அயர்லாந்தின் அழகில்... பகுதி 1

271 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
Dec 10, 2011, 8:19:24 AM12/10/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
அயர்லாந்துக்குப் பயணம் 

என்றாவது ஒரு நாள் சுற்றிப் பார்க்கச் செல்ல வேண்டும் என நான் மனதில் வைத்திருக்கும் பட்டியலில் உண்மையிலேயே அயர்லாந்து இடம்பெறவில்லை.   ஆனாலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் என் மாமியார் அவ்வப்போது தனது முந்தைய அயர்லாந்து பயணத்தைப் பற்றியும் இரண்டு வாரங்கள் தாம் சைக்கிளில் பயணம் செய்து மக்களையும் ஊர்களையும் சுற்றிப் பார்த்ததையும் கூறிக் கொண்டிருந்தது மனதில் சிறிய அளவில் ஒரு ஆசையை உருவாக்கி விட்டது என்று தான் சொல்வேன். அவருக்கு நாங்களும் அங்கு சென்று வர வேண்டும்.. குறிப்பாக ரிங் ஆஃப் கேரி பகுதிக்குச் சென்று பார்த்து வர வேண்டும் என ஆசை. ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்னர் அவர்களுக்கு இருந்த அனுபவம் நிச்சயம் இப்போது சற்று மாறுபட்டதாகத் தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இருந்தாலும் "ஏன்.. ஒரு முறை விடுமுறையை இங்கே கழித்தால் என்ன" என்ற எண்ணம் இந்த ஆண்டு ஆரம்பத்தில் மனதில் வலுவாக பதிந்து விட்டது.  அப்புறம் என்ன.. பயணத்திற்கான தேதியை உறுதி செய்து பயண டிக்கெட்களையும் வருட ஆரம்பத்திலேயே முன்பதிவு செய்து வாங்கி வைத்து விட்டோம்.

கோடை காலத்தில் செல்வது இங்கு உகந்ததாக இருக்கும். ஜெர்மனிக்கும் மேலே அமைந்திருப்பதால் நிச்சயமாக குளிர் நிறைந்த நாடாகத் தான் இருக்கும் என்பது என் எண்ணம். அதனால் அதிகமாக பெரிய ஜாக்கெட்டுகளைப் போட்டுக் கொண்டு செல்வதை விட கோடை காலம் சுற்றுப் பயணத்தை எளிமையாக்கும் என்ற எண்ணம் மனதில் எங்கள் இருவருக்குமே இருந்தது.

எனது நீண்ட நாள் அலுவலக நண்பரும் என் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான ஆண்ட்ரியாஸ் அயர்லாந்தின் பிரியர். ஜெர்மானியரான இந்த நண்பர் 2000ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் ஓராண்டு  அயர்லாந்தின் ஷானென் (Shannon)  நகரில் தனியாக ஒரு கம்பெனி நடத்திய அனுபவம் உள்ளவர்.  அவருக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இன்னமும் ஷேனென் நகரிலேயே இருக்கின்றார். வருடத்திற்கு இரண்டு முறையாவது ரைன் ஏர் (Ryan Air) விமானச் சேவையில் ஷானென் சென்று வருவது ஆண்டிரியாஸின் வழக்கம். திரும்பி வந்து என்னிடம் தனது படத்தொகுப்புக்களைக் காட்ட அவர் மறப்பதில்லை. அப்போதெல்லாம் கூட என்னை அயர்லாந்து ஈர்க்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் மிகக் குளிரான நாடாக இருக்குமோ என்ற ஒரு வித உண்மையற்ற அச்சம் தான். பல வேளைகளில் நாம் நேராகச் சென்று பார்த்து தான் ஐயங்களைத் தெளிவு செய்து கொள்ள முடிகிறது. அதிலும் ஏதோ ஒரு அனுமானத்திலேயே வாழ்த்து விடுகின்ற போக்கினால் பல வேளைகளில் நாம் இழப்பது அதிகம் என்பதை அனுபத்தின் மூலம் நான் அறிவேன். ஆக அயர்லாந்துக்கானப் பயணம் மாமியார் தூண்டுதலால் ஒரு வழியாக முடிவானது.

ஆகஸ்டு மாதம் ஜெர்மனியில் கோடை காலத்தின் உச்ச சமையம். எனது தோட்டத்துச் செடிகளைப் பற்றிய கவலையே அதிகமாக இருந்தது. அண்டை வீட்டு நண்பர் தோட்டத்துச் செடிகளுக்கு நீர் விடுவதற்கு சம்மதம் தெரிவித்தாலும் மனம் அவ்வளவாக எனக்கு திருப்தியில்லை. உதவி செய்கிறேன் பேர்வழி என்று சொல்லி நிறைய நீறைக் கொட்டி வைத்து சில செடிகளை முன்னர் இழந்திருக்கிறேன். அல்லது வெயிலில் காய்ந்து செத்துப் போனால் என்ன செய்வது. சரி. உதவி செய்வதற்காவது யாராவது இருக்கின்றார்களே. அதிகம் மனச் சஞ்சலம் வேண்டாம் என நானே என்னை சமாதனப் படுத்திக் கொண்டு பயணத்தின் தயாரிப்பு வேலைகளில் எனது மனதை செலுத்தினேன். 

இது பத்து நாட்கள் Package Deal. அதாவது விமான டிக்கெட், தங்கும் இடம் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று பார்த்து வரும் பேருந்து ஏற்பாடு, காலை மாலை உணவு என அனைத்தும் இந்த ஏற்பாட்டில் அடங்கும். அதிலும் இது ஜெர்மானிய சுற்றுலா குழுவினரால்  நடத்தப்படுவதால் நிச்சயம் எங்களுடன் குறைந்தது 15 ஜெர்மானியர்களாவது இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். புதிய நண்பர்களையும் அறிந்து கொள்ளலாம். புதிய செய்திகளைப் பரிமாறிக்கொள்ளலாம் என்பதும் கூட கூடுதல் குதூகலமாக அமைந்தது.

அயர்லாந்து இங்கிலாந்தின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தீவு. இது ஒரு ஆங்கிலேய நாடு என யாரும் நினைத்தால் அது முற்றிலும் தவறு. 19ம் நூற்றாண்டில் ஆங்கில மொழி இந்நாட்டின் ஆதிக்கம் மிக்க முதல் மொழியாக முக்கியத்துவத்தை அடைந்தாலும் கூட இந்த நாட்டின் முக்கிய மொழி ஐரிஷ் மொழி தான். ஐரிஷ் மொழி இம்மக்களின் தாய் மொழி. அயர்லாந்தின் சாசனத்தின் படி ஆங்கிலமும் ஐரீஷ் மொழியும் அதிகாரப் பூர்வமான மொழிகள் என அமைக்கப்பட்டிருந்தாலும் ஐரீஷ் மொழியே நாட்டின் முதன் மொழி என்ற அந்தஸ்தையும் பெறுகின்றது.

பண்டைய காலத்தில் செல்ட்டிக் தாக்கத்தால் ஐரிஷ் மொழி அயர்லாந்தில் ஆதிக்கம் பெற்றது. இம்மொழி 10ம் நூற்றாண்டு வாக்கில் அயர்லாந்து, ஸ்கோட்லண்ட் (Scotland), ஐல் ஆஃப் மேன்(Isle of Man) ஆகிய பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திய மொழி இது. தற்சமயம் இம்மொழி ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மொழி என்பதோடு ரிப்பப்ளிக் ஆஃப் அயர்லான் (Republic of Ireland), வட அயர்லாந்து (Northern Ireland) ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ மொழியாகவும் உள்ளது. இம்மொழியின் பெயர் கேலிக் (Gaelic) என்பதாகும்.

சாலைகளின் பெயர்கள், கட்டிடங்கள் அனைத்திலும் கேலிக் மொழியில் குறியீடுகள் அமைந்திருக்கின்றன. வழக்கத்தில் இன்று இம்மொழி குறைந்து வருகின்றது என்பது எனது நேரடியான அனுபவத்தில் பார்த்து தெரிந்து கொண்டேன். 

எங்கள் பயணம் ப்ராங்பெர்ட் விமான நிலையத்திலிருந்து அயர்லாந்தின் தலைநகரமான டப்ளின் சென்று பின்னர் அங்கிருந்து பட்டியலிடப்பட்டிருந்த இடங்களுக்குச் செல்வது என அமைக்கப்பட்டிருந்தது. 

Ireland.jpg

அதாவது டப்ளினில் (Dublin) முதலில் இரண்டு நாட்கள் இருந்து பின்னர் மூன்றாம் நாள் கால்வே(Galway Region) சென்று பின்னர் கோன்னிமாரா (Connemara) பகுதிக்குச் சென்று அங்கு இரண்டு நாட்கள் தங்கி பின்னர் அங்கிருந்து லிமெரிக் (Limerick)  பகுதிக்கு வந்து அங்கு ஒரு நள் இருந்து பின்னர் கேரி (Kerry) பகுதிக்குச் சென்று ரிங் ஆஃப் கேரியில் (Ringof Kerry)இரண்டு நாட்கள் தங்கி அப்பகுதியின் எழிலை ரசித்து பின்னர் அங்கிருந்து காஷல் (Cashel)  பகுதிக்குச் சென்று ஒரு நாள் தங்கி பின்னர் அங்கிருந்து விக்லோவ் (Wicklow) பகுதிக்குச் சென்று அன்றே டப்ளின் (Dublin) வந்து இறுதி நாள் டப்ளினில் இருந்து மாலை நேரத்து சிறப்புக்களை ரசித்து பின்னர் 10ம் நாள் இல்லம் திரும்புவது என அமைக்கப்பட்டிருந்தது. 

இந்தப் பயணத்தில் எங்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக அமைந்தவர் ஜொஅன்னா (Joanna).  இவர் ஜெர்மானியப் பெண்.  அயர்லாந்துக் காரரை மணந்து கொண்டு கடந்த ஐந்தாண்டுகளாக விக்லோவ் பகுதியில் வசிப்பவர்.  இவர் எங்கள் பயணத்தின் போது பல வரலாற்றுத் தகவல்களை சலிக்காமல் வழங்கினார்.  இவருடன் எங்களின் பஸ்ஸை ஓட்டி வந்த டேரன் பழக இனிமையானவராக இருந்தார். பொதுவாக பெரும்பாலும் அமைதியாக இருந்தாலும் அவ்வப்போது எங்கள் உரையாடலில் கலந்து கொண்டார். இந்த இனிய பயணத்தில் எங்களுடன் 9 ஜோடிகள் இணைந்து கொண்டனர். மொத்தம் இருபது பேர்கள் அனைவரும் ஜெர்மானியர்கள். ஜெர்மனியின் பல பகுதிகளிலிருந்து வந்தவர்கள். அனைவருமே நாற்பது வயதுக்கும் மேற்பட்டவர்கள். புதிய நண்பர்கள் என்பதால் ஆரம்பத்தில் சற்று விலகியே இருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் நன்றாக உரையாடிக் கொண்டு மிக சுவாரசியமாக எங்கள் பயணம் அமைந்தது. 

அடுத்தடுத்த பகுதிகளில் நான் சென்று பார்த்த இடங்கள் நான் அறிந்து கொண்ட அயர்லாந்தின் வரலாற்றுத் தகவல்கள், எங்கள் பயண அனுபவம் ஆகியவற்றை நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து வழங்குகிறேன். இப்பயணத்தில் எனது டிஜிட்டல் கேமராவில் ஏறக்குறைய இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்களை எடுத்தேன். அதில் சரி பார்த்து தேவையற்றவைகளை நீக்கி சிறப்பாக வந்த ஏறக்குறைய நானூறு படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன். அதில் ஒரு சில காட்சிகளை உங்களுடன் நிச்சயம் இங்கு மின்தமிழில் பகிர்ந்து கொள்வேன்.

சரி..இப்போது ப்ராங்பர்ட் விமான நிலையத்தில் புறப்படக் காத்திருக்கும் ஆர் லிங்குஸ் (Air Lingus)  க்கு செல்வோமா..?

irday1-3.jpg

மேலும் பல படங்களுடன் இக்கட்டுரையை வாசிக்க.http://subastravel.blogspot.com/

அன்புடன்
சுபா

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
irday1-3.jpg
Ireland.jpg

Geetha Sambasivam

unread,
Dec 10, 2011, 8:26:50 AM12/10/11
to mint...@googlegroups.com
அயர்லாந்து குறித்து மேலும் அறியும் ஆவலுடன் காத்திருக்கேன்.

2011/12/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>
அயர்லாந்துக்குப் பயணம் 

மேலும் பல படங்களுடன் இக்கட்டுரையை வாசிக்க.http://subastravel.blogspot.com/

அன்புடன்
சுபா

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Dec 10, 2011, 8:38:30 AM12/10/11
to mint...@googlegroups.com
என் பங்குக்க்கு ஒரு ஐயர்லாந்து ஜோக் சொல்லிவிடுகிறேன். You cannot beat the Irish in their Puckish Humour. For some time, Irish members sat in the House of Commons. The members should don their hats while sitting and remove it when addressing the House. One Conservative member removed his silk top hat while addressing the House and was carried away by his eloquence so much that he sat on his hat when he finished. The hat became a mat. An Irish member got up and addressed the House, " Honourable Speaker Sir, May I congratulate the Hon Member, with your leave, sir, that when he sat on his hat, his head was not in it." It took minutes for the laughter to subside. 
Innamburan

2011/12/10 Geetha Sambasivam <geetha...@gmail.com>

கவி.செங்குட்டுவன்

unread,
Dec 10, 2011, 8:38:53 AM12/10/11
to mint...@googlegroups.com

ஆகா அயர்லாந்து என்று சொல்ல வைக்கிறது தங்களின் கட்டுரை. தொடருங்கள்
2011/12/10 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
அன்புடன்..........
கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை - 635207.
அலைபேசி: 9842712109 / 9965634541
தொலைபேசி: 04341- 223011 / 223023
மின்னஞ்சல்: rajend...@yahoo.co.in / kavi.sen...@gmail.com
வலைப்பூ : http://pumskottukarampatti.blogspot.com.
                     http://kaviyinkural.blogspot.com
                     http://mazalaiootru.blogspot.com
                     http://kaviugi.blogspot.com/
                     http://crcmittapalli.blogspot.com/

K R A Narasiah

unread,
Dec 10, 2011, 11:50:27 PM12/10/11
to mint...@googlegroups.com
நான் 1960-61 ல் வட ஐயர்லந்தின் தலைநகரான பெல்பாஸ்டெல் ஹார்லேண்ட் அண்ட் வுல்ப் கப்பற்தளத்தில்விக்ராந்த் கட்டுமானப் பணிக்காக  இந்திய கப்பற்படையால் அனுப்பப்பட்டிருந்தேன். அது மறக்க முடியாத நாட்கள். நான் எழுத ஆரம்பித்ததே இங்குதான்! ஆங்கிலத்தில். 

அங்கு அதிகமானவர்கள் கத்தோலிக்கர்கள் இல்லை ஆதலால் எப்போதும் ஏதாவது ஒரு சண்டை இருந்துகொண்டுதான் இருக்கும்.  
அங்கிருந்ஹபோது டப்ளின் சென்றுவந்தேன். 

ஷா பிறந்த ஊர் டப்ளின். பின்னர் இங்கிலாந்து சென்றார். ஃபேபியன் சொசைடிக்காக எழுதியவர்.
நான் ஷா பிரியன். அக்டோபரில் டோரோண்டோவில் ஷாவின் மை ஃபெயர் லேடி நாடகம் பார்த்தேன்! பிக்மேலியனாக இந்த நாடகம், ஆஸ்கர் அவார்டும், இலக்கியத்திற்காக நோபல் பரிசும் பெற்றவர்

நரசய்யா

2011/12/10 கவி.செங்குட்டுவன் <kavi.sen...@gmail.com>

Subashini Tremmel

unread,
Dec 11, 2011, 3:00:30 AM12/11/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
அன்புள்ள திரு.நரசய்யா, 

கருத்துக்கு நன்றி. நீங்கள் அயர்லாந்தில் இருந்த போது நிகழ்ந்த சில விஷயங்களை இந்த இழையில் அவ்வப்போது பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன். நீங்கள் இங்கு பணி காரணமாக சென்றமை பற்றி முன்னர் குறிப்பிட்டிருந்த செய்தி மனதில் ஞாபகம் இருக்கின்றது. 

அன்புடன்
சுபா

2011/12/11 K R A Narasiah <naras...@gmail.com>

Subashini Tremmel

unread,
Dec 11, 2011, 3:07:52 AM12/11/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
இன்றைய அயர்லாந்து - ஓர் அறிமுகம்

அயர்லாந்து எனக் குறிப்பிடும் போது வடக்குப் பகுதியான வட அயர்லாந்து நீங்கிய பகுதியே அயர்லாந்து என்று அழைக்கப்படுவது. இத்தீவில் வட கிழக்குப் பகுதி இங்கிலாந்தின் ஆட்சிக்குட்படுத்தப்பட்ட பகுதி. இது நீங்கலாக உள்ள ஏனைய பகுதிகளே அயர்லாந்து என்பதாகும்.

550px-Ireland_regions_map2.png
அயர்லாந்து சாம்பல் நிறமான வட அயர்லாந்து தவிர்த்த பகுதி மட்டுமே.

300px-Flag_of_Ireland.svg.png

அயர்லாந்து கொடியின் வர்ணம் மூன்று நேர் கோடுகளாக அமைந்தது. முதல் பகுதி பச்சை நிறத்திலும், நடுப்பகுதி வெள்ளை நிறத்திலும் கடைசிப்பகுதி ஆரஞ்சு நிறத்திலும் என அமைந்திருக்கும். அயர்லாந்து அரசின் விளக்கப்படி இந்தக் கொடியில் முதலில் உள்ள பச்சை நிறம் கேலிக் பாரம்பரியத்தை விளக்குவதாகவும், வெள்ளை நிறம் அமைதியை உணர்த்துவதாகவும், இதன் ஆரஞ்சு நிறம் வில்லியம் ஆஃப் ஓரஞ் (William of Orange)  அரசரைப் பின் தொடர்பவர்களைக் குறிப்பதாகவும் உள்ளது.

220px-King_William_III_of_England%2C_%281650-1702%29.jpg220px-Queen_Mary_II.jpg

வில்லியம் III & II  மேரி II 

வில்லியம் III & II (1650 - 1702) ஓரஞ் நாசவ் (House of Orange-Nassau) பாரம்பரியத்தின் அரச பரம்பரையைச் சேர்ந்தவர். 1689ம் ஆண்டு முதல் இவர் வில்லியம் III  என்ற பெயருடன் இங்கிலாந்து அயர்லாந்து ஆகிய இரண்டு நாடுகளையும் ஆட்சி செய்தவர்.  ஸ்கோட்லாந்தின் அரசராக இவரது பெயர் வில்லியம் II என வழங்கபடுவதால் இவருக்கு வில்லியம் III & II என்ற இரண்டு பெயர் குறிப்புக்களுமே உள்ளன. வட அயர்லாந்திலும் ஸ்கோட்லண்ட் நாட்டிலும் இவர் பில்லி அரசர் (King Billy) என அழைக்கப்பட்டார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 5.11.1688ல் வில்லியம் இங்கிலாந்தை முற்றுகையிட்டு ஜேம்ஸ் அரசர் II & VII இடம் இருந்து நாட்டைக் கைப்பற்றி இங்கிலாந்து, ஸ்கோட்லாந்து அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகளையும் ஆட்சி செய்தார்.  இவர் மனைவி மேரி II (Mary II)  இவருடன் இணைந்து தான் இறக்கும் வரை ஆட்சி நடத்தினார். இவர்கள் இணைந்து நடத்திய ஆட்சி பொதுவாக வில்லியம் மேரி (William and Mary) ஆட்சி என குறிப்பிடப்படுகின்றது.

mainmap.jpg

அயர்லாந்து ஒரு தீவு. ஐரோப்பாவிலேயே மூன்றாவது பெரிய தீவு என்பதும் உலகிலேயே இருபதாவது பெரிய தீவு என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசியல் ரீதியாக இத்தீவு இரண்டு மாபெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடக்குப் பகுதி (Northern Ireland) இங்கிலாந்தின் ஒரு பகுதியாகவும் தெற்கும் ஏனைய பகுதியும் அயர்லாந்து குடியரசு (Republic of Ireland) எனவும் அழைக்கப்படுகின்றது. இந்தத் தீவின் மொத்த மக்கள் தொகை ஏறக்குறைய 6.4 மில்லியன் ஆகும். இதில் ஏறக்குறைய 4.6 மில்லியன் மக்கள் தெற்குப் பகுதி அயர்லாந்தின் குடியரசிலும் மீதம் 1.8 மில்லியன் மக்கள் வடக்கு அயர்லாந்திலும் வசிக்கின்றனர். 

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் எங்கள் பயணத்தின் போது எல்லா இடங்களிலும் கணக்கற்ற செம்மறி ஆடுகளைப் பார்த்து அதிசயித்த நான் ஜொஅன்னாவிடம் இங்கு மக்கள் தொகையை விட செம்மறி ஆடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போலிருக்கிறதே என்று சொன்ன போது அவர் அதை ஆமோதித்து தெற்கு பகுதி நாடான அயர்லாந்து குடியரசில் 5.0 மில்லியனுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உள்ளன எனத் தெரியப்படுத்தினார். மக்கள் தொகையை விட செம்மறி ஆடுகளின் எண்ணிக்கை இங்கு அதிகம் என்பது ஆச்சரியம் தரும் விஷயமல்லவா? 

அயர்லாந்தின் தலைநகரம் டப்ளின். 2000ம் ஆண்டுகளின் வாக்கில் மிகத் துரிதமாக கணினி தொழில்நுட்பம் வளர்ச்சி கண்ட சமையத்தில் ஐரோப்பாவிலேயே மிக அதிகமாக கால் செண்டர்கள் உருவாகிய இடம் டப்ளின் தான்.  உலகின் பல முக்கிய வர்த்தக நிறுவனங்கள், குறிப்பாக கணினி தொழில்நுட்ப வர்த்தக நிறுவனங்கள் டப்ளின் நகரில் தங்கள் கால் செண்டர், கஸ்டமர் செர்வீஸ் செண்டர் ஆகியவற்றை இங்கு தொடங்கின. மிகப் பிரபலமாக 2000ஆம் ஆண்டு முதல் 2006 ம் ஆண்டு வரை இங்கே கால்செண்டர்களின் ஆதிக்கம் மிகவும் வலுவாக இருந்தது என்று சொல்லலாம். டப்ளின் நகரின் வளர்ச்சியிலேயே கடந்த பத்து ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றம் நடந்துள்ளது என்பதையும் எங்கள் சுற்றுலா வழிகாட்டியின் விளக்கங்கள் மூலமாகத் தெரிந்து கொண்டேன்.

அயர்லாந்தின் மக்கள் தொகையில் 87%க்கு மேற்பட்டோர் கத்தோலிக்க கிற்ஸ்துவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள். ஏறக்குறைய 3% ப்ராடஸ்டண்ட் கிறிஸ்துவர்களும் சிறிய எண்ணிக்கியிலான முஸ்லீம்களும் ஏனைய மத்த்தினரும் இங்கு உள்ளனர். 

விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன் உடனே ஒரு சந்தேகம் வந்தது எங்கள் இருவருக்கும். இங்கு எந்த வகை பணம் புழக்கத்தில் உள்ளது? உடனேயே பணம் மாற்றிக் கொள்ள வேண்டுமா ? என்று. விமான நிலையத்தில் பணம் மாற்றிக் கொள்ளும் இடத்தில் வந்து விசாரித்ததில் அயர்லாந்தில் யூரோ பணமே புழக்கத்தில் உள்ளது என்றும் வடக்கு அயர்லாந்து செல்ல வேண்டுமென்றால் மட்டுமே அதற்கு பணம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அறிந்து கொண்டோம். எங்கள் பயணம் முழுதுமே வடக்குப் பகுதி தவிர்த்து அயர்லாந்து நாட்டில் மட்டுமே என்பதால் பணம் மாற்ற வேண்டுமே என்ற அந்தக் கவலையை விட்டு எங்கள் சுற்றுலா வழிகாட்டி எங்கிருக்கின்றார் என்று தேடிக் கொண்டு புறப்பட்டோம்.

தொடரும்..!

அன்புடன்
சுபா

உசாத்துணை:
Atlas of Irish History - Editor: Sean Duffy

-- 
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
2011/12/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Dec 11, 2011, 3:10:52 AM12/11/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram

2011/12/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>
..
எங்கள் பயணம் ப்ராங்பெர்ட் விமான நிலையத்திலிருந்து அயர்லாந்தின் தலைநகரமான டப்ளின் சென்று பின்னர் அங்கிருந்து பட்டியலிடப்பட்டிருந்த இடங்களுக்குச் செல்வது என அமைக்கப்பட்டிருந்தது. 

Ireland.jpg

நண்பர்களே, ஒரு சிறு தெளிவுக்காக! இங்கே மேலே உள்ள வரைபடத்தில் பெயர்கள் டாய்ச் மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதனால் Irland என்பது ஆங்கிலத்தில் Ireland எனவும் Großbritannien என்பது ஆங்கிலத்தில் Great Britain என்றும் வாசித்துக் கொள்க.

சுபா
Ireland.jpg

காளையும் கரடியும்

unread,
Dec 10, 2011, 11:43:21 PM12/10/11
to மின்தமிழ்
>அதாவது டப்ளினில் (Dublin) முதலில் இரண்டு நாட்கள் இருந்து பின்னர் மூன்றாம்
>நாள் கால்வே(Galway Region) சென்று பின்னர் கோன்னிமாரா (Connemara)
>பகுதிக்குச் சென்று அங்கு இரண்டு நாட்கள் தங்கி .....

ஓ! சென்னையிலிருக்கும் கன்னிமாரா நூலகம் மற்றும் ஹோட்டல், தங்க்களின்
பெயரை இங்கிருந்துதான் பெற்றனவோ! தங்களின் செய்திக்கு நன்றி!

> ஆகஸ்டு மாதம் ஜெர்மனியில் கோடை காலத்தின் உச்ச சமையம். எனது தோட்டத்துச்
> செடிகளைப் பற்றிய கவலையே அதிகமாக இருந்தது. அண்டை வீட்டு நண்பர் தோட்டத்துச்
> செடிகளுக்கு நீர் விடுவதற்கு சம்மதம் தெரிவித்தாலும் மனம் அவ்வளவாக எனக்கு
> திருப்தியில்லை. உதவி செய்கிறேன் பேர்வழி என்று சொல்லி நிறைய நீறைக் கொட்டி
> வைத்து சில செடிகளை முன்னர் இழந்திருக்கிறேன். அல்லது வெயிலில் காய்ந்து
> செத்துப் போனால் என்ன செய்வது. சரி. உதவி செய்வதற்காவது யாராவது
> இருக்கின்றார்களே. அதிகம் மனச் சஞ்சலம் வேண்டாம் என நானே என்னை சமாதனப்
> படுத்திக் கொண்டு பயணத்தின் தயாரிப்பு வேலைகளில் எனது மனதை செலுத்தினேன்.
>

நம்பனும்! முழுசா நம்பனும்! நம்பலாமா, வேணாமான்னு இருக்கக் கூடாது!
(தனுஷ் ஸ்டைலில் படிக்கவும் :-) )

தங்களின் செடிகள் அனைத்தும் நன்றாகவே பராமாரிக்கப்பட்டிருக்குமென்று
நம்புகிறேன்!

