என் வாசிப்பில் இன்று - புத்தக விமர்சனம்

1065 views
Skip to first unread message

Suba

unread,
Feb 7, 2016, 4:43:17 PM2/7/16
to மின்தமிழ், Dr.Subashini
தமிழகச் சிற்பிகள் வரலாறு 
சுபா

தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் பயணிக்கும் போதும் என் மனதை வெகுவாகக் கவர்வது தமிழக கட்டுமானக் கலைகளும் சிற்பங்களும் கல்வெட்டுக்களும்  தான். 

ஒரு மண்டபத்தில் ஒரு சிறப்பென்றால் இன்னொரு மண்டபத்தில் மற்றொரு சிறப்பு. ஒரு கோயிலில் ஒரு பிரமாண்டம் என்றால் இன்னொரு கோயிலில் மற்றுமொரு பிரமாண்டம். ஒரு சிற்பம் ஒரு காரணத்திற்காக தனித்துவம் வாய்ந்ததாக விளங்குவது போல மற்றொரு சிற்பம் தனக்கேயுறிய மற்றொரு தனித்துவத்துவடன் விளங்குகின்றது. ஒரு சுவரோவியம் ஒரு தன்மையத்தது என வியக்கும் வேளை மற்றொன்று இன்னொரு வகையில் சிறப்பானதாக இருக்கின்றது.  ஒரு கல்வெட்டுப் பாறை இப்படியும் ஒரு வேலைப்பாடா என அதிசயிக்க வைக்கும் அதே வேளை இன்னொரு கல்வெட்டு வேறொரு வகையில் சிறப்புக்களோடு காட்சியளிக்கின்றது. இப்படி என் ஒவ்வொரு முறை தமிழகத்துக்கான வருகையின் தேடுதல்களின் போதும் என் தேடுதல்களுக்கு அலுப்பு கொடுக்கா அதே வேளை புதியனவற்றை நான் பார்த்து அறிந்து கொள்ளும் நிலைதான் ஏற்படுகின்றது. இது என் தேடுதலின் தன்மையை சுவாரசியமானதாகவும் ஆக்கியிருக்கின்றது. இப்படி காணக் காண அற்புதங்களாக இருக்கும் தமிழக நிலப்பரப்பின் சிற்பக்கலை, கட்டுமானக் கலையைப் பற்றி அதன் ஆரம்ப காலத் தோற்றம், படிப்படியான வளர்ச்சி, வரலாற்றுக்கு முக்கியமான சான்றுகளின் விபரங்கள் என்ற வகையில் விரிவான தகவல்களைத் தருகின்ற ஒரு நூலை அண்மையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பார்த்ததுமே அதனைப் பெற்றுக் கொண்டு வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தருகின்ற நூல்.

வரலாற்று ஆய்வாளர் திரு. நடன காசிநாதன் எழுதி வாஸ்து வேத ஆய்வு நிறுவனத்தின் வெளியீடாக  2006ம் ஆண்டு இதன் முதல் பதிப்பு   நூல் வெளிவந்திருக்கின்றது. இந்த நூல்  உருவாக ஊக்கம் தந்தவர் தமிழகத்தின் முக்கிய சிற்பியான டாக்டர்.வை.கணபதி ஸ்தபதி அவர்கள் தான் என நூலாசிரியர் தனது முகவுரையில் அதன் காரணங்களோடு விளக்குகின்றார்.

நூலின் முன்னுரையோடு ஸ்தபதிகள் ,சிற்பிகள் பற்றிய நீண்ட அறிமுக விளக்கத்தையும் டாக்டர்.வை.கணபதி ஸ்தபதி அவர்கள் இந்த நூலில் வழங்கியிருக்கின்றார்கள். தனது விளக்கத்தில் இக்காலத்தில் ஸ்தபதிகள் என்று குறிப்பிடப்படும் கட்டிடக் கலைஞர்களும் சிற்பக் கலைஞர்களும் பற்றிய மதிப்பு என்பது குறைந்து. கொத்தனாராகவும் கூலி வேலைசெய்பவராகவும் மதிக்கப்படும் நிலை இருக்கின்றது எறு குறிப்பிடுகின்றார். இதனை வாசிக்கும் போது, ஆங்கிலத்தில் ஆர்க்கிடெக்ட் என்று சொல்லும் போது ஏற்படும் தனி உயர் மதிப்பு தமிழில் கோயில் கட்டிடக் கலைஞர் என்றோ சிற்பி என்றோ ஏன் தமிழ் மக்கள் சிந்தனையில் தோன்றவில்லை என்பதை நாம் யோசிக்கவேண்டும் என்று தோன்றாமல் இல்லை.

நூலில் நூலாசிரியரின் நுண்ணுரை, டாக்டர்.வை.கணபதி ஸ்தபதி அவர்களின் முன்னுரை அகவுரைக்கு அடுத்தார் போல பதினெட்டு தலைப்புக்களில் தமிழகச் சிற்பிகளை பற்றி ஆராய்கின்றார் நூலாசிரியர். 
அவை
  1. குமரிக்கண்ட காலத்தில் சிற்பிகள்
  2. ஹரப்பன் நாகரிகக் காலத்தில் சிற்பிகள்
  3. வேத காலத்தில் சிற்பிகள்
  4. இதிகாச, புராணக் காலங்களில் சிற்பிகள்
  5. பண்டைத் தமிழ்க் கல்வெட்டுக் காலத்தில் சிற்பிகள்
  6. சங்க காலத்தில் சிற்பிகள்
  7. காப்பியக் காலத்தில் சிற்பிகள்
  8. பல்லவர் காலத்தில் சிற்பிகள்
  9. முதற்காலப் பாண்டியர் காலத்தில் சிற்பிகள்
  10. சோழர் காலத்தில் சிற்பிகள்
  11. பிற்காலப் பாண்டியர் காலத்தில் சிற்பிகள்
  12. சம்புவராயர் காலத்தில் சிற்பிகள்
  13. விசய நகர மன்னகள் காலத்தில் சிற்பிகள்
  14. நாயக்கர் காலத்தில் சிற்பிகள்
  15. மராத்தியர் காலத்தில் சிற்பிகள்
  16. பாளையக்காரர்கள் காலத்தில் சிற்பிகள்
  17. பிற்காலங்களில் சிற்பிகள்
  18. சிற்பங்களிலும் ஓவியங்களிலும் சிற்பிகள்
என்ற பதினெட்டு தலைப்புக்களாகத் தகவல்கள் விரிகின்றன.

இந்த நூலிற்குச் சிறப்பு சேர்க்கும் விசயங்களில் ஒன்றாக மயன் பற்றிய விளக்கங்களைக் காண்கின்றேன். 

கடல்கோளால் ஆட்கொள்ளப்பட்ட குமரிக்கண்டத்தில் பிறந்து  மயன் என்னும் ஆதி சிற்பியே தொழிற் கருவிகள், மட்கலங்கள், ஓவியங்கள்,கட்டிடங்கள் ஆகியனபற்றிய ஆரம்ப நிலை தொழில்னுட்பக் கூறுகளை தமிழ் மக்களுக்கு அறிமுகப் படுத்தியவராக இந்த நூலின் முதற் பகுதி விளக்குகின்றது. இதற்கு ஆதாரமாக வைசம்பாயனம் என்ற நூலை ஆதாரமாகச் சுட்டுவதுடன், இன்னூல் மயன் தான் அறிந்த தொழில் நுட்பங்களை நூல்களாக எழுதி குமரிக் கண்டத்தில் செயல்பட்ட முதல் சங்கத்தில் அரங்கேற்றினார் என்றும் அதில் மயன் சிற்பமாச் செந்நூல், ஓவியச் செந்நூல், மனநிலச் செந்நூல், நிலமனச் செந்நூல், விண்கலச் செந்நூல், நாட்டியச் செந்நூல், இசைக் கலைச் செந்நூல், மூலிகைச் செந்நூல், தமிழியற் செந்நூல், கணிதமாச் செந்நூல், கோட்டுருச் செந்நூல் என்ற பதினோரு நூல்களை இயற்றியது பற்றிய குறிப்பு உள்ளமையையும் சுட்டுகின்றார். இது இந்த வைசம்பாயணம் என்னும் இம்மூல நூலைத் தேடிப் பெற்று வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவதாக அமைகின்றது.

