கக்கன்

222 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Dec 21, 2012, 9:57:44 PM12/21/12
to mintamil
ஒரு அன்பர் அனுப்பியது - பகிர்வு


உலக வரலாறிலேயே உயர்திரு கக்கன் போன்ற நேர்மை நாணயத்திற்க்கு உதாரணமான அமைச்சரை பார்ப்பது கடினம். தமிழக வரலாற்றில் உயர் திரு கக்கன் அவர்கள் ஒரு வைரகல். 

உயர் திரு .கக்கன் போன்ற நாணயமான அரசியல்வாதி இந்திய அரசியல் கட்சிகள் எதிலும் கிடையாது .
மதுரை மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும்பாடுகளுக்கிடையே பள்ளி இறுதிவகுப்பு வரை படித்து முடித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்ட மாமனிதர் அவர். 

மதுரை வைத்தியநாத ஐயர் கக்கனை வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார். மாசுமருவற்ற தோழர் ஜீவாவின் தலைமையில் தான் கக்கனின் திருமணம் நடந்தது. இரவு நேர பள்ளிகளுக்குச் சென்று சேவை செய்துள்ளார். பள்ளிக்குழந்தைகளுக்கு உணவளிக்க தனது மனைவியின் தாலியை அடகு வைத்து பணம் தந்து உதவி உள்ளார்.

சுதந்திர போராட்டம்
காந்தி 1934-ல் மதுரை வந்தபோது அவருக்குத் தொண்டாற்றும் வாய்ப்பு கக்கனுக்கு வந்து சேர்ந்தது. காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற கக்கன் 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது மேலூர் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டார். அவர் மனைவி முன்னிலையில் 5 நாட்கள் கசையடி கொடுத்து சக தோழர்களை காட்டிக் கொடுக்கச் சொன்ன போது கடைசி வரை அடி வாங்கினாரே தவிர, காட்டிக் கொடுக்கவில்லை. சுயநினைவு இழந்தவரை குதிரை வண்டியில் பாதம் வைக்கும் இடத்தில் கிடத்தி, தலையும் கால்களும் தொங்கிய நிலையில் இழுத்துச் சென்றனர்.

தமிழக அரசியல்
இந்திய சுதந்திரத்திற்க்கு பின் தமிழ்நாடு கங்கிரஸின் தலைவராகப் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட இனம் என்று அதிகார வர்கத்தால் பிரிக்கபட்ட மனித இனதின் முதல் மனிதர் கக்கன். அந்த புனிதர் வகித்த பதவியை தான் இன்று பல பணம் திண்ணும் பிணங்கள் வகிக்கிறது. 

தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து அமைச்சராக இருந்த கக்கன் பொதுப்பணி, உள்துறை, விவசாயம், உணவு, மதுவிலக்கு, அரசின நலம், அறநிலையத்துறை போன்ற பல்வேறு இலாக்காக்களை நிர்வாகித்தார்.

கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தார். 

விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான அரசு பணிகள் உயர் திரு கக்கன் அவர்களேயே ஆரம்பிக்கபட்டது.
அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்த போதும் அவரது துணைவியார் ஆசிரியைப் பணி செய்தே குடும்பத்தைக் கவனித்தார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலும் அவரது தந்தையார், தான் செய்து வந்த வருவாய்த்துறை ஊர்ப்புற உதவியாளர் பணியைச் செய்தே வாழ்க்கை நடத்தினார்.
அமைச்சராக இருந்த போது மதுரை வந்த போது அரசு விடுதியில் வேறு நபர் இரவில் தங்கி இருக்கிறார். அவரை வெளியேற்றலாமா? என்கிறார்கள். வேண்டாம் எனத் தடுத்து விடுகிறார். தனியார் விடுதியில் அறை எடுக்கலாமா? என்கிறார்கள். வேண்டாம் என்று சொல்லி விட்டு, ரயில்வே காலனியில் தனது உறவினரின் சிறிய வீட்டில் போய் தங்குகிறார். 

பத்தாண்டுகள் மிக முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்த கக்கன் 1967 - தேர்தலில் தோற்ற பின்பு சொந்தக் கூரை கூட இல்லாத பரம ஏழையாகப் பேருந்தில் நின்றபடி பயணித்தார்.

கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார். தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார்.

விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்குத் தனியாமங்கலம் என்ற கிராமத்தில் தரப்பட்ட நிலத்தை, வினோபாவின் நிலக்கொடை இயக்கத்தில் ஒப்படைத்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்க்கப்படார். மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே அங்கிருந்து விடை பெற்றார்.

மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனைப் போய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார். உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி என்று கைகூப்பினார் கக்கன்.
கடைசிக் காலத்தில், வறுமையில் வாடியது கண்டு, திரு.பழ நெடுமாறன், மதுரையில் நிதி திரட்டி வந்த நிதியை நிலையான வைப்புத் தொகையில் போட்டு வட்டியில் வாழ்க்கை நடத்துங்கள் என்று யோசனை சொல்கிறார்கள். மறுத்து விட்டு முன்பு தேர்தலின் போது நாவினிப்பட்டி மைனர் தந்த பணம் 11,000 திருப்பித் கொடுக்கிறார். அவர் நான் கேட்கவில்லை, கடனாக தரவில்லை என மறுத்து போதும் அந்த பணத்தை திருப்பித் தந்து விடுகிறார்.

