--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
http://tinyurl.com/4ydkuxhதிவாகர்,
[Open in new window]
மின் தமிழ் அன்பர்களுக்கு,வணக்கம். சில காலமாகவே ஒரு நல்ல பதிவுத் தொடர் ஒன்றினை (அப்படி என்று நான் மட்டும் நினைத்துக் கொண்டு) மின் தமிழுக்கும், அதன் மூலம் மரபு விக்கிக்கும் அளிக்கவேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தேன். சமீபத்தில் இந்த ’விக்கிரமாதித்தி’ யின் செயல்கள் ஒரு பதிவில் வந்த போது, அவரை அதற்குப் பாராட்டினாலும் நாமும் ஏதாவது செய்யவேண்டும் என்பதை எனக்கு ஞாபகப்படுத்துவதற்காகவோ, என்று கூட நினைத்துக் கொண்டு அதுவும் கொஞ்சம் உற்சாகமாகவேத் தெரியவே, சரி எழுதிவிடலாம் என்று ஒரு முடிவுக்கே வந்து விட்டேன். என்ன தலைப்பு?
(இன்னும் வரும்)திவாகர்
நல்ல தலைப்பாக நீங்களே கொடுங்கள்.
சமகால இந்திய குடியுரிமைச் சட்டங்களை (Constitution of India)
எளிமைப்படுத்தி சொல்லித்தர வேண்டும். அமெரிக்காவில் மூசுக்கு மூச்சு உடனே
இந்த சட்டம், இந்த ஷரத்து என்று சாதாரணக் குடிமகன் கூடப் பேச
ஆரம்பித்துவிடுகிறான். இங்கிலாந்திலும் நம் உரிமை தெரிந்தால் உடனே கேட்டு
பலன் பெற முடியும்! இந்தியாவில் இது தெரியாததால்தான் மக்கள் கையூட்டு
அளிக்கின்றனர் என்று தோன்றுகிறது. ஊழலை வளர்ப்பது மக்கள். காரணம்
அறியாமை.
மடமையைக் கொளுத்துவோம்.
நா.கண்ணன்
2011/8/8 Dhivakar <venkdh...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆனால் இதற்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம்.. //
http://tinyurl.com/3b6a7d3மாற்றப்பட்ட தலைப்புடன் கூடிய கட்டுரையை மேற்கண்ட சுட்டியில் காணலாம். நன்றி.
[Open in new window]
மின் தமிழ் அன்பர்களுக்கு,வணக்கம். சில காலமாகவே ஒரு நல்ல பதிவுத் தொடர் ஒன்றினை (அப்படி என்று நான் மட்டும் நினைத்துக் கொண்டு) மின் தமிழுக்கும், அதன் மூலம் மரபு விக்கிக்கும் அளிக்கவேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தேன். சமீபத்தில் இந்த ’விக்கிரமாதித்தி’ யின் செயல்கள் ஒரு பதிவில் வந்த போது, அவரை அதற்குப் பாராட்டினாலும் நாமும் ஏதாவது செய்யவேண்டும் என்பதை எனக்கு ஞாபகப்படுத்துவதற்காகவோ, என்று கூட நினைத்துக் கொண்டு அதுவும் கொஞ்சம் உற்சாகமாகவேத் தெரியவே, சரி எழுதிவிடலாம் என்று ஒரு முடிவுக்கே வந்து விட்டேன். என்ன தலைப்பு?
(இன்னும் வரும்)திவாகர்

தொந்தரவா? நல்வரவு. நான் ரொம்ப நாட்களாக விழைவது.இ
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அன்பின் திரு திவாகர்,
மிகச் சுவையான ஆரம்பம்.......நிறைய புதியத் தகவல்களை அறியத் தரப்போகிறீர்கள் என்பது தெள்ளத் தெளிவாகிறது. நன்றி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
என்னதான் ராஜத் துரோகம் செய்தாலும் யாருக்கேனும் மரணதண்டனை
விதிக்கப்பட்டதா என்றால், கிடைத்த கல்வெட்டுகள் மூலம் பார்க்கையில்
மரணதண்டனை என்பது அவ்வளவாக இல்லை என்றே சொல்லலாம். அதற்காக மரணதண்டனை
என்பதே கிடையாதா என்று கேள்வி எழலாம். மரணதண்டனை அறவே சோழர்களால் ரத்து
செய்யப்படவில்லை என்பது, மூன்றாம் குலோத்துங்கன் (1178-1230) காலத்தில்
எடுக்கப்பட்ட ‘வேளாளக் குடிக்கு மட்டுமே இந்த தண்டனையிலிருந்து விலக்கு’
(ARE 200/1929) என்ற ஒரு கல்வெட்டுக் குறிப்பிலிருந்து தெரிகின்றது.
வேளாளர் குலத்துக்கு பெரும் சிறப்பு ஏற்பட்டிருந்தது சேக்கிழார் பெருமான்
போன்ற பெரும்புலவர்களால். மேலும் சிவனடியார்கள் பலரும் வேளாளர்
குலத்தினரே. அமைச்சர்கள், வீரர்கள், ஆசிரியர்கள் என பெரும்பான்மையாகவும்
மிகவும் செல்வாக்காகவும் திகழ்ந்த வேளாளர் குடிக்கு பெருமை சேர்க்கவே
இந்த விலக்கு அளிக்கப்பட்டிருக்கவேண்டும்.
அதே போல ராஜதுரோகம் நடைபெற்றது என்பது தெரியவரும் பட்சத்தில் சோழ
அரசர்கள் அதை நியாயமான முறையிலேயே விசாரித்ததும் கல்வெட்டுகள் மூலம்
தெரிய வரும். நம் காலத்தில் விசாரணைக் கமிஷன் அமைப்பது போலவே ‘ராஜ ராஜப்
பெருவிலை’ என்ற பெயரில் தனி நபரோ அல்லது சில உயர் அரசாங்க அதிகாரிகளோ
சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று விசாரணை செய்கின்றனர். விசாரண முடிவை
அரசனிடம் சமர்ப்பித்து அதற்கான தண்டனைகளையும் அரசனிடம் தெரிவித்தவுடன்
அதற்கேற்றவாறு அரசர்கள் ஆணை பிறப்பிக்கின்றனர். இப்படிப்பட்ட ஆணைகள்
கல்வெட்டுகளாக பல கோயில்களில் கிடைத்துள்ளன. 1917ஆம் ஆண்டு கிடைத்த
தொல்லியல் குறிப்புப்படி இப்படிப்பட்ட வழக்கு ஒன்றை நாம் பார்ப்போம்.
பனையூர் நாட்டு குணாகணாதிமங்கலத்தில் ஒரு தனவந்தர் ராஜத் துரோகம் செய்ததை
நிரூபித்து ராஜராஜப்பெருவிலைக் குழுவினர் மூன்றாம் ராஜராஜசோழனிடம்
அறிக்கை சமர்ப்பிக்கின்றனர். அவர்கள் ஆலோசனைப்படியே சோழன் அந்த
தனவந்தரின் நிலங்களில் ஐந்து வேலி நான்கு மா அளவில் பறிக்கப்பட்டு அவை
உடனுக்குடன் விற்கப்பட்டு அதை வாங்கியவர் கையெழுத்தும் பெறப்பட்டு
ராஜராஜப் பெருவிலையினர் அந்தப் பணத்தை அரசு பொக்கிஷத்தில்
சேர்க்கப்பட்டதாக இந்தக் கல்வெட்டுக் குறிப்பு தெரிவிக்கிறது. (ARE
244/1917).
