நினைவஞ்சலி: பேராசிரியர் பரமசிவம்

60 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
Jan 16, 2014, 5:49:16 AM1/16/14
to மின்தமிழ், Subashini Tremmel, K R A Narasiah

திரு.நரசய்யா அவர்களின் சகோதரர் பேராசிரியர் பரமசிவம். சமூக நலனையே தம் வாழ்வின் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர் இவர். 1998ல் மத வெறியர்களால் தாக்கிக் கொல்லப்பட்டார். அன்னாரின் நினைவாஞ்சலி செய்தி இன்று தமிழ் ஹிந்துவில். 

இன்னமும் கூட மதத்தின் பெயரால் வெறித்தனமும்  கொடுமைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. எப்போது இந்த கொடூரமான சிந்தனை நம் சமூகத்திலிருந்து மாறும்?
சுபா

நன்றி : ஹிந்து

நினைவஞ்சலி: பேராசிரியர் பரமசிவம்

அச்சிட அச்சிட 

professorராமலிங்க ஐயர் மற்றும் நாகம்மாள் தம்பதிகளின் மகனாக பிறந்தவர் பேராசிரியர்பரமசிவம். பேராசிரியர் பரமசிவன் குடும்பத்தினர் அனைவரும் சமுதாய சமத்துவத்தினை தங்கள் வாழ்வில் கடைபிடிப்பவர்கள். இவரது குடும்பத்தினர் அனைவரும் சுவாமி சிவானந்தரின் சீடர்கள். இவரது தந்தையார் சுவாமி சிவானந்தரின் நெருங்கிய சீடர். அவரின் வேண்டுகோளினை ஏற்று பரமசிவன் உட்பட 4 சகோதரர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் பிரம்மச்சாரிகளாக வாழ்ந்திட விரதம் பூண்டவர்கள்.இவரது குடும்பத்தினர் காந்தியக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு அதன்படி வாழ்ந்துவருபவர்கள். ஜாதி சிந்தனை கடுகளவு கூட இவர்கள் வீட்டில் இருக்கின்ற எவரிடமும் காண முடியாது. பேராசிரியர் பரமசிவமும் இதற்கு விதிவிலக்கல்ல. இவர் இளைஞர் முன்னேற்றத்தில் பெரும் ஈடுபாடு கொண்டவர். இதற்காக “அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்” (ABVP) அமைப்புடன் தம்மை இணைத்துக்கொண்டவர், சமூகநீதி கல்வி வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு சம உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏபிவிபி மூலம் கருத்தரங்குகளை மதுரையில் நடத்தியவர். சாதி மத வேறுபாடுகள் இல்லாமல் மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி செய்தவர். பல இஸ்லாமிய மாணவர்களுக்கு இவர் நிதி உதவி செய்திருக்கிறார். இந்து தருமத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். ராமகிருஷ்ண மடத்துடன் தொடர்புடைய இவர் தமது கொலைக்கு சில நாட்கள் முன்னால் கூட சில கோவில்களுக்கு கிருஷ்ண விக்கிரகங்களை அளித்துள்ளார்.

28-03-1998 அன்று மதவெறியர்களால் தெருவில் படுகொலை செய்யப்பட்டார் பேராசிரியர் பரமசிவம் அவர்கள். இவர் கொலை செய்யப்பட்ட போது அன்று முதலமைச்சராக இருந்த இன்றைய முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை. பரமசிவத்தின் சகோதரர் எழுத்தாளர் நரசய்யா அப்போது வேதனையுடன் ஒரு பத்திரிகையில் கூறினார்: “ஏபிவிபியில் இருந்த ஒரே காரணத்துக்காக என் தம்பி கொல்லப்பட்டிருக்கிறான். யாருக்கும் எந்தவிதத் தீங்கையும் செய்யாதவன். நல்லவர்கள் யாருமே நடமாட முடியாத சூழ்நிலை இப்போது இருக்கிறது. இதை அரசும் காவல்துறையும் சீர் செய்ய வேண்டும். இல்லையெனில் பரமசிவத்தைப் போல இன்னும் பலர் கொலை செய்யப்படலாம் என்ற நிலை உருவாகிவிடும்.”students
வாழ்வின் சேவை நினைவிலும் தொடர்கிறது:

