--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இது குறித்து 20 ஆண்டுகளுக்கு முன்பே விரிவான கட்டுரையைப்படித்துள்ளேன். ஆனாலும் விவரம் நினைவில்லை. தினமணியிலும் வந்ததாக நினைவு.பாரதியாரின் மரணச் சான்றிதழ் தெரிவிக்கும் நாளும் யானை மோதிய நாளும் வெவ்வேறு நாள் என்பதே யானை மோதி உடன் இறக்கவில்லை என்பதை மெய்ப்பிக்கும்பொதுவாக யானை மோதியதால் உடன் இறக்கவில்லை என்றாலும் அதன் தொடர் விளைவுதான் மரணம். யானை மோதியதன் தொடர்ச்சியாக வயிற்றுப் போக்கு ஏற்பட்டு அதுவே மரணத்திற்கு வழி வகுத்துள்ளது.
இணையத்தில் தேடினேன். போதைப்பழக்கம் அவரைத்தின்றது என ஒரு கட்டுரை கண்டேன். எது கொன்றிருந்தாலும் இறந்து 93 ஆண்டுகள் கடந்தும் வாழ்கிற மகாகவி பாரதி சாகாவரம் பெற்றவன் என்பது அனைவரும் அறிந்ததே.அன்புடன்சொ.வினைதீர்த்தான்.பாரதி' யார்? - வேடிக்கை மனிதனா நீ
பாரதியின் இறுதிப் பேருரை
த. ஸ்டாலின் குணசேகரன்
தினமணி, செப். 11, 2009
64 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த வ.உ.சி. பாரதியை விடப் பத்து வயது பெரியவர். இருவரின் தந்தையாரும் எட்டயபுரம் சமஸ்தானத்தில் அத்யந்த நண்பர்கள்.
தமிழகமெங்கும் பாரதியின் மேதைமை உணரப்பட்டிருந்தாலும், ஒரே பகுதியில் வாழ்ந்தும், தன் 34 வயதில்தான் (1906ல்) பாரதியை முதன்முதலாய்ச் சந்திக்கிறார் என்னும் செய்தி ஆச்சர்யப்பட வைக்கிறது. அப்போது வ.உ.சியின் வயது 34. பாரதி 24 வயது இளைஞர்.
”இந்தியா” பத்திரிகைக்கு ஆசிரியராக இருக்குபோதுதான் சென்னையில் அச்சந்திப்பு நிகழ்ந்தது. அச் சந்திப்பில் துவங்கிய இருவரது நட்பும் நெருக்கமாக பாரதியின் மரணம் வரை தொடர்ந்தது. பாரதியை வ.உ.சி. “மாமா” என்றும், பாரதி வ.உ.சி.யை “பிள்ளைவாள்” என்றும் அழைக்கும் அளவுக்கு நெருக்கம்.
கிட்டத்தட்ட 15 வருடங்கள் நகமும், சதையுமாக இருவரின் நட்பும் தொடர்ந்தது. பாரதியின் மறைவு ஏற்பட்ட 1921 செப்டெம்பருக்குச் சற்று முந்தைய காலத்தில் வ.உ.சிக்கும், பாரதிக்குமான இறுதி சந்திப்பு நிகழ்ந்ததை “வ.உ.சி. கண்ட பாரதி” எனும் சரிதையில் பதிவு செய்திருக்கிறார்.
பாரதியின் வாழ்க்கையை வேறு யாரும் வாழ்ந்திருக்க முடியாது என்பது மறுபடியும் ஊர்ஜிதமாகிறது.
இன்றையப் பதிவில் அந்தச் சந்திப்பை வாசிக்கத் தவறியவர்களுக்காக இங்கே தருகிறேன்.
#######
கடைசியாகக் கண்டது:
பின்னர் பல வருஷங்களுக்குப் பிறகு சென்னையைச் சேர்ந்த பெரம்பூரில் நான் வசித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் நான் திருவல்லிக்கேணி முதலான இடங்களுக்குப் போய் விட்டு இரவு சுமார் பத்து மணிக்கு என் வீடு வந்து சேர்ந்தேன். என் வீட்டுத் தார்சா (வராந்தா) வில் இருவர் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர். வந்தவுடன் நான் கை, கால் கழுவிவிட்டு வீட்டுக்குள் சென்றேன். சாப்பாடு போடும் படி என் மனைவி மீனாக்ஷியிடம் கூறினேன். அவள் இலை போட்டுப் பறிமாறியதும் நான் சாப்பிட ஆரம்பித்தேன். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது பொழுது தார்சாவில் தூங்குபவர்கள் யார்? என விசாரித்தேன்.
”உங்கள் மாமனார் பாரதியாரும், அவருடன் வந்துள்ள யாரோ ஒரு சாமியாரும்” என்றனள் என் மனையாள்.
”எப்போது வந்தார்கள்?” என்றேன்.
