சங்கத் தமிழரின் தென்மதுரை, மதுரை, ஆலவாய், கூடல் நகரங்கள் எங்கே உள்ளன?

564 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 13, 2019, 1:11:02 AM10/13/19
to thiruppuvanam, Kalai Email
சங்கத் தமிழரின் தென்மதுரை, மதுரை, ஆலவாய், கூடல் நகரங்கள் எங்கே உள்ளன?

(குறிப்பு - தமிழ்ச்சங்கப்பாடல்கள், திருவிளையாடற்புராணப் பாடல்கள் மற்றும் கூகுள் புவிப்படங்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்ட எனது புரிதலின் அடிப்படையிலான கட்டுரை இது.  இது அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்த கருத்து அல்ல. எனவே இதைப் புராணத்தின் அடிப்படையிலான புளுகுக் கட்டுரை எனக் கொள்க.)

zip tamil sangam 1 Madurai .jpg
தென் மதுரை  - பாண்டியர்களின் தலைநகரம் மதுரை.  முதலாம் ஊழிக்காலத்தில் உண்டான கடல்கோளால் இந்நகரம் அழிந்துவிட்டது. மிகமிக, மிகமிகத் தொன்மையான இந்த மதுரையை இன்றைய மதுரையிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காகத் ‘தென்மதுரை’ எனக் கருதலாம்.
தென்மதுரை (1) = கவாடபரம் அல்லது கபாடபுரம்.  இதன் இருப்பிடம் இன்றைய மொரிசியசு தீவு அல்லது டிகோகார்சிகா தீவு, அல்லது இரண்டும்.   ஆப்பிரிக்காவில் மடகாசுக்கர் தீவிற்கு அருகில் உள்ள இந்தத் தென்மதுரையே, ஆதிமனிதன் தோன்றிய இடமாக இருக்க வேண்டும்.  முதலாம் கடல்கோளால் அழிந்துபோன இந்தத் தென்மதுரை பற்றிய தெளிவான இலக்கியச் சான்றுகள் ஏதும் எனக்குக் கிடைக்கப்பெறவில்லை.

a copy பஃறுளி குமரிக்கோடு.jpg
மதுரை  -  கடல்கொண்ட தென்மதுரையிலிருந்த தமிழர் புலம்பெயர்ந்து இன்றைய மதுரை இருக்கும் இடத்தில் குடியேறி உள்ளனர்.   இதுவே பழைமையான  மதுரை ஆகும்.  1) இன்றை மதுரை இருக்கும் இடத்தில் இந்தப் பழைமையான மதுரை(1) இருந்துள்ளது.  இந்த முதலாம் மதுரை மிகவும் தொன்மையானது.   இதுவும் கடல்கோளால் அழிந்தது.  இரண்டாம் கடல்கோளால் அழிந்துபோன இந்த மதுரைக்கு ஆலவாய் என்று பெயர் உண்டானது.
முதலாம் மதுரை  = ஆலவாய்.

71753657_3198143026925140_4012530487133208576_o.jpg
2) கடல்கோளுக்குப் பின்னர் புதிதாக மதுரை(2) நகரைப் பாண்டியர்கள் உண்டாக்கி அரசாண்டுள்ளனர்.  இந்த மதுரையின் பெயர் கூடல். இந்தக் கூடல் மாநகரைத்தான் கீழடி அருகே தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ளனர்.  
இரண்டாம் மதுரை = கூடல்
(குறிப்பு - கீழடி வேறு, கீழடி யருகே புதையுண்டுள்ள கூடல் நகரம் வேறு. கீழடி அருகே உள்ள மணலூர் வேறு.  மணலூரின் தொன்மையான பெயர் மணவூர்.  மணலூரும் மணவூரும் ஒன்றுதான். மணவூர் பற்றிய குறிப்புகள் மகாபாரதத்தில் உள்ளன.)

43328158_301618267095280_3906294900563378176_n.jpg

3) கூடலைத் தலைநகராகக் கொண்டு அரசாளும் போது பண்டைய ‘முதலாம் மதுரை இருந்த இடம்’ கண்டறியப்படுகிறது. உடனே அந்த இடத்தில்  புதிதாக நகர் ஒன்றை உண்டாக்கிக் கூடலில் வாழ்ந்த மக்கள் குடியேறுகின்றனர்.  இந்த நகரமே இன்றைய மதுரை ஆகும்.  முதலாம் மதுரை இருந்த அதே இடத்தில் மூன்றாவது மதுரை  உருவாக்கப்பட்டுள்ளது.
 மூன்றாவது மதுரை = இன்றைய மதுரை.

4) மூன்றாவது மதுரைவரை மீண்டும் ஒரு கடல்கோள்.  இந்த மூன்றாவது  கடல்கோளால் கைவிடப்பெற்ற கூடல்நகரம் (இரண்டாவது மதுரை) அழிந்து போகிறது.  திருஞானசம்பந்தர் கடல்கோளால் அழிந்த முதலாம்மதுரையையும், கூடல் என்ற இரண்டாவது மதுரையையும் இணைத்துக்  ”கூடல் ஆலவாய்” என்று பாடியுள்ளார்.
  மதுரை(1)யும், கூடல் என்ற மதுரை(2)யும் = கூடல் ஆலவாய்.
கூடலை அழிந்த மூன்றாவது கடல்கோளால் இன்றைய மதுரை அழியவில்லை.

