தமிழ்மரபு அறக்கட்டளை நிகழ்வுகள் - ஜூன் 2025

180 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jun 4, 2025, 12:30:25 AM6/4/25
to மின்தமிழ்

THFi-IllakiyaKoodal-7.jpg

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் 
மதுரைக்கிளை ஏற்பாட்டில் 
ஜூன் மாத  இலக்கியக் கூடல் - 7

முனைவர். க. சுபாஷிணி அவர்களின்
நூல்: ராஜராஜனின் கொடை
நூல் திறனாய்வு: பேராசிரியர் முனைவர். நா. கண்ணன்
                  இணைத் தோற்றுநர், துணைத் தலைவர், த.ம.அ.

நாள்: ஜூன் 7, 2025(சனிக்கிழமை) - மாலை 4 மணி (இந்தியா)

Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi

தேமொழி

unread,
Jun 7, 2025, 3:16:38 AM6/7/25
to மின்தமிழ்
நினைவூட்டல் . . . 
THFi-IllakkiyaKoodal-7.jpeg
____________________________________


தேமொழி

unread,
Jun 7, 2025, 10:51:34 PM6/7/25
to மின்தமிழ்
THFi-IllakkiyaKoodal-7.jpeg

ராஜராஜனின் கொடை - முனைவர். க. சுபாஷிணி அவர்களின் நூல் திறனாய்வு
— பேராசிரியர் முனைவர். நா. கண்ணன்
தமிழ் மரபு அறக்கட்டளை  — இலக்கியக் கூடல் - 7 [ஜூன் 7, 2025]
காணொளி:   https://youtu.be/H8aLSL-eF-4
__________________________________________________________
ராஜராஜனின் கொடை- நூல் கிடைக்குமிடம்:
https://www.commonfolks.in/books/d/rajarajanin-kodai

---





On Tuesday, June 3, 2025 at 9:30:25 PM UTC-7 தேமொழி wrote:

தேமொழி

unread,
Jun 9, 2025, 3:05:33 AM6/9/25
to மின்தமிழ்
இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் "தூரக் கிழக்கில் தமிழ் ஆய்வுகள்: கொரியா" என்ற தலைப்பிலான நூலை வெளியிட்டார். துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி அவர்களும் தலைமைச் செயலாளர் திருமிகு முருகானந்தம் இஆப மற்றும் சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தமிழ் மரபு அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.
conference proceedings release.jpeg
-----------------------------------------------
conference proceedings release2.jpg
conference proceedings release3.jpg
conference proceedings release4.jpg

-----------------

தேமொழி

unread,
Jun 9, 2025, 3:13:49 AM6/9/25
to மின்தமிழ்
இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் "தூரக் கிழக்கில் தமிழ் ஆய்வுகள்: கொரியா" என்ற தலைப்பிலான நூலை வெளியிட்டார். துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி அவர்களும் தலைமைச் செயலாளர் திருமிகு முருகானந்தம் இஆப மற்றும் சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தமிழ் மரபு அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.
SVK_9421.jpg
SVK_9431.jpg
SVK_9456.jpg
-------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Jun 9, 2025, 8:25:21 PM6/9/25
to மின்தமிழ்
SVK_9431.jpg
தமிழ் மரபு அறக்கட்டளையின் 
"தூரக் கிழக்கில் தமிழ் ஆய்வுகள்: கொரியா" - 
நூலை மாண்புமிகு முதல்வர் வெளியிட்டார்
காணொளி:
#THFi, #Korea, #CM.Mr.M.K.Stalin, #Book_Release

---
cm post.jpeg
ACM.jpg
cm post2.jpeg
acm2.jpeg
memento.jpg
memento1.jpg
-----------------------------------------------

தேமொழி

unread,
Jun 9, 2025, 10:13:41 PM6/9/25
to மின்தமிழ்

Subashini Thf
 is with Pappa and 
6 others
.


