புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு
4ஆம் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு – 2026
ஜூலை 2, 3, 4 & 5 – 2026 | சென்னை, தமிழ்நாடு இந்தியா.
https://itadtec.org/
அன்புடையீர்,
வணக்கம்.
புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு 2026இல் பங்குகொள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். மாநாட்டின் சிறப்பு நிகழ்வாக, பன்னாட்டுத் தமிழறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கப்பட உள்ளன. தாங்களும் அதில் பங்கேற்று, கட்டுரை வழுங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஆய்வுக்கட்டுரைகள் பின்வரும் தலைப்புகளை ஒட்டி அமைதல் வேண்டும்.
மாநாட்டின் மையக்கரு:
அயலகத் தமிழ்க் கல்விக்கான பொதுவான தர நிலைகள்
கட்டுரைத் தலைப்புகள்:
வெவ்வேறு கற்றல் திறன்களைக் கொண்ட மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கான உத்திகள்
பல்வேறு தமிழ்ப் பின்னணிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான கற்பித்தல் முறைகள்
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித் தமிழ் கற்பித்தல்.
பேச்சுத் தமிழ் கற்பித்தல் உத்திகள்
கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய திறன்களின் பல்வேறு நிலைகளுக்கான தேர்வுமுறை அமைப்புகள்
தேர்வுகளுக்கான தர மதிப்பீட்டு முறைகள்
மொழிகற்றலில், வகுப்பீடு மற்றும் செயல்திட்டங்கள்.
உட்தலைப்புகள்:
தமிழ் கற்பிப்பதில் AIஐப் பயன்படுத்துவதன் நன்மைகளும் பாதிப்புகளும்
மாணவர்கள் தமிழ் பேசும் திறனை வளர்த்துக்கொள்ள “flipped classroom” கற்பித்தல் முறை எந்த அளவிற்கு உதவக்கூடும்? இம்முறையில் என்னென்ன சவால்கள் உள்ளன? அச்சவால்களுக்கான தீர்வுகள் எவை?
விளையாட்டுக் கூறுகளை ஒருங்கிணைத்து உரையாடல் திறனை மையப்படுத்திய பேச்சுத் தமிழைக் கற்றுக்கொடுத்தல்
இன்றைய தலைமுறையும் தமிழ் கற்றலும்: புது முறைகளும் சவால்களும்
மாணவர்களிடம் "தமிழ் உணர்வை" விதைத்தலில் புதுமைத் திட்டங்கள்.
நடப்பியல் செயல்பாடுகளைப் பயன்படுத்தி இக்காலத் தமிழ் கற்பித்தல்
தமிழில் “டூயோலிங்கோ செயலியைப் போன்ற” ஒன்றை உருவாக்கிப் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகள்.
தமிழ் கற்றலில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் செயலிகளில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் அதன் தீர்வுகள்
சொல்வளத்தை மேம்படுத்த “Augmented reality (AR)” மற்றும் “Virtual Reality (VR)”இன் பயன்பாடு
தேர்வுகளின் அடிப்படை நோக்கம்
மதிப்பீட்டு அளவுகோல்களைப் பயன்படுத்துதல்
தேர்வுகளும் பின்னூட்டங்களும்
மதிப்பீட்டிற்கான கருவிகள்
கட்டுரை வழங்குவதற்கான இடம்:
அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை, இந்தியா
நாள் / நேரம்:
வெள்ளிக்கிழமை, ஜூலை 3, 2026, பிற்பகல் 1:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை மற்றும் சனிக்கிழமை, ஜுலை 4, 2026, காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை
கட்டுரைச் சுருக்கம் / கட்டுரை - குறிப்புகள்:
· கட்டுரைச் சுருக்கங்கள் கீழ்க்காண்பனவற்றின் அடிப்படையில் தேர்வுசெய்யப்பெறும்:
o மாநாட்டுக் கருப்பொருளுக்கேற்ப அமைந்திருத்தல்.
o கற்பித்தல் முறைகள்
o மொழி கற்பிக்கப்படும் சூழல் மற்றும் அயலக மொழி கற்பித்தல் தரநிலைகளுக்கேற்ப எவ்வாறு அம்முறைகளைப் பயன்படுத்தலாம் என்பதையொட்டி அமைந்திருத்தல்.
· ஆய்வுக் கட்டுரைச் சுருக்கம் கிடைக்கப்பெற வேண்டிய இறுதி நாள்: திசம்பர் 1, 2025. ஆய்வுக் கட்டுரைச் சுருக்கம் 12 எழுத்துருவில், 1.5 வரி இடைவெளியில், 300 சொற்களுக்குள் ஒரு பக்க அளவில் அமைதல் வேண்டும். (தமிழில் எழுதப்பெறும் கட்டுரைகள் தமிழ் ஒருங்குறியில் அமைதல் வேண்டும்)
https://itadtec.org/papers-abstract-submission/· மாநாட்டில் வாசித்தளிக்கத் தேர்வுசெய்யப்பெற்ற கட்டுரைகள் குறித்து 2025 திசம்பர் மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும்.
· கட்டுரைகள் முழுமையாக வடிவமைக்கப்பெற்று, கிடைக்கப்பெற வேண்டிய இறுதி நாள் : மார்ச்சு 1, 2026
· ஏற்கப்பெற்ற/ மறுக்கப்பெற்ற கட்டுரைகள் குறித்து 2026 மார்ச்சு 31ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும்.
· கட்டுரைகள் கட்டுரைச் சுருக்கத்தின் விரிவாக்கமாக அமையப்பெறுதல் வேண்டும்.
· கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதப்பெறலாம்.