இன்னொரு கல்வெட்டு (ARE 112/1911) ஒன்று இதே போல ஒரு ராஜத்துரோகக்
குற்றத்தை விசாரித்த எட்டு பேர் கொண்ட ராஜராஜபெருவிலையினர் குழு அங்கேயே
அவரது நிலங்களை ஏலமாக விடுத்து 33000 காசுகளை அரசு கஜானாவில்
சேர்ப்பித்ததாகக் குறிப்பிடுகின்றது. இது நடந்த ஆண்டு கி.பி 1250.
இன்னொரு கல்வெட்டு (ARE 506/1918), திருவெண்காடு எனும் ஊரில், இப்படி
அரசனுக்கு எதிராக போன ஒருவனின் நிலத்தை, ‘நெறியுடைய மூவேந்த வேளான்’
எனும் பெயருடைய அரசு அதிகாரி பறிமுதல் செய்ததாக
குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது நடந்த காலம் மூன்றாம் ராஜராஜனின் 18 ஆம்
ஆண்டுக் காலம் (கி.பி.1235).
ராஜத்துரோகத்துக்கு சமமாக கருதப்படும் (அல்லது இன்னமும் ஒருபடி மேலாக)
இன்னொரு குற்றம் சிவத்துரோகம். ராஜத்துரோகத்தைக் கூட மன்னர்கள்
பொறுத்துக் கொள்வார்கள் போலும், ஆனால் சிவத்துரோகத்தை மட்டும் சகித்துக்
கொள்வதாக இல்லை என்பது ராஜராஜ காலன் தொட்டு கிடைத்து வரும் பல
கல்வெட்டுகளில் காணக்கிடைக்கிறது.
சிவத்துரோகம் எனும் குற்றமாவது கோயில் நிலங்களை அபகரித்தல், நன்கொடையாக
அளிக்கப்பட்ட நகைகளையும், பணங்களையும் அபகரித்தல் போன்றவை. இவை
மட்டுமல்ல, ஒருவர் ஒரு கோயிலுக்கு எண்ணெய் ஒரு வருடம் ஊற்றுவதாக
ஒப்புக்கொண்டு, அவர் அதை செய்ய மறுப்பது, கோயில் நிலங்களைக் குத்தகை
எடுத்தோர் ஒழுங்காக செலுத்தவேண்டிய குத்தகை பாக்கியையும், வரிகளையும்
செலுத்தாமல் போவது கூட சிவத் துரோகத்தில் வரும். ஒவ்வொரு சமயத்தில் அந்த
ஊரை ஆளும் ஊராரே கூட குற்றம் செய்தாலும் கூட கடுமையான சட்ட விதமுறைகளின்
படி தண்டனையிலிருந்து தப்பிக்கமுடியாது.
ராஜத்துரோகத்தில் வெறும் நில அபகரிப்பு மட்டுமே தண்டனை என்றால்
சிவத்துரோகத்தில் அளிக்கப்பட்ட ஒரு தண்டனையைப் பாருங்கள். அதுவும்
மேற்சொன்னபடி ஊராரே சம்பந்தப்பட்ட குற்றம் இது.
காலம்: ராஜராஜ சோழனின் நான்காம் ஆண்டு (கி.பி. 988).
இடம்:படுவூர் நாடு (தற்போதைய செங்கல்பட்டு மாவட்டம்)
குற்றவாளி : ஊரார் சபையே
தீர்ப்பு: திருவடந்தைக் கோயிலில் உள்ள ஸ்ரீவராக தேவருக்கு ஒரு நாளைக்கு
ஒரு உழக்கு என்ற அளவில் வருடத்துக்கு 90 நாழி எண்ணெய் செலுத்த வேண்டும்.
அப்படி செலுத்தத் தவறும் பட்சத்தில் வட்டியாக 20 கழஞ்சு பொன் அரசு
அதிகாரியான வள்ளுவநாட்டு துக்கய்யன் சாத்தான் வசூலிக்கவேண்டும், மேலும்
இப்படி தவறியதற்கு தண்டனைப்பணமாக நாலரைக் காணம் ஊர் தர்மாசனத்துக்கும்
இந்தச் சபை செலுத்தவேண்டும். (SII Vol. - 8, No.87).
தண்டனை, வட்டி இவையெல்லாம் சரி, இந்த ஊரார் செய்த குற்றம் என்ன
தெரியுமா.. கோயில் நிலத்தில் வரும் ஒரு குத்தகை பணத்தை எடுத்து தவறுதலாக
ஊரார் அரசு கஜானாவுக்கு செலுத்தவேண்டிய நீர் வரியைக் கட்டியதுதான். இங்கே
ஒன்று ஆலோசிக்கவேண்டும். பாருங்கள்! ராஜராஜன் காலத்திய சட்டம் மிகக்
கறாராக இருந்ததைக் காண்பிக்கிறது. கோயில் என்பது தனி, ஊர் ஆளுகை என்பது
தனி என்பதையும், வேலியே பயிரை மேய்ந்தாலும், அது தவறுதலாகவும், சிறிய
அளவே ஆயினும் நீதியின் கண் முன்பு நக்கீரர் சொல்வது போல குற்றம் குற்றமே.
ஊரார் என்றாலே அரசு அலுவலகர்கள்தானே., அவர்களுக்கே இப்படி ஒரு இழிவான
முறையில் தண்டனை என்பதையும் அதுவும் கல்லில் பொறிக்கப்பட்டு
எதிர்காலத்தில் எல்லோரும் பார்க்கவேண்டும் என்று எழுதப்பட்ட தண்டனை
என்பதையும் பார்க்கவேண்டும்.. இன்றைய ஆட்சியாளரும், கோவில் அலுவலர்களும்
இதைக் கவனிக்க வேண்டும்.
ராஜராஜன் காலத்திலேயே அரசு இப்போது இருப்பது போல ‘கோவில் மேலாளர்’ களை பல
கோவிலகளுக்கு நியமித்தது. இவர்கள் வேலையே கோவில்களைக் கண்காணித்து
குறைகளை மட்டுமே கண்டுபிடித்து அரசுக்குத் தகவல் அனுப்பவேண்டும்.
மற்ற்படி கோவில் நிவாகங்களை ’மகேசுவர சபை’ என்றொரு நிர்வாக அமைப்பு
கவனித்துக் கொள்ளும். இந்த அரசு கோவில் மேலாளர்கள் மட்டும் தயவு
தாட்சண்யமின்றி செயல்பட்டதும் சில கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.
கோயில் நிலங்களில் ‘கை’ வைத்த சிலரைப் பிடித்து அவர்களின் மொத்த
நிலங்களையும் பறிமுதல் செய்ததும் கல்வெட்டுகளில்குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றில் ஒன்று, கோயில் சம்பத்துகளைக் காக்கவேண்டிய திருவறை
சதுர்வேதிமங்கலத்து பெருங்குறி பெருமக்கள் சபை பொன் பாத்திரங்களையும்,
கோயில் நகைகளையும் தவறாக பயன்படுத்தினர் (only ‘mis-use’ not stealing)
என்பதை அறிந்த ராஜ ராஜ சோழனது அலுவலர் சம்பந்தப்பட்ட அத்தனை பேருடைய
நிலங்களையும் பறிமுதல் செய்தார் என்பதையும் ஒரு கல்வெட்டு
தெரிவிக்கின்றது (ARE 359/1917).
