கண்ணொளி வழங்கும் வெள்ளைப் பொன்னாங்கண்ணி

189 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Jan 10, 2016, 3:43:33 PM1/10/16
to mintamil
கண்ணொளி வழங்கும் வெள்ளைப் பொன்னாங்கண்ணி Alternanthera sessilis (White )

தமிழகத்தில் பரவலாக காணப்படும் மூலிகை பொன்னாங்கண்ணி. இதில் மஞ்சள் பூ கொண்ட பொன்னாங்கண்ணி மஞ்சள் பொன்னாங்கண்ணி எனவும் வெள்ளைப் பூ கொண்ட பொன்னாங்கண்ணி வெள்ளைப் பொன்னாங்கண்ணி எனவும் அறியப்படுகிறது. மஞ்சள் பொன்னாங்கண்ணி சந்தையில் விலைக்கு விற்கப்படுகிறது. ஆனால் வெள்ளைப் பொன்னாங்கண்ணி அவ்வாறு சந்தையில் விற்கப்படுவதில்லை. இந்த வெள்ளைப் பொன்னாங்கண்ணி பொதுவாக மழைகாலங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களிலும் பாறைச்சல்லிகள் கொட்டிக்கிடக்கும் இரயில் தண்டவாளப்  புறங்களிலும் மிகுதியாக வளர்ந்து காணப்படுகிறது. ஆனால் மக்களால் அவ்வளவாக விரும்பி உண்ணப்படுவதில்லை.   

இக்கீரை குளிர்ச்சித் தன்மைகொண்டது அதனால் கண்ணிற்கு அதிக குளிர்ச்சி ஊட்ட வல்லது. சிலவகை கண் குருட்டையும் இக்கீரை நீக்கவல்லது. இந்தக்  கீரையின் இலைகளைப் பறித்து பூக்களை நீக்கி இயல்பாக மற்ற கீரைகளைப் போல் சமைத்து உண்ணலாம். 

நான் திராடகம் எனப்படும் கண்ணாடியில் உருவத்தை உற்றுப்பார்க்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். வள்ளாரும் இதைச் செய்துள்ளார். இப்பயிற்சியினால் திடீர் என்று ஒரு நாள் என் கண்ணில் ஒளி வாங்கும் தன்மை குன்றிவிட்டது. அதனால் எழுத்துகள், இலைகள் தனித் தனியே காணமுடியாமல் கொத்துக் கொத்தாகவே காட்சியளித்தன. அதனால் கண்ணாடியை உற்றுப் பார்க்கும் பயிற்சியை விட்டொழித்தேன். ஆனாலும் கண்பார்வை மங்கலாகத் தான் தெரிந்தது. இதாவது, இரட்டைக்காட்சியாகவே தெரிந்தது. பரம்பரை சித்தமருத்துவரிடம் கண்ணாடி பார்த்ததால் என் பார்வை பாதிப்படைந்ததைத் தெரிவித்தேன் அலைபேசியில். அதற்கு அவர் ஏன் கண்ணாடியை உற்று பார்த்தீர்கள். அவ்வாறு செய்வதனால் கண்ணில் காற்றின் நிலை மாறிவிடும் அதனால் காட்சியில் மெல்லிய கரும்படலம் தோன்றும் பார்வை மங்கும் என்றார். வாருங்கள் நான் சொட்டு மருந்து தருகிறேன். பார்வை சரியாகும் என்றார். ஆனால் நான் அந்த மருத்துவரை சந்தித்து சொட்டு மருந்து வாங்கவில்லை.  

சென்னையில் பெய்த அடைமழையால் வேறு எந்த கீரையும் கிட்டாது போகவே இந்தக் வெள்ளைப் பொன்னாங்கண்ணிக் கீரையை ஒரு கட்டு உரூவா 15/- என சந்தையில் விற்றனர். வெள்ளத்தில் சாக்கடை கலந்ததால் கீரையில் அப்படியே சாக்கடை நாற்றம் படிந்திருந்தது. நான் வாங்காமல் வந்துவிட்டேன். ஆனால் 10 நாள் கழித்து எமது மனையிலேயே இக்கீரை வளர்ந்து இருந்தது. அதைப் பறித்து இருநாள்கள் சமைத்து காலையும் நண்பகலும் உண்டேன். என்ன வியப்பு என் கண்ணின் ஒளி வாங்கும் திறன் கூடியது கருமப்படலம் மறைந்து காட்சிகள் நன்றாகத் தெரிந்தன. மீண்டும் மூன்றாவது முறையாக இக்கீரையை நேற்றும் சமைத்து உண்டேன். காட்சி முன்போலவே தெளிவாக அருமையாகத் தெரியத்தொடங்கியது. மங்கல் பார்வை உள்ளவராயின் நீங்களும் இக்கீரையை உண்டு பயனடையலாமே.    



