
தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2025
2025ஆம் ஆண்டுக்குரிய “தமுஎகச கலை இலக்கிய விருது ”களுக்கான நூல்கள், ஆவணப்படங்கள் / குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன. 2025ஆம் ஆண்டில் வெளியானவை மட்டுமே பரிசீலனைக்குரியவை. நூலின் மூன்று பிரதிகள் 2026 மார்ச் 31ஆம் தேதிக்குள் அஞ்சல் / தூதஞ்சல் (கூரியர்) மூலம் அனுப்பப்பட வேண்டும். பரிசீலனைக்கு வரும் நூல்களைத் திருப்பி அனுப்ப இயலாது.
நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி:
பொதுச்செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
57/1, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, (தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகம்)
மதுரை- 625001 தொலைபேசி: 0452-2341669
குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களின் தனிநபர் இணைய இணைப்புகளை
73730 73573 என்ற புலன எண்ணுக்கு அனுப்பிவைக்கவும்.
தேர்வாகும் நூல் / படம் ஒவ்வொன்றுக்கும் விருதுத்தொகை ரூ.10,000/, சான்றிதழ் ஆகியவை தமுஎகச நடத்தும் விழாவில் வழங்கப்படும்.
விருதுகள்
1. கே.முத்தையா நினைவு விருது
தொன்மைசார் நூல்
2. கே.பி.பாலச்சந்தர் நினைவு விருது
நாவல்
3. சு.சமுத்திரம் நினைவு விருது
விளிம்புநிலை மக்கள்குறித்த படைப்பு
4. இரா.நாகசுந்தரம் நினைவு விருது
அல்புனைவு நூல் (நான் ஃபிக்ஷன்)
5. வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் – செல்லம்மாள் (ப.ஜெகந்நாதன்) நினைவு விருது கவிதைத் தொகுப்பு
6. அகிலா சேதுராமன் நினைவு விருது
சிறுகதைத் தொகுப்பு
7. வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது
மொழிபெயர்ப்பு நூல்
8. இராஜபாளையம் மணிமேகலை மன்றம் (கொ.மா. கோதண்டம்) விருது
குழந்தைகள் இலக்கிய நூல்(சிறுவர் பாடல்கள்)
9. கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது
மொழிவளர்ச்சிக்கு உதவும் நூல்
10. ஜனநேசன் நினைவு விருது
எழுத்தாளரின் முதல் நூல்
11. மருத்துவர் சிவக்கண்ணு நினைவு விருது
அறிவியல் மனப்பாங்கை உருவாக்கும் நூல்
12. பா.இராமச்சந்திரன் நினைவு விருது
குறும்படம்
13. என்.பி.நல்லசிவம் - ரத்தினம் நினைவு விருது
ஆவணப்படம்
கீழ்காணும் விருதுகளுக்கு பொருத்தமான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன
14. மு.சி.கருப்பையா பாரதி-ஆனந்த சரஸ்வதி நாட்டுப்புற கலைச்சுடர் விருது
15. மக்கள் பாடகர் திருவுடையான் நினைவு இசைச்சுடர் விருது
16. த.பரசுராமன் நினைவு நாடகச்சுடர் விருது
17. மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு பெண்படைபாளுமை விருது
18. கருப்பு கருணா நினைவு நுண்கலைச்சுடர் விருது
நன்றி,
மதுக்கூர் இராமலிங்கம்
மாநிலத் தலைவர்
களப்பிரன்
பொதுச்செயலாளர்