கொங்காடை

164 views
Skip to first unread message

PazamaiPesi

unread,
Jun 13, 2018, 12:05:12 AM6/13/18
to மின்தமிழ், vallamai

கொங்காடை

கோயமுத்தூரில் கனமழை
பள்ளிகளுக்கு விடுமுறை
என அறிய நேர்ந்ததும்
வாய்விட்டுச் சிரித்தேன்!
மூங்கில்தொழுவு
சிக்கல்நூத்து துவக்கம்
எட்டு கிலோ மீட்டர்
தொலைவில் இருந்து
இட்டேரி வழியே
கெளதாரிகள் துணையோடு
ஓணான்களின் நட்போடு
பாம்புகள் தேள்களின்
அணுக்கத்தோடு
தாவரவேலிகளின் கதகதப்பில்
வாகைத்தொழுவு வேலூர்
பள்ளிக்கு காலார நடை
போட்டு போனதென்ன?!

கோடை விடுமுறைக்கு
முந்தைய நாள்
நோட்டுகளுக்கும்
புத்தகங்களுக்கும்
பழுப்புவண்ணப் புத்தாடை
பூட்டினோமோ
இல்லையோ
பாக்டம்பாசு சாக்குப்பை
நெகிழிச்சீவல் சாக்குப்பை
நெடுவாக்கில் இரண்டாக மடித்து
குறுக்காக மடிப்பு மேல் மடிப்பிட்டு
மனங்கொண்ட பைக்கட்டுக்குள்
சொருகிவிட்டுக் கொண்டதென்ன?!

எட்டாம் வகுப்பு வரை
தரை வகுப்புத்தான்!
வகுப்புக்குள் சென்றானதும்
பாக்டம்பாசு சாக்குப்பை
விரிக்கப்பட அதுவே
தரைவிரிப்பாகி விடும்.
தரை விரிப்பு மட்டுமென
நீங்கள் நினைத்திருந்தால்
அது காலமாற்றத்தின்
உருமாற்றம் என்றிடவேண்டும்,
கோடை விடுப்பு முடிந்ததுமே
கச்சான் காற்று வீச
பாலக்காட்டு கிணத்துக்கடவு
சாரமழை பெய்யுமென
எஞ்சோட்டுப் பையன்களென்ன
குஞ்சுகுளுவான்கள் கூடத்தானறியும்!
கொசுறுச்சாரலுக்கெல்லாம்
துள்ளி விழுவதில்லை நாங்கள்!
முகில் கவுந்து(கவிழ்ந்து) கிடந்தால்
பாக்டம்பாசு பையை நெடுவாக்கில்
ரெண்டாக மடித்து மூலை முனைக்குள்
தலையை விட்டுக் கொள்ளப் பிறந்துவிடும்
கொங்கர்களின் கொழுவலான கொங்காடை!!
கொங்கர்களின் கோடைமழைக் கொங்காடை
காட்டுவழி ஊர்வழி போனதென்ன போனதென்ன?!!

கச்சான்(மேற்கு) காற்று வீசப் பெய்யும்
கோடைமழைக்கு கொங்காடை!
கொண்டல்(கிழக்கு) காற்று வீசப் பெய்யும்
கொண்க மழைக்கு(கொங்கமழ) நல்லகுடை!!
குளுந்துவரும் கோடைமழை சிலுசிலுப்பு
உருட்டுமிரட்டு கொங்கமழை படபடப்பு!!

இன்று சொல்கிறார் கனமழையாம்
பள்ளிகளெல்லாம் விடுமுறையாம்
காலத்தின் கோலமடா நண்பா
நீர்வடியும் மண்ணெல்லாம்
கட்டுக்கட்டுச் கல்விச்சாலைகள்
சின்னசின்ன மழைக்கே
தாக்குப்பிடிக்க இயலாத
ரோட்டுவழி தண்ணிக்குழி
கொசுறு மழை கனமழை
தத்தளிக்கும் தமிழனுக்கு
அளவீட்டு உணர்வில்லை
பருவகாலத் தெளிவில்லை
எல்லாரும் தப்புகையில்
எல்லாமும் தப்புவதில்
தவறில்லை தவறில்லை
கொங்காடை பெருமை சொல்லி
கொங்காடை சொல் பதிந்தோமென
வணக்கம் சொல்லி விடைபெறுவோம்!

