம் என இதனையே குறிஞ்சிப்பாட்டு கூறுகின்றது.

Reply all
Reply to author
Forward
0 new messages