உயிரீற்றுப் புணரியல்: வெருகு + பல் = வெருக்குப் பல் (குறுந்தொகை 240)

230 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 12, 2018, 9:21:13 AM7/12/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panbudan
வெருகு என்று காட்டுப்பூனைக்குப் பெயர் தமிழிலும், பிற த்ராவிட பாஷைகளிலும் பல ஆயிரம் ஆண்டுகளாக உள்ளது. இச்சொல் நிலைமொழியாக நின்று, வருமொழி வெருகின் அங்கமோ, பண்போ வரும்போது வெருகு என்னும் சொல்லின் இறுதியில் உள்ள ககரம் இரட்டும். இதனை இலக்கணகாரர்கள் ஓராயிரம் ஆண்டுகளாகத் தமிழ்மாணவர்களுக்குப் பயிற்றியுள்ளனர். அவற்றில் சில இவ்விழையில் காண்போம்.

சங்க இலக்கியத்தில் உயிரீற்றுப் புணர்ச்சி: http://tamilconcordance.in/SANGconc-1-ve1.html#வெருக்கு

வெருக்கு (3)
வெருக்கு பல் உருவின் முல்லையொடு கஞலி - குறு 240/3
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை - அகம் 267/6
வெருக்கு விடை அன்ன வெருள் நோக்கு கயம் தலை - புறம் 324/1

வெருகின் கண் - வெருக்குக் கண்; மாடு + தலை  = மாட்டுத் தலை, ஆடு+ தாடி = ஆட்டுத்தாடி, காடு+ களச்சாளை = காட்டுச்சாளை, .....
என்பது போல வரும் என 2 வாரம் முன் விளக்கியிருந்தேன். வெருகு என்பது தான் காட்டுப்பூனைக்குப் பெயர்.
வெருக்கு என்பது வெருகின் விரி எனக் குறிப்பிட்டிருந்தேன். வெருக்கு என்று தனியாகப் பெயர் இல்லை, அப்படியென்றால்
சங்கப்புலவர் மாடு, மாட்டு;   ஆடு, ஆட்டு என்று தனிப்பெயர்கள் கொண்டதாகச் சொல்வதாகிவிடும்.

வெருகு+பல் = வெருக்குப் பல், வெருகு+கண் = வெருக்குக்கண், .... போலப் புணரும். இது தமிழில் உள்ள சந்தி இலக்கணம்,

வெருகு+பல் = வெருக்குப்பல். இது விரி. மாடு+மடி = மாட்டுமடி, ஆடு+தாடி = ஆட்டுத்தாடி.
வெருகு+பல் = வெருக்குப்பல், வெருகு+அடி = வெருக்கடி, வெருகு+விடை = வெருக்குவிடை, வெருகு+கண் = வெருக்குக்கண்,  ...

வெருக்கு என்று வெருகிற்குத் தனிப்பெயர் இல்லை. எல்லா திராவிட மொழிகளிலும் இதைக் காணலாம்.

வெருக்கு என்பது வெருகுத் தனிப்பேர் என்றால்,
ஆட்டு    என ஆடு அழைக்கப்படலும், மாட்டு என மாடு அழைக்கப்படலும் தமிழில் காட்டவேண்டும்.

மின்தமிழில் “திருத்தம்” சரவணன் பழைய தமிழ்ச் சொற்களுக்குக் பல ஆண்டுகளாகக் கூறியுள்ள பொருள்களைத்
தமிழறிந்த பேராசிரியர்கள் பார்க்கவேண்டும். முனைவர் கண்மணி அவர்கள் பார்வைக்குச் சில காட்டுகள்
அனுப்பலாம்.

நா. கணேசன்

Reference:
2018-06-15 8:26 GMT-07:00 kanmani tamil <kanmanitamilskc@gmail.com>:
அதாவது வேற்றுமை உருபுகளாகிய ' கு, இன்  ' முதலியவற்றோடு புணரும்போது 'க் ' மிகாது.
வெருகு+இன் =வெருகின் 
"பிள்ளை வெருகிற்கு  அல்கு இரையாகென " ---குறுந்தொகை 
கண்மணி   

ஆமாம்.

அறுகின் மாலை = அறுகம்புல்மாலை
சருகின் குப்பை

வெருகின் பிள்ளை
குருகின் குஞ்சு
...

அறுக்கின் மாலை, சருக்கின் குப்பை, வெருக்கின் பிள்ளை, குருக்கின் குஞ்சு, ... எனல் பிழை.

நா. கணேசன்

2018-06-15 20:30 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaendhan@gmail.com>:
வெருகு, வெருக்கு என்று இரண்டு சொற்களும் பயன்பாட்டில் உண்டு.

சங்க இலக்கியம் பாருங்கள்.

சங்க இலக்கியத்தில் பூனை - எனது கட்டுரையையும் படியுங்கள். 

இலக்கியத்தில் வெருக்குப் பல் என்றால் நான் வெருக்கின் பல் என்றேன். இதில் தவறென்ன?. :))

kanmani tamil

unread,
Jul 12, 2018, 2:37:33 PM7/12/18
to mintamil
வெருக்கு பல் உருவின் முல்லையொடு கஞலி - குறு 240/3
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை - அகம் 267/6
வெருக்கு விடை அன்ன வெருள் நோக்கு கயம் தலை - புறம் 324/1

மூன்று செய்யுள் தொடர்களிலும்' வெருக்கு' என்னும் சொல் வெருகு என்ற சொல்லின் வலித்தல் விகாரமாக வந்துள்ளது . இது புலவோர்க்கு உரிய உரிமை ஆகும்.
வலித்தல் விகாரம் போலவே மெலித்தல் விகாரம், இடைக்குறை  எல்லாம் செய்யுளில் மட்டுமே.
மேலும்  வெருகின் பல் &வெருகின் அடி .....என வேற்றுமைத்தொகையாகவும் உள்ளன.
கண்மணி 
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 13, 2018, 12:08:50 AM7/13/18
to mintamil
இது வெருகுக்கு மட்டுமே காணப்படுகிறது.

வெருகு என்பது வெருக்கு என்றும் வழங்கப்படுவதைப் போல

குருகு என்பது குருக்கு என்றோ

முருகு என்பது முருக்கு என்றோ

அறுகு என்பது அறுக்கு என்றோ

மறுகு என்பது மறுக்கு என்றோ எங்கேனும் பயின்று வந்துள்ளதா?.

நான் தேடியவரையிலும் அவ்வாறு கிடைக்கவில்லை.

அதனால் தான் வெருக்கு என்பதும் பூனைக்குரிய ஒரு பெயர்ச்சொல் என்றேன்.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

N. Ganesan

unread,
Jul 13, 2018, 6:15:09 AM7/13/18
to மின்தமிழ், vallamai
2018-07-12 21:08 GMT-07:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
இது வெருகுக்கு மட்டுமே காணப்படுகிறது.

வெருகு என்பது வெருக்கு என்றும் வழங்கப்படுவதைப் போல

வெருக்கு என்று தனிச்சொல்லாக வெருகு  தமிழில் வழங்கப்படுவதில்லை.
வெருகு+ ஒருசொல் என்று வரும் இடங்களில் வெருக்கு எனப் புணரும்.

எனவே தான் வெருக்கு எனப் பூனைக்குப் பெயரில்லை. 
வெருகு நிலைமொழி, வருமொழியுடன் சந்திக்கும்போது
வெருகின் ஈற்றுமெய் இரட்டும். 

எவ்வாறெனில்,
எருது +  தோல் = எருத்துத்தோல், ஆடு + தாடி = ஆட்டுத்தாடி,
வெருகு + கண் = வெருக்குக்கண், .....

இவை ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ் இலக்கணத்தில் காட்டப்பெறும் உதாரணங்கள்.

வெருக்கு என தமிழ் அகராதிகளில் பூனைக்குப் பெயர் இல்லை.
தொல்காப்பியத்திலும் இல்லை. வெருகு தான்.  
வெருக்குக்கண் எனவெல்லாம் வருவது  சந்தி இலக்கணத்தால்.

எருத்துத்தோல், ஆட்டுத்தாடி, மாட்டுக்கொம்பு, வெருக்குக்கண், ....
இவற்றுக்கு முறையே எருது, ஆடு, மாடு, வெருகு, ... என்ற தனிப் பெயர்ச்சொல்களின்
சந்தியால் ஏற்படும் மாற்றம்.

எருத்து, ஆட்டு, மாட்டு, வெருக்கு, என்றெல்லாம் முறையே
எருது, ஆடு, மாடு, வெருகு, .. தனிப்பெயர் இல்லை.

சங்க இலக்கியத்தில், தமிழ் அகராதிகளில் காணலாகும்.

N. Ganesan

unread,
Jul 13, 2018, 7:20:19 AM7/13/18
to மின்தமிழ், vallamai, Jean-Luc Chevillard, Eva Wilden
2018-07-12 11:37 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
வெருக்கு பல் உருவின் முல்லையொடு கஞலி - குறு 240/3
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை - அகம் 267/6
வெருக்கு விடை அன்ன வெருள் நோக்கு கயம் தலை - புறம் 324/1

மூன்று செய்யுள் தொடர்களிலும்' வெருக்கு' என்னும் சொல் வெருகு என்ற சொல்லின் வலித்தல் விகாரமாக வந்துள்ளது . இது புலவோர்க்கு உரிய உரிமை ஆகும்.
வலித்தல் விகாரம் போலவே மெலித்தல் விகாரம், இடைக்குறை  எல்லாம் செய்யுளில் மட்டுமே.
மேலும்  வெருகின் பல் &வெருகின் அடி .....என வேற்றுமைத்தொகையாகவும் உள்ளன.
கண்மணி 
 
வெருகு என்ற பூனையின் பெயர் வருமொழியுடன் புணர்கையில் ஈற்றுமெய் இரட்டித்தலைச் சங்கப்புலவர்கள் பாடியுள்ளதாலும், நாலடியாரிலும் இருப்பதாலும் வெருகு என்னும் விலங்குப்பெயர் மாற்றமடைவதை உதாரணமாக ஆயிரம் ஆண்டுகளாய்த் தமிழ்ப்புலவர் இலக்கண நூல்களில் காட்டியுள்ளனர்.

அவை போன்ற உதாரணங்கள் சில:
எருது+திமில் = எருத்துத் திமில்
வெருகு+கண் = வெருக்குக்கண் (நாலடி)
எருது+தோல் = எருத்துத்தோல்
களிறு+பன்றி = களிற்றுப்பன்றி
எயிறு+பல் = எயிற்றுப்பல்
வெருகு+பல் = வெருக்குப்பல் (சங்க இலக்கியம்)
எருது + கால் = எருத்துக்கால்
etc. etc.,

பழைய இலக்கணகாரர்களின் உரைகளில் வெருகு எனுஞ்சொல் வருமொழிச் சந்தியால் வெருக்கு என மாறுவதைக் காட்டியுள்ளனர்:
(ழான் செவ்வியாருக்கு நன்றி)

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் -

ஈற்றுக் குற்றியலுகரத்தை அடுத்த எழுத்து உயிர்மெய்யாக இருப்பின் அச்சொல்லீற்றுக் குற்றியலுகரம் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும். அஃது அல்வழிக்கண் வன்கணம் (மென்கணம், இடைக்கணம்- இவை) வருமொழி முதற்கண் வருமிடத்து இயல்பாகப் புணரும்.

எ-டு : வரகு + கடிது = வரகு கடிது (வரகு ஞான்றது, வரகு யாது)

வேற்றுமைக்கண் இயல்பாகவும் இன்சாரியை பெற்றும் புணரும்;சிறுபான்மை வல்லினமெய் இரட்டும்.

எ-டு : வரகு +கதிர் = வரகுகதிர், வரகின் கதிர்; வெருகு + கண் = வெருக்குக்கண்; எருது+ கால் = எருத்துக்கால்.

உயிர்த்தொடர்க் குற்றுகரம் டற மெய்களை ஊர்ந்து வரு மிடத்து, வேற்றுமைப் புணர்ச்சியில், வருமொழி வன்கணம் வரின், அவ்வல்லின மெய்கள் இரட்ட வல்லெழுத்து மிகும்; ஏனைக்கணம்வரின், அவ்விரட்டுதலோடு இயல்பாக முடியும்.

எ-டு : முருடு+ கால், ஞாற்சி, யாப்பு, அடி = முருட்டுக்கால், முருட்டுஞாற்சி, முருட்டியாப்பு, முருட்டடி

முயிறு+ கால், நிறம், வன்மை, அடி = முயிற்றுக் கால், முயிற்றுநிறம், முயிற்றுவன்மை, முயிற்றடி.

சிறுபான்மை வேற்றுமைக்கண் இரட்டாமையும், அல்வழிக் கண் இரட்டுதலும், சிறுபான்மை இருவழியும் பிற ஒற்று இரட்டுதலும் உள. எ-டு : நாடு கிழவோன் எனவும், காட்டரண் எனவும், வெருக்குக்கண் எருத்துமாடு எனவும் முறையே காண்க. (நன். 182, 183)

உயிர்த்தொடர்மொழிக் குற்றியலுகரப் புணர்ச்சி -

உயிர்த்தொடர்மொழிக் குற்றியலுகர ஈற்றுச் சொற்கள் அல்வழிக்கண் வல்லினம் வரினும் இயல்பாகப் புணரும்

எ-டு : வரகு கடிது, கிடந்தது குதிரை, கரிது குதிரை

(தொ. எ. 425 நச். உரை)

இருபெயரொட்டுப் பண்புத்தொகை வன்கணம் வரின் இனஒற்று மிக்கு வல்லெழுத்துப் பெறுதலும், இயல்புகணம் வருவழி இனஒற்று மிகுதலும் உள.

எ-டு : கரடு + கானம் = கரட்டுக் கானம்; குருடு + கோழி = குருட்டுக் கோழி; திருடு + புலையன் = திருட்டுப் புலையன்; வெளிறு + பனை = வெளிற்றுப் பனை; எயிறு + பல் = எயிற்றுப் பல்

இவை வன்கணம் புணர்ந்தன.

வறடு + ஆடு = வறட்டாடு; குருடு + எருது = குருட்டெருது.

இவை இயல்புகணம் புணர்ந்தன. (தொ.எ. 425 நச். உரை)

வேற்றுமைக்கண் டு று ஈறாகிய சொற்கள், வருமொழி வன்கணம் வரின் இனஒற்றும் வல்லெழுத்தும் மிகும்; இயல்புகணம் வரின் இனஒற்று மிகும்.

எ-டு : முயிறு+ கால் = முயிற்றுக்கால்; கயிறு + புறம் = கயிற்றுப்புறம்; வயிறு + தீ = வயிற்றுத் தீ; பகடு + கால் = பகட்டுக்கால்; அகடு + தீ = அகட்டுத்தீ; முகடு + பகுதி = முகட்டுப்பகுதி

இவை வன்கணம் புணர்ந்தன.

பகடு +ஞாற்சி = பகட்டுஞாற்சி; முயிறு + ஞாற்சி = முயிற்றுஞாற்சி

இவை இயல்புகணம் புணர்ந்தன.

கு சு து பு - என்ற ஈறுகள் இயல்பாகப் புணரும்

எ-டு : வரகுகால், வரகுகதிர், வரகுசினை, வரகுதாள், வரகு பதர், வரகுஞாற்சி. (பிற ஈறுகளும் கொள்க.)

உருபுபுணர்ச்சி போல இன்சாரியை பெறுதலுமுண்டு.

எ-டு : வரகினை - வரகின் கதிர் (தொ.எ. 412 நச். உரை)

வெருக்கு என்று தனிச்சொல்லாக வெருகு  தமிழில் வழங்கப்படுவதில்லை.
வெருகு+ ஒருசொல் என்று வரும் இடங்களில் வெருக்கு எனப் புணரும்.

எனவே தான் வெருக்கு எனப் பூனைக்குப் பெயரில்லை. 
வெருகு நிலைமொழி, வருமொழியுடன் சந்திக்கும்போது
வெருகின் ஈற்றுமெய் இரட்டும். 

எவ்வாறெனில்,
எருது +  தோல் = எருத்துத்தோல், ஆடு + தாடி = ஆட்டுத்தாடி,
வெருகு + கண் = வெருக்குக்கண், .....

இவை ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ் இலக்கணத்தில் காட்டப்பெறும் உதாரணங்கள்.

வெருக்கு என தமிழ் அகராதிகளில் பூனைக்குப் பெயர் இல்லை.
தொல்காப்பியத்திலும் இல்லை. வெருகு தான்.  
வெருக்குக்கண் எனவெல்லாம் வருவது  சந்தி இலக்கணத்தால்.

எருத்துத்தோல், ஆட்டுத்தாடி, மாட்டுக்கொம்பு, வெருக்குக்கண், ....
இவற்றுக்கு முறையே எருது, ஆடு, மாடு, வெருகு, ... என்ற தனிப் பெயர்ச்சொல்களின்
சந்தியால் ஏற்படும் மாற்றம்.

எருத்து, ஆட்டு, மாட்டு, வெருக்கு, என்றெல்லாம் முறையே
எருது, ஆடு, மாடு, வெருகு, .. இவற்றுக்குத் தனிப்பெயர் இல்லை.

சங்க இலக்கியத்தில், தமிழ் அகராதிகளில் காணலாகும்.

NG

N. Ganesan

unread,
Jul 13, 2018, 8:10:56 AM7/13/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Vaidehi Herbert, podhuvan sengai, Srinivasakrishnan ln, Theodore Baskaran, S. V. Shanmukam

On Thursday, July 12, 2018 at 9:08:50 PM UTC-7, திருத்தம் பொன். சரவணன் wrote:
இது வெருகுக்கு மட்டுமே காணப்படுகிறது.

வெருகு என்பது வெருக்கு என்றும் வழங்கப்படுவதைப் போல

குருகு என்பது குருக்கு என்றோ

முருகு என்பது முருக்கு என்றோ

அறுகு என்பது அறுக்கு என்றோ

மறுகு என்பது மறுக்கு என்றோ எங்கேனும் பயின்று வந்துள்ளதா?.

நான் தேடியவரையிலும் அவ்வாறு கிடைக்கவில்லை.

அதனால் தான் வெருக்கு என்பதும் பூனைக்குரிய ஒரு பெயர்ச்சொல் என்றேன்.

வெருக்கு என்று தனிப்பெயர் வெருகிற்கு இல்லை. ஆட்டு, மாட்டு, எருத்து என்றெல்லாம் ஆடு, மாடு, எருது இவற்றிற்கு இல்லை அல்லவா? அவைபோல.

முருகு + அடி = முருக்கடி, முயிறு + அடி = முயிற்றடி, வெருகு + அடி = வெருக்கடி (சங்கம்), எருது + அடி = எருத்தடி, கிணறு + அடி = கிணற்றடி, .... இவையெல்லாம்
தமிழ் இலக்கியங்களில் பரக்கக் காணலாம். அதுபோல, அறுகு+வேர் = அறுக்குவேர், குருகு+அடி = குருக்கடி, ... எனப் புணரும். குருக்கடி = குருகின் பாதம்/அடி.

நா. கணேசன் 

குருகு = Waders, water-birds i.e., cranes, storks, herons, geese, ibises, ...
இந்திய செம்மொழி இலக்கியங்களில் மிகுபுகழ் பெற்ற குருகுகள் இரண்டு:
ஹம்சம் (= அன்னம்), கிரௌஞ்சம் (=அன்றில்). இரண்டுக்கும் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளேன்.

செங்கால் நாரை = ஓர் குருகு

Srinivasakrishnan ln

unread,
Jul 13, 2018, 8:14:22 AM7/13/18
to N. Ganesan, மின்தமிழ், வல்லமை, housto...@googlegroups.com, kavi...@gmail.com, podh...@gmail.com, Theodore Baskaran, svs....@gmail.com
இவ்விழையில் மேற்கோள் காட்டும்போது நன்னூல் சூத்திரங்களையே சுட்டினால் இலக்கண மாணவர்களுக்கும் உபயோகமாக இருக்குமே!! 

Srini

kanmani tamil

unread,
Jul 13, 2018, 2:16:09 PM7/13/18
to mintamil

திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

09:38 (13 hours ago)
to mintamil
///இது வெருகுக்கு மட்டுமே காணப்படுகிறது.
வெருகு என்பது வெருக்கு என்றும் வழங்கப்படுவதைப் போல
குருகு என்பது குருக்கு என்றோ
முருகு என்பது முருக்கு என்றோ
அறுகு என்பது அறுக்கு என்றோ
மறுகு என்பது மறுக்கு என்றோ எங்கேனும் பயின்று வந்துள்ளதா?.
நான் தேடியவரையிலும் அவ்வாறு கிடைக்கவில்லை.
அதனால் தான் வெருக்கு என்பதும் பூனைக்குரிய ஒரு பெயர்ச்சொல் என்றேன்.///

உங்கள் ஐயத்தின் காரணம் புரிகிறது சரவணன் .
நீங்கள் காட்டியுள்ள மேற்கோள்களில் " வெருக்கு    பல் " என இடம் பெற்று இருக்கிறதே அன்றி 'வெறுக்குப்பல் ' என்று இல்லை.
                                                                        " அங்ஙனமே வெருக்கு  அடி " என உள்ளதே அன்றி' வெருக்கடி ' என்றும் இல்லை.
அதனால் தான் நான் புணர்ச்சிவிதி  எதையும்சொல்லவில்லை; வலித்தல் விகாரம் என்னும் கருத்தை  முன்வைத்தேன்   
செய்யுளில் புலவோர் சிலவேளைகளில் கையாளும் உத்தி இது .
மெல்லொற்றை  வல்லொற்றாக மாற்றிப் பயன்படுத்தும் போது அதை வலித்தல் விகாரம் என்போம்.
வல்லொற்றை  மெல்லொற்றாக மாற்றிப் பயன்படுத்தும் போது அதை மெலித்தல் விகாரம் என்போம்.
இங்கே எந்தச் சான்றிலும் மெல்லொற்று வல்லொற்றாகவில்லை.
ஆனால் வல்லினம் இரட்டித்து உள்ளது;ஆதலால் வலித்தல் விகாரம் என்று கூற ஏதுவாயிற்று.
குருகு, முருகு, அருகு, மறுகு போன்ற சொற்களில் மேற்சுட்டிய மாற்றம் இல்லை என்கிறீர்கள்.
ஆம் ;இந்த விகாரம் இடம் பெற வேண்டும் என்று கட்டாயம் எதுவும் கிடையாது.
புலவர் தன தேவைக்கேற்ப /விருப்பத்திற்கேற்ப  கையாளும் உத்தி இது.
      வெருகு என்பது தான் பூனையின் இன்னொரு பெயர்; வெருக்கு என்பது வலித்தல் விகாரமாய் அமையும் பெயர் .   
///வெருகு+கண் = வெருக்குக்கண் (நாலடி)///
எருது+தோல் = எருத்துத்தோல்
களிறு+பன்றி = களிற்றுப்பன்றி
எயிறு+பல் = எயிற்றுப்பல்
வெருகு+பல் = வெருக்குப்பல் (சங்க இலக்கியம்)///
சங்க இலக்கியச் சான்று எதுவும் நீங்கள் காட்டவில்லை ;சரவணன் சுட்டும் மேற்கோளில்" வெருக்கு   பல் " என்று தான் உள்ளது. 
கண்மணி 

--

N. Ganesan

unread,
Jul 13, 2018, 2:42:35 PM7/13/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

NG > ///வெருகு+கண் = வெருக்குக்கண் (நாலடி)///
எருது+தோல் = எருத்துத்தோல்
களிறு+பன்றி = களிற்றுப்பன்றி
எயிறு+பல் = எயிற்றுப்பல்
வெருகு+பல் = வெருக்குப்பல் (சங்க இலக்கியம்)///

> சங்க இலக்கியச் சான்று எதுவும் நீங்கள் காட்டவில்லை ;
>சரவணன் சுட்டும் மேற்கோளில்" வெருக்கு   பல் " என்று தான் உள்ளது. 
> கண்மணி

In Sangam literature, any time verukku occurs, it's only as the first part of composite phrase, consisting of 2 words.

See வெருகு+பல் = வெருக்குப்பல் (சங்க இலக்கியம்) in the verse below.
Similarly the other two instances as well.

http://www.tamilvu.org/slet/l1200/l1200uri.jsp?book_id=22&song_no=240
240.   
பனிப்புத லிவர்ந்த பைங்கொடி யவரைக் 
கிளிவா யொப்பி னொளிவிடு பன்மலர் 
வெருக்குப்பல் லுருவின் முல்லையொடு கஞல
வாடை வந்ததன் றலையு நோய்பொரக் 5
கண்டிசின் வாழி தோழி தெண்டிரைக்
கடலாழ் கலத்திற் றோன்றி
மாலை மறையுமவர் மணிநெடுங் குன்றே. 

NG

N. Ganesan

unread,
Jul 13, 2018, 8:26:29 PM7/13/18
to மின்தமிழ்

On Thursday, July 12, 2018 at 11:37:33 AM UTC-7, kanmanitamilskc wrote:
வெருக்கு பல் உருவின் முல்லையொடு கஞலி - குறு 240/3
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை - அகம் 267/6
வெருக்கு விடை அன்ன வெருள் நோக்கு கயம் தலை - புறம் 324/1

மூன்று செய்யுள் தொடர்களிலும்' வெருக்கு' என்னும் சொல் வெருகு என்ற சொல்லின் வலித்தல் விகாரமாக வந்துள்ளது . இது புலவோர்க்கு உரிய உரிமை ஆகும்.
வலித்தல் விகாரம் போலவே மெலித்தல் விகாரம், இடைக்குறை  எல்லாம் செய்யுளில் மட்டுமே.
மேலும்  வெருகின் பல் &வெருகின் அடி .....என வேற்றுமைத்தொகையாகவும் உள்ளன.
கண்மணி 
 
வெருகின்பல், வெருகின்அடி - இவை வேற்றுமைத் தொகை என்கிறீர்கள். எவ்வாறு? வேற்றுமைவிரி எனத் தெரிகிறது.

முருகு + அடி = முருக்கடி, முயிறு + அடி = முயிற்றடி, வெருகு + அடி = வெருக்கடி (சங்கம்), எருது + அடி = எருத்தடி, கிணறு + அடி = கிணற்றடி, .... இவையெல்லாம்
தமிழ் இலக்கியங்களில் பரக்கக் காணலாம். அதுபோல, அறுகு+வேர் = அறுக்குவேர், குருகு+அடி = குருக்கடி, ... எனப் புணரும். குருக்கடி = குருகின் பாதம்/அடி.

இவை வலித்தல் விகாரமா? உயிரீற்றுச் சந்தி இலக்கணம் அல்லவா?

நா. கணேசன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 13, 2018, 11:47:33 PM7/13/18
to mintamil
இப்படியெல்லாம் எந்த இலக்கியத்தில் பயின்று வருகிறது என்று கேட்டால் அதற்குப் பதில் கூறாமல் பூச்சாண்டி வேலை செய்கிறீர்கள்.

சரி, இதெல்லாம் உங்களிடம் எதிர்பார்க்கவும் கூடாதுதான். இன்னொரு கருத்தைக் கூறிவிட்டு எனது பதிவினை நிறுத்திவிடலாமென்று இருக்கிறேன்.

வெருகு என்பது வெருக்கு என்றும் வழங்கப்படுவதைப் போல

எருதினை எருத்து என்றும் குறிப்பிடுகிறது தமிழ் அகராதிகள். கீழே காண்க.

எருத்து eruttu

, n. < எருது +. Steer; இளவெருது. (W.)

எருத்துமாடு eruttu-māṭu

, n. < id. +. 1. Bull, ox; எருது. (நன். 183, உரை.) 2. Pack- bullock; பொதிமாடு. Loc.

எருத்து என்னும் சொல்லுக்கு இள எருதைப் பொருளாகக் காட்டுகிறது.

காளைமாடு, பசுமாடு என்று சொல்வதைப் போல எருதினை எருத்துமாடு என்றும் குறிப்பிடுகிறது.

இதிலிருந்து எருத்து என்பதும் ஒரு பெயர்ச்சொல் என்று தெளிவாகிறது.

இவை வலித்தல் விகாரமா? உயிரீற்றுச் சந்தி இலக்கணம் அல்லவா?

நா. கணேசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்

N. Ganesan

unread,
Jul 13, 2018, 11:54:51 PM7/13/18
to மின்தமிழ்
2018-07-13 20:47 GMT-07:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:

2018-07-14 5:56 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

On Thursday, July 12, 2018 at 11:37:33 AM UTC-7, kanmanitamilskc wrote:
வெருக்கு பல் உருவின் முல்லையொடு கஞலி - குறு 240/3
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை - அகம் 267/6
வெருக்கு விடை அன்ன வெருள் நோக்கு கயம் தலை - புறம் 324/1

மூன்று செய்யுள் தொடர்களிலும்' வெருக்கு' என்னும் சொல் வெருகு என்ற சொல்லின் வலித்தல் விகாரமாக வந்துள்ளது . இது புலவோர்க்கு உரிய உரிமை ஆகும்.
வலித்தல் விகாரம் போலவே மெலித்தல் விகாரம், இடைக்குறை  எல்லாம் செய்யுளில் மட்டுமே.
மேலும்  வெருகின் பல் &வெருகின் அடி .....என வேற்றுமைத்தொகையாகவும் உள்ளன.
கண்மணி 
 
வெருகின்பல், வெருகின்அடி - இவை வேற்றுமைத் தொகை என்கிறீர்கள். எவ்வாறு? வேற்றுமைவிரி எனத் தெரிகிறது.

முருகு + அடி = முருக்கடி, முயிறு + அடி = முயிற்றடி, வெருகு + அடி = வெருக்கடி (சங்கம்), எருது + அடி = எருத்தடி, கிணறு + அடி = கிணற்றடி, .... இவையெல்லாம்
தமிழ் இலக்கியங்களில் பரக்கக் காணலாம். அதுபோல, அறுகு+வேர் = அறுக்குவேர், குருகு+அடி = குருக்கடி, ... எனப் புணரும். குருக்கடி = குருகின் பாதம்/அடி.

இப்படியெல்லாம் எந்த இலக்கியத்தில் பயின்று வருகிறது என்று கேட்டால் அதற்குப் பதில் கூறாமல் பூச்சாண்டி வேலை செய்கிறீர்கள்.

சரி, இதெல்லாம் உங்களிடம் எதிர்பார்க்கவும் கூடாதுதான். இன்னொரு கருத்தைக் கூறிவிட்டு எனது பதிவினை நிறுத்திவிடலாமென்று இருக்கிறேன்.