டிவிஎஸ் நிறுவனத்தில் தங்கியதற்காக ரூ.1,800 கட்டுகிறார். அவர்கள் கேட்கவில்லையே ஏன் ? செலுத்த வேண்டும் என்கின்றனர். நான் என்றாவது திருப்பித் தருவேன் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் கேட்கவில்லை என கூறி பணத்தை திருப்பி கொடுத்தார் . இப்படிப்பட்ட ஒரு அமைச்சரை உலகின் எந்த நாட்டிலும் பார்க்க முடியாது.

இறுதிவரை ஏழ்மையிலேயே வாடிய கக்கன் நோய்வாய்ப்பட்ட போது, உயர் ரக சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வசதியின்றி சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். நினைவிழந்த நிலையில் இரு மாதங்கள் இருந்த அவர், 1981 டிசம்பர் 23-ஆம் நாள் உலக வாழ்வை நீத்தார்.
எளிமையின் வடிவமாக நேர்மையின் விளக்கமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த கக்கன் உடல் கண்ணம்மாபேட்டையில் டிசம்பர் 24, 1981 அன்று எரியூட்டப்பட்டது.


தேமொழி

unread,
Dec 22, 2012, 1:29:48 AM12/22/12
to mint...@googlegroups.com

நல்லோர் குணங்கள் உரைப்பதும் நன்று...அதைப் படிப்பதும் நன்று.

பகிர்ந்தமைக்கு நன்றி

...தேமொழி

துரை.ந.உ

unread,
Dec 22, 2012, 1:43:05 AM12/22/12
to mint...@googlegroups.com
வாழ்க ஐயா   ....

கக்கன் ஐயவைப் போன்ற விடிவெள்ளிகள் இனி எப்போது தோன்றும் ??

ஒரு செய்தி : ஐயாவின் பெயரில் எங்கள் ஊரில் ஒரு பூங்கா உண்டு ...
இதுதான் இளவயதினருக்கும் ஐயாவின் பெருமைக்கும் உள்ள இன்றைய தொடர்பு :((

வேறெதுவும் தெரியாது 


2012/12/22 seshadri sridharan <ssesh...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

Subashini Tremmel

unread,
Dec 22, 2012, 1:49:20 AM12/22/12
to மின்தமிழ், Subashini Tremmel


உன்னதமான நேர்மையான அரசியல் தலைவர். பகிர்வுக்கு நன்றி.

சுபா


2012/12/22 seshadri sridharan <ssesh...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

K R A Narasiah

unread,
Dec 22, 2012, 2:19:13 AM12/22/12
to mint...@googlegroups.com
I shall post later in a separate thread some info about Shri Kakkan as we knew the family well.
Narasiah

2012/12/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>

seshadri sridharan

unread,
Dec 22, 2012, 2:54:34 AM12/22/12
to mint...@googlegroups.com
2012/12/22 K R A Narasiah <naras...@gmail.com
//I shall post later in a separate thread some info about Shri Kakkan as we knew the family well. - Narasiah//

ஒரு சீர்மையான எழுத்தாளரான உங்கள் எழுத்தையும், நேர்மையாளர் கக்கனுடனான உங்கள் இளமைக்கால அனுபவத்தையும் உங்களிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

சேசாத்திரி

Muralee dharan

unread,
Dec 22, 2012, 12:47:22 AM12/22/12
to mint...@googlegroups.com

கி.காளைராசன்

unread,
Dec 22, 2012, 4:39:50 AM12/22/12
to mint...@googlegroups.com
வணக்கம்.

2012/12/22 seshadri sridharan <ssesh...@gmail.com>

அமைச்சராக இருந்த போது மதுரை வந்த போது அரசு விடுதியில் வேறு நபர் இரவில் தங்கி இருக்கிறார். அவரை வெளியேற்றலாமா? என்கிறார்கள். வேண்டாம் எனத் தடுத்து விடுகிறார். தனியார் விடுதியில் அறை எடுக்கலாமா? என்கிறார்கள். வேண்டாம் என்று சொல்லி விட்டு, ரயில்வே காலனியில் தனது உறவினரின் சிறிய வீட்டில் போய் தங்குகிறார். 
பத்தாண்டுகள் மிக முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்த கக்கன் 1967 - தேர்தலில் தோற்ற பின்பு சொந்தக் கூரை கூட இல்லாத பரம ஏழையாகப் பேருந்தில் நின்றபடி பயணித்தார்.

இனியொருவர் இதுபோல் பிறப்பரோ இந்தியத் திருநாட்டில்!

அன்பன்
கி.காளைராசன்

N. Kannan

unread,
Dec 22, 2012, 1:10:00 PM12/22/12
to mint...@googlegroups.com
2012/12/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

> உன்னதமான நேர்மையான அரசியல் தலைவர். பகிர்வுக்கு நன்றி.
>
> சுபா

கக்கன், காமராஜர் போன்றோர் அளித்த கல்வியில்தான் நான் முன்னுக்கு வந்தேன் என்று சொல்லிக்கொள்வதில் மகிழ்ச்சி.

