என் வாசிப்பில் இன்று - புத்தக விமர்சனம்

1,372 views
Skip to first unread message

Suba

unread,
Feb 7, 2016, 4:43:17 PM2/7/16
to மின்தமிழ், Dr.Subashini
தமிழகச் சிற்பிகள் வரலாறு 
சுபா

தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் பயணிக்கும் போதும் என் மனதை வெகுவாகக் கவர்வது தமிழக கட்டுமானக் கலைகளும் சிற்பங்களும் கல்வெட்டுக்களும்  தான். 

ஒரு மண்டபத்தில் ஒரு சிறப்பென்றால் இன்னொரு மண்டபத்தில் மற்றொரு சிறப்பு. ஒரு கோயிலில் ஒரு பிரமாண்டம் என்றால் இன்னொரு கோயிலில் மற்றுமொரு பிரமாண்டம். ஒரு சிற்பம் ஒரு காரணத்திற்காக தனித்துவம் வாய்ந்ததாக விளங்குவது போல மற்றொரு சிற்பம் தனக்கேயுறிய மற்றொரு தனித்துவத்துவடன் விளங்குகின்றது. ஒரு சுவரோவியம் ஒரு தன்மையத்தது என வியக்கும் வேளை மற்றொன்று இன்னொரு வகையில் சிறப்பானதாக இருக்கின்றது.  ஒரு கல்வெட்டுப் பாறை இப்படியும் ஒரு வேலைப்பாடா என அதிசயிக்க வைக்கும் அதே வேளை இன்னொரு கல்வெட்டு வேறொரு வகையில் சிறப்புக்களோடு காட்சியளிக்கின்றது. இப்படி என் ஒவ்வொரு முறை தமிழகத்துக்கான வருகையின் தேடுதல்களின் போதும் என் தேடுதல்களுக்கு அலுப்பு கொடுக்கா அதே வேளை புதியனவற்றை நான் பார்த்து அறிந்து கொள்ளும் நிலைதான் ஏற்படுகின்றது. இது என் தேடுதலின் தன்மையை சுவாரசியமானதாகவும் ஆக்கியிருக்கின்றது. இப்படி காணக் காண அற்புதங்களாக இருக்கும் தமிழக நிலப்பரப்பின் சிற்பக்கலை, கட்டுமானக் கலையைப் பற்றி அதன் ஆரம்ப காலத் தோற்றம், படிப்படியான வளர்ச்சி, வரலாற்றுக்கு முக்கியமான சான்றுகளின் விபரங்கள் என்ற வகையில் விரிவான தகவல்களைத் தருகின்ற ஒரு நூலை அண்மையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பார்த்ததுமே அதனைப் பெற்றுக் கொண்டு வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தருகின்ற நூல்.

வரலாற்று ஆய்வாளர் திரு. நடன காசிநாதன் எழுதி வாஸ்து வேத ஆய்வு நிறுவனத்தின் வெளியீடாக  2006ம் ஆண்டு இதன் முதல் பதிப்பு   நூல் வெளிவந்திருக்கின்றது. இந்த நூல்  உருவாக ஊக்கம் தந்தவர் தமிழகத்தின் முக்கிய சிற்பியான டாக்டர்.வை.கணபதி ஸ்தபதி அவர்கள் தான் என நூலாசிரியர் தனது முகவுரையில் அதன் காரணங்களோடு விளக்குகின்றார்.

நூலின் முன்னுரையோடு ஸ்தபதிகள் ,சிற்பிகள் பற்றிய நீண்ட அறிமுக விளக்கத்தையும் டாக்டர்.வை.கணபதி ஸ்தபதி அவர்கள் இந்த நூலில் வழங்கியிருக்கின்றார்கள். தனது விளக்கத்தில் இக்காலத்தில் ஸ்தபதிகள் என்று குறிப்பிடப்படும் கட்டிடக் கலைஞர்களும் சிற்பக் கலைஞர்களும் பற்றிய மதிப்பு என்பது குறைந்து. கொத்தனாராகவும் கூலி வேலைசெய்பவராகவும் மதிக்கப்படும் நிலை இருக்கின்றது எறு குறிப்பிடுகின்றார். இதனை வாசிக்கும் போது, ஆங்கிலத்தில் ஆர்க்கிடெக்ட் என்று சொல்லும் போது ஏற்படும் தனி உயர் மதிப்பு தமிழில் கோயில் கட்டிடக் கலைஞர் என்றோ சிற்பி என்றோ ஏன் தமிழ் மக்கள் சிந்தனையில் தோன்றவில்லை என்பதை நாம் யோசிக்கவேண்டும் என்று தோன்றாமல் இல்லை.

நூலில் நூலாசிரியரின் நுண்ணுரை, டாக்டர்.வை.கணபதி ஸ்தபதி அவர்களின் முன்னுரை அகவுரைக்கு அடுத்தார் போல பதினெட்டு தலைப்புக்களில் தமிழகச் சிற்பிகளை பற்றி ஆராய்கின்றார் நூலாசிரியர். 
அவை
  1. குமரிக்கண்ட காலத்தில் சிற்பிகள்
  2. ஹரப்பன் நாகரிகக் காலத்தில் சிற்பிகள்
  3. வேத காலத்தில் சிற்பிகள்
  4. இதிகாச, புராணக் காலங்களில் சிற்பிகள்
  5. பண்டைத் தமிழ்க் கல்வெட்டுக் காலத்தில் சிற்பிகள்
  6. சங்க காலத்தில் சிற்பிகள்
  7. காப்பியக் காலத்தில் சிற்பிகள்
  8. பல்லவர் காலத்தில் சிற்பிகள்
  9. முதற்காலப் பாண்டியர் காலத்தில் சிற்பிகள்
  10. சோழர் காலத்தில் சிற்பிகள்
  11. பிற்காலப் பாண்டியர் காலத்தில் சிற்பிகள்
  12. சம்புவராயர் காலத்தில் சிற்பிகள்
  13. விசய நகர மன்னகள் காலத்தில் சிற்பிகள்
  14. நாயக்கர் காலத்தில் சிற்பிகள்
  15. மராத்தியர் காலத்தில் சிற்பிகள்
  16. பாளையக்காரர்கள் காலத்தில் சிற்பிகள்
  17. பிற்காலங்களில் சிற்பிகள்
  18. சிற்பங்களிலும் ஓவியங்களிலும் சிற்பிகள்
என்ற பதினெட்டு தலைப்புக்களாகத் தகவல்கள் விரிகின்றன.

இந்த நூலிற்குச் சிறப்பு சேர்க்கும் விசயங்களில் ஒன்றாக மயன் பற்றிய விளக்கங்களைக் காண்கின்றேன். 

கடல்கோளால் ஆட்கொள்ளப்பட்ட குமரிக்கண்டத்தில் பிறந்து  மயன் என்னும் ஆதி சிற்பியே தொழிற் கருவிகள், மட்கலங்கள், ஓவியங்கள்,கட்டிடங்கள் ஆகியனபற்றிய ஆரம்ப நிலை தொழில்னுட்பக் கூறுகளை தமிழ் மக்களுக்கு அறிமுகப் படுத்தியவராக இந்த நூலின் முதற் பகுதி விளக்குகின்றது. இதற்கு ஆதாரமாக வைசம்பாயனம் என்ற நூலை ஆதாரமாகச் சுட்டுவதுடன், இன்னூல் மயன் தான் அறிந்த தொழில் நுட்பங்களை நூல்களாக எழுதி குமரிக் கண்டத்தில் செயல்பட்ட முதல் சங்கத்தில் அரங்கேற்றினார் என்றும் அதில் மயன் சிற்பமாச் செந்நூல், ஓவியச் செந்நூல், மனநிலச் செந்நூல், நிலமனச் செந்நூல், விண்கலச் செந்நூல், நாட்டியச் செந்நூல், இசைக் கலைச் செந்நூல், மூலிகைச் செந்நூல், தமிழியற் செந்நூல், கணிதமாச் செந்நூல், கோட்டுருச் செந்நூல் என்ற பதினோரு நூல்களை இயற்றியது பற்றிய குறிப்பு உள்ளமையையும் சுட்டுகின்றார். இது இந்த வைசம்பாயணம் என்னும் இம்மூல நூலைத் தேடிப் பெற்று வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவதாக அமைகின்றது.

குமரிக்கண்ட மயனின் பெயரிலேயே பலர் இருந்திருக்கலாம் என்றும் அவர்களும் கட்டிடக் கலைகளில் தேர்ந்தவர்களாகவும் சிற்பக் கலை வல்லுனர்களாகவும் இருந்திருக்கலாம் என்பதை இலக்கிய இதிகாசச் சான்றுகள் சுட்டுவதையும் இந்த நூலில் காண முடிகின்றது. உதாரணமாக இன்றைக்கு ஏறக்குறைய கி.மு1000 - 700 வரை எனக் கணக்கிடப்படும் இராமயண மயன் பற்றிய குறிப்புக்கள் இருப்பதும் இங்கு குறிப்பிடப்படுகின்றது. மயனின் மகள் மண்டோதரி என்ற ஒரு குறிப்பும் அர்ஜூனனுக்கு மயன் கட்டிய அவை மண்டபம் பற்றியும் வருகின்ற குறிப்புக்களை அறிய முடிகின்றது. காப்பியக் காலத்தில் மணிமேகலை காப்பியத்தில் மணிமேகலை ஒரு மலர்வனத்திற்குச் சென்றபோது அங்கே மயன் பண்டைய காலத்தில்  தனது நூற்குறிப்பில் உள்ள கட்டுமான மரபினை ஒத்து கட்டப்பெற்ற பளிங்கு மண்டபத்தில் உதயகுமாரனுக்குப் பயந்து ஒளிந்து கொண்டமையை இளங்கோவடிகள் சுட்டுவதையும் அறிய முடிகின்றது. இதே போல சிலப்பதிகாரத்திலும்  மனையறம்படுத்த காதையில் மயன் உருவாக்கிய நெறிமுறையில் தயாரிக்கப்பட்ட கட்டிலில் கண்ணகியும் கோவலனும் படுத்துறங்கினர் என்ற குறிப்பும் வருவது மயன் என்ற ஆதித் தமிழ் கட்டுமான ஆசானைப் பற்றி மேலும் வலியுறுத்திச் சொல்வதாக அமைகின்றது .

கல்வெட்டுக்கலை என்பது மிக உயர்ந்த மிக நுணுக்கமான நெறிமுறைகளை பின்பற்ற வேண்டிய தேவைகளுடன் கூடிய ஒரு கலை. நமக்கு இன்று கிடைக்கின்ற நூல்களின் வழியாக சங்க கால கட்டுமானம் என்பது செங்கற்கட்டடங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை அறிகின்றோம். இன்றைக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே செங்கல் தயாரித்து அதனைக் கொண்டு கட்டிடங்களை எழுப்பிய தமிழர் தம் தொழில் நுட்பத் திறன் வியக்க வைக்கும் ஓன்றே என்பதில் சிறிதும் சந்தேகத்திற்கிடமேதுமில்லை.

நூலாசிரியர் இந்த நூலில் வழங்கியிருக்கும் மேலும் இரண்டு சிறப்பு விடயங்களாக அமைவது கல்வெட்டுக்கள் பற்றிய விளக்கங்களும் செப்பேட்டுகளைப் பற்றிய விரிவான தகவல்களும் என்று சொல்லலாம். பண்டைய தமிழ் எழுத்துக்களான பிராமி, வட்டெழுத்து அத்துடன் சமஸ்கிருத கிரந்த எழுத்துக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் பல உதாரணங்களாக நூலில் கையாளப்பட்டுள்ளன.  இச்செப்பேடுகள் தற்சமயம் இருக்கின்ற அருங்காட்சியகங்களைப் பற்றிய தகவல்கள் இவற்றை நேரில் பார்த்து ஆராய விரும்புவோருக்கு ஆரம்ப நிலைக் குறிப்புக்கள வழங்கும் தன்மையும் சிறப்புக்குறியது என்றே கருதுகின்றேன். 

எப்படி ஓலைச்சுவடிகள் என்றால் அவை சோதிடம் சார்ந்தவை என்ற எண்ணம் பரவலாகப்பல தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றதோ அதே போல கல்வெட்டுக்களும் செப்பேடுகளும்  என்றாலே அவை மன்னர்கள் வரலாற்று தகவல்களாக இருக்குமோ என்ற எண்ணம் பலருக்கும் இருப்பதுண்டு. கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் தமிழ் மக்களின் சமூகம் சார்ந்த விடயங்களை பதிவு செய்து வைத்த ஆதாரங்களாக அமைந்திருக்கின்றன என்பதை சில ஆதாரங்களின் வழி நூலாசிரியர் விவரிக்கின்றார். அதில் உதாரணமாக வரி பற்றிய விபரங்கள், ஒரு குடும்பத்தினர் தம்மை அடிமைகளாக விற்றுக் கொண்டதற்கான சான்று செப்பேடு, கொள்ளை நிகழ்வு ஒன்றைப் பற்றிய செய்தியைப் பதிந்த  செப்பேடு என்பன போன்றவற்றை குறிப்பிடலாம். இப்படி வித்தியாசமான செப்பேடுகள் விசய நகர மன்னர்கள் காலத்தில், நாயக்கர் காலத்தில், சம்புவராயர், மராத்தியர் காலங்களில் வெளியிடப்பட்ட குறிப்புக்கள் கல்வெட்டு செப்பேடு தயாரிப்பு பற்றிய தகவல் களஞ்சியமாக இந்த நூலின் தரத்தை உயர்த்துவதாக உள்ளது. 

இந்த நூலின் மிக முக்கிய அங்கமாக நான் காண்பது ஒவ்வொரு  அத்தியாயத்தின் பின்னும் கொடுக்கப்பட்டிருக்கும் துணை நூற் குறிப்புப் பட்டியல். இந்தப் பட்டியலில் உள்ள நூல்கள் ஆய்வு மாணவர்களுக்கும் வரலாற்றுத்தேடல் உள்ளோருக்கும் மிக உதவும் தன்மை கொண்டவை என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. 

​தச்சர்கள், பொற்கொல்லர்கள், சிற்பிகள், சித்திரக் கலைஞர்கள் ஆகியோர் தங்கள் திறத்தால் விட்டுச் சென்றவையே இன்றைய  தமிழர் தம் வரலாற்றுச்​சான்றுகளாக நம் கண் முன்னே திகழ்கின்றன. அழிந்து வரும் கலைகளில் ஒன்றாக இன்று சிற்பக்கலை தமிழகத்தில் சுட்டப்படுவது வேதனைக்குறிய ஒரு விடயம். பண்டைய தமிழர் கட்டுமானக் கலைகள் இக்கால சூழலில் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடமாக அறிமுகப்படுத்தப்படுமேயானால் அது இக்கலை அதன் சிறப்புத்தன்மை கெடாது அறிவியற் கூறுகளின் பெருமையோடு மேலும் மிளிர வாய்ப்பு ஏற்படும்.

விலை ரூ.350
பிரசுரிப்பாளர்: வாஸ்து வேத ஆய்வு நிறுவனம்

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Suba

unread,
Jun 5, 2016, 6:36:22 AM6/5/16
to மின்தமிழ், Dr.Subashini
நாயக்கர் காலம் - இலக்கியமும் வரலாறும் பேரா.அ.ராமசாமி எழுதிய நூல் இன்று வாசிக்க ஆரம்பித்தேன். முதல் அத்தியாயம் வாசித்து முடித்தேன். 

//வரலாற்றை எழுத உதவும் சான்றுகளை மறுபரிசீலனை செய்வதும், மரபு நிலையில் பயன்படுத்தும் சான்றுகள் போதாமல் போகின்ற நிலையில் புதிய சான்றுகளைத் தேடுவதும் தவிர்க்க முடியாதனவாகின்றன// இதனை முக்கியக் கருத்தாகக் காண்கின்றேன். ஆய்வுலகில் பலர் ஒரு முடிவைமுடிவென்று முடிவு கட்டிவிட்டு மறு பரிசீலைக்கு தயாராக மறுப்பவர்களாக இருப்பதை விவாதங்களில் பார்க்கும் போது, இத்தகைய வாசகங்கள் புத்துணர்ச்சி அளிக்கின்றன. 

இலக்கியச் சான்றுகள் வரலாற்று ஆய்விற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்ற குறிப்பும் எவ்வகைக் காரணங்களால் அவை பொதுவாக நம்பகத்த்மைக்கு சவாலாகின்றன என்பதும் எதனைக் கருத்தில் கொண்டால் இலக்கியங்களைப் பயன்படுத்தலாம் என்பதும் சிறப்பாக இங்கே சொல்லப்பட்டுள்ளன. 

புதிய இலக்கிய வகைகள் தோன்றுவதன் காரணம், பழைய இலக்கிய வடிவம் புதிய உள்ளடக்கத்தை ஏற்றலுக்கான காரணம் ஆகியவையும் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. 

தலபுராண இலக்கியங்கள் 16-18ம் நூற்றாண்டில் விரிவாகத் தோன்றியமையும் முக்கிய தலபுராண எழுத்தாளர் பட்டியலும் எனக்குப் பயனுள்ளதாக உள்ளது. தமிழ் மரபு அறக்கட்டளை தல புராண நூல்கள் மின்னூல் சேகரிப்பு என்ற திட்டத்தைத் தொடங்கி சில நூல்களை வலையேற்றியுள்ளோம். அந்த வகையில் இது ஆர்வமளிப்பதாக உள்ளது. 

முந்தைய இலக்கிய வடிவங்கள் நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் புதிய வடிவம் பெற்றமையும், உள்ளடக்கத்தில் சூழலுக்கேற்ற மாற்றம் பெற்றமையும் மிகச் சிறப்பாக இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளதாகக் கருதுகின்றேன். 

நூலுக்கு அமைந்திருக்கும்முன்னுரை மனதைக் கவர்ந்தது. அறிஞர் தி.சு.நடராசன் அவர்களின் எழுத்து நடையும் உட்பொருளும் மிக அருமை. 

வாசிப்பு தொடர்கின்றது... 


சுபா

Innamburan S.Soundararajan

unread,
Jun 5, 2016, 6:53:00 AM6/5/16
to mintamil, Dr.Subashini
//வரலாற்றை எழுத உதவும் சான்றுகளை மறுபரிசீலனை செய்வதும், மரபு நிலையில் பயன்படுத்தும் சான்றுகள் போதாமல் போகின்ற நிலையில் புதிய சான்றுகளைத் தேடுவதும் தவிர்க்க முடியாதனவாகின்றன// இதனை முக்கியக் கருத்தாகக் காண்கின்றேன். ஆய்வுலகில் பலர் ஒரு முடிவைமுடிவென்று முடிவு கட்டிவிட்டு மறு பரிசீலைக்கு தயாராக மறுப்பவர்களாக இருப்பதை விவாதங்களில் பார்க்கும் போது, இத்தகைய வாசகங்கள் புத்துணர்ச்சி அளிக்கின்றன. 

~ ஆமாம்!  ஆமாம்!  ஆமாம்!  ஆமாம்!  ஆமாம்!  ஆமாம்!  ஆமாம்!  லக்ஷம் தடவை சொல்லுங்கள்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

nkantan r

unread,
Jun 5, 2016, 8:37:04 AM6/5/16
to மின்தமிழ்
Do we really have the original content of the two books: vaisampayanam and aindhiram?, where??

rnkantan

Ps: vaisampayana was the legendary disciple of vyasa who heard/listened to jaya 8800 verses and expanded it to 24000 stanzas of (mahaabharat) . people who recite vishnu sahashranaam and do yajur ved rites would hv come across vaisampaayana..

Suba

unread,
Jun 5, 2016, 4:43:11 PM6/5/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-06-05 12:36 GMT+02:00 Suba <ksuba...@gmail.com>:
நாயக்கர் காலம் - இலக்கியமும் வரலாறும் பேரா.அ.ராமசாமி எழுதிய நூல் இன்று வாசிக்க ஆரம்பித்தேன். முதல் அத்தியாயம் வாசித்து முடித்தேன். 

//வரலாற்றை எழுத உதவும் சான்றுகளை மறுபரிசீலனை செய்வதும், மரபு நிலையில் பயன்படுத்தும் சான்றுகள் போதாமல் போகின்ற நிலையில் புதிய சான்றுகளைத் தேடுவதும் தவிர்க்க முடியாதனவாகின்றன// இதனை முக்கியக் கருத்தாகக் காண்கின்றேன். ஆய்வுலகில் பலர் ஒரு முடிவைமுடிவென்று முடிவு கட்டிவிட்டு மறு பரிசீலைக்கு தயாராக மறுப்பவர்களாக இருப்பதை விவாதங்களில் பார்க்கும் போது, இத்தகைய வாசகங்கள் புத்துணர்ச்சி அளிக்கின்றன. 

இலக்கியச் சான்றுகள் வரலாற்று ஆய்விற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்ற குறிப்பும் எவ்வகைக் காரணங்களால் அவை பொதுவாக நம்பகத்த்மைக்கு சவாலாகின்றன என்பதும் எதனைக் கருத்தில் கொண்டால் இலக்கியங்களைப் பயன்படுத்தலாம் என்பதும் சிறப்பாக இங்கே சொல்லப்பட்டுள்ளன. 

புதிய இலக்கிய வகைகள் தோன்றுவதன் காரணம், பழைய இலக்கிய வடிவம் புதிய உள்ளடக்கத்தை ஏற்றலுக்கான காரணம் ஆகியவையும் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. 

தலபுராண இலக்கியங்கள் 16-18ம் நூற்றாண்டில் விரிவாகத் தோன்றியமையும் முக்கிய தலபுராண எழுத்தாளர் பட்டியலும் எனக்குப் பயனுள்ளதாக உள்ளது. தமிழ் மரபு அறக்கட்டளை தல புராண நூல்கள் மின்னூல் சேகரிப்பு என்ற திட்டத்தைத் தொடங்கி சில நூல்களை வலையேற்றியுள்ளோம். அந்த வகையில் இது ஆர்வமளிப்பதாக உள்ளது. 

முந்தைய இலக்கிய வடிவங்கள் நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் புதிய வடிவம் பெற்றமையும், உள்ளடக்கத்தில் சூழலுக்கேற்ற மாற்றம் பெற்றமையும் மிகச் சிறப்பாக இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளதாகக் கருதுகின்றேன். 

நூலுக்கு அமைந்திருக்கும்முன்னுரை மனதைக் கவர்ந்தது. அறிஞர் தி.சு.நடராசன் அவர்களின் எழுத்து நடையும் உட்பொருளும் மிக அருமை. 

வாசிப்பு தொடர்கின்றது... 


சுபா

நாயக்கர் காலம் - இலக்கியமும் வரலாறும் பேரா.அ.ராமசாமி எழுதிய நூல் இன்று வாசிக்க ஆரம்பித்தேன். இரண்டாம் அத்தியாயம் இன்று மாலை வாசித்தேன்.


இந்த அத்தியாயம் நாயக்கர் காலத்தில் பொருளாதார நிலை, நில உரிமை, வேளாண்மை நிலை, வரவு பங்கீடு முறை என்பன பற்றிய தகவல்களைக் கொண்டதாக இருக்கின்றது. நாயக்கர் கால ஆட்சியில் பொருளாதாரம் தொடர்பான மிக விரிவான ஆய்வாக இந்தப் பகுதி அமைந்திருக்கின்றது.


நில உரிமை எனும் போது அதில் அரசன், பாளையக்காரன், மானியதாரர்கள், பின் உழவர்கள் என இவர்களுக்கும் நிலத்திற்கும் உள்ள உறவு பற்றிய சான்றுகள் சார்ந்த ஆய்வாக அமைந்திருக்கின்றது.


பண்ணை முறை எனும் பகுதி, ஒரு பண்ணையில் தொடர்புடையோராக உள்ளவர்களைப் பட்டியலிட்டு பின் அதில் அவர்களுக்குரிய செயல்பாடுகளையும் உரிமைகளையும் நன்கு விவரிக்கும் பகுதியாகவும் இருக்கின்றது. நில உரிமையாளன், பண்ணை விசாரிப்பான், கணக்குப்பிள்ளை, உழவர்கள் என்ற நான்கு பிரிவுகளுக்குமான செயலாடுகள் இதில் சொல்லப்படுகின்றன.


நிலத்தில் செய்யப்படும் விவசாயத்திலிருந்து வரும் வருவாய் பகிர்ந்து கொடுக்கப்பட்ட அளவு பற்றிய விபரங்கள் சொல்லப்படுகின்றன. பண்ணையாரைச் சார்ந்த உழவர்கள் பற்றிய விவரணை உள்ள பகுதியில் கொத்தடிமை முறை பற்றியும் சில குறிப்புக்கள் வருகின்றன. இணைக்கப்பட்டுள்ள அட்டவணைகள் வருமானம் எவ்வாறு பிரிக்கப்பட்டது என்பதற்குச் சான்றாகவும் அமைகின்றன.


வயலில் விவசாயம் செய்யப்படும் முறை பற்றி விளக்கும் பகுதி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. காரணம் இப்பகுதியில் படிப்படியாக நிலம் தயார் செய்யப்படும் விதம், அவற்றை விவரிக்கும் சொற்கள் பற்றிய குறிப்புக்கள், கருவிகள் என்பன படிப்படியாக விளக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக வருகின்ற நீர்ப்பாசனம் அதன் உரிமை ஆகிய விளக்கங்களும் அரசின் கட்டுப்பாட்டில் நீர்ப்பாசன மேலாண்மை இருந்தது என்பதை விளக்குகின்றது.


பள்ளு இலக்கியங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை இப்பகுதி எனக்கு ஏற்படுத்தியுள்ளது.


வாசிப்பு தொடரும்..

சுபா

 

K R A Narasiah

unread,
Jun 7, 2016, 12:09:03 AM6/7/16
to mintamil
நாயக்கர் காலத்தில் தான் எங்கள் குடும்பம் புலம் பெயர்ந்து மதுரை வந்தது. நாங்க்கள் ஆறு வேலு நிய்யோகிகள் என்றறியப்பட்டவர்கள். தெலுங்கு பிராமமண சமுதாய்த்தின் most secular sect was Neogi sec.
மேலாண்மைக்காக வந்த எங்கள் மூதாதைய்ரின் சிலைகள் இன்றும் திருப்பரங்குன்றத்திலிலும் மதுரையிலுமுள்ள கோவில்களில் உள்ளன. அவை முறையே  நரசப்பா, முதுக்கிருஷ்ணைய்யா சிற்பங்களாகும்.
அ. கி. பரந்தாமனாரின் நாயக்கர் காலம் பற்றிய நூல் சிறப்பானது.

நரசய்யா

On Mon, Jun 6, 2016 at 2:13 AM, Suba <ksuba...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (ksuba...@gmail.com) Add cleanup rule | More info



2016-06-05 12:36 GMT+02:00 Suba <ksuba...@gmail.com>:
நாயக்கர் காலம் - இலக்கியமும் வரலாறும் பேரா.அ.ராமசாமி எழுதிய நூல் இன்று வாசிக்க ஆரம்பித்தேன். முதல் அத்தியாயம் வாசித்து முடித்தேன். 

//வரலாற்றை எழுத உதவும் சான்றுகளை மறுபரிசீலனை செய்வதும், மரபு நிலையில் பயன்படுத்தும் சான்றுகள் போதாமல் போகின்ற நிலையில் புதிய சான்றுகளைத் தேடுவதும் தவிர்க்க முடியாதனவாகின்றன// இதனை முக்கியக் கருத்தாகக் காண்கின்றேன். ஆய்வுலகில் பலர் ஒரு முடிவைமுடிவென்று முடிவு கட்டிவிட்டு மறு பரிசீலைக்கு தயாராக மறுப்பவர்களாக இருப்பதை விவாதங்களில் பார்க்கும் போது, இத்தகைய வாசகங்கள் புத்துணர்ச்சி அளிக்கின்றன. 

இலக்கியச் சான்றுகள் வரலாற்று ஆய்விற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்ற குறிப்பும் எவ்வகைக் காரணங்களால் அவை பொதுவாக நம்பகத்த்மைக்கு சவாலாகின்றன என்பதும் எதனைக் கருத்தில் கொண்டால் இலக்கியங்களைப் பயன்படுத்தலாம் என்பதும் சிறப்பாக இங்கே சொல்லப்பட்டுள்ளன. 

புதிய இலக்கிய வகைகள் தோன்றுவதன் காரணம், பழைய இலக்கிய வடிவம் புதிய உள்ளடக்கத்தை ஏற்றலுக்கான காரணம் ஆகியவையும் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. 

தலபுராண இலக்கியங்கள் 16-18ம் நூற்றாண்டில் விரிவாகத் தோன்றியமையும் முக்கிய தலபுராண எழுத்தாளர் பட்டியலும் எனக்குப் பயனுள்ளதாக உள்ளது. தமிழ் மரபு அறக்கட்டளை தல புராண நூல்கள் மின்னூல் சேகரிப்பு என்ற திட்டத்தைத் தொடங்கி சில நூல்களை வலையேற்றியுள்ளோம். அந்த வகையில் இது ஆர்வமளிப்பதாக உள்ளது. 

முந்தைய இலக்கிய வடிவங்கள் நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் புதிய வடிவம் பெற்றமையும், உள்ளடக்கத்தில் சூழலுக்கேற்ற மாற்றம் பெற்றமையும் மிகச் சிறப்பாக இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளதாகக் கருதுகின்றேன். 

நூலுக்கு அமைந்திருக்கும்முன்னுரை மனதைக் கவர்ந்தது. அறிஞர் தி.சு.நடராசன் அவர்களின் எழுத்து நடையும் உட்பொருளும் மிக அருமை. 

வாசிப்பு தொடர்கின்றது... 


சுபா

நாயக்கர் காலம் - இலக்கியமும் வரலாறும் பேரா.அ.ராமசாமி எழுதிய நூல் இன்று வாசிக்க ஆரம்பித்தேன். இரண்டாம் அத்தியாயம் இன்று மாலை வாசித்தேன்.


இந்த அத்தியாயம் நாயக்கர் காலத்தில் பொருளாதார நிலை, நில உரிமை, வேளாண்மை நிலை, வரவு பங்கீடு முறை என்பன பற்றிய தகவல்களைக் கொண்டதாக இருக்கின்றது. நாயக்கர் கால ஆட்சியில் பொருளாதாரம் தொடர்பான மிக விரிவான ஆய்வாக இந்தப் பகுதி அமைந்திருக்கின்றது.


நில உரிமை எனும் போது அதில் அரசன், பாளையக்காரன், மானியதாரர்கள், பின் உழவர்கள் என இவர்களுக்கும் நிலத்திற்கும் உள்ள உறவு பற்றிய சான்றுகள் சார்ந்த ஆய்வாக அமைந்திருக்கின்றது.


பண்ணை முறை எனும் பகுதி, ஒரு பண்ணையில் தொடர்புடையோராக உள்ளவர்களைப் பட்டியலிட்டு பின் அதில் அவர்களுக்குரிய செயல்பாடுகளையும் உரிமைகளையும் நன்கு விவரிக்கும் பகுதியாகவும் இருக்கின்றது. நில உரிமையாளன், பண்ணை விசாரிப்பான், கணக்குப்பிள்ளை, உழவர்கள் என்ற நான்கு பிரிவுகளுக்குமான செயலாடுகள் இதில் சொல்லப்படுகின்றன.


நிலத்தில் செய்யப்படும் விவசாயத்திலிருந்து வரும் வருவாய் பகிர்ந்து கொடுக்கப்பட்ட அளவு பற்றிய விபரங்கள் சொல்லப்படுகின்றன. பண்ணையாரைச் சார்ந்த உழவர்கள் பற்றிய விவரணை உள்ள பகுதியில் கொத்தடிமை முறை பற்றியும் சில குறிப்புக்கள் வருகின்றன. இணைக்கப்பட்டுள்ள அட்டவணைகள் வருமானம் எவ்வாறு பிரிக்கப்பட்டது என்பதற்குச் சான்றாகவும் அமைகின்றன.


வயலில் விவசாயம் செய்யப்படும் முறை பற்றி விளக்கும் பகுதி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. காரணம் இப்பகுதியில் படிப்படியாக நிலம் தயார் செய்யப்படும் விதம், அவற்றை விவரிக்கும் சொற்கள் பற்றிய குறிப்புக்கள், கருவிகள் என்பன படிப்படியாக விளக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக வருகின்ற நீர்ப்பாசனம் அதன் உரிமை ஆகிய விளக்கங்களும் அரசின் கட்டுப்பாட்டில் நீர்ப்பாசன மேலாண்மை இருந்தது என்பதை விளக்குகின்றது.


பள்ளு இலக்கியங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை இப்பகுதி எனக்கு ஏற்படுத்தியுள்ளது.


வாசிப்பு தொடரும்..

சுபா

 

Suba

unread,
Jun 10, 2016, 4:25:44 PM6/10/16
to மின்தமிழ், Dr.Subashini
நாயக்கர் காலம் - இலக்கியமும் வரலாறும் பேரா.அ.ராமசாமி எழுதிய நூல் இடையில் சில நாட்கள் அலுவலகப் பணிகள்வந்ததில் தடை ஏற்பட்டிருந்தது. சிறு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் வாசிக்கத் தொடங்கி மூன்றாம் அத்தியாயம் இன்று மாலை முடித்தேன்.

மூன்றாம் அத்தியாயம் அரசும் நிர்வாகமும் என்ற தலைப்பில் அமைந்தது. நாயக்க மன்னர்களின் ஆட்சியின் போது தமிழகத்தில் இருந்த ஆட்சி முறை மத்திய அமைப்பு முறையில் அடங்கும் அரசன் அமைச்சர்கள் குழு பற்றிய விளக்கம் பின்னர் அப்த அமைப்பில் உள்ள உள் நிர்வாக அமைப்பு, அதில் பாளையக்காரர்களின் பங்கு என்ற வகையில் தொடங்குகின்றது. பாளையக்காரர்கள் என்ற பெயர் பலருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் பார்த்ததன் விளைவாக ஞாபகம் இருக்கலாம். இந்தப் பாளையக்கார முறையை அறிமுகப்படுத்தியது மதுரை நாயக்கரான விசுவநாத நாயக்கர் என்றும் அதற்குத் துணையாய் பின்புலத்தில் இருந்து செயலாற்றியவர் தளவாய் அரியநாத முதலி என்பதையும் இப்பகுதி விளக்குவதோடு திருமலை நாயக்கரின் தளவாய் ராமய்யன் பற்றியும் அறிந்து கொள்ளும் வகையில் இதனைச் சான்று பகரும் இலக்கியங்களையும் குறிப்பிடுகின்றது. நாயக்க மன்னர்களின் நம்பிக்கைக்குரிய பாளையக்காரர்களாக தம்மிடம் ஆந்திராவிலிருந்து வந்த தெலுங்கு ராணுவ அதிகாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்தாலும் பாளையக்காரர்கள் பட்டியலில் தமிழகத்தில் அப்போது செல்வாக்குடன் விளங்கிய சாதிக் குழுத்தலைவர்களில் மன்றாடியார்கள், கவுண்டர்கள், வேளாளர்கள், மறவர்களையும், இஸ்லாமிய சமூகத்தோரில் சிலரையும் பாளையக்காரர்களாக ஆக்கியுள்ளார் என அறிய முடிகின்றது. நாம் நன்கறிந்த வீரபாண்டிய கட்டபொம்மனும் எட்டயபுர ஜமீன்தாரும் அவ்வகையில் தெலுங்கு பாளையக்காரர்கள் வரிசையில் அடங்குகின்றனர். இந்தப் பகுதியில் பாளையக்காரர்கள் செய்த பணிகளை விளக்கும் சான்றுகளாக நூலாசிரியர் கொடுத்திருக்கும் இலக்கியச் சான்றுகளில் பல நான் இதுவரை கேள்விப்படாதவரி. உதாரணமாக சங்கரலிங்க உலா, சந்திரகலாமஞ்சரி, திருமலை முருகன் பள்ளு, மான்விடுதூது, பட்பிரபந்தம், நாணிக் கண்புதைத்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். நாயக்க மன்னர் அரசவையில் இருந்த முக்கியப் பணிகளான தளவாய், பிரதானி, ராயசம் ஆகிய பணிகளை விளக்குவதோடு ஆயங்கார முறை பற்றிய விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. வரி வசூலிப்பை மையமாகக் கொண்டிருந்த நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கிராம சமுதாயத்தின் சீர்குலைவுகள் தொடங்கிவிட்டன. பிரிட்டிஷ் காலணித்துவ ஆட்சியில் இது மேலும் சீர்குலைந்தது என்னும் ஆசிரியரின் கருத்து நாயக்க மன்னர் காலத்தில் குறிப்பிடத்தக்கச் சமூக மாற்றம் நிகழ்ந்ததை வெளிப்படுத்தும் முக்கியக் கருத்தாகக் கருதுகின்றேன். நிதி நிர்வாகம் பற்றியும், அரசுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றியும் சொல்லும் பகுதியில் ஒரு நல்ல அரசன் எப்படி இருக்க வேண்டும் என அக்காலகட்டத்து இலக்கியம் எழுதிய புலவர்கள் தங்கள் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளமையையும், அரசு அதிகாரிகளின் நேர்மையற்ற போக்கையும் தாசி வீட்டுக்குச் செல்லும் பழக்கத்தையும் கூறும் சான்றுகளாக இருக்கின்றன. நாயக்க மன்னர் ஆட்சியில் தமிழக நிலப்பரப்பில் பெருமளவிலான சமுதாய மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதுவும் அதன் நீட்சியே இன்று நாம் காணும் சிதைவுற்ற தமிழ்ச் சமுதாயச் சிந்தனைப்போக்கும் என்பதையும் உணர்கின்றேன். மிக விரிவான பல தகவல்களைச் சொல்லும் ஒரு அத்தியாயம் இது. ஆசிரியர் மிக அதிக இலக்கியச் சான்றுகளை வாசித்து இப்பகுதியை நிறைவு செய்திருக்கின்றார் எனப் புரிகின்றது.

சுபா


aravindan.neelakandan

unread,
Jun 10, 2016, 5:48:28 PM6/10/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
சுபா, 

சு.கி.ஜெயகரன் அவர்களின் குமரி நில நீட்சி நூல் குறித்த தங்கள் பார்வை என்ன?

Suba

unread,
Jun 10, 2016, 5:53:23 PM6/10/16
to aravindan.neelakandan, மின்தமிழ், Dr.Subashini
2016-06-10 23:48 GMT+02:00 aravindan.neelakandan <aravindan....@gmail.com>:
சுபா, 

சு.கி.ஜெயகரன் அவர்களின் குமரி நில நீட்சி நூல் குறித்த தங்கள் பார்வை என்ன?


​இந்த நூல் என்னிடம் இல்லையே.

நீங்களும் இந்த இழையில் நீங்கள் வாசித்த நூல் பற்றி எழுதலாம்.

சுபா

aravindan.neelakandan

unread,
Jun 10, 2016, 6:59:28 PM6/10/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
பழந்தமிழ் காவியமான சிலப்பதிகாரம் 'குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள' எனக் கூறுகிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் குமரிமலை குறித்தும், அதிலிருந்து தோன்றிய பஃறுளியாறு குறித்தும், குமரி ஆறு குறித்தும் செய்திகள் உள்ளன. இச்செய்திகள் எத்தனை உண்மையானவை? பல தமிழ் அறிஞர்கள் 'குமரிக்கண்டம்' என்று ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்ததாகவும் அங்கு தமிழ் நாகரிகம் ஒரு உயர்ந்த நிலையை அடைந்திருந்ததாகவும் கூறுகின்றனர். பிரம்மஞான சபையினர் 'லெமூரியா' எனகடலில் ஆழ்ந்து போன ஒரு நிலப்பரப்பு குறித்த நம்பிக்கை கொண்டிருந்தனர். இவர்கள் மூலம், இந்தியாவில் பரவிய லெமூரியாக் கோட்பாடும் குமரிக்கண்டமும் இணைந்த ஒரு சித்தாந்தமாகிற்று. புலவர் குழந்தை, அப்பாதுரை, இரா.மதிவாணன் போன்றவர்கள் குமரிக்கண்ட வரைபடங்களை உருவாக்கினர். இந்த பின்புலத்தில்தான் நிலவியல் ஆய்வாளரான சு.கி.ஜெயகரன் அவர்களின் 'குமரி நிலநீட்சி' எனும் நூலை காண வேண்டும். அவர் இக்கற்பனைகள் 'கவித்துவ சுதந்திரத்துடன்' அதீத தமிழ் பற்றினால் உருவாக்கப்பட்டவையென்பதுடன் இவற்றிற்கு அறிவியல் அடிப்படை எதுவும் இல்லையெனவும் காட்டுகிறார். எனில் கடல் கொண்ட குமரிக் கோடு என்பது வெறும் கற்பனைதானா? நிலவியல், ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி, இலக்கிய ஆதாரங்கள் மற்றும் தொல்மானுடவியல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு யதார்த்த நிலைப்பாட்டினைத் தன் முடிவாகத் தருகிறார் ஜெயகரன். வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தில் தமிழகம்-இலங்கை கடற்கரைகளை ஒட்டியிருந்து பின்னர் கடலில் மூழ்கிய நிலப்பரப்புகளே குமரி எனும் நிலநீட்சி குறித்த மரபின் வித்தாகும் எனக்கருதும் ஜெயகரன் அவ்வாறு கடல் நீர்மட்ட உயர்வில் உயிர்தப்பியவர்களிடமிருந்து குமரி நிலநீட்சி குறித்த நினைவு இன்றும் நம்மிடம் நிலவுவதாகக் கூறுகிறார். குமரி மாவட்டத்தில் கடற்கரையோர கிராமங்களான முட்டம் போன்ற இடங்களில் அண்மைக்கால நினைவுகளில் கூட கடல் கொண்ட நிலப்பரப்பு குறித்த விவரணைகள் நிலவுகின்றன. நிச்சயமாக எனில் தொல்பழம் மானுடக்குடியேற்ற எச்சங்கள் இன்றும் தென்னக ஆழ்கடலில் - நாம் கண்டடையக் காத்தபடி - துயில் கொண்டிருக்கக் கூடுமா? இனிவரும் நாட்களில் தென்னகக் கடல்களில் ஆழ்கடல் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டால் அது இம்மர்மங்களுக்கு விடை பகரக் கூடும்.


Suba

unread,
Jun 11, 2016, 6:05:16 AM6/11/16
to மின்தமிழ், Dr.Subashini
நாயக்கர் காலம் - இலக்கியமும் வரலாறும் - பேரா.அ.ராமசாமி 
4ம் அத்தியாயத்தை இன்று காலையே வாசிக்கத் தொடங்கி விட்டேன். 

இந்த அத்தியாயம் எனக்கு ஆர்வம் உள்ள ஒரு பகுதி. அதனால் அடுத்த வரி எதைச் எதைச் சொல்கின்றது என என் கண்களும் கவனமும் நூலிலேயே ஆழ்ந்து விட்டன. இந்தப் பகுதி நாயக்கர் கால ஆட்சியில் தமிழகத்தில் இருந்த சமய நிலையைக் குறிக்கின்றது. 

இந்த அத்தியாயம் முழுதும் ஏராளமான விசயங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. எதனைக் குறிப்பிட்டுச் சொல்வது தகும் எனத் தெரியவில்லை என்ற போதிலும் அதி முக்கியமாக நான் கருதும் விசயங்களை மட்டும் இந்தப் பதிவில் குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். 

பொதுவாகவே ஒரு நூலை வாசிக்கும் போது அதில் முக்கிய பகுதிகளை கோடிட்டுச் சிறு குறிப்பு என எழுதி வைப்பது என் பழக்கம். என் நூல்கள் எல்லாம் இந்தச் சிரமத்தை அனுபவிப்பவை தான். அந்த வகையில் இந்த நூலிலும் என் கைவண்ணக் கோலங்கள் அதிகமாகவே உள்ளன.. தவிர்க்க முடியவில்லை! 

இந்த அத்தியாயத்தின் ஆரம்பம், அதிலும் 2ம் பத்தி நல்ல தொடக்கம். சமயவாதிகள் எப்படி தம் சமயத்தை முன்னெடுக்கின்றனர் என்பதை விவரிப்பதாக இது அமைந்துள்ளது. தொழில் அடிப்படையில் வர்த்தகத்துறை அறிவும் எனக்கு இருப்பதனால், சமயங்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் புகழை நிலை நிறுத்தவும், விரிவாக்கவும் செய்யும் முயற்சிகளின் பின்னனியில் இருக்கும் ஒற்றுமை இப்பகுதியை வாசிக்கும் போது மனதில் எழாமல் இல்லை! 

நாயக்கர் காலத்தில் இந்து சமயம், அதில் சைவ வைண வேறுபாடு, பொதுவாகவே நாயக்க மன்னர்களின் வைணவச் சார்பு நிலையும் சைவ சமயத்தோரின் இது தொடர்பான மனச்சங்கடங்கள் போன்றன நன்கு குறிப்பிடப்படுகின்றன. 

தமிழகத்தில் பிற்காலச் சோழர்கள் வலுவிழந்த பின்னர், பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த தமிழகத்தில், அவர்களது குழுச்சண்டைகளால் பிரிந்து வலுவிழந்து, வட நாட்டு இஸ்லாமியர் வருகையும், சம்புவராயர் ஆட்சியும் இடைப்பட்ட காலத்தில் ஒரு தேக்க நிலையை தமிழகத்தில் ஏற்படுத்தியிருந்தது. வட நாட்டு இஸ்லாமியர் வருகை இந்து சமய கோயில்களின் வளர்ச்சியைப் பாதித்திருந்தன. தமிழகத்தில் இந்து சமய மறுமலர்ச்சியை முன்வைத்து ஆட்சியை பிடித்துக் கொண்ட நாயக்கர்கள் தமிழகத்தில் இந்து சமய வளர்ச்சி தொடர துணையிருந்தனர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. விசயநகர மன்னன் குமாரசேனனின் மனைவியின் மதுராவிஜயம் நூல் பற்றி நான் அறிந்திருந்தாலும் இதுவரை அக்காப்பியத்தை வாசித்ததில்லை. அதனைப் பற்றிய குறிப்பை இந்த நூலில் பார்த்தபோது வாசிக்க வேண்டிய நூற்கள் பட்டியலில் இணைத்துக் கொண்டேன். 

நாயக்கர்கள் பரம வைணவர்களாக இருந்த போதிலும் சைவ சமயம் சார்ந்த கோயில்களுக்கு அவர்கள் கொடையளித்து வளர்த்தனர் என்பதை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணி செய்திகள் வழியும் அறிய முடிகின்றது. 

நாயக்கர்கள் சைவ, வைணவ, சமயங்களோடு இஸ்லாம் மதத்தையும், கிறிஸ்துவ மதத்தையும் பின்பற்றுவோரையும் ஆதரித்தனர் என்பதையும் சான்றுகளோடு இப்பகுதியில் காண முடிகின்றது. அதிலும் இஸ்லாமிய பாளைக்காரர்கள் சிலரும் நாயக்கர் ஆட்சியில் இருந்தார்கள் என்பது தக்க ஆதாரமாகவும் அமைகின்றது. 

ஆனால் சமணம் பற்றி ஒரு குறிப்பையும் இந்த அத்தியாயத்தில் காணவில்லை. ஏன் என்ற கேள்வி எழுகின்றது. 9ம் நூற்றாண்டில் மீண்டும் அச்சணந்தி முனிவரின் முயற்சிகளால் சமணம் மதுரை தொண்டைமண்டலம் போன்ற பகுதிகளில் பரவின, செழித்தன. இந்தச் சமண சமயத்தின் நிலை நாயக்கர் காலத்தில் என்னவாயிற்று என ஒரு சிறு குறிப்பும் இந்த அத்தியாயத்தில் இல்லாத நிலை எனக்குக் கேள்வியை எழுப்புகின்றது. ஆசிரியர் இதனைத் தவிர்த்து விட்டாரா அல்லது சான்றுக்கு பயன்படுத்திய எந்த இலக்கியமும் சமணத்தைப் பற்றி பேசவில்லையா என்ற ஐயத்தை இது எழுப்புகின்றது. 

நூலின் இந்த அத்தியாயத்தின் மிக முக்கியமாக நான் கருதுவது 2 விசயங்கள். 

முதலாவது, சைவமும் வைணவமும் தனித் தனி சமயங்களாக ஒன்றுக்கு ஒன்று யார் உயர்வு? எந்த மதம் பெரிது? என அவர்களுக்குள் வாதிட்டுக் கொண்டிருந்த கருத்தியலில் முரண்பட்ட நிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டு, இலக்கியங்கள் இந்த இரண்டு மதங்களுக்குள் சமரசத்தை உருவாக்கும் வகையிலான போக்கை கடைபிடித்துள்ளமையை பல எடுத்துக் காட்டுக்களுடன் ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது. அதே போல மக்கள் சமயமாக எளிய மக்களின் நாட்டார் வழிபாட்டியலில் அங்கம் பெற்றிருந்த குலதெய்வம், குடும்ப தெய்வம் போன்றவை, இலக்கியங்களால் இந்து சமயம் என்ற ஒரு பெரிய குடைக்குள் அரவணைக்கப்பட்ட வகையிலான முயற்சிகள் பற்றிய விரிவான குறிப்புக்கள் மிக அருமையாக உள்ளன. 

வைதீகச்சமயக் கடவுளர்களை அடித்தட்டு மக்களுக்கும் உரிமையாக்கி அவர்கள் வழிபடும் தெய்வத்தில் இணைக்கும் போக்கினை பள்ளு நூற்களும் குறவஞ்சி நூற்களும் கையாண்டது அடித்தட்டு மக்களின் சிந்தனையில் மிக ஆழமான மாற்றத்தை உருவாகி வெற்றி கண்டது என்பதை இன்றைய கால நிலை உறுதிப் படுத்துகின்றது. இது ஒரு வகை சமய உத்திதான். ஆயினும் சைவம், வைணம் எனத் தனித்தனியாக நின்று போராடிக்கொண்டிருப்பதை விட குழுவாக இந்து சமயம் என்ற ஒரு மாபெரும் வட்டத்திற்குள் அனைத்தையும் சேர்த்து அதில் நாட்டார் கடவுளர்களையும் இணைத்துக் கொண்டு செல்லும் போது இந்து சமயம் ஏனைய புற சமயங்களின் தாக்கங்களிலிருந்து தம்மை பலப்படுத்திக் கொள்ள இது வழிவகுக்கின்றது என்பது வரலாறு காட்டும் உண்மை. 

இரண்டாவது முக்கியக் கருத்தாக நான் இந்த அத்தியாயத்தில் காண்பது, ஐரோப்பியர் வசம் தமிழகம் படிப்படியாக மாறியமையும் கிறிஸ்துவ சமயத்தின் வளர்ச்சியும் பற்றிய குறிப்புக்கள். இந்து சமயத்தின் அடித்தளமான சாதிய அமைப்பின் மீது தனது கவனத்தைச் செலுத்தி எல்லா மக்களுக்கும் கல்வி, பாதுகாப்பு என்ற வகையில் தனது சமயத்தைக் கொண்டு சென்று வெற்றியும் கண்டது கிறிஸ்துவ சமயம். இதன் அடிப்படையில் நெடுங்காலமாக அடிமை நிலையிலிருந்து பள்ளர், பறையர், சாணார் ஆகிய சமூகத்து தமிழ் நில மக்கள் இந்த மாற்று சமயத்துக்குப் பெருமளவில் மாறத்தொடங்கிய நிகழ்வைச் சான்றுகளுடன் ஆசிரியர் குறிப்பிடுவதும் மிக நன்றாகத் தமிழக நிலப்பரப்பில் நிகழ்ந்த வரலாற்று மாற்றத்தை வாசிப்போர் புரிந்து கொள்ள உதவுகின்றது. தூத்துக்குடியில் பரதவ இனத்து மக்களின் மதமாற்றமும் இதே வகைதான் என்பது என் நினைவிற்கு வந்தது. 

அடிப்படையில் எனது தனிப்பட்ட ஆய்வுகள் ஐரோப்பிய லூத்தரன், கத்தோலிக்க பாதிரிமார்களின் தமிழ் ஈடுபாடு பற்றியது என்பதால் இந்தப் பகுதியை வாசிக்கும் போது மிகச்சரியாக வரலாற்றுத் தகவல்கள் வழங்கப்பட்டிருப்பது எனது ஆய்வுகளுக்கும் கூடுதல் பலம் சேர்ப்பதாகக் காண்கின்றேன். 

இந்தப் பகுதியில் அடித்தட்டு சமூகத்தில் பள்ளர் சமூக தமிழ் மக்களின் வேளாண் தொழிலில் அவர்கள் சந்தித்த இன்னல்கள் பற்றிய குறிப்புக்கள் சமுதாய ரீயிதில் ஒடுக்கப்பட்ட அச்சமூக மக்களின் நிலையைத் தெளிவுற விளக்குகின்றது. நாள் தோறும் உழவு, நடவு, களை எடுப்பு, நீர்ப்பாசனம், அறுவடை என உழைத்துக் கொண்டிருக்கும் இம்மக்களுக்குக் கிடைக்கும் கூலியோ மிக மிகச் சிறிது. இந்தத் தொழிலாளி உற்பத்தி செய்த நெல்லை அரசு, அரசாங்க மகமை, கோயில் நிர்வாகம், அந்தணர்கள், உபாத்தியாயர்கள், சத்திரங்கள் எனப் பலருக்கும் விநியோகித்தது போக மிகக் குறைவான அளவே உழைக்கும் இம்மகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நெல்லும் கூட தரங்குறைந்த நெல்லாகவே இருந்திருக்கின்றது என்று ஆசிரியர் சமூக அநீதியையும் தொட்டுக் காட்டியிருப்பது பாராட்டுக்குறியது என்று கருதுகிறேன். 

இந்த நூலின் அடுத்த அத்தியாயம் சாதிகளும் சமூக அசைவியக்கமும். என் கருத்தை ஈர்க்கும் ஒரு தலைப்பு தான் ஆயினும் இன்று தொடர்ந்து வாசிக்க வாய்ப்பிருக்காது. நாளைத் தொடங்கி அலுவலகப் பயணம் இருப்பதால் மீண்டும் அடுத்த அத்தியாயத்தை வாசித்து என் கருத்துக்களை வாய்ப்பிருக்கும் போது பகிர்ந்து கொள்கிறேன். 

சுபா 




Suba

unread,
Jun 11, 2016, 6:21:05 AM6/11/16
to aravindan.neelakandan, மின்தமிழ், Dr.Subashini, bala subramani
2016-06-11 0:59 GMT+02:00 aravindan.neelakandan <aravindan....@gmail.com>:
பழந்தமிழ் காவியமான சிலப்பதிகாரம் 'குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள' எனக் கூறுகிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் குமரிமலை குறித்தும், அதிலிருந்து தோன்றிய பஃறுளியாறு குறித்தும், குமரி ஆறு குறித்தும் செய்திகள் உள்ளன. இச்செய்திகள் எத்தனை உண்மையானவை? பல தமிழ் அறிஞர்கள் 'குமரிக்கண்டம்' என்று ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்ததாகவும் அங்கு தமிழ் நாகரிகம் ஒரு உயர்ந்த நிலையை அடைந்திருந்ததாகவும் கூறுகின்றனர். பிரம்மஞான சபையினர் 'லெமூரியா' எனகடலில் ஆழ்ந்து போன ஒரு நிலப்பரப்பு குறித்த நம்பிக்கை கொண்டிருந்தனர். இவர்கள் மூலம், இந்தியாவில் பரவிய லெமூரியாக் கோட்பாடும் குமரிக்கண்டமும் இணைந்த ஒரு சித்தாந்தமாகிற்று. புலவர் குழந்தை, அப்பாதுரை, இரா.மதிவாணன் போன்றவர்கள் குமரிக்கண்ட வரைபடங்களை உருவாக்கினர். இந்த பின்புலத்தில்தான் நிலவியல் ஆய்வாளரான சு.கி.ஜெயகரன் அவர்களின் 'குமரி நிலநீட்சி' எனும் நூலை காண வேண்டும். அவர் இக்கற்பனைகள் 'கவித்துவ சுதந்திரத்துடன்' அதீத தமிழ் பற்றினால் உருவாக்கப்பட்டவையென்பதுடன் இவற்றிற்கு அறிவியல் அடிப்படை எதுவும் இல்லையெனவும் காட்டுகிறார். எனில் கடல் கொண்ட குமரிக் கோடு என்பது வெறும் கற்பனைதானா? நிலவியல், ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி, இலக்கிய ஆதாரங்கள் மற்றும் தொல்மானுடவியல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு யதார்த்த நிலைப்பாட்டினைத் தன் முடிவாகத் தருகிறார் ஜெயகரன். வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தில் தமிழகம்-இலங்கை கடற்கரைகளை ஒட்டியிருந்து பின்னர் கடலில் மூழ்கிய நிலப்பரப்புகளே குமரி எனும் நிலநீட்சி குறித்த மரபின் வித்தாகும் எனக்கருதும் ஜெயகரன் அவ்வாறு கடல் நீர்மட்ட உயர்வில் உயிர்தப்பியவர்களிடமிருந்து குமரி நிலநீட்சி குறித்த நினைவு இன்றும் நம்மிடம் நிலவுவதாகக் கூறுகிறார். குமரி மாவட்டத்தில் கடற்கரையோர கிராமங்களான முட்டம் போன்ற இடங்களில் அண்மைக்கால நினைவுகளில் கூட கடல் கொண்ட நிலப்பரப்பு குறித்த விவரணைகள் நிலவுகின்றன. நிச்சயமாக எனில் தொல்பழம் மானுடக்குடியேற்ற எச்சங்கள் இன்றும் தென்னக ஆழ்கடலில் - நாம் கண்டடையக் காத்தபடி - துயில் கொண்டிருக்கக் கூடுமா? இனிவரும் நாட்களில் தென்னகக் கடல்களில் ஆழ்கடல் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டால் அது இம்மர்மங்களுக்கு விடை பகரக் கூடும்.

இந்த நூலைப்பற்றிய அறிமுகம் வழங்கியமைக்கு நன்றி அரவிந்தன். 

குமரிக்கடல் ஆய்வு, லெமூரியா ஆய்வு என்பனவற்றில் எனக்கு ஈடுபாடு உண்டு. கடலுக்குள் மூழ்கிய நிலப்பரப்பில் இருந்த நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள்​,அவர் தம் வாழ்வியல் ஆகியன பற்றி விரிவான தொல்லியல் ஆவுகளோடு கடலியல் ஆய்வுகளும் மேற்க்கொள்ளப்படுவதுதான் சிறந்த வகையில் இந்த ஆய்வை முன்னெடுத்துச் செல்ல உதவும். நம் குழுமத்தில் இருக்கும் நண்பர் ஒரிசா பாலு தன்னளவிலும் சில தன்னார்வலர்களின் உதவியுடனும் இவ்வகை ஆய்வுகளைத் தொடர்ந்து செய்து வருகின்றார். 

எனது கருத்துப்படி தமிழக பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறை தொல்லியல்துறையுடன் இணைந்தவகையிலான ஆய்வுகளை வடிவமைத்து இந்தத் துறைக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து ஆய்வுகளைத் தொடங்க வேண்டும். தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியில் ரு துறை இவ்வகை பணியில் ஈடுபட்டுள்ளார்கள் எனக் கருதுகிறேன். ஏனைய பல்கலைக்கழகங்களோ ஆய்வு நிறுவனங்களோ செய்கின்றனவா என்பது கேள்வியாக இருக்கின்றது. 

என்னிடம் கொடுமுடி சண்முகம் அவர்களின் குமரிக்கண்டம் நூல் உள்ளது. சிறிய நூல்தான் என்றாலும் இவ்வகையான தகவல்களை நன்கு கோடிட்டுக் காட்டியுள்ளார். 


சுபா


 

Singanenjam Sambandam

unread,
Jun 11, 2016, 1:53:14 PM6/11/16
to mint...@googlegroups.com
குமரிக் கண்டம் ஓர் புவியியல்  பார்வை ; எனும் தலைப்பில்   தொடர் எழுத விருப்பம். குமரிக்கண்ட ஆதரவாளர்கள் எனக்கு  மறுமொழி கொடுத்து ஒரு  பட்டிமன்றம் அமைத்தால்  நன்றாக இருக்கும். பல உண்மைகள்    வே ளிச்சத்திற்கு வரும்.  ஆனால்  சில் இடங்களில் கூறியது கூறல் ஆகி விடும்.