நச்சினார்க்கினியர் உரையில் காட்டும் மேற்கோள்கள் இவை. இந்த இழையைப் படிக்கவும்.
 
வெருகு என்பது வெருக்கு என்றும் வழங்கப்படுவதைப் போல

எருதினை எருத்து என்றும் குறிப்பிடுகிறது தமிழ் அகராதிகள். கீழே காண்க.

எருத்து eruttu

, n. < எருது +. Steer; இளவெருது. (W.)

எருத்துமாடு eruttu-māṭu

, n. < id. +. 1. Bull, ox; எருது. (நன். 183, உரை.) 2. Pack- bullock; பொதிமாடு. Loc.

எருத்து என்னும் சொல்லுக்கு இள எருதைப் பொருளாகக் காட்டுகிறது.

காளைமாடு, பசுமாடு என்று சொல்வதைப் போல எருதினை எருத்துமாடு என்றும் குறிப்பிடுகிறது.

எருது+மாடு = எருத்துமாடு எனப் புணர்கிறது. நன்னூல் உரையில் பார்க்கவும்.
எருது+கால் = எருத்துக்கால், வெருகு + கண் = வெருக்குக்கண், வெருகு+அடி = வெருக்கடி, வெருகு + பல் = வெருக்குப்பல்.

தமிழ் அகராதிகளில் பார்த்திருப்பீர்கள்: வெருக்கு என வெருகுக்கு பெயர் இல்லை. புணர்ச்சி இலக்கணத்தில்
வருவது. ஆடு+தோல் = ஆட்டுத்தோல், மாடு+கொம்பு = மாட்டுக்கொம்பு, பகடு+உழவு = பகட்டுழவு.

நா. கணேசன்
 
திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 14, 2018, 12:05:30 AM7/14/18
to mintamil
இல்லை. இது புணர்ச்சி இல்லை. புணரவேண்டிய தேவையே இல்லை. எருது என்று சொன்னாலே போதுமே.

எருத்து என்று வெறுமனே சொன்னால் அது கழுத்து, பிடர், மாடு ஆகியவற்றில் எதைக் குறிக்கிறது என்று ஐயம் உண்டாகும்.

அதனால் தான் தெளிவாக்க வேண்டி எருத்துமாடு என்று கூறினர்.

இதில் புணர்ச்சியே இல்லை. எதற்கெடுத்தாலும் புணர்ச்சி என்று கூறாதீர்கள். ம். காலம் கெட்டுப்போச்சி. :))

அதுமட்டுமல்ல, டு, று தவிர கு, சு, து, பு ஆகிய எழுத்துக்களில் முடியும் மூன்றெழுத்துக் குறில் தொடர்ச் சொற்களில் இதுபோன்ற புணர்ச்சி இருப்பதை இலக்கியங்களில் இருந்து எடுத்துக் காட்டுங்கள் பார்க்கலாம். (வெருகு நீங்கலாக)

N. Ganesan

unread,
Jul 14, 2018, 12:06:28 AM7/14/18
to மின்தமிழ்
2018-07-13 20:47 GMT-07:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:

எருதினை எருத்து என்றும் குறிப்பிடுகிறது தமிழ் அகராதிகள். கீழே காண்க.

எருத்து eruttu

, n. < எருது +. Steer; இளவெருது. (W.)

எருத்து என்பது இருசொற்றொடரின் முற்பகுதி.
அதனைத் தமிழ் அகராதிகள் தருகின்றன.

எருது+காளை = எருத்துக்காளை.
இதில் எருத்து- : Member of Kaalai.

எருத்து eruttu

, n. [T. aṟṟu.] 1. Neck; கழுத்து. எருத்துவலிய . . . இரலை (கலித். 15). 2. Member of kali எருத்துக்காளை eruttu-k-kāḷai

, n. < எருது +. Steer; இளவெருது. (W.)

எருத்துத்திமில் eruttu-t-timil

, n. < id. +. Hump of a bull; மாட்டின் முசுப்பு.

எருத்துப்புரை eruttu-p-purai

, n. < id. +. Ox stall; மாட்டுக்கொட்டில். Tinn.

எருத்துப்பூட்டு eruttu-p-pūṭṭu

, n. < id. +. First ploughing on an auspicious day, when every one's team is employed and a few furrows are turned up; நல்லநாளில் முதலில் ஏர் பூட்டி உழுகை. (J.)

எருத்துமாடு eruttu-māṭu

, n. < id. +. 1. Bull, ox; எருது. (நன். 183, உரை.) 2. Pack- bullock; பொதிமாடு. Loc.

எருத்துவாலன் eruttu-vālaṉ

, n. < id. +. A bird having a long tail; நீண்டவாலுள்ள ஒரு குருவி. (W.)

எருத்துவாற்குருவி eruttu-vāṟ-kuruvi

, n. < id. +. See எருத்துவாலன். (W.)

N. Ganesan

unread,
Jul 14, 2018, 12:10:50 AM7/14/18
to மின்தமிழ்
நிறைய உதாரணங்கள் கொடுத்துள்ளேன். தொகுத்து எழுதுங்கள்.

எருது + காளை = எருத்துக்காளை.
What the Dictionary says is: எருத்து is Member of eruttukkaaLai (= erutu + kALai).
 
எருத்து என்றால் எருது என அகராதிகளில் இல்லை.
வெருக்கு என்றால் வெருகு என அகராதிகளில் இல்லை.

N. Ganesan

unread,
Jul 14, 2018, 12:22:19 AM7/14/18
to மின்தமிழ், vallamai

2018-07-13 20:47 GMT-07:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:

எருத்து eruttu

, n. < எருது +. Steer; இளவெருது. (W.)

இவ்வாறு எந்த அகராதியும் கொடுக்கவில்லை.

J.P.Fabricius Tamil and English Dictionary

எருது erutu   s. an ox, a bullock, இடபம் (in combination, எருத்து.)

---------------

Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary

எருது

erutu  
s. A bull, an ox, a steer, இடபம். 2. Taurus of the zodiac, இடபவி ராசி--Used adjectively it becomes எருத்து.
எருதுமறித்தல், v. noun. [prov. vul.] Covering as a bull, எருதுபொலிதல்.
எருதுரப்ப, inf. To whoop in or der to get bullocks forward in plough ing, எருதையதட்டியோட்ட. 2. To make a great noise to little purpose, எருதைப் போற்சத்திக்க.
எருத்துக்காரன், s. A bullock-driver.
எருத்துக்காளை, s. A steer, இள வெருது.
எருத்துத்திமில், s. A bull's hump, விடைமுரிப்பு.
எருத்துப்பாரம், s. A bullock load.
எருத்துப்பூட்டு, s. [prov.] The first ploughing on an auspicious day when every one's team is employed and a few furrows turned up, எரிப்பூட்டு.
எருத்துமாடு, s. A bull, an ox, எருது.
எருத்துவாலன்--எருத்துவாலன்கு ருவி--எருத்துவாற்குருவி, s. A species of thebird of paradise with a long tail, ஒரு குருவி.
பொதியெருது, s. A bullock used for carrying burdens.
பொலியெருது, s. A bullock for covering. 2. The leading ox in a thresh ing floor.
உழவெருது, s. A ploughing ox, a bullock for ploughing.
எருத்து போலவே வெருக்கு என்பதும் Used in Combination only.

எருத்துமாடு eruttu-māṭu

, n. < id. +. 1. Bull, ox; எருது. (நன். 183, உரை.) 2. Pack- bullock; பொதிமாடு. Loc.

எருத்து என்னும் சொல்லுக்கு இள எருதைப் பொருளாகக் காட்டுகிறது.

காளைமாடு, பசுமாடு என்று சொல்வதைப் போல எருதினை எருத்துமாடு என்றும் குறிப்பிடுகிறது.

எருது+மாடு = எருத்துமாடு எனப் புணர்கிறது. நன்னூல் உரையில் பார்க்கவும்.
எருது+கால் = எருத்துக்கால், வெருகு + கண் = வெருக்குக்கண், வெருகு+அடி = வெருக்கடி, வெருகு + பல் = வெருக்குப்பல்.

தமிழ் அகராதிகளில் பார்த்திருப்பீர்கள்: வெருக்கு என வெருகுக்கு பெயர் இல்லை. புணர்ச்சி இலக்கணத்தில்
வருவது. ஆடு+தோல் = ஆட்டுத்தோல், மாடு+கொம்பு = மாட்டுக்கொம்பு, பகடு+உழவு = பகட்டுழவு.

நா. கணேசன்
 
இதிலிருந்து எருத்து என்பதும் ஒரு பெயர்ச்சொல் என்று தெளிவாகிறது.

எருத்து என்றால் கழுத்து. எருது என்ற பொருள் வரவேண்டுமென்றால்
இருசொற்றொடராக இருத்தல் வேண்டும்

வெருகு என்ற பொருளில் வெருக்கு வரவேண்டும் என்றால் இருசொற்றொடராய் இருக்கணும்:
வெருக்குக்கண், வெருக்குப்பல், வெருக்கடி, .... போன்ற இலக்கிய உதாரணங்கள் கொடுத்துள்ளேன்.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 14, 2018, 12:27:31 AM7/14/18
to mintamil

எருது, வெருகு - இவை இரண்டும் இங்கே அலசப்படுபவை.

இவை தவிர, கு,சு,து,பு வில் முடியும் குறில் தொடர் சொற்களை இலக்கியங்களில் இருந்து எடுத்துக்காட்டுங்கள்.

அதிகம் வேண்டாம். வகைக்கு ஒன்று போதும். :))

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்

N. Ganesan

unread,
Jul 14, 2018, 12:32:52 AM7/14/18
to மின்தமிழ்

2018-07-13 20:47 GMT-07:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:

எருதினை எருத்து என்றும் குறிப்பிடுகிறது தமிழ் அகராதிகள். கீழே காண்க.

அப்படியா? எந்த அகராதியில்?

நீங்கள்  மின்தமிழில் சொல்லும் புதிய பொருள்களை கண்மணி போன்றோர் ஆராய்தல் தமிழுக்கு நல்லது.
அகராதிகளில் ஏற்ற வேண்டுமா எனத் தமிழ்ப் பேராசிரியர்களிடம் விட்டுவிடலாம்.
 
எருத்து eruttu

, n. < எருது +. Steer; இளவெருது. (W.)