Inline images 1


பெருந்தலைவர் காமராஜர் திருப்பூவணம் வந்திருந்த போது எனது சகோதரிகள் இறைவணக்கம் பாட நிகழ்ச்சி ஆரம்பமாகியது. சகோதரிகளுக்குப் பின்னால் திரு.சீமைச்சாமி, அன்றைய காங்கிரஸ் எம்.எல்.ஏ (தொப்பியுடன்)

தலித் மாணவர்களுக்கென்று தனியாக ஒரு men's hostel உண்டு. எனது இரண்டு நெருங்கிய நண்பர்கள் கண்ணப்பனும், குருசாமியும். அதில் குருசாமி அங்கு இருந்தார். கண்ணப்பன் அவர்கள் குடிசை புதூருக்கு அப்பால் வயற்காட்டில் இருக்கும். கோடை விடுமுறையில் அங்கு போய் மதியப் பொழுதைக் கழிப்போம். குளு, குளு என்று இருக்கும். ரயிலடியில் கைகோர்த்து நடந்தது இனிமை.

நா.கண்ணன்
withKamaraj.jpg

Innamburan Innamburan

unread,
Dec 22, 2012, 1:52:56 PM12/22/12
to mint...@googlegroups.com
அரிதான வரவு. அப்பா காமரஜருடன் இருக்கும் படத்தைத் தேடிப்பார்க்கிறேந்.
இன்னம்பூரான்

2012/12/22 N. Kannan <navan...@gmail.com>

--
withKamaraj.jpg

N. Ganesan

unread,
Dec 23, 2012, 12:35:21 AM12/23/12
to மின்தமிழ்
On Dec 21, 11:19 pm, K R A Narasiah <narasiah...@gmail.com> wrote:
> I shall post later in a separate thread some info about Shri Kakkan as we
> knew the family well.
> Narasiah
>

You may want to read what Iravatham wrote in Dinamani on 9-2-1988.
reprinted in Airavati, festschrift volume for IM.

N. Ganesan


அதிசயம் ஆனால் உண்மை
ஆசிரியர் : ஐராவதம் மகாதேவன்

இந்தியாவில் ஒரு மாநிலம்; அதற்கு ஒரு முதல் அமைச்சர்; அவர் பத்தாண்டுகள்
ஆட்சி செய்தார்; அவர் முதல்வராக இருக்கும் பொழுதே தம் உடைகளைத் தாமே
தோய்த்து உடுத்திக் கொண்டார்; தம் கையால் சமைத்துச் சாப்பிட்டார்; தம்
செலவுகள் போக மிஞ்சிய சம்பளத்தைத் தம் கட்சிக்கு மாதாமாதம் கொடுத்து
விட்டார்; பதவிக் காலம் முடிந்த அன்றே அரசு கொடுத்த இல்லத்தைக் காலி
செய்தார்; தம்முடன் இரண்டு பெட்டிகளில் தனது துணிமணிகளையும்,
புத்தகங்களையும்க் மட்டும் எடுத்துச் சென்றார்; சொந்த வீடு இல்லாததால்
கட்சி அலுவலகத்தில் ஓர் அறையில் குடியேறினார்.

இது இந்திய விடுதலைக்குப் பிறகு ஒரு முதல்வர் எப்படி இருக்க வேண்டும்
என்று கற்பனை செய்து கொண்டு ஓர் இலட்சியவாதி எழுதிய நாவலின் சுருக்கம்
இல்லை. நேற்றைய நாளேடுகளில் தேடிப்பார்த்தீர்களானால் சின்னச் சின்ன
எழுத்துகளில் வெளிவந்திருக்கும் ஒரு பெரிய செய்தி இது. இந்த அதிசயம் -
ஆனால் - உண்மைச் சம்பவம் நடந்த மாநிலம் திரிபுரா. அந்த முதல்வரின் பெயர்
நிருபேந்(திர) சக்கரவர்த்தி. அவர் இடது கம்யூனிஸ்டு கட்சியைச்
சேர்ந்தவர்; அதைவிட முக்கியமான செய்தி அவர் பரம யோக்கியர் என்பதே.
அறியாமையிலும், ஊழலிலும், அரசியல்வாதிகளின் அடுக்கு மொழிகளிலும், சினிமா
நடிக, நடிகைகளின் மாயா ஜாலங்களிலும், சிக்குண்டு, தாழ்வுற்று, வறுமை
மிஞ்சி, பாழ்பட்டு நிற்கும் பாரத தேசம் இனி வாழவே முடியாது என்று கலங்கி
நிற்கும் மக்களுக்கு இது ஒரு நற்செய்தி.