கோயில் என வரும்போது, குற்றம் செய்பவர் பூசை செய்யும் பிராம்மணர்
(இவர்களை சிவப்பிராம்மணர் என அழைப்பர்) ஆயினும் தண்டனைகளினின்று தப்பிக்க
முடியாது. இப்படித்தான் ஒரு கல்வெட்டில் (ARE 279/1927) இரண்டு
சிவப்பிராம்மணர்கள் அம்மன் நகைகளை எடுத்து தன் கள்ளக் காதலிகளின்
கழுத்தில் அலங்கரித்து அழகு பார்த்ததைக் கண்டுபிடித்த ‘மகேசுவர சபை’
முதலில் கண்டித்துத் திருத்தப்பார்த்து அரசனிடம் புகார் செய்தது.
மூன்றாம் ராஜராஜனின் 28 ஆவது வருடத்தில் அவனுக்குக் கிடைத்த இந்தப்
புகார் மீது விசாரணை செய்து அழைத்து வருமாறு இரண்டு அலுவலர்களை அனுப்பி
வைத்ததாகவும், ஆனால் இந்த சிவப்பிராமணர்கள் அந்த அரசு அதிகார்களையும்
அடிக்க முன்வந்ததும், இதனால் கோபமுற்ற மகேசுவர சபையும் ஊர் சபையும் அந்த
இருவரையும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தியதாக இந்தக் கல்வெட்டு
கூறுகிறது. என்ன தண்டனை என்று மட்டும் சொல்லவில்லை.
இந்த அரசன் காலத்திலேயே திருநாகேஸ்வரத்தில் ஒருவர் சுவாமியுடைய ஆடைகளை
தம் வசம் எடுத்துக் கொண்டார். அத்தோடு இல்லாமல் கோயிலுக்கு என
விடப்பட்டிருந்த செங்கற்களை தம் வீடு கட்டப் பயன் படுத்தி இருக்கிறார்.
விஷயம் வெளியே தெரிய வந்தது. அவ்வளவுதான், மனுஷன் இதுவரை சம்பாதித்த
சொத்தெல்லாம் அம்பேல். அவை ஏலத்தில் விடப்பட்டு அதன் மூலம் கிடைத்த 4000
காசுகளை கோயில் பொக்கிஷத்துக்கு அனுப்பி வைத்த பிள்ளை யாதவராயர் எனும்
அரசு அலுவலர் அப்படியே சும்மா போகாமல் மறக்காமல் கல்வெட்டிலும் போட்டு
விட்டு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நாம் அறிந்து கொள்ளச
செய்துவிட்டார். ஒருவேளை இதைத்தான் ’சிவன் சொத்து அபகரிப்பு, குல நாசம்’
என்று சூசகமாகச் சொன்னார்களோ..
இரண்டாம் ராஜராஜன் (1053-62) காலத்திலேயே மகேசுவர சபைக்கு பூரண
அதிகாரங்கள் அரசனால் வழங்கப்பட்டிருந்தது. பந்தநல்லூர் பசுபதீஸ்வரம்
ஆலயத்தில் கிடைத்த கல்வெட்டில் (ARE 115/1932) இந்த மகேசுவர சபையோடு,
தேவகண்மீர், பதிபாடுடையோர் (தேவாரம் பாடுவோரை பதிகம் பாடுவோர் எனக்
குறிப்பிடுவது இதன் மூலம் தெரிய வரும்), ஸ்ரீகாரணம் செய்வோர் சபை
போன்றோர் கலந்த பெரிய சபை, கோயில் சம்பந்தப்பட்ட இந்தக் குற்றங்களை
ஆராய்ந்து குறிப்பாக சிவப்பிராம்மணர்கள் தவறு செய்யும் பட்சத்தில்,
அவர்களுக்கும் சேர்த்து தண்டனை வழங்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது.
சிவத்துரோகம் என்பது சிவன் கோயில் என்றல்லாமல் எல்லா தெய்வங்களின்
கோயில்களில் நடக்கும் குற்றங்களுக்கும் பொதுவாகக் கொடுத்த பெயர்தான்.
ஏகப்பட்ட கல்வெட்டுகள் சின்னச் சின்ன கோயில் குற்ற விஷயங்கள் பற்றி கூடப்
பேசுகின்றன. தமிழ்நாட்டில் தெய்வங்களின் ஆலயங்கள் இன்னமும்
சீர்மையாகவும், புனிதம் தவறாமலும் இருப்பது நம் எத்தனையோ பேருக்கு
ஆச்சரியத்தைத் தரலாம். ஆனால் சோழர்கள் மிக மிக அதிகமான முறையில்
கோயில்களையும் அதன் புனிதத் துவத்தையும் காத்து வந்தனர். அந்த அரசர்கள்
எளிமை, அதிலும் ஆலயத்துக்குச் செல்லும்போது அரையாடையுடன் செல்வது போன்ற
சிற்பங்கள் - ராஜராஜசோழனும், அவன் மனையும் இப்படித்தான் சென்றதாக ஒரு
சிற்பம், அதற்குப் பிறகு சேக்கிழார் பெருமானுடன் இரண்டாம் குலோத்துங்கன்
அரையாடையுடன் தில்லை கோயிலில் சிற்பமாக செதுக்கி வைத்திருப்பதிலும்
தெரியும். இப்போதும் எத்தனைதான் அத்து மீறல்கள் ஆட்சியாளர் மற்றும்
கோவில் அலுவலர்கள் மூலம் வந்தாலும் சோழர்களின் புனிதத்துவமான தர்மச்
செயல்கள் இந்த நாட்களிலும் நம்மைக் காத்து வருகிறது என்றே சொல்லலாம்.
இனிவரும் நாட்களிலும் நம்மைக் காக்கும்.
இந்த ராஜத்துரோகம், சிவத்துரோகத்துக்கு அடுத்துதான் கொலை, கொள்ளை,
திருட்டு, வெட்டு, வரி ஏய்ப்பு இன்ன பிற குற்றங்கள் எல்லாம், அவையும்
பார்ப்போமே..
திவாகர்
(இ. வ)
2011/8/10 Dhivakar <venkdh...@gmail.com>
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
//இந்த அரசன் காலத்திலேயே திருநாகேஸ்வரத்தில் ஒருவர் சுவாமியுடைய ஆடைகளைவிடப்பட்டிருந்த செங்கற்களை தம் வீடு கட்டப் பயன் படுத்தி இருக்கிறார்.//
தம் வசம் எடுத்துக் கொண்டார். அத்தோடு இல்லாமல் கோயிலுக்கு என
சிறு சந்தேகம். அந்த காலகட்டத்தில் செங்கற்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டதா ?
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
2011/8/11 LK <karth...@gmail.com>:
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
சுடுமண்ணோங்கிய நெடுநிலைக் கோட்டம் (மணிமேகலை)
இவை சுடும் மண் பற்றி இலக்கியம் பேசுது.