5) இந்நாளில், கடல்கொண்ட கூடல் என்ற இரண்டாவது மதுரையைத் தொல்லியலாளர்கள் கீழடி அருகே கண்டறிந்து ஆய்வுகள் செய்துவருகின்றனர்.
மதுரை(3)யின் அடியிலே மதுரை(1) புதையுண்டுள்ளது.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
புரட்டாசி 26 (13.10.2019) ஞாயிறு கிழமை.
-- 

nkantan r

unread,
Oct 13, 2019, 3:26:02 AM10/13/19
to மின்தமிழ்
புராணங்கள் கதைகள். சரித்திரம் அல்ல. சில உண்மைச்சம்பவங்களின் புனையப்பட்ட கதைத்தொகுப்பே புராணங்கள். எத்தனை உண்மை எத்தனை புனைவு என்பது மற்ற நேரடி ஆதாரங்களில் தான் விளங்கும். (மற்றொரு இலக்கியத்தில் இருக்கிறது என்பது ஆதாரம் ஆகாது). மக்கள் நம்புகிறார்கள் என்பதும் ஆதாரமில்லை.

ராமாயணத்தை ஆதாரமாகக் கொண்டு, ராமனையும் அவன் பிறந்த் இடம் என்றும் மக்கள் நம்புகிறார்கள் என்றும் நடக்கும் கூத்தையும் அதன் மூலம் ஆட்சி மாற்றம் செய்யும் மந்தையாய் மக்களும் அதன் விலைவுகளும் கண்கூடு. இதையே ஆதாரமாகக் கொண்டு இலங்கையின் அரச வம்சத்தை இறைவனிடமிருந்து நிறுவுவதும், ராமர் பாலம் என்று பேசுவதும் எப்படி??

rnk

N. Ganesan

unread,
Oct 13, 2019, 7:23:11 AM10/13/19
to மின்தமிழ், vallamai, karuannam annam
On Sat, Oct 12, 2019 at 10:10 PM நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:
சங்கத் தமிழரின் தென்மதுரை, மதுரை, ஆலவாய், கூடல் நகரங்கள் எங்கே உள்ளன?

(குறிப்பு - தமிழ்ச்சங்கப்பாடல்கள், திருவிளையாடற்புராணப் பாடல்கள் மற்றும் கூகுள் புவிப்படங்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்ட எனது புரிதலின் அடிப்படையிலான கட்டுரை இது.  இது அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்த கருத்து அல்ல. எனவே இதைப் புராணத்தின் அடிப்படையிலான புளுகுக் கட்டுரை எனக் கொள்க.)

 கூடல் என்பது இன்றைய மதுரையின் தமிழ்ப் பெயர். இரண்டு ஆறுகள் கூடுதலால் வந்த பெயர். கிருதமாலை ஆற்றங்கரையில்
“இருந்தையூர்” என்ற மாலவன் கோவில் இருந்ததற்கான சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன. “கூடலும் கோழியும்” என்று
ஆழ்வார்கள் இத்தலத்தைப் பின்னாளில் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

கீழடிக்குக் கூடல் என்ற பெயர் எப்போதும் இருந்ததில்லை எனபது தெளிவு. எந்த இரண்டு யாறுகளும் கூடுதல்/சங்கமித்தில
ஆங்கு இல்லை. ஆதலான், கூடல் என்ற பெயர் மதுரைக்கே உரித்து. இருந்தையூர் பற்றிக் கற்றால் வெளிச்சம் கிடைக்கும்.

-----------

மதுரை பண்டுக்காலங்களில் மதிரை எனப் பெயர் பெற்றுள்ளது. மதிராந்தகன் என்று ராஜேந்திர சோழன் காசுகள்
வெளியிட்டான். மதில்கள் சூழ்ந்த நகரம். எனவே, மதிரை. யாமை வாஹனம் உடைய தேவி யமுநா. ய்முனைக்
கரையிலே கண்ணன் விளையாடினான். யமுனையில் கலக்கும் நதி தொழுனை. கோவலர்கள் மிகுதியால்
தொழுனை என அந்நதிக்குப் பெயர். தோஹ்னா என்பர் இப்பொழுது. தில்லைப் புதர் நிறைந்த பகுதி தில்லி.
தில்லித் துருக்கர்கள் தில்லிகா (Dhillikaa) எனப் பாரசீக மொழியில் எழுதினர். இதே போல், Bhavaani என்ற பெயர்
ஹரியானாவில் உண்டு. அப்பெயரை வேந்தனின் கேள்வியில் ஆராய்வோம். பாட்னா என்னும் பாடலிபுத்திரம்
பாடலிப்புதர் என்ற பழைய பெயர் கொண்டது. பாடலி = பாதிரி என்றும் வழங்கும். கடலூர் (< கூடலூர்) 
திருப் *பாதிரிப்* புலியூர் = தேவார ஸ்தலம்.

