இவர் யார்..? நீண்ட கால சந்தேகம்

120 views
Skip to first unread message

Aragalur pon.venkatesan

unread,
May 18, 2015, 3:07:03 AM5/18/15
to minT...@googlegroups.com
அனைவருக்கும் வணக்கம் சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம்  ஆறகழூரான என் ஊரில் ஓர் அகழியின் ஓரம் இந்த சிலை உள்ளது..
இது சண்டிகேஸ்வரர் எனவும் சமண சாத்தன் எனவும் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன உண்மையிலே இவர் யார் அய்யா..?

Geetha Sambasivam

unread,
May 18, 2015, 4:24:58 AM5/18/15
to மின்தமிழ்
மயில் வாகனம் இருக்கிறாப்போல் தெரிகிறதே! முருகன்?

2015-05-18 12:37 GMT+05:30 Aragalur pon.venkatesan <ponvenk...@gmail.com>:
அனைவருக்கும் வணக்கம் சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம்  ஆறகழூரான என் ஊரில் ஓர் அகழியின் ஓரம் இந்த சிலை உள்ளது..
இது சண்டிகேஸ்வரர் எனவும் சமண சாத்தன் எனவும் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன உண்மையிலே இவர் யார் அய்யா..?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

ponvenkatesan64

unread,
May 18, 2015, 8:52:27 AM5/18/15
to mint...@googlegroups.com
மயிலா..?இந்த சிலையில் இருக்கா சார்..?

ponvenkatesan64

unread,
May 18, 2015, 8:59:22 AM5/18/15
to mint...@googlegroups.com

N. Ganesan

unread,
May 18, 2015, 9:08:22 AM5/18/15
to mint...@googlegroups.com

On Monday, May 18, 2015 at 5:59:22 AM UTC-7, ponvenkatesan64 wrote:

ஐயனார் என நினைக்கிறேன்.

நா. கணேசன்

ponvenkatesan64

unread,
May 18, 2015, 9:58:17 AM5/18/15
to mint...@googlegroups.com

ponvenkatesan64

unread,
May 18, 2015, 9:58:55 AM5/18/15
to mint...@googlegroups.com

இதுவும் அய்யனார்தானா..? அய்யா

N. Ganesan

unread,
May 18, 2015, 10:12:03 AM5/18/15
to மின்தமிழ்
2015-05-18 6:58 GMT-07:00 ponvenkatesan64 <ponvenk...@gmail.com>:

இதுவும் அய்யனார்தானா..? அய்யா

ஆம்.

N. Ganesan

unread,
May 18, 2015, 10:20:49 AM5/18/15
to மின்தமிழ்

2015-05-18 6:58 GMT-07:00 ponvenkatesan64 <ponvenk...@gmail.com>:

இதுவும் அய்யனார்தானா..? அய்யா

ஆம். கையில் வைத்திருக்கும் ஆயுதத்தின் பெயர் செண்டு.

மேருமலையைச் செண்டால் அடித்தவன் பாண்டியன் என்ற கதையுண்டு.
செழியன் என்ற பாண்டியன் பெயருடன் தொடர்புடையது.
செழி-, செண்டு, செடில் : இவற்றில் -ள்-/-ழ்- /*/ ண் /*/ ட் - இரண்டாம் எழுத்தாக
இயங்கும் சொல் தொகுதி இது. முனைவர் ரா. கிருஷ்ணமூர்த்தி
‘செழியன்’ என்ற பெயருடன் சங்க கால அரிய நாணயங்களை 
வெளியிட்டுள்ளார். பார்க்கவும்.

திராவிட மொழிகளில் -ள்-/-ழ்- /*/ ண் /*/ ட் - இரண்டாம் எழுத்தாக
இயங்கும் சொல் தொகுதி - இந்த மொழிவிதியை இங்கே
உதாரணங்களாக பார்க்கலாம்:

Innamburan S.Soundararajan

unread,
May 18, 2015, 10:34:01 AM5/18/15
to mintamil
செண்டு பற்றி உ வே சா எழுதியதை நோக்குக.

N. Ganesan

unread,
May 18, 2015, 10:41:24 AM5/18/15
to mint...@googlegroups.com

On Monday, May 18, 2015 at 7:34:01 AM UTC-7, இன்னம்பூரான் wrote:
செண்டு பற்றி உ வே சா எழுதியதை நோக்குக.

30 ஆண்டுகளாய் நோக்கிவருகிறேன் ஐயா.

ponvenkatesan64

unread,
May 18, 2015, 10:57:50 AM5/18/15
to mint...@googlegroups.com
இந்த சிலையில் உள்ளவர் கையில் உள்ளது மழு என்றும் பின்னால் தெரிவது ஜடாபாரம் எனவும் எனவே இது சண்டுகேஸ்வரர் என சொல்கிறார்களே அய்யா..?

ponvenkatesan64

unread,
May 18, 2015, 11:03:10 AM5/18/15
to mint...@googlegroups.com

ponvenkatesan64

unread,
May 18, 2015, 11:04:12 AM5/18/15
to mint...@googlegroups.com
பாண்டியர்களின் சின்னமான இரட்டை மீனின் நடுவே இருப்பது செண்டா..?செங்கோலா? அய்யா

Suba.T.

unread,
May 18, 2015, 2:46:02 PM5/18/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-05-18 9:07 GMT+02:00 Aragalur pon.venkatesan <ponvenk...@gmail.com>:
அனைவருக்கும் வணக்கம் சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம்  ஆறகழூரான என் ஊரில் ஓர் அகழியின் ஓரம் இந்த சிலை உள்ளது..
இது சண்டிகேஸ்வரர் எனவும் சமண சாத்தன் எனவும் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன உண்மையிலே இவர் யார் அய்யா..?

​இது அய்யனார் திரு உருவச்சிலை தான் ..
சாத்தன் என்ற ஒரு பெயரும் அய்யனாருக்கு உண்டு.

சுபா
 
சொ. வினைதீர்த்தான்

unread,
May 18, 2015, 3:06:24 PM5/18/15
to mintamil, Subashini Tremmel
பல இடங்களில் பூரணாதேவி, புஷ்கலா தேவியருடன் ஐயனார் காணப்படுகிறார். சில இடங்களில் தனியாகவும் காணப்படுகிறார்.
ஆனால் எல்லா இடங்களிலும் சண்டிகேசருக்கு தேவி இல்லை.
இதனையும் கவனத்தில் கொள்ளலாம்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

தேமொழி

unread,
May 18, 2015, 4:52:15 PM5/18/15
to mint...@googlegroups.com, ponvenk...@gmail.com
எனக்கு இவர்களது சிலை போல தோற்றம் தருகிறது ...

..... தேமொழி

On Monday, May 18, 2015 at 5:59:22 AM UTC-7, ponvenkatesan64 wrote:

N. Ganesan

unread,
May 18, 2015, 9:16:47 PM5/18/15
to mint...@googlegroups.com

On Monday, May 18, 2015 at 8:04:12 AM UTC-7, ponvenkatesan64 wrote:
பாண்டியர்களின் சின்னமான இரட்டை மீனின் நடுவே இருப்பது செண்டா..?செங்கோலா? அய்யா

செண்டு.

N. Ganesan

unread,
May 19, 2015, 1:02:06 AM5/19/15
to mint...@googlegroups.com, housto...@googlegroups.com, thami...@googlegroups.com, Ramachandran Nagaswamy, panb...@googlegroups.com, vallamai, Dr. Krishnaswamy Nachimuthu

    அன்பார்ந்த ஆறகழூர் வெங்கடேசன்

    ஐயனார் கையில் உள்ள ஆயுதம் செண்டு என்று குறிப்பிட்டேன் அல்லவா? இந்த செண்டு சிந்து சமவெளி எழுத்தில் உள்ளது. பாண்டியன் ஒருவன் பாடலிலே தன் முன்னோர்கள் மேருவைச் செண்டால் அடித்ததைச் சொல்லியிருக்கிறான். அதெல்லாம் பிறகு பார்ப்போம். 20 ஆண்டுகள் இருக்கும் எழுதி. இப்போது தமிழ்த்தாத்தா சாமிநாதையரவர்கள் செண்டு என்ற சொல்லின் பொருளை தாம் அறிந்துகொண்டதை எழுதியிருக்கிறார்கள் அதனை வாசித்தறிவோம்.  ~நா. கணேசன்

    3. செண்டலங்காரர்

    வில்லிபுத்தூரார் பாரதம் தமிழிலே சுவையுடையவர் களுக்கு இனிமை தரும் காவியங்களில் ஒன்று. சங்ககாலத்திலே பாரதம் ஒன்று இருந்தது. ஆனால், உரையாசிரியர்களால் மேற்கோளாகக் காட்டப் பெற்றமையின் சில செய்யுட்கள் மாத்திரம் இப்போது உயிர்தரித்து நிற்கின்றன. அதற்குப் பிறகு தெள்ளாறெறிந்த நந்திவர்ம பல்லவன் காலத்தில் இயற்றப்பெற்ற பாரதம் ஒன்று உண்டு. அது முற் றும் கிடைக்கவில்லை. அதைப் படித்து இன்புறுவார் அரியர். பிற்காலத்தில் வில்லிபுத்தூரார் இயற்றிய பாரதம் தமிழர்களுடைய உள்ளத்தைக் கவர்ந்ததுபோல வேறு எந்தப் பாரதமும் கவர வில்லை. இப்பொழுதும் தமிழ்நாட்டுக் கிராமங்களிலே தமிழறிந்தோர் வில்லிபாரதப் பிரசங்கம் செய்வதைக் காணலாம். தமிழ்நூலை முறையாகப் பாடங் கேட்பவர்கள் வில்லிபாரதத்தைத் தவறாமற் கேட்பது வழக்கம்.