தேமொழி

unread,
Jan 10, 2016, 5:05:16 PM1/10/16
to மின்தமிழ்
இந்த மூலிகை / கீரைக்கு  பொன்னாங்கண்ணி என்ற பெயர்வரக் காரணமே அது கண்பார்வைக்கு உதவுவதால்தானோ?

இதனை இக்கால அறிவியல் ஆய்வுமுறையில் உறுதி செய்து தற்கால மருத்துவதுறையின் அங்கீகாரம் பெறலாமே.

நம் நாட்டில் தொன்று தொட்டு வளர்ந்த மருத்துவத்திற்கும் நவீன மருத்துவத்திற்கும் இடையில் இடைவெளி அதிகம்.  

சென்ற முறை 2015 க்கான மருத்துவ நோபல் பரிசு,  சீனாவின்  பண்டைய மருத்துவ மூலிகையினை  சிகிச்சைக்கு உதவும் முறையில் கொண்டுவந்த சீனர் ஒருவருக்கு கிடைத்தது (Tu Youyou is a Chinese pharmaceutical chemist and educator. She is best known for discovering artemisinin and dihydroartemisinin, used to treat malaria, which saved millions of lives - https://en.wikipedia.org/wiki/Tu_Youyou)

..... தேமொழி

Megala Ramamourty

unread,
Jan 10, 2016, 5:38:46 PM1/10/16
to மின்தமிழ்

//இந்த மூலிகை / கீரைக்கு  பொன்னாங்கண்ணி என்ற பெயர்வரக் காரணமே அது கண்பார்வைக்கு உதவுவதால்தானோ?//


இல்லை தேமொழி. இந்தக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் பொன்போல் தகதகக்குமாம்.  அதனால்தான் இதன் பெயர் பொன்னாங்கண்ணி.  :-))

சேசாத்திரி ஐயா சொல்வதுபோல் பார்வைக்கோளாறுகள் பலவற்றுக்கு இது அருமருந்து என்று சொல்லப்படுகிறது. 

Ponnanganni is full of iron, calcium and other vital nutrients that makes our hair and skin glow. It is called sessile joy weed in English, gudrisag in Hindi and it's botanical name is Alternanthera Sessilis. The name ponnanganni itself means glow like gold. Ancient books also advice that if we eat ponnanganni daily for a period of 48 days, our body will start glowing. That is because it so rich in vital minerals and nutrients that in that time frame of 48 days, it heals the body of all deficiencies. It is advisable to include ponnanganni keerai at least weekly twice in our diet. 




அன்புடன்,
மேகலா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Jan 10, 2016, 7:07:34 PM1/10/16
to mintamil



Megala Ramamourty

unread,
Jan 10, 2016, 7:21:12 PM1/10/16
to மின்தமிழ்
செல்வன்,

நீங்கள் என்னதான் மாட்டிறைச்சியிலுள்ள சத்துக்களின் பட்டியலை மொத்தமாய்த் தந்தாலும், நாங்கள் கைக்கொண்டிருக்கும் சைவக்கொள்கை மாட்டிறைச்சியின் ’மாட்டு’க் காதல்கொள்ளத் தடையாயிருக்கின்றதே!!!  
நாங்கள் என் செய்வோம் ஐயனே?  :-)))


அன்புடன்,
மேகலா



On Sun, Jan 10, 2016 at 7:07 PM, செல்வன் <hol...@gmail.com> wrote:



Megala Ramamourty

unread,
Jan 10, 2016, 7:25:04 PM1/10/16
to மின்தமிழ்

நண்பர்களே!


திரையோடித் திரவியம் தேடத்தேவையான கல்வி வழங்குவது கல்விச்சாலை!

