தமிழ்நாட்டின் தொன்மையான பிராமி எழுத்து

48 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Jul 20, 2011, 8:26:09 AM7/20/11
to mintamil
பிராமி எழுத்துகள் தமிழ்நாட்டில் அசோகனால் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டு பிராமி எழுத்துகள் கி.மு. 3 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது அல்ல  என மறுப்பவருக்கு ஒரு இனிப்பான செய்தி இது.
 
மூன்றாண்டுகளுக்கு முன் சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அலுவலகத்திற்குச் சென்று அங்கு விற்பனைக்கு இருந்த சில அகழாய்வு நூல்களை வாங்கிப் படித்தது நினைவிற்கு வந்து அதில் Excavation of Archaeological Sites in Tamilnadu என்ற  2004  ஆம் ஆண்டில்    வெளியிடப்பட்டிருந்த நூலை எடுத்துப் புரட்டினேன் . அதில் கொற்கை என்ற தலைப்பில் 1968-69 ஆம் ஆண்டு கொற்கையில் நடத்தப்பட்ட ஆகழாய்வு அறிக்கையை புரட்டும போது பக்கம் 56 இல் Carbon 14 அடிப்படையில் கொற்கையின் காலம் 2755 + or - 95 , இதாவது, கி.மு. 785 என குறிக்கப்பட்டு  உள்ளது. பின் அட்டையில் த ன் என்ற பிராமி எழுத்துகளை உடைய பானை ஓட்டின் படம் அச்சாகி உள்ளது.  இந்த பிராமி எழுத்து உள்ள பானை ஓடும் அக்கால அளவினதே என்று அங்கிருந்த ஊழியர் எனக்கு சொன்னதும் நினைவிற்கு வருகிறது. தவிர, கொற்கை ஆய்வினை நடன. காசிநாதன் நிகழ்த்தி இருந்ததும் இப்பானை ஓட்டின் காலம் கி.மு.. 785 என அவரை நான் நேரில் கண்டபோது அவரே என்னிடம் கூறியதும என் நினைவிற்கு வருகிறது.
 
சேசாத்திரி

seshadri sridharan

unread,
Jul 20, 2011, 10:09:28 AM7/20/11
to mintamil
இன்று கொற்கை திருவைகுந்தம் வட்டத்தின் ஒரு சிறு கிராமம். தாமிரபரணி ஆற்றுக்கு 3 கிலோ மீட்டர் வடக்கே அமைந்து உள்ளது, கடல் பின் வாங்கியதால் கடலிலிருந்து 6 கலோ மீட்டர் கிழக்கே தள்ளி உள்ளது. ஆதிச்ச நல்லூர் இவ்வூருக்கு 15  கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
சேசாத்திரி

2011/7/20 seshadri sridharan <ssesh...@gmail.com>

seshadri sridharan

unread,
Jul 21, 2011, 8:49:12 AM7/21/11
to mintamil
பிராமி லிபியும் ஏசு கிறிஸ்துவும் என்று இது பற்றிய திரியை நான்
தொடங்கினேன்.. அதிலேயே தொடர்ந்திருக்கலாம். பிறகு திடீரென்று “சிந்து
சமவெளி முத்திரைகளைப் பற்றி” என்றூ ஒரு புதுத் திரியை யாரோ தொடங்கி அதே விஷயத்தைப் பேசுகிறார்கள்

தமிழி எழுத்தின் பழமை குறித்து முனைவர் சு. இராசவேலு, முனைவர் நடன.காசிநாதன், முனைவர் க. நெடுஞ்செழியன் ஆகியோரின்  கட்டுரைகளை தமிழ் எழுத்தியல் வரலாறு என்ற பெயரில் குறு நூலாக தமிழ் முழக்கம் பதிப்பகம் 2/66, நூறடிச்சாலை, வடபழனி, சென்னை - 600 026 பேசி:23721659 2004 இல் வெளியிட்டுள்ளது.  அதில் உள்ளவற்றில் முகாமையான சாரத்தை
மட்டும் கீழே தட்டச்சு செய்கிறேன்.
 
தமிழ் எழுத்தின் தோற்றமும் காலமும் -  முனைவர் சு. இராசவேலு ஆதிச்சநல்லூர் அகழாய்வில்  தியாக. சத்திய மூர்த்தியுடன் இருந்தவர்.
 