அன்புடன்,
பாபு கோதண்டராமன்

ranganathan venkatachariar

unread,
Dec 11, 2011, 3:16:18 AM12/11/11
to mint...@googlegroups.com
உங்களுடைய பயனகடுரிமிகவும் அருமை 

அரங்கநாதன்////உத்திரமேரூர் 

2011/12/11 Subashini Tremmel <ksuba...@gmail.com>
Ireland.jpg

K R A Narasiah

unread,
Dec 11, 2011, 6:42:38 AM12/11/11
to mint...@googlegroups.com
No not this town of  Connemara: the hotel and Library got their names from Lord Connemara who was was the Governor of Madras from 1886 to 1890.
Narasiah
2011/12/11 ranganathan venkatachariar <ranganath...@gmail.com>
Ireland.jpg

Vij

unread,
Dec 11, 2011, 8:44:00 AM12/11/11
to mint...@googlegroups.com
>Sent: Sunday, December 11, 2011 9:07 AM
.
 
>அயர்லாந்து ஒரு தீவு. ஐரோப்பாவிலேயே மூன்றாவது பெரிய தீவு என்பதும் உலகிலேயே இருபதாவது பெரிய தீவு என்பதும் குறிப்பிடத்தக்கது. >அரசியல் ரீதியாக இத்தீவு இரண்டு மாபெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடக்குப் பகுதி (Northern Ireland) இங்கிலாந்தின் ஒரு பகுதியாகவும் >தெற்கும் ஏனைய பகுதியும் அயர்லாந்து குடியரசு (Republic of Ireland) எனவும் அழைக்கப்படுகின்றது.
 
வட அயர்லாந்த் இங்கிலாந்தின் பகுதி இல்லை.
 
இங்கிலாந்து + வேல்ஸ் + ஸ்காட்லாட் = க்ரேட் ப்ரிட்டன்
 
க்ரேட் ப்ரிட்டன் + வட அயர்லாண்ட் = யுனைடெட் கிங்க்டம்
 
நீங்கள் அனுப்பிய மேப்பை பார்த்தீரானால்,  பிரிட்டனுக்கும் அயர்லாந்திற்க்கும் இடையில் சின்ன தீவு இருக்கும். அதுதான் நம்ம வூரு , நம்ம பேட்டை,  நம்ம வீடு இருப்பது – ஐய்ல் ஆஃப் மேன்.
 
ஐய்ல் ஆஃப் மேன் என்பது க்ரௌன் ப்ரொடெக்டொரேட் . தனி நாடாட்டம்.
 
1918 வரை அயர்லாண்ட் யுனைடெட் கிங்க்டமின் பகுதியாக இருந்தது. 1919 அது தனியான குடியரசாகியது.
 
வகொவி

விஜயராகவன்

unread,
Dec 11, 2011, 8:55:28 AM12/11/11
to மின்தமிழ்
On Dec 11, 12:42 pm, K R A Narasiah <narasiah...@gmail.com> wrote:
> No not this town of  Connemara: the hotel and Library got their names from
> Lord Connemara who was was the Governor of Madras from 1886 to 1890.
> Narasiah

Usually the British peerage is associated with a place name. Robert
Bourke, an Irishman, when Ireland was part of the United Kingdom, was
given a peerage and part of that he became Lord Connemara. So,
Connemara does refer to the Irish city in the County of Galway.

Vijayaraghavan

Geetha Sambasivam

unread,
Dec 11, 2011, 4:51:57 PM12/11/11
to mint...@googlegroups.com
அருமையான தொகுப்பிற்கு நன்றி.

2011/12/11 Subashini Tremmel <ksuba...@gmail.com>
இன்றைய அயர்லாந்து - ஓர் அறிமுகம்

அயர்லாந்து எனக் குறிப்பிடும் போது வடக்குப் பகுதியான வட அயர்லாந்து நீங்கிய பகுதியே அயர்லாந்து என்று அழைக்கப்படுவது. இத்தீவில் வட கிழக்குப் பகுதி இங்கிலாந்தின் ஆட்சிக்குட்படுத்தப்பட்ட பகுதி. இது நீங்கலாக உள்ள ஏனைய பகுதிகளே அயர்லாந்து என்பதாகும்.

விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன் உடனே ஒரு சந்தேகம் வந்தது எங்கள் இருவருக்கும். இங்கு எந்த வகை பணம் புழக்கத்தில் உள்ளது? உடனேயே பணம் மாற்றிக் கொள்ள வேண்டுமா ? என்று. விமான நிலையத்தில் பணம் மாற்றிக் கொள்ளும் இடத்தில் வந்து விசாரித்ததில் அயர்லாந்தில் யூரோ பணமே புழக்கத்தில் உள்ளது என்றும் வடக்கு அயர்லாந்து செல்ல வேண்டுமென்றால் மட்டுமே அதற்கு பணம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அறிந்து கொண்டோம். எங்கள் பயணம் முழுதுமே வடக்குப் பகுதி தவிர்த்து அயர்லாந்து நாட்டில் மட்டுமே என்பதால் பணம் மாற்ற வேண்டுமே என்ற அந்தக் கவலையை விட்டு எங்கள் சுற்றுலா வழிகாட்டி எங்கிருக்கின்றார் என்று தேடிக் கொண்டு புறப்பட்டோம்.

தொடரும்..!

அன்புடன்
சுபா

உசாத்துணை:
Atlas of Irish History - Editor: Sean Duffy

-- 
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
2011/12/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>
அயர்லாந்துக்குப் பயணம் 

என்றாவது ஒரு நாள் சுற்றிப் பார்க்கச் செல்ல வேண்டும் என நான் மனதில் வைத்திருக்கும் பட்டியலில் உண்மையிலேயே அயர்லாந்து இடம்பெறவில்லை.   ஆனாலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் என் மாமியார் அவ்வப்போது தனது முந்தைய அயர்லாந்து பயணத்தைப் பற்றியும் இரண்டு வாரங்கள் தாம் சைக்கிளில் பயணம் செய்து மக்களையும் ஊர்களையும் சுற்றிப் பார்த்ததையும் கூறிக் கொண்டிருந்தது மனதில் சிறிய அளவில் ஒரு ஆசையை உருவாக்கி விட்டது என்று தான் சொல்வேன். அவருக்கு நாங்களும் அங்கு சென்று வர வேண்டும்.. குறிப்பாக ரிங் ஆஃப் கேரி பகுதிக்குச் சென்று பார்த்து வர வேண்டும் என ஆசை. ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்னர் அவர்களுக்கு இருந்த அனுபவம் நிச்சயம் இப்போது சற்று மாறுபட்டதாகத் தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இருந்தாலும் "ஏன்.. ஒரு முறை விடுமுறையை இங்கே கழித்தால் என்ன" என்ற எண்ணம் இந்த ஆண்டு ஆரம்பத்தில் மனதில் வலுவாக பதிந்து விட்டது.  அப்புறம் என்ன.. பயணத்திற்கான தேதியை உறுதி செய்து பயண டிக்கெட்களையும் வருட ஆரம்பத்திலேயே முன்பதிவு செய்து வாங்கி வைத்து விட்டோம்.

Subashini Tremmel

unread,
Dec 11, 2011, 5:15:27 PM12/11/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram

2011/12/11 Vij <vcv...@hotmail.com>

>Sent: Sunday, December 11, 2011 9:07 AM
.
 
>அயர்லாந்து ஒரு தீவு. ஐரோப்பாவிலேயே மூன்றாவது பெரிய தீவு என்பதும் உலகிலேயே இருபதாவது பெரிய தீவு என்பதும் குறிப்பிடத்தக்கது. >அரசியல் ரீதியாக இத்தீவு இரண்டு மாபெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடக்குப் பகுதி (Northern Ireland) இங்கிலாந்தின் ஒரு பகுதியாகவும் >தெற்கும் ஏனைய பகுதியும் அயர்லாந்து குடியரசு (Republic of Ireland) எனவும் அழைக்கப்படுகின்றது.
 
வட அயர்லாந்த் இங்கிலாந்தின் பகுதி இல்லை.
 
இங்கிலாந்து + வேல்ஸ் + ஸ்காட்லாட் = க்ரேட் ப்ரிட்டன்
 
க்ரேட் ப்ரிட்டன் + வட அயர்லாண்ட் = யுனைடெட் கிங்க்டம்

நன்றி விஜி. இதைப் பார்த்ததும் தான் புரிந்தது. யுனைட்டட் கிங்டம் என்பது ஐக்கிய ராஜ்ஜியம் என்று தானே தமிழில் குறிப்பிடுவோம். லண்டன் தமிழ் ரேடியோ நிகழ்ச்சிகளில் கேட்ட ஞாபகம் உள்ளது. என்னுடைய வலைப்பூ பதிவிலும் மாற்றி விடுகிறேன்.

நீங்கள் அனுப்பிய மேப்பை பார்த்தீரானால்,  பிரிட்டனுக்கும் அயர்லாந்திற்க்கும் இடையில் சின்ன தீவு இருக்கும். அதுதான் நம்ம வூரு , நம்ம பேட்டை,  நம்ம வீடு இருப்பது – ஐய்ல் ஆஃப் மேன்.

ஆமாம் ஆமாம். எழுதும் போதும் இது ஞாபகம் வராமல் இல்லை. உங்கள் பேட்டைக்கு ஒரு நாள் வந்தே ஆக வேண்டும். க்ரேட் பிரிட்டனுக்கும் ஸ்கோட்லண்டுக்கும் அயர்லாந்துக்கும் இடையில் இருப்பதும் உங்களுக்கு சௌகரியம் தானே. விரும்பும்போது இவையெல்லாவற்றிற்கும் சென்று வர்லாம். ஐல் ஆஃப் மேனில் விமான நிலையம் இருக்கின்றதா?

ஐய்ல் ஆஃப் மேன் என்பது க்ரௌன் ப்ரொடெக்டொரேட் . தனி நாடாட்டம்.

இந்த தீவு (தனி நாடு மாதிரி இல்லையா) பற்றி மேலும் கொஞ்சம் விபரம் னேரம் இருக்கும் போது எழுதுங்களேன்.  

சுபா
 
1918 வரை அயர்லாண்ட் யுனைடெட் கிங்க்டமின் பகுதியாக இருந்தது. 1919 அது தனியான குடியரசாகியது.
 
வகொவி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Dec 11, 2011, 5:20:42 PM12/11/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram

2011/12/11 காளையும் கரடியும் <babukoth...@gmail.com>

>அதாவது டப்ளினில் (Dublin) முதலில் இரண்டு நாட்கள் இருந்து பின்னர் மூன்றாம்
>நாள் கால்வே(Galway Region) சென்று பின்னர் கோன்னிமாரா (Connemara)
>பகுதிக்குச் சென்று அங்கு இரண்டு நாட்கள் தங்கி .....

ஓ! சென்னையிலிருக்கும் கன்னிமாரா நூலகம் மற்றும் ஹோட்டல், தங்க்களின்
பெயரை இங்கிருந்துதான் பெற்றனவோ! தங்களின் செய்திக்கு நன்றி!

விஜி கொஞ்சம் தகவல் தந்திருக்கின்றார். நான் வரும் நாட்களில் விபரம் தேடி அதனை உறுதி செய்கிறேன். நாளை மீண்டும் பயணம் என்பதால் அடுத்த சில நாட்கள் இந்த இழையில் தொடர நேரம் இருக்காது.

> ஆகஸ்டு மாதம் ஜெர்மனியில் கோடை காலத்தின் உச்ச சமையம். எனது தோட்டத்துச்
> செடிகளைப் பற்றிய கவலையே அதிகமாக இருந்தது. அண்டை வீட்டு நண்பர் தோட்டத்துச்
> செடிகளுக்கு நீர் விடுவதற்கு சம்மதம் தெரிவித்தாலும் மனம் அவ்வளவாக எனக்கு
> திருப்தியில்லை. உதவி செய்கிறேன் பேர்வழி என்று சொல்லி நிறைய நீறைக் கொட்டி
> வைத்து சில செடிகளை முன்னர் இழந்திருக்கிறேன். அல்லது வெயிலில் காய்ந்து
> செத்துப் போனால் என்ன செய்வது. சரி. உதவி செய்வதற்காவது யாராவது
> இருக்கின்றார்களே. அதிகம் மனச் சஞ்சலம் வேண்டாம் என நானே என்னை சமாதனப்
> படுத்திக் கொண்டு பயணத்தின் தயாரிப்பு வேலைகளில் எனது மனதை செலுத்தினேன்.
>
நம்பனும்! முழுசா நம்பனும்! நம்பலாமா, வேணாமான்னு இருக்கக் கூடாது!
(தனுஷ் ஸ்டைலில் படிக்கவும் :-) )

சரிங்க. நம்புறோம் :-) 

தங்களின் செடிகள் அனைத்தும் நன்றாகவே பராமாரிக்கப்பட்டிருக்குமென்று
நம்புகிறேன்!

இல்லை. சில செடிகள் வந்து பார்த்த போது வெயில் அதிகமாகி கருத்து போய்விட்டன. அவற்றை தினம் தினம் பாதுகாத்து நீர் ஊற்றி பார்த்தேன். இரண்டு செடிகள் மீண்டும் உயிர்பெற்று வந்து விட்டன ஒரு சில சிறிய செடிகள் காய்ந்து இறந்து விட்டன.  வருத்தம் தரும் விஷயம் இது.

சுபா

அன்புடன்,
பாபு கோதண்டராமன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Dec 11, 2011, 5:32:05 PM12/11/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
கெல்ஸ் நூல் (The book of Kells) 

கெல்ஸ் நூல் (The book of Kells) எனப்படும் கிறிஸ்துவ கோஸ்பல் பாடல்கள் கொண்ட நூல் பற்றி ஒரு சிலர் அறிந்திருக்கலாம். இது 9ம் நூற்றாண்டில் முழுதாக வடிவமைக்கப்பட்ட ஒரு நூல். எழுதிய நூல் என்று சொல்வதை விட வடிவமைக்கப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட நூல் என்று சொல்வது மிகப் பொருந்தும். இன்னூலில் லத்தின் மொழியில் புதிய டெஸ்டமனில் உள்ள நான்கு கோஸ்பல்கள் அடங்கியுள்ளன.  இவற்றுடன் பல வாசகங்கள் ஓவியங்கள் நிறைந்துள்ள ஒரு கலை நயம் மிக்க நூல் இது. 

61-UPq6ughL._SL500_AA300_.jpg
நூலில் உள்ள ஒரு பக்கம்

இந்த நூல் செல்ட்டிக் பாரம்பரியத்தில் ஊறிய கிறிஸ்துவ பாதிரிமார்களால் உருவாக்கப்பட்டது. இந்த நூலின் காலம் ஏறக்குறை கி.பி 800 அல்லது அதற்கும் முந்தைய ஆண்டுகளாக இருக்கலாம் என வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். 

இந்த நூலின் சிறப்பு என்று சொன்னால் கோஸ்பல் பாடல்களையும் விளக்கங்களையும் வாசகங்களையும் சுற்றிலும் தீட்டப்பட்டுள்ள கவின்மிகு ஓவியங்கள் எனலாம். இவை செல்ட்டிக் பாரம்பரியத்தின் தாக்கத்தை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுவனவாக உள்ளமையே இதன் சிறப்பு. 

heritage_kells_sam.gif
செல்ட்டிக் குறியீடுகளோடு கலந்து வடிக்கப்பட்ட எழுத்துக்கள்

புக் ஆஃப் கெல்ஸில் அடங்கியுள்ள ஓவியங்கள் கிறிஸ்துவ பாரம்பரிய சின்னங்களை உள்ளடக்கியதாகவும் அதே வேளை செல்ட்டிக் பாரம்பரியத்தின் மிக முக்கிய சின்னங்களான மனித உருவங்கள், மிருகங்கள், சுற்றி வளைத்து சூழும் பாம்பு,  மாய உருவங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றது. அதோடு செல்ட்டிக் பாரம்பரியத்தின் அடிப்படை சின்னமான செல்ட்டிக் முடிச்சு மிகத் தெளிவான கவர்ச்சியான வர்ணங்களில் நூல் முழுதும் இடம் பெறுகின்றது.  இந்த நூல் எந்த அளவிற்கு புதிதாக அயர்லாந்துக்கு ஆறாம் நூற்றாண்டில் நுழைந்த கிறிஸ்துவ சமயம் அயர்லாந்தின் பாரம்பரிய செல்ட்டிக் வழக்கங்களை உட்கொண்டு வளம் பெறுகின்றது என்பதற்கு சான்றாகவும் அமைகின்றது.

kells-sunset-outline1.gif

செல்ட்டிக் குறியீடுகள்

நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு இந்த நூல் தற்சமயம் டப்ளினில் உள்ள ட்ரினிட்டி கோலேஜ் நூலகத்தில் (Trinity College Library) பாதுகாக்கப்படு வருகின்றது. 

அயர்லாந்தின் மிகப் பெரிய பொக்கிஷமாக இந்த நூல் இன்று கருதப்படுகின்றது. புக் ஆஃப் கெல்ஸ் நூல் மிகப் பிரபலமானதாகவும், மிக நுணுக்கமாகவும் தயாரிக்கப்பட்ட ஒரு நூல் என்பதும் முக்கிய குறிப்பாகும். ஐயோனா தீவு, மற்றும் அயர்லாந்தின் கெல்ஸ் நகரில் மடம் அமைத்து இங்கு கிற்ஸ்துவ மதத்தைப் பரவச் செய்த பாதிரிமார்களின் அரிய ஒரு கலைப்படைப்பு இந்த நூல். 

decal2.jpg
செல்ட்டிக் குறியீடுகளில் ஒன்று

இந்த நூலின் அசல்,  ட்ரினிட்டி கோலேஜ் நூலகத்தில் உள்ளது என மேலே குறிப்பிட்டேன். இதனை அச்சு வடிவத்தில் பதிப்பித்திருக்கின்றனர். மிகக் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மட்டுமே இவை பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. 1990ஆம் ஆண்டின் ஒரு கட்டுரையின் படி ஒரு நூலின் 1990 ஆம் விலை $18,000 என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது இன்னூலின் விலை மேலும் அதிகரித்திருக்கலாம் என நம்பலாம்.

Celtic-Tattoos-And-Their-Meanings.jpg
செல்ட்டிக் குறியீடுகளில் ஒன்று

இந்த நூல் எப்படி ட்ரினிட்டி கோலேஜ்க்கு வந்தது என பார்ப்போம்.

அடிப்படையில் இது கையால் வர்ணம் தீட்டி எழுத்துக்களைக் கோர்த்து வடிக்கப்பட்ட ஒரு நூல். இதன் பக்கங்கள் அனைத்திலும் இருக்கும் வர்ண ஓவிய வேலைப்பாடுகளை மூன்று பாதிரிமார்கள் செய்திருக்கின்றனர். எழுத்துக்களை நான்கு பாதிரிமார்கள் வடித்திருக்கின்றனர். கி.பி 800ம் ஆண்டு வாக்கில் முடிக்கப்பட்ட இந்த நூல் அயர்லாந்தின் கெல்ஸ் நகரில் உள்ள கிறிஸ்துவ மடத்தில் நிறைவு செய்யப்பட்டதால் அந்த நகரின் பெயரிலே வழங்கப்படுகிறது.  அயர்லாந்துக்கும் ஸ்கோட்லண்டுக்கும் இடையில் உள்ள ஐயோனா (Iona) தீவில் உள்ள கிறிஸ்துவ மடத்தில் இதன் ஆரம்ப கட்ட உருவாக்கப்பணிகள் தொடங்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது. 

kellsmap.jpg
A எனக் குறிபிடப்பட்டுள்ள பகுதியில் கெல்ஸ் நகரம் உள்ளது. கெல்ஸுக்கும்  டப்ளினுக்கும் உள்ள தூரத்தை இவ்வரைப்படத்தில் காணலாம்.

ionamap.jpg
A எனக் குறிபிடப்பட்டுள்ள பகுதியில் ஐயோனா தீவு உள்ளது. ஐயோனாவிற்கும் டப்ளினுக்கும் உள்ள தூரத்தை இவ்வரைப்படத்தில் காணலாம்.

ionamap1.jpg

தீவின் பெரிதாக்கப்பட்ட படம்

ஐயோனா (Iona) வில் கொள்ளையர்கள் மடத்தில் நுழைந்து தாக்கி அங்கிருந்த பொருட்களை சூறையாடிச் சென்று மடத்தையும் தீவைத்து கொளுத்தி நாசப்படுத்திய போது பாதிரிமார்கள் அங்கிருந்து சில முக்கிய பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு கடல் வழி பயணித்து அயர்லாந்தின் கெல்ஸ் நகருக்கு வந்திருக்கின்றனர். அங்கு கெல்ஸ் மடத்தில் இப்பணியத் தொடர்ந்து செய்து நிறைவேற்றி முழு நூலையும் முடித்திருக்கின்றனர்.

ionaabbey.jpg
தற்சமயம் ஐயோனாவில் உள்ள ஐயோனா அபேய் (Iona Abbey). அழிவிற்குப் பின்னர் மீண்டும் சீரமைக்கப்பட்ட மடம்.

இந்த நூலில் ஆக மொத்தம் 680 பக்கங்கள் உள்ளன. அதில் இரண்டு பக்கங்களில் மட்டும் தான் வர்ணம் இல்லை. ஏனையவை முழுக்க முழுக்க செல்ட்டிக் கலாச்சார ஓவியங்களை பிரதிபலிக்கும் சின்னங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

book_of_kells.jpg
நூலில் உள்ள ஒரு பக்கம்

1661ம் ஆண்டு தொடங்கி இந்த நூல் ட்ரினிடி கோலேஜில் (Library of Trinity College - Dublin) ல் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. 

இடைப்பட்ட காலத்தில் இந்த நூல் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டாலும் பாதுகாப்பு முறைகள் சரியாக அமைந்திருக்கவில்லை. ஆக 1953ம் ஆண்டில் இந்த நூல் முறையாக தூய்மை செய்யப்பட்டு அசல் நூல் நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு சிறிதாக்கப்பட்டு வைக்கப்பட்டது.  இந்த நூலின் அசலின் 2 பாகங்கள் ட்ரினிடி கோலேஜின் நூலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிக்கு வைக்கப்படுகின்றது. இதன் மேலும் இரண்டு பாகங்கள் காட்சிக்கு வைக்கப்படுவதில்லையென்றாலும் அவை முக்கிய ஆய்வாளர்களுக்காக மட்டும் பார்வைக்கு அனுமதி வழங்கப்படுகின்றது.  ட்ரினிடி கோலேஜில் உள்ள 2 பாகங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பக்கம் திருப்பப்பட்டு காட்சிக்கு வைக்கப்படுகின்றது. இதனால் தினம் நூலகத்துக்கு வந்து இந்த நூலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கத்தை வாசித்துச் செல்லலாம்.

இந்த நூலை மறுபதிப்பு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட சுவிஸர்லாந்தின் Faksimile Verlag  (Fine Art Facsimile Publishers) நிறுவனத்தினர் இந்த நூலை கையில் தொடாமல் ட்ரினிடி காலேஜிலிருந்து வெளியே எடுக்காமல் ஒரு சிறப்பு கருவியை பயன்படுத்தி இதன் பக்கங்களைத் தொடாமலேயே காமெராவில் பதிவு செய்து இந்த நூலினை பதிவாக்கி முழுமைபடுத்தினர்.  ட்ரினிடி காலேஜ் சிறு எண்ணிக்கையில் இந்த நூலை சிறப்பு வெளியீடு செய்தனர். இந்தப் பதிப்பு நிறுவனத்துக்கு இந்தக் கருவியை உருவாக்க கால் மில்லியன் சுவிஸ் ப்ராங்க் தேவைப்பட்டதாம். இந்தக் கருவி கொண்டு 1986ம் ஆண்டில் சில நாட்கள் தொடர்ந்து இப்பணி செய்து முடிக்கப்பட்டிருக்கின்றது. 

இவ்வளவு சிறப்புக்கள் வாய்ந்த நூலை என் கண்களால் காணப்போகின்றேன் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை.  டப்ளினில் வந்து இறங்கிய தினத்தில் மதியம் நண்பர்கள் சிலரோடு இணைந்து தனியாக ட்ப்ளின் சுற்றிப் பார்க்கலாமே என்று சென்ற நாங்கள் ட்ரினிட்டி காலேஜில் ஏதேச்சையாக நுழைய அங்கே இந்தப் பொக்கிஷத்தைக் கண்டு ரசிக்கும் பெரும் பேற்றினைப் பெற்றோம் என்று சொன்னால் மிகையாகாது.

தொடரும்..!

அன்புடன்
சுபா

படங்கள்: இப்பதிவில் உள்ள படங்கள் அனைத்தும் இணையத்தில் எடுக்கப்பட்டவை (நூலைப் படமாக்க அனுமதியில்லயென்பதால்)

உசாத்துணை 
http://en.wikipedia.org/wiki/Book_of_Kells

2011/12/11 Subashini Tremmel <ksuba...@gmail.com>
இன்றைய அயர்லாந்து - ஓர் அறிமுகம்

அயர்லாந்து எனக் குறிப்பிடும் போது வடக்குப் பகுதியான வட அயர்லாந்து நீங்கிய பகுதியே அயர்லாந்து என்று அழைக்கப்படுவது. இத்தீவில் வட கிழக்குப் பகுதி இங்கிலாந்தின் ஆட்சிக்குட்படுத்தப்பட்ட பகுதி. இது நீங்கலாக உள்ள ஏனைய பகுதிகளே அயர்லாந்து என்பதாகும்...
kellsmap.jpg
ionamap1.jpg
ionaabbey.jpg
ionamap.jpg

விஜயராகவன்

unread,
Dec 11, 2011, 5:37:37 PM12/11/11
to மின்தமிழ்
On Dec 11, 11:15 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> ஆமாம் ஆமாம். எழுதும் போதும் இது ஞாபகம் வராமல் இல்லை. உங்கள் பேட்டைக்கு ஒரு
> நாள் வந்தே ஆக வேண்டும். க்ரேட் பிரிட்டனுக்கும் ஸ்கோட்லண்டுக்கும்
> அயர்லாந்துக்கும் இடையில் இருப்பதும் உங்களுக்கு சௌகரியம் தானே.
> விரும்பும்போது இவையெல்லாவற்றிற்கும் சென்று வர்லாம். ஐல் ஆஃப் மேனில் விமான
> நிலையம் இருக்கின்றதா?

ரோனல்ஸ்வே ஏர்போர்ட்.

டப்ளினில் இருந்து டக்ளஸ் (ஐல் ஆஃப் மேனின் தலைநகரம்) நகரத்திற்க்கு
படகில் போகலாம் , இந்த சேவை கோடை காலத்தில்தான்

> > ஐய்ல் ஆஃப் மேன் என்பது க்ரௌன் ப்ரொடெக்டொரேட் . தனி நாடாட்டம்.
>
> இந்த தீவு (தனி நாடு மாதிரி இல்லையா) பற்றி மேலும் கொஞ்சம் விபரம் னேரம்
> இருக்கும் போது எழுதுங்களேன்.

இந்த தீவு க்ரௌன் டிபெண்டென்ஸி ஆனதால் அதன் நாட்டுத்தலவர் இங்கிலாந்தின்
அரசர் / அரசி. அதற்கு அதன் கரன்ஸி இருக்கு. அது யூரபியன் யூனியன்
உறுப்பினர் இல்லை.