வாசகர்களுக்கு நினைவிருக்கிறதோ என்னவோ; தமிழ்நாட்டில் கூட ஒரு காலத்தில்
இத்தகைய அதிசயப் பிறவிகள் உண்மையாகவே உயிர் வாழ்ந்தனர். காமராஜ் என்று
ஒரு முதல்வர்; கக்கன் என்று ஒரு அமைச்சர். மாற்றுத்துணிகளைத் தவிர வேறு
உடைமைகள் இல்லாதவர்கள் இவர்கள். மக்களின் அன்பு என்பதைத் தவிர வேறு
செல்வத்தைப் பெறாதவர்கள் இவர்கள். யார் கண்டது; அங்கொன்றும் இங்கொன்றும்
ஆக இன்று காணப்படும் தீப்பொறிகள் பற்றிக்கொண்டு உண்மைக் கனலாக வளர்ந்து
இன்றைய அரசியலின் பொய்மைகளை எரித்துவிடும் நற்காலமும் நம் நாட்டுக்கு
வரலாம் அல்லவா. அதை நினைத்து நிருபேந் சக்கரவர்த்திகளை வாழ்த்தி
வணக்குவோம்.

தினமணி
2-ம் ஆசிரிய உரை
(09-02-1988)


seshadri sridharan

unread,
Dec 23, 2012, 2:50:44 AM12/23/12
to mint...@googlegroups.com
//இந்தியாவில் ஒரு மாநிலம்; அதற்கு ஒரு முதல் அமைச்சர்; அவர் பத்தாண்டுகள் ஆட்சி செய்தார்; அவர் முதல்வராக இருக்கும் பொழுதே தம் உடைகளைத் தாமே தோய்த்து உடுத்திக் கொண்டார்; தம் கையால் சமைத்துச் சாப்பிட்டார்; தம் செலவுகள் போக மிஞ்சிய சம்பளத்தைத் தம் கட்சிக்கு மாதாமாதம் கொடுத்து விட்டார்; பதவிக் காலம் முடிந்த அன்றே அரசு கொடுத்த இல்லத்தைக் காலி செய்தார்; தம்முடன் இரண்டு பெட்டிகளில் தனது துணிமணிகளையும், புத்தகங்களையும்க் மட்டும் எடுத்துச் சென்றார்; சொந்த வீடு இல்லாததால் கட்சி அலுவலகத்தில் ஓர் அறையில் குடியேறினார்.//

இந்தச் செய்தியை ஒரு கலந்துரையாடலில் நண்பர் ஒருவர் சொல்லக்க கேட்டுள்ளேன்.

நான் வேலை பார்த்த இடத்தில் உலகநாதன் என்பவரும் வேலை செய்து வந்தார். அவர்தம் வளரிளமைப் பருவத்தில் (adolescent ) ராசாசி வீட்டில் வேலை பார்த்தவர். உலகநாதன் எங்களிடம் பகுத்தறிவுப் பகலவன் தம் வழக்குறைஞர் ராசாசியிடம் அரசியல்பகை கொண்டிருந்தாலும் தம் தனிவாழ்வு பற்றிய அவருடைய கருத்துக்கு மிகுந்த மதிப்பளித்தவர் என்றும். அதனால் ஆச்சாரியா அவரிடம் "உங்களுக்கோ வயதாகி வருகின்றது இந்த கட்சிக்காரரை எல்லாம் நம்ப வேண்டாம். இவர்கள் தந்நலம் கருதித்தான் உங்களுடன் இப்படி திரிகின்றார்கள். இது வெகு நாட்கள் நீடிக்காது. முதுமையில் இவர்கள் உங்களை அம்போ என்று விட்டுப்போய்விடுவார்கள். அதனால் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு எல்லாப் பொறுப்பையும் அவளிடம் ஒப்புவித்து உங்கள் எதிர்காலப் பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ளுங்கள்" என்று அறிவுறுத்தியதாகவும். அந்த அறிவுறுத்தலின் பெயரிலேயே பெரியார் மணியம்மையை 1948 இல் மணந்ததாகவும் சொல்லி முடித்தார். 

அப்போது குறிக்கிட்ட என் இன்னொரு நண்பர்  ஈ.வே.ரா இப்படி செய்திருக்கக் கூடாது. கம்யூனிசக் கருத்துகளை ஆதரித்து வாய் கிழியப் பேசிய அவர், தமக்கு குடும்பம் இருந்தும் தம் இறுதிக் காலத்தில் கட்சி அலுவலகமே வீடு என்று கருதி பல கம்யூனிசத் தலைவர்கள் வாழ்வு முடித்ததைப் போல் பகுத்தறிவுப் பகலவனும் செய்திருக்க வேண்டும் என்று கூறிய போது நிருபன் சக்கரவர்த்தியை ஒரு எடுத்துக்காட்டாகச் சொன்னதனால் தான் எனக்கு நிருபன் சக்கரவர்த்தியைப் பற்றி தெரியவந்தது. அதற்கு முன் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை.

Innamburan Innamburan

unread,
Dec 23, 2012, 3:43:01 AM12/23/12
to mint...@googlegroups.com
ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு எல்லாப் பொறுப்பையும் அவளிடம் ஒப்புவித்து உங்கள் எதிர்காலப் பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ளுங்கள்" என்று அறிவுறுத்தியதாகவும். அந்த அறிவுறுத்தலின் பெயரிலேயே பெரியார் மணியம்மையை 1948 இல் மணந்ததாகவும் சொல்லி முடித்தார். 

~ இது தவறான செய்தி என்று மணியம்மை அவர்கள் வெளியிட்ட கடிதப்போக்குவரத்தை ஊடகங்களில் அந்தக்காலத்தில் படித்திருக்கிறேன்.
இன்னம்பூரான்

2012/12/23 seshadri sridharan <ssesh...@gmail.com>

seshadri sridharan

unread,
Dec 23, 2012, 9:26:08 AM12/23/12
to mint...@googlegroups.com


2012/12/23 Innamburan Innamburan <innam...@gmail.com
[ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு எல்லாப் பொறுப்பையும் அவளிடம் ஒப்புவித்து உங்கள் எதிர்காலப் பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ளுங்கள்" என்று அறிவுறுத்தியதாகவும். அந்த அறிவுறுத்தலின் பெயரிலேயே பெரியார் மணியம்மையை 1948 இல் மணந்ததாகவும் சொல்லி முடித்தார்] 

//இது தவறான செய்தி என்று மணியம்மை அவர்கள் வெளியிட்ட கடிதப்போக்குவரத்தை ஊடகங்களில் அந்தக்காலத்தில் படித்திருக்கிறேன். - இன்னம்பூரான்//

ஆனாலும் இந்த திருமணத்தைக் காட்டித்தான் தென்னாட்டு பெர்னாட்ஷா கட்சியை உடைத்து திமுக வை கண்டதாக வரலாறே உள்ளது. இதாவது, ஒரு கிழவர் பேத்தி வயதாகும் ஒரு பெண்ணின் உடலியல் உணர்வுகளைப் புறந்தள்ளி தன்னலத்திற்காக மணந்துகொண்டார் என்று.   

(கட்சி உடைப்பிற்கு மறைமுகக் காரணம், இத்தனை நாள் உடன் இருந்து பணியாற்றியும் தம்மை நம்பாமல் அறக்கட்டளையின் சொத்து மற்றவர்களின் கைக்கு சிக்கிவிடாமல் தடுக்கவே இந்தத் திருமணம் ஏற்பாடுபோலும் என்ற எண்ணமும் கூட இருக்கலாம். இனியும், தி.க.வில் தொடர்ந்தால் வாணாள் முழுதும் தொண்டராகவே காலம் கழிக்க வேண்டியது தான் தலைமைப் பொறுப்பு எட்டாக்கனி என்பதை உணர்ந்துதான் தனிக் கட்சி கண்டரோ?)

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த போது தன் கொள்கையின் அடிப்படையில் உள்ள கட்சி என்று பகுத்தறிவுப் பகலவன் பாராட்டினார் என்று சொல்லப்படுகின்றது. அதோடு அதிமுக தோன்றியபோது உண்மையான திராவிடக் கொள்கை உள்ள கட்சி திமுக தான் என்று சொன்னதாகவும் சொல்லப்படுகின்றது. 

இன்றும் சுப. வீரபாண்டியன் போன்றோர் திமுகவே உண்மையான திராவிடக் கட்சி என்கின்றனர். சரி அப்படியே ஆகட்டும்.  இந்த பொருந்தாதத் திருமண நிகழ்விற்கு பின் 40 ஆண்டுகள் கழித்து இன்னொரு பொருந்தாதத் திருமணம் நிகழ்ந்துள்ளது. சமத்துவ பெரியார் தம் நண்பர் நந்தமூரி தாரக ராமாராவு ஏதோ ஒரு யாகம் செய்வதற்காக 14 வயதுப் பெண்ணை மணந்தாக சொல்லப்பட்ட அதே காலகட்டத்தில் பேத்தி வயதாகும் உஷா என்ற ஒரு பிராமணப் பெண்ணை மணந்தார் என்றும் அந்த பெணணுக்கு கே.கே நகரில் ஒரு வளமனையே தந்தார் என்றும் அண்மைக்காலம் வரை செய்திகள் அப்பகுதியில் பரவலாகவே அறியப்பட்டு வந்துள்ளது. 

திராவிடம் எந்த அளவிற்கு தடம் புரண்டு நீர்த்துப் போனது என்று பாருங்கள். கட்சியில் பிராமணருக்கு பொறுப்பே கூடாது என்று சொல்லிவந்த திராவிடக் கொள்கை எப்படி பார்ப்பனத்திகளை மட்டும் வைப்பாட்டிகளாகவும், சக்களத்திகளாகவும் ஏற்றுக்கொண்டதோ? இது திராவிடத் தம்பிகளுக்குத் தான் வெளிச்சம்!! அவர்களுக்குத் தான் பகுத்தறிவு என்றால் என்ன என்று விளக்கத் தெரியும் போலும்.