குமரிக்கண்ட மயனின் பெயரிலேயே பலர் இருந்திருக்கலாம் என்றும் அவர்களும் கட்டிடக் கலைகளில் தேர்ந்தவர்களாகவும் சிற்பக் கலை வல்லுனர்களாகவும் இருந்திருக்கலாம் என்பதை இலக்கிய இதிகாசச் சான்றுகள் சுட்டுவதையும் இந்த நூலில் காண முடிகின்றது. உதாரணமாக இன்றைக்கு ஏறக்குறைய கி.மு1000 - 700 வரை எனக் கணக்கிடப்படும் இராமயண மயன் பற்றிய குறிப்புக்கள் இருப்பதும் இங்கு குறிப்பிடப்படுகின்றது. மயனின் மகள் மண்டோதரி என்ற ஒரு குறிப்பும் அர்ஜூனனுக்கு மயன் கட்டிய அவை மண்டபம் பற்றியும் வருகின்ற குறிப்புக்களை அறிய முடிகின்றது. காப்பியக் காலத்தில் மணிமேகலை காப்பியத்தில் மணிமேகலை ஒரு மலர்வனத்திற்குச் சென்றபோது அங்கே மயன் பண்டைய காலத்தில்  தனது நூற்குறிப்பில் உள்ள கட்டுமான மரபினை ஒத்து கட்டப்பெற்ற பளிங்கு மண்டபத்தில் உதயகுமாரனுக்குப் பயந்து ஒளிந்து கொண்டமையை இளங்கோவடிகள் சுட்டுவதையும் அறிய முடிகின்றது. இதே போல சிலப்பதிகாரத்திலும்  மனையறம்படுத்த காதையில் மயன் உருவாக்கிய நெறிமுறையில் தயாரிக்கப்பட்ட கட்டிலில் கண்ணகியும் கோவலனும் படுத்துறங்கினர் என்ற குறிப்பும் வருவது மயன் என்ற ஆதித் தமிழ் கட்டுமான ஆசானைப் பற்றி மேலும் வலியுறுத்திச் சொல்வதாக அமைகின்றது .

கல்வெட்டுக்கலை என்பது மிக உயர்ந்த மிக நுணுக்கமான நெறிமுறைகளை பின்பற்ற வேண்டிய தேவைகளுடன் கூடிய ஒரு கலை. நமக்கு இன்று கிடைக்கின்ற நூல்களின் வழியாக சங்க கால கட்டுமானம் என்பது செங்கற்கட்டடங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை அறிகின்றோம். இன்றைக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே செங்கல் தயாரித்து அதனைக் கொண்டு கட்டிடங்களை எழுப்பிய தமிழர் தம் தொழில் நுட்பத் திறன் வியக்க வைக்கும் ஓன்றே என்பதில் சிறிதும் சந்தேகத்திற்கிடமேதுமில்லை.

நூலாசிரியர் இந்த நூலில் வழங்கியிருக்கும் மேலும் இரண்டு சிறப்பு விடயங்களாக அமைவது கல்வெட்டுக்கள் பற்றிய விளக்கங்களும் செப்பேட்டுகளைப் பற்றிய விரிவான தகவல்களும் என்று சொல்லலாம். பண்டைய தமிழ் எழுத்துக்களான பிராமி, வட்டெழுத்து அத்துடன் சமஸ்கிருத கிரந்த எழுத்துக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் பல உதாரணங்களாக நூலில் கையாளப்பட்டுள்ளன.  இச்செப்பேடுகள் தற்சமயம் இருக்கின்ற அருங்காட்சியகங்களைப் பற்றிய தகவல்கள் இவற்றை நேரில் பார்த்து ஆராய விரும்புவோருக்கு ஆரம்ப நிலைக் குறிப்புக்கள வழங்கும் தன்மையும் சிறப்புக்குறியது என்றே கருதுகின்றேன். 

எப்படி ஓலைச்சுவடிகள் என்றால் அவை சோதிடம் சார்ந்தவை என்ற எண்ணம் பரவலாகப்பல தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றதோ அதே போல கல்வெட்டுக்களும் செப்பேடுகளும்  என்றாலே அவை மன்னர்கள் வரலாற்று தகவல்களாக இருக்குமோ என்ற எண்ணம் பலருக்கும் இருப்பதுண்டு. கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் தமிழ் மக்களின் சமூகம் சார்ந்த விடயங்களை பதிவு செய்து வைத்த ஆதாரங்களாக அமைந்திருக்கின்றன என்பதை சில ஆதாரங்களின் வழி நூலாசிரியர் விவரிக்கின்றார். அதில் உதாரணமாக வரி பற்றிய விபரங்கள், ஒரு குடும்பத்தினர் தம்மை அடிமைகளாக விற்றுக் கொண்டதற்கான சான்று செப்பேடு, கொள்ளை நிகழ்வு ஒன்றைப் பற்றிய செய்தியைப் பதிந்த  செப்பேடு என்பன போன்றவற்றை குறிப்பிடலாம். இப்படி வித்தியாசமான செப்பேடுகள் விசய நகர மன்னர்கள் காலத்தில், நாயக்கர் காலத்தில், சம்புவராயர், மராத்தியர் காலங்களில் வெளியிடப்பட்ட குறிப்புக்கள் கல்வெட்டு செப்பேடு தயாரிப்பு பற்றிய தகவல் களஞ்சியமாக இந்த நூலின் தரத்தை உயர்த்துவதாக உள்ளது. 

இந்த நூலின் மிக முக்கிய அங்கமாக நான் காண்பது ஒவ்வொரு  அத்தியாயத்தின் பின்னும் கொடுக்கப்பட்டிருக்கும் துணை நூற் குறிப்புப் பட்டியல். இந்தப் பட்டியலில் உள்ள நூல்கள் ஆய்வு மாணவர்களுக்கும் வரலாற்றுத்தேடல் உள்ளோருக்கும் மிக உதவும் தன்மை கொண்டவை என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. 

​தச்சர்கள், பொற்கொல்லர்கள், சிற்பிகள், சித்திரக் கலைஞர்கள் ஆகியோர் தங்கள் திறத்தால் விட்டுச் சென்றவையே இன்றைய  தமிழர் தம் வரலாற்றுச்​சான்றுகளாக நம் கண் முன்னே திகழ்கின்றன. அழிந்து வரும் கலைகளில் ஒன்றாக இன்று சிற்பக்கலை தமிழகத்தில் சுட்டப்படுவது வேதனைக்குறிய ஒரு விடயம். பண்டைய தமிழர் கட்டுமானக் கலைகள் இக்கால சூழலில் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடமாக அறிமுகப்படுத்தப்படுமேயானால் அது இக்கலை அதன் சிறப்புத்தன்மை கெடாது அறிவியற் கூறுகளின் பெருமையோடு மேலும் மிளிர வாய்ப்பு ஏற்படும்.

விலை ரூ.350
பிரசுரிப்பாளர்: வாஸ்து வேத ஆய்வு நிறுவனம்

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Suba

unread,
Jun 5, 2016, 6:36:22 AM6/5/16
to மின்தமிழ், Dr.Subashini
நாயக்கர் காலம் - இலக்கியமும் வரலாறும் பேரா.அ.ராமசாமி எழுதிய நூல் இன்று வாசிக்க ஆரம்பித்தேன். முதல் அத்தியாயம் வாசித்து முடித்தேன். 

//வரலாற்றை எழுத உதவும் சான்றுகளை மறுபரிசீலனை செய்வதும், மரபு நிலையில் பயன்படுத்தும் சான்றுகள் போதாமல் போகின்ற நிலையில் புதிய சான்றுகளைத் தேடுவதும் தவிர்க்க முடியாதனவாகின்றன// இதனை முக்கியக் கருத்தாகக் காண்கின்றேன். ஆய்வுலகில் பலர் ஒரு முடிவைமுடிவென்று முடிவு கட்டிவிட்டு மறு பரிசீலைக்கு தயாராக மறுப்பவர்களாக இருப்பதை விவாதங்களில் பார்க்கும் போது, இத்தகைய வாசகங்கள் புத்துணர்ச்சி அளிக்கின்றன. 

இலக்கியச் சான்றுகள் வரலாற்று ஆய்விற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்ற குறிப்பும் எவ்வகைக் காரணங்களால் அவை பொதுவாக நம்பகத்த்மைக்கு சவாலாகின்றன என்பதும் எதனைக் கருத்தில் கொண்டால் இலக்கியங்களைப் பயன்படுத்தலாம் என்பதும் சிறப்பாக இங்கே சொல்லப்பட்டுள்ளன. 