-பழமைபேசி.

N. Ganesan

unread,
Jun 13, 2018, 12:18:53 AM6/13/18
to மின்தமிழ், vallamai
2 வருடங்களாகப் பேயாமல் இப்போது பெய்கிறது. 10+ உழவு மழையாம்.

நல்ல மலரும் நினைவுகள்.

நா. கணேசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Jun 13, 2018, 12:20:31 AM6/13/18
to மின்தமிழ், vallamai

2 வருடங்களாகப் பேயாமல் இப்போது பெய்கிறது. 10+ உழவு மழையாம்.

இன்னும் 20 உழவு பேஞ்சால்தான் கிணறுகளுக்குத் தண்ணி வருமாம்.
Too many bore wells.

தேமொழி

unread,
Jun 13, 2018, 2:09:54 AM6/13/18
to மின்தமிழ்

இதைக் குறிப்பிடுகிறீர்கள்  என்று எனக்குப் புரிய கொஞ்ச நேரம் ஆனது !!!

பிறகு இணையத்தில் தேடி "பாலிடால்" என்பதுடன் இணைந்து இருப்பது கண்டு புரிந்தது. 

ஆக பாலிடாலால்  பலனுண்டு 

kanmani tamil

unread,
Jun 13, 2018, 7:53:14 AM6/13/18
to mintamil

N. Ganesan

09:50 (7 hours ago)
to மின்தமிழ், vallamai
2 வருடங்களாகப் பேயாமல் இப்போது பெய்கிறது. 10+ உழவு மழையாம்.
இன்னும் 20 உழவு பேஞ்சால்தான் கிணறுகளுக்குத் தண்ணி வருமாம்

'உழவு மழை '------வேளாண்மைக் கலைச்சொல் ?
என்ன பொருள் ?
இந்த மழையின் அளவு என்ன?
எப்படி அளப்பீர்கள்?
கண்மணி 

N. Ganesan

unread,
Jun 13, 2018, 8:20:03 AM6/13/18
to மின்தமிழ், vallamai

2018-06-13 4:53 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
>
> N. Ganesan
>
> 09:50 (7 hours ago)
> to மின்தமிழ், vallamai
>>
>> 2 வருடங்களாகப் பேயாமல் இப்போது பெய்கிறது. 10+ உழவு மழையாம்.
>
> இன்னும் 20 உழவு பேஞ்சால்தான் கிணறுகளுக்குத் தண்ணி வருமாம்
>
> 'உழவு மழை '------வேளாண்மைக் கலைச்சொல் ?
> என்ன பொருள் ?
> இந்த மழையின் அளவு என்ன?
> எப்படி அளப்பீர்கள்?
> கண்மணி
>

உழவு மழை என்றால் 1 இஞ்ச் மழை பெய்தது.

வாசத்தண்ணி போகும் அளவு = ~ 10 மிமீ.

அரைக்கலப்பை பெய்தது = ~12 மிமீ

உழவு மழை பெய்தது = ~ 25 மிமீ.

உரலில் தண்ணீர் சேரும். அதை வைத்துக் கணிப்பர்.

நா. கணேசன்

>
>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Jun 13, 2018, 9:10:01 AM6/13/18
to vallamai, மின்தமிழ்
மிக நன்று.
தமிழ் நாட்டில் மழைகுளிர்ச்சியாக இல்லாததால் நனையலாம் 

செவ்., 12 ஜூன், 2018, பிற்பகல் 9:05 அன்று, PazamaiPesi <pazam...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Jun 14, 2018, 12:32:21 AM6/14/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

2018-06-13 4:53 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
>
> N. Ganesan
>
> 09:50 (7 hours ago)
> to மின்தமிழ், vallamai
>>
>> 2 வருடங்களாகப் பேயாமல் இப்போது பெய்கிறது. 10+ உழவு மழையாம்.
>
> இன்னும் 20 உழவு பேஞ்சால்தான் கிணறுகளுக்குத் தண்ணி வருமாம்
>
> 'உழவு மழை '------வேளாண்மைக் கலைச்சொல் ?
> என்ன பொருள் ?
> இந்த மழையின் அளவு என்ன?
> எப்படி அளப்பீர்கள்?
> கண்மணி
>

உழவு மழை என்றால் 1 இஞ்ச் மழை பெய்தது.