------------

நீஙகள் தினந்தோறும் எழுதி வாட்ஸப் குழுக்கள் (வினைதீத்தான் ஐயா குழு, ...) பரப்பி
வரும் கூகுள் படம், + மதுரை மடகாஸ்கர் அருகே எனது விஞ்ஞானத்திற்கு முற்றிலும் புறம்பானது.
செய்வன செய்யும் மோதியைப் புகழ்கிறீர்கள். இந்தியப் பொருளாதாரம் அதல பாதாளத்தை
நோக்கிப் பயணிக்கிறது. மேலே கொண்டுவர விஞ்ஞானம் ஒன்றே துணை.
மதுரைக்கு சுனாமி வந்தது, பழைய மதுரை மடகாஸ்கர் அருகே என்றெல்லாம் எழுதினால்
விஞ்ஞானத்திற்கு எதிரான எண்ணங்கள் இளைய தலைமுறைக்கு ஏற்படும். அதனால் தான்
உங்களுக்கு மடல் எழுத வேண்டிய சூழல்.  இயற்கை எய்திய நண்பர் சிங்கநெஞ்சன் மடல்களை
மீண்டும் ஆராய்க. சில முறை அவரும், நானும் உங்கள் எழுத்துக்களைப் பற்றிப் பேசியதுண்டு.

(1) கூடல் = மதுரை
(2) கூடலோ, மதுரையோ இன்றைய கீழடி அன்று.
(3) கீழடி பெருமணலூர் என்று தென்மொழி, வடமொழி இலக்கியங்கள்
2000+ ஆண்டுகளாகப் பதிவுசெய்துள்ளன. பாண்டியராஜதநயை
அருஜுனனுக்கு வாழ்க்கைப் பட்டாள். அவள் மணலூர்/கீழடிக்காரி.
(4) சங்கம் பற்றிய கதைகள் இறையனார் அகப்பொருள், ...
போன்றன அழகான Rhetoric. தமிழில் வசன நடையைக் கொணர்ந்த நூல் அது.
அகத்தியர், மூன்று சங்கம் என்பதெல்லாம் சைவர்களின் கதைகள்.
சமணர்கஈன் தமிழ்க்கொடையை மாற்ற, அகத்தியர் என தமிழ் இலக்கணம்
தந்தார் என சிருஷ்டித்து எழுதியவை. இன்றைய விஞ்ஞானச் சூழலில்,
பள்ளி ஆசிரியர்கள் கட்டுரைகளை வைத்து திருவள்ளுவர் 
சைவ சித்தாந்தம் எழுதினார் எனல் போல. ...

பிற பின்!
நா. கணேசன்

Ravi Annaswamy

unread,
Oct 13, 2019, 8:20:02 AM10/13/19
to மின்தமிழ்
"சங்க இலக்கியத்தில் ஊர் பெயர் ஆய்வு"

முனைவர் கல்பனா சேக்கிழார்

Link to Thamizhmann book

===

மிக நன்கு வடிவு அமைக்கப்பட்ட PDF.

அப்படியே படிக்கலாம்.

யுனிகோட் உரு மாற்ற முயல்கிறேன்.

முன்னுரையிலிருந்து:
====

ஊர்ப்பெயர் ஆய்வின் தேவை

இவ்வாறு பழமையின் எச்சங்களாகவும், புதுமையின்
கண்ணாடிகளாகவும் விளங்கும் இடப்பெயர்களை ஆய்வதன்
மூலம் வரலாறு, பண்பாடு, மொழியியல் ஆகிய துறைகளுக்கு
ஏற்படும் பயன்கள் பலவாகும். பழங்காலச் சாசனங்கள்
இலக்கியங்கள் இவற்றில் காணப்படும் இடப்பெயர்களை
ஆராய்தல், தற்காலத்தில் வழக்கத்திலிருக்கும் பெயர்களை
ஆராய்தல் ஆகிய இரு நிலைகளில் இடப்பெயர்களை
ஆராயலாம். பழங்காலச் சாசன இலக்கியங்களில் இடம்பெறும்
இடப்பெயர்களை ஆராய்வதன்மூலம் அக்கால மக்களின்
பண்பாடு, வரலாறு போன்றவற்றை ஓரளவு தெரிந்து
கொள்ளலாம். ஒரு நாட்டின் பழங்கால நில அமைப்பு, அக்
காலத்தில் வழங்கிவந்த இடப்பெயர்கள் காலந்தோறும்
எவ்வெவ்வாறு உருமாற்றம் பெற்றுள்ளன என்பதையும் பழங்
காலப் பெயர்களை ஆய்வதன் வழியாக அறிந்து கொள்ளலாம்.
மேலும், அக்கால மொழிநிலை காலந்தோறும் ஒரு மொழியில்
ஏற்படும் மாற்றங்கள் முதலியவற்றைத் தெரிந்து கொள்ளவும்
இவ்வாய்வு துணைசெய்யும்.
இந்நூல் உருவாக்கத்திற்குக் காரணமாக அமைந்தவர் என்
கணவர் மருத்துவர் மு. சேக்கிழார் அவர்கள். நூலாக்கம்
சிறப்பாகவும் விரைவாகவும் வெளிவர உதவியவர். என்
வாழ்க்கையின் வழிகாட்டி, தமிழ்மண் பதிப்பக உரிமையாளர்
ஐயா கோ. இளவழகனார் அவர்கள். இறுதிப் பிழைத்திருத்தம்
செய்துகொடுத்தவர் பேராசிரியர் முனைவர் சோ.கண்ணதாசன்
அவர்கள். நூல் வடிவாக்கம் செய்தவர் திருமதி ப.கயல்விழி
அவர்கள். இவர்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த
நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முனைவர் கல்பனா சேக்கிழார்