புதிய இலக்கிய வகைகள் தோன்றுவதன் காரணம், பழைய இலக்கிய வடிவம் புதிய உள்ளடக்கத்தை ஏற்றலுக்கான காரணம் ஆகியவையும் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. 

தலபுராண இலக்கியங்கள் 16-18ம் நூற்றாண்டில் விரிவாகத் தோன்றியமையும் முக்கிய தலபுராண எழுத்தாளர் பட்டியலும் எனக்குப் பயனுள்ளதாக உள்ளது. தமிழ் மரபு அறக்கட்டளை தல புராண நூல்கள் மின்னூல் சேகரிப்பு என்ற திட்டத்தைத் தொடங்கி சில நூல்களை வலையேற்றியுள்ளோம். அந்த வகையில் இது ஆர்வமளிப்பதாக உள்ளது. 

முந்தைய இலக்கிய வடிவங்கள் நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் புதிய வடிவம் பெற்றமையும், உள்ளடக்கத்தில் சூழலுக்கேற்ற மாற்றம் பெற்றமையும் மிகச் சிறப்பாக இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளதாகக் கருதுகின்றேன். 

நூலுக்கு அமைந்திருக்கும்முன்னுரை மனதைக் கவர்ந்தது. அறிஞர் தி.சு.நடராசன் அவர்களின் எழுத்து நடையும் உட்பொருளும் மிக அருமை. 

வாசிப்பு தொடர்கின்றது... 

சுபா

Innamburan S.Soundararajan

unread,
Jun 5, 2016, 6:53:00 AM6/5/16
to mintamil, Dr.Subashini
//வரலாற்றை எழுத உதவும் சான்றுகளை மறுபரிசீலனை செய்வதும், மரபு நிலையில் பயன்படுத்தும் சான்றுகள் போதாமல் போகின்ற நிலையில் புதிய சான்றுகளைத் தேடுவதும் தவிர்க்க முடியாதனவாகின்றன// இதனை முக்கியக் கருத்தாகக் காண்கின்றேன். ஆய்வுலகில் பலர் ஒரு முடிவைமுடிவென்று முடிவு கட்டிவிட்டு மறு பரிசீலைக்கு தயாராக மறுப்பவர்களாக இருப்பதை விவாதங்களில் பார்க்கும் போது, இத்தகைய வாசகங்கள் புத்துணர்ச்சி அளிக்கின்றன. 

~ ஆமாம்!  ஆமாம்!  ஆமாம்!  ஆமாம்!  ஆமாம்!  ஆமாம்!  ஆமாம்!  லக்ஷம் தடவை சொல்லுங்கள்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

nkantan r

unread,
Jun 5, 2016, 8:37:04 AM6/5/16
to மின்தமிழ்
Do we really have the original content of the two books: vaisampayanam and aindhiram?, where??

rnkantan

Ps: vaisampayana was the legendary disciple of vyasa who heard/listened to jaya 8800 verses and expanded it to 24000 stanzas of (mahaabharat) . people who recite vishnu sahashranaam and do yajur ved rites would hv come across vaisampaayana..

Suba

unread,
Jun 5, 2016, 4:43:11 PM6/5/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-06-05 12:36 GMT+02:00 Suba <ksuba...@gmail.com>:
நாயக்கர் காலம் - இலக்கியமும் வரலாறும் பேரா.அ.ராமசாமி எழுதிய நூல் இன்று வாசிக்க ஆரம்பித்தேன். முதல் அத்தியாயம் வாசித்து முடித்தேன். 

//வரலாற்றை எழுத உதவும் சான்றுகளை மறுபரிசீலனை செய்வதும், மரபு நிலையில் பயன்படுத்தும் சான்றுகள் போதாமல் போகின்ற நிலையில் புதிய சான்றுகளைத் தேடுவதும் தவிர்க்க முடியாதனவாகின்றன// இதனை முக்கியக் கருத்தாகக் காண்கின்றேன். ஆய்வுலகில் பலர் ஒரு முடிவைமுடிவென்று முடிவு கட்டிவிட்டு மறு பரிசீலைக்கு தயாராக மறுப்பவர்களாக இருப்பதை விவாதங்களில் பார்க்கும் போது, இத்தகைய வாசகங்கள் புத்துணர்ச்சி அளிக்கின்றன. 

இலக்கியச் சான்றுகள் வரலாற்று ஆய்விற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்ற குறிப்பும் எவ்வகைக் காரணங்களால் அவை பொதுவாக நம்பகத்த்மைக்கு சவாலாகின்றன என்பதும் எதனைக் கருத்தில் கொண்டால் இலக்கியங்களைப் பயன்படுத்தலாம் என்பதும் சிறப்பாக இங்கே சொல்லப்பட்டுள்ளன. 

புதிய இலக்கிய வகைகள் தோன்றுவதன் காரணம், பழைய இலக்கிய வடிவம் புதிய உள்ளடக்கத்தை ஏற்றலுக்கான காரணம் ஆகியவையும் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. 

தலபுராண இலக்கியங்கள் 16-18ம் நூற்றாண்டில் விரிவாகத் தோன்றியமையும் முக்கிய தலபுராண எழுத்தாளர் பட்டியலும் எனக்குப் பயனுள்ளதாக உள்ளது. தமிழ் மரபு அறக்கட்டளை தல புராண நூல்கள் மின்னூல் சேகரிப்பு என்ற திட்டத்தைத் தொடங்கி சில நூல்களை வலையேற்றியுள்ளோம். அந்த வகையில் இது ஆர்வமளிப்பதாக உள்ளது. 

முந்தைய இலக்கிய வடிவங்கள் நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் புதிய வடிவம் பெற்றமையும், உள்ளடக்கத்தில் சூழலுக்கேற்ற மாற்றம் பெற்றமையும் மிகச் சிறப்பாக இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளதாகக் கருதுகின்றேன். 

நூலுக்கு அமைந்திருக்கும்முன்னுரை மனதைக் கவர்ந்தது. அறிஞர் தி.சு.நடராசன் அவர்களின் எழுத்து நடையும் உட்பொருளும் மிக அருமை. 

வாசிப்பு தொடர்கின்றது... 

சுபா

நாயக்கர் காலம் - இலக்கியமும் வரலாறும் பேரா.அ.ராமசாமி எழுதிய நூல் இன்று வாசிக்க ஆரம்பித்தேன். இரண்டாம் அத்தியாயம் இன்று மாலை வாசித்தேன்.

இந்த அத்தியாயம் நாயக்கர் காலத்தில் பொருளாதார நிலை, நில உரிமை, வேளாண்மை நிலை, வரவு பங்கீடு முறை என்பன பற்றிய தகவல்களைக் கொண்டதாக இருக்கின்றது. நாயக்கர் கால ஆட்சியில் பொருளாதாரம் தொடர்பான மிக விரிவான ஆய்வாக இந்தப் பகுதி அமைந்திருக்கின்றது.

நில உரிமை எனும் போது அதில் அரசன், பாளையக்காரன், மானியதாரர்கள், பின் உழவர்கள் என இவர்களுக்கும் நிலத்திற்கும் உள்ள உறவு பற்றிய சான்றுகள் சார்ந்த ஆய்வாக அமைந்திருக்கின்றது.

பண்ணை முறை எனும் பகுதி, ஒரு பண்ணையில் தொடர்புடையோராக உள்ளவர்களைப் பட்டியலிட்டு பின் அதில் அவர்களுக்குரிய செயல்பாடுகளையும் உரிமைகளையும் நன்கு விவரிக்கும் பகுதியாகவும் இருக்கின்றது. நில உரிமையாளன், பண்ணை விசாரிப்பான், கணக்குப்பிள்ளை, உழவர்கள் என்ற நான்கு பிரிவுகளுக்குமான செயலாடுகள் இதில் சொல்லப்படுகின்றன.