    நன் இளமையிலே அந்நூலைப் படித்தகாலத்தில் அதிலுள்ள சந்த அமைப்பைக் கண்டு வியந்தேன். அந்நூலின் நடையிலே ஒரு தனியான கம்பீரம் உள்ளது. இடத்துக்கேற்ற சந்தங்கள் அதில் மிக அழகாக அமைந்திருக்கின்றன. குதிரையின் கதியொலியும் தேரின் கடகடவோசையும் யானையின் முழக்கமும் அந்தச் சந்தங்களிலே இலிக்கும். வடமொழிச்சொற்களையும் தொடர்களையும் வில்லிபுத்தூரார் தடையின்றி மிகுதியாக எடுத்து ஆளுகின்றார்.

    சபாபருவத்திலே சூதுபோர்ச் சருக்கத்தில் தரும புத்திரர் சகுனியுடன் சூதாடித் தோற்ற வரலாறு சொல்லப்படுகிறது. சூதாட்டம் முடிந்தபிறகு துரியோதனன் அரசவைக்குத் திரௌபதியை அழைத்து வரும்வண்ணம் தன தம்பி துச்சாதனனுக்குக் கட்டளை-யிடுகிறான். காந்தாரியோடு இருந்த திரௌபதியை அவன் வலியப் பிடித்து இழுத்து வருகின்றான்.

      "தண்டார் விடலை தாயுரைப்பத்
            தாய்முன் னணுகித் தாமாரைக்கைச்
      செண்டால் அவள்பைங் குழல்பற்றித்
            தீண்டா னாகிச் செல்கின்றான்
      வண்டார் குழலு முடன்குலைய
            மானங் குலைய மனங்குலையக்
      கொண்டா ரிருப்ப ரென்றுநெறிக்
            கொண்டா ளந்தோ கொடியாளே"

    என்ற செய்யுளில், அவன் திரௌபதியைப் பற்றி இழுத்துச் செல்லும் செய்தி கூறப்படுகின்றது. "தன்னுடைய தாயாகிய காந்தாரி, 'நீ போய் வா' என்று கூற, துச்சாதனன் அன்னை போன்ற திரௌபதியின் முன் சென்று தன் கையிலுள்ள செண்டால் அவளது கூந்தலை பற்றிச் செல்லலானான். கொடிபோன்ற திரௌபதி அந்தோ! தன் குழல் குலைய மானங் குலைய மனங்குலையத் தான் செல்லுமிடத்தே தன் கணவர் இருப்பர் என்ற தைரியத்தோடு சென்றாள்" என்பது இச்செய்யுளின் பொருள்.

    திரௌபதி அக்காலத்தில் தீண்டாத நிலையில் இருந்தாளென்று தெரிகின்றது. பின்னே ஓரிடத்தில், 
    "தீண்டாத கற்புடைய செழுந்திருவை"

    என்று அந்நூலாசிரியரே குறிப்பிக்கின்றார். அதனால் தான் துச்சாதனன் அவளைக் கையாற் பற்றாமல் செண்டாற் பற்றிச் சென்றானென்று ஆசிரியர் கூறினார். இவ்விஷயங்களை யான் பலரிடத்தில் என் இளமையிலே கேட்டிருக்கிறேன். 
    'கைச் செண்டால் அவள்பைங் குழல்பற்றி'

    என்ற இடத்தில் குறிக்கப்பெற்ற செண்டு என்பதற்குப் பூச்செண்டு என்றே பொருள் செய்து வந்தனர். 'துச்சாதனன் கையில் பூச்செண்டு ஏது? திரௌபதி கூந்தலில் அணிந்திருந்த மாலையைப் பிடித்து இழுத்தான் என்று சொல்லலாமா? பாட்டில் தெளிவாகக் கைச்செண்டாலென்று சொல்லப் பட்டிருக்கிறதே. தீண்டாத நிலையில் உள்ள அவள் கூந்தலில் மாலை அணிவதும் கையில் செண்டு வைத்திருப்பதும் இயல்பல்லவே? செண்டென்பதற்குப் பந்தென்று ஒருபொருள் உண்டு. அதை அமைத்துப் பார்க்கலாமா? பந்துக்கு இங்கே என்ன சம்பந்தம்?' என்று இவ்வாறெல்லாம் எனக்கு அடிக்கடி ஐயங்கள் தோன்றிக்கொண்டே இருந்தன.

    திருவிளையாடற்புராணத்தில் சோமசுந்தரக் கடவுள் உக்கிரகுமாரருக்கு வேல் வளை செண்டு வழங்கியதாக ஒரு திருவிளையாடல் இருக்கிறது. அங்கே கூறப்படும் செண்டு எது? அந்தச் செண்டைக் கொண்டு அவர் மேருவை எறிந்ததாகப் புராணம் கூறுகின்றது. பலர் அதற்குப் பந்தென்றும், பூச்செண்டு போன்ற ஆயுதமென்றும் பொருள் கூறினர். ஐயனார் திருக்கரத்தில் செண்டு இருக்கிறதென்றும், கரிகாற்சோழன் இமயமலையைச் செண்டாலடித்துத் திரித்தானென்றும் சில செய்திகள் நூல்களால் தெரிந்தன. அந்தச் செண்டுகள் யாவை? பந்தா? மலர்ச்செண்டா? செண்டு போன்ற ஆயுதமா? எல்லாம் சந்தேகமாகவே இருந்தன. நான் பலரைக் கேட்டுப் பார்த்தேன். சமயம் போல அவர்கள் விடை பகர்ந்தார்கள்.

    சற்றேறக்குறைய நாற்பது வருஷங்களுக்கு முன், வழக்கமாக நான் செய்துவரும் தமிழ் யாத்திரையில் ஒரு முறை பொறையாறு முதலிய இடங்களுக்குப் போக நேர்ந்தது. என்னோடு இருந்து தமிழ்ப்பணிக்கு உதவிபுரிந்து வந்த திருமானூர்க் கிருஷ்ணையரென்பவருடன் அம்முறை புறப்பட்டேன். மாயூரத்தைக் கடந்து ஆறுமைல் தூரத்திலுள்ள ஆறுபாதி என்னும் ஊருக்கருகில் சென்று கொண்டிருந்தோம். அங்கே வழியில் கீழ்மேல் அக்கிரகாரத்துக்குப் பின்பக்கமாக வடபுறமுள்ள குளத்தின் கீழ்கரையில் ஒரு பெருமாள் கோயில் இருந்தது. அக்கோயிலின் வாசலில் அதனுடைய தர்ம கர்த்தாவும் வேறு சிலரும் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் இருந்த நிலையப் பார்த்தபோது யாரோ பெரிய உத்தியோகஸ்தர் ஒருவருடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டு நிற்பதாகத் தோற்றியது. எங்களைக் கண்டவுடன் தர்மகர்த்தா என்னை அவ்வுத்தியோகஸ்தராக எண்ணிக்கொண்டா ரென்று ஊகித்தேன். அந்தக் கலத்தில் உத்தியோகஸ்தராக இருந்தாலும் கோவிலுக்குப் போகும் போது வைதிகக் கோலத்தோடுதான் போவது வழக்கம். ஆதலின் நான் மிகவும் சாதாரண உடை யணிந்து செல்வதைக் கண்டும் அவர் என்னையே உத்தியோகஸ்தராக எண்ணிவிட்டார், "வாருங்கள், வாருங்கள்" என்று உபசரித்து வரவேற்றார்.

    யாரோ ஓர் உத்தியோகஸ்தர் அவ்வாலயத்தைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருந்தாராம். அதற்காகப் பெருமாளுக்கு அலங்காரம் செவ்வையாகச் செய்திருந்தார்கள். தர்மகர்த்தாவும் நல்ல உடைகளை உடுத்து அலங்காரம் செய்து கொண்டு நின்றனர். பிரஸாதங்களும் பெருமாளுக்கு நிவேதனம் செய்த வியாஜமாக உத்தியோகஸ்தரின் பொருட்டு ஸித்தமாக வைத்திருந்தனர். அவர்கள் நெடுநேரம் காத்திருந்தார்கள். உத்தியோகஸ்தர் வரவில்லை. அந்த நிலையிலே என்னைக் கண்டவுடன் அவரென்றோ அவரால் அனுப்பப்பட்டவரென்றோ தான் தீர்மானித்திருக்க வேண்டும். தர்மகர்த்தா எங்களை உள்ளே அழைத்துசு சென்றார். பெருமாளைத் தரிசனம் செய்து வைத்தார். அவர் எதிர்பார்த்தவர் நான் அல்லவென்று உடனிருந்தவரால் அறிந்து ஏமாந்து போனார்.