--

N. Ganesan

unread,
Jun 14, 2016, 2:47:03 AM6/14/16
to மின்தமிழ்


On Saturday, June 11, 2016 at 10:53:14 AM UTC-7, singanenjan wrote:
குமரிக் கண்டம் ஓர் புவியியல்  பார்வை ; எனும் தலைப்பில்   தொடர் எழுத விருப்பம். குமரிக்கண்ட ஆதரவாளர்கள் எனக்கு  மறுமொழி கொடுத்து ஒரு  பட்டிமன்றம் அமைத்தால்  நன்றாக இருக்கும். பல உண்மைகள்    வே ளிச்சத்திற்கு வரும்.  ஆனால்  சில் இடங்களில் கூறியது கூறல் ஆகி விடும்.



இலக்கிய வரலாற்றின்படி ஆராய்தற்கும் வாய்ப்புகள் உள்ளன.

ஜூன் 10 அன்று குறிப்பிட்டேன்:
Kuamri KaNDam myth:
BTW, based on a 2 lines in Cilampu, the first novel of Tamil nationalism, myths are generated in late 19th century.
Ilango AdikaL wrote, likely from today's Karur, the Sangam era capital of Chera country, his imagination
using Kumaricode and PaRali river in Kanyakumari district. This myth grew in Iraiyanar AkapporuL - a book
written with 3 Sangam legends, an attempt by Saivaites to conceal/divert the contribution of Jains in forming
early grammar (Tolkappiyar) and literature (Tiruvalluvar) and epigraphy (Cf. Iravatham's masterpiece).
S. K. Jayakaran's book (Baskaran's brother) and Sumathi Ramasamy's book (UMich) are worth reading.

நா. கணேசன்

Singanenjam Sambandam

unread,
Jun 14, 2016, 3:10:39 AM6/14/16
to mint...@googlegroups.com
சுமதி, ஜெயகரன்  ஆகியோரின் நூல்களை நான் படித்தேனில்லை.  என் நோக்கம்  துறை சாரா  பெருமக்களும் புரிந்து கொள்ளும் வகையில்  எளிய மொழியில்    எழுத வேண்டும் என்பதே. குறை காணின்  குறிப்பிடுக. . 

K R A Narasiah

unread,
Jun 14, 2016, 12:34:33 PM6/14/16
to mintamil
As a seafarer, having sailed for fourteen years through every  major sea of the world,  I am not in a position to agree with Orissa Balu fully. He is doing wonderful work no doubt; but the existence of Kumatrikkandam with geophysica proofl is questionable. Unless scientifically proved with no emotional involvement I am unable to agree. Thiru Singanenjan is a geophysicist. He is writing with clarity. Let us follow him and take the discussion forward. Repeating the same statement Ad Infinitum does not make it true.
Narasiah


On Tue, Jun 14, 2016 at 12:40 PM, Singanenjam Sambandam <singa...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (singa...@gmail.com) Add cleanup rule | More info

சுமதி, ஜெயகரன்  ஆகியோரின் நூல்களை நான் படித்தேனில்லை.  என் நோக்கம்  துறை சாரா  பெருமக்களும் புரிந்து கொள்ளும் வகையில்  எளிய மொழியில்    எழுத வேண்டும் என்பதே. குறை காணின்  குறிப்பிடுக. . 
2016-06-14 12:17 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

Singanenjam Sambandam

unread,
Jun 15, 2016, 3:04:40 AM6/15/16
to mint...@googlegroups.com
Sir, I'm a Geologist ........but do have  experience in  Geophysics as I was involved mostly in exploration. 

Aravindan Neelakandan

unread,
Jun 15, 2016, 5:36:06 AM6/15/16
to mint...@googlegroups.com
I do not know in this group there are such great personalities like Narasiah, a great inspiring personality. We were all inspired by his late brother the venerated Professor.  Singanenjam Sambandam ayya this is really great. A lot of myth centers around Kumari Kandam - most which are clearly 19th century theosophist fantasy with no basis in reality. It was not Lemuria but Africa which was the place of origin of modern humans and there was no single 'mother of all languages' in human evolution. It is again a fallacy derived from the myth of Babel.

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/nVY2mdvRu2A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Jun 15, 2016, 5:43:28 AM6/15/16
to mintamil
From the beginning, I have taken the same standpoint of Mr.Narasiah and Orissa Balu was aware of it as early as 2010. as we had met and discussed then. This said, i admire and enthuse him, which also he knows.
Regards to all,
Innamburan

Singanenjam Sambandam

unread,
Jun 15, 2016, 6:19:34 AM6/15/16
to mint...@googlegroups.com
பெரியவகளுக்கு   வணக்கம்.   இந்த  தொடரில்   லெமுரியா   , கோண்ட்வானா    எல்லாவற்றையும்  விரிவாகக் காண்போம்.

Aravindan Neelakandan

unread,
Jun 15, 2016, 6:46:54 AM6/15/16
to mint...@googlegroups.com
அருமை. ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். கோண்ட்வானா காலத்தில் மானுடம் இல்லையல்லவா?

Singanenjam Sambandam

unread,
Jun 15, 2016, 6:51:42 AM6/15/16
to mint...@googlegroups.com
இல்லைங்க.

N. Ganesan

unread,
Jun 20, 2016, 8:57:12 PM6/20/16
to மின்தமிழ்
பாரதிதாசன், பெரியார் போன்றவர்கள் அகத்தியர்  தமிழுக்கு முதல் இலக்கணம் தந்தார் என்னும் கட்டுக்கதை பற்றிச் சொல்லியுள்ளனர்.
இவை தமிழ்ப் பேராசிரியர்கள் ஆராய்ச்சியால் காட்டிய முடிவுகளை படித்துப் பேசியவை ஆகும்.

இன்றைய செய்தி - குமரிக்கண்டம் பற்றி:

Singanenjam Sambandam

unread,
Jun 21, 2016, 7:44:57 AM6/21/16
to mint...@googlegroups.com
"குமரிக் கண்டம் ? " எனும் தலைப்பில் எழுதி வரும்  தொடர் கட்டுரையில் விவரிப்பேன். லெமுரியா எனும் சொல்லை சொன்னது தொல்லியலாளர்  அல்ல.. ஒரு ஜியாலஜிஸ்ட்  ஒரு  பயாலஜிஸ்ட்  சேர்ந்து தான். நம் ஊர் தொல்லியலாளர்கள், கொஞ்சமாவது   புவியியல் அறிந்திருக்க வேண்டும். புவியியல்  அறியாமல் "குமரிக் கண்டம் " பற்றி பேசுவதில் பொருள் இல்லை. 

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Jun 22, 2016, 3:14:30 AM6/22/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
குமரிக்கண்டம் ஒரு கற்பனை என்று பல அறிவியல் ஆதாரங்கள் காட்டினாலும் அவற்றில் "ஒரு நிலைசார்ந்த"(பையாஸ்டு) நோக்கம் தான் இருக்கிறது.இன்று ஜி.எஸ்.ஐ மற்றும் ஏ.ஸ்.ஐ.பல தொன்மை ஆராய்ச்சிகளை நடத்தினாலும் இந்திய மொழிகளின் முன்னோடி மொழியாக இருப்பது தமிழ் அல்லது அது சார்ந்த திராவிடமொழிகளாக‌
இருக்கிறது என்ற அடி உண்மை இந்திய அரசாங்கத்தை நடத்து பவர்களுக்கு ஒரு அதிர்ச்சியாக இருப்பதால் தான் சிந்துவெளிநாகரிக ஆராய்ச்சி குமரிக்கண்ட ஆராய்ச்சி முதலியற்றை மழுங்கடிக்கும் முயற்சியில் மறைமுகமாக ஈடுபடுகிறார்கள்.தமிழ் தவிர மற்ற மொழிகள் எல்லாம் சமஸ்கிருத ஒலிப்பு வடிவத்தை அப்படியே ஏற்றுக்கொண்டதால் அந்த மொழிக்காரர்களும் இந்திய அரசாங்க ஆராய்ச்சிக்காரர்களின் அடியொற்றியே செயல் படுகிறார்கள்.தமிழ் மொழியில் சமஸ்கிருத ஒலிப்புகளின் "நான்கு வர்க்க" முறை இல்லவே இல்லை.எனவே இந்தியாவின் தொன்மை மொழி என்பதற்கு இதுவே சரியான ஆதாரம் ஆகும்.தமிழ் மீது பற்றின் காரணமாக குமரிக்கண்டத்தையும் சிந்துவெளி நாகரிகத்தையும் யாரும் போற்றி உரைக்கவில்லை.மொழி ஒலிப்பியல் மற்றும் வேர்ச்சொல் இயல் இதன் மூலமும் தமிழின் தொன்மை சமஸ்கிருதத்தைவிட முந்தியது என நிறுவப்பட்டுள்ளது.இப்போது அறிவியல் பூர்வமாக குமரிக்கண்டத்தை மறுப்பவர்களுக்கு அதே அறிவியல் மூலம் குமரிக்கண்டம் தமிழர்களின் தொன்மையைக்குறிக்க ஆயிரக்கணக்காய் கூகிள் லிங்குகள் காட்ட இயலும்.மேலும் தமிழ் தொன்மையையும் திராவிடக்கருத்துகளையும் நாத்திகத்தோடு தொடர்பு படுத்தும் ஆத்திகப்பெருமக்கள் தான் இத்தகைய தமிழுக்கு எதிரான அணியில் நிற்கிறார்கள்.மொழியால் தமிழைச்சார்ந்து இருந்தபோதும் அவர்களது
மதச்சார்பு (தியாலஜிக்கல் இன்ஸ்டிங்க்ட்) உள் உணர்வு தான் இந்த‌ ஆராய்ச்சி சண்டைகளை மூட்டிவிடக்காரணமாய் இருக்கிறது.இதை யார் மனத்தையும் புண்படுத்தும் நோக்கத்தோடு நான் எழுதவில்லை.தமிழ் தொன்மையை நிறுவ அதற்கென்று பலமான‌ அரசாங்கம் வேண்டும்.இந்த குறைபாட்டினால் தான் தமிழ் ..இந்தியாவின் தொன்மை மொழியான தமிழ்.... மூன்றாந்தர நாலாந்தர‌ நிலைக்கு தள்ளப்பட்டு அந்த "தொன்மை ஆராய்ச்சிகள்" எல்லாம் நீர்த்துப்போகும் அளவுக்கு சூழ்ச்சிவலைகள் பின்னப்படுகின்றன.தமிழர்கள் விழிப்புடனும் அறிவியல் உணர்வுடனும் இந்த பாதையில் நிலைத்து இருந்தால் மட்டுமே தமிழின் தொன்மை இந்தியாவுக்கு மட்டும் அல்ல இந்த உலகுக்கே ஒளி பரப்பும்.

அன்புடன் ருத்ரா



Singanenjam Sambandam

unread,
Jun 22, 2016, 4:38:06 AM6/22/16
to mint...@googlegroups.com, Dr.Subashini
மதிப்பிற்குரிய  பரமசிவம்   ஐயா  அவர்களுக்கு  பணிவான  வணக்கம். 
தமிழின்   தொன்மை  குறித்தோ  வளமை குறித்தோ   இரண்டாம் கருத்துக்கு   இடமில்லை. இந்தி மொழி வளர்ச்சிக்கு செலவிடப்படும் தொகை பல கோடிகள்.  தமிழுக்கு   ஒதுக்கப்படும்   சிறுதொகையும்  செலவிடப் படுவதில்லை. நம் தலைவர்கள்  அப்படி. 

குமரிக்கண்டம்  பற்றி ஜி.எஸ் .ஐ . எந்த  ஆய்வும்  மேற்கொள்ளவில்லை. இது  முழுக்க முழுக்க ஏ . எஸ் .ஐ . மற்றும் மாநிலத்தொல்லியல்  துறை   சார்ந்தது..

நாம்   சொல்லும்  உண்மைகள்  அறிவு  சார்ந்தவையாக இருக்க வேண்டும்.....உணர்வு  சார்ந்ததாக மட்டும்  இருக்கக்கூடாது  என்பதே என் எண்ணம். அப்போதுதான்  அடுத்தவன்   நம்மை மதிப்பான்.
### இப்போது அறிவியல் பூர்வமாக குமரிக்கண்டத்தை மறுப்பவர்களுக்கு அதே அறிவியல் மூலம் குமரிக்கண்டம் தமிழர்களின் தொன்மையைக்குறிக்க ஆயிரக்கணக்காய் கூகிள் லிங்குகள் காட்ட இயலும்###

தயவு செய்து  காட்டுங்கள் .....நானும் தெரிந்து கொண்டு என் கருத்தி மாற்றி மகிழ்வேன். தற்போது  நான் எழுதிவரும் "குமரிக்கண்டம்?"  தொடர்  கட்டுரையை   ஓய்வு  கிட்டும்போது  பாருங்கள்.இதில் முன்பு  கூறியதையே   சில  இடங்களில் தொடர்ச்சி கருதி கூறி வருகிறேன்.  மாற்றுக் கருத்தைத்  தெரிவியுங்கள்.  மகிழ்வேன் . வணக்கம்.


 

--

K R A Narasiah

unread,
Jun 22, 2016, 10:47:53 AM6/22/16
to mintamil
நான் சிங்கநெஞ்சன் கட்சி. கூகிளில் காட்டுவதெல்லாம் உண்மையல்ல; குமரிக்கண்டத்தின் நிலைப் பாட்டைக் கருத்தில் கொண்டு பேசும் போது அதில் தமிழின் தொன்மையைக் குறித்து குறைவிருக்காது. திரும்பித் திரும்பிச் சொல்வதால் மட்டும் குமரிக்கண்டம் உண்மையாகிவிடாது. சரியான ஆதாரங்கள் வேண்டும். முன்னரே சொன்னது போல நான் ஆய்வாளர்களூடன் இதைக் குறித்துப் பல முறை பேசியிருக்கின்றேன். எஸ் ஆர் ராவுடன் 1980 களில் கருத்தரங்களில் பங்கு கொண்டுள்ளேன். Marine archaeology department Andhra University யில் பணியாற்றிய பேராசிரியர் கங்காதரம் எனது அக்கால இனிய நண்பர். சிங்கநெஞ்சனுக்கு அவரைப் பற்றித் தெரிந்திருக்கலாம். 

நரசய்யா

On Wed, Jun 22, 2016 at 2:08 PM, Singanenjam Sambandam <singa...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (singa...@gmail.com) Add cleanup rule | More info

மதிப்பிற்குரிய  பரமசிவம்   ஐயா  அவர்களுக்கு  பணிவான  வணக்கம். 
தமிழின்   தொன்மை  குறித்தோ  வளமை குறித்தோ   இரண்டாம் கருத்துக்கு   இடமில்லை. இந்தி மொழி வளர்ச்சிக்கு செலவிடப்படும் தொகை பல கோடிகள்.  தமிழுக்கு   ஒதுக்கப்படும்   சிறுதொகையும்  செலவிடப் படுவதில்லை. நம் தலைவர்கள்  அப்படி. 

குமரிக்கண்டம்  பற்றி ஜி.எஸ் .ஐ . எந்த  ஆய்வும்  மேற்கொள்ளவில்லை. இது  முழுக்க முழுக்க ஏ . எஸ் .ஐ . மற்றும் மாநிலத்தொல்லியல்  துறை   சார்ந்தது..

நாம்   சொல்லும்  உண்மைகள்  அறிவு  சார்ந்தவையாக இருக்க வேண்டும்.....உணர்வு  சார்ந்ததாக மட்டும்  இருக்கக்கூடாது  என்பதே என் எண்ணம். அப்போதுதான்  அடுத்தவன்   நம்மை மதிப்பான்.
### இப்போது அறிவியல் பூர்வமாக குமரிக்கண்டத்தை மறுப்பவர்களுக்கு அதே அறிவியல் மூலம் குமரிக்கண்டம் தமிழர்களின் தொன்மையைக்குறிக்க ஆயிரக்கணக்காய் கூகிள் லிங்குகள் காட்ட இயலும்###

தயவு செய்து  காட்டுங்கள் .....நானும் தெரிந்து கொண்டு என் கருத்தி மாற்றி மகிழ்வேன். தற்போது  நான் எழுதிவரும் "குமரிக்கண்டம்?"  தொடர்  கட்டுரையை   ஓய்வு  கிட்டும்போது  பாருங்கள்.இதில் முன்பு  கூறியதையே   சில  இடங்களில் தொடர்ச்சி கருதி கூறி வருகிறேன்.  மாற்றுக் கருத்தைத்  தெரிவியுங்கள்.  மகிழ்வேன் . வணக்கம்.


 
2016-06-22 12:44 GMT+05:30 ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com>:
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Singanenjam Sambandam

unread,
Jun 22, 2016, 12:18:52 PM6/22/16
to mint...@googlegroups.com
பேராசிரியர் கங்காதரம் ஐயா  பற்றி பல   ஆண்டுகளுக்குமுன்   கேள்விப் பட்டுள்ளேன்.  

குமரிக்கண்டம்   என்று ஒன்று இருந்தது  என்று   ஆதார பூர்வமாக   நிறுவப்பட்டால்   அது மிக மிக மகிழ்ச்சி   தருவதாக  அமையும். 




ருத்ரா இ.பரமசிவன்

unread,
Jun 22, 2016, 10:01:50 PM6/22/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

அன்பார்ந்த திரு சிங்கநெஞ்சன் அவர்களே

//குமரிக்கண்டம்   என்று ஒன்று இருந்தது  என்று   ஆதார பூர்வமாக   நிறுவப்பட்டால்   அது மிக மிக மகிழ்ச்சி   தருவதாக  அமையும்.//
 
இதுவும் மகிழ்ச்சி தரும் உங்கள் அறிவிக்கை தான்.இது குமரிக்கண்டம் இருந்திருக்கிறது இருக்கலாம் என்ற ஒரு நேர்ப்புள்ளியைத்தான் காட்டுகிறது.அறிவியல் பூர்வமாக இல்லை என்பதால் குமரிக்கண்டம் என்ற கருத்தே தவறானது என்ற எதிர்மறைப்புள்ளியை நோக்கி ஏன் உங்கள் அரிய மிகவும் செறிவு மிக்க ஆராய்ச்சித்திறனை வீணடிக்க வேண்டும்.குமரிக்கண்டம் இல்லை என்பதற்கு இத்தனை ஆழமான ஆராய்ச்சியே தேவையில்லையே! இன்றைய அறிவியல் பயணத்தில் 
கூகிள் என்பதும் பல பல்க‌லைக்கழகங்களின் ஒன்று திரண்ட வடிவம் தான்.நமது சௌகரியத்துக்காக அதை பொய் என்பதும் மெய் என்பதும் சரியில்லை தான். ஆராய்ச்சிகளின் திரட்சியாக (கிரீம் ஆஃப் ரிசர்ச்) அங்கே மில்லியன் கணக்காய் கட்டுரைகள் உள்ளன.இருந்தால் காட்டுங்கள் என்றிருக்கிறீர்கள்.இருந்ததால் தான் அதைக்காட்டி எழுதப்பட்ட கட்டுரைகள் எண்ணற்றவை உள்ளன என்று சொல்லுகிறேன்.மேலும் உங்களைப்போல் நுட்பமான ஆராய்ச்சி எண்ணம் கொண்டிருப்பவர்கள அதையும் படித்திருக்கலாம். இருப்பினும் குமரிக்கண்டம் என்று அறிவியல் சொல்லவில்லை என்று சொல்லுவது உங்கள் விருப்பம்."ஹிக்ஸ் போஸான்" என்ற விஞ்ஞானம் குமரிக்கண்டத்தில் இல்லை.அதனால் குமரிக்கண்டம் விஞ்ஞான பூர்வமானது அல்ல என்று சொல்வது போல் தான் இது.இன்றைய சுனாமி அன்று இல்லை ..அன்று இருந்தது வெறும் கடல் கோளும் கடல் அலைகளில் வௌவ்வலும் தான் என்று இலக்கிய பூர்வமாகவும் நீங்கள் சொல்லலாம்."குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள "என்று இலக்கியம் குறிப்பிடுகிறது.இலக்கியம் எல்லாம் ஜியாலஜிகல் சைன்ஸ் இல்லை என‌ கூறுவதில் எந்த நியாயமும் இல்லை. அவர்கள் குறிப்பிடுவதும் இந்தக்கடலும் மலையும் மண்ணும் தானே. குமரி மலை இருந்த நாடு அது.அதைக்குமரிக்கண்டம் என்று நிலவியல் ஆராய்ச்சிக்கண் கொண்டு நிலத்தட்டு நகர்ச்சி (டெக்டோனிக் ப்ளேட் மூவ்மெண்ட்) நிகழ்வுகளாலும் விவரிக்க முயன்றிருக்கிறார்கள்.அந்த பாசிடிவ் நோக்கம் மட்டுமே என் பார்வையில் உள்ளது.ஆனால் உங்கள் ஆராய்ச்சி வெகு நுட்பமானது.யாவராலும் படித்து இன்புறத்தக்கது.உங்கள் பணி தொடர என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

Singanenjam Sambandam

unread,
Jun 23, 2016, 2:42:39 AM6/23/16
to mint...@googlegroups.com
மிக்க நன்றி...அவ்வப்போது   தங்கள்  கருத்துகளை  சொல்லுங்கள். பயன்  பெறுவேன்/


--

Suba

unread,
Jul 11, 2016, 1:43:35 AM7/11/16
to மின்தமிழ், Dr.Subashini

அனிச்ச மலர்கள் - சிறுகதை நூல் விமர்சனம்
+++++++++++++++++++++++++++++++++++++++++
அங்கும் இங்கும் நகர முடியாமல் நீண்ட பயணங்கள் அமைந்து விட்டால் புத்தகங்கள் வாசிப்பது தான் ஒரே வழி. 
சான் பிரான்சிச்கோவிலிருந்து சிக்காகோ விமானப்பயணத்தில் தோழி தேமொழி எழுதிய அனிச்ச மலர்கள் நூல் பயண அலுப்பை மறக்கச் செய்தது. அன்றே இந்த நூலைப் பற்றி எனது கருத்தை எழுதி இருக்கலாம். ஆயினும் இரண்டு கதைகளை முழுதாக முடிக்காததால் அதனையும் முடித்து எழுத நினைத்திருந்தேன். இன்று வாசித்து முடித்ததால் இந்த நூல் பற்றிய என் கருத்தை பதிகின்றேன்.

தமிழர்கள் தம் தாயகத்திலிருந்து புலம் பெயர்ந்த பின்னர் வாழ்க்கையைப் புதிதாகத் தொடங்கும் காலகட்டத்தில் தம் தாயகத்துடனான ஒட்டுதல் அதிகமாக இருப்பது இயற்கை. ஆனால் படிப்படியாக மனம் புலம் பெயர்ந்த நாட்டில் அதன் சூழலுக்கேற்ப தம்மை மாற்றிக் கொண்டு அங்கு வாழ்க்கை நிலைபெற்றுப் போகும் போது அந்தச் சூழலுக்கேற்ப மனித மனம் புதிய விசயங்களை ஏற்றுக் கொள்ள பழகி விடுகின்றது. அத்தகைய புதிய விசயங்களைப் பதியும் ஆவணங்களாகவே புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்புக்கள் அமைந்து விடும் போது அது புதிய இலக்கிய வடிவமாக நமக்கு காட்சியளிக்கின்றது..
தமிழர் புலம் பெயர்ந்த நாடுகள் பல. அதில் அமெரிக்காவிற்கு இந்தியத் தமிழர்களின் வரவு என்பது பல ஆண்டுகளாக நிகழ்வது.

அமெரிக்க வாழ் தமிழர்களின் வாழ்க்கை நிலையை, உள்ளூர் சூழலை படம் பிடித்துக் காட்டும் வகையில்புதிய இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும். தமிழகத்து சூழலை மட்டும் விவரிக்கும் இலக்கியங்கள் மட்டுமே உலகத் தமிழர்களின் பார்வையை பிரதிபலிக்கும் இலக்கியங்களாகி விட முடியாது. புலம் பெயர்ந்த தமிழர்களின் இயல்பான வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் பதிவுகளாக வெளிவரும் புனை கதைகள் அந்த விடுபட்ட இடங்களை நிரப்பும் வகை செய்ய இயலும். அந்த வகையில் இந்தச் சிறு கதைத் தொகுப்பும் அமைகின்றது.

இந்த சிறுகதைத் தொகுப்பு நூலில் ஓரிரு கதைகள் இந்தியச் சூழல் நிகழ்வுகளின் பிரதிபலிப்புக்களாக அமைந்திருக்கின்றன. பெரும்பாலானவை அமெரிக்க சூழலை கதைக் களமாகக் கொண்டிருக்கின்றன.

ஒரு வகையில் கதைகள் சாதாரண நிகழ்வுகளை பதிவது போல அமைவதால் ஆச்சரியப்பட வைக்கும் முடிவையோ திகைப்புக்குள்ளாக்கும் முடிவையோ தரவில்லை. ஓரிரு கதைகள் வாசித்து முடித்த பின்னரும் கதை மாந்தர்களைப் பற்றியும், கதைக் களத்தைப் பற்றியும் யோசிக்க வைக்கின்றன.

இதில் மிகச் சிறந்த கதைகளாக நான் பார்ப்பது நூலின் முதல் கதையான “சிலை அழுதது” என்ற தலைப்பிலான கதையும் “காசியில் பிடிச்சத விடனும்” என்ற தலைப்பிலான கதையும் எனலாம்.

இரண்டுமே வாசிக்கும் வாசகரின் மனதை வலிக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றன.

தேமொழி சின்ன சின்ன நுட்பமான விசயங்களையும் கதையின் ஓட்டத்தில் இணைத்து ஒவ்வொரு விசயங்களையும் வாசகர்கள் மனத்திறையில் காட்சிப்படுத்திப் பார்த்து கதைக்குள் பிரவேசித்து உலா வரும் வகையில் எழுதி இருக்கின்றார்.

மேலும் தொடர்ந்து இவர் சிறுகதைகளைப் படைக்க வேண்டும். ஏனையோர் சாதாரண விசயங்கள் என ஒதுக்கிச் செல்பனவற்றை ஒரு பொருளாக்கி, கதைக்களமாக்கி சாமான்யமான விசயங்களும் கூட முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமையக்கூடும் என்பதைக் காட்டும் திறனுடன் இப்படைப்பை வழங்கியிருக்கின்றார்.

நூலாசிரியர் முனைவர் தேமொழிக்கு என் பாராட்டுக்கள்!


suba

தேமொழி

unread,
Jul 11, 2016, 2:19:07 AM7/11/16
to மின்தமிழ், ksuba...@gmail.com
நூல் மதிப்புரைக்கு நன்றி சுபா.


.... தேமொழி


<font color="#666666" size="1" face="verda

Suba

unread,
Aug 7, 2016, 7:59:19 AM8/7/16
to மின்தமிழ், Dr.Subashini

அடிமை முறையும் தமிழகமும் – நூல் பற்றிய என் சிந்தனைகள் 

ஆ.சிவசுப்பிரமணியன் 


ஆ.சிவசுப்பிரமணியணின் நூற்களை இந்த ஆண்டு தான் அறிமுகம் கிடைக்கப்பெற்று நான் வாசிக்க ஆரம்பித்தேன். பாளையங்கோட்டையில் நண்பர்முனைவர்.கட்டளை கைலாசம் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, எனது மானுடவியல் தொடர்பான ஆர்வத்தைப் பார்த்து அவர் ஆ.சிவசுப்பிரமணியணின் நூற்களை வாசிக்க வேண்டும் என குறிப்பிட்டதும், பின்னர் முனைவர்.தொ.பரமசிவம் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது அவரும் வலியுறுத்திப் பேசி, சில புத்தகங்களின் பெயரைச் சொல்லி உடனே வாசிப்பது நல்லது எனச் சொன்னதும் எனக்கு இவரது நூற்களை வாங்கி வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியமையால் இவரது ஆக்கங்கள் சிலவற்றை வாசிக்கத் தொடங்கினேன். தமிழ்க்கிருத்துவம், தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி, ஆகியவற்றைக் கடந்த சில வாரங்களில் வாசித்து முடித்து, இன்று அடிமை முறையும் தமிழகமும் என்ற நூலை வாசித்தேன். அதிகாலை தொடங்கி மதியம் நூலை வாசித்து முடித்தாகிவிட்டது. நூலிற்குள் நான் செய்த பயணமோ சங்க காலம் தொடங்கி இக்காலம் வரை, என்றமைந்த நீண்ட பயணம்! 

நூலில் ஆசிரியர் அடிமை முறையின் தோற்றத்தை பற்றி விளக்குவதோடு தொடங்குகின்றார். உலகின் உயர்ந்த நாகரிகங்களாகப் போற்றப்படுகின்ற அனைத்து நாகரிகங்களிலும் பிரிக்கப்படமுடியாத வரலாற்று அங்கமாக அடிமை முறை இருந்தமையை இப்பகுதி விளக்குகின்றது. உலக அதிசங்களுள் இடம் பெறுகின்ற சீனப்பெருஞ் சுவரும் எகிப்தின் பிரமிடுகளும் அடிமைகளின் உழைப்பாலும் ரத்தத்தாலும் கட்டியவை தான் என வாசித்த போது உலக அதிசயங்களின் மேல் இருந்த பிரமிப்பு கரைந்து அவற்றைக் கட்டியவர்களின் வலியே மனதை நிறைத்தது. 

உலகப் பார்வையிலிருந்து சுருக்கி தமிழகத்திற்கு வருகின்றார். சங்க காலத்தில் அடிமை முறை இருந்தது. ஆம். இருந்தது எனச் சொல்லி, போரில் தோற்ற மன்னர்களின் மகளிர் „கொண்டி மகளிர்“ என இருந்தமையை பட்டினப்பாலை ஆசிரியர் குறிப்பிடுவதைச் சுட்டி விளக்குகின்றார். திருவள்ளுவரின் இரு குறள்களைச் சுட்டி, அடிமை முறை இருந்தது என்பதோடு, உள்ளூர் அடிமைகளென்பதோடு மேலை நாட்டு அடிமைகளை மன்னர்கள் வாங்கி வாயிற்காப்பாளராக வைத்திருந்தமையையும் குறிப்பிடுகின்றார். 

அடிமை முறை வளர்ச்சியுற்றதும் அதன் தன்மையில் அதிகார பலம் சார்ந்ததாகவும் வலுப்பெற்ற காலம் பிற்காலச் சோழர் காலமெனச் சொல்லி, போர்க் காலத்தில் அடிமைகள் உருவாக்கப்படுதலும் அவர்களின் உடல் உழைப்பு எவ்வகைப் பணிகளுக்கு பயன்பட்டன என்றும் விளக்குகின்றார். முக்கியமாக வீட்டடிமைகள் என்ற விளக்கம் புதுமையானது, தேவையானது. ஏனெனில், அடிமைகளாக தம்மை கோயில்களுக்குப் பெண்டிரும் சில ஆண்களும் தம்மை விரும்பி அர்ப்பணித்துக் கொண்டார்கள் என்ற சாயம் பூசப்பட்ட கூற்றுகளுக்கு மாற்றாக, பெற்றோர் பட்ட தீரா கடன் என்ற காரணத்தினாலும் குழந்தைகள் அடிமைகளாக விற்கப்பட்ட நிலையை விரிவாகக் காணமுடிகின்றது. அப்படி விற்கப்பட்டோர் அவர்களை வாங்கியவர்களுக்கு அடிமைகளாக ஆக்கப்பட்டனர். 

அந்தணர்களும், வேளாளர்களும், அரசர்களும், அரசு அதிகாரிகளும் கோயிலுக்கும், மடங்களுக்கும் அடிமைகளைத் தானமாகவோ விலைக்கோ கொடுத்த செய்திகளைக் குறிப்பிடுகின்றார். நினைத்துப் பார்க்கின்றேன். இந்தக் கொடுமையான நிலையில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் துன்பம் ஒரு பொருட்டாக யாருக்கும் படாத நிலையில் பண்டமாற்று போல இந்த மனிதர்கள் நடத்தப்பட்டிருக்கின்றனர் என்பதை அறிய முடிகின்றது. ஒரு சான்றாக கி.பி 1235ம் ஆண்டு கல்வெட்டு என அறியப்படும் திருக்கொறுக்கையில் உள்ள கோயிலில் உள்ள கல்வெட்டு 100க்கும் மேற்பட்ட ஆண் பெண் அடிமைகளின் பெயர்களைத் தாங்கி நிற்பது பற்றிய செய்தியை அறிய முடிகின்றது. 

தேவரடியார்கள் என்போர் சமூகத்தில் உயர் நிலையில் இருந்தார்கள், எனவே அவர்கள் தெய்வீக அடிமைகள், என பகட்டான சொல்லுக்குள் சொல்லிவிட முடியாது என பளிச்சென்று விளக்குகின்றார். தானே தம்மை கோயிலுக்கு அர்ப்பணித்துக் கொண்டோம் என்பதற்கும், பண்டமாற்று போல ஒரு கோயிலிருந்து மறு கோயிலுக்கு விற்பது என்பது ஒரு வகை வியாபார நிலை என்பதையும் கணக்கில் கொள்ளும் போது, கோயில் அடிமைகளின் நிலையில் வெவ்வேறு தன்மைகள் இருந்தன என்பதையும், அனைத்துத் தேவரடியார்களும் பக்தி உணர்வினால் கோயில் பணிக்கு வந்தோர் என்று கூறிவிடமுடியாது என்பதையும் தெளிவு படுத்துகின்றார். 

அடிமை முறையில் கிடைக்கும் தண்டனைகளின் துரம் தாங்காது ஓடிப்போனோரைக் கண்டு பிடித்து , தண்டித்து மீண்டும் வேலை வாங்கிய விசயம் 3ம் குலோத்துங்கன் கல்வெட்டாக திருவாலங்காட்டு கல்வெட்டில் உள்ளமையைச் சான்று தருகின்றார். 

கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், அடிமையானோர் தாம் மட்டும் அடிமை என்றில்லாமல் தங்கள் பரம்பரையே அடிமை என எழுதிக் கொடுத்த சான்றுகள் சில ஓலைச் சுவடிகளில் இருப்பதைக் காண்கின்றோம். 
..சந்திராதித்தர் உள்ளவரை 
..பரம்பரை பரம்பரையாக 
..வழியடினை 
..யானும் எம் வம்சத்தானும் 
..இவர்களையும் இவர்கள் வர்க்கத்தாரையும் 
..எங்களுக்கு கிரமாகதமாய் வருகின்ற 

என்ற வாக்கியங்களின் படி வழிவழியாக தன் சந்ததியினரையும் அடிமைகளாக்கிய நிலைய ஓலை நூல்களிலிருந்து அறிகின்றோம். 

பின்னர் நாயக்கர் கால ஆட்சியில் அடிமை முறை பற்றி ஆய்வு செல்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை நாயக்கர் காலத்தில் சமூக அநீதிகள் என்பன படிப்படியாக அங்கீகாரத்துடன் வளர்த்தெடுக்கப்பட்ட கால கட்டம். 13ம் நூற்றாண்டில் இபான் பத்துடா என்ற ஆப்பிரிக்க முஸ்லீம் பயணி இரண்டு அடிமைப் பெண்களை தாம் வாங்கியது பற்றி தனது பயனக்குறிப்பில் எழுதியிருக்கின்றார். பல்வேறு வகையான அடிமை சாசனங்கள் இந்தக் காலகட்டத்தில் இருந்தமை ஓலைகளிலிருந்து காணமுடிகின்றது. உதாரணமாக ஒரு ஓலைப்பகுதி இப்படி செல்கின்றது. 
„ பறையன் பேரில் அமை சாதனம் பண்ணி குடுத்தபடி யென்னுதான பறையன் சந்தோசி மகன் ராயனை கொள்வார் கொள்ளுவார் யென்றுனான் முற்கூற கொள்வோம் கொள்வோம். 
.. 
பவுத்திர பாரம்பரையம் சந்திர சூரியாள் உள்ளமட்டும், கல்லும் காவேரியும், பில்லும் பூமியும் உள்ளமட்டும் ஆண்டு அனுபவிச்சுக் கொண்டு யெய்ப்பற்பட்ட தொழிலும்...“ 

உள்ளூரில் அடிமைகள் விற்றல் வாங்கல் என்பது மட்டுமன்றி அயல் நாடுகளுக்கு அடிமைகளாக்கப்பட்டோர் விற்கப்பட்டது பற்றியும் அறிகின்றோம். கிபி 1660ல் நடந்த ஒரு விவரம் பற்றி ஏசு சபை ஆவணம் தெரிவிக்கின்றது. அதாவது சொக்கநாத நாயக்கர் (1659-1682) காலத்தில் தமிழகத்தில் பஞ்சம் அதிகரிக்க மக்கள் உணவின்றி வாடிச் செத்தனர். ஒரு சிலரை டச்சுக்காரர்கள் உணவளித்து சற்று தேற்றிக் கப்பலேற்றி அடிமைகளாகக் கொண்டு சென்று விற்றிருக்கின்றனர். என்ன கொடுமை!! 

தொடர்ச்சியாக ஆங்கில ஆட்சிமுறை காலத்தில் கொத்தடிமைத்தனம் பற்றிய செய்திகள் வருகின்றன. பல ஆவணங்கள் அக்கால அடிமை முறை பற்றி விளக்குகின்றன. ஒரு சில மீட்புப்பணி போன்றவையும் நடந்தாலும் ஆங்கிலேய ஆட்சியாளர்களும் இந்திய சூழலில் உள்ள கொத்தடிமை முறை அங்கீகரிக்கப்பட்ட ஒரு நடைமுறை என்றே அதிகார வர்க்கத்துக்குத் துணையாக இருந்து கொண்டு அடிமைத்தனத்தை ஒழிக்க முழு மனதுடன் ஒத்துழையாத நிலையையும் காண்கின்றோம். உதாரணமாக 1800ல் தஞ்சை மாவட்ட கலெக்டர் பள்ளர் பறையர் குல அடிமைகள் அம்மாவட்டத்திலிருந்து வெளியேறிய போது நில உடமையாளர்களிடம் பணிபுரிவதை நிர்ப்பந்திக்க வேண்டும் என்று போலீசுக்கு ஆலோசனை கூறிய சான்றினைக் காண்கின்றோம். இன்னொரு உதாரணத்தில் , 1828ல் பிராமண நிலவுடமையாளரிடம் பணிபுரிந்த சில பள்ளர், குல அடிமைகள் திருச்சி மாவட்டம் வந்து விட, அவர்களைக் கண்டித்து திருச்சி கலெக்டர் ஒரு கடிதம் எழுதித் திருப்பி அனுப்பியுள்ளார். இப்படி வரிசையாக சில உதாரணங்கள் அடிமைகளாக இருந்தோர் மீள நினைத்த போதிலும் அரசாங்கமே அதற்கு முட்டுக்கட்டையாக இருந்த நிலையக் காட்டுவதாக அமைகின்றன. 

„அவர்கள் இந்த மண்ணின் அடிமைகள். அவர்கள் சார்ந்திருக்கும் பண்ணையை விட்டுச் செல்லும் உரிமையற்றவர்கள்“ என கலெக்டர் ஒருவர் எழுதிய கடிதம் அக்காலக் கொடுமைகளை நமக்குப் புலப்படுத்துவதாக உள்ளது. 

இந்தியாவில் அடிமை ஒழிப்பு சட்டம் 1843ல் நிறைவேற்றப்பட்டது. ஆனால் படியாள் முறை, பண்ணையாள் முறை என்ற வடிவில் அடிமைத்தனம் தொடராமல் இல்லை. எழுதப்படிக்கத் தெரியாத அடிமைகளை சான்றிதழ்கள் மூலம் ஏமாற்றி பண்ணை கூலியாட்களாக வைத்துக் கொள்ளும் நிலையையும் சுட்டிக் காட்டுகின்றார். 

„தமிழகத்தில் அடிமைகள் இருந்தது, விலங்குகளைப் போல அவர்களுக்குச் சூட்டுக்குறி இடப்பட்டதும், பொருள்களைப் போல விற்கப்பட்டதும், வாங்கப்பட்டதும், தானமளிக்கப்பட்டதும், சீதனமாகக் கொடுக்கப்பட்டதும், ஆள்பவர்களின் துணையுடன் அடக்கி ஒடுக்கப்பட்டதும் வரலாற்று ரீதியில் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மையாகும்“ என ஆசிரியர் நூலின் இறுதிப்பகுதியில் குறிப்பிடுகின்றார். 

அடிமைத்தனத்தின் இன்னொரு வகையாக ஒப்பண்டஹ்க் கூலிகள் மூரையைச் சுட்டிக் காட்டுகின்றார். இலங்கைக்கு தேயிலைத்தோட்டத்தில் உழைக்க ஒப்பண்டஹ்க் கூலிகளாகச் சென்றோர், மலேயா, சிங்கை , தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்றோரும் அடிமை முறையில் ஒரு வகையை அனுபவித்தவர்கள் தாம். 

அடிமைகளாக மக்கள் ஆக்கப்படும் செயல்பாடுகள் சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட்ட போதிலும் இன்றும் வேறு வகையில் அடிமைத்தனத்தைப் பிரயோகிக்கு நடைமுறை இருக்கத்தான் செய்கின்றது. அடிமை முறை என்ற நடைமுறையைச், „சடங்கு, சம்பிரதாயம், வழி வழி ஆச்சாரம்“ என்ற அழகான சொற்களால் மூடிமறைக்கும் முயற்சிகளும் தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கின்றன. 

தான் அடிமை எனவே அடிபணிந்து போவேன், என ஒருவர் அடிமைத்தனத்திலிருந்து மீளாதிருக்கும் வகையில் மூளைச்சலவை செய்யப்பட்டிருப்பதும் நீண்ட கால சிந்தனையின் பிரதிபலிப்புத்தான். 

இந்த நிலையில், நல்ல கல்வி மட்டுமே இந்த அடிமைத்தளையிலிருந்து மனிதர்களை முற்றிலுமாக விடுவிக்கக் கூடிய பண்டோரா மாயப்பெட்டி! 

----------------------------------------
பதிப்பு - நியூ சென்சுரி புக் ஹவுஸ், சென்னை

Suba

unread,
Aug 7, 2016, 8:00:56 AM8/7/16
to மின்தமிழ், Dr.Subashini
 
அடிமை முறையும் தமிழகமும் – நூல் பற்றிய என் சிந்தனைகள் 
சுபா

Aravindan Neelakandan

unread,
Aug 10, 2016, 8:06:08 AM8/10/16
to mintamil, Dr.Subashini
பூந்தமல்லி உழவர்கள் எழுச்சி போன்றவை பறையர் சமுதாய மக்களை ‘அடிமைகளாக’க் காட்டவில்லை என்பதை சுட்ட விரும்புகிறேன். பொதுவாக இந்திய சமுதாய பரிணாம வளர்ச்சியை மேற்கத்திய அலகுகளையும் புரிதல் சட்டகங்களையும் கொண்டு அறிதலென்பது நரி வாலால் பெருங்கடல் அளந்த கதைதான். பறையர் சமுதாய மக்கள் பூசகர்களாகவும் இருந்தனர். நிலவுடமை சாதி என கருதப்பட்ட வெள்ளாளர் சாதியினரில் குமரி மாவட்டத்தில் புளுக்க வெள்ளாளர் என்பவர்கள் தம்மைத்தாமே விற்றுக்கொண்டனர். இவர்கள் பின்னாட்களில் நிலமில்லா கூலி செய்யும் சமுதாயங்களில் கலந்தனர் என கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையைச் சொன்னால் நம் ‘பேராசிரியர்கள்’ மார்க்ஸ் ஏங்கல்ஸ் (இருவருமே இனவாதிகள் ஐரோப்பியமைய சிந்தனையாளர்களென்பதும் பொதுவாக மார்க்சியர்களே சித்தாந்த அடிமைகளென்பதும் வேறு விசயம்) கடந்து சிந்திக்க வேண்டி உள்ளது. இவ்விதத்தில் பாபா சாகேப் அம்பேத்கர், காந்திஜி, தரம்பால், எம்.சி.ராஜா, மகாத்மா ஐயன் காளி போன்றவர்களின் அடிச்சுவட்டில் நம் வரலாற்றை நாம் நம் அறிதல் முறைகளின் மூலம் அணுக வேண்டிய அவசியமும் உள்ளது.


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/nVY2mdvRu2A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Rajendran Ramasamy

unread,
Aug 10, 2016, 8:48:23 AM8/10/16
to mint...@googlegroups.com
பாபா சாகேப் அம்பேத்கர், காந்திஜி, தரம்பால், எம்.சி.ராஜா, மகாத்மா ஐயன் காளி போன்றவர்களின் அடிச்சுவட்டில் நம் வரலாற்றை நாம் நம் அறிதல் முறைகளின் மூலம் அணுக வேண்டிய அவசியமும் உள்ளது.-----சரி!நம் அறிதல் முறை ---விளக்க இயலுமா? 

You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Parvathy ramanathan

unread,
Aug 10, 2016, 8:51:07 AM8/10/16
to mint...@googlegroups.com, Dr.Subashini
அன்பின் சுபா!
இன்றைக்குப்  பெண்கள் வெளினாடுகளுக்கு வீட்டுவேலைக்கு அனுப்பப்படுவது , எந்தவகையில் சேர்க்கப்படலாம்?
அன்றைய கட்டிடங்கள் மட்டுமல்ல, இன்றைய கட்டிடங்களும் வேர்வைத் துளிகள் தான்.
நாம் குடிக்கும் தண்ணீருக்கும், நம் வீட்டில் 24 மணினேர விளக்குக்கும் யாரோ ஒருவர் வேலை வாங்கிக் கொண்டிருக்கிறோம்.
நம் கழிவரயை அலம்ப யாரொ வரவேண்டியிருக்கிறது. நம் குழந்தைகளை வளர்க்க ஆயா தேவைப்படுகிறது.
நாமும் அடிமை வியாபாரிகள் தான் என்பது என் சொந்தக்கருத்து.



Gladiator நீன்கள் பார்த்திருப்பீர்கள். இல்லையேல் பார்த்துவிடுன்கள் பல இரவுகள் உங்க்களுக்குத்தூக்கம் வராது.

Gladiator
is a 2000 British-American epic historical drama film directed by Ridley Scott, and starring Russell Crowe, Joaquin Phoenix, Connie Nielsen, Ralf Möller, Oliver Reed (in his final film role before his death), Djimon Hounsou, Derek Jacobi, John Shrapnel, and Richard Harris. Crowe portrays the fictional character, loyal Roman general Maximus Decimus Meridius, who is betrayed when Commodus, the ambitious son of Emperor Marcus Aurelius, murders his father and seizes the throne. Reduced to slavery, Maximus rises through the ranks of the gladiatorial arena to avenge the murders of his family and his emperor.-------
பார்வதி






10 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 8:05 அன்று, Aravindan Neelakandan <aravindan....@gmail.com> எழுதியது:
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Suba

unread,
Aug 10, 2016, 9:03:51 AM8/10/16
to Parvathy ramanathan, மின்தமிழ், Dr.Subashini
2016-08-10 14:51 GMT+02:00 Parvathy ramanathan <praman...@gmail.com>:
அன்பின் சுபா!
இன்றைக்குப்  பெண்கள் வெளினாடுகளுக்கு வீட்டுவேலைக்கு அனுப்பப்படுவது , எந்தவகையில் சேர்க்கப்படலாம்?

​இதனை அடிமைமுறையாக  என்னால் காணமுடி​யவ்விலை. காரணம் அவர்கள் எவ்வகை பணிக்காகச் செல்கின்றார்களோ 
  • அந்தப் பணிக்கான ஊதியம் அவர்களுக்கு வழங்கபப்டுகின்றது
  • ​குறிப்பிட்ட காலம் என்ற வரையரை அதாவது 2 வருட காண்ட்ராக்ட், 3 வருடம் இப்படி
  • அவர்கள் என்ன உடை உடுத்த வேண்டும் என்பதில் தலையீடு இல்லை.
  • அவர்கள் குடும்பமே முதலா
    ​ளி
    க்கு அடிமையில்லை
.. இப்படி  சிலவற்றைச் சொல்லலாம்.
அன்றைய கட்டிடங்கள் மட்டுமல்ல, இன்றைய கட்டிடங்களும் வேர்வைத் துளிகள் தான்.

​இதில் சந்தேகமில்லை. 
கட்டிடம் மட்டுமா.. எல்லா பணிகளுமே அப்படித்தான். நம்மில் சிஅல்ர் உடல் உழைப்பை வழங்குகின்றோம். ஒரு சிலர் மூளை உழைப்பை வழங்குகின்றோம். எபப்டி ரத்தம் சிந்திதல் நடக்கின்றட்தோ அதே போல மன உளைச்சல் போன்றவையும் பணியில் ஏற்படுவது என்பது எல்லா பணிகளிளுமே இருக்கும் இயல்பே.
 
நாம் குடிக்கும் தண்ணீருக்கும், நம் வீட்டில் 24 மணினேர விளக்குக்கும் யாரோ ஒருவர் வேலை வாங்கிக் கொண்டிருக்கிறோம்.
நம் கழிவரயை அலம்ப யாரொ வரவேண்டியிருக்கிறது. நம் குழந்தைகளை வளர்க்க ஆயா தேவைப்படுகிறது.
​எல்லா வீடுகளிலும் வேலைக்கு ஆள் வைத்திருப்பதில்லை.
முன்னர் மலேசியாவில் இருந்த சமயம் வீட்டு பணிக்காக ஒரு இந்தோனீசிய மாது வ்வைத்திருந்தேன். இங்கே ஜெர்மனி வந்த பிறகு  ​அதற்கு சாத்தியமில்லை என்பதால் அனைத்தையுமே நானே செய்து கொள்ள பழகிக் கொண்டேன். இவை சாதாரண விஷயம் தான். என்னால் அலுவலக பயணங்களைப் பார்த்துக் கொண்டும்,  வீட்டுப் பணிகளை கவனிக்க முடிகின்றது. பழகி விட்டால் அனைத்தும் இயல்பாகி விடும். 

இப்போது இயந்திரங்கள் பயன்பாடு அதிகரித்திருப்பதால் இது பணியை சுலபமாக்குகின்றது. கார் கழுவுதல், பாத்திரம் கழுவுதல், துணி துவைத்து காயவைத்தல், ஆகியனவற்றை இயந்திரங்கள் கொண்டு செய்து விடுவதால்  பல வேலைகளை நான் நேரம் செலவழிக்க வேண்டிய நிலை இல்லை. இப்படி இயந்திர பயன்பாடு பெருகும் போது உடல் உழைப்பு பணிகள் குறையவும் நல்ல வாய்ப்புண்டு.

 
நாமும் அடிமை வியாபாரிகள் தான் என்பது என் சொந்தக்கருத்து.

​முன்னர் இருந்த வகை அடிமை நிலை இல்லை ..ஏனெனில் நாம் பார்க்கும் வேலைக்கு சம்பளம் கிடைக்கின்றது. 

அந்த  வேலையை பிடிக்கவில்லையென்றால் விட்டு வெளியேற முடிகின்றது. 

நம் குடும்பமே அந்தக் கம்னெனிக்கு வழிவழியாக சேவகம் செய்ய வேண்டும் என்ற நிலையும் இல்லை.

​ஆகவே வித்தியாம் இருக்கின்றது.

சுபா​

 




Gladiator நீன்கள் பார்த்திருப்பீர்கள். இல்லையேல் பார்த்துவிடுன்கள் பல இரவுகள் உங்க்களுக்குத்தூக்கம் வராது.

Gladiator
is a 2000 British-American epic historical drama film directed by Ridley Scott, and starring Russell Crowe, Joaquin Phoenix, Connie Nielsen, Ralf Möller, Oliver Reed (in his final film role before his death), Djimon Hounsou, Derek Jacobi, John Shrapnel, and Richard Harris. Crowe portrays the fictional character, loyal Roman general Maximus Decimus Meridius, who is betrayed when Commodus, the ambitious son of Emperor Marcus Aurelius, murders his father and seizes the throne. Reduced to slavery, Maximus rises through the ranks of the gladiatorial arena to avenge the murders of his family and his emperor.-------
பார்வதி






10 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 8:05 அன்று, Aravindan Neelakandan <aravindan.neelakandan@gmail.com> எழுதியது:

Suba

unread,
Aug 10, 2016, 9:12:26 AM8/10/16
to Aravindan Neelakandan, mintamil, Dr.Subashini
2016-08-10 14:05 GMT+02:00 Aravindan Neelakandan <aravindan....@gmail.com>:
​​
பூந்தமல்லி உழவர்கள் எழுச்சி போன்றவை பறையர் சமுதாய மக்களை ‘அடிமைகளாக’க் காட்டவில்லை என்பதை சுட்ட விரும்புகிறேன்.

​​
பூந்தமல்லி உழவர்கள் எழுச்சி இது பற்றி நான் அறிந்ததில்லை. விரிவாகப் பகிரவும்.  இந்த ஒரு நிகழ்வுக்காக ஏனைய நிகழ்வுகளின்  magnitude  இல்லாமல் போய்விடாது அல்லவா.

 
பொதுவாக இந்திய சமுதாய பரிணாம வளர்ச்சியை மேற்கத்திய அலகுகளையும் புரிதல் சட்டகங்களையும் கொண்டு அறிதலென்பது நரி வாலால் பெருங்கடல் அளந்த கதைதான்.

​இந்த எனது நூல் விமர்சனத்தில் மேற்கத்திய ஆராய்ச்சி அலகு கொண்டு நான் பார்க்கவில்லை. நடந்தவை பற்ரிய ஒரு தமிழ் மானுடவியல் ஆய்வறிஞரின் நூல் கொடுக்கும் தகவல்களின் பகிர்வு.


பறையர் சமுதாய மக்கள் பூசகர்களாகவும் இருந்தனர்.
​அவர்கள் கோயிலில். 
ஆயினும் இது முக்கிய செய்தியலல் இந்த நூல் விமர்சனத்தில் நான் சுட்ட விரும்பியது என்பதால் இத் உபற்ரி விரிவாகச் சொல்லவோ செல்லவோ விரும்பவில்லை.​

 
நிலவுடமை சாதி என கருதப்பட்ட வெள்ளாளர் சாதியினரில் குமரி மாவட்டத்தில் புளுக்க வெள்ளாளர் என்பவர்கள் தம்மைத்தாமே விற்றுக்கொண்டனர். இவர்கள் பின்னாட்களில் நிலமில்லா கூலி செய்யும் சமுதாயங்களில் கலந்தனர் என கேள்விப்பட்டிருக்கிறேன்.
​செட்டி நாட்டு மக்களுக்கும் இபப்டி நடந்திருக்கின்றது. ஏமாற்றி மயகக் மருந்து கொடுத்து மக்களை அடிமைகளாகக் கப்பலேற்றி விற்றனர் என்ற செய்தியில் ஓரிடத்தில் இதனை வாசித்தேன்.

 
உண்மையைச் சொன்னால் நம் ‘பேராசிரியர்கள்’ மார்க்ஸ் ஏங்கல்ஸ் (இருவருமே இனவாதிகள் ஐரோப்பியமைய சிந்தனையாளர்களென்பதும் பொதுவாக மார்க்சியர்களே சித்தாந்த அடிமைகளென்பதும் வேறு விசயம்) கடந்து சிந்திக்க வேண்டி உள்ளது. இவ்விதத்தில் பாபா சாகேப் அம்பேத்கர், காந்திஜி, தரம்பால், எம்.சி.ராஜா, மகாத்மா ஐயன் காளி போன்றவர்களின் அடிச்சுவட்டில் நம் வரலாற்றை நாம் நம் அறிதல் முறைகளின் மூலம் அணுக வேண்டிய அவசியமும் உள்ளது. 


​எந்த வகையில் ​
 
​எனது இந்த நூல் விமர்சனம் மேற்கத்திய அலகு கொண்டு ஆராயப்பட்டுள்ளது என நினைக்கின்றீர்கள் என விளக்கினால் புரிந்து கொள்வேன்.

சுபா

Innamburan S.Soundararajan

unread,
Aug 13, 2016, 1:46:25 AM8/13/16
to mintamil, Aravindan Neelakandan, Dr.Subashini
எல்லா நூல்களையும் படிக்கமுடியாத நிலையில் புத்தக விமர்சனங்கள் உதவுகின்றன. என்னுடைய சேகரத்தில் புத்தகவிமர்சனங்கள் என்ற பகுதி உளது. அங்கு சேகரம் செய்து கொண்டேன்.நன்றி.
2016-08-10 18:42 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Suba

unread,
Oct 30, 2016, 9:33:02 AM10/30/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
நூல்:
தென்னிந்திய சமூகப்புரட்சியின் தந்தை 
அயோத்திதாசப் பண்டிதர் 

தொகுப்பாசிரியர்: கௌதம சன்னா 

கடந்த சில ஆண்டுகளில் அயோத்திதாசப் பண்டிதர் பற்றிய தகவல்களைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் மடலாடற் குழுமத்தில் அவ்வப்போது ஒரு சில உறுப்பினர்கள்  பகிர்ந்து வருவதை வாசித்திருக்கின்றேன். அதில் மிக முக்கிய விசயமாக அமைவது பண்டிதரின் பெருமுயற்சியில் தொடர்ச்சியாக வெளிவந்த ஒரு பைசா தமிழன் பத்திரிக்கையின் முழுமையான மின்னூல் நம் சேகரத்தில் இணைந்த நிகழ்வு எனலாம். அவ்வப்போது அவரது ஆக்கங்களை வாசித்தறிய  வேண்டும் என நான் முயன்றாலும் தொடர்ச்சியான பல பணிகள் எனது கவனத்தை வேறு வகையில் செலுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை. அண்மையில் ஒரு குறிப்பைத்தேட எனது இல்ல நூலகத்தை அலசியபோது நண்பர் ஒருவர் வழங்கிய "தென்னிந்திய சமூகப்புரட்சியின் தந்தை - அயோத்திதாசப் பண்டிதர்" என்ற நூல் கிட்டியது. சென்ற வாரம் பாரிஸ் பயணத்தின் போது தொடங்கி பின் முடிக்க இயலாமல் சென்ற நிலையில் இன்று ஏனைய பக்கங்களை வாசித்தேன். 

நூலின் தொகுப்பாசிரியர் திரு.கௌதம சன்னா இரு பகுதிகளாக இந்தத் தொகுப்பு நூலைப் பிரித்து வாசிப்புக்கான தகவல்களைத் தொகுத்திருக்கின்றார். முதல் பாதி, பண்டிதரின் எழுத்துக்களாகப் பரவலாக வெவ்வேறு விசயங்களைத் தொட்டுச் செல்வதாக அமைந்திருக்கின்றது. மறுபாதி அயோத்திதாசப் பண்டிதரைப்பற்றியும் அவர் நடத்திய தமிழன் பத்திரிக்கை பற்றியும், தமிழ் பௌத்தம் பற்றியும், பண்டிதரின் மறைவுக்குப் பின்னர் தொடரப்பட்ட முயற்சிகளைப்பற்றியும் என அமைந்துள்ளது. 

"அயோத்திதாசப் பண்டிதர் என்பவர் யார்" என அறிந்து கொள்ள விரும்புவோருக்கு அறிமுகமாக அமைவதுடன் 19ம் நூற்றாண்டின் இறுதி தொடங்கி தமிழ்ச் சமுதாயத்தின் சீர்திருத்த முயற்சியில் அவரது பங்கு எத்தகையது என்பதைத் தெளிவு குறையாது விளக்கும் ஆதாரச்சான்றுகள் நிறைந்த தரமான நூலாகவும் அமைந்துள்ளது இந்த நூல். அதில் குறிப்பாக பண்டிதரின் எழுத்துக்களின் வழியே வாசகர்களை, அவரை அறிந்து கொள்ள செய்த முயற்சி வரவேற்கத்தக்கது. 

