புளிமாங்காயும், புளிமாங்கனியும்

72 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 20, 2015, 3:49:12 AM6/20/15
to mintamil, thiruppuvanam, Palanichamy Shanmugam, naga rethinam, palaniappan ganapathy, Thiruveni Veni, selvam durai
வணக்கம்.
அப்போது 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். 
தமிழ்வகுப்பு. 
தமிழாசிரியர் விநாயகம் அவர்கள் வகுப்புக்குள் நுழைந்ததும் மாணவர் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் சொன்னோம். 
அவர் கையில் வைத்திருந்த பிரம்பை மேசைமேல் வைத்தார்.  
குலைநடுங்க நாங்கள் அனைவரும் உட்கார்ந்தோம். 

அசை, சீர், தளை பற்றிய கேள்விகளைக் கேட்டார்!
மண்சுமக்காதவனை மன்னவன் அடித்தது போல், பதிலறியாதோரைப் பிரம்பால் புடைத்தார்.
அடிமேல் அடிவிழுந்தாலும் அடிபெற்றோர் யாரும் அழவில்லை.

இப்போது என்முறை வந்தது, 
‘பிரம்படி படிபட்ட பெம்மானை‘ நினைத்துக் கொண்டே நானும் எழுந்து நின்றேன். என்னகேட்பாரோ? ஏதுமறியோமே! என்ற பயம் எனக்கு.

“புளிமாங்காய்“ வாய்பாடு சொல் என்றார்!
‘நிரை.நேர்.நேர்‘ என்றேன்.
தேமாங்காய் என்றார்,
நேர்.நேர்.நேர் என்றேன்.
கூவிளங்கனி என்றார்,
நேர் நிரை நிரை என்றேன்.

அவ்வளவுதான் என்னை அழைத்து, என் கையில் சாக்பீஸ்சைக் கொடுத்துக் கரும்பலகையில் எழுதச் சொன்னார். 
குறிலோ நெடிலோ தனித்து நின்றால் நேர்.
இரண்டு குறில்கள் சேர்ந்து நின்றால் நிரை.
நிரை+நேர்+நேர்= புளிமாங்காய்
நேர்+நேர்+நேர்=தேமாங்காய் 
நேர்+நிரை+நிரை=கூவிளங்கனி
என்று எழுதினேன்.
தப்பித்தேன்.

விநாயம் ஐயா பாடம் நடத்தினார்.
தேமா = நெடில் நெடில் = நேர் நேர் = தேமா 
புளிமா = குறில் குறில், நெடில் = நிரை நேர் = புளிமா

கூவிளம் = நெடில், குறில் குறில் = நேர் நிரை = கூவிளம் 
கருவிளம் = குறில் குறில், குறில் குறில் = நிரை நிரை = கருவிளம்

தேமாங்காய் = நெடில், நெடில், நெடில் = நேர் நேர் நேர் = தேமாங்காய் 
புளிமாங்காய் = குறில் குறில், நெடில், நெடில் = நிரை நேர் நேர் = புளிமாங்காய் 
கூவிளங்காய்  = நெடில், குறில் குறில், நெடில் = நேர் நிரை நேர் = கூவிளங்காய் 
கருவிளங்காய் = குறில் குறில், குறில் குறில், நெடில் = நிரை நிரை நேர் = கருவிளங்காய்

தேமாங்கனி = நெடில், நெடில், குறில் குறில் = நேர் நேர் நிரை = தேமாங்கனி 
புளிமாங்கனி = குறில் குறில், நெடில், குறில் குறில் = நிரை நேர் நிரை = புளிமாங்கனி 
கூவிளங்கனி = நெடில், குறில்குறில், குறில் குறில் = நேர் நிரை நிரை = கூவிளங்கனி 
கருவிளங்கனி = குறில் குறில், குறில் குறில், குறில் குறில் = நிரை நிரை நிரை = கருவிளங்கனி

ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச் சீர் இவற்றின் பெயர்களைப் பிரித்து எழுதினாலே அவற்றின் வாய்பாடு விளங்கும் என்பதை விநாயகம் ஆசிரியர் அந்த வகுப்பில் அழகாக நடத்தி அனைவருக்கும் விளங்க வைத்தார். 