சரி, கல்வெட்டு?
epigraphia Indica Volume XVII - page 14 - 17
Place: Lakshithaayathanam (மண்டகப்பட்டு குடைவரை, விழுப்புரம்-செஞ்சி வழி)
இதன் வடமொழி தமிழ்படுத்தியதில், செங்கல், மரம், உலோகம், சுதை போன்ற
வழக்கமான கட்டுமானப் பொருட்கள் இல்லாமல் பிரும்மா, விஷ்ணு, சிவனுக்காக
விசித்திரசித்தன் எனும் அரசனால் எடுக்கப்பட்ட இலக்ஷிதக் கோயில் இது.
செல்வமுரளி, எல் கே,
போதுமோ..
வடமொழியும் வேணா தமிழில் தரவேண்டுமா.. இருக்கு - பத்திரமா ((
தி
2011/8/11 Selva Murali <mural...@gmail.com>:
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
2011/8/11 Vijay Vanbakkam <vcv...@hotmail.com>:
சிவத்துரோகத்தில் அளிக்கப்பட்ட ஒரு தண்டனையைப் பாருங்கள். அதுவும்மேற்சொன்னபடி ஊராரே சம்பந்தப்பட்ட குற்றம் இது.
காலம்: ராஜராஜ சோழனின் நான்காம் ஆண்டு (கி.பி. 988).
இடம்:படுவூர் நாடு (தற்போதைய செங்கல்பட்டு மாவட்டம்)
குற்றவாளி : ஊரார் சபையே தீர்ப்பு: திருவடந்தைக் கோயிலில் உள்ள ஸ்ரீவராக தேவருக்கு ஒரு நாளைக்கு ஒரு உழக்கு என்ற அளவில் வருடத்துக்கு 90 நாழி எண்ணெய் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தத் தவறும் பட்சத்தில் வட்டியாக 20 கழஞ்சு பொன் அரசு அதிகாரியான வள்ளுவநாட்டு துக்கய்யன் சாத்தான் வசூலிக்கவேண்டும், மேலும்
இப்படி தவறியதற்கு தண்டனைப்பணமாக நாலரைக் காணம் ஊர் தர்மாசனத்துக்கும் இந்தச் சபை செலுத்தவேண்டும். (SII Vol. - 8, No.87).
சமீபத்தில் பாகிஸ்தானில் ஒரு குற்றம் நிகழ்ந்தது. அமெரிக்க அரசாங்கத்து
அதிகாரி ஒருவர் தம் பின்னால் தன்னைத் தொடர்ந்த இரண்டு பாகிஸ்தானியரை
சந்தேகத்தின் பெயரில் சுட்டுக் கொன்றுவிட்டார். பாகிஸ்தானும் அவரை
சிறையில் போட்டுவிட்டது. பிறகு நடந்த அரசியல் பேரத்தில் அவர்
விடுவிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார்.
அந்த பேரம் என்பது அந்தக் கொலைக் குற்றம் செய்தவர், ’கொலையால்
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தக்க நிவாரணமும் உதவியும் செய்தால் அவர்
குற்றத்திலிருந்து விடுவிக்கப்படுவர்’ என்று ஒரு சின்ன சட்ட விலக்கு
விதிப்படி அவர் அப்படி உதவி செய்ய ஒப்புக்கொண்டால்
விடுவிக்கப்படுவதுதான். இதை அந்த அமெரிக்கரும் ‘மிகத் தாராள மனதோடு’
ஒப்புக்கொண்டு உதவிப்பணமும் கொடுத்துவிட்டு அமெரிக்காவுக்கு சுகமாகத்
திரும்பினார். இது சமீபத்தில் நடந்ததால் அந்த நினைவுக் குறிப்பிலிருந்து
தருகிறேன்.
இது அரசியல் சௌகரியத்துக்காக ஏற்பட்ட ஒரு காரியம் என்பதாலும் அதுவும்
அமெரிக்காவின் கோபத்திலிருந்து பாகிஸ்தான் மீள எடுத்துக் கொள்ளப்பட்ட
இந்த சட்ட விலக்கு ஏளனத்துக்குரியதாக பத்திரிகைகளால் விமரிசிக்கப்பட்டது.
ஆனால் சோழர் காலத்தில் பொதுமக்கள் மத்தியில் இப்படிப்பட்ட ஒரு சட்ட
விலக்கு இருந்தது. சாதாரண மக்களில் இப்படி ஒரு நிகழ்வு ஏற்பட்டால்
கொலையுண்டவர் குடும்பத்தைக் காப்பாற்ற கொலை செய்தவர் எல்லா வகைகளிலும்
உதவ வேண்டும். (1970 களில் ‘நீதி’ என்று ஒரு திரைப்படம், சிவாஜி
நடித்தது. அந்தப் படக் கதையும் இந்த வகைப் பட்ட சட்ட விலக்கினைக் கருவாக
வைத்து உருவாக்கப்பட்டதே). சாதாரண மனிதர்கள் என்று வரும்போது
இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை சட்டபூர்வமாக நோக்காமல் மனித நலனை மனதில்
கொண்டும், பாதிக்கப்பட்டவருக்கு என்ன செய்தால், எப்படி அதை
நிறைவேற்றினால், அவர்கள் துன்பத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள்
என்றும் ஊரார், நாட்டார், தர்மாசனம் போன்ற சபைகள் நெறிமுறையில்
செயல்பட்டன.
இப்போதெல்லாம் அரசியல் தலைவர்கள். அதிலும் ஆட்சியாளர்கள் எப்போதெல்லாம்
தங்கள் கட்சியாளர் குற்றம் செய்யும்போதெல்லாம் அவர்கள் மீது நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுகிறதோ அப்போதெல்லாம் ஒரே
வார்த்தையை கிளிப்பிள்ளை போல அடிக்கடி சொல்வர். அந்த வார்த்தை ‘சட்டம்
தன் கடமையைச் செய்யும்’ என்பது. ஆனால் சட்டம் அப்படி முன்வந்து தன்
கடமையைச் செய்யும்போதெல்லாம் ஆட்சியாளர்கள் குறுக்கிட்டு அவர்கள்
குற்றத்தை அப்படியே அமுக்கி விடுவர். இது ஆட்சியாளர் செய்யும் தவறு,
இடையூறு, தர்மத்துக்கும் சட்டத்துக்கும் எதிரானது,
ஆனால் சோழர் கால விதிமுறைகள் அப்படி அல்ல. கிராமங்கள் அளவில் ஊர்,
தர்மாசனம், பெரிய ஊர்களில் நாட்டார் என தீர்ப்பாயங்களை அமைத்து
அவர்களுக்குப் பரி பூரண அதிகாரமும் கொடுத்து இருந்ததால் அரசு இடையூறு
இல்லாமல் செவ்வனே தீர்ப்பு வழங்கப்பட்டது. சட்டம் தன் கடமையைச் செவ்வனே
செய்தபோது அரசிடமிருந்து எந்தக் குறிக்கீடும் கிடையாது. மாறாக இன்னமும்
சீராக நிறைவேற்றும்படிதான் ஆலோசனை கூறும்.
கொலைக் குற்றங்களுக்குக் கூட மரணதண்டனை என்பது ஏன் தரப்படுவது இல்லை
என்பது மிகுந்த ஆராய்ச்சிக்குரிய ஒன்று. எந்த குற்றத்துக்கும் மிகப்
பெரிய தண்டனை என்பது குற்றம் செய்தவன் தான் செய்த குற்றத்துக்காக
வாழ்நாள் முழுதும் வருந்தவேண்டும் என்ற ஒரு நீதியும், அத்துடன் இல்லாமல்
தான் செய்த குற்றத்தைக் கல்லில் எழுதி கோவில் சுவர்களிலோ அல்லது பொது
இடங்களிலோ பொறிக்கப்படும்போது குற்றம் செய்தவன் எப்படியெல்லாம்
அவமானப்பட்டு மனதுக்குள் புழுங்குவான் என்பது அனுபவிப்பனுக்குதான்
புரியும். இப்படி கல்லிலே பொறிக்கப்படும் எழுத்துகள் மற்றவர்கள்
பார்க்கும்போதெல்லாம் அவர்களுக்கும் ஒரு பாடம் என்பதும் இப்படிப்பட்டவை
பொது மக்கள் நலமுடன் வாழ உதவும் என்ற பொதுநல நோக்கையும் நாம்
கவனிக்கவேண்டும். சமூகம் என்பதே மக்கள் எல்லோரும் கலந்து ஒற்றுமையாக கூடி
குலவி இன்பமாக இருக்கவேண்டும் என்பதற்காக ஏற்பட்ட அமைப்புதான்.
பொது மக்கள் என்றில்லை. ஒரு சில சமயங்களில் ராஜ வம்சத்தினரோ,
குடும்பத்தினரோ (யுத்தத்தினால் அல்ல) ஒருவருக்கொருவர் சண்டை போட்டு அங்கு
ஒரு கொலை நிகழும்போது கூட இந்த சட்டவிதிகள் நியாயமாக
செயல்படுத்தப்படுகின்றன. அரச்ர்கள் அல்லது மிகப் பெரிய பதவியாள்ர்கள் என
வரும்போது, பேரரசனே இப்படிப்பட்ட நீதியையும் தண்டனையும் வழங்குவது உண்டு.
இரண்டாம் ராஜேந்திர சோழன் காலத்தில் சோழ விற்படைத் தலைவன் ஒருவனை
நாடாள்வான் எனும் இன்னொரு தலைவன் கொன்று விடுகிறான். சம்பந்தப்பட்ட
இருவருமே அரசாங்கத்தில் பெரிய பதவியில் உள்ளவர்கள் எனும்போது அரசனே ஒரு
ஆணை பிறப்பிக்கிறான். நடந்ததை ஒரு கல்லிலே பொறித்து, நாடாள்வானுக்கு 96
வெள்ளாடுகள் கோயிலுக்கு நிவந்தம் விட வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கிறான்
(ARE 227/1904). சரி, 96 ஆடுகள் நிவந்தமென்பது பணக்காரனான அவனுக்கு
ஒன்றும் பெரிது இல்லைதான். ஆனால் இங்கே மிகப் பெரிய இழுக்கு என்பது அவன்
பெயர் கல்லில் பொறிக்கப்பட்டு ஊருக்கும் எதிர்காலத்துக்கும் இவன் ‘ஒரு
கொலையாளி’ என்று தெரிவிப்பதுதான். இந்த அவமானம் ஒன்றே பெரிய தண்டனையன்றோ!
இதைப்போல இன்னொரு கொலை, அதுவும் எதிரிலிச் சோழ சம்புவரையரின் மகனைக்
கொன்ற கதை. எதிரிலிச் சோழ சம்புவரையர் சோழ நடு நாட்டின் தலைவர்.
ராஜாதிராஜ சோழனுக்கும் மூன்றாம் குலோத்துங்கனுக்கும் வலது கையாக துணை
நின்றவர். அவரது நாட்டில் ஏற்பட்ட ஒரு சண்டையில் அவரது மகன்
கொல்லப்பட்டார். மருமகள் ‘சதி’ யில் ஏறி உயிர்த் தியாகம் செய்தார். மகனே
கொல்லப்பட்டாலும், தந்தையும், நாட்டாரும் சேர்ந்து கொலைசெய்தவனுக்கு
கொடுத்த தண்டனை அவன் ஆயுட்காலம் முழுவதும் அங்குள்ள கோயிலுக்கு தினமும்
விளக்கு ஏற்றிக்கொண்டே இருக்கவேண்டும் (அவன் செலவில்) என்பதையும் கல்லில்
பொறித்து விட்டனர் (ARE 162/1932).
சில சமயம் எதிர்பாராதவிதமாக கொலைகள் நடந்துவிட, அவைகளுக்கும் கல்வெட்டு
வெட்டி கோயிலில் நிவந்தனங்கள் விட ஆணை செய்வார்கள். ராஜேந்திரசோழ
நிலகங்கராயன் எனும் தலைவன் கோபத்தால் ஒரு வீரனை வெட்டிச்
சாய்த்துவிட்டான். அவனுக்கு அரசனிடமிருந்தே ஆணை வந்தது
அவன் பாவத்தைக் கழுவ அங்குள்ள (தற்போதைய மரக்காணம்) பிரமீஸ்வரர்
கோயிலுக்கு 128 பசு மாடுகள் நிவந்தமாக வழங்கவேண்டும் என்று (ARE
159/1918) அந்த ஆணையும் கல்லில் பொறிக்கப்பட்டுவிட்டது..
ராமாயணத்தில் தசரதன், விலங்கு என நினைத்து, கண்ணிழந்த தந்தைக்கு தண்ணீர்
மொண்டு கொண்டிருந்த ஒரு ரிஷிகுமாரனைக் கொன்றதும் அதற்கு தசரதன் சாபம்
பெற்றதும், அந்த சாபத்தால் ராமனைப் பிரிந்தவுடன் இவன் உயிர் போகும்
என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இதே மரக்காணத்தில் கிடைத்த
கல்வெட்டு இதைப் போன்ற நிகழ்வினை சுட்டுகிறது. அரும்பொந்தர் எனும் ஊரினன்
வேட்டையாடும்போது இதைப் போலவே விலங்கு என நினைத்து ஒரு மனிதனைக்
கொன்றுவிடுகிறான். ஊரார் இதை தீர விசாரித்து நடந்தது ‘எதிர்பாராத
ஒன்றுதான்’ இருந்தாலும் தவறு தவறுதான் என்று பிரமீஸ்வரர் கோயிலுக்கு 12
ஆடுகளை தண்டனை நிவந்தமாக விதிக்கின்றனர் (ARE 33/1918). கல்வெட்டிலும்
அவன் செயல் ஏற்றப்படுகின்றது. திருவிளையாடல் புராணத்திலும் இது போன்ற
செயல், மரத்தின் கீழ் தங்கியிருந்த பிராம்மணன் மனைவி மீது, பறவை மீது
ஏவப்பட்ட அம்பு தவறிப் போய், அவள் மீது பட, அவள் இறக்கிறாள், பிராம்மணன்
வேடனைக் குற்றவாளியாக பாண்டிய அரசன் முன் நிற்க வைக்க, இறைவன் ஒரு
திருவிளையாடல் மூலம், ’விதி’ யின் செயலால் அவன் மனைவி இறக்கிறாள்,
என்றும் வேடன் குற்றவாளி இல்லை என்பதைத் தெரிவிப்பதாக கதை செல்கிறது.