சமண சமய நூல்களான 'சமவாயங்க சுத்தம் ', 'பண்ணவான சுத்தம்' ஆகியவற்றில் பண்டைய இந்தியாவில் பதினெட்டு வகையான எழுத்து வடிவங்கள் மக்கள் புழக்கத்தில் இருந்ததாகக் குறிப்பிடப்படுகினறது. பௌத்த நூலான ' இலலித வித்தரம்' என்னும் நூல் 64 வகையான எழுத்துகள் இந்தியாவில் புழக்கத்தில் இருந்தமையைப் பட்டியலிட்டுக் கூறுகின்றது. இநத பட்டியலில் பம்பி(Bhambi)  எனப்படும் பிராமியும்,  தாமிழி (Damili) எனப்படும் தமிழும் அடங்கும். பிராமி அசோகன் பிராமியையும், தாமிழி என்பது தமிழ் எழுத்து வடிவத்தையும் குறிக்கும். (பக்கம் 1 - 2)
 
பண்டைத் தமிழ் எழுத்தின் காலம் - முனைவர் நடன. காசிநாதன், மேனாள் தொல்லியல் துறை இயக்குநர், தமிழ்நாடு.
 
இலங்கையில் உள்ள அநுராதபுரத்தில் நடைபெற்ற அகழாய்வில் கிடைத்த எழுத்துப் பொறித்த பானை ஓட்டினை  ரேடியோ கார்பன் காலக் கணிப்பு மூலம் கி.மு. 600 இருந்து 500 எனக் கணித்து உள்ளனர் (Inscriptions of Ceylon, Volume II, Addendum  III, Radiometric date of early Brahmi Script in Srilanka 600 - 500 BC, Page 745 என்று இந்நூலை  மேற்கோள் காட்டுகிறார்)  இதன் மூலம் கி.மு. 6  ஆம் நூற்றாண்டு அளவிலேயே ஒரு வகை எழுத்து (அசோகன்  காலத்துக்கு முந்தைய எழுத்து) இலங்கையில் பொது மக்களிடையே வழக்கில் இருந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது. அது போன்றே தமிழ்நாட்டிலும் தமிழ் எழுத்து கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் இருந்து வழக்கிலிருந்திருக்கலாம்.
 
கொற்கை அகழாய்வில் கிடைத்த கரித்துண்டைக் கார்பன் 14 மூலம் காலம் கணித்ததில்   கி.மு. 2755 + அல்லது - 95 (கூடவோ அல்லது குறையவோ இருக்கலாம்) - கி.மு 850 அல்லது 600 என்று  தெரியவந்தது. (R.Nagaswamy, Editor, darmillic,1970 part I, Page 41). அக்கரித்துண்டு பெருங்  கற்காலப் பாள நிலையில் கிடைத்தது. அவ்வகழாய்வில் பெருங் கற்காலத்தைச் சார்ந்த  கருப்பு சிவப்பு பானையோட்டில் தமிழ் எழுத்துப் பொறிக்கப் பெற்றவை சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் காலம் குறைந்தது கி.மு. 660 அளவில் இருக்கலாம். (பக்கம் 30)
 
அழகன் குளத்தில் நடைபெற்ற அகழாய்வு 2ல் பல பாள நிலைகளிலிருந்து சேகரிக்கப் பெற்ற கரித்துண்டுகளை சி. 14 காலக்கணிப்பு  மூலம் காலக் கணிப்பு செய்ததில்  ஐந்தாம் பாள நிலையில் (2.80 மீட்டர் ஆழத்தில்) 2260 + அல்லது -- 100 சார்ந்தது என தெரிய வந்துள்ளது.
 
AGM 5,7,8 ஆகிய குழிகளிலிருந்து தமிழ் எழுத்து பொறிக்கப் பெற்ற பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன. இவற்றில் AGM 5இல் 3 மீட்டரிலிருந்து 5.30 மீட்டர் ஆழத்தில் கிடைத்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகளில்  எழுத்துகள் எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றின் காலம் கி.மு. 4, 3 ஆம் நூற்றாண்டு எனத் துணிந்து கூறலாம்.  (பக்கம் - 31)