📘
கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கி பல்வேறு வகையில் தமிழ்நாட்டிற்கும் கொரியாவிற்கும் இடையேயான பண்பாட்டு ஒற்றுமைகள் பற்றியும் தமிழ் மொழி தொடர்பான ஆய்வுகளையும் அவ்வப்போது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மேற்கொண்டு வந்தது. இதன் மிக முக்கிய வளர்ச்சியாக நான்கு நூல்கள் பேராசிரியர் டாக்டர் நா. கண்ணன் அவர்களால் எழுதப்பட்டு அவை தமிழ், ஆங்கிலம், கொரிய மொழி ஆகியவற்றில் கடந்த ஆண்டுகளில் வெளிவந்தன.
இந்த நூல்கள் உலகளாவிய தமிழர்கள் மத்தியில் இக்கருத்தாக்கத்திற்கான நல்ல வரவேற்பையும் பெற்றது.
தமிழ் மொழிக்கும் மங்கோலிய மொழிக்கும் இடையே உள்ள தொடர்புகளை ஆராய்ந்த செக் நாட்டின் பேராசிரியர் டாக்டர் வாசேக் மறைந்த பின்னர் அந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படவில்லை. இதே போல ஜப்பானிய மொழி ஆய்வுகள் பேராசிரியர் ஓனோவுக்குப் பின்னர் இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள் மனோன்மணி சண்முகதாஸ் மற்றும் பேராசிரியர் சண்முகதாஸ் இருவரால் முன்னெடுக்கப்பட்டன. அவர்களும் முதுமையை எட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இத்துறையிலும் ஆய்வுகள் செய்வதற்கு இளம் ஆய்வாளர்கள் பற்றாக்குறை உள்ளது.
இப்போது தமிழ் கொரிய மொழி ஆய்வுகள் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம். இதே போல ஏனைய கிழக்காசிய நாடுகளின் மொழிகளுக்கும் தமிழ் மொழிக்கான பண்பாட்டு வரலாற்று தொடர்புகளை அலசி ஆராய இளம் தலைமுறை ஆய்வாளர்களின் தேவை இன்றி அமையாது. இதனை முன்னெடுக்கின்றது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு. இதனை செயல்படுத்துகின்றது இந்த அமைப்பின் கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவான கடிகை.
அவ்வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பொறுப்புக் குழுவின் உறுப்பினர் முனைவர் ஆம்ஸ்ட்ராங் மற்றும் சங்கப்பலகை அமைப்பின் பொறுப்பாளர் முனைவர் சங்கரநாராயணன் ஆகியோரின் ஒத்துழைப்போடு தமிழ் மரபு அறக்கட்டளையின் கடிகை பிரிவு ஒரு கருத்தரங்கை வெற்றிகரமாக நிகழ்த்தியது.
கருத்தரங்கில் பேசப்பட்ட அனைத்து விஷயங்களும் கட்டுரைகளாக ஆவணப்படுத்தப்பட்டு அவை "தூர கிழக்கில் தமிழ் ஆய்வுகள்: கொரியா" என்ற தலைப்பில் நூலாக வடிவம் கண்டது.
இந்த நூல் நேற்று 9 ஜூன் 2025 அன்று தமிழக தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி அவர்களும் தலைமைச் செயலாளர் மதிப்பிற்குரிய திருமிகு முருகானந்தம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டிற்கான கொரியா குடியரசின் தூதர் அவர்களும் துணைத் தூதர் அவர்களும் கலந்து கொண்டு இரு நாடுகளுக்கும் இடையே உள்ள மொழி பண்பாடு மற்றும் வணிகத் தொடர்புகளை மையப்படுத்தி இரு நாடுகளும் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றியும் தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தமைக்கு இதன் பின்னணியில் ஒவ்வொரு பணிகளையும் முன்னெடுத்து செயல்படுத்திய தமிழ் மரபு அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர்கள் பாராட்டுதலுக்குரியவர்கள்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் கல்வி பிரிவான கடிகை அமைப்பின் பொறுப்பை ஏற்றிருக்கும் முனைவர் பாப்பா அவர்கள் இந்த நிகழ்ச்சியின் முழுமையான ஒருங்கிணைப்பை ஏற்றுக் கொண்டார்.