· கட்டுரைகள் 12 எழுத்துருவில், 1.5 வரி இடைவெளியில், 1500 சொற்களுக்குள் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் அமைதல் வேண்டும். (தமிழில் எழுதப்பெறும் கட்டுரைகள் தமிழ் ஒருங்குறியில் அமைதல் வேண்டும்)
· கட்டுரைகள்
www.itadtec.org இல் மட்டுமே பதிவேற்றப்படல் வேண்டும்.
· கட்டுரைச் சுருக்கங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பெற்றாலும்,
முழுமையான ஆய்வுக்கட்டுரைகளே பரிசீலனை செய்யப்பெற்று, மாநாட்டில் வழங்குவதற்குத் தகுதியானவையாகத் தேர்வுசெய்யப்பெறும்.
*கட்டுரைகளைத் தேர்வுசெய்யும் முறையில் உலகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் முடிவே இறுதியானது. தேர்ந்தெடுக்கபெறும் கட்டுரைகள் விழா மலரில் வெளியிடுவதற்கான உரிமம் பெற்றவையாகக் கொள்ளப்படும்.*
கட்டுரை வாசித்தளித்தல்:
ஏற்கப்பெற்ற கட்டுரைகள், தமிழிலோ ஆங்கிலத்திலோ மாநாட்டில் வழங்கப்பெறலாம். கட்டுரைகளை மாநாட்டில் வழங்குவதற்கு 20 மணித்துளிகள் வழங்கப்படும். PPT/பிற மென்பொருள்/ தொழில் நுட்ப அமைப்பினைப் பயன்படுத்த விரும்புவோர் அவற்றை 2026 ஏப்பிரல் 30ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
இத்துடன் PDF வடிவில் ஆங்கிலம் மற்றும் தமிழில் அழைப்பை இணைத்துள்ளோம்.
உங்கள் பங்கேற்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!
இவண்,
முனைவர் பாரதி சங்கர ராஜுலு
முனைவர் ந. கோவிந்தராஜன்
நாகலட்சுமி ஆரோப்ரேம்
DTEC 2026 மாநாட்டு ஆய்வுக் கட்டுரைக் குழு
www.itadtec.orgwww.catamilacademy.org____________________________
Dear Madam/Sir,
Greetings! We cordially invite you to participate in the Diaspora Tamil Education Conference 2026. The highlight of the conference will be a session for research paper presentations by Tamil scholars from around the world. We request you to present research papers exploring methods and possibilities of developing successful language teaching focusing on the following:
Conference Theme:
Common Teaching Standards for Diaspora Tamil Education
Paper presentation Topics:
Strategies for teaching Learners with Different Learning Styles
Instructional methods for learners from diverse Tamil backgrounds
Teaching Tamil using AI
Techniques for teaching conversational Tamil
Test designs for different levels of Listening, Speaking, Reading and Writing skills
Grading methods for quizzes and exams
Role of assignments and projects in language learning.
Subtopics:
Advantages and disadvantages of using AI in teaching Tamil
To what extent can flipped classroom teaching facilitate students' acquisition of spoken Tamil? What are the challenges, and how can they be overcome?
The integration of gamification within the study of spoken Tamil with a focus on conversation
Contemporary generation and learning Tamil: Innovation and Challenges.
Innovation in incorporating “Tamilness” in students.
Real-world application in teaching contemporary Tamil language.
Possibilities of making “Duolingo app-like” in Tamil.
The problems in the apps currently used in Tamil learning and possible solutions.
Augmented reality (AR) enriches Tamil Vocabulary/ Virtual Reality (VR) in teaching Tamil vocabulary.
Intended purpose of tests
Using rubrics
Tests and feedback
Tools for assessment
Paper presentation Venue: Anna Centenary Library, Chennai, India
Day/Time: Friday, July 3, 2026: 1:30 pm to 5:00 pm & Saturday, July 4, 2026: 9:30 am - 5 pm
Paper abstract and Paper submission deadlines:
Abstracts will be selected based on the following criteria:
Relevance to the theme
Teaching Methodologies
The setting where the language is taught and how the teaching methodology can be applied to foreign language teaching standards
Research paper abstracts are due by December 1, 2025. Research paper abstracts can be either in English or in Tamil - Your abstract should not exceed 300 words (approximately 1 page using a 12-pt. font size at 1.5-line space) If in Tamil, please use only Tamil Unicode font
https://itadtec.org/papers-abstract-submission/Abstracts chosen for presentation will be announced by end of December 2025
Your full paper is due by March 1, 2026.
You will be notified of our acceptance or rejection of your paper by March 31, 2026
Paper submission guidelines:
· Your paper should match the contents and theme of your abstract
· Your paper can be either in English or Tamil - Your paper should not exceed 1500 words (approximately 5 pages using a 12-pt. font size at 1.5-line space)
· Papers can be submitted only through the conference website
www.itadtec.org· If your paper is in Tamil, please use only Tamil Unicode font
· Approval of an abstract does not guarantee approval of your final paper. Your paper can be rejected if it does not meet with the criteria of the conference program committee.
*ITA reserves the right to select the papers for presentation and publication. Accepted and presented papers will be published in the conference journal. *
Presentation guidelines:
Once your paper has been accepted, you will be given a 20-minute time slot to present your paper at the conference. It is recommended that you use MS PowerPoint for your presentation. Your presentation can be in English or Tamil. If you are presenting a software product or a technology, you may give a demo of your product too. Please send us your presentation by April 30, 2026 so that we can review it in good time.
Please find attached PDF versions of the invitations to submit abstracts in English and Tamil.
We look forward to your participation!
Sincerely,
Dr. Bharathy Sankara Rajulu
Dr. N. Govindarajan
Nagalakshmi Auroprem
DTEC 2026 Paper Presentation Committee
www.itadtec.orgwww.catamilacademy.org=====================