Hari Krishnan

unread,
Jul 21, 2011, 6:35:50 PM7/21/11
to mint...@googlegroups.com


2011/7/21 seshadri sridharan <ssesh...@gmail.com>

மீட்டரிலிருந்து 5.30 மீட்டர் ஆழத்தில் கிடைத்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகளில்  எழுத்துகள் எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றின் காலம் கி.மு. 4, 3 ஆம் நூற்றாண்டு எனத் துணிந்து கூறலாம்.  (பக்கம் - 31)
 
கருப்பு சிவப்பு வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததால் அப்போதே திமுகவில் மக்களெல்லோரும் இருந்தார்கள் என்றும் துணிந்து கூறலாம்.  கருப்புக்கும் சிவப்புக்கும் இடையில் சுண்ணாம்பு தீற்றிய பானை ஓடுகளும் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுவதால், அதிமுகவிலும் மககள்,தொண்டர்களாக இருந்தனர் என்பது வெள்ளிடை மலை. இவற்றுக்கெல்லாம் ஆதியான திகவிலும் அந்தக் காலத் தமிழர்கள் இருந்தனர் என்பதற்கு, எல்லாக் கருங்கல்லும் கருப்பாக இருப்பதே சாட்சியம்.


--
அன்புடன்,
ஹரிகி.

செல்வன்

unread,
Jul 21, 2011, 6:42:42 PM7/21/11
to mint...@googlegroups.com


2011/7/21 Hari Krishnan <hari.har...@gmail.com>

கருப்பு சிவப்பு வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததால் அப்போதே திமுகவில் மக்களெல்லோரும் இருந்தார்கள் என்றும் துணிந்து கூறலாம்.  கருப்புக்கும் சிவப்புக்கும் இடையில் சுண்ணாம்பு தீற்றிய பானை ஓடுகளும் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுவதால், அதிமுகவிலும் மககள்,தொண்டர்களாக இருந்தனர் என்பது வெள்ளிடை மலை.


முடியலைங்க..எப்படி இதெல்லாம்?:-))))
--
செல்வன்

"வாழும் பூமியை வளமாக்க அதை நாம் நேசிப்பது அவசியமாகிறது" - செல்வன்



www.holyox.blogspot.com

http://twitter.com/#holyox

https://profiles.google.com/holyape/buzz

https://www.facebook.com/holyape

seethaalakshmi subramanian

unread,
Jul 21, 2011, 7:58:22 PM7/21/11
to mint...@googlegroups.com
ஹரிகி ஹரிகி
சிரிச்சு சிரிச்சு வயிற்றை வலிக்கின்றது
எப்படி இப்படியெல்லாம் தோன்றுகின்றது ?!
சீதாம்மா

2011/7/21 செல்வன் <hol...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Mohanarangan V Srirangam

unread,
Jul 21, 2011, 11:26:53 PM7/21/11
to mint...@googlegroups.com
ஹரிகி வரவர ஓயாத வயித்து வலியை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார் :-))))))))))))) 



2011/7/22 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>

LK

unread,
Jul 21, 2011, 11:28:01 PM7/21/11
to mint...@googlegroups.com
காலையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்

2011/7/22 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>



--
Thanks and Regards
Karthik L
http://lksthoughts.blogspot.com



 

Jean-Luc Chevillard

unread,
Jul 21, 2011, 11:43:33 PM7/21/11
to mint...@googlegroups.com, Hari Krishnan
Dear Hariki,

you are certainly one of the major assets of this mailing ling.

Your knowledge and your unfailing sense of humour
contribute to the fact that MinTamil is a welcoming oasis

Merci!

அன்புடன்

-- ழான் (Jean-Luc Chevillard, Pondichéry)

Geetha Sambasivam

unread,
Jul 22, 2011, 12:29:12 AM7/22/11
to mint...@googlegroups.com


2011/7/22 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>
B9E.gif

Geetha Sambasivam

unread,
Jul 22, 2011, 12:29:40 AM7/22/11
to mint...@googlegroups.com
ஹரிகி, ஏற்கெனவே முடியலை; இப்படிச் சிரிக்க வைச்சா எப்பூடி????

2011/7/22 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
360.gif

MANICKAM POOPATHI

unread,
Jul 22, 2011, 1:05:16 AM7/22/11
to mint...@googlegroups.com
:-)   :-)   :-)

ஷமிக்கணும்..  _/\_
சிலவோடு சிலவா இன்னும் ஒண்ணு..

பத்ரி'னா.. ஃபாதர்..
மாத்ரு'னா..  மாதர்/மதர்.

பித்ரு'னா.. சரி வாணாம்...