வாசத்தண்ணி போகும் அளவு = ~ 10 மிமீ.

அரைக்கலப்பை பெய்தது = ~12 மிமீ

உழவு மழை பெய்தது = ~ 25 மிமீ.

உரலில் தண்ணீர் சேரும். அதை வைத்துக் கணிப்பர்.

நாங்கள் பயன்படுத்தும் ஒழவுமழை என்ற  பழந்தொழிற் கலைச்சொல்லை
யாராவது எழுதியிருக்காங்களா என இப்போது பார்த்தேன்:

கு. சின்னப்ப பாரதி, தாகம் நாவலில் எழுதியுள்ளார்.
உறுதியாக, பெருமாள் முருகன் எழுத்திலும் இருக்கும்.

ஆதவன் தீட்சண்யா, சிறுகதையில்

"மச்சான் மேல் அணப்பு நெட்டுக்கும் கல்லக்கா போட்டுட்டு மிச்சத்துக்கு கெழங்கு குச்சி ஊனியுட்டுரு. எறங்காட்டு மண்ணுக்கு சும்மா ஆட்டம் போட்டுனு வரும்..."

"இவன் ஒருத்தன்டா... ஆடு அறுக்கறதுக்கு மின்னயே..."

"அதான் ரெண்டு மூணு ஒழவு மழை பேய்ஞ்சிருக்கில்ல..."

etc etc.,

(1)

நேற்று இரவு எங்க ஊர்ல உழவு மழை ! ஒரு உழவு மழை என்பது சுமார் 2.5 செ.மீ. உழவு செய்து விதைக்கப் போதுமான மழை

7:21 PM - 16 Aug 2015
2 replies12 retweets5 likes
 
    1. Replying to @laksh_kgm

      @laksh_kgm எந்த ஊரு எங்ஊர்ல முடி நனையிர அளவு தூரல்

      0 replies0 retweets0 likes
       
    1. Replying to @laksh_kgm

      RT @laksh_kgm: நேற்று இரவு எங்க ஊர்ல உழவு மழை ! ஒரு உழவு மழை என்பது சுமார் 2.5 செ.மீ. உழவு செய்து விதைக்கப் போதுமான மழை

(2) 

வெம்மையில்
வதங்கிப் போன
கோடை காலத்துச் சொற்களையெல்லாம் நனைத்திருக்கிறது
உழவு மழை. 

கோடை உழவு வேலைகளை ‘ஏரோட்டி’ ஏகாம்பரம் தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருக்க… கல்திட்டில் அமர்ந்து வானொலியில் பாட்டுகளை ரசித்துக் கொண்டிருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. சிறிது நேரத்தில் ‘காய்கறி’ கண்ணம்மா வந்து சேர, ஏரோட்டியும் கல்திட்டுக்கு வர, அன்றைய மாநாடு அசத்தலாகத் துவங்கியது.

”இன்னொரு உழவு மழை கிடைச்சுட்டா, மீதிக்காட்டையும் உழுது வெச்சுடலாம். ஆனா, வர்ற மாதிரி வந்து ஏமாத்திட்டே இருக்கே இந்த வானம்” என்று கவலைக் குரலில் சொன்னார், ஏரோட்டி.

(5)
“இப்போது போல் செ.மீ, மி.மீட்டரில் இல்லாமல் ஒரு உழவு மழை, இரண்டு உழவு மழை என்று மழையளவைக் குறிப்பிடுவது பரம்பரை விவசாய முறை. பூமியில் ஒரு அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருந்தால், அது ஒரு உழவு மழை. ஓரிரு முறை நல்ல மழை பெய்தாலே இலகுவான மண்ணில் ஓர் அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருக்கும்.
 
நா. கணேசன்

>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

kanmani tamil

unread,
Jun 14, 2018, 2:18:10 AM6/14/18
to mintamil
Thank you 
Kanmani 

நா. கணேசன்

>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

> For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages