செட்டிநாட்டு உணவு வகைகள் - பெயர்க்காரணம்.

145 views
Skip to first unread message

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 16, 2017, 10:57:36 AM8/16/17
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
செட்டிநாட்டு உணவு வகைகள் பெயர்க்காரணம்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>

காய்கறிகளை அவித்துச் சேர்ப்பதால் -  அவியல்

பருப்புடன் காய்கறிகளைக் கூட்டி (கலந்து / சேர்மானம்) வைப்பதால் -  கூட்டு

காய்களைத் துவட்டி வைப்பதால் (துவளச் செய்தல் ) {நன்றாக வேக வைக்காமல் துவட்டுவது} - துவட்டல்

காய்கள் தெரியாமல் தொக்கி நிற்பதால் - தொக்கு

காரம் கூட்டிக் குழைவாகக் காய்கறிகளைச் செய்வதால் -  பச்சடி (பச்சன் என்பது வெள்ளாளனைக் குறிக்கும் சொல்; வெள்ளாளர் அடி ஒற்றி செய்யும் சமையல் { நகரத்தார் வெள்ளாளர்களை மணந்து வம்ச விருத்தி செய்தவர்கள் என்பதை நினைவு கூர்தலுக்காக என்பதாலும்} பச்சடி என்று வந்தது என்று கூறுவாரும் உளர்)

வாணலியில் இட்டு காய்களைப் புரட்டி வைப்பதால் - பிரட்டல்

எண்ணெயில் இட்டு பொரித்து வைப்பதால் - பொரியல்

காய்களை மண்டச் (மிகுத்தலால்) செய்வதால் - மண்டி

இலையை துவைத்து (இடித்து) வைப்பதால் - துவையல்

காய்களை உப்புப் போட்டு வறத்த (வெய்யிலில காயப்போட்டு சுருங்கச் செய்வது) வைப்பதால் வறத்தல்; வத்தல் என்று ஆனது

எண்ணெயில் இட்டு வறுத்து வைப்பதால் அது வறுத்தல்

எண்ணெயில் இட்டு வதக்கினால் வதக்கல்

சட்டியில் இட்டு காய்கறியை உருட்டிச் சேர்ப்பதால் திரட்டுவதால் திரட்டு அல்லது தெரட்டு

சிறு துண்டுகளாக நறுக்கி தெறக்கி செய்வதால் தெறக்கல். தெரக்கல். {தெரக்கல் என்றால் எண்ணெயில் வதக்குதல் என்று பொருள்}

வெஞ்ச அனம் அதாவது சூடான காய்கறி பதார்த்தம் என்பதால் வெஞ்சனம்

உப்பு காரம் போட்டு குழைத்து கஞ்சி போல் செய்வதால் குழம்பு

மசித்தலால் (நசிந்து குழைத்து விடுவதால்) மசிதல் அல்லது மசியல்
- முகநூல் பதிவு.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Suba

unread,
Aug 16, 2017, 3:54:22 PM8/16/17
to மின்தமிழ்
​அருமை

இதில் பல சொற்கள் எங்கல் குடும்பத்தில் புழக்கத்தில் இருந்தன. 
இப்போது நான் சமைப்பதே குறைவாகி விட்டது 😀

சுபா​

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி

தேமொழி

unread,
Aug 16, 2017, 4:15:47 PM8/16/17
to மின்தமிழ்
சமையல் கலை வல்லுநர்களுக்கு விளக்கமின்றியே புரிந்திருக்கும்.

இக்காலத்தின் மைக்ரோவேவ் சமையலுக்கும் ஒரு சொல் உருவாக்க வேண்டும்.

நான் எண்ணெய் பயன்படுத்துவதைக் குறைக்க வெங்காயம் பூண்டு போன்றவற்றை வதக்குவதில்லை.

வெட்டி ஒரு கிண்ணத்தில் போட்டு அளவுக்குத் தக்கவாறு 0:30 அல்லது 1:00 மைக்ரோவேவ் சூடு படுத்துவேன்.

தாளிப்பது என்பதெல்லாம் மறந்தாகிவிட்டது.

கொடுக்கப்பட்ட பட்டியலில் "தாளிப்பு""தாளிதம்" என்ற முறை https://ta.wiktionary.org/s/3rfp விடுபட்டுள்ளது.

..... தேமொழி 

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 17, 2017, 12:41:06 AM8/17/17
to mint...@googlegroups.com
நன்றி திருமிகு சுபா. திருமிகு தேமொழி.