====

From page 91:

87. கூடல் = கலி - 30-11, 31-25, 35-17, 57-8, 92-11,
அக - 93-9, 116-14, 231-13, 253-6, 296-
12, 315-7, 346-20, நற் - 39-10, 288-9,
திருமு - 71, மது - 429, மது-தனி - 1-4,
2-4, பரி - 8-28, 29, 10-40, 112, 129, 12-
31, 17-23, 45, 19-8, 15, 20-26, 106, பரிதி
2-4, 26, 46, 91, 12-2

N. Ganesan

unread,
Oct 13, 2019, 8:40:48 AM10/13/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, kalpanasekkizhar92
நன்றி, ரவி. தமிழ்மண் கோ. இளவழகனார் கொடை பெரிது. தமிழ்நாட்டு அரசாங்கம் செய்யாததைத் தனியே சாதித்தவர்.

இன்னும் 10 இளவழகனார்களும், அவருக்கு உதவும் சீனிவாசன், உங்களைப் போன்ற கணிஞர்களும் தோன்ற வேண்டும்.

கல்பனா முன்பு இங்கே இருந்தார். மடலாடியுள்ளோம். இறந்துவருகிற பல நூல்களை கணிமீட்புச் செய்யவும்,
நல்ல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கவும் முனைவர் கல்பனா சேக்கிழார் போன்றோர் இருக்கிறார்கள்
என்பது நம் நம்பிக்கை.

நா. கணேசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/c91e8182-e0ce-444c-97d3-b7395c6768af%40googlegroups.com.

Ravi Annaswamy

unread,
Oct 13, 2019, 9:08:00 AM10/13/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, kalpanasekkizhar92
தமிழ்மண் தொகுப்பு ஓர் அற்புதக் கொடை.

இவ்வரிசையில் சேர்த்துச்சொல்லும் அளவுக்கு நான் இன்னும் எதுவும் செய்யவில்லை அய்யா.

----

I have written converter for webulagam font and done first unicode (searchable and freeflowing mobile readable) conversion of this book. Will push code to github soon.
I will try to do a format preserving conversion later today.

Sanga_Ilakkiya_Oor_Peyarkal_Kalpana_Sekkizhar_2017_unicode.txt

N. Ganesan

unread,
Oct 13, 2019, 10:58:41 AM10/13/19
to மின்தமிழ், vallamai
> பகூத்தறிவின் அடிப்படையிலில்லாமல், இலக்கியம் மற்றும் கூகுள்புவிப்படம் இவற்றின் அடிப்படையிலான 
> எனது கருத்துக்களுக்கும் அவற்றிற்கான விளக்கங்களும் இல்லாமலிருக்கும்.  பரவாயில்லை என்றால் நான் 
> எனது பதிலைப் பதிவு செய்கிறேன்.

அன்பின் காஶிஸ்ரீ காளைராஜன்,

பகூத்தறிவின் அடிப்படை இல்லாமல் எழுதுவேன் என்கிறீர்கள். பகூத்தறிவு என்றால் என்ன?
தமிழில் இப்படி ஒர் சொல் உண்டா? எனக்கு இதுவரை படித்த நூல்களில் இப்படியோர் சொல்லை
பார்த்ததில்லை. பகூத்தறிவாளர்கள் நூல்களை ஆதரிக்கின்றனரா? இணையங்களில் எழுதுகின்றனரா?
இருந்தால் சொல்லுங்கள். விஞ்ஞானபூர்வமாக இருக்கிறதா என சேர்ந்து ஆராய்வோம்.

காஶிஸ்ரீ wrote:
<<<
சங்கம் வளர்த் கூடல் போற்றுவோம்.
மதுரை மாநகர் போற்றுவோம்.
தொல்லியலாளர் போற்றுவோம்.  
>>>

நிச்சயமாகச் செய்யவேண்டியது. செய்வோம்.

கூடல் சங்கம் வளர்த்த சங்கம நகர். அது மதுரை.
எனவே, கூடலைப் போற்றல் மதுரை குறித்தே.

தொல்லியலாளர் போற்றுவோம். தமிழ்ப் பேரறிஞர்கள்
கீழடி மணலூர் சங்கச் செய்யுள், மஹாபாரதம் சான்றுகள்
கொடுத்தும், கூடல் எனப் பெயரை மதுரை (< மதிரை)
அடைதலும், அகத்தியர் - தமிழ் உறவுகள் கற்பனை,
எனவே, மூன்று தமிழ்ச் சங்கங்கள் 8-ம் நூற்றாண்டின்
சைவர் கறபனை என்றெல்லாம் காட்டி எழுதி
நூறாண்டுகள் ஆகிவிட்டன்.