நிலத்தில் செய்யப்படும் விவசாயத்திலிருந்து வரும் வருவாய் பகிர்ந்து கொடுக்கப்பட்ட அளவு பற்றிய விபரங்கள் சொல்லப்படுகின்றன. பண்ணையாரைச் சார்ந்த உழவர்கள் பற்றிய விவரணை உள்ள பகுதியில் கொத்தடிமை முறை பற்றியும் சில குறிப்புக்கள் வருகின்றன. இணைக்கப்பட்டுள்ள அட்டவணைகள் வருமானம் எவ்வாறு பிரிக்கப்பட்டது என்பதற்குச் சான்றாகவும் அமைகின்றன.

வயலில் விவசாயம் செய்யப்படும் முறை பற்றி விளக்கும் பகுதி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. காரணம் இப்பகுதியில் படிப்படியாக நிலம் தயார் செய்யப்படும் விதம், அவற்றை விவரிக்கும் சொற்கள் பற்றிய குறிப்புக்கள், கருவிகள் என்பன படிப்படியாக விளக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக வருகின்ற நீர்ப்பாசனம் அதன் உரிமை ஆகிய விளக்கங்களும் அரசின் கட்டுப்பாட்டில் நீர்ப்பாசன மேலாண்மை இருந்தது என்பதை விளக்குகின்றது.

பள்ளு இலக்கியங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை இப்பகுதி எனக்கு ஏற்படுத்தியுள்ளது.

வாசிப்பு தொடரும்..

சுபா

K R A Narasiah

unread,
Jun 7, 2016, 12:09:03 AM6/7/16
to mintamil
நாயக்கர் காலத்தில் தான் எங்கள் குடும்பம் புலம் பெயர்ந்து மதுரை வந்தது. நாங்க்கள் ஆறு வேலு நிய்யோகிகள் என்றறியப்பட்டவர்கள். தெலுங்கு பிராமமண சமுதாய்த்தின் most secular sect was Neogi sec.
மேலாண்மைக்காக வந்த எங்கள் மூதாதைய்ரின் சிலைகள் இன்றும் திருப்பரங்குன்றத்திலிலும் மதுரையிலுமுள்ள கோவில்களில் உள்ளன. அவை முறையே  நரசப்பா, முதுக்கிருஷ்ணைய்யா சிற்பங்களாகும்.
அ. கி. பரந்தாமனாரின் நாயக்கர் காலம் பற்றிய நூல் சிறப்பானது.

நரசய்யா

On Mon, Jun 6, 2016 at 2:13 AM, Suba <ksuba...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (ksuba...@gmail.com) Add cleanup rule | More info

2016-06-05 12:36 GMT+02:00 Suba <ksuba...@gmail.com>:
நாயக்கர் காலம் - இலக்கியமும் வரலாறும் பேரா.அ.ராமசாமி எழுதிய நூல் இன்று வாசிக்க ஆரம்பித்தேன். முதல் அத்தியாயம் வாசித்து முடித்தேன். 

//வரலாற்றை எழுத உதவும் சான்றுகளை மறுபரிசீலனை செய்வதும், மரபு நிலையில் பயன்படுத்தும் சான்றுகள் போதாமல் போகின்ற நிலையில் புதிய சான்றுகளைத் தேடுவதும் தவிர்க்க முடியாதனவாகின்றன// இதனை முக்கியக் கருத்தாகக் காண்கின்றேன். ஆய்வுலகில் பலர் ஒரு முடிவைமுடிவென்று முடிவு கட்டிவிட்டு மறு பரிசீலைக்கு தயாராக மறுப்பவர்களாக இருப்பதை விவாதங்களில் பார்க்கும் போது, இத்தகைய வாசகங்கள் புத்துணர்ச்சி அளிக்கின்றன. 

இலக்கியச் சான்றுகள் வரலாற்று ஆய்விற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்ற குறிப்பும் எவ்வகைக் காரணங்களால் அவை பொதுவாக நம்பகத்த்மைக்கு சவாலாகின்றன என்பதும் எதனைக் கருத்தில் கொண்டால் இலக்கியங்களைப் பயன்படுத்தலாம் என்பதும் சிறப்பாக இங்கே சொல்லப்பட்டுள்ளன. 

புதிய இலக்கிய வகைகள் தோன்றுவதன் காரணம், பழைய இலக்கிய வடிவம் புதிய உள்ளடக்கத்தை ஏற்றலுக்கான காரணம் ஆகியவையும் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. 

தலபுராண இலக்கியங்கள் 16-18ம் நூற்றாண்டில் விரிவாகத் தோன்றியமையும் முக்கிய தலபுராண எழுத்தாளர் பட்டியலும் எனக்குப் பயனுள்ளதாக உள்ளது. தமிழ் மரபு அறக்கட்டளை தல புராண நூல்கள் மின்னூல் சேகரிப்பு என்ற திட்டத்தைத் தொடங்கி சில நூல்களை வலையேற்றியுள்ளோம். அந்த வகையில் இது ஆர்வமளிப்பதாக உள்ளது. 

முந்தைய இலக்கிய வடிவங்கள் நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் புதிய வடிவம் பெற்றமையும், உள்ளடக்கத்தில் சூழலுக்கேற்ற மாற்றம் பெற்றமையும் மிகச் சிறப்பாக இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளதாகக் கருதுகின்றேன். 

நூலுக்கு அமைந்திருக்கும்முன்னுரை மனதைக் கவர்ந்தது. அறிஞர் தி.சு.நடராசன் அவர்களின் எழுத்து நடையும் உட்பொருளும் மிக அருமை. 

வாசிப்பு தொடர்கின்றது... 

சுபா

நாயக்கர் காலம் - இலக்கியமும் வரலாறும் பேரா.அ.ராமசாமி எழுதிய நூல் இன்று வாசிக்க ஆரம்பித்தேன். இரண்டாம் அத்தியாயம் இன்று மாலை வாசித்தேன்.

இந்த அத்தியாயம் நாயக்கர் காலத்தில் பொருளாதார நிலை, நில உரிமை, வேளாண்மை நிலை, வரவு பங்கீடு முறை என்பன பற்றிய தகவல்களைக் கொண்டதாக இருக்கின்றது. நாயக்கர் கால ஆட்சியில் பொருளாதாரம் தொடர்பான மிக விரிவான ஆய்வாக இந்தப் பகுதி அமைந்திருக்கின்றது.

நில உரிமை எனும் போது அதில் அரசன், பாளையக்காரன், மானியதாரர்கள், பின் உழவர்கள் என இவர்களுக்கும் நிலத்திற்கும் உள்ள உறவு பற்றிய சான்றுகள் சார்ந்த ஆய்வாக அமைந்திருக்கின்றது.

பண்ணை முறை எனும் பகுதி, ஒரு பண்ணையில் தொடர்புடையோராக உள்ளவர்களைப் பட்டியலிட்டு பின் அதில் அவர்களுக்குரிய செயல்பாடுகளையும் உரிமைகளையும் நன்கு விவரிக்கும் பகுதியாகவும் இருக்கின்றது. நில உரிமையாளன், பண்ணை விசாரிப்பான், கணக்குப்பிள்ளை, உழவர்கள் என்ற நான்கு பிரிவுகளுக்குமான செயலாடுகள் இதில் சொல்லப்படுகின்றன.

நிலத்தில் செய்யப்படும் விவசாயத்திலிருந்து வரும் வருவாய் பகிர்ந்து கொடுக்கப்பட்ட அளவு பற்றிய விபரங்கள் சொல்லப்படுகின்றன. பண்ணையாரைச் சார்ந்த உழவர்கள் பற்றிய விவரணை உள்ள பகுதியில் கொத்தடிமை முறை பற்றியும் சில குறிப்புக்கள் வருகின்றன. இணைக்கப்பட்டுள்ள அட்டவணைகள் வருமானம் எவ்வாறு பிரிக்கப்பட்டது என்பதற்குச் சான்றாகவும் அமைகின்றன.

வயலில் விவசாயம் செய்யப்படும் முறை பற்றி விளக்கும் பகுதி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. காரணம் இப்பகுதியில் படிப்படியாக நிலம் தயார் செய்யப்படும் விதம், அவற்றை விவரிக்கும் சொற்கள் பற்றிய குறிப்புக்கள், கருவிகள் என்பன படிப்படியாக விளக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக வருகின்ற நீர்ப்பாசனம் அதன் உரிமை ஆகிய விளக்கங்களும் அரசின் கட்டுப்பாட்டில் நீர்ப்பாசன மேலாண்மை இருந்தது என்பதை விளக்குகின்றது.

பள்ளு இலக்கியங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை இப்பகுதி எனக்கு ஏற்படுத்தியுள்ளது.