பெரும்பாலன சொற்கள் எல்லாப் பகுதியிலும் புழக்கத்தில் உள்ளவையே.
1. செட்டிநாட்டுப் பகுதியில் வெந்நீர்படுத்தல் என்று ஒன்று உண்டு. ஆடு கிட்னி, பூ, சிறிது கொழுப்பு, டெண்டர் நெஞ்செலும்பு போன்றவற்றை தக்காளி, வெங்காயம் சேர்த்து
கொதிக்கவிடாமல் இளஞ்சூட்டில் சூப் செய்வதே வெந்நீர்படுத்தல் அல்லது வென்னிப்படுத்தல் ஆகும்.

2. இளங்குழம்பு அல்லது தண்ணிக்குழம்பில் அவரைக்காய், பீன்ஸ் போன்றவற்றை வைத்து வைக்கும் குழம்பு. கெட்டியாக இல்லாமல் சூப் மாதிரியும் இல்லாமல் இருக்கும். 

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
--

Dr.Chandra Bose

unread,
Aug 17, 2017, 7:21:50 AM8/17/17
to mint...@googlegroups.com
"வெந்நிப் பழசு" என்ற சொல் புழக்கம் இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் உண்டு. முதல் நாள் சமைத்த சோற்றை, மறு நாள் சிறிது நீர் ஊற்றி, சிறிது நேரம் கொதிக்க வைத்து, நீர் கோர்த்திருக்கும் போது சாப்பிடுவது. அதாவது ஏறத்தாழ வெந்நீர் ஊற்றிய பழைய சோறு எனலாம்.

எனக்கொரு சந்தேகம். யாராவது தீர்க்க முடியுமா? பழைய சோறு சாப்பிடுவது நல்லது என்று சொல்கின்றனர். ஆய்வும் தெரிவிக்கிறதாம்.  நீரிழிவு நோய் உள்ளவர்கள், பொதுவாக அரிசியில் சமைத்தவற்றை சாப்பிடக் கூடாது என்று சொல்கின்றனர். கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால். பழைய சோறாகச் சாப்பிடலாமா? கார்போஹைட்ரேட் குறைந்து புரோட்டீன் அதிகமாகிவிடுமா?

அன்புடன்
பெ.சந்திர போஸ்
அட்லாண்டா
17-08-17 காலை 7.30

Virus-free. www.avast.com

செல்வன்

unread,
Aug 17, 2017, 12:26:14 PM8/17/17
to mintamil
ஐயா

எல்லாமே சைவ உணவு சமையலாகவே இருக்கே? அசைவத்துக்கும் இடம் கொடுங்க :-) எங்களுக்கு செட்டிநாட்டு சமையல் என்றாலே அடுத்த நிமிடம் மனதில் தோன்றுவது மிளகு கோழி வறுவல் தான் :-)

செல்வன்

unread,
Aug 17, 2017, 12:28:04 PM8/17/17
to mintamil
2017-08-17 6:21 GMT-05:00 Dr.Chandra Bose <drchan...@gmail.com>:
"வெந்நிப் பழசு" என்ற சொல் புழக்கம் இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் உண்டு. முதல் நாள் சமைத்த சோற்றை, மறு நாள் சிறிது நீர் ஊற்றி, சிறிது நேரம் கொதிக்க வைத்து, நீர் கோர்த்திருக்கும் போது சாப்பிடுவது. அதாவது ஏறத்தாழ வெந்நீர் ஊற்றிய பழைய சோறு எனலாம்.

எனக்கொரு சந்தேகம். யாராவது தீர்க்க முடியுமா? பழைய சோறு சாப்பிடுவது நல்லது என்று சொல்கின்றனர். ஆய்வும் தெரிவிக்கிறதாம்.  நீரிழிவு நோய் உள்ளவர்கள், பொதுவாக அரிசியில் சமைத்தவற்றை சாப்பிடக் கூடாது என்று சொல்கின்றனர். கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால். பழைய சோறாகச் சாப்பிடலாமா? கார்போஹைட்ரேட் குறைந்து புரோட்டீன் அதிகமாகிவிடுமா?

பழைய சோறு, புதுசோறு, எதுவும் எடுக்ககூடாது ஐயா. சர்க்கரை நோயாளிகள் அரிசி, கோதுமை, ராகி, கம்பு, கேழ்வரகு ஆகியவற்றை எல்லாம் விசத்தை ஒதுக்குவது போல் ஒதுக்கவேண்டும். பழையசோற்றில் ஸ்டார்ச் சற்று குறைவு, ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு அதுவும் கெடுதலானதே

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 17, 2017, 12:32:12 PM8/17/17
to mint...@googlegroups.com
வெந்நீர்படுத்தல் குறித்து எழுதியிருக்கிறேனே. ட்ரை பண்ணிப் பாருங்கள். 