தொல்லியல் முதுமுனைவர் இரா. நாஅசாமி
(அவர்தான் தமிழி என்று பெயரிட்டவர்.
நூற்சான்றுகளைப் பார்க்கும் போது,
தொல்காப்பியர் காலத்திற்குப் பின்னர் -
அதாவது, கி.பி. 2-ம் நூற்றாண்டின் பின் உள்ள
தமிழ் ப்ராமியை தமிழி என்னலாம். தடையில்லை.)
கீழடி = மணலூர் என்கிறார். கேட்போம்.

 தொல்லியல் முதுமுனைவர் நாகசாமி கூற்று: 2017-ல்.
முழு விடியோவும்:

கீழடி கூட்ல்-மதுரை அல்ல. கீழடி = பெருமணலூர்.
கூடல் என்ற பெயர் கீழடிக்கு வராது.

வாழ்க வளமுடன்,
நா. கணேசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 13, 2019, 11:25:54 AM10/13/19
to mintamil, vallamai, housto...@googlegroups.com, kalpanasekkizhar92
On Sun, 13 Oct 2019 at 18:37, Ravi Annaswamy <ravi.an...@gmail.com> wrote:
தமிழ்மண் தொகுப்பு ஓர் அற்புதக் கொடை.

நல்லதொரு தொகுப்பு. பதிவு செய்தமைக்கு நன்றி ஐயா.

அன்பன்
கி. காளைராசன் 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 13, 2019, 11:27:58 AM10/13/19
to mintamil
On Sun, 13 Oct 2019 at 12:56, nkantan r <rnka...@gmail.com> wrote:
புராணங்கள் கதைகள். சரித்திரம் அல்ல.
ஆமாம்.
நான் புராணக்கதைகளில் உள்ளதை எழுதுகிறேன்
சரித்திரம் எழுதவில்லை.

அன்பன்
கி. காளைராசன் 
 
சில உண்மைச்சம்பவங்களின் புனையப்பட்ட கதைத்தொகுப்பே புராணங்கள். எத்தனை உண்மை எத்தனை புனைவு என்பது மற்ற நேரடி ஆதாரங்களில் தான் விளங்கும். (மற்றொரு இலக்கியத்தில் இருக்கிறது என்பது ஆதாரம் ஆகாது). மக்கள் நம்புகிறார்கள் என்பதும் ஆதாரமில்லை.

ராமாயணத்தை ஆதாரமாகக் கொண்டு, ராமனையும் அவன் பிறந்த் இடம் என்றும் மக்கள் நம்புகிறார்கள் என்றும் நடக்கும் கூத்தையும் அதன் மூலம் ஆட்சி மாற்றம் செய்யும் மந்தையாய் மக்களும் அதன் விலைவுகளும் கண்கூடு.  இதையே ஆதாரமாகக் கொண்டு இலங்கையின் அரச வம்சத்தை இறைவனிடமிருந்து நிறுவுவதும், ராமர் பாலம் என்று பேசுவதும் எப்படி??

rnk

-- 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 13, 2019, 11:36:18 AM10/13/19
to mintamil, vallamai
On Sun, 13 Oct 2019 at 20:28, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
> பகூத்தறிவின் அடிப்படையிலில்லாமல், இலக்கியம் மற்றும் கூகுள்புவிப்படம் இவற்றின் அடிப்படையிலான 
> எனது கருத்துக்களுக்கும் அவற்றிற்கான விளக்கங்களும் இல்லாமலிருக்கும்.  பரவாயில்லை என்றால் நான் 
> எனது பதிலைப் பதிவு செய்கிறேன்.

அன்பின் காஶிஸ்ரீ காளைராஜன்,

பகூத்தறிவின் அடிப்படை இல்லாமல் எழுதுவேன் என்கிறீர்கள். பகூத்தறிவு என்றால் என்ன?
மகரவிடங்கர் பற்றி எல்லா இழைகளில் எழுவது போன்றது பகூத்தறிவு.  இதுபோன்ற பகூத்தறிவு என்னிடம் இல்லை என்று சொல்கிறேன்.
 
தமிழில் இப்படி ஒர் சொல் உண்டா? எனக்கு இதுவரை படித்த நூல்களில் இப்படியோர் சொல்லை
தமிழில்  காஶிஸ்ரீ யும் இல்லை. பகூத்தறிவும் இல்லை.
நீங்கள் எழுதிய உங்களது பதிவில் காஶிஸ்ரீ உள்ளது.
நான் எழுதிய எனது பதிவில் பகூத்தறிவு உள்ளது. 
 
பார்த்ததில்லை. பகூத்தறிவாளர்கள் நூல்களை ஆதரிக்கின்றனரா? இணையங்களில் எழுதுகின்றனரா?
இருந்தால் சொல்லுங்கள். விஞ்ஞானபூர்வமாக இருக்கிறதா என சேர்ந்து ஆராய்வோம்.
விஞ்ஞானிகள் விஞ்ஞானபூர்வமாக ஆராயட்டும்.
 