ஆனால் இந்தக் கல்வெட்டு இந்த இறைவன் தீர்ப்பை மதிப்பது போல இருந்தாலும்
(அதாவது எதிர்பாராத செயல் என ஏற்றுக் கொண்டாலும்) செய்து விட்ட தவறுக்கு
தண்டனை உண்டு என தீர்ப்பு சொல்கிறது.
தற்கொலைகள் கூட காரணம் கேட்கப்படுகின்றது. தவறுக்குக் காரணமானவர்களை
விசாரித்து தண்டனை (கோயிலுக்கு விளக்கு அல்லது ஆடு மாடு நிவந்தம்தான்)
அளிக்கப்படுகிறது. கல்வெட்டிலும் குற்றவாளி பெயர் உண்டு. ராஜராஜன்
ஆட்சியில் முன்னூரில் நடந்த ஒரு கொலைக்கு, கொலையாளிக்குப் பதில் அவனது
மாமா தண்டனையை ஏற்றுக் கொள்வதாக ஒரு கல்வெட்டு அவரால் கோயிலுக்கு
நிவந்தம் கொடுக்கப்பட்டதாகவும் ஒரு கல்வெட்டு (67/1919). மருமகன் செய்த
தவறுக்கு மாமன் தண்டனை அனுபவிப்பதாக இப்போது எந்த மாமனும் முன்வருவாரோ..
கொலை நிகழ்வு நடந்தால் அனைத்து மக்கள் மத்தியிலே ஒரு குற்ற உணர்வை
உருவாக்குவது மிக மிக அவசியம். ஏனெனில் மனிதரிடையே அடிக்கடி எழும்
கோபதாபங்கள். விரோதங்கள், அதர்மச் செயல்கள் இவற்றை மக்கள் தங்கள்
கட்டுக்குள்ளே வைத்திருக்க வேண்டும் என்ற சமுதாய உணர்வின் அவசியத்துக்காக
நியாய தர்மத்தை சீராகத்தான் செய்து வந்தது சோழ அரசாங்கத்துக்
கட்டுப்பாட்டில் உள்ள இந்த தர்மாசனங்கள்.
திவாகர்
இ.வ
2011/8/11 Dhivakar <venkdh...@gmail.com>:
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
2011/8/12 Innamburan Innamburan <innam...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
சண்டை என்பது எப்போதுமே தவிர்க்கப்படவேண்டிய ஒன்று. அதுவும் இரு
ஊர்களுக்குமிடையே சண்டை வந்தால் அடிதடி கொலை வஞ்சம் இவைதான் மிஞ்சும்.
அப்படியே இரு ஊருக்குமிடையே சண்டை வந்தாலும், பொதுவாக இந்த ஊர்
சபைகள்தான் நியாயமான சபைகள் என்ற பெயர் பெற்றதாயிற்றே.. ஆலோசித்து
செயல்பட்டு தீர்த்துக் கொள்ளவேண்டாமோ.. ஆஹா.. இப்படியெல்லாம் பிரச்னைகள்
சடக்’கென தீர்ந்துவிட்டால் அது ராம ராஜ்ஜியம் என்ற பெயர் பெற்றுவிடுமே.
மகாஜனங்கள் விடுவார்களா? உலகம் தோன்றிய முதலே மக்களோடு சண்டையும்
ரத்தத்தோடு ரத்தமாகக் கலந்துவிட்டதே!
உணர்ச்சிவசப்படுதல், ஈகோ இவை போன்றவை அதுவும் இரு ஊருக்கிடையில்
எனும்போது அந்தந்த ஊரின் கௌரவம் முன்னிலைப்படுத்துவதால் சம்பந்தப்பட்ட
இரண்டு ஊர்களுமே விட்டுக்கொடுக்காதுதான். இரண்டு பூனைகள்
ரொட்டித்துண்டுக்காக சண்டைபோட்டு நடுவில் குரங்கை வரவழைத்து
அவஸ்தப்படுமே, அதுபோல ஒரு சம்பவம் ஒன்று.:
திருச்சி மாவட்டத்தில் உள்ள இன்றைய திருவெறும்பூர், ராஜராஜன் காலத்தில்
எறும்பியூர் என்ற பெயரால் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு வந்த
வழக்கு ஒரு விசித்திரமான வழக்கு, இந்த எறும்பியூர்க்கும், அதன் அண்டை
பிரதேசமான ஸ்ரீகாந்த சதுர்வேதிமங்கலம் ஊருக்கும் எல்லைத் தகராறு
ஏற்பட்டிருக்கிறது. எல்லைத் தகராறு என்பதில் எல்லையைத் தாண்டி நிலங்களைக்
கைப்பற்றிக் குடியேறுதல், பயிரை வளர்த்தல் அல்லது வளர்த்த பயிரை
அழித்தல், அவ்வூர் கால்நடைகளைக் கவருதல், பெண்களை அவமானப்படுத்துதல்
இவையெல்லாம் சேர்ந்துதான். சோழர்கள் காலத்தில் இப்படிப்பட்ட வழக்குகளின்
விவரங்கள் ஏதோ ஒன்றிரண்டுதான் கல்வெட்டு மூலம் கிடைத்துள்ளன.
இப்படி ஒரு அரியதான வழக்கை நடுநிலையாக தீர்க்க அரசன் இவர்கள் சம்பந்தம்
இல்லாத மூன்றாம் நாட்டு பிரதிநியான கிள்ளியூர் நாட்டைச் சேர்ந்த
வீரநாராயணன் செம்பியன் வடிவேலரை அனுப்பி வைக்கிறார். திருச்சி
மாவட்டத்தில் திருவெறும்பூர் பீபிலிகேஸ்வரம் கோயிலில் ஒரு கல்வெட்டு
இரு ஊர்களிலும் தீர விசாரித்து சம்பந்த இரண்டு ஊர்களான எறும்பியூர்,
மற்றும் ஸ்ரீகாந்த சதுர்வேதிமங்கலத்துக்கும் இடையேயான எல்லைகளை
வரையறுத்து, அந்தந்த ஊர் சபைகளுக்கும் தண்டனையும் சேர்த்தே
விதிக்கப்படுகிறது. நிலவரி, அதற்கு எச்சோறு எனப்படும் தண்டனை வரி,
ஸ்ரீகாந்த சதுர்வேதிமங்கலம் தடையில்லாத தண்ணீரை வாய்க்கால் மூலம்
எறும்பியூருக்கு உடனடியாக வழங்கவேண்டும் எனவும் உத்தரவுகள் அரசன் பெயரில்
போடப்படுகின்றன. மேலும் எந்தந்த நிலங்கள் கேள்விக்குரியதாகவும்,
ஊர்மக்களின் சண்டைகளுக்குக் காரணமாக உள்ளதோ, அந்தந்த நிலங்கை சோழ அரசு
எடுத்துக் கொண்டு, ஏலத்தில் விட்டு, அந்த ஏலத்தில் வந்த பணத்தை
திருக்கோயிலில் ’திருப்பதியம்’ (தேவாரம்) பாடுவதற்கு நிவந்தமாக
விடுவதாகவும் கல்வெட்டில் பொறித்துவிட்டனர் (ARE 123/1914) OR SII-13,
No.50)
இது சிறிய பிரதேசங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்றாலும், இப்போதைய
மாநில-நடுவண் அரசுகள் பாடம் கற்றுக் கொள்ளப்படவேண்டிய தீர்ப்பு இது.