    ஆனாலும் அவர் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. கும்பகோணத்தில் நான் வேலையில் உள்ளவனென்று தெரிந்தவுடன் தம்முடைய பெருமை அங்கே பரவட்டுமென்று எண்ணியிருந்தாலும் இருக்கலாம். எப்படியாயினும் எங்களுக்கு எதிர் பாராதபடி திவ்ய தரிசனமும் வயிறார இனிய பிரஸாதங்களும் கிடைத்தன.

    தரிசனம் செய்தபோது பெருமாள் திருநாமம் ராஜகோபாலப் பெருமாளென்று அறிந்தேன். அவர் திருக்கரத்தில் பிரம்பைப்போல ஒன்று காணப்பட்டது. அதன் தலைப்பில் இரண்டு வளைவுகள் இருந்தன. நான் அதுகாறும் பெருமாள் திருக்கரத்தில் அத்தகைய ஒன்றைக் கண்டதில்லை; ஆதலால் தர்மகர்த்தாவை நோக்கி, "இது புதிதா யிருக்கிறதே; என்ன?" என்று கேட்டேன். "அது தான் செண்டு" என்று அவர் கூறினார். "செண்டா!" என்று சொல்லி அப்படியே சின்றுவிட்டேன். "எங்கே, அதை நன்றாகக் காட்டச் சொல்லுங்கள்" என்று வேண்டினேன்.

    கோயில் அர்ச்சகர் கற்பூர தீபத்தால் அந்தச் செண்டை நான் நன்றாகப் பார்க்கும்படி காட்டினார். நான் அதைக் கவனித்துப் பார்த்தேன். என் மனக்கண்முன் அப்போது திரௌபதியின் உருவம் வந்து நின்றது; துச்சாதனன் தலைப்பு வளைந்த பிரம்புபோன்ற ஒரு கருவியால் அவள் கூந்தலைப் பற்றி யிழுக்கும் காட்சி வந்தது. அடுத்தபடியாக உக்கிர குமாரர் மேருமலையை அந்தக் கருவியால் எறிந்து திரித்த தோற்றம் தோற்றியது. அவர் மறைந்தார். கரிகாலன் கையில் செண்டாயுதத் தோடு நின்றான். ஐயனாரும் நின்றார். அவர்கள் கைக ளில் எல்லாம் தலைப்பு வளைந்த பிரம்புபோன்ற கருவியைக் கண்டேன். சில நிமிஷங்கள் வரையில் இந்த அகக் காட்சிகளால் புறவுலகத்தை மறந்திருந்தேன்.

    அந்த அர்ச்சகர் காட்டிய கற்பூர தீபம் பெருமாள் திருக்கரத்திலிருந்த ஆயுதத்தை எனக்குத் தெளிவாகக் காட்டியது. அதனோடு நெடுங்காலமாக என் மனத்திலிருந்த சந்தேக இருளை அகற்றித் துச்சாதனன், உக்கிரகுமார், கரிகாலன், ஐயனாரென்பவர்கள் கையில் உள்ள கருவி இன்னது தானென்று அறியும்படியும் செய்தது.

    " ஐயா, நீங்கள் எனக்குப் பெரிய உபகாரம் செய்தீர்கள். பெருமாளின் தரிசனத்தால் எனக்கு ஒரு பெரிய லாபம் கிடைத்தது; என் மனம் சந்தோஷம் அடைந்தது. இதுவரையிலும் இந்தச் செண்டைப் பார்த்ததில்லை. உங்கள் தயையால் இதைப் பார்த்தேன்" என்று தர்மகர்த்தாவை நோக்கிக் கூறினேன்.

    " இந்தப் பெருமாளும் மன்னார்குடியில் எழுந்தருளியிரு்க்கும் பெருமாளும் ஒரே அச்சு. அங்கும் பெருமாளின் திருக்கையில் செண்டு உண்டு. செண்டலங்காரப் பெருமாள் என்றும் அவரது திருநாமம் வழங்கும்" என்று அவர் கூறினார்.

    " சந்தோஷம். தங்களுக்கு மிகவும் வந்தனம்" என்று கூறி விடை பெற்றுக்கொணடேன்.

    அன்றுமுதல் என் சந்தேகம் பறந்துபோய் விட்டது. பிறகு ஆராய்ச்சி செய்யத் தமிழ் இலக்கியத்தில் பல செண்டுகள் கிடைத்தன. அவற்றை நான் மிகவும் தெளிவாக அறிந்துகொண்டேன். மன்னார்குடிப் பெருமாளுக்குச் செண்டலங்காரப் பெருமாளென்னும் திருநாமம் உண்யென்று தர்ம கர்த்தா கூறியதை இலக்கிய வாயிலாகவும் நான் உறுதி செய்து கொண்டேன். ' செண்டலங்காரப் பெருமாள் வண்ணம்' என்ற பிரபந்த மொன்றை நான் படித்தபோது அந்த நினைவு எனக்கு வந்தது. சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கரத்தில் உள்ள செண் டும் ஓர் ஆயுதமென்று தெரிந்து கொண்டேன். பெருமாள் தரிசனத்தின் பயன் கைமேல் கிடைத்தது.

    http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0432.html

தேமொழி

unread,
May 19, 2015, 1:17:02 AM5/19/15
to mint...@googlegroups.com, naa.g...@gmail.com
இப்பதிவில் தட்டச்சு பிழைகள் உள்ளனவே ...

இதோ மன்னை ராஜகோபாலசாமியும் அவர் கையில் உள்ள செண்டும் ...

..... தேமொழி

N. Ganesan

unread,
May 19, 2015, 1:27:10 AM5/19/15
to mint...@googlegroups.com, vallamai

On Monday, May 18, 2015 at 10:17:02 PM UTC-7, தேமொழி wrote:
இப்பதிவில் தட்டச்சு பிழைகள் உள்ளனவே ...

ஆம். பல தட்டுப்பிழைகள்.

அப்படித்தான் எல்லா தளங்களிலும் உள்ளது. பழைய தமிழ் படிப்பார் யார்? சுவைப்பார் யார்? மிகக் குறைவே.
மதுரை முன்னியம், இணையப் பல்கலை இன்னும் எல்லா தட்டச்சலும் போற்றப்படவேண்டியவை.
பிழைகள் இருக்கும். காலம் சரிசெய்யும். அதற்குத்தான், ஐயமுள்ள இடங்களை சரிபார்க்க பிடிஎப் கோப்புகள்
வரவேண்டும்.

அரசாங்கமும், அதற்கு அறிவுறுத்த வல்ல பண்ணாடிகளும் 
(அதிகாரி என்பதற்காக தூய தமிழ்ச்சொல். பண்(ணு-ணை) நாட்டுவான் பண்ணாடி)
தூண்டவும், வேண்டவும் இடையறாது செய்தால் நிகழும்.
அரசு ஒரு கோடி ரூ. பிடிஎப், தட்டச்சு என செலவிடல் அரைசுக்கு peanuts (US expression).
வெறும் அழுகிய அரிசி, நைந்துபோன சீலை, குவார்ட்டர், கால்கிலோ பிரியாணி
என வோட்டு அரசியல் செய்தால் போறாது. தமிழ் தமிழ் என்று பதவிக்கு வருவோர்
கொஞ்சம் தமக்கு சொத்துதரும் தமிழ்த்தாய் வாழவும், ஆய்வுகள் வளரவும் உதவணும்.

கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே வேரிற்பழுத்த பலா! - புரட்சிக்கவி.

நா. கணேசன்

சொ. வினைதீர்த்தான்

unread,
May 19, 2015, 1:50:34 AM5/19/15
to mintamil, ponvenk...@gmail.com
2015-05-19 2:22 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
எனக்கு இவர்களது சிலை போல தோற்றம் தருகிறது ...

1.சங்கரர் காலம் கிருத்து பிறப்புக்கு முன்னர் என்கிறார்கள். ஆனால் அவருடைய சிலை வடிவம் மிக பிற்பட்ட காலத்தியதாகவே காணக்கிடைக்கிறதென்று அறிகிறேன்.

2.குறிப்பிட்ட சிலையில் தலையில் தலைமுடியிருப்பது போலவும் காணப்படுகிறது.
எனவே சங்கரர் சிலையாக இருக்க வாய்ப்பில்லை.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

N. Ganesan

unread,
May 19, 2015, 1:52:52 AM5/19/15
to mint...@googlegroups.com, ponvenk...@gmail.com
மொட்டை அடித்து முக்காடு போட்டுள்ள தற்கால சங்கரர் சிலை.