அகராதிகளில்

எருத்துக்காளை (= எருது+காளை)   இளவெருது (W.)
என்றுள்ளது. 

நா. கணேசன்

kanmani tamil

unread,
Jul 14, 2018, 9:08:30 AM7/14/18
to mintamil
///வெருக்கு பல் உருவின் முல்லையொடு கஞலி - குறு 240/3
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை - அகம் 267/6
வெருக்கு விடை அன்ன வெருள் நோக்கு கயம் தலை - புறம் 324/1

மூன்று செய்யுள் தொடர்களிலும்' வெருக்கு' என்னும் சொல் வெருகு என்ற சொல்லின் வலித்தல் விகாரமாக வந்துள்ளது . இது புலவோர்க்கு உரிய உரிமை ஆகும்.
வலித்தல் விகாரம் போலவே மெலித்தல் விகாரம், இடைக்குறை  எல்லாம் செய்யுளில் மட்டுமே.
மேலும்  வெருகின் பல் &வெருகின் அடி .....என வேற்றுமைத்தொகையாகவும் உள்ளன.
கண்மணி 
 வெருகின்பல், வெருகின்அடி - இவை வேற்றுமைத் தொகை என்கிறீர்கள். எவ்வாறு? வேற்றுமைவிரி எனத் தெரிகிறது.///
 
'வெருக்கு  பல் & வெருக்கு  அடி ' இரண்டும் வேற்றுமைத் தொகை.
விரியும் போது வெருகின் பல் ,வெருகின் அடி  என்று ஆகும் . என் கூற்றின் பொருள் இது தான்.
கண்மணி    

--

kanmani tamil

unread,
Jul 14, 2018, 9:16:13 AM7/14/18
to mintamil
 ///அறுகு+வேர் = அறுக்குவேர், குருகு+அடி = குருக்கடி, ... எனப் புணரும். குருக்கடி = குருகின் பாதம்/அடி.
இவை வலித்தல் விகாரமா? உயிரீற்றுச் சந்தி இலக்கணம் அல்லவா?
நா. கணேசன்///

இல்லை இவை புணர்ச்சி விதிப்படி சேர்த்து எழுதப்பட்டவை..
ஆனால் சரவணன் காட்டிய மேற்கோள்களில் "வெருக்கு    பல் & வெருக்கு அடி  எனவும் உள்ளதால் வலித்தல் விகாரம் ஆகலாம் என்றேன்.
' வெருக்குப்பல்,வெருக்கடி ' என்று இருந்திருந்தால் ஐயமே வந்திருக்காது.   
கண்மணி 

N. Ganesan

unread,
Jul 14, 2018, 9:22:30 AM7/14/18
to மின்தமிழ், vallamai
2018-07-14 6:08 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
///வெருக்கு பல் உருவின் முல்லையொடு கஞலி - குறு 240/3
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை - அகம் 267/6
வெருக்கு விடை அன்ன வெருள் நோக்கு கயம் தலை - புறம் 324/1

மூன்று செய்யுள் தொடர்களிலும்' வெருக்கு' என்னும் சொல் வெருகு என்ற சொல்லின் வலித்தல் விகாரமாக வந்துள்ளது . இது புலவோர்க்கு உரிய உரிமை ஆகும்.
வலித்தல் விகாரம் போலவே மெலித்தல் விகாரம், இடைக்குறை  எல்லாம் செய்யுளில் மட்டுமே.
மேலும்  வெருகின் பல் &வெருகின் அடி .....என வேற்றுமைத்தொகையாகவும் உள்ளன.
கண்மணி 
 வெருகின்பல், வெருகின்அடி - இவை வேற்றுமைத் தொகை என்கிறீர்கள். எவ்வாறு? வேற்றுமைவிரி எனத் தெரிகிறது.///
 
'வெருக்கு  பல் & வெருக்கு  அடி ' இரண்டும் வேற்றுமைத் தொகை.

வெருக்குவிடை (=வெருகு + விடை) என்பதும் தொகை.
 
விரியும் போது வெருகின் பல் ,வெருகின் அடி  என்று ஆகும் . என் கூற்றின் பொருள் இது தான்.
 
மூன்றாவது:  வெருக்குவிடை = வெருகின்விடை என விரியும்.

வெருக்குவிடை verukku-viṭai , n. < வெருகு¹ + விடை&sup7;. Male of wild cat; காட்டுப் பூனையின் ஆண். வெருக்குவிடை யன்ன வெகுணோக்கு (புறநா. 324).

எருது + காளை = எருத்துக்காளை (இளவெருது) போல, வெருக்குவிடை.

NG

N. Ganesan

unread,
Jul 14, 2018, 9:23:01 AM7/14/18
to மின்தமிழ்
2018-07-14 6:16 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
 ///அறுகு+வேர் = அறுக்குவேர், குருகு+அடி = குருக்கடி, ... எனப் புணரும். குருக்கடி = குருகின் பாதம்/அடி.
இவை வலித்தல் விகாரமா? உயிரீற்றுச் சந்தி இலக்கணம் அல்லவா?
நா. கணேசன்///

இல்லை இவை புணர்ச்சி விதிப்படி சேர்த்து எழுதப்பட்டவை..
ஆனால் சரவணன் காட்டிய மேற்கோள்களில் "வெருக்கு    பல் & வெருக்கு அடி  எனவும் உள்ளதால் வலித்தல் விகாரம் ஆகலாம் என்றேன்.
' வெருக்குப்பல்,வெருக்கடி ' என்று இருந்திருந்தால் ஐயமே வந்திருக்காது.   
கண்மணி 

நான் காட்டிய மேற்கோள்கள்.

சந்தி பிரித்து எழுதும்போது ஒற்றெழுத்தை விட்டுள்ளனர். வெருக்குப்பல், வெருக்கடி, வெருக்குவிடை : இருசொல் தொடர்கள்.
வெருகு + ஒருசொல் வரும்போது வெருக்குப்பல், வெருக்கடி, வெருக்குவிடை என்றாகும் எனக் காட்டும் சங்க இலக்கிய வரிகளை
நான் கொடுத்திருந்தேன்.

NG

kanmani tamil

unread,
Jul 14, 2018, 9:28:09 AM7/14/18
to mintamil
எருத்து என்று வெறுமனே சொன்னால் அது கழுத்து, பிடர், மாடு ஆகியவற்றில் எதைக் குறிக்கிறது என்று ஐயம் உண்டாகும்.

அதனால் தான் தெளிவாக்க வேண்டி எருத்துமாடு என்று கூறினர். 

இதில் புணர்ச்சியே இல்லை. எதற்கெடுத்தாலும் புணர்ச்சி என்று கூறாதீர்கள். ம். காலம் கெட்டுப்போச்சி. :))

'எருத்து +மாடு =எருத்துமாடு ' ------இது இயல்பு புணர்ச்சி 
புணர்ச்சியே  இல்லை என்பது தவறு.

காலம் கெட்டுப் போகவில்லை.
நம் பார்வை /கோணம் மாறுபடுகிறது.

வெருகு என்பதே பூனையின் பெயர்.
செய்யுளில் வெருகு>>>வெருக்கு என விகாரப்பட்டும்  இடம் பெறுகிறது.
கண்மணி     

kanmani tamil

unread,
Jul 14, 2018, 9:34:56 AM7/14/18
to mintamil
///சந்தி பிரித்து எழுதும்போது ஒற்றெழுத்தை விட்டுள்ளனர். வெருக்குப்பல், வெருக்கடி, வெருக்குவிடை : இருசொல் தொடர்கள்.
வெருகு + ஒருசொல் வரும்போது வெருக்குப்பல், வெருக்கடி, வெருக்குவிடை என்றாகும் எனக் காட்டும் சங்க இலக்கிய வரிகளை
நான் கொடுத்திருந்தேன்.///

"வெருக்கு  பல் "  என்ற தொடரில் மட்டும் தான் ......சந்தி பிரித்து எழுதும் போது ஒற்றெழுத்தை  விட்டதாகக் கொள்ளலாம்.
ஆனால் "வெருக்கு   அடி " என்ற தொடருக்கு அது பொருந்தாது அல்லவா!
அதனால் தான் நான் வலித்தல் விகாரம் என்றேன்.
கண்மணி   

N. Ganesan

unread,
Jul 14, 2018, 9:37:21 AM7/14/18
to மின்தமிழ்
2018-07-14 6:28 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:

'எருத்து +மாடு =எருத்துமாடு ' ------இது இயல்பு புணர்ச்சி 

எருத்து = கழுத்து. கழுத்து மாடு என்பது பொருளா?

நா. கணேசன் 

kanmani tamil

unread,
Jul 14, 2018, 9:42:45 AM7/14/18
to mintamil
///எருத்து = கழுத்து. கழுத்து மாடு என்பது பொருளா?
நா. கணேசன்///

திட்டவட்டமாக இல்லை.......வெருகு என்பதே பூனையின் பெயர்........"வெருக்கு அடி " என்னும் மேற்கோளில் வெருகு >>>வெருக்கு என விகாரப்பட்டுள்ளது      
கண்மணி  

--

N. Ganesan

unread,
Jul 14, 2018, 10:06:43 AM7/14/18
to மின்தமிழ், vallamai
On Sat, Jul 14, 2018 at 6:42 AM, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///எருத்து = கழுத்து. கழுத்து மாடு என்பது பொருளா?
நா. கணேசன்///

திட்டவட்டமாக இல்லை.......வெருகு என்பதே பூனையின் பெயர்........"வெருக்கு அடி " என்னும் மேற்கோளில் வெருகு >>>வெருக்கு என விகாரப்பட்டுள்ளது      
கண்மணி  

எருது + மாடு >> எருத்து + மாடு = எருத்துமாடு.
வெருகு+விடை >> வெருக்கு + விடை = வெருக்குவிடை.