வாழ்க்கை குறிப்பு, எங்குப் பிறந்தார்.. என்ன செய்தார். என்றெல்லாம் நூலைக் கொண்டு செல்லாமல், பண்டிதரின் வாழ்க்கை நோக்கமாக அமைந்திருக்கின்ற அவரது சமூகச்சீர்திருத்தக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அனைத்துக் கட்டுரைகளும் இடம்பெற்றிருக்கின்றன என்பது மிகச் சிறந்த ஒரு விசயம் என்றே கருதுகிறேன். பண்டிதரின் தமிழன் பத்திரிக்கையிலிருந்து சிறு கட்டுரைகளின் தொகுப்பாக முதற்பகுதியில் இணைந்திருப்பவை சொல்லும் செய்திகள் பண்டிதரின் சிந்தனையில் முழுமையாக ஒடம்பெற்றிருந்த சமூக நிலையை வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன. உதாரணமாக, 
  • அக்கால பெண்களின் கல்வி அபிவிருத்திக்கு யார் தடையாக இருக்கின்றனர் என்ற அலசல் 
  • மக்களிடையே கல்வி அறிவு பெருகுவதால் நன்மையா அல்லது சாதிப்பற்று பெருகுவதால் நன்மையா என்ற அலசல் 
  • விதவைப் பெண்களின் துன்பங்கள், அவர்களை மறுமணம் செய்து கொடுக்காமல் துன்பத்தில் ஆழ்த்தும் ஆண் சமூகத்தின் மீதான தனது கண்டனம் 
  • சாதிபேதம் ஏற்படுத்தும் சமூகச்சீரழிவு 
  • சமயக்கூடங்களில் சாதிகளும் வேஷங்களும் 
  • மனிதன் தன்னை எப்படி உயர்த்திக் கொள்ள வேண்டும் 
  • சாதிகளற்ற சமுதாயம் 
...என அமைந்திக்கும் கட்டுரைகளைக் குறிப்பிடலாம். 

இதன் தொடர்ச்சியாக அமைந்திருக்கும் புத்தரைப்பற்றியும் பௌத்தத்தைப் பற்றியும் பண்டிதர் எழுதிய நீண்ட கட்டுரை ஒன்றும் இடம்பெறுகின்றது. இது புத்தரின் வரலாற்றை விரிவாக எடுத்துரைப்பதோடு பௌத்த கொள்கைகளை விளக்கும் வாசிப்புப்பொருளாகவும் அமைந்துள்ளது. 

அயோத்திதாசப் பண்டிதரைப்பற்றிய அறிஞர் அன்பு.பொன்னோவியம் அவர்களின் விரிவான கட்டுரை இந்த நூலுக்குத் தனிச்சிறப்பினை வழங்குகின்றது. காரணம், பகுதி பகுதியாக சில கட்டுரைகளின் வழி பண்டிதரைப்பற்றிய அறிமுகத்தை முதல் பகுதியில் பெறும் வாசகர்களுக்கு ஒரு தொகுப்பாக இக்கட்டுரை அமைந்திருப்பதே எனலாம். இக்கட்டுரையில் தமிழன் பத்திரிக்கையில் பல பகுதிகளிலிருந்து தகவல்களைப் பதிந்து அதற்கான தனது கருத்துக்களையும் வழங்கி சீர்திருத்தக்கருத்துக்கள் அக்கால கட்டத்திற்கு எத்தகைய தேவையாக அமைந்தன என்று வலியுறுத்துவதோடு அச்சீர்திருத்தக்கருத்துக்கள் தொடர்ந்து ஒரு சிலரால் பிற்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அயோத்திதாசர் அம்முயர்சிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தமையின் முக்கியத்துவத்தைப்பதியும் ஆவணமாக இக்கட்டுரை அமைகின்ரது எனலாம். 

இந்த நூலில் தொகுப்பாசிரியர் புகைப்படங்களோடு வழங்கியிருக்கும் சில நூல்களைப் பற்றிய தகவல்கள் சுவாரசியமாக உள்ளன. பண்டிதர் எழுதிய "தென்னிந்திரர் தேச புத்த தர சாஷியக்காரர்கலில் ஒருவளாகிய பாரதமாதா ஔவையார் எனும் ஸ்ரீ அம்பிகையம்மன் வரலாறு", "அரிச்சந்திரன் பொய்கள்" என்பனவற்றோடு திரிசிரபுரம் ஆ.பெருமாள் பிள்ளை எழுதிய "ஆதி திராவிடர் வரலாறு" (1922) ஆகியவற்றைக்குறிப்பிட்டுச் சொல்லலாம். நான் தேடி மின்னாக்கம் செய்ய நினைக்கும் நூற்களின் பட்டியலில் இவையும் இப்போது அடங்கும். 

தென்னிந்திய ஆதிதிராவிட அமைப்புக்கள் பற்றிய செய்திகளும் "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற கருத்தியலின் ஆரம்பக்கால முயற்சிகளைப்பற்றிய தகவல்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 

கல்வி அறிவு ஒன்று மட்டுமே மனிதக்குலத்தை உயர்த்தக்கூடியது. அந்தக்கல்வி என்பது ஒரு நாட்டின் மக்களுக்கு எந்தப்பாரபட்சமும் இல்லாமல் வழங்கப்படவேண்டும் என்ற கருத்தினை அயோத்திதாசார் தனது காலத்தின் தேவையறிந்து வலியுறுத்தியிருக்கின்றார். அந்த வேண்டுகோள் இன்னமும் முழுமையாக நிறைவடையவில்லை என்பது கசப்பான உண்மையாகத்தான் உள்ளது. 

  • மக்களும் அவர்களின் நோக்கமும், என ஆராயும் போது,  
  • அறிவாளிகள் தாம் தங்கள் அறிவால் மக்களையும் நாட்டையும் வழி நடத்த வேண்டும், 
  • ஆட்சியிலுள்ளோர் ஆளுமையில் அறத்தைக் கடைபிடித்தலின் அவசியம், 
  • வணிகர் எத்தன்மைகளுடன் வணிகம் செய்யவேண்டும் 
  • வேளாளர் நிலத்தின் தன்மைக்கேற்ற விவசாயத்தை எவ்வாறு திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டும் 
..என விவரிக்கும் பண்டிதரின் கருத்துக்களும், புராணக்கதைகள் என்பன மக்களை மூடர்களாக்காமல் மக்களின் அறிவு விருத்திக்கு உதவுவனவாக இருக்க வேண்டும் என விவரிக்கும் பகுதிகளும் ப்ளேட்டோவின் "தி ரிப்பப்ளிக்" நூலில் சாக்ரட்டீஸ் அடிமண்டீசுடன் பேசும் உரையாடல்களைத்தான் எனக்கு  நினைவுறுத்தின. 

சமூக சீர்திருத்தம் என்பது எல்லா மக்களுக்கும் சமதர்மமாக, எல்லோரும் குடிமக்களே என்ற பார்வையுடன், மக்களுக்கான நீதி குறையாது அமைந்திருக்க வேண்டியது அரசின் தலையாய கடமை . அதனை வலியுறுத்தும் பண்டிதரின் எழுத்துக்கள் முக்கியமானவை. அதிலும் குறிப்பாக இன்றைய நடைமுறையில் மிக மிகத் தேவை என்று நான் கருதுகிறேன். 

எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய பண்டிதரின் முயற்சியைச் சொல்லும் தொகுப்பாசிரியரின் கட்டுரை மிக அருமை. 

நூலில் இடம்பெற்றிருக்கும் தகவல்களுக்கு இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு சேர்க்கின்றன. நல்லதொரு முயற்சி. அயோத்திதாசர் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் அனைவருக்கும் மட்டுமல்லாது சமூக நீதி, சமூக நலன் என்ற வகையிலான ஆய்வுகளில் ஆர்வம் காட்டுவோருக்கும் இது நல்ல நூலாக அமைகின்றது. நல்லதொரு நூலை வாசித்த திருப்தியை இந்த நூல் வழங்கியிருக்கின்றது! 


நூல் குறிப்பு விபரங்கள்
க.அயோத்திதாசப் பண்டிதர் நூற்றாண்டு (1914-2014) நினைவேந்தல் மலர்
தொகுப்பாசிரியர்: கௌதம சன்னா
அச்சாக்கம்: முல்லை அச்சகம், சென்னை - Tel 044-42663840
விலை ரூ 150/-

Innamburan S.Soundararajan

unread,
Oct 30, 2016, 11:10:16 AM10/30/16
to mintamil, Subashini Kanagasundaram
நன்றி பல. அயோத்திதாசபண்டிதரின் படைப்புகளை சிறு வயதில் படித்திருக்கிறேன். திரு.வி.க. அவர்களின் வாழ்க்கைக்குறிப்புகளில் மேலதிக விவரங்கள் கிடைக்கின்றன. அவருக்கும், திரு.வி.க. அவர்களுக்கும் ஒரே நாளில் இந்திய அரசு தபால்தலைகளை வெளிட்டது.
இன்னம்பூரான்

--

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Oct 30, 2016, 3:38:20 PM10/30/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
"அயோத்தி தாசர்" என்று பெயர் சூட்டப்பட்டவர் "புத்தர் தாசர்" ஆன வரலாற்றுக்குள் தமிழ் இனத்தின் தொன்மை தேடிய பயணத்தின் பரிணாமமும் சமுதாய முரண்பாடுகளை தட்டி நொறுக்கும் சம்மட்டியாக உருவெடுத்த‌
தமிழின் விழிப்பும் வீச்சுமாக கிளைத்த வரலாறுமே அவர் நூல்களில் இழையாடியிருக்கின்றன.பெரியார் தேவனேயப்பாவாணர் ஆகிய இரு ஆளுமைகளின் ஒரு மொத்த ஆளுமையாய் பண்டிதர் அவர்கள் விளங்குகிறார்கள்.

திருமிகு சுபா அவர்களே புத்தகங்களின் இடுக்குகளுக்குள் இருக்கும் வெளிச்சம் தரும்  ஒரு "புக் மார்க்" போல உங்கள் கட்டுரை அமைந்திருக்கிறது.மகி ழ்ச்சி!பாராட்டுக்கள்!

Suba

unread,
Feb 11, 2017, 8:49:06 AM2/11/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
ஸ்டுட்கார்ட்டிலிருந்து அட்லாண்டா பயணம் 10 மணி 45 நிமிடங்கள். 
தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வெளியீடான "நாவாய்" என்ற நூலை வாசித்துக் கொண்டு வந்தேன். கடல் வணிகம், பண்டைய கப்பல் வகைகள், சங்க கால கடல் பயண முயற்சிகள், தமிழக துறைமுகப் பட்டினங்கள் என விரிவாக ஆராயும் பல ஆய்வுக் கட்டுரைகள் நிறைந்த நூல் இது. இதன் விமர்சனத்தை சிறிது சிறிதாக எழுதுகிறேன்.





நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்
++++++++++++++++++++++++
பகுதி 1

தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரை தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.


இந்த நூலில் முதல் கட்டுரையாக இடம்பெறுவது தமிழறிஞர் க.வெள்ளைவாரணம் அவர்கள் எழுதிய ”தமிழகத்தில் தொல்பொருள் ஆய்வின் இன்றியமையாவை’ என்ற கட்டுரையைப் பற்றி சில கருத்துக்கள்.

இக்கட்டுரை ஏறக்குறைய 30 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது என்றாலும் இதன் உட்பொருள் இன்றும் சிந்தனைக்கு அவசியமாகின்றது என்பதனால் நூலில் இணைத்திருக்கின்றனர்.

தமிழக நிலப்பரப்பில் தொடங்கப்பட்ட முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் பற்றிய காலவிபரங்களைக் குறிப்பிடுகின்றார். அதில் குறிப்பாக தலைச்சங்க காலத்தில் தமிழகத்தின் தென்பகுதியில் ஓடிய பஃறுளி என்ற பெயருடைய குமரி ஆற்றைப் பற்றி சிலப்பதிகாரச்சான்றுக்குறிப்போடு விவரிக்கின்றார்.
தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் இன்று மீனவர்கள் என அழைக்கபப்டும் பரதவர்கள் மிக விரிவாக கடல் வணிகத்தில் ஆளுமை செலுத்தியமை பற்றியும், மரக்கலங்கள், திமில் என்ற பெயர் கொண்ட படகுகளை உருவாக்கி தங்கள் கடல் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டமையை விவரிக்கின்றார்.

சங்ககாலத்தில் யவனர்கள் (கிரேக்கர்களும், ரோமானியர்களும்) இப்பகுதிகளுக்கு வணிக நோக்கமாக வந்து சென்றமை இலக்கியச் சான்றுகளுடன் குறிப்பிடப்படுகின்றது. மீன்கள் மட்டுமன்றி உப்பும் மிக முக்கிய வணிகப்பொருளாக இருந்தமையையும் அறிகின்றோம். கடற்கோளினால் முழ்கிய காவிரிப்பூம்பட்டினம், அதன் நகர அமைப்பு பற்றிய செய்திகளும் வழங்கப்பட்டுள்ளன். காவிரிப்பூம்பட்டினம் அமைந்திருந்த, பகுதியில் அரசு கடற்பகுதியில் அகழ்வாய்வுகள் மேற்கொண்டால் தமிழர் தொண்மை, நாகரிகம் பற்றிய பல சான்றுகள் கிடைக்க வாய்ப்புண்டு என்று குறிப்பிடுகின்றார்.

இக்கட்டுரை தமிழக கடற்கரை சார்ந்த நகரங்களில் தொல்லியல் அகழ்வாய்வுகளை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.

இக்கட்டுரை குறிப்பிடும் கருத்துக்கள் இன்றும் தேவையான ஒன்றே. தமிழக கடற்கரைப்பகுதிகளில் போதிய அளவு ஆய்வுகள் இதுவரை முழுமையாக நடத்தப்பட வில்லை என்பது தொல்லியலாளர் பலரது கருத்துக்களாகவே நிற்கின்றன. அரசு விரிவான கடல்சார்ந்த தொல்லியல் ஆய்வுகளுக்கு நிதி உதவி வழங்கி இவ்வகை ஆய்வுகள் நடைபெற உதவ வேண்டியது கடமை.
-சுபா





Suba

unread,
Feb 13, 2017, 3:31:15 PM2/13/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram

நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்
++++++++++++++++++++++++

பகுதி 2


தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.


இந்த நூலில் இரண்டாவது கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் முனைவர்.கா.ராஜன் அவர்களின் “ இலங்கை, தென்னிந்தியவிற்கு இடையேயான கடல்கடந்த பண்பாட்டு உறவுகள்” என்ற கட்டுரை.


ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்தியக் கடற்கரை பகுதிகள் கடல்கடந்து பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டிருந்தன என்ற கருத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை இது.


கடல்வழித் தொடர்பால் இரு நாடுகளிலும் காணப்பெறும் மொழி, குகைக்கல்வெட்டுக்கள், நாணயங்கள், முத்திரைகள், மோதிரங்கள், பானையோடுகள் போன்றனவற்றின் ஒத்த அமைப்புக்கள் இரு நிலப்பகுதிகளுக்குமிடையே காணப்படும் பண்பாட்டு ஒற்றுமைகளை உறுதி செய்வதைக் காண்கின்றோம்.


ஒரே வகையிலான இரும்புக்கால ஈமச்சின்னங்களின் எச்சங்கள் இன்று அகழ்வாய்வுகளில் கிடைக்கின்றன.


கி.மு.3ம் நூ என சுட்டப்படும் மாங்குளம் கல்வெட்டுக்களில் காணப்படும் சாத்து, நிகமம் என்ற சொற்கள் வணிகக் குழுக்களைச்சுட்டுகின்றன. ஆக, வரலாற்று தொடக்ககாலத்திலேயே இத்தகைய வணிக குழுக்கள் இடம்பெயர்ந்து நீண்ட தூரம் சென்று வணிகம் செய்தன என அறியமுடிகின்றது.


பண்டைய வணிக வழிகளில் குவியல்களாகவும் உதிரியாகவும் கண்டெடுக்கப்பட்ட ரோமானிய நாணயங்கள் அயலகத்தார் தமிழகம் வந்து வணிகத்தில் ஈடுபட்டமைக்குச் சான்றாக அமைகின்றது.


இலங்கையில் பௌத்த மதத்தை அறிமுகப்படுத்திய அசோகர் காலத்தில் தான் பிராமி எழுத்துக்கள் இலங்கைக்கு அறிமுகமாகின என்ற கூற்றுக்கு மறுப்பாக அனுராதபுரத்தில் நிகழ்த்திய அகழ்வாய்வில் மகதப் பேரரசுக்கு முன்னரே அதாவது கி.மு 4-5 நூ வாக்கிலேயே பிராமி எழுத்துக்கள் இலங்கையில் இருந்தமையைத் தொல்லியல் ஆய்வுகள் காட்டுவதாக இக்கட்டுரை குறிப்பிடுகின்றது.

இன்று மீனவர்கள் என தமிழகத்தில் அறியப்படுவோர் பரதவர்கள் என்பவர்கள். நாவாய், அதாவது கப்பல் வடிவத்துடன் அதனை செலுத்தும் பரதவ சமூகத்து மக்களைச் சுட்டும் ”பரத” என்று பிராமி எழுத்துப் பொறித்த ஒரு பானையோடு இலங்கையில் துவாகலா என்ற பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கப்பலைச் செலுத்தும் மாலுமியாகக், கடலை ஆளும் வணிகராக இந்த பரதவ குல மக்கள் இருந்திருக்கின்றனர் என இரு நிலப்பகுதி ஆய்வுகளும் நல்ல சான்றுகளைத் தருகின்றன.


ஒரு கப்பல் தலைவன் ஒருவனின் இரு மகன்களான சேனா, கோத்திகா ஆகிய இருவரும் இலங்கையில் முதன் முதலில் தமிழ் ஆட்சியை நிறுவினர் (கி.மு 177-155) என மகாவம்சம் நூலின் வழி அறிய முடிகின்றது.


இப்படிப் பல ஆய்வுத்தகவல்களை இக்கட்டுரை வழங்குகின்றது. இலங்கை மட்டுமல்லாது ஏனைய கிழக்காசிய நாடுகளில் தொடர்ச்சியான ஆய்வுகள் செய்யப்படுமானால் தமிழகத்திற்கும் ஏனைய கிழக்காசிய நாடுகளுக்குமான வணிகத் தொடர்புகளும் தமிழின் ஆளுமையும் மேலும் புலப்பட வாய்ப்பு பெருகும் என்ற எண்ணத்தை இக்கட்டுரை வழங்குகின்றது.

-சுபா

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Feb 13, 2017, 9:54:14 PM2/13/17
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
அன்பின் திருமிகு சுபா அவர்களே!

தமிழ் தொன்மை சார்ந்த அந்த "நாவாய்" எனும் சொல் நம் பண்டை கடல்வழிச்செலவை குறிக்கிறது.ஆனால் அந்த சொல் வழங்கிய விதம் நம் தமிழர்களின் வரலாற்றை விளக்குகிறது.நம் சொல் பிறந்ததே "நாவின்" அசைவால் தான் தான்.கடற்பரப்பில் காற்று நாவு போல் மேலும் கீழும் அசைந்து தண்ணீரில் அலைகள் உண்டாக்குகிறது.நாவாய் எனும் "தொழில் ஆகுபெயர்" நம் தமிழ் தொன்மையைச் சுட்டிக்காட்டும் இலக்கணம் ஆகும்.எங்கள் நெல்லைச்சீமையில் பாட்டிமார்கள் "சுளகி"ல் (இதுவும் "சங்கத்தமிழ்ச்"ச்சொல்) அதாவது முறத்தில் அர்சி குருணையை கல் நீக்க அந்த "கடல் அலை" போல மேலும் கீழுமாய் அசைப்பார்கள்.
எனவே "நாவாய்" சார்ந்த அந்த ஆராய்ச்சிக்கட்டுரை மிக மிக நுட்பமானது.உங்கள் வாசிப்பும் விளக்கமும் மேலும் மேலும் தொடர்க.
பிரசுரிப்பாளர்: வாஸ்து வேத ஆய்வு நிறுவனம்

சி. ஜெயபாரதன்

unread,
Feb 14, 2017, 12:07:43 AM2/14/17
to mintamil, vallamai, tamilmantram, Subashini Tremmel, N. Ganesan
தமிழ்ச்சொல் நாவாயிலிருந்து ஆங்கிலச் சொல் நேவி [Navy] வந்திருக்கலாம்.

சி. ஜெயபாரதன்.

--

Aravindan Neelakandan

unread,
Feb 14, 2017, 1:19:22 AM2/14/17
to mintamil, vallamai, tamilmantram, Subashini Tremmel, N. Ganesan
இந்தோ ஐரோப்பிய மொழி பகுப்பை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் நாவாய் தமிழ் அல்ல இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்ப வேர் கொண்டது.  :)  

மதிப்பிற்குரிய ஜெயபாரதன், நன்றாக இருக்கிறீர்களா? திண்ணை காலத்திலிருந்து இருவரும் அறிவியல் கட்டுரைகளை எழுதி வருகிறோம். ஏதோ அறிவியல் என்றால் தமிழன் அப்படியே படித்துவிடுவான் என நினைப்பு நம் இருவருக்கும். எனக்கு இப்போது அது சுத்தமாக அகன்றுவிட்டது. செம்மொழி என பெயர் கொடுத்து உலகின் முதல் டைனோசார் தமிழில்தான் பிளிறியது என சொல்லி கமிஷன் அடித்து கொளுத்து வாழும் கொள்ளைக் கூட்டங்களுக்குக் கால்பிடித்து தன் ஊன் வளர்க்கும் பிழைப்புத் தந்திரத்தின் இன்னொரு பெயர் மட்டும்தான் தமிழ் உணர்வு என நான் நினைக்கிறேன். இப்போதெல்லாம் தமிழில் அறிவியல் கட்டுரைகள் எழுதத் தோன்றுவதில்லை. (தமிழ் பிழைத்தது என நீங்கள் சொல்வது கேட்கிறது.:) )
பொதுவாக தமிழ் தமிழ் பெருமை இத்யாதி பேசுகிறவர்கள் தமிழுக்கும் இதர இந்திய மொழிகளுக்குமான கொடுக்கல் வாங்கல்களை சந்தோஷமாக மறந்துவிடுகின்றனர். நானறிய 17 ஆம் நூற்றாண்டு வரை தமிழ் இதர இந்திய மொழியினரால் மிகவும் மதிக்கப்பட்டது. கிருஷ்ண தேவராயர் ஆண்டாள் எனும் தமிழ் ஆன்மிகக் கவியின் வரலாற்றைத் தான் மொழி பெயர்த்தார் என்றால் தமிழுக்கும் தமிழின் ஆன்மிக பண்பாட்டுக்குமான மதிப்பு இந்தியாவில் எப்படி வழங்கிற்று என்பதை உணரலாம். எப்போது ஐரோப்பியன் புகழ்ந்தால்தான் தமிழுக்கு பெருமை என்று ஜியு போப் கால்டுவெல் போன்ற குறுகிய மத உணர்வாளர்களின் தமிழ் ’தொண்டுகளை’ தலையில் தூக்கி வைத்து ஆட ஆரம்பித்தோமோ அப்போது தொடங்கியது தமிழின் வீழ்ச்சி. இறுதியில் ‘பனமரத்தில் வவ்வாலா தமிலனுக்கே - ஆமாம் தமிலனுக்கேத்தான் - சவலா’ என்று கூச்சலிடுகிறவர்களை வீரத்தமிழச்சி என சொல்லும் இடத்தில் தமிழினப் பெருமை வாழ்கிறது. ஜல்லிக்கட்டு மனநோய் எழுச்சிக்கு பிறகு தமிழன் தமிழ் பெருமை என்று சொல்பவர்களையே கொஞ்சம் மனநோய் கொண்டவர்கள் நன்றி கெட்டவர்கள் என்றே அனுமானிக்கத் தோன்றுகிறது. 

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/nVY2mdvRu2A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Feb 14, 2017, 10:18:04 AM2/14/17
to mintamil, Aravindan Neelakandan, vallamai, tamilmantram, Subashini Tremmel, N. Ganesan
மதிப்புக்குரிய நண்பர் அரவிந்தன் நீலகண்டன்,

நலமா ?

நாமிருவரும் விஞ்ஞானக் கட்டுரைகள் திண்ணையில் 2001 முதல் எழுதி வந்தது நமக்கும், நமது தமிழ்ச் சந்ததிகளுக்கும், பிறருக்கும் நிகழ்கால, எதிர்கால வரலாற்றுப் பதிவுகளாய்க் காலச் சிமிழ்களாய் [Time Capsules] புதைத்து வைக்கத்தான். யாராவது தோண்டி எடுக்க வருவார்.  

நான் கடவுளைப் பற்றி எழுதிய கட்டுரையை எப்போதாவது படித்தீர்களா ?


இப்போது எங்கே பணிசெய்து வருகிறீர்கள் ?  உங்கள் திடீர்மடல் பார்த்து மகிழ்ச்சி.

சி. ஜெயபாரதன்

Aravindan Neelakandan

unread,
Feb 14, 2017, 12:10:57 PM2/14/17
to சி. ஜெயபாரதன், mintamil, vallamai, tamilmantram, Subashini Tremmel, N. Ganesan
மதிப்பிற்குரிய ஜெயபாரதன்

படித்தேன். எனக்கு படைப்பு அல்லது படைத்தோன் எனும் கருதுகோளில் ஏற்பு இல்லை. இது குறித்து விரிவாகவே எழுத வேண்டும். படைப்போன் எத்தளத்திலும் உயிர் உருவாக தேவையில்லை. மேலும் சிம்பன்ஸிகளில் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி பதியப்பட்டு வருகிறது.

பணிவன்புடன்
அநீ

2017-02-14 20:47 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
மதிப்புக்குரிய நண்பர் அரவிந்தன் நீலகண்டன்,

நலமா ?

நாமிருவரும் விஞ்ஞானக் கட்டுரைகள் திண்ணையில் 2001 முதல் எழுதி வந்தது நமக்கும், நமது தமிழ்ச் சந்ததிகளுக்கும், பிறருக்கும் நிகழ்கால, எதிர்கால வரலாற்றுப் பதிவுகளாய்க் காலச் சிமிழ்களாய் [Time Capsules] புதைத்து வைக்கத்தான். யாராவது தோண்டி எடுக்க வருவார்.  

நான் கடவுளைப் பற்றி எழுதிய கட்டுரையை எப்போதாவது படித்தீர்களா ?


இப்போது எங்கே பணிசெய்து வருகிறீர்கள் ?  உங்கள் திடீர்மடல் பார்த்து மகிழ்ச்சி.

சி. ஜெயபாரதன்

சி. ஜெயபாரதன்

unread,
Feb 14, 2017, 3:10:10 PM2/14/17
to Aravindan Neelakandan, mintamil, vallamai, tamilmantram, Subashini Tremmel, N. Ganesan, vannan vannan
மதிப்புக்குரிய நண்பர் அரவிந்தன்,

///படைப்போன் எத்தளத்திலும் உயிர் உருவாக தேவையில்லை. மேலும் சிம்பன்ஸிகளில் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி பதியப்பட்டு வருகிறது. ///

உயிர் எப்படி உருவாகிறது, மரணத்தின் போது உயிர் பிரிந்து எங்கே போகிறது என்று விளக்கம் தாருங்கள். பரிணாம வளர்ச்சி பதியப்பட்ட சிம்பன்ஸியிலிருந்து ஆறறிவு /ஏழறிவு படைத்த மனிதன் ஏனிப்போது பிறக்கவில்லை ?

அன்புடன்,
சி. ஜெயபாரதன்

Suba

unread,
Feb 15, 2017, 10:54:32 AM2/15/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
​நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்
++++++++++++++++++++++++
பகுதி 3

தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.

இந்த நூலில் மூன்றாவது  கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் முனைவர்.கி.ஸ்ரீதரன் அவர்களின் “ மாங்குடி அகழ்வாய்வில் கிடைத்த படகுக் குறியீடு பொறித்த பானை ஓடுகள்” என்ற கட்டுரை.


மாங்குடி திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோயில் வட்டத்தில் அமைந்த பகுதி. இங்கு நாயக்கர் புஞ்சை என்ற பகுதியில் செய்யப்பட்ட அகழ்வாய்வில் பெருங்கற்கால பண்பாட்டினைக்காட்டும் கருப்பு-சிவப்பு பானை ஓடுகள், குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், கல்மணிகள் ஆகியன கிடைத்தமைப் பற்றி இக்கட்டுரை விவரிக்கின்றது. 

அதில் கி.மு.2ம் நூ. சேர்ந்த தமிழி  எழுத்து பொறித்த பானை ஓடு குறிப்பிடத்தக்கது அதோடு படகு  போன்ற வடிவம் பொறிக்கப்பட்ட பானையும் இங்கே கிடைத்துள்ளது.  இப்பானையின் கழுத்துப் ப்கௌதியில் படகு வடிவம் கீறப்பட்டுள்ளது. ஒரு படகு துடுப்புடன் இருப்பது போன்ற வடிவில் இது அமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த மாங்குடி எனும் சிற்றூர் சங்ககாலத்தில் வணிக வழித்தடத்தில் அமைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. ஆகையால் வணிகர்கள் வந்து சென்றமையைக் குறிக்கும் அகழ்வாய்வுப் பொருட்கள் பல இங்கு கிடைப்பது இப்பகுதி சங்ககாலத்திலும் அதற்கு முன்னரும் வணிகர்கள் வந்து சென்ற இடமாகும் என்பதற்குச் சான்றாக அமைகின்றது என்பதை இக்கட்டுரை அகழ்வாய்வு தகவல்களோடு முன் வைக்கின்றது.

மாங்குடி மட்டுமன்றி மேலும் இப்பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில் தொடர்ச்சியாக அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் மேலும் பல தொல்லியல் மற்றும் கடசார் ஆய்வுச்சான்றுகள் நமக்குக் கிட்ட பெரிய வாய்ப்புள்ளது. 

சுபா

Suba

unread,
Feb 19, 2017, 10:14:50 AM2/19/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
​நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்
++++++++++++++++++++++++
பகுதி 4

தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.

இந்த நூலில் மூன்றாவது  கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் முனைவர்.வீ.செல்வகுமார் அவர்களின் “ இலக்கியத்தில் முசிறி, தொல்லியல் பட்டணம்” என்ற கட்டுரை.

சங்க இலக்கியத்தில் சிறப்பாகக் குறிப்பிடப்படும் முசிறி என்ற நகரம் இன்று எந்த நகரம் என்ற ஆய்வினை வெளிக்காட்டும் கட்டுரையாக இக்கட்டுரை அமைகின்றது. முன்னர் இன்றைய பெரியாற்றின் வட கரையில் உள்ள கொடுங்களூர் (திருச்சூர் மாவட்டம்) என நம்பப்பட்டது. ஆனால் அண்மைக்கால ஆய்வுகள் இது எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள  பரவூர் என்ற ஊரிலிருந்து அண்மையில் உள்ள பட்டணம் என்ற நகராகவே இருக்கலாம்  என்று இக்கட்டுரை முன் வைக்கின்றது.

முசிறி சேரர்களின்  கீழ் இருந்த துறைமுகமாக இருந்தது. 

1990களில் ஷாஜன் என்பவர் மேற்கொண்ட கள ஆய்வின் விளைவாகப் பட்டணம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 2003ல் மேற்கொள்ளப்பட்ட கூட்டாய்வுகள் இந்த நகரின் முக்கியத்தௌவத்தை வெளிப்படுத்தின.. பின்னர் 2007 முதல் 2009 வரை கேரள வரலாற்றுக்கழகம் மேற்கொண்ட அகழாய்வுகள், பட்டணம் மற்றும் கீழைக்கடற்கரையில் அமைந்திருந்த அரிக்கமேடு, அழகன்குளம் போன்ற முக்கியமான வணிக மையமாகத் திகழ்ந்தது என்பதை வெளிப்படுத்தியது.

பட்டணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட  தோணி, படகுத் துறை ஆகியன, படகு பிணைத்து வைக்கப் பயன்படுத்தப்பட்ட தேக்குமரத் தூண்களும் மிகச் சிறப்பானக் கண்டுபிடிப்புக்கள். கி.மு 1 மற்றும் கி.பி.1ம் நூற்றாண்டைச் சார்ந்தவை. இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இதுவரை  1000க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பானைகளின் துண்டுகள் கிடைத்துள்ளன. ஆக பட்டணம்  ஆய்வுகளின் அடிப்படையில் சங்க கால வாழ்விடம் என்பது உறுதியாகின்றது என இக்கட்டுரை குறிப்பிடுகின்றது.

பட்டணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அகண்ட தமிழகத்தின் வரலாற்றுச் செய்திகள் மேலும் பல நமக்குக் கிடைக்கலாம். ஆனால் இடைப்பட்ட காலத்தில் பல தடைகள் இத்தகைய ஆய்வுகள் தொடரப்படாமல் இருப்பதற்கு நிகழ்ந்தன என்பது வருத்தத்திற்குறிய செய்தியே.

சுபா 

Suba

unread,
Feb 26, 2017, 6:38:45 AM2/26/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்
++++++++++++++++++++++++
பகுதி 5

தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.

இந்த நூலில் ஐந்தாவது  கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் ர.பூங்குன்றன் அவர்களின் “ கடல்வழிகளும் போர்களும்” என்ற கட்டுரை.

தமிழகத்தின் கடல் ஆளுமையைப் பற்றி இக்கட்டுரை குறிப்பிடும் வகையில் அமைந்திருக்கின்றது. சங்க இலக்கியத்தில் கடல் வழிகள், கப்பல் போக்குவரத்துக்கள் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன;  மேற்கு கடற்கரை கடற்வழி நகரங்களான மாந்தை, வஞ்சி, முசிறி, நெல்கிண்டா, குட்ட நாடு போன்றவை முக்கிய நகரங்களாக இருந்த செய்திகள் சுட்டப்படுகின்றன.  சங்க இலக்கியம் மாந்தை, வஞ்சி  ஆகிய நகரங்களின் வளத்தைக் கூறுவதையும் கட்டுரை குறிப்பிடுகின்றது.

முசிறி மலை வளமும் கடல் வளமும் பொருந்திய நகராக விளங்கியமை  பரணரின் பாடல் வழி அறிய முடிகின்றது. 

கடல் வணிகம் சிறப்புற்று இருந்தமையால் கி.மு.4ம் நூ. வாக்கிலேயே  சீனத்துப் பட்டு தமிழகம்  கொண்டு வரப்பட்டது என்ற தகவலையும் அறிய முடிகின்றது.

மேற்கு கடற்கரை நகரான மாந்தையின் வளமும் சிறப்பும் சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றிணை பாடல்களில் குறிப்பிடப்படுகின்றன.

சேர மன்னன் நெடுஞ்சேரலாதனுக்கும் யவனருக்கும் நடைபெற்ற போர் பற்றியும் இக்கட்டுரை சொல்கின்றது. வட மேற்கிந்தியாவில் ஆண்ட இந்தோ-கிரேக்க மன்னன் ட்ரிமிட்டிஸ்  சேரநாடு வரை  படையெடுத்து வந்து வென்றதாகவும் பின்னர் காரவேலன் அந்த யவன மன்னரை தோற்கடித்தான் என்ற செய்தி இரண்டாம் பத்தில் இடம்பெறுவதையும் கட்டுரையாசிரியர் சுட்டுகின்றார்.

சுவாரசியமான பல தகவல்கள் இக்கட்டுரையில் இருந்தாலும் சில கேள்விகளும் எழுகின்றன. வட இந்தியாவில் ஆண்டவர்கள் யவனர்கள் என சுட்டப்பட்டதன் காரணம் அவர்கள் பூர்வீகமா அல்லது அவர்கள் உண்மையில் கிரேக்கத்திலிருந்து வந்தவர்களா? இந்தோ-கிரேக்க மன்னன் ட்ரிமிட்டிஸ் வென்றான் எனும் போது எந்தப் போரில், எங்கு யாரைத் தோற்கடித்து வென்றான் என்ற விளக்கம் கட்டுரையில் முழுதாக வழங்கப்படவில்லை. 

அன்றைய காலகட்டத்தில் சேரநாடும் இணைந்த வகையில் அகண்ட தமிழகமாக தென் இந்தியா இருந்திருக்கின்றது. சங்கப்பாடல்கள் இங்கெல்லாம் தமிழும் தமிழர் வாழ்வும் சிறப்புற்றிருந்தமையைப் பாடியிருக்கின்றனர். இன்றோ தமிழகத்தின் கடற்கரை நகரங்களில் வாழும் மீனவ மக்கள் ஏழைகளாக அறியப்படுகின்றார்கள்.   இது சரி செய்யப்பட வேண்டிய சமூகப் பிரச்சனையாக நன கருதுகின்றேன்.

சுபா

Innamburan S.Soundararajan

unread,
Feb 26, 2017, 8:15:49 PM2/26/17
to mintamil, Subashini Kanagasundaram
இந்த தொடர் த.ம.க. வின் இலக்குகளை நோக்கி பீடுநடை போடுகிறது. மாணவர்களின் கவனத்தை ஈர்க்க மற்றவர்களும் உதவவேண்டும். நான் என்னால் இயன்றதை செய்கிறேன். இது என் தரப்பு. 

ஆங்கிலத்தில் 'எல்லாவற்றையும் உட்படுத்திய' என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உண்டு. அது என் இலக்கு. 
இன்னம்பூரான்

--

Seshadri Sridharan

unread,
Feb 27, 2017, 2:20:43 AM2/27/17
to mintamil, Subashini Tremmel
2017-02-26 17:08 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்
++++++++++++++++++++++++
பகுதி 5

சேர மன்னன் நெடுஞ்சேரலாதனுக்கும் யவனருக்கும் நடைபெற்ற போர் பற்றியும் இக்கட்டுரை சொல்கின்றது. வட மேற்கிந்தியாவில் ஆண்ட இந்தோ-கிரேக்க மன்னன் ட்ரிமிட்டிஸ்  சேரநாடு வரை  படையெடுத்து வந்து வென்றதாகவும் பின்னர் காரவேலன் அந்த யவன மன்னரை தோற்கடித்தான் என்ற செய்தி இரண்டாம் பத்தில் இடம்பெறுவதையும் கட்டுரையாசிரியர் சுட்டுகின்றார்.

சுவாரசியமான பல தகவல்கள் இக்கட்டுரையில் இருந்தாலும் சில கேள்விகளும் எழுகின்றன. வட இந்தியாவில் ஆண்டவர்கள் யவனர்கள் என சுட்டப்பட்டதன் காரணம் அவர்கள் பூர்வீகமா அல்லது அவர்கள் உண்மையில் கிரேக்கத்திலிருந்து வந்தவர்களா? இந்தோ-கிரேக்க மன்னன் ட்ரிமிட்டிஸ் வென்றான் எனும் போது எந்தப் போரில், எங்கு யாரைத் தோற்கடித்து வென்றான் என்ற விளக்கம் கட்டுரையில் முழுதாக வழங்கப்படவில்லை. 

அன்றைய காலகட்டத்தில் சேரநாடும் இணைந்த வகையில் அகண்ட தமிழகமாக தென் இந்தியா இருந்திருக்கின்றது. சங்கப்பாடல்கள் இங்கெல்லாம் தமிழும் தமிழர் வாழ்வும் சிறப்புற்றிருந்தமையைப் பாடியிருக்கின்றனர். இன்றோ தமிழகத்தின் கடற்கரை நகரங்களில் வாழும் மீனவ மக்கள் ஏழைகளாக அறியப்படுகின்றார்கள்.   இது சரி செய்யப்பட வேண்டிய சமூகப் பிரச்சனையாக நன கருதுகின்றேன். - சுபா


காரவேலன் படையெடுப்பிற்கு பின் மதுரையை கிரேக்க அரசி ஒருத்தி ஆண்டதாக "நற்குடி வேளாளர் வரலாறு" குறிப்பதாக பேரா. இரா. மதிவாணன் சொல்கிறார். முடிந்தால் லண்டன் நூலகத்தில் அதன் படியை வாங்கி வலையேற்றுங்கள்.

கூலன்  

Suba

unread,
Feb 27, 2017, 4:02:21 PM2/27/17
to Innamburan S.Soundararajan, mintamil
2017-02-27 2:15 GMT+01:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
இந்த தொடர் த.ம.க. வின் இலக்குகளை நோக்கி பீடுநடை போடுகிறது. மாணவர்களின் கவனத்தை ஈர்க்க மற்றவர்களும் உதவவேண்டும். நான் என்னால் இயன்றதை செய்கிறேன். இது என் தரப்பு. 

ஆங்கிலத்தில் 'எல்லாவற்றையும் உட்படுத்திய' என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உண்டு. அது என் இலக்கு. 
இன்னம்பூரான்

​மிக்க நன்றி

சுபா

Suba

unread,
Feb 27, 2017, 4:13:10 PM2/27/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram

நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்
++++++++++++++++++++++++

பகுதி 6

தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.

இந்த நூலில் ஆறாவது கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் ச.செல்வராஜ் அவர்களின் “ தமிழகக்கடற்கரை துரைமுகப்பட்டினங்களும் அகழாய்வுகளும்” என்ற கட்டுரை.


இக்கட்டுரை பண்டைய தமிழகத்தோடு கிரேக்கர்கள் ஏற்படுத்திக் கொண்ட வாணிகத்தொடர்பை விளக்கும் வகையில் தொடங்குகின்றது.


கி.பி.1ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பெரிப்ளூஸ் ஆஃப் எரித்திரியன் சீ என்ற நூலிலும் பின்னர் பிளினி எழுதிய உயிரியல் நூலிலும், தாலமி எழுதிய பூகோள நூலிலும் தமிழகத்தின் கடல் வணிகம், துறைமுகங்கள் பற்றிய தகவல்கள் பல கிடைப்பதாக கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகின்றார். ஆக சங்க நூல்களில் காண்பது போலவே அயல் நாட்டவர் நூற்களிலும் இக்குறிப்புக்கள் வருகின்றன என்ற செய்தியை இதன் வழி அறிய முடிகின்றது.


சங்ககால துறை முகங்களாக கீழ்க்காணும் பட்டினங்களை இக்கட்டுரை பட்டியலிடுகின்றது.

  1. வசவசமுத்திரம்
  2. அரிக்கமேடு
  3. மரக்காணம்
  4. காரைக்காடு/குடிகாடு
  1. காவிரிப்பூம்பட்டினம்
  1. அழகன்குளம்
  2. கொற்கை


இடைக்காலத் துறைமுகங்களாக  கீழ்க்கண்பவை குறிப்பிடப்படுகின்றன

  1. பெரியபட்டணம்
  2. நாகப்பட்டினம்


இந்த பட்டினங்களின் விளக்கங்களோடு அங்கு கண்டெடுக்கப்பட்ட சான்றுகள் குறிப்பிடப்படுவதும் இக்கட்டுரையின் சிறப்பாக அமைகின்றது.


சங்ககால துறைமுகங்கள் இன்று மறைந்தும் அழிந்தும் விட்டன. ஆனால் இந்தப் பகுதிகளில் விரிவான ஆய்வுகள் மென்மேலும் தொடரப்படும் போது பண்டைய கடல் வணிகம் தொடர்பான புதிய தகவல்கள் மேலும் கிடைக்க வாய்ப்புண்டு!


சுபா



​ 

Suba

unread,
Mar 1, 2017, 11:50:45 AM3/1/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்
++++++++++++++++++++++++
பகுதி 7

தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.

இந்த நூலில் 7வது கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் பு.சந்திரசேகரன் அவர்களின் “ பண்டைய, இடைக்காலக் கடல் ஆதிக்க வரலாறு” என்ற கட்டுரை.

சங்ககால பரதவர்கள் (மீனவர்கள்) கடல் ஆளுமையில் சிறந்திருந்தார்கள் என்பதையும், சங்ககால மன்னர்கள் கடற்கொள்ளையர்களை விரட்டியடித்தார்கள் என்றும், அரிக்கமேடு, அழகன்குளம் போன்ற துறைமுகப் பட்டினங்களில்  ரோமானிய நாணயங்கள்  புழக்கத்தில் இருந்தன என்பதனையும்  இராஜேந்திர சோழ மன்னனின் கடாரத்திற்கான போர் ஆகிய செய்திகளை அக்கால சமூக, பொருளாதார, அரசு அமைப்புக்களுடன்  இணைத்துப் பார்க்கும் வகையில் கட்டுரையாளர் இக்கட்டுரையைப் படைத்திருக்கின்றார்.

பரதவர்களின் ஆதிக்கம் என்பது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு என அமைந்திருந்தது. ஆக இந்த ஆதிக்கம்  பொருளாதார ஆதிக்கம் என்ற வகையில் அமைகின்றது.

அயல்நாட்டவர்கள் தமிழகத்தின் பண்டைய நகர்களுக்கு வந்து வணிகம் மேற்கொண்டபோது  வெளிநாட்டுப் பொருட்களுக்கு ஏற்ற உள்நாட்டுப் பொருட்கள் பரிவர்த்தனைச் செய்யப்பட்டன. இதனால் பரிமாற்றம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் பொருள் உற்பத்தி என்பது நிகழ்ந்தது. மிளகு, விலையுயர்ந்த கற்கள், முத்து, பட்டு, பருத்தித் துணி என்பன இவ்வகை உதாரணங்களில் அடங்குகின்றன.

இனக்குழு சமுதாயத்தில்  சிற்றரசர்களே வணிகம் செய்வதும் நிகழ்ந்தது.  

வணிக முதலீடு வணிக குழுக்களின் தோற்றத்திற்குக் காரணமாகியது. நிகமம், சாத்து என்ற வணிகக்கூட்டங்கள் உருவெடுத்தன.

சங்ககால மன்னர்கள் மற்றும் குடிகளின்  வீழ்ச்சிக்கு  கடல்கோளும் மிக முக்கியக் காரணமாகியது.

சாத்து, நிகமத்தைச் சார்ந்த பெரும் வணிகர்கள், பல்லவர்கால சிறுபாண்மை உற்பத்தியாளர்களுடன் சேர்ந்து திசையாயிரத்து ஐந்நூற்றுவராக உருவாகினார்கள். இந்த அமைப்பு வேளாண்மை சிற்பாண்மை உற்பத்தியாளர்களும் நிகம, சாத்து வணிக சந்ததிகளும்  சேர்ந்தே உருவாக்கிய அமைப்பு. இந்த அமைப்பு பல்லவர் காலத்தில்  3ம் நந்திவர்மன் காலத்தில் ஏற்பட்டது. கீழையனூர் கிராமத்திலிருந்து ஒரு நிலக்கிழார் மணிக்கிராமத்து வணிகர்களுடன் தாய்லாந்து சென்று அங்கே ஒரு குளத்தை வெட்டி அது பாதுகாப்பாக இருக்க மணிக்கிராமத்தார் வசம்  ஒப்படைத்துள்ளார் என்ற கல்வெட்டுச் செய்தியும் இக்கட்டுரையில் குறிப்பிடப்படுகின்றது.

மலேசிய சிங்கை தவிர்த்து ஏனைய  கிழக்காசிய நாடுகளுக்கான தமிழட்களின் கடல் ஆளுமை என்பது தற்சமயம் பேசப்படாத ஒரு விசயமாகவே இருக்கின்றது. தமிழகத் தமிழ்த்துறை மற்றும் வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர்கள் இந்த நோக்கில் ஆய்வு செய்ய முற்பட வேண்டும். இதன் வழி மேலும் பல தகவல்களைப் பெற வாய்ப்பிருக்கும். அது தமிழர் வரலாற்றை மேலும் விரிவாக அறிந்து கொள்ள உதவும்!

சுபா

Suba

unread,
Mar 3, 2017, 2:45:13 PM3/3/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்
++++++++++++++++++++++++
பகுதி 8

தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.

இந்த நூலில் 8வது கட்டுரையாக இடம்பெறுவது திரு.வே.சாமுவேல் அருள்ராஜ் அவர்களின் “ மரபுவழிக்கலங்களும் அவற்றைச் செலுத்தும் நுட்பங்களும்” என்ற கட்டுரை.

இந்தியக் கப்பற்கலை தொடர்பான சான்றுகள் மொகஞ்சதாரோ முத்திரைகளில் உள்ளன. தொல்காப்பியக் குறிப்புக்கள் நீர்வழி நிலவழி வணிகத்தைப் பற்றி குறிப்பிடுகின்றது. 

கொங்கு தேசத்திற்கும் மேலை நாடுகளில் யவனர், கிரேக்கர் பாபிலோனியரோடு வணிகம் நடந்ததற்குச் சான்றாக பண்டைய நாணயங்கள் கிடைத்துள்ளன.

கலங்களின் வகைகள் எனும் போது இலக்கியத்தில் 18 வகையான கலங்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றை
  • கட்டு மர வகை
  • தோணி வகை
  • வள்ளம் வகை 

எனப்பிரித்திருக்கின்றார்கள்.

கட்டுமர வகை தொடர்பான குறிப்புக்கள் சங்க இலக்கியங்களில் அகநானூற்றிலும் பரிபாடலும் சொல்லப்படுகின்றன.

தோணி வகை கலங்கள் மீன் பிடிக்கப் பயன்படுத்தப்பட்டன. இவற்றை பற்றிய குறிப்புக்கள் பரிபாடல், புறநானூறு , அகநானூறு பாடால்களில் உள்ளன.

நீண்ட தூரப்பயணத்துக்கு ஏதுவாக வள்ளம் என்ற வகை பெரிய கப்பல்களை பண்டைய தமிழர்கள் உருவாக்கினர். வகை வகையான வேலைப்பாட்டுடன் கூடிய வள்ளம் வகை கலங்களைப் பற்றி சிலப்பதிகாரம் கூறுகின்றது.

 கடல் நீரோட்டம் பற்றிய அறிவு பண்டைய தமிழருக்கு நிறைவாக இருந்தது. கலங்கள் திசையறியாமல் தத்தளிக்காமல் இருக்க களங்கரை விளக்கத்தை உருவாக்கினர் பண்டைய தமிழர். இது பற்றிய குறிப்பு சிலப்பதிகாரம், பட்டினப்பாலை பெரும்பாணாற்றுப்படை மற்றும் அகநானூறு ஆகிய சங்க இலக்கிய நூல்களில் காணலாம்.

இப்படி நல்ல பல தகவல்களை இக்கட்டுரை நமக்கு வழங்கியிருக்கின்றது.

கடல் சார்ந்த அறிவு, வெவ்வேறு வகையான கப்பல் கட்டுதல் ஆகியவற்றில் பண்டைய தமிழர் சிறந்து விளங்கினர் என்பதில் ஐயமில்லை. இந்த அனுபவங்கள் பண்டைய தமிழர் நீண்ட தூரம் கடல் பயணம் மேற்கொள்ள அவர்களுக்கு உதவியிருக்கின்றது. பண்டைய தமிழரின் கடற்பயணங்கள் குறித்த சான்றுகளைத் தேடும் பணி முனைப்புடன் தொடரப்பட வேண்டும். 

சுபா

2017-03-01 17:50 GMT+01:00 Suba <ksuba...@gmail.com>:
நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்
++++++++++++++++++++++++

Suba

unread,
Mar 5, 2017, 12:23:34 PM3/5/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்
++++++++++++++++++++++++
பகுதி 9

தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.

இந்த நூலில் 8வது கட்டுரையாக இடம்பெறுவது திரு.கி.இரா.சங்கரன் அவர்களின் “ தமிழகத்தின் கடல்சார் வரலாற்றில் வணிகப் பொருள்கள்” என்ற கட்டுரை.

​தமிழக எல்லை தாண்டி அருகாமையில் இருக்கும் இலங்கையில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகளில் பண்டைய தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது போல எகிப்தின் செங்கடல் துறைமுகங்களில் தமிழ் தொல்லெழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. காலத்தால் பிற்பட்ட உரைகல் ஒன்று தாய்லாந்தில் கிடைத்துள்ளது. இவை வெவ்வேறு பகுதிகளில் தமிழர்கள் பன்னெடுங்காலமாக வணிகம் தொடர்பில் கடல் பயணங்களை மேற்கொண்டமையை உறுதி செய்வனவாக இருப்பதை இக்கட்டுரை குறிப்பிடுகின்றது. 

கடல்வணிகத்தில் சந்தையாக்கப்பட்ட பொருட்களாக உயிருள்ள பொருட்களான பறவைகள், விலங்குகள், மற்றும் மருத்துவ குணம் கொண்ட கற்பூரம் போன்றவை குறிப்பிடப்படுகின்றன. கற்பூரத்தின் மருத்துவத் தன்மைகளின் சிறப்பினால் இவை பெரிதாக வணிகப்பொருளாகின.

கடற்வணிகத்தில் இடம்பெற்ற மற்றொரு பொருள் பாக்கு. இதுவும் அதன் மருத்துவ குணத்திற்காகவே வணிகப்பொருளில் முக்கியப் பொருளாக அமைந்தது.

அரபு நாடுகளிலிருந்து தமிழகம் வந்தவற்றுள் குதிரைகள் முக்கியமானவை.பத்துப்பாட்டு,  காவிரிபுகும் பட்டினத்திற்கு கப்பலிலிருந்து புரவிகள் வந்திறங்கியதாக குறிப்பிடுவதைக் கட்டுரை சுட்டுகிறது. சிம்மவிஷ்ணு வழிவந்த காஞ்சி பல்லவர்கள் தங்கள் செப்பேடுகளில் குதிரைகளைக் கொண்டு அஸ்வமேதயாகம் செய்ததாகச் சொல்லிக் கொள்கின்றார்கள்.

தென்னகத்திலிருந்து ரோமிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் தேக்கு, கருங்காலி மரங்களும் முக்கியமானவை.

மனிதர்களும் அடிமைகளாக வணிகப்பொருட்களாக இருந்துள்ளனர். சிறார்கள், இளம் பெண்கள் ஆகியோர் மத்திய தரைக்கடல் நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளனர். காலனித்துவ ஆட்சியின் போது தென்னிந்தியாவிலிருந்து இலங்கை, பிஜி, மேற்கிந்திய தீவுகளுக்கு மக்கள் அடிமைகளாகச் சென்றனர்.

உலக வரலாற்றின் பன்முகத்தன்மையை அறிந்து கொள்ள கடல்வணிகம் தொடர்பான ஆய்வுகள் முக்கியம் என்றும் கடல்பாதைகளை விளக்கும் கடல்சார் வரலாற்றினை கண்டறிவது உடனடித் தேவை என்றும் இக்கட்டுரை குறிப்பிடுகின்றது.

​சுபா​

​ 

Suba

unread,
Mar 6, 2017, 4:15:02 PM3/6/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்
++++++++++++++++++++++++
பகுதி 9
தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.

இந்த நூலில் 12வது கட்டுரையாக இடம்பெறுவது முனைவர் சொ.சாந்தலிங்கம் அவர்களின் “ காயல்பட்டினம் - ஓர் இசுலாமிய வணிகத்தலம்” என்ற கட்டுரை.

பழையகாயல், புன்னைக்காயல், காயல்பட்டினம்  என் மூன்று நகரங்களாக இன்று இருக்கும் ஊர்கள் இணைந்து ஒரே ஊராக காயல்பட்டினம் என்ற பெயரில் வழங்கப்பட்டது. இதன் அருகில் இருக்கும் கொற்கை சங்க காலத்தில் புகழ்மிக்க நகரமாக விளங்கியது. 

முதன் முதலில் அரேபிய முஸ்லிம்கள் கிபி.633ல் காயலில் வந்து குடியேறுகின்றனர்.இக்காலத்தில் கடற்கரைப்பகுதியில் ஒரு மசூதி கட்டப்பட்டது. அது கடற்கரை மசூதி என்ற பெயரில் வழங்கியது.

அரேபியர்களின் 2வது குடியேற்றம் காயலில் கிபி.842ல் எகிப்திலிருந்து வந்த இசுலாமியர்களால் நிகழ்ந்தது இவர்களால் குப்தா பெரிய பள்ளி என்னும் மசூதி கிபி 842ல் கட்டப்பட்டது.

வாசப், இபின்பதுதா, மார்க்கோபோலோ ஆகிய வெளிநாட்டுப் பயணிகள் காயல்பட்டினம் துறைமுகத்தைத் தங்கள் குறிப்பேடுகளில் சிறப்பித்துக் கூறியிருக்கின்றனர். 

காலத்தால் முந்திய கடற்கரைப் பள்ளிவாசலில் (கிபி 640) இரண்டு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. ஒன்று ஜடாவர்மன் கால கல்வெட்டு (கிபி1190-1216). இப்பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடை இக்கல்வெட்டில் காணப்படுகின்றது.

கிபி900-1500 வரை காயல்பட்டினத்தில் இசுலாமியர் சிறப்பான வாழ்க்கையைப் பெற்றிருந்தனர். கிபி 1530 பின்னர் போர்த்துக்கீசியர்களின் வருகை இங்கே சலசலப்பை உண்டாக்கியது. முத்துக்குளிக்கும் தொழிலில் போட்டி உருவானது.

வகுதை, வகுதாரி என்ற பெயர்களும் காயல்பட்டினத்திற்கு உண்டு.

அஞ்சுவண்ணத்தார் என்ற வணிகக்குழு, எகிப்திலிருந்து முகமது கில்ஜியுடன் கிபி 850ல் வந்து தங்கிய பக்ரி, ஹாசிம், பருக்கி, உம்மையா, போர்வீரர் குழு ஆகிய ஐந்து குழுக்களுமே ஆவர்.

முதல் தமிழ் இசுலாமிய இலக்கியம் எனப்படும் மிராஜ்மாலை ஆலிப் புலவரால் எழுதப்பட்டது. கிபி 16ன் பிற்பகுதியைச் சார்ந்தது இந்த நூல்.

வரலாற்று அடிப்படையில் பல சான்றுகள் நிறைந்த நகரம் காயல்பட்டினம் என்பதை கட்டுரை ஆசிரியர் விரிவாக இக்கட்டுரையில் வழஙியுள்ளார்.

காயல்பட்டினம் சென்று இங்கு பல வரலாற்றுச் சான்றுகளைப் பதிய வேண்டும் என்ற எண்ணம் எழுகின்றது. அடுத்த எனது தமிழகப் பயணத்தில் இந்த ஊருக்குச் செல்ல வேண்டும்!

சுபா


Suba

unread,
Mar 9, 2017, 2:59:56 PM3/9/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்
++++++++++++++++++++++++
பகுதி 12

தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.

இந்த நூலில் 16வது கட்டுரையாக இடம்பெறுவது முனைவர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் “ தமிழ்ச்சமூக வரலாற்றில் உப்பு" என்ற கட்டுரை.

நம் உணவில் முக்கியப் பொருளான உப்பு ஒரு சமூகத்தின் வரலாற்றில் எவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது என்பதை விளக்கும் அருமையான கட்டுரை இது.

இக்கட்டுரையில்
கடற்கரை ஒட்டிய பகுதியான நெய்தல் நிலப்பகுதியில் உற்பத்தியாகும் உப்பினை ஏனைய நிலப்பகுதிகளுக்குக் கொண்டு செல்வோரை உமணர் என சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இவர்கள் கழுதைகள், மாட்டு வண்டிகள் ஆகியன மூலம் உப்பை முன்னர் நெல்லுக்கு பண்டமாற்று செய்தனர். இப்பண்டமாற்று முறையில் நெல்லின் மதிப்பும் உப்பின் மதிப்பும் சம அளவில் இருந்தது.

அழகர்மலையில் உள்ள கிமு 1ம் நூற்றாண்டு கல்வெட்டு  உப்பு வணிகன் வியக்கன் கணதிகள் பற்றி குறிப்பிடுகின்றது. 
உற்பத்தியாகும் உப்புக்கு அக்காலத்தில் உப்பு வரி பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் இல்லையென்றபோதிலும் அதைக் கொண்டு செல்லும் வணிகம் செய்வோர் வரி செலுத்தியதைச் சில கல்வெடுக்கள் சொல்கின்றன. உதாரணமாக கிபி 12ம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றும் 14ம் நூ. பிரான்மலை கல்வெட்டு ஒன்றும் இதனைச் சொல்கின்றன. மேலும் உப்புக்கும் நெல்லுக்கும் ஒரே அளவு வரியே வாங்கப்பட்டது என்பதையும் கட்டுரை குறிப்பிடுகின்றது.

சங்ககாலத்தில் உப்பெடுக்கும் தொழில் நெய்தல் நில பரதவ மக்களிடம் இருந்தது. பல்லவர் காலத்தில் இது அரசுக்கு உரியதாக மாறியது. வருவாய் தரும் தொழிலாக இது இருந்தமையே இதற்குக் காரணம்.

உப்பு ஊழியம் பற்றியும் சில செய்திகள் வழங்கப்பட்டுள்ளன அதாவது, திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிகாலத்தில் சம்பளம் இல்லாது உப்பினை எடுத்துச் சென்று நாகர்கோயில், சுசீந்திரம், கன்னியாகுமரி, திருவட்டறு ஆகிய ஊர்களிலுள்ள மடப்பள்ளிக்களுக்கு உப்பு வழங்க வேண்டும். இப்பணியைச் செய்யாவிட்டால் தண்டனை உண்டு.