சுவாமி விவேகானந்தர் வழி வாழ்ந்த ஏழைகளுக்காகவே வாழ்ந்து வந்த பேராசிரியரின் இலட்சியப் பணிகளைத் தொடர்ந்து செய்து வர மதுரை நகர் ஏபிவீபி கார்யகர்தர்கள் முடிவெடுத்தனர். அதன்படி பேராசிரியர் படுகொலை செயப்பட்டு ஓராண்டு நினைவு நாளில் (28.03.1999) அவரது பெயரில் வாராந்திர மருத்துவ ஆலோசனை மையம் நடத்திட துவங்கினார். இம்முகாமினை பா ஜ க வின் பொதுச் செயலாளரராக அச்சமயத்தில் இருந்த திரு கே என் கோவிந்தாச்சாரி அவர்கள் வந்து துவக்கி வைத்தார். திரு கோவிந்தாச்சாரி அவர்களால்தான் பரமசிவன் அவர்கள் ஏபிவீபி பணியில் ஈடுபடத் துவங்கினார். அன்றிலிருந்து இந்த வாராந்திர இலவச மருத்துவ முகாம் தொடர்ந்து கடந்த 11 வருடங்களாக நடை பெற்று வருகிறது. வாரந்தோறும் சராசரி 75 முதல் 125 நோயாளிகள் பயன் அடைந்து வருகின்றனர். நல்ல டாக்டர்கள் வருகின்றனர். கட்டணம் எதுவும் வசூலிப்பது இல்லை. நல்ல தரமான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. முதல் முறையாக நோயாளி வருகின்ற சமயத்தில் மட்டும் பதிவுக் கட்டணமாக ரூ.5 மட்டும் வசூலிக்கப் படுகிறது. இதுவரை 515 வாராந்திர மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன.

வாரம்தோறும் சுமார் ரூ,5,000/- ரூபாய் பெறுமானமுள்ள மருந்துகள் வழங்கப்படுகிறது. இம்முகாம் நடைபெற்று வருகின்ற இடத்திற்கு மாதம் தோறும் வாடகை மற்றும் பராமரிப்பு செலவு ரூ. 6,000/- ஆகின்றது. மொத்தமாக வருடத்திற்கு சுமார் 3.5 லட்சம் தேவைப்படுகிறது. ஏபிவீபி முன்னாள் தொண்டர்கள், ஆதரவாளர்கள், மெடிக்கல் ரெப் மற்றும் தற்போதைய ஏபிவீபி தொண்டர்கள் பலரின் ஆதரவினால் இம்முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முகாமினை தொடர்ந்து நடத்துவதற்கு மதுரையில் தொண்டர் குழு உள்ளது. இந்த முகாமினால் அதிக அளவில் பயன் பெற்றவர்கள் சௌராஷ்ட்ர சமுதாயத்தினர், கூலிவேலை, பாரம்சுமக்கும், ட்ரை சைக்கிள் ஓட்டும் சமுதாயத்தினர், கணிசமான எண்ணிக்கையில் முஸ்லிம்கள் ஆவார்கள். இதிலும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பயனடைதுள்ளனர். இந்த இலவச மருத்துவ முகாமின் 11 வது ஆண்டு துவக்கவிழா மார்ச் 22 அன்று நடைபெற்றது. பேராசிரியர் கே ஆர் பரமசிவன் நினைவு வாராந்திர இலவச மருத்துவ ஆலோசனை மையத்தினை ஏபிவீபி மற்றும் இளய பாரதம் சேவா டிரஸ்ட் இணைந்து நடத்தி வருகிறது.