(உடலின்) திரையோடி நரையோடி இளமையோடு நீங்கள் நடைபோட நாடவேண்டிய ’சாலை’ ஒன்று(ம்) இருக்கிறது

அதனைக் கண்டுபிடிப்போர்க்குப் ’பொற்கிழி ஒன்று காத்திருக்கிறது!   டும் டும் டும்! :-))  



அன்புடன்,

மேகலா  







செல்வன்

unread,
Jan 10, 2016, 7:26:20 PM1/10/16
to mintamil
நம் முன்னேற்றத்துக்கு ஒரு கொள்கை தடையெனில் கொள்கையை மாற்றிகொள்வதில் தவறில்லை அல்லவா? :-)

பெண்கள் வேலைக்கு போக கூடாது, கடல் தாண்டி போககூடாது போன்ற பல கொள்கைகளை நாம் மாற்றியதால் தானே முன்னேறினோம்?

மேலும் பொன்னாங்கண்ணியில் உள்ள இரும்பு, கால்சியம், வைட்டமின் ஏ எதுவும் உடலை சேராது. ஆக கண்பார்வைக்கு நல்லது என்றால் அது ஈரலே

மருத்துவர் வெஸ்டன் ஏ ப்ரைஸ் தெரிவித்த ஒரு சம்பவத்தை பதிகிறேன்


In his pioneering work, Nutrition and Physical Degeneration, Weston Price tells the story of a prospector who, while crossing a high plateau in the Rocky Mountains, went blind with xerophthalmia, due to a lack of vitamin A. As he wept in despair, he was discovered by an Indian who caught him a trout and fed him “the flesh of the head and the tissues back of the eyes, including the eyes.”1 Within a few hours his sight began to return and within two days his eyes were nearly normal. Several years previous to the travels of Weston Price, scientists had discovered that the richest source of vitamin A in the entire animal body is that of the retina and the tissues in back of the eyes. - See more at: http://www.westonaprice.org/health-topics/abcs-of-nutrition/vitamin-a-saga/#sthash.YEb8sUsn.dpuf

தேமொழி

unread,
Jan 10, 2016, 7:57:39 PM1/10/16
to மின்தமிழ்
எங்கிருந்து கிடைத்தது இத்தகவல் செல்வன், இனிமேல் சுட்டி கொடுக்கவும். 

On Sunday, January 10, 2016 at 4:07:34 PM UTC-8, செல்வன் wrote:



செல்வன்

unread,
Jan 10, 2016, 8:06:11 PM1/10/16
to mintamil

On Sun, Jan 10, 2016 at 6:57 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
ங்கிருந்து கிடைத்தது இத்தகவல் செல்வன், இனிமேல் சுட்டி கொடுக்கவும். 

தேமொழி

unread,
Jan 11, 2016, 3:12:56 AM1/11/16
to மின்தமிழ்


On Sunday, January 10, 2016 at 4:25:04 PM UTC-8, megala.ramamourty wrote:

நண்பர்களே!


திரையோடித் திரவியம் தேடத்தேவையான கல்வி வழங்குவது கல்விச்சாலை!

(உடலின்) திரையோடி நரையோடி இளமையோடு நீங்கள் நடைபோட நாடவேண்டிய ’சாலை’ ஒன்று(ம்) இருக்கிறது

அதனைக் கண்டுபிடிப்போர்க்குப் ’பொற்கிழி ஒன்று காத்திருக்கிறது!   டும் டும் டும்! :-))  


சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை !!!!!!!
அது 
சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை 
...
கண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே
கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே
உண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே
உலகியலீர் இது வரையில் உண்மை அறிந்திலிரே
விண்டதனால் என் இனி நீர் சமரச சன்மார்க்க
மெய் நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே
எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின்
இறவாத வரம் பெறலாம் இன்பம் முறலாமே !


..... தேமொழி






அன்புடன்,

மேகலா  







--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Seshadri Sridharan

unread,
Jan 11, 2016, 3:54:22 AM1/11/16
to mintamil
2016-01-11 4:08 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

இந்தக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் பொன்போல் தகதகக்குமாம்.  அதனால்தான் இதன் பெயர் பொன்னாங்கண்ணி.  :-))


இதில் ஓரளவேணும் உண்மை உண்டு. 20 ஆண்டுகள் முன்னம் ஒரு செய்தியேட்டில் பொன்னாங்கண்ணியை உண்பது எப்படி என்று விளக்கியிருந்தது. அதில் இக்கீரையை 48 நாள் உண்டால் தோல்நிறம் மஞ்சள் ஆகும் என்றும் அதனாலேயே அதன் பெயர் பொன் + ஆ(கு)ம் + காண் + நீ என்று இக்கீரை வழங்கப்படுவதாக குறிக்கப்பட்டிருந்தது. 