பேராசிரியர் நா கண்ணன் அவர்கள் நேற்று வெளியிடப்பட்ட நூலை சரிபார்த்து அதன் அமைப்பு அதன் உள்ளடக்கம் அதில் உள்ள கட்டுரைகள் ஆகியவை செம்மையாக வடிவம் பெற முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினார். அவருக்குத் துணையாக பதிப்பக பிரிவில் அருணேஷ் நூலை உருவாக்கி வழங்கினார்.
கடிகை அமைப்பின் சென்னை பகுதியில் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க உதவியவர் திரு கிருஷ்ணகுமார்.
நூலுக்கான அட்டை இப்படித்தான் அமைய வேண்டும் என்ற எனது கருத்தைப் பகிர்ந்த போது அக்கருத்துக்கு வடிவம் அளித்தவர் எழுத்தோவியர் எஸ் நாணா. அது மட்டுமின்றி முதலமைச்சருக்கும் கொரிய குடியரசின் தூதருக்கும் வழங்கப்பட வேண்டிய நினைவுச் சின்னங்களை எப்படி வடிவமைக்க வேண்டும் என்று எனது கருத்தை பகிர்ந்து கொண்ட போது அதற்கு முழு உருவம் கொடுத்தவரும் இவரே.
நூல்கள் உருவாக்கம் கண்டு அச்சுக்கு சென்று அவை முழுமை பெற்று தரமான வடிவில் அச்சிடப்பட்டு இரண்டு வகை வடிவங்களில் வெளிவர முழுமையாக பொறுப்பெடுத்துக்கொண்டு செயல்படுத்தியவர் நமது அருங்காட்சியகப் பொறுப்பாளர் அர்ஷா.
இவர்களோடு கருத்தரங்கம் மட்டுமின்றி தொடர்ச்சியான இணைய வழி சந்திப்புகளுக்கான ஏற்பாடுகளை செய்வதோடு நிகழ்ச்சியின் செயல்பாடுகளுக்கு உடனிருந்து ஒத்துழைப்பு நல்கியவர் முனைவர் இறைவாணி.
இவர்கள் ஒவ்வொருவரது செயல்பாடுகளும் இந்த நிகழ்ச்சி ஏப்ரல் மாதம் தொடங்கி நேற்று வரை முழுமையாக வெற்றி காண அடிப்படையை வகுத்துக் கொடுத்தது.
இவர்கள் ஒவ்வொருவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கிறேன்.
கொரியா -தமிழ் மொழி தமிழ் பண்பாடு ஆய்வுகள் என்ற இத்துறையில் இந்த ஆண்டு மேலும் சில செயல்பாடுகள் நடைபெற உள்ளன. சென்னை பல்கலைக்கழகத்துடனும் கொரியா குடியரசின் தூதரகத்துடனும் இணைந்த வகையில் அச்செயல்பாடுகள் அமையும்.
தமிழின் சிறப்புகளைப் பற்றி வீண் பெருமை பேசுவதை விட்டு ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுத்து செய்ய வேண்டிய தருணத்தில் தமிழ் ஆய்வு நிறுவனங்கள் இருக்கின்றன.
அவ்வகையில் தமிழ்நாட்டில் இயங்கும் ஒவ்வொரு கல்லூரியும் பல்கலைக்கழகமும் தமிழ் ஆய்வு நிறுவனங்களும் இதனை கருத்தில் ஏற்று இத்துறையின் வளர்ச்சிக்கான தங்கள் பணியை ஆற்ற வேண்டும். அத்தகைய முயற்சிகளில் இணைந்து செயலாற்ற தமிழ் மரபு அறக்கட்டளை ஆர்வத்துடன் உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்!
-முனைவர் க சுபாஷினி
தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.