குறிப்பாக காவிரிப் பிரச்சினையில் நடுவண் அரசால் இன்னமும் தீர்ப்பு
வழங்கப்படாமல் தீர்ப்பாயங்களில் நீண்ட நெடுங்காலமாக கிடக்கும் காவிரி
பிரச்சினை ஒரு உதாரணம். சோழர்களின் அரசு நடுவண் அரசு போன்ற அமைப்புதான்
என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.
நிலவரி, நீர்வரிகள் ஏய்ப்பவர்கள் அவ்வப்போது தண்டிக்கப்பட்டது நிறைய
கல்வெட்டுகளில் வருகின்றனர். (வரி ஏய்ப்பது என்பது எக்காலத்து
மக்களுக்கும் சகஜம் போலும்). நிலவரியை வசூல் செய்ய அவர்கள் நிலங்கள்
அரசுடையாமக்கப்பட்டு, பின் அவை விற்கப்பட்டு, நிலவரிகளைக் கழித்து ஏனைய
பணம் அவனுக்கு வழங்கப்படும்.ராஜேந்திரசோழனின் கல்வெட்டு (ARE 362/1917)
இப்படிக் குறிப்பிடுகிறது என்றால் ம், குலோத்துங்க சோழனின் கல்வெட்டில்
நிலவரி கட்டாமல் ஓடிப்போய்விட்ட ஒருவனின் நிலம் விற்கப்பட்டு கஜானாவில்
பணம் சேர்த்ததைப் பற்றியும் சொல்கிறது (ARE 531/1921). நிலவரி
ஏய்ப்பாளர்கள் சமயத்தில் சிறைத்தண்டனை கூட அனுபவித்தார்கள். மூன்றாம்
குலோத்துங்க சோழன் கல்வெட்டு (ARE 201,202/1912).
நிலவரி ஏய்ப்போருக்கு முதலில் தண்டம், இந்த மேல்வரி கட்டாவிட்டால் பிறகு
நிலத்தை உரிமைப்படுத்தி விற்றல், நில அளவையையும் மீறிய தொகையென்றால் சிறை
வாசம் என சட்டங்களை அடுக்காக வரையறுத்து தர்மாசனம் மிகச் சிறப்பாக
செயல்பட்டு அரசு பொக்கிஷத்தைக் காத்தும் வளர்த்தும் வந்தனர். ஆனால் அதே
போல வரி வசூலில் அதிகப்படியான செய்கைகளுக்குப் பொறுப்பானவர்களும்
தண்டிக்கப்பட்ட சம்பவங்கள் உண்டு. (ARE 148/1927) அப்படிப்பட்ட அதிக
வசூல் செய்யும் கிராம அதிகாரிகள் 5 மடங்கு தண்டம் செலுத்தவேண்டும்.
ஆகையினால் இவர்கள் அதி எச்சரிக்கையாகவே வசூல் செய்தனர் எனலாம்.ஏனெனில்
இப்படி அதிகாரிக்கு ஒத்துழைத்த ஊர் சபையினரும் தண்டனைக்குள்ளான
சம்பவங்கள் உண்டு.
திருவாண்டார் கோயிலுக்காக இறையிலியாக (வரிவிலக்கு) விடப்பட்ட
நிலத்துக்காக, அந்த ஊர் சபையினரான திருபுவனமாதேவி சதுர்வேதிமங்கலம் அந்த
நிலத்து வேளாண் இடம் வரியை வசூலித்து கட்டி விடுகின்றனர். இதை எதிர்த்து
அந்த நிலத்து வேளாண் கோயிலில் முறையிட, கோயில் நிர்வாகி (தேவகண்மி)
தர்மாசனத்தை நாடுகிறார். தர்மாசனம் ஊர் சபையினரைக் கண்டித்ததோடு
மட்டுமல்லாமல் அவர்களின் பொதுப்பணத்திலிருந்து 25 கழஞ்சு பொன் கோயிலுக்கு
தண்டனையாக செலுத்த வேண்டும் என்றும், அப்படி வரி வசூல் செய்த
கணக்குப்பிள்ளைக்கும் ‘வெட்டி’ (இதுவும் ஒரு தண்டனைதான்) யாக வசூல்
செய்யப்பட்டு, இந்த தீர்ப்பை எதிர்ப்பவர் ஒவ்வொருவரும் 15 கழஞ்சு பொன்
தர்மாசனத்துக்குக் கொடுக்கவேண்டும் என பயமுறுத்தியும், இறையிலி என்ற
புனிதத்தைக் காப்பாற்றியது. இந்தக் கல்வெட்டு ராஜராஜனின் 12 ஆவது
ஆண்டில், கி.பி.997 இல் பொறிக்கப்பட்டது (ARE 362/1919).
இந்தக் கல்வெட்டிலிருந்து இன்னொரு விஷயமும் நாம் தெரிந்து கொள்கிறோம்.
சில சமயம் சில செலவுகள் செய்யும்போது இக்கால கட்டத்தில் அழுதுகொண்டே
செய்கிறோம். தண்டச் செல்வு, வெட்டிச் செலவு என்றும் எரிச்சலாகப்
பேசுகின்றோம். இந்த தண்ட, வெட்டி என்ற சொற்கள் சோழர்கள் காலத்தில் செய்த
தவறுக்குத் தண்டனையாக பிராயச்சித்த பணமாகக் காண்கிறோம்.
சில ஊர்களில் கூடுதலாக வசூலிக்கப்படும் நில வரிகளை எதிர்த்து
அரசாங்கத்துக்கு பிராது செய்தால் அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது.
திருச்சி மாவட்டத்தில் உடையார் பாளையம் தாலுக்காவில் உள்ள மேலப்பழுவூரில்
அகஸ்தியேஸ்வரர் கோயிலில் உள்ள இரண்டு கல்வெட்டுகளின் படி (சுந்தர சோழர்
காலம் – (966/67) கரம்பியன் பிரந்தகன் என்பான் அங்குள்ள நகரத்தார்
சார்பில், அரசன் பழுவேட்டரைய அடிகளிடம், அதிகரிக்கப்பட்ட நிலவரிகளை ரத்து
செய்து, பழையபடி குறைவான அளவில் வரிகள் விதிக்கப்படவேண்டுமென கோரிக்கை
விடுக்க, உடனே பழுவேட்டரைய மாறவன் கந்தனார் ஒப்புக் கொள்வதாக இந்தக்
கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. (ARE 374/1924 & are 367/1924 or SII-13,
NOs.215 and 374). பழுவேட்டரையர் சுந்தர சோழர் காலத்தில் மிகுந்த
செல்வாக்குடன் சிற்றரசர்களுக்கும் மேலான நிலையில் விளங்கியது இந்த
கல்வெட்டுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
திவாகர்
இ.வ
2011/8/12 Dhivakar <venkdh...@gmail.com>
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தமிழ்நாட்டில் சரித்திர நூல் வெளியீடுவோர்களை அதிக தகுதி உங்களுக்கு
உள்ளது. உங்களைப்போன்ற வைரங்கள் தன்னடக்கம் என அமைதியாக இருப்பதால் தான்
கண்ணாடிக்கற்கள் வைரங்கள் என சொல்லிக்கொள்கின்றன.