மா வில் காய் எது? கனி எது? என்று எனது பேரன் என்னிடம் கேட்கிறான்!
நல்லவேலை, அவன் கையில் பிரம்பு இல்லை.
விநாயகம் ஆசிரியர் மறைந்துவிட்டாலும், அவர் நடத்திய வகுப்புகள் என் நினைவில் நீங்காமல் உள்ளன.

அன்பன்
கி.காளைராசன்

  • ஓரசைச்சீர்கள்
1.நேர்நாள்நாள்
2.நிரைமலர்மலர்

நாள் = நெடில் = நேர்
மலர் = குறில் + குறில் = நிரை
  • ஈரசைச்சீர்கள்
1.நேர்-நேர்தேமாதே.மா
2.நிரை-நேர்புளிமாபுளி.மா
3.நிரை-நிரைகருவிளம்கரு.விளம்
4.நேர்-நிரைகூவிளம்கூ.விளம்

தே.மா = நெடில்.நெடில் = நேர்.நேர்
புளி.மா = குறில்+குறில்.நெடில் = நிரை.நேர்
கரு.விளம் = குறில்+குறில்.குறில்+குறில் = நிரை.நிரை
  • மூவசைச்சீர்கள்
1.நேர்-நேர்-நேர்தேமாங்காய்தே.மாங்.காய்
2.நேர்-நேர்-நிரைதேமாங்கனிதே.மாங்.கனி
3.நிரை-நேர்-நேர்புளிமாங்காய்புளி.மாங்.காய்
4.நிரை-நேர்-நிரைபுளிமாங்கனிபுளி.மாங்.கனி
5.நிரை-நிரை-நேர்கருவிளங்காய்கரு.விளங்.காய்
6.நிரை-நிரை-நிரைகருவிளங்கனிகரு.விளங்.கனி
7.நேர்-நிரை-நேர்கூவிளங்காய்கூ.விளங்.காய்
8.நேர்-நிரை-நிரைகூவிளங்கனிகூ.விளங்.கனி

தே.மாங்.காய் = நெடில்/நெடில்/நெடில் = நேர்-நேர்-நேர்
தே.மாங்.கனி = நெடில்/நெடில்/குறில்+குறில்= நேர்-நேர்-நிரை
புளி.மாங்.காய் = குறில்+குறில்/நெடில்/நெடில் =நிரை-நேர்-நேர்
கரு.விளங்.காய் = குறில்+குறில்/குறில்+குறில்/நெடில்=நிரை-நிரை-நிரை
கூ.விளங்.காய் = நெடில்/குறில்+குறில்/நெடில் =நேர்-நிரை-நேர்
கூ.விளங்.கனி = நெடில்/குறில்+குறில்/குறில்+குறில்=நேர்-நிரை-நிரை

  • நாலசைச்சீர்கள்
1.நேர்-நேர்-நேர்-நேர்தேமாந்தண்பூதே.மாந்.தண்.பூ
2.நேர்-நேர்-நேர்-நிரைதேமாந்தண்ணிழல்தே.மாந்.தண்.ணிழல்
3.நேர்-நேர்-நிரை-நேர்தேமாநறும்பூதே.மா.நறும்.பூ
4.நேர்-நேர்-நிரை-நிரைதேமாநறுநிழல்தே.மா.நறு.நிழல்
5.நிரை-நேர்-நேர்-நேர்புளிமாந்தண்பூபுளி.மாந்.தண்.பூ
6.நிரை-நேர்-நேர்-நிரைபுளிமாந்தண்ணிழல்புளி.மாந்.தண்.ணிழல்
7.நிரை-நேர்-நிரை-நேர்புளிமாநறும்பூபுளி.மா.நறும்.பூ
8.நிரை-நேர்-நிரை-நிரைபுளிமாநறுநிழல்புளி.மா.நறு.நிழல்
9.நேர்-நிரை-நேர்-நேர்கூவிளந்தண்பூகூ.விளந்.தண்.பூ
10.நேர்-நிரை-நேர்-நிரைகூவிளந்தண்ணிழல்கூ.விளந்.தண்.ணிழல்
11.நேர்-நிரை-நிரை-நேர்கூவிளநறும்பூகூ.விள.நறும்.பூ
12.நேர்-நிரை-நிரை-நிரைகூவிளநறுநிழல்கூ.விள.நறு.நிழல்
13.நிரை-நிரை-நேர்-நேர்கருவிளந்தண்பூகரு.விளந்.தண்.பூ
14.நிரை-நிரை-நேர்-நிரைகருவிளந்தண்ணிழல்கரு.விளந்.தண்.ணிழல்
15.நிரை-நிரை-நிரை-நேர்கருவிளநறும்பூகரு.விள.நறும்.பூ
16.சரிநிரை-நிரை-நிரை-நிரைகருவிளநறுநிழல்கரு.விள.நறு.நிழல்


-- 

Innamburan S.Soundararajan

unread,
Jun 20, 2015, 4:17:21 AM6/20/15
to mintamil, thiruppuvanam, Palanichamy Shanmugam, naga rethinam, palaniappan ganapathy, Thiruveni Veni, selvam durai
இதையெல்லாம் உருப்போடலாம்.
விநாயம் ஐயா என்ற தொட்டச்சுப்பிழைக்கு மண் சுமக்கவும்.
சித்திரம் பேசுது. சின்னவனாக்கும்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N D Logasundaram

unread,
Jun 20, 2015, 2:22:38 PM6/20/15
to mintamil
அன்புள்ள காளைராசன்            

            நேர்பு 
            நிரைபு 

எனும் அசைகளும் ஒருகாலத்தில் இருந்துள்ளது 
உரை ஆசிரியர்கள் காட்டிச் சென்றுள்ள னர்  

இவற்றில் கடையில் வரும் எழுத்து குற்றியலுகரம் என்பர்  

நூ த லோ சு 
மயிலை 

2015-06-20 13:18 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

--

dr.ponmudi

unread,
Jun 21, 2015, 8:38:35 AM6/21/15
to mint...@googlegroups.com, palanip...@gmail.com, kalair...@gmail.com, thirup...@googlegroups.com, drpala...@gmail.com, durais...@gmail.com, k.nagar...@gmail.com, thiru...@gmail.com
அருமை!

சீர்களுக்கு பெயர்வைத்ததில் நம் முன்னோர் எத்தகையநுட்பத்தைவைத்தனரென்பது எண்ணிப்பார்க்கத்தக்கது. அந்தந்த சீர்களுக்கான அசைகளை அந்தந்த பெயர்கள் கொண்டிருப்பதுமட்டுமல்லாமல் அவை பொருளுடையபெயர்களாகவுமிருப்பது மேலுஞ்சிறப்பு!

Venkatachalam Dotthathri

unread,
Jun 21, 2015, 12:51:35 PM6/21/15
to mintamil
ஓம்
ஆசிரியர்: குற்றியலுகரம் தெரியுமா? மாணவனிடம் கேட்டார்.
மாணவன்: தெரியாதையா.
ஆசிரியர்: சரியாகச் சொன்னாய். நல்ல சரியான எடுத்துக்காட்டு என்று கூறி அமரச் சொன்னார்.
ஓம்

--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 23, 2015, 12:31:50 AM6/23/15
to mintamil, palanipathy2003, selvam durai, naga rethinam, thiruppuvanam, Palanichamy Shanmugam, Thiruveni Veni

ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.


On 20-Jun-2015 1:47 pm, "Innamburan S.Soundararajan" <innam...@gmail.com> wrote:
>
> விநாயம் ஐயா என்ற தொட்டச்சுப்பிழைக்கு மண் சுமக்கவும்.

அப்படியே செய்கிறேன் ஐயா.

இப்போதைக்கு,

விநாயகம்

விநாயகம்

விநாயகம்

விநாயகம்

விநாயகம்

ஐந்து தடவை எழுதிவிட்டேன்.

> சித்திரம் பேசுது. சின்னவனாக்கும்.
>

ஆமாம் ஐயா.

IAS படிப்பதாகச் சொல்லி வருகிறான்.  எல்லாம் தங்களது நல்லாசிகள்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 23, 2015, 12:33:07 AM6/23/15
to mintamil
வணக்கம் ஐயா.