காஶிஸ்ரீ wrote:
<<<
சங்கம் வளர்த் கூடல் போற்றுவோம்.
மதுரை மாநகர் போற்றுவோம்.
தொல்லியலாளர் போற்றுவோம்.  
>>>

நிச்சயமாகச் செய்யவேண்டியது. செய்வோம்.

கூடல் சங்கம் வளர்த்த சங்கம நகர். அது மதுரை.
எனவே, கூடலைப் போற்றல் மதுரை குறித்தே.
இந்த கூடல் என்ற மதுரைதான் திருப்பரங்குன்றிற்குக் கிழக்கே உள்ளது. நக்கீரரால் பாடப்பெற்றுள்ளது. புதையுண்டுள்ளது. தொல்லியலாளர்களால்  தோண்டிக் கண்டறியப்பட்டுள்ளது.
 
தொல்லியலாளர் போற்றுவோம். தமிழ்ப் பேரறிஞர்கள்
கீழடி மணலூர் சங்கச் செய்யுள், மஹாபாரதம் சான்றுகள்
கொடுத்தும், கூடல் எனப் பெயரை மதுரை (< மதிரை)
அடைதலும், அகத்தியர் - தமிழ் உறவுகள் கற்பனை,
எனவே, மூன்று தமிழ்ச் சங்கங்கள் 8-ம் நூற்றாண்டின்
சைவர் கறபனை என்றெல்லாம் காட்டி எழுதி
நூறாண்டுகள் ஆகிவிட்டன்.

தொல்லியல் முதுமுனைவர் இரா. நாஅசாமி
(அவர்தான் தமிழி என்று பெயரிட்டவர்.
நூற்சான்றுகளைப் பார்க்கும் போது,
தொல்காப்பியர் காலத்திற்குப் பின்னர் -
அதாவது, கி.பி. 2-ம் நூற்றாண்டின் பின் உள்ள
தமிழ் ப்ராமியை தமிழி என்னலாம். தடையில்லை.)
கீழடி = மணலூர் என்கிறார். கேட்போம்.

 தொல்லியல் முதுமுனைவர் நாகசாமி கூற்று: 2017-ல்.
முழு விடியோவும்:

கீழடி கூட்ல்-மதுரை அல்ல. கீழடி = பெருமணலூர்.
கூடல் என்ற பெயர் கீழடிக்கு வராது.
ஆமாம் கூடல் என்ற பெயர் கீழடிக்கு வராது.
கூடல் என்ற பெயர் கீழடி யருகே புதையுண்டுள்ள நகருக்கு வரும்.

இந்த இழையுடன் தொடர்புடைய செய்திகளை மட்டும் எழுதி வாழ்க வளமுடன்,

அன்பன்

N. Ganesan

unread,
Oct 13, 2019, 12:00:14 PM10/13/19
to மின்தமிழ், vallamai
On Sun, Oct 13, 2019 at 8:36 AM நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:

On Sun, 13 Oct 2019 at 20:28, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
> பகூத்தறிவின் அடிப்படையிலில்லாமல், இலக்கியம் மற்றும் கூகுள்புவிப்படம் இவற்றின் அடிப்படையிலான 
> எனது கருத்துக்களுக்கும் அவற்றிற்கான விளக்கங்களும் இல்லாமலிருக்கும்.  பரவாயில்லை என்றால் நான் 
> எனது பதிலைப் பதிவு செய்கிறேன்.

அன்பின் காஶிஸ்ரீ காளைராஜன்,

பகூத்தறிவின் அடிப்படை இல்லாமல் எழுதுவேன் என்கிறீர்கள். பகூத்தறிவு என்றால் என்ன?
மகரவிடங்கர் பற்றி எல்லா இழைகளில் எழுவது போன்றது பகூத்தறிவு.  இதுபோன்ற பகூத்தறிவு என்னிடம் இல்லை என்று சொல்கிறேன்.

இந்த இழையில் குறிப்பிடவில்லை. நீங்கள் கூகுள் மேப்ஸ் அறிஞர். தொல்லியல் சான்றுகளுக்கு
ஒரு தொடர்பும் உங்கள் இழைகளில் ஒன்றும் காண முடிவதில்லை. 

விஞ்ஞானிகளை தொடர்பு கொள்ளவும்: யாராவது சுனாமி மதுரை தோன்றிய நாளிலிருந்து
வந்திருக்கிறது எனக் குறிப்பிட்டால் எழுதவும். அவரிடம் பேசுவோம்.

குமரிக்கண்டம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை 10-ம் உலக தமிழ் ஆய்வு மாநாட்டில் கேட்க நேர்ந்தது.
 
தமிழில் இப்படி ஒர் சொல் உண்டா? எனக்கு இதுவரை படித்த நூல்களில் இப்படியோர் சொல்லை
தமிழில்  காஶிஸ்ரீ யும் இல்லை. பகூத்தறிவும் இல்லை.
நீங்கள் எழுதிய உங்களது பதிவில் காஶிஸ்ரீ உள்ளது.
நான் எழுதிய எனது பதிவில் பகூத்தறிவு உள்ளது. 