அதை ஆய்ந்து பார்த்துவிடலாம் என்ற ஆர்வத்தில் நான் சந்தையில் ஒரு கீரைவிற்பவனிடம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பொன்னாங்கண்ணிக் கீரையை கொண்டுவருமாறு சொல்லிவிட்டேன். அதன்படி மாலையில் கீரைகிடைத்துவிடும். அதை வாங்கிவந்து ஆய்ந்து அதன் மஞ்சள் பூவைநீக்கி (பூ கசக்கும்) வைத்துவிடுவேன். காலையில் அந்தக் கீரையை அரிந்து வாணலியில் இட்டு சிறிது நீர் பொய்து கீரை வதங்கியதும் இரண்டு சிறு தேக்கரண்டி நெய் விட்டுக் கிளறி இறுதியாக பொடிந்த மிளகை அதன் மேல் சிறிது தூவி கீரையை இன்னும் நன்றாகக் கிளறி இறக்கிவைப்பேன். இதுதான் செய்தியேட்டில் சொல்லியிருந்த முறை.  இந்தக் கீரையை ஒரு கைஉருண்டை அளவு காலைச் சோற்றில் பொரியலாக சேர்த்து உண்டேன். இப்படி நாற்பது நாள்கள் கடந்தன. என் தோல் நிறம் உண்மையாகவே மஞ்சள் நிறமாக ஆகிவிட்டது. அதற்க்கு முன் என் நிறம் செக்கச் செவேல் என்று இருந்தது. இதாவது, ஐந்து விரல்களை மடித்து புறங்கையைப் பார்த்தால் தோல் சிவப்பாக (rose) இருக்கும். புருவ மேடு நேற்றிமேடு இங்கெல்லாம் தசை இல்லாததால் தோல் சிவப்பாகவே இருக்கும். கிள்ளாமலேயே கன்னம் சிவப்பாக இருக்கும். இப்படி சேயோனாக இருந்த நான் பொன்னாங்கண்ணி உண்டதால் மஞ்சளன் ஆகிப்போனேன். இதாவது,  மஞ்சளைவிட கவர்ச்சியான செந்நிறத்தை இழந்து. உள்ளதும் போனது என்பதே இன்றும் தொடர்கின்றது.

நங்கன்    

Seshadri Sridharan

unread,
Jan 11, 2016, 4:11:22 AM1/11/16
to mintamil
On Mon, Jan 11, 2016 at 5:55 AM, செல்வன் <hol...@gmail.com> wrote:
மேலும் பொன்னாங்கண்ணியில் உள்ள இரும்பு, கால்சியம், வைட்டமின் ஏ எதுவும் உடலை சேராது. ஆக கண்பார்வைக்கு நல்லது என்றால் அது ஈரலே

கீரை ஒரு நிலைத்திணை (plant) மாடு ஒரு மன வளர்சசி பெற்ற விலங்கு. இரண்டு வெவ்வேறானவை. இதற்கு அது போட்டியல்ல. காலடியில் விலையில்லாமல் ஒரு செம்மணி (மாணிக்கம்) இருக்கின்றது. அதைப் பயன்கொள்வதில் ஏதும் பிழை இல்லை. இக்கீரை கிட்டாத பனிப் பாலைப் பகுதிகளில் மாடு தான் அருமருந்து என்றால். அதை ஏற்பதே சாலவும் நன்று. தந்திரம் நோயர் நோய்நீங்க புலவு உண்ணலாம் என்கிறது. அதுவே பகுத்தறிவானதும் கூட. நோயிருக்கும்போது சைவ உணவுக் கொள்கை பார்ப்பது ஒரு வகைப் பற்று (sentiment). ஆனால் ஒரு உயிர் கொல்லபடுவதற்கு முன் அதை கொல்லாமல் வேறுவகையில் நோயைத் தீர்க்கமுடியுமா என்று 100 முறை எண்ணித் துணிதலே நன்று.   