இவைபோல, -ம்பு சந்தியில் -ப்பு என வலித்தல் விகாரம் ஆகிறது:
அடம்பு+கொடி = அடப்புக்கொடி, அடப்பங்கொடி
சிலம்பு+அதிகாரம் = சிலப்பதிகாரம்.

kanmani tamil

unread,
Jul 14, 2018, 10:08:19 AM7/14/18
to mintamil
ஆம் 
சக 

N. Ganesan

unread,
Jul 15, 2018, 11:30:15 AM7/15/18
to Srinivasakrishnan ln, மின்தமிழ், வல்லமை, housto...@googlegroups.com, Vaidehi Herbert, podhuvan sengai, Theodore Baskaran, S. V. Shanmukam
2018-07-13 5:13 GMT-07:00 Srinivasakrishnan ln <lns2...@gmail.com>:
இவ்விழையில் மேற்கோள் காட்டும்போது நன்னூல் சூத்திரங்களையே சுட்டினால் இலக்கண மாணவர்களுக்கும் உபயோகமாக இருக்குமே!! 
Srini

அகராதிகளைத் திருத்தம் செய்வதன்முன் தமிழைப் படிக்கவேண்டும். இல்லையெனில், ஆட்டு, மாட்டு, வெருக்கு, பகட்டு என்று முறையே ஆடு, மாடு, வெருகு, பகடு போன்ற உயிரிகளின் பெயர்கள் சங்க காலத்திலும், பிறகும் அழைக்கப்பட்டன என்று சொல்வதாகிவிடும்.  e.g., பகடு + உழவு = பகட்டுழவு

வெருகு+கண் = வெருக்குக்கண் என நாலடியில் வருகிறது. இதற்குமுன்னர் வெருகு வருமொழியைச் சந்தித்து, இருசொல் தொடராகையில் உயிரீற்றுமெய் ஆன க் இரட்டும் என்று சங்கப்புலவர்கள் பாடியுள்ளனர். எனவே, வெருக்குக்கண் = வெருகு+கண் என ஆயிரம் ஆண்டுகளாக, கொங்குநாட்டில் தமிழுக்கு இலக்கணம் அருளினோர் எழுதியுள்ளனர். பவணந்திமுனியின் நன்னூலுக்கு கொங்குநாட்டுச் சமணர் மயிலைநாதர் செய்த உரையில் இந்த உதாஹரணம் இருக்கிறது. பின்வந்தோர் அதை மேற்கொண்டொழுகினர்.

காட்டு:
கடவுள்துணை
ஜயினமுனிவர்கள் அருளிச்செய்த நீதிநூலாகிய நாலடியார் என்று வழங்கும் நாலடி நானூறு மூலமும்,
அதற்குத் தெளிவுபொருள் விளக்கப் பதவுரையும்
ஊ. புஷ்பரதச் செட்டி, கலாரத்நாகரம் அச்சுக்கூடம், 1885

முன்னுரையில் ஊ.பு. செட்டி குறிப்பிடுகிறார்:
“ இந் நாலடியாருக்கு இதுவரையில் வழங்கிவந்த பல உரைகளையும், சென்னை யூநிவர்சிட்டி பரீக்ஷைக்குப்
பல வருடங்களிற் குறித்த பாகங்களுக்குச் சென்னை பிரசிடென்சி காலீசு தமிழ்ப் பிரதம பண்டிதராயிருந்த
தி. ஈ. ஸ்ரீநிவாசராகவாசாரியா ரவர்களாலும் மற்ற பண்டிதர்களாலும் இயற்றி “நாலடியார் தெளிபொருள்
விளக்கப் பதவுரை” என்கிற பெயரால் வெளியிட்டனம். இதில் அந்தந்தப் பாடல்களுக்குக் கூடியவரையும்
பொருளும் கருத்தும் விளங்க எழுதி அவசியமான இலக்கணங்களையுங்காட்டி நன்னூலில் சூத்திரங்களையும் 
குறித்திருக்கின்றனம்; ஆதலால் ஓரிடத்தில் எழுதிய வகையைக்கொண்டு பிறவிடங்களிலும்
இலக்கண முதலியவைகளை உய்த்தறிந்து கொள்க.”

பக். 239:
வெருக்குக்கண் எனுந் தொடர் பயிலும் நாலடிவெண்பாவின் உரைவாசகம்:
“வேறிருத்தலாவது - அன்பிற்குத்தக்க வுபசாரம் பெறாமலிருத்தல். ஒருவித பளபளப்பினால்
பூனைக்கண் கருனைக்கு உவமை யாயிற்று. 
வெருகு என்பதில் ககரம் வேற்றுமைச்சந்தியில் மிக்கது;
“நெடிலோடுயிர்த்தொடர்” என்கிற - (நன் - உயிர் புணர்- சூ - 33)ன் உரையைக் காண்க,”

பிற பின்,
நா. கணேசன்

LNS

unread,
Jul 15, 2018, 2:18:20 PM7/15/18
to மின்தமிழ்
நன்றி, Dr கணேசன்

LNS

N. Ganesan

unread,
Jul 24, 2018, 9:59:08 AM7/24/18
to Srinivasakrishnan ln, மின்தமிழ், வல்லமை, housto...@googlegroups.com, Vaidehi Herbert, podhuvan sengai, Theodore Baskaran, S. V. Shanmukam

2018-07-13 5:13 GMT-07:00 Srinivasakrishnan ln <lns2...@gmail.com>:
இவ்விழையில் மேற்கோள் காட்டும்போது நன்னூல் சூத்திரங்களையே சுட்டினால் இலக்கண மாணவர்களுக்கும் உபயோகமாக இருக்குமே!! 
Srini

வெருகு + கண் = வெருக்குக்கண், எருது + காளை = எருத்துக்காளை.
வெருக்கு, எருத்து எனத் தனிப்பேர்கள் தமிழில் இவ் விலங்குகளுக்கு வாரா.
ஆட்டுத்தாடி (ஆடு + தாடி), மாட்டுக்கொம்பு (மாடு+கொம்பு) என்னும்
இருசொற்றொடர்கள் புணர்ச்சியில் ஆட்டு, மாட்டு என்பதை
விலங்குப் பெயர்கள் எடுப்பது போல, வெருக்கு, எருத்து என விலங்குப் பெயர்கள்
என இருக்கின்றன எனச் சொல்வதாகிவிடும்.

ற, ட இரண்டும் தொடர்புடைய வல்லின எழுத்துகள். அவை இன் என்னும் உருபுடன்
புணரும்போது ஒற்று இரட்டும். ஆனால் மற்ற எழுத்துகள் இரட்டா என
சூத்திரித்துள்ளார் பவணந்தி முனிவர். ஈரோட்டருகே சீனாபுரம் உள்ளது.
ஜிநபுரம்/சினபுரம் மக்கள் பேச்சில் சீனாபுரம் என்ப. அங்கே வாழ்ந்த
சமணமுனி பவணந்தி அடிகள். தொல்காப்பியர் தொட்டுச் சென்றதை
விரித்து நூற்பா ஆக்கியிருப்பவர் பவணந்தி முனிவர் ஆவார்.

நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள் 
ட ற ஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே     (நன்னூல், 183)

-று, -டு என்ற ஈறுகொண்ட சொற்களை பிற ஈற்றுடன் ஒப்பிடக் கூடாது.

-று, -டு என்ற ஈறு கொண்ட சொற்கள் “இன்” என்ற உருபுடன் சேரும்போது ஈற்றொட்டு இரட்டும்.
ஆனால் மற்றவை -இன் இரட்டாது. இதனைச் சங்க இலக்கியத்தில் காணலாம்.

இச்சான்றுகளில் டு, று என முடியும் உயிர்த்தொடர் முன் வேற்றுமையில் நாற்கணமும் வர, இறுதியில் உள்ள ட, ற என்னும் மெய்கள் இரட்டித்தன. 

நாடு+இன் = நாட்டின், சோறு + இன் = சோற்றின், காடு+இன் = காட்டின், மாடு+இன் = மாட்டின்
வயிறு + இன் = வயிற்றின், களிறு+இன் = களிற்றின், கயிறு+இன் = கயிற்றின்.

ஆனால், குருகு+இன் = குருகின், வெருகு+இன் = வெருகின், ....
உ-ம்:  அறுகின் மாலை, சருகின் குப்பை, வெருகின் பிள்ளை, குருகின் குஞ்சு, ..

சங்க இலக்கியத்தில் சான்றுகள்:

    வெருகிற்கு (1)
பிள்ளை வெருகிற்கு அல்கு_இரை ஆகி - குறு 107/4
    வெருகின் (5)
எழுதி அன்ன கொடி படு வெருகின்/பூளை அன்ன பொங்கு மயிர் பிள்ளை - அகம் 297/13,14
குவி அடி வெருகின் பைம் கண் ஏற்றை - அகம் 367/8
பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன - அகம் 391/1
பிள்ளை வெருகின் முள் எயிறு புரைய - புறம் 117/8
ஊர் முது வேலி பார்நடை வெருகின்/இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை - புறம் 326/1,2

பிற பின்!
நா. கணேசன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 24, 2018, 10:24:21 AM7/24/18
to mintamil
இதைத்தான் நான் ஏற்கெனவே சொன்னேனே.

டு, று ஈற்றில் வரும் சொற்களுக்கு மட்டும் தான் இவ்விதி பொருந்துமென்று.

கேட்டீர்களா, இப்போது நீங்களே ஒப்புக்கொண்டீர்கள்.

ஈற்றில் கு உடைய வெருகு என்பது வெருக்கு என்று ஆவது எந்த விதிப்படி?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

N. Ganesan

unread,
Jul 24, 2018, 10:25:33 AM7/24/18
to மின்தமிழ்

On Tuesday, July 24, 2018 at 7:24:21 AM UTC-7, திருத்தம் பொன். சரவணன் wrote:
இதைத்தான் நான் ஏற்கெனவே சொன்னேனே.

???

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 24, 2018, 10:40:33 AM7/24/18
to mintamil

the below mail is for dr.ganesan.

kanmani tamil

unread,
Jul 24, 2018, 11:14:09 AM7/24/18
to mintamil
முனைவர் கணேசன் அவர்களே ;
நமக்குச் சிக்கல் தோன்றியது சங்க இலக்கியத்தில் விலங்குகள்-பூனை என்ற கட்டுரையின் கீழ் நடந்த மடலாடலில் தான்.
அதை எடுத்துப்  பார்த்த பிறகு விளக்கம் கூறினால் தான் தெளிவு ஏற்படும்.
இது பாதி வழியில் நடந்த விவாதம்.
கண்மணி 

N. Ganesan

unread,
Jul 25, 2018, 4:51:38 PM7/25/18
to மின்தமிழ், vallamai
from prof. S. V. Shanmukam,  Professor Emeritus,  Linguistics, Annamalai University

2018-07-25 3:08 GMT-07:00 Shanmugam SeVai wrote:
உங்கள் கருத்து சரியானதே.
சண்முகம்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 25, 2018, 11:51:26 PM7/25/18
to mintamil
வெருகு என்ற சொல் வெருக்கு என்று மாறுவதற்கான இலக்கணத்தைக் காட்டுங்கள் என்று கேட்டேன்.