வகொவி

K R A Narasiah

unread,
Dec 13, 2011, 5:06:21 AM12/13/11
to mint...@googlegroups.com
நான் டிசம்பர் 6, 1960 அன்று அப்போதே தொடங்கப்பட்ட போயிங்க் 707 விமானத்தில் எவரஸ்ட் என்ற பெயர் கொண்டது பம்பாயிலிருந்து கெய்ரோ ரோம் வழியாக லண்டன் அடைந்து, அங்கிருந்து யூஸ்டன் ஸ்டேஷனில் ரயிலேறி, லிவர்பூல் வரை சென்று ஃபெர்ரி மூலம் மறுநாள் குளிரில் பெல்ஃபாஸ்ட் சென்றடைந்தேன்!  (நான் சென்றது தான் மூன்றாவது ஜெட் விமானம்; அதற்கு முன்னர் எல்லாம் சூபர் கான்ஸ்டலேஷன் விமானங்கள் -ஜெட் புரொபல்லர் - அதில் ஒன்றின் பெயர் ராணி ஆஃப் மதுரை!).
இப்போதும் பசுமையாக நினைவுகள் உள்ளன!
நரசய்யா

2011/12/12 விஜயராகவன் <vij...@gmail.com>

வகொவி

Vijay Vanbakkam

unread,
Dec 13, 2011, 5:47:21 AM12/13/11
to mint...@googlegroups.com
நீங்கள் போன ஹார்லன்ட் அன்ட் வுல்ஃப் கப்பல் தொழிற்சாலைதான் , 1911ல் டைடேனிக்கை கட்டினர். கட்டும்போது டைடேனிக் "முழுகாதது"  (unsinkable) என டாம்பீகமாக பீற்றினர். அதன் கன்னி பிரயாணத்தில் ஐஸ்பெர்கை மோதி 1500 பெயர்களுடன் கவிழ்நத்து.
 
வகொவி
 
Date: Tue, 13 Dec 2011 15:36:21 +0530
Subject: Re: [MinTamil] Re: அயர்லாந்தின் அழகில்... பகுதி 1
From: naras...@gmail.com
To: mint...@googlegroups.com

kra narasiah

unread,
Dec 13, 2011, 5:57:24 AM12/13/11
to mint...@googlegroups.com
நான் அங்கு சேர்ந்தவுடன் அதைத் தான் அவர்களிடம் சொன்னேன்! ”முழுக முடியாது எனக்கூறி நீங்கள் கட்டிய கப்பல் தனது கன்னி ஓட்டத்திலேயே முழுகிவிட்டது இதையாவது சரியாகக் கட்டுங்களேன்!” என்றேன்! 

ஆனாலும் சில சம்பவங்கள் நிகழத்தான் செய்தன. நரபலி போன்றவை!அவற்றை நான் கடலோடியில் பதித்துள்ளேன். விரும்பினால் சொல்கிறேன்
நரசய்யா 

--- On Tue, 12/13/11, Vijay Vanbakkam <vcv...@hotmail.com> wrote:
--

Dhivakar

unread,
Dec 13, 2011, 6:01:25 AM12/13/11
to mint...@googlegroups.com
இங்கிலாந்துக் காரர்கள் அந்தக் கால (1911-15) கட்டத்தில் கப்பல்
கட்டுவதில் கெட்ட பெயர் வாங்கினவர்கள். ஜெர்மன் எம்டன் கப்பலின் உதவி
காப்டன் தன் எம்டன் கடைசி பயணப் புத்தகத்தில், எம்டன் பிடித்த கடைசிக்
கப்பல்களுள் ஒன்றான எக்ஸ்போர்டு கப்பலைப் பற்றி மிக மட்டமான முறையில்
விமரிசனம் எழுதுகிறார். எக்ஸ்போர்ட் க்ரூயிஸ்-கம்-கோல் பங்கர். முதன்
முதலாக தரையிலிருந்து தண்ணிருக்கு வந்தபோதே மாட்டி சீரழிந்த கப்பல்
இங்கிலாந்துக்காரர்களால் அரைகுறையாகக் கட்டப்பட்டதாக கமாண்டர் மூக்கே
எழுதுவார்.

இதை என்னுடைய நாவலிலும் அப்படியே குறிப்பிட்டுள்ளேன்.

2011/12/13 Vijay Vanbakkam <vcv...@hotmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Dhivakar

unread,
Dec 13, 2011, 6:02:14 AM12/13/11
to mint...@googlegroups.com
சொல்லுங்கள் சார்!!!

2011/12/13 kra narasiah <nara...@yahoo.com>

--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

kra narasiah

unread,
Dec 13, 2011, 9:06:00 AM12/13/11
to mint...@googlegroups.com
திவாகர்,
நீங்கள் சொல்வது அவ்வளவு சரியல்ல! ஜெர்மானியர்கள் சொன்னதெல்லாம் உண்மையல்ல!
ஏனெனில் 1902 ல் நியூ காசில் அபான் டைன் என்ற இடத்தில் கட்டப்பட்ட ஆர். எம். எஸ் கார்பேதியா என்ற கப்பல் தான் டைடானிக் மூழ்கியபோது பலரைக் காப்பாற்றியது.  
எம்டனை மூழ்கடித்த எச். எம். என் இசட் சிட்னி முதலில்  எச். எம். எஸ். ஃபேடான் என்ற்றியப்பட்ட இங்ல்லாந்தில் கட்டப்பட்ட கப்பல் தான்!
ஜெர்மானியர்கள் போர் காலத்தில் பொய்ப் பிரசாரம் பல செய்தனர். அதில் இதுவும் ஒன்று!
நரசய்யா

--- On Tue, 12/13/11, Dhivakar <venkdh...@gmail.com> wrote:

kra narasiah

unread,
Dec 13, 2011, 9:16:00 AM12/13/11
to mint...@googlegroups.com
லண்டனில் விமானத்தில் நான் 30 மாலுமிகளின் தலைவனாக இற்ங்கியபோது ஒரு மாலுமி எங்களை வரவேற்க வந்திருந்தார். 30+1=31  என்பதை இந்திய கப்பல் தலைமையகம் 13 என்று தவறாஃபேக்ஸ் செய்திருந்தது. ஆகையால் எங்களை யூஸ்டன் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல வந்திருந்த வேன் டிரைவர் மறுத்து விட்டார். அழைக்க வண்ட்ர்ஹிருந்த மாலுமி சொன்ன் படி நான் அந்த டிரைவரை 10 ஷில்லிங் வேலை செய்யுமா எனக் கேட்டேன். (அன்னா ஹசாரே பொறுத்தருள்க!) உடனே அந்த டிரைவரின் மறுப்பு பறந்து விட்டது. ஆனால் போலீஸ் பார்க்க நேர்கையில் எங்களில் சிலர் குனிந்து அமரவேண்டுமெனச் சொன்னார்! அந்தக் குளிரிலும் எனக்கு வியர்ர்க்கத்தான் செய்தது! (அப்போது 10 ஷில்லிங் நல்ல பணம் இப்போது 10 பவுண்டு கூட வேலசெய்யாது) 

அதே போல யூஸ்டன் ஸ்டேஷனில் எங்கள்து சாமன்களுக்குசில பவுண்டுகள் கட்ட வேண்டுமென்று சொன போது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. உடனே அங்கிருந்த் may I help you என்று போர்ட் மாட்டிக்கொண்டு இருந்த ராணுவ அதிகாரியிடம் சென்றேன், அவர் இந்திய ராணுவத்தின்பருக்கு உதவ் முடியாதெனச் சொல்லிவிட்டார்

தொடரும்

--- On Tue, 12/13/11, Dhivakar <venkdh...@gmail.com> wrote:

Subashini Tremmel

unread,
Dec 16, 2011, 3:08:20 PM12/16/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
எத்தனை இடங்கள் மாறி மாறிச் சென்றிருக்கின்றீர்கள். உங்கள் பசுமையான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.

சுபா

2011/12/13 K R A Narasiah <naras...@gmail.com>

Subashini Tremmel

unread,
Dec 16, 2011, 3:09:24 PM12/16/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram

2011/12/13 kra narasiah <nara...@yahoo.com>
..

ஆனாலும் சில சம்பவங்கள் நிகழத்தான் செய்தன. நரபலி போன்றவை!அவற்றை நான் கடலோடியில் பதித்துள்ளேன். விரும்பினால் சொல்கிறேன்

எழுதுங்கள். தெரிந்து கொள்ள ஆவல்.

சுபா
 
நரசய்யா 

--- On Tue, 12/13/11, Vijay Vanbakkam <vcv...@hotmail.com> wrote:

From: Vijay Vanbakkam <vcv...@hotmail.com>
Subject: RE: [MinTamil] Re: அயர்லாந்தின் அழகில்... பகுதி 1
To: "mint...@googlegroups.com" <mint...@googlegroups.com>
Received: Tuesday, December 13, 2011, 4:47 AM

நீங்கள் போன ஹார்லன்ட் அன்ட் வுல்ஃப் கப்பல் தொழிற்சாலைதான் , 1911ல் டைடேனிக்கை கட்டினர். கட்டும்போது டைடேனிக் "முழுகாதது"  (unsinkable) என டாம்பீகமாக பீற்றினர். அதன் கன்னி பிரயாணத்தில் ஐஸ்பெர்கை மோதி 1500 பெயர்களுடன் கவிழ்நத்து.
 
வகொவி
 
Date: Tue, 13 Dec 2011 15:36:21 +0530
Subject: Re: [MinTamil] Re: அயர்லாந்தின் அழகில்... பகுதி 1
From: naras...@gmail.com
To: mint...@googlegroups.com

நான் டிசம்பர் 6, 1960 அன்று அப்போதே தொடங்கப்பட்ட போயிங்க் 707 விமானத்தில் எவரஸ்ட் என்ற பெயர் கொண்டது பம்பாயிலிருந்து கெய்ரோ ரோம் வழியாக லண்டன் அடைந்து, அங்கிருந்து யூஸ்டன் ஸ்டேஷனில் ரயிலேறி, லிவர்பூல் வரை சென்று ஃபெர்ரி மூலம் மறுநாள் குளிரில் பெல்ஃபாஸ்ட் சென்றடைந்தேன்!  (நான் சென்றது தான் மூன்றாவது ஜெட் விமானம்; அதற்கு முன்னர் எல்லாம் சூபர் கான்ஸ்டலேஷன் விமானங்கள் -ஜெட் புரொபல்லர் - அதில் ஒன்றின் பெயர் ராணி ஆஃப் மதுரை!).
இப்போதும் பசுமையாக நினைவுகள் உள்ளன!
நரசய்யா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Dec 16, 2011, 3:10:45 PM12/16/11
to mint...@googlegroups.com

2011/12/13 kra narasiah <nara...@yahoo.com>

..
ஜெர்மானியர்கள் போர் காலத்தில் பொய்ப் பிரசாரம் பல செய்தனர். அதில் இதுவும் ஒன்று!

:-)

suba

--

Subashini Tremmel

unread,
Dec 16, 2011, 3:14:07 PM12/16/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram

2011/12/13 kra narasiah <nara...@yahoo.com>

லண்டனில் விமானத்தில் நான் 30 மாலுமிகளின் தலைவனாக இற்ங்கியபோது ஒரு மாலுமி எங்களை வரவேற்க வந்திருந்தார். 30+1=31  என்பதை இந்திய கப்பல் தலைமையகம் 13 என்று தவறாஃபேக்ஸ் செய்திருந்தது.

டோய்ச் மொழியில் சிந்தித்திருப்பார்களோ :-) இங்கு தான் எண்களை மாற்றிக்கூறி உச்சரிக்கும் முறை உண்டு.
 
ஆகையால் எங்களை யூஸ்டன் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல வந்திருந்த வேன் டிரைவர் மறுத்து விட்டார். அழைக்க வண்ட்ர்ஹிருந்த மாலுமி சொன்ன் படி நான் அந்த டிரைவரை 10 ஷில்லிங் வேலை செய்யுமா எனக் கேட்டேன். (அன்னா ஹசாரே பொறுத்தருள்க!) உடனே அந்த டிரைவரின் மறுப்பு பறந்து விட்டது. ஆனால் போலீஸ் பார்க்க நேர்கையில் எங்களில் சிலர் குனிந்து அமரவேண்டுமெனச் சொன்னார்! அந்தக் குளிரிலும் எனக்கு வியர்ர்க்கத்தான் செய்தது! (அப்போது 10 ஷில்லிங் நல்ல பணம் இப்போது 10 பவுண்டு கூட வேலசெய்யாது) 

ஆஹா.. சுவாரசியமாக இருக்கு.

சுபா 

--

Subashini Tremmel

unread,
Dec 16, 2011, 4:34:27 PM12/16/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
டப்ளினில் முதல் நாள்

ப்ராங்க்பெர்ட் விமான நிலையத்திலிருந்து ஏறக்குறைய 2 மணி நேர விமானப் பயணத்திற்குப் பின்னர் டப்ளினை வந்தடைந்தோம். ஏர் லிங்குஸ் அயர்லாந்தின் விமான நிறுவனம். நாங்கள் பயணித்த விமானத்தில் பணி நிமித்தம் பயணிப்பவர்களும் குடும்பத்தினரைக் காணச் செல்பவர்களும் என ஏறக்குறைய விமானம் நிரம்பி இருந்தது.

டப்ளினை வந்திறங்கியவுடன் எங்கள் பயண வழிகாட்டி நிச்சயமாகக் காத்திருப்பார் என்ற எண்ணம் மனதில் இருந்தது.  பணம் மாற்றிக் கொள்ளத் தேவையில்லை என்று உறுதியானவுடன் அவரைத் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தோம். நாங்கள் பதிவு செய்திருந்த சுற்றுலா நிறுவனத்தின் பெயர் பலகையை கையில் ஏந்திக் கொண்டு ஜொஅன்னா நின்று கொண்டிருந்தார். எங்களுக்கு முன்னரே எங்களுடன் பயணித்து வந்திருந்த 4 ஜோடிகள் அவர்கள் பயணப் பெட்டிகளுடன் நின்று கொண்டிருந்தனர். நானும் என் கணவரும் தான் சற்று தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறோம். எங்களைப் பார்த்த மகிழ்ச்சியில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு எங்கள் பெயரைக் கேட்டு பதிவு அட்டையை சரிபார்த்துக் கொண்டு எங்களை அழைத்துக் கொண்டு பேருந்து இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

பேருந்தில் எங்களை ஏற்றி விட்டு வாகனமோட்டியிடம் நாங்கள் செல்ல வேண்டிய தங்கும் விடுதி இருக்கும் இடம் பற்றிய விளக்கம் சொல்லி விட்டு நாங்கள் இன்று நாள் முழுதும் எங்களுக்குப் பிடித்த வகையில் பொழுதை போக்கலாம் என்று சுதந்திரத்தையும் வழங்கி விட்டு விடைபெற்றுக் கொண்டார். முப்பது நிமிட நேர பயணத்தில் டப்ளின் நகரின் தொழிற்சாலை பகுதி நிறைந்த இடங்களில் பயணிப்பது ஒரு வித அலுப்பாக இருந்தது. 

எங்களுக்கு 2 நாட்கள் தங்க வழக்கப்பட்டிருந்த தங்கும் விடுதி அமைந்திருந்தது ஒரு தொழிற்பேட்டை அமைந்த பகுதி. சற்று ஏமாற்றமாகிப் போனது எனக்கு. சுற்று முற்றும் கட்டிடங்களும் நிறுவனங்களும்.  சரி. அதிகம் வறுத்தப்பட வேண்டாம் என சமாதானம் செய்து கொண்டு தங்கும் விடுதிக்குள் சென்று பெயர் பதிவுகளைச் சரியாக செய்து அறைக்கான சாவியைப் பெற்றுக் கொண்டோம். எங்களுடன் சேர்ந்து வந்திருந்த ஏனைய ஜோடிகளுக்கும் எங்களுக்கும் தங்கும் விடுதியினர் வரவேற்கும் முகமாக ஐரீஷ் காப்பி வழங்கினர். இது வரை இதனை அருந்த வாய்ப்பமைந்ததில்லை. நானும் தேடிப்போய் வாங்கி அருந்தியதில்லை. சுவை கசப்பும் இனிப்பும் கலந்த ஒரு கலவையாக இருந்தது. அடிப்படையில் ஐரீஷ் காப்பி என்பது நன்கு தயாரிக்கப்பட்ட காப்பி, சர்க்கரை, ஐரிஷ் விஸ்கி ஆகியவை கலந்து செய்யப்பட்ட ஒரு பானம். 

irday1-1-1.jpg

அறைக்குச் சென்று எங்களைத் தயார்படுத்திக் கொண்டு ஏற்கனவே கொண்டு வந்திருந்த அயர்லாந்து சுற்றுப்பயண வழிகாட்டு புத்தகத்த்தில் டப்ளின் சென்று என்னென்ன பார்த்து வரலாம் என்று தேடி சிறு பட்டியல் போட்டுக் கொண்டோம்.ஜொஅன்னா எங்களிடம் தந்திருந்த தகவலின் படி 79a பேருந்தில் ஏறி ட்ரினிடி காலோஜ் நிறுத்ததில் இறங்கிக் கொண்டால் எல்லா முக்கிய இடங்களையும் கட்டிடங்களையும் பார்த்து வரலாம். ஆக, உடனே தயாராகி தங்கும் விடுதியிலிருந்து புறப்பட்டு 79a பேருந்து எடுத்து டப்ளின் நகருக்குப் பயணித்தோம். எங்களுடன் முதலில் விமான நிலையத்தில் சந்தித்த மற்றொரு ஜோடியும் இணைந்து கொண்டனர். இரண்டு அடுக்கு பஸ். மேலே ஏறி அமர்ந்து கொண்டதால் சாலைகளையும் வீடுகளையும் வீடுகளின் தோற்றத்தையும் பார்த்துக் கொண்டு செல்ல முடிந்தது. மேலும் பழைய வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்களை ஆங்காங்கே காண முடிந்தது. நகருக்கு சற்று அருகாமையில் செல்லும் வழியிலேயே கண்ணில் ஒபிலிஸ்க் ஒன்றும் தென்பட்டது. 

Trinity College நிறுத்ததில் இறங்கிக் கொண்டோம். 1579ல் கட்டப்பட்டதாக குறிப்பிடப்படும் இந்த ட்ரினிட்டி கோலேஜ் மிகப் பழமை வாய்ந்ததும் உலகப் பிரசித்தி பெற்ற ஒரு பல்கலைக்கழகமுமாகும். உள்ளே நுழைந்தபோது வாசலில் இங்கே 10யூரோவுக்கு ட்ரினிட்டி கோலேஜ் பற்றிய வழிகாட்டலும் விளக்கமும் வழங்கப்படும் என்ற ஒரு பலகையை வைத்துக் கொண்டு ஒரு மாணவி நின்று கொண்டிருந்தார். அவரிடம் இரண்டு டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொண்டு சில நிமிடங்கள் காத்திருந்தோம். டிக்கெட் பெற்றுக் கொண்ட எங்கள் அனைவரையும் வரவேற்று தன்னையும் அறிமுகப்படுத்திக் கொண்டு அந்த மாணவி எங்களுக்கு ட்ரினிடி கோலேஜ் பற்றி விளக்கம் கொடுக்கலானார். இப்படி பணியாற்றும் வாய்ப்பு இங்கு வரலாற்றுத் துறையில் இறுதி ஆண்டில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த மாணவி ஜெர்மானிய வரலாறு, பொது வரலாறு ஆகிய துறைகளில் படித்துக் கொண்டிருப்பவர்.

irday1-1-2.jpg

அயர்லாந்தின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் என்ற சிறப்புப் பெற்றது மட்டுமல்லாமல் அயர்லாந்தின் அரசியல் மாற்றங்களிலும் பங்கு வகித்த பெருமை இந்தப் பல்கலைக்கழகத்திற்கு உண்டு. 16ம் நூற்றாண்டில்,  டப்ளினில் வாழ்ந்த மக்கள்  எலிஸபெத் மகாராணியிடம் அனுமதி பெற்று தங்களுக்கு டப்ளின் நகரில் பல்கலைக்கழகத்தை 1592ம் ஆண்டில் உருவாக்கினர். 18ம் நூற்றாண்டு வாக்கில் இது ப்ரோட்டெஸ்டண்ட் சமயத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்தது. இக்கால கட்டத்தில் நாட்டில் சற்று அமைதியும் நிலவி வந்ததால் அயர்லாந்தின் அரசியல் பிரமுககர்கள் பலரது குழந்தைகள் தங்கள் கல்வியை இங்கு மேற்கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

campanile_lge.jpg

இந்தப் பல்கலைக்கழகத்தில் முதல் பெண் மாணவி 1904ம் ஆண்டில் இணைக்கப்பட்டிருக்கின்றார். அடுத்த பத்து ஆண்டுகளில் பெண் மாணவியர்களின் எண்ணிக்கை 16% க்கு உயர்ந்திருக்கின்றது. முதலில் பெண்கள் இப்பல்கலைக்கழக்த்தில் க்ல்வி பயில பெறும் எதிர்ப்பு இருந்திருக்கின்றது. இதனை மாற்றி தற்சமயம் பல பெண்கள் இங்கே கல்வி பயில்கின்றார்கள் என்று சிரித்துக் கொண்டே எங்களுக்கு விளக்கமளித்துக் கொண்டு சென்ற மாணவி குறிப்பிட்டார். 

irday1-1-3.jpg

ட்ரினிடி காலேஜ் 40 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பல்கலைக்கழகம். இங்கே மருத்துவம், வரலாறு, உளவியல், தியோலொஜி. சட்டம் ஆகியவை முக்கிய துறைகளாக விளங்குகின்றன. மாணவர்களின் தங்கும் விடுதி. உணவு விடுதி, கடைகள் ஆகியவையும் வளாகத்தின் உள்ளேயே அமைந்துள்ளன. 

இப்போது இருக்கும் இந்தக் கல்லூரியின் நூலகம் 1712ம் ஆண்டு கட்டப்பட்டது. 200,000 பழம் நூல்கள் இந்தநூலகத்தில் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. உள்ளே புகைப்படங்கள் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை. நூல்களில் இத்தனை விதமா என வியக்க வைக்கும் அளவு மிகப்பெரிய நூல்களின் வகைகள், நடுத்தர அளவிலானவை சிறிவமை மிகச் சிறியன என பல்வேறு வகையில் நூல்கள் பகுதி பகுதியாகத் தொகுத்து வைக்கபப்ட்டிருக்கின்றன. இந்த நூலகத்தின் நடுவே மருத்துவ ஆய்வுகளை வெளிப்படுத்தும் ஆய்வுக் குறிப்புக்கள், கண்டுபிடிப்புக்கள் அனைத்தும் விளக்கங்களுடன் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நூலகத்தின் உள்ளே செல்லும் போது வலது புறம் அமைந்துள்ள பகுதிக்குச் சென்றால் அங்கே புக் ஆஃப் கெல்ஸ் வைக்கப்பட்டிருக்கும் பகுதியைப் பார்த்து, அதன் விளக்கங்களையும் வாசித்து பின்னர் நூலையும் பார்க்கலாம். அதே கட்டிடத்தின் வழியாகவே நூலகத்தின் Long Room  (நீண்ட அறை) சென்று அங்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த பிரமிப்பூட்டும் அனுபவத்தைப் பெறலாம். இந்த 200,000 நூல்கள் உள்ள அறையின் உள்ளே செல்வதே பிரமிப்பாக இருந்த்து. அந்த வேளை அந்த அறைக்குள் நுழையும் அனைவருக்க்மே ஒரு வித வித்தியாசமான ஏதோ ஒரு வகையில் நிறைவளிக்கும் ஒரு நிலை தோன்றும் என்றே எனக்கு அப்போது மனதில் தோன்றியதை எனது குறிப்பில் குறித்து வைத்திருக்கிறேன். அங்கிருந்தவர்களின் முகத்திலும் நான் அனுபவித்த அந்த பிரமிப்பு தெரிந்தது. ஒரு வேளை என் மனம் அப்படி நினைத்திருக்கலாம். ஆனாலும் அது ஒரு வித்தியாசமான ஒரு அனுபவம் என்பதில் மறுப்பில்லை.

Trinity_College_Library-long_room.jpg

213 அடி நீளமும் 42 அடி உயரமும் உள்ள இந்தக் கட்டிடத்தில் 200,00 நூல்கள் உள்ளன. ட்ரினிடி பல்கலைக்கழகத்தில் மொத்தம் மூன்று மில்லியன் நூல்கள் உள்ளன. அதில் இந்த நீளமான அறையில் மட்டுமே 200,000 நூல்கள் அடங்கியிருக்கின்றன.

இங்கே சென்றால் இணையத்திலேயே 3டி பனோராமா காட்சியாக இந்த நீண்ட அறையை கண்டு ரசிக்கலாம். பார்க்க மறக்க வேண்டாம். http://www.panoramicireland.com/arch/trinity.html

தொடரும்....!

அன்புடன்
சுபா

2011/12/11 Subashini Tremmel <ksuba...@gmail.com>
irday1-1-2.jpg
irday1-1-3.jpg
irday1-1-1.jpg

Geetha Sambasivam

unread,
Dec 16, 2011, 7:55:14 PM12/16/11
to mint...@googlegroups.com
வியக்க வைத்த நூலகம்.  கால் வலி எடுத்துடும் போலிருக்கு.  அருமையாக உள்ளது. பராமரிப்பு அதைவிட அருமை. ஏக்கம் தான் மிஞ்சுகிறது.

2011/12/16 Subashini Tremmel <ksuba...@gmail.com>
டப்ளினில் முதல் நாள்

kra narasiah

unread,
Dec 17, 2011, 12:32:04 AM12/17/11
to mint...@googlegroups.com
விக்ராந்த் முதல் முறையாக்க் கடல் பயிற்சிக்குச் சென்ற போது ஹார்லேண்ட் அண்ட் வுல்ஃப் கூடத்தின் ஒரு ஃபோர்மேன் Big Sam சொன்னார். “நான் இந்தக் கட்டும் பணியில் பல காலமாக உள்ளேன், டைடானிக் கட்டினபோது இருந்த சிலர் சொன்னது கூட உண்மை. நான் சகுனத்தில் நம்புவன். இவ்வளவு பெரிய கப்பல் முதல் தடவை போகும் போது ஒரு நரபலியாவது கடல் வாங்கி விடும்” 

நாங்கள் ஐரிஷ் கடலில் பயிற்சிக்குச் சென்றோம். நான் விமான் தளத்தில் கமாண்டர் மேத்யூ வுடன் இருந்தேன். இவர் ஆங்கிலேயர். எங்கள் ப்யிற்சிக்காக வந்திருந்தார். 

இப்போது பின்னோக்கிச் செல்லவேண்டும். யூஸ்டன் ஸ்டேஷனில் சாமன்களை ஏற்ற கொடுக்க வேண்டிய பணம் எங்களிடம் இல்லை! ஆதலால் நான் லண்டன் ட்யூப் ட்ரெயினில் ஜெர்மைன் ஸ்ட்ரீட்டுக்கு (The Naval Attache office of teh Indian High Commission is located in Jermaine Street)  ஓடினேன். அங்குதான் நேவல் அட்டாச்சி அலுவலகம் உள்ளது. ஒரே நாளில் லண்டனி ட்யூப் ட்ரெய்னில் செல்லும் தைரியம் எனக்கு வந்திருந்ததே ஒரு ஆச்சர்யம் தான்!

எப்போதும் போல வெளி நாட்டில் இந்தியத் தூதரகத்தில் ஒருவித உதவியும் கிடைக்கவில்லை. (வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு இந்த விவரம் தெரியும்!) “ஏதோ நீங்களாகத்தான் சமாளித்துக் கொள்ள வேண்டும்”  என்று சொன்ன அதிகாரி   உடனே நழுவி விட்டார்!

நான் ஸ்டேஷனுக்கு வந்தபோது எல்லாமாலுமிகளும் சிதறிப் போயிருந்தனர். ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டால் முடிந்து விடும் என்று எண்ணிய எனக்கு உதவ் முன்வந்தது ஒரு மராத்திய இளைஞன். அவன் பெயர் இனாம்தார். அவன் ஒவ்வொருவராகச் சென்று பணம் சேர்த்தான்.

எப்படியோ சமாளித்து வேண்டிய பணம் சேர்ந்தவுடன் சாமான்களை ஃபெர்ரியில் ஏற்றியபோது அந்தக் குளிருலும் எனக்கு வியர்த்துக் கொண்டிருந்தது. இரண்டு கால்களும் வலிக்க ஒரு பெஞ்சில் அமர்ந்து விட்டேன். ஓடிச் சென்று ஒரு காஃபி வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து எனக்கு உதவியதும் அதே இளஞன் தான்!

இப்போது ஐரிஷ் கடலுக்குச் செல்வோம்: அங்குதான் விக்ராந்த் தனது 40.000 குதிரைச் ச்க்தி எஞ்சின்களால் செலுத்தப்பட்டு பயிற்சியில் இருந்தது

ஒரு கேனட் விமானம் தயாராகக் கேடபுல்ட்டின் மீது நின்றுகொண்டிருந்தது. நான் ஃப்ளைட் டெக் சீஃபாக பணியேற்றுக் கொண்ட பின்னர் இனாம் தாரை எனது உதவியாளராக வைத்துக் கொண்டேன்

கேனட்விமனம் கேடபுல்ட்டில் பொருத்தப்ப்ட்டது. இப்போதிருந்து அவ்விமானம் பறக்கும் வரை முழுப்பொறுப்பும் எனது. விமானிக்கு நான் சைகை கொடுத்த பின்னர் பைலட்  தனது எஞ்சின்களை full thrust ல் வைத்தார், நாங்கள் விமனத்தின் பின் புற்ம் இருக்க வேண்டியிருப்பதால், விமானத்தின் ஜெட் outlet டிலிருந்து தப்பியிருக்க முழங்கால்களில் குனிந்து அமர்ந்திருக்க வேண்டும் அப்போது தான் அந்த வெளியேறும் எரிவாயு எங்கள் தலைக்கு மேலே செல்லும். தலையைத் தூக்கினால் அந்த் வேகம் நம்மைத் தூக்கி எறிந்து விடும். முழு த் தலைக் கவசம். அதனுடனேயே பொருத்தப்பட்டுள்ள கேட்கும் உபகரணங்கள் ஒலி தடுக்கும் காதுறைகள் இவற்றுடன் ஹெளடா எனப்படும் கண்ட்ரோல் கேபினில் உள்ள எனது மற்றொரு உதவியாளருக்கு நான்  shoot order  தந்தேன். நானும் இனாம்தாரை டெக் லெவலில் இருக்கப் பணித்து விட்டு விமானத்து நகர்தலைக் கவனித்துக் கொண்டிருந்தேன் ஏனெனில், 120 அடி தூரத்திற்குள் விமானம் சுமார் 100 மைல் வேகத்தை எட்ட வேண்டும்..இல்லையெனில் அது பறக்கும் வேகத்தையடையாது. 

இதுவும் எனது பொறுப்பு. 

சற்றும் எதிர்பாராத வண்ணம், விமானம் ரிலீஸ் ஆன அதே நேரத்தில்,  இனாம்தார் வியப்புடன் விமானம் செல்வதைப் பார்க்க வேண்டி சற்றே எழுந்து விட்டான், நான் அவனுக்குச் செய்த சைகை அவனால் பார்க்கமுடியுமுன்னரே விமனத்தின் வாயு வெளியேற்றத்தின் வேகம அவனை டெக்கின் மேல் இரு முறை ச்ம்மர் சால்ட் அடிக்க வைத்து விட்டது. அப்படியே தூக்கி எறியாப்பட்ட இனாம்தார் கீழேயிருந்த Gun Sponson ல் தலையிலடிபட்டு விழுந்தான். விமானம் செலுத்தப்படுவதற்கு முன் தயாராக பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரின் மூலம் அவன் லண்டன் ப்ரெய்ன் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டான். ஆனால் அங்கு சேருமுன்னரே அவனது ஆவி பிரிந்து விட்டது. (இதைக் கடலோடி நூலிலும் பதிவு செய்துள்ளேன்)

இதுதான் நரபலியோ?

மறுநாள் இரவு நாங்கள் இதைப்ப்ற்றி மிகவும் விவாதித்தோம்.

நரசய்யா 
--- On Fri, 12/16/11, Subashini Tremmel <ksuba...@gmail.com> wrote:

கி.காளைராசன்

unread,
Dec 17, 2011, 1:38:22 AM12/17/11
to mint...@googlegroups.com
பெருமதிப்பிற்குரிய நரசய்யா அவர்களுக்கு வணக்கம்.

2011/12/17 kra narasiah <nara...@yahoo.com>

இனாம்தார் கீழேயிருந்த Gun Sponson ல் தலையிலடிபட்டு விழுந்தான். விமானம் செலுத்தப்படுவதற்கு முன் தயாராக பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரின் மூலம் அவன் லண்டன் ப்ரெய்ன் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டான். ஆனால் அங்கு சேருமுன்னரே அவனது ஆவி பிரிந்து விட்டது. 
இனாம்தார் 
சி(இ)றந்த மாவீரனுக்கு எனது வணக்கம். 

ஐயா, தாங்கள் தங்களது அனுபவங்களைத் தொடர்ந்து எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

K R A Narasiah

unread,
Dec 18, 2011, 8:57:24 AM12/18/11
to mint...@googlegroups.com
தொடர்ந்து மற்றுமொரு பலியும் கொடுக்கப்பட்டது.இரண்டாவது முறையாக நாங்கள் பயிற்சிக்குச் சென்றபோது புதிதாக விமானந்தாங்கிக் கப்பலின் பைலட்டாக பயிற்சி பெற்ற லெஃப்டினண்ட் பஜாஜ் என்ற இளைஞனை (நான் அவனது கேடட் நாட்களிலிருந்தே அறிவேன்) விமானத்தில்  கேடபுல்ட்டில் அனுப்பிவைத்தபிறகு, அவ்விமானம் திரும்புவதை கண்காணித்துக் கொண்டிருந்தோம். Arresting Gear எனப்படும் விமானத்தைத் தடுத்தி நிறுத்தும் இரும்புக் கயிற்றில் விமானத்தின் பின்புறத்துக் கொக்கி மாட்டிக் கொள்ளுமாறு தளத்தில் இறங்க்க வேண்டிய நிலையில், (அரெஸ்டிங்க் கியரும் எனது பார்வைக்குக் கீழ் உள்ள கருவி. ஆனால் இறங்குகையில் விமானிதான் சரியாகப் பார்த்துக் கொள்ளவேண்டும்) கீழாக பறந்து தளத்தை நோக்கி விமானம் வந்து கொண்டிருந்தது. எனது உதவியாளர்கள், தளத்தில் மட்டமாக இருக்கும் அக்க்யிற்றை சுமார் 4 அங்குலங்கள் மேலே எழுமாறு கருவியை இயக்குவார்கள். .  அதில் கொக்கி மாட்டிக் கொள்ளுமாறு இறங்கவேண்டும். பஜாஜ் திறமையுடன் இறங்கிய பின்னர், தளத்தின் மேல் சுமார் 50 அடி ஓடி விமானத்தின் வேகம் குறைந்தவுடன், திடீரென விமானத்தின் வேகம் அதிகரிப்பதைப் பார்த்து நான் அதிர்ந்து விட்டேன்.  கொக்கியின் அடிப்பாகம் உடைந்து விட்டது. எப்படியாவது விமனத்தின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணாத்துடன் பஜாஜ் ஜாய்ஸ்டிக்கை இழுத்துள்ளான். ஆனால் விமானத்தின் வேகம் 70 மைல் கூட அடையவில்லை. அந்த வேகத்தில், விமானம் மேலே எழும்ப முடியாது.

எல்லா லேண்டிங்குகளும் அப்போது வீடியோ கேமராக்கள் இல்லாத்தால் 35 மி மி படமாக எடுக்கப்படும்.

விமானம் சரிந்து போர்ட் பக்கம் (இடதுகைப் பக்கம் போர்ட்) சாய்ந்து கண்ணிமைக்குமுன் கடலில் பாய்ந்தது. அப்போது அது அடைந்திருந்த வேகத்தால் கடலுக்குள் ஊசி போலச் சென்றது.
பின்னர் நாங்கள் சுமார் 3 மணி நேரம் தேடியும் விமானமோ அவனுடலோ கிடைக்கவில்லை.

நாங்கள் படம் போட்டுப் பார்த்தபோது பஜாஜ் தனது இருகைகளையும் இஜெக்‌ஷன் கருவியை இயக்கக் கொண்டு செல்வது தெரிந்தது இஜெக்‌ஷன் ஆகியிருந்தால் பிழைத்திருக்கலாம். 

எனால் எனது கண்ணீரை அடக்கவே முடியவில்லை. ஏனெனில்  இரு நரபலிகளும் எனது சம்பந்தப்பட்ட கருவிகளிலேயே நடந்து விட்டது. ஆகையால் இவைஎன்னை துக்கத்தில் ஆழ்த்தின.. இன்று கூட  என்னால் இச்சம்பவங்களை மறக்கமுடியவில்லை!
நரசய்யா

2011/12/17 கி.காளைராசன் <kalair...@gmail.com>

Subashini Tremmel

unread,
Dec 30, 2011, 9:38:45 AM12/30/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
டப்ளின் நகர சாலைகளில்

அயர்லாந்தின் மிக முக்கிய நகரம், தலை நகரம், வர்த்தக நகரம் என்ற சிறப்புக்களோடு கலைத்துவமும் பரிமளிக்கும் ஒரு நகரம் டப்ளின். எங்கள் பயணத்தின் இரண்டாம் நாள் ஒரு நாள் முழுதும் இந்த நகரத்தை நாங்கள் சுற்றிப் பார்க்க எங்களுக்கு வாய்ப்பு அமைந்தது. காலையில் தங்கும் விடுதியிலேயே ஐரிஷ் வகை காலை உணவு. இதில் பிரத்தியேகமாக ஏதும் காணப்படவில்லை.  லண்டனில் காலை உணவு சாப்பிட்டவர்களுக்கு இதற்கும் அயர்லாந்தில் தங்கும் விடுதிகளில் கிடைக்கும் உணவிற்கு வித்தியாசம் இல்லாமல் இருப்பதை உணரலாம்.  இங்கிலீஷ் உணவு வகைகள் போலவே டோஸ்ட் ரொட்டி,  முட்டை, சாசேஜ், தேனீர், காப்பி, பழங்கள் என அமைந்திருக்கும். சற்று அலுப்பைத் தரக்கூடிய ஒரு காலை உணவு. எனக்கு பிடிக்காத காலை உணவு வகை. பிடிக்கவில்லையென்றாலும் காப்பியும் ஜேம் தடவிய ரொட்டியும் சாப்பிட்டு நாங்கள் புறப்பட்டோம்.

டப்ளினில் பார்ப்பதற்கு பல இடங்கள் உள்ளன. அவை எல்லாவற்றையும் எங்களுக்குள்ள நேரத்தில் பார்த்து முடிக்க முடியாது என்ற காரணத்தால் பகலில் சாலையில் நடந்து சென்று எந்த இடங்களைப் பார்த்து வரலாம் என திட்டமிட்டோம். எங்கள் பயண திட்டத்தில் மேலும் ஒரு நாள் இறுதியாக டப்ளினில் இருக்கும் வகையில் பயண நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.  ஆக அவசரப் பட்டுக் கொண்டு செல்லாமல் நிதானமாக முக்கிய இடங்களைப் பார்த்து தகவல்கள் சேகரித்து வருவதோடு டப்ளின் சாலைகளில் நடந்து மக்களையும் சாலை காட்சிகளையும் கண்டு களிக்க வேண்டும் என்றும் ஆவல் இருந்தது. ஆக இரண்டு இடங்களை மட்டும் பார்ப்போம் என முடிவு செய்து கொண்டோம்.

டப்ளினுக்கு சிறப்பு சேர்க்கும் சுற்றுலா தளங்களில் முக்கிய இடங்களாக கீழ்க்கண்பவற்றை குறிப்பிடலாம்.
  • ட்ரினிடி காலேஜ், நூலகம்
  • கெல்ஸ் புத்தகம்
  • டப்ளின் கோட்டை
  • டப்ளின் துறைமுகம்
  • ஃபீனிக்ஸ் பார்க்
  • செயிண்ட் பேட்ரிக் கேத்தீட்ரல்
  • க்ரிஸ்ட் சர்ச் கெத்தீட்ரல்
  • டெம்பல் பார்
  • கின்னஸ் ஸ்டோர்
  • டப்ளின் மிருகக்காட்சி சாலை

இதில் ஏற்கனவே வந்திறங்கிய முதல் நாளே ட்ரினிடி காலேஜ், நூலகம், கெல்ஸ் புத்தகம் ஆகிய இரண்டையும் பார்த்து விட்டமையால் இரண்டாம் நாள் டப்ளின் கோட்டையையும், கின்னஸ் ஸ்டோர் தொழிற்சாலையையும் பார்த்து விட்டு சர்ச் கெத்தீட்ரல் பார்த்து வருவோம் என முடிவு செய்து கொண்டோம். இவை மூன்றுமே டப்ளின் நகர மையத்திலேயே இருப்பதால் நடந்தே சென்று வருவோம் என்று முடிவு செய்து கொண்டோம். முதல் நாள் டப்ளின் வந்திருந்தமையால் ஏறக்குறைய இவை இருக்கின்ற இடங்களை அறிந்திருந்தோம். ஆக இவற்றைத் தேடித் திரிய வேண்டிய அவசியமிருக்கவில்லை. அத்தோடு எங்கள் பயண வழிகாட்டி எங்களுக்கு டப்ளின் நகர சாலை வரைபடம் ஒன்றையும் அளித்திருந்தார் அதில் மிகத் தெளிவாக சாலை வரைபடங்கள் சுற்றுப்பயணிகள் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் ஆகியவை பெயர்களோடும் குறியீடுகளோடும் வழங்கப்பட்டிருந்தன. 

காலை 10 மணி அளவில் எங்களைச் சுற்றுலா பஸ் அழைத்து வந்து ட்ரினிட்டி காலேஜ் வளாகத்தின் மேற்கு புறக் கதவின் அருகில் இறக்கி விட்டுச் சென்று விட்டது. சுதந்திரமாக ஒரு நாள் டப்ளினில் கூட்டமாக இல்லாமல் தனியாகச் சென்று நமக்குப் பிடித்த வகையில் நேரம் எடுத்துக் கொண்டு பார்க்க விரும்பும் விஷயங்களைப் பார்த்து வரலாம் என்ற நினைப்பே ஒரு விதத்தில் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. சில வேளைகளில் குழுவாக பயணிப்பது சுவாரசியமளிக்கும் ஒன்று தான். ஆனால் சில வேளைகளில் அது நச்சரிப்பாகவும் அமைந்து விட வாய்ப்புண்டு. அப்படிப்பட்ட அனுபவமும் 2 முறை எங்களுக்கு நிகழ்ந்தது. அதனைப் பிறகு குறிப்பிடுகிறேன். 

அன்று காலை சற்று மேக மூட்டமாகவும் சீதோஷ்ணம் ஏறக்குறைய 17 டிகிரி வாக்கிலும் அமைந்திருந்தது. காலையில் பயணம் ஆரம்பித்த சமயம் சிறு தூரலும் இருந்தது. அயர்லாந்தின் சீதோஷ்ணம் பற்றி தனியாக ஒரு பதிவிட வேண்டும். இங்கே குடையில்லாமல் செல்லக்கூடாது என்பதை முன்னரே தெரிந்திருந்ததால் நான் எனது பேக்பேக்கில் ஒரு குடையும் வைத்திருந்தது மிகவும் பயணளித்தது என்றே சொல்ல வேண்டும். ஆனால் சற்று நேரத்தில் தூரல் நின்று சூரியன் இன்முகத்தைக் காட்டி பிரகாசமாக சிரிக்க, சாலையில் நடந்தே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே பயணம் செல்வது சுவாரசியமாக அமைந்தது.

ட்ரினிடி காலேஜ் வாசலிலிருந்து இறங்கி நேராக நடந்து டேம் (Dame Street) சாலைக்குச் செல்ல வேண்டியிருந்தது. டப்ளின் கோட்டை இப்பகுதியில் தான் அமைந்துள்ளது. கூகள் வரைபடத்தைக் காண்க.

dublin1.jpg

டப்ளின் கோட்டைக்குச் செல்லும் வழியில் சாலையின் இரண்டு பகுதிகளில் உள்ள கடைகளையும் மக்கள் கூட்டத்தையும் பார்த்துக் கொண்டே சென்றோம். ஏறக்குறைய 525,000 மக்கள் தொகை கொண்ட நகரம். இங்கு பெரும்பாலானோர் ஐரிஷ் இனத்தவர்களே. டப்ளினில் மட்டுமல்ல (Republic of Ireland) அயர்லாந்து முழுதும் கேலிக் கத்தோலிக்க வகை பண்பாட்டு சமயத்தைச் சார்ந்தவர்களே மிகப் பெறும்பாண்மையினர்.  ஒரு குறைவான அளவில் ஐரோப்பாவின் பிற பகுதிகளான இத்தாலியர்கள், ஜெர்மானியர்கள், ஸ்பேனீஷ்காரர்கள் இருக்கின்றார்கள். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இங்கிலாந்து மக்களும் இருக்கின்றனர். ஆசிய மக்களையும் ஆங்காங்கே காண முடிந்தது. இந்தியர்கள், ஜப்பானியர்கள், சீனர்கள், வியட்னாமியர்கள், தாய் மக்கள் சிலர் டப்ளின் நகரில் வசிக்கின்றனர் என்பதை சாலையில் செல்வோரைப் பார்த்தே தெரிந்து கொள்ள முடிந்தது. ஆங்காங்கே சீன உணவகங்கள், தாய் உணவகங்கள், இந்திய உணவகங்கள் இருக்கின்றன. ஒரு மலாய் உணவகமும் கூட ஒன்று இருப்பதைப் பார்த்து அதிசயித்தேன். 

டப்ளின் ஒரு கலாச்சார மையம் என்றால் அது மிகையில்லை. சாலையில் ஆங்காங்கே இசைக்கலைஞர்கள் வாத்தியங்களை வாசித்துக் கொண்டு இசை மணம் பறப்பிக் கொண்டிருக்கும் காட்சி இந்த நகரத்திற்கு உயிரூட்டும் ஒன்று. 

dub1.jpg

டப்ளின் நகரின் மத்தியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் அமைந்திருக்கும் ஜியோர்ஜியன் டப்ளின் கட்டிடங்களின் (வீடுகளின்)  கதவுகள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டவை. வெள்ளை நிற தொடர் வீடுகளுக்குக் கண்களைப் பளிச்செனக் கவரும் கவர்ச்சியான வர்ணத்தில் அமைக்கப்பட்ட கதவுகளும் அதற்கு எழில் சேர்க்கும் கருப்பு நிற கைப்பிடிகளும் பார்ப்பதற்கே மிக அழகு. இவை ஜியோர்ஜியன் (Georgian) வகை கட்டிடக் கலையின் எச்சங்களாக இன்றும் டப்ளின் நகரத்தை அலங்கரிப்பவை. ஜியோர்ஜியன் டப்ளின் பற்றி மேலும் பிறகு தொடர்கிறேன். 

dub11.jpg

தொடரும்..

அன்புடன்
சுபா

2011/12/16 Subashini Tremmel <ksuba...@gmail.com>

டப்ளினில் முதல் நாள்

ப்ராங்க்பெர்ட் விமான நிலையத்திலிருந்து ஏறக்குறைய 2 மணி நேர விமானப் பயணத்திற்குப் பின்னர் டப்ளினை வந்தடைந்தோம். ஏர் லிங்குஸ் அயர்லாந்தின் விமான நிறுவனம். நாங்கள் பயணித்த விமானத்தில் பணி நிமித்தம் பயணிப்பவர்களும் குடும்பத்தினரைக் காணச் செல்பவர்களும் என ஏறக்குறைய விமானம் நிரம்பி இருந்தது.

டப்ளினை வந்திறங்கியவுடன் எங்கள் பயண வழிகாட்டி நிச்சயமாகக் காத்திருப்பார் என்ற எண்ணம் மனதில் இருந்தது.  பணம் மாற்றிக் கொள்ளத் தேவையில்லை என்று உறுதியானவுடன் அவரைத் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தோம். நாங்கள் பதிவு செய்திருந்த சுற்றுலா நிறுவனத்தின் பெயர் பலகையை கையில் ஏந்திக் கொண்டு ஜொஅன்னா நின்று கொண்டிருந்தார். எங்களுக்கு முன்னரே எங்களுடன் பயணித்து வந்திருந்த 4 ஜோடிகள் அவர்கள் பயணப் பெட்டிகளுடன் நின்று கொண்டிருந்தனர். நானும் என் கணவரும் தான் சற்று தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறோம். எங்களைப் பார்த்த மகிழ்ச்சியில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு எங்கள் பெயரைக் கேட்டு பதிவு அட்டையை சரிபார்த்துக் கொண்டு எங்களை அழைத்துக் கொண்டு பேருந்து இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
--

Subashini Tremmel

unread,
Dec 30, 2011, 10:02:21 AM12/30/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
மேலும் சில படங்களுடன் இப்பதிவைக் காண http://subastravel.blogspot.com/2011/12/5.html செல்க!

சுபா

2011/12/30 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jan 12, 2012, 3:32:40 PM1/12/12
to mint...@googlegroups.com

ஆனால் சில வேளைகளில் அது நச்சரிப்பாகவும் அமைந்து விட வாய்ப்புண்டு. அப்படிப்பட்ட அனுபவமும் 2 முறை எங்களுக்கு நிகழ்ந்தது. அதனைப் பிறகு குறிப்பிடுகிறேன்.  //

அநேகமாய்ப் பயணம் செய்யும் எல்லாருக்கும் இந்த அனுபவம் அமையும்னு நினைக்கிறேன்.  எங்களுக்கும் இப்படியான அனுபவங்கள் உண்டு.  

கட்டுரை அருமையான தகவல்களைத் தருகிறது.  அயர்லாந்தைப் பார்க்க முடியாட்டியும் கட்டுரை மூலம் தெரிந்து கொள்ள வாய்ப்பு.

 //சாலையில் ஆங்காங்கே இசைக்கலைஞர்கள் வாத்தியங்களை வாசித்துக் கொண்டு இசை மணம் பறப்பிக் கொண்டிருக்கும் காட்சி இந்த நகரத்திற்கு உயிரூட்டும் ஒன்று. //

இங்கே மாலை வேளைகளில் இம்மாதிரி இசைக்கலைஞர்கள் ஸ்டார்பக்ஸ், மெக்டொனால்ட் போன்ற பெரும் உணவகங்களின் வாயிலிலோ அல்லது டவுன் சென்டர் எனப்படும் பெரிய மால்கள் நிறைந்த இடத்திலோ வாசிப்பதைக் காண முடியும்.

2011/12/30 Subashini Tremmel <ksuba...@gmail.com>
டப்ளின் நகர சாலைகளில்

இங்கிலீஷ் உணவு வகைகள் போலவே டோஸ்ட் ரொட்டி,  முட்டை, சாசேஜ், தேனீர், காப்பி, பழங்கள் என அமைந்திருக்கும். சற்று அலுப்பைத் தரக்கூடிய ஒரு காலை உணவு. எனக்கு பிடிக்காத காலை உணவு வகை. பிடிக்கவில்லையென்றாலும் காப்பியும் ஜேம் தடவிய ரொட்டியும் சாப்பிட்டு நாங்கள் புறப்பட்டோம்.

தொடரும்..

அன்புடன்
சுபா

360.gif

Suba

unread,
Mar 4, 2016, 3:41:48 AM3/4/16
to மின்தமிழ், Dr.Subashini
இந்தப் பயணக்கட்டுரையைத்  தொடரலாமா என யோசித்துக் கொண்டிருக்கின்றேன். செல்டிக் கலாச்சாரம் பற்றி நேற்று ஒரு சின்ன டோக்குமெண்டரி பார்த்ததின் விளைவு இந்த எண்ணம் :-)

சுபா
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
360.gif

Suba

unread,
Mar 6, 2016, 7:48:23 AM3/6/16
to மின்தமிழ், Dr.Subashini
6.அயர்லாந்தில் செல்ட்டிக் பண்பாட்டின் தாக்கம்

அயர்லாந்து மக்கள் தொகையில் ஏறக்குறைய 87% விழுக்காட்டு   மக்கள்  கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தோராக இருக்கின்றனர். எனது பயணத்தின் போது கிழக்கு, மேற்கு, தெற்கு மைய அயர்லாந்து என சென்ற இடங்கள் அனைத்திலும் கத்தோலிக்க கிறிஸ்துவ தேவாலயங்கள் பல கண்களுக்குத் தென்பட்டன. ஒரு சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேவாலயங்களின் உள்ளேயும் சென்று பார்த்து அவற்றின் வரலாற்றுப் பின்னனிகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பினையும் இப்பயணத்தில் என்னால் பெற முடிந்தது. அப்படி நான் சென்று பார்த்த தேவாலயங்களில் ஏனைய ஐரோப்பிய தேவாலயங்களில் இருக்கும் குறியீடுகளிலிருந்து மாறுபட்ட வடிவங்களில் அமைந்த குறியீடுகளை அங்கே பரவலாகக் காணக்கூடியதாகவும் இருந்தது. 

இதனைப் பற்றி அறிந்து கொள்ள நான் விசாரித்தபோது அயர்லாந்தின் கத்தோலிக்க சமயம் என்பது அங்கே முன்னரே வழக்கில் இருந்த செல்ட்டிக் பண்பாட்டிற்குள் உள்வாங்கப்பட்ட கத்தோலிக்க மதத்தின் ஒரு வடிவம் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இது, செல்ட்டிக் பண்பாடு, பாரம்பரியம் என்பன என்ன என்ற எனது தேடுதலை தொடக்கி வைத்தது. அதற்காக இச்சுற்றுப்பயணத்திலேயே செல்ட்டிக் பண்பாட்டையும் வரலாற்றையும் விளக்கும் இரண்டு நூல்களை   பயணத்தில் இருந்த வேளையிலேயே ஒரு நூலகத்தில் வாங்கி வாசிக்கத் தொடங்கினேன். அதில் ஒன்றின் பெயர் The Celts. இதன் ஆசிரியர்  Peter Berresford Ellis. இன்னொரு நூல்  How the Irish saved Civilization. இதனை எழுதியவர்  Thomas Cahill. இந்த  நூல்கள் ஐரோப்பாவில் செல்ட்டிக் பாரம்பரியத்தின் வளர்ச்சி, வரலாறு, நிகழ்ந்த மாற்றங்கள், அயர்லாந்து இன்று  செல்ட்டிக் மரபை பின்பற்றும், அதாவது இந்த மரபு இன்றும் வாழும் வகையில் இருக்கும் விசயங்களை விளக்குவதில் சிறந்த பங்களிப்பதாக உள்ளதை வாசிக்கையில் உணர்ந்தேன்.