2015-06-20 10:22 GMT-08:00 N D Logasundaram <selvi...@gmail.com>:
அன்புள்ள காளைராசன்            

            நேர்பு 
            நிரைபு 

எனும் அசைகளும் ஒருகாலத்தில் இருந்துள்ளது 
உரை ஆசிரியர்கள் காட்டிச் சென்றுள்ள னர்  

இவற்றில் கடையில் வரும் எழுத்து குற்றியலுகரம் என்பர்  

நூ த லோ சு 
மயிலை 
ஆமாம் ஆமாம்.
சரியாகச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள் ஐயா.
நினைவூட்டியமைக்கு நன்றி.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 23, 2015, 12:41:27 AM6/23/15
to dr.ponmudi, mintamil, palaniappan ganapathy, thiruppuvanam, Palanichamy Shanmugam, selvam durai, naga rethinam, Thiruveni Veni
வணக்கம் ஐயா.

2015-06-21 4:38 GMT-08:00 dr.ponmudi <dr.pon...@gmail.com>:
அருமை!
நன்றி ஐயா. 

சீர்களுக்கு பெயர்வைத்ததில் நம் முன்னோர் எத்தகையநுட்பத்தைவைத்தனரென்பது எண்ணிப்பார்க்கத்தக்கது. அந்தந்த சீர்களுக்கான அசைகளை அந்தந்த பெயர்கள் கொண்டிருப்பதுமட்டுமல்லாமல் அவை பொருளுடையபெயர்களாகவுமிருப்பது மேலுஞ்சிறப்பு!

ஆமாம் ஐயா.
இதுபோன்ற சொல்லமைப்பு முறைகள் வேறுபிற மொழிகளில் உள்ளனவா? 
அல்லது தமிழுக்கே உரிய சிறப்புகளா இவை.
அறிந்து கொள்ள ஆவல்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 23, 2015, 12:43:15 AM6/23/15
to mintamil
வணக்கம் ஐயா.

2015-06-21 8:51 GMT-08:00 Venkatachalam Dotthathri <v.dott...@gmail.com>:
ஓம்
ஆசிரியர்: குற்றியலுகரம் தெரியுமா? மாணவனிடம் கேட்டார்.
“குசுடுதுபுறு“ என்பதை நினைவு படுத்திக் கொண்டுள்ளேன்.

மாணவன்: தெரியாதையா.
ஆசிரியர்: சரியாகச் சொன்னாய். நல்ல சரியான எடுத்துக்காட்டு என்று கூறி அமரச் சொன்னார்.
இது ஐகாரக்குறுக்கம் என்று நினைக்கிறேன்.

N D Logasundaram

unread,
Jun 23, 2015, 7:39:21 AM6/23/15
to mintamil
அன்புள்ள காளை ராசன்
 நான் பார்த்த மடலில் இவ்வாறு உள்ளது இவற்றினில் 
 யார் எதைப்பற்றி எழுகிறார்களென்பது  புரியவில்லை 

நீங்கள் வைத்த மடல் தானே
 சாதாரண மடலாடார் களுக்கும் புரிய வேண்டு மல்லவா? 
வெட்டிஓட்டினால்  முதல் தரமாக பார்ப்பவர்களுக்கும் விளங்கும் படி இருக்க வேண்டும் 
அல்லவா?

ஊா நிறம் தோத்தாத் திரி மடல் வரிகள் ஆக   வேண்டு ம்  
இதுவும்  வெ ட்டப்பட்ட து மிகச் சிறு பகுதியே உள்ளது போல் தோ ன்று கின்றது இததிலுள்ள கருத்து என்ன 
என்போன்ற சிற்றறிவாலானுக்கா  வது  விளங்க வேண்டாமா 


அடுத்து உள்ளது (சி சுவப்பு )உங்க  ள் மடல் வரிகளா ??

அப்படியானால் என்ன சொல்ல வருகிறீர்கள் ?? 

அன்புடன் 
நூ தா லோ சு 
மயிலை 

நூ த லோ சு 
மயிலை 

--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 23, 2015, 9:53:27 AM6/23/15
to mintamil
வணக்கம் ஐயா.