அன்புடன்.../பூபதி <என்கிற> மாத்ரு பூதம் 

2011/7/21 Hari Krishnan <hari.har...@gmail.com>

seshadri sridharan

unread,
Jul 21, 2011, 9:38:44 PM7/21/11
to mint...@googlegroups.com
கருப்பு சிவப்பு வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததால் அப்போதே திமுகவில் மக்களெல்லோரும் இருந்தார்கள் என்றும் துணிந்து கூறலாம்.  கருப்புக்கும் சிவப்புக்கும் இடையில் சுண்ணாம்பு தீற்றிய பானை ஓடுகளும் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுவதால், அதிமுகவிலும் மககள்,தொண்டர்களாக இருந்தனர் என்பது வெள்ளிடை மலை. இவற்றுக்கெல்லாம் ஆதியான திகவிலும் அந்தக் காலத் தமிழர்கள் இருந்தனர் என்பதற்கு, எல்லாக் கருங்கல்லும் கருப்பாக இருப்பதே சாட்சியம்.

ஐயா, தொல்லியலில் உங்கள் அறியாமையை பறைசாற்றி இருக்கிறீர்கள். திரு. நடன.காசிநாதனின்  முழு எழுத்து வடிவத்தைத் தான் தட்டச்சி இருந்தேன் அதில் என் கருத்து ஏதும் இல்லை. நான் ஒரு தட்டச்சாளன் மட்டுமே. உங்கள் பகடியத்தை ஒரு நடுநிலையாளர் திறனாய்வு செய்யட்டும். இதில் தி.மு.க. அதிமுக எங்கே வந்தன என்பதை நீங்கள் விளக்குவீரா? வேண்டுமேல் உங்களுக்கு நடன்.காசிநாதனின் பேசி எண்ணைத்  தருகிறேன். தேவை இன்றி உங்கள் நன்மதிப்பை மின்தமிழ் அன்பர்களிடையே கெடுத்துக் கொண்டுள்ளீர்கள் என்பது என்  கருத்து.
 
 சேசாத்திரி
--
அன்புடன்,
ஹரிகி.

--

Hari Krishnan

unread,
Jul 22, 2011, 4:56:48 AM7/22/11
to mint...@googlegroups.com


2011/7/22 seshadri sridharan <ssesh...@gmail.com>

ஐயா, தொல்லியலில் உங்கள் அறியாமையை பறைசாற்றி இருக்கிறீர்கள்.

அது ஒன்றாவது இருக்கிறதல்லவா?  அது போதும்.

நாராய ணாநம என்னும் நன்னெஞ்சர்
பாராளும் பாதம் பணிந்தேத் துமாறறியேன்.
காரளும் மேனிக் கருணாகர மூர்த்திக்கு
ஆராதனை, என் அறியாமை ஒன்றுமே!

இறைவனிடம் இல்லாத ஒன்று, அவனுக்குக் கொடுப்பதற்காக என்னிடம் இருக்கிறது என்று பெருமைப்பட்டான் கம்பன்.  அப்படியே இருந்துட்டுப் போவுது.

(என் மதிப்பை அளவிட்டுச் சொல்லிக் கொண்டிருக்கும் எல்லா அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் மிக்க நன்றி.)

N. Ganesan

unread,
Jul 22, 2011, 6:46:35 AM7/22/11
to மின்தமிழ்

On Jul 21, 5:35 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/7/21 seshadri sridharan <sseshadr...@gmail.com>

இந்திய தொல்பொருள் ஆய்வில் ரெட்-அண்ட்-ப்லாக் பானைகள்
முக்கியமான இடம் உள்ளது.

Black and red pottery

The items in this category are distinguished by black in the interior
and the exterior top, and red on the exterior. These pots are
generally made by the inverted firing technique. They are turned on
the wheel except a few handmade specimens. The clay is tempered with
fine sand. In most pots a slip is applied on both sides but vases are
treated with the slip on the exterior and up to the neck on the
interior. Some fragments with a smooth and shining surface (due to
burnishing) have been discovered. Firing under different conditions
has given a few pots a completely black interior and red exterior,
while others are partly black and partly red on both sides; the latter
are more in number. The common shapes are the tulip-shaped flower
pots, bowls, channel-spouted bowls, basins, jars, dishes-on-stands and
vase stands. Researches and findings suggest that the Black-and-Red
pottery flourished in Bengal around 1500 B.C and continued to evolve,
well past the Chalcolithic age, into the historical period around the
3rd century BC.
http://www.indiaheritage.org/creative/creative_earthenware_&_pottery.htm