Innamburan S.Soundararajan

unread,
May 19, 2015, 1:56:24 AM5/19/15
to mintamil
தமிழ்த்தாத்தாவுக்கு 'செண்டை' பற்றி புரியவில்லை என்ற கவலை. மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி கையில் அதை கண்டு, மனம் மகிழ்ந்தார்.

--

Nagarajan Vadivel

unread,
May 19, 2015, 3:16:52 AM5/19/15
to மின்தமிழ்
தமிழ்நாட்டுச் சமண சிற்பங்களை அடையாளம்காண ஒரு சிறு குறிப்பு

​இங்கு நடந்த திருவள்ளுவர் சமணரா ஆலிழைமீது அமர்ந்த தேவர் ஆதிநாதர் போன்ற ஆய்வுக்கட்டுரைகளுக்கு இது எதிராக இருந்தால் கம்பெனி பொறுப்பல்ல.  இந்தக்கட்டுரை உடான்ஸ் என்றே உண்மை முனைவர்கள் அறிக
இணையப்பன்
டிஸ்கி: இங்கு எக்காரணம்கொண்டுக் கூஸ் கூஸ் என்று கூவ வேண்டாம்

Banukumar Rajendran

unread,
May 19, 2015, 3:32:10 AM5/19/15
to மின்தமிழ்
முதலில், இது இந்த இழைக்கு சம்பந்தமில்லாதது! :-))

2015-05-19 12:46 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
தமிழ்நாட்டுச் சமண சிற்பங்களை அடையாளம்காண ஒரு சிறு குறிப்பு

​இங்கு நடந்த திருவள்ளுவர் சமணரா ஆலிழைமீது அமர்ந்த தேவர் ஆதிநாதர் போன்ற ஆய்வுக்கட்டுரைகளுக்கு இது எதிராக இருந்தால் கம்பெனி பொறுப்பல்ல.

ஆலிழைமீது அமர்ந்த தேவர் எனக்குத் தெரிந்து, சமணத்தில் யாருமில்லை. அப்படி, எந்த நூலிலோ சொல்லியிருந்தால், அவற்றையும் கொடுக்கவும். (தனி இழை ப்ளீஸ்)

:-)

அப்படி என்னத்தை இந்த கட்டுரை சொல்லுது, ஆய்வுக் கட்டுரைக்கு எதிராகயிருக்கிறது? :-))

இரா.பானுகுமார்

Nagarajan Vadivel

unread,
May 19, 2015, 3:36:34 AM5/19/15
to மின்தமிழ்
அப்படியா பொருந்தவில்லையா அப்ப அப்ப்டியே ஒதுக்கிவிடவும்.  மின்தமிழில் மறதிநோய் வரவர (எனக்கு) அதிகமாகிப்போச்சு
இணையப்பன்

N. Ganesan

unread,
May 19, 2015, 11:54:17 PM5/19/15
to mint...@googlegroups.com, housto...@googlegroups.com, vallamai
செண்டு என்பது முற்றிலும் உலோகத்தால் ஆன ஆயுதம். இதனை metallic hook என மொழிபெயர்ப்பர். கோவலர்களுக்கு கன்றுகாலிகளுக்கு இலைதழையை உயரமான மர வாதுகளில் இருந்து கீழே இழுத்துத் தர உதவுவது. அதனால் கிருஷ்ணன் கையில் இருக்கும். கிருஷ்ணனைப் போல வடிக்கப்பட்டவர் சுந்தரர். அவர் கையிலும் செண்டு உண்டு. பாலகிருஷ்ணனைப் போல வடிக்கப்பட்டவர் சம்பந்தர். 

செண்டு தனியான ஆயுதம். மிகப்பழையது. செண்டு ‘hook' கதாயுதமோ, சாட்டையோ அல்ல. சாட்டை - கயிற்றால் ஆவது.
செண்டில் கயிறு இல்லை, முழுதும் உலோகம். சாட்டையால் எப்படி திரௌபதி கூந்தலை பற்றியிழுக்க முடியும்? பார்க்க: உவேசா கட்டுரை.

      ”திரௌபதி அக்காலத்தில் தீண்டாத நிலையில் இருந்தாளென்று தெரிகின்றது. பின்னே ஓரிடத்தில், 
      "தீண்டாத கற்புடைய செழுந்திருவை"

      என்று அந்நூலாசிரியரே குறிப்பிக்கின்றார். அதனால் தான் துச்சாதனன் அவளைக் கையாற் பற்றாமல் செண்டாற் பற்றிச் சென்றானென்று ஆசிரியர் கூறினார். இவ்விஷயங்களை யான் பலரிடத்தில் என் இளமையிலே கேட்டிருக்கிறேன். 
      'கைச் செண்டால் அவள்பைங் குழல்பற்றி'

      என்ற இடத்தில் குறிக்கப்பெற்ற செண்டு என்பதற்குப் பூச்செண்டு என்றே பொருள் செய்து வந்தனர். 'துச்சாதனன் கையில் பூச்செண்டு ஏது? திரௌபதி கூந்தலில் அணிந்திருந்த மாலையைப் பிடித்து இழுத்தான் என்று சொல்லலாமா? பாட்டில் தெளிவாகக் கைச்செண்டாலென்று சொல்லப் பட்டிருக்கிறதே. தீண்டாத நிலையில் உள்ள அவள் கூந்தலில் மாலை அணிவதும் கையில் செண்டு வைத்திருப்பதும் இயல்பல்லவே? செண்டென்பதற்குப் பந்தென்று ஒருபொருள் உண்டு. அதை அமைத்துப் பார்க்கலாமா? பந்துக்கு இங்கே என்ன சம்பந்தம்?' என்று இவ்வாறெல்லாம் எனக்கு அடிக்கடி ஐயங்கள் தோன்றிக்கொண்டே இருந்தன.”

      ஒரு திருமந்திரம்:
      சூலந்தண் டொள்வாள் சுடர்பர ஞானமாம்
      வேலம்பு தமருகம் மாகிளி வில்செண்டு
      காலம்பூப் பாசம் மழுகத்தி கைக்கொண்டு
      கோலஞ்சேர் சங்கு குவிந்தகை எண்ணதே.

    நா. கணேசன்

    N. Ganesan

    unread,
    May 19, 2015, 11:56:46 PM5/19/15
    to mint...@googlegroups.com, housto...@googlegroups.com, vall...@googlegroups.com
    செண்டு என்பது முற்றிலும் உலோகத்தால் ஆன ஆயுதம். இதனை metallic hook என மொழிபெயர்ப்பர். கோவலர்களுக்கு கன்றுகாலிகளுக்கு இலைதழையை உயரமான மர வாதுகளில் இருந்து கீழே இழுத்துத் தர உதவுவது. அதனால் கிருஷ்ணன் கையில் இருக்கும். கிருஷ்ணனைப் போல வடிக்கப்பட்டவர் சுந்தரர். அவர் கையிலும் செண்டு உண்டு. பாலகிருஷ்ணனைப் போல வடிக்கப்பட்டவர் சம்பந்தர். 

    செண்டு தனியான ஆயுதம். மிகப்பழையது. செண்டு ‘hook' கதாயுதமோ, சாட்டையோ அல்ல. சாட்டை - கயிற்றால் ஆவது.
    செண்டில் கயிறு இல்லை, முழுதும் உலோகம். சாட்டையால் எப்படி திரௌபதி கூந்தலை பற்றியிழுக்க முடியும்? பார்க்க: உவேசா கட்டுரை.

    நா. கணேசன்

    முருகன் உக்கிரபாண்டியனாக மேருமலையை செண்டால் அடித்த வரலாறு:
    வாரியார் விளக்குகிறார். 
    செண்டை எறிந்திடு கதியோனே...
    பாண்டிய நாட்டில் மழையில்லாமையால்சொக்க நாதர் கனவில் சொன்னபடி, உக்கிர பாண்டியன்மேரு மலையைச் செண்டாகிய பிரம்பால் அடித்துப்  பொன் பெற்ற திருவிளையாடலைக் குறிக்கும்.