2015-06-21 22:21 GMT+05:30 Venkatachalam Dotthathri <v.dott...@gmail.com>:
ஓம்
ஆசிரியர்: குற்றியலுகரம் தெரியுமா? மாணவனிடம் கேட்டார்.
மாணவன்: தெரியாதையா.
தெரியாது = குற்றியலுகம்
தெரியாதையா என்பதற்குப் பதிலாக “தெரியாது“ என்பதே சரி. 
ஆசிரியர்: சரியாகச் சொன்னாய். நல்ல சரியான எடுத்துக்காட்டு என்று கூறி அமரச் சொன்னார்.
அன்பன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 23, 2015, 9:58:42 AM6/23/15
to mintamil
வணக்கம் நூ தா லோ சு  ஐயா.
நான் ஐயா வெங்கிடாச்சலம் தோத்தாத்திரி அவர்களது பதிவிற்குத்தான் பதில் எழுதினேன் ஐயா.

நான் அவரிடம் சொல்ல வருவது,
“தெரியாதையா“ குற்றியலுகரம் அல்ல.
“தெரியாது“ என்பதே குற்றியலுகரம் ஆகும்.

அன்பன்
கி.காளைராசன்

N D Logasundaram

unread,
Jun 23, 2015, 10:05:05 AM6/23/15
to mintamil
மிக்க நன்றி காலை அவர்களுக்கு 
இருந்தும் ஐகாரக் குறுக்கம் என்பதில் என்ன ??

நூ த லோ சு 
மயிலை  
நூ த லோ சு 
மயிலை 

Venkatachalam Dotthathri

unread,
Jun 24, 2015, 10:30:47 AM6/24/15
to mintamil
ஓம் வணக்கம்.
நன்றி திரு காளைராசன் அவர்களே.
வெ.சுப்பிரமணியன்.
ஓம்

rajam

unread,
Jun 24, 2015, 12:39:33 PM6/24/15
to mint...@googlegroups.com, kalair...@gmail.com, mint...@googlegroups.com
அன்புநிறை காசிஶ்ரீ தம்பி காளை அவர்களுக்கு, 

வணக்கம்.

///“தெரியாது“ என்பதே குற்றியலுகரம் ஆகும்.///

அப்புடீங்களா?

உடனே வீட்டில் உள்ள ஒரு பெஞ்சுமேல் ஏறி நின்று, அந்தக் காட்சியைப் பேரப்பிள்ளைகளை வைத்துப் படம் எடுக்கச்சொல்லவும்! பிள்ளைகளின் சிரிப்பு இந்த அமேரிக்காப்பாட்டிக்குக் கேக்கும்படி உரத்து ஒலிக்கட்டும்!

பிறகு உடனே அம்மா வள்ளியவர்களிடம் போய் ... கீழ்க்கண்ட தொல்காப்பிய நூற்பாவுக்கும் நன்னூல் நூற்பாவுக்கும் விளக்கம் கேட்டுத்தெரிந்துகொள்ளவும்.

ஈரெழுத்தொருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர்
ஆய்ததொடர்மொழி வன்றொடர் மென்றொடர்
ஆயிரு மூன்றே உகரம் குறுகிடன்

******
நெடிலோடு ஆய்தம் உயிர் வலி மெலி இடைத்
தொடர்மொழி இறுதி வன்மையூர் உகரம்
அஃகும் பிறமேல் தொடரவும் பெறுமே

******
பிறகு குற்றியலுகரம் பற்றித் தாங்கள் அறிந்த நற்பொருளைப் பொதுமக்களுக்குச் சொல்லவும்.

அன்புடன்,
அக்கா இராசம்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 25, 2015, 12:21:02 AM6/25/15
to rajam, mintamil
பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய அக்கா அவர்களுக்கு வணக்கம்.




2015-06-24 8:39 GMT-08:00 rajam <ra...@earthlink.net>:
அன்புநிறை காசிஶ்ரீ தம்பி காளை அவர்களுக்கு, 

வணக்கம்.