நங்கன் 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 11, 2016, 4:59:48 AM1/11/16
to mintamil
வணக்கம் ஐயா.
இக்கீரைச் சாப்பிடுவதால் சிறுநீர்ப்பையில் கல் உருவாகாது.
பயனுள்ள பதிவிற்கு நன்றி.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Megala Ramamourty

unread,
Jan 12, 2016, 10:46:00 AM1/12/16
to மின்தமிழ்
’சேயோனாக’ இருந்த உங்களைப் பொன்னாங்கண்ணி ’பொன்னனாக’ மாற்றியது என்றால் இந்தக்கீரையைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பது உண்மை என்றே ஆகின்றது.

தங்கள் அனுபவப் பகிர்வுக்கு நன்றி திரு. பொன்னரே!  :-)



--

Megala Ramamourty

unread,
Jan 12, 2016, 10:48:48 AM1/12/16
to மின்தமிழ்
//நம் முன்னேற்றத்துக்கு ஒரு கொள்கை தடையெனில் கொள்கையை மாற்றிகொள்வதில் தவறில்லை அல்லவா? :-)//

முன்னேற்றத்துக்குத் தடையா இல்லீங்ணா...சாப்பிடத்தான் தடையா இருக்கு! அதனாலதான் மாத்திக்க முடியல!  

(வீட்டுக்குத் தெரிஞ்சாவேற மாத்து மாத்துன்னு மாத்திடுவாங்க !)   :-))))


அன்புடன்,
மேகலா

Megala Ramamourty

unread,
Jan 12, 2016, 11:07:11 AM1/12/16
to மின்தமிழ்
//அது 
சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை //

ஆகா...தேமொழி எங்கேயோ போய்ட்டீங்க!!!!!   :-))

ஆனா...விடை அது இல்லை!

நான் சொல்லவந்த ’சாலை’யும் ஒரு மூலிகைதான்; அதன்பெயர் ’கரிசாலை’ (aka கரிசலாங்கண்ணி). இதற்குக் ’கையாந்தகரை’ என்றும் பெயருண்டு.

தின்ற கரிசாலை தேகம் திரை போக்கும்       
தின்ற கரிசாலை சிறந்த நரை போக்கும்
தின்ற கரிசாலை தேகம் சிறுபிள்ளை
தின்ற கரிசாலை சிதையாது இவ் வாக்கையே


Inline image 2
      கூந்தலைச் சோலையாய் வளர்க்கும் கரிசாலை!  

இந்தக்கீரையை அரைத்துத் தலைக்குத்தேய்த்துக் குளித்தால் ’அண்டங்காக்கா கொண்டக்காரியாக’ உலா வரலாம். இதை முறையாக உண்டுவந்தால் பொன்னாங்கண்ணி போலவே இதுவும் உடலுக்குப் பொலிவையும் இளமையையும் தரும். இன்னும் பல மருத்துவப் பயன்பாடுகளும் இக்கீரைக்கு உள்ளன.

அவற்றை அறிந்துகொள்ள: 





(இம்மூலிகையை என் தோட்டத்தில் வளர்த்துவருகிறேன்.  படங்களை மற்றொரு சமயம் பகிர்ந்துகொள்கிறேன்.)   :-)

Megala Ramamourty

unread,
Jan 12, 2016, 11:18:33 AM1/12/16
to மின்தமிழ்
I forgot to mention...

Another variety of Eclipta prostrata (கரிசாலை) is also present; which has yellow flowers instead of white. But, in my backyard I've only the white variety!
(In America I am unable to see the yellow one so far!) :-) 

-Megala

தேமொழி

unread,
Jan 12, 2016, 12:49:58 PM1/12/16
to மின்தமிழ்
ஆகா ....கரிசலாங்கண்ணி கீரைதானா அது.

ஏது மூலிகை மருத்துவம் பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் !!!

இக்கால மருத்துவமோ அக்கால மருத்துவமோ..... தகவல் வேண்டுமென்றால் மேகலாவிடம்தான் கேட்க வேண்டும் என்று எண்ணும் அளவிற்கு  களஞ்சியமாக இருகிறீர்கள்.

..... தேமொழி


To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

செல்வன்

unread,
Jan 12, 2016, 11:38:30 PM1/12/16
to mintamil
2016-01-12 9:48 GMT-06:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
//நம் முன்னேற்றத்துக்கு ஒரு கொள்கை தடையெனில் கொள்கையை மாற்றிகொள்வதில் தவறில்லை அல்லவா? :-)//

முன்னேற்றத்துக்குத் தடையா இல்லீங்ணா...சாப்பிடத்தான் தடையா இருக்கு! அதனாலதான் மாத்திக்க முடியல!  