    [செண்டு என்பது ஒரு நுனியில் இரண்டு வளவுகளுடன் இருக்கும் ஒரு வித ஆயுதம். மாயூரத்திற்கு அருகில் இருக்கும் ஆறுபாதி ஊரில் இருக்கும் ராஜகோபலஸ்வாமி பெருமாளின் கையில் இருக்கும் ஆயுதம் செண்டே ஆகும். மன்னார்குடியில்செண்டலங்காரப் பெருமாள் கையில் இருப்பதும் செண்டு. சுந்தர மூர்த்தி நாயனார் கையில் வைத்திருக்குகம் ஆயுதமும் இதுவேதான்.  புதுவண்டி பாளையம் கடலூர் சிவ சுப்பிரமணிய ஸ்வாமி ஆலயத்தில் ஸ்வாமி சிவனிடமிருந்து மேருவை அடிப்பதற்காக செண்டு வாங்கும் திருவிழா இன்றும் நடைபெருகிறது

    கனகந்திரள்

    கனகந்திரள் கின்றபெ ருங்கிரி
    தனில்வந்துத கன்தகன் என்றிடு
    கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு        கதியோனே
    கடமிஞ்சிஅ நந்தவி தம்புணர்
    கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு
    கரியின்றுணை என்றுபி றந்திடு         முருகோனே
    பனகந்துயில் கின்றதி றம்புனை
            கடல்முன்புக டைந்தப ரம்பரர்
            படரும்புயல் என்றவர் அன்புகொள்       மருகோனே
    பலதுன்பம்உ ழன்றுக லங்கிய
            சிறியன்புலை யன்கொலை யன்புரி
            பவமின்றுக ழிந்திட வந்தருள்           புரிவாயே
    அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி
            புரமுந்திரி வென்றிட இன்புடன்
            அழலுந்தந குந்திறல் கொண்டவர்       புதல்வோனே
    அடல்வந்துமு ழங்கியி டும்பறை
            டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
            அரிர்கின்றிட அண்டநெ ரிந்திட           வருசூரர்
    மனமுந்தழல் சென்றிட அன்றவர்
            உடலுங்குட லுங்கிழி கொண்டிட
            மயில்வென்றனில் வந்தரு ளுங்கள்     பெரியோனே
    மதியுங்கதி ருந்தட வும்படி
            உயர்கின்றவ னங்கள்பொ ருந்திய
            வளமொன்றுப ரங்கிரி வந்தருள்        பெருமாளே.

    -திருப்பரங்குன்றம்

    பதம் பிரித்தலும் பதவுரையும்

    கனகம் திரள்கின்ற பெரும் கிரி
    தனில் வந்து தகன் தகன் என்றிடு
    கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு கதியோனே

    கனகம் திரள்கின்ற = பொன் கொழிக்கின்ற. பெரும் கிரி தனில் = பெரிய மலையாகிய மேரு மலையை. வந்து = வந்தடைந்து.தகன் தகன் என்றிடு = தகன் தகன் என்று.(தக தக என மின்னி)கதிர் மிஞ்சிய = ஒளி அதிகமாக வீசிய. செண்டை = தலைப்பு வளைந்த பிரம்பு போன்ற கருவியை. எறிந்திடு கதியோனே =எறிந்து (பொன் பெற்ற திருவிளையாடலைப் புரிந்த) சிறப்பு வாய்ந்தவனே.

    கடம் மிஞ்சி அநந்த விதம் புணர்
    கவளம் தனை உண்டு வளர்ந்திடு
    கரியின் துணை என்று பிறந்திடு முருகோனே

    கடம் மிஞ்சி = மதம் அதிகரித்து. அநந்த விதம் புணர் =பலவிதமாகப் புணர்ச்சியை மேற்கொண்டு. கவளம் தனை உண்டு = வாயளவு கொண்ட உணவை உண்டு. வளர்ந்திடு =வளர்ந்த. கரியின் துணை என்று = யானையாகிய விநாயகனின் துணைவன் என்று. பிறந்திடு = பிறந்திட்ட. முருகோனே =அழகு வாய்ந்தவனே.

    பனகம் துயில்கின்ற திறம் புனை
    கடல் முன்பு கடைந்த பரம்பரர்
    படரும் புயல் என்றவர் அன்பு கொள் மருகோனே

    பனகம் துயில்கின்ற = பாம்பாகிய ஆதி சேடன் மேல் அரிதுயில் கொள்ளும். திறம் புனை = தன்மையைக் கொண்ட. கடல் முன்பு கடைந்த = திருப்பாற் கடலை முன்பு கடைந்த. பரம்பரர் =கடவுளும். படரும் புயல் என்றவர் = விரிந்த மேகவண்ணனுமாகிய திருமால். அன்பு கொள் மருகோனே =அன்புகொண்ட மருகனே.

    பல துன்பம் உழன்று கலங்கிய
    சிறியன் புலையன் கொலையன் புரி
    பவம் இன்று கழிந்திட வந்து அருள் புரிவாயே

    பல துன்பம் உழன்று = பலவிதமான துன்பங்களால் அலைச்சல் உற்று. கலங்கிய = மனக் கலக்கம் அடைந்த. சிறியன் =சிறியேனும். புலையன் = புலைத் தொழிலைக் கொண்டவனும்.கொலையன் = கொலைத் தொழிலைச் செய்பவனும் ஆகிய நான் செய்யும். பவம் இன்று கழிந்திட = பாவம் இன்று ஒழிந்திட.வந்து அருள் புரிவாயே = வந்து திருவருள் செய்வாயாக

    அனகன் பெயர் நின்று உருளும் திரி
    புரமும் திரி வென்றிட இன்புடன்
    அழல் உந்த நகும் திறல் கொண்டவர் புதல்வோனே

    அனகன் பெயர் = தூயவன் என்ற பெயர் வாய்ந்து. நின்று உருளும் = நின்று உருண்டு. திரி புரமும் திரி =முப்புரங்களையும் உலாவி. வென்றிட = வெல்லும்படி.இன்புடன் = இன்ப நிலையில். அழல் உந்த = தீ வெளிப்பட.நகும் = சிரித்த. திறல் கொண்டவர் = திறல் கொண்டவராகிய சிவபெருமானின். புதல்வோனே = மகனே.

    அடல் வந்து முழங்கி இடும் பறை
    டுடுடுண்டுடு.....................என 
        அதிர்கின்றிட அண்டம் நெரிந்திட வரு சூரர்

    அடல் வந்து = வலிமையுடன். முழங்கிடும் பறை =முழங்குகின்ற பறை வாத்தியங்கள். டுடுடுண்டுடு.... என = இவ்வொலியுடன். அதிர்கின்றிட = அதிர்ந்த. அண்டம் நெரிந்திட = அண்டங்கள் நெரிந்து போகும்படி. வரு சூரர் =வருகின்ற அசுரர்களுடைய.

    மனமும் தழல் சென்றிட அன்று அவர்
    உடலும் குடலும் கிழி கொண்டிட
    மயில் வென் தனில் வந்து அருளும் கள் பெரியோனே

    மனமும் தழல் சென்றிட = மனத்தில் எரி பாயவும். அன்று =அப்போது. அவர் = அவர்களுடைய. உடலும் குடலும் கிழி கொண்டிட = உடலும்குடலும் கிழியும்படி. மயில் = மயிலின்.வென் தனில் = முதுகில். வந்தருளும் = வந்து அருளிய. கள் பெரியோனே = பெருமை வாய்ந்த பெரியோனே.

    மதியும் கதிரும் தடவும்படி
    உயர்கின்ற வனங்கள் பொருந்திய
    வளம் ஒன்றும் பரங்கிரி வந்து அருள் பெருமாளே.

    மதியும் = சந்திரனும். கதிரும் = சூரியனும். தடவும்படி =தடவிச் செல்லும் அளவுக்கு. உயர்கின்ற = உயர்ந்துள்ள.வனங்கள் பொருந்திய = சோலைகள் பொருந்தியுள்ள. வளம் ஒன்று(ம்) வளமை பொருந்திய. பரங்கிரி வந்து அருள் பெருமாளே = திருப்பரங்கிரியில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே.

    சுருக்க உரை

    பொன் திரண்டுள்ள மேரு மலையை ஒளி வீசும்படி செண்டை எறிந்து திருவிளையாடல் புரிந்த திறலோனே. மதம் மிகுந்துப் பல வகையாகப் புணர்வதும்கவளமாக உண்டு வளருவதுமான யானை உருவம் கொண்ட விநாயகனின் துணைவனே. பாம்பின் மேல் துயில்பவரும்கடலைக் கடைந்தவரும் ஆகிய திருமாலுக்கு அன்பான மருகனே. பல துன்பங்களில் சுழற்சி உற்று கலங்கிய சிறியேனும்புலையனும்கொலைஞனுமாகிய அடியேனுடைய பாவம் இன்று நீங்க வந்து அருள் புரிவாயாக. 
    தூயவனாகிய சிவனின் மகனே. பறைகள் முழங்க வரும் சூரர்களை அழித்து மயில் மேல் வந்தருளிய பெருமை வாய்ந்தவனே. சந்திரனும் சூரியனும் தடவிச் செல்லும்படி உயர்ந்த சோலைகள் மிகுந்த திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. என் பாவம் ஒழிய வந்து அருள் புரிவாயாக.

    விளக்கக் குறிப்புகள்
    அ. செண்டை எறிந்திடு கதியோனே...
    பாண்டிய நாட்டில் மழையில்லாமையால்சொக்க நாதர் கனவில் சொன்னபடி, உக்கிர பாண்டியன்மேரு மலையைச் செண்டாகிய பிரம்பால் அடித்துப்  பொன் பெற்ற திருவிளையாடலைக் குறிக்கும்.