”இரவு எட்டு மணிக்கு வந்தார்கள். வரும்பொழுதே மாமா உங்களைத் தேடிக்கொண்டு வந்தார்” என்றாள்.
”இருவரும் சாப்பிட்டார்களா? விசாரித்தாயா?” என்று வினவினேன்.
”வந்ததும் உங்களை எங்கேயென்றும், எப்பொழுது வருவீர்கள் என்றும் கேட்டார்கள். பட்டினம் போயிருக்கிறார்கள் என்றேன். நான் சொல்வதற்குள்ளாக ’எப்பொழுது சிதம்பரம் பிள்ளை வருவார் மீனாக்ஷி?’ என்று மீண்டும் கேட்டார். ’10 மணிக்கு வருவார்கள்’ என்றேன். ’எங்களுக்குப் பசிக்கிறது; முதலில் சோறு போடு’ என்றார்கள். போட்டேன். இருவரும் சாப்பிட்டனர். சாப்பிட்டுவிட்டு நீங்கள் வந்தவுடன், அவர்களை எழுப்பும்படி சொல்லிவிட்டு, நீங்கள் வந்தவுடன் அவர்களை எழுப்பும்படிச் சொல்லிவிட்டுப் பாயும் தலையணையும் கேட்டார்கள். படுக்கையை எடுத்துக் கொடுத்தேன். வாங்கி கொண்டு தார்சாவிற்குச் சென்று விட்டார்கள்” என்றாள்.
நான் அவசர அவசரமாக எனது சாப்பாட்டை முடித்துக் கொண்டு தார்சாவுக்கு வந்து ”மாமா, மாமா” என உரக்க எழுப்பினேன். இருவரும் எழுந்துவிட்டனர்.
க்ஷேமம் விசாரித்தேன். க்ஷேமத்தையும், தாம் வந்த வரலாறு பற்றியும் கூறினார் மாமா. புதுச்சேரியில் வசித்து வந்த பல இந்திய நண்பர்களின் க்ஷேமத்தையும் விசாரித்தேன். மாமா பதில் அளித்துக் கொண்டே வந்தார்.
”சுவாமிகள் யாரோ?” என்றேன்.
”ஒரு பெரியவர்” என்றார் மாமா. அதற்கு மேல் துளாவித் துளாவிக் கேட்க நான் விரும்பவில்லை; பேசாதிருந்துவிட்டேன். ஆனாலும் என் மனச்சாட்சி அந்த மனிதனைப் பற்றி என் மனதில் ஏதோ ஒரு பீதியை எழுப்பியது. இதற்கு ஆதாரமும் இல்லாமல் இல்லை. மாமா முகத்தில் ஏதோ மாற்றம் இருப்பதாக எனக்குத் தோன்றியது. பழைய உத்ஸாகத்தையும், முக மலர்ச்சியையும், கண்களின் வீரப்பொலிவையும் கண்டிலேன். பேச்சும் ஒருபுது மாதிரியாக இருந்தது. சம்பந்தா சம்பந்தமில்லாமல் அவர் பேசுவதாகவும் எனக்குப் பட்டது. ஆனால் காரணம் தெரிந்திலேன். பொது விஷயங்களைப் பற்றிச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் பின் துயின்றோம்.
மாமாவின் மாற்றம்; சாமியாரின் தோற்றம்
மறுநாட் காலையில் நாங்கள் எழுந்ததும், மாமா தம்முடன் வந்திருந்த சாமியாருக்கு எண்ணெய் ஸ்நானம் செய்து வைத்து வேறு வேஷ்டி கொடுக்க வேண்டுமென எனக்குக் கட்டளையிட்டார். அந்தச் சாமியாரின் கீல் எண்ணெய் மேனியில் கால் அங்குலக் கனம் அழுக்குப் படிந்திருப்பதைக் கண்டேன். சாமியாரைக் குளிக்கக் கூப்பிட்டேன். சாப்பாடான பிறகு குளிக்கலாம் என்றார். மாமாவும் அதை ஒப்புக் கொண்டுவிட்டார்.
காலைக் காப்பி, சாப்பாடு முடிந்ததும் சாமியார் குளிப்பதற்காக வானவெளிக்குச் சென்றார். பக்கத்தில் ஒரு செப்புப் பானையில் வெந்நீர் இருந்தது. இரு வேலைக்காரர்களும் சாமியாரைக் குளிப்பாட்டுவதற்குத் தயாராயிருந்தனர். நான் மேல் பார்வையிட்டுக் கொண்டிருந்தேன்.
சாமியார் அழுக்கேறிய தனது வேஷ்டியைக் களைந்து வைத்தார். அவரது அரைஞாணில் பலப்பல துணி முடிச்சுக்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அவற்றில் ரூபாய் இருந்தது.