Innamburan Innamburan

unread,
Dec 23, 2012, 9:42:35 AM12/23/12
to mint...@googlegroups.com
என்ன சேசாத்திரி? 
வரலாற்றை பற்றி எழுதும் போது, தவறான செய்திகளை அடித்தளத்தில் வைப்பதும் தவறு. மார்க் ட்வைய்ன் மாதிரி 'அதாகப்பட்டது...சொன்னார்களாம்...இருக்கலாமோ?...' என்றெல்லாம் ஹேஷ்யம் செய்வது பெரிய அநீதி, ஐயா. நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
இன்னம்பூரான்

2012/12/23 seshadri sridharan <ssesh...@gmail.com>

--

seshadri sridharan

unread,
Dec 23, 2012, 10:25:40 AM12/23/12
to mint...@googlegroups.com


2012/12/23 Innamburan Innamburan <innam...@gmail.com

//என்ன சேசாத்திரி? 
வரலாற்றை பற்றி எழுதும் போது, தவறான செய்திகளை அடித்தளத்தில் வைப்பதும் தவறு. மார்க் ட்வைய்ன் மாதிரி 'அதாகப்பட்டது...சொன்னார்களாம்...இருக்கலாமோ?...' என்றெல்லாம் ஹேஷ்யம் செய்வது பெரிய அநீதி, ஐயா. நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். - இன்னம்பூரான்//

புரிந்தது ஐயா! 

புரிந்தும் நான் அவ்வாறு எழுதக் காரணம் சில நிகழ்வுகள் திறைமறைவில் நடந்தவை. அவற்றை மார்கு டுவைன் போலத் தான் எழுத வேண்டியுள்ளது. 

என்னோடு சேகர் என்பவர் பணிபுரிந்தார். அவருடன் ஒரு விவாதத்தில் பேசும் போது சமத்துவ பெரியாரின் இந்த திருமணம் பற்றி பேச்சு அடிபட்டது. நான் அவரிடம் இதற்கு எந்த சான்றும் கிடையாது இது புரளி என்று வாதிட்ட போது, அவர், அந்த திருமணத்தை நடத்தி வைத்த்தே என் அண்ணனுடைய மைத்துனர் தான். வேண்டுமானால் அவருக்கு போன் போட்டுத் தருகிறேன் நீயே அவரிடம் கேட்டு இந்த உண்மையை அறிந்த்து கொள், அம்பத்தூரில் தான் அந்த சாஸ்திரிகள் உள்ளார் என்றார்.

Innamburan Innamburan

unread,
Dec 23, 2012, 11:05:52 AM12/23/12
to mint...@googlegroups.com
சமத்துவத்தில் சாஸ்திரியாரா?


2012/12/23 seshadri sridharan <ssesh...@gmail.com>
--

seshadri sridharan

unread,
Dec 23, 2012, 9:49:51 PM12/23/12
to mint...@googlegroups.com


2012/12/23 Innamburan Innamburan <innam...@gmail.com
//சமத்துவத்தில் சாஸ்திரியாரா?//

ஈரோட்டு பாசறையில் பயின்றவர் அதற்குத் தக ஒரு பேத்தியை மணந்ததால் பெரியாருக்கு சமமானார். இது ஜோசியர் அறிவுறுத்தலில் நடந்த திருமணம் அதனல் சாஸ்திரியார் நடத்திவைத்தார். சீர்திருத்தத் திருமணமாய் இருந்தால் அவர் வந்திருக்கமாட்டார். .இது சீர்மைகெட்ட திருமணம் அதனால் சாஸ்திரியார் வந்தார். ஏன் நானே என் கண்ணால் கோபாலபுரம் வீட்டில் மஞ்சள் நாம்ம் போட்ட பிராமணர் வெளியே வருவதைக் கண்டிருக்கிறேன். நான் ஆழ்ஆர் பேட்டை வழியாக ஒரு நண்பருடன் நடந்து வரும் போது ஒரு 86 வயதுடைய ஒரு மஞ்சள் நாம்ம் போட்ட பெரியவர் கருணா வீட்டிற்கு போகும் பாதை இது தானா என்ற கேட்டார். ஆம் என்றேன். அப்போது நீங்கள் எப்படி அவர் வீட்டிற்கு போகிறீர்கள் அவர் பிராமணர் எதிர்ப்பாளர் ஆயிற்றே என்றோம். அவரை பையனாக இருக்கும் போதிருந்தே நான் அவரை அறிவேன் என்றார் அந்த பெரியவர்.

Innamburan Innamburan

unread,
Dec 24, 2012, 2:35:36 AM12/24/12
to mint...@googlegroups.com
மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டால், நான் ஓடியே போய்விடுவேன். ராஜாஜியின் கடிதத்தை மணியம்மை பிரசுரித்தார். அந்த உண்மையவிட்டு விட்டு மஞ்சள் நாமத்துக்கும்,மஞ்சள் சால்வைக்கும் முடிச்சுப் போடுகிறீர்கள். நாத்திகரும் ஆத்திகரும் நண்பர்களாக ஏன் இருக்கக்கூடாது? நான் ஓடியாச்சு!
இன்னம்பூரான்

2012/12/24 seshadri sridharan <ssesh...@gmail.com>
--

seshadri sridharan

unread,
Dec 24, 2012, 7:03:00 AM12/24/12
to mint...@googlegroups.com
நீங்கள் சமத்துவத்தில் சாஸ்திரியாரா? என்று ஐயம்மேலிடக் கேட்டதால் குடுமி வைத்து சட்டைபோடாத கச்சவேட்டி கட்டியிருந்த மஞ்சள் நாமம் தாங்கி இருந்த, கோபாலபுர வீட்டில் நான் நேரில் கண்ட இரு பிராமணர்களை அதற்கு சான்றாகக் காட்டினேன். இது நடந்த்து 1989 - 1990இல். அப்போது தி.க பூணூல் அறுப்பு நிகழ்வுகளை நிகழ்த்திய காலமும் கூட.