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Jul 22, 2011, 7:40:15 AM7/22/11
to mint...@googlegroups.com
நிறம் என்பது சூரிய (உதய சூரியன் அல்ல. ஏனெனில் சூரியன் உதிப்பதுமில்லை மறைவதும் இல்லை)னின் ஒளிக்கற்றைகள் ஒரு பொருளின் மீது பட்டு விளையாடும் கண்கட்டி வித்தை ரூபங்கள் ஆதியிலிருந்து உள்ளதும் நாமங்கள் புதிதாக உருவாவதும் பேச்சுக்குழுமத்தின் செயல்பாடு.
கருப்பு சிவப்பு மற்றும் வெள்ளை ஏதோ அவர்களுக்கு உலக நெகட்டிவ் காப்பிரைட் உள்ளதுபோல் சொல்லுகிறீர்கள்.  எனக்கும் ரைட்ஸ் உந்தி. நான் இந்தப் பிரச்சினையை உலக அளவில் எடுத்துச் சென்று ட்பில்யூ.டி.ஓ, ட்ரிப்ஸ் போன்ற அமைப்புகளில் வழக்குத்தொடுக்க இருக்கிறேன்.
பாரா உஜார்
நாகராசன்

2011/7/22 N. Ganesan <naa.g...@gmail.com>

seshadri sridharan

unread,
Jul 22, 2011, 7:10:27 AM7/22/11
to mint...@googlegroups.com
Type of pottery found in many parts of India which is black on the inside and around the rim and red on the exterior surface. Generally dated to the Chalcolithic through to the Iron Age

Read more: http://www.answers.com/topic/black-and-red-ware#ixzz1SpXdNqf8

தொல்லியல் என்பது  ஐரோப்பியரால் வளர்த்தெடுக்கப்பட்டு  நம்மவர் அவர்களிடம் இருந்து கற்ற புதிய கல்விப் புலம்.  உட்புறம் கருமையாகவும் புறத்தே செம்மையாகவும் உள்ள பானைகளை அவர்கள் தாம் Black and Red ware என பெயரிட்டு அழைத்தனர். அதைத் தான் திரு. நடன. காசிநாதன் கருப்பு சிவப்பு பானை என தமிழில் குறிப்பிட்டு உள்ளார். ஒரு 30 ஆண்டுகளுக்கு மேலான தொல்லியல் அனுபவமுள்ள அறிஞரைக் கொச்சைப்படுத்தியதை இறைவனுக்கு சமர்ப்பிக்கும் அறியாமையாக காட்டிவிட்டீர். உங்கள் பகடியத்தை  (ஏளனத்தை)  அறிவுடைமையாகப் போற்றுகிறார்களே அவர்கள் இன்னும் பேரறிவாளர்கள்  என்று தான் சொல்ல வேண்டும். வளர்க அவர்தம் அறிவு மேன்மேலும்.
 
சேசாத்திரி

 
2011/7/22 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

prakash sugumaran

unread,
Jul 23, 2011, 12:16:38 PM7/23/11
to mint...@googlegroups.com
காலத்துக்கும் கலருக்கும் ஒற்றுமை இருக்கோ இல்லையோ ஆனால் கருத்து ஒற்றுமை உள்ளது.
 
அந்த காலத்துல இருந்தே கடவுள்கள் பெயரால் கபடு செய்பவர்களை எதிர்க்கும் மனோபாவம் தமிழர்களுக்கு இருந்து உள்ளது. வாழ்வியல் நடைமுறைகளுக்கு ஒத்து போகாத எந்த வேதங்களையும் பண்டிதத்தையும் அவர்கள் ஒப்பு கொண்டது இல்லை.
 
இன்னும் கொஞ்சம் ஆழமாக ஆய்வு செய்தால் கடவுள் கருப்பா, சிகப்பா, வெள்ளையா என்று போட்டி போட்டு பல வண்ணங்களில் கடவுள் சிலைகள் வந்த காரணங்கள் கூட வெளிவரும்.   

2011/7/22 seshadri sridharan <ssesh...@gmail.com>



--
prakash sugumaran
Reply all
Reply to author
Forward
0 new messages