    [செண்டு என்பது ஒரு நுனியில் இரண்டு வளவுகளுடன் இருக்கும் ஒரு வித ஆயுதம். மாயூரத்திற்கு அருகில் இருக்கும் ஆறுபாதி ஊரில் இருக்கும் ராஜகோபலஸ்வாமி பெருமாளின் கையில் இருக்கும் ஆயுதம் செண்டே ஆகும். மன்னார்குடியில்செண்டலங்காரப் பெருமாள் கையில் இருப்பதும் செண்டு. சுந்தர மூர்த்தி நாயனார் கையில் வைத்திருக்குகம் ஆயுதமும் இதுவேதான்.  புதுவண்டி பாளையம் கடலூர் சிவ சுப்பிரமணிய ஸ்வாமி ஆலயத்தில் ஸ்வாமி சிவனிடமிருந்து மேருவை அடிப்பதற்காக செண்டு வாங்கும் திருவிழா இன்றும் நடைபெருகிறது]
    ஆ. பனகம் துயில்கின்ற திறம்....
        பனகம் = பாம்பு (ஆதிசேடன்).
    இ. மயில் வென் தனில்.....
        வென் = முதுகு.  

    தேமொழி

    unread,
    May 20, 2015, 12:20:13 AM5/20/15
    to mint...@googlegroups.com, naa.g...@gmail.com
    கீழுள்ள பகுதி மட்டுமே போதுமே....

    அதிகப்படி  தகவல் பெரும்பாலும் ஆர்வத்தைக் குறைக்கும், விரும்புபவர்கள் சுட்டி வழியே சென்று படித்துக் கொள்வார்கள்.  மற்றவர்களுக்கு முக்கியக் குறிப்பு வரும் இப்பகுதி போதுமென்பது எனது கருத்து...

    ..... தேமொழி 

    On Tuesday, May 19, 2015 at 8:56:46 PM UTC-7, N. Ganesan wrote:
    முருகன் உக்கிரபாண்டியனாக மேருமலையை செண்டால் அடித்த வரலாறு:
    வாரியார் விளக்குகிறார். 
    செண்டை எறிந்திடு கதியோனே...
    பாண்டிய நாட்டில் மழையில்லாமையால்சொக்க நாதர் கனவில் சொன்னபடி, உக்கிர பாண்டியன்மேரு மலையைச் செண்டாகிய பிரம்பால் அடித்துப்  பொன் பெற்ற திருவிளையாடலைக் குறிக்கும்.

    [செண்டு என்பது ஒரு நுனியில் இரண்டு வளவுகளுடன் இருக்கும் ஒரு வித ஆயுதம். மாயூரத்திற்கு அருகில் இருக்கும் ஆறுபாதி ஊரில் இருக்கும் ராஜகோபலஸ்வாமி பெருமாளின் கையில் இருக்கும் ஆயுதம் செண்டே ஆகும். மன்னார்குடியில்செண்டலங்காரப் பெருமாள் கையில் இருப்பதும் செண்டு. சுந்தர மூர்த்தி நாயனார் கையில் வைத்திருக்குகம் ஆயுதமும் இதுவேதான்.  புதுவண்டி பாளையம் கடலூர் சிவ சுப்பிரமணிய ஸ்வாமி ஆலயத்தில் ஸ்வாமி சிவனிடமிருந்து மேருவை அடிப்பதற்காக செண்டு வாங்கும் திருவிழா இன்றும் நடைபெருகிறது

    கனகந்திரள்

    கனகந்திரள் கின்றபெ ருங்கிரி
    தனில்வந்துத கன்தகன் என்றிடு
    கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு        கதியோனே
    கடமிஞ்சிஅ நந்தவி தம்புணர்
    கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு
    கரியின்றுணை என்றுபி றந்திடு         முருகோனே
    பனகந்துயில் கின்றதி றம்புனை
            கடல்முன்புக டைந்தப ரம்பரர்
            படரும்புயல் என்றவர் அன்புகொள்       மருகோனே
    -திருப்பரங்குன்றம்

    பதம் பிரித்தலும் பதவுரையும்

    கனகம் திரள்கின்ற பெரும் கிரி
    தனில் வந்து தகன் தகன் என்றிடு
    கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு கதியோனே

    கனகம் திரள்கின்ற = பொன் கொழிக்கின்ற. பெரும் கிரி தனில் = பெரிய மலையாகிய மேரு மலையை. வந்து = வந்தடைந்து.தகன் தகன் என்றிடு = தகன் தகன் என்று.(தக தக என மின்னி)கதிர் மிஞ்சிய = ஒளி அதிகமாக வீசிய. செண்டை = தலைப்பு வளைந்த பிரம்பு போன்ற கருவியை. எறிந்திடு கதியோனே =எறிந்து (பொன் பெற்ற திருவிளையாடலைப் புரிந்த) சிறப்பு வாய்ந்தவனே.

    கடம் மிஞ்சி அநந்த விதம் புணர்
    கவளம் தனை உண்டு வளர்ந்திடு
    கரியின் துணை என்று பிறந்திடு முருகோனே

    கடம் மிஞ்சி = மதம் அதிகரித்து. அநந்த விதம் புணர் =பலவிதமாகப் புணர்ச்சியை மேற்கொண்டு. கவளம் தனை உண்டு = வாயளவு கொண்ட உணவை உண்டு. வளர்ந்திடு =வளர்ந்த. கரியின் துணை என்று = யானையாகிய விநாயகனின் துணைவன் என்று. பிறந்திடு = பிறந்திட்ட. முருகோனே =அழகு வாய்ந்தவனே.

    சுருக்க உரை

    பொன் திரண்டுள்ள மேரு மலையை ஒளி வீசும்படி செண்டை எறிந்து திருவிளையாடல் புரிந்த திறலோனே. மதம் மிகுந்துப் பல வகையாகப் புணர்வதும்கவளமாக உண்டு வளருவதுமான யானை உருவம் கொண்ட விநாயகனின் துணைவனே. பாம்பின் மேல் துயில்பவரும்கடலைக் கடைந்தவரும் ஆகிய திருமாலுக்கு அன்பான மருகனே. பல துன்பங்களில் சுழற்சி உற்று கலங்கிய சிறியேனும்புலையனும்கொலைஞனுமாகிய அடியேனுடைய பாவம் இன்று நீங்க வந்து அருள் புரிவாயாக. 
    தூயவனாகிய சிவனின் மகனே. பறைகள் முழங்க வரும் சூரர்களை அழித்து மயில் மேல் வந்தருளிய பெருமை வாய்ந்தவனே. சந்திரனும் சூரியனும் தடவிச் செல்லும்படி உயர்ந்த சோலைகள் மிகுந்த திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. என் பாவம் ஒழிய வந்து அருள் புரிவாயாக.

    விளக்கக் குறிப்புகள்
    அ. செண்டை எறிந்திடு கதியோனே...
    பாண்டிய நாட்டில் மழையில்லாமையால்சொக்க நாதர் கனவில் சொன்னபடி, உக்கிர பாண்டியன்மேரு மலையைச் செண்டாகிய பிரம்பால் அடித்துப்  பொன் பெற்ற திருவிளையாடலைக் குறிக்கும்.

    [செண்டு என்பது ஒரு நுனியில் இரண்டு வளவுகளுடன் இருக்கும் ஒரு வித ஆயுதம். மாயூரத்திற்கு அருகில் இருக்கும் ஆறுபாதி ஊரில் இருக்கும் ராஜகோபலஸ்வாமி பெருமாளின் கையில் இருக்கும் ஆயுதம் செண்டே ஆகும். மன்னார்குடியில்செண்டலங்காரப் பெருமாள் கையில் இருப்பதும் செண்டு. சுந்தர மூர்த்தி நாயனார் கையில் வைத்திருக்குகம் ஆயுதமும் இதுவேதான்.  புதுவண்டி பாளையம் கடலூர் சிவ சுப்பிரமணிய ஸ்வாமி ஆலயத்தில் ஸ்வாமி சிவனிடமிருந்து மேருவை அடிப்பதற்காக செண்டு வாங்கும் திருவிழா இன்றும் நடைபெருகிறது]
    ஆ. பனகம் துயில்கின்ற திறம்....
        பனகம் = பாம்பு (ஆதிசேடன்).
    இ. மயில் வென் தனில்.....

    N. Ganesan

    unread,
    May 20, 2015, 12:54:34 AM5/20/15
    to mint...@googlegroups.com, housto...@googlegroups.com, vall...@googlegroups.com
    தண்ட வாளியைத் தக்கன்றன் வேள்வியைச்
    செண்ட தாடிய
    தேவர கண்டனைக்
    கண்டு கண்டிவள் காதலித் தன்பதாய்க்
    கொண்டி யாயின வாறென்றன் கோதையே.

    ------------------------------------------------

    பண்ட டித்தவத் தார்பயில் வாற்றொழும்
    தொண்ட ருக்கெளி யாய்திரு வாலவாய்
    அண்ட னேயமண் கையரை வாதினில்
    செண்ட டித்துள றத்திரு வுள்ளமே.