தேமொழி

unread,
Jun 12, 2025, 12:45:07 AM6/12/25
to மின்தமிழ்
📌 ஓர் அறிவிப்பு
இவ்வாரம் சனிக்கிழமை தொடங்கி நமது திசைக் கூடல் மற்றும் மாதாந்திர இலக்கியக் கூடல் நிகழ்ச்சி இந்திய/ இலங்கை நேரம் மாலை 6:00 மணிக்கு நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஏற்கனவே பலரும் கேட்டிருந்த படி, இது குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் உள்ள தோழர்கள் பலருக்கு நிகழ்ச்சியில் நேரடியாகக் கலந்து கொள்ள உதவும் என்று கருதுகிறோம்.

382.jpeg

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
வழங்கும் திசைக்கூடல் - 382
________________________________________________
தலைப்பு:
"மெய்நிகர் அருங்காட்சியகம்"
 
சிறப்புரையாளர்:
முனைவர்  சிறி காந்தன் முத்தையா கோவிந்தராஜ்,
செயற்கை நுண்ணறிவு ஆலோசகர்,  இலண்டன்.

நோக்கவுரை :
முனைவர் க.சுபாஷிணி,
தலைவர்,  தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.

நாள்: ஜூன் 14, 2025,  சனிக்கிழமை,  இந்திய  நேரம்  மாலை 6.00 மணி


Join Zoom Meeting: https://us06web.zoom.us/j/84159419415?pwd=OHNNVllPNzVPM0JSS3oxRXZvTUpSUT09
Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi

தொடர்புக்கு:
முனைவர் மு. இறைவாணி, திரு.வருண் பிரபு
கருத்தரங்கப் பொறுப்பாளர்கள்.


தேமொழி

unread,
Jun 14, 2025, 4:25:26 AM6/14/25
to மின்தமிழ்
நினைவூட்டல் . . . 

லண்டன் நகரில் வசிக்கின்ற நண்பர்கள் சிலர் ஒன்று கூடி ஓர் அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் என்று 2017 ஆம் ஆண்டு என்னை தொடர்பு கொண்டிருந்தார்கள். ஒரு சில கலந்துரையாடல்கள் அதன் பின்னர் எவ்விதமான காட்சி பொருள்கள் வைக்கப்பட வேண்டும் போன்ற தொடர்ச்சியான உரையாடலுக்கு பின்னர் அக்குழுவினர் உலகத் தமிழ் மக்களுக்காக லண்டன் நகரில் ஒரு அருங்காட்சியத்தை அமைக்க வேண்டும்; ஆயினும் அதனை அமைப்பது சாதாரண காரியம் அல்ல; ஏராளமான பொருட்செலவு ஏற்படும். ஆக செயற்கை நுண்ணறிவு  (artificial intelligence) மற்றும் மென்பொருளை பயன்படுத்தி ஒரு அருங்காட்சியகத்தை இணைய வெளியில் உருவாக்கலாம் என்ற திட்டத்தை தொடங்கினார்கள்.

அந்த முயற்சி இன்று மிகப் பெரிய ஒரு இணைய வழி அருங்காட்சியகமாக  உருவாகியுள்ளது.

இந்த அருங்காட்சியாக உருவாக்கம் அதன் பின்னணி மட்டுமின்றி அந்த அருங்காட்சியகத்திற்கு உங்களை இணைய வழி அழைத்துச் செல்ல வருகின்றார் இன்றைய திசைக் கூடல் உரையாளர் பேராசிரியர் முனைவர் சிரி காந்தன் அவர்கள்.