கோழிக்குழம்புதான் எனக்குப் பிடித்த Special.

On Aug 17, 2017 9:56 PM, "செல்வன்" <hol...@gmail.com> wrote:
ஐயா

எல்லாமே சைவ உணவு சமையலாகவே இருக்கே? அசைவத்துக்கும் இடம் கொடுங்க :-) எங்களுக்கு செட்டிநாட்டு சமையல் என்றாலே அடுத்த நிமிடம் மனதில் தோன்றுவது மிளகு கோழி வறுவல் தான் :-)

செல்வன்

unread,
Aug 17, 2017, 12:37:12 PM8/17/17
to mintamil
ஆம் ஐயா..தமிழகத்தின் அசைவ சமையலில் செட்டிநாட்டு சமையல் தான் கிங் என்பது என் கருத்து

பிரியாணிக்கு முஸ்லிம்களை அடித்துக்கொள்ள முடியாது..அதிலும் அந்த முகல் பிரியாணி...ஆகா

சைவம் என வந்தால் பிராமணர் சமையலுக்கு ஒரு தனி பக்குவம் உண்டு..புளிக்காய்ச்சலும், பெருமாள் கோயில் பொங்கலும்..அடடா..பேலியோவில் இருந்துகொன்டு எழுதினால் தெய்வகுற்றம் :-)

--

செல்வன்

Singanenjam Sambandam

unread,
Aug 17, 2017, 12:37:27 PM8/17/17
to mint...@googlegroups.com
நன்றிங்க... நான் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பயின்றவன்... செவிக்கு உணவு அளிப்பதில் மட்டுமல்ல வயிற்றுக்கு  உணவு அளிப்பதிலும்   எங்கள் அண்ணாமலை பல்கலைக் கழகம் புகழ் பெற்றது. நீங்கள் சொன்ன அனைத்தும் எங்களுக்கு அத்துப்படி 

2017-08-17 21:55 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
ஐயா

எல்லாமே சைவ உணவு சமையலாகவே இருக்கே? அசைவத்துக்கும் இடம் கொடுங்க :-) எங்களுக்கு செட்டிநாட்டு சமையல் என்றாலே அடுத்த நிமிடம் மனதில் தோன்றுவது மிளகு கோழி வறுவல் தான் :-)

Nagarajan Vadivel

unread,
Aug 17, 2017, 1:25:00 PM8/17/17
to மின்தமிழ்

2017-08-17 21:55 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
ஐயா

எல்லாமே சைவ உணவு சமையலாகவே இருக்கே? அசைவத்துக்கும் இடம் கொடுங்க :-) எங்களுக்கு செட்டிநாட்டு சமையல் என்றாலே அடுத்த நிமிடம் மனதில் தோன்றுவது மிளகு கோழி வறுவல் தான் :-)

Dr.Chandra Bose

unread,
Aug 17, 2017, 3:29:35 PM8/17/17
to mint...@googlegroups.com
சர்க்கரை நோயாளிகள் அரிசி, கோதுமை, ராகி, கம்பு, கேழ்வரகு ஆகியவற்றை எல்லாம் விசத்தை ஒதுக்குவது போல் ஒதுக்கவேண்டும்.

தகவலுக்கு நன்றி.
அரிசி, கோதுமை, ராகி, கம்பு, கேழ்வரகு  ஆகியவற்றை ஒதுக்க வேண்டும் என்றால், பின் என்ன தான் சாப்பிடுவது? ஒரு சிலர், அரிசிக்குப் பதிலாக, கேழ்வரகு சாப்பிடச் சொல்கிறார்களே...

கோதுமையும் நல்லது என்று கூறுகிறார்கள். உண்மையா?

அன்புடனும் நன்றியுடனும்

பெ.சந்திர போஸ்
அட்லாண்டா.

Virus-free. www.avast.com

செல்வன்

unread,
Aug 17, 2017, 3:44:56 PM8/17/17
to mintamil
2017-08-17 14:29 GMT-05:00 Dr.Chandra Bose <drchan...@gmail.com>:
சர்க்கரை நோயாளிகள் அரிசி, கோதுமை, ராகி, கம்பு, கேழ்வரகு ஆகியவற்றை எல்லாம் விசத்தை ஒதுக்குவது போல் ஒதுக்கவேண்டும்.

தகவலுக்கு நன்றி.
அரிசி, கோதுமை, ராகி, கம்பு, கேழ்வரகு  ஆகியவற்றை ஒதுக்க வேண்டும் என்றால், பின் என்ன தான் சாப்பிடுவது? ஒரு சிலர், அரிசிக்குப் பதிலாக, கேழ்வரகு சாப்பிடச் சொல்கிறார்களே...