    -----------------------

    நளவெண்பா:
    போர்வாய் வடிவேலால் போழப் படாதோரும்
    சூர்வாய் மதரரிக்கண் தோகாய்கேள்-பார்வாய்ப்
    பருத்ததோர் மால்வரையைப் பண்டொருகால் செண்டால்

    திரித்தகோ இங்கிருந்த சேய்.

    நா. கணேசன்

    Dev Raj

    unread,
    May 20, 2015, 1:03:21 AM5/20/15
    to mint...@googlegroups.com
    On Tuesday, 19 May 2015 20:54:17 UTC-7, N. Ganesan wrote:
    செண்டு என்பது முற்றிலும் உலோகத்தால் ஆன ஆயுதம். இதனை metallic hook என மொழிபெயர்ப்பர். கோவலர்களுக்கு கன்றுகாலிகளுக்கு இலைதழையை உயரமான மர வாதுகளில் இருந்து கீழே இழுத்துத் தர உதவுவது. 

    சுரிகையும் தெறிவில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன் மார்கொண்டோட,
    ஒருகையால் ஒருவன்தன் தோளை யூன்ற....

    இந்தப் பாசுரம் உங்கள் கருத்துக்குப் பொருந்துவது; திரு லோகசுந்தரம் ஐயா முன்பு
    எடுத்துக்காட்டிய பாடல்தான்; ஆயர்க்கான தொழிற்கலன் என்று தெரிகிறது.
    துரட்டி போன்ற கருவி என்றே கொள்ளலாம். ஆனால் கண்ணனுக்குப் பொருந்துவது 
    ஐயனாருக்கும், உக்ர பாண்டியருக்கும் பொருந்தவில்லை. 

    ”செண்டுகோல் - நுனியில் பூஞ்செண்டு கோத்துள்ள விலாஸதண்டம்.” எனும்
    உரை பொருத்தமானதா ?

    ஆயரின் தொழிற்கலன் போர்செய்யப் பயனாகுமா ? வலிமை வாய்ந்த எதிரியை மோதுவதற்கு
    உதவுமா ?

    பிற இலக்கியப் பகுதிகளோடு மேலும் ஆராய்தல் வேண்டும்

    தேவ் 

    Aragalur pon.venkatesan

    unread,
    May 20, 2015, 5:15:04 AM5/20/15
    to mint...@googlegroups.com
    இந்த சிலை,,,,,,,,,,,,,, 1.சண்டிகேஸ்வரர் ,(அ) சமண சாத்தன்(அ) அய்யனார்(அ) வேறு....இதில் எது அய்யா சரியானது..? இது கோவிலில் இல்லாமல் ஒரு அகழியின் ஓரம் இருப்பதால் குழப்பம்

    18 மே, 2015 ’அன்று’ 6:29 பிற்பகல் அன்று, ponvenkatesan64 <ponvenk...@gmail.com> எழுதியது:

    On Monday, 18 May 2015 18:22:27 UTC+5:30, ponvenkatesan64 wrote:
    மயிலா..?இந்த சிலையில் இருக்கா சார்..?

    On Monday, 18 May 2015 13:54:58 UTC+5:30, myself wrote:
    மயில் வாகனம் இருக்கிறாப்போல் தெரிகிறதே! முருகன்?
    2015-05-18 12:37 GMT+05:30 Aragalur pon.venkatesan <ponvenk...@gmail.com>:
    அனைவருக்கும் வணக்கம் சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம்  ஆறகழூரான என் ஊரில் ஓர் அகழியின் ஓரம் இந்த சிலை உள்ளது..
    இது சண்டிகேஸ்வரர் எனவும் சமண சாத்தன் எனவும் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன உண்மையிலே இவர் யார் அய்யா..?

    --
    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
    For more options, visit https://groups.google.com/d/optout.

    --
    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/omLwP36riYI/unsubscribe.
    To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

    Aragalur pon.venkatesan

    unread,
    May 20, 2015, 5:22:20 AM5/20/15
    to mint...@googlegroups.com
    விரிவான விளக்கத்துக்கு நன்றி அய்யா

    19 மே, 2015 ’அன்று’ 10:32 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

    --
    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/omLwP36riYI/unsubscribe.
    To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

    வேந்தன் அரசு

    unread,
    May 20, 2015, 5:51:19 AM5/20/15
    to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com
    கையில் இருப்பது எதுவும் செண்டு என பொருள் கொள்ளலாம்.

    --
    வேந்தன் அரசு
    வள்ளுவம் என் சமயம்

    Aragalur pon.venkatesan

    unread,
    May 20, 2015, 6:03:08 AM5/20/15
    to mint...@googlegroups.com
    ஆயுதங்கள் எல்லாவுமே  செண்டு ஆகுமா அய்யா..? 

    --
    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/omLwP36riYI/unsubscribe.
    To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

    Nagarajan Vadivel

    unread,
    May 20, 2015, 6:32:18 AM5/20/15
    to மின்தமிழ்

    சக்கரப் பெருமாள் என்றழைக்கப்படும் இச்சிற்பத்தில் விஷ்ணுவின் படைகள் அனைத்தும் உள்ளன.  இதில் செண்டு எது என்பதைத் தெரிந்தவர்கள் சொல்லவும்

    ​​பல்களைக்கலகன்

    --

    N. Ganesan

    unread,
    May 20, 2015, 8:09:55 AM5/20/15
    to மின்தமிழ், vallamai
    2015-05-20 2:15 GMT-07:00 Aragalur pon.venkatesan <ponvenk...@gmail.com>:
    இந்த சிலை,,,,,,,,,,,,,, 1.சண்டிகேஸ்வரர் ,(அ) சமண சாத்தன்(அ) அய்யனார்(அ) வேறு....இதில் எது அய்யா சரியானது..? இது கோவிலில் இல்லாமல் ஒரு அகழியின் ஓரம் இருப்பதால் குழப்பம்

    உறுதியாய் சண்டிகேசர் இல்லை. விரிந்த செஞ்சடை இராது. 

    ஐயனார் தான். அது எந்த சமயம் என்பதை விரிவாக நாளை சொல்கிறேன்.
    முடிவெடுப்பது கடினம். பௌத்த சிலைகள் இருப்பதால் தக்ஷிணாமுர்த்திக்கு
    இணையான அவலோகிதனா? ஐயனாரா (=தட்சிணாமூர்த்தி போல)? சமண ஐயனாரா? -என 
    முடிவு சொல்வது கடினம்.

    சமண ஐயனார் அருகே யானையும், பௌத்த ஐயனார் (அவலோகிதன்) அருகே குதிரையும் இருக்கும்
    என்பார்கள். இலங்கையில் ஈசுரமுனி ஐயனார். இதனை இப்போது பௌத்த சிலை என்கின்றனர்.
    இது ஐயனார் சிலை, பல்லவர் அமைத்தது என்பது தெளிவு.

    பிறபின்!
    நா. கணேசன்

    Aragalur pon.venkatesan

    unread,
    May 20, 2015, 8:23:27 AM5/20/15
    to mint...@googlegroups.com

    ​@ நா.கணேசன் அய்யா.....விரிவான விளக்கத்துக்கு நன்றி அய்யா.பல்லவர் காலம் எனில் 8 ஆம் நூற்றாண்டாக இருக்க கூடுமோ..? மகேந்திரவர்மன்  காலத்தில் அவர் சமணத்திலிருந்து சைவத்துக்கு மாறியபோது காஞ்சியிலிருந்து சமணர்கள் மகதை பெருவழி என்ற சாலை மூலம் ஆறகழூர் வழியாக சென்றதாகவும் ஒரு வாய்வழித்தகவல் இருக்கு அய்யா..

    20 மே, 2015 ’அன்று’ 5:39 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

    Nagarajan Vadivel

    unread,
    May 20, 2015, 10:09:39 AM5/20/15
    to மின்தமிழ்

    இரண்டையும் ஒப்பு நோக்கி முடுவெடுக்கவும்
    பல்களைக்கலகன்

    N. Ganesan

    unread,
    May 21, 2015, 12:12:16 AM5/21/15
    to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com
    சாத்தன் என்ற பெயர் புத்தர் என்ற பொருள் என்று மயிலை சீனி வேங்கடசாமி சொல்லியுள்ளார்.
    ஆனால், சாத்தன் எனப்படும் ஐயனார், ஆர்யன் (ஆரியங்காவினில் ஐயன்), ஐயப்பன் வரலாறு
    மிக ஆழமானது. புத்தருக்கும் முன்பே ஐயனார் தோன்றிவிட்டார். சாஸ்தா என்னும் பெயரை
    சாஸ்த்திரம் என்பதோடு தொடர்புபடுதுகிறார் மயிலையார். அவ்வாறு சாஸ்தா என்ற பெயர்
    உருவாகவில்லை எனக் கருதுகிறேன். முதலில் சிலம்பின் சமண உரையாசிரியர் அடியார்க்குநல்லார்
    கூறும் (இவரும் ஆறகழூர் வெங்கடேசன் போல கொங்குநாட்டினரே) பழைய வெண்பா - சாத்தன்
    மேல் பாடினது - பார்ப்போம். சாத்தன் ஆயுதம் செண்டை வைத்து கரிகால் பெருவளத்தான்
    இமயமலையை புடைத்து மழைகொண்டுவந்தானாம். உக்கிரபாண்டி புராணம் ஒப்புக.