அதற்குப் பதில் கூறாமல் இன்னமும் மழுப்பிக் கொண்டே இருக்கிறீர்கள். ஏன்?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Jul 26, 2018, 7:45:52 AM7/26/18
to மின்தமிழ்
2018-07-25 20:51 GMT-07:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
வெருகு என்ற சொல் வெருக்கு என்று மாறுவதற்கான இலக்கணத்தைக் காட்டுங்கள் என்று கேட்டேன்.

உங்கள் மடல்களில் தான் வெருகு என்றால் வெருக்கு என்று எழுதினீர்.

N. Ganesan

unread,
Jul 26, 2018, 8:04:41 AM7/26/18
to மின்தமிழ்

On Tuesday, July 24, 2018 at 8:14:09 AM UTC-7, kanmanitamilskc wrote:
முனைவர் கணேசன் அவர்களே ;
நமக்குச் சிக்கல் தோன்றியது சங்க இலக்கியத்தில் விலங்குகள்-பூனை என்ற கட்டுரையின் கீழ் நடந்த மடலாடலில் தான்.
அதை எடுத்துப்  பார்த்த பிறகு விளக்கம் கூறினால் தான் தெளிவு ஏற்படும்.
இது பாதி வழியில் நடந்த விவாதம்.
கண்மணி 

வெருகு என்பது பெயர். வெருக்கு என்று தனிப்பெயர் இல்லை.

வெருகு+பல் = வெருக்குப்பல், வெருகு+கண் = வெருக்குக்கண், .... :தொகைகளில்.

வெருகு+இன் = வெருகின் என்று வரும். உருபு ஏற்கும்போது. 

சங்க இலக்கியம் காட்டுவதனை நன்னூல் விளக்கியுள்ளது.

நா. கணேசன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 26, 2018, 8:25:53 AM7/26/18
to mintamil
2018-07-26 17:34 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

இதற்குத்தான் என்ன இலக்கண விதி என்று காட்டுங்கள் என்று கேட்கிறேன்.

தக்க விதியைக் காட்டாமல் தப்பித்துக் கொண்டே செல்கிறீர். :))

வெருகு+இன் = வெருகின் என்று வரும். உருபு ஏற்கும்போது. 

சங்க இலக்கியம் காட்டுவதனை நன்னூல் விளக்கியுள்ளது.

நா. கணேசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Jul 26, 2018, 8:34:31 AM7/26/18
to மின்தமிழ்

On Thursday, July 26, 2018 at 5:25:53 AM UTC-7, திருத்தம் பொன். சரவணன் wrote:

நீங்கள் எழுதியிருக்கும் மடல்களைப் படித்தால் அகராதியில் உள்ள சொற்களுக்கும்
உங்கள் புதுசா எழுதும்  பொருள்களுக்கும் உள்ள வேறுபாடு நன்கு தெரியும்.

வெருக்கு என்றால் வெருகின் பெயர். எருத்தின், வெருக்கின், ... என்றெல்லாம் எழுதுவது நீங்கள்.

நன்னூல் இலக்கணத்தில் அவ்வாறு வருவதில்லை. தக்க விதிக்கு நன்னூல் படிக்கவும்.
கொடுத்திருக்கிறேன்.

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 26, 2018, 8:37:48 AM7/26/18
to mintamil
2018-07-26 18:04 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

On Thursday, July 26, 2018 at 5:25:53 AM UTC-7, திருத்தம் பொன். சரவணன் wrote:

2018-07-26 17:34 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

On Tuesday, July 24, 2018 at 8:14:09 AM UTC-7, kanmanitamilskc wrote:
முனைவர் கணேசன் அவர்களே ;
நமக்குச் சிக்கல் தோன்றியது சங்க இலக்கியத்தில் விலங்குகள்-பூனை என்ற கட்டுரையின் கீழ் நடந்த மடலாடலில் தான்.
அதை எடுத்துப்  பார்த்த பிறகு விளக்கம் கூறினால் தான் தெளிவு ஏற்படும்.
இது பாதி வழியில் நடந்த விவாதம்.
கண்மணி 

வெருகு என்பது பெயர். வெருக்கு என்று தனிப்பெயர் இல்லை.

வெருகு+பல் = வெருக்குப்பல், வெருகு+கண் = வெருக்குக்கண், .... :தொகைகளில்.

இதற்குத்தான் என்ன இலக்கண விதி என்று காட்டுங்கள் என்று கேட்கிறேன்.

தக்க விதியைக் காட்டாமல் தப்பித்துக் கொண்டே செல்கிறீர். :))

நீங்கள் எழுதியிருக்கும் மடல்களைப் படித்தால் அகராதியில் உள்ள சொற்களுக்கும்
உங்கள் புதுசா எழுதும்  பொருள்களுக்கும் உள்ள வேறுபாடு நன்கு தெரியும்.

வெருக்கு என்றால் வெருகின் பெயர். எருத்தின், வெருக்கின், ... என்றெல்லாம் எழுதுவது நீங்கள்.

நன்னூல் இலக்கணத்தில் அவ்வாறு வருவதில்லை. தக்க விதிக்கு நன்னூல் படிக்கவும்.
கொடுத்திருக்கிறேன்.

நீங்கள் கொடுத்த நன்னூல் விதி டு, று ஈற்றுச் சொற்களுக்கு மட்டும் பொருந்தக் கூடியது.

நான் கேட்பது கு ஈற்றுச் சொற்கள் புணர்ச்சிக்கான விதி.

இருந்தால் காட்டுங்களேன்.

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Jul 26, 2018, 8:47:36 AM7/26/18
to மின்தமிழ்

On Thursday, July 26, 2018 at 5:37:48 AM UTC-7, திருத்தம் பொன். சரவணன் wrote:

2018-07-26 18:04 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

On Thursday, July 26, 2018 at 5:25:53 AM UTC-7, திருத்தம் பொன். சரவணன் wrote:

2018-07-26 17:34 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

On Tuesday, July 24, 2018 at 8:14:09 AM UTC-7, kanmanitamilskc wrote:
முனைவர் கணேசன் அவர்களே ;
நமக்குச் சிக்கல் தோன்றியது சங்க இலக்கியத்தில் விலங்குகள்-பூனை என்ற கட்டுரையின் கீழ் நடந்த மடலாடலில் தான்.
அதை எடுத்துப்  பார்த்த பிறகு விளக்கம் கூறினால் தான் தெளிவு ஏற்படும்.
இது பாதி வழியில் நடந்த விவாதம்.
கண்மணி 

வெருகு என்பது பெயர். வெருக்கு என்று தனிப்பெயர் இல்லை.

வெருகு+பல் = வெருக்குப்பல், வெருகு+கண் = வெருக்குக்கண், .... :தொகைகளில்.

இதற்குத்தான் என்ன இலக்கண விதி என்று காட்டுங்கள் என்று கேட்கிறேன்.

தக்க விதியைக் காட்டாமல் தப்பித்துக் கொண்டே செல்கிறீர். :))

நீங்கள் எழுதியிருக்கும் மடல்களைப் படித்தால் அகராதியில் உள்ள சொற்களுக்கும்
உங்கள் புதுசா எழுதும்  பொருள்களுக்கும் உள்ள வேறுபாடு நன்கு தெரியும்.

வெருக்கு என்றால் வெருகின் பெயர். எருத்தின், வெருக்கின், ... என்றெல்லாம் எழுதுவது நீங்கள்.

நன்னூல் இலக்கணத்தில் அவ்வாறு வருவதில்லை. தக்க விதிக்கு நன்னூல் படிக்கவும்.
கொடுத்திருக்கிறேன்.

நீங்கள் கொடுத்த நன்னூல் விதி டு, று ஈற்றுச் சொற்களுக்கு மட்டும் பொருந்தக் கூடியது.

இல்லை. எல்லா வல்லின எழுத்துக்குமான விதியில் டு, று மாறுபடுவதைக் கூறியுள்ளார் நன்னூலார்.

அதாவது, வெருகு+கண் = வெருக்குக்கண் என்றும், வெருகு+இன் = வெருகின் என்றும் புணரும்.
ஆனால், ற, ட சொற்கள் வேற்றுமை உண்டு. 

N. Ganesan

unread,
Jul 28, 2018, 12:40:54 AM7/28/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panbudan

வெருகு என்று காட்டுப்பூனைக்குப் பெயர் தமிழிலும், பிற த்ராவிட பாஷைகளிலும் பல ஆயிரம் ஆண்டுகளாக உள்ளது. இச்சொல் நிலைமொழியாக நின்று, வருமொழி வெருகின் அங்கமோ, பண்போ வரும்போது வெருகு என்னும் சொல்லின் இறுதியில் உள்ள ககரம் இரட்டும். இதனை இலக்கணகாரர்கள் ஓராயிரம் ஆண்டுகளாகத் தமிழ்மாணவர்களுக்குப் பயிற்றியுள்ளனர். அவற்றில் சில இவ்விழையில் காண்போம்.

சங்க இலக்கியத்தில் உயிரீற்றுப் புணர்ச்சி: http://tamilconcordance.in/SANGconc-1-ve1.html#வெருக்கு

வெருக்கு (3)
வெருக்கு பல் உருவின் முல்லையொடு கஞலி - குறு 240/3
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை - அகம் 267/6
வெருக்கு விடை அன்ன வெருள் நோக்கு கயம் தலை - புறம் 324/1

வெருகின் கண் - வெருக்குக் கண்; மாடு + தலை  = மாட்டுத் தலை, ஆடு+ தாடி = ஆட்டுத்தாடி, காடு+ களச்சாளை = காட்டுச்சாளை, .....
என்பது போல வரும் என 2 வாரம் முன் விளக்கியிருந்தேன். வெருகு என்பது தான் காட்டுப்பூனைக்குப் பெயர்.
வெருக்கு என்பது வெருகின் விரி எனக் குறிப்பிட்டிருந்தேன். வெருக்கு என்று தனியாகப் பெயர் இல்லை, அப்படியென்றால்
சங்கப்புலவர் மாடு, மாட்டு;   ஆடு, ஆட்டு என்று தனிப்பெயர்கள் கொண்டதாகச் சொல்வதாகிவிடும்.