உங்கள் ஒவ்வொருவருக்கும் பல பணிகள் இருக்கலாம். ஆனால் அதனை ஒதுக்கி வைத்துவிட்டு இன்று இந்த உரையில் கலந்து கொள்ள வாருங்கள்.  உலகத் தமிழ் மக்களின் நன்மைக்காக இணையத்திலேயே ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்கி இருக்கும் இந்த பெரும் முயற்சியை பற்றி உலகத் தமிழர் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆவணப்படுத்துதலில் தோல்வியுற்ற சமூகம் நம் தமிழ்ச்சமூகம். அது மேலும் தொடரக்கூடாது.‌

ஜூன் 9இல் இருந்து 13 வரை உலக ஆவணப்படுத்துதல் வாரத்தை பிரகடனப்படுத்தியிருக்கின்றார்கள். அவ்வகையில் இந்த நாளை சிறப்பிக்கும் வகையில் நாம் அனைவரும் இன்று நடைபெற உள்ள இணைய வழி திசைக் கூடல் நிகழ்ச்சியில் பங்கு பெற்று கலந்துரையாட வேண்டும் என்று அழைக்கின்றோம்.

இன்று இந்திய நேரம் மாலை 6 மணி
மலேசியா சிங்கை: இரவு 8:30
ஐரோப்பா: மதியம் 1:30

நாள்: ஜூன் 14, 2025,  சனிக்கிழமை,  இந்திய  நேரம்  மாலை 6.00 மணி
Join Zoom Meeting: https://us06web.zoom.us/j/84159419415?pwd=OHNNVllPNzVPM0JSS3oxRXZvTUpSUT09
Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi
--சுபா
________________________________________________

தேமொழி

unread,
Jun 14, 2025, 9:09:21 PM6/14/25
to மின்தமிழ்
382.jpeg
மெய்நிகர் அருங்காட்சியகம்
—முனைவர் சிறி காந்தன் முத்தையா கோவிந்தராஜ்

செயற்கை நுண்ணறிவு ஆலோசகர்
திசைக்கூடல் - 382 [ஜூன் 14, 2025]
https://youtu.be/8ql96DBnU4Q
---

தேமொழி

unread,
Jun 17, 2025, 3:32:22 AM6/17/25
to மின்தமிழ்
kadigai.jpg
அன்புடையீர்!
தமிழர்களின் பிற நாடுகளுடனான தொடர்பு நெடிது. கொரியாவும் இதற்கு விலக்கல்ல. தமிழர்களுக்கும் கொரியர்களுக்குமான தொடர்பு குறித்துத் தமிழ் மரபு அறக்கட்டளை 20 ஆண்டுகளாக விவாதித்து வந்ததை இன்று சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டெஸ்க் கொரியக் குடியரசோடு இணைந்து "தமிழ் கொரியத் தொடர்புகள்-மீளாய்வுகள்" என்னும் தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கமாக்குகிறது.
கலந்து கொள்ள விழைவோர் பதிவு செய்து கொள்ளலாம்.
நாள் - 28.06.2025
நேரம் - பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை (இந்திய நேரம்)
பதிவிற்கு: https://forms.gle/fq3qtudT8Mu38q8m9

தேமொழி

unread,
Jun 25, 2025, 6:56:09 PM6/25/25
to மின்தமிழ்
Tamil-Korea_Tamil.jpg

தமிழ் கொரியத் தொடர்பு - மீளாய்வுகள்

ஜூன் 28, 2025 - சனிக்கிழமை
பிற்பகல் 2.00 மணி முதல் - மாலை 6.00 மணி வரை

(இந்திய நேரம்)

நேரலை
@https://www.facebook.com/TamilHeritageFoundation
ZOOM Meeting ID:841 5941 9415       Password: thfi

வருகின்ற சனிக்கிழமை நடைபெறும் நமது  தமிழ் கொரியத் தொடர்பு குறித்த கருத்தரங்கில் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறோம், வருக பயன் பெறுக, இந்த அழைப்பிதழை நண்பர்களுக்கும் பகிர்ந்து கருத்தரங்கிற்கு அழைக்க வேண்டுகிறோம்.