நீங்கள் எழுதிய தொடரை போன்று ஒரு சிலது நூலாக வந்தால் தான் தமிழ்நாட்டில்
உள்ள ஒரு சிலருக்கு சரித்திர ஆராய்ச்சி என்றால் என்ன என புரியவைக்கலாம்.
ராஜசங்கர்
On Aug 15, 9:01 pm, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> நன்றி சுபா!
> கேள்விகள் கேளுங்கள். முடிந்தவரை பதில் சொல்கிறேன்.
>
> குறிப்பு: நூலாக விரியக்கூடாது என்றுதானே சடக்கென முடித்துள்ளேன். சரித்திர
> ஆய்வு நூல் வெளியிடுவதற்கெல்லாம் ஒரு தகுதி வேண்டும் என நினைப்பவன் நான்.
>
> அன்புடன்
> திவாகர்
>
> 2011/8/15 Subashini Tremmel <ksubash...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > மின்தமிழில் இம்மாதம் பொக்கிஷமாக அமைந்த கட்டுரை தொடர் இது. அதிலும் நமது
> > 10ம் ஆண்டு விழா கொண்டாட்ட மாதமான ஆகஸ்ட் மாதத்தில் இத்தொடரை திடீரென்று
> > தொடங்கி சிந்தனைக்கும் வாசிப்பிற்கும் விருந்தாகக் கொடுத்துள்ளீர்கள். நன்றி.
>
> > கட்டுரைத் தொடர்பான வேறு சில கேள்விகள் உள்ளன. இரண்டு வாரத்திற்குப் பின்னர்
> > கேள்விகளோடு மீண்டும் வருகின்றேன்.
>
> > குறிப்பு: இந்த ஆய்வை இன்னும் கொஞ்சம் விரிவாக்கி நூலாக வெளியிட்டால் சிறப்பாக
> > இருக்கும் என்பது என் எண்ணம்.
>
> > அன்புடன்
> > சுபா
>
> > 2011/8/15 Dhivakar <venkdhiva...@gmail.com>
>
> >> 6. (இறுதிப்பகுதி)
>
> >> *[image: uttiramerur.jpg]
> >> *
> >> *
> >> *
> >> *இதற்கு தகுதியற்றவர்கள் பின்வருமாறு:
>
> >> பதவி வகித்தபின் கணக்குக் காட்டாதிருந்தவன், இவர்களின் உறவினர்களும்,
> >> தாயாதியினர்களும் கூட தகுதியற்றவர்கள்
>
> >> பிறர் மனைவி புணர்ந்தவன்,
>
> >> கொலை, களவு, பொய், கள்ளுண்ணல் போன்ற நான்கு மாபாதகங்களைச் செய்தவனும்
> >> இவற்றுக்கு பிராய்ச்சித்தத்தை செய்திருந்தாலும் தகுதியற்றவனே
>
> >> ஸாகசக்காரன் மற்றும் உண்ணத்தகாததை உண்பவர்கள் கூட தகுதியற்றவர்கள்.*
>
> >> கி.பி 920 ஆண்டில் முதலாம் பராந்தக சோழர் காலத்தில் உத்திரமே கல்வெட்டு
> >> உத்திரமேரூர் வைகுண்ட பெருமாள் கோயிலில் வெட்டப்பட்டிருந்த கல்வெட்டுகளின் ஒரு
> >> பகுதிதான் மேற்சொன்னது. *குடவோலை மூலம் தேர்தல் நடத்தி ஊர்ச் சபையினர்
> >> தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் சிறப்பான விதத்தை*
> >> *சந்துவிக்ரிஹகன் ராஜவல்லபப் பல்லவரையரும் அ*
> >> *050. திகாரிகள் ராஜேந்திர சிங்க மூவேந்த வேளாரும் சொல்ல இத்தாம்ர சாசனம்
> >> எழுதி*
> >> *051. னேன் உடக்கோடி விக்கிரமா பரணத் தெரிந்த வலவலங்கை வேளைக்காறரில்
> >> நிலையுடைய பணை*
> >> *052. யான் நிகரிலி சோழன் மதுராந்தகனேன் இவைஎன் எழுத்து*
> >> *
> >> *
> >> 2011/8/14 Dhivakar <venkdhiva...@gmail.com>:
> >> > 2011/8/12 Dhivakar <venkdhiva...@gmail.com>
> >> >> 2011/8/11 Dhivakar <venkdhiva...@gmail.com>:
> >> >> > 2011/8/10 Dhivakar <venkdhiva...@gmail.com>
> >> >> >> 2011/8/8 Dhivakar <venkdhiva...@gmail.com>
>
> >> >> >> > மின் தமிழ் அன்பர்களுக்கு,
> >> >> >> > வணக்கம். சில காலமாகவே ஒரு நல்ல பதிவுத் தொடர் ஒன்றினை (அப்படி என்று
> >> நான் மட்டும் நினைத்துக் கொண்டு) மின் தமிழுக்கும், அதன் மூலம் மரபு
> >> விக்கிக்கும் அளிக்கவேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தேன். சமீபத்தில் இந்த
> >> ’விக்கிரமாதித்தி’ யின் செயல்கள் ஒரு பதிவில் வந்த போது, அவரை அதற்குப்
> >> பாராட்டினாலும் நாமும் ஏதாவது செய்யவேண்டும் என்பதை எனக்கு
> >> ஞாபகப்படுத்துவதற்காகவோ, என்று கூட நினைத்துக் கொண்டு அதுவும் கொஞ்சம்
> >> உற்சாகமாகவேத் தெரியவே, சரி எழுதிவிடலாம் என்று ஒரு முடிவுக்கே வந்து விட்டேன்.
> >> என்ன தலைப்பு?
> >> >> >> > சமீபத்தில் செல்வமுரளி தனியாக ஒரு மடலில் ஒரு தகவலைத்
> >> தெரிவித்திருந்தார். என்னுடைய திருப்பதி கல்வெட்டுக் கட்டுரையில் சட்டம்
> >> ஒழுங்கு முறை பற்றி அவர் தன் வக்கீல் நண்பர்களிடம் தெரிவித்ததாகவும்
> >> (இராஜேந்திர சோழன் திருப்பதியில் சட்டத்தைக் காட்டித் திருத்தியது) அவர்கள்
> >> மேலும் இது போன்ற விவரங்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று
> >> தெரிவித்ததாகவும், அவர் தெரியப்படுத்தினார். ஏன் இதைப் பற்றி விரிவாக எழுதக்
> >> கூடாது என்று தோன்றியது. இன்றைய நிலையில் நாம் (இந்தியாவில்) அனுபவித்து சட்டம்
> >> ஒழுங்கு நிலைமையும் தண்டனை என்பது கூட கேலிக்குரியதாகப் போய்விட்டதையும்
> >> நினைத்துப் பார்த்து இக் கட்டுரையை வடிவமைத்திருக்கிறேன்.
> >> >> >> > ஆகவே இந்த சட்டம் - ஒழுங்கு - தண்டனை இவை சோழர் காலத்தில் எப்படி
> >> இருந்தது என்பது நமக்கு முதலில் தெரியவேண்டும். நான் படித்தவரையில் சோழர்களின்
> >> ஆட்சிதான் தமிழகத்தின் பொற்காலம் என்பதில் எனக்கு அதிக உடன்பாடு உண்டு. ஏன் அது
>
> ...
>
> read more »
>
> uttiramerur.jpg
> 18KViewDownload