ஆங்கிலேய காலணித்துவ ஆட்சி காலத்தில் 1805ம் ஆண்டு வாக்கில் உற்பத்தி செய்யப்படும் உப்பு கிழக்கிந்திய கம்பெனிக்கு மட்டுமே விற்றாக வேண்டும் என்ற நிலை உருவானது.

உப்பு உற்பத்தியையும் விற்பனையையும் கண்காணிக்க சென்னை உப்பு ஆணையம் (Madras Salt Commission)  உருவாக்கப்பட்டது.

இது உப்புக் குறவர் சமூகத்தின் தொழிலை பாதித்தது. 1866ல் நிகழ்ந்த பெரும் பஞ்சத்துக்குப் பின்னர் தமிழர்களின் பழைய வணிக முறையையும் மிகப் பாதித்தது.  உப்புக் குறவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து திருட்டுத் தொழிலில் ஈடுபடத் தொடங்கினர். குற்றங்களின் என்ணிக்கை பெருகியது. இதனால் அப்போதைய அரசு குற்றப் பழங்குடிகள் சட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்தப் பட்டியலில் உப்புக் குறவர்களும் சேர்க்கப்பட்டனர்.  இதனால் உப்பு வணிகம் செய்து பிழைத்த ஒரு சமூகம் குற்றப் பரம்பரை பட்டியலுக்குள் தள்ளப்பட்டது.

வட இந்தியாவில் காந்தியின் உப்பு அறப்போருக்கு இணையாக தமிழ் நாட்டின் வேதாரண்யத்தில் இராஜாஜி தலைமையில் போராட்டம் நடந்தது.
மதுரகவி பாஸ்கரதாஸ் உப்புவரி முழுவதும் ஒழிய வேண்டும் என்று தொடங்கும் பாடலை எழுதி மக்களிடம் பரப்பினார்.

தொடர்ச்சியான உப்பு வரி மீதான எதிர்ப்பினால் 01.04.1947ல் உப்பின் மீதான கலால் வரியை ஆங்கிலேய அரசு நீக்கியது.

இன்று குஜராத்தில் உற்பத்தியாகும் உப்பின் விலை அதன் தயாரிப்பு முறைகளின் காரணத்தால் விலை குறைவாக உள்ளது. இது தமிழகத்தில் உப்பின் விலையை பாதிப்பதாக உள்ளது. மேலும் உணவில் பயன்படுத்தப்படும் உப்பில் அயோடின் கலக்கப்பட வேண்டும்  என்ற சட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் தற்சமயம் நடப்பில் இருக்கும் பிரச்சனையாக இருக்கின்றது.

...என பல விரிவான தகவல்களை கட்டுரை ஆசிரியர் வழங்கியிருக்கின்றார்.

உப்பு உற்பத்தி, அதனைச் சார்ந்த சமூக அரசியல் நிகழ்வுகளை பற்றிய ஆவலைத் தூண்டும் கட்டுரையாக இது அமைந்திருக்கின்றது. அதே சமயம் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாலர்களுக்கு எவ்வகையான சுகாதார விழிப்புணர்ச்சி சார்ந்த தகவல்கள் வழங்கப்படுகின்றன என்ற கேள்வியும் என் மனதில் எழுகின்றது!

சுபா

Suba

unread,
Dec 16, 2017, 4:15:08 AM12/16/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram



அம்மா - தமிழகத்தின் இரும்புப் பெண்
முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன்
பதிப்பு: Giri Law Hause, Madurai, Tamil Nadu.

தமிழக அரசியல் தளத்தில் மிக முக்கியப்பங்கு வகித்த ஒரு அரசியல் தலைவர் முன்னாள் தமிழக ஜெயலலிதா அவர்கள். அவர் அரசியலுக்கு வந்த நாள் தொடங்கி இவ்வுலகை விட்டு மறைந்த நாள் வரையிலான அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளும் வெகுவாக மக்களின் கவனத்தை ஈர்த்தவை. ஜெயலலிதா என்ற பெண்மணி ஒரு சாதாரண பெண்ணாக இருந்து, பலரும் புகழும் நடிகையாக வளர்ந்து, பின்னர் தமது தொண்டர்களால் 'அண்ணி' என்றும் பின்னர் 'அம்மா' என்றும் புதுப்பரிமாணம் பெற்ற தகவல்களை இந்த நூல் வாசகர்களாகிய நமக்கு வழங்குகின்றது. 

நம்மைச் சுற்றிலும் நடக்கும் பல செய்திகள் நாளடைவில் நமது நினைவுகளிலிருந்து நீங்கி விடுகின்றன. பொதுவாக அவ்வப்போது பேசப்படுகின்ற செய்திகள் மட்டிலும் தலைதூக்கி அவ்வப்போது தனது இருப்பைக் காட்டும் போது அவை சிறிது பேசப்பட்டு பின் மீண்டும் நினைவுத் தளத்தின் பின் பக்கத்திற்குச் சென்று விடுகின்றன. ஜெயலலிதா அம்மையாரைப் பற்றிய நினைவுகளும் அப்படித்தான். ஜெயலலிதா என்றால் இன்று நமது நினைவில் கண் முன்னே காட்சியளிப்பது ஒரு நடிகை அரசியல்வாதியான ஒரு நிகழ்வும் பின்னர் அவரது மரணமும், அதன் பின்னனில் இருக்கும் மர்மங்களுமே. அம்மா என்று அழைத்து காலில் விழுந்து வணங்கியவர்களும் ஹெலிகாப்டரில் பறக்கும் போதும் கீழே விழுந்து வணங்கியவர்களும் கூட இன்று அவரது பெயரைக் களங்கப்படுத்தும் முயற்சிகளில் இறங்கி விட்டனர். இந்தச் சூழலில் செல்வி ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை சரிதத்தின் பல முக்கியச் செய்திகளையும் நிகழ்வுகளையும், சங்கடங்களையும், சாதனைகளையும், குற்றங்களையும், முடிச்சு அவிழ்க்கப்படா மர்மங்களையும் தொட்டுப் பேசுகின்றது முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன் அவர்கள் எழுதி யிருக்கும் இந்த நூல். 

ஸ்ரீரங்கத்தின் ரங்கசாமி ஐயங்கார் பெங்களூர் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸில் வேலை கிடைத்து சென்றபோது தனது குடும்பத்தையும் உடன் அழைத்துச் செல்கின்றார். அங்கு மைசூரில் பிரபல டாக்டர்.ரங்காச்சாரி மகன் ஜெயராமுக்கு மகள் வேதாவைத் திருமணம் செய்து வைக்கின்றார். ஜெயராம் வேதா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். அவர்களில் ஒருவர் தான் 1948ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி பிறந்த கோமளவல்லி என்ற இயற்பெயர்கொண்ட ஜெயலலிதா. பிறக்கும் போது வசதியாக இருந்த குடும்பம் பின் தந்தையின் ஊதாரித்தனத்தால் மிகவும் கஷ்டப்படும் நிலைக்கு வந்தது. விமானப்பணிப்பெண்ணாக இருந்த சித்தி அம்புஜா அன்று வித்யாவதி என்ற பெயரில் தமிழ்ச்சினிமா உலகில் நுழைந்தார். இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற வேதாவும் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார். சந்தியாவாக மாறினார். பள்ளிப்படிப்பிலும் நடனத்திலும் மிகத்தேர்ந்தவராக இருந்தார் கோமளவல்லி. பின்னர் படிப்படியாக திரைப்படம் , மேடை நாடகங்கள் என அவரது வாழ்க்கை தொடர்ந்தது. ஒய்.ஜி.பார்த்தசாரதியின் ஆங்கில மொழி நாடகத்தில் அப்போது வாய்ப்பு வந்தது. The Hold truth, The House of the August Moon ஆகிய நாடகங்களில் ஜெயலலிதா நடித்தார். அப்போது அவரோடு நடித்தவர்களில் சோ வும் ஒருவர். இவர்கள் நட்பு அன்றிலிருந்து இறுதி வரை தொடர்ந்தது. பின்னர் கன்னட மொழிப்படம் எனத்தொடங்கி தமிழ்ப்பட உலகில் மிக அதிக சம்பளம் பெற்ற கதாநாயகியாகவும் வலம் வந்தவர். 

ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் ஏதேச்சையாக நடந்ததுதான் என்றாலும் தனது திறமையினாலும் அறிவுக் கூர்மையினாலும் தனது இருப்பை அவர் தக்க வைத்துக் கொண்டார் என்றே கூறவேண்டும். தனது சமகாலத்து ஏனைய பெண் அரசியல்வாதிகளான, இந்திராகாந்தி அம்மையார், பெனாசீர் பூட்டோ போன்று இவருக்கு அரசியல் குடும்பப் பின்னணி என்பது அமையவில்லை. ஆனால் அதற்கும் மாறாகப் பல குழப்பங்கள் நிறைந்த குடும்பப் பின்னணியே இருந்தது. ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் சூழலில் தனது இருப்பை நிலை நாட்டிக் கொள்ள அவர் எடுத்த முடிவுகளும் செயல்படுத்திய நடவடிக்கைகளும் அவரது வெகுவான நூல் வாசிப்பு தந்த பரந்த விரிவான வாசிப்பின் மூலமாகத்தான் அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

அம்மையார் ஜெயலலிதா வாழ்வில் அவர் தானே வலிந்து தனக்கு ஏற்படுத்திக் கொண்ட களங்கம் என்றால் அது அவர் தனது வளர்ப்பு மகனாக சில காலம் தத்தெடுத்த சுதாகரனின் திருமணத்திற்காக அவர் செய்த படோடோபமான கோலாகலத் திருமண நிகழ்வு என்பது மறுக்க முடியாதது. தன்னை ஒரு மகாராணியாக நினைத்துக் கொண்டு அவரும் சசிகலாவின் குடும்பத்தாருமாக அன்று செய்தவையே அவரது தாழ்விற்கு முக்கியக் காரணமாக அமைகின்றது. இன்றளவும் அம்மையார் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கரும்புள்ளியாக இருப்பது இந்த நிகழ்வே. இதனை தன் வாழ்வில் அவர் யோசித்துத் தடுத்திருந்தால் தமிழகம் போற்றும் தாயாகத் தமிழ் மக்கள் பலரால் அவர் போற்றப்பட்டிருப்பார். அது நடைபெறாமல் போனதற்கு அவரே முழுக்காரணம் என்று தான் சொல்லவேண்டும். 

தமிழகத்தில் வேறெந்த முதலமைச்சருக்கும் இல்லாத வகையில் 6 முறை முதலமைச்சர் பதவியை வகித்தவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. இவர் ஏற்படுத்திச் செயல்படுத்திய நலத் திட்டங்களால் ஏழை எளியப் பெண்களுக்கு குறிப்பிடத்தக்க அனுகூலங்கள் கிடைத்ததை மறுக்கவியலாது. 5 ரூபாயில் முழுச்சாப்பாடு என்று அம்மா உணவகம் செயல்பட்டபோது முதலில் கேலி பேசியவர்கள் கூட பின்னர் அதனைப் பாராட்டித் தான் பேசினார்கள். கல்லூரி மாணவர்களுக்குக் மடிக்கணினி, பெண்களுக்கு சைக்கிள், திருமணத்திற்குக் காசு, குழந்தைப் பேறு நலன், இலவச மருந்தகங்கள் எனப் பல நலன் திட்டங்கள் இவரால் அமல் படுத்தப்பட்டன. இதனால் தான் இவரது இழப்பை நினைத்து இன்றளவும் ஏழைப் பெண்கள் தங்கள் வீட்டுப் பெண்ணே இறந்து போனது போல நினைத்து வருந்தினர். 

ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த வாழ்க்கையில் சலிக்காமல் அலுக்காமல் முன்னேற்றப்பாதையை மட்டுமே கருத்தில் கொண்டு வெற்றியை நோக்கியே தமது பயணத்தை அமைத்துக் கொண்டவர் அம்மையார் ஜெயலலிதா. தன் வாழ்வில் அவர் எல்லா நேரங்களிலும் புத்தகம் வாசித்தவராகவும், நேரத்தை முறையாகப் பயன்படுத்தியவராகவும் தனது நெருக்கமான வட்டத்தினரால் அறியப்படுகின்றார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவராகத் திகழ்ந்திருக்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினராக பணியேற்ற பின்னர் இவர் வழங்கிய முதல் உரையே பலரது கவனத்தை ஈர்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நூலில் அம்மையார் ஜெயலலிதாவைப் பற்றி விருப்பு வெறுப்பு இல்லாமல் நூலாசிரியர் செய்திகளை வழங்கியிருக்கின்றார். அதில் சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். 
  • நூலில் முழுமையாக இடம்பெறும் 2 பேட்டிகள் 
  • நாடாளுமன்ற உரை
  • இவரது மரணம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பொது மக்களால் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பு 
  • அப்போலோவில் இறுதி நாட்கள் - புள்ளி விவரத்துடன் தேதி வாரியாக 
  • சொத்துக் குவிப்பு வழக்கின் முழு விபரங்கள் - நீதிபதி குன்ஹா அறிக்கை, மேல்முறையீட்டுத் தகவல்கள் 
  • சொத்து குவிப்பு வழக்கு கால அட்டவணை 
  • முழுமையான சொத்து விவரங்கள், சொத்து மதிப்பு 
  • அவர் பெற்ற விருதுகள்

நூல் ஆசிரியர் சந்திரிகா அவர்கள் ஜெயலலிதா அம்மையாரை நேரில் சந்தித்து அவருடன் சில பணிகளில் இணைந்து செயலாற்றியவர் . சட்டத்துறை வல்லுநர் என்பதால் இந்த நூலை மிகக் கவனமாக ஆதாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே திரட்டி நூலாக வழங்கியிருக்கின்றார். 

கடந்த நூற்றாண்டின் ஆணாதிக்க அரசியல் சூழலில் அம்மையார் ஜெயலலிதாவின் வாழ்க்கை பயணம் என்பது முள் வேலிக்குள் எடுத்து வைத்த அடிகளாகத்தான் அமைந்திருந்தன. எளிமையான பெண்ணாக இருந்து கனவுக்கன்னியாக வளர்ந்து அரசியல் சாணக்கியம் கற்று, தன் தவற்றால் வீழ்ந்து மீண்டு வளர்ந்து தன் இறுதி நாள் வரை அரசியலில் இரும்பும் பெண்மணியாக வலம் வந்தவர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள். இவர் விட்டுச் சென்ற அ.தி.மு.க எனும் அரசியல் கட்சி இன்றைய நடப்புச் சூழலைக் காணும் போது மிகவும் பின் தங்கிச் செல்லும் அபாயத்தை வெளிக்காட்டுகின்றது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற இரண்டு சகாப்தங்கள் மட்டுமே அ.தி.மு.க என்ற இந்த அரசியல் கட்சிக்கு இருந்த பலங்கள். அடுத்து வரும் இக்கட்சியின் தொண்டர்கள் தங்கள் முன்னாள் தலைமையின் செயல் திறமையைக் கருத்தில் கொண்டு திட்டங்களையும் வியூகங்களையும் மக்கள் நலம் சார்ந்த செயல்பாடுகளையும் முன்னெடுத்தால் மட்டுமே அ.தி.மு.க அரசியல் தளத்தில் தொடர்ந்து நடைபோடலாம். 

முனைவர்.க.சுபாஷிணி

Dr.Chandra Bose

unread,
Dec 16, 2017, 8:37:14 PM12/16/17
to mint...@googlegroups.com
மிக அருமையான நூல் சுருக்கம். படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது. 

நன்றி, வணக்கம்.
பெ.சந்திர போஸ்

--

paramasivan esakki

unread,
Dec 17, 2017, 8:10:52 AM12/17/17
to mint...@googlegroups.com
அம்மா
========================ருத்ரா

ஒரு காவியம் ஆகிப்போனவரின்
வாழ்க்கையை
அதன் வெற்றிகளோடும்
சறுக்கல்களோடும்
எழுதப்பட்ட அருமையான‌
குறும்படம் எனலாம்
உங்கள் வாசிப்பு.
குறுக்கிழையாக 
நெடுக்கிழையாக‌
அவர்கள் வாழ்க்கையின் 
நிகழ்வுகள்
உங்கள் கட்டுரையில் 
நன்கு நெய்யப்பட்டுள்ளன.
முள்வேலி 
அவர் அமைத்துக்கொண்டதில்
கிழிந்த பக்கங்கள் கூட‌
இன்று அவர் சரித்திரம் ஆனது.
வாசித்ததை  எழுத்தில் நீங்கள்
வார்த்தது மிகவும் அருமை.

=========================================





You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/nVY2mdvRu2A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Suba

unread,
Jan 20, 2018, 5:30:53 AM1/20/18
to மின்தமிழ், Subashini Kanagasundaram
தமிழகத்தில் தேவதாசிகள் 





தமிழகத்தில் தேவதாசிகள் எனும் இந்த நூல் முனைவர் கே.சதாசிவன் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு கமலாலயன் என்பவரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு அகநி பதிப்பகத்தின் வெளியீடாக 2013ல் முதல் பதிப்பு கண்டது. 

தேவதாசி, தேவரடியார் என்ற சொற்களின் பொருளை அறிந்து கொள்ளும் ஆர்வம் இன்று அதிகரித்திருக்கின்றது. உலகம் முழுவதுமே மக்களின் பண்பாட்டில் ஆணும், பெண்ணும் இறைவனுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் நடைமுறை வழக்கில் உள்ளது. இந்தியாவில் அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் பண்ணெடுங்காலமாக இருந்து வரும்  இறைவனுக்குத் தம்மை அர்ப்பணிக்கும் பெண்களைப் பற்றிய ஒரு ஆய்வு நூலாக இதனைக் காண்கின்றேன். 

இந்த நூலின் ஆசிரியர் முனைவர் கே.சதாசிவன், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையின் மேனாள் பேராசிரியராக, துறைத்தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். இந்த நூலின் முன்னுரையில், தேவதாசி முறை என்பது கி.பி. 6ம் நூற்றாண்டில் வளர்ச்சிகண்ட ஒன்று என்றும், பக்தி இயக்கம் படிப்படியாக செழித்து வளர்ந்த காலத்தில் தங்களை முழுமையாகக் கோயில் பணிக்காக அர்ப்பணித்துக் கொண்ட முழுநேரத் தொண்டர்கள் ஆண், பெண் இருபாலரிலும் தேவைப்பட்டமையே இந்த முறை வளர்ச்சி கண்டமைக்குக் காரணம் எனவும் இவர் பதிகிறார். 

தேவதாசிகளின் கோயில் பங்களிப்புக்களும் அவர்களின் ஆளுமைகளும் பெருமைகளும்  விரிவாக எடுத்துச் சொல்லப்படும் அதே வேளை, படிப்படியாக அரசுகள் தலையீட்டினாலும் சமூகச்சூழல் மாற்றத்தினாலும் இத்தகைய பெண்களின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் இந்த நூல் விரிவாக விவரிக்கின்றது. 

நடனக்கலை வளர்த்த பெண்டிர் எனும் போது சிந்து வெளி அகழ்வாய்வுகளிலிருந்து இக்கலை வளர்ந்திருக்கலாம் என்பதற்குக் கிடைத்திருக்கும் சான்றுகள் உதவுகின்றன. சிலப்பதிகாரம் மணிமேகலை காலத்தில் நடனமகளிர் பங்களிப்புக்கள், அவர்களின் பங்கு எனவும் ஆய்வுத் தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இதுவரை கண்டெடுத்து படியெடுக்கப்பட்டு வாசிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் ஏறக்குரைய 500 கல்வெட்டுச் சாசனங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நூலுக்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், நேரடி கள ஆய்வும் இந்த நூல் உருவாக்கத்திற்குத் துணை புரிந்துள்ளது. 400 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் தேவதாசி எனும் பெண்பால் கோயிலுக்கான முழு நேரத் தொண்டர்கள் பற்றின பல அம்சங்கள் வரலாற்று ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் பதியப்பட்டுள்ளன. 

இந்த நூலின் அறுமுகப்பகுதியும் துணை நூற்குறிப்புக்களும் போக, பத்து அத்தியாயங்களில் ஆய்வுக்குறிப்புக்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை: 
  1. தேவதாசி முறையின் தோற்றம் 
  2. தேவதாசி முறையின் மீது ஆகமங்கள் மற்றும் பக்தி இயக்கத்தின் தாக்கம் 
  3. தேவதாசிகளின் வாழ்க்கை 
  4. மேலும் அதிகச் சடங்குகள், மேலும் அதிக தேவதாசிகள் 
  5. கடமைகளும் பரிசுகளும் 
  6. உள்ளார்ந்த முரண்பாடு 
  7. தேவதாசி முறை மீது படிந்த கிரகண நிழல் 
  8. மீளவும் வந்தது இந்த முறை 
  9. சீர்குலைவும் வீழ்ச்சியும் 
  10. தேவதாசி முறையும் தமிழ்நாட்டின் நுண்கலைகளும்

தமிழர் வரலாற்றிலும், பண்பாட்டிலும் கோயிற்கலை என்பது தவிர்க்கப்பட முடியாது ஒரு கூறு. பண்டைய  கோயிற்கலை மரபுகளை ஆராய முற்படும் போது தேவதாசி முறையும், கோயில் தொழிலாளர்கள் முறையும்  மிக முக்கியமானவை. இவற்றை ஒதுக்கிப் பார்ப்பதோ, தேவதாசி என்ற சொல்லிற்குத் தவறான ஒரு பார்வையை மட்டும் வழங்கி ஒதுக்குவதோ  மிகத் தவறான ஒரு போக்காகும். இன்றைய காலச் சூழலில் மேலெழுந்தவாறியாக மட்டுமே சில செய்திகளைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு கொந்தளித்துச் செல்வது ஒரு அவசர நிலை மனப்பாட்டைத்தான் வெளிப்படுத்துகின்றது. மிக நுணுக்கமான பல கூறுகளை    அடித்தளமாகக் கொண்ட தமிழ்ர் பண்பாட்டை புரிந்து கொள்ள ஆய்வுத்துறையில் திறந்த மனம் தான் அனைவருக்குமே அடிப்படை தேவை!

சுபா




-- 
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்

paramasivan esakki

unread,
Jan 20, 2018, 6:37:33 AM1/20/18
to mint...@googlegroups.com
ஆழ்ந்து படிக்கப்பட வேண்டிய அருமையான வரலாற்று நூல்

K R A Narasiah

unread,
Jan 20, 2018, 6:45:32 AM1/20/18
to mintamil
I have a copy of this book. I got it some years back when I was researching on Devadasis, after reading Zoete's book on Indian Dances.
Quite an informative work by Sadasivan.
Narasiah


You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Kumaraguruparan Ramakrishnan

unread,
Jan 20, 2018, 9:00:25 AM1/20/18
to mint...@googlegroups.com
பேராசிரியர் சதாசிவம் எழுதிய "தமிழகத்தில் தேவதாசிகள்" நூல் வரலாற்றுப் பார்வையில் எழுதப்பட்டது. மிகச்சிறந்த பண்பாட்டு ஆய்வு நூல்.
அதன் மொழிபெயர்ப்பாளர் நண்பர் கமலாலயன் நான்கு தினங்கள் முன்பு ஒரு சாலை விபத்தில் சிக்கி, கால்முறிந்தநிலையில் தீவிர சிகிச்சை பெற்றுத்தேறி வருகின்றார். இரண்டு அறுவைச் சிகிச்சை முடிந்தன. இது தகவலுக்காக.

-இரா. குமரகுருபரன்.

Innamburan S.Soundararajan

unread,
Jan 20, 2018, 9:50:17 AM1/20/18
to mintamil
This is also a well-researched book by a leading academic, based on years of work on it.
She gave it to me to read some years ago. It is non partisan.
Innamburan
 

Suba

unread,
Feb 17, 2018, 10:17:06 AM2/17/18
to மின்தமிழ், Subashini Kanagasundaram




பிறந்தது முதல் இறக்கும் வரை இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு தனி மனிதருக்கும் அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் கட்டாயமான  அடிப்படைத் தேவையே. எவ்வகையான நம்பிக்கையைக் கொண்டிருந்தாலும், எந்தச் சமூகத்தில் பிறந்திருந்தாலும், எந்த இனக்குழுவில் அடையாளப்படுத்தப்பட்டாலும் அவற்றிற்கு அப்பால் ஒரு தனி மனித சுதந்திரம் என்பது முக்கியத்துவம் பெறுகின்றது. ஒரு தனி மனிதர் தாம் சார்ந்திருக்கும் இனத்தின் அடிப்படையிலோ, அல்லது தான் நம்பிக்கை கொண்டிருக்கின்ற ஒரு மதத்தின் அடிப்படையிலோ, அல்லது தான் வாழ்கின்ற சமூகச் சூழலினாலோ, அல்லது தான் வாழ்கின்ற நாடு பிரகடனப்படுத்தியிருக்கும் சட்டங்களினாலோ, தனி மனிதர்கள் தங்களின் சிந்தனையின் வடிவங்களை முழுமையாக வெளிப்படுத்த முடியாத நிலை அல்லது தடைகள் என்பன ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. ஆயினும் கூட பொது நலனைக் கருத்தில் கொண்டு, சட்ட ரீதியாக வடிவமைக்கப்படும் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்ட வகையில் தனி மனித சுதந்திரம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், தனி மனித சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் வெளிப்படுத்த சுதந்திரப் போக்கு ஏற்பட வேண்டியது  இன்றியமையாத தேவையாகின்றது. ஒரு தனி மனிதரின் முழுமையான சிந்தனை வளர்ச்சிக்கு அது வாய்ப்பினை வழங்குவதாகவும் அமைகின்றது.

வரலாற்றினைப் பின்னோக்கிப் பார்க்கும் போது, ஒரு தனி மனித சிந்தனைச் சுதந்திரத்தை உலகம் முழுவதுமே பண்டைய அரசுகள் எதிர்த்தன, அரசியல் அமைப்புக்கள் மறுத்தன என்பதைக் காண்கின்றோம்.  மூலிகை மருத்துவத்தை அறிமுகப்படுத்திய ஆயிரக்கணக்கான பெண் அறிவு ஜீவிகள் சூனியக்காரர்கள் என அழைக்கப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்ட வரலாறு ஐரோப்பாவின் கடந்த சில நூற்றாண்டுகள் வரை நிகழ்ந்தமையை இதற்கு நாம்  உதாரணமாகச் சொல்லலாம். கலிலியோவின் கண்டுபிடிப்புக்களை ஏற்க மறுத்த வாட்டிக்கனின் சிந்தனை மறுப்பும், லியானார்டோ டாவின்சியின் சிந்தனை பரப்பிற்கு ஈடுகொடுக்க முடியாது திணறிய அரசுகளும் இன்று  அத்தகைய அறிவியல் அறிஞர்களின் ஆய்வினால் பெருமை கொள்கின்றன. கல்வியே மனித வாழ்விற்கு ஆதாரம், கல்வியே மனிதக் குல மேன்மைக்கு வழிகாட்டி, கல்வியும் ஆய்வுகளும் தான் மனித குலத்தை மேம்படுத்தும் என்று முயன்றவர்களால் தான் உலகம் இன்று மேம்பட்டுள்ளது. மிக இருக்கமான சமுதாய சூழலில் கடந்த நூற்றாண்டுகளில் வீட்டை விட்டு வெளிவர வாய்ப்பில்லாது இருந்த பெண்கள், ஆணுக்கு மட்டும் கல்வி, என்ற கோட்பாட்டை உடைத்து தனி மனித கல்வி உரிமையைப் போராடி பெற்றுள்ளனர். ஆயினும் கூட, தனி மனித உரிமைகள் மீறப்படும் நிகழ்வுகள் உலகம் முழுவதும் தொடர்கின்றன என்பது உண்மை. 

கடுமையான சூழலில் மாட்டிக் கொண்ட பலருக்கு, ஒரு தனி மனிதருக்கு உரிமையும் உண்டா? என்ற ஐயப்பாடு எழுவது இயல்பே. 
இந்த ஐயப்பாட்டை நிவர்த்தி செய்ய வேண்டுமென்றால் சர்வ தேச அளவில் தனி மனிதருக்கு வழங்கப்பட்டுள்ள தனி மனித உரிமை பற்றிய புரிதல் என்பது ஒவ்வொருவருக்கும் இருக்க  வேண்டியது மிக அவசியமாகும். 

ஐக்கிய நாடுகளின் சபையில் உறுப்பினராக அங்கம் வகிக்கும் நாடுகளில் 58 நாடுகளால் இனைந்து உருவாக்கப்பட்டதே மனித உரிமைச் சாசனம். இந்தத் தனி மனிதருக்கான உரிமைகளைப் பற்றி விளக்கும் மனித உரிமைச் சாசனம், உலக நாடுகளில் 194 நாடுகளால் அதிகாரப்பூர்வ மனித உரிமை அடிப்படி சாசனமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தனி மனித உரிமைகளை மறுப்போர் பலர் உள்ளனர். அவர்களுக்கு இவையெல்லாம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட உரிமைகள் யாவை என்பதை விளக்க இந்த சாசனத்தைப் பற்றி பேச வேண்டியது அவசியமாகின்றது. அதே வேளை தனி மனித உரிமைகளில் ஈடுபாடு கொண்டு உழைக்கும் சமூக நல அமைப்புக்களுக்கும் சமூக நல ஆர்வலர்களுக்கும் இந்தச் சாசனம் அளிக்கின்ற விவரங்கள் தங்கள் முயற்சிகளில் அவர்கள் சிறப்புடன் செயலாற்ற வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது. 

இந்த சாசனங்களை விளக்கி தமிழில் ஒரு நூலாக வடித்திருக்கின்றார் இலங்கையில் பிறந்து வளர்ந்து இன்று இங்கிலாந்தின் லண்டன் மாநகரில் வசிக்கும் இனிய நண்பர் தேச இலங்கை மன்னன். உலகளாவிய மனித உரிமைகளைப் பற்றிய தெள்ளிய பின்புலத்தை அறிந்தவர், இலங்கையில் தமிழ் மக்களுக்கான சமூக நீதி சார்ந்த நடவடிக்கைகளின் பின்புல அனுபவங்கள் என்பதோடு பரந்த வாசிப்பும் கொண்டவர் இவர் என்பது இந்த நூலுக்கு உள்ள ஒரு தனிச்சிறப்பு எனலாம். 2016ம் ஆண்டு டென்மார்க் வீயன் நகரில் நிகழ்ந்த ஒரு தமிழ் பண்பாட்டுக் கலைவிழாவில் நான் கலந்து கொள்ளச் சென்றிருந்த வேளை இந்த நூல் எனக்கு வழங்கப்பட்டது. அதன் ஆசிரியர் முன்னிலையில் இந்த நூலைக் கிடைத்த குறுகிய நேரத்தில் வாசித்து முடித்து ஒரு விமர்சன சொற்பொழிவு ஆற்றினேன். ஒரு குறுகிய சூழலுக்குள் மட்டும் இந்த நூல் அடங்கி விடக்கூடாது என்பதாலும், இந்த நூலுக்குப் பரந்த வாசிப்பு ஏற்பட வேண்டுமென்ற எண்ணத்தினாலும் இந்த நூலை விவரித்து சில தகவல்கள் இப்பதிவில் பகிரப்படுகின்றன. 

"சர்வதேச மனித உரிமைச் சாசனம் 1948 - மானிடத்தின் சாதகம்" என்பது நூலின் பெயர். நூலாசிரியர் தா.தே இலங்கை மன்னன். இந்த நூல் சென்னை மித்ரா ஆர்ட்ஸ் & க்ரியேஷன்ஸ் பதிப்பகத்தாரால் அச்சிடப்பட்டு 2015ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 

நூல் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

முதல் பாகத்தில் அறிமுகப் பகுதியாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சாசனம், அதன் பிரகடனம், சர்வ தேச மனித உரிமைகளின் ஆணையத் தோற்றம், மனித உரிமைகளின் சாசனத் தயாரிப்பு, நடைமுறைப்படுத்தலுக்கான யோசனைகள், அமுலாக்கலுக்கான செல்வாக்குமிக்க உடன்படிக்கைகள், நாடுகளுக்கிடையிலான வேறுபாடுகள், இந்தச் சாசன அமைப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர்கள், சர்வதேச மனித உரிமைச் சாசனத்தின் அணிந்துரை, ஆகியன வழங்கப்பட்டுள்ளன. 

நூலின் இரண்டாம் பாகம் இந்த நூலுக்கான மையப் புள்ளியை விளக்குகின்றது. இந்தப் பகுதியில் விதி எண் ஒன்றிலிருந்து விதி எண் 30 வரை விளக்கப்படுகின்றது. அதிகாரப்பூர ஆவணத்தில் வழங்கப்பட்ட விதி ஆங்கிலத்தில் வழங்கப்பட்டு அதற்கான தமிழ் விளக்கம் ஒவ்வொரு விதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இntha விதிகளுக்கு ஆசிரியர் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கும் படங்கள் விதிகளுக்குp பொருத்தமில்லாமல் இருக்கின்றன. இவற்றை நீக்குவது அவசியம் எனக் கருதுகிறேன். நூலாசிரியரும் எனது கருத்தை ஏற்பார் என்ற எண்ணம் எனக்குண்டு. 

இறுதியாக வரும் மூன்றாம் பாகத்தில்,  சட்ட வடிவம் பெற்று வரும் இந்த மேற்குறிப்பிட்ட விதிகளில் நடைமுறை அமுலாக்கச் செய்தியும், வளர்ச்சியும் பேசப்படுகின்றன. உதாரணமாகக் குறிப்பிடவேண்டுமென்றால், குற்றவியல் நீதிமன்றத்தைப் பற்றிய ரோம் சாசனத்தின் நிலை, 1966 குடியியல் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் நிலை,  1966 பொருளாதார,  சமூக, கலாச்சார உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் நிலை, பெண்களுக்கு எதிரான எல்லாவித பாரபட்சங்களையும் இல்லாது ஒழிப்பதற்கான மாநாட்டின் நிலை. பலவந்தமாகக் காணாமல் போனோர் பாதுகாப்பு பற்றிய சாசனத்தின் நிலை,  வளர்ச்சி உரிமை பற்றிய பிரகடனத்தின் நிலை, மாற்றுத் திறனாளிகளின் உரிமை பற்றிய சாசனத்தின் நிலை என இருபத்தாறு பகுதிகளில் சாசனங்களின் வளர்ச்சி அலசப்படுகின்றது. 

உலக நாடுகள் பெரும்பாலானவற்றில் தமிழர்கள் குடியேறியுள்ள இந்த காலச் சூழலில், இந்த நூல் நமக்கான அடிப்படை உரிமைகளை நமக்கு எடுத்துரைக்கும் ஒரு வழிகாட்டியாகத் திகழ்கின்றது என்று கூறலாம். திரு. தா. தேச இலங்கை மன்னனின் இந்த நூல் தமிழ் மக்களின் பொது அறிவு நலனுக்கான ஒரு தேவை. இந்த நூலை எல்லோரும் வாசித்து தகவல் பெற்று பலன் பெற வேண்டும் எனக் கருதுகிறேன். இது போன்ற சமூக நலன் சார்ந்த நூல்களை ஆசிரியர் மேன்மேலும் படைக்க வேண்டும் என்றும் என் கோரிக்கையை முன் வைக்கின்றேன். 

சுபா

Suba

unread,
Feb 17, 2018, 3:54:45 PM2/17/18
to மின்தமிழ், Subashini Kanagasundaram
T.Ilangky Mannan தொல்லியல் ஆய்வாளர் , முகவர் சுபாஷினி அவர்கள் இன்று என்னை கண்திறக்க வைத்துள்ளார் . 'அகில உலக மனித உரிமைச் சாசனத்தின்' முக்கியத்துவத்தை, அவர் தமிழ் பேசும் உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது மிகவும் பயனுள்ள நற்செய்தியாகும். உலகின் இயங்கியல் அரசியல் தளம் இதனால், 1948ல் உருவாக்கப்பட்டுள்ளது. இதை தீயைப் போன்று அங்கும் , இங்குமாகப் பற்றவைக்கவேண்டிய பொறுப்பு ,இதை அறிய வாய்ப்புக்கிடைத்த எல்லோருக்கும் உண்டு .படங்கள் யாவும் நீக்கப்பட்ட இரண்டாம் பதிப்பும் , சிங்கள மொழியாக்கமும் 2016ல் கொழும்பிலும் , யாழ்ப்பாணத்திலும் வெளியிடப்பட்டுள்ளது . ''2030 பேண்தகு வளர்ச்சி இலக்குகளும் , குறிகளும்'' ஐக்கிய நாடுகள் ஸ்த்தாபனத்தின் 15 வருட செயற் திட்டம், இரண்டாவது பதிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது . இது மனித உரிமைகளை, உலகின் எல்லா மூலை, முடக்குகளிலும் வாழும், அத்தனை மனிதரும் அடையவைப்பதற்கான, முப்பரிமாணங்களான சமூகம், பொருளாதாரம் , சுற்றுச்சூழல் என்பவற்றை உள்ளடக்கியுள்ள, முழுமையான உலகத் தீர்வுத் திட்டமாகும். வெளிநாடுகளில் அரசியல் முன்னணி வகிக்கும் நம்மில் சிலர் , இதை ஒரு அபாயமான சவாலாகக் கருதுகிறார்கள். 'Mannan your book is a problem' என்றார்கள். எந்த ஊக்கத்தையும் தர அவர்களிற் பலர் முன்வரவில்லை. இக் காரணத்தால் இதன் ஆங்கில வடிவம், எழுதி அரைவாசியில் என்னால் நிறுத்தப்பட்டுள்ளது . My grand daughter 8 years old only , very often ask me, Granddad have you finished the book?? . என் கண் திறக்கப்பட்ட நாளாக 2018 மாசி-17ஐ குறிப்பிட்டேன். சிலரின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து , இனி ஆங்கில நூல் என்னால் எழுதி முடிக்கப்படும் .தமிழறிவு அற்ற, தமிழ் இளைய தலைமுறையினருக்காக . அவர்களின் அரசியல் எதிர்காலம் மனித உரிமைகளை மையமாகக் கொண்டதாக அமைய வேண்டும் என்ற காரணத்திற்காக இன் நூலை அறிமுகம் செய்வேன் .

Dr.Chandra Bose

unread,
Feb 18, 2018, 2:54:59 AM2/18/18
to mint...@googlegroups.com
 மிக அருமையான பயனுள்ள நூல் குறித்த தகவல்களுக்கு நன்றி.

இந்நூல் இணையத்தில் கோப்பாகக் கிடைக்கிறதா?

அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை

Virus-free. www.avast.com

--

Suba

unread,
Feb 18, 2018, 4:16:41 AM2/18/18
to மின்தமிழ்
2018-02-18 8:54 GMT+01:00 Dr.Chandra Bose <drchan...@gmail.com>:
 மிக அருமையான பயனுள்ள நூல் குறித்த தகவல்களுக்கு நன்றி.

இந்நூல் இணையத்தில் கோப்பாகக் கிடைக்கிறதா?

​பேஸ்புக் மேசஞ்சரில் அவரது தொடர்பினை உங்களுக்கு அனுப்புகின்றேன். தொடர்பு கொள்கின்றீர்களா? நன்றி

சுபா

Dr.Chandra Bose

unread,
Feb 18, 2018, 12:51:26 PM2/18/18
to mint...@googlegroups.com
மிக்க நன்றி முனைவர் சுபா . பேஸ்புக்கில் அவரின் பெயரில் உள்ள தளம் சென்று பார்த்தேன். தகவல் இல்லை. சென்னையில் புத்தகத்தினைப் பதிப்பித்த நிறுவனம் குறித்த தகவலை உங்கள் பதிவில் பார்த்தேன். திங்களன்று தொடர்பு கொள்கிறேன்.

மிக்க நன்றி.
அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை

Suba

unread,
Feb 21, 2018, 3:55:15 PM2/21/18
to மின்தமிழ், Subashini Kanagasundaram

சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை - தலித் இதழ்கள் 1869-1943
ஆசிரியர் ஜெ.பாலசுப்பிரமணியம்




பல நூறு ஆண்டுகளாகச் சாதீய உயர்வு தாழ்வுகளால் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள், 19ம் நூற்றாண்டின் இறுதிக்காலக்கட்டத்தில் தமக்குக் கிடைத்த கல்வி வாய்ப்புகளின் பலனாலும் அக்கால சுயமரியாதை சிந்தனை எழுச்சியின் காரணத்தினாலும் சமூக விழிப்புணர்வு பெற்றனர். சமூகப் பார்வை என்பது அரசியல் பார்வையுடன் ஒருமித்த வகையில், அக்காலகட்ட எழுச்சி நிலை அமைந்திருந்தது. இந்த விழிப்புணர்வின் அடையாளமாகத் தலித் மக்கள் முயற்சியில், தமது சமூகத்தவர் பிரச்சனைகளை அலசும் வகையிலும், தீர்வுகளைக் காண முனையும் வகையிலும் இதழ்கள் வெளிவரத்தொடங்கின. இந்த இதழ்கள், பத்திரிக்கைகள் பற்றி இன்று பலரும் மறந்து விட்ட சூழலில் கி.பி. 19ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வெளிவந்த 42 தலித் பத்திரிக்கைகள், இதழ்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி அவற்றை மேற்கோள்களுடனும், அவற்றை வெளியிட்ட ஆசிரியர், பதிப்பகத்தார் பற்றியும் தொகுத்து நல்லதொரு நூலைப் படைத்திருக்கின்றார் நூலாசிரியர். எனது அண்மைய வாசிப்புக்களில் மிக விரிவான களப்பணியுடன் கூடிய ஒரு ஆய்வு நூலாக இந்த நூலைக் காண்கின்றேன். 

20ம் நூற்றாண்டின் பத்திரிக்கை மற்றும் இதழ்கள் பற்றின முயற்சி எனப் பேசத்தொடங்கும் போது பொதுவாக பலரும் அறிந்தவையாக இருப்பவை சுதேசமித்திரன், இந்தியா, ஆனந்த விகடன், கலைமகள், கல்கி எனக் குறிப்பிடலாம். தலித் இதழ்கள் எனக் குறிப்பிட்டு தேடத் தொடங்கினால் ஒரு சிலருக்கு அயோத்திதாசப் பண்டிதரது முயற்சியில் வெளிவந்த ஒரு பைசா தமிழன் பத்திரிக்கை நினைவுக்கு வரலாம். இந்த நூலிலோ 42 இலக்கிய முயற்சிகள் தலித் சமூக விழிப்புணர்ச்சிக்காக இயங்கியமை பற்றியும் இவை அனைத்துமே தலித் சமூகத்தவரால் தொடங்கி நடத்தப்பட்டவை என்பதையும் அறிகின்றோம். 

கல்வி பெறுவதிலிருந்து ஒதுக்கப்பட்ட தலித் சமூகத்தவர் கல்வி பெற வேண்டும் என சீரிய பணியாற்றியோர் பலரைப் பற்றி இன்று யாரும் பேசுவதில்லை. திரு.ஜான் ரத்தினம் அயோத்திதாசப்பண்டிதரோடு இணைந்து திராவிடப்பாண்டியன் என்ற இதழை நடத்தியவர். இவர் 1889ம் ஆண்டு தலித் சமூகத்துக் குழந்தைகள் கல்வி கற்கும் வகை செய்ய ஒரு மாதிரி பள்ளியை உருவாக்கியிருக்கின்றார். 1892ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஆண் பெண் குழந்தைகள் இருபாலருக்கும் என ஒரு பெரிய பள்ளிக்கூடத்தைத் தொடங்கியிருக்கின்றார். அதோடு சென்னை மக்கீம் நகரில் ஒரு பள்ளிக்கூடத்தையும், 1889ம் ஆண்டு பெண்களுக்கான மாணவியர் விடுதி ஒன்றையும் உருவாக்கியிருக்கின்றார். இவருக்கு அடுத்து 1906ம் ஆண்டு எம்.ஒய்.முருகேசம் பிள்ளை (தலித் சமூகத்தவர் குறிப்பாகப் பண்டிதர்கள் அக்காலச் சூழலில் பிள்ளை என்ற அடையாளத்தை பயன்படுத்தினர்) கோலார் தங்கவயல் பகுதியிலும், மாரிக்குப்பம் பகுதியிலும், சாம்பியன் காலணியிலும் இன்னும் வேறு சில பகுதிகளிலும் பள்ளிக்கூடங்களைத் தொடங்கியிருக்கின்றார். இவர் மட்டுமே பகல் வேளையில் இயங்கும் இரண்டு பள்ளிக்கூடங்களையும் 16 இரவு பள்ளிக் கூடங்களையும் தொடங்கியிருக்கின்றார். சிதம்பரத்தில் தலித் மக்கள் சமூக மேம்பாட்டிற்காகச் சேவை செய்தவர் சுவாமி சகஜானந்தா அவர்கள். இவர் சிதம்பரத்தில் 1910ம் ஆண்டு நந்தனார் பள்ளியைத் தொடங்கினார். தலித் சமூகத்தில் பெரிதும் அறியப்பட்ட எம்.சி.ராஜா 1916ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ஜகந்நாதன் சாலையில், அதாவது தற்போது வள்ளுவர் கோட்டம் உள்ள சாலைக்கும் நுங்கம்பாக்கம் சாலைக்கும் இடையில் இருப்பது, ஆதிதிராவிட மகாஜன சபையின் பள்ளியைத் தொடங்கினார். எல்.சி.குருசாமி என்பவர் 1921ம் ஆண்டு சென்னை ராயபுரத்திலும் புதுப்பேட்டையிலும் இரவுப்பள்ளிகளை நிறுவினார். இவை மட்டுமன்றி தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களால் தலித் மக்கள் கல்வி மேன்மைக்காக பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டன என்றாலும் அவை பற்றின தகவல்களும் ஆவணங்களும் முறையாகப் பதியப்படவில்லை என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. இப்படி பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளினால் தலித் சமூகத்துக் குழந்தைகள் நவீன ஆரம்பக் கல்வியையும் அதன் பின்னர் உயர் நிலைக்கல்வியையும் பெறும் வாய்ப்பினை பெற்றனர். இத்தகைய கல்வி வாய்ப்பு பெற்று வளர்ந்தவர்களில் சிலரே ஏனைய தலீத் சமூகத்து மக்கள் நலன் கருதி பத்திரிக்கைகளும் இதழ்களும் ஏற்படுத்தி சமூக சீர்திருத்த செயல்பாடுகளை முன்னெடுத்தனர். இதன் காரணமாக விளைந்தவையே அக் காலச்சூழலில் வெளிவந்த பத்திரிக்கைகளுக்கும் இதழ்களுக்கும்  எனலாம். 

இந்த நூலில் ஆசிரியர் தனது ஆய்வில் அடையாளம் கண்டு ஆராய்ந்த பத்திரிக்கைகளின் பெயர்களையும், அவற்றின் ஆசிரியர்களையும், பதிப்பகத்தையும், அவை முன்னெடுத்த சீரமைப்பு சிந்தனைகளையும் முடிந்த வரைக்கும் மிகச் சிறப்பாக விளக்கிச் செல்கின்றார். 

இந்த நூலில் முதலில் வருவது சூரியோதம் இதழ். இது திருவேங்கடசாமி பண்டிதர் என்பவரால் 1869ம் ஆண்டு சென்னையிலிருந்து வெளியிடப்பட்டது. அடுத்து வருவது பஞ்சமன் இதழ். இது 1871ம் ஆண்டு வெளிவந்தது. தலித் மக்களின் முன்னேற்றத்திற்கான போராட்டக் குரலாக இந்த இதழ் செயல்பட்டதாக ஆசிரியரின் தகவல்கள் அமைகின்றன. 1872ம் ஆண்டு சுவாமி அரங்கையாதாஸ் என்பவரால் மெட்ராஸிலிருந்து வெளியிடப்பட்டது சுகிர்தவசனி எனும் இதழ் இது சமூக சீர்திருத்தம், மூட நம்பிக்கை ஒழிப்பு போன்ற கருத்துக்களை முன்வைத்துச் செயல்பட்ட ஒரு இதழாக அமைகிறது. இந்துமத சீர்திருத்தி எனும் இதழ் 1883ம் ஆண்டு பாளையங்கோட்டையில் கே ஆறுமுகம் பிள்ளை எனும் ஆதிதிராவிடரால் தொடங்கப்பட்ட முயற்சி. வேலூர் முனிசாமிப் பண்டிதரின் முயற்சியால் 1886ம் ஆண்டு ஆன்றோர் மித்திரன் எனும் இதழ் தொடங்கப்பட்டது. சென்னை கிருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய பா.அ.அ.இராஜேந்திரம் பிள்ளை என்பவரால் தொடங்கப்பட்ட இதழ் மஹாவிகடதூதன். இது 1886 முதல் 1927 வரை வெளிவந்தது என்றும் வேறு தலித் சமூகத்து பத்திரிக்கை ஆசிரியர்கள் இதன் வெளியீட்டைத் தொடர்ந்தனர் என்பதையும் அறிய முடிகின்றது. பறையன் இதழ் இரட்டைமலை சீனிவாசன் அவர்களால் 1893 முதல் 1900 வரை வெளியிடப்பட்டன. மாத இதழாகத் தொடங்கி பின்னர் வார இதழாக இது மாற்றம் பெற்றது. இந்தப் பத்திரிக்கை ஒடுக்கப்பட்டோருக்காக அதிலும் பறையர் சமூகத்தோருக்காகத் தனிப்பள்ளி தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்து வெளிவந்தது என அறியமுடிகின்றது. திராவிடப் பாண்டியன் எனும் இதழை ஜான் இரத்தினம் அவர்களும் அயோத்திதாசப் பண்டிதரும் இணைந்து 1896ம் ஆண்டு தொடங்கினர் முதலில் ஒரு சங்கமாகத் தொடங்கப்பட்ட இந்த முயற்சியின் தொடர்ச்சியாக இதே பெயரில் இதழையும் தொடங்கினர் என்பதையும் இந்த நூலிலிருந்து அறியக் கூடியதாக உள்ளது. 

இல்லற ஒழுக்கம் (1898), பூலோகவியாஸன் (1903-1917), ஒரு பைசா தமிழன், திராவிட கோகிலம், மதுவிலக்கு தூதன், ஆல்காட் கிண்டர்காடன் ரிவியூ, விநோதபாஷிதன், ஊரிஸ் காலேஜ் கிண்டர்கார்டன் மேகசின், வழிகாட்டுவோன், ஆதிதிராவிடன், மெட்ராஸ் ஆதிதிராவிடன், ஜாதி பேதமற்றோன் இந்திரகுல போதினி, சாம்பவர் நேசன், ஆதிதிராவிட பாதுகாவலன், சாம்பவகுல மித்திரன், தருமதொனி, சந்திரிகை என ஒவ்வொரு இதழைப்பற்றிய குறிப்புக்களையும் நூலாசிரியர் தேடிச் சேகரித்து இந்த நூலில் வழங்கியிருக்கின்றார். 42 இதழ்கள் மட்டும்தானா, என்று நம் மனதில் எழும்  கேள்விக்கு, இன்னும் கூட பத்திரிக்கை முயற்சிகள் இருக்கலாம், ஆனால் அவை மேலும் ஆராயப்பட வேண்டும் என்ற சிந்தனையையே வாசிக்கும் வாசகர்களுக்கு நூல் வழங்கும் செய்தியாக இருக்கின்றது. 

இந்த நூல் குறிப்பிடும் தலித் இதழ்களில் பல இன்று தமிழகத்தில் தேடிக் கண்டுபிடிப்பதில்  சிரமங்கள் இருக்கின்றன. ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியின் போது அரசினால் பாதுகாக்கப்பட்ட ஆவணங்களில் தேடினால் இவற்றைக் கண்டெடுக்க வாய்ப்புண்டு. அதோடு இங்கிலாந்தின் பிரித்தானிய நூலகத்தில் இவற்றின் படிகள் இருக்கவும் வாய்ப்பு நிச்சயம் இருக்கலாம். அவ்வகையில் தேடுதல் முயற்சிகளை முன்னெடுத்தால் 19ம் நூற்றாண்டின் இறுதி தொடங்கி வெளிவந்த தலித் பத்திரிக்கைகளையும் இதழ்களையும் நாம் காணும் வாய்ப்பு கிட்டும். 

நூலாசிரியரின் கடுமையான ஆய்வு முயற்சியும்,  இத்துறையிலான விரிவான வாசிப்பும் நூலில் முழுமையாக வெளிப்படுகின்றது. நல்லதொரு ஆய்வு நூலை வழங்கியிருக்கும் முனைவர் ஜெ.பாலசுப்பிரமணியம் பாராடுதலுக்குறியவர். மேலும் சிறந்த ஆய்வுப் படைப்புக்களை அவர் வழங்க எனது நல்வாழ்த்துகள்.


குறிப்பு -  இந்த நூல் காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. 

தேமொழி

unread,
Feb 21, 2018, 4:05:57 PM2/21/18
to மின்தமிழ்
நல்ல பதிவு சுபா, நன்றி.

///ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியின் போது அரசினால் பாதுகாக்கப்பட்ட ஆவணங்களில் தேடினால் இவற்றைக் கண்டெடுக்க வாய்ப்புண்டு. அதோடு இங்கிலாந்தின் பிரித்தானிய நூலகத்தில் இவற்றின் படிகள் இருக்கவும் வாய்ப்பு நிச்சயம் இருக்கலாம். ///

ஆங்கிலேயர் ஆட்சியில் வெளியாகும் இதழ்கள் நூல்கள் ஆகியவற்றின் பிரதிகள் கல்கத்தா அரசு நூலகத்திற்கு அனுப்பி சேகரிக்கப்பட்டன என்ற குறிப்பினை படித்த நினைவு.

..... தேமொழி

Suba

unread,
Dec 26, 2018, 11:09:33 AM12/26/18
to மின்தமிழ், Subashini Kanagasundaram


நூல் வாசிப்பு : சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் 
நூலாசிரியர்:  ஆர் பாலகிருஷ்ணன் இஆப

தமிழின் தொன்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் இன்று பரவலாகத் தமிழ் மக்கள் சூழலில் எழுந்துள்ளது. இந்த ஆர்வத்திற்குத் தீனி போடும் வகையில் குறிப்பிடத்தக்க ஆய்வு நூல்கள் தற்காலம் வரத்தொடங்கியுள்ளன. அத்தகைய முயற்சிகளில் சிந்துவெளி பண்பாடு, வரலாறு பற்றியன தொடர்பான ஆய்வுகளை முன்வைத்து வெளிவரும் நூல் முயற்சிகள் மிகக் குறைவாகவே உள்ளன. இதற்கு மிக முக்கியக் காரணம்  சிந்துவெளி  ஆய்வுத் தளம் என்பது எளிதான ஒன்றல்ல. இத்துறையில் ஆய்வு செய்வதற்கு மிக ஆழமான ஆய்வின் பின்னணியிலும், கடந்த நூற்றாண்டில் சிந்துவெளி அகழ்வாய்வு பற்றிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த காலம் தொட்டு வெளிவந்துள்ள அறிக்கைகள், ஆய்வுகள், ஆய்வேடுகளில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகள் ஆகியவற்றினை ஆழமாக ஆராய்ந்ததன் பின்னணியில் உருவாக்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. அது மட்டுமன்றி சிந்துவெளிப் பண்பாடு குறித்த அகழ்வாய்வுச் சான்றுகளும்,  சிந்துவெளி மக்கள் பேசிய மொழி பற்றிய விரிவான ஆய்வுத் தகவல்களும் அதிகமாக இல்லை என்பதும் ஒரு காரணமாகின்றது. எகிப்திய ஹீரோக்ளிப்ஸ் எழுத்துக்களைப் புரிந்து கொள்ள பண்டைய கிரேக்க எழுத்துக்கள் கொண்ட ரொசெட்டா கல் (Rosetta Stone)  உதவியது போல சிந்து சமவெளி குறியீடுகளை நேரடியாகப் புரிந்து கொள்ள ஒரு சான்று கிட்டவில்லை. இப்படிப் பல பிரச்சனைகள் சிந்து சமவெளி ஆய்வாளர்கள் எதிர் நோக்குகின்றனர் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. 

இந்தச் சூழலில், சிந்துவெளி நாகரிகம், பண்பாடு என்பது திராவிட அடித்தளத்தின் அடிப்படையில் அமைந்தது என்ற கருத்தினை முன்வைத்து வெளிவந்திருக்கும் நூல்தான் சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் எனும் இந்நூல்.  இந்த நூல் வெளிவந்த காலம் தொடங்கி சிறந்த வரவேற்பினை மக்கள் மத்தியில் பெற்றிருக்கின்றது.  முதல் பதிப்பு முடிந்து இரண்டாம் பதிப்பும் வெளிவந்துவிட்டது.   இந்த நூலில் நூலாசிரியர், முதற்பதிப்பின் முன்னுரையோடு இரண்டாம் பதிப்பிற்கான முன்னுரையையும் இணைத்திருக்கிறார். நூலுக்கு அணிந்துரை வழங்கியிருப்பவர் சிந்துவெளி ஆய்வில் மிக முக்கியமாக கருதப்படும் மறைந்த தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள்

இந்த நூலின் அமைப்பைப் பற்றி முதலில் காண்போம். இரண்டு பெரும் பகுதியாக இந்த நூல் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. முதல் பகுதியில் இடப்பெயர் ஆய்வு பற்றிய தகவல்கள் உள்ளடக்கிய கட்டுரைகள் உள்ளன. இரண்டாம் பகுதியில் சிந்துவெளி நகரங்களின் மேல்-மேற்கு, கீழ்- கிழக்கு வடிவமைப்பு பற்றிய விளக்கங்கள் இடம்பெறுகின்றன. இப்பகுதி, மேல்-மேற்கு, கீழ்- கிழக்கு எனும் அடிப்படை நகர அமைப்பு,  திராவிட நகர அமைப்பின் அடித்தளத்தை வகுக்கும் தன்மை ஆகியன, விரிவாக அலசப்படுகின்ற நூலின் இறுதியில் பின்னிணைப்பாக சான்றாதார பட்டியல்கள் இணைக்கப்பட்டுள்ளன. சிந்துவெளி நகரங்களான ஹரப்பா, மொகஞ்சதாரோ, காலிபங்கான், தோலாவிரா, லோத்தல் ஆகிய நகரங்களின் அமைப்பினை காட்டும் வரைபடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது ஒரு ஆய்வு நூல் என்பதற்கு அடிப்படை வகுக்கும் வகையில் நூலாசிரியர் தான் இந்த நூலை எழுத எடுத்துக்கொண்ட ஆய்வுக்கான உத்தி (methodology) பற்றி ஒரு விளக்கமும் இணைக்கப்பட்டுள்ளது.

நூலில் ஆசிரியர் வழங்கியிருக்கும் இரண்டாம் பதிப்புக்கான முன்னுரையானது நூலின் நோக்கத்திற்குச் சிறப்பு சேர்க்கின்றது." கிழக்கு வெளுக்கிறது  கீழடியில்"  என்ற தலைப்பில் இப்பகுதி அமைகின்றது. சிந்துவெளி நாகரிகம் பண்டைய நகர்புற கட்டுமானத்தைச் சான்று பகரும் விதத்தில் அமைந்துள்ளது போல, இன்றைய தமிழகத்தின் மதுரை கீழடி அகழ்வாய்வு,  தமிழ்நாட்டில் தொன்மையான நகர பண்பாடு இருந்தது என்பதற்கு தொல்லியல் சான்றாக அமைகின்றது.  சிந்துவெளியின் நாகரீக தொடர்ச்சியை ஏறக்குறைய ஈராயிரம் கிலோமீட்டர் தூரத்தில் தெற்கே இருக்கும் மதுரையில் காணமுடிகின்றது. சங்க இலக்கியங்கள் புகழ்ந்து பாடிய நகரங்களைப் பற்றிய செய்திகள் வெறும்கற்பனைகள் அல்ல,  அவை உண்மையே -  என்பதை பறைசாற்றும் சான்றுகளாகக் கீழடி அகழ்வாய்வு தகவல்கள் நமக்கு இன்று கிடைக்கின்றன. வைகை கரையோரம் முழுதும் குழிகள் தோண்டி அகழ்வாய்வுகள் தொடர்ந்தால்,  மறைந்துபோன சிந்துவெளியின் தொடர்ச்சி இங்கு வைகைக்கரை நாகரிகத்தின் அடித்தளத்தை அமைத்தது என்பதற்கு மேலும் பல சான்றுகள் கிடைக்கும் என்பதை வலியுறுத்தும் வண்ணம் நூலாசிரியர் தனது கருத்துக்களை இந்தப் பகுதியில் வழங்குகின்றார்.