medical-1பரமசிவம் நினைவு மருத்துவ முகாம்

பேராசிரியர் படுகொலையில் இன்றளவும் நியாயம் கிடைத்திடாத அளவிலும் கூட அவரது நினைவு தினமும் மானுடத்துக்கு சேவை செய்யும் தினமாக மாறியுள்ளது, அவருடைய வாழ்க்கையின் தூய சிறப்பினை மேலும் நிலைநாட்டுகிறது. அன்னிய மதவெறியின் ஆதிக்க கொலைகரங்களுக்கு அப்பால் இன்றும் நம் இந்து தருமம் வாழ்வது இத்தகையோரின் தியாகங்களால்தாம். தமிழ் கூறும் நல்லுலகின் அனைத்து இந்துக்களும் அவருக்கு சாதி, கட்சி, இயக்க பாகுபாடு இல்லாமல் அஞ்சலி செலுத்த கடமைப்பட்டிருக்கிறார்கள். தமிழ் இந்து.காம் அவருக்கு தமது சிரத்தாஞ்சலியை செலுத்துகிறது.

[தகவல்களுக்கு நன்றி: விஜயபாரதம் ஆசிரியர் திரு. சடகோபன்] 

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Subashini Tremmel

unread,
Jan 16, 2014, 5:51:08 AM1/16/14
to மின்தமிழ், Subashini Tremmel

2014/1/16 Subashini Tremmel <ksuba...@gmail.com>

திரு.நரசய்யா அவர்களின் சகோதரர் பேராசிரியர் பரமசிவம். சமூக நலனையே தம் வாழ்வின் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர் இவர். 1998ல் மத வெறியர்களால் தாக்கிக் கொல்லப்பட்டார். அன்னாரின் நினைவாஞ்சலி செய்தி இன்று தமிழ் ஹிந்துவில். 
 
சிறு திருத்தம். 28 மார்ச் 2009 அன்று வெளிவந்த பதிவு இது.

சுபா 

Dhivakar

unread,
Jan 16, 2014, 6:00:59 AM1/16/14
to மின்தமிழ்
யுகாதித் திருநாளன்று நடந்த வன்முறை இது.

யுகாதி வாழ்த்துகளை அன்று திரு நரசய்யா சாருடன் பகிர்ந்து கொள்வதில்லை. ஒவ்வொரு வருட யுகாதியன்று இந்த விஷயம் என்னைத் துன்பப்படுத்தும்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Innamburan S.Soundararajan

unread,
Jan 16, 2014, 6:06:08 AM1/16/14
to mintamil, K R A Narasiah, Subashini Tremmel
ஸுபாஷிணி, இது மிகவும் முக்யமான பதிவு. என்றென்றும் மறக்கக்கூடாத நிகழ்வு. திரு. நரசய்யாவின் எச்சரிக்கை யாவதும் மதிக்க வேண்டிய ஒன்று.
பேராசிரியர் பரமசிவம் அவர்களுக்கு என் அஞ்சலி.

இன்னம்பூரான்

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jan 16, 2014, 6:13:03 AM1/16/14
to Minthamil
காலஞ் சென்றபேராசிரியர் பரமசிவம் அவர்களுக்கு எங்கள் அஞ்சலி.

சாந்தா மற்றும் நடராஜன்

2014/1/16 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே

C.M உதயன்

unread,
Jan 16, 2014, 6:16:25 AM1/16/14
to mintamil, Subashini Tremmel, K R A Narasiah
பரமசிவம் / நரசய்யா அவர்களின் மதுரை வீட்டின் எதிர் வீடு என் பாட்டி வீடு. பரமசிவம் அய்யாவை சிறுவயதிலேயே அறிவேன். நாங்கள் விளையாடும் போது எங்களுடன் அவரும் சில சமயம் விளையாடுவதுண்டு.
இந்த துர்நிகழ்வு நடந்த இரவு நானும் அங்கு தான் இருந்தேன், வீட்டின் அருகிலேயே நடந்தது. இரவு முழுதும் அழுதது, மறக்க முடியாத இரவு அது.
அந்த கக்கன் தெரு, செட்டியார்கடை பால் டிப்போ அருகே செல்லும்போதுலாம் பரமசிவம் அய்யாவை நினைத்துக் கொள்வேன்