முனைவர் பாப்பா
கடிகை பொறுப்பாளர் 

தேமொழி

unread,
Jun 26, 2025, 7:58:49 PM6/26/25
to மின்தமிழ்
conference agenda.jpg

28 ஆம்  நாள் (நாளை) கருத்தரங்கிற்கான நிகழ்ச்சிநிரல்.
அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்

தமிழ் கொரியத் தொடர்பு - மீளாய்வுகள்

ஜூன் 28, 2025 - சனிக்கிழமை
பிற்பகல் 2.00 மணி முதல் - மாலை 6.00 மணி வரை

(இந்திய நேரம்)

நேரலை
@https://www.facebook.com/TamilHeritageFoundation
ZOOM Meeting ID:841 5941 9415       Password: thfi

வருகின்ற சனிக்கிழமை நடைபெறும் நமது  தமிழ் கொரியத் தொடர்பு குறித்த கருத்தரங்கில் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறோம், வருக பயன் பெறுக, இந்த அழைப்பிதழை நண்பர்களுக்கும் பகிர்ந்து கருத்தரங்கிற்கு அழைக்க வேண்டுகிறோம்.

முனைவர் பாப்பா
கடிகை பொறுப்பாளர் 



Tamil-Korea_Tamil.jpg

Tamil-Korea_English.jpg
--------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Jun 27, 2025, 12:15:47 AM6/27/25
to மின்தமிழ்


சனிக்கிழமை ஜூலை 28, 2025 அன்று "தமிழ் கொரியத் தொடர்பு: மீளாய்வுகள்" எனும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் ஏற்பாடாகியுள்ளது. இதை தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் கடிகை இணைய வழிக் கல்விக்கழகம், தமிழ்நாடு டெஸ்க் கொரியக் குடியரசு, சென்னைப் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்து நடத்த விருக்கிறது. பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை (இந்திய நேரம்) நடை பெறும் இக்கருத்தரங்கில் பல புதிய அம்சங்கள் உள்ளன.
அடிப்படையில் ஏப்ரல் 29 தேதி நடந்த கருத்தரங்கை கொரியாவில் வாழும் தமிழர்களால் பார்க்க முடியவில்லையே எனும் ஆதங்கமே இந்த இணைய வழிக் கருத்தரங்கிற்கு ஆதாரம் என்றாலும் இதில் பல புதிய அம்சங்கள் உள்ளன. தமிழகத்தின் அயலகத் தமிழர் துறை சார்ந்த திரு. வள்ளலார் இ. ஆ. ப. அவர்கள் பேச உள்ளார்கள். இது குறித்து இத்துறையின் கண்ணோட்டம் என்னவென்று தெரியும். இந்த ஆய்வுகளுக்கெல்லாம் முதற் காரணமாக இருக்கும் பேரா.முனைவர். வைஜயந்தி ராகவன் பேசவுள்ளார்கள். இவர் 1980 களிலேயே இது குறித்துப் பேசியவர். பிரசித்தி பெற்ற சோல் தேசிய பல்கலைக் கழகத்தில் கொரிய சரித்திரத்தில் முதுகலை பட்டம் பெற்று பின் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் கொரிய ஆய்வுத்துறை தலைவராக பணியாற்றியவர். இவர் என்ன சொல்லப்போகிறார் என்பது சுவாரசியமாக இருக்கும். அடுத்து திருமதி பவானி இரவிச்சந்திரன். உலகிலேயே முதன் முறையாக தமிழ் நூல் ஒன்றை கொரிய மொழிக்கு ஆங்கில இடைநிலை இன்றி மொழி பெயர்த்திருக்கிறார். அவரது இந்த அனுபவத்தைச் சொல்லுவார். அடுத்து ஹரிபாலன். இவர் கொரியாவில் இருந்து கொண்டு தமிழ் வழியில் ஹங்குல் கற்றுத்தருகிறார். இவரது யுத்தூபி விழியங்கள் பிரபலம். தமிழ் மொழிக்கும் கொரிய மொழிக்குமுள்ள இலக்கண ஒப்புமை குறித்துப் பேச உள்ளார். நானும் புதிய கருத்துக்களைச் சொல்வேன். செல்நெறிகள் காட்டுவேன். முனைவர் சுபாஷிணி தலைமையேற்று நடத்துவார். கடிகை எனும் இணையவழி உயர் கல்வி பற்றிக் சொல்வார், முனைவர் பாப்பாவும் இது பற்றிப் பேசுவார். கொரியாவில் புதிதாக உருவாகியிருக்கும் தமிழக அயலகத் தமிழர் மையம் குறித்து அதன் ஒருங்கமைப்பாளர் முனைவர் சரவணன் பேசுவார். தமிழகத்தின் முதுபெரும் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பாக பேரா.முனைவர் (கள்) ஆம்ஸ்ட்ராங் மற்றும் சங்கப்பலகை சங்கரநாராயணன் பேசுவர்.
இத்தகைய சிறப்பு மிக்க கருத்தரங்கில் நீங்களும் பங்கேற்கலாம். ஏறக்குறைய 100பேர் முன்பதிவு செய்துள்ளனர். நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.

