வையாவிக் கோப்பெரும் பேகன்களங்கனி அன்ன கருங்கோட்டுச் சீறியாழ்,
நயம்புரிந்து உறையுநர் நடுங்கப் பண்ணி,
அறம் செய்தீமோ, அருள் வெய்யோய் என
இஃது யாம் இரந்த பரிசில், அஃது இருளின்
இனமணி நெடுந்தேர் ஏறி
இன்னாது உறைவி அரும்படர் களைமே! (புறம். 145:5-10)
பரணர்
பொருள்:
களாப் பழம் போன்ற கரிய தண்டினைக் கொண்ட சிறியயாழினை இசைத்து,
கேட்போரைத் தலையசைக்கச் செய்வோம்.
நாங்கள் உன்னிடம் எதுவும் எதிர்பார்த்து வரவில்லை:
ஆனால் ஒரு பரிசில் வேண்டுகிறோம்.
அருளை விரும்புபவனே! நீ அறத்தின்படி செயல்படுவாயாக!
வீட்டில் உன்னைப் பிரிந்த கவலையுடன் இருக்கும்
உன் தலைவியின் துன்பத்தைப் போக்குவதற்காக,
மணிகட்டப்பட்ட தேரில் ஏறி விரைந்து செல்வாயாக!
இதுதான் நீ எங்களுக்குத் தரும் பரிசில் ஆகும்.
O' Pekan, we play the dark stemmed lyre
To everyone's delight.
We ask you this favour;
Get on your majestic chariot,
Go to your wife who is pining for you.
And rid her of her separation pangs.