இன்றைய பாகிஸ்தான் நிலப்பகுதியில் சிந்துவெளி நாகரிகம் என்ற தொல் நாகரிகம் கண்டறியப்பட்ட செய்தியை உலகிற்கு தனது கட்டுரையின் வழி ஜோன் மார்ஷல் 1924ம் ஆண்டு அறிவித்தார். அதன் பின்னர், இந்தத் தொல் நாகரீக பண்பாட்டிற்கும் திராவிடப் பண்பாட்டிற்கும் உள்ள ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் தொடர்ச்சியான ஆய்வுகள் நிகழ்ந்தாலும் இங்கு பேசப்பட்ட மொழி எது, என்பது இன்றுவரை உறுதிசெய்யப்படாத சூழ்நிலையே நிலவுகிறது. ஆயினும் மிக உறுதியாக திராவிட பண்பாட்டு தொடர்ச்சியை சிந்து சமவெளி நாகரிகம் காட்டுவதையே பெரும்பாலான ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. சிந்துசமவெளி தொடர்பான ஆய்வுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் பாதிரியார் ஹீராஸ், ஆய்வாளர் அஸ்கோ பர்போலா, ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் இஆப ஆகியோர் வரிசையில் இன்று ஆர்.பாலகிருஷ்ணன் இஆப அவர்களும் இணைகின்றார். தொடர்ச்சியாக  இவர் நிகழ்த்திய இடப்பெயர் ஆய்வுகள் சிந்து சமவெளி நாகரிகப் பண்பாட்டினைப் புரிந்துகொள்ள முக்கிய தரவுகளாக அமைகின்றன.  இன்றைய இந்திய எல்லை என்பதை மட்டும் ஆய்வுக்களமாக இல்லாமல் இந்த எல்லைகளைக் கடந்து தனது இடப்பெயர் ஆய்வினை நிகழ்த்தி இவர் சேகரித்திருக்கும் தரவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. 

அதோடு தனது ஆய்விற்குத் துணை சான்றா நூலாசிரியர் முன்வைக்கும் கோழிச்சண்டை தொடர்பான தரவுகளும் சான்றுகளும் மிக முக்கியமானவை என்றே கருதுகிறேன்.  ஒரு நீண்ட பாரம்பரியத்தின் தொடர்ச்சியின் எச்சங்களாக இன்றும் தமிழர் மரபில் இடம்பெறும் பண்பாட்டு  விழுமியங்களுள் ஒன்றாக கோழிச்சண்டை மரபைக் காண்கின்றோம்.  இப்பகுதிக்குச் சான்றாக ஆசிரியர் வழங்கியிருக்கும் ஊர்ப்பெயர் உதாரணங்கள்,கி.மு 1ம் நூற்றாண்டு சோழர் கால நாணயம் காட்டும் கோழி நகரம் (உறையூர்), கோயில் சிற்பங்களில் யானையுடன் சண்டையிடும் சேவலின் சிற்பம், சண்டைக்கோழிக்காகத் தமிழ்மக்கள் எடுத்த கல்வெட்டுடன் கூடிய கீழ்ச்சேரி, மேல்ச்சேரி  நடுகல்கள் போன்ற தகவல்கள் சிறப்பனவை.  சண்டைக்கோழிகளுக்குச் செல்லப்பெயர் வைத்து அவை வீரமரணம் எய்திய போது  சண்டைக்கோழிகளுக்காக   நடுகல் எழுப்பி சிறப்பு செய்த தமிழ் மக்களின் பண்பாட்டுடன் சிந்து சமவெளி கோழிச்சின்னங்களை பொறுத்திப் பார்க்க வேண்டியது அவசியமாகின்றது.  சிந்து சமவெளி தொடங்கி, சங்க கால கோழிச்சண்டை சிறப்பின் வெளிப்பாடாக நாணயங்கள், சிற்பங்கள் பின் அதன் தொடர்ச்சியாக நடுகல்  எனத் தொடரும் மரபு இன்று பொதுமக்கள் பண்பாட்டில் திரைப்பட வடிவில் "ஆடுகளம்" என்ற தமிழ்த்திரைப்படத்தின் மையக் கருவாக அமைந்திருப்பதை ஒதுக்கிச் செல்ல முடியாது என்பதை நூலாசிரியர் மிக அழகாக விவரிக்கின்றார்.

நூலின் முதல் கட்டுரையில் மிக விரிவாகவும், ஆழமாகவும் சிந்து சமவெளி நகரங்களின் அமைப்பினைப் பற்றி விவரிக்கும் நூலாசிரியர்,  மேற்கு கிழக்கு என்ற பகுப்பின் தொடர்பினை அதிக கவனத்துடன் கையாண்டிருக்கிறார். மிகத் தெளிவாக இப்பகுதியை விளக்கியிருப்பது வாசிப்போருக்கு சிந்து சமவெளி நாகரிகத்தின் நகர அமைப்பின் கட்டுமான வரையறையின் இலக்கணத்தை அறிந்து கொள்ள உதவுகின்றது. சிந்துவெளியை ஒட்டிய இன்றைய பலுச்சிஸ்தானிலும், வடகிழக்கு ஈரானிலும் பேசப்படும் பிராகுயி என்ற திராவிட மொழி   பற்றிய செய்தி வியப்பூட்டுகின்றது.  இன்றைய இந்திய எல்லையை மட்டும் வைத்து  திராவிடப்பண்பாட்டுத் தளத்தை ஆராய்வது உதவாது, திராவிடமொழிக்குடும்பத்தின் பரவலாக்கம் பற்றி அறிந்து கொள்வதற்கு இந்த எல்லையைக் கடந்த வகையிலான ஆய்வுகளும், திராவிடப் பண்பாட்டின் கருத்தாக்க வேர்களின் தொடர்ச்சி பற்றி ஆராய வேண்டியதும் அவசியம் என்பதையும் இந்த நூல் வலியுறுத்துகிறது. 

மேல்-கீழ் என்ற கருதுகோள் எவ்வாறு திராவிட பாரம்பரியத்தில், அதிலும் குறிப்பாகத் தமிழ் நிலப்பரப்பில் தமிழ் மக்களிடையே பண்பாட்டு ஆய்வுகளில் முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை நூலில் ஆசிரியர் அளித்திருக்கும் பல உதாரணங்களைப் பார்க்கும்போது ஒப்பிட்டு அறிந்து கொள்ள முடிகின்றது. கொற்கை, வஞ்சி, தொண்டி ஆகிய சங்க கால நகர் பெயர்கள் சிந்துவெளி நாகரிகத்திலும் வழக்கில் இருந்தன என்பதை இடப்பெயர் ஆய்வின் வழி நிறுவுகின்றார்.  தமிழகத்தின் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் வழக்கில் உள்ள 97 இடப்பெயர்கள் அப்படியே எந்த மாற்றமுமின்றி சிந்துவெளிப்பண்பாட்டுப் பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன என்ற தகவல் வியப்பூட்டுகின்றது. சிந்துவெளிப்பண்பாட்டில் மட்டுமன்றி பாகிஸ்தானில் 131 இடங்களிலும், ஆப்கானிஸ்தானில் 24 இடங்களிலும் அப்படியே வழக்கில் உள்ளன என்றும் குறிப்பிடுகின்றார்.  இன்றைய இந்தியாவின் குஜராத். மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும்  133 இடங்களில் இந்தத் தமிழக இடப்பெயர்கள் பயன்படுத்தப்படுவதையும் சுட்டிக் காட்டுகின்றார். இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில்  தமிழகத்தின் வைகை கரையோரம் அடையாளம் காணப்பட்ட 200 சொற்களில் 122 ஊர் பெயர்கள் சிந்து சமவெளி பெயர்களோடு தொடர்புடையனவாக  ஒத்துப் போவதையும் சுட்டிக் காடுகின்றார்.   

இடப்பெயர், மேல்-மேற்கு கீழ்-கிழக்கு, கோழிச்சண்டை மரபு என பண்பாட்டுத் தொடர்ச்சிகளை மையப்படுத்தி சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிடப் பண்பாட்டைக் கட்டமைக்க இந்த நூல் மேற்கொண்டிருக்கும் முயற்சி ஆய்வுலகில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆயினும், தொடரும் கேள்விகளும் அவற்றிற்கு விடைகாணும் முயற்சிகளும் அவசியம் என்பதையும் நூல் சுட்டிக் காட்டுகின்றது. குறிப்பாக சிந்து வெளி மக்கள் என்ன மொழி பேசியிருப்பார்கள் என்ற கேள்வி, சிந்து வெளி பண்பாடு குறித்த ஆய்வில் சங்கத் தமிழ் இலக்கியம் காட்டும் தொடர்ச்சி, கீழடி போன்ற நகரநாகரிக அகழ்வாய்வுச் செய்திகள், தொடர வேண்டிய வைகைக்கரையோர அகழ்வாய்வுப் பணிகள், நீண்ட மரபின் தொடர்ச்சியாய் நாம் இன்றும் காணும் பண்பாட்டுக் கூறுகளை ஆய்வு செய்வது ஆகியன தொடர வேண்டும் என்பதை நூல் வலியுறுத்துகின்றது.

இந்த நூலில் ஆர்.பாலகிருஷ்ணன் இஆப அவர்கள் குறிப்பிட்டிருக்கும் இரண்டு கருத்துக்களை இன்றைய வரலாற்று ஆரவலர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது மிக அவசியம் என்பதால் நூலில் இப்பகுதியை கீழே வழங்குகின்றேன்.

"...உணர்ச்சியால் உந்தப்பட்ட பேச்சுக்களும், அறிவியல் பூர்வமாக நிறுவ முடியாத கருத்துக்களை முன்வைத்து நம்பகத்தன்மையை இழப்பதும்,  நிகழ்கால துதிபாடல்களில் நேரத்தை செலவிட்டதும் தமிழ்ச்சமூகம் தனக்குத்தானே இழைத்துக் கொண்ட அநீதிகளும், அதன் விளைவாக நேர்ந்த கூட்டுக்காயங்களும் ஆகும்.....
மக்களை மையத்தில் வைக்காத வரலாறு  மன்னர்கள் பிறந்த கதை, வளர்ந்த கதை, இறந்த கதை பேசும்.  அரண்மனைகளையும் அந்தப்புறங்களையும் மட்டுமே துருவித் துருவி ஆராய்ந்து களிப்படையும் அல்லது களைப்படையும் நாம் மீட்டெடுக்க வேண்டியது மன்னர்களின் கதை அல்ல. இன்னும் சொல்லப்போனால் வெறும் மண்ணின் கதையைக் கூட அல்ல. அதைவிட முக்கியமாய், மொழியை மூச்சில் ஏந்தி முன் நடந்து, பண்பாட்டுத் தொடர்ச்சியைக் காலத்தை வென்று நிற்கும் நடைமுறையாக்கிய மனிதர்களின் கதையை..."

-சுபா

kanmani tamil

unread,
Dec 27, 2018, 2:50:15 AM12/27/18
to mintamil
///சிந்துவெளி நகரங்களின் மேல்-மேற்கு, கீழ்- கிழக்கு வடிவமைப்பு பற்றிய விளக்கங்கள் இடம்பெறுகின்றன. இப்பகுதி, மேல்-மேற்கு, கீழ்- கிழக்கு எனும் அடிப்படை நகர அமைப்பு,  திராவிட நகர அமைப்பின் அடித்தளத்தை வகுக்கும் தன்மை ஆகியன, விரிவாக அலசப்படுகின்ற. /// 

இந்தக் கருத்தை அடியொட்டித்தான் 'பண்டை மதுரை தன்  இடத்திலிருந்து மாறவில்லை' என்பதை மின்தமிழில் நான் பங்கேற்ற முதல் இழையில் ஆணித்தரமாகக் கூறினேன். ஏனென்றால் இன்றும் கீழ்மதுரை இருக்கிறது. அதற்கு நேர்மேற்கில் இருந்தது மதுரை எனின்; இன்றைய மதுரை மையப்பகுதியின் தென்கூறை  உள்ளடக்கி
சிவன் கோயிலை (சொக்கநாதர் கோயில்) ஈசான்ய மூலையில் கொண்டு - வடகிழக்கு மூலை - மயமத விதிப்படி அமைந்திருந்தது.
இப்பவும் மதுரை அருகே கீழக்குயில்குடி               கீழ் மாத்தூர்              கீழ்ப்பனங்குடி 
                                               மேலக்குயில்குடி            மேல்மாத்தூர்            மேல்பனங்குடி  என; இன்னும் எத்தனையோ ஊர்கள் உள்ளன.
கண்மணி 
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Rathinam Chandramohan

unread,
Dec 27, 2018, 3:03:32 AM12/27/18
to mint...@googlegroups.com
Mr. Amburose from Yalpanam is going to publish a book shortly with more evidences connecting Indus valley and Dravidian civilizations.

Suba

unread,
Jan 12, 2019, 5:59:51 AM1/12/19
to மின்தமிழ், Subashini Kanagasundaram
நூல் வாசிப்பு - அனுபவப் பகிர்வு
ORIGIN by Dan Brown


கடந்த சில ஆண்டுகளில், டான் ப்ரவுனின் நூல்கள் வெளிவந்தவுடனே வாங்கி வைத்துக்கொள்வதோடு வாங்கிய வேகத்திலேயே வாசித்து முடித்து விடுவேன். ஆனால் ஒரிஜின் அக்டோபர் 2017ல் வெளிவந்தது. சென்ற ஆண்டு தொடக்கத்தில் வாங்கினேன்.இடையில் ஏற்பட்ட கடுமையான அலுவலகப் பணிகள், ஏனைய பயணங்கள்.. என நூலை கையில் எடுக்க நேரம் கிடைக்கவில்லை. ஒரு வருடத்திற்குப் பின், கடந்த கிறிஸ்மஸ் விடுமுறையில் தான் வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த வாசிப்பு பிரமிப்பு மிக்க மகிழ்ச்சியான ஒரு அனுபவமாக அமைந்தது. 

எனது தேர்வுகளில், சில நூல்கள் சுகமான அனுபவங்களாக அமைந்து விடுகின்றன. சில நூல்கள் புதிய ஒளியைப் பாய்ச்சுகின்றன. இந்த நூல் இரண்டாவது வகை.

ஏறக்குறைய 460 பக்கங்கள் கொண்ட ஆங்கில நாவல் இது. மனம் வேகமாக வாசித்துக் கொண்டே செல்லும் போது திடீர் என ஒரு எண்ணம் தோன்றும்.. சீக்கிரம் வாசித்து முடித்து விட்டால் புத்தகத்தோடு எனக்குள்ள உறவு முடிந்து விடுமோ.. என்று. அப்படி ஒரு ஈர்ப்புடன் கதை அமைந்துள்ளது.

எப்போதும் நூல் வாசிக்கும் போது கையில் நூலை வைத்துக் கொண்டு அதில் எனக்குப் பிடித்த வரிகளைக் கோடிடுவதும், சில குறிப்புக்களை எழுதுவதும் எனக்கு மிகப் பிடிக்கும். சில நேரங்களில் வெவ்வேறு ஸ்மைலி குறியீடுகளும் போட்டு வைப்பேன். வாசிக்கும் போது எனக்கு மனதில் எழும் உணர்வுகளை அடுத்த முறை அதே வரிகளைப் பார்க்கும் போது அந்த ஸ்மைலி குறியீடுகள் பிரதிபலிக்கும் என்ற ஒரு எண்ணம். அதே தான் ஒரிஜின் முழுவதும் செய்திருக்கின்றேன். 

டான் ப்ரவுன் நூல்களை வாசித்தவர்களுக்கு ஒரு விஷயம் நன்கு தெரியும். Angels & Damons  தொடங்கி அவரது நூல்களின் மைய கதாபாத்திரம்  ரோபர்ட் லாங்டன்.  இக்கதாபாத்திரம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் கலை வரலாற்றுத் துறையில் குறியீடுகள் துறையில்  தேர்ச்சி பெற்ற உலகப் புகழ்பெற்ற ஒரு ஆய்வாளர் எனக் காட்டப்படும் கதாபாத்திரம். டான் ப்ரவுனுக்கு மிகப் பிடித்த தத்துவவாதி ஜோசப் கேம்பலின் தாக்கத்தை கொண்ட வகையில் அமைக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் தான் ரோபர்ட் லாங்டன். ஒவ்வொரு நாவலிலும் வெவ்வேறு புதிர்களைக் கட்டவிழ்ப்பது இவரது பணியாக இருக்கும். ஒவ்வொரு முறையுமே உலகின் முக்கிய ஆளுமையாக உள்ள "சமயம் என்ற கருத்தியலை" நோக்கியதாகவே  இவரது நாவல்களின் மையக் கருத்துக்கள் அமைந்திருக்கும். இப்படி ஒவ்வொரு முறையும் சமயங்கள் ஏற்படுத்தியுள்ள மாயத்திரைகளை  விலக்க அவர் கையில் எடுக்கும் உத்தி அறிவியலாகவே அமைந்திருக்கும். 

இந்த நூலில் ஆங்காங்கே சில குறியீடுகள் வருகின்றன. அறிவியல் கண்டுபிடிப்புகள் அடுத்தடுத்து பேசப்படுகின்றன. தத்துவ கேள்விகள் சமயத் தளத்திலிருந்து எழும் காலம் மாறி, அறிவியல் தளத்திலிருந்து முளைக்கின்றன.

டான் ப்ரவுனின் நாவல்களில் எனக்கு மிகப் பிடித்த ஒரு விசயம் அவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்த தொடர்பு படுத்தும் அமைப்புக்களும் அவை இயங்கும் கட்டிடங்களும் தான்.  எனக்கு இயல்பாகவே கட்டிட கட்டுமானங்களின் மீது தனி ஈர்ப்பு இருப்பதால் டான் ப்ரவுன் அடுத்து  எந்த கட்டிடத்தை நோக்கி செல்கின்றார்.... அதில் என்ன புதிய கோணங்களை விவரிக்கப் போகின்றார்... என்று சுவாரசியம் குறையாது நூல் செல்கின்றது.

இந்த நாவல் முழுக்க ஸ்ப்பெயின் நாட்டில் நடப்பதாகவே உள்ளது. ஒரு சில நிகழ்வுகள் ஹங்கேரி தலைநகர் பூடாபெஷ்ட் நகரில் நடைபெறுவதாகவும் காட்டப்படுகின்றது. பொதுவாக, ஐரோப்பா என்றால் பலருக்கும் மனதில் தோன்றுவது இங்கிலாந்து. ஆனால் ஸ்பெயின் உலக அளவில் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கத்தை நினைவு கூற பலருக்கு தோன்றுவதில்லை. இதற்குக் காரணம் பொதுவாகவே பலருக்கு உள்ள குறைந்த வாசிப்பு என்பதுதான். 

கி.பி.15ம் நூற்றாண்டு வாக்கில் உலகின் பல நாடுகளுக்குக் கடல் வழி பயணம் மேற்கொண்டு புதிய நிலங்களைத் தேடி தனது ஆளுமையை விரிவாக்கிய பலம் பொருந்திய அரசு தான் ஸ்பெயின். போர்த்துக்கீய எல்லையையும் தனது ஆளுமைக்குட்படுத்தி அன்றைய ஸ்பெயின் அரசு தனது பலத்தை விரிவாக்கியது.  கொலம்பசுக்கு அமெரிக்காவை கண்டுபிடிக்கச் சென்ற முயற்சிகளுக்கு பொருளுதவி அளித்த அரசியார் முதலாம் இசபெல்லா ஸ்பெயின் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தனியிடம் பெறுகின்றார். வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகள், இந்தியா, சீனா, பசிபிக் பெருங்கடல் பயணங்கள் என பெருவாரியாக கடல் பயணங்களை விரிவாக்கி நாடுகளைக் கைப்பற்றிய ஸ்பெயின் தொடர்பான நிகழ்வுகள் வரலாற்றில் முக்கியத்துவம் பெறுபவை. இன்று அதிகம் பேசப்படும் உலக மொழிகளில் சீன மாண்டரின் மொழிக்கு அடுத்து இரண்டாம் நிலையில் இருப்பது ஸ்பேனிஷ்!

கத்தோலிக்க கிருத்துவம் உலகமெங்கும் பரவவேண்டும் என்ற நோக்கத்துடன் புறப்பட்ட போர்த்துக்கீசிய பாதிரிமார்களுக்குப் பொருளுதவி செய்ததோடு நூல்களை அச்சிடும் அச்சு இயந்திரங்களை கப்பல்கள் வழி அனுப்பி வைத்து பொருளாதார ரீதியாக கத்தோலிக்க கிருத்துவம் உலகமெங்கும் பரவச் செய்ததில் ஸ்பெயினின் பங்கு அளப்பறியது. 

ஸ்பெயின் நாட்டின் முக்கிய நகரங்கள் மட்ரிட், பார்சலோனா, வாலன்சியா, மலாகா, செவியா, லியோன், பில்போ, ரோண்டா, கோர்டோபா, க்ரானாடா எனலாம். ஸ்பெயினின் வட மேற்கு நகரமான சாண்டியாகோ டி கொம்பொஸ்டெல்லா கத்தோலிக்க புனித பயணம் செல்பவர்கள் சென்று வரும் ஒரு சமய மையம். இஸ்லாமியர்களுக்கு எப்படி மெக்காவோ, இந்துக்களுக்கு எப்படி காசி, வாரணாசியோ அது போல, கத்தோலிக்க கிருத்துவ சமயத்தவர்களின்  புனித தலம் சாண்டியாகோ டி கொம்பொஸ்டெல்லா. இது இருப்பது ஸ்பெயின் நாட்டில் தான்.

ஆக, இத்தகைய ஆழமான வரலாற்று, சமய பின்புலத்தை அறிந்தவர்களுக்கு டான் ப்ரவுனின் இந்த நாவலின் கதைக்களம் சுவாரசியமாகவே செல்கின்றது. 

நாவலின் மையக்கரு - "எங்கிருந்து உயிர்கள் தோன்றின? உயிர்கள் எங்கே  சென்று சேர்கின்றன?".  இது உலக தத்துவ ஞானிகள் அனைவரும் எழுப்பிய கேள்வி. இதனை டான் ப்ரவுன் எவ்வாறு கையாண்டிருக்கின்றார் என்பதே நாவலின் சிறப்பு.
 
நூல் இப்படித்தான் தொடங்குகின்றது.

We must be willing to get rid of the life we've planned, so as to have the life that is waiting for us. -JOSEPH CAMPBELL

நூல் முழுக்க பல உலக ஆளுமைகள் வலம் வருகின்றனர். சார்ல்ச் டார்வினின் மனித குலத்தின் பரிணாம வளர்ச்சி கருத்தியல்  ஆரம்பம் முதல் இறுதி வரை பேசப்படுகின்றது. வின்சண்ட் சர்ச்சில், ஜெரெமி இங்லேண்ட்,  வில்லியம் ப்ளேக், நீட்ஷே, ஜோசப் கேம்பல் ஆகிய தத்துவ அறிஞர்களின் கருத்துக்களும் சமய வாதங்களும் போதுகின்றன. ஸ்ப்யின்  கட்டுமான பொறியியலாளர் அண்டோனி கவுடி, கனெடிய-அமெரிக்க  கட்டுமான பொறியியலாளர்   ப்ராங்க் கேரி ஆகியோரது கட்டுமான ஆச்சரியங்கள் மிக மிக விரிவாக நூல் முழுவதும் விவரிக்கப்படுகின்றன. ஸ்டேன்லி மில்லர், ஹரோல்ட் உரே ஆகியோரது முல்லர் -உரே ஆய்வு, கணினி தொழில்நுட்பம், ஆர்ட்டிஃபிஷல் இண்டெலிஜென்ஸ், சூப்பர் கம்பியூட்டர் தொழில்நுட்பம் ஆகியன நூலை ஆக்கிரமிக்கின்றன. 

ஆங்காங்கே நிதானித்து சிந்திக்க பல வரிகள் நூலில் இடம்பெறுகின்றன. உதாரணமாக ஒன்று.

success is the ability to go
from one failure to another
with no loss of enthusiasm
-Winston Churchill

பூடாபெஷ்ட்டில் உள்ள ஐரோப்பாவின் மிகப் பெரிய சினகோக், ஸ்பெயின்  கூகன்ஹைம் பில்போ அருங்காட்சியகம்,   லா சால்வ பாலம், பார்சலோனாவில் உள்ள மாபெரும் கட்டுமான புதுமை என அழைக்கப்படும் லா சாக்ராடா ஃபெமிலியா தேவாலயம், லா படேரா (காசா மிலா) மோண்ட்செராட், செவியா தேவாலயம், பால்மேரியன் கிருத்துவ அமைப்பின் மையமாகிய எல் டோர்பிஸ்கால் பேய் நகரம், மட்ரிட் நகரில் உள்ள அரச மாளிகை, அல்முடெனா தேவாலயம், தேசிய அருங்காட்சியகம் ஆகியவை நூலில் அதிகம் பேசப்படும் கட்டிடங்களாக அமைகின்றன.

ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் ஒன்றரை வருட காலங்கள் பணிபுரிந்த அனுபவம் எனக்குண்டு. 2011  முதல் 2012 இறுதி வரையிலான காலகட்டத்தில் நான்  மட்ரிட்டில் இருந்த காலகட்டத்தில் ஸ்பெயினின் முக்கிய நகரங்களுக்குச் சென்று வரலாற்றுச் சான்றுகளைத் தேடியிருக்கின்றேன்.  அப்போது நேரில் சென்று பார்த்து வந்த பார்சலோனா தேவாலயங்கள், செவியா தேவாலயங்கள், மட்ரில் நகர மையத்தில் அமைந்திருக்கும் ராஜ மாளிகை, தேவாலயங்கள் என அனைத்தும் நூல் வாசிக்கும் போது மனக்கண்களில் உலா வந்து காட்சியளிக்கத் தவறவில்லை. 

இந்த நூலின் விஞ்ஞானியாக காட்டப்படுபவருக்கு டான் ப்ரவுன் வழங்கியிருக்கும் பெயர் எட்மண்ட் கிர்ஷ். இதே பெயரில் கி.பி.19ம் நூற்றாண்டு வணிகர் ஒருவர் இருத்திருக்கின்றார் என என் இணையத் தேடல்கள் சொல்கின்றன.  

அசாத்தியமான தைரியத்துடன் நாவலின் முடிவை வழங்கியிருக்கின்றார் டேன் ப்ரவுன்.   வாசித்து முடித்த பின்னரும் சூப்பர் கம்பியூட்டர் வின்ஸ்டனின் நினைவுகள் வாசிப்போர் மனதிலிருந்து நீங்காது.  ரோபர்ட் லாங்டனை விட இந்த நாவலின் கதாநாயகர்கள் வின்ஸண்ட், எட்மண்ட் ஆகிய இருவரும் தான் எனக் கூறலாம்.  நாவலில் இக்கதாபாத்திரங்கள் மறைந்தும் கூட, இவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் மனதில் நீங்கா இடம்பெறக்கூடியவை.

அறிவியல் தொழில்நுட்பம்  மனிதர்களை வழி நடத்தும் அடுத்த கட்ட நகர்வு. இதனைப் புரிந்து கொள்ளும் போது சமயங்களின் மாயத்திரைகள் விலகும்.

-சுபா


ஸ்பெயின் க்ரானாடா பழைய அரச மாளிகை வளாகத்தில்



பார்சலோனா சூப்பர் கொம்பியூட்டர் மையத்தின் உள்ளே




பார்சலோனா - செக்ராடா டி ஃபெமிலியா தேவாலயம்


கூகன்ஹைம் பிப்லோ அருங்காட்சியகம்  

 

Innamburan S.Soundararajan

unread,
Jan 12, 2019, 6:34:12 AM1/12/19
to mintamil, Subashini Kanagasundaram

"... பொதுவாக, ஐரோப்பா என்றால் பலருக்கும் மனதில் தோன்றுவது இங்கிலாந்து. ஆனால் ஸ்பெயின் உலக அளவில் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கத்தை நினைவு கூற பலருக்கு தோன்றுவதில்லை. இதற்குக் காரணம் பொதுவாகவே பலருக்கு உள்ள குறைந்த வாசிப்பு என்பதுதான். "

̀இது உண்மை தான்

We must be willing to get rid of the life we've planned, so as to have the life that is waiting for us. -JOSEPH CAMPBELL
~ We can plan and execute little on our own. And to access the life that awaits us called for an intuitive approach.
Thank You for an insightful review, Subashini.
Innamburan




--

Suba

unread,
Apr 25, 2019, 6:26:42 PM4/25/19
to mintamil, Subashini Kanagasundaram
சூளவம்சம் - நூல் வாசிப்பு
நூலாசிரியர் - முனைவர்.க.குணராசா

பதிப்பு - கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்

(பகுதி 1)

sulavamsam.jpg
இலங்கை வரலாற்றைக் கூறும் முக்கிய நூல்களுல் மகாவம்சம் சிறப்பிடம் பெறுகின்றது. மகாவம்சம் என்ற நூலுடன் சூளவம்சம் என்ற நூலும் வரலாற்றுச் செய்திகளை வழங்கும் முக்கிய நூலாக கருதப்படுகின்றது. அடிப்படையில் தீபவம்சம் என்ற நூலின் திருத்தப்பட்ட வடிவமே மகாவம்சம் என்ற நூலாகும். இதனை எழுதிய ஆசிரியராக மகாநாமதேரர் என்பவர்.

 தீபவம்சம்  என்னும் இந்த நூல் சொல்லும் செய்திகள் 100 பகுதிகளாக அமைந்தவை.  தீபவம்சம் என்ற மூல நூலில் குறிப்பிடப்படும் 37 அத்தியாயங்கள் மகாவம்சத்தில் அடங்கியுள்ளனதீபவம்சம்  முழுமையாக பாளி மொழியில் எழுதப்பட்டதாகும். தீபவம்சம் என்ற இந்தப் பாளி மொழியில் அமைந்த நூலை மொழி பெயர்த்தவர்  வில்லியம் கெய்கர் ஆகும். முதல் 37 பகுதிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட நூலாக மகாவம்சம் என்ற பெயருடன் முதற்பகுதி விளங்குகின்றது.  எஞ்சிய பகுதிகள் அதாவது,  38 ஆம் பகுதி தொடங்கி 100 ஆவது அத்தியாயம் வரையான தொகுப்பு சூவம்சம் என்று பெயருடன் விளங்குகின்றதுஇது தவிர ஜோர்ஜ் ரேனர் என்பவர் தீபவம்சம் நூலில் உள்ள நூறு அதிகாரங்களையும் மகாவம்சம் என்ற பெயருடன் மொழிபெயர்த்தார் என்பதும் நூல் வழங்கும் செய்தி

வில்லியம்  கெய்கர்  பாளி மொழியில் அமைந்த தீபவம்சம் நூலை ஜெர்மானிய மொழிக்கு  மொழி பெயர்ப்பு  செய்தார்.  பின்னர் அது ஆங்கில மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஆனால்   ஜோர்ஜ் ரேனர்   பாளியிலிருந்து நேரடியாக ஆங்கில மொழிக்கு மொழி பெயர்த்துள்ளார்.

வில்லியம் கெய்கர் மொழிபெயர்த்து வழங்கிய முதல் 37 பகுதிகளைக் கொண்ட மகாவம்சம், கௌதம புத்தரின் இலங்கைக்கான பயணத்தை  முதலாவது அத்தியாயமாகக் கொண்டு தொடங்குகின்றது. அதாவது கி.மு. 483 லிருந்து கி.பி. 362 ஆம் ஆண்டு வரை அமைந்த வரலாற்றுச் செய்திகளை விவரிப்பதாக இந்த முதல் 37 பகுதிகளிள் அமைகின்றது. மகாவம்சத்தின் அடிப்படையில் விஜயன் முதலாவது மன்னனாக அறியப்படுகின்றான். மகாவம்சம் நூலின் 58ஆவது மன்னனாக மகாசேனன் என்பவன் குறிப்பிடப்படுகின்றான். இதன் தொடர்ச்சியாக, அதாவது 37ஆவது அத்தியாயம் தொடங்கி 100வது அத்தியாயம் வரை அமைகின்ற சூளவம்சம் நூல், மகாசேனனின் மகன் மேகவண்ணன் ஆட்சி காலம் முதல் தொடங்குகின்றது. அவனது ஆட்சி ஆண்டு கி.மு 362 முதல் இறுதி மன்னனான ஸ்ரீ விக்ரமசிங்கனின் ஆட்சி காலமான கி.பி.1815 வரையிலான மன்னர்களைப் பர்றி சூளவம்சம் சொல்கின்றது.

மகாவம்சம் நூலில் முக்கியத்துவம் வழங்கப்படும் மாமன்னனாக மாமன்னன் துட்டகாமினி குறிப்பிடப்படுகின்றான். சூளவம்சம் நூலில்  முக்கியத்துவம் பெறுகின்ற மன்னனாக பராக்கிரமபாகு குறிப்பிடப்படுகின்றான்.

மகாவம்சம் நூலை தமிழ் மொழிக்கு மொழி பெயர்த்த முனைவர் கா. குணராசா அவர்களே சூளவம்சம் கூறுகின்ற வரலாற்றுச் செய்தியையும் தமிழில் மொழிபெயர்த்து வழங்கியிருக்கின்றார். அவற்றுள் பராக்கிரமபாகு தொடர்பான செய்திகள் நான்கு அத்தியாயங்களில் அமைகின்றன. 

சூளவம்சம் நூலை முழுதும் வாசிக்கும்போது இலங்கை மன்னர்கள் ஆட்சியில் தொடர்ச்சியான மன்னர் பாரம்பரியம் என்ற நிலைக்கே வாய்ப்பில்லை என்பதை தெளிவுபடுத்துகின்றது. தொடர்ச்சியான போர், நிலையற்ற அரசு, சகோதரர்களுக்குள் பிரிவு, சகோதரர்களுக்குள் துரோகம், தந்தையை கொல்லும் மகன், மன்னரை வீழ்த்திவிட்டு பதவியை கைப்பற்றும் சேனாதிபதி, சில நூற்றாண்டுகளுக்கு பின்னர் மீண்டும் வந்து ஆட்சியைக் கைப்பற்றும் வாரிசுகள்,  கொடூரமான தண்டனைகள், பெண்கள் அசியல் ரீதியாக நட்புறவை நாடுவதற்காகத் திருமணத்தில் பயன்படுத்தப்பட்ட வரலாற்றுச் செய்திகள், பௌத்தத்தின் எழுச்சி, 3 வகை பௌத்த நெறிகள்,  தமிழகத்தை ஆண்ட  மன்னர்கள் ஏற்படுத்திய தாக்கம், பாண்டிய மன்னர்களுக்கும் இலங்கை அரசுக்கும் இருந்த நெருக்கமான தொடர்பு, சோழமன்னர்கள் ஏற்படுத்திய போர், அதனால் விளைந்த விளைவு, போர்ச்சுகீசிய மற்றும் டச்சுக்காரர்கள் வணிகத்திற்காக வந்து பின்னர் படிப்படியாக இலங்கைத் தீவு முழுமையும் அந்நியர்களின் கைக்கு மாறிய வரலாறு என்று சூவம்சம் வரலாற்றுச்செய்திகளைப் பதிந்து தருகின்றது, பெரும்பாலான செய்திகள் வரலாற்றுக் குறிப்புகள் என்று எடுத்துக் கொண்டாலும் கூட, ஆங்காங்கே கற்பனைக் கதைகள் புகுத்தப்பட்டிருக்கின்றன என்பதையும் காணமுடிகின்றது.

சூளவம்சம் பற்றிய இந்த அறிமுகத்தோடு தொடர்ச்சியாக சூளவம்சம் நூல் சொல்லும் வரலாற்றை சிறு பகுதிகளாகத் தொடர்ந்து வழங்குகிறேன்.

-சுபா

தேமொழி

unread,
Apr 25, 2019, 7:20:51 PM4/25/19
to மின்தமிழ்
நன்றி சுபா.   எதிர்பார்ப்புடன்... ஆவலுடன்...

///நிலையற்ற அரசு, சகோதரர்களுக்குள் பிரிவு, சகோதரர்களுக்குள் துரோகம், தந்தையை கொல்லும் மகன், மன்னரை வீழ்த்திவிட்டு பதவியை கைப்பற்றும் சேனாதிபதி,  /// <<<  சூழ்ச்சியில் பெண்களும் அரசியரும் கைவரிசைகளைக்  காட்டியுள்ளனர்....  பதவி ஆசை... அதிகாரா வெறி யாரையும் விட்டு வைப்பதில்லை. 

Suba

unread,
Apr 27, 2019, 8:02:23 AM4/27/19
to mintamil, Subashini Kanagasundaram
*பகுதி 2  - தொடர்கின்றது.*

சூளவம்சம் - நூல் வாசிப்பு
நூலாசிரியர் - முனைவர்.க.குணராசா

பதிப்பு - கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்

சூவம்சம்  கூறும் மன்னர்கள் பரம்பரை பற்றிய செய்தியில் மீண்டும் மீண்டும் சில பெயர்கள் வருவதைக் காணலாம். உதாரணமாக, காசியப்பன் அக்கபோதி, சேனன் போன்ற பெயர்கள் மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றன. அதேபோல பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என்ற பெயர்களும் ஒரு முறைக்கு மேல் இடம்பெறுகின்றன.  இப்பெயர்களைக் கவனிக்கும் போது இவை சிங்கள பெயர்களா அல்லது தமிழ் பெயர்களா என்ற மயக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை. ஆயினும் சூளவம்சம் பொதுவாகவே சிங்கள மன்னர்களை மட்டுமே இலங்கை மன்னர்களாக எடுத்துக்கொண்டு இந்த நூலில் கையாள்கிறது. எப்போதெல்லாம் தமிழர்கள் இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றினாலும் அல்லது சிங்கள படையில் பதவி வகித்தாலும், அல்லது தமிழகம் போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தாலும் அதனை தெளிவாக குறிப்பிட்டுச் சொல்கிறது. ஆக சூவம்சம் முதன்மைப்படுத்துவது இலங்கை சிங்கள மன்னர் பரம்பரையையே என்பது உறுதிப்படுகிறது.

மகாவம்சத்தில் இறுதியாக இடம் பெறும் மகாசேனனின் 27 ஆண்டு ஆட்சி, அதாவது கி.பி 361ல் அவன் ஆட்சி முடிய, அவனது மகன் ஸ்ரீ மேகவண்ணன் ஆட்சியைக் கையில் எடுக்கின்றான். அவன் முடிசூடிக்கொண்ட செய்தியிலிருந்து சூளவம்சத்தின் முதல் அத்தியாயம் தொடங்குகிறது. அந்த காலகட்டத்தில் அனுராதபுரம் இலங்கை அரசின் தலைநகராக விளங்கியது. அப்போது தேரவாத பௌத்த சிந்தனைகளைக் கடைப்பிடிக்கும் மகாவிகாரை பிக்குகளும், மகாயான பௌத்த சிந்தனைகளைத் தொடரும் அபயகிரி விகாரை பிக்குகளும் இக்காலகட்டத்தில் சமநிலையில் இருந்திருக்கின்றன. பௌத்தத்தின் இந்த இரண்டு உட்பிரிவுகளும் பெருத்த வேறுபாடுகளுடனே அப்போது கடைப்பிடிக்கப்பட்ட நிலையும் தெரியவருகின்றது. இதில் மகாசேனன் மகாயான தத்துவத்தைக் கடைபிடித்தவன்.

மகாசேனுக்குப் பிறகு அவரது மகன் ஸ்ரீ மேகவண்ணன் மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். அவன் தனது தந்தை புறக்கணித்த தேரவாத பௌத்தத்தை முன்னெடுத்தான். அவனுக்கு அடுத்து ஜெட்டதீசன் கிபி 331 லிருந்து 339 வரை ஆட்சியில் இருந்தான். அவன் ஸ்ரீ மேகவண்ணனின் சகோதரனின் கடைசி மகன். ஒன்பது ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு தனது மகன் புத்ததாசனிடம் ஆட்சியை ஒப்படைத்து அவன் மரணமடைந்தான். அவனுக்குப் பின்னர் அவனது மகன் உபதேசன் ஆட்சியை எடுத்துக் கொண்டான். நல்ல குணங்கள் கொண்ட மன்னனாக இவன் விவரிக்கப்படுகின்றான்.

புத்ததாசனுக்குப் பின்னர் அவன் மகன் உபதேசன் அரியனை ஏறினான். உபதேசனின்  மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த அவனது தம்பி மகாநாமன் மன்னனைக் கொன்றுவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். இவனுக்கு இரண்டு மனைவியர்- ஒருவர் சிங்களப் பெண். மற்றொருவர் தமிழ் பெண். தமிழ் பெண்ணுக்குப் பிறந்த சொத்திசேனன் என்பவன் மகாநாமனின் இறப்புக்குப் பின்னர் ஆட்சியைக் கையில் எடுத்துக் கொண்டான். ஆனால் அன்று இரவே தனது தந்தையின் முதல் மனைவிக்குப் பிறந்த சிங்கள வம்சாவளிப் பெண் சம்ஹாவின்  காதலனால் கொல்லப்பட்டான். அவளது காதலன் அரசனானான். பின் அவனும் இறந்து போனான். பின் தாதுசேனன் என்பவன் ஆட்சிபீடத்தை ஏற்றான்.

அந்த சமயத்தில் தமிழகத்திலிருந்து படையுடன் வந்த பாண்டு என்ற தமிழ் மன்னன் இலங்கையில் போர் தொடுத்து  அனுராதபுரத்தை கைப்பற்றிக்கொண்டான். ஐந்து ஆண்டுகள் இந்த தமிழ் மன்னன் பாண்டுவின் கீழ் இலங்கை ஆட்சி இருந்தது. பாண்டு என்பது ஒரு பாண்டிய சிற்றரசனாக  இருக்க வேண்டும். அவன் ஐந்தாண்டுகளில் மரணமடைய அவனது மகன் பாரிந்தன் முடிசூடிக் கொண்டான். மூன்றாண்டுகளில் அவனும் மரணமடைந்தான்.  இந்தக் காலகட்டத்தில் தாதுசேனன்  பாண்டிய ஆட்சிக்கு எதிராக படை திரட்டிக் கொண்டு வந்து தாக்கினான். அதில் வெற்றியும் பெற்றான். இலங்கை முழுவதையும் கைப்பற்றி கொண்டு கிபி 459 லிருந்து 477 வரை மன்னனாக ஆட்சி செய்தான். இக்காலகட்டத்தில் நீர்ப்பாசன வசதிகளைச் செய்து இலங்கையில் விவசாயத்தைச் செழிக்க வைத்தான்.

அவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். முதலில் மகன் மொகல்லானன் பட்டத்துக்கு வந்தான். குடும்ப சண்டையினால் அவன் தப்பி ஓடவே இரண்டாவது மகன் காசியப்பன் மன்னனாக அரியணை ஏறினான். காசியப்பன் கி.பி 477 இலிருந்து கி.பி 495 வரை ஆட்சி செய்தான்.

முன்னர் தப்பி ஓடிய  மொகல்லானன்  பதினெட்டு வருடம் கழித்து இந்தியாவில் இருந்து ஒரு படையையும் சேர்த்துக் கொண்டு இலங்கை திரும்பினான். போர் நடைபெற்றது. அதில் காசியப்பன் கொல்லப்பட்டு மொகல்லானன்  அரியணை ஏறினான். அவனுக்குப் பின்னர் அவனது மகன் குமாரதத்துசேனன் என்பவன் மன்னனானான். அதன் பிறகு அவனது மகன் கீர்த்திசேனன் அரியணை அமர்ந்தான். அவன் ஒன்பது மாதத்தில் அவனது மாமன் சிவா என்பவனால் கொலை செய்யப்பட்டான். சிவாவின் ஆட்சியும் குறுகிய காலமே இருந்தது. இப்படியே செல்கிறது இலங்கை மன்னர்களின் அடுத்த இருநூறு ஆண்டு கால வரலாறு.

ஹத்ததாடன் என்பவன் கி.பி 659 இலிருந்து 667 வரை அரசனாக இருந்தான். அதன் பின்னர் மீண்டும் சில ஆண்டுகளில்  கலவரம்  ஏற்படவே, அதன் பின்னர் ஸ்ரீ சங்கபோதி கி.பி.667 லிருந்து 683 வரை ஆட்சி செய்தான். அப்போது இலங்கை முழுவதும் பௌத்த சமயம் பரவியிருந்தது. தமிழ் சேனாதிபதி ஒருவன் பௌத்த விகாரைக்கு மண்டபங்களை அமைத்து கொடுத்தமையையும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. ஸ்ரீ சங்கபோதி ஆட்சிக்காலத்தில் புலத்தி (பொலநறுவை) தலைநகரமாக விளங்கியது. ஸ்ரீ சங்கபோதியின் மறைவுக்குப் பிறகு பிரதம அமைச்சராக இருந்த பொத்தகுட்டன் என்ற தமிழ் அதிகாரி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். பின் அவனும் கொல்லப்பட்டான். அதன் பின்னர் மானவர்மன் அரியணை ஏறினான். மானவர்மன் சமகாலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த நரசிம்ம பல்லவ மன்னனுடன்  நெருக்கமான உறவு கொண்டவன். அது தொடர்பான செய்திகளை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

தொடரும்...

Suba

unread,
Apr 28, 2019, 10:14:46 AM4/28/19
to mintamil
*பகுதி 3  - தொடர்கின்றது.*

soolavamsam2.jpg

சூளவம்சம் - நூல் வாசிப்பு
நூலாசிரியர் - முனைவர்.க.குணராசா

பதிப்பு - கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்

மானவர்மனுக்கும் தமிழகத்தை ஆண்ட பல்லவ மன்னன் நரசிம்மனுக்கும் நல்ல நட்புறவு இருந்தது என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.  முதலாம் நரசிம்மவர்மன் முதலாம் மகேந்திரவர்மனின் மகன். இவனது ஆட்சிக்காலம் கிபி.630லிருந்து 668 வரையாகும். தனது தந்தை மகேந்திரவர்மப் பல்லவன் போலவே சிறப்புமிக்க கோயில்களைத் தமிழகத்தில் அமைத்தவன் என்பதோடு வாதாபியை ஆட்சி செய்துகொண்டிருந்த சாளுக்கியரோடு போரிட்டு வென்றவன் என்ற சிறப்பும் பெற்றவன்  பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மன்.

இந்த மானவர்மன் என்பவன் முன்னர் நான் குறிப்பிட்ட இலங்கை மன்னன்காசியப்பனின் மகன். அடைக்கலம் வேண்டி இந்தியாவிற்குத் தப்பி ஓடிவந்த மானவர்மன், பல்லவமன்னன் நரசிம்மனிடம் தஞ்சம் புகுந்தான். பல்லவ மன்னன் நரசிம்மன் மாவர்மனைத் தனது படை பிரிவுகளில் ஒன்றின் தளபதியாக நியமித்திருந்தான். மானவர்மன் திருமணம் முடித்து அவனுக்கு நான்கு புதல்வர்களும் இருந்தார்கள். பல்லவ மன்னன் நரசிம்மன்  மானவர்மனுடன் மிகுந்த நட்புறவில் இருந்தான். நரசிம்மனின் படையில் தலைமையேற்று ஒரு போரில் மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தான் மானவர்மன்.   வெற்றியை மானவர்மன் ஈட்டித் தந்ததமைக்குப் பரிசாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த நரசிம்மன், ஒரு படையினை இலங்கைக்கு அனுப்பி வைத்தான். மானவர்மனும் உடன் சென்றான். கடுமையான போர் நடந்தது.  ஆனால் வெற்றி பெற முடியாது தப்பியோடி மீண்டும் தமிழகம் வந்து சேர்ந்தான் மானவர்மன்.  நீண்ட காலம் கழித்து மீண்டும் பல்லவன் நரசிம்மன் மற்றொரு படையை ஏற்பாடு செய்து மானவர்மனை உடன் அனுப்பி   இலங்கையைக் கைப்பற்ற முயற்சி செய்தான்.  பல்லவ மன்னனின் கப்பற்படை இலங்கை நோக்கி சென்றது. மானவர்மனும் அப்படையில் இணைந்து சென்றான். பயங்கரமான போர் நடைபெற்றது. அதன் இறுதியில் மானவர்மனின் படை வெற்றி கண்டது. மானவர்மன் அனுராதபுரத்தின் மணிமுடியை அணிந்து கொண்டான். அதன் பின்னர் ஏறக்குறைய 35 ஆண்டுகள் மானவர்மன் தொடர்ந்து இலங்கை மன்னனாக ஆட்சி செய்தான். அவன் ஆட்சி காலத்தில் இலங்கையின் பல பௌத்த விகாரைகளைத் திருத்தி அமைத்ததோடு விவசாயத்திற்கு நீர்பாசன குளங்களையும் ஏரிகளையும் வெட்டி விவசாயத்தை வளர்ச்சியுறச் செய்தான்.

மானவர்மனின் மறைவிற்குப்  பிறகு அவனுடைய மகன் காசியப்பன்,   அவனுக்குப் பிறகு மகிந்தன் ஆகியோர் ஆட்சி செய்ததை சூளவம்சம் குறிப்பிடுகிறது.

மகிந்தன் மரணமடைந்தபோது அவனது மகன்  ஆட்சிப் பொறுப்பை எடுத்துக் கொண்டான். அடுத்த சில ஆண்டுகளில் மீண்டும் மாறி மாறி பல மன்னர்கள் தொடர்ச்சியாக இலங்கையின் ஆட்சி பீடத்தில் இருந்தார்கள். சேனன், உதயன், மகிந்தன்,  அக்கபோதி என தொடர்ச்சியாக வெவ்வேறு அரசர்களின் ஆட்சிக்கு உட்பட்டது இலங்கை.

அடுத்து சேனன் என்ற மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்த போது தமிழகத்தை ஆண்ட பாண்டிய மன்னன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன்  (கி.பி. 815-862) பெரும்படையுடன் இலங்கையைக் கைப்பற்றும் நோக்கத்துடன் வந்தான். இலங்கையின் வடபகுதி அனைத்தையும் வெற்றி கண்டு தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தான்  பாண்டிய மன்னன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன்.  இலங்கையின் வடபகுதியில் மகாதாலிதகமத்தில் பாசறை அமைத்தான். தமிழ் மக்கள் பலர் அவனது ஆட்சியின் கீழ் அரசியலில் இடம் பெற்றனர். அதனால் பாண்டிய மன்னனின் படை பலம் பொருந்தியதாக ஆகியது.  அதே வேளை இலங்கையின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் இலங்கை மன்னர்களின் ஆட்சி தொடர்ந்தது. சேனன் அப்போது நடந்த போரில் தோல்வி கண்டு மலையகத்திற்குத் தப்பி ஓடினான்.

பாண்டிய மன்னனின் படை படிப்படியாக அனுராதபுரத்தைக் கைப்பற்றிக் கொண்டது. பாண்டிய மன்னனின் படை அரண்மனையில் இருந்த எல்லா செல்வங்களையும் சூறையாடியதோடு, விகாரைகளில் இருந்த தங்கத்தினாலான புத்தரின் சிலைகளையும், செல்வங்களையும் சூறையாடி எடுத்துக்கொண்டது. தங்க நகைகள், வைரங்கள் தூபராமசேத்தியத்தின் பொன் கூரை, பௌத்த சமய சின்னங்கள் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு தமிழகம் திரும்பியது பாண்டியனின் படைகள். இதனால் மனம் வருந்திய சேனன்,  தான் பாண்டிய மன்னனுக்குக் கீழ் திறைதரும் மன்னனாக இருக்க சம்மதித்துஇரண்டு யானை அம்பாரிகளில் பல பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்தான். பாண்டிய மன்னனும் இதனை ஏற்றுக்கொண்டு  சேனனை இலங்கையின்  திறை செலுத்தும் மன்னனாக  இருக்கச் சம்மதித்து,  ஆட்சியையும் கொடுக்கச்  சம்மதித்தான். சேனனின் ஆட்சி இலங்கையில் தொடர்ந்தது.

சேனன் மரணமடைந்ததும் அடுத்ததா, சேனன் என்ற மற்றொருவன் கிபி 853 லிருந்து 887 வரை இலங்கை மன்னனாக ஆட்சி செய்தான். அவன் காலத்தில் பாண்டிய மன்னர்களை பழி வாங்குவதற்காக திட்டமிட்டான். அப்போது தமிழகத்தில்  ஆட்சியில் இருந்த ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் பாண்டியனுக்கு எதிராக செயல்பட்ட அவனது மகனான வரகுணபாண்டியன் தந்தைக்கு எதிராக கலகம் செய்து புகலிடம் தேடி இலங்கைக்கு சேனனிடம் வந்து அடைக்கலம் புகுந்தான். அதுவே நல்ல சமயம் என திட்டமிட்ட சேனன், தனது சேனாதிபதியை அழைத்து பாண்டி நாட்டின் மீது படையெடுத்துச் சென்று பாண்டிய மன்னனைக் கொன்று வரகுனை சிம்மாசனத்தில் அமர்த்துமாறு தனது படையினருக்குக் கட்டளையிட்டான்.

கடும் யுத்தம் நடந்தது. பாண்டியமன்னன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் போரில் கொல்லப்பட்டான். வரகுணனை பாண்டிய மன்னனாக முடிசூட்டி விட்டு இலங்கைக்கு படை திரும்பியது. ஆனாலும் படையைச் சார்ந்த தளபதிகள்  சிலர் தமிழகத்தின் ராமநாதபுரம் பகுதிகளில் தொடர்ந்து தங்கியிருந்தார்கள் என்றும் தெரிகிறது.  பாண்டியர்கள் இலங்கையிலிருந்து சூறையாடிச் சென்ற தங்க புத்தர் சிலைகளை மீண்டும் தமிழகத்தில் இருந்து கொண்டு வந்து ஆலயங்களில் நிறுவினான் மன்னன் சேனன். இவன் தொடர்ந்து  மன்னனாக இலங்கையில் ஆட்சியில் இருந்தான். அதன் பின்னர் உதயன் என்பவன், காசியப்பன் என்பவன் என இலங்கை ஆட்சி தொடர்ந்தது.

அடுத்து தப்புலன் அரசனாக முடிசூட்டிக் கொண்டான். இவனது காலம் கிபி 924 லிருந்து 935 வரை. அதே சமயத்தில் தமிழகத்தில் பாண்டிய மன்னன் இரண்டாம் இராஜசிங்கன் சோழர்களால் விரட்டப்பட்டு இலங்கைக்கு வந்து சரண் அடைந்தான். தப்புலன் பாண்டியனுக்கு   உதவி செய்ய நினைத்தாலும் அவனது அரசின் அதிகாரிகள் இதற்கு இணங்கவில்லை. ஆகையால் பாண்டிய மன்னன் தனது  சிம்மாசனம் மற்றும் சில அரச முத்திரை சின்னங்களையும் மன்னனிடம் பாதுகாப்பாக ஒப்படைத்துவிட்டு சேர நாட்டிற்குச் சென்று தஞ்சமடைந்தான்.

சேனனுக்குப் பிறகு உதயன் என்பவன் மன்னனானான். அவனுக்குப் பின் மேலும் சேனன் என்னும் மற்றொருவன் மன்னனானான். இவனது காலம் கிபி 956 லிருந்து 972 வரை. இவன் கலிங்கத்து  இளவரசி ஒருத்தியை திருமணம் செய்து கொண்டான்.

சூளவம்சம் குறிப்பிடும் செய்திகளைக் காணும், போது பாண்டிய மன்னர்களின் அரச சின்னங்கள் குறிப்பிட்ட சில ஆண்டுகள் இலங்கையில் இருந்ததை உறுதி செய்வதாகவே அமைகின்றது. அதுமட்டுமின்றி, சோழ மன்னர்கள் தமிழகத்தில் பலம் பெற்ற போது அதன் தாக்கம் இலங்கையிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. இதனைப் பற்றி அடுத்து காண்போம்.!

தொடரும்.
-சுபா

Dr.K.Subashini

unread,
Feb 15, 2020, 2:04:44 PM2/15/20
to மின்தமிழ்


நூல் விமர்சனம்

நூல்:கண்ணகி கோவிலும் வைகைப் பெருவெளியும்

ஆசிரியர்: பாவெல் பாரதி

பதிப்பகம்: கருத்து=பட்டறை, மதுரை


kannagi map1.jpg


86395370_2658826367694077_5272875033688014848_o.jpg





தமிழ் பண்பாட்டில் முக்கியத்துவம் பெறும் தொன்மை வழிபாட்டில் கண்ணகி வழிபாடு மிக முக்கியத்துவம் பெறும் ஒன்று. தாய் தெய்வ வழிபாட்டையே தங்கள் பண்டைய வழிபாட்டு நெறியாகக் கொண்டிருந்த தமிழ் மக்களின் வாழ்வியல் நெறியில் கொற்றவை, காளி, மற்றும் கேரளத்தில் முக்கியத்துவம் பெறும் பகவதி அம்மன், ஈழத்தில் முக்கியத்துவம் பெறும் கண்ணகை வழிபாடு என்பவை தாய்தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியைச் சான்று பகர்கின்றன. கண்ணகி இலக்கியத்தின் ஊடாக நமக்கு அறிமுகம் பெறுவது சிலப்பதிகாரத்தின் வழியாக என்றாலும்கூட, வாய்மொழி இலக்கியங்கள் என்ற அடிப்படையில் நாட்டார் இலக்கியங்களாகும் கண்ணகியின் கதை தமிழ் சமூகத்தில் ஊடுருவி ஆழப் புதைந்துள்ளது. கண்ணகியின் வாழ்க்கையின் வெவ்வேறு படிநிலைகளை விவரிக்கும் பல்வேறு நூல்கள் வந்திருக்கும் சூழலில், மதுரை மாநகரில் கொலையுண்ட தன் கணவனுக்காகப் பாண்டிய மன்னனின் அவையில் நீதி கேட்டு, பின்னர் தன் கோபம் குறையாது நகரத்தை எரித்து, அங்கிருந்து புறப்பட்டு 14 நாட்கள் கடந்து ஒரு குன்றுப் பகுதிக்கு வந்து கண்ணகி தன் உயிர் நீத்த பகுதி எது, என்பதை ஆராயும் வகையில் வெளிவந்திருக்கும் நூல் ஆய்வாளர் பாவெல் பாரதி எழுதியிருக்கும் "கண்ணகி கோவில் வைகை பெருவெளியும்".


நூலின் முதல் பகுதி, சிலப்பதிகாரத்தின் மதுரை காண்டம் கூறும் 'நெடுவேள் குன்றம்' என்பது எங்கு உள்ளது, என்பதை ஆராய்கின்றது. நூலாசிரியர் இத்துறையில் இதுகாறும் முன்னோடிகளாக ஆய்வுசெய்த தொ.மு. சி.ரகுநாதன், இராகவையங்கார், கே முத்தையா, புலவர் சி கோவிந்தராசன் போன்றோரது ஆய்வுகளை ஆய்ந்து அலசி தனது கருத்துக்களையும் சேர்த்து 'நெடுவேள் குன்றம்' எங்கு இருக்கின்றது என்பதை தனது களப்பணிகளின் வழியாகவும், நூலாய்வுகளின் துணையுடனும் உறுதி செய்கிறார்.

நூலின் இரண்டாவது பகுதியானது, முதல் பகுதியில் உறுதி செய்யப்பட்ட நெடுவேள் குன்றத்தில் உள்ள மங்கலாதேவி கோட்டத்தை ஆராய்கிறது. தேனி மாவட்டம், கூடலூர் அருகே வனப்பகுதியில் கேரளாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் எல்லையில் அமைந்திருக்கும் வேங்கை கானல் மலைமுகட்டில் உள்ள மங்கலதேவி கோட்டமே 'கண்ணகி கோட்டம்' என்பதை குறிப்பிட்டு, சிதிலமடைந்திருக்கும் இக்கோவிலில் உள்ள 9 கல்வெட்டுகளைப் பற்றிய தகவல்களைக் கூறுகிறது.