அயர்லாந்தின் வரலாறு பல ஏற்றங்களையும் இறக்கங்களையும் சந்தித்த வரலாறு. அன்று கலைக்கும், பண்பாட்டிற்கும், வீரத்திற்கும், ஆளுமைக்கும் நிகழ்ந்த இந்த தொடர் மாற்றங்கள் இன்று வேற்று வகையில் நிகழ்கின்றன. இப்போது மையப் பொருளாக அயர்லாந்தை ஆக்கிரமித்திருப்பது பொருளாதார நிலைத்தன்மையும் இந்த நாடு காணும் ஏற்றத் தாழ்வும் எனச் சொல்லலாம். 

அயர்லாந்தின் அகழ்வாய்வு, தொல்லியல் ஆய்வுகள் ஆகியனவற்றின் சான்றுகள் தருகின்ற குறிப்புக்கள் கிமு.6000 ஆண்டு வாக்கில் அயர்லாந்தில் மக்கள் குடியிருந்தமைக்குச் சான்று தருகின்றன.  இக்காலகட்டத்தில் வேட்டைத் தொழில் செய்வோர் இப்பகுதியில் வாழ்ந்திருக்கின்றனர். பின்னர் கற்காலத்தில், அதாவது கி.மு 3000 வாக்கில்  அயர்லாந்து மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு என சிறுகச் சிறுக நாகரிக வளர்ச்சி பெர்றவர்களாகப் பரிமாணம் பெற்றனர். இதற்குச் சான்றுகளாக இங்கே இன்றும் காணக்கிடைக்கின்ற ஈமக்கிரியை கல்வட்டங்கள், கல்திட்டைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். 

ஏறக்குறைய கி.மு 1500 வாக்கில் அயர்லாந்து நாகரிக வளர்ச்சியைக் காணும் வகையில் கட்டுமாங்கள், நகர்ப்புற அமைப்பு, கோட்டைகள் அமைப்பு என்ற வகையில் வளர்ச்சி அடைந்தது. இதற்குச் சான்றாக  Inishmore  பகுதியில் இருக்கும் Dun Aengus   கோட்டையின் எச்சங்களும் Grianan of Aileach  பகுதியில் இருக்கும்   Donnegal கோட்டைகளின் சிதைந்தை பகுதிகளையும் குறிப்பிடலாம். இதற்கு ஏறக்குறைய 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் அயர்லாந்துக்குச் செல்ட்டிக் பாரம்பரியத்தைப் பின்பற்றும் இனக்குழுவினரின் வருகை அமைகின்றது.  இது நிகழ்ந்த காலகட்டம் ஏறக்குறைய கி.மு. 6 எனக் குறிப்பிடலாம். செல்ட் இனக்குழு மக்கள் மத்திய ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள். மத்திய ஐரோப்பா என நான் குறிப்பிடுவது இன்றைய ஆஸ்திரியா, ஹங்கேரி, ரோமேனியா ஸ்லோவாக்கியா உள்ளிட்ட பகுதிகளைக் குறிப்பிடுவது. 

இப்படி வந்த செல்ட்டிக் மக்கள் நாகரிகத்தில் உயர்ந்தவர்களாகவும் அதாவது இரும்பு போன்ற உலோகங்களினால் கருவிகள் செய்யக்கூடியவர்களாக இருந்தனர். தங்கள் வாழ்விடத்தை மிகுந்த பாதுகாப்பு அறன் போன்ற கோட்டைகளைக் கட்டி, அதிலும் வட்ட வடிவிலான கோட்டைச் சுவர்களை எழுப்பி இவர்கள் வாழ்ந்து வந்தனர்.   செல்ட் மக்கள் வாழ்ந்த  பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமான உலோகக் கருவிகளும் ஏனைய சில சான்றுகளும்  டப்லின் தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தொடரும்...
சுபா

2011-12-30 15:38 GMT+01:00 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
டப்ளின் நகர சாலைகளில்

அயர்லாந்தின் மிக முக்கிய நகரம், தலை நகரம், வர்த்தக நகரம் என்ற சிறப்புக்களோடு கலைத்துவமும் பரிமளிக்கும் ஒரு நகரம் டப்ளின். எங்கள் பயணத்தின் இரண்டாம் நாள் ஒரு நாள் முழுதும் இந்த நகரத்தை நாங்கள் சுற்றிப் பார்க்க எங்களுக்கு வாய்ப்பு அமைந்தது. காலையில் தங்கும் விடுதியிலேயே ஐரிஷ் வகை காலை உணவு. இதில் பிரத்தியேகமாக ஏதும் காணப்படவில்லை.  லண்டனில் காலை உணவு சாப்பிட்டவர்களுக்கு இதற்கும் அயர்லாந்தில் தங்கும் விடுதிகளில் கிடைக்கும் உணவிற்கு வித்தியாசம் இல்லாமல் இருப்பதை உணரலாம்.  இங்கிலீஷ் உணவு வகைகள் போலவே டோஸ்ட் ரொட்டி,  முட்டை, சாசேஜ், தேனீர், காப்பி, பழங்கள் என அமைந்திருக்கும். சற்று அலுப்பைத் தரக்கூடிய ஒரு காலை உணவு. எனக்கு பிடிக்காத காலை உணவு வகை. பிடிக்கவில்லையென்றாலும் காப்பியும் ஜேம் தடவிய ரொட்டியும் சாப்பிட்டு நாங்கள் புறப்பட்டோம்.

டப்ளினில் பார்ப்பதற்கு பல இடங்கள் உள்ளன. அவை எல்லாவற்றையும் எங்களுக்குள்ள நேரத்தில் பார்த்து முடிக்க முடியாது என்ற காரணத்தால் பகலில் சாலையில் நடந்து சென்று எந்த இடங்களைப் பார்த்து வரலாம் என திட்டமிட்டோம். எங்கள் பயண திட்டத்தில் மேலும் ஒரு நாள் இறுதியாக டப்ளினில் இருக்கும் வகையில் பயண நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.  ஆக அவசரப் பட்டுக் கொண்டு செல்லாமல் நிதானமாக முக்கிய இடங்களைப் பார்த்து தகவல்கள் சேகரித்து வருவதோடு டப்ளின் சாலைகளில் நடந்து மக்களையும் சாலை காட்சிகளையும் கண்டு களிக்க வேண்டும் என்றும் ஆவல் இருந்தது. ஆக இரண்டு இடங்களை மட்டும் பார்ப்போம் என முடிவு செய்து கொண்டோம்.

டப்ளினுக்கு சிறப்பு சேர்க்கும் சுற்றுலா தளங்களில் முக்கிய இடங்களாக கீழ்க்கண்பவற்றை குறிப்பிடலாம்.
  • ட்ரினிடி காலேஜ், நூலகம்
  • கெல்ஸ் புத்தகம்
  • டப்ளின் கோட்டை
  • டப்ளின் துறைமுகம்
  • ஃபீனிக்ஸ் பார்க்
  • செயிண்ட் பேட்ரிக் கேத்தீட்ரல்
  • க்ரிஸ்ட் சர்ச் கெத்தீட்ரல்
  • டெம்பல் பார்
  • கின்னஸ் ஸ்டோர்
  • டப்ளின் மிருகக்காட்சி சாலை

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings

தேமொழி

unread,
Mar 6, 2016, 10:32:16 AM3/6/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

நான் செல்ட்டிக் மக்கள் பற்றி தெரிந்து கொள்ள விரும்பியது Asterix  Obelix Comics படிக்கத் தொடங்கிய பிறகு.  
சீசர்-கிளியோபட்ரா கால ஐரோப்பிய பின்னணி என்று கதைகள் இருக்கும்.  எனக்கு மிகவும் பிடித்த கதைகள், நான் ஒபீலிக்ஸ்  ரசிகை (எனது  'டின் டின்', 'ஆஸ்ட்ரிக்ஸ்' படக்கதை புத்தககங்கள் சேமிப்பு ஒன்றும் என்னிடம் இருந்தது.  இப்பொழுது ஒன்றையுமே காணவில்லை) .

யூடியூபில் செல்டிக்ஸ் இசை காநோளிகளும் கிடைக்கின்றன.

.... தேமொழி

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 6, 2016, 10:45:05 AM3/6/16
to mintamil
aarvaththai thoondum pathi. thodurungal.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Suba

unread,
Mar 8, 2016, 1:32:34 PM3/8/16
to மின்தமிழ், Dr.Subashini
நான் கேள்விப்பட்டதுண்டு ஆனால் வாசித்ததில்லை தேமொழி. 
இதில் காவுல் என்குறிப்பிடப்படும் இனக்குழு செல்ட்டிக் இனக்குழுவினரில் பிரான்சு பகுதியில் வாழ்ந்தவர்களைக் குறிப்பது. 

சரி நீங்கள் நன்றாக கோமிக்ஸ் படித்து மகிழ்ச்சியாக இருங்கள் :-)

suba

Innamburan S.Soundararajan

unread,
Mar 8, 2016, 6:27:59 PM3/8/16
to mintamil, Dr.Subashini
நானும் ஒபீலிக்ஸ் விசிறி. படங்கள் அபாரம். தத்ரூபம்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

K R A Narasiah

unread,
Mar 8, 2016, 11:17:17 PM3/8/16
to mintamil
When I landed in Belfast on a cold December morning, in 1960, I checked into a hotel but found the charges were more than twice my daily allowance given by Government. Quickly moved into a house of Alexander family. The couple were my age group. The land lady (I was a paying guest and there we call it a dig) was in the beginning a bit racial but she needed money as she herself was a ph D scholar in Queen's University. She asked me if I can speak English! To teach her a lesson I wrote in large letters "A thing of Beauty is JOYCE for ever" since her name was Joyce. I quoted the revised version of John Keats from Endymion. She realised her mistake and she became quite close to me later (to such an extent that there was கிசு கிசு on board Vikrant about us. (Suba you can read my story மூச்சை நிறுத்திவிடு  it is in the collection தீர்க்கரேகைகள் ) I have written a short story about this 

They were protestants and were dead against Catholics. (and they talk about Indians' religious problems) I was in Belfast during worse catholic protestant problems. I narrated a story to Alexander about my school days. In 1939  I was studying in Usilampatti in a RC school. The mother superior was intent on converting Hindu poor boys into Christianity. She used to say "If you dont pray Virgin Mary she will punish you", showing the statue of Virgin Mary. A boy thought Virgin Mary was the problem and so he broke the masonry statue with a brick
Alexander replied "She sure is the cause of all problems!"
Narasiah

On Wed, Mar 9, 2016 at 4:57 AM, Innamburan S.Soundararajan <innam...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (innam...@gmail.com) Add cleanup rule | More info

நானும் ஒபீலிக்ஸ் விசிறி. படங்கள் அபாரம். தத்ரூபம்.
2016-03-09 0:02 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Innamburan S.Soundararajan

unread,
Mar 8, 2016, 11:20:48 PM3/8/16
to mintamil, K R A Narasiah
 I wrote in large letters "A thing of Beauty is JOYCE for ever" since her name was Joyce

Know you are a Malumi, Writer, Speaker and Researcher. Now I know you are a Diplomat Extraordinary, Sir.
I

Suba

unread,
Mar 9, 2016, 5:33:02 AM3/9/16
to மின்தமிழ், Dr.Subashini
On Wed, Mar 9, 2016 at 5:17 AM, K R A Narasiah <naras...@gmail.com> wrote:
When I landed in Belfast on a cold December morning, in 1960, I checked into a hotel but found the charges were more than twice my daily allowance given by Government. Quickly moved into a house of Alexander family. The couple were my age group. The land lady (I was a paying guest and there we call it a dig) was in the beginning a bit racial but she needed money as she herself was a ph D scholar in Queen's University. She asked me if I can speak English! To teach her a lesson I wrote in large letters "A thing of Beauty is JOYCE for ever" since her name was Joyce. I quoted the revised version of John Keats from Endymion. She realised her mistake and she became quite close to me later (to such an extent that there was கிசு கிசு on board Vikrant about us. (Suba you can read my story மூச்சை நிறுத்திவிடு  it is in the collection தீர்க்கரேகைகள் ) I have written a short story about this 

​es, I remember reading the short story and i also shared my comments some times back. I have this book with me. :-)

suba ​
 
--

Suba

unread,
Mar 9, 2016, 5:36:01 AM3/9/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-03-06 13:48 GMT+01:00 Suba <ksuba...@gmail.com>:
6.அயர்லாந்தில் செல்ட்டிக் பண்பாட்டின் தாக்கம்

ஒரு குழப்பம் இருந்தது. 
​Celt 
​என்பதை எப்படி ஒலிப்பது என்று. ​
இன்று டப்லினில் இருக்கும் எனது அலுவலக நண்பர் ஒருவரிடம் செல்ட் என்று சொல்வதா கெல்ட் என்று சொல்வதா என கேட்டேன். அவர் கெல்ட் என்பதே வழக்கில் இருக்கும் ஒலிப்பயன்பாடு என்
​று
 விளக்கினார்.
இனி வரும் பதிவுகளில் நான் கெல்ட் என்றே மாற்றி பதிவிடுவேன். ​
 
​சுபா

Suba

unread,
Mar 9, 2016, 6:42:33 PM3/9/16
to மின்தமிழ், Dr.Subashini
7. கெல்ட் இனக்குழுவின் விரிந்த பயணம்

அயர்லாந்தின் வரலாற்றைப் பற்றிப் பேசும் போது கெல்ட் இனக்குழுவைப்பற்றி ஓரளவு புரிந்து கொள்ளாமல் செல்வது அயர்லாந்தின் தனித்துவத்தைப் புரிந்து கொள்ள உதவாது. அதனால் இந்த இனக்குழுவைப் பற்றி மேலும் சிறிது எழுதலாமே எனத் தோன்றியது. இதற்கு முந்தைய பதிவில் நான் குறிப்பிட்டது போல, அயர்லாந்தின் பூர்வக்குடி மக்கள் என்ற வகையில் கெல்ட் இன மக்களைக் காணமுடியாது.

கெல்ட் இனக்குழு மத்திய ஐரோப்பாவில் தோன்றிய ஒரு இனக்குழு ரைன், டனூய்ப் , ரோன் நதிக்கரையோரங்களில் இந்த இனக்குழுவினர் தம்மை விரிவு படுத்திக் கொண்டனர். டனூப் நதி என்றால் ஜெர்மனியில் ஆரம்பித்து ஐரோப்பாவின் பத்து நாடுகளைக் கடந்து செல்லும் நதி அது. ரைன் நதி ஆஸ்திரியா, சுவிஸர்லாந்து, ஜெர்மனி என்ற வகையில் அமைவது. இப்படி பரந்து விரிந்த பகுதிகளில் இன்றைய ஐரோப்பாவில் அங்கத்துவம் வகிக்கும் மேற்கு கிழக்கு நாடுகளில் இந்த  இனக்குழு தோன்றி விரிவடைந்தது.

இன்று ஐரோப்பா, ஐரோப்பியர் என்று  குறிப்பிடுகின்றோம். ஆனால் இன்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இப்பகுதியில் நாட்டு எல்லைகளைக் கடந்த ஒரு இனக்குழுவாக விரிவாகியது என்பதோடு முதல் ஐரோப்பியர்கள் என்ற வகையில் சிறப்பித்துக் கூறும் தகுதியும் படைத்தவர்களாக இந்த இனக்குழு மக்கள் இருந்தனர். மேலே அயர்லாந்து வரை சென்ற இந்த இனக்குழுவினர் மேற்கே இன்றைய ஸ்பெயின், பிரான்சு  பகுதியில் பரவினர். தெற்கே இத்தாலி, துருக்கி, உக்ரேன், ரஷியா ஆகிய பகுதிகளுக்கும் இவர்கள் பரவினர். சில ஆய்வுகள் குறிப்பிடுவது போல  இந்தக் குழுவினர்  தான் வட சீனா பகுதில் இன்று அறியப்படும் தொஷேரியன் மக்கள் என்று கூறுவதால் சீனாவிலும் இந்த இனக்குழு மக்களில் புலம்பெயர்வு நடந்திருக்கின்றது என்பதை அறியமுடிகின்றது.

கெல்ட் இனக்குழுவினர் இந்தோ-ஐரோப்பிய இனக்குழு வகையைச் சேர்ந்தவர்கள். இயல்பாகவே மிகத்தேர்ந்த போர் வீரர்களாக இவர்கள் இருந்தனர். கிரேக்க, ரோமானிய அரசின் போர்க்களத்தில் கெல்ட் இனமக்கள் போர் வீரரகளாகவும் தளபதிகளாகவும் பதவி வகித்திருக்கின்றனர்.

போர்த்தொழில் மட்டும் இவர்களது தொழிலாக இருக்கவில்லை. விவசாயம், மருத்துவம் என்ற வகையில் சிறந்து விளங்கியிருக்கின்றனர்.  சிற்பக்கலை, கட்டிடக்கலை, நகைகள் செய்தல். போர்க்கருவிகள் செய்தல் ஆகிய தொழிலிலும் சிறந்து விளங்கியிருக்கின்றனர் கெல்ட் இனக்குழுவினர்.  பண்டைய ஐரோப்பாவில் சாலை அமைப்பு தொழிலில் கெல்ட்  மக்களின் பங்களிப்பு  குறிப்பிடத்தக்க வகையில் அமைந்தது. காடுகளை அழித்து சாலையிட்ட இனக்குழுவாக கெல்ட் இனக்குழு மக்களே வரலாற்றில் குறிப்பிடப்படுகின்றனர்.  லத்தீன் மொழியில் சாலை மற்றும் வாகனங்கள் பற்றி குறிப்பிடப்படுகின்ற சொற்கள் கெல்ட் மொழியிலிருந்து கடன்வாங்கி இணைக்கப்பட்ட சொற்களாகவே உள்ளன.

இவ்வளவு சிறப்புத்திறமைகள் கொண்டிருந்த கெல்ட் இனக்குழுவினருக்கு எழுத்து மொழி என்பது கிடையாது என்பது ஆச்சரியமான ஒரு விடயம். அப்படியென்றால் அவர்களது சிந்தனை வெளிப்பாடுகளை எப்படி அவர்கள் வளர்த்தார்கள் என்பது கேள்வியாகின்றது அல்லவா?

கெல்ட் கலைப்பாட்டுடன் கூடிய சமயச்சின்னம்

கெல்ட் இனக்குழுவினர் கடைபிடித்த  சமய நெறி  அவர்கள் தங்கள் சிந்தனைகளை எழுத்து வடிவில் எழுதி வைப்பதை தடை செய்திருந்தது.  ஆயினும் கூட கெல்ட் மக்கள் உருவாக்கிய 500க்கும் மேற்பட்ட   கி.மு.5 லிருந்து கி.மு 1 வரையிலானை எழுத்து ஆவணங்கள் பல கிடைத்திருக்கின்றன. ஆனால் இகெல்ட் இனக்குழுவினர்  பொனீசியன், எட்ரஸ்கன், ரோமானிய, கிரேக்கம், போன்ற மக்களின் எழுத்துருக்களை தங்கள் சிந்தனைகளை வடித்து வைக்க பயன்படுத்திக் கொண்டனர். அதுமட்டுமல்ல. அக்காலத்தின் கெல்ட் இனக்குழுவைச் சார்ந்த அறிஞர்கள்  லத்தீன் மொழியிலும், கிரேக்க மொழியிலும் தங்கள் இலக்கியத்தை எழுதி வைப்பதைக் கடைபிடித்தனர் என்பதும் மிகச் சுவாரசியமான ஒன்றாகவே அமைகின்றது. ஆயினும் கிறிஸ்துவ சமயம் பரவ ஆரம்பித்த காலத்தில் கெல்ட் மக்கள் தங்கள் மொழியை எழுத்து மொழியாக பதிவிட ஆரம்பித்தனர். அப்படி உதித்தவைதான் அயர்லாந்தில் இன்று புழங்கப்படும் ஐரிஷ் (கேலிக்) மொழி, ஸ்கோட்டிஷ் கேலிக்,  மான்க்ஸ் ஆகிய மொழிகள். 

கெல்ட் இனமக்களின் கேலிக் மொழியே இன்று அயர்லாந்தின் தாய்மொழி என்ற சிறப்பை பெற்றிருக்கின்றது. ஆங்கிலமும் கேலிக் மொழியும் சம அளவிலான முக்கியத்துவத்தைப் பெற்றாலும் கூட கேலிக் மொழி தனித்துவத்துடன் விளங்குகின்றது என்பதும் முக்கியம். 

கெல்ட் மக்களின் மற்றுமொரு சிறப்பு அம்சமாகத் திகழ்வது இந்த மக்கள் உருவாக்கிய புராணங்கள். எண்ணற்ற புராணங்கள், கதைகள்  இறைவனைப் பற்றியும், இறைவியைப் பற்றியும், முனிவர்கள் பற்றியும், ஐம்பூதங்கள் பற்றியும் என புராணக்கதைகளுக்குப் பஞ்சமில்லாத நிலையைக் காண முடிகின்றது. 

மற்றுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் ஒன்றான சமஸ்கிருதத்திற்கும் கெல்ட் மொழிக்கும் ஒற்றுமை இருப்பதாகக் கூறும் கருத்துக்களை ஒதுக்க முடியவில்லை. அவை மட்டுமன்றி கெல்ட் இனக்குழு மக்களின் புராணங்களும் அவற்றின் கதாமாந்தர்களும் அவற்றிற்கான பெயர்களும் இந்திய நிலப்பகுதியில் இருக்கும் சமஸ்கிருத புராணங்களையும் கதாமாந்தர்களின் பெயர்களுடனும் ஒத்திருப்பதைச் சில குறிப்புக்களில் காணமுடிகின்றது.

குறிப்பு:The Celts, Peter Berresfort Ellis.

​புனித யாத்திரை செல்லும் பக்தரின்சிலை வடிவம்

தொடரும்.
சுபா

2016-03-06 13:48 GMT+01:00 Suba <ksuba...@gmail.com>:

தேமொழி

unread,
Mar 9, 2016, 7:47:44 PM3/9/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

On Wednesday, March 9, 2016 at 3:42:33 PM UTC-8, Suba.T. wrote:
7. கெல்ட் இனக்குழுவின் விரிந்த பயணம்

கெல்ட் இனக்குழுவினர் கடைபிடித்த  சமய நெறி  அவர்கள் தங்கள் சிந்தனைகளை எழுத்து வடிவில் எழுதி வைப்பதை தடை செய்திருந்தது.  ஆயினும் கூட கெல்ட் மக்கள் உருவாக்கிய 500க்கும் மேற்பட்ட   கி.மு.5 லிருந்து கி.மு 1 வரையிலானை எழுத்து ஆவணங்கள் பல கிடைத்திருக்கின்றன. ஆனால் இகெல்ட் இனக்குழுவினர்  பொனீசியன், எட்ரஸ்கன், ரோமானிய, கிரேக்கம், போன்ற மக்களின் எழுத்துருக்களை தங்கள் சிந்தனைகளை வடித்து வைக்க பயன்படுத்திக் கொண்டனர். அதுமட்டுமல்ல. அக்காலத்தின் கெல்ட் இனக்குழுவைச் சார்ந்த அறிஞர்கள்  லத்தீன் மொழியிலும், கிரேக்க மொழியிலும் தங்கள் இலக்கியத்தை எழுதி வைப்பதைக் கடைபிடித்தனர் என்பதும் மிகச் சுவாரசியமான ஒன்றாகவே அமைகின்றது. ஆயினும் கிறிஸ்துவ சமயம் பரவ ஆரம்பித்த காலத்தில் கெல்ட் மக்கள் தங்கள் மொழியை எழுத்து மொழியாக பதிவிட ஆரம்பித்தனர். 

கெல்ட் மக்களின் மற்றுமொரு சிறப்பு அம்சமாகத் திகழ்வது இந்த மக்கள் உருவாக்கிய புராணங்கள். எண்ணற்ற புராணங்கள், கதைகள்  இறைவனைப் பற்றியும், இறைவியைப் பற்றியும், முனிவர்கள் பற்றியும், ஐம்பூதங்கள் பற்றியும் என புராணக்கதைகளுக்குப் பஞ்சமில்லாத நிலையைக் காண முடிகின்றது

மற்றுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் ஒன்றான சமஸ்கிருதத்திற்கும் கெல்ட் மொழிக்கும் ஒற்றுமை இருப்பதாகக் கூறும் கருத்துக்களை ஒதுக்க முடியவில்லை. அவை மட்டுமன்றி கெல்ட் இனக்குழு மக்களின் புராணங்களும் அவற்றின் கதாமாந்தர்களும் அவற்றிற்கான பெயர்களும் இந்திய நிலப்பகுதியில் இருக்கும் சமஸ்கிருத புராணங்களையும் கதாமாந்தர்களின் பெயர்களுடனும் ஒத்திருப்பதைச் சில குறிப்புக்களில் காணமுடிகின்றது.

ஏதோ தொடர்பு இருக்கும்தான்  போலிருக்கிறது ...
சமய நம்பிக்கை எழுதுவதைத் தவிர்த்தது ... 
பிறமொழி எழுத்துக்களை எடுத்து எழுத ஆரம்பித்தது....
புராண நம்பிக்கை கதைகள் இன்னபிற.... 

மரபணுவியல், மானுடவியல் ஆய்வாளர்கள் என்ன ஆய்வு செய்துள்ளார்கள் இவர்களது தோன்றல் பரவல்களைப் பற்றி....
தொடருங்கள் ஆர்வமூட்டுவதாக இருக்கிறது.

நான் இன்று கட்டுரை படித்தேன்... அதைத் தனி இழையில் பகிர்வேன் ....

..... தேமொழி

Suba

unread,
Mar 10, 2016, 2:07:57 AM3/10/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-03-10 1:47 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:

​நான் இந்தப் பதிவில் முக்கிய விடயமாக நினைத்ததை மஞ்சள் குறியிட்டிருக்கின்றீர்கள்.
இந்தக் கெல்ட் இனமக்களின் வரலாறு என்னை அதிசயிக்க வைக்கின்றது. தொடர்கின்றேன்.