(வீட்டுக்குத் தெரிஞ்சாவேற மாத்து மாத்துன்னு மாத்திடுவாங்க !)   :-))))





முன்னேற்றத்துக்கே சைவ உணவு கொள்கை தடைதானே?

சொன்னது நான் அல்ல..விவேகானந்தர் :-) 

மற்றபடி வீட்டுக்கு எந்த வயது வரை பயப்படுவது, அவர்கள் பேச்சை கேட்பது என ஒரு வயது வரம்பு உள்ளது. :-)

என்னளவில் 12 வயதில் யார் பேச்சை கேட்பதையும் நிறுத்திவிட்டேன் :-)

அசைவம் உண்பதை என் அம்மாவால் ஏற்கவே முடியவில்லை..காதல் கல்யாணம் செய்தது, அமெரிக்கா வந்தது, உறவினர்கள் சிலரை ஒதுக்கியது என பல விசயங்களை கூட அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால் அசைவம் உண்பதை ஏற்கவே இல்லை. மிக வருத்தபட்டார்

மனைவி நான் மாரடைப்பால் இறந்துவிடுவேன் என பயந்து அழுது, கெஞ்சி, திட்டி, மிரட்டி அனைத்து உத்திகளையும் கையாண்டார். பிள்ளைகளும் பயந்தார்கள். அழுதார்கள். மாமனார், மாமியார் முதல் வலைபதிவு நண்பர்கள், இங்கே உள்ள இந்திய நண்பர்கள் எல்லாருமே வருத்தபட்டும், பயந்தும் அட்வைஸ் செய்தார்கள். என் டாக்டர் நீண்ட விவாதம் நடத்தி மனதை மாற்ற முயன்றார்.

யார் பேச்சையும் கேட்கவில்லை...பேலியோவை தொடர்ந்தேன். அவர்கள் என்னென்ன சாப்பிடகூடாது என்ரார்களோ அதை எல்லாம் சாப்பிட்டேன். மீனில் ஆரம்பித்து கோழி, ஆடு, பன்றி, எருமை என கொழுப்புள்ள பகுதியாக தேடி உண்டேன். பேஸ்புக்கில் எழுதினேன். பேஸ்புக்கிலும் எல்லாரும் பயந்தார்கள். சிலர் சன்டைக்கு வந்தார்கள். சிலர் என்ன தான் நடக்குது என வேடிக்கை பார்த்தார்கள். கடைசியில் சர்க்கரை வியாதி முற்றிய ஒருவர் ரிஸ்க் எடுத்து துணிந்து என் டயட்டை பின்பற்றினார். 16 ஆண்டுகளாக இருந்த சர்க்கரை இரண்டு மாதத்தில் குனமடைந்தது. அதன்பின் மற்றவர்கள் துணிந்து க்ளத்தில் இறங்கி இன்று பேலியோ இந்த அளவு வளர்ந்து நிற்கிறது. இன்று என் அம்மா, மனைவி என எல்லாருமே இன்னமும் சைவ உணவை உன்டாலும் என் டயட் கொள்கையை ஒப்புகொள்கிறார்கள். அம்மா என் கட்டுரைகள் வரும் மாகஸின்களை வாங்கி உறவினரிடம் எல்லாம் காட்டி மகிழ்ச்சி அடைகிறார். நான் சைவம் உண்கிறேன் என்ற வருத்தம் அவருக்கு துளியும் இல்லை.

ஆக "இத்தனை பேர் திட்டுக்கிரார்கள், எதிர்க்கிறார்கள்" என பயந்து நின்றிருந்தால் இது எதையும் செய்திருக்க முடியாது. எனக்கு ஒன்று சரி என பட்டால் ஒட்டுமொத்த உலகமே எதிர்த்தாலும் கவலையே படாமல் திருப்பி அடிப்பதே என் வழக்கம். டாக்டர் சொல்கிறார், அம்மா சொல்றார்,. மனைவி சொல்றார்,. ஆசிரியர் சொல்றார்...எதுவும் வேலைக்காகாது..சுயமாக சிந்தித்து, ஆராய்ந்தே ஏற்றுகொள்வேன். 
Reply all
Reply to author
Forward
0 new messages