இந்தக் கோவிலில் இரண்டடி உயரம் உள்ள பெண் தெய்வச் சிலை ஒன்று கிடைத்ததாகவும், ஆனால் தற்சமயம் இந்தச் சிலை அங்கு இல்லை என்ற செய்தியையும் நூலாசிரியர் பதிகின்றார். இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கும் ஒரு செய்தியாகும்.


இக்கோயில் கல்வெட்டுக்கள் இராசராச சோழன் காலத்திலும், பின்னர் பாண்டிய மன்னன் ஸ்ரீ குலசேகர பாண்டியன் காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட போது செதுக்கப்பட்ட கல்வெட்டுகளாகும். இந்தக் கல்வெட்டுகள் மங்கல மடந்தை கண்ணகியை 'ஸ்ரீ பூரணி' என்று குறிப்பிடுகின்றன என்பதைக் காணும்போது, வைதீக சமயத்தின் தாக்கம் இக்காலகட்டத்தில் வழக்கிலிருந்தமையினால் தமிழ் பெயரிலிருந்து சமஸ்கிருத பெயருக்குக் கண்ணகி தெய்வத்தின் பெயர் மாறிய நிலையைக் காண முடிகிறது.


தமிழகத்தில் தோன்றி நிலைபெற்ற கண்ணகி வழிபாடு இலங்கையில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் முக்கியத்துவம் பெறும் வழிபாடாக அமைந்திருக்கின்றது. இலங்கை மலையகப் பகுதிகளிலும் கண்ணகி கூத்து வழக்கிலுள்ளது. யாழ்ப்பாணத்தில் மட்டும் கண்ணகிக்கு 75 கோயில்களும், மட்டக்களப்பில் 30 கோயில்களும் உள்ளன என்பதை நூலாசிரியர் குறிப்பிடுகிறார். தமிழ் மரபு அறக்கட்டளையின் அண்மைய பதிவான தொல்லியல் அறிஞர் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுப் புலத்தின் தலைவர் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களது கண்ணகி தொன்மம் பற்றிய பேட்டியில், கண்ணகி வழிபாடு இலங்கையில் பெறுகின்ற முக்கியத்துவம் பற்றி அவரது விளக்கங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை.


நூலின் மூன்றாவது பகுதி முக்கியத்துவம் பெறுகிறது. இப்பகுதியில் நூலாசிரியர் மதுரையில் தொடங்கி, நெடுவேள் குன்றம் வரை காணப்படும் கண்ணகி தொன்மத்தின் தடயங்களை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு அவை ஒவ்வொன்றையும் விரிவாக விளக்குகின்றார். செல்லத்தம்மன் கோயில் கண்ணகி சிலை, கோவலன் கொலையுண்டதாகக் கருதப்படும் கோவலன் பொட்டல் மேடு, விராட்டிபத்து திரும்பிப்பார்த்த அம்மன் கோயில், குன்னுவரன்கோட்டை கண்ணகி பாலம், குள்ளப்புரம் மருத காளி கோயில், கம்பம் சாமுண்டிபுரம் சாமுண்டி அம்மன் கோயில் என ஒவ்வொன்றும் கண்ணகியின் துன்பத்திற்குச் சான்று பகரும் அடையாளங்களாக அமைந்திருப்பதை ஆசிரியரின் விரிவான விளக்கம் உறுதி செய்கிறது.


பழந்தமிழர்களின் தாய்த் தெய்வக் கோயில்களான அம்மன் கோயில்கள் மிகப் பெரும்பாலும் வடக்கு நோக்கியே அமைந்திருப்பதன் காரணம், தமிழகம் முப்புறமும் கடல் சூழ்ந்த நாடாகவே இருக்கும் சூழலில், எதிரிகளின் படைகள் வட திசையிலிருந்து மட்டுமே வர முடியும் என்பதால், காக்கும் தெய்வமாகிய கொற்றவை தன் மக்களைக் காக்க ஆயுதம் ஏந்தி வடதிசை நோக்கி நிற்கும் வகையில் கோயில்கள் கட்டப்பட்டன என்ற செய்தியை நூல் பதிகின்றது.


கண்ணகி, வைகையின் வடகரை ஓரமாகவே 14 நாட்கள் நடந்து சென்று தன் உயிரை நீத்தார் என்பதைக் கூறும் வகையில் வைகை நதியின் சிற்றூர்கள் ஒவ்வொன்றின் பெயர்களும் நூலில் குறிப்பிடப்படுகின்றன.


நூலின் நான்காம் பகுதி நாட்டார் கதை மரபில் கண்ணகி தொன்மம் வெவ்வேறு கதை படிமங்களாக உருமாற்றம் பெற்றிருக்கும் செய்தியைக் கூறுகிறது. இதே பகுதி கண்ணகிக்கு வடமொழி மூலத்தைக் கற்பிக்க 'திருமாவுண்ணி' என வலம்வரும் திரிபை பற்றியும், ஈழத்தில் கண்ணகி 'கண்ணகை அம்மன்' என்று அழைக்கப்படுகின்றார் என்பதையும் குறிப்பிடுகிறது. தமிழகத்தில் வழக்கிலுள்ள கண்ணகி தொன்மம் பற்றிய சில கதைகளை நூலாசிரியர் இந்த நூலில் இணைத்திருக்கிறார். நாட்டார் மரபில் உள்ள செய்திகள் நூல் வடிவில் இதில் ஆவணப்படுத்தப்பட்டிருப்பது பாராட்டுதற்குரியது.


நூலின் இறுதிப் பகுதியில் மதுரையிலிருந்து நெடுவேள் குன்றம் கண்ணகி கோயில் வரை கண்ணகி 14 நாட்கள் நடந்து சென்ற பாதையாக அறியப்படும் வைகை நதிக்கரை சிற்றூர்களை வரைபடத்தின் வழியாக ஆசிரியர் காட்டுகின்றார். இது வரவேற்கத்தக்க ஒரு முயற்சி.


ஆய்வுத் தரம்வாய்ந்த இந்த நூலில் நூலாசிரியர் சான்றுகளைக்குறிப்பிடும் நூலின் ஒவ்வொரு பகுதியிலும் சான்றுகளைக் குறிப்பிடும்போது ஆய்வில் தான் துணைக்குறிப்புக்குப் பயன்படுத்திய நூல்களில் பெயர்களைக் குறிப்பிட்டு , பக்கங்களையும் குறிப்பிட்டு, ஒவ்வொரு பக்கங்களிலும் பின்குறிப்பு (Footnote)சேர்த்திருந்தால் நூலுக்கு ஆய்வுத்தரம் மிகுந்து சிறப்புக் கூட்டி இருக்கும். அடுத்த பதிப்பில் நூலாசிரியர் இதனைக் கவனத்தில் கொள்வார் என எதிர்பார்க்கிறேன்.


மிகுந்த ஆய்வுக் கண்ணோட்டத்துடன் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு நூல் வடிவம் பெற்றிருக்கிறது. தமிழக தொல்லியல் அறிஞர் முனைவர் சாந்தலிங்கம் அவர்களின் முன்னுரை நூலுக்கு வழிகாட்டுகிறது. வைகைக்கரை நாகரீகம் தமிழர் நாகரிகத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொள்ளப்படும் இக்காலகட்டத்தில் கண்ணகி பயணித்த நெடுவழிப் பாதையை ஆராயும் இந்த நூல் ஒரு நல்வரவு. நூலாசிரியருக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.


-முனைவர்.க.சுபாஷிணி

Suba

unread,
Mar 22, 2020, 6:05:29 PM3/22/20
to மின்தமிழ், Subashini Kanagasundaram

*கடாரம் - நூல் விமர்சனம்*

90356740_2687940791449301_147497569310736384_o.jpg

கிழக்காசிய நாடுகளின் பண்டைய வரலாறுகள் பற்றிய கலந்துரையாடல்களும் ஆய்வுகளும் மிகக் குறைவாக அங்கொன்றும் இங்கொன்றுமாகவே அமைகின்றன. தமிழ் வரலாற்று ஆய்வாளர்களின் கவனச்சூழலும் பெரும்பாலும் தமிழக நிலப்பரப்பு சார்ந்தவகையில் மைய ஆய்வுப் பொருளாக அமைந்து விடுவதும், சில விதிவிலக்குகளாக அவ்வப்போது இலங்கை பற்றிய பண்டைய வரலாற்றுச் செய்திகளை ஆராய்வதுமாகவே உள்ளது. இதனைத் தாண்டி அவ்வப்போது கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம், லாவோஸ், கம்போடியா, பர்மா அடங்கிய பகுதிகளில் கடந்த நூற்றாண்டுகளின் வரலாற்று நிகழ்ச்சிகளைப் பற்றிய கலந்துரையாடல்கள் மிக மிகக் குறைவாகத்தான் இருக்கின்றன.


ஐசிங் போன்ற பண்டைய சீன வணிகர்களின் குறிப்புக்களும், தாலாங்துவோ (Talang Tuo) போன்ற கல்வெடுக்களும், தற்காலத்தில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை ஆய்வுகளும், அண்மைய கால கம்போடிய அகழ்வாய்வுகளும் இத்துறைக்கு ஓரளவேனும் வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றன. மறைந்த மலேசிய மருத்துவர் மற்றும் வரலாற்று ஆய்வாளரான டாக்டர் ஜெயபாரதி அவர்கள் தொடர்ச்சியாக கிழக்காசிய நாடுகள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு அவ்வப்போது நல்ல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதிக் கொண்டிருந்தார். இந்தோனேசியாவில் பிறந்தவர் என்பதோடு மலேசியச் சூழலில் இருந்தமையினால் அவரது ஆய்வுகள் கிழக்காசிய நாடுகளில் பண்டைய வரலாற்றுத் தகவல்களையும் ஆராயும் வகையில் அமைந்திருந்தது. இதைத் தவிர அவ்வப்போது அங்கொன்றும் இங்கொன்றுமென பேசப்பட்ட கிழக்காசிய நாடுகளின் பண்டைய வரலாற்று செய்திகளும் உள்ளூர் எழுத்தாளர்களின் கதைகளும் மட்டுமே இப்பகுதிகளிலும் பண்டைய காலத்தில் பலம் பொருந்திய பேரரசுகள் ஆட்சி செய்தன என்பதை நமக்கு அவ்வப்போது நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய முயற்சிகளில் ஒன்றாக எழுத்தாளர் மாயா என்ற மலர்விழி பாஸ்கரன் எழுதி 2017 ஆம் ஆண்டு வெளிவந்த கடாரம் என்ற நூல் அமைகின்றது.


700 பக்கங்கள்; 49 பகுதிகள்; கூடுதலாக ஒரு சிறப்புப் பகுதியாகச் சோழப்பேரரசன் இராஜேந்திரனின் மெய்க்கீர்த்தி இணைக்கப்பட்டு, பண்டைய கிழக்காசியாவின் பெயர்கள் தமிழில் வழங்கப்பட்ட ஒரு வரைபடமும் இணைக்கப்பட்டு இந்த வரலாற்று நாவல் அமைந்திருக்கின்றது.


இன்றைய மலேசியச் சூழலில் மலாயாவின் பண்டைய சிறப்பு என்பது கிபி 15ஆம் நூற்றாண்டில் மலாக்காவில் எழுச்சி பெற்ற மலாய் அரசினை தொடங்கிய பரமேசுவரா அல்லது மன்னர் இஸ்கந்தர் ஷா ஆட்சிக் காலத்திலிருந்து தொடங்குவதாகவே பெரும்பாலும் பேசப்படுகின்றது என்பதோடு பள்ளிக்கூட பாட நூல்களிலும் பாடமாக உள்ளது. ஆயினும் இன்றைய மலேசியாவின் வடபகுதி கெடா மாநிலத்தில் ஆங்கிலேயக் காலனித்துவ ஆதிக்கத்தின் போது நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட சான்றுகளின் படியும், இன்றைய பேராக் மாநிலத்தில் செய்யப்பட்ட அகழாய்வுகளின் போது கண்டெடுக்கப்பட்ட வரலாற்று தொல்லியல் சான்றுகளின் அடிப்படையிலும் இப்பகுதிகளில் ஆட்சிசெய்த ஸ்ரீ விஜய, லங்காசுக்கா, கங்கா நெகாரா, போன்ற பண்டைய அரசுகள் பற்றிய செய்திகள் கிடைக்கத் தொடங்கின. இவை மட்டுமன்றி இன்றைய தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பல்லவ கிரந்த கல்வெட்டுக்களும், தமிழ் கல்வெட்டுக்களும் இங்கு முன்னர் ஆட்சிசெய்த பண்டைய அரசுகளின் வரலாற்றுச் செய்திகளை வழங்கும் முக்கிய சான்றுகளாக அமைந்திருக்கின்றன. இதுவரை கிடைக்கப்பட்ட கல்வெட்டுச் சான்றுகளும் கோயில் கட்டுமானங்களில் சிதைந்த சில பகுதிகளும் ஓரளவு இப்பகுதிகளின் வரலாற்றினை ஊகிக்கத்தக்கனவாக இருந்தாலும் அவை இன்றளவும் வரலார்றுச் சான்றுகளால் நிரப்பப்படவேண்டிய இடைவெளிகள் நிறையவே இருக்கின்றன என்பதை நமக்குக் காட்டிக் கொண்டே இருக்கின்றன. இந்த இடைவெளிகளை நிரப்புவதற்கு மேன்மேலும் பல அகழ்வாராய்ச்சிகள் கிழக்காசிய நாடுகளில் செய்யப்படவேண்டிய தேவை உள்ளது. எது எப்படியாகினும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும், தமிழ் நிலத்தை ஆட்சி செய்த பண்டைய பேரரசுகளுக்கும், கிழக்காசிய நாடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.


மலர்விழி பாஸ்கரனின் இந்தக் கடாரம் என்ற நூல் மாமன்னன் ராஜேந்திர சோழனின் கடற்படை கடாரத்தை நோக்கி மேற்கொண்ட போர் சூழலை விளக்கும் ஒரு முயற்சி. மிக நுணுக்கமான செய்திகள் பலவற்றைச் சேகரித்து அவற்றைக் கற்பனையுடன் கலந்து இந்த நூலில் மிகச் சுவாரசியமாக இவர் வழங்கி இருக்கின்றார். ஸ்ரீவிஜய பேரரசு, மாமன்னன் முதலாம் ராஜராஜன் காலத்தில் சோழப் பேரரசுடன் நல்ல நட்புறவுடன் இருந்தது என்பதற்குச் சான்றாகத் தஞ்சாவூர் பெரிய கோயில் கல்வெட்டுக்கள் சான்று பகர்கின்றன. அந்த நட்பிற்கு இலக்கணமாக நாகையில் கட்டப்பட்ட புத்த விகாரை இருந்தது. ஆனால் நமது துர்பலன்; வணிகம் செய்ய வந்து நாகையில் காலூன்றிய டச்சுக்காரர்களால் அது கடந்த இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு சிதைக்கப்பட்டது.

வணிக நட்பு நிலைத்திருந்த மாமன்னன் ராஜராஜன் காலத்திலிருந்த அந்த நிலை மாறி, கடல் கடந்து போர் செய்யத்தூண்டிய பகை உணர்வு எதனால் ஏற்பட்டது என்பது வரலாற்று ஆய்வாளர்கள் சிந்தனையில் இருக்கும் ஒரு முக்கியக் கேள்வியே. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மிக முக்கியமான நிலப்பகுதியாக புவியியல் ரீதியில் அமைந்திருக்கும் பகுதிதான் இன்றைய மலேசியா மற்றும் இந்தோனேசியா என்று சொல்லப்படுகின்ற அன்றைய ஸ்ரீவிஜய அரசு. இந்த ஸ்ரீவிஜய அரசு என்பது பௌத்த மதம் தழுவிய மலாய் மன்னர்கள் ஆட்சி செய்த ஒரு பேரரசு. கிபி ஏழாம் நூற்றாண்டின் இறுதி தொடங்கி ராஜேந்திரனின் கடற்படை கடாரத்தைக் கைப்பற்றும் வரை இப்பகுதியில் நீண்டகாலம் ஆட்சிசெய்த சிறப்புப் பெற்றது இந்த ஸ்ரீவிஜய பேரரசு.

இந்த நாவலில் ஆசிரியரின் சொல்வளமும் வரலாற்றுப் பின்னணியுடன் கதையைக் கொண்டு செல்லும் பாங்கும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றது. இந்த நாவலில் குறிப்பிடப்படும் கப்பல்களில் தான் எத்தனை விதமான கப்பல்கள்..! தமிழர்களின் கடல் வணிகமும் கடலை ஆட்சி செய்யும் திறனும் கிரேக்கர்களும் ரோமானியர்களும் அரேபியர்களும் அறிந்து தங்கள் குறிப்புக்களில் எழுதி வைத்த ஒன்று தானே.


மலேசியாவின் வடக்குப் பகுதி மாநிலங்களான பெர்லிஸ், கெடா போன்ற மாநிலங்களும், தக்கோலம் என நூலாசிரியர் சுட்டிக்காட்டும் இன்றைய தாய்லாந்து பகுதிகளும் இயற்கை எழில் சூழ்ந்த பகுதி தான். இன்றும் அதில் மாற்றமில்லை. அடர்ந்த காடுகளும், அருவிகளும், நீரூற்றுகளும், நதிகளும் என இன்றும் கூட மலேசியாவின் இந்தப் பகுதி அதன் இயற்கை வளத்திற்கு சற்றும் குறையவில்லை. நாவலில் ஆங்காங்கே ஆசிரியர் இந்த இயற்கை எழிலை நம் கண்முன்னே சாட்சியாக கொண்டுவந்து காட்டுவதில் வெற்றி பெறுகின்றார்.


நாவலில் கூடுதலாக மலாய் பெண்களுக்கே உள்ள கூடுதல் சிறப்பு அம்சமான துணிவையும், வணிகத் தொழில் ஈடுபாட்டையும் தற்காப்புக் கலையில் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் கொண்டுசெல்வது மலேசிய மக்களின் இயல்பான பண்பாட்டினை அறிந்து இந்த நாவலை அவர் விவரித்திருப்பதை உறுதி செய்கிறது.

வரலாற்று நாவல்கள் எழுதும்போது வரலாற்றுச் சான்றுகளும் அனுபவங்களும் அந்த நாவல் உயிரோட்டத்துடன் அமைவதற்கு உறுதியளிக்கும். இந்த நாவல் உருவாக்கத்திற்காக நூலாசிரியர் மாயா விரிவான களப்பணியும் செய்திருக்கின்றார் என்பதை மலேசிய நாட்டில் பிறந்து வளர்ந்த என்னால் இந்த நாவலின் வழியே பயணிக்கும் போது உணரமுடிகின்றது.

சோழர்கள் சிறந்தவர்களா ஸ்ரீவிஜய மன்னர் பரம்பரையினர் சிறந்தவர்களா என்ற கேள்விக்கே இடமில்லாமல் நாவல் முழுவதும் நடுநிலையோடு கதைக்களம் நகர்கின்றது. ஒவ்வொரு பகுதியும் நிறைவுறும் போது அடுத்து என்ன, என்ற கேள்வி நம்மைத் துரத்துகிறது. இதுவே நாவலை விரைந்து வாசிக்க வைக்கின்றது. ஒரு த்ரில்லர் படம் பார்ப்பது போல ஒரு அனுபவம்.

பண்டைய தமிழக வரலாற்றை ஆராயும்போது தமிழர்களின் வணிகத்தையும் அந்த வணிகத்தைச் சாத்தியப்படுத்திய கடற்பயணங்களையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது. வணிக முயற்சிகளும் அரசும் அரசியலும் சேர்ந்தே இணைந்து பயணிப்பவை. இது பண்டைய காலத்திற்குப் பொருந்தும் ஒன்று மட்டுமல்ல. இன்றும் அரசுகளை பின்னிருந்து வழிநடத்துவது வணிகம் தானே. கடற்கொள்ளையர்கள் இப்பகுதியில் இருந்தனர், இப்பகுதியில் நிகழ்ந்த வணிகங்களில் பலத்த இடையூருகளைச் செய்தனர் என்ற மலாய் வரலாற்றுச் செய்திகளையும் உள்வாங்கிக் கொண்டு கதை சம்பவங்களில் கடற்கொள்ளையர்களைப் பற்றியும் புகுத்தத் தவரவில்லை.இந்த நாவல் சோழர் காலத்தில் வணிக அமைப்புகள் இயங்கிய தன்மையையும் அவற்றின் பலத்தையும், எந்தெந்த வகையில் அவை அரசுகளோடு இணைந்து செயல்பட்டன என்பதையும் வாசகர்களுக்கு மிக அழகாகக் காட்டிச் செல்கிறது. நாவலின் சிறப்பாக இதனை நான் காண்கின்றேன்.


நாவலினூடே பயணிக்கும்போது நான் பிறந்து வளர்ந்து கல்வி கற்று பணியாற்றிய மலேசியாவின் பல பகுதிகள் மனக்காட்சியில் வந்து செல்கின்றன; நேரில் சென்று பார்த்து வந்த தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளும் மனக்கண்ணில் விரிகின்றன. தனிப்பட்ட வகையில் எனக்கு ஸ்ரீ விஜயா லங்கா சுக்கா, கமெர் ஆகிய பேரரசுகளின் வரலாற்றில் ஆழமான விருப்பம் இருப்பதாலும் இந்த நூல் என் மனதைக் கவர்வதாக அமைகின்றது.


நூலாசிரியர் மாயா என்ற மலர்விழி பாஸ்கரன் கிழக்காசிய நாடுகளைப் பற்றிய ஆய்வுப் பணியில் தன்னை மேலும் தீவிரத்துடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். சிறந்த எழுத்தாளுமையும், சொல் வளமும், கற்பனைத் திறனும் இவருக்கு இருக்கின்ற பலம்.


தமிழக பல்கலைக்கழகங்களின் வரலாற்று புலனங்களின் ஆய்வு மாணவர்கள் கிழக்காசிய பண்டைய வரலாற்று ஆய்வின் பால் தங்கள் கவனத்தைச் செலுத்தி இந்த நாடுகளுடன் இணைந்த வகையிலான அகழாய்வுப் பணிகளையும் முன்னெடுக்க வேண்டும். இத்தகைய முயற்சிகள் தமிழ் மக்களுக்கும் தமிழ் நிலத்திற்கும் ஏனைய கிழக்காசிய நாடுகளுக்குமான நீண்ட நெடிய தொடர்புகளுக்குச் சான்று தந்து கிழக்காசிய நாடுகளின் பண்டைய வரலாற்றில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்கு நிச்சயம் உதவும்.


கங்கை கொண்ட சோழன் கடாரம் கொண்டான் என்று வரலாற்றில் சிறப்பிடம் பெற வைத்த வரலாற்று நிகழ்வினை தன் கற்பனைக்கூறுகளையும் சேர்த்து நாவலாக்கித் தந்திருக்கும் மலர்விழி பாஸ்கரனுக்குப் பாராடுக்கள்.


-சுபா

  
90356740_2687940791449301_147497569310736384_o.jpg

Suba

unread,
Mar 30, 2020, 6:15:43 AM3/30/20
to மின்தமிழ், Subashini Kanagasundaram
 நூல் விமர்சனம் - ராகுல் சாங்கிருத்யாயன்  
ragul.jpg


 சில ஆண்டுகளுக்கு முன்னர் வால்காவிலிருந்து கங்கை வரை நூலை வாசித்தபோது மிகப்பெரிய பிரமிப்பு. எப்படி இந்த நூலாசிரியரால் இவ்வளவு செய்திகளை இவ்வளவு சுவாரசியமாகத் தர முடிகிறது என்ற வியப்பு அது. நான் மிக அண்மையில் வாசித்த நூல் அதே நூலாசிரியர் எழுதிய மற்றுமொரு நூல் `ஊர்சுற்றிப் புராணம்`. என்னுடைய ஆழ்மனதின் ஆர்வத்தோடு இணைந்து செல்வதால் இந்த நூலாசிரியரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்று தேடியதில் ஒரு நூல் கிடைத்தது.

ராகுல் சாங்கிருத்யாயன் - சாகித்ய அகாதமி வெளியீடாக பிரபாகர் மாச்வே என்பவரால் ஆங்கில மொழியில் எழுதப்பட்டு 1986ஆம் ஆண்டு வெளியீடு கண்டது இந்த நூல். இதனைத் தமிழாக்கம் செய்து திரு.வல்லிக்கண்ணன் தமிழ் வாசகர்களுக்காக வழங்கியிருக்கின்றார்.

இந்த நூலில் ஐந்து பகுதிகள் இருக்கின்றன. முதலில் வருவது ராகுல் சாங்கிருத்யாயன் பற்றிய ஒரு அறிமுகம். இது ஆரம்பம் தொடங்கி இறுதிவரை அவரது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை மட்டும் மையப்படுத்தி அவரது சிறப்புத் தன்மையை வெளிப்படுத்தி விவரிக்கும் ஒரு பகுதி. இரண்டாம் பகுதி வாழ்க்கை என்ற தலைப்பில் பண்டிதர் ராகுல் சாங்கிருத்யாயனின் வாழ்க்கை குறிப்பாகவும் அவரது கல்வித் தேடல், அவர் செய்துகொண்ட பெயர் மாற்றங்கள் அப்போதைய நிகழ்வுகள், திருமணம், வாழ்க்கைத் துணை பற்றிய செய்திகள், மற்றும் விரிவான அவரது பயணங்கள், திபெத், ரஷ்யா, இலங்கை, ஆகிய நாடுகளில் அவர் நீண்ட காலம் தங்கியிருந்து பணியாற்றிய அல்லது ஈடுபாடு கொண்ட செயல்பாடுகளைப் பற்றி விவரிக்கும் பகுதி.

மூன்றாவதாக வருவது படைப்புகள் என்னும் பகுதி. ராகுல் சாங்கிருத்யாயன் ஒரு துறையில் மட்டுமே திறன் பெற்றவர் அல்ல. பல துறைகளில் ஈடுபாடு கொண்டு, அதிலும் குறிப்பாக, ஆழமான ஈடுபாடு கொண்டு வெவ்வேறு துறைகளைப் பற்றி தனது ஆய்வுகளையும் சுய அனுபவங்களையும் கருத்துக்களையும் அவர் நூலாக வடித்திருக்கிறார். அந்த வகையில் இந்தப் பகுதியில் அவரது எழுத்தாக்கத்தில் வெளிவந்த கற்பனை படைப்புகள், வாழ்க்கை வரலாறு - சுயசரிதை, பயண விவரிப்புகள் அல்லது பயணக்குறிப்புகள் என்ற வகையிலான செய்திகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதற்கு அடுத்து வருவது நான்காவது பகுதி. இது அவரது இலக்கிய சாதனைகளை விவரிக்கும் ஒரு பகுதி. இன. மத பேதமற்று. அறிவு ஒன்றை மட்டுமே தேடுவதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர் ராகுல் சாங்கிருத்தியாயன் என்கின்றார் நூலாசிரியர். இந்தப் பகுதியில் அவரது முக்கிய நண்பர்களைப் பற்றிய தகவல்களை நூலாசிரியர் வழங்குகின்றார். நூலாசிரியர் பிரபாகர் அவர்களும் ராகுல் சாங்கிருத்யாயனுக்கு உற்ற நண்பராக இருந்தவர் என்ற கருத்துக்களையும் நூலில் அறியமுடிகின்றது என்பதோடு ஒருசில இலக்கியப் பணிகளில் ராகுலுடன் நூலாசிரியர் பிரபாகர் இணைந்து செயலாற்றி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நூலின் இறுதிப் பகுதியில் இரண்டு குறிப்புகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அதில் முதலாவது ராகுலின் வாழ்க்கையில் நிகழ்ந்த மிக முக்கிய நிகழ்ச்சிகளின் பட்டியல். இரண்டாவது பண்டிதர் ராகுல் சாங்கிருத்யாயன்னின் படைப்புகள். இந்தப் பட்டியலைப் பார்க்கும்போது வாசிக்கும் நமக்கே திகைப்பு ஏற்படுகின்றது. நாவல்கள், சிறுகதைகள், சுயசரிதை நூல்கள், வாழ்க்கை வரலாறு நூல்கள், பயணநூல்கள், கட்டுரைகள் என 74 இலக்கிய நூல்கள் இந்தப் பட்டியலில் இடம் பெறுகின்றன. இதற்கடுத்து, இதர நூல்கள் என்ற தொகுப்பில் அறிவியல், சமூகவியல், அரசியல், தத்துவம், சமயம், பயண நூல், அகராதி மற்றும் லெக்சிகன், இலக்கிய வரலாறு, நாட்டார் பாடல், ஆய்வு, வரலாறு, தொகுப்பு, மொழிபெயர்ப்பு, சமஸ்கிருத பதிப்பித்தல் அல்லது மொழிபெயர்ப்பு என 72 நூல்கள் பட்டியலில் இடம் பெறுகின்றன.

1893 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தின் அசாம்கார்க் மாவட்டத்திலுள்ள கனிலா சர்க்கார் பன்னூர் என்னும் கிராமத்தில் பிறந்தார். அவரது இளமைப் பருவம் துயரம் நிறைந்த அனுபவத்தையே அவருக்கு வழங்கியது. மிக இளம் வயதிலேயே தனது அன்னையையும் சகோதரியையும் இழந்தார். அவருக்கு மிகச் சிறிய வயதிலேயே திருமணம் நடைபெற்றிருக்கின்றது. ஆனால் யாருடன் நடைபெற்றது என்பதை அறியும் முன்னரே அவர் தனது பயணத்தைத் தொடங்கி விட்டதால் அந்தத் திருமணம் அவரது வாழ்க்கையில் முக்கிய இடம் பெறவில்லை.

ராகுலின் வாழ்க்கையில் 1915 முதல் 1922 வரையிலான காலகட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது. இளம் வயதிலேயே உலகத்தை அறிந்து கொள்ள வேண்டும் என ஓரிருமுறை வீட்டிலிருந்து வெளியேறி பிறகு மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வந்தவர் தனது தேடலுக்கு எல்லை இல்லை என்பதை உணர்ந்து கொண்டு இயல்பான வாழ்க்கையிலிருந்து புரட்சிகரமான ஒரு வாழ்க்கையை முன்னெடுத்த காலகட்டமிது.

ராகுல் தன் கைப்பட எழுதிய அவரது குறிப்புகள் 3000 பக்கங்களுக்கு மேலாகும். அவரது படைப்புகளும் குறிப்புகளும் இந்தி, சமஸ்கிருதம், பாலி, திபெத், போஜ்புரி ஆகிய மொழிகளில் எழுதப்பட்டவை. அவரது நூல்கள் இன்று தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளிலும் ஆங்கிலம் மற்றும் ரஷ்ய, பர்மிய மொழிகளிலும் வெளிவந்துள்ளன.ராகுல் சாங்கிருத்யாயனின் வாழ்க்கைக் குறிப்பை கூறும் இந்த நூலை எழுதிய நூலாசிரியர் பிரபாகர் 1948ஆம் ஆண்டு அலகாபாத் இந்தி சாகித்திய சம்மேளனத்தில் அவரோடு இணைந்து 16,000 வார்த்தைகள் கொண்ட அலுவலககாரியத்திற்கான சொற்களை விளக்கும் ஆங்கில-இந்தி அகராதி நூல்தயாரிப்பதில் பணியாற்றியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் சாங்கிருத்யாயனின் வாழ்க்கையில் பயணங்களே முக்கிய இடம் பெறுகின்றன. ஊர் ஊராகச் சென்று கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் அங்குள்ள சூழலுக்கேற்ப மக்களையும். ஊர்களின் சிறப்பையும் புரிந்துகொண்டு வாழ்க்கை பயணத்தைச் செலுத்த வேண்டும். புதிய செய்திகளைக் கற்கவேண்டும். புதிய அனுபவங்களைத் தேடிப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடனேயே அவரது முழு வாழ்க்கையும் அமைந்தது. முழுமையான பள்ளிக் கல்வி என்பது அவரது வாழ்க்கையில் இடம்பெறவில்லை என்றாலும் அவரது தீவிர தேடுதலும் கற்றலும் அவர் ரஷ்யாவின் லெனின்கிராட் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பையும், இலங்கையில் வித்யாலங்காரா பல்கலைக்கழகத்தில் பௌத்த தத்துவவியல் பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பினையும் அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது என்பது வியக்க வைக்கிறது.


தனது வாழ்க்கையில் அவர் நான்கு முறை திபெத் நாட்டிற்குச் சென்றிருக்கின்றார். இறுக்கமான கெடுபிடிகளை சந்தித்த போதும் பல்வேறு வகையில் தான் சந்தித்த தடைகளையெல்லாம் கடந்து அவரது ஒவ்வொரு பயணங்களும் அமைந்திருக்கின்றன.

ராகுல் சாங்கிருத்யாயன் பிறந்தபோது அவருக்கு இட்ட பெயர் கேதார்நாத் பாண்டே. தனது பத்தொன்பதாவது வயதில் அவர் ராகுல் பராசா மடத்தில் முறையாக சாதுவாகச் சேர்ந்தபோது அவரது பெயர் ராம் உதார் தாஸ் என மாற்றப்பட்டது. அந்த மடத்தின் வருங்கால வாரிசாகவும் தலைவராக வருவதற்கு வாய்ப்பிருந்தும், சடங்கு சம்பிரதாயங்களில் ஈடுபாடின்றி அவர் அங்கிருந்து வெளியேறினார். வெளியேறினார் என்று சொல்வதற்கு பதில் ஓடிப்போனார் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

ராகுல் சாங்கிருத்யாயனுக்கு மிக இளம் வயதிலேயே முதல் திருமணம் நடந்தது. ஆயினும் அவர் தனது 42வது வயது வரை அந்த முதல் மனைவியைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை என்றே நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். அதன் பின்னர் ரஷியாவில் இருந்த போது அவர் லோலா என்ற பெண்மனியையும் பின்னர் இந்தியா திரும்பிய பின்னர் அவருக்கு மீண்டும் ஒரு திருமணமும் நடைபெற்றது.

பயணச்சீட்டு இல்லாமலேயே பல பல ஊர்களுக்குப் பயணித்து, அங்குக் கிடைத்த பணிகளைச் செய்து கொண்டு, உலக அனுபவத்தைப் பெற்றுக்கொண்டு தெற்கு நோக்கி வந்து திருப்பதி, தமிழகத்தின் காஞ்சிபுரம் என பல ஊர்களுக்கு அவர் வந்து தங்கியிருந்தார். அவர் கற்றுக் கொண்ட ஏராளமான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று.


இடையில் ஒரு ஆசிரமத்தில் தங்கி பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இந்திய அரசின் தொல்பொருள் ஆய்வுப் பிரிவைச் சேர்ந்த ஊழியர் ஒருவருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டு புகைப்படக்கலை, மற்றும் பிராமி கல்வெட்டு எழுத்துக்களை வாசிப்பதிலும் தனது ஆர்வத்தை உருவாக்கிக்கொண்டார். அரசியலிலும் ஆர்வம் கொண்டு சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்த அரசியல் நிகழ்வுகளால் அவர் சிறைவாசம் அனுபவிக்கும் நிலையும் ஏற்பட்டது.


அதன் பின்னர் 1922ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராகுல், ஜில்லா காங்கிரஸ் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். படிப்படியாக ராகுலின் ஆர்வம் கம்யூனிசத்தின் புரட்சி கொள்கைகள் பக்கம் சென்று கொண்டிருந்தது. அக்காலகட்டத்தில் அவர் நேபாளத்திற்குச் சென்று வந்தார். நேபாளத்தில் இருந்த போது தனது பெயரை செவாங் என்று மாற்றிக்கொண்டார். புத்த மத பண்டிதர்கள் சன்னியாசிகள் ஆகியோரை பார்த்து பழகி நட்பு ஏற்பட்டது. தன்னை லாமாவின் சீடர் என அவர் அறிவித்துக் கொண்டார்.


திபெத்திற்கு சென்று திரும்பியபோது அவருக்குச் சில நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. சில நூல்களை அவர் காசு கொடுத்து வாங்கிக் கொண்டார். தன்னோடு 1619 திபெத்திய கையெழுத்துப்பிரதி நூல்களையும் கொண்டு வந்தார். தற்போது இந்த அனைத்து புத்தகங்களும், அவரது எழுத்துப் பிரதிகளும் பட்னா அருங்காட்சியகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுலின் பயணங்கள் இந்திய உபகண்டத்தில் மட்டுமன்றி திபெத், நேபாளம், இலங்கை, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான், கொரியா, மஞ்சூரியா, ஈரான், சிங்கப்பூர், மேலும் பல நாடுகள் என இடைவிடாத பயணமாக அமைந்தது. இன்று நாம் காணும் பயண போக்குவரத்து வசதிகள் இல்லாத அக்காலகட்டத்தில் ஒரு தனிமனிதர் எவ்வளவு ஈடுபாட்டுடன் இத்தகைய பயணங்களைச் செய்து இருக்கின்றார் என்று அறிந்து கொள்ளும் போது அவரது பயணத்தின் மீதான தீவிரமான ஆர்வம் நம்மைச் சிலிர்க்க வைக்கின்றது.

பிறகு கல்கத்தா சென்றபோது அங்கு மகாபோதி சங்கம் அவருக்கு உதவியது. ஸ்ரீலங்காவில் வித்யாலங்கார் பரிவீனாவில் 1927ஆம் ஆண்டு மே மாதம் இணைந்தார். அங்கு ஏராளமான புத்த மத நூல்களைக் கற்றார். வரலாறு பற்றிய தனது அறிவை வளப்படுத்திக் கொண்டார். அதன்பிறகு படிப்படியாக அவருக்கு ஏற்பட்ட நட்புகளின் வழியாக அவர் சோவியத் ரஷ்யாவுக்கு அழைக்கப்பட்டார். அங்கு லெனின்கிராட் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராக இணைந்தார்.


ராகுல் ரஷ்யாவில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இந்தோ திபெத்திய பிரிவின் செயலாளராகப் பணியாற்றிய லோலா (எலினா நார்வர்தோவ்னா ரோவ்ஸ்காயா) என்ற பெண்மணியைச் சந்தித்தார். அப்போது இந்தப் பெண்மணியார் திபெத்திய-சமஸ்கிருத அகராதி தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். ராகுல் லோலாவுக்குச் சமஸ்கிருதம் கற்றுக் கொடுத்தார். லோலாவிடம் ரஷ்ய மொழி கற்றுக் கொண்டார். நட்பு காதலாக மலர்ந்தது. பிறகு திருமணத்தில் முடிந்தது. அவர்களுக்கு 1938ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி ஒரு மகன் பிறந்தான். இகார் என அவனுக்குப் பெயர் சூட்டினார்கள்.


இடையில் மீண்டும் அவர் இந்தியா திரும்ப வேண்டியிருந்தது. பிறகு 1945 ஜூலையில் மீண்டும் ரஷ்யா சென்றபோது மனைவியையும் மகனையும் சந்தித்தார். அதற்குப் பின்னர் அவர் இந்தியா திரும்பிய பிறகு லோலாவையும் தன் மகனையும் மீண்டும் சந்திக்கவில்லை.


இந்தியாவிற்குத் திரும்பிய சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் இந்திய நேபாள பெண்மணியான டாக்டர்.கமலா பெரியார் என்பவரை மணந்தார். அவர்கள் மசூரியில் சில வருடங்கள் வாழ்க்கை நடத்தினர். ஜெயா என்ற மகளும் ஜேடா என்ற மகனும் இவர்களுக்குப் பிறந்தனர். பின்னர் இலங்கையில் பௌத்த சமய பேராசிரியராகப் பணி கிடைக்கப்பெற்று அங்கு சென்றார். அங்கிருந்த காலகட்டத்தில் அவருக்குப் பல வகையான நோய்கள் ஏற்பட்டு உடல் பாதிக்கப்பட்டு ஆரோக்கியம் சிதைந்த நிலையிலேயே இருந்தார்.


அவரது ரஷ்ய மனைவி லோலா மறுமணம் செய்துகொள்ளவில்லை. ராகுல் சாங்கிருத்யாயன் இரண்டு ஆண்டுகாலம் ஞாபகமறதி நோயினால் பீடிக்கப்பட்டு 1963 ஆம் ஆண்டு காலமானார். அவரது மறைவுக்குப் முன்னர் ஞாபக மறதி நோயில் பீடிக்கப்பட்டிருந்த சமயத்தில் 1962 ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அப்போது தன் மனைவியைக் கண்டபொழுது ராகுலின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி ஓடியது என அக்காட்சியை நூலாசிரியர் விவரிக்கும்போது இப்பகுதியை வாசிக்கும் வாசகர்களாகிய நமக்கு ஏற்படும் ஆழ்ந்த துயரத்தைத் தவிர்க்க முடியவில்லை.


தனது வாழ்வின் இறுதிக் கட்டமான இரண்டு வருட காலம் நினைவற்ற நிலையில் இருந்து ஏப்ரல் 14ம் தேதி,1963 ஆம் ஆண்டு டார்ஜிலிங்கில் அவர் காலமானார். அவர் தகனம் செய்யப்பட்ட இடத்தில் இப்போது ஒரு நினைவுச்சின்னம் வைக்கப்பட்டுள்ளது.

இந்த அசாத்தியமான மனிதர் 34 க்கும் மேற்பட்ட மொழிகளை அறிந்திருந்தார். பலமொழிகளில் ஆழ்ந்த திறனும் பெற்றிருந்தார். தனது ஓய்வு நேரங்களை வாசிப்பதிலும், எழுதுவதிலும், பயணங்களிலும் உலகை தெரிந்துகொள்வதிலுமே செலவிட்டார்.


ராகுல் சாங்கிருத்யாயன் `இந்திய பயணக்குறிப்புகளின் தந்தை` என இன்று சிறப்பித்து அழைக்கப்படுகின்றார். பிறப்பினால் இந்து சமயத்தைச் சார்ந்தவராக இருந்து, பின்னர் பௌத்த சமயத்தை ஏற்று தன்னை பௌத்தராக அடையாளப்படுத்திக் கொண்டவர் என்பதோடு மார்க்சிய சித்தாந்தத்திலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். இவரது சிறந்த இலக்கிய படைப்புகளைக் கௌரவிக்கும் வகையில் இந்திய அரசு அவருக்கு 1963 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதினை வழங்கிச் சிறப்பித்தது.


ராகுல் சாங்கிருத்யாயனின் நூல்களில் சிகரம் வைத்ததுபோல் அமைவது அவரது வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூல். இந்த நூல் ஒரு வரலாற்று நாவல் என்ற அடிப்படையில் எழுதப்பட்டது. இது ஆரியர்களின் இந்தியாவிற்கான புலம்பெயர்வை விபரிக்கும் ஒரு நாவலாகும். இது கிமு 6000 தொடங்கி 1942ஆம் ஆண்டு முடியும் வகையில் நடைபெறும் சம்பவங்களை கதைக்களமாகக் கொண்டு அமைக்கப்பட்டது. இந்த நூல் 1942 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்பு கொண்டது இந்த நூல்.


பல்வேறு விருதுகள் இவரைச் சிறப்பித்தன. காசி பண்டிதர் சபை இவருக்கு ` மகாபண்டிதா` என்ற விருதினை வழங்கியது. இலங்கையின் வித்யாலங்கார பரிவீணா இவருக்கு `திரிபீடகாச்சார்யா` என்ற பட்டத்தினை வழங்கியது. அலகாபாத் இந்தி சாகித்ய சம்மேளனம் இவருக்கு `சாகித்திய வாசஸ்பத்ஜி` என்ற சிறப்பினை வழங்கியது. பாகல்பூர் பல்கலைக்கழகமும், இலங்கை வித்யாலங்காரப் பல்கலைக்கழகமும் இவருக்கு டி.லிட் (ஹான்ர்ஸ்) பட்டம் வழங்கின. இந்திய அரசின் பத்மபூஷன் விருதினையும் பெற்றார்.


ராகுல் சாங்கிருத்யாயனின் வாழ்க்கை வரலாற்றினை விவரிக்கும் இந்த நூல் தேடலையும் பயணத்தையுமே வாழ்க்கையாகக் கொண்ட ஒரு மனிதரை நமக்கு அறிமுகப்படுத்துகின்றது. ` நாம் கற்றது கைமண்ணளவு` என்பதை ஆணி அடித்தார் போல நம் சிந்தனையில் ராகுல் சாங்கிருத்யாயனின் ஒவ்வொரு செயல்பாடுகளும் நிரூபித்துச் செல்கின்றன. வாசிக்கும்போதே ஆர்வம் தொற்றிக் கொள்ளக் கூடிய வாழ்க்கை வரலாறு நூல் இது. வாசித்து இந்த அசாதாரண மனிதரை அறிந்து கொண்ட அனுபவத்தைப் பெற்றதில் அகமகிழ்கின்றேன்.

26.3.2020

-சுபா

தேமொழி

unread,
Apr 12, 2020, 12:39:14 AM4/12/20
to மின்தமிழ்
sourcehttps://www.facebook.com/subashini.thf/posts/2705858562990857

தமிழக வண்ணார் - வரலாறும் வழக்காறுகளும்
நூல் விமர்சனம் - முனைவர்.க.சுபாஷிணி
(பகுதி 1)



மாதப் பூப்பின் போது வடியும் குருதியைத் தடுத்து நிறுத்த பழைய துணிகளைப் பயன்படுத்தும் வழக்கம் முன்பிருந்தது. துணிகளைத் துவைத்து மீண்டும் பயன்படுத்தி வந்தனர். பூப்புக் குருதி கரையும் துர்நாற்றமும் கொண்ட துணிகளையும் அப்போது உடுத்தியிருந்த சேலைகளையும் பொட்டலமாகக் கட்டி வீட்டின் கொல்லை பகுதியில் வைத்து விடுவர். ஊர்ச்சோறு எடுக்க வரும்போது இச்செய்தி வண்ணாரப் பெண்ணிடம் தெரிவிக்கப்படும். அவர் மறுநாள் வந்து அவற்றை எடுத்துச் செல்வார். வீட்டுக்காரப் பெண் குச்சியால் எடுக்கும் துணிகளை அவர் சுமந்து செல்ல வேண்டிய அவலநிலை. `மூட்டு துணி` என்று தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் `தீட்டுத்துணி`, `தீண்டல் துணி` என்று தென் மாவட்டங்களிலும் அழைக்கப்பட்ட துணியை வெளுத்துத்தரும் பணி என்பது வண்ணார் மீது திணிக்கப்பட்ட கொடுமையான பணியாகும். சானிடரி நாப்கின் அறிமுகம் இக்கொடுமையில் இருந்து மக்களை விடுவித்துள்ளது என்றாலும், சில கிராமங்களில் இக்கொடுமை தொடரத்தான் செய்கிறது.
- திரு.ஆ.சிவசுப்பிரமணியன், (பக் 47)

நாடோடிகளாக, வேட்டையாடும் சமூகமாக இருந்து, பின்னர் படிப்படியாகக் குழுக்களாக உருவாகி, விவசாயம் கற்று ஓரிடத்தில் நிலைபெற்று, கிராமம், நகரம், நாடு என்ற நீண்ட வளர்ச்சியைக் கடந்து வந்துள்ளது இந்த மனிதகுலம். காலத்துக்குக் காலம் வாழ்க்கை அனுபவங்களைக் கற்று தன் அறியாமையிலிருந்தும், தவறுகளிலிருந்தும், தன்னைப் படிப்படியாக உயர்த்திக் கொண்டே வருகிறது இந்த மனிதகுலம். இந்த படிப்படியான கற்றலே தொழில்நுட்ப வளர்ச்சி என்றும் அறிவியல் வளர்ச்சி என்றும் சமூக நீதி என்றும் சமூக சட்ட திட்டங்கள் என்றும் தனி மனித உரிமை என்றும் பொது மனித வாழ்க்கைக்கான நெறிகளாக நமக்கு வழிகாட்டிகளாக அமைகின்றன. இத்தனை மாற்றங்கள் வந்துவிட்ட இந்தக் காலகட்டத்திலும் கூட மனிதக்குலத்துக்குப் பொருந்தாத சாதிப்பகுபாடு என்ற ஒரு விஷயத்திலிருந்து தமிழினம் இன்னும் விடுபடாமல் இருப்பது தமிழினத்தின் அவலம்தான். தனி மனித உரிமையை ஏற்றுக்கொண்டு தொழில்ரீதியான மனித பாகுபாட்டைக் கடந்து ஏனைய உலக இனங்கள் சமூக சிந்தனைத் தளத்தில் சுதந்திரம் அடைந்து விட்டன, நாகரீகம் பெற்றுவிட்டன. ஆனால் உலகின் ஏனைய இனங்களிலிருந்து மாறுபட்டு, மனிதருக்குள் தொழில்ரீதியாக சாதியை வலியுறுத்தி உயர்வு தாழ்வைக் கட்டமைக்கும் பண்பாட்டைப் பிடித்துக்கொண்டு இருப்பதாலேயே இந்தியச் சமூகம் உலக அளவில் பல படிநிலைகளில் சரிந்து கீழே இருக்கின்றது, மனித உரிமை தளத்தில்.

பண்பாட்டுத் தளம், மக்கள் வரலாறு, மானுடவியல், சமூகவியல், வரலாறு என்று பன்முகத் தன்மையில் தனது ஆய்வினைத் தொடர்ந்து நிகழ்த்தி கொண்டும், அந்த ஆய்வுகளின் வழி தான் அறிந்த செய்திகளை நூலாக்கித் தருவதிலும் குறிப்பிடத்தக்க வகையில் செயல்பட்டு வருபவர் திரு ஆ.சிவசுப்பிரமணியன். இவரது நூல்கள் தமிழகத்தின் பண்பாட்டுத் தளத்தினை அறிந்துகொள்ள ஆய்வாளர்களுக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் உதவுகின்றன. அந்த வகையில் திரு.ஆ.சிவசுப்பிரமணியன் எழுதி, 2014 ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வெளிவந்த நூல் `தமிழக வண்ணார் வரலாறும் வழக்காறுகளும்`.

முதலில் நூலின் அமைப்பைப் பற்றிப் பார்ப்போம். நூலில் ஒன்பு கட்டுரைகள் வண்ணார் என்ற சமூகத்தினரின் பல்வேறு விஷயங்களைப் பேசுகின்றன. இதற்குத் துணையாகச் சில பின்னிணைப்புகள் நூலில் இடம்பெறுகின்றன. தமிழ்ச்சூழலில் சாதிக் கட்டமைப்பு வரையறையில் வண்ணார் சமூகத்தினர் எந்த வகையில் அடங்குகின்றனர் என்பதைப்பற்றி இந்த முதல் ஒன்பது கட்டுரைகளும் விளக்குகின்றன. தமிழ்ச்சூழலில் உயர் சாதி மற்றும் ஆதிக்க சாதி என்ற இரண்டு பெரும் பிரிவுகளுக்குள் வண்ணார் சமூகத்தினர் எந்த வகையில் இடம்பெறுகின்றனர் என்பதையும், ஒடுக்கப்பட்ட அல்லது தலித் என்று அடையாளப்படுத்தப்படும் சமூகத்தினர் சூழலில் வண்ணார் சமூகத்தினர் எவ்வாறு இடம்பெறுகின்றனர் என்பதையும் துல்லியமாக எளிய முறையில், அதே வேளை சான்றாதாரங்களுடன் இந்தக் கட்டுரைகள் வாசிப்போருக்குப் புரிதலை ஏற்படுத்துகின்றன.

சங்க இலக்கியங்களில் வண்ணார் தொழில் மற்றும் அத்தொழிலுக்குத் தொடர்புடைய தொழில்நுட்பமாகிய உவர் மண் சேகரித்தல், துணி வெளுத்தல் போன்ற பல்வேறு தொழில்முறை செய்திகள் எவ்வகையில் குறிப்பிடப்படுகின்றன என்பதை ஆசிரியர் இலக்கியச் சான்றுகளுடன் விவரிக்கின்றார். சங்ககாலத்தில் இருந்த தொழில்முறை சிறப்பு அதாவது skill-based specialization என்ற நிலையிலிருந்து மாறி படிப்படியாக வண்ணார் சமூகத்தவர் `அடிமைகள்' என்ற கீழ் நிலைக்குத் தள்ளப்பட்ட அவலச்செய்தியை இந்த கட்டுரைகள் நமக்கு விளக்குகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் கரிசூழ்ந்தமங்கலம் என்ற கிராமத்தில் உள்ள கோயிலில் உள்ள கல்வெட்டு ஒன்று கோவிலுக்குக் கொடையாக வண்ணார்களை அடிமைகளாக வழங்கிய செய்திகளையும் பதிகின்றது.

வண்ணார்களில் பெரும்பாலானோர் சமூகத்தில் மிகத் தாழ்ந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தாலும் இச்சமூகத்தினர் சிலர் நிலவுடைமையாளர்களாக இருந்தார்கள் என்பதைக் குறிப்பிடக்கூடிய கல்வெட்டுகளும் உள்ளன என்பதை நூலில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளின் வழி அறிய முடிகின்றது. இச்செய்திகள் வண்ணார்கள் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள் என்றும், கோவில் திருப்பணியில் பங்கு கொண்டார்கள் என்ற செய்தியையும் குறிப்பிடுகின்றன. அந்த வகையில் குறிப்பிடத்தக்க ஒரு கல்வெட்டாக திருத்துறைப்பூண்டி வட்டம், வடகாடு கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோவிலில் உள்ள கி.பி.12 அல்லது 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று இக்கோயிலுக்குப் பள்ளர், பறையர், வண்ணார் ஆகிய சமூகத்தவர்கள் நிலக்கொடை வழங்கியுள்ளார்கள் என்பதைக் குறிப்பிடுகிறது.

இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக வண்ணார் சமூகத்தவர்களில் ஒருசிலர் பொருளாதார மேம்பாட்டுடன் இருந்தாலும்கூட பொதுவாகவே, வண்ணார் சமூகத்தவர் தமிழ்ச்சூழலில் தாழ்த்தப்பட்டு, உயர் குடிகளுக்கு ஒருவகையான அடிமைகளாகவே பார்க்கப்பட்டனர் என்பதை நூல் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்துகின்றது.
நமது பண்பாட்டுச் சூழலில் சில செய்திகள் அதன் ஆழமான உட்பொருளை உணர்ந்து கொள்ளும் போது நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

`ஊர் சோறு எடுத்தல்`. ஒரு நாள் முழுதும் ஆற்றங்கரையில் அல்லது படித்துறையில் துணிகளைத் துவைத்து, வெள்ளாவி வைத்து, தூய்மைப்படுத்தி, காயவைத்து ஊர் மக்களுக்கு அவர்கள் உடை அணிந்து வாழ உதவுகின்ற வண்ணார்களுக்கு ஊர் மக்களே வழங்குகின்ற உணவு `ஊர் சோறு எடுத்தல்` என்று குறிப்பிடப்படுகின்றது. வெளிப்படையாகப் பார்க்கும்போது இது ஒரு மனிதாபிமான செயல் தானே என்று நினைக்க வைக்கும் இச்செயலுக்குப் பின் இருக்கும் மிகப்பெரிய சமூக அநீதி கொடியது, அசிங்கமானது. அதனை மிகத் துல்லியமாக நூலாசிரியர் நூலில் உள்ள கட்டுரைகளின் வழி விளக்குகின்றார்.

நாள்தோறும் மாலையில் ஊரில் வீடு வீடாகச் சென்று சோறும் குழம்பும் இவர்கள் பெற்றுக் கொள்வார்கள். அன்றைக்கு இரவு சாப்பிட்டது போக மிஞ்சிய உணவை நீர் ஊற்றி வைத்து தங்களின் வளர்ப்புப் பிராணிகளான கழுதை, நாய், ஆடு போன்றவற்றுக்கு இந்த உணவைக் கொடுத்து விடுவார்கள். ஆனால் இப்படி ஒரு ஊர்ச்சோறு எடுக்கச் செல்லும்போது வீட்டுக்கார மனிதர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் கையைக் கழுவாமல் எச்சில் கையாலேயே சோறு எடுத்துப் போடுவதுண்டு. சிலர் குழந்தைகள் அல்லது வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டு மீதம் வைத்த உணவையும் கலந்து போட்டு விடுவர். பலவேளைகளில் திட்டிக்கொண்டே உணவு வழங்குவர். விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூரில் உள்ள கொங்கணம் என்ற கிராமத்தில் நிலக்கிழார் ஒருவரிடம் ஊர் சோறு வாங்க சென்றபோது குழம்பு கேட்டதற்காக வாயிலிருந்த வெற்றிலைச் சாற்றை சோற்றில் துப்பி, `இந்தக் குழம்பை வைத்துக்கொள்` என்று அனுப்பிய களப்பணியில் சேகரித்த அவலச் செய்தியையும் நூலில் காணமுடிகின்றது. இத்தகைய அவமானங்கள் நிகழ்ந்தாலும், பலவேளைகளில் `ஊர் சோறு` எடுப்பதை வண்ணார் சமூகத்தவரால் தவிர்க்க முடியாத சூழலும் நிகழ்ந்திருக்கின்றது. ஊர் சோறு எடுக்கும் வரை அவர்கள் அடிமைகள் என்பதை உறுதிப்படுத்தும் எழுதப்படாத பொதுப்போக்கு இயங்கிக் கொண்டிருப்பதை ஆதிக்க சாதியினர் தொடர்ந்து விரும்புவதால், ஊர் சோறு எடுக்காமல் போகும்போது பல்வேறு வகை பிரச்சினைகளுக்கும் வண்ணார் சமூகத்தவர்கள் ஆளாகிறார்கள் என்ற செய்தியையும் நூல் சொல்கிறது.

துரும்பர் என்ற வண்ணார் சாதியில் ஒரு தனிப் பிரிவினைப் பற்றியும் நூல் பேசுகிறது. புரத வண்ணார், புறத்து வண்ணார், பறஏகாலி, பறவண்ணார் எனப் பல்வேறு பெயர்களால் சுட்டப்படுபவர்கள் இவர்கள். இவர்கள் தீண்டத்தகாதோர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட, அதாவது இன்று தலித் என்று அடையாளப்படுத்தப்படும் சமூகத்தினருக்குத் துணி வெளுக்கும் சேவை செய்யக் கூடிய ஊழியம் செய்பவராக அறியப்படுகின்றனர். இவர்கள் தாழ்த்தப்பட்டோருக்கு வண்ணார் சேவை செய்வதால், தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கீழ் மேலும் தாழ்த்தப்பட்டவர்களாக ஆதிக்க சாதியினரால் அடையாளப் படுத்தப்படுவதால், இவர்கள் இரட்டை தீட்டு முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

தீண்டத்தகாதோர் என்பவர்கள் தொட்டால் தீட்டு என்பது உயர் சாதி மற்றும் ஆதிக்க சாதி சமூகம் உருவாக்கி வைத்துள்ள ஒரு அமைப்பு. இதன்படி தீண்டத்தகாதோர் என்று இவர்களால் ஒதுக்கப்பட்ட சமூகத்தவர்களுக்கு இவர்கள் அழுக்கு துணிகளைச் சுத்தம் செய்வதால், மேலும் ஒரு தீட்டு இவர்களுக்குக் கூடுவதாகவும் இதன் அடிப்படையில் இந்த பறவண்ணார் சமூகத்தவர் `பார்த்தாலே தீட்டு` என்ற வகையில் ஒதுக்கப்பட்டு, கொடுமையான வகையில் சமூக அவலத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

உளவியல் ரீதியாக தங்கள் சுயமரியாதையையும், தன்மானத்தையும் சிதைத்துத் தாக்கும் வகையில் பல்வேறு சமூக தாக்குதல்களுக்கும் உள்ளாகும் வண்ணார் சமூகத்தவர்களுக்கு உள்ள மேலும் ஒரு பிரச்சனையாக அமைவது அவர்களுக்குத் தேவைப்படுகின்ற சாதிச்சான்றிதழ். இன்றைய கால சூழலிலும்கூட சாதி சான்றிதழைப் பெறுவதில் வண்ணார் சமூகத்தவர் மிகுந்த பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர் என்பது வருத்தத்திற்குரிய செய்தி.

சாதிச் சான்றிதழைப் பெற்றால்தான் இவர்களின் குழந்தைகள் உயர்கல்விக்குச் செல்வதற்கு அல்லது சமூகத்தின் மிக அடித்தளத்தில் வாழ்கின்ற இவர்களின் வாழ்க்கையில் சிற்சில மேம்பாடுகளைப் பெற்றுக்கொள்ளும் சலுகைகளைப் பெறுவதற்கு உதவியாக அமையும். ஆனால் இதற்கு மாற்றாகச் சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டிய அதிகாரிகள் பல்வேறு நிபந்தனைகளை வண்ணார் சமூக மக்களிடம் வைப்பதன் காரணத்தினால் அவர்களின் துன்பம் அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.