வாசிப்பு தொடரும்..

சுபா

Suba

unread,
Jun 10, 2016, 4:25:44 PM6/10/16
to மின்தமிழ், Dr.Subashini
நாயக்கர் காலம் - இலக்கியமும் வரலாறும் பேரா.அ.ராமசாமி எழுதிய நூல் இடையில் சில நாட்கள் அலுவலகப் பணிகள்வந்ததில் தடை ஏற்பட்டிருந்தது. சிறு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் வாசிக்கத் தொடங்கி மூன்றாம் அத்தியாயம் இன்று மாலை முடித்தேன்.

மூன்றாம் அத்தியாயம் அரசும் நிர்வாகமும் என்ற தலைப்பில் அமைந்தது. நாயக்க மன்னர்களின் ஆட்சியின் போது தமிழகத்தில் இருந்த ஆட்சி முறை மத்திய அமைப்பு முறையில் அடங்கும் அரசன் அமைச்சர்கள் குழு பற்றிய விளக்கம் பின்னர் அப்த அமைப்பில் உள்ள உள் நிர்வாக அமைப்பு, அதில் பாளையக்காரர்களின் பங்கு என்ற வகையில் தொடங்குகின்றது. பாளையக்காரர்கள் என்ற பெயர் பலருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் பார்த்ததன் விளைவாக ஞாபகம் இருக்கலாம். இந்தப் பாளையக்கார முறையை அறிமுகப்படுத்தியது மதுரை நாயக்கரான விசுவநாத நாயக்கர் என்றும் அதற்குத் துணையாய் பின்புலத்தில் இருந்து செயலாற்றியவர் தளவாய் அரியநாத முதலி என்பதையும் இப்பகுதி விளக்குவதோடு திருமலை நாயக்கரின் தளவாய் ராமய்யன் பற்றியும் அறிந்து கொள்ளும் வகையில் இதனைச் சான்று பகரும் இலக்கியங்களையும் குறிப்பிடுகின்றது. நாயக்க மன்னர்களின் நம்பிக்கைக்குரிய பாளையக்காரர்களாக தம்மிடம் ஆந்திராவிலிருந்து வந்த தெலுங்கு ராணுவ அதிகாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்தாலும் பாளையக்காரர்கள் பட்டியலில் தமிழகத்தில் அப்போது செல்வாக்குடன் விளங்கிய சாதிக் குழுத்தலைவர்களில் மன்றாடியார்கள், கவுண்டர்கள், வேளாளர்கள், மறவர்களையும், இஸ்லாமிய சமூகத்தோரில் சிலரையும் பாளையக்காரர்களாக ஆக்கியுள்ளார் என அறிய முடிகின்றது. நாம் நன்கறிந்த வீரபாண்டிய கட்டபொம்மனும் எட்டயபுர ஜமீன்தாரும் அவ்வகையில் தெலுங்கு பாளையக்காரர்கள் வரிசையில் அடங்குகின்றனர். இந்தப் பகுதியில் பாளையக்காரர்கள் செய்த பணிகளை விளக்கும் சான்றுகளாக நூலாசிரியர் கொடுத்திருக்கும் இலக்கியச் சான்றுகளில் பல நான் இதுவரை கேள்விப்படாதவரி. உதாரணமாக சங்கரலிங்க உலா, சந்திரகலாமஞ்சரி, திருமலை முருகன் பள்ளு, மான்விடுதூது, பட்பிரபந்தம், நாணிக் கண்புதைத்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். நாயக்க மன்னர் அரசவையில் இருந்த முக்கியப் பணிகளான தளவாய், பிரதானி, ராயசம் ஆகிய பணிகளை விளக்குவதோடு ஆயங்கார முறை பற்றிய விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. வரி வசூலிப்பை மையமாகக் கொண்டிருந்த நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கிராம சமுதாயத்தின் சீர்குலைவுகள் தொடங்கிவிட்டன. பிரிட்டிஷ் காலணித்துவ ஆட்சியில் இது மேலும் சீர்குலைந்தது என்னும் ஆசிரியரின் கருத்து நாயக்க மன்னர் காலத்தில் குறிப்பிடத்தக்கச் சமூக மாற்றம் நிகழ்ந்ததை வெளிப்படுத்தும் முக்கியக் கருத்தாகக் கருதுகின்றேன். நிதி நிர்வாகம் பற்றியும், அரசுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றியும் சொல்லும் பகுதியில் ஒரு நல்ல அரசன் எப்படி இருக்க வேண்டும் என அக்காலகட்டத்து இலக்கியம் எழுதிய புலவர்கள் தங்கள் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளமையையும், அரசு அதிகாரிகளின் நேர்மையற்ற போக்கையும் தாசி வீட்டுக்குச் செல்லும் பழக்கத்தையும் கூறும் சான்றுகளாக இருக்கின்றன. நாயக்க மன்னர் ஆட்சியில் தமிழக நிலப்பரப்பில் பெருமளவிலான சமுதாய மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதுவும் அதன் நீட்சியே இன்று நாம் காணும் சிதைவுற்ற தமிழ்ச் சமுதாயச் சிந்தனைப்போக்கும் என்பதையும் உணர்கின்றேன். மிக விரிவான பல தகவல்களைச் சொல்லும் ஒரு அத்தியாயம் இது. ஆசிரியர் மிக அதிக இலக்கியச் சான்றுகளை வாசித்து இப்பகுதியை நிறைவு செய்திருக்கின்றார் எனப் புரிகின்றது.

சுபா

aravindan.neelakandan

unread,
Jun 10, 2016, 5:48:28 PM6/10/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
சுபா, 

சு.கி.ஜெயகரன் அவர்களின் குமரி நில நீட்சி நூல் குறித்த தங்கள் பார்வை என்ன?

Suba

unread,
Jun 10, 2016, 5:53:23 PM6/10/16
to aravindan.neelakandan, மின்தமிழ், Dr.Subashini
2016-06-10 23:48 GMT+02:00 aravindan.neelakandan <aravindan....@gmail.com>:
சுபா, 

சு.கி.ஜெயகரன் அவர்களின் குமரி நில நீட்சி நூல் குறித்த தங்கள் பார்வை என்ன?

​இந்த நூல் என்னிடம் இல்லையே.

நீங்களும் இந்த இழையில் நீங்கள் வாசித்த நூல் பற்றி எழுதலாம்.

சுபா

aravindan.neelakandan

unread,
Jun 10, 2016, 6:59:28 PM6/10/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
பழந்தமிழ் காவியமான சிலப்பதிகாரம் 'குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள' எனக் கூறுகிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் குமரிமலை குறித்தும், அதிலிருந்து தோன்றிய பஃறுளியாறு குறித்தும், குமரி ஆறு குறித்தும் செய்திகள் உள்ளன. இச்செய்திகள் எத்தனை உண்மையானவை? பல தமிழ் அறிஞர்கள் 'குமரிக்கண்டம்' என்று ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்ததாகவும் அங்கு தமிழ் நாகரிகம் ஒரு உயர்ந்த நிலையை அடைந்திருந்ததாகவும் கூறுகின்றனர். பிரம்மஞான சபையினர் 'லெமூரியா' எனகடலில் ஆழ்ந்து போன ஒரு நிலப்பரப்பு குறித்த நம்பிக்கை கொண்டிருந்தனர். இவர்கள் மூலம், இந்தியாவில் பரவிய லெமூரியாக் கோட்பாடும் குமரிக்கண்டமும் இணைந்த ஒரு சித்தாந்தமாகிற்று. புலவர் குழந்தை, அப்பாதுரை, இரா.மதிவாணன் போன்றவர்கள் குமரிக்கண்ட வரைபடங்களை உருவாக்கினர். இந்த பின்புலத்தில்தான் நிலவியல் ஆய்வாளரான சு.கி.ஜெயகரன் அவர்களின் 'குமரி நிலநீட்சி' எனும் நூலை காண வேண்டும். அவர் இக்கற்பனைகள் 'கவித்துவ சுதந்திரத்துடன்' அதீத தமிழ் பற்றினால் உருவாக்கப்பட்டவையென்பதுடன் இவற்றிற்கு அறிவியல் அடிப்படை எதுவும் இல்லையெனவும் காட்டுகிறார். எனில் கடல் கொண்ட குமரிக் கோடு என்பது வெறும் கற்பனைதானா? நிலவியல், ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி, இலக்கிய ஆதாரங்கள் மற்றும் தொல்மானுடவியல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு யதார்த்த நிலைப்பாட்டினைத் தன் முடிவாகத் தருகிறார் ஜெயகரன். வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தில் தமிழகம்-இலங்கை கடற்கரைகளை ஒட்டியிருந்து பின்னர் கடலில் மூழ்கிய நிலப்பரப்புகளே குமரி எனும் நிலநீட்சி குறித்த மரபின் வித்தாகும் எனக்கருதும் ஜெயகரன் அவ்வாறு கடல் நீர்மட்ட உயர்வில் உயிர்தப்பியவர்களிடமிருந்து குமரி நிலநீட்சி குறித்த நினைவு இன்றும் நம்மிடம் நிலவுவதாகக் கூறுகிறார். குமரி மாவட்டத்தில் கடற்கரையோர கிராமங்களான முட்டம் போன்ற இடங்களில் அண்மைக்கால நினைவுகளில் கூட கடல் கொண்ட நிலப்பரப்பு குறித்த விவரணைகள் நிலவுகின்றன. நிச்சயமாக எனில் தொல்பழம் மானுடக்குடியேற்ற எச்சங்கள் இன்றும் தென்னக ஆழ்கடலில் - நாம் கண்டடையக் காத்தபடி - துயில் கொண்டிருக்கக் கூடுமா? இனிவரும் நாட்களில் தென்னகக் கடல்களில் ஆழ்கடல் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டால் அது இம்மர்மங்களுக்கு விடை பகரக் கூடும்.