தமிழ்நாட்டில் காஶி இல்லை. கங்கைக் கரையில் உள்ளது.
தமிழில் காஶிபுராதீசுவரி போன்ற சுலோகங்களைப் பார்க்கலாம்.
காஶிஸ்ரீ என்பது வடமொழிப் பட்டம், பத்மஸ்ரீ போல. 
 
பார்த்ததில்லை. பகூத்தறிவாளர்கள் நூல்களை ஆதரிக்கின்றனரா? இணையங்களில் எழுதுகின்றனரா?
இருந்தால் சொல்லுங்கள். விஞ்ஞானபூர்வமாக இருக்கிறதா என சேர்ந்து ஆராய்வோம்.
விஞ்ஞானிகள் விஞ்ஞானபூர்வமாக ஆராயட்டும்.

உறுதியாய் விஞ்ஞானிகள் உங்களுக்குப் பதில் கொடுத்துள்ளனர். 

ஆராய்ந்து பார்த்தால் கூகுள் மேப்ஸ் காட்டும் மடகாஸ்கருக்கும்,
மதுரைக்கும் எப்போதும் தொடர்பு இல்லை என்று தெரிகிறது.
 
காஶிஸ்ரீ wrote:
<<<
சங்கம் வளர்த் கூடல் போற்றுவோம்.
மதுரை மாநகர் போற்றுவோம்.
தொல்லியலாளர் போற்றுவோம்.  
>>>

நிச்சயமாகச் செய்யவேண்டியது. செய்வோம்.

கூடல் சங்கம் வளர்த்த சங்கம நகர். அது மதுரை.
எனவே, கூடலைப் போற்றல் மதுரை குறித்தே.
இந்த கூடல் என்ற மதுரைதான் திருப்பரங்குன்றிற்குக் கிழக்கே உள்ளது. நக்கீரரால் பாடப்பெற்றுள்ளது. புதையுண்டுள்ளது. தொல்லியலாளர்களால்  தோண்டிக் கண்டறியப்பட்டுள்ளது.

இல்லை. தொல்லியல் அறிஞர்கள் மணலூர் எனக் குறிப்பிடுகின்றனர். சில ஆண்டு முன்னர்
வெ. வேதாசலம் கொடுத்த குறிப்புகள் கொடுத்தேன். அவர்தான் அமர்நாத் நாமகிருஷ்ணா
என்னும் இளைஞரைத் தூண்டியவர். வேதாசலம், சாந்தலிங்கம், நாகசாமி, ....
போன்ற தொல்லியல் அறிஞர்கள் ஒருவரும் கீழடி தான் கூடல் என்று கூறவில்லை.

கீழடி பற்றி வந்துள்ள இரண்டு ரிப்போர்ட்களையும் படித்ததால் அறிய முடிகிறது.
 
தொல்லியலாளர் போற்றுவோம். தமிழ்ப் பேரறிஞர்கள்
கீழடி மணலூர் சங்கச் செய்யுள், மஹாபாரதம் சான்றுகள்
கொடுத்தும், கூடல் எனப் பெயரை மதுரை (< மதிரை)
அடைதலும், அகத்தியர் - தமிழ் உறவுகள் கற்பனை,
எனவே, மூன்று தமிழ்ச் சங்கங்கள் 8-ம் நூற்றாண்டின்
சைவர் கறபனை என்றெல்லாம் காட்டி எழுதி
நூறாண்டுகள் ஆகிவிட்டன்.

தொல்லியல் முதுமுனைவர் இரா. நாஅசாமி
(அவர்தான் தமிழி என்று பெயரிட்டவர்.
நூற்சான்றுகளைப் பார்க்கும் போது,
தொல்காப்பியர் காலத்திற்குப் பின்னர் -
அதாவது, கி.பி. 2-ம் நூற்றாண்டின் பின் உள்ள
தமிழ் ப்ராமியை தமிழி என்னலாம். தடையில்லை.)
கீழடி = மணலூர் என்கிறார். கேட்போம்.

 தொல்லியல் முதுமுனைவர் நாகசாமி கூற்று: 2017-ல்.
முழு விடியோவும்:

கீழடி கூட்ல்-மதுரை அல்ல. கீழடி = பெருமணலூர்.
கூடல் என்ற பெயர் கீழடிக்கு வராது.
ஆமாம் கூடல் என்ற பெயர் கீழடிக்கு வராது.
கூடல் என்ற பெயர் கீழடி யருகே புதையுண்டுள்ள நகருக்கு வரும்.

எப்படி? எல்லா தொல்லியலாளரும் புதையுண்ட நகரம்  கீழடி
என்று தான் குறிப்பிடுகின்றனர், ஒருவரும் கூடல் என்பதில்லை.

கூகுள் மேப்ஸ் அப்படிக் குறிப்பிடுகிறதா? கீழடியை கூடல் என்று
குறிப்பிடுகிறதா?