உதாரணமாக, புதிரை வண்ணாரிடம் கழுதை இருக்கிறதா? துணி வெளுப்பதற்குப் பாரம்பரிய வெள்ளாவி அடுப்பு முறை பயன்படுத்தப்படுகிறதா? அந்த ஊரில் அவர் தான் துணிகளை வெளுத்தார் என்பதற்குச் சாட்சியாக யார் இருப்பார்கள்..? என்று சாட்சிகளாகக் கழுதையையும் வெள்ளாவி அடுப்பையும் அதிகாரிகள் கேட்பது தொடர்கின்றது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் மேலும் ஒடுக்கப்பட்ட மக்களாக வாழ்கின்ற இவர்களுக்குத் தேடிச்சென்று உதவுவதுதான் அரசு அதிகாரிகளின் செயல்பாடாக இருக்க வேண்டுமே தவிர அவர்களை மேலும் மேலும் சிரமத்துக்கு உள்ளாக்கி அவர்களின் குழந்தைகள் வாழ்வில் மேம்பட உள்ள எல்லா கதவுகளையும் அடைக்கும் செயல்பாடுகள் சமூகத்திற்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை அரசு இயந்திரமும் உணர்ந்து செயல்பட வேண்டியதும் அவசியமாகின்றது.

தொடரும்
-சுபா

நூலாசிரியர் - ஆ.சிவசுப்பிரமணியன்
பதிப்பு - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை ரூ 135/-

தேமொழி

unread,
Apr 12, 2020, 12:43:16 AM4/12/20
to மின்தமிழ்

தமிழக வண்ணார் - வரலாறும் வழக்காறுகளும்

நூல் விமர்சனம் - முனைவர்.க.சுபாஷிணி

(பகுதி 2)


இந்த நூலில் வண்ணார் தொழில்நுட்பம் பற்றி பேசும் ஒரு கட்டுரை, துணிகளில் அழுக்கு எடுக்கும் தொழில்நுட்பம், துணிகளை அடையாளப்படுத்தப் போடப்படுகின்ற துணிகளில் உள்ள குறியீடுகள், உவர் மணல் சேகரித்தல், வெள்ளாவி வைத்தல் ஆகிய தொழில்நுட்பங்களை விளக்குகின்றது. இன்று laundry service என்று வணிகமயமாக்கலின் வளர்ச்சியில் பெரிய நகரங்களில் துணி துவைக்கும் கடைகள் வரத் தொடங்கிவிட்டன. இப்படி புதிய முறையில் மேலைநாடுகளின் தொழில்நுட்ப முறைகளை அறிந்து, அந்த வகையில் தனது தொழிலை மேம்படுத்திக் கொண்ட வண்ணார் சமூகத்தவர்கள் சிலரும் உண்டு. ஆனாலும் கூட இன்றைய காலச் சூழலில் ஆதிக்க சாதியினர் இத்தகைய புதிய வணிக உத்தியை மேற்கொள்வதும், அவர்களுக்கு ஊழியம் செய்யும் வேலையாட்களாக வண்ணார்களைப் பணிக்கு வைத்துக் கொள்வதும் தான் இயல்பு நிலையில் இருப்பதாக நூலாசிரியர் சுட்டிக்காட்டுகின்றார்.

வண்ணார்கள் பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி துணியில் உள்ள அழுக்கினை நீக்கி தூய்மைப்படுத்திக் கொடுத்தாலும்
துணியைப் பெற்றுக்கொள்ளும் உயர்சாதி சமூகத்தவர் எனக் கூறிக்கொள்ளும் பிராமணர்களும் வேளாளர்களும் துணிகளின் மீது தண்ணீர் தெளித்துத் தீட்டு கழித்த பின்னரே பெற்றுக் கொள்வது வழக்கம். இதைச் சாதி வழக்கின் அடையாளம் எனக் கருதி இடைநிலை சாதியினரும் இச்செயலை ஒரு சடங்காக மேற்கொள்கின்றனர் என்பதையும் ஆசிரியர் குறிப்பிடத் தவறவில்லை.

தீட்டு என்பதே சுயநலத்துடன் கட்டமைக்கப்பட்ட ஒரு நீதிக்குப் புறம்பான கருத்து. அதில் தண்ணீரைத் தெளித்தால் தீட்டு போய்விடும் என நம்புவதும், அதில் உண்மையில்லை என்பதை அறிந்த பின்னரும், எளிய மக்களை நம்பவைத்து சாதிப்படிநிலையில் தம்மை உயர்ந்தோராகக் காட்டிக் கொள்ள இத்தகையோர் மேற்கொள்ளும் முயற்சிகளும் அறுவெறுப்பையே ஏற்படுத்துகின்றன.

வண்ணார் சமூகம் சார்ந்த புராணக் கதைகளும் சடங்குகளும் தமிழ் சமூகத்தில் வழக்கில் உள்ளன. அந்த வகையில் தடிவீரசாமி கதை, சின்னணைஞ்சான் கதை, புல மாடன் கதை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுக்குள் அடிப்படையாக இருப்பது வண்ணார் சாதியைச் சார்ந்த ஒருவர், பிராமண குலத்து அல்லது ஆதிக்கசாதி குலத்தில் பிறந்த ஒருவரைக் காதலித்து திருமணம் செய்து கொள்வதால் அவர்கள் கொலை செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டவர் தங்களை ஆவியாக வந்து தாக்கி தண்டனை கொடுப்பார் என்ற அச்சத்தின் பெயரில் அவர்களைக் கடவுள் ஆக்குவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தெய்வங்கள். சாதி மாறி காதலித்து கொலையுண்ட இளைஞர்கள் இளம்பெண்கள் இன்று தெய்வங்களாக நிலைபெற்று விட்டார்கள். இன்று ஆணவக்கொலை எனக்கூறப்படும் செயலே அன்று சாதி எதிர்ப்பாளர்களால் நிகழ்த்தப்பட்டு பின்னர் கொலையுண்டவர்கள் சாமிகள் ஆக்கப்பட்ட நிலை ஏற்பட்டது. ஈனமுத்து, வண்ணாரமாடன், மந்திரமூர்த்தி சோணமுத்து ஆகிய சாமிகள் இவ்வகையில் கொலையுண்ட மனிதர்கள்தான் என்பதை இந்த நூல் விவரிக்கின்றது.

கிராமப்புறங்களில் ஆற்றுப் பகுதிகளில் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வந்த வண்ணார் சமூகத்தினர் நகரமயமாக்கலின் விளைவாக பெரு நகரங்களுக்குக் குடி பெயர்ந்து அருகாமையிலுள்ள ஆற்றுத் துறைகளில் தங்களுக்கானக் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு தங்கள் தொழிலைத் தொடர்ந்தார்கள். டோபி கானா என்ற சலவைத் துறைகள் இந்த வகையில் உருவாயின. தமிழகம் மட்டுமன்றி மலாயாவிற்குக் குடிபெயர்ந்த தமிழ் மக்களில் வண்ணார் சமூகத்தைச் சார்ந்த சிலர் மலேசியாவின் பினாங்கு பகுதியில் தங்கள் குடியிருப்பை அமைத்து தொழில் புரிந்தனர். அதனைச் சான்று பகரும் வகையில் பினாங்கில் இன்றளவும் டோபி காட் என்ற பகுதியைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஆற்றுப் பகுதியை ஒட்டி தமிழ் மக்கள் வாழ்ந்து துணி சலவை செய்து கொடுத்த அந்தக் காலம் இன்று மறைந்து விட்டது. கல்வியும் பொருளாதார மேம்பாடும் செய்த ஆக்கப்பூர்வமான சமூக மாற்றம் இது. இன்று வண்ணார்கள் என அடையாளப் படுத்தப் படுவது மலேசியச் சூழலில் இல்லை என்றாலும் இச்சமூகத்தினர் இப்பகுதியில் வாழ்ந்தார்கள், அவர்கள் தொழில் புரிந்தார்கள் என்பதற்கு அடையாளமாக இப்பகுதி இன்னமும் அதே பெயரில் `டோபி காட்` என்றே வழக்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல தமிழ் மக்கள் புலம் பெயர்ந்த ஏனைய தீவுகள் அல்லது நாடுகளில் இத்தகைய அடையாளங்கள் நிறுவப்பட்டனவா என்பதை ஆராய வேண்டியதும் அவசியமாகின்றது.

இந்த நூலுக்கு முத்தாய்ப்பாக அமைவது இதில் பின்னிணைப்பாகச் வழங்கப்பட்டுள்ள கழுதையைப் பற்றிய செய்தி. தமிழ்ச் சமூகத்தில் கழுதை எந்த வகையில் சிறப்பிடம் பெறுகின்றது என்பதை இப்பகுதி ஆராய்கின்றது. வீட்டு விலங்காகக் குதிரை பயன்படுவதற்கு முன்பே மனிதகுலம் கழுதையைத் தங்கள் வீட்டு விலங்காகப் பயன்படுத்தி வந்துள்ளது என்பதை பல்வேறு சான்றுகள் தெளிவுபடுத்துகின்றன. ஆசிய நாடுகள் மட்டுமன்றி ஐரோப்பியச் சூழலிலும் கழுதைகள் மக்களின் தொழில்சார்ந்த அல்லது பயணத்தில் உதவக்கூடிய ஒரு விலங்காக இருந்து வந்துள்ளது. இன்றும் கூட ஸ்பெயின் நாட்டில் கழுதை ஊர்சுற்றிகளுக்கு உதவும் ஒரு விலங்காக நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கச் செய்தி. கோவேறு கழுதை எனச் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் கழுதை தலைவன் அமர்ந்து செல்ல பயன்படுத்திய ஒரு விலங்குதான். வண்ணாரின் வாழ்வில் கழுதைக்கு மிகச்சிறந்த ஒரு இடமுண்டு. நாட்டார் மருத்துவ முறைகளில் கழுதை சிறப்பிடம் பெறுகிறது. கழுதைப்பால், கழுதை முடி, கழுதையின் மூச்சு ஆகியவை பல்வேறு மருத்துவ குணம் உள்ளவையாக `பாட்டி வைத்தியம்` என அடையாளப்படுத்தப்பட்டு மக்கள் மருத்துவத்தில் வழக்கிலுள்ளது.

வீட்டு விலங்காகத் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வியல் தேவைகளுக்குத் துணை இருக்கும் கழுதை இன்று வைதீக தாக்கத்தினால் அதன் சிறப்பு இழந்து ஒடுக்கப்பட்ட விலங்காகக் காணப்படுகின்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் விலங்கும் ஒடுக்கப்பட்ட அடையாளம் பெறுவது இயல்புதானே!

பசுமாட்டின் சிறுநீரும் சாணியும் பெறுகின்ற உயர்குல அந்தஸ்து பிராமணர் குல மேண்மைப்படுத்தலின் வெளிப்பாடு. வைதீகத்துக்கும் தமிழ் பண்பாட்டுக்கும் நடந்த போராட்டத்தில் வைதீகம் வெற்றிகண்டு தமிழ்ப் பண்பாடு தோல்வி கண்டதன் வெளிப்பாடுதான் பசுமாட்டிற்கு ஏற்பட்டுள்ள சிறப்பும் கழுதைக்கு ஏற்பட்டுள்ள ஒடுக்குமுறையும் என்று நான் காண்கிறேன்.

பசு என்றால் புனிதத்தன்மைக்கான அடையாளம் என்றும் கழுதை என்றால் முட்டாள் தனத்திற்கான அடையாளம் என்றும் தமிழ் மக்கள் ஒட்டுமொத்த சிந்தனையில் வெற்றி கண்டுள்ளது வைதீகம். இதனால்தான் திட்டும் போது கூட ஒருவரைத் தாழ்த்திப் பேச கழுதை என்று திட்டுவதும், கிராமங்களில் தண்டனை கொடுக்கும் போது கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் வருவது மரியாதை குறைவு என்றும், தோற்றுப்போன மன்னர்களின் நிலத்தில் கழுதையைக் கொண்டு ஏறு பூட்டி உழுவது மிகப்பெரிய அவமானம் பொருந்திய தண்டனை என்றும் நம் தமிழ் வரலாறு காட்டுகிறது. நமக்கு ஊழியம் செய்து நம் வீட்டு விலங்காக இருந்த கழுதையை நாமே தரம் தாழ்த்தி ஒடுக்கி வைத்து விட்டோம். இந்தச் சமூகப் பார்வையின் பின் இருக்கும் அரசியலைப் புரிந்து கொண்டால்தான் விலங்கினங்களின் மீது நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் அடையாளங்களை விலக்கி மனிதர்களில் எப்படி சமத்துவத்தைப் பேணவேண்டும் என வலியுறுத்துகின்றோமோ அதே போல விலங்கினங்களின் மீதும் சமத்துவப் போக்கை கடைபிடிக்க நம்மை நாம் தயார்ப்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த நூலில் பின்னிணைப்பாக சேர்க்கப்பட்டுள்ள `சட்டநாதன் அறிக்கையில்` வண்ணார்கள் சமூகத்தைப் பற்றிய அறிக்கை பகுதியை ஆசிரியர் இணைத்துள்ளார். கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு தேவைகளில் வண்ணார் சமூகத்தவரின் நிலை கவலைக்கிடமான சூழலில் இருப்பதை சட்டநாதன் ஆணையம் வெளிப்படுத்துகிறது. 1970ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையானது 40 ஆண்டுகள் கடந்த பின்னும் கூட குறிப்பிடத்தக்க வகையிலான பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பது யோசிக்க வைக்கின்றது.

இந்த நூலைப் படித்து முடித்தபோது தனிப்பட்ட முறையில் ஒரு வித மன அழுத்தத்தை நான் உணர்ந்தேன். கிராமப்புற சூழல் என்றால்
பசுமையும் அழகும் எளிமையும் என்று நமது பொது மனம் நினைக்கும். ஆனால் கிராமச் சூழல் என்பது மிக இறுக்கமான, மனித உரிமைக்கு எதிரான சாதிக் கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரு அமைப்பு என்பதை இவ்வகை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. சக மனிதரை மனிதராகக் கூட பார்க்காத உயர்வு தாழ்வு சிந்தனை நிறைந்த கிராமப்புற வாழ்வு என்பது இன்றைய நாகரிக உலகத்திற்குத் தேவையற்ற ஒன்று என்றே கருதுகிறேன். எல்லா மனிதரும் ஒன்றே. நம்முடைய சுய தேவைகளை நாமே பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற சுய கல்வியும் தெளிந்த அறிவும் தமிழ்ச்சூழலில் பெருகவேண்டும்.

நாங்கள் படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்வோர் சிந்தனையில் கூட சாதிப் படிநிலைகள் ஆழப் புதைந்து இருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில், சிதைக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பாடு அடைய பல்வேறு சமூக நலன் சார்ந்த செயல்பாடுகளை அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். `எத்தனை காலம் சலுகைகளைக் கொடுப்பீர்கள்` என்ற கேள்வியை ஒதுக்கிவிட்டு, மனிதாபிமானத்துடன் தமிழ்ச் சமூகத்தில் ஆதிக்கசாதியினரால் ஒடுக்கப்பட்ட பிரிவினர் இத்தனை காலம் ஒடுக்கப்பட்டு, பல்வேறு அவமானங்களுக்கு உள்ளாக்கப்பட்ட அம்மக்கள் தங்கள் வாழ்க்கையில் மேன்மையடைய தடை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.

வரலாற்றில் பொதுவாகவே அரசர்களின் வீரமும் வெற்றிகளும் புகழப்படுகின்றன. பொதுவாகவே சாமானிய மனிதர்களின் செயல்பாடுகளும், போராட்டங்களும் கல்வெட்டுகளில் குறிக்கப் படுவதில்லை. ஆனால் வாய்மொழி இலக்கியங்களாக இன்னும் ஆங்காங்கே சாமானிய மனிதர்களின் செய்திகள் வாய்வழி இலக்கியங்களாக உலாவரும் மரபு இருக்கின்றது. வாய்மொழி இலக்கியங்கள் நம் சூழலில் தொலைந்து மறைவதற்கு முன் அவற்றைப் பதிவாக்கி அவற்றுள் புதைந்து கிடக்கும் வரலாற்றையும் போராட்டங்களையும் வழிகளையும் அலசித் தேர்ந்தெடுத்து ஆராய்ந்து அவற்றை ஆவணப்படுத்த வேண்டியது நம் முன் இருக்கும் கட்டாயத் தேவை. அதனைச் செய்வதற்கு ஆய்வுத் திறமும் திறந்த மனமும் படைத்த ஆய்வாளர்கள் முன்வரவேண்டியது இன்றைய கட்டாய தேவை.

----
நூலாசிரியர் -ஆ.சிவசுப்பிரமணியன்

தேமொழி

unread,
May 3, 2020, 4:16:48 AM5/3/20
to மின்தமிழ்
source - https://www.facebook.com/subashini.thf/posts/2725471011029612




நூல் விமர்சனம்: 
தமிழக மக்கள் வரலாறு - காலனிய வளர்ச்சிக் காலம் - புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கை!

முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி



            தமிழக வரலாற்றை ஆராய முற்படுபவர்களுக்கு ஐரோப்பிய ஆவணக் குறிப்புகள் தமிழக குறிப்புகளில் கிடைக்காத பல சான்றுகளை அளிக்கின்றன. மிக நீண்ட காலமாகவே ஐரோப்பியர்களது நாட்குறிப்பு எழுதும் பழக்கமும், தாங்கள் செல்கின்ற இடங்களைப் பற்றிய குறிப்புகளை எழுதிவைக்கும் பழக்கமும் வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பண்டைய செய்திகளை அறிந்துகொள்ள நல்வாய்ப்புகளை வழங்குகின்றன. தமிழக ஆய்வுச் சூழலில் பொதுவாகவே வரலாற்றை ஆராய முற்படுபவர்கள் மிகப் பெரும்பாலும் ஐரோப்பியரது ஆய்வு குறிப்புகளில் கவனம் செலுத்துவது மிகக் குறைவாகவே இருக்கிறது. இதற்குக் காரணம், ஆய்வில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலோர் தமிழ் மொழியில் உள்ள ஆவணங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதும். ஐரோப்பிய ஆவணங்கள் பல தமிழகத்தோடும் தமிழர் வரலாற்றோடும் தொடர்புடையன என்ற விவரங்களை அறியாமல் இருப்பதுமே எனலாம். இவ்வகைப் போக்கு, வரலாற்று ஆய்வுகளின் விரிவுகளைக் குறைத்து, குறிப்பிட்ட சிறிய எல்லைக்குள் மட்டுமே ஆய்வுகள் சுருங்கிப்போவதற்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன. இதிலிருந்து மாறுபட்டு, ஐரோப்பிய ஆவணங்களில் முழு கவனம் செலுத்தி அவற்றை ஆராய்ந்து தமிழ்ச் சமூகத்து வரலாற்றுச் செய்திகளை ஒப்பிட்டுப்பார்த்து ஆய்வு செய்பவர்கள் ஒரு சிலரே. அவர்களில் ஒருவர் எஸ்.ஜெயசீல ஸ்டீபன். அவரது எழுத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்து பின் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் 2018ஆம் ஆண்டு வெளிவந்திருக்கும் நூல் `காலனிய வளர்ச்சிக் காலம் - புலம்பெயர்ந்தவர்களின் வரலாறு’. இந்த நூலாசிரியரின் `தமிழக மக்கள் வரலாறு` என்ற தொகுப்பின் கீழ் வெளிவருகின்ற இரண்டாவது நூல் இது. இதன் முந்தைய நூலாக வெளிவந்திருப்பது `காலனிய தொடக்க காலம்’ என்ற நூல்.தொடக்க காலத்தின் தொடர்ச்சியாகக் காலனிய வளர்ச்சிக் காலத்தில் தமிழக அல்லது தமிழகத்துக்குள் புலம்பெயர்வினை ஆராய்கிறது இந்த நூல்.

            இந்த நூலில் ஐந்து பெரும் கட்டுரைகளாக ஐரோப்பிய காலனித்துவ காலகட்டத்தில் தமிழகத்திலிருந்து ஒப்பந்தக் கூலிகளாகப் பயணித்த தமிழக மக்களின் வரலாற்றுச் செய்திகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த ஐந்து கட்டுரைகளுடன் மிக நீண்ட விரிவான முன்னுரை ஒன்றும், நூலின் இறுதியில் முடிவுரை ஒன்றும் ஜெயசீல ஸ்டீபன் அவர்களாலேயே தமிழில் வழங்கப்பட்டிருக்கின்றன.



            மனிதகுலம், அது தோன்றிய காலம் தொட்டே ஓரிடத்தில் நிலை பெறாமல் வெவ்வேறு இடங்களுக்கு மாறிச் செல்வதை இயல்பாகக் கொண்டிருக்கிறது. தமிழக நிலப்பரப்பில் தோன்றிய தமிழினமும் இதற்கு விதிவிலக்கல்ல. இதுகாறும் கிடைக்கின்ற சான்றுகளின் அடிப்படையில் காண்கின்ற போதும், தமிழ் மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு நில வழியாகவும் நீர் வழியாகவும் தொடர்ந்து புலம்பெயர்ந்துகொண்டே இருப்பதை பார்க்கிறோம். பயணப் போக்குவரத்து வசதிகள் இல்லாத காலகட்டத்திலும் மனிதர்கள் கால்நடையாகவே மிக நீண்ட தூரத்துக்குப் பயணம் செய்திருக்கிறார்கள். கடல்வழி பயணம் செய்து வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்ல முடியும் என்பதைப் படகுகளையும் கட்டுமரம் போன்றவற்றையும் உருவாக்கி கடலைக் கடந்து புதிய நிலங்களுக்குச் செல்லும் வழியையும் கண்டுபிடித்து மிக நீண்ட தூரம் பயணத்தைச் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள் மனிதர்கள். இன்று போக்குவரத்து வசதிகள் மிகப்பெரிய அளவிலான மேம்பாடு அடைந்துவிட்டதால் மனிதனின் புலம்பெயர்வு என்பது எளிதாக்கப்பட்டுள்ளது.

            மனிதர்கள் புலம்பெயர்வதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன. அவற்றுள் பெரும்பாலான வேளைகளில் மனிதர்களின் புலம்பெயர்வு என்பது மனிதர்கள் தாங்கள் வாழ்கின்ற சூழலில் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை அனுபவிக்கும்போதும், வாழ்கின்ற இடத்தில் தங்கள் வாழ்க்கையைத் தொடர முடியாத இக்கட்டான சூழல் ஏற்படும்போதும் நிகழ்கின்ற புலம்பெயர்வு எனலாம். இதுகாறும் வாழ்ந்து வந்த பகுதியில் இனி வாழ்வதற்கு வழி இல்லை எனும்போது பெரும்பாலான புலம்பெயர்வுகள் நடைபெறுகின்றன. பொதுவாகவே மனிதர்கள் மட்டுமன்றி ஏனைய உயிர்களின் இயல்பும் அதுவே. அந்த வகையில் தமிழக வரலாற்றை ஆராயும்போது மிகப்பெரும்பாலான தமிழ் மக்களின் புலம்பெயர்வு என்பது தமிழகத்தைத் தாக்கிய பெரும்பஞ்சம் ஏற்பட்டிருந்த 1876-78ஆம் ஆண்டு காலத்திலும் அதற்கு முன்னரும் பின்னரும் நிகழ்ந்த புலம்பெயர்வு எனலாம். இந்த நூல் தமிழகம் பெருவாரியாக, தமிழகம் பஞ்சத்தைச் சந்தித்த காலகட்டத்தில் தமிழகத்திலிருந்து குடிபெயர்ந்து பிரெஞ்சு காலனித்துவ ஆதிக்கம் நிகழ்ந்த தீவுகளுக்கும், பிரிட்டிஷ் காலனித்துவம் ஆதிக்கம் பெற்றிருந்த இலங்கை மற்றும் மலேசியாவுக்கும் குடிபெயர்ந்த வரலாற்று நிகழ்வுகளை ஐரோப்பியர்களின் ஆவணங்களின் அடிப்படையில் மிக விரிவாக அலசி ஆராய்ந்து வெளிப்படுத்துகிறது.

            நூலின் மைய ஆய்வு உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கான தமிழர்களின் புலம்பெயர்வாக அமைகிறது என்றாலும், நூலின் முன்னுரை மாறுபட்ட வகையில் தமிழகத்துக்குள் புலம்பெயர்ந்து வந்த பிராமணர்களின் வருகைக்கான காரணங்களை அலசுகின்றன. முதலாம் ராஜேந்திர சோழன் தனது ஆட்சிக்காலத்தில் ஆந்திராவிலிருந்து வந்த பிராமணர்களுக்கு நிலங்களைக் கொடையாக வழங்கி அவர்களுக்குக் கிராமங்களை உருவாக்கித் தந்த செய்திகளைக்கூறும் கரந்தைச் செப்பேடு இச்செய்திகளை விவரிக்கிறது. எண்ணிக்கையில் அதிகமாகப் புலம்பெயர்ந்த ஆண் பிராமணர்கள் தமிழகத்தில் வேற்று சமூக பெண்களை மணந்து சமூகக் கலப்பு திருமணத்தினால் உருவாகிய செய்தியையும் சில ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. பிரம்மதேய குடியிருப்பில் பிராமணர்கள் வாழ்ந்த பகுதிகள் ‘பிராமணச்சேரி’ என்று தமிழில் குறிக்கப்படுவதையும், குடியிருப்பில் உள்ளும் வெளியிலும் பல்வேறு இடைச்சாதி மற்றும் ஒடுக்கப்பட்டோர் குடியிருப்புகள் உருவான செய்தியையும் காண்கின்றோம். கோயில்கள் மன்னர்களால் அதிகமாகக் கட்டப்பட்ட செய்திகளும் கோயில்களில் பூஜை காரியங்களைப் பராமரித்துச் செயல்படுத்திவரும் பணியைப் பிராமணர்கள் மேற்கொண்டதையும், கோயில்களில் பிரசாதம் தயாரித்து வழங்கும் முறையை அவர்கள் அறிமுகப்படுத்தியமையும், அதற்காக மன்னர்கள் ஏராளமான நிதியைக் கோயில்களுக்கு வழங்கியமையும் கல்வெட்டுகள், செப்பேடுகள் தரும் செய்திகள் வழி நூல் ஆசிரியர் இந்த முன்னுரை பகுதியில் விவரிக்கிறார்.



            கோயில்கள் மற்றும் கோயில் பராமரிப்புகள் என்ற தொடர்பில் பிராமணர்கள் நிகழ்த்தியதாகக் கூறப்படும் குற்றச்செயல்கள் பற்றியும் இந்த முன்னுரை பகுதி விவரிக்கிறது. கோயிலில் உள்ள நகைகள் களவாடப்பட்ட செய்தி, நெல் களவாடப்பட்ட செய்தி, கோயிலிலிருந்த விலையுயர்ந்த ஆடைகளைக் களவாடிய செய்தி, சர்ச்சையின் காரணமாகப் பழிவாங்கச் செய்யப்பட்ட கொலை, கோயில் பொருட்களைத் திருடிய செய்தி எனப் பல்வேறு குற்றச் செயல்களும் அவற்றுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளும் இப்பகுதியில் விவரிக்கப்படுகின்றன. இந்த முன்னுரை பகுதிக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற ஆதாரங்களாக செப்புப் பட்டயங்கள், கல்வெட்டுகள், வரலாற்று நூல்கள், ஆவணக் குறிப்புகள் என மிக நீண்ட பட்டியலையும் ஆசிரியர் வழங்கியிருக்கிறார். முன்னுரைக்கே இத்தனை சான்றுக் குறிப்புகளா என வியக்க வைக்கிறது இப்பகுதி.



            இத்தகைய ஒரு தொடக்கத்திலிருந்து நூலின் முதல் கட்டுரைக்கு நம்மை ஆசிரியர் அழைத்துச் செல்கிறார். இந்த முதல் பகுதி 1729-1883 வரையிலான காலகட்டத்தில் பிரெஞ்சு ஆட்சியில் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலிருந்து மொரீஷியஸ் தீவுக்குப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தக் கூலிகள் பற்றிய செய்திகளாகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாக இதில் நாம் பார்க்க வேண்டியது 4.3.1729 அன்று `லா செரன்` என்ற கப்பலில் புதுச்சேரியிலிருந்து மொரீஷியஸுக்குப் புலம்பெயர்ந்த தமிழ் கைவினைத் தொழிலாளர்கள் பற்றிய செய்தி. பல்வேறு தச்சு வேலை பணியாளர்கள், கொல்லர்கள், கட்டடக் கலைஞர்கள் மற்றும் கைவினை தொழில் திறன் பெற்ற தொழிலாளர்கள் இக்காலகட்டத்தில் மொரீஷியஸ் தீவுக்குப் பணி செய்யச் சென்றார்கள்.

            இதனையடுத்து தொடர்ச்சியாக ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்கள் மொரீஷியஸ் மற்றும் மஸ்கரேனஸ் தீவுகளுக்குச் செல்வது தொடங்கியது. அடிமை ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட சில காலங்களுக்குப் பின்னர் மொரீஷியஸில் காடுகளை அழித்து சர்க்கரை உற்பத்தி ஆலைகளில் பணியாற்ற ஒப்பந்த அடிப்படையிலான கூலித் தொழிலாளர்கள் தமிழகத்தின் புதுச்சேரியிலிருந்தும் காரைக்காலிலிருந்தும் செல்வது தொடங்கியது. இதன் அடிப்படையில் மொரீஷியஸ் போர்ட் லூயியின் புறநகர்ப்பகுதியில் கேம்ப் டி மலபார் பகுதி தமிழர் குடும்பங்களின் குடியிருப்புப் பகுதியாக உருவாகியது. ஒப்பந்தக் கூலிகளாகத் தமிழ் மக்கள் அனுபவித்த மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்கள், சமூக நிகழ்வுகள், தேரே ரூஷ் என்ற பகுதியில் இந்து மக்கள் வழிபாட்டுக்காக 25.10.1856இல் கட்டப்பட்ட முதல் இந்து கோயில் பற்றிய செய்தி, தமிழ் கலை இசை நாடக முயற்சிகள், சமூகப் பிரச்சினைகளைச் சமாளிக்க ஏற்படுத்தப்பட்ட பஞ்சாயத்து போன்ற ஒரு `சபை’ மற்றும் தமிழ்க் கல்விக்கான முயற்சிகள் போன்ற செய்திகள் பிரஞ்சு ஆவணங்களிலிருந்து நூலாசிரியர் கையாண்டிருக்கின்றார். நூலாசிரியர் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலும் ஆழ்ந்த திறன் கொண்டிருப்பதால் நேரடியாக மூல ஆவணங்களை நூல் முழுமையுமே பயன்படுத்தியிருப்பது நூலின் ஆய்வுத்தன்மைக்குக் கூடுதல் வலு சேர்க்கிறது.




            மொரீஷியஸ் தீவில் தமிழ் மக்கள் ஒப்பந்தக் கூலிகளாகப் புலம்பெயர்ந்தது போலவே அதன் அருகில் இருக்கும் ரீயூனியன் தீவுக்கும் தமிழ் மக்கள் இதே காலகட்டத்தில் அதிகமாகக் குடிபெயர்ந்து சென்றனர். மொரீஷியஸ், ரீயூனியன் ஆகிய இரண்டு தீவுகளுக்குமே சென்ற தமிழ் மக்கள்தாம் இத்தீவுகளின் மேம்பாட்டு வளர்ச்சிக்காக மிகப்பெரிய அளவில் பங்காற்றியவர்கள் என்பதை கவனத்துடன் நோக்க வேண்டியுள்ளது. இன்றைய இத்தீவுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையை அமைத்துக் கொடுத்த பெரும் பங்கு ஒப்பந்தக் கூலிகளாகச் சென்ற தமிழர்களையே சாரும். கூலிக்காக வேலை செய்பவரை `கூலி’ என அழைக்கும் வழக்கம் பிரெஞ்சுக்காரர்கள் தமிழ் மொழியிலிருந்து எடுத்துக்கொண்ட சொல். இதே சொல் ஆங்கிலத்திலும் பயன்பாட்டில் வந்தது. இது இன்றும் வழக்கில் உள்ள சொல்லாகவே அமைந்து விட்டது.

            நூலின் அடுத்த கட்டுரையாக அமைவது புதுச்சேரியிலிருந்தும் காரைக்காலிலிருந்தும் பிரெஞ்சு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு ஒப்பந்தக் கூலிகளாகப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களைப் பற்றிய ஆவணத் தகவல்கள். பிரெஞ்சு கரீபியனில் 1830 இல் இருந்து 1840 வரையிலான காலகட்டத்தில் 1.6 மில்லியன் ஆப்பிரிக்க அடிமைகள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். இக்காலகட்டத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து வந்து பணியாற்றிக்கொண்டிருந்த இந்த அடிமைகள் ஏற்படுத்திய கிளர்ச்சியினால் அங்கு விவசாயப் பணிகள் தடைப்பட ஆரம்பித்தன. இதுவே தமிழகத்திலிருந்து ஏராளமான ஒப்பந்தக் கூலிகள் மேற்கு இந்தியத் தீவுகளுக்குப் புலம்பெயர்வதற்கு அடிப்படை காரணத்தை உருவாக்கின.

            தமிழகத்தைத் தாக்கிய பெரும் பஞ்சம் பெருவாரியான தமிழ் மக்கள் மேற்கிந்தியத் தீவுகளுக்குப் புலம்பெயர்வதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இக்காலகட்டத்தில் பிரெஞ்சு அரசு ஒப்பந்தக் கூலிகளைத் திரட்டி அனுப்பும் அமைப்புகளை உருவாக்கிப் பதிவு செய்து நடைமுறைக்குக் கொண்டு வந்தது. `தி சொசைட்டி ஆஃப் இமிகரேஷன்` என்பது அத்தகைய ஓர் அமைப்பாகும். இதில் பணியாற்றும் உள்ளூர் தமிழர்கள் கூலிகளைத் திரட்ட வேண்டிய பணியைச் செய்தார்கள். அப்படித் திரட்டப்பட்ட தொழிலாளர்கள் கப்பல் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு முகவர்களுக்கான சம்பளத்தைப் பெற்றுக்கொள்வார்கள். கப்பல் தலைவர்கள் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்த ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களைக் கப்பலில் ஏற்றிச்சென்று அங்குள்ள தோட்ட உரிமையாளர்களுக்கு விட்டுவிடுவர். இப்படிக் கூலித் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய தேவை இருந்ததால் கயானா, மார்ட்டினிக், குவாடலுப் ஆகிய தீவுகளுக்குத் தமிழ் மக்கள் கூலிகளாகச் செல்வது பெருவாரியாக அமைந்தது.

            இத்தீவுகளுக்குக் கப்பலில் அழைத்துச் செல்லப்பட்ட கூலிகளின் சாதிகள் ஆவணங்களில் குறிக்கப்படுகின்றன. உதாரணமாக குவாடலப் தீவுக்கு 1759ஆம் ஆண்டு 481 கூலிகளை ஏற்றிச் சென்ற கப்பலில் பயணித்த தமிழ்மக்களின் சாதியைப் பட்டியலிடுகிறது ஓர் ஆவணம். மிக அதிகமான எண்ணிக்கையில் பள்ளர், பறையர், பள்ளியார் என்றும் அதற்கடுத்த எண்ணிக்கையில் பஞ்சாயத்தார், வெள்ளாளர், வன்னியர், அகமுடையார், அம்பட்டன், நாவிதர், இடையர், கள்ளர், நெசவாளர் ஆகியோர் என்று எண்ணிக்கை வாரியாக இந்த ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. இக்காலகட்டங்களில் மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பயணித்த பெரும்பாலான தமிழ் மக்கள் அத்தீவுகளை விட்டு திரும்பவில்லை. ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகக் குடிபெயர்ந்த அம்மக்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும்கூட இத்தீவுகளிலேயே தங்களது வாழ்க்கையைத் தொடர்ந்தனர் என்பதை இன்று இத்தீவுகளுக்கு அன்று சென்ற தமிழ் மக்களின் சந்ததியினர் நிறைந்திருப்பதைக் கொண்டு இயல்பாகவே நம்மால் அறிய முடிகிறது.

            இந்த நூலின் அடுத்து வரும் கட்டுரையானது மெட்ராஸில் இருந்து மொரீஷியஸுக்குச் சென்ற தமிழ் ஒப்பந்தக் கூலிகளைப் பற்றி விவரிக்கிறது. கற்பனை செய்து பார்க்கும்போதுகூட மனத்தில் ஆழ்ந்த வலியை ஏற்படுத்தக்கூடிய வகையில் இந்த ஆவணங்கள் குறிப்பிடுகின்ற புலம்பெயர்வுச் செய்திகள் அமைகின்றன. தமிழ்நாட்டிலிருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற பாகுபாடில்லாமல் அடிமை விற்பனை நடந்ததாகவும், உள்ளூருக்குள் அடிமை பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும், சில வேளைகளில் மக்கள் அடமானம் வைக்கப்பட்டதாகவும், அதுமட்டுமன்றி மக்கள் வாடகைக்கு விடப்பட்டதாகவும் ஜே.வான் என்ற ஆங்கிலேய அதிகாரி 1819 ஜூலை 20 அன்று மெட்ராஸ் வருவாய் வாரியத்துக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுவதை இங்கு நாம் சான்றாகக் காணலாம். அடிமைகள் விற்பனை என்பது ஏற்பட்டுவிட்ட காலகட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் 1725 வாக்கில் பரவலாகக் குழந்தைகள் திருடப்பட்டு விற்கப்பட்ட அவலங்களையும் இக்கட்டுரை குறிப்பிடுகிறது. மெட்ராஸிலிருந்து மொரீஷியஸ் தீவுக்குப் பயணித்தவர்கள் மெட்ராஸ், செங்கல்பட்டு, தென்னாற்காடு, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய பகுதிகளைச் சார்ந்தவர்கள் என்றும், மெட்ராஸிலிருந்து வந்த கூலித் தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஓரளவு சூத்திரர்களும் இஸ்லாமியர்களும் என்றும் கப்பல் ஆவணப்பதிவேட்டில் உள்ள தரவுகளை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

            தொடர்ச்சியாக அடுத்து நூலில் வருவது இலங்கைக்கான புலம்பெயர்வு பற்றிய தகவல்களை ஆராயும் பகுதி. இலங்கைத் தீவின் மக்கள் தொகையில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் எனக் குறிப்பிடப்படும் தமிழ் மக்களின் எண்ணிக்கை இன்றைய அளவில் 4.2 விழுக்காடு என அமைகிறது. 1820களில் காபி தோட்டங்களில் கூலி தொழிலாளர்களாகப் பணியாற்றச் சென்ற தமிழ் மக்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தமிழர்கள் மீண்டும் தமிழகம் திரும்பினார்கள் என்றாலும்கூட அடுத்த மாபெரும் அலையாகத் தமிழகத்திலிருந்து இலங்கைத் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியச் சென்ற பெரும்பாலான தமிழ் மக்களே இன்று மலையகப் பெருந்தோட்ட ஊழியர்களாகத் தொடர்கின்றனர். ஆங்கிலேயக் காலனித்துவ காலகட்டத்தில் ஆங்கிலேய அரசினால் பல்வேறு சமூக அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்ட இம்மக்கள் உலகம் எவ்வளவோ முன்னேற்றம் கண்டுவிட்ட இக்காலகட்டத்திலும் இன்றும் தங்கள் அடிப்படை வாழ்வியல் நிலையிலிருந்து மாற்றத்தைப் பெறவில்லை என்பதே இன்றைய பெருந்தோட்ட பகுதிகளுக்குச் செல்லும்போது நாம் கண்கூடாகக் காணக்கூடிய காட்சியாக அமைகின்றன.

            இலங்கை மலையகத்தில் பணியாற்ற, தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய பகுதியில் இருந்து பன்றிப் படகுகளிலும் கப்பல்களிலும் என தமிழ் மக்கள் பெருவாரியாக 1820 தொடக்கத்தில் புலம்பெயரத் தொடங்கினர். தூத்துக்குடி துறைமுகம் வழியாகச் செல்பவர்களுக்குத் தட்டாபாறையிலும் ராமேஸ்வரம் வழியாக செல்பவர்களுக்கு மண்டபத்திலும் முகாம்கள் நிறுவப்பட்டன. இந்தியாவில் 1857இல் நடந்த சிப்பாய் கிளர்ச்சியின் தாக்கத்தினால் இலங்கைக்கான குடியேற்றம் எண்ணிக்கையில் அதிகரித்தது. 1850 முதல் 1861 வரையிலான காலகட்டத்தில் இலங்கைக்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை 671,475 ஆகும். இக்காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கங்காணி முறை இலங்கையைப் போலவே மலேசியாவிலும் நடைமுறையிலிருந்தது. காலனித்துவ அரசின் துரைமார்கள் மற்றும் தோட்ட உரிமையாளர்களினால் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டதோடு தங்கள் சொந்த இனத்தைச் சார்ந்த கங்காணிகளாலும் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதும் நம் வரலாற்றில் நிகழ்ந்த அவலம். 1948ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தது. அதன் பின்னரும் இந்த `இந்திய வம்சாவளி மக்கள்` என அடையாளப்படுத்தப்படும் தமிழ் மக்கள் அனுபவித்த குடியுரிமை பிரச்சினை என்பது 2003ஆம் ஆண்டு வரை பல்வேறு இழுபறி நிலைக்கு உட்படுத்தப்பட்டு `நாடற்றவர்களாக` அவர்கள் நடத்தப்பட்ட அவலம் தொடர்ந்தது. இலங்கையில் பூர்வகுடிகளாக வாழ்கின்ற தமிழ் மக்கள், மற்றும் யாழ்ப்பாணத் தமிழர்களின் அங்கீகாரத்தையும் இம்மக்கள் பெறவில்லை. இன்றளவும் மலையகத் தமிழர்களை யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் தரம் தாழ்த்திப் பேசுவதும், நடைமுறையில் அவர்களைச் சற்றே தாழ்த்திவைத்துப் பார்ப்பதும் இயல்பாக அமைந்துள்ள விஷயமாகத்தான் உள்ளது.

            நூலின் இறுதிக் கட்டுரையாக அமைவது மலாயாவுக்கான தமிழர்களின் புலம்பெயர்வு. 1786 தொடக்கம் 1878 வரையிலான மலாயாவுக்கான தமிழ் வணிகர்கள் மற்றும் நாடு கடத்தப்பட்ட குற்றவாளிகள் பற்றி இந்த நூலின் இறுதிக் கட்டுரை அலசுகிறது. மலாயாவுக்கான தமிழர்களின் வருகை என்பது நீண்ட நெடுங்கால வரலாறு கொண்டது. இந்தக் குறிப்பிட்ட கட்டுரை ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கான செய்திகளை மட்டும் ஆராய்வதாக அமைகிறது. 1786ஆம் ஆண்டு, பிரிட்டிஷார் மலேசியாவின் பினாங்குத் தீவை, தனித்துறைமுக நகரமாக வளர்க்கும் பணியைத் தொடங்கினர். 1786இல் பிரான்சிஸ் லைட் பினாங்குத் தீவில் ஜார்ஜ் டவுன் என்ற துறைமுகத்தையும், பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் நகரையும் உருவாக்கி ஆங்கிலேயர் கொடியேற்றத்தைத் தொடக்கி வைத்தார். அந்த நேரத்தில் தமிழகத்திலிருந்து காதர் மொய்தீன் மரைக்காயர் என்பவர் 1786லிலேயே வணிகத்துக்காகப் புலம்பெயர்ந்திருந்தார். பினாங்குத் தீவின் இந்திய இஸ்லாமியர்களின் தலைவராக காதர் மொய்தீனை பிரிட்டிஷ் அரசு அப்போது நியமித்தது. ஏராளமான தமிழ் இஸ்லாமியர்கள் இக்காலகட்டத்தில் பினாங்கு பகுதிக்கு வந்து சேர்ந்தனர். அப்படி வந்து சேர்ந்தவர்கள் கம்போங் கோலம், லெபோ கிளியா மற்றும் ஜாலான் மஸ்ஜித் கபித்தான் ஆகிய குடியிருப்புப் பகுதிகளை உருவாக்கினர். மலாயாவின் பல்வேறு பகுதிகளுக்குத் தமிழ் இஸ்லாமியர்களின் வணிக முயற்சிகள் மிக விரிவாக்கம் கண்ட ஒரு காலகட்டமாக இது அமைந்தது. பினாங்கில் தர்கா ஒன்றும் கட்டப்பட்டது. இதே காலகட்டத்தில் வணிகத்துக்காக 1801 வாக்கில் வந்த தமிழ் இந்துக்களும் பினாங்கில் குடியேறினர். 1801இல் ஆங்கில கம்பெனி ஜார்ஜ் டவுன் நகரில் இந்துக் கோயில் ஒன்றுக்கு இடம் ஒதுக்கியது. அதே காலகட்டத்தில் பினாங்கு மலையில் முருகன் கோயில் ஒன்றை தமிழ் இந்துக்கள் கட்டினார்கள்.

            ஆங்கிலேயக் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை எதிர்த்த பாளையக்காரர்கள் அக்டோபர் 1801ஆம் ஆண்டில் வீழ்த்தப்பட்டு அதே காலகட்டத்தில் சின்ன மருதுவும் பெரிய மருதுவும் ஊமைத்துரையும் கைது செய்யப்பட்டனர். அக்காலகட்டத்தில் இவர்களில் முக்கியமாக 73 பேர் நிரந்தரமாக நாடு கடத்தப்பட்டனர். இவர்களுள் சிவகங்கையின் வெங்கம் பெரிய உடையத்தேவர், பொம்ம நாயக்கர், பாஞ்சாலங்குறிச்சி தளவாய் குமாரசாமி நாயக்கர் மற்றும் மருது பாண்டியனின் மகன் துரைசாமி ஆகியோரும் அடங்குவர். கப்பலில் கொண்டுவரப்பட்ட இந்த அரசியல் கைதிகள் இருவர் இருவராக விலங்கிட்டு வைக்கப்பட்டிருந்தனர். 76 நாட்கள் பயணத்துக்குப் பிறகு 1802ஆம் ஆண்டு, இவர்கள் பினாங்கு வந்தடைந்தனர். பினாங்குத் தீவு புதிய உருவாக்கத்தில் இந்தத் தமிழ் கைதிகளின் உழைப்பு அடிப்படையை அமைத்தது என்பதை மறுக்கவியலாது. 1805க்குள் நாடு கடத்தப்பட்ட தமிழக அரசியல் கைதிகளின் எண்ணிக்கை 772ஆக உயர்ந்ததாக ஆவணங்கள் குறிப்பிடுவதை நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார். அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான இந்து, இஸ்லாமிய வணிகர்கள் பினாங்கில் குடியேறினர் என்றும் பினாங்கின் மிகப் பெரிய இனமாக அக்காலகட்டத்தில் தமிழர் இருந்தனர் என்றும் பிரிட்டிஷார் ஆவணக் குறிப்புகள் சொல்கின்றன. ஆயினும் அதன் பின்னர் தமிழ் மக்கள் பெருவாரியாகத் தமிழகத்துக்குத் திரும்பிச் சென்றதன் காரணத்தினால் இன்று தமிழ் மக்களின் எண்ணிக்கை பினாங்குத் தீவில் குறைந்து, இப்போது சீனர்கள் பெருவாரியாக நிறைந்த ஒரு மாநிலமாகப் பினாங்கு மாநிலம் அமைந்திருக்கிறது என்பது வருத்தத்தோடு நாம் காணக்கூடிய ஒரு வரலாற்று நிகழ்வு.

            அரசியல் கைதிகளாகக் கொண்டுவரப்பட்டவர்கள் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பின் அடிப்படையில் தமிழகத்துக்குத் திரும்பக்கூடிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்படி விண்ணப்பித்தவர்களில் கிருஷ்ண ஐயர் என்ற ஒருவருக்கு மட்டுமே நாடு திரும்பக் கூடிய வாய்ப்பு அமைந்ததாகவும் ஏனைய அரசியல் கைதிகளுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படாத நிலை ஏற்பட்டது என்பதையும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாத கைதிகள் மீண்டும் மறு விண்ணப்பம் செய்ததையும் காண்கிறோம். அந்த அடிப்படையில் சின்ன மருதுவின் மகன் ராமசாமி இரண்டாவது முறையும் செய்த விண்ணப்பம் திருநெல்வேலி நீதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் ராமசாமி பினாங்கிலேயே வாழ்ந்து இறந்து போனார் என்ற செய்தியும் குறிப்புகளின் வழி நமக்குக் கிடைக்கின்றன. பினாங்கில் மிக அதிகமாகக் குடியேறியவர்களில் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், காஞ்சிபுரம், காரைக்கால், நாகூர் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த மக்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் அமைந்திருந்தனர். மெட்ராஸிலிருந்தும் நாகப்பட்டினத்திலிருந்தும் என இரண்டு துறைமுகப் பகுதிகளிலிருந்தும் வந்த கப்பல்களில் வந்த தமிழ் மக்கள் பினாங்குத் தீவுக்கு வந்து சேர்ந்தார்கள்.

            மலாயாவுக்குத் தமிழகத்திலிருந்து பெருவாரியான தமிழ் மக்கள் குடியேற்றம் என்பது ஒப்பந்தக் கூலிகளாக அவர்கள் மலாயாவின் பல பகுதிகளில் காடுகளை அழித்து உருவாக்கப்பட்ட ரப்பர் மற்றும் செம்பனைத் தோட்டங்களில் ஒப்பந்தக் கூலிகளாகப் பணியாற்றக் குடியேற்றப்பட்டவர்கள். 19ஆம் நூற்றாண்டில் ஒப்பந்தக் கூலிகளாக ஏராளமான தமிழ் மக்கள் மலாயாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் பதிந்துகொண்ட பெருந்தோட்ட உரிமையாளர்களால் கொண்டுவரப்பட்டனர். இவர்களது நிலை ஏறக்குறைய இலங்கை மலையக பகுதிக்குக் குடிபெயர்ந்த தமிழ் மக்களின் நிலையை ஒத்ததாகவே அமைந்திருந்தது. படிப்படியான தமிழ் மக்களின் கல்விச்சூழல் மற்றும் 1958இல் மலாயா சுதந்திரம் பெற்று மலேசியாவாக மாறிய பின்னர் நிகழ்ந்த மேம்பாட்டு முயற்சிகள் ஆகிய முன்னெடுப்புகள் மலேசியாவில் தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் பெரும் பங்கு வகித்தன. ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூலித் தொழிலாளிகளாகப் பணியாற்ற வந்த தமிழ் மக்கள் இன்று தோட்டங்களில் நிலங்களை வாங்கி நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாகப் பொருளாதார பலம்பெற்ற சூழல் உருவாகியிருக்கிறது. மலேசியாவின் வளர்ச்சியில் தமிழ் மக்களின் உடல் உழைப்பும் அர்ப்பணிப்பும் பின்னிப் பிணைந்து கலந்திருக்கிறது.

            இந்நூல் விவரிக்கும் செய்திகளின் அடிப்படையில் காணும்போது ஒப்பந்தக் கூலிகளாக உலகின் பல்வேறு தீவுகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களில் மிகப் பெரும்பான்மையோர் தமிழக சாதி கட்டுப்பாட்டு அமைப்பில் ஒடுக்கப்பட்டவர்களாக, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டவர்களாக, அடிமைகளாக, சமூகத்தின் கீழ்த்தளத்தில் வைக்கப்பட்டிருந்த மக்களாகவே இருக்கின்றனர். கொடூரமான சமூக வாழ்வியல் சூழல் ஆகியவை இம்மக்களை தங்கள் இயல்பான நிலத்திலிருந்து வலுக்கட்டாயமாகப் பெயர்த்து புதிய நிலங்களுக்குத் தள்ளிய சூழலைக் காண்கின்றோம். புதிய சூழலில் தொடக்கக் கால வாழ்க்கை நிலை என்பது கற்பனைக்கு எட்டாத கொடூரமான சூழலாக இருந்தது என்பதே உண்மை. ஆனாலும்கூட, படிப்படியாக இம்மக்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உருவான பல்வேறு சட்டங்கள் தமிழ் மக்களின் வாழ்க்கைச் சூழலைக் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தியுள்ளன என்பதைத்தான் இன்று காண்கின்றோம். கல்வித் துறைகளில் மேம்பாடு, வணிகத் துறைகளில் மேம்பாடு, ஆளுமை, சொத்து உடமை, அரசியல் அதிகாரம் பெறுதல் என்ற வகையில் தமிழ் மக்கள் தாங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உயரிய வாழ்க்கை பொருளாதாரச் சூழலை அனுபவிக்கும் நிலைக்குச் சென்றிருப்பதைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் இன்றளவும்கூட நடைமுறையில் கிடைக்காத சுயமரியாதையும் இயல்பாகத் தமிழ் மக்கள் அனுபவிக்கும் நிலை இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் உருவாகியுள்ளது. அரசியல் தலைமைத்துவம் பெற்று நாட்டின் அரசியல் தலைவர்களாக இம்மக்களின் பிரதிநிதிகள் செயல்படுவதை மொரீஷியஸ், மலேசியா, சிங்கை, மேற்கிந்தியத் தீவுகள், ரீயூனியன், பிஜி தீவுகளில் இன்று காண்கின்றோம். இம்மாற்றம் வலி நிறைந்த நீண்ட பயணத்தின் மாபெரும் சாதனை.



            தமிழகத்தில் இன்றும்கூட பல்வேறு சீர்திருத்த முயற்சிகளுக்குப் பிறகும் சாத்தியப்படாத சாதி ஒழிப்பு என்பது தமிழ் மக்கள் புலம்பெயர்ந்த பல்வேறு நாடுகளில் மிகப் பெரிய அளவில் சாத்தியமடைந்திருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக அமைவது புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அங்கு வாழ்கின்ற பூர்வகுடி மக்களோடு அல்லது தமிழ் மக்களிலேயே வெவ்வேறு சாதி சமூகத்தைச் சார்ந்த மக்களோடு திருமண கலப்பினால் ஏற்பட்ட கலப்பு எனலாம். இந்த நிலை சாதி வேறுபாட்டை மிகக் குறைந்திருக்கிறது அல்லது ஒழித்திருக்கிறது. இன்று தமிழர் புலம்பெயர்ந்த பல நாடுகளில் சாதிப் பெயர்கள் என்பன தமிழகத்தில் சொல்லப்படும் பொருள் என்றில்லாமல் குடும்பப்பெயர் என்ற அளவில் கிடைக்கும் ஒரு சாதிப்பெயரை குடும்பப் பெயராக வைத்துக் கொள்ளும் நிலை உள்ளதை தென்னாப்பிரிக்கா போன்ற நாட்களில் மிகத் தெளிவாகக் காண்கின்றோம். கடந்த 200 ஆண்டுகளில் உலகின் பல பகுதிகளுக்குத் தமிழ் மக்கள் பரந்து விரிந்து சென்று தமிழர்கள் இல்லாத நிலப்பகுதிகளே இல்லை என்று சொல்லிக்கொள்ளும் வகையில் விரிவான புலம்பெயர்வைச் சாத்தியப்படுத்திய ஒரு வரலாற்று நிகழ்வாகவும் இந்தக் காலனித்துவ காலத்தின் செயல்பாடுகள் அமைகின்றன.

            உலகம் முழுவதும் ஒப்பந்த முறையில் பணியாற்றுவது என்பது இன்றும்கூட வழக்கிலிருக்கும் ஒன்றுதான். இன்றைய நாகரிக உலகில் குறிப்பிட்ட சில காலங்களுக்குக் கான்ட்ராக்ட் அடிப்படையில் தொழில் திறமை பெற்றவர் பணியாற்றுவது மிக இயல்பான ஒன்றாக வளர்ந்துள்ளது. இன்று ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் பல்வேறு சலுகைகளைத் தொழில் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அடிப்படை தொழிலாளர் நலமாக நிர்ணயிக்கின்றன. ஆயினும்கூட எல்லா தொழிற்கூடங்களும் தமது பணியாளர்களுக்கு எல்லா சலுகைகளையும் முறையாக வழங்குவதில்லை. இது பற்றிய செய்திகளையும் இது தொடர்பான கோரிக்கைகளையும் தொடர்ந்து பல்வேறு ஊடகங்களின் வழி நாம் அவ்வப்போது காண்கின்றோம். மனித உரிமைகளின் தேவை பற்றிய விரிவான புரிதல் அமைந்திருக்கும் இந்தக் காலகட்டத்திலும்கூட அடிப்படை உரிமைகள் மீறப்படுவது பற்றி கவலைப்படும் நாம், இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களின் நிலை எவ்வகையில் அமைந்திருக்கும் என்பதை ஆராய வேண்டியது அவசியமாகிறது. அதை மிக மிகச் சிறப்பாக இந்த நூல் வெளிப்படுத்துகிறது.

            இந்த நூலின் பலமாக அமைவது நூலின் ஒவ்வொரு கட்டுரைகளுக்கும் நூலாசிரியர் வழங்கியிருக்கின்ற ஆவணங்களின் சான்றுப் பட்டியல். தமிழக வரலாற்று ஆய்வாளர்கள் அதிகம் தொடாத ஓர் ஆய்வுத்துறையாகவே காலனிய கால வரலாறும் அதன் தாக்கத்தால் நிகழ்ந்த மக்களின் புலம்பெயர்வும் உள்ளன. இத்துறையில் மேலும் பல ஆய்வாளர்கள் தயக்கம் நீக்கி ஆர்வம் காட்ட வேண்டும். ஐரோப்பிய ஆவணப் பாதுகாப்பகங்களில் உள்ள ஆவணங்கள் தமிழக ஆய்வு மாணவர்களால் ஆராயப்பட்டு தமிழர் மற்றும் தமிழக வரலாறு பற்றிய புதிய தரவுகளும் தகவல்களும் வெளியிடப்பட வேண்டும். அத்தகைய முயற்சிகளுக்கு இந்த நூல் வழிகாட்டுகிறது!


நூல்: தமிழக மக்கள் வரலாறு காலனிய வளர்ச்சிக் காலம் - புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை
நூலாசிரியர்: எஸ்.ஜெயசீல ஸ்டீபன் (தமிழில்: ரகு அந்தோணி)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை: 175/-

கட்டுரையாளர் குறிப்பு:


முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலத்தில் டிஎக்ஸ்சி டெக்னோலஜி என்ற நிறுவனத்தின் ஐரோப்பியப் பகுதி கணினிக் கட்டமைப்புத் துறை தலைமை பொறியியலாளராகப் பணிபுரிகின்றார். இவர் தமிழ் மரபு அறக்கட்டளை என்ற பன்னாட்டு அமைப்பின் தோற்றுனர் மற்றும் தலைவருமாவார். இந்தப் பன்னாட்டு அமைப்பு உலகளாவிய தமிழர் வரலாறு, மொழி, பண்பாடு தொடர்பான ஆவணங்களை மின்னாக்கம் செய்வது, அவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வது மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்ற ஓர் அமைப்பாகும்.

நன்றி:  மின்னம்பலம் 
ஞாயிறு, 3 மே 2020


தேமொழி

unread,
May 3, 2020, 4:21:30 AM5/3/20
to மின்தமிழ்
***  இணையப்பதிவில் வெட்டுப்பட்ட பகுதி.. மீண்டும் .. கீழே.....