அவற்றை அவிழ்த்துவிடும்படி நான் வேலைக்காரர்களிடம் கூறிய போது, சாமியார் ஏனோ மறுத்தார். பயப்பட வேண்டாம் என்றும், அவர் பணத்தை யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும், அவர் முன்னயே வைத்திருந்து, குளித்துவிட்டு வந்ததும் அவரிடம் நானே கொடுத்து விடுவதாகவும் நான் கோபத்துடன் கூறவே சாமியார் அடங்கிவிட்டார்.
பின்னர் வேலையாட்கள் அவருக்கு எண்ணெய் ஸ்நானம் செய்து வைத்தனர். கடையிலிருந்து ஏற்கனவே வாங்கிவந்து வைத்திருந்த ஒரு ஜோடிப் புது வேஷ்டிகளையும், சாமியாரது பண முடிச்சுகளையும் நான் அவரிடம் கொடுத்ததும் சாமியாருக்குப் பரமானந்தம்!
மூவரும் மத்தியானச் சாப்பாடு சாப்பிட்டோம். சிரம பரிகாரத்தின் பொருட்டு மூவரும் படுத்து உறங்கினோம்.
மாலை சுமார் 3 மணிக்கு அவர்களிருவரும் பேயிரைச்சலிட்டு வார்த்தையாடிக் கொண்டிருப்பததைக் கேட்டு நான் விழித்துகொண்டேன். ஒரு சிறு ‘அமிருதாஞ்சன்’ டப்பாவிலிருந்து ஏதோ ஒரு லேகியத்தை எடுத்து ஆளுக்கு ஒரு எலுமிச்சங்காய் அளவு வாயில் போட்டுக் கொண்டனர். அவர்கள் கொம்மாளம் அதிகமாயிற்று.
”அது என்ன மாமா?” எனக் கேட்டேன்.
”அதுவா, மோக்ஷலோகத்திற்குக் கொண்டு போகும் ஜீவாம்ருதம்” என்றார் மாமா. எனக்கு விஷயம் விளங்கி விட்டது.
”அடப் பாவிகளா! எலுமிச்சங்காய் அளவா? நீங்கள் நாசமா...”
”எல்லாம் உனக்குப் பயந்துதான் இந்தச் சிறிய அளவு. இல்லாவிட்டால்... ” என்று சாமியார் முதுகில் ஒரு அடி கொடுத்துக் கொண்டே மாமா வெறிபிடித்தவர் மாதிரிச் சிரித்தார்.
மாமாவின் மாற்றத்திற்கு இம்மருந்துதான் காரணம் என்று நிச்சயமாய்த் தெரிந்துவிட்டது. இருந்தும் பலவாறு பேசியும், பாடியும் அன்று மாலையையும் என் வீட்டில் பொழுது போக்கிக் கழித்தோம்.
சாமியார் சரீர கனத்திலும், லேகியம் தின்பதிலும் தவிர மற்றபடிப் பேச்சு முதலியவற்றில் மக்காகவே இருந்தார். அறிவின் சிகரமான மாமாவுக்கு, இந்த மக்கினிடத்தில் எவ்வாறு பற்று உண்டாயிற்று? என்று அதிசயித்தேன்.
மத்தியானச் சாப்பாட்டுக்குப் பிறகு பாரதியாரின் அத்தியந்த நண்பரும், என் நண்பருமான ஜார்ஜ் டவுன் வக்கீல் எஸ். துரைசாமி ஐயர் வீட்டிற்குச் சென்றோம். ஐயர் வீட்டில் இல்லை. எனவே நாங்கள் மூவரும் ஐயர் வீட்டு மாடிக்குச் சென்று அங்கிருந்த கட்டில்களில் படுத்துக் கொண்டு கண்துயின்றோம்.
மாலை சுமார் மூன்று மணி சுமாருக்கு முதல் நாளைப் போலவே சாமியாரும், மாமாவும் உல்லாசமாகச் சப்தமிடுவதைக் கேட்டு நான் விழித்தேன். முந்திய தினத்தைப் போலவே தகர டப்பாவிலிருந்த லேகியம் அவ்விருவரது வயிற்றிலுமாகச் ‘சமாப்தி’ யாகியது. தலையில் அடித்துக் கொண்டு பேசாதிருந்துவிட்டேன்.
இதற்குள்ளாக வக்கீல் ஐயரும் வந்து சேர்ந்தார். அவருடன் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு, நான் அம்மூவர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு பெரம்பூரில் உள்ள என் வீடு போய்ச் சேர்ந்தேன்.
பின்னர் அவ்வப்போது சென்னையில் நான் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகை ஆபிசுக்குப் போயிருந்த சமயங்களிலெல்லாம், அங்கு உதவி ஆசிரியராக இருந்த மாமாவைக் கண்டு பேசியிருக்கிறேன். அருமை மாமாவின் எழுத்துக்கள் ‘மித்திரன்‘ வாயிலாக எனக்கு ஆனந்தம் ஊட்டி வந்தன.
மாமா மறைந்தார்; மாண்பு மணத்தது!