2014/1/16 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

Tthamizth Tthenee

unread,
Jan 16, 2014, 6:36:26 AM1/16/14
to mint...@googlegroups.com, Subashini Tremmel, K R A Narasiah
​திரு நரசிய்யா அவர்களின் சகோதரர்  பேராசிரியர் திரு  பரமசிவம்  அவர்களுக்கு   எங்கள் அஞ்சலியைத் தெரிவிக்கிறோம்

அன்னாரின்  கொடூரக் கொலை  திரு நரசிய்யா குடும்பத்தாரை எவ்வளவு பாதித்திருக்கும்  என்பதை உணரமுடிகிறது

ஆழ்ந்த வருத்தங்கள்

இவரைப் போன்ற   நல்ல உள்ளங்களை வெட்டிச் சாய்க்கும் மத வெறியர்களை கண்டிக்க வேண்டும், பிரிவினை வாத சக்திகளை வளர்ப்போரை இனங் கண்டு   அவர்களையும் நல்வழிப்படுத்த வேண்டும்

மத வெறிகளை அழிக்க   ஆன்றோர்  கூறிய வழிமுறைகளை சாத்வீகத்தை வளர்க்கும் வழி முறைகளில்  மக்களை திசை திருப்ப வேண்டும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2014/1/16 C.M உதயன் <udhay...@gmail.com>

N. Kannan

unread,
Jan 16, 2014, 8:40:15 AM1/16/14
to மின்தமிழ்
2014/1/16 Subashini Tremmel <ksuba...@gmail.com>

இன்னமும் கூட மதத்தின் பெயரால் வெறித்தனமும்  கொடுமைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. எப்போது இந்த கொடூரமான சிந்தனை நம் சமூகத்திலிருந்து மாறும்?
சுபா

நான் யார்? எனும் கேள்விக்கு விடை தெரியாததால் அவரவர் விரும்பிய வண்ணம், சமூகம் தரும் அடையாளங்களைத்தாங்கிய இலவச நோட்டீஸ் போர்டாக மனிதர்கள் உலாவி வருகிறார்கள். மதம் ஒரு அடையாளமே அல்ல. ஆனால் தீவிர இந்து, தீவிர முஸ்லிம், தீவிர கிறித்தவர் என்பதெல்லாம் பெரிய பயித்தியக்காரத்தனம். இந்த துர்மரணத்தை நரசய்யா அவர்கள் குடும்பம் எதிர்கொண்டவிதம் போற்றி பாராட்ட வேண்டியது. ஆயினும் இதை வைத்து நுண் அரசியல் செய்ய எல்லாக்குழுக்களும் காத்திருக்கின்றன. இதுவொரு இடையறாத மானுடப்போராட்டம். படைப்பின் மிகப்பெரிய பளு, நான் யார்? எனும் கேள்வி.

நா.கண்ணன்

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jan 16, 2014, 8:02:10 PM1/16/14
to மின்தமிழ்
என் கல்லூரிக் காலத்தில் நடந்த நிகழ்வு இது!.. மதுரையை உலுக்கிய விஷயம்!!..இந்த கொடுமையான நிகழ்வு ஏற்படுத்திய பாதிப்பு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது...பேராசிரியர் திரு.பரமசிவம் அவர்களுக்கு என் அஞ்சலி!!..

2014/1/16 N. Kannan <navan...@gmail.com>
    
Rathinam Chandramohan

unread,
Jan 17, 2014, 11:49:36 AM1/17/14
to mint...@googlegroups.com
பேராசிரியர் பரமசிவம் அவர்களுக்கு என் அஞ்சலி.

2014/1/17 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>
என் கல்லூரிக் காலத்தில் நடந்த நிகழ்வு இது!.. மதுரையை உலுக்கிய விஷயம்!!..இந்த கொடுமையான நிகழ்வு ஏற்படுத்திய பாதிப்பு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது...பேராசிரியர் திரு.பரமசிவம் அவர்களுக்கு என் அஞ்சலி!!..

2014/1/16 N. Kannan <navan...@gmail.com>
    
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
Dr.R.Chandramohan
Principal
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India
Reply all
Reply to author
Forward
0 new messages