            இலங்கை மலையகத்தில் பணியாற்ற, தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய பகுதியில் இருந்து பன்றிப் படகுகளிலும் கப்பல்களிலும் என தமிழ் மக்கள் பெருவாரியாக 1820 தொடக்கத்தில் புலம்பெயரத் தொடங்கினர். தூத்துக்குடி துறைமுகம் வழியாகச் செல்பவர்களுக்குத் தட்டாபாறையிலும் ராமேஸ்வரம் வழியாக செல்பவர்களுக்கு மண்டபத்திலும் முகாம்கள் நிறுவப்பட்டன. இந்தியாவில் 1857இல் நடந்த சிப்பாய் கிளர்ச்சியின் தாக்கத்தினால் இலங்கைக்கான குடியேற்றம் எண்ணிக்கையில் அதிகரித்தது. 1850 முதல் 1861 வரையிலான காலகட்டத்தில் இலங்கைக்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை 671,475 ஆகும். இக்காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கங்காணி முறை இலங்கையைப் போலவே மலேசியாவிலும் நடைமுறையிலிருந்தது. காலனித்துவ அரசின் துரைமார்கள் மற்றும் தோட்ட உரிமையாளர்களினால் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டதோடு தங்கள் சொந்த இனத்தைச் சார்ந்த கங்காணிகளாலும் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதும் நம் வரலாற்றில் நிகழ்ந்த அவலம். 1948ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தது. அதன் பின்னரும் இந்த `இந்திய வம்சாவளி மக்கள்` என அடையாளப்படுத்தப்படும் தமிழ் மக்கள் அனுபவித்த குடியுரிமை பிரச்சினை என்பது 2003ஆம் ஆண்டு வரை பல்வேறு இழுபறி நிலைக்கு உட்படுத்தப்பட்டு `நாடற்றவர்களாக` அவர்கள் நடத்தப்பட்ட அவலம் தொடர்ந்தது. இலங்கையில் பூர்வகுடிகளாக வாழ்கின்ற தமிழ் மக்கள், மற்றும் யாழ்ப்பாணத் தமிழர்களின் அங்கீகாரத்தையும் இம்மக்கள் பெறவில்லை. இன்றளவும் மலையகத் தமிழர்களை யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் தரம் தாழ்த்திப் பேசுவதும், நடைமுறையில் அவர்களைச் சற்றே தாழ்த்திவைத்துப் பார்ப்பதும் இயல்பாக அமைந்துள்ள விஷயமாகத்தான் உள்ளது.

            நூலின் இறுதிக் கட்டுரையாக அமைவது மலாயாவுக்கான தமிழர்களின் புலம்பெயர்வு. 1786 தொடக்கம் 1878 வரையிலான மலாயாவுக்கான தமிழ் வணிகர்கள் மற்றும் நாடு கடத்தப்பட்ட குற்றவாளிகள் பற்றி இந்த நூலின் இறுதிக் கட்டுரை அலசுகிறது. மலாயாவுக்கான தமிழர்களின் வருகை என்பது நீண்ட நெடுங்கால வரலாறு கொண்டது. இந்தக் குறிப்பிட்ட கட்டுரை ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கான செய்திகளை மட்டும் ஆராய்வதாக அமைகிறது. 1786ஆம் ஆண்டு, பிரிட்டிஷார் மலேசியாவின் பினாங்குத் தீவை, தனித்துறைமுக நகரமாக வளர்க்கும் பணியைத் தொடங்கினர். 1786இல் பிரான்சிஸ் லைட் பினாங்குத் தீவில் ஜார்ஜ் டவுன் என்ற துறைமுகத்தையும், பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் நகரையும் உருவாக்கி ஆங்கிலேயர் கொடியேற்றத்தைத் தொடக்கி வைத்தார். அந்த நேரத்தில் தமிழகத்திலிருந்து காதர் மொய்தீன் மரைக்காயர் என்பவர் 1786லிலேயே வணிகத்துக்காகப் புலம்பெயர்ந்திருந்தார். பினாங்குத் தீவின் இந்திய இஸ்லாமியர்களின் தலைவராக காதர் மொய்தீனை பிரிட்டிஷ் அரசு அப்போது நியமித்தது. ஏராளமான தமிழ் இஸ்லாமியர்கள் இக்காலகட்டத்தில் பினாங்கு பகுதிக்கு வந்து சேர்ந்தனர். அப்படி வந்து சேர்ந்தவர்கள் கம்போங் கோலம், லெபோ கிளியா மற்றும் ஜாலான் மஸ்ஜித் கபித்தான் ஆகிய குடியிருப்புப் பகுதிகளை உருவாக்கினர். மலாயாவின் பல்வேறு பகுதிகளுக்குத் தமிழ் இஸ்லாமியர்களின் வணிக முயற்சிகள் மிக விரிவாக்கம் கண்ட ஒரு காலகட்டமாக இது அமைந்தது. பினாங்கில் தர்கா ஒன்றும் கட்டப்பட்டது. இதே காலகட்டத்தில் வணிகத்துக்காக 1801 வாக்கில் வந்த தமிழ் இந்துக்களும் பினாங்கில் குடியேறினர். 1801இல் ஆங்கில கம்பெனி ஜார்ஜ் டவுன் நகரில் இந்துக் கோயில் ஒன்றுக்கு இடம் ஒதுக்கியது. அதே காலகட்டத்தில் பினாங்கு மலையில் முருகன் கோயில் ஒன்றை தமிழ் இந்துக்கள் கட்டினார்கள்.

            ஆங்கிலேயக் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை எதிர்த்த பாளையக்காரர்கள் அக்டோபர் 1801ஆம் ஆண்டில் வீழ்த்தப்பட்டு அதே காலகட்டத்தில் சின்ன மருதுவும் பெரிய மருதுவும் ஊமைத்துரையும் கைது செய்யப்பட்டனர். அக்காலகட்டத்தில் இவர்களில் முக்கியமாக 73 பேர் நிரந்தரமாக நாடு கடத்தப்பட்டனர். இவர்களுள் சிவகங்கையின் வெங்கம் பெரிய உடையத்தேவர், பொம்ம நாயக்கர், பாஞ்சாலங்குறிச்சி தளவாய் குமாரசாமி நாயக்கர் மற்றும் மருது பாண்டியனின் மகன் துரைசாமி ஆகியோரும் அடங்குவர். கப்பலில் கொண்டுவரப்பட்ட இந்த அரசியல் கைதிகள் இருவர் இருவராக விலங்கிட்டு வைக்கப்பட்டிருந்தனர். 76 நாட்கள் பயணத்துக்குப் பிறகு 1802ஆம் ஆண்டு, இவர்கள் பினாங்கு வந்தடைந்தனர். பினாங்குத் தீவு புதிய உருவாக்கத்தில் இந்தத் தமிழ் கைதிகளின் உழைப்பு அடிப்படையை அமைத்தது என்பதை மறுக்கவியலாது. 1805க்குள் நாடு கடத்தப்பட்ட தமிழக அரசியல் கைதிகளின் எண்ணிக்கை 772ஆக உயர்ந்ததாக ஆவணங்கள் குறிப்பிடுவதை நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார். அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான இந்து, இஸ்லாமிய வணிகர்கள் பினாங்கில் குடியேறினர் என்றும் பினாங்கின் மிகப் பெரிய இனமாக அக்காலகட்டத்தில் தமிழர் இருந்தனர் என்றும் பிரிட்டிஷார் ஆவணக் குறிப்புகள் சொல்கின்றன. ஆயினும் அதன் பின்னர் தமிழ் மக்கள் பெருவாரியாகத் தமிழகத்துக்குத் திரும்பிச் சென்றதன் காரணத்தினால் இன்று தமிழ் மக்களின் எண்ணிக்கை பினாங்குத் தீவில் குறைந்து, இப்போது சீனர்கள் பெருவாரியாக நிறைந்த ஒரு மாநிலமாகப் பினாங்கு மாநிலம் அமைந்திருக்கிறது என்பது வருத்தத்தோடு நாம் காணக்கூடிய ஒரு வரலாற்று நிகழ்வு.

            அரசியல் கைதிகளாகக் கொண்டுவரப்பட்டவர்கள் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பின் அடிப்படையில் தமிழகத்துக்குத் திரும்பக்கூடிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்படி விண்ணப்பித்தவர்களில் கிருஷ்ண ஐயர் என்ற ஒருவருக்கு மட்டுமே நாடு திரும்பக் கூடிய வாய்ப்பு அமைந்ததாகவும் ஏனைய அரசியல் கைதிகளுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படாத நிலை ஏற்பட்டது என்பதையும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாத கைதிகள் மீண்டும் மறு விண்ணப்பம் செய்ததையும் காண்கிறோம். அந்த அடிப்படையில் சின்ன மருதுவின் மகன் ராமசாமி இரண்டாவது முறையும் செய்த விண்ணப்பம் திருநெல்வேலி நீதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் ராமசாமி பினாங்கிலேயே வாழ்ந்து இறந்து போனார் என்ற செய்தியும் குறிப்புகளின் வழி நமக்குக் கிடைக்கின்றன. பினாங்கில் மிக அதிகமாகக் குடியேறியவர்களில் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், காஞ்சிபுரம், காரைக்கால், நாகூர் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த மக்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் அமைந்திருந்தனர். மெட்ராஸிலிருந்தும் நாகப்பட்டினத்திலிருந்தும் என இரண்டு துறைமுகப் பகுதிகளிலிருந்தும் வந்த கப்பல்களில் வந்த தமிழ் மக்கள் பினாங்குத் தீவுக்கு வந்து சேர்ந்தார்கள்.

            மலாயாவுக்குத் தமிழகத்திலிருந்து பெருவாரியான தமிழ் மக்கள் குடியேற்றம் என்பது ஒப்பந்தக் கூலிகளாக அவர்கள் மலாயாவின் பல பகுதிகளில் காடுகளை அழித்து உருவாக்கப்பட்ட ரப்பர் மற்றும் செம்பனைத் தோட்டங்களில் ஒப்பந்தக் கூலிகளாகப் பணியாற்றக் குடியேற்றப்பட்டவர்கள். 19ஆம் நூற்றாண்டில் ஒப்பந்தக் கூலிகளாக ஏராளமான தமிழ் மக்கள் மலாயாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் பதிந்துகொண்ட பெருந்தோட்ட உரிமையாளர்களால் கொண்டுவரப்பட்டனர். இவர்களது நிலை ஏறக்குறைய இலங்கை மலையக பகுதிக்குக் குடிபெயர்ந்த தமிழ் மக்களின் நிலையை ஒத்ததாகவே அமைந்திருந்தது. படிப்படியான தமிழ் மக்களின் கல்விச்சூழல் மற்றும் 1958இல் மலாயா சுதந்திரம் பெற்று மலேசியாவாக மாறிய பின்னர் நிகழ்ந்த மேம்பாட்டு முயற்சிகள் ஆகிய முன்னெடுப்புகள் மலேசியாவில் தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் பெரும் பங்கு வகித்தன. ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூலித் தொழிலாளிகளாகப் பணியாற்ற வந்த தமிழ் மக்கள் இன்று தோட்டங்களில் நிலங்களை வாங்கி நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாகப் பொருளாதார பலம்பெற்ற சூழல் உருவாகியிருக்கிறது. மலேசியாவின் வளர்ச்சியில் தமிழ் மக்களின் உடல் உழைப்பும் அர்ப்பணிப்பும் பின்னிப் பிணைந்து கலந்திருக்கிறது.

            இந்நூல் விவரிக்கும் செய்திகளின் அடிப்படையில் காணும்போது ஒப்பந்தக் கூலிகளாக உலகின் பல்வேறு தீவுகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களில் மிகப் பெரும்பான்மையோர் தமிழக சாதி கட்டுப்பாட்டு அமைப்பில் ஒடுக்கப்பட்டவர்களாக, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டவர்களாக, அடிமைகளாக, சமூகத்தின் கீழ்த்தளத்தில் வைக்கப்பட்டிருந்த மக்களாகவே இருக்கின்றனர். கொடூரமான சமூக வாழ்வியல் சூழல் ஆகியவை இம்மக்களை தங்கள் இயல்பான நிலத்திலிருந்து வலுக்கட்டாயமாகப் பெயர்த்து புதிய நிலங்களுக்குத் தள்ளிய சூழலைக் காண்கின்றோம். புதிய சூழலில் தொடக்கக் கால வாழ்க்கை நிலை என்பது கற்பனைக்கு எட்டாத கொடூரமான சூழலாக இருந்தது என்பதே உண்மை. ஆனாலும்கூட, படிப்படியாக இம்மக்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உருவான பல்வேறு சட்டங்கள் தமிழ் மக்களின் வாழ்க்கைச் சூழலைக் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தியுள்ளன என்பதைத்தான் இன்று காண்கின்றோம். கல்வித் துறைகளில் மேம்பாடு, வணிகத் துறைகளில் மேம்பாடு, ஆளுமை, சொத்து உடமை, அரசியல் அதிகாரம் பெறுதல் என்ற வகையில் தமிழ் மக்கள் தாங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உயரிய வாழ்க்கை பொருளாதாரச் சூழலை அனுபவிக்கும் நிலைக்குச் சென்றிருப்பதைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் இன்றளவும்கூட நடைமுறையில் கிடைக்காத சுயமரியாதையும் இயல்பாகத் தமிழ் மக்கள் அனுபவிக்கும் நிலை இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் உருவாகியுள்ளது. அரசியல் தலைமைத்துவம் பெற்று நாட்டின் அரசியல் தலைவர்களாக இம்மக்களின் பிரதிநிதிகள் செயல்படுவதை மொரீஷியஸ், மலேசியா, சிங்கை, மேற்கிந்தியத் தீவுகள், ரீயூனியன், பிஜி தீவுகளில் இன்று காண்கின்றோம். இம்மாற்றம் வலி நிறைந்த நீண்ட பயணத்தின் மாபெரும் சாதனை.



            தமிழகத்தில் இன்றும்கூட பல்வேறு சீர்திருத்த முயற்சிகளுக்குப் பிறகும் சாத்தியப்படாத சாதி ஒழிப்பு என்பது தமிழ் மக்கள் புலம்பெயர்ந்த பல்வேறு நாடுகளில் மிகப் பெரிய அளவில் சாத்தியமடைந்திருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக அமைவது புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அங்கு வாழ்கின்ற பூர்வகுடி மக்களோடு அல்லது தமிழ் மக்களிலேயே வெவ்வேறு சாதி சமூகத்தைச் சார்ந்த மக்களோடு திருமண கலப்பினால் ஏற்பட்ட கலப்பு எனலாம். இந்த நிலை சாதி வேறுபாட்டை மிகக் குறைந்திருக்கிறது அல்லது ஒழித்திருக்கிறது. இன்று தமிழர் புலம்பெயர்ந்த பல நாடுகளில் சாதிப் பெயர்கள் என்பன தமிழகத்தில் சொல்லப்படும் பொருள் என்றில்லாமல் குடும்பப்பெயர் என்ற அளவில் கிடைக்கும் ஒரு சாதிப்பெயரை குடும்பப் பெயராக வைத்துக் கொள்ளும் நிலை உள்ளதை தென்னாப்பிரிக்கா போன்ற நாட்களில் மிகத் தெளிவாகக் காண்கின்றோம். கடந்த 200 ஆண்டுகளில் உலகின் பல பகுதிகளுக்குத் தமிழ் மக்கள் பரந்து விரிந்து சென்று தமிழர்கள் இல்லாத நிலப்பகுதிகளே இல்லை என்று சொல்லிக்கொள்ளும் வகையில் விரிவான புலம்பெயர்வைச் சாத்தியப்படுத்திய ஒரு வரலாற்று நிகழ்வாகவும் இந்தக் காலனித்துவ காலத்தின் செயல்பாடுகள் அமைகின்றன.

            உலகம் முழுவதும் ஒப்பந்த முறையில் பணியாற்றுவது என்பது இன்றும்கூட வழக்கிலிருக்கும் ஒன்றுதான். இன்றைய நாகரிக உலகில் குறிப்பிட்ட சில காலங்களுக்குக் கான்ட்ராக்ட் அடிப்படையில் தொழில் திறமை பெற்றவர் பணியாற்றுவது மிக இயல்பான ஒன்றாக வளர்ந்துள்ளது. இன்று ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் பல்வேறு சலுகைகளைத் தொழில் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அடிப்படை தொழிலாளர் நலமாக நிர்ணயிக்கின்றன. ஆயினும்கூட எல்லா தொழிற்கூடங்களும் தமது பணியாளர்களுக்கு எல்லா சலுகைகளையும் முறையாக வழங்குவதில்லை. இது பற்றிய செய்திகளையும் இது தொடர்பான கோரிக்கைகளையும் தொடர்ந்து பல்வேறு ஊடகங்களின் வழி நாம் அவ்வப்போது காண்கின்றோம். மனித உரிமைகளின் தேவை பற்றிய விரிவான புரிதல் அமைந்திருக்கும் இந்தக் காலகட்டத்திலும்கூட அடிப்படை உரிமைகள் மீறப்படுவது பற்றி கவலைப்படும் நாம், இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களின் நிலை எவ்வகையில் அமைந்திருக்கும் என்பதை ஆராய வேண்டியது அவசியமாகிறது. அதை மிக மிகச் சிறப்பாக இந்த நூல் வெளிப்படுத்துகிறது.

            இந்த நூலின் பலமாக அமைவது நூலின் ஒவ்வொரு கட்டுரைகளுக்கும் நூலாசிரியர் வழங்கியிருக்கின்ற ஆவணங்களின் சான்றுப் பட்டியல். தமிழக வரலாற்று ஆய்வாளர்கள் அதிகம் தொடாத ஓர் ஆய்வுத்துறையாகவே காலனிய கால வரலாறும் அதன் தாக்கத்தால் நிகழ்ந்த மக்களின் புலம்பெயர்வும் உள்ளன. இத்துறையில் மேலும் பல ஆய்வாளர்கள் தயக்கம் நீக்கி ஆர்வம் காட்ட வேண்டும். ஐரோப்பிய ஆவணப் பாதுகாப்பகங்களில் உள்ள ஆவணங்கள் தமிழக ஆய்வு மாணவர்களால் ஆராயப்பட்டு தமிழர் மற்றும் தமிழக வரலாறு பற்றிய புதிய தரவுகளும் தகவல்களும் வெளியிடப்பட வேண்டும். அத்தகைய முயற்சிகளுக்கு இந்த நூல் வழிகாட்டுகிறது!


நூல்: தமிழக மக்கள் வரலாறு காலனிய வளர்ச்சிக் காலம் - புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை
நூலாசிரியர்: எஸ்.ஜெயசீல ஸ்டீபன் (தமிழில்: ரகு அந்தோணி)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை: 175/-

கட்டுரையாளர் குறிப்பு:


முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலத்தில் டிஎக்ஸ்சி டெக்னோலஜி என்ற நிறுவனத்தின் ஐரோப்பியப் பகுதி கணினிக் கட்டமைப்புத் துறை தலைமை பொறியியலாளராகப் பணிபுரிகின்றார். இவர் தமிழ் மரபு அறக்கட்டளை என்ற பன்னாட்டு அமைப்பின் தோற்றுனர் மற்றும் தலைவருமாவார். இந்தப் பன்னாட்டு அமைப்பு உலகளாவிய தமிழர் வரலாறு, மொழி, பண்பாடு தொடர்பான ஆவணங்களை மின்னாக்கம் செய்வது, அவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வது மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்ற ஓர் அமைப்பாகும்.

நன்றி:  மின்னம்பலம் 
ஞாயிறு, 3 மே 2020


___________________________________

தேமொழி

unread,
May 16, 2020, 1:20:20 AM5/16/20
to மின்தமிழ்

சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை - தலித் இதழ்கள் 1869-1943


சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை - தலித் இதழ்கள் 1869-1943
நூல் விமர்சனம்

ஆசிரியர் ஜெ.பாலசுப்பிரமணியம்




பல நூறு ஆண்டுகளாகச் சாதீய உயர்வு தாழ்வுகளால் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள், 19ம் நூற்றாண்டின் இறுதிக்காலக்கட்டத்தில் தமக்குக் கிடைத்த கல்வி வாய்ப்புகளின் பலனாலும் அக்கால சுயமரியாதை சிந்தனை எழுச்சியின் காரணத்தினாலும் சமூக விழிப்புணர்வு பெற்றனர். சமூகப் பார்வை என்பது அரசியல் பார்வையுடன் ஒருமித்த வகையில், அக்காலகட்ட எழுச்சி நிலை அமைந்திருந்தது. இந்த விழிப்புணர்வின் அடையாளமாகத் தலித் மக்கள் முயற்சியில், தமது சமூகத்தவர் பிரச்சனைகளை அலசும் வகையிலும், தீர்வுகளைக் காண முனையும் வகையிலும் இதழ்கள் வெளிவரத்தொடங்கின. இந்த இதழ்கள், பத்திரிக்கைகள் பற்றி இன்று பலரும் மறந்து விட்ட சூழலில் கி.பி. 19ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வெளிவந்த 42 தலித் பத்திரிக்கைகள், இதழ்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி அவற்றை மேற்கோள்களுடனும், அவற்றை வெளியிட்ட ஆசிரியர், பதிப்பகத்தார் பற்றியும் தொகுத்து நல்லதொரு நூலைப் படைத்திருக்கின்றார் நூலாசிரியர். எனது அண்மைய வாசிப்புக்களில் மிக விரிவான களப்பணியுடன் கூடிய ஒரு ஆய்வு நூலாக இந்த நூலைக் காண்கின்றேன். 

20ம் நூற்றாண்டின் பத்திரிக்கை மற்றும் இதழ்கள் பற்றின முயற்சி எனப் பேசத்தொடங்கும் போது பொதுவாக பலரும் அறிந்தவையாக இருப்பவை சுதேசமித்திரன், இந்தியா, ஆனந்த விகடன், கலைமகள், கல்கி எனக் குறிப்பிடலாம். தலித் இதழ்கள் எனக் குறிப்பிட்டு தேடத் தொடங்கினால் ஒரு சிலருக்கு அயோத்திதாசப் பண்டிதரது முயற்சியில் வெளிவந்த ஒரு பைசா தமிழன் பத்திரிக்கை நினைவுக்கு வரலாம். இந்த நூலிலோ 42 இலக்கிய முயற்சிகள் தலித் சமூக விழிப்புணர்ச்சிக்காக இயங்கியமை பற்றியும் இவை அனைத்துமே தலித் சமூகத்தவரால் தொடங்கி நடத்தப்பட்டவை என்பதையும் அறிகின்றோம். 

கல்வி பெறுவதிலிருந்து ஒதுக்கப்பட்ட தலித் சமூகத்தவர் கல்வி பெற வேண்டும் என சீரிய பணியாற்றியோர் பலரைப் பற்றி இன்று யாரும் பேசுவதில்லை. திரு.ஜான் ரத்தினம் அயோத்திதாசப்பண்டிதரோடு இணைந்து திராவிடப்பாண்டியன் என்ற இதழை நடத்தியவர். இவர் 1889ம் ஆண்டு தலித் சமூகத்துக் குழந்தைகள் கல்வி கற்கும் வகை செய்ய ஒரு மாதிரி பள்ளியை உருவாக்கியிருக்கின்றார். 1892ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஆண் பெண் குழந்தைகள் இருபாலருக்கும் என ஒரு பெரிய பள்ளிக்கூடத்தைத் தொடங்கியிருக்கின்றார். அதோடு சென்னை மக்கீம் நகரில் ஒரு பள்ளிக்கூடத்தையும், 1889ம் ஆண்டு பெண்களுக்கான மாணவியர் விடுதி ஒன்றையும் உருவாக்கியிருக்கின்றார். இவருக்கு அடுத்து 1906ம் ஆண்டு எம்.ஒய்.முருகேசம் பிள்ளை (தலித் சமூகத்தவர் குறிப்பாகப் பண்டிதர்கள் அக்காலச் சூழலில் பிள்ளை என்ற அடையாளத்தை பயன்படுத்தினர்) கோலார் தங்கவயல் பகுதியிலும், மாரிக்குப்பம் பகுதியிலும், சாம்பியன் காலணியிலும் இன்னும் வேறு சில பகுதிகளிலும் பள்ளிக்கூடங்களைத் தொடங்கியிருக்கின்றார். இவர் மட்டுமே பகல் வேளையில் இயங்கும் இரண்டு பள்ளிக்கூடங்களையும் 16 இரவு பள்ளிக் கூடங்களையும் தொடங்கியிருக்கின்றார். சிதம்பரத்தில் தலித் மக்கள் சமூக மேம்பாட்டிற்காகச் சேவை செய்தவர் சுவாமி சகஜானந்தா அவர்கள். இவர் சிதம்பரத்தில் 1910ம் ஆண்டு நந்தனார் பள்ளியைத் தொடங்கினார். தலித் சமூகத்தில் பெரிதும் அறியப்பட்ட எம்.சி.ராஜா 1916ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ஜகந்நாதன் சாலையில், அதாவது தற்போது வள்ளுவர் கோட்டம் உள்ள சாலைக்கும் நுங்கம்பாக்கம் சாலைக்கும் இடையில் இருப்பது, ஆதிதிராவிட மகாஜன சபையின் பள்ளியைத் தொடங்கினார். எல்.சி.குருசாமி என்பவர் 1921ம் ஆண்டு சென்னை ராயபுரத்திலும் புதுப்பேட்டையிலும் இரவுப்பள்ளிகளை நிறுவினார். இவை மட்டுமன்றி தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களால் தலித் மக்கள் கல்வி மேன்மைக்காக பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டன என்றாலும் அவை பற்றின தகவல்களும் ஆவணங்களும் முறையாகப் பதியப்படவில்லை என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. இப்படி பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளினால் தலித் சமூகத்துக் குழந்தைகள் நவீன ஆரம்பக் கல்வியையும் அதன் பின்னர் உயர் நிலைக்கல்வியையும் பெறும் வாய்ப்பினை பெற்றனர். இத்தகைய கல்வி வாய்ப்பு பெற்று வளர்ந்தவர்களில் சிலரே ஏனைய தலீத் சமூகத்து மக்கள் நலன் கருதி பத்திரிக்கைகளும் இதழ்களும் ஏற்படுத்தி சமூக சீர்திருத்த செயல்பாடுகளை முன்னெடுத்தனர். இதன் காரணமாக விளைந்தவையே அக் காலச்சூழலில் வெளிவந்த பத்திரிக்கைகளுக்கும் இதழ்களுக்கும்  எனலாம். 

இந்த நூலில் ஆசிரியர் தனது ஆய்வில் அடையாளம் கண்டு ஆராய்ந்த பத்திரிக்கைகளின் பெயர்களையும், அவற்றின் ஆசிரியர்களையும், பதிப்பகத்தையும், அவை முன்னெடுத்த சீரமைப்பு சிந்தனைகளையும் முடிந்த வரைக்கும் மிகச் சிறப்பாக விளக்கிச் செல்கின்றார். 

இந்த நூலில் முதலில் வருவது சூரியோதம் இதழ். இது திருவேங்கடசாமி பண்டிதர் என்பவரால் 1869ம் ஆண்டு சென்னையிலிருந்து வெளியிடப்பட்டது. அடுத்து வருவது பஞ்சமன் இதழ். இது 1871ம் ஆண்டு வெளிவந்தது. தலித் மக்களின் முன்னேற்றத்திற்கான போராட்டக் குரலாக இந்த இதழ் செயல்பட்டதாக ஆசிரியரின் தகவல்கள் அமைகின்றன. 1872ம் ஆண்டு சுவாமி அரங்கையாதாஸ் என்பவரால் மெட்ராஸிலிருந்து வெளியிடப்பட்டது சுகிர்தவசனி எனும் இதழ் இது சமூக சீர்திருத்தம், மூட நம்பிக்கை ஒழிப்பு போன்ற கருத்துக்களை முன்வைத்துச் செயல்பட்ட ஒரு இதழாக அமைகிறது. இந்துமத சீர்திருத்தி எனும் இதழ் 1883ம் ஆண்டு பாளையங்கோட்டையில் கே ஆறுமுகம் பிள்ளை எனும் ஆதிதிராவிடரால் தொடங்கப்பட்ட முயற்சி. வேலூர் முனிசாமிப் பண்டிதரின் முயற்சியால் 1886ம் ஆண்டு ஆன்றோர் மித்திரன் எனும் இதழ் தொடங்கப்பட்டது. சென்னை கிருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய பா.அ.அ.இராஜேந்திரம் பிள்ளை என்பவரால் தொடங்கப்பட்ட இதழ் மஹாவிகடதூதன். இது 1886 முதல் 1927 வரை வெளிவந்தது என்றும் வேறு தலித் சமூகத்து பத்திரிக்கை ஆசிரியர்கள் இதன் வெளியீட்டைத் தொடர்ந்தனர் என்பதையும் அறிய முடிகின்றது. பறையன் இதழ் இரட்டைமலை சீனிவாசன் அவர்களால் 1893 முதல் 1900 வரை வெளியிடப்பட்டன. மாத இதழாகத் தொடங்கி பின்னர் வார இதழாக இது மாற்றம் பெற்றது. இந்தப் பத்திரிக்கை ஒடுக்கப்பட்டோருக்காக அதிலும் பறையர் சமூகத்தோருக்காகத் தனிப்பள்ளி தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்து வெளிவந்தது என அறியமுடிகின்றது. திராவிடப் பாண்டியன் எனும் இதழை ஜான் இரத்தினம் அவர்களும் அயோத்திதாசப் பண்டிதரும் இணைந்து 1896ம் ஆண்டு தொடங்கினர் முதலில் ஒரு சங்கமாகத் தொடங்கப்பட்ட இந்த முயற்சியின் தொடர்ச்சியாக இதே பெயரில் இதழையும் தொடங்கினர் என்பதையும் இந்த நூலிலிருந்து அறியக் கூடியதாக உள்ளது. 

இல்லற ஒழுக்கம் (1898), பூலோகவியாஸன் (1903-1917), ஒரு பைசா தமிழன், திராவிட கோகிலம், மதுவிலக்கு தூதன், ஆல்காட் கிண்டர்காடன் ரிவியூ, விநோதபாஷிதன், ஊரிஸ் காலேஜ் கிண்டர்கார்டன் மேகசின், வழிகாட்டுவோன், ஆதிதிராவிடன், மெட்ராஸ் ஆதிதிராவிடன், ஜாதி பேதமற்றோன் இந்திரகுல போதினி, சாம்பவர் நேசன், ஆதிதிராவிட பாதுகாவலன், சாம்பவகுல மித்திரன், தருமதொனி, சந்திரிகை என ஒவ்வொரு இதழைப்பற்றிய குறிப்புக்களையும் நூலாசிரியர் தேடிச் சேகரித்து இந்த நூலில் வழங்கியிருக்கின்றார். 42 இதழ்கள் மட்டும்தானா, என்று நம் மனதில் எழும்  கேள்விக்கு, இன்னும் கூட பத்திரிக்கை முயற்சிகள் இருக்கலாம், ஆனால் அவை மேலும் ஆராயப்பட வேண்டும் என்ற சிந்தனையையே வாசிக்கும் வாசகர்களுக்கு நூல் வழங்கும் செய்தியாக இருக்கின்றது. 

இந்த நூல் குறிப்பிடும் தலித் இதழ்களில் பல இன்று தமிழகத்தில் தேடிக் கண்டுபிடிப்பதில்  சிரமங்கள் இருக்கின்றன. ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியின் போது அரசினால் பாதுகாக்கப்பட்ட ஆவணங்களில் தேடினால் இவற்றைக் கண்டெடுக்க வாய்ப்புண்டு. அதோடு இங்கிலாந்தின் பிரித்தானிய நூலகத்தில் இவற்றின் படிகள் இருக்கவும் வாய்ப்பு நிச்சயம் இருக்கலாம். அவ்வகையில் தேடுதல் முயற்சிகளை முன்னெடுத்தால் 19ம் நூற்றாண்டின் இறுதி தொடங்கி வெளிவந்த தலித் பத்திரிக்கைகளையும் இதழ்களையும் நாம் காணும் வாய்ப்பு கிட்டும். 

நூலாசிரியரின் கடுமையான ஆய்வு முயற்சியும்,  இத்துறையிலான விரிவான வாசிப்பும் நூலில் முழுமையாக வெளிப்படுகின்றது. நல்லதொரு ஆய்வு நூலை வழங்கியிருக்கும் முனைவர் ஜெ.பாலசுப்பிரமணியம் பாராடுதலுக்குறியவர். மேலும் சிறந்த ஆய்வுப் படைப்புக்களை அவர் வழங்க எனது நல்வாழ்த்துகள்.


குறிப்பு -  இந்த நூல் காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. 

முனைவர்.க.சுபாஷினி

-----------------

Suba

unread,
Jan 17, 2021, 4:57:21 PM1/17/21
to மின்தமிழ், Subashini Kanagasundaram

nesavaalargalum-thunivanigargalum_FrontImage_559.jpg

நெசவாளர்களும் துணிவணிகர்களும்
நூலாசிரியர்: எஸ்.ஜெயசீல ஸ்டீபன் (தமிழில் ந.அதியமான்)

நூல் விமர்சனம்: முனைவர்.க.சுபாஷிணி

[பகுதி-1]

வண்ண வண்ண ஆடைகளை விரும்பாத மனிதர்கள் தான் உண்டா? சென்ற மாதம் ஒரு சேலை வாங்கி இருப்போம். ஆனால் இன்று யாராவது அணிந்திருக்கும் சேலை அழகாகக் கண்களைக் கவர்ந்தால் அதனையும் வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் எழாமலில்லை. பெண்கள் மட்டுமல்ல; ஆண்களும் வகைவகையாக ஆடைகளை வாங்கி அணிந்து அழகு பார்ப்பதில் தனிக் கவனம் செலுத்தத் தவறுவதில்லை. சிறு குழந்தைகளிலிருந்து வயதான மூத்தவர்கள் வரை எல்லோருக்குமே மனதைக் கவர்வது மனிதர்கள் நாம் அணிந்து கொள்கின்ற வகை வகையான ஆடைகள் தான்.

ஆடைகளை வாங்கி அணிகின்ற நம் ஒவ்வொருவருக்கும் ஆடை உற்பத்தியின் பின்னால் இருக்கும் பல்வேறு நடவடிக்கைகள் பற்றி அதிகம் கவனம் செல்வதில்லை. பொதுவாக எடுத்துக் கொண்டால் துணி நெ-நெய்வதற்குத் தேவையான நூலை உருவாக்கப் பருத்தி விவசாயம் அடிப்படையாக அமைகிறது. அதன் பின்னர் பருத்திப் பஞ்சிலிருந்து நூல் உருவாக்கம் நூலுக்குச் சாயம் ஏற்றும் தொழில், துணி உருவாக்கம், துணியில் வண்ணம் திட்டுவது, சாயத்தில் முக்குவது, துணிக்கு அச்சு செய்வது என்ற வகையில் முதல்கட்ட பணிகள் அமைகின்றன. இப்படி உருவாக்கப்பட்ட துணிகளை வெவ்வேறு வகையான ஆடைகளாகத் தைப்பது அல்லது சேலை போல உருவாக்குவது என்பது அடுத்த கட்ட நடவடிக்கையாக அமைகிறது. இதனையடுத்து இப்படித் தனித்தனியாக உருவாக்கிய ஆடைகளை வணிகம் செய்வது என்பது நிகழ்கிறது.

தமிழகம் மிக நீண்ட நெசவு பண்பாட்டைக் கொண்டிருக்கிறது. நமக்கு இன்று கிடைக்கின்ற ஈராயிரம் ஆண்டுக்கு முற்பட்ட கிரேக்க வரலாற்று ஆசிரியர்களான தாலமி போன்றோரது ஆவணக் குறிப்புகளும், ரோமானிய வர்த்தக குறிப்புகளும், இன்றைய எகிப்தின் அலெக்சாந்திரியா நகர வணிகர்களின் குறிப்புகளும் இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலகட்டத்திலேயே தமிழக நிலத்தில் உருவாக்கப்பட்ட துணிவகைகள் ஐரோப்பியச் சந்தையில் புகழ்பெற்று பொருளாதார பலமிக்க வணிகப் பொருளாக இருந்தது என்பதை உறுதி செய்கின்றன.
மிக நீண்டகாலமாக தமிழகத் தொழில் பண்பாட்டில் மிக முக்கிய அங்கம் வகித்த ஒரு தொழிலாக நெசவுத் தொழில் அமைகிறது. நெசவுத்தொழிலைச் சார்ந்து பல்வேறு தொழில்கள் தொடர்பு கொண்டிருப்பதால் மிக விரிவான பொருளாதார தொடர்புடைய முக்கியத் தொழில் என்ற சிறப்பையும் நெசவுத்தொழில் பெறுகிறது. ஈராயிரம் ஆண்டுக்கு முற்பட்ட நெசவுத் தொழிலின் சிறப்பு பற்றி பேசும் நமக்குக் கடந்த சில நூற்றாண்டுகளில் இந்த நெசவுத்தொழில் எவ்வகையில் செயல்பட்டது என்பதைப்பற்றிய தகவல்கள் பேசப்படாமலேயே இருக்கின்றன என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும்.

கிபி 16 ஆம் நூற்றாண்டு வரலாற்றைப் பேசுகின்ற பெருவாரியான வரலாற்று ஆய்வாளர்கள் பொதுவாகப் பேசிச் செல்லும் ஆய்வுத் தளத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு ஆய்வுத் தளத்தை மையமாகக்கொண்டு மிக விரிவான சான்றுகளுடன் முனைவர் எஸ்.ஜெசீல ஸ்டீபன் "நெசவாளர்களும் துணி வணிகர்களும் (கிபி 1502-1793 )" என்ற நூலை ஆங்கிலத்தில் வழங்கி இருக்கின்றார். இதனை மறைந்த முன்னாள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ந.அதியமான் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து இந்த நூல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது.
முனைவர் ஜெயசீல ஸ்டீபன் மிக நீண்ட ஆய்வு அனுபவமும் பல்வேறு உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்களில் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர். இவரது ஒவ்வொரு நூலும் தமிழக வரலாற்றை மிக மிக நுணுக்கமான பார்வையுடன் மிக விரிவான பற்பல ஆவணங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் திகழக்கூடியவை. இவருக்குள்ள பன்மொழி திறன் இவரது ஆய்வுகளுக்குக் கூடுதல் பலம். போர்த்துக்கீசிய மொழி, லத்தீன், பிரெஞ்சு மொழி, ஜெர்மானிய மொழி, ஆங்கில மொழி, தமிழ் மொழி ஆகியவற்றில் ஆழமான திறன் கொண்டவராக இவர் திகழ்கிறார். இத்தகைய மொழி ஆளுமை இருப்பதால் இவரது ஆய்வுகள் முதன்மைத் தரம் வாய்ந்த ஆவணங்களை அலசிப் பார்த்து அதிலிருந்து சான்றுகளைப் பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது என்பதை மறுக்கவியலாது.

நெசவுத்தொழில் என்பது அவ்வளவு முக்கியம் வாய்ந்ததா..? இதற்கென்று ஒரு ஆய்வு நூல் தேவையா? எனச் சிலர் கேட்கலாம். அப்படிக் கேட்போருக்கு ஏராளமான பதில்களை முன்வைக்கிறது இந்த நூல்.
நூலாசிரியர் இந்த நூலுக்கு எடுத்துக்கொண்ட காலகட்டம் என்பது ஏறக்குறைய இருநூறு ஆண்டுகள் கால கட்டம் மட்டுமே. அதாவது கிபி 1502 ஆம் ஆண்டிலிருந்து 1793ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் நெசவுத் தொழில் துணி வணிகர்களின் செயல்பாடுகள், சோழமண்டல கடற்கரையோர வணிக முயற்சிகள் இவை ஏற்படுத்திய தாக்கங்கள், ஐரோப்பியர்களுடனான வணிகத் தொடர்புகள், கிழக்காசிய நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார தாக்கங்கள் என்ற வகையில் இந்த நூல் அமைகிறது.

நூல் தமிழாக்க அறிமுக உரையுடன் தொடங்குகிறது. அதனை அடுத்து ஆங்கில நூலில் ஆசிரியர் வழங்கி இருக்கின்ற நன்றியுரை இடம்பெறுகிறது. அதன்பிறகு நூலாசிரியர் பற்றிய ஒரு குறிப்பும் நூலில் பயன்படுத்தப்பட்ட சொற்குறுக்கங்கள் பட்டியலும் இடம்பெறுகின்றன. நூலை தொடங்குமுன் நூலின் மையக் கருத்திற்கான காட்சி அமைப்பு விளக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்தார் போல கிபி. 1502ஆம் ஆண்டிலிருந்து 1641ஆம் ஆண்டுகளில் தமிழகக் கடற்கரை பகுதியிலிருந்து வளைகுடா இந்தோனேசியா தீவுக்கூட்டப் பகுதிகளுக்குப் போர்த்துக்கீசியர் நிகழ்த்திய துணி வணிகம் பற்றி ஒரு தனி அத்தியாயம் வழங்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் போர்த்துக்கீசியர்கள் தமிழகக் கடற்கரை துறைமுகப் பகுதிகளில் தங்கள் ஆளுமையைச் செலுத்திக் கொண்டிருந்த படியினால் தமிழக நெசவாளர்களின் துணிகளை அவர்கள் எவ்வகையில் பெற்று அதனை கிழக்காசிய நாடுகளில் வணிகம் செய்தார்கள் என்பதை இந்த அத்தியாயம் விரிவாகப் பேசுகிறது.

இதற்கு அடுத்தபடியாக வருகின்ற மூன்றாம் அத்தியாயம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த அத்தியாயத்தின் தலைப்பு `செட்டியார் முதலியார் பிள்ளை மரக்காயர் வணிகர்கள் 16-18 ஆம் நூற்றாண்டுகளில் ஆசியாவில் மேற்கொண்ட துணி வணிகம் மற்றும் பொருள் நிலவியல் என்பதாகும். இந்தப் பகுதியில் வழங்கப்பட்டிருக்கின்ற ஆழமான செய்திகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்த ஒரு அத்தியாயத்திற்கு மட்டுமே நூலாசிரியர் 346 அடிக்குறிப்பு சான்றுகளாக வழங்கியிருக்கின்றார் எனும்போது எத்தனை தகவல்களை இது உள்ளடக்கி இருக்கும் என்பதை வாசகர்கள் யூகித்துக் கொள்ளலாம்.

அதனையடுத்து முடிவுரை வருகிறது. நூலில் பெருவாரியாகப் பயன்படுத்தப்பட்ட சொல்லடைவுகளும் அவற்றிற்கான விளக்கங்களும் இப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளன. நூலுக்குப் பயன்பட்ட ஆய்வு நூல்களின் பட்டியல் அதனையடுத்து இடம்பெறுகின்றது. இறுதியாகப் புத்தகத்திற்குக் கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் நிலவரைப்படங்களும் தமிழகக் கடற்கரையோர முக்கிய வணிகத் தளங்களின் பெயர்களும் காட்டப்பட்டுள்ளன.

மொத்தம் 220 பக்கங்கள் கொண்ட ஒரு நூலாக இந்த நூல் அமைகிறது.

நீண்டகாலமாகவே தமிழக சோழமண்டல கடற்கரை ஐரோப்பியர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு பகுதி. இடைப்பட்ட காலத்தில் அரேபியர்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த தமிழகக் கடற்கரை பகுதியில் மீண்டும் வணிக முயற்சிகளை நேரடியாக மேற்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பாவின் முக்கிய நாடுகள் மிகத் தீவிரமாகச் செயல்பட்ட காலமாக கிபி 15ம் நூற்றாண்டு தொடக்கத்தைக் கூறலாம். வாஸ்கோட காமாவின் இந்தியாவிற்கான வருகை இதுவரை மறைந்திருந்த வணிகக் கதவுகளை மீண்டும் திறப்பதாக அமைந்தது. தொடர்ச்சியாகப் போர்த்துகீசிய வணிகர்கள் கோவா மற்றும் கேரளாவின் கடற்கரை பகுதி மட்டுமல்லாது தமிழகக் கடற்கரைப் பகுதிகளிலும் தங்கள் வணிக முயற்சிகளைத் தொடங்கினர். போர்த்துக்கீசியர்களின் முயற்சி ஐரோப்பாவில் ஏனைய பிற நாடுகளில் வணிக ஆர்வத்தை எழுப்பியதால் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவை நோக்கி தங்கள் கவனத்தைச் செலுத்தத் தொடங்கின. ஏற்கனவே இத்தாலி வணிகர்கள் மற்றும் அரேபிய வணிகர்கள் மூலமாகத் தென்னிந்திய வணிக வளம் பற்றி ஐரோப்பாவின் ஏனைய நாடுகள் அதிகமாகவே அறிந்திருந்தனர். ஆக, போர்த்துக்கீசியர்கள் அதற்கடுத்து டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவை வணிகத்திற்குத் தகுந்த இடமாகக் காணத் தொடங்கி வணிக முயற்சிகளைக் கட்டமைக்கத் தொடங்கினர்.

இந்த வணிக முயற்சிகள் தான் இன்றைக்கு நமக்கு இந்தியாவைப் பற்றி மட்டுமல்லாது மிகக் குறிப்பாகத் தென்னிந்தியாவின் நில வரைபடம் மற்றும் இலங்கையின் நில வரைபடம் தொடர்பான ஆவணங்கள் நமக்குக் கிடைப்பதற்கு மிக முக்கிய காரணங்களாக அமைகின்றன. ஆங்கிலத்தில் cartography என்று சொல்லப்படுகின்ற ஒரு தனித் துறையை ஐரோப்பியர்கள் தங்கள் கடல் பயணங்களுக்காக மிக விரிவாகப் பயன்படுத்தினார்கள். இந்தியாவுடனான வணிகம் என்பது ரோமானிய காலம் தொடங்கி முக்கியத்துவம் பெற்றதால் அப்போதிருந்தே நில வரைபடங்கள் உருவாக்கம் என்பது ஐரோப்பிய வணிகர்களது முக்கியமான ஒரு செயல்பாடாகவே இருந்தது. கி பி 16ம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்தியா மற்றும் இன்றைய இலங்கை பற்றிய குறிப்பிடத்தக்க வரைபடங்கள் ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்ல, கேமரா மற்றும் வீடியோ பதிவு செய்யும் கருவிகள் இல்லாத அந்தக் காலகட்டத்தில் தாங்கள் காண்கின்ற காட்சிகளைத் துல்லியமாக ஓவியங்களாக வரைந்து அவற்றை ஆவணப்படுத்தி வைக்கும் செயலையும் ஐரோப்பிய வணிகர்களது குழுவில் இடம் பெற்ற வரலாற்று அறிஞர்களும் பாதிரிமார்களும், செயல்படுத்தினர். இத்தகைய நில வரைபடங்களும் ஓவியங்களும் தான் இன்றைக்கு நாம் கடந்த ஐநூறு ஆண்டுகால தமிழகத்தின் சமூக நிலையையும் புவியியல் சூழலையும் அறிந்துகொள்ள நமக்கு முதன்மை நிலை ஆவணங்களாகத் திகழ்கின்றன என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
(தொடரும்)

innamburan

unread,
Jan 17, 2021, 8:21:54 PM1/17/21
to மின்தமிழ்
அன்பின் சுபாஷிணி. நலம். நலம் அறிய அவா. உங்களுடைய

நெசவாளர்களும் துணிவணிகர்களும்
நூலாசிரியர்: எஸ்.ஜெயசீல ஸ்டீபன் (தமிழில் ந.அதியமான்)

நூல் விமர்சனம்: முனைவர்.க.சுபாஷிணி

[பகுதி-1]
இதை என் மாணாவிகளுக்கு பாடமாக போதிக்க விரும்புகிறேன். முன்னனுமதி நாடுகிறேன். என் மாணவிகளை பற்றி நீங்கள் அறிவீர்கள்.
அன்புடன்,
இன்னம்பூரான்

Suba

unread,
Jan 18, 2021, 1:24:46 AM1/18/21
to மின்தமிழ், Subashini Kanagasundaram
On Mon, Jan 18, 2021 at 2:21 AM innamburan <innam...@gmail.com> wrote:
அன்பின் சுபாஷிணி. நலம். நலம் அறிய அவா. உங்களுடைய

நெசவாளர்களும் துணிவணிகர்களும்
நூலாசிரியர்: எஸ்.ஜெயசீல ஸ்டீபன் (தமிழில் ந.அதியமான்)

நூல் விமர்சனம்: முனைவர்.க.சுபாஷிணி

[பகுதி-1]
இதை என் மாணாவிகளுக்கு பாடமாக போதிக்க விரும்புகிறேன். முன்னனுமதி நாடுகிறேன். என் மாணவிகளை பற்றி நீங்கள் அறிவீர்கள்.
அன்புடன்,
இன்னம்பூரான்

அன்புள்ள திரு.இன்னம்பூரான்.
நலமா? 

தாராளமாக பயன்படுத்துங்கள். இன்னும் 2 பகுதிகள் உள்ளன.  விரைவில் வெளி வரும். அவற்றையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

சுபா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/nVY2mdvRu2A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/c55a39b6-f4b9-4775-9706-d70e1c5b22b4n%40googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Jan 18, 2021, 4:52:47 AM1/18/21
to mintamil, Subashini Kanagasundaram
மிக்க நன்றி, சுபாஷிணி. எங்கள் குருமணிகளில், நீங்களும் ஒருவர். பொருத்தமான முறையில் அறிமுகம் செய்து பகிர்ந்து கொள்கிறேன்.

இன்னம்பூரான்






இன்னம்பூரான்

Suba

unread,
Jan 18, 2021, 7:19:22 AM1/18/21
to mintamil, Subashini Kanagasundaram

IMG_20210118_075923353_2.jpg

நெசவாளர்களும் துணி வணிகர்களும்
நூலாசிரியர்: எஸ்.ஜெயசீல ஸ்டீபன் (தமிழில் ந.அதியமான்)

நூல் விமர்சனம்: முனைவர்.க.சுபாஷிணி

[பகுதி-2]

சோழர் காலத்துக் கல்வெட்டுக்களும் செப்புப் பட்டயங்களும் நெசவாளர்களின் நிலையை விளக்கும் செய்திகளை நமக்குத் தருகின்றன. கிபி 970லிருந்து 985 காலகட்டத்தில் ஆட்சிசெய்த சோழமன்னன் மதுராந்தக உத்தம சோழன் காலத்துச் செப்பேடு ஒன்று காஞ்சிபுரத்தில் கச்சிப்பேடு, கருவுளான்பாடி, கஞ்சகப்பாடி, அதிமானப்பாடி, ஏற்றுவழிச்சேரி ஆகிய நெசவாளர் குடியிருப்பிலிருந்த பட்டு சாலியர்களுக்கு 200 தங்க காசுகளை வைப்புத் தொகையாகக் கொடுத்த செய்தியைக் குறிப்பிடுகிறது. `தறிப்பட்டம்`, `தறி இறை` மற்றும் கிபி 10ம் நூற்றாண்டில் `தறி தரகு` என்னும் வரி சோழர்களின் ஆட்சிக்காலத்தில் நெசவாளர்களுக்கு விதிக்கப்பட்டது என்ற செய்தியையும், தஞ்சாவூர், திருச்சி ஆகிய பகுதிகளில் `தறிப் புடவை` `தறி ஆக்கம்` என்ற இரண்டு வகை வரிகள் விதிக்கப்பட்டன என்ற செய்தியும் செங்கல்பட்டு, வட ஆற்காடு ஆகிய பகுதிகளில் `தறிப் புடவை` என்னும் வரி கி பி 11ம் நூற்றாண்டில் வசூலிக்கப்பட்டதையும் கல்வெட்டுச் செய்திகளின் வழி அறியமுடிகிறது. இவை மட்டுமன்றி `அச்ச தறி` எனக் குறிப்பிடப்படும் ஒரு வகை வரியும் `பறை தறி` அதாவது நெசவுத் தொழில் செய்யும் பறையர்கள் கட்ட வேண்டிய வரி, 'சாலிகைத் தறி` என்ற சாலிய நெசவாளர்களுக்கான ஒரு வகை வரி, `பஞ்சு பீலி` அதாவது பங்கு வணிகத்தில் உள்ளவர்கள் செலுத்த வேண்டிய வரி என பல்வேறு வகைப்பட்ட வரி நெசவாளர்கள் மற்றும் நெசவுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த செய்திகளைக் கல்வெட்டுச் சான்றுகள் விளக்குவதை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். இப்பகுதிக்கு நூலாசிரியர் பயன்படுத்தியுள்ள ஆய்வு நூல்களில் மிக முக்கியமாகத் தென்னிந்தியக் கல்வெட்டியல் ஆய்வு நூல்கள் பல இடம்பெறுகின்றன.


தமிழகத்தில் உருவாக்கப்பட்ட பருத்தி துணிகள் சோழர்கள் காலத்திலேயே கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியா தீவுக்கூட்டங்கள், தாய்லாந்து, இன்றைய மியன்மார் ஆகிய பகுதிகளுக்கு வணிகம் செய்யப்பட்டன என்ற செய்திகளும் கிடைக்கின்றன. சீனாவுடனான மிக நீண்ட கால வணிகத் தொடர்பு சிறப்புக் கவனம் கொள்ளப்பட வேண்டியது. சீனாவில் `சாம்` அரசர்களின் ஆட்சியின் போது அதாவது கிபி 960 இருந்து 1278 காலகட்டத்தில் பல்வேறு வகை துணிகள், வண்ணம் பூசப்பட்ட ஜமக்காளங்கள், வண்ணம் பூசப்பட்ட சிவப்பு பட்டு கைக்குட்டைகள் போன்றவை தமிழக கடற்கரை வழியாக ஏற்றுமதி செய்யப்பட்ட செய்திகளையும், சீனாவிற்கெனவே சிறப்பாக மனித உருவம், குதிரை உருவம், யானை உருவம் போன்ற விலங்குகள் உருவம் வரையப்பட்ட கைக்குட்டைகள் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டன என்ற செய்தியையும் நூலில் காண முடிகிறது. கிபி 12-13ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் பாண்டியர் கால கல்வெட்டுகள் நெசவுத் தொழிலில் ஆளுமை நிறைந்த கைக்கோளர், சாலியர், நெசவாளர்களின் சாதிகளாகக் குறிப்பிடுகின்றன.


தமிழகச் சூழலில் கைக்கோளர், சாலியர், தேவாங்கர் ஆகிய மூன்று வகைப்பட்ட சமூகங்கள் பெருவாரியாக நெசவுத் தொழில் செய்யும் சமூகங்களாக அறியப்படுகின்றன. செட்டியார்கள், முதலியார், பிள்ளை, மரக்காயர் ஆகிய சமூகத்தார் துணி வணிகம் செய்யும் தொழிலை முன்னெடுத்தவர்களாக அமைகின்றனர். நூலாசிரியர் செட்டியார் சமூகத்தில் பல்வேறு வகை செட்டியார்களைக் குறிப்பிட்டு இடங்கை வலங்கை வேறுபாடுகளையும் அவர்களது வணிக முயற்சிகளையும் நூலின் பல பகுதிகளில் விளக்கிச் செல்கின்றார். அதேபோல முதலியார் சமூகத்தவர்கள் துணி வணிகத்தில் பொருளாதார பலத்துடன் கோலோச்சிய பல்வேறு வரலாற்றுச் செய்திகளை விரிவாக வழங்கி இருக்கின்றார். விவசாயத்தில் கவனம் செலுத்திய பிள்ளை சமூகத்தார் துணி வணிகத்திலும் ஈடுபட்டு மலாயா இந்தோனேசியா தீவுக் கூட்டங்களில் பெரும் வணிகம் நடத்திய செய்திகளையும் கீழக்கரை, காயல்பட்டினம், நாகூர், பரங்கிப்பேட்டை போன்ற பகுதிகளில் குடியேறிய மரக்காயர்கள் கிழக்காசிய நாடுகளில் மிகப்பெரிய வகையில் வணிக முயற்சிகளில் வெற்றி கண்ட வரலாற்றுச் செய்தியையும் அறியமுடிகிறது.
தமிழகச் சோழமண்டல கடற்கரையில் பொருளாதார பலம் பொருந்திய ஒரு வடிவமாக நெசவுத்தொழில் அமைந்திருப்பதை அறிந்துகொண்ட ஐரோப்பிய வணிகர்கள் சோழமண்டல கடற்கரை பகுதியை தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வர மேற்கொண்ட முயற்சி மிகப் பெரிது. போர்த்துக்கீசியர்கள் வசமிருந்த வணிக செயற்பாடுகளைப் பலமிழக்கச் செய்து டச்சுக்காரர்கள் மிகத் துரிதமாக கி பி 16ம் நூற்றாண்டில் தங்கள் ஆளுமையை விரிவாக்கினர். மலாயாவின் மலாக்கா பகுதியைப் போர்த்துக்கீசியர் வசம் இருந்து கைப்பற்றி பிறகு இந்தோனேசியாவையும் கைப்பற்றி காலனித்துவ ஆட்சியையும் செயல்படுத்தினர்.


கிபி 1511 ஆம் ஆண்டு மலாயா சுல்தான்களிடம் இருந்த மலாக்காவை போர்த்துக்கீசியர் கைப்பற்றினர். ஒரு நூற்றாண்டுக்குப் பின் 1641 ஆம் ஆண்டு மலாக்கா டச்சுகாரர்கள் வசம் விழுந்தது. இக்காலகட்டத்தில் தமிழகத்தின் சோழமண்டல கடற்கரை பகுதிகளில் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்து அப்பகுதியில் தங்கள் ஆளுமையை நிலைநாட்ட பெரும் முயற்சி எடுத்தது டச்சு கிழக்கிந்திய கம்பெனி. தங்களிடம் 'கர்தாஸ்' என்ற சான்றிதழைப் பெற்ற வணிக நிறுவனங்கள் மட்டுமே வணிகம் செய்ய முடியும் என்ற அளவிற்குத் தமிழக சோழமண்டல கடற்கரையில் டச்சு கிழக்கிந்திய கம்பெனி செயல்பட்டது. இந்தக் 'கர்தாஸ்' என்ற சொல் இன்று மலாய் மொழியில் `கெர்த்தாஸ்` அதாவது `தாள்` என்பதைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல்லாகப் பயன்பாட்டில் உள்வாங்கப்பட்டுள்ளதைக் காணலாம். இப்படி போர்த்துக்கீசிய, டச்சு ஆதிக்கத்தில் பல ஐரோப்பிய சொற்கள் மலாய் மொழியில் புழக்கத்தில் உள்வாங்கப்பட்ட வரலாறு தனி ஆய்வுக்கு நம்மை கொண்டு செல்லும்.
ஐரோப்பிய வணிக நிறுவனங்கள், குறிப்பாக டச்சு கிழக்கிந்திய கம்பெனி மற்றும் பிரெஞ்சு அரசு ஏற்படுத்திய கட்டுப்பாடுகளைச் சமாளித்து தமிழ் வணிகர்கள் கிழக்காசிய நாடுகளில் மிகப்பெரிய அளவில் வணிகம் நடத்திய காலகட்டமாக கிபி 16, 17, 18 ஆகிய காலகட்டங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். மிக நீண்டகாலமாக மிகத் தரம் வாய்ந்த கப்பல்களைக் கட்டக்கூடிய திறமை பெற்றவர்கள் தமிழர்கள். காற்றின் திசை அறிந்து கப்பலைச் செலுத்தக்கூடிய தொழில் திறன் தமிழ் வணிகர்களுக்குத் தொடர்ந்து இருந்தது. மிகத் தொடர்ச்சியாக வணிகக் கப்பல்களைக் கட்டி பெருமளவில் வணிக முயற்சிகளை நூற்றாண்டுகளாகச் செய்து வந்த அனுபவம் தமிழர்களுக்கு உண்டு. அதற்கு சான்றளிக்கும் வகையில் நூலாசிரியர் வழங்கியிருக்கும் தரவுகள் நமக்கு அமைகின்றன.

துணி வணிகத்தில் ஈடுபட்ட பல முக்கியஸ்தர்கள் பற்றிய செய்திகள் நூலில் நமக்குக் கிடைக்கின்றன. பாண்டிச்சேரியிலிருந்து வலங்கைப் பிரிவைச் சேர்ந்த முதலியார் வணிகர்கள் 'சங்கரபாணி` என்ற பெயர் கொண்ட ஒரு வணிகக் கப்பலை 1739ம் ஆண்டு வாக்கில் சொந்தமாக வைத்திருந்தனர். மயிலாப்பூர் பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலிருந்து பிலிப்பைன்ஸ் வரை பொருட்களை ஏற்றிச் சென்றது இந்த கப்பல். இந்தக் கப்பலின் தலைமை மாலுமியாகப் பிரகாசம் என்பவர் இருந்தார் என்றும் இந்தக் கப்பலிலேயே தங்கி வணிகம் மேற்கொண்ட வணிகராக ஜெநிவாச முதலியார் இருந்தார் என்றும் இதேபோல சார்லஸ் என்ற பெயர் கொண்ட கப்பலுக்குத் தலைமை மாலுமியாக குமரப்பிள்ளை இருந்தார் போன்ற செய்திகளையும் நூலின் வழி அறிய முடிகின்றது.

(தொடரும்)

It is loading more messages.
0 new messages