கொஞ்ச நாளில் மாமா காலஞ் சென்ற செய்தி கேட்டுத் திடுக்கிட்டேன். துக்கக்கடலில் ஆழ்ந்து தத்தளித்தேன். ‘நல்லார்க்கு அதிக காலம் இல்லை போலும்’ என நினைத்தேன்.
மாமா இவ்வுலகைவிட்டு மறைந்து விட்டாலும் அவரது தேசீய கீதங்களும், மற்றையப் பாடல்களும், கதை-கட்டுரைகளும் இவ்வுலகம் உள்ளளவும் நிலைத்துப் புகழ் வீசும் என்பதில் ஐயமில்லை. அவருடைய பெயர் தேசாபிமானிகளுடைய சரிதத்தில் மட்டுமல்லாமல், கவிதா மேதைகளின் சரிதத்திலும் வைரம் என ஒளிவிடும்.
அவருடைய பாடல்களின் அருமை பெருமையையும் சிறிது இயம்ப வேண்டும் என நினைத்தேன். ஆனால் எனக்கு ஆற்றலின்மையாலும், அவகாசமின்மையாலும் அவ்வேலையில் புகாது நின்று, கவிச்சக்கரவர்த்தி சுப்பிரமணிய பாரதியின் பாடல்களையே நம் தேசத்து மக்கள் என்றென்றும் படித்து வர வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன்.
வந்தே மாதரம்! வாழ்க பாரதி!
( இந்தப் பதிவு, மிகவும் நெருங்கிப் பழகிய வ.உ.சி. போன்ற மேதாவிகளுக்கே பிடிபடாத வாழ்க்கையாக, ஒரு புதிர் முடிச்சாக மஹாகவி பாரதியின் வாழ்க்கை இருந்திருக்கிறதே என்ற த்வனியைப் பகிர்ந்து கொள்வதற்கே அன்றி அவரின் மூலம் குறித்து ஆராய அல்ல. )
முகநூல் பதிவில் திருமதி பாரதி பாஸ்கர் கூறியதாக எழுதியுள்ளார்கள். வியப்பிற்குரிய செய்தி! யானை மிதித்த நிகழ்ச்சிக்குப்பின்னர் பயணம்செய்யும் அளவிற்கு பாரதி உடல் நலம் தேறினார?
அன்புடன்சொ.வினைதீர்த்தான்
கோ. ஆலாசியம்
‘ஆப்கன் மன்னன் அமானுல்லா கானைப்பத்தி நாளை காலையில எழுதி எடுத்துட்டுப் போகணும்’ என்று சொல்லிவிட்டுப் படுத்தார். தூக்கத்தில் உயிர் பிரிந்தது. அவரது உடல் புதைக்கப்பட்ட இடம், சென்னை கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாடு. அன்றைய தினம் இருந்தவர்கள் 20-க்கும் குறைவானவர்களே.”
கோயில்யானை என்பது கட்டுரை அன்று. அது பாரதியார் எழுதிய ஒரு கதை. அவர் எழுதிய கடைசிக் கதை. கலைமகளில் மறுஅச்சு ஆகியிருந்ததைத் தேடிக் கண்டுபிடித்து வெளியிட்டவர் பேரா. ய. மணிகண்டன். ஈரோடு தமிழன்பன் மாணவர். தமிழ் இலக்கணம், சுவடிகளைப் படித்தல் இவற்றில் வித்தகர். சந்தவசந்தம் போன்ற குழுக்களில் கோயில்யானை கதையை பகிர்ந்திருந்தேன் முன்னர்.
நா. கணேசன்
http://news.vikatan.com/article.php?module=news&aid=22177
On Sunday, December 28, 2014 2:16:57 AM UTC-6, சொ.வினைதீர்த்தான் wrote:முகநூல் பதிவில் திருமதி பாரதி பாஸ்கர் கூறியதாக எழுதியுள்ளார்கள். வியப்பிற்குரிய செய்தி! யானை மிதித்த நிகழ்ச்சிக்குப்பின்னர் பயணம்செய்யும் அளவிற்கு பாரதி உடல் நலம் தேறினார?அன்புடன்சொ.வினைதீர்த்தான்
| கோவில்யானை |
| ஸி. சுப்பிரமண்யபாரதியார் |
பாரதி கையில் சில வாழைப்பழங்களை எடுத்துக்கொண்டு கோயிலுக்குச் சென்றார்
பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்குப் பாரதி அடிக்கடி போவது வழக்கம். வாசல் மண்டபத்தில் கட்டப்பட்டிருக்கும் யானையிடம் சென்று அதற்குப் பழம் கொடுத்து அதனுடன் சிறிது நேரம் சல்லாபம் செய்துவிட்டு வருவார். அந்த யானையின் பெயர் அர்ச்சுனன். பாரதி தன்னையே அர்ச்சுனனாகப் பாவித்துக்கொண்டவர். எனவே அந்த இருவருக்குள்ளும் ஒரு இணக்கம் இருந்தது. பாரதியைக் கண்டால் அதற்கு ஒரு தனி மகிழ்ச்சி வந்துவிடும். காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடிய பாரதி ஐந்தறிவுடைய பிராணிகளை அதிகம் நேசித்தார் என்றே சொல்லவேண்டும்.
ஒரு நாள் யானைக்கு மதம் பிடித்துவிட்டது.. இரண்டு மூன்று நாட்களாகக் கோவிலுக்குப் போகாததால் யானையின் நிலைமையைப் பற்றிப் பாரதி அறிந்திருக்க வில்லை
வழக்கம் போல அதற்குப் பழம் கொடுக்கப்போனார். பழத்தை வாங்குவதற்குப் பதிலாக அந்த யானை அவரையே தூக்கிவிட்டது. தூக்கிய யானைக்கு அவரைக் கிழே தள்ளி மிதிக்க ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. ஆனால் அது அப்படிச் செய்யவில்லை. கீழே போட்டது. யானையின் நான்கு கால்களுக்கும் இடையே பாரதி விழுந்துவிட்டார். கீழே கல்பாவிய தரை . தூக்கிப் போட்ட வேகத்தில் தலையில் காயம் பட்டு இரத்தம் கொட்டியது. இதைப் பார்த்த சிலர் கத்திக் குரல் கொடுக்க ஆபத் பாந்தவனான குவளைக் கண்ணன் ஓடி வந்தார். வேடிக்கை பார்த்துக் கொண்டு கையாலாகாத்தனமாகக் கத்திக்கொண்டிருந்த கூட்டத்தை விலக்கி உள்ளே பாய்ந்து சென்று பாரதியைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தார். கோயில் வாசல் மண்டபத்தில் படுக்க வைத்தார். மண்டபத்துக்கு எதிர்வீட்டிலிருந்த ஸ்ரீனிவாசாச்சசரியார் இதை அறிந்தார். உடனே ஒரு வண்டிக்கு ஏற்பாடு செய்து இராயப்பேட்டை மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். அங்கே அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கக் கூடிய அளவுக்கு அபாயகரமாக இல்லாததால் அவரை அங்கிருந்து திருவல்லிக்கேணி வீட்டிற்குக் கொண்டுவந்தனர். ஏற்கனவே பூஞ்சை உடம்பு. கல்தரையில் கீழே விழுந்ததால் உடம்பெல்லாம் வலி அதிகமிருந்தது. உடல் வலியைவிட அன்பு காட்டிய தன்னை அந்த யானை துக்கிப்போட்டு விட்டதே என்ற எண்ணம் அவரை வாட்டியது. ஆனால் உடனே சமாதானப்படுத்திக்கொண்டார். அந்த யானைக்கு மதம் பிடித்திருந்ததால் தன்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லையென்றும்., தன்னை மிக அருகிலே பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டு கீழே போட்டு அசையாமல் நின்றது என்றும் சொன்னார். அந்த நிகழ்ச்சியையே சிறிது கற்பனை கலந்து காளி கோயில் யானை என்ற ஒரு கட்டுரையெழுதி சுதேசமித்திரனில் வெளியிட்டார்.
உடல் நிலை சற்றுத் தேறிச்.சுதேசமித்திரன் அலுவலகத்துக்குச் சென்றுகொண்டிருந்தார். அத்தோடு அடிக்கடி கூட்டங்களிலும் கலந்துகொண்டார். வெளியூர்களுக்கும் சென்று வந்தார்.” - கவிமாமணி இலந்தை ராமசாமி
-------------------------
தெரிவு;
நா. கணேசன்
வஉசி பாரதி கடைசி சந்திப்பு - ஏற்கனவே மின்தமிழில் வந்தது என்று நினைக்கிறேன்.இவ்விவாதத்திற்காக ஒரு மீள்பதிவு
64 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த வ.உ.சி. பாரதியை விடப் பத்து வயது பெரியவர். இருவரின் தந்தையாரும் எட்டயபுரம் சமஸ்தானத்தில் அத்யந்த நண்பர்கள்.
காளிகோயில் யானை பாரதி எழுதியிருக்கிறார் என்பது தெரியும். அதை ஒரு கட்டுரை என்று நினைத்திருந்தேன். இப்பொழுதுதான் நாடகம் என்பதறிந்தேன். அதை இங்கே இட்டதற்கு நன்றி.இலந்தை
சுதேசமித்திரன் ஆசிரியர் ஏ.ரங்கஸ்வாமி ஐயங்காருக்கு
நன்றிக் கடிதம், 1918
ஓம் சக்திகடையம்,
டிசம்பர் 17ஸ்ரீமான் ரங்கசாமி அய்யங்காருக்கு நமஸ்காரம். ஞாயிற்றுக் கிழமை (15ந் தேதி) இரவு நான் இவ்வூருக்கு வந்து சேர்ந்தேன். என் விடுதலையின் பொருட்டாகத் தாங்களும் மற்ற நண்பர்களும் மிகவும் சிரத்தையுடன் பாடுபட்டதற்கு என் மனப்பூர்வமான நன்றி தெரிவிக்கிறேன்.
ஸ்ரீமதி அனி பெஸண்ட், ஸ்ரீ மணி அய்யர், ஸ்ரீ சி.பி.ராமசாமி அயயர் முதலாக என் விடுதலை விஷயத்தில் சிரத்தையெடுத்துக் கொண்ட தங்களுடைய மித்திரர்களுக்கெல்லாம் எனது நன்றி தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.
தங்களன்புள்ள,
சி.சுப்பிரமணிய பாரதி
ஓம் சக்திC.Subramania Bharati
Pondicherry
3rd August 1918ஸ்ரீமான் விசுவநாதனுக்குப் பராசக்தி துணை செய்க. உன்னுடைய அன்பு மிகுந்த கடிதம் கிடைத்தது. அதைப் படித்து அதினின்றும் உன்னுடைய புத்திப் பயிற்சியின் உயர்வைக் கண்டு சந்தோஷமடைந்தேன். தந்தைக் கப்பால் நீ என்னை முக்கிய சகாயமாகக் கருதுவது முறையே. இதுவரை உன்னை நேரே பரிபாலனம் செய்வதற்குரிய இடம் பொருளேவல் எனக்கு தெய்வ சங்கற்பத்தால் கிடையாமல் போய்விட்டது. அதையெண்ணி இப்போது வருந்துவதிலே பயனில்லை. எனினும் இயன்றவரை விரைவாகவே எனக்கு நற்காலமும் அதனால் உன் போன்றோருக்குக் கடமைகள் செய்யும் திறமும் நிச்சயமாக வரும். உன் கடிதத்தில் கண்டபடி நீ இங்கே என்னைப் பார்க்க வரும் காலத்தை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சீக்கிரம் வா. தங்கை ஸ்ரீ லக்ஷ்மி சில வருஷங்களுக்கு முன் எட்டயபுரத்துக்கு வந்திருந்த காலத்தில் என்னைக் கொஞ்சம் பணம் அனுப்பச் சொல்லியிருந்தாள். அப்போது என் கையில் பணம் இல்லாதபடியால் அனுப்பவில்லை. அது முதல் என் மீது கோபம் கொண்டு எனக்கு ஒரு வார்த்தைகூட எழுதாமலிருக்கிறாள். என்னை மன்னிக்கும்படிக்கும் எனக்கு அடிக்கடி காயிதங்களெழுதும்படிக்கும் நீ அவளை அழுத்தமான பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகிறேன். தம்பியுள்ளோன் படைக்கஞ்சான் என்ற வாக்கியத்தின் உண்மையை உன் விஷயத்தில் நம்பியிருக்கலாமென்றே நம்புகிறேன்.
எனக்கு இனிமேல் இங்கிலீஷில் காயிதம் எழுதாதே. நீ எழுதும் தமிழ் எத்தனை கொச்சையாக இருந்தபோதிலும் அதைப் படிக்க நான் ஆவலுறுவேன். கொச்சைத் தமிழ்கூட எழுத முடியாவிட்டால் ஸம்ஸ்கிர்தத்திலே காயிதம் எழுது. திருப்பயணம் வி.ராமஸ்வாமி அய்யங்கார் என்னிடம் 'விநாயகர் ஸ்தோத்திரம்' (தமிழ் நூல்) அச்சிட வாங்கிக்கொண்டு போனார். இன்னும் அச்சிட்டனுப்பவில்லை. மேலும் அவர் 'பாஞ்சாலி சபதம்' அச்சிடும் சம்பந்தமாகப் பணம் சேகரித்துப் பட்டணத்துக் கனுப்புவதாகச் சொன்னார். அங்ஙனம் அனுப்ப முடியுமானால் உடனே புதுச்சேரியில் எனது விலாசத்துக்கனுப்பும்படி ஏற்பாடு செய்.
அது மாத்திரமேயன்றி, 'விநாயர் ஸ்தோத்திரம்' வேலையை விரைவில் முடித்துப் புஸ்தகங்களனுப்பும்படி சொல்லு. உடம்பையெண்ணிப் பயப்படாதே. அடிக்கடி பால் குடி. ஜலத்தை எப்போதும் காய்ச்சிக் குடி. வேறு எந்த விஷயத்துக்கும் கவலைப்படாதே. பொறுமையாலும் பயமின்மையாலும் இவ்வுலகத்தில் மனிதன் தேவத்தன்மை அடைகிறான். அந்நிலைமை உனக்கு மஹாசக்தி அருள் செய்க.உனதன்புள்ள ஸஹோதரன்,
சி.சுப்பிரமணிய பாரதி
| நாடகம் | |
| கோவில்யானை | |
| ஸி. சுப்பிரமண்யபாரதியார் | |
தமிழகமெங்கும் பாரதியின் மேதைமை உணரப்பட்டிருந்தாலும், ஒரே பகுதியில் வாழ்ந்தும், தன் 34 வயதில்தான் (1906ல்) பாரதியை முதன்முதலாய்ச் சந்திக்கிறார் என்னும் செய்தி ஆச்சர்யப்பட வைக்கிறது. அப்போது வ.உ.சியின் வயது 34. பாரதி 24 வயது இளைஞர்.
தங்கள் முயற்சிக்கும். பாரதி அன்பர்களுக்கும்சேதுபதி
ரா. அ. பத்மநாபனை நான் கடைசியாக்ச் சந்தித்தது 6-10-12 அன்று. அப்போது கூட அவருடன் பேசிகொண்டிருந்தேன். ஆனால் அப்போது அவரால் சுத்தமாக்க் காது கேட்காத நிலை. ஆகிஅயால் அவரது திருமதியார் தான் விளக்கிக் கொண்டிருந்தார்.அவரது குறிப்பின் படி, பாரதி (சித்திரபாரதி) 1921 ஆகஸ்ட் மாதம் முதல் இரண்டு தேதிகளில் ஈரோட்டுக்குப் போய் அங்கே கருங்கல் பாளையத்திலிருந்த ஒரு வாசக சாலையின் ஆண்டு விழாவில், ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்ற பொருளில் பிரசங்கம் செய்தார். மறுநாள் ஈரோட்டின் வாய்க்கால் கரையில் ஒரு பொதுக்கூட்டத்தில் ‘இந்தியாவின் எதிர்கால நிலை’ என்பது ப்ற்றிப் பேசினார். ‘எனது ஈரோட்டு யாத்திரை’ என்றொரு கட்டுரையும் எழுதினார். இது மித்திரனில் ஆகஸ்டு 4 அன்று வெளியானதுகுவளைக் கண்ணன் தான் யானைக் காலடியில் கிடந்த பாரதியைத் தூக்கிக் கொண்டு வந்தார். பின்னர் மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியாரும் மற்ற சிலரும் அவரை ஒரு ஜட்கா வண்டியில் எடுத்துச் சென்றனர்.இந்த விவரத்தை சகுந்தலா பாரத் எனது தந்தை என்ற நூலில் சொல்கிறார். (இந்நூலின் பழைய பிரதி என்னிடம் இருந்தது. இப்போது கிடைக்கவில்லை. தேடிப் பார்க்க வேண்டும். சிட்டி கொடுத்தது)ஸ்ரீனிவாசாச்சாரியார் பெண் ரங்கா (ரங்கநாயகி அம்மாள்) பாரதி வீட்டிற்கு ஓடினாள். எந்த ஆஸ்பத்திரி என்று தெரியாமல் ஜெனரல் ஆஸ்பத்திரி போய் திரும்பதற்குள் பாரதியை வீட்டிற்குக் கொண்டு வந்து விட்டார்கள்.சம்பவம் நடந்தது ஜூன் மாத்த்தில் பின்னர் பாரதி ஜூலை ஆகஸ்டு மாதங்களில் மித்திரனில் வேலைக்குச் சென்று வந்துள்ளார். திருவல்லிக்கேணியில் தேசிய வீதி பஜனை கூட செய்துள்ளார்.ஆகஸ்டு மாதம் வெளியூர் பயணமும் மேற்கொண்டுள்ளார்.ரா. அ. ப சொல்கிறார்: “ யானை மூலம் உயிரைக் கவராத யமன் இரண்டு மாதம் காத்திருந்து வேறொரு எளிய வழியில் பாரதியை நெருங்கினான்”வயிற்றுப் போகு; தாங்க முடியாத பூஞ்சை உடல்; இரத்த்க் கடுப்பாக மாறிவிட்டது.பாரதியின் உடல் நிலை சரிந்து கொண்டு வந்தது. வ. வே. சு. அய்யர் தாம் எழுதாத ஒரு கட்டுரைக்காக கைது செய்யப்பட்டிருந்தார். ஆகையால் அவர் போலீஸ் காவலுடன் தான் பாரதியை வந்து காண முடிந்தது.பின்னர் அவருடன் இருந்தவர்கள்; பரலி சு. நெல்லையப்பர், நிலகண்ட பிரம்மச்சாரி (இவரை நான் பல ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்துப் பேசியுமுள்ளேன்) லக்ஷ்மண அய்யர் (உறவினர்) அங்கிருந்தனர். ஆந்திர கேசரி டி. பிரகாசத்தின் தம்பி டி, ஜானகிராம் என்ற ஹோமியோபதி டாக்டர் அழைத்து வரப் பட்டார். ஆனால் கோபத்தில் “எனக்கு உடம்பிற்கு ஒன்றுமில்லை” எனக்கூறி பார்தி அனுப்பிவிட்டார்.