​சுபா
​ 

Suba

unread,
Mar 10, 2016, 6:11:03 PM3/10/16
to மின்தமிழ், Dr.Subashini
8. கெல்ட் மொழியும் நம்பிக்கைகளும்

கி.மு. 58 முதல் கி.மு. 50 நிகழ்ந்த கேலிக் போர் என்பது ஐரோப்பிய நிலப்பகுதியில் நடந்த பற்பல போர்களில் வரலாற்றில் இடம் பெற்ற போர்களில் ஒன்று. கேலிக் அதாவது இந்த கெல்ட் இனக்குழுவின் ஒருபகுதியினரை எதிர்த்து சீஸரின் ரோமானியப் படை மேற்கொண்ட போர் இது. அந்தப் போரின் போது தனது அபிப்ராயத்தை குறிப்பிடும் சீஸர்,  கெல்ட் இனக்குழு மக்களில் முனிவர்களைப் பற்றியும் தன் கருத்தைப் பதிந்து வைக்கின்றார்.  இந்த முனிவர்கள் எனப்படுவோர் வருங்காலத்தைக் கணிக்கக்கூடிய, மந்திரங்கள் தெரிந்த, பூஜைகளையும் சடங்குகளையும் செய்கின்ற ஒருவர்.  இந்த முனிவர்களுக்கு கெல்ட் இனக்குழுவில் உயர் அந்தஸ்து கொடுக்கப்பட்டிருந்தது.  இந்த முனிவர்கள் தமது சமயமானது தமது கல்வி முறையை எழுத்து வடிவில் மக்களுக்கு வழங்குவதை தடை செய்வதாக பிரகடனப் படுத்தி வைத்திருந்தனர் என்றும் வாய்மொழியாகவே அவர்கள் தங்கள் சிந்தனைக் கருவூலங்களை  மனன முறையில் வழிவழியாக  வழங்கி வந்தனர் என்றும் சீஸரின் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.  அதே வேளை பொது விடயங்களுக்கான தேவைகளுக்குக் கிரேக்க லிபியை அவர்கள் பயன்படுத்தினர் என்றும் இதன் வழி அறிய முடிகின்றது.

ஜியோர்ஞ் பூஹ்னான் (1506 - 1582) என்ற ஸ்கோட்டிஷ் மொழியறிஞர் தாம் முதன் முதலாக கெல்ட் மொழியை இன்று வாழும் ஏனைய பல இந்தோ-ஐரோப்பிய மொழிகளுடன் கொண்டிருக்கும் தொடர்பினை ஆய்ந்தறிந்து  வெளியிட்டவர்.  கெல்ட் மக்கள் தங்கள் மொழிக்கான எழுத்துருவை நிர்ணயித்துக் கொண்டபின்னர், அதாவது கிருஸ்து பிறப்புக்குப் பின்னான காலகட்டத்தில் இந்த கெல்ட் மொழியானது அதன் அடிபப்டை வடிவத்திலிருந்து பல்வேறு வகையான மாற்றத்தை உள்வாங்கிக் கொண்டு புதிய புதிய மொழிகளாக வடிவெடுத்து விட்டது. 

இந்தோ-ஐரோப்பிய மொழிகள் எனும் போது அதில் அடங்கும் மொழிகளாக பெருவாரியான ஐரோப்பிய மொழிகள், ஈரானிய மொழி, வட இந்திய மொழி ஆகியன அமைகின்றன.  உதாரணமாக பெயர் என்னும் சொல் இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் ஒலிக்கப்படும் விளக்கம் பற்றி அறியும் போது இம்மொழிகளுக்கான ஒற்றுமைக் கூற்றை அறியக்கூடியதாக உள்ளது. Nama - Anglo Saxon (north East Germany) என்ற சொல், Name - English என்றும்,  Namn - Gothic என்றும், Name - Deutsch, என்றும்,  Naam - Dutch, என்றும், onama - Greek, என்றும்Namman - Sanskrit,  என்றும் aimn - Irish உள்ளன. இதே போன்ற  சொற்களை ஒற்றுமைகளைக் காட்ட நன்கு பட்டியலிடலாம்.  இன்று அறியக்கூடிய மிகப் பழமையான இந்தோ-ஐரோப்பிய இலக்கிய வடிவம் என்றால்  அது ஹைட்டைட்  (Hittite) மொழியும் சமஸ்கிருத மொழியும் எனக் கூறலாம்.ஹைட்டைட் மொழியின்  எழுத்துப்படிவங்கள் கி.மு 1900 வாக்கில் உருவாக்கபப்ட்டவை என்றும் சமஸ்கிருத  வேதங்கள் கி.மு 1000லிருந்து 500 வரை என்றும் சொல்லலாம். 

The Celt  நூலின் ஆசிரியர் ஐரிஷ் கேலிக் மொழிக்கும் சமஸ்கிருத  வேத  கூறுகளுக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமைகளை சுட்டிக் காட்டுகின்றார். சில ஆயிரம் மைல்களுக்கு அப்பால் புழக்கத்தில் இருக்கும் இந்த இரண்டு மொழிகளுக்கும் இருக்கும் ஒற்றுமையைக் கூறும் போது மொழியியல் மட்டுமல்லாது சமூஅக நடைமுறைகள், மக்கள் வாழ்வியல் கூறுகள்,  புராணங்கள் ஆகியவற்றில் உள்ள ஒற்றுமைக் கூறுகளைக் குறிப்பிடுகின்றார்.

புராணங்களை எடுத்துக் கொள்ளும் போது சில ஒப்பீடுகள் சுவாரசியமாக இருக்கின்றன. 

ஐரிஷ் கேலிக் புராணத்தில் இருக்கும் Danu தானு(டனு) அல்லது அனு (Anu),  பழைய கேலிக் கெல்ட சமூகத்தில் இருக்கும் வழிபடப்படும் ஒரு தாய் தெய்வம். அவளே புனிதம் அவளே புனித நதி.  ஐரோப்பாவில் ஓடும் டனுப் நதி இந்த தாய் தெய்வத்தின் பிரதிபலிப்பாக கெல்ட் சமய வழக்கத்தில் உள்ளது. நதியின் முக்கியத்துவம் இந்திய புனித கங்கையோடு ஒப்பிடும் போது கங்கை பல சடங்குகளைச் செய்ய பயன்படும் ஒரு புனித ஸ்தலமாக இருப்பதைக் கான்கின்றோம். கெல்ட் மக்கள் நதியில் நைவேத்தியங்களை வைத்து படைத்து நதி அன்னைக்கு சமர்ப்பணம் செய்யும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். அதே போல கங்கை நதியில் சடங்குகளைச் செய்து கங்கா நதிக்கு சமர்ப்பணம் செய்வது இந்திய தேசத்திலிருக்கும் ஒரு பண்பாக இருப்பதைக் காண்கின்றோம். வேத புராணத்தில் Danu நதியுடன் தொடர்புடைய ஒரு தெய்வமாகக் கருதப்படுகின்றார். பண்டைய கெல்ட் சமயத்தின் படி கெல்ட் மக்கள் தாம் (Danu) தானுவின் சந்ததியினர் எனத் தம்மை நம்புகின்றனர். புனித நீராகிய  (Danu) தானுவின் வழியில் ஆகாயக் கடவுள் தோன்ற அவர்களின் சந்ததியினரே தாம் என்பது கெல்ட் மக்களின் நம்பிக்கை. 

ஐரோப்பாவில் பல பகுதிகளில் அகழ்வாய்வுகL செய்யப்பட்டு  கெல்ட் மக்கள் பற்றிய ஆய்வுத் தகவல்கள் வெளியிடப்பட்டன. இதில் பிரத்தியேகமாக கெல்ட் மக்களின் வழிபாட்டில் இருக்கும் எண்ணற்ற கடவுளர்களைப் பற்றி இந்த தொல்லியல் ஆய்வுகள் சான்றுகளை வழங்குவதாக அமைந்தன. அதுமட்டுமன்றி இரு சக்கரத் தேர்கள், ஆபரணங்கள், சிறப்பு சடங்கு பொருட்கள் ஆகியனவும் இவ்வகை ஆய்வுகளில் கிடைத்தன. 

இந்த கெல்ட் இனமக்கள் மிக விரிவாக தமது ஆரம்ப மையப்புளியிலிருந்து பல இடங்களுக்குப் பெயர்ந்து தங்கள் பண்டைய கெல்ட் பண்பாட்டை தாங்கள் புலம்பெயர்ந்த புதிய நிலப்பகுதிகளில் அச்சூழலையும் உள்வாங்கிக் கொண்டு புதிய பரிமாணத்தில் புதிய பண்பாடுகளை உருவாக்கிக் கொண்டனர். கெல்ட் மக்களைப் பற்றி ஆராயும் போது இவர்கள் தாம் இந்தியாவிற்குப் புலம்பெயர்ந்து வந்த ஆரிய இனக்குழுவினரோ  என்ற எண்ணம் எழுகின்றது.

இனி தொடர்ந்து இக்கட்டுரையில் எனது பயணத்தில் 3ம் நாள் செய்திகளை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கின்றேன்.

தொடரும்..
சுபா

Oru Arizonan

unread,
Mar 10, 2016, 6:13:37 PM3/10/16
to mintamil
அயர்லாந்தைப் பற்றியும், கெல்ட் மரபுப் பழக்கவழக்க்காகளைப்படியும் விவரிப்பது மிகவும் புதிய அறிவைத தருகிறது.  மிக்க நன்றி, சுபா அவர்களே!

ஒரு அரிசோனன்  

Oru Arizonan

unread,
Mar 10, 2016, 6:14:59 PM3/10/16
to mintamil
பழக்கவழக்க்காகளைப்படியும் ==>  பழக்கவழக்கங்களைப்பற்றியும் என்று திருத்திப்படித்துக்கொள்ளுங்கள்.
--
பணிவன்புடன்,

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Mar 11, 2016, 8:18:17 AM3/11/16
to மின்தமிழ்
புதிய தகவல்கள் நிறையவே தெரிந்து கொண்டேன்!.. சுவாரஸ்யமாக இருக்கிறது..ரொம்ப ரொம்ப நன்றி சுபா!.

பார்வதி இராமச்சந்திரன்.

2016-03-11 4:44 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
​ 

Suba

unread,
Mar 12, 2016, 3:18:35 AM3/12/16
to மின்தமிழ், Dr.Subashini
On Fri, Mar 11, 2016 at 2:18 PM, பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com> wrote:
புதிய தகவல்கள் நிறையவே தெரிந்து கொண்டேன்!.. சுவாரஸ்யமாக இருக்கிறது..ரொம்ப ரொம்ப நன்றி சுபா!.

பார்வதி இராமச்சந்திரன்.

​மகிழ்ச்சி.
பார்வதி நலமா ? 
பார்த்து மிக அதிக நாட்களாகிவிட்டது. நேரம் கிடைக்கையில் அவ்வப்போது எழுதுங்கள்.

சுபா

Suba

unread,
Mar 12, 2016, 3:20:24 AM3/12/16
to மின்தமிழ், Dr.Subashini
On Fri, Mar 11, 2016 at 12:13 AM, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:
அயர்லாந்தைப் பற்றியும், கெல்ட் மரபுப் பழக்கவழக்க்காகளைப்படியும் விவரிப்பது மிகவும் புதிய அறிவைத தருகிறது.  மிக்க நன்றி, சுபா அவர்களே!

​மிக்க மகிழ்ச்சி.
ஒவ்வொரு நாளுமே புதிய புதிய விசயங்களையே இந்த உலகம் என் கண் முன்னே காட்டிக் கொண்டிருப்பதாக உணர்கின்றேன் இதுவாழ்க்கையை மிகச் சுவாரசியமானதாக ஆக்குகின்றது திரு. ஒரு அரிசோனன்.

சுபா​
 
ஒரு அரிசோனன்  

--
--
​ 

Suba

unread,
Mar 15, 2016, 5:36:06 PM3/15/16
to மின்தமிழ், Dr.Subashini
9.  கால்வே (Galway) நோக்கி

அயர்லாந்தில் மூன்றாம் நாள். அதிகாலை உணவிற்குப் பின்னர் சுற்றுப்பயணிகள் எல்லோரும் எங்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு புறப்பட வேண்டும். இன்று எங்கள் பயணம் கால்வே நகரை நோக்கி. இது டப்லினிலிருந்து மேற்கு நோக்கி 230கி.மீ தூரம். காலை உணவு மிகச் சுமாராக இருந்தது. இங்கிலாந்தின் இயல்பான காலை உணவு தான். பீன்ஸ். பேக் செய்த தக்காளி. பட்டரில் வருத்த காளான், டோஸ்ட், ஜாம்-பட்டர். அவித்து பொறித்த உருளைக்கிழங்கு. 

இதை எப்படித்தான் இந்த இங்கிலாந்து வாசிகள் ரசித்து ரசித்து இத்தனை ஆண்டுகளாக தினம் தினம் சாப்பிடுகின்றார்களோ எனத் தெரியவில்லை.  ஐக்கிய ராஜ்ஜியத்தின் உணவுப் பழக்கம் அயர்லாந்தையும் ஒட்டிக் கொண்டதால் இதே காலை உணவுதான் அயர்லாந்திலும். மலேசியா, தமிழகம், ஜெர்மனி என பல வித்தியாசமான வகைகளை என்னைப்போல சாப்பிட்டு பழகியவர்களுக்கு இந்த உணவை தினமும் பார்ப்பது எவ்வளவு கொடுமை என்பதை நினைத்துப் பாருங்கள். சரி மதிய உணவு விரும்பியபடி பார்த்துக் கொள்வோம் என கிளம்பி விட்டேன்.

டப்ளின் சாலையில்

டப்ளினிலிருந்து எங்கள் பேருந்து இப்போது பயணப்பட ஆரம்பித்தது. நாங்கள் 230 கி.மீ தூரம் தொடர்ச்சியாக செல்லாமல் இடையில் ஓரிரண்டு இடங்களில் நிறுத்தி சில முக்கிய இடங்களைப் பார்த்து விட்டுச் செல்வதாகவே திட்டம் இருந்தது. 

அதிபர் இல்ல தோட்டத்தில் இருக்கும் ஒபிலிஸ்க் சின்னம்

டப்ளினை விட்டுச் செல்லும் போது அந்த நகரத்தின் அழகு மனதில் ஒட்டிக் கொண்டதை உணர்ந்தேன். டப்ளினில் குறிப்பாக எனக்குப்பிடித்த சில அம்சங்களைச் சொல்லலாம். குறிப்பாக இல்லங்களின் கதவுகள் ஒவ்வொன்றும் ஒரு வர்ணத்தில் என இருப்பது என்னை மிக ரசிக்க வைத்தது. கருப்பு, சிவப்பு, பச்சை, மஞ்சள், ஊதா, ஆரஞ்சு என ஒவ்வொரு வீட்டுக் கதவும் ஒரு வர்ணம் என இருப்பது ஏனைய நாடுகளிலிருந்து அயர்லாந்தின் வீட்டு வடிவங்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவதாக அமைந்த தனிச்சிறப்பு. அதோடு டப்ளின் நகரில் ஆங்காங்கே இருக்கும் சின்ன சின்ன தோட்டங்கள் மக்கள் ஓய்வெடுக்க ஏதுவாக இருக்கின்றன. டப்ளின் நகரின் மத்தியில் ஓடும் லிஃப்பி (River Liffey) ஆறு இந்த நகரின் அழகை கூட்டும் தனிச்சிறப்புடன் திகழ்கின்றது. ஆற்று ஓர கட்டிடங்களையும் உணவகங்களையும் பார்த்துக் கொண்டே நடப்பதும் ஒரு இனிய சுகமான அனுபவம்.  இந்த அனுபவங்களின் நினைவுகளை சுமந்து கொண்டு பேருந்தில் பயணத்தில் இருந்தோம்.

பேருந்தில் பயணத்தின் போது

இதில் முதலாவதாக ஒரு விஸ்கி மதுபானம் செய்யும் ஒரு கூடத்திற்கும் விஸ்கி அருங்காட்சியகத்திற்கும் எங்களை அழைத்துச் சென்றனர். அங்கே பார்லியையும் கோதுமையையும்  எவ்வாறு பதப்படுத்தி மதுபானத்தை படிப்படியாக தயாரிக்கின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. 200 ஆண்டுகால பழமை வாய்ந்த இந்த மதுபான கூடத்தில் இயங்கும் இயந்திரங்களையும், தயாரிப்பு முறைகளையும் நேரில் காணவும் முடிந்தது. 

இந்த அருங்காட்சியகத்தில் ஏறக்குறைய ஒரு மணி நேரத்தை செலவிட்டு முடித்து மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம். செல்லும் வழியெங்கும் மாடுகளும் செம்மறி ஆடுகளும் இரு பக்கமும் கண்களில் தென்பட்டவாறே இருந்தன.

பசுமை

அயர்லாந்தின் பசுமை .. அது தனித்துவம் வாய்ந்த  பசுமை.  பச்சையும் மஞ்சளும் இணைந்த  தனிக்கலைவையின் வர்ண ஜால வெளிப்பாடு அது. அதில் இளம் குளிர்ச்சியான சுவாசக்காற்றை சுவாசித்தபடி புல் மேய்ந்து கொண்டிருந்த ஆடு மாடுகளை, இந்த மொத்த அழகையும் எவ்வளவு புகைப்படம் எடுப்பது எனத் தெரியாமல் கேமராவில் எடுத்துக் கொண்டேயிருந்தேன். 

பசுமையின் எழில்

எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது.!

சுபா

Suba

unread,
May 10, 2016, 4:30:05 PM5/10/16
to மின்தமிழ், Dr.Subashini
12. க்ளோன்மெக்னோய்ஸ் மடம்

ஷானன் பகுதியில் ஒஃபேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் க்ளோன்மெக்னோய்ஸ் மடம் செயிண்ட் சியேரன் அவர்களால் கி.பி.544ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. செயிண்ட் சியேரன்  இப்பகுதிக்கு வந்தடைந்தபோது இங்கே கத்தோலிக்க மதம் அறிமுகப்படுத்தப்படவில்லை. இங்கே செயிண்ட் சியேரன்   சந்திந்த  Diarmait Uí Cerbaill அவர்களின் உதவியுடன் இந்தப் பகுதியில் முதல் தேவாலயத்தைக் கட்டினார். முதலில் கட்டப்பட்ட தேவாலயம் சிறிய வடிவில் மரத்தால் அமைக்கப்பட்ட வடிவினைக் கொண்டது. அதனைச் சுற்றி சிறிய சிறிய தேவாலயங்களை இவர் அமைத்தார். Diarmait Uí Cerbaill இப்பகுதியில் செல்வாக்குள்ளவராகத் திகழ்ந்தார்.  கத்தோலிக்க மடத்தை அமைத்து Diarmait Uí Cerbaill யை அயர்லாந்தின் முதல் அரசராக  பட்டம் சூட்டி அமர்த்தினார் செயிண்ட் சியேரன் . அதே ஆண்டில் தனது 33வது வயதைடையும் முன்னரே வெகுவாக அப்பகுதியைத் தாக்கிய ப்ளேக் நோயினால் உடல் நலிவுற்று, செயிண்ட் சியேரன் அவர்கள் மறைந்தார். இவரது சமாதி இவர் அமைத்த முதல் தேவாலயத்தின் கீழேயே அமைக்கப்பட்டது.

இந்தத் தகவலைக் கேள்விப்பட்டபோது  தமிழக மன்னர்கள் அல்லது சாதுக்களுக்காக அமைக்கும் பள்ளிப்படை கோயிலும் நினைவாலய அமைப்பும் என் நினைக்கு வந்தது. சமய குருமார்களின் சமாதிக்கு மேல் ஆலயம் எழுப்பும் ஒரு பண்பு 6ம் நூற்றாண்டு வாக்கில்  அயர்லாந்திலும் இருந்திருக்கின்றது. இதனை என்ணிப் பார்க்கும் போது பொதுவாகவே மக்கள் சமய நெறியில் உயர்ந்தோர் இறக்கும் போது அவர்களின் பூத உடலை புதைத்து அவர் நினைவாக அவர்கள் வழிபடும் தெய்வ வடிவங்களை வைத்து போற்றி வழிபடுவது அந்த சமயப் பெரியவருக்கு அவர்கள் வழங்கும் மரியாதையாகக் கருதுகின்றனர் என்பதையும் உலகின் பல சமூகங்களில் இத்தகையச் சிந்தனை ஒற்றுமை மனிதர்களுக்கிடையே சமய, இன பேதம் கடந்து எழுவதையும் காண முடிகின்றது. 

அடிப்படையில் மனிதர்கள் எல்லோருக்குமே இன மொழி வேறுபாட்டுடன் அவர்கள் எங்கேயிருந்தாலும் கூட மனிதர்களுக்கிடையே பற்பல ஒற்றுமைகள் இருப்பதை மானுடவியல் கூறுகளைக் கவனிக்கும் போது தெளிவாகக் காண முடிகின்றது. 

க்ளோன்மெக்னோய்ஸ் மடம் பல இன்னல்களுக்கு ஆளானது என்பதை இங்குள்ள அருன்காட்சியகத்தின் குறிப்புக்களிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.  தொடர்ந்து ப்ளேக் நோய் தாக்கியதால் மடத்தில் தங்கியிருந்த மாணவர்களில் பலர் நோயினால் வாடி மறைந்தனர். ஆயினும் இந்த மடம் 8ம் நூற்றாண்டு தொடங்கி 12ம் நூற்றாண்டு வரை விரிவான வளர்ச்சி கண்டது. இப்பகுதியை ஸ்கேண்டினேவியாவிலிருந்து வந்த வைக்கிங் என்று ஆங்கிலத்தில் நாம் குறிப்பிடும் கடற்கொள்ளையர்கள் குறைந்தது ஏழு முறையாவது தாக்கியுள்ளனர்.  அதுமட்டுமல்லாது ஐரிஷ் படை 27 முறை இப்பகுதியில் தாக்குதல் நடத்தியும் இது வீழ்ச்சியடையவில்லை. கி.பி.9ம் நூற்றாண்டு வாக்கில் இங்கிருந்த மரக்கட்டிடங்கள் மாற்றம் செய்யப்பட்டு இங்கு கற்கோயில்கள் உருவாக்கப்பட்டன.  

இந்த மடாலயம் இருக்கும் பகுதியில் ஒரு கேத்திட்ரல், ஏழு தேவாலயங்கள், 3 பெரிய கற்சிலுவைகள் மற்றும் இறந்தோரின் சமாதிகள் ஆகியன இருக்கின்றன. இங்குள்ள சமாதிகளில் கேலிக் குறியீடுகள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். 

இப்பகுதியில் இருக்கும் Cross of the Scriptures அயர்லாந்தின் மிக முக்கிய வரலாற்றுச் சின்னங்களுள் ஒன்றாகத் திகழ்வது. இதன் அசல் வடிவம் அங்கேயே உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வெளிப்புறத்தில் அதன் மாதிரி வடிவம் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 

இந்தச் இலுவை ஏனைய கத்தோலிகக் சிலுவையிலிருந்து மாறுபட்ட வடிவத்தைக் கொண்டது. 4 மீட்டர் உயரம் கொண்டது.  கற்சிலுவையான இதில் ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் காட்சிகளும், ஏசு கிறிஸ்து இறுதியாக தன் நம்பிக்கையாளர்களுடன் உணவு உண்ணும் காட்சியும் பின்னர் ஏசு கிறிஸ்து மீண்டெழும் காட்சியும் செதுக்கப்பட்டுள்ளன. கேலிக் குறியீடுகளும் அலங்காரங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.

எங்கள் சுற்றுலா பயணிகள் குழு இங்கே சென்றடைந்த போது  மாலை 4 மணியாகியிருந்தது. முதலில் இங்கிருக்கும் அருங்காட்சிகயத்தினுள் சென்று அங்கே க்ளோன்மெக்னோய்ஸ் கத்தோலிக்க சமய  மடம் பற்றிய வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொண்டோம். பின்னர் வெளியே வந்து க்ளோன்மெக்னோய்ஸ் மடத்தின் தேவாலயங்கள், சமாதிகள் ஆகியனவற்றைப் பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

க்ளோன்மெக்னோய்ஸ் மடம் இருக்கும் பகுதி மிக ரம்மியமானது. தூரத்தில் ஓடும் ஓடைகள்... புல் மேயும் அழகிய பசுக்கள்... குளிர்ச்சியான காற்று என மனதிற்கு பசுமையை வாரி வழங்கியது இயற்கை சூழல். அப்பகுதில் ஏறக்குறைய இரண்டு மணி நேரங்களைச் செலவிட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டோம். 

அன்றைய மாலை எங்களுக்கு கோல்வேய் நகரிலேயே தங்குவதற்கான  வசதி சுற்றுலா நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேருந்தில் ஏறி அமர்ந்ததும்  எப்போது தங்கும் விடுதி வரும் என்று ஆவலுடன் சாலையை நோக்கிக் கொண்டிருந்தேன். எங்கள் பேருந்தும் சற்று நேரத்தில் அழகியதொரு கிராமப்பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியின் வாசலில் வந்து நின்றது.

தொடரும்...
சுபா

சொ. வினைதீர்த்தான்

unread,
May 11, 2016, 12:58:37 AM5/11/16
to mint...@googlegroups.com
Arumai.

--

dorai sundaram

unread,
May 11, 2016, 2:53:18 AM5/11/16
to mintamil
அருமையான பதிவு சுபா அவர்களே.
சுந்தரம்.

Suba

unread,
May 11, 2016, 4:43:36 PM5/11/16
to மின்தமிழ், Dr.Subashini
13. கோல்வே நகரில்

காலையில் டப்ளின் நகரிலிருந்து தொடங்கிய எங்கள் பயணம் பின்னர் க்ளோன்மெக்னோய்ஸ் மடம் சுற்றிப்பார்த்தல் என்பது மட்டுமல்லாது இடையில்  அயர்லாந்தின் மேலும் சில புற நகர்ப்பகுதிகளையும் மதிய உணவு வேளையில் பார்க்கும் வாய்ப்புடன் அமைந்திருந்தது.
 
 நாள் முழுதும் பயணம் என்ற நிலையில், தங்கும் விடுதிக்கு வந்த போது மிகுந்த களைப்புடன் எல்லோரும் இருந்தாலும் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு நாங்கள் தங்கியிருந்த பகுதியில் சுற்றிப் பார்த்து வரலாம் என்ற எண்ணமும் இருந்ததால் மாலை ஏழு மணி வாக்கில் மீண்டும் சந்தித்து வெளியே சேர்ந்தே எல்லோரும் செல்வோம் எனப் பேசிக் கொண்டு ஓய்வெடுக்கச் சென்று விட்டோம். 

எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்கும் விடுதி மிக ரம்மியமான ஒரு கிராமப்பகுதியை ஒட்டிய சிறு நகரில் அமைந்திருந்தது. அருமையான நான்கு நட்சத்திர தங்கும் விடுதி அது. மாலையில் மீண்டும் அனைவரும் சந்தித்து மாலை உணவு உண்ண சேர்ந்து நடந்தே சென்றோம்.

அந்தப் பயணக்குழுவில் வந்திருந்த ஏனைய அனைவருமே ஜெர்மானியர்கள் தாம். அவர்களுடன் பல தகவல்களைப் பேசிக் கோண்டு சென்று மாலை உணவு சாப்பிட்டு வந்த போது ஒருவரைப் பற்றி மற்றொருவர் மேலும் அறிந்து கொள்ள முடிந்தது. 

மறுநாள் காலை உணவை முடித்துக் கொண்டு மீண்டும் பயணமானோம். 

கால்வே நகர் அழகியதொரு நகரம். டப்ளின் போல வாகன நெரிசல் இல்லையென்றாலும் இது அயர்லாந்தின் முக்கிய ஒரு வர்த்தக நகரம் என்ற சிறப்பை பெற்றது.கேல்டாஹ்ட் (Gaeltacht)  பகுதியின் தலைநலைகர் என்ற சிறப்பும் பெற்றது. கேல்டாஹ்ட் பகுதி ஐரிஷ் மொழி பேசும் மக்கள் வாழும் பகுதி என அடையாளப்படுத்தப்படும் பகுதி. கலை, இசை, ஓவியம் என்ற வகையில் பிரசித்தி பெற்ற நகரம் இது என்பதும் கூடுதல் செய்தி.