Suba

unread,
Jun 11, 2016, 6:05:16 AM6/11/16
to மின்தமிழ், Dr.Subashini
நாயக்கர் காலம் - இலக்கியமும் வரலாறும் - பேரா.அ.ராமசாமி 
4ம் அத்தியாயத்தை இன்று காலையே வாசிக்கத் தொடங்கி விட்டேன். 

இந்த அத்தியாயம் எனக்கு ஆர்வம் உள்ள ஒரு பகுதி. அதனால் அடுத்த வரி எதைச் எதைச் சொல்கின்றது என என் கண்களும் கவனமும் நூலிலேயே ஆழ்ந்து விட்டன. இந்தப் பகுதி நாயக்கர் கால ஆட்சியில் தமிழகத்தில் இருந்த சமய நிலையைக் குறிக்கின்றது. 

இந்த அத்தியாயம் முழுதும் ஏராளமான விசயங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. எதனைக் குறிப்பிட்டுச் சொல்வது தகும் எனத் தெரியவில்லை என்ற போதிலும் அதி முக்கியமாக நான் கருதும் விசயங்களை மட்டும் இந்தப் பதிவில் குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். 

பொதுவாகவே ஒரு நூலை வாசிக்கும் போது அதில் முக்கிய பகுதிகளை கோடிட்டுச் சிறு குறிப்பு என எழுதி வைப்பது என் பழக்கம். என் நூல்கள் எல்லாம் இந்தச் சிரமத்தை அனுபவிப்பவை தான். அந்த வகையில் இந்த நூலிலும் என் கைவண்ணக் கோலங்கள் அதிகமாகவே உள்ளன.. தவிர்க்க முடியவில்லை! 

இந்த அத்தியாயத்தின் ஆரம்பம், அதிலும் 2ம் பத்தி நல்ல தொடக்கம். சமயவாதிகள் எப்படி தம் சமயத்தை முன்னெடுக்கின்றனர் என்பதை விவரிப்பதாக இது அமைந்துள்ளது. தொழில் அடிப்படையில் வர்த்தகத்துறை அறிவும் எனக்கு இருப்பதனால், சமயங்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் புகழை நிலை நிறுத்தவும், விரிவாக்கவும் செய்யும் முயற்சிகளின் பின்னனியில் இருக்கும் ஒற்றுமை இப்பகுதியை வாசிக்கும் போது மனதில் எழாமல் இல்லை! 

நாயக்கர் காலத்தில் இந்து சமயம், அதில் சைவ வைண வேறுபாடு, பொதுவாகவே நாயக்க மன்னர்களின் வைணவச் சார்பு நிலையும் சைவ சமயத்தோரின் இது தொடர்பான மனச்சங்கடங்கள் போன்றன நன்கு குறிப்பிடப்படுகின்றன. 

தமிழகத்தில் பிற்காலச் சோழர்கள் வலுவிழந்த பின்னர், பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த தமிழகத்தில், அவர்களது குழுச்சண்டைகளால் பிரிந்து வலுவிழந்து, வட நாட்டு இஸ்லாமியர் வருகையும், சம்புவராயர் ஆட்சியும் இடைப்பட்ட காலத்தில் ஒரு தேக்க நிலையை தமிழகத்தில் ஏற்படுத்தியிருந்தது. வட நாட்டு இஸ்லாமியர் வருகை இந்து சமய கோயில்களின் வளர்ச்சியைப் பாதித்திருந்தன. தமிழகத்தில் இந்து சமய மறுமலர்ச்சியை முன்வைத்து ஆட்சியை பிடித்துக் கொண்ட நாயக்கர்கள் தமிழகத்தில் இந்து சமய வளர்ச்சி தொடர துணையிருந்தனர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. விசயநகர மன்னன் குமாரசேனனின் மனைவியின் மதுராவிஜயம் நூல் பற்றி நான் அறிந்திருந்தாலும் இதுவரை அக்காப்பியத்தை வாசித்ததில்லை. அதனைப் பற்றிய குறிப்பை இந்த நூலில் பார்த்தபோது வாசிக்க வேண்டிய நூற்கள் பட்டியலில் இணைத்துக் கொண்டேன். 

நாயக்கர்கள் பரம வைணவர்களாக இருந்த போதிலும் சைவ சமயம் சார்ந்த கோயில்களுக்கு அவர்கள் கொடையளித்து வளர்த்தனர் என்பதை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணி செய்திகள் வழியும் அறிய முடிகின்றது. 

நாயக்கர்கள் சைவ, வைணவ, சமயங்களோடு இஸ்லாம் மதத்தையும், கிறிஸ்துவ மதத்தையும் பின்பற்றுவோரையும் ஆதரித்தனர் என்பதையும் சான்றுகளோடு இப்பகுதியில் காண முடிகின்றது. அதிலும் இஸ்லாமிய பாளைக்காரர்கள் சிலரும் நாயக்கர் ஆட்சியில் இருந்தார்கள் என்பது தக்க ஆதாரமாகவும் அமைகின்றது. 

ஆனால் சமணம் பற்றி ஒரு குறிப்பையும் இந்த அத்தியாயத்தில் காணவில்லை. ஏன் என்ற கேள்வி எழுகின்றது. 9ம் நூற்றாண்டில் மீண்டும் அச்சணந்தி முனிவரின் முயற்சிகளால் சமணம் மதுரை தொண்டைமண்டலம் போன்ற பகுதிகளில் பரவின, செழித்தன. இந்தச் சமண சமயத்தின் நிலை நாயக்கர் காலத்தில் என்னவாயிற்று என ஒரு சிறு குறிப்பும் இந்த அத்தியாயத்தில் இல்லாத நிலை எனக்குக் கேள்வியை எழுப்புகின்றது. ஆசிரியர் இதனைத் தவிர்த்து விட்டாரா அல்லது சான்றுக்கு பயன்படுத்திய எந்த இலக்கியமும் சமணத்தைப் பற்றி பேசவில்லையா என்ற ஐயத்தை இது எழுப்புகின்றது. 

நூலின் இந்த அத்தியாயத்தின் மிக முக்கியமாக நான் கருதுவது 2 விசயங்கள். 

முதலாவது, சைவமும் வைணவமும் தனித் தனி சமயங்களாக ஒன்றுக்கு ஒன்று யார் உயர்வு? எந்த மதம் பெரிது? என அவர்களுக்குள் வாதிட்டுக் கொண்டிருந்த கருத்தியலில் முரண்பட்ட நிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டு, இலக்கியங்கள் இந்த இரண்டு மதங்களுக்குள் சமரசத்தை உருவாக்கும் வகையிலான போக்கை கடைபிடித்துள்ளமையை பல எடுத்துக் காட்டுக்களுடன் ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது. அதே போல மக்கள் சமயமாக எளிய மக்களின் நாட்டார் வழிபாட்டியலில் அங்கம் பெற்றிருந்த குலதெய்வம், குடும்ப தெய்வம் போன்றவை, இலக்கியங்களால் இந்து சமயம் என்ற ஒரு பெரிய குடைக்குள் அரவணைக்கப்பட்ட வகையிலான முயற்சிகள் பற்றிய விரிவான குறிப்புக்கள் மிக அருமையாக உள்ளன. 