சகுந்தலா சொன்னது: “ ‘அன்று அப்பாவுக்கு மருந்து நீ கொடுத்தால் ஒருவேளை கோபிக்காமல் சாப்பிடுவார்’ என்று தாயார் கூற மருந்து என்று நினைத்து பார்லி வாட்டரை அவருக்குக் கொடுத்தேன். அதை ஒரு வாய் குடித்தார். ‘நீ கொடுத்தது மருந்து இல்லையம்மா கஞ்சி’ என்று சொல்லிக் கண்ணை மூடிவிட்டார். . . . தூங்கிவிட்டேன் போலும்”நீலகண்ட பிரம்மச்சாரி சொல்கிறார்: ”அமானுல்லவைப் பற்றி ஒரு வியாசம் எழுதி ஆபீஸுக்குக் கொண்டு போகவேண்டும்” இது தான் அவர் பேசிய கடைசி வார்த்தைகள்.காலமானது இரவு 1:30 1921 செப்டம்பர் 1921.This is confirmed by both Harihara Sarma and Nilakanta Brahmachari.மயானதுக்குச் சென்றவர்கள் துரைசாமி அய்யர், ஹரிஹர சர்மா, (பாரதி உறவினர்) சக்கரைச் செட்டியார் (கிறிஸ்தவராக் மாறிவிட்டவர்) யதிராஜ் சுரேந்திரநாத் ஆர்யா (கிறிஸ்துவப் பாதிரியார்) மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியார், எஸ் திருமலாச்சாரியார்., குவளைக் கிருஷ்ணமாச்சார்யார், - துரைசாமி அய்யர் செலவில் தான் கர்மங்கள் நடந்தன.மயானத்தில் கொள்ளியிடுவது யார் என்ற பிரச்சினை!நீலகண்ட பிரம்மசாரிக் கொள்ளியிட மறுத்துவிட்ட நிலையில் ஹரிஹர் சர்மாதான் கொள்ளியிட்டார்.பாரதி காலமானபோது அவர் வயது சரியாக 38 வருடஙகள் 9 மாதங்கள்!மேலே குறிப்பிட்டவை தான் சரியான விவரங்கள்.lot of incorrect news have been posted and repeated Ad Nauseam without checking!Narasiah
இத்தகைய தெளிவான தகவல்களை உங்களைப் போன்ற நேரடி தகவல் அறிந்தவர்கள் வழங்க வேண்டும்.பல வேளைகளில் தவறான செய்திகள் இணையத்தில் உலவ ஆரம்பித்து அதுவே உண்மை என்ற பார்வையை வாசிப்போருக்கு ஏற்படுத்தி விடுகின்றது.
சுபா
On Thursday, January 1, 2015 4:43:17 AM UTC-6, Suba.T. wrote:
இத்தகைய தெளிவான தகவல்களை உங்களைப் போன்ற நேரடி தகவல் அறிந்தவர்கள் வழங்க வேண்டும்.பல வேளைகளில் தவறான செய்திகள் இணையத்தில் உலவ ஆரம்பித்து அதுவே உண்மை என்ற பார்வையை வாசிப்போருக்கு ஏற்படுத்தி விடுகின்றது.
நரசையாவும் படித்தும், கேட்டும் அறிந்து எழுதுபவர்தான். பாரதியார் வாழ்ந்த காலத்தில் நம் நரசையா பிறக்கவில்லையே.
ய. மணிகண்டன் மீள்பிரசுரம் செய்த கோயில்யானை நாடகம் - பாரதி எழுதியது - நரசையா படிக்க வேண்டுகோள்.நா. கணேசன்சுபா
அ. ப். நாகநந்தி பொன்றோர். தவிர நீலகண்ட பிரம்மச்சாரியைச் சந்தித்தது ஒரு பெரும் வாய்ப்பு. சிட்டி அஅம்மீள் பதிவை படிக்கவேண்டும்.நரசய்யாவர்கள் பல பழைய புத்தகங்களைத் த்ந்திருக்கிறார். கணெசனார் சொவது போலஇப்படி படிக்கவும் தவறுக்கு வருந்துகிறேன்அ. ப். நாகநந்தி பொன்றோர். தவிர நீலகண்ட பிரம்மச்சாரியைச் சந்தித்தது ஒரு பெரும் வாய்ப்பு.சிட்டி அவர்கள் பல பழைய புத்தகங்களைத் த்ந்திருக்கிறார். கணெசனார் சொவது போல அம்மீள் பதிவை படிக்கவேண்டும்.நரசய்யா
இந்த ஆவணம் அசலா அல்லது இணையதள அல்வாவா என்பதை முதலில் அறியவேண்டும். பதிவேட்டில் இறப்புக்கான காரணம் எழுதப்பட்டிருந்தும் காப்புரிமை காரணமாக வெளியிடவில்லை என்ற குறிப்புள்ளதே. அந்த அடிப்படையில் தகவல் அறியும் உரிமையின்கீழ் இறப்புக்கான காரணம் என்ன எனபதை அறியலாமேரு.பூனை