தேமொழி

unread,
Jun 27, 2025, 2:02:41 AM6/27/25
to மின்தமிழ்

தமிழ்நாடு கொரியா இரு நாடுகளுக்குமான மொழி வரலாறு பண்பாட்டு தொடர்பான ஆய்வுகளை முன்னெடுக்கும் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளையின் கடிகை, கொரியாவிற்கான தமிழக அரசின் தமிழ்நாடு டெஸ்டக் கொரியக் குடியரசு, மற்றும் சென்னை பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இணையவழி கருத்தரங்கம் தொடர்பான அறிவிப்பு இது,
இணைய வழி பதிவு நிறைவடைந்து விட்டது என்பதால் ஆர்வமுள்ளோர் facebook வழியாக இந்த நிகழ்ச்சியில் இணைந்து பயன்பெறலாம்.
கேள்விகளைக் கேட்க விரும்புவோர் facebook கமெண்ட் பெட்டியில் உங்கள் கேள்விகளை வழங்கலாம்.
நிகழ்ச்சி நாளை சனிக்கிழமை இந்திய மற்றும் இலங்கை நேரம் நண்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.

தேமொழி

unread,
Jun 30, 2025, 4:54:38 AM6/30/25
to மின்தமிழ்
kadigai.jpg

தமிழ் கொரியத் தொடர்பு - மீளாய்வுகள்: கருத்தரங்க நிகழ்ச்சியின் தொடக்கம் - ஜூன் 28, 2025
https://youtu.be/8p7yHPeINao
---

Tamil-Korea_Tamil.jpg

தமிழ் கொரியத் தொடர்பு - மீளாய்வுகள்:கருத்தரங்க நிகழ்ச்சியின் ஆய்வுரைகள் - ஜூன் 28, 2025
https://youtu.be/18Rdkb9m3lk

முனைவர் வைஜெயந்தி ராகவன்  - கொரிய இந்திய உறவு குறித்த கண்ணோட்டம்
https://youtu.be/18Rdkb9m3lk?feature=shared&t=90

முனைவர் நா. கண்ணன் - கிழக்கு நோக்கும் தமிழ் முகம் மீளாய்வின் தேவைகள்
https://youtu.be/18Rdkb9m3lk?feature=shared&t=1399

முனைவர் ஹரிபாலன்  - தமிழ்-கொரிய மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமைகள்
https://youtu.be/18Rdkb9m3lk?feature=shared&t=5189

திருமிகு. பவானி இரவிச்சந்திரன்   - தமிழிலிருந்து ஹங்குல் மொழிபெயர்ப்பு: ஒரு புதிய அனுபவம்
https://youtu.be/18Rdkb9m3lk?feature=shared&t=6730

திருமிகு. வி. புவனா  - குற்றியலுகர தமிழ் இலக்கணங்களோடு ஹங்குல் மொழி ஒத்துப்போகும் ஒலியியல் இடங்கள்
https://youtu.be/18Rdkb9m3lk?feature=shared&t=7685


கலந்துரையாடல்
Reply all
Reply to author
Forward
0 new messages