வைதீகச்சமயக் கடவுளர்களை அடித்தட்டு மக்களுக்கும் உரிமையாக்கி அவர்கள் வழிபடும் தெய்வத்தில் இணைக்கும் போக்கினை பள்ளு நூற்களும் குறவஞ்சி நூற்களும் கையாண்டது அடித்தட்டு மக்களின் சிந்தனையில் மிக ஆழமான மாற்றத்தை உருவாகி வெற்றி கண்டது என்பதை இன்றைய கால நிலை உறுதிப் படுத்துகின்றது. இது ஒரு வகை சமய உத்திதான். ஆயினும் சைவம், வைணம் எனத் தனித்தனியாக நின்று போராடிக்கொண்டிருப்பதை விட குழுவாக இந்து சமயம் என்ற ஒரு மாபெரும் வட்டத்திற்குள் அனைத்தையும் சேர்த்து அதில் நாட்டார் கடவுளர்களையும் இணைத்துக் கொண்டு செல்லும் போது இந்து சமயம் ஏனைய புற சமயங்களின் தாக்கங்களிலிருந்து தம்மை பலப்படுத்திக் கொள்ள இது வழிவகுக்கின்றது என்பது வரலாறு காட்டும் உண்மை. 

இரண்டாவது முக்கியக் கருத்தாக நான் இந்த அத்தியாயத்தில் காண்பது, ஐரோப்பியர் வசம் தமிழகம் படிப்படியாக மாறியமையும் கிறிஸ்துவ சமயத்தின் வளர்ச்சியும் பற்றிய குறிப்புக்கள். இந்து சமயத்தின் அடித்தளமான சாதிய அமைப்பின் மீது தனது கவனத்தைச் செலுத்தி எல்லா மக்களுக்கும் கல்வி, பாதுகாப்பு என்ற வகையில் தனது சமயத்தைக் கொண்டு சென்று வெற்றியும் கண்டது கிறிஸ்துவ சமயம். இதன் அடிப்படையில் நெடுங்காலமாக அடிமை நிலையிலிருந்து பள்ளர், பறையர், சாணார் ஆகிய சமூகத்து தமிழ் நில மக்கள் இந்த மாற்று சமயத்துக்குப் பெருமளவில் மாறத்தொடங்கிய நிகழ்வைச் சான்றுகளுடன் ஆசிரியர் குறிப்பிடுவதும் மிக நன்றாகத் தமிழக நிலப்பரப்பில் நிகழ்ந்த வரலாற்று மாற்றத்தை வாசிப்போர் புரிந்து கொள்ள உதவுகின்றது. தூத்துக்குடியில் பரதவ இனத்து மக்களின் மதமாற்றமும் இதே வகைதான் என்பது என் நினைவிற்கு வந்தது. 

அடிப்படையில் எனது தனிப்பட்ட ஆய்வுகள் ஐரோப்பிய லூத்தரன், கத்தோலிக்க பாதிரிமார்களின் தமிழ் ஈடுபாடு பற்றியது என்பதால் இந்தப் பகுதியை வாசிக்கும் போது மிகச்சரியாக வரலாற்றுத் தகவல்கள் வழங்கப்பட்டிருப்பது எனது ஆய்வுகளுக்கும் கூடுதல் பலம் சேர்ப்பதாகக் காண்கின்றேன். 

இந்தப் பகுதியில் அடித்தட்டு சமூகத்தில் பள்ளர் சமூக தமிழ் மக்களின் வேளாண் தொழிலில் அவர்கள் சந்தித்த இன்னல்கள் பற்றிய குறிப்புக்கள் சமுதாய ரீயிதில் ஒடுக்கப்பட்ட அச்சமூக மக்களின் நிலையைத் தெளிவுற விளக்குகின்றது. நாள் தோறும் உழவு, நடவு, களை எடுப்பு, நீர்ப்பாசனம், அறுவடை என உழைத்துக் கொண்டிருக்கும் இம்மக்களுக்குக் கிடைக்கும் கூலியோ மிக மிகச் சிறிது. இந்தத் தொழிலாளி உற்பத்தி செய்த நெல்லை அரசு, அரசாங்க மகமை, கோயில் நிர்வாகம், அந்தணர்கள், உபாத்தியாயர்கள், சத்திரங்கள் எனப் பலருக்கும் விநியோகித்தது போக மிகக் குறைவான அளவே உழைக்கும் இம்மகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நெல்லும் கூட தரங்குறைந்த நெல்லாகவே இருந்திருக்கின்றது என்று ஆசிரியர் சமூக அநீதியையும் தொட்டுக் காட்டியிருப்பது பாராட்டுக்குறியது என்று கருதுகிறேன். 

இந்த நூலின் அடுத்த அத்தியாயம் சாதிகளும் சமூக அசைவியக்கமும். என் கருத்தை ஈர்க்கும் ஒரு தலைப்பு தான் ஆயினும் இன்று தொடர்ந்து வாசிக்க வாய்ப்பிருக்காது. நாளைத் தொடங்கி அலுவலகப் பயணம் இருப்பதால் மீண்டும் அடுத்த அத்தியாயத்தை வாசித்து என் கருத்துக்களை வாய்ப்பிருக்கும் போது பகிர்ந்து கொள்கிறேன். 

சுபா 

Suba

unread,
Jun 11, 2016, 6:21:05 AM6/11/16
to aravindan.neelakandan, மின்தமிழ், Dr.Subashini, bala subramani
2016-06-11 0:59 GMT+02:00 aravindan.neelakandan <aravindan....@gmail.com>:
பழந்தமிழ் காவியமான சிலப்பதிகாரம் 'குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள' எனக் கூறுகிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் குமரிமலை குறித்தும், அதிலிருந்து தோன்றிய பஃறுளியாறு குறித்தும், குமரி ஆறு குறித்தும் செய்திகள் உள்ளன. இச்செய்திகள் எத்தனை உண்மையானவை? பல தமிழ் அறிஞர்கள் 'குமரிக்கண்டம்' என்று ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்ததாகவும் அங்கு தமிழ் நாகரிகம் ஒரு உயர்ந்த நிலையை அடைந்திருந்ததாகவும் கூறுகின்றனர். பிரம்மஞான சபையினர் 'லெமூரியா' எனகடலில் ஆழ்ந்து போன ஒரு நிலப்பரப்பு குறித்த நம்பிக்கை கொண்டிருந்தனர். இவர்கள் மூலம், இந்தியாவில் பரவிய லெமூரியாக் கோட்பாடும் குமரிக்கண்டமும் இணைந்த ஒரு சித்தாந்தமாகிற்று. புலவர் குழந்தை, அப்பாதுரை, இரா.மதிவாணன் போன்றவர்கள் குமரிக்கண்ட வரைபடங்களை உருவாக்கினர். இந்த பின்புலத்தில்தான் நிலவியல் ஆய்வாளரான சு.கி.ஜெயகரன் அவர்களின் 'குமரி நிலநீட்சி' எனும் நூலை காண வேண்டும். அவர் இக்கற்பனைகள் 'கவித்துவ சுதந்திரத்துடன்' அதீத தமிழ் பற்றினால் உருவாக்கப்பட்டவையென்பதுடன் இவற்றிற்கு அறிவியல் அடிப்படை எதுவும் இல்லையெனவும் காட்டுகிறார். எனில் கடல் கொண்ட குமரிக் கோடு என்பது வெறும் கற்பனைதானா? நிலவியல், ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி, இலக்கிய ஆதாரங்கள் மற்றும் தொல்மானுடவியல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு யதார்த்த நிலைப்பாட்டினைத் தன் முடிவாகத் தருகிறார் ஜெயகரன். வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தில் தமிழகம்-இலங்கை கடற்கரைகளை ஒட்டியிருந்து பின்னர் கடலில் மூழ்கிய நிலப்பரப்புகளே குமரி எனும் நிலநீட்சி குறித்த மரபின் வித்தாகும் எனக்கருதும் ஜெயகரன் அவ்வாறு கடல் நீர்மட்ட உயர்வில் உயிர்தப்பியவர்களிடமிருந்து குமரி நிலநீட்சி குறித்த நினைவு இன்றும் நம்மிடம் நிலவுவதாகக் கூறுகிறார். குமரி மாவட்டத்தில் கடற்கரையோர கிராமங்களான முட்டம் போன்ற இடங்களில் அண்மைக்கால நினைவுகளில் கூட கடல் கொண்ட நிலப்பரப்பு குறித்த விவரணைகள் நிலவுகின்றன. நிச்சயமாக எனில் தொல்பழம் மானுடக்குடியேற்ற எச்சங்கள் இன்றும் தென்னக ஆழ்கடலில் - நாம் கண்டடையக் காத்தபடி - துயில் கொண்டிருக்கக் கூடுமா? இனிவரும் நாட்களில் தென்னகக் கடல்களில் ஆழ்கடல் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டால் அது இம்மர்மங்களுக்கு விடை பகரக் கூடும்.