///“தெரியாது“ என்பதே குற்றியலுகரம் ஆகும்.///

அப்புடீங்களா?

உடனே வீட்டில் உள்ள ஒரு பெஞ்சுமேல் ஏறி நின்று, அந்தக் காட்சியைப் பேரப்பிள்ளைகளை வைத்துப் படம் எடுக்கச்சொல்லவும்! பிள்ளைகளின் சிரிப்பு இந்த அமேரிக்காப்பாட்டிக்குக் கேக்கும்படி உரத்து ஒலிக்கட்டும்!

பிறகு உடனே அம்மா வள்ளியவர்களிடம் போய் ... கீழ்க்கண்ட தொல்காப்பிய நூற்பாவுக்கும் நன்னூல் நூற்பாவுக்கும் விளக்கம் கேட்டுத்தெரிந்துகொள்ளவும்.
அம்மா வள்ளி அவர்கள் சென்னை சென்றுள்ளார்கள். 
நான் முறையாகத் தமிழ்படிக்காத காரணத்தினால் எனக்கு இவற்றில் குழப்பம் நீடிக்கிறது. இப்போதைக்கு இணையத்தில் இதுபற்றிப் படித்து வருகிறேன்.

ஈரெழுத்தொருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர்
ஆய்ததொடர்மொழி வன்றொடர் மென்றொடர்
ஆயிரு மூன்றே உகரம் குறுகிடன்

******
நெடிலோடு ஆய்தம் உயிர் வலி மெலி இடைத்
தொடர்மொழி இறுதி வன்மையூர் உகரம்
அஃகும் பிறமேல் தொடரவும் பெறுமே

******
பிறகு குற்றியலுகரம் பற்றித் தாங்கள் அறிந்த நற்பொருளைப் பொதுமக்களுக்குச் சொல்லவும்.

அன்புடன்,
அக்கா இராசம்

 http://www.tamilvu.org/courses/degree/c021/c0211/html/c0211405.htmதமிழ் இணையக் கல்விக்கழகத்தில்  

• நெடில் தொடர்க் குற்றியலுகரம்

தனியாக உள்ள நெடில் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் நெடில் தொடர்க் குற்றியலுகரம்எனப்படும்.

எ.டு :

பாகு
மூசு
பாடு 
காது 
ஆறு

என்று உள்ளது. 


அன்புடன்
தம்பி
காளை

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 1, 2015, 4:00:04 AM10/1/15
to thiruppuvanam, mintamil

வணக்கம்.
ஐயா கணேசன் அவர்கள் வேறு ஒரு இழையில் கேட்டதற்காக....

Oru Arizonan

unread,
Oct 1, 2015, 6:58:49 PM10/1/15
to mintamil
அசைகளையும், சீர்களையும் நன்கு விளக்கியமைக்கு நன்றி, காளைராஜன் அவர்களே!

அப்படியே, குறட்பா, ஆசிரியப்பா, விருத்தப்பா, வெண்பா, கலிப்பா இவைகளும் எப்படிப்பட்ட அசைகளையும். சீர்களையும் கொண்டிருக்கும் என்று எளிமையாக விளக்கினால், மரபுக்கவிதை வடிவம் பிரித்தறிய இயலாத என்போன்றாருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

அன்புடன்,
ஒரு அரிசோனன்

N D Logasundaram

unread,
Oct 2, 2015, 3:40:31 AM10/2/15
to mint...@googlegroups.com
நேர்பு நிரைபு எனும் குற்றியலுகரம் ஈறாக வரும் அசைகளும் முன்பு உண்டு 
ஆனால் அவை இப்போது கற்பிக்கப்படுவதும் பார்க்கப்படுவதும் இல்லை ஆனல்  
உரைஆசிரியர்கள்  கா ட்டியுள்ளனர் செய்திககாக் மட்டும்  வைத்தேன்  

குற்றியலுகரம் அரைமா த்திரை  ஓசையுடை யதால் அதனை இரட்டித்த மெய்யாக கொள்ள வேண்டும்  என்பர்

அன்புடன் 
நூத் லோ சு
மயிலை 


நூ த லோ சு 
மயிலை 

--
Reply all
Reply to author
Forward
0 new messages