சேசாத்திரி

2012/12/24 Innamburan Innamburan <innam...@gmail.com>

Kamala Devi

unread,
Dec 24, 2012, 9:42:06 AM12/24/12
to mint...@googlegroups.com
சகோதரிகள் அழகோ அழகு
ரிப்பன் கட்டிய முடி அன்று ஃபாஷன்
க.

 

From: N. Kannan <navan...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Sunday, 23 December 2012, 2:10
Subject: Re: [MinTamil] கக்கன்

withKamaraj.jpg

N. Kannan

unread,
Dec 24, 2012, 10:21:13 AM12/24/12
to mint...@googlegroups.com
2012/12/24 Kamala Devi <saahi...@yahoo.com.sg>

>
> சகோதரிகள் அழகோ அழகு
> ரிப்பன் கட்டிய முடி அன்று ஃபாஷன்
> க.

நன்றி.

ஆனால் இப்போது பார்த்தால் மிகவும் malnourished ஆக இருக்கிறார்கள்.
பாவம்! அப்பாவிற்கு அவ்வளவுதான் வருமானம் அப்போது! பெரிய குடும்பம்!

க.>

seshadri sridharan

unread,
Dec 24, 2012, 9:57:49 PM12/24/12
to vikada kavi, mintamil
2012/12/24 vikada kavi <vkav...@gmail.com

//Pagirvirku Nandri solvathe Ayya Kakanji avargaluku seium mariathai.// 

அரசியல் பொறுப்பில் இருந்த ஒருவருடைய நேர்மையை, மேன்மையை அவரை ஒத்த அரசியலாளர் வாழும் முறையோடு ஒப்பிட்டு தான் அதை நிறுவ இயலும். அந்த வகையில் சமத்துவ பெரியாரோடு ஒப்பிட்டால் கக்கன் மாமனிதராக அல்ல வானளாவிய மனிதராகவே காட்சிப்படுகிறார். அத்தகு வானளாவிய மனிதரை தமிழக மக்களும் நினைவு கூர்வது இல்லை சரி அவர் சார்ந்த தலித் வகுப்பு மக்களாவது நினைவு கூர்கிறார்களா தெரியாது. 

ஆனால் நேற்று நடிக முதல்வர் ஒருவருடைய நினைவு நாளை தேங்காய் உடைத்து படத்திற்கு மாலை போட்டு திரைப்படப் பாடல்களை  எல்லாம் ஒளிபரப்பி தமிழ்நாட்டையே அமக்களப்படுத்திவிட்டார்கள்.  

N. Kannan

unread,
Dec 25, 2012, 4:45:23 AM12/25/12
to mint...@googlegroups.com
2012/12/25 seshadri sridharan <ssesh...@gmail.com>:

> பெரியாரோடு ஒப்பிட்டால் கக்கன் மாமனிதராக அல்ல வானளாவிய மனிதராகவே
> காட்சிப்படுகிறார். அத்தகு வானளாவிய மனிதரை தமிழக மக்களும் நினைவு கூர்வது
> இல்லை சரி அவர் சார்ந்த தலித் வகுப்பு மக்களாவது நினைவு கூர்கிறார்களா
> தெரியாது.
>
> ஆனால் நேற்று நடிக முதல்வர் ஒருவருடைய நினைவு நாளை தேங்காய் உடைத்து படத்திற்கு
> மாலை போட்டு திரைப்படப் பாடல்களை எல்லாம் ஒளிபரப்பி தமிழ்நாட்டையே
> அமக்களப்படுத்திவிட்டார்கள்.
>

மக்களுக்கு மறதி அதிகம். காக்கை போல் பளபளப்பிற்கு மயங்கும்
தன்மையுடையர். சினிமா எனும் ஊடகம் தமிழன் மூளையை அப்படியே
அபகரித்துவிட்டது. தமிழனுக்கு சிந்திக்கக்கற்றுக்கொடுக்க வேண்டிய
அபாயகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான். எது நல்லது, எது கெட்டது எனும்
பட்டறவு கூட அற்ற நிலையில் தமிழகம் இருக்கிறது. நாம் தொடர்ந்து
அறிவுச்சுடர் மங்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நா.கண்ணன்

கி.காளைராசன்

unread,
Dec 25, 2012, 5:07:57 AM12/25/12
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா,

2012/12/25 seshadri sridharan <ssesh...@gmail.com>

கக்கன் மாமனிதராக அல்ல வானளாவிய மனிதராகவே காட்சிப்படுகிறார். அத்தகு வானளாவிய மனிதரை தமிழக மக்களும் நினைவு கூர்வது இல்லை சரி அவர் சார்ந்த தலித் வகுப்பு மக்களாவது நினைவு கூர்கிறார்களா தெரியாது. 