வெருகு+பல் = வெருக்குப் பல், வெருகு+கண் = வெருக்குக்கண், .... போலப் புணரும். இது தமிழில் உள்ள சந்தி இலக்கணம்,

வெருகு+பல் = வெருக்குப்பல். இது விரி. மாடு+மடி = மாட்டுமடி, ஆடு+தாடி = ஆட்டுத்தாடி.
வெருகு+பல் = வெருக்குப்பல், வெருகு+அடி = வெருக்கடி, வெருகு+விடை = வெருக்குவிடை, வெருகு+கண் = வெருக்குக்கண்,  ...

வெருக்கு என்று வெருகிற்குத் தனிப்பெயர் இல்லை. எல்லா திராவிட மொழிகளிலும் இதைக் காணலாம்.

 முத்துவீரியம்”

டறவொற்றிரட்டும் குற்றியலுகர ஈற்றுச் சொற்கள்

229. ஒற்றிடை மிகூஉங்குற் றுகரமு முளவே.

(இ-ள்.) இடையிலொற்று மிக்குமுடியுங் குற்றிய லுகரங்களும் உளவாம்.

(வ-று.) ஆட்டை, கயிற்றை.

(வி-ரை.) நெடிற் றொடர்க்குற்றுகர ஈறும், உயிர்த்தொடர்க் குற்றுகர ஈறும்
உருபேற்குங்கால் இடையில் ஒற்றுமிக்கு நிற்றலும் உள என்பது இந்நூற்பாவின் கருத்தாகும்.

யாடு + ஐ = யாட்டை, முயிறு + ஐ = முயிற்றை.

‘‘நெடிலோடு உயிர்த் தொடர்க் குற்றுகரங்களுள்
டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே’’ (உயிரீற் - 33)

என்னும் நன்னூல் நூற்பா இதனை நன்கு விளக்குதல் காண்க. (70)

http://www.tamilvu.org/slet/l0I00/l0I00pka.jsp?pno=66

நன்னூல், சங்கரநமச்சிவாயர் செய்து சிவஞானமுனிவர் திருத்திய புத்தம்புத்துரை.

{183}

நெடிலோ டுயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுட்
டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே.
 
     எ-னின், மேலை நிலைமொழிக்கு ஓர் புறனடையாய் எய்தாதது எய்துவித்தலும்
வருமொழிக்கு முதல் உயிரேல் இந்நிலைமொழிக்கு, “உயிர்வரி னுக்குறள்” (நூ.
164) என்னும் சூத்திரத்தான்
 எய்தியதன்மேல் சிறப்புவிதியும் உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்: நெடிற்றொடர்க் குற்றுகர ஈற்று மொழிகளுள்ளும் உயிர்த்தொடர்க் குற்றுகர ஈற்று
மொழிகளுள்ளும் அவ்வுகரப் பற்றுக்கோடாகிய வல்லெழுத்து ஆறனுள் டகார,
றகாரமான இரண்டு ஒற்றும் பெரும்பாலும் வேற்றுமைக்கண் இரட்டும் எ-று.

‘குற்றுகரங்கள்’ என்னும் எழுத்துக்குறிப்பு அம்மொழிகளை உணர்த்தி நின்றது.

வருமொழி வரையாமையின் நாற்கணமும் கொள்க.

     உ-ம்: ஆட்டுக்கால், பாற்றுக்கால், முருட்டுக்கால், முயிற்றுக்கால், செவி, தலை,
புறம், ஞாற்சி, நிறம், மயிர், யாப்பு, வன்மை, அடி என வரும்.

     இவ்விரண்டு ஒற்றும் பெரும்பாலும் வேற்றுமைக்கண் இரட்டும் எனவே
சிறுபான்மை வேற்றுமைக்கண் இரட்டாமையும் சிறுபான்மை அல்வழிக்கண் இரட்டுதலும்
சிறுபான்மை இருவழியிலும் பிற ஒற்று இரட்டுதலும் கொள்க.

     வ-று: “காவிரி புரக்கு நாடுகிழ வோனே” (பொருந. 248),  “காடக மிறந்தார்க்கே,
யோடுமென் மனனேகாண்” (யா. வி. 91), “கறைமிட றணியலு மணிந்தன் றக்கறை” 
(புறம்.1:5) என வேற்றுமைக்கண் இரட்டாவாயின. காட்டரண், களிற்றுயானை என 
அல்வழிக்கண் இரட்டின. “வெருக்குக்கண் வெங்கருனை” (நாலடி. 210:2), எருத்துக்கால்
எனவும் எருத்துமாடு எனவும் இருவழியும் பிற ஒற்று இரட்டின. (33)

--------------

நன்னூல், ஆறுமுக நாவலர் இயற்றிய காண்டிகையுரை.

http://www.tamilvu.org/slet/l0100/l0100pd1.jsp?bookid=6&auth_pub_id=15&pno=183

உயிரீற்றுப் புணரியல்

குற்றுகர வீற்றுச் சிறப்புவிதி

183நெடிலோ டுயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுட்
டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே .
 
நெடில் (தொடர்) உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள் - நெடில்தொடர்களும் உயிர்த்தொடர்களுமாகிய குற்றுயலுகர மொழிகளுள் , ட ற ஒற்று - அவ்வுகரப் பற்றுக் கோடாகிய வல்லொற்று ஆறனுள் டகர , றகரம் என்னும் இரண்டொற்றும் , மிக வேற்றுமை இரட்டும் - பெரும்பாலும் வேற்றுமையில் இரட்டும் .

வரும் எழுத்தைச் சொல்லாமையால் நாற்கணமும் கொள்க .

ஆடு+ கால் = ஆட்டுக்கால் , பாறு+கால்= பாற்றுக்கால் , முருடு+கால் = முருட்டுக்கால் , முயிறு+கால் = முயிற்றுக்கால் என வரும் .

செவி , தலை , புறம் , ஞாற்சி , நிறம் , மயிர் , காப்பு , வன்மை , அடி என்பனவற்றையும் ஒட்டி , வேற்றுமையிலே ட , ற வொற்று இரட்டுதல் காண்க .

இவ்விரண்டு ஒற்றும் பெரும்பாலும் வேற்றுமையில் இரட்டும் எனவே , சிறுபான்மை வேற்றுமையில் இரட்டாமையும் ; சிறுபான்மை அல்வழியில் இரட்டுதலும் , சிறு பான்மை இரு வழியும் பிற ஒற்று இரட்டுதலும் கொள்க .

1 . ' காவிரி புரக்கும் நாடு கிழவோனே '
' காடக மிறந்தார்க்கே நாடுமென் மனனே காண் '
' கறைமிட றணியலு மணிந்தன் றக்கறை '

என்பவனவற்றுள் , நாடு கிழவோன் , காடகம் , மிடறணியல் என வேற்றுமையிலே ட , ற ஒற் று இரட்டா வாயின .

2 . காடு + அரண் = காட்டரண் , ஏறு + ஏனம் = ஏற்றேனம் , வரடு + ஆடு = வரட்டாடு , குருடு + கோழி = குருட்டுக்கோழி , வெளிறு + பனை = வெளிற்றுப்பனை என அல்வழியிலே ட , ற ஒற்று இரட்டின .

3 . வெருகு + கண் = வெருக்குக்கண் , எருது + கால் = எருத்துக்கால் எனவும் ;

எருது + மாடு = எருத்து மாடு எனவும் இரு வழியும்
பிற ஒற் று இரட்டின .

ட ற வொற்று , மெய் வரின் இரட்டும் என்றது எய்தாதது எய்துவித்தல் ; "உயிர் வரின் இரட்டும் என்றது " உயிர் வரினுக்குறள் " என்னும் சூத்திரத்தால் எய்தியதன் மேல் சிறப்புவிதி .

உயிரீற்றுப் புணரியல்

குற்றுகர வீற்றுச் சிறப்புவிதி

184மென்றொடர் மொழியுட் சிலவேற் றுமையிற்
றம்மின வன்றொட ராகா மன்னே .
 
மென்றொடர் மொழியுள் சில - மென்தொடர்க் குற்றியலுகர மொழிகளுள்ளே சில மொழிகள் , வேற்றுமையில் தம் இனம் வன்றொடர் - வேற்றுமையிலே தமக்கு இனமாகிய வன்றொடர்க் குற்றியலுகர, மொழிகளாக ; ஆகாமன் - ஆதலை ஒழிந்தன பெரும்பாலன .

வருமழுத்தைச் சொல்லாமையால் , நாற்கணமும் கொள்க .

மருந்து + பை = மருத்துப்பை , சுரும்பு + நாண் = சுருப்புநாண் . கரும்பு + வில் = கருப்புவில் , கன்று + ஆ = கற்றா
என வரும் .

வண்டுக்கால் , பந்துத்திரட்சி முதலியன எல்லாம் வன்தொடரா ஆகாதன .

சில வன்தொடராம் எனவே , ஆகாதன பல என்பது தானே வந்தியையவும் . மன்னே என்ற மிகையாலே , எற்புடம்பு , அற்புத்தளை , குரக்குமனம் எனச் சிறுபான்மை அல்வழிக்கண் வன்தொடர் ஆதலும் கொள்க .

சில மென்தொடர்க் குற்றியலுகர மொழிகள் மூவினமும்வரின் தம்மினம் வன்தொடராம் என்றது எய்தாதது எய்துவித்தல் ; உயிர் வரின் தம்மினம் வன்தொடராம் என்றது ' உயிர்வரி னுக்குறள் ' என்னும் சூத்திரத்தால் எய்தியதன்மேல் சிறப்புவிதி .

நா. கணேசன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 28, 2018, 1:02:56 AM7/28/18
to mintamil

183}

நெடிலோ டுயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுட்
டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே.
 
அதுதான் மிகத்தெளிவாக ட, ற ஒற்றுக்கள் இரட்டும் என்று போட்டிருக்கிறதே.

நாம் பேசுவது கு வீற்று சொற்களைப் பற்றி. வெருகு, முருகு, அறுகு, மறுகு ... போன்றவை.

ஏன் பொருத்தமில்லாத சான்றுகளைக் காட்டுகிறீர்கள்?.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages