திருவக்கரை தொல்லியல் அகழாய்வு

140 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Aug 25, 2012, 9:30:11 AM8/25/12
to seshadri sridharan


திருவக்கரை தொல்லியல் அகழாய்வு


 

பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி




திருவக்கரை விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம், வானூர் ஆகிய ஊர்களுக்கு அருகில் இடம் கொண்டுள்ளது. இத்தளம் மிகத் தொன்மையானது, அருந்திருஆனது (sacred). இச்சிற்றூரில் சோழர் காலத்து சிவன் கோவில் ஒன்று உள்ளது. இது அரிக்கமேட்டிற்கு அருகே புதுச்சேரி மாநிலத்தின் எல்லை மேல் கிடக்கின்றது. இத்திருக்கோவில் சைவக் குரவர் அப்பர் அடிகளால் பாடல் பெற்றுள்ளது.  நிலத்தியல்முறையில், திருவக்கரை ஒரு நன்கு அறியப்பட்ட பன்னாட்டு முகாமையுடைய  தளம் ஆகும்  இச்சிற்றூர் நீடுநெடிய காலத்திற்கு முன்னேயே இதாவது, சற்றொப்ப இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைப்பட்டிருந்ததாகக் கருதப்படுகின்றது. இங்கு உள்ள கற்கள் தொன்மையானவை. மேலும், தொன்மையான மரங்கள் நிலத்தடியில் நிகழ்ந்த வேதிஎதிர்வினையால் கற்களாக (மரப் புதைபடிவமாக) உருமாறி உள்ளன. இது நிலத்தியல்முறையில் முகாமையான தளம் என்பதோடு உலகம் முழுவதிலும் இருந்து நிலத்தியலரால் (geologist) வருகைதரப்படும் தளம். இந்நாளில் கூட, கல்லாய் உருத்திரிந்த மர மீதிமிச்சங்களைக் கோவிலுக்கு அருகே மேற்பரப்பில் காணவும், திரட்டவும் இயலும். அங்கு முற்கால மக்களின் மீதிமிச்சங்களைக் கொண்ட ஒரு மிகப்பெரும் திட்டை உள்ளது. இது ஒரு புதைத்தல் மற்றும் வாழிடம் சேர்ந்த தளம் ஆகும். அங்கே இடைஇடையே காணும்படியாகப் பெருங்கற்காலப் புதைப்பிடங்களும் உள்ளன.



அகழாய்வுகள் சென்னைப் பல்கலைக் கழகத்தின் பண்டை வரலாறு மற்றும் தொல்லியல் துறையால் முனைவர் சா. குருமூர்த்தியின் தலைமையில் திட்டையின் (mound) உச்சிமேல் நிகழ்த்தப்பட்டன. அகழிகள் வாழிடப் பரப்பிலும் தோண்டப்பட்டன, ஆனால் குறைந்த அளவான மட்கலங்களும் சிறு தொல்பொருள்களுமே திரட்டப்பட்டன. அகழாய்ந்த அகழியில் பெரும்பால் அடுக்குகள் வறிதாகவே இருந்தன. இது ஒரு போலிப் புதைப்புத் தளமாகலாம்.



இத்தளத்தின் காலக் கணக்கீடு கி.மு. 1000 அல்லது அதற்கும் முன்பு எனப் பொருத்தலாம் ஏனெனில் நிலத்தியல் பொருள் மற்றும் சான்றின் அடிப்படையில் இத்தளத்தின் தொன்மை முந்து வரலாற்றுக் காலத்திற்கும் முன்பாகச் செல்கின்றது.



இச்செய்திகளை எடுத்துரைத்தவர் இத்தளத்தில் அகழாய்வை வழிநடத்திய பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான 'அருங்கலைச் சொல் அகரமுதலிஉதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி


சேசாத்திரி

seshadri sridharan

unread,
Aug 26, 2012, 10:11:26 PM8/26/12
to seshadri sridharan
இந்த அருங்கலைச் சொல் அகரமுதலி இணையத்தில் கிட்டுவதாக நான் அறிந்திலேன். தமிழ் இணைய பல்கலைக்கழகம் முயற்சி செய்தால் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்த்திடம் ஒப்புதல் பெற்று உலகத் தமிழர் எல்லோரும் பயனுறும் வண்ணம் இணையத்தில் வெளியிடலாம்.

நூலாக இன்னமும் பேரா. அருளியின் வேரியம் பதிப்பகத்தில் கிட்டுகிறது. உரூ. 600 /- மதிப்புள்ள நூலை அவர்கள் எனக்கு உரூ 450 /- பெற்று அஞ்சலில் அனுப்பி வைத்தார்கள். கடின உழைப்பில் மிக அருமையாக உருவாக்கப்பட்ட நூல். அந்நூலுக்கு ஒரு விளம்பரமாவது  கிட்டுமென்று தான் என் தொல்லியல் மொழியாக்கத்தில் அதனைத் தவறாமல் கீழே குறிப்பிட்டிருந்தேன். உங்கள்  உசாவல் உடனே என் அந்த நோக்கை சரி என்று காட்டுகிறது.         



சேசாத்திரி 
 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
>.அருங்கலைச் சொல் அகரமுதலி<

சேசு! இது இணையத்தில் கிட்டுமா?

DEV RAJ

unread,
Aug 27, 2012, 12:36:20 AM8/27/12
to mint...@googlegroups.com
On Saturday, 25 August 2012 06:30:11 UTC-7, seshadri sridharan wrote:
>>> தொன்மையான மரங்கள் நிலத்தடியில் நிகழ்ந்த வேதிஎதிர்வினையால்
கற்களாக (மரப் புதைபடிவமாக) உருமாறி உள்ளன
<<<


http://thiruvakkarai.blogspot.in/p/petrified-trees-in-thiruvakkarai.html

http://www.hindu.com/2010/09/26/stories/2010092662030900.htm



தேவ்

seshadri sridharan

unread,
Aug 27, 2012, 1:23:13 AM8/27/12
to seshadri sridharan


2012/8/27 seshadri sridharan <ssesh...@gmail.com>

முகவரி என்னிடம் உள்ளது வேண்டுமேல் தருவேன் - சேசாத்திரி  

2012/8/27 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com

நன்றி சேசு  //அடுத்தமுறை வரும்போது விலைக்கு வாங்கிக்கொள்கிறேன். //


//முகவரி என்னிடம் உள்ளது வேண்டுமேல் தருவேன் -  சேசாத்திரி // 


கட்டாயம் தாருங்கள் 


ஐயா வேந்தன் அரசு இதோ அகராதி கிட்டும் முகவரி

வேரியம் பதிப்பகம், "தனித்தமிழ்மனை" 6, பாவலேறு தெரு (காளி கோயில் தெரு), தமிழுர் (திலாசுபேட்டை), புதுச்சேரி - 605 009              தொலைபேசி:   0413  2274212


முதலில் தொலைபேசி அல்லது மடல் மூலம் அகராதி உள்ளதா என அறிந்து செயலில் முற்படுங்கள்.


"இவை தமிழல்ல என்னும் அயற்சொல் அகராதி"  தமிழில் வந்து கலந்துற்ற அயற் சொற்களை அடையாளம் காட்டி அவற்றுக்கான தக்க தமிழ்ச் சொற்களையும் தருகின்றது அதையும் வாங்கிப் பயனுறலாம்.

seshadri sridharan

unread,
Aug 27, 2012, 1:25:10 AM8/27/12
to mint...@googlegroups.com
தேவு ஐயா! மிக்க நன்றி!! என் பணியை எளிமை ஆக்கினீர்.


சேசாத்திரி

2012/8/27 DEV RAJ <rde...@gmail.com>

DEV RAJ

unread,
Aug 27, 2012, 1:44:31 AM8/27/12
to mint...@googlegroups.com
மகிழ்ச்சி

கட்டுரையின் கருத்துகளுக்கு வலிமை
சேர்க்கும் வகையில் உசாத் துணைகளை
இணைப்பது ஆய்வின் தரத்தை உயர்த்தும்;
ஆனால் நேரம் செலவழிக்க வேண்டும்


தேவ்

N. Kannan

unread,
Aug 27, 2012, 4:55:48 AM8/27/12
to mint...@googlegroups.com
இவையெல்லாம் முறையாக பாதுகாக்கப்பட்டு, பள்ளி மாணவர்களுக்கு
பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும். பகுத்தறிவில் அக்கரையுள்ள
கல்வித்துறை செயல்பட வேண்டும்.

நா.கண்ணன்

2012/8/27 DEV RAJ <rde...@gmail.com>:

> http://thiruvakkarai.blogspot.in/p/petrified-trees-in-thiruvakkarai.html
>
> http://www.hindu.com/2010/09/26/stories/2010092662030900.htm
>

seshadri sridharan

unread,
Aug 27, 2012, 5:08:28 AM8/27/12
to mint...@googlegroups.com
ஆம் ஐயா! நம் தொன்மை வரலாறு நம் மாணவர்களுக்கு தெரிய வேண்டும். தொல்லியலில் நல்ல அறிவுள்ள ஆய்வாளர் கட்டுரைகள் பாடநூல்களில் இடம் பெறவேண்டும். இதற்கான முயற்சியை என் தம்பி நண்பரின் மூலம் எடுத்தேன். ஆனால் காலம் கடந்து போய்விட்டது. நூல்கள் முன்னமே அச்சாகி விட்டிருந்தன. இப்போது என் தம்பியே அங்கு வேலை செய்கிறான், ஆனால் இன்னும் நான்கு ஆண்டுகள் கழித்துத் தான் பாடநூல்களில் மாற்றம் செய்யமுடியும். காத்திருப்பேன் அதுவரை. குருமூர்த்யும் காத்திருப்பார் என்று நம்புகிறேன்.

சேசாத்திரி           

2012/8/27 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Aug 27, 2012, 5:15:20 AM8/27/12
to mint...@googlegroups.com
மிக சமீபத்தில்தான் இத்தகைய இயற்கை அதிசயங்கள் நான் பிறந்த தமிழகத்தில்
இருப்பதை அறிந்தேன். என் பள்ளியில் சொல்லவில்லை, கல்லூரியில் லண்டனிலுள்ள
பிரித்தானிய தொல்லியல் காட்சியகம் பற்றிச் சொன்னாரே தவிர நம்
கொல்லைப்புறத்தில் இருக்கும் அதிசயம் பற்றி யாரும் சொல்லித்தரவில்லை.

நமக்கு எது முக்கியம், எதை முதலில் செய்ய வேண்டுமென்ற முறைமையே தெரியவில்லை!

உங்கள் தம்பிக்கு என் வாழ்த்துக்கள். உங்கள் அறிவியல் அக்கறை வளர்க, வாழ்க!

நா.கண்ணன்

2012/8/27 seshadri sridharan <ssesh...@gmail.com>:

Innamburan Innamburan

unread,
Aug 27, 2012, 4:22:56 PM8/27/12
to mint...@googlegroups.com
சென்னையில் என் இல்லத்துக்கு வந்த மின் தழிழர்களை ஒரு கல்மரம் தான் வரவேற்றது.
இன்னம்பூரான்


கி.காளைராசன்

unread,
Aug 28, 2012, 7:02:58 AM8/28/12
to mint...@googlegroups.com
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

On Tue, Aug 28, 2012 at 1:52 AM, Innamburan Innamburan <innam...@gmail.com> wrote:
சென்னையில் என் இல்லத்துக்கு வந்த மின் தழிழர்களை ஒரு கல்மரம் தான் வரவேற்றது.
ஆமாம், ஆமாம்.
அது இப்போது பத்திரமாக என்னிடம் உள்ளது.
கூடிய விரைவில் திருப்பூவணன் கோயிலில் நடராசர் சந்நிதியில் காட்சிப் பொருளாக வைக்கப்படும்.

அன்பன்
கி.காளைராசன்

Reply all
Reply to author
Forward
0 new messages