13ம் நூற்றாண்டில் ஆங்லோ-நோர்மன் டி பர்கோ குடும்பத்தினர் இந்த நகரத்தைக் கைப்பற்றிய பின்னர் நோர்மன் இனக்குழுவினரின் ஆதிக்கத்தில் இப்பகுதி வந்தது. இப்பகுதியை பதினான்கு குடும்பங்கள் பிரித்து ஆட்சி செய்ததால் இது City of tribes என்றும் குறிப்பிட்டு அழைக்கப்பட்டது.15ம் நூற்றாண்டிலிருந்து 17ம் நூற்றாண்டு காலகட்டத்தில் அயர்லாந்தின் ஏனைய பகுதி ஆட்சியாளர்கள் இங்கிலாந்தின் ஆட்சிக்கு எதிராகப் போர் கொடி உயர்த்திய போது  கால்வே எந்த எதிர்ப்பையும் காட்டாமல் ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு உட்பட்டு அமைதியாக இருந்தது.   பின்னர் படிப்படியான வளர்ச்சியை பெற்றதோடு அண்டை நாடுகளான ஸ்பெயின், பிரான்சு போர்த்துக்கல் ஆகிய நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பை விரிவு படுத்தி இந்த நகரம் தனித்துவத்துடன் செழித்து வளர்ந்தது, 

அன்றைய நாளில் காலையில் கால்வே நகரில் ஒரு மணி நேரம் சுற்றிப்பார்க்க எங்களுக்கு பயண வழிகாட்டி அனுமதி அளித்திருந்தார்.  நகரின் மையப்பகுதியில் நடந்து சென்று கடைவீதிகளில் சிலர் நினைவுச் சின்னங்களை வாங்கிக் கொண்டனர். நான் மனதிற்குப் பிடித்த காட்சிகளை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.

எங்கள் பேருந்து தொடர்ந்து கில்மோர் அபேய் (Kylemore Abbey)  மாளிகையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.

தொடரும்

சுபா

Suba

unread,
May 17, 2016, 5:10:18 PM5/17/16
to மின்தமிழ், Dr.Subashini
14. கில்மோர் அபேய் (Kylemore Abbey) 

கோல்வே மாவட்டத்தில் உள்ள கோன்னிமாரா நகர் கில்மோர் அபேய் மாளிகைக்காவே புகழ்பெற்றது என்பது மிகையன்று. ஆங்கில திரைப்படங்களில் நாம் காணும், பெரும் காட்டுக்குள் இருக்கும் மனிதர்கள் அற்ற மாளிகை போன்று தான்  எனக்கு இந்த மாளிகையைப் பார்த்த முதல் கணம் எண்ணம் தோன்றியது. சுற்றிலும் பச்சை பசேல் என மரங்கள் சூழ ஒரு பெரிய ஏரியைப் பார்த்த வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது இந்த கில்மோர்  மாளிகை. 

இது மாளிகை என்ற போதிலும்கன்னிகாஸ்திரிகள் மடம் என்பது தான் இதற்குப் பொருந்தும்.  இந்த மாளிகையை முதலில் தனக்காக கட்டிக் கொண்டவர் மிட்சல் ஹென்ரி என்ற பெரும் பணக்கார மருத்துவர். இவர்களது குடும்பம் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் துணி வியாபாரத்தில் ஈடுபட்டு பெரும் லாபத்தை ஈட்டியவர்கள். மிட்சல் ஹென்ரியும் அவர் மனைவி மார்கரெட்டும் இப்பகுதியில் இந்த நிலத்தை தமக்காக வாங்கிய பின்னர் இந்த மாளிகையை கட்டி அமைத்தனர். இதன் அருகாமையில் விக்டோரியன் ஸ்டைல் பூந்தோட்டம் ஒன்றையும் இவர்கள் அமைத்தனர்.  இந்தப் பகுதியை வடிவமைக்க 300,000 மரங்களையும் செடிகளையும், அதிலும் இப்பகுதியில் வளரக்கூடிய தன்மை கொண்டவையாக தேர்ந்தெடுத்து வாங்கி அக்காலத்திலேயே அதாவது 1880ம் ஆண்டுகளில் இவர்கள் இம்மாளிகையையும் நந்தவனத்தையும் அமைத்து உருவாக்கினர் என்பது வியப்பாக இருக்கின்றது அல்லவா?

ஏறக்குறை 40,000 அடி பரப்பளவைக் கொண்டது இந்த மாளிகை. இதில் 70 அறைகள் உள்ளன.  ஒவ்வொரு அறையும் பிரத்தியேகமான  அலங்காரத்துடன் இன்னமும் இருக்கின்றன. தனது மனைவி மார்கரெட் மறைந்த போது அவர் நினைவாக ஹென்ரி ஒரு தேவாலயத்தையும் அருகிலேயே அமைத்திருக்கின்றார். பின்னர் இவர் இங்கிலாந்து மாற்றலாகி வந்து விட்டார்.

அதற்குப்பின் மான்செஸ்டர் பிரபுவும் அவரது மனைவியும் இந்த மாளிகையை வாங்கினாலும் அதீத கடனால் அவர்கள் இந்த மாளிகையை விற்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. 1920ம் ஆண்டில் அயர்லாந்தின் பெனடிக்டன்  கன்னிகாஸ்திரிகள் இந்த மாளிகைய வாங்கினர். இந்த பெனடிக்டன் கன்னிகாஸ்திரிகல் பெல்ஜியம் நாட்டில் உள்ள ஒய்ப்ரெஸ் நகரில் 1600கள் தொடங்கி பெண்களுக்கான கன்னிகாஸ்திரிகள் பாடசாலையை நடத்தி வந்தனர். முதலாம் உலகப்போர் காலகட்டத்தில் பெரும் சேதத்தை இவர்கள் சந்திக்கவே அமைதியை நாடி ஓரிடத்தை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு இந்த இடம் புகலிடமாக அமைந்ததால் இப்பகுதியை மேன்சஸ்டர் பிரபுவிடமிருந்து வாங்கிக் கொண்டு இங்கே கன்னிகாஸ்திரிகள் மடத்தையும் கல்விக்கூடத்தையும் அமைத்தனர். 

பெனடிக்டன் கன்னிகாஸ்திரிகள் தங்கள் மடத்தில்  அனைத்துலக உயர்கல்வி மையம் ஒன்றை தொடங்கினர்.  இந்த மாளிகையின் சில அறைகளை வகுப்பறைகளாக மாற்றினர். 

அக்காலகட்டத்தில் இரண்டு இந்திய இளவரசிகள் இங்கே வந்து கல்வி கற்றிருக்கின்றனர் என்ற செய்தியை புகைப்படத்தோடு இந்த மாளிகையில் பார்த்த போது ஆச்சரியப்பட்டேன்.   1920ம் ஆண்டில்  இந்திய இளவரசர் ரஞ்சிட்சிங்ஜி அயர்லாந்தின் பாலினாஹிச் மாளிகையை வாங்கினார். மன்னர் ரஞ்சித்தின் மகள்களான இளவரசி ராஜேந்திர குமாரியும் இளவரசி மன்ஹேர் குமாரியும் இந்த கில்மோர் மாளிகை கன்னிகாஸ்திரிகள் கல்விக்கூடத்தில் உயர்கல்வி படிக்க 1923ம் ஆண்டில் இங்கே வந்தனர்,  1930ம் ஆண்டில் இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இங்கே வைத்திருக்கின்றார்கள். 

இன்றைய சூழலில் கில்மோர் மாளிகையை சுற்றுப்பயணிகள் வந்து பார்க்க அனுமதித்திருக்கின்றனர். அதற்கு தனிக்கட்டணமும் வசூலிக்கின்றனர்.

எங்களை பேருந்து இங்கே அழைத்து வந்த சமயம் மழைத்தூரல் ஆரம்பித்து விட்டது. ஆக முதலில் மாளிகைக்குச் சென்று அதன் வரலாற்றை அறிந்து கொள்வதில் சிறிது நேரம் செலவிட்டோம். அதன் பின்னர் தன் மனைவிக்காக ஹென்ரி கட்டிய தேவாலயத்தைப் பார்த்து அங்கே சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு பூங்கா பகுதிக்குச் சென்றோம்.

மழைத்தூரல் விடுவதாக இல்லை. ஆயினும் மழை இந்த பூங்காவை ரசிப்பதற்கு தடையாக இருக்ககூடாது என்று மழை ஜேக்கட் போட்டுக் கொண்டு பூங்காவிற்குள் இறங்கி நடந்து அதன் அழகை ரசித்தேன். ஆங்காங்கே புகைப்படங்களும் எடுத்துக் கொண்டேன்.
 
அன்றைய நாளில் நாங்கள் நான்கு மணி நேரங்களை கோல்வே நகரில் செலவிடலாம் என்றும் விரும்புவோர் அங்கேயே மதிய உணவும் சாப்பிடலாம் என்றும் எங்கள் பயண வழிகாட்டி கூறவே எங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிவடையும் நேரம் வரவே பேருந்துக்கு விரைந்து சென்று அடுத்தை இலக்கை நோக்கி பயணமானோம்.

Suba

unread,
May 18, 2016, 5:30:54 PM5/18/16
to மின்தமிழ், Dr.Subashini
15 வண்ணக் கோலங்கள்

மதியம் உணவு வேளையைக் கடந்து ஏறக்குறை இரண்டரை மணி வாக்கில் கோல்வே நகரின் மையப்பகுதியை வந்தடைந்தோம். மழைத்தூரல் இன்னமும் இருந்ததால் அனைவருமே மழைக்கோட் அணிந்து கொண்டும் குடைகளை ஏந்திக் கொண்டும் நடக்க வேண்டியதாக இருந்தது. எங்கள் பயண வழிகாட்டி அயர்லாந்தில் வருஷம் முழுவதும் மழை பெய்வதால் எப்போதும் குடையுடனே செல்வதுதான் உதவும் என்று கூடுதலாக அழுத்தம் தந்து சூழலை விளக்கினார்.

சுற்றிப்பார்க்கச் செல்லும் போது எப்போதுமே நல்ல வெயிலாக இருந்தால் பார்க்க வேண்டியனவற்றைப் பார்க்கவும் புகைப்படம் எடுக்கவும் ஏதுவாக இருக்கும். ஆனால் மழை பெய்ய ஆரம்பித்து விட்டாலோ மழையிலிருந்து நம்மை நனையாமல் பார்த்துக் கொள்ள கவனம் எடுப்பதில், பார்க்க வேண்டியனவற்றில் பலவற்றை தவற விடக்கூடிய சந்தர்ப்பமும் நிகழ்ந்து விடும். இது சற்று கவலையையும் தரத்தானே செய்யும்.

என்னுடன் வந்த ஏனைய ஜெர்மானிய பயணிகள் பேருந்துப் பயணத்தின் போதே மழையை நினைத்து புலம்பிக் கொண்டே வந்தனர். "இந்த வாரத்தில் சுற்றுலா பதிவு செய்தது பெரிய தவறாகிவிட்டது" என பலர் தங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டே வந்தனர். இந்தக் குறைபாடுகளைக் கேட்ட எங்கள் பயண வழிகாட்டி சொன்னார். ஜெர்மானிய  மக்களின் இயல்பு, எப்போதும்,  "இன்னும் கூட சரியாக செய்திருக்கலாமோ" என்றே இருக்கும். ஆனால் அயர்லாந்து மக்களின் இயல்போ இதற்கு மாற்றாக " இதற்கு மேல் மோசமாக இல்லாமல் இருக்கின்றதே - இதுவே பரவாயில்லை" என்பதாக இருக்கும் என்று சொன்னபோது ஏனைய ஜெர்மானிய சுற்றுப்பயணிகள் இதனை ஒப்புக் கொண்டனர். 

ஆக "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்ற பழமொழிக்கு எற்ப மனதில் எல்லா சூழலையும் ரசிக்க ஆரம்பித்து விட்டால் ஏமாற்றம் நம்மை அதிகமாகத் தாக்காது என்பதை இந்த இரண்டு சமூகங்களுக்கிடையேயான அடிப்படை குண நலன்கள் பற்றிய விளக்கம் நன்கு புரியவைப்பதை நேரிலேயே அறிந்து கொண்டேன்.

kooல்வே நகரில் ஒரு உணவகத்தில் மதிய உணவை சப்பிட்டு விட்டு சாலையோரத்தில் நடந்து சென்று ரசித்துக் கொண்டிருந்தோம். டப்ளினை விட இங்கே ஒவ்வொரு கடையும் வீடுகளும் வன்ண வண்ண கோலத்தில் கண்களைக் கவர்வதாக அமைந்திருந்தன.

வீட்டுக்கு பூசப்பட்ட வர்ணங்கள் மிகக் கவர்ச்சியான வர்ணங்களாகவும் சாலையில் போவோரைத் திரும்பிப்பார்க்க வைக்கும் வகையிலும் இருந்தன. சில கட்டிடங்களில் ஓவியங்கள் வரைந்து அவை சாலையில் வருவோர் போவோர் நின்று பார்த்துச் செல்லும் வகையில் அமைந்திருந்ததையும் கவனித்து ரசித்தேன்.

கால்வே நகரிலே ஒரு இந்திய உணவகமும் இருக்கின்றது. அங்கே வரும் சுற்றுபயணிகளுக்காக இது இருக்குமா அல்லது இங்கே கணிசமான எண்ணிக்கையில் இந்தியர்களும் இருப்பார்களா என்ற கேள்வி மனதில் எழாமல் இல்லை. ஆயினும் இங்கிலாந்தைப் பொறுத்தவரை இந்திய உணவு ஆங்கிலேயர்களின் அன்றாட உணவில் இணைந்து ஒன்றாக விட்டது என்பதும் வீட்டிலேயே கூட ஆங்கிலேய மக்கள் இந்திய உணவுகளை சமைத்து சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது என்பதையும் நான் அறிந்திருந்தேன்.  ஆனால் அயர்லாந்தில் இன்னமும் அந்த அளவிற்கு இந்திய உணவு பயன்பாடு விரிவடைந்திருக்குமா என யோசனை இருந்தது. எங்கள் பயண வழிகாட்டியிடம் கேட்ட போது பெரும்பாலும் இங்கிலாந்திலிருந்து வரும் ஆங்கிலேயர்கள் இந்திய உணவுகளுக்குச் செல்வது வழக்கம் என்றும் அயர்லாந்து ஐரீஷ் மக்கள் இன்னமும் இந்திய உணவுக்கு அதிக அளவில் அறிமுகம் பெறவில்லை என்பதையும் அறிந்து கொண்டேன்.

சாலைகளின் பல பகுதிகளைச் சுற்றிப்பார்த்த பின்னர் ஒரு நல்ல ரெஸ்டாரண்டில் அமர்ந்து காப்பி சாப்பிட்டு விட்டு பேருந்து இருக்கும் இடம் நோக்கி வரும் போது மாலை ஆறு ஆகியிருந்தது. அன்றைய நாள் நல்ல முறையில் திருப்திகரமாக அமைந்த மகிழ்ச்சியில் மறு நாள் நிகழ்ச்சிகளை எண்ணி மகிழ்ந்திருந்தது என் மனம்.

தொடரும்

சுபா

Suba

unread,
May 20, 2016, 4:01:25 PM5/20/16
to மின்தமிழ், Dr.Subashini
16. அயர்லாந்து உணவு வகை

அயர்லாந்தில் இருந்த முதல் மூன்று நாட்களும் எனக்கு ஏறக்குறைய உள்ளூர் உணவு பற்றிய சிறு அறிமுகம் ஆகியிருந்தது. அதில் நான் மிக சலித்துக் கொண்ட உணவு என்றால் அது காலை உணவு தான். எப்போதும் வெள்ளை ரொட்டித்துண்டுகள், அவற்றிற்கான பட்டர், ஜாம், அவித்த பீன்ஸ், அவித்து எண்ணெயிலோ நெய்யிலோ வாட்டிய உருளைக்கிழங்குகள்.. என்றே மூன்று நாட்களைக் கழித்திருந்தேன். அசைவப்பிரியர்களுக்குப் பன்றி இறைச்சியைப் பதப்படுத்தி சமைத்தும் வைத்திருந்தார்கள். இது  இங்கிலாந்தின் காலை உணவேதான். அயர்லாந்திலும் இது ஒட்டிக் கொண்டு விட்டது போலும். முதல் நாள் சாப்பிடவே பிடிக்கவில்லை என்றாலும் அடுத்தடுத்த நாட்கள் சலிப்பில்லாமல் ஏதோ கடமைக்குச் சாப்பிடுகின்றோம் என்று சாப்பிட ஆரம்பித்து விட்டேன். பிடிக்காத மனிதர்களைக் கூட சில வேளைகளில் சில காரணங்களுக்காக நட்பு வட்டத்தில் ஏற்றுக் கொள்கின்றோமே.. அப்படித்தான்!

ஐரீஷ் மக்கள் விரும்பிச் சாப்பிடும் பாரம்பரிய உணவுகள் சிலவற்றை பற்றி அறிந்து கொண்டேன். அவற்றைப் பற்றி இன்றைய பதிவில் சொல்கிறேன்.

மிக முக்கிய உணவாக அமைவது கேபேஜோடு சேர்த்து சமைத்த பன்றி இறைச்சி சமையலும் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி, காரட் போட்டு தயாரிக்கும் சூப்பும் என்று சொல்லலாம்.  அயர்லாந்தில் விஸ்கியும் கின்னஸ் மதுபானமும் புகழ்பெற்றவை என்பதால் சமையலிலும் மதுபானத்தைக் கலந்து சமைக்கும் வழக்கம் இந்த பாரம்பரிய உணவில் உண்டு.

ஏறக்குறைய ஒவ்வொரு நாள் சமையலிலும் ஏதோ ஒரு வகையில் உருளைக்கிழங்கு இடம்பெறுவதையும் பார்த்தேன்.  அவித்த உருளைக்கிழங்கை அப்படியே, அல்லது அவித்த உருளைக்கிழங்கை நெய்யில் வாட்டியோ, அல்லது எண்ணையில் பொரித்தோ, அல்லது அவித்த உருளைக்கிழங்கை மெண்மையாக அரைத்தோ அல்லது ஃப்ரென்ச் ப்ரைஸ் போன்றோ... உருளைக்கிழங்கு இல்லாத சமயலில்லை என்ற வகையில் ஐரீஷ் சமையல் இருக்கின்றது.  ஆசிய உணவு வகையில் இருப்பது போல அரிசி முக்கிய உணவு அல்ல என்பதால் அரிசிக்கு பதிலாக உருளைக்கிழங்கு அந்த இடத்தை நிரப்பி விடுகின்றது.

நான்காம் நாள் காலையில் கோல்வேயிலிருந்து நாங்கள் புறப்பட்டு (County Limerick)  லிமெரிக் மாவட்டம் நோக்கி பயணித்தோம். போகும் வழியில் சில தேவாலயங்களையும் கோட்டைகளையும் பார்த்துக் கொண்டே சென்றோம்.ஓரிடத்தில் சந்தை போட்டிருந்தார்கள் அங்கே தான் எங்களுக்கு மதிய உணவு ஏற்பாடாகியிருந்தது. அது உழவர் சந்தை. அங்கே சில பெண்மணிகள் சமையல் செய்து கொண்டு வந்து விற்பனை செய்து கொண்டும் இருந்தனர்.

நமக்கு நன்கு பழக்கமான சமோசா வகையில் சிலணவு பதார்த்தங்கள் கிடைத்தன அவற்றுள் கீரையை வைத்தும் உருளைக்கிழங்கை சமைத்து வைத்தும் தயாரித்திருந்தார்கள். பார்க்கும் போதே ஆவலைத்தூண்டுவதாக இருந்தமையால் அதில் சில வாங்கிக் கொண்டேன். சுவை நன்றாகவே இருந்தது. 

அயர்லாந்தில் செம்ம்மறி ஆடுகள் மிக அதிகம் என்றும் முன்னர் குறிப்பிட்டிருந்தேன். மாடுகளும் அதிகம் என்பதால் இங்கே பால், சீஸ், தயிர்  போன்ற பதார்த்தங்களுக்கும் குறைவேயில்லை. செம்மறி ஆட்டின் இறைச்சியையும் உள்ளூர் மக்கள் சமைத்துச் சாப்பிடுகின்றனர்.

எனக்கு மாலை உணவும் மதிய உணவும் பெரும்பாலும் உருளைக்கிழங்கு வகையறாக்கள், கீரை காய்கறி பதார்த்தங்கள், சூப் என்பதோடு இத்தாலிய உணவுகளையும் சாப்பிட்டதால் சமாளிக்க முடிந்தது.

இத்தாலிய உணவான பாஸ்டா, ஸ்பெகட்டி போன்றவை சற்று ஆசிய உணவுகளின் சுவையை ஒத்திருப்பதால் இத்தகைய உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டதால் பயணத்தில் உணவுக்குக் கஷ்டப்படும் நிலை  ஏற்படவில்லை.  அயர்லாந்தில் சைவ உணவுக்காரர்களுக்கு உணவு விஷயத்தில் பிரச்சனை இல்லை. எல்லா உணவகங்களிலும் நல்ல காய்கறி உணவுகள் நன்கு கிடைக்கின்றன.

தொடரும்..

சுபா 

Suba

unread,
May 24, 2016, 12:37:03 PM5/24/16
to மின்தமிழ், Dr.Subashini
17. ஈமச்சடங்கு கல்திட்டைகள்

மானுடவியல் கூறுகளை ஆராய முற்படும் போது உலகமெங்கிலும் உள்ள மக்களிடையே பல்வேறு ஒற்றுமைக் கூறுகள் இருப்பதைக் கண்டறிய முடிவதோடு மக்கள் சிந்தனைகளிலும் பல விசயங்களில் ஒற்றுமை இருப்பதைக் காண்கின்றோம். அடிப்படையில் எங்கிருந்தால் என்ன? மனித இனம் என்பது, பௌதிக கோட்பாடுகளின் அடிப்படையில் ஹோமோ செப்பியன்கள் என்ற இனத்தினிலிருந்து கிளைத்தவர்கள் தானே.  

இப்படி பொதுக்கூறுகளை, அதிலும் பண்டைய மக்களின் வாழ்வியல் கூறுகளில் காணும் போது, குறிப்பாக ஒரு சில விசயங்களில் இருக்கின்ற ஒற்றுமைகள் என்பன, இவ்வகை ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோருக்கு ஆச்சரியத்தை அளிக்கத்தவருவதில்லை, எனது பல பயணங்களிலும் சரி, அருங்காட்சியகத் தகவல் சேகரிப்புக்களிலும் சரி, மானுடவியல் சார்ந்த அருங்காட்சியகங்களில் பொதுவாக வாழ்விடங்கள் அமைத்தல், வாழ்வியலில் அடங்கும் பல்வேறு சடங்குகள், ஈமக்கிரியைச் சடங்குகள், விவசாயம், இறப்புக்குப் பின் மனித உடல் என்பன போன்ற விசயங்களில், பல ஒற்றுகள் பல இனங்களுக்கிடையே இருப்பதைக் கண்டிருக்கின்றேன். அப்படி ஒரு ஆச்சரியத்தை அயர்லாந்தின் லிமெரிக் மாவட்டத்திற்குச் சென்ற போது நேரில் பார்த்து வியந்தேன்.

எங்களின் பயணத்தில் அடுத்ததாக அமைந்தது லிமெரிக் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கற்கால ஈமச்சடங்கு கல்திட்டைக்கான பயணம்.  போல்னப்ரோன் (Poulnabrone) என அழைக்கப்படும் இந்தச் சின்னம் அயர்லாந்தின் பாதுகாக்கப்படும் அறிய தொல்பொருள் சின்னங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது. 

அயர்லாந்தின் மேற்குப் பகுதியில் பரவலாக இவ்வகையான ஈமச்சடங்கு கல்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் 90 கல்திட்டைகள் அடையாளம் காணப்பட்டு தொல்பொருள் சின்னங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன. இதே போன்ற கல்திட்டைகள் மேற்கு ஐரோப்பாவிலும் இருப்பதாகவும்  இவை நியோலித்திக் காலத்தைச் சேர்ந்த ஈமச்சின்னங்கள் என்றும் அங்கிருந்த தகவல் பலகையிலிருந்து அறிந்து கொண்டேன்.  

இவ்வகை கல்திட்டைகளின் வடிவங்கள் குறிப்பிட்ட வகையில் அமைக்கப்படிருக்கும். இரண்டு நிற்கும் தூண்கள். அதற்கு மேலே படுக்க வைத்தார்போன்ற அமைப்பில் கூரை போல ஒரு கல்திட்டை வைக்கப்பட்டிருக்கும். முன் பகுதியில் வாசல் போன்ற அமைப்புடன் இது காட்சியளிக்கும். இறந்தவரின் உடல் இதன் கீழ் புதைக்கப்பட்டு வைக்கப்படும். சமாதி போன்ற ஒரு அமைப்புத்தான் இது! 

Inline image 3

இவ்வகையான சமாதிகளில் இறந்தவர் உடலை வைத்துப் புதைக்கும் போது அங்கே அவருக்குப் பிடித்த, அவர் பயன்படுத்திய, அவர் சென்றிருக்கும் புதிய உலகத்தில் அவர் பயன்படுத்துவார் என்ற நம்பிக்கையில் வைக்கப்படும் பொருட்கள் என அனைத்தும் சேர்த்து வைத்துப் புதைக்கப்படுவது இதன் அடிப்படை அம்சம். இதே ஈமச்சடங்கு கூறுகள் எகிப்து, சூடான், ஆப்பிரிக்கா, இந்தியா, ஐரோப்பா,  என நமக்குக் கிடைக்கின்ற இவ்வகை ஈமச்சடங்கு சின்னங்களின் எச்சங்களின் வழி அறிய முடிகின்றது. ஏறக்குறைய எல்லா இனங்களிலுமே இவ்வகையான சமாதிகளுக்கு வந்து இறந்தோரை நினைத்து வழிபடுவது என்பதும் வழக்கத்தில் இருக்கின்றது என்பதும் வியப்பளிக்கும் செய்தியே. 

Inline image 2

போல்னப்ரோன் கல்திட்டையை அயர்லாந்து அரசு பாதுகாக்கப்பட வேண்டிய புராதனச்சின்னமாக அறிவித்து இப்பகுதியை முழுமையாகப் பாதுக்காத்துள்ளது. இப்பகுதியில் கல்திட்டைகள் என்றால் என்ன, இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வு நிலை, நியோலித்திக் கால சூழல், இங்கு வந்து குடியேறிய மக்கள், ஈமச்சடங்குகள் பற்றிய விரிவான விளக்கம் ஆகிய தகவல்கள் காட்சிபடுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

இது சுற்றுப்பயணிகள் வந்து பார்த்துச் செல்லும் இடமாக இருப்பதால் இங்கே சில கடைகளும் இருக்கின்றன. அங்கே இரும்பு, வெள்ளி ஆகிய உலோகங்களில் காதணிகள், அலங்காரப்பொருட்கள் ஆகியன செய்யும் ஒரு பகுதிக்குசென்றேன். அங்கே கெல்ட் குறியீடு ஒன்றினை தேர்ந்தெடுத்து, அதில் இரும்பில் ஒரு காதணி செய்ய வைத்து வாங்கிக் கொண்டேன்.  ஏறக்குரைய 15 நிமிடத்தில் நான் தேர்ந்தெடுத்த வடிவத்தில் ஒரு ஜோடி அழகான காதணி  ஒன்றை அந்த வியாபாரி எனக்கு செய்து கொடுத்தார்.