தேவர், வ.உ.சி., காமராசர், கக்கன் முதலானோரை சாதி அடிப்படையில் பார்க்கக் கூடாது.
(குன்றக்குடியில் என்னிடம் ஒரு பெரியவர் கூறியது இது)
--
அன்பன்
கி.காளைராசன்

Swaminathan Venkat

unread,
Dec 27, 2012, 3:12:14 AM12/27/12
to mint...@googlegroups.com
நல்ல அறிவுரை தான். ஆனால் இந்த அறிவுரை சொல்வதற்கும்,
சொல்லவேண்டியதற்கும் அவசியம் இல்லாத ஒரு உறவாடல், ஒரு பிரக்ஞை இருக்கும்
நிலைக்கு நாம் சமூகத்தை எடுத்துச் செல்ல முடியுமானால் நல்லது. சமூக
நீதி, சாதி ஒழிப்பு, எல்லாம் ப்ற்றி தீப்பொறி பறக்க கோஷங்கள் எழாத
காலத்தில், “ என்ன பிள்ளைவாள், என்ன செட்டியார் வாள்,” என்று முகமன்
சொல்லிக்கொண்டே பேசிய காலம் ஒன்று இருந்தது. அந்த பிள்ளையும்
செட்டியாரும் சாதிப் பெயர்களாக பிரக்ஞையில் அப்போது இருக்கவில்லை.
மரியாதையும் பாசமும் கலந்த முகமனாக இருந்தது.

2012/12/27 N. Ganesan <naa.g...@gmail.com>:


>
>
> On Tuesday, December 25, 2012 4:07:57 AM UTC-6, kalai wrote:
>>
>> வணக்கம் ஐயா,
>>
>> 2012/12/25 seshadri sridharan <ssesh...@gmail.com>
>>
>>> கக்கன் மாமனிதராக அல்ல வானளாவிய மனிதராகவே காட்சிப்படுகிறார். அத்தகு
>>> வானளாவிய மனிதரை தமிழக மக்களும் நினைவு கூர்வது இல்லை சரி அவர் சார்ந்த தலித்
>>> வகுப்பு மக்களாவது நினைவு கூர்கிறார்களா தெரியாது.
>>
>>
>> தேவர், வ.உ.சி., காமராசர், கக்கன் முதலானோரை சாதி அடிப்படையில் பார்க்கக்
>> கூடாது.
>> (குன்றக்குடியில் என்னிடம் ஒரு பெரியவர் கூறியது இது)
>
>

> கண்ணதாசன், காந்தி, பெரியார், அம்பேத்கார், பாரதி, பாரதிதாசன், அண்ணா,
> எம்ஜிஆர், ...
> யாரையும் சாதி அடிப்படையில் பார்க்கக் கூடாது. சாதி கடந்துதான் சமூகசேவை
> செய்துள்ளனர்.
>
> அன்புடன்,
> நா. கணேசன்

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--

( Venkat Swaminathan )
www.vesaamusings.blogspot.com

முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்

unread,
Dec 27, 2012, 2:05:45 AM12/27/12
to mint...@googlegroups.com
உண்மைதான் ஐயா 

2012/12/27 N. Ganesan <naa.g...@gmail.com>


On Tuesday, December 25, 2012 4:07:57 AM UTC-6, kalai wrote:
வணக்கம் ஐயா,

2012/12/25 seshadri sridharan <ssesh...@gmail.com>

கக்கன் மாமனிதராக அல்ல வானளாவிய மனிதராகவே காட்சிப்படுகிறார். அத்தகு வானளாவிய மனிதரை தமிழக மக்களும் நினைவு கூர்வது இல்லை சரி அவர் சார்ந்த தலித் வகுப்பு மக்களாவது நினைவு கூர்கிறார்களா தெரியாது. 

தேவர், வ.உ.சி., காமராசர், கக்கன் முதலானோரை சாதி அடிப்படையில் பார்க்கக் கூடாது.
(குன்றக்குடியில் என்னிடம் ஒரு பெரியவர் கூறியது இது)

கண்ணதாசன், காந்தி, பெரியார், அம்பேத்கார், பாரதி, பாரதிதாசன், அண்ணா, எம்ஜிஆர், ... 
யாரையும் சாதி அடிப்படையில் பார்க்கக் கூடாது. சாதி கடந்துதான் சமூகசேவை
செய்துள்ளனர்.

அன்புடன்,
நா. கணேசன்

 
--

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
=================
=  அன்பே கடவுள்  =
=================
முனைவென்றி நா. சுரேஷ்குமார்,
த/பெ த. நாகராஜன்,
2/218, கல்யாண சுந்தரம் பிள்ளை காம்பவுண்டு,
காந்திஜி சாலை,
பரமக்குடி - 623707,
இராமநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு.
அலைபேசி: 8754962106.
------------------------------------------------------------------
Munaivendri N. Sureshkumar,
S/O T. Nagarajan,
2/218, kalyana sundaram pillai compound,
Gandhiji Road,
Paramakudi - 623707,
Ramanathapuram District,
Tamilnadu.
Mobile: 8754962106.
Reply all
Reply to author
Forward
0 new messages