    கச்சி வளைக்கைச்சி காமக்கோட் டங்காவல், 
    மெச்சி யினிதிருக்கு மெய்ச்சாத்தன் - கைச்செண்டு, 
    கம்பக்களிற்றுக் கரிகாற் பெருவளத்தான், செம்பொற்
    கிரிதிரித்த செண்டு

    மயிலை சீனி. வேங்கடசாமியின் பௌத்தம் - புத்தர் - சாத்தன் பற்றின ஆராய்ச்சி:

    தேமொழியின் கட்டுரை கரிகாற்சோழன் இமையம் கடந்தானா? - என்பது மீதானது.

    N. Ganesan

    unread,
    May 21, 2015, 12:13:52 AM5/21/15
    to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com

    N. Ganesan

    unread,
    May 25, 2015, 4:14:40 PM5/25/15
    to mint...@googlegroups.com, vallamai

    On Monday, May 18, 2015 at 7:20:49 AM UTC-7, N. Ganesan wrote:

    2015-05-18 6:58 GMT-07:00 ponvenkatesan64 <ponvenk...@gmail.com>:

    இதுவும் அய்யனார்தானா..? அய்யா

    ஆம். கையில் வைத்திருக்கும் ஆயுதத்தின் பெயர் செண்டு.

    மேருமலையைச் செண்டால் அடித்தவன் பாண்டியன் என்ற கதையுண்டு.
    செழியன் என்ற பாண்டியன் பெயருடன் தொடர்புடையது.
    செழி-, செண்டு, செடில் : இவற்றில் -ள்-/-ழ்- /*/ ண் /*/ ட் - இரண்டாம் எழுத்தாக
    இயங்கும் சொல் தொகுதி இது. முனைவர் ரா. கிருஷ்ணமூர்த்தி
    ‘செழியன்’ என்ற பெயருடன் சங்க கால அரிய நாணயங்களை 
    வெளியிட்டுள்ளார். பார்க்கவும்.

    திராவிட மொழிகளில் -ள்-/-ழ்- /*/ ண் /*/ ட் - இரண்டாம் எழுத்தாக
    இயங்கும் சொல் தொகுதி - இந்த மொழிவிதியை இங்கே
    உதாரணங்களாக பார்க்கலாம்:

    நா. கணேசன்

    அகத்தியர் குழுமத்தில் டாக்டர் ஜேய்பி செண்டு பற்றி எழுதியுள்ளார். அவர் செண்டு என்பது சாட்டை என்று கூறவில்லை.
    டாக்டர் ஜேய்பியின் செண்டு பற்றிய மடல் முக்கியமானது. அதனை தருகிறேன்.

    நா. கணேசன்

    Apr 25, 2010
    அன்பர்களே,

    பத்து ஆண்டுகளுக்கு முன்பு 'செண்டு' என்னும் ஆயுதத்தைப்
    பற்றி இரு மடல்கள் எழுதியிருந்தேன்.
    ஒன்று இங்கிலீசிலும் மற்றொன்று தமிழிலும் அமைந்து
    விட்டது.
    இங்கிலீஷ் மடலையும் தமிழாக்கம் செய்து, மேலும்
    விபரங்களைச் சேர்த்திருக்கிறேன்.

    CheNdu is a hooked pole. It also means a horse whip.
    Some Aiyanaars have the CheNdu as their weapon.
    CheNdalankaaran is also a name given to Aiyanaar or Saastha.
    Saastha is also known as Saaththan.
    We learn that the Saaththan presents Karikala Cholzhan with a chendu.
    I'll try to get a clear photo of the cheNdu and put it up.
    'MEruvai chendaal adiththa padalam' is a good reference
    from the ThiruViLaiyaadal PuraaNam.

    செண்டு என்பது ஒரு வளைந்த நீண்ட கோல்.
    தண்டாயுதத்தின் ஒரு நுனி குடையின் கைப்பிடி போல் வளைந்திருந்தால்
    எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து
    கொள்ளுங்கள்.
    செண்டாயுதம் வேறு, வளரி அல்லது வளைதடி என்பது
    வேறு.
    பல வார்கள் கொண்ட கைப்பிடியுடன்கூடிய குதிரைச்
    சவுக்குக்கும் 'செண்டு' என்று பெயர் உண்டு.

    ஐயனார்களில் சிலர் செண்டைக் கையில் வைத்திருப்பார்கள்.
    ஐயனாரைப் பழந்தமிழில் சாத்தா என்றும் சாத்தன் என்றும்
    குறிப்பிட்டார்கள். சாஸ்தா என்பது வடமொழிப் பெயர்.
    சாஸ்தாவுக்கு 'செண்டலங்காரன்' என்றும் 'செண்டாயுதன்'
    என்றும் பெயர் உண்டு.
    'செண்டலங்காரன் தூது' என்னும் பிரபந்த நூல் ஒன்று
    இருக்கிறது. அச்சில் வந்துள்ளது.
    சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனாராகிய
    தர்மசாஸ்தாவை 'செண்டாயுதன்' என்று 'சிங்காபுரிப் பள்ளு'
    என்னும் நூலில் அதன் ஆசிரியராகிய ஹரிஹர புத்திரக்
    கவிராயர் குறிப்பிட்டிருப்பார்.
    அழகிய நூல்.
    அதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டீர்கள்.
    என்னிடம் ஒரே ஓர் அச்சுக் காப்பிதான் இருந்தது.

    கரிகால் சோழருக்குக் காஞ்சிபுரத்திலிருந்த சாத்தன்
    என்னும் ஐயனார் செண்டு ஒன்றைப் பரிசாக அளித்ததாக
    வரும்.
    திருவிளையாடல் புராணத்தில் மதுரை சொக்கேசர்
    மேருமலையைச் செண்டால் அடித்த படலம் வரும்.

    செண்டு மற்ற பண்டைய நாடுகளிலும் இஇருந்திருக்கிறது.

    'Sodom and Gomorrah' என்பது ஒரு பிப்லிக்கல் படம்.
    அதாவது பைபிலில் வரும் கதை.
    அதில் ஸ்டீவர்ட் க்ரேஞ்சர் பைபிளில் வரும்
    தீர்க்கதரிசிகளில் ஒருவரான 'லாட்' ஆக வருவார். அந்தக் கதை, ஸோடொம்,
    கொமோர்ரா ஆகிய இஇரு நகரங்களின் அழிவு
    பற்றியது.
    அதில் ஸ்டீவர்ட் க்ரேஞ்சர் தன்னுடைய கையில் நீண்ட
    கோல் ஒன்றைத் தாங்கியிருப்பார். அந்தத் தண்டின் ஒரு நுனி
    கொக்கி போல வளைந்திருக்கும். அந்தக் கோல் இரண்டு
    அங்குல கனமும் ஆறு அடி உயரமும் இருக்கும்.
    அதனை வைத்து மற்றவர்கள் வைத்திருக்கும்
    கத்தியைக்கூட தட்டிப் பறித்துவிடுவார்.
    கழுத்தில் போட்டு வளைத்து ஆளை அப்படியே
    சுழற்றிவிட்டு வீழ்த்திவிடுவார்.
    செண்டாயுதத்தை நன்றாகக் கையாளக் கூடியவர்கள்
    கையில் கத்தி வைத்திருக்கும் நான்கைந்து பேரை சமாளித்து
    விடமுடியும்.
    ஓர் அருமையான சாஸ்தா/ அய்யனார் படம் இஇருக்கிறது.
    அதில் ஒரு வகையான செண்டு இருக்கிறது. படம் கிடைத்ததும்
    பார்க்கலாம்.

    காலை மணி 8-36.
    இப்போது எழுதிப் பூர்த்தி செய்தேன்.
    கான்வர்ட் செய்து அனுப்பவேண்டும்.
    9-00ஆகிவிடும். அதன்பின்னர் அனுஷ்டானங்கள். பின்னர் பூஜை. காலைப்
    பலகாரம் 11-00க்கு மேலாகிவிடும்.
    என்ன செய்வது?
    இதைப் பற்றி நானும் எழுதவில்லையென்றால் யாருமே
    எழுதமாட்டார்கள்.
    "ஏன் எழுதாமல்? அதற்கும் யாராவது வந்து எழுதுவார்கள்,"
    என்று எவனாவது அதிகப்பிரசங்கி எழுதுவான். அதுதான் இந்த
    பன்னிரண்டு ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறதே.
    ஆனால் எவனும் அந்த சவுடால் சவாலுக்கு ஏற்ப
    எழுதியதில்லை.
    ஆகையால்தான் எழுதவேண்டும் என்று நினைத்துக்கூடி எழுதுகிறேன்.

    அன்புடன்

    ஜெயபாரதி

    =========================

    Reply all
    Reply to author
    Forward
    0 new messages