இந்த நூலைப்பற்றிய அறிமுகம் வழங்கியமைக்கு நன்றி அரவிந்தன். 

குமரிக்கடல் ஆய்வு, லெமூரியா ஆய்வு என்பனவற்றில் எனக்கு ஈடுபாடு உண்டு. கடலுக்குள் மூழ்கிய நிலப்பரப்பில் இருந்த நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள்​,அவர் தம் வாழ்வியல் ஆகியன பற்றி விரிவான தொல்லியல் ஆவுகளோடு கடலியல் ஆய்வுகளும் மேற்க்கொள்ளப்படுவதுதான் சிறந்த வகையில் இந்த ஆய்வை முன்னெடுத்துச் செல்ல உதவும். நம் குழுமத்தில் இருக்கும் நண்பர் ஒரிசா பாலு தன்னளவிலும் சில தன்னார்வலர்களின் உதவியுடனும் இவ்வகை ஆய்வுகளைத் தொடர்ந்து செய்து வருகின்றார். 

எனது கருத்துப்படி தமிழக பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறை தொல்லியல்துறையுடன் இணைந்தவகையிலான ஆய்வுகளை வடிவமைத்து இந்தத் துறைக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து ஆய்வுகளைத் தொடங்க வேண்டும். தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியில் ரு துறை இவ்வகை பணியில் ஈடுபட்டுள்ளார்கள் எனக் கருதுகிறேன். ஏனைய பல்கலைக்கழகங்களோ ஆய்வு நிறுவனங்களோ செய்கின்றனவா என்பது கேள்வியாக இருக்கின்றது. 

என்னிடம் கொடுமுடி சண்முகம் அவர்களின் குமரிக்கண்டம் நூல் உள்ளது. சிறிய நூல்தான் என்றாலும் இவ்வகையான தகவல்களை நன்கு கோடிட்டுக் காட்டியுள்ளார். 

சுபா

Singanenjam Sambandam

unread,
Jun 11, 2016, 1:53:14 PM6/11/16
to mint...@googlegroups.com
குமரிக் கண்டம் ஓர் புவியியல்  பார்வை ; எனும் தலைப்பில்   தொடர் எழுத விருப்பம். குமரிக்கண்ட ஆதரவாளர்கள் எனக்கு  மறுமொழி கொடுத்து ஒரு  பட்டிமன்றம் அமைத்தால்  நன்றாக இருக்கும். பல உண்மைகள்    வே ளிச்சத்திற்கு வரும்.  ஆனால்  சில் இடங்களில் கூறியது கூறல் ஆகி விடும்.

--

N. Ganesan

unread,
Jun 14, 2016, 2:47:03 AM6/14/16
to மின்தமிழ்

On Saturday, June 11, 2016 at 10:53:14 AM UTC-7, singanenjan wrote:
குமரிக் கண்டம் ஓர் புவியியல்  பார்வை ; எனும் தலைப்பில்   தொடர் எழுத விருப்பம். குமரிக்கண்ட ஆதரவாளர்கள் எனக்கு  மறுமொழி கொடுத்து ஒரு  பட்டிமன்றம் அமைத்தால்  நன்றாக இருக்கும். பல உண்மைகள்    வே ளிச்சத்திற்கு வரும்.  ஆனால்  சில் இடங்களில் கூறியது கூறல் ஆகி விடும்.

இலக்கிய வரலாற்றின்படி ஆராய்தற்கும் வாய்ப்புகள் உள்ளன.

ஜூன் 10 அன்று குறிப்பிட்டேன்:
Kuamri KaNDam myth:
BTW, based on a 2 lines in Cilampu, the first novel of Tamil nationalism, myths are generated in late 19th century.
Ilango AdikaL wrote, likely from today's Karur, the Sangam era capital of Chera country, his imagination
using Kumaricode and PaRali river in Kanyakumari district. This myth grew in Iraiyanar AkapporuL - a book
written with 3 Sangam legends, an attempt by Saivaites to conceal/divert the contribution of Jains in forming
early grammar (Tolkappiyar) and literature (Tiruvalluvar) and epigraphy (Cf. Iravatham's masterpiece).
S. K. Jayakaran's book (Baskaran's brother) and Sumathi Ramasamy's book (UMich) are worth reading.

நா. கணேசன்

Singanenjam Sambandam

unread,
Jun 14, 2016, 3:10:39 AM6/14/16
to mint...@googlegroups.com
சுமதி, ஜெயகரன்  ஆகியோரின் நூல்களை நான் படித்தேனில்லை.  என் நோக்கம்  துறை சாரா  பெருமக்களும் புரிந்து கொள்ளும் வகையில்  எளிய மொழியில்    எழுத வேண்டும் என்பதே. குறை காணின்  குறிப்பிடுக. . 

K R A Narasiah

unread,
Jun 14, 2016, 12:34:33 PM6/14/16
to mintamil
As a seafarer, having sailed for fourteen years through every  major sea of the world,  I am not in a position to agree with Orissa Balu fully. He is doing wonderful work no doubt; but the existence of Kumatrikkandam with geophysica proofl is questionable. Unless scientifically proved with no emotional involvement I am unable to agree. Thiru Singanenjan is a geophysicist. He is writing with clarity. Let us follow him and take the discussion forward. Repeating the same statement Ad Infinitum does not make it true.
Narasiah

On Tue, Jun 14, 2016 at 12:40 PM, Singanenjam Sambandam <singa...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (singa...@gmail.com) Add cleanup rule | More info

சுமதி, ஜெயகரன்  ஆகியோரின் நூல்களை நான் படித்தேனில்லை.  என் நோக்கம்  துறை சாரா  பெருமக்களும் புரிந்து கொள்ளும் வகையில்  எளிய மொழியில்    எழுத வேண்டும் என்பதே. குறை காணின்  குறிப்பிடுக. . 
2016-06-14 12:17 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

Singanenjam Sambandam

unread,
Jun 15, 2016, 3:04:40 AM6/15/16
to mint...@googlegroups.com
Sir, I'm a Geologist ........but do have  experience in  Geophysics as I was involved mostly in exploration. 

Aravindan Neelakandan

unread,
Jun 15, 2016, 5:36:06 AM6/15/16
to mint...@googlegroups.com
I do not know in this group there are such great personalities like Narasiah, a great inspiring personality. We were all inspired by his late brother the venerated Professor.  Singanenjam Sambandam ayya this is really great. A lot of myth centers around Kumari Kandam - most which are clearly 19th century theosophist fantasy with no basis in reality. It was not Lemuria but Africa which was the place of origin of modern humans and there was no single 'mother of all languages' in human evolution. It is again a fallacy derived from the myth of Babel.

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/nVY2mdvRu2A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Jun 15, 2016, 5:43:28 AM6/15/16
to mintamil
From the beginning, I have taken the same standpoint of Mr.Narasiah and Orissa Balu was aware of it as early as 2010. as we had met and discussed then. This said, i admire and enthuse him, which also he knows.
Regards to all,
Innamburan

Singanenjam Sambandam

unread,
Jun 15, 2016, 6:19:34 AM6/15/16
to mint...@googlegroups.com
பெரியவகளுக்கு   வணக்கம்.   இந்த  தொடரில்   லெமுரியா   , கோண்ட்வானா    எல்லாவற்றையும்  விரிவாகக் காண்போம்.