Inline image 1

இங்கு நான் கண்ட கல்திட்டைகள் போன்ற கற்காலச் சின்னங்களை நான் 2012ம் ஆண்டு தமிழகத்தின் கிருஷ்ணகிரிக்கு அருகில் உள்ள மல்லச்சத்திரம் பகுதிக்குச் சென்றிருந்தபோது பார்த்தேன். அயர்லாந்தின் லிமெரிக் மாவட்டத்தில் நான் பார்த்த கல்திட்டை வடிவத்தை ஒத்த வகையிலேயே இங்கே மல்லச்சத்திரத்திலும் சிறு வேறுபாட்டுடன், ஆனால் அதே வடிவில் என, பல கல்திட்டைகள் இங்கே இருக்கின்றன. முன்பு 200க்கும் மேற்பட்ட கல்திட்டைகள் இங்கே மல்லச்சத்திரத்திரத்தில் இருந்திருக்கின்றன. ஆனால் தற்சமயம் ஏறக்குறைய 20 கல்திட்டைகளைத்தான் காணமுடிகின்றது. ஆயினும் கூட இப்பகுதி இன்னமும் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட வேண்டிய புராதனச் சின்னமாக அடையாளம் காணப்படவில்லை என்பதும், இங்கு வந்து போகும் பொதுமக்கள் இக்கல்திட்டைகளைச் சேதப்படுத்தியும் அவற்றின் கூரைகளைப் பெயர்த்துக் கொண்டுபோய தங்கள் வீடுகளில் ஏதாவது ஒரு காரியத்திற்குப் பயன்படுத்துவது என்பது நிகழ்வது வேதனைக்குறியது.

அயர்லாந்தில் வரலாற்று புராதனச் சின்னங்கள் அடையாளம் காணப்பட்டு அவை அந்த நிலத்து மக்களின் வரலாற்றைச் சொல்கின்ற அடையாளமாக மதிக்கப்படுகின்றது. இந்த நிலை இன்னமும் தமிழகத்தில் பெருவாரியாக ஏற்படவில்லை என்பது நிதர்சனம்! இது மாற வேண்டும். தொல்லியல் வரலாற்றுப் புராதனச் சின்னங்கள் முறையாகப் பாதுகாக்கப்பட பெருவாரியான அளவில் வேண்டும் என்பதே எமது அவா!

தொடரும்..
சுபா

2016-05-20 22:01 GMT+02:00 Suba <ksuba...@gmail.com>:
16. அயர்லாந்து உணவு வகை

அயர்லாந்தில் இருந்த முதல் மூன்று நாட்களும் எனக்கு ஏறக்குறைய உள்ளூர் உணவு பற்றிய சிறு அறிமுகம் ஆகியிருந்தது. அதில் நான் மிக சலித்துக் கொண்ட உணவு என்றால் அது காலை உணவு தான். எப்போதும் வெள்ளை ரொட்டித்துண்டுகள், அவற்றிற்கான பட்டர், ஜாம், அவித்த பீன்ஸ், அவித்து எண்ணெயிலோ நெய்யிலோ வாட்டிய உருளைக்கிழங்குகள்.. என்றே மூன்று நாட்களைக் கழித்திருந்தேன். அசைவப்பிரியர்களுக்குப் பன்றி இறைச்சியைப் பதப்படுத்தி சமைத்தும் வைத்திருந்தார்கள். இது  இங்கிலாந்தின் காலை உணவேதான். அயர்லாந்திலும் இது ஒட்டிக் கொண்டு விட்டது போலும். முதல் நாள் சாப்பிடவே பிடிக்கவில்லை என்றாலும் அடுத்தடுத்த நாட்கள் சலிப்பில்லாமல் ஏதோ கடமைக்குச் சாப்பிடுகின்றோம் என்று சாப்பிட ஆரம்பித்து விட்டேன். பிடிக்காத மனிதர்களைக் கூட சில வேளைகளில் சில காரணங்களுக்காக நட்பு வட்டத்தில் ஏற்றுக் கொள்கின்றோமே.. அப்படித்தான்!

தேமொழி

unread,
May 24, 2016, 1:48:54 PM5/24/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

On Tuesday, May 24, 2016 at 9:37:03 AM UTC-7, Suba.T. wrote:
17. ஈமச்சடங்கு கல்திட்டைகள்

மானுடவியல் கூறுகளை ஆராய முற்படும் போது உலகமெங்கிலும் உள்ள மக்களிடையே பல்வேறு ஒற்றுமைக் கூறுகள் இருப்பதைக் கண்டறிய முடிவதோடு மக்கள் சிந்தனைகளிலும் பல விசயங்களில் ஒற்றுமை இருப்பதைக் காண்கின்றோம். அடிப்படையில் எங்கிருந்தால் என்ன? மனித இனம் என்பது, பௌதிக கோட்பாடுகளின் அடிப்படையில் ஹோமோ செப்பியன்கள் என்ற இனத்தினிலிருந்து கிளைத்தவர்கள் தானே.  

இப்படி பொதுக்கூறுகளை, அதிலும் பண்டைய மக்களின் வாழ்வியல் கூறுகளில் காணும் போது, குறிப்பாக ஒரு சில விசயங்களில் இருக்கின்ற ஒற்றுமைகள் என்பன, இவ்வகை ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோருக்கு ஆச்சரியத்தை அளிக்கத்தவருவதில்லை, எனது பல பயணங்களிலும் சரி, அருங்காட்சியகத் தகவல் சேகரிப்புக்களிலும் சரி, மானுடவியல் சார்ந்த அருங்காட்சியகங்களில் பொதுவாக வாழ்விடங்கள் அமைத்தல், வாழ்வியலில் அடங்கும் பல்வேறு சடங்குகள், ஈமக்கிரியைச் சடங்குகள், விவசாயம், இறப்புக்குப் பின் மனித உடல் என்பன போன்ற விசயங்களில், பல ஒற்றுகள் பல இனங்களுக்கிடையே இருப்பதைக் கண்டிருக்கின்றேன். அப்படி ஒரு ஆச்சரியத்தை அயர்லாந்தின் லிமெரிக் மாவட்டத்திற்குச் சென்ற போது நேரில் பார்த்து வியந்தேன்.

எங்களின் பயணத்தில் அடுத்ததாக அமைந்தது லிமெரிக் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கற்கால ஈமச்சடங்கு கல்திட்டைக்கான பயணம்.  போல்னப்ரோன் (Poulnabrone) என அழைக்கப்படும் இந்தச் சின்னம் அயர்லாந்தின் பாதுகாக்கப்படும் அறிய தொல்பொருள் சின்னங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது. 

அயர்லாந்தின் மேற்குப் பகுதியில் பரவலாக இவ்வகையான ஈமச்சடங்கு கல்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் 90 கல்திட்டைகள் அடையாளம் காணப்பட்டு தொல்பொருள் சின்னங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன. இதே போன்ற கல்திட்டைகள் மேற்கு ஐரோப்பாவிலும் இருப்பதாகவும்  இவை நியோலித்திக் காலத்தைச் சேர்ந்த ஈமச்சின்னங்கள் என்றும் அங்கிருந்த தகவல் பலகையிலிருந்து அறிந்து கொண்டேன்.  

இவ்வகை கல்திட்டைகளின் வடிவங்கள் குறிப்பிட்ட வகையில் அமைக்கப்படிருக்கும். இரண்டு நிற்கும் தூண்கள். அதற்கு மேலே படுக்க வைத்தார்போன்ற அமைப்பில் கூரை போல ஒரு கல்திட்டை வைக்கப்பட்டிருக்கும். முன் பகுதியில் வாசல் போன்ற அமைப்புடன் இது காட்சியளிக்கும். இறந்தவரின் உடல் இதன் கீழ் புதைக்கப்பட்டு வைக்கப்படும். சமாதி போன்ற ஒரு அமைப்புத்தான் இது! 

Inline image 3

இவ்வகையான சமாதிகளில் இறந்தவர் உடலை வைத்துப் புதைக்கும் போது அங்கே அவருக்குப் பிடித்த, அவர் பயன்படுத்திய, அவர் சென்றிருக்கும் புதிய உலகத்தில் அவர் பயன்படுத்துவார் என்ற நம்பிக்கையில் வைக்கப்படும் பொருட்கள் என அனைத்தும் சேர்த்து வைத்துப் புதைக்கப்படுவது இதன் அடிப்படை அம்சம். இதே ஈமச்சடங்கு கூறுகள் எகிப்து, சூடான், ஆப்பிரிக்கா, இந்தியா, ஐரோப்பா,  என நமக்குக் கிடைக்கின்ற இவ்வகை ஈமச்சடங்கு சின்னங்களின் எச்சங்களின் வழி அறிய முடிகின்றது. ஏறக்குறைய எல்லா இனங்களிலுமே இவ்வகையான சமாதிகளுக்கு வந்து இறந்தோரை நினைத்து வழிபடுவது என்பதும் வழக்கத்தில் இருக்கின்றது என்பதும் வியப்பளிக்கும் செய்தியே. 

Inline image 2

போல்னப்ரோன் கல்திட்டையை அயர்லாந்து அரசு பாதுகாக்கப்பட வேண்டிய புராதனச்சின்னமாக அறிவித்து இப்பகுதியை முழுமையாகப் பாதுக்காத்துள்ளது. இப்பகுதியில் கல்திட்டைகள் என்றால் என்ன, இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வு நிலை, நியோலித்திக் கால சூழல், இங்கு வந்து குடியேறிய மக்கள், ஈமச்சடங்குகள் பற்றிய விரிவான விளக்கம் ஆகிய தகவல்கள் காட்சிபடுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

இது சுற்றுப்பயணிகள் வந்து பார்த்துச் செல்லும் இடமாக இருப்பதால் இங்கே சில கடைகளும் இருக்கின்றன. அங்கே இரும்பு, வெள்ளி ஆகிய உலோகங்களில் காதணிகள், அலங்காரப்பொருட்கள் ஆகியன செய்யும் ஒரு பகுதிக்குசென்றேன். அங்கே கெல்ட் குறியீடு ஒன்றினை தேர்ந்தெடுத்து, அதில் இரும்பில் ஒரு காதணி செய்ய வைத்து வாங்கிக் கொண்டேன்.  ஏறக்குரைய 15 நிமிடத்தில் நான் தேர்ந்தெடுத்த வடிவத்தில் ஒரு ஜோடி அழகான காதணி  ஒன்றை அந்த வியாபாரி எனக்கு செய்து கொடுத்தார்.

Inline image 1

இங்கு நான் கண்ட கல்திட்டைகள் போன்ற கற்காலச் சின்னங்களை நான் 2012ம் ஆண்டு தமிழகத்தின் கிருஷ்ணகிரிக்கு அருகில் உள்ள மல்லச்சத்திரம் பகுதிக்குச் சென்றிருந்தபோது பார்த்தேன். அயர்லாந்தின் லிமெரிக் மாவட்டத்தில் நான் பார்த்த கல்திட்டை வடிவத்தை ஒத்த வகையிலேயே இங்கே மல்லச்சத்திரத்திலும் சிறு வேறுபாட்டுடன், ஆனால் அதே வடிவில் என, பல கல்திட்டைகள் இங்கே இருக்கின்றன. முன்பு 200க்கும் மேற்பட்ட கல்திட்டைகள் இங்கே மல்லச்சத்திரத்திரத்தில் இருந்திருக்கின்றன. ஆனால் தற்சமயம் ஏறக்குறைய 20 கல்திட்டைகளைத்தான் காணமுடிகின்றது. ஆயினும் கூட இப்பகுதி இன்னமும் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட வேண்டிய புராதனச் சின்னமாக அடையாளம் காணப்படவில்லை என்பதும், இங்கு வந்து போகும் பொதுமக்கள் இக்கல்திட்டைகளைச் சேதப்படுத்தியும் அவற்றின் கூரைகளைப் பெயர்த்துக் கொண்டுபோய தங்கள் வீடுகளில் ஏதாவது ஒரு காரியத்திற்குப் பயன்படுத்துவது என்பது நிகழ்வது வேதனைக்குறியது.

இந்த செய்தி பார்க்கவும் சுபா... 
http://www.dinamani.com/edition_dharmapuri/krishnagiri/2014/05/15/மூவாயிரம்-ஆண்டுகள்-பழைமையா/article2225626.ece

மூவாயிரம் ஆண்டுகள் பழைமையான கற்காலக் கல்வட்டங்கள் கண்டெடுப்பு

மேலும் 

..... தேமொழி

சொ. வினைதீர்த்தான்

unread,
May 24, 2016, 2:03:40 PM5/24/16
to mintamil
good narration Ms Suba

Suba

unread,
May 25, 2016, 3:46:28 AM5/25/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-05-24 19:48 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:

இந்த செய்தி பார்க்கவும் சுபா... 
​இவருடன் தான் முன்னர் மல்லச்சத்திரத்திற்கு நான் சென்றிருந்தேன். என்னுடன் செல்வா, ப்ராக்‌ஷ் சுகுமாரன், கண்னன் என அனைவரும் குழுவாகச் சென்றிருந்தோம்.

தகவலுக்கு நன்றி தேமொழி.

சுபா

Suba

unread,
May 25, 2016, 3:46:46 AM5/25/16
to மின்தமிழ்

On Tue, May 24, 2016 at 8:03 PM, சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> wrote:
good narration Ms Suba

​மகிழ்ச்சி.
சுபா​
 
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba

unread,
Jun 7, 2016, 2:43:54 PM6/7/16
to மின்தமிழ், Dr.Subashini
18. மொஹீர் மலை

லிமெரிக் பகுதியில் பண்டைய ஈமக்கிரியை கல்திட்டை சின்னங்களைப் பார்த்து விட்டு எங்கள் பேருந்து பயணம் தொடர்ந்தது. இப்போது மழை சாரல் நிறு சற்றே வெயில் வர ஆரம்பித்திருந்தது. நாங்கள் அடுத்துச் செல்ல பயணத்தில் திட்டமிடப்பட்டிருந்த பகுதி மொஹிர் மலை உச்சி. எங்கள் பயணம் அயர்லாந்தின் மேற்கு பகுதியில் தொடர்ந்தது. 

அட்லாண்டிக் சமுத்திரத்தை ஒட்டிய நிலப்பகுதி அது. கடல் பகுதியிலிருந்து 214மீட்டர் உயரம் அமைந்த பகுதி. அயர்லாந்தின் சுற்றுலா தலங்களில் முக்கியமான இடமாகக் குறிப்பிடப்படுவது. 

இந்த உயரமான பகுதியில் அமைந்திருக்கும் பாறைகள் அட்லாண்டிக் சமுத்திரத்தை ஒட்டினார் போல அமைந்தவை. 300 மில்லியன் ஆண்டுகள் பழமையான சிறு ஆறுகள் பாய்ந்து ஓடும் நிலப்பகுதி இது. உறுதியான பாறைகளைச் சுற்றி மணற்கல் அழுத்தம் சேர்ந்து உருவாக்கப்பட்ட இயற்கை அமைப்பாக இது அமைந்திருக்கின்றது. 

இந்தப் பகுதியில் மட்டும் இருபது வெவ்வேறு வகையான 300,000 பறவைகள் வாழ்கின்றன என்று இங்குள்ள குறிப்புக்கள் சொல்கின்றன. 

எங்களை அழைத்து வந்த பேருந்து கீழடிவாரத்திலேயே நின்று விட நாங்கள் உள்ளே சென்று கட்டணம் கட்டி டிக்கட்டை பெற்றுக் கொண்டு இப்பகுதியைக் காணச் சென்றோம். காற்று மிகப் பலமாக வீசிக் கொண்டிருந்தது. உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் இங்கே செல்ல வேண்டாம் என எங்கள் பயண வழிகாட்டி கூறியிருந்தார். 

சுற்றுப்பயணிகளைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை. வீடுகளோ குடியிருப்புப் பகுதியோ ஏதும் இல்லை. வெட்ட வெளி. அட்லாண்டிக் சமுத்திரம், அந்தச் சமுத்திரத்தை அண்டிய பாறை நிலப்பகுதி, சில்லென்று வீசும் பலமான காற்று, பசுமையான புல்வெளி. 

ஏதோ புதியதொரு உலகத்திற்கு வந்து விட்டது போல மனதில் எண்ணம் தோன்றியது. 

மேலே செல்லச் செல்ல மலைப் பகுதியில் சமுத்திரத்தை அண்டிய பகுதிக்கு அருகில் வரை சென்று காணலாம். ஒரு அளவிற்கு மேல் செல்லக்கூடாது எனத் தடை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். காற்று பலமாக வீசும் போது மனிதர்களையும் காற்று அடித்துச் சென்று விடும் அபாயம் இருப்பதால் இத்தகைய ஏற்பாட்டினைச் செய்திருக்கின்றார்கள். 

நான் நீண்ட தூரம் பயணம் செய்து மலையுச்சியின் அழகையும் சமுத்திரத்தின் அழகை ரசித்தேன்.ஆயினும் காற்றின் அழுத்தம் மனதில் சிறு கலக்கத்தை ஏற்படுத்தவே செய்தது. எத்தனை ஆண்டு பழமையான அமைப்பு இது என எண்ணிப்பார்த்த போது உலகம், பேரண்டம், இந்தப் பேரண்டத்தில் உள்ள கோள்கள் என எல்லாமே என்னை வியக்கவைப்பதை மறுக்கமுடியவில்லை. எவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் ஒரு துகள் போன்று நாம் இருக்கின்றோம் என்பதுவும், நமது நிலையாமையும், நிரந்தரமற்ற மனித வாழ்க்கையின் இயல்பையும் நினைத்துக் கொண்டேன். அதற்கு மாறாக ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இங்கே நிற்கும் இந்த மலைகளும் சமுத்திரங்களும் ஆறுகளும் அதன் பெருமையை வெளிப்படுத்திக் கொண்டு கம்பீரமாக நின்று கொண்டிருக்கின்றன. 

மலை உச்சியில் இயற்கையின் பிரம்மாண்டத்தைப் பார்த்து ரசித்து விட்டு கீழே வரும் வழியில் ஒரு பெண்மணி ஐரிஷ் இசைக்கருவி ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார். அவரது இசையை சிலர் ஓரமாக நின்று கேட்டு ரசித்து அவரது சிடிக்களை விரும்பியோர் வாங்கிக் கொண்டும் சென்றனர். 

அங்கே இரண்டு மணி நேரங்கள் செலவிட்டு இயற்கை அழகில் மனதைத் தொலைத்தபடி மீண்டும் பேருந்து இருக்கும் இடத்தை நோக்கி எங்கள் குழுவில் இருந்த அனைவரும் வந்து சேர்ந்தோம். எல்லோரும் எந்த வித பாதிப்பும் இல்லாமல் திரும்பியதில் எங்கள் பயண வழிகாட்டிக்கு மன திருப்தி இருந்தது முகத்தில் தெரிந்தது. மாலை வேளை நெருங்கிக் கொண்டிருந்தமையால் அங்கிருந்து புறப்பட்டு மேலும் தென் மேற்கு அயர்லாந்தில் எங்கள் பேருந்து பயணத்தைத் தொடர்ந்தது.

தொடரும்..
சுபா
 
சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 8, 2016, 5:27:27 AM6/8/16
to mint...@googlegroups.com
நான் நீண்ட தூரம் பயணம் செய்து மலையுச்சியின் அழகையும் சமுத்திரத்தின்
அழகை ரசித்தேன்.ஆயினும் காற்றின் அழுத்தம் மனதில் சிறு கலக்கத்தை
ஏற்படுத்தவே செய்தது. எத்தனை ஆண்டு பழமையான அமைப்பு இது என
எண்ணிப்பார்த்த போது உலகம், பேரண்டம், இந்தப் பேரண்டத்தில் உள்ள கோள்கள்
என எல்லாமே என்னை வியக்கவைப்பதை மறுக்கமுடியவில்லை. எவ்வளவு பெரிய
பிரபஞ்சத்தில் ஒரு துகள் போன்று நாம் இருக்கின்றோம் என்பதுவும், நமது
நிலையாமையும், நிரந்தரமற்ற மனித வாழ்க்கையின் இயல்பையும் நினைத்துக்
கொண்டேன். அதற்கு மாறாக ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இங்கே நிற்கும் இந்த
மலைகளும் சமுத்திரங்களும் ஆறுகளும் அதன் பெருமையை வெளிப்படுத்திக் கொண்டு
கம்பீரமாக நின்று கொண்டிருக்கின்றன.

----- Arumai.

--

Suba

unread,
Jun 8, 2016, 4:47:47 PM6/8/16
to மின்தமிழ், Dr.Subashini
19. கேரி வளையத்தை நோக்கி

நில அமைப்பு வகையில் ரோமானிய அரசின் கட்டுப்பாட்டிற்கு வெளியே இருந்தாலும் கூட பண்டைய அயர்லாந்தில் ரோமானியப் பேரரசின் தாக்கம் பெருமளவு இருந்தது என்பதை மறுப்பதிற்கில்லை. 5ம் நூற்றாண்டு வாக்கில் பிரித்தானியாவில் ரோமானியப் பேரரசின் ஆளுமை வீட்சியடையத் தொடங்கிய போது பல ஐரிஷ் மக்கள் அன்றைய பிரித்தானியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் பரவலாக குடியேறியிருந்தனர். ஐரோப்பாவிலும் வர்த்தகத்துறையில் கால் தடம் பதித்து வளர்ச்சிகாண ஆரம்பித்திருந்தனர். 

அயர்லாந்தைப் பொறுத்தவரை இன்று அது கத்தோலிக்க கிறிஸ்துவ சமயத்தைப் பின்பற்றும் ஒரு நாடு என்றாலும் கிறிஸ்துவ மதம் அயர்லாந்தில் விரிவாகப் பரவத்தொடங்கியது கிபி.5ம், 6ம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான். ரோமானியப் பேரரசின் நிலப்பகுதிக்கு அப்பால் உள்ள நாடுகளில் முதன் முதலாக ரோமானியப் பேரரசால் கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்ட நாடு அயர்லாந்து. இது நிகழ்ந்தது கி.பி431ம் ஆண்டில். 

போப் அவர்கள் பிஷப் பலாடியூசை தேர்ந்தெடுத்து அயர்லாந்தில் ஏசு கிறிஸ்துவை நம்புபவர்களுக்குச் சேவையாற்ற பிஷப்பாக பணி நியமித்து அனுப்பி வைத்தார். ஆயினும் இவரை விடப் புகழ் மிக்க பிஷப்பாக இன்றும் போற்றப்படுபவர் செயிண்ட் பாட்ரிக் அவர்கள் தான். தனது சுயக் குறிப்பில் செயிண்ட் பேட்ரிக் அவர்கள் தாம் ஒரு அரசு அதிகாரியின் மகனாக ரோமானிய ஆட்சிக்குட்பட்ட பிரித்தானியாவில் பிறந்ததாகவும் ஆனால் பின்னர் அடிமையாக அயர்லாந்துக்குக் கொண்டு வரப்பட்டதாகவும், ஆயினும் பின்னர் இறை வாசகங்களைத் துதித்துப் பாடும் இறை அடியாராகத் திரும்பினார் என்றும் குறிப்பிடுகின்றார். செயிண்ட் பாட்ரிக் அவர்கள் மறைந்த நினைவு நாளான மார்ச் 17ம் நாளை இன்றளவும் கத்தோலிக்க சமயத்தவரும், அயர்லாந்தின் சமய நிறுவனமும் ஏனைய சில கிறிஸ்துவ அமைப்புக்களும் முக்கிய சமய நாளாக கடைப்பிடிக்கின்றனர். இந்த நாள் அயர்லாந்தில் விடுமுறை நாளாகவும் நடைமுறையில் இன்றளவும் உள்ளது. 

கிறிஸ்துவ மதம் அறிமுகப்படுத்தப்பட்டதன் தொடர்ச்சியாக லத்தீன் மொழியின் புழக்கம் அயர்லாந்தில் தொடங்கியது.கல்விக்கூடங்கள் எழுப்பப்பட்டன. லத்தீன் மொழியில் கல்வி பொதுவாக மத அமைப்பு மூலம் உள்ளூர் மக்களிடையே விரிவாக்கம் கண்டது. லத்தீன் மொழியில் அமைந்த இலக்கியங்கள் உருவாக்கம் பெற்றன. 

ஆயினும், அயர்லாந்தின் கெல்ட் பாரம்பரியத்தை உள்வாங்கிய கத்தோலிக்க சமயமாகத் தனித்துவம் வாய்ந்த தன்மையுடனேயே அன்றைய அயர்லாந்தின் சமூக அமைப்பு பரிணாம மாற்றம் கண்டது. 

கிறிஸ்துவ மதமும் லத்தீன் மொழியும் அயர்லாந்தில் வேரூன்ற ஆரம்பித்த கிபி.6ம் நூற்றாண்டில் ஆங்காங்கே பல தேவாலயங்கள் எழுப்பப்பட்டன. பெரும்பாலும் இந்தத் தேவாலயங்கள் கிறிஸ்துவ மடங்களைச் சார்ந்த வகையில் அமைக்கப்பட்டன. 

ஐந்தாம் நாள் பயணத்தில் லிமெரிக் மாவட்டத்தைக் கடந்து நாங்கள் கேரி வளையத்தை நோக்கி எங்கள் பயணத்தைத் தொடர்ந்திருந்தோம். செல்லும் வழிகளில் ஆங்காங்கே கோட்டைகளின் எச்சங்களைக் காண முடிந்தது. ஆங்காங்கே தேவாலயங்கள், நகரம், கிராமம் என எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பதையும் காண முடிந்தது. 

கோயிலில்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம், என்னும் முதுமொழி, இனம் மொழி கடந்து மனித சிந்தனையில் இயல்பாக உதிக்கும் இறைசிந்தனையிய கருத்து என்பதை இந்தக் காட்சிகள் நிரூபித்துக் கொண்டிருந்தன. 

பேருந்தில் செல்லும் போது இரண்டு பக்கங்களிலும் இருந்த இயற்கை காட்சி என்னை வியக்க வைத்தது. அந்தப் பசுமையையும், இளங்காலைப்பொழுதில் புல் மேயும் மாடுகளையும் செம்மறி ஆடுகளையும் பார்த்து ரசிக்கக் கண் கோடி வேண்டும் என்று தோன்றியது. வேண்டியமட்டும் புகப்படம் எடுத்துக் கொண்டே வந்தேன். என்னோடு பேருந்தில் வந்த இன்னொரு மனிதரும் போட்டி போட்டுக் கொண்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தார். ஏனையோர் எந்தச் சலனமும் இன்றி இயற்கை காட்சிகளில் தங்களை மறந்து பயணித்துக் கொண்டிருந்தனர். 

வழியில் கி.மு 2000 வாக்கில் வாழ்ந்த மக்களின் குடியிறுப்புப்பகுதிகளின் எச்சம் உள்ள பகுதியில் சில நிமிடங்கள் எங்கல் பேருந்து நிறுத்தப்பட்டது. அப்பகுதியில் நடந்து சென்று அம்மக்களின் பழமையான கற்குடிசை வீட்டு அமைப்புக்களின் எச்சங்களைப் பார்த்து அதிசயித்தோம்.

எங்கள் பேருந்து இயற்கை எழில் கொஞ்சும் கேரி வளையம் பகுதியை வந்தடைந்தது.

​பண்டைய குடில்கள்

Reply all
Reply to author
Forward
0 new messages