நா. கணேசன்
 
இந்த இழையுடன் தொடர்புடைய செய்திகளை மட்டும் எழுதி வாழ்க வளமுடன்,

அன்பன்
கி. காளைராசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 13, 2019, 12:11:17 PM10/13/19
to மின்தமிழ், vallamai, karuannam annam
On Sun, Oct 13, 2019 at 8:36 AM நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:

தொல்லியலாளர் போற்றுவோம். தமிழ்ப் பேரறிஞர்கள்
கீழடி மணலூர் சங்கச் செய்யுள், மஹாபாரதம் சான்றுகள்
கொடுத்தும், கூடல் எனப் பெயரை மதுரை (< மதிரை)
அடைதலும், அகத்தியர் - தமிழ் உறவுகள் கற்பனை,
எனவே, மூன்று தமிழ்ச் சங்கங்கள் 8-ம் நூற்றாண்டின்
சைவர் கறபனை என்றெல்லாம் காட்டி எழுதி
நூறாண்டுகள் ஆகிவிட்டன்.

தொல்லியல் முதுமுனைவர் இரா. நாகசாமி
(அவர்தான் தமிழி என்று பெயரிட்டவர்.
நூற்சான்றுகளைப் பார்க்கும் போது,
தொல்காப்பியர் காலத்திற்குப் பின்னர் -
அதாவது, கி.பி. 2-ம் நூற்றாண்டின் பின் உள்ள
தமிழ் ப்ராமியை தமிழி என்னலாம். தடையில்லை.)
கீழடி = மணலூர் என்கிறார். கேட்போம்.

 தொல்லியல் முதுமுனைவர் நாகசாமி கூற்று: 2017-ல்.
முழு விடியோவும்:

கீழடி கூட்ல்-மதுரை அல்ல. கீழடி = பெருமணலூர்.
கூடல் என்ற பெயர் கீழடிக்கு வராது.
 
ஆமாம் கூடல் என்ற பெயர் கீழடிக்கு வராது.
கூடல் என்ற பெயர் கீழடி யருகே புதையுண்டுள்ள நகருக்கு வரும்.

எப்படி? எல்லா தொல்லியலாளரும் புதையுண்ட நகரம்  கீழடி
என்று தான் குறிப்பிடுகின்றனர், ஒருவரும் கூடல் என்பதில்லை.

தொல்லியல் நிபுணர்கள் ஆய்வறிக்கை:
கீழடி என்றுதான் தமிழ், ஆங்கிலம் நூல்களில் குறிப்பிடுகிறது:
 
கூடல் என்பது மதுரை. அதைக் கீழடி எனல் பிழை.

Ravi Annaswamy

unread,
Oct 14, 2019, 1:35:47 AM10/14/19
to மின்தமிழ், vallamai, karuannam annam
முநைவர் கல்பனா அவர்களின் சங்க இலக்கிய ஊர் பெயர் - ஆய்வு நூல் (தமிழ் மண் பதித்து, 'கணியம்' அறக்கட்டளை பொதுப்பயன்பாட்டுக்குத் தந்த அரிய நூல்) தற்போது, படிக்கவும் தேடவும் வசதியாக ஒருங்குறியில்.

PDF (TM fonts based) Link:

Unicode searchable page formatting preserved version:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Oct 14, 2019, 1:43:24 AM10/14/19
to மின்தமிழ்

உங்கள் பணிக்குப்  பாராட்டுகள் ரவி.

உங்கள் இணையத்தில் அனைவரும் அனைவரும் பயன் கொள்ளும் வகையில் அமைந்துள்ளதா?

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Ravi Annaswamy

unread,
Oct 14, 2019, 1:50:32 AM10/14/19
to மின்தமிழ்
தேமொழி,

நன்றி.

கிட்ஹப் ஆக இருப்பினும், இது மென்பொருள் பக்கமல்ல, கட்டுரைகள் வெளியிட உதவும் பக்கம்,
எனவே இச்சுட்டிக்கு யார் வேண்டுமானாலும் சென்று படிக்கலாம். பார்த்து எழுதவும்.

எச் டி எம் எல் என்பதால், +, - zoom in zoom out  செய்து எழுத்துக்களை 
பெரிதாக்கிக் கொள்ளலாம்.

ரவி

Ravi Annaswamy

unread,
Oct 14, 2019, 1:53:51 AM10/14/19
to மின்தமிழ்
அது நானே உருவாக்கிய என் இணைய தளம் அல்ல, கிட்ஹப் பில் எனக்களித்த பதிப்புத்தளம். (<user>.github.io)

யார் வேண்டுமானாலும் அங்கு தளம் உருவாக்கி கட்டுரைகள் எழுதிப் பராமரிக்க இயலும்.

இசைஇனியன் அதில் கில்லாடி (ஸூபர் யூஸர்) !
Message has been deleted

Ravi Annaswamy

unread,
Oct 14, 2019, 2:05:46 AM10/14/19
to மின்தமிழ்
உங்கள் கேள்வி புரிகிறது.

தற்போது, நிரலமைப்போரும், நிரல் ஓட்டுனரும் மட்டுமே பயன் படுத்தமுடியும் இவ்வுருமாற்றிகளை.

நல்ல ஐடியா. விரைவில் நீங்கள் கேட்டதுபோல் ஆக்க முயல்வோம்.

ரவி
Reply all
Reply to author
Forward
0 new messages