கோதுமையும் நல்லது என்று கூறுகிறார்கள். உண்மையா?

அன்புடனும் நன்றியுடனும்

பெ.சந்திர போஸ்
அட்லாண்டா.

கோதுமை மிக கெடுதலானது ஐயா

என்ன சாப்பிடுவது என்றால் பேலியோ டயட் எடுக்கலாம். சர்க்கரை நோய் ஒரே வாரத்தில் காணாமல் போய்விடும்

முட்டை, இறைச்சி, அவகாடோ, சீஸ் எல்லாமே இதில் பிரதான உணவு

பேலியோ டயட் என கூகிளில் தமிழில் தட்டி தேடிபாருங்கள்.

செல்வன்

unread,
Aug 17, 2017, 3:50:06 PM8/17/17
to mintamil

தேமொழி

unread,
Aug 17, 2017, 4:02:01 PM8/17/17
to மின்தமிழ்

On Thursday, August 17, 2017 at 12:29:35 PM UTC-7, drchandrabose wrote:
சர்க்கரை நோயாளிகள் அரிசி, கோதுமை, ராகி, கம்பு, கேழ்வரகு ஆகியவற்றை எல்லாம் விசத்தை ஒதுக்குவது போல் ஒதுக்கவேண்டும்.

தகவலுக்கு நன்றி.
அரிசி, கோதுமை, ராகி, கம்பு, கேழ்வரகு  ஆகியவற்றை ஒதுக்க வேண்டும் என்றால், பின் என்ன தான் சாப்பிடுவது? ஒரு சிலர், அரிசிக்குப் பதிலாக, கேழ்வரகு சாப்பிடச் சொல்கிறார்களே...

கோதுமையும் நல்லது என்று கூறுகிறார்கள். உண்மையா?

தளம் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உதவும் தகவல் தரும்.

அத்துடன், 
நீரிழிவு நோய் இருப்பவர்கள் என்றால் diabetes test device ஒன்று வாங்கி 
பயன்படுத்துவது நல்லது.

குறிப்பிட்ட உணவுக்குப் பின் எந்த அளவு சர்க்கரை அளவு  ஏறுகிறது என நாமே பார்த்து தேவைக்கு ஏற்ப உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளலாம். 

 .... தேமொழி  

Dr.Chandra Bose

unread,
Aug 17, 2017, 5:40:06 PM8/17/17
to mint...@googlegroups.com
தகவல்களுக்கு நன்றி.

Pre Diabetes என்னும் நிலையில் நான் இருப்பதாகச் சொல்கிறார்கள். ( அளவு 85 / 120 மற்றும் முன்னப் பின்னே..)  ஒருவர் Low Sugar என்கிறார். 

வீட்டில் ஒன்றல்ல, இரண்டு Checking Device வைத்துப் பார்த்துக் கொண்டு வருகிறேன். Accu Check Active / Aviva Plus. 

வீட்டில் ஒன்றுக்கு இரண்டு டாக்டர்கள் இருப்பதால், ஏதாவது கேட்டால், "அப்பா நான் டாக்டரா? நீங்க டாக்டரா?" என்ற அதட்டல் வேறு.  நாள் ஒன்றுக்கு 10000 நடை இல்லை என்றால், கண்டனக் கனைகள் கண்டம் கடந்து வருகின்றன. 

பேலியோ டயட் எடுக்க ஆசை தான். இந்தியா திரும்பிய பின் இது குறித்துச் சிந்திக்க வேண்டும். உயிர் பயம் வேறு உள்ளது.   

இங்கு அட்லாண்டா மகள் வீட்டில் சோறு இல்லாமல், எப்போதும் கோதுமை சப்பாத்தி, புரோட்டா, சிக்கன் என்றே பொழுது போகிறது.  இருந்தாலும் எடை குறைய மறுக்கிறது. 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து, மேசையில் கம்ப்யூட்டரின் முன் எப்போதும் அமர்ந்த பாவத்தின் சம்பளம் இப்போது தெரிகிறது.

எப்படியோ நாட்கள் கழிகின்றன (அவ்வப்போது திருட்டுத்தனமாகத் தொட்டுக் கொள்ளும் கொஞ்சம் ஐஸ்கிரீம், டோநட் ஆகியவற்றுடன்)

மீண்டும் வழிகளைக் காட்டியமைக்கு நன்றி.

வணக்கம்.
மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
அட்லாண்டா.
17-08-17 மாலை 5.30

Virus-free. www.avast.com
Reply all
Reply to author
Forward
0 new messages