வேதக்கல்லூரி இயங்கிய “எண்ணாயிரம்”

585 views
Skip to first unread message

ko.senguttuvan

unread,
Oct 28, 2015, 2:07:55 AM10/28/15
to மின்தமிழ்

எண்ணாயிரம்.


விழுப்புரம் அருகே அமைந்துள்ள சின்னஞ்சிறிய கிராமம். வரலாற்றில் நீங்காத இடத்தைப் பிடித்த ஒரு ஊர்.

இதற்குக் காரணம் இராசேந்திரச் சோழன் காலத்தில் (கி.பி.1012-1044) இங்கு இயங்கி வந்த வடமொழி வேதக்கல்லூரியாகும். இக்கல்லூரிக்காக சோழப் பேரரசன் 300 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியிருக்கிறான்.

இங்கு இளநிலை மாணவர்கள் 270பேரும், முதுநிலை மாணவர்கள் 70 பேரும், ஆசிரியர்கள் 14பேரும் இருந்திருக்கின்றனர்.

இளநிலை மாணவர்கள் 270 பேர்களில் 40 பேர் ரூபாவதார இலக்கணமும், 75 பேர் ரிக் வேதமும், 75 பேர் யஜுர் வேதமும், 20 பேர் வாஜசனேய சாமவேதமும், 20 பேர் சண்டோக சாம வேதமும், 10 பேர் அதர்வ வேதமும், எஞ்சிய 10பேர் பௌதாயன கிருஷ்ய சூத்திரம், கல்ப சூத்திரம், ஞான சூத்திரம் ஆகியவற்றையும் பயின்றுள்ளனர்.

முதுநிலை மாணவர்கள் 70 பேர்களில் மேம்பட்ட பாடங்களான வியாபரணத்தை 25 பேரும், பிரபாகர மீமாம்சத்தை 35 பேரும், வேதாந்தத்தை 10 பேரும் படித்துள்ளனர்.   

இளநிலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் நாள்தோறும் ஆறு நாழி நெல் கொடுக்கப்பட்டது. முதுநிலை மாணவர்களுக்கு பத்துநாழி நெல் தினசரி கொடுக்கப் பட்டது.

மீமாம்சமும் வியாகரணமும் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கு ஊதியமாக தினசரி ஒரு கலம் நெல் கொடுக்கப்பட்டது. வேதாந்தப் பேராசிரியருக்கு கூடுதல் ஊதியமாக ஒன்றரைக் கலம் நெல் வழங்ககப்பட்டது. மற்ற ஆசிரியர்களுக்கு ஒரே அளவு ஊதியமாக முக்கால் கலம் அல்லது மூன்று குருணி கொடுக்கப்பட்டது.

தானியமாகக் கொடுக்கப்பட்ட இந்த ஊதியத்தைத் தவிர ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை மாணவர்களுக்குத் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.

வேதாந்த ஆசிரியருக்கு இந்தத் தங்கம் கொடுக்கப்படவில்லை. காரணம், வேதாந்தத்தைச் சொல்லிக் கொடுத்து பணம் சம்பாதிப்பது சட்டப்படியும், வழக்கப்படியும் தடை செய்யப்பட்டிருந்தது. வேதாந்த ஆசிரியருக்குத் தங்கம் கொடுக்கப்படாதிருந்ததற்கு இதுவே காரணமாக இருந்திருக்கக்கூடும் என்பார் “சோழர்கள்நூலாசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி.

சோழராட்சியில் கோயில்களில் அழகியத் தமிழில் தேவாரம் ஓதப்பட்டது. அதே நேரம் வடமொழி வேதமும் கற்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எண்ணாயிரம் கிராமத்தில் இயங்கிய இவ்வேதக் கல்லூரி காலப்போக்கில் அழிந்து விட்டது.

இதுபற்றிய விவரங்களைச் சொல்லும் கல்வெட்டுகள் மட்டும், இங்குள்ள அழகிய நரசிங்கப் பெருமாள் கோயிலில் எஞ்சி நிற்கின்றன.


எண்ணாயிரம் – கவிகாளமேகம் பிறந்த ஊர் என்பதும் கூடுதல் சிறப்பாகும். 
DSC02263.jpg
DSC02268.jpg

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 28, 2015, 3:41:57 AM10/28/15
to mintamil
அருமையான பதிவு.
1000 தொடங்கி 1900 வரை மன்னர்களாலும் வணிகப்பெருமக்களாலும் வேதக்கல்லூரிகளும் வேதப்பாடசாலைகளும் அமைக்கப்பட்டு வடமொழி காக்கப்பட்டுள்ளது. அதனை சிறு குழு பெருந்தொகையிலான மக்களிடம் கற்பிக்காமல் தமக்குள்ளே பூட்டிவைத்ததனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பராமரிப்பிருந்தும் அருகிவிட்டது.

இன்று ஆய்வுக்காக வெளிநாட்டினரும் வேறு குழுக்களில் உள்ளோர் அர்ச்சனை, நாமங்கள் போற்றியாகவும் வடமொழி கொண்டுள்ளனர். மொழியின் இலக்கண, இலக்கிய, தத்துவ வெளிப்பாடுகள் குறித்து பேசுவாரும் கேட்பாரும் பெரும்பாலுமில்லை என்பது வேதனைக்குறியது.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Seshadri Sridharan

unread,
Oct 28, 2015, 12:34:31 PM10/28/15
to mintamil, வேந்தன் அரசு, g.sa...@gmail.com, Oru Arizonan, tshrin...@gmail.com, mani muthu, Pandiyaraja Paramasivam, நா. கணேசன், ko.seng...@gmail.com, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, malarm...@gmail.com, Innamburan S.Soundararajan, திருத்தம் பொன்.சரவணன், Mohanarangan V Srirangam, Kalairajan Krishnan, doraisu...@gmail.com, rkc...@gmail.com, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, megala.r...@gmail.com, பெருமாள் தேவன், coral shree, இராமகி, Geetha Sambasivam, dogra...@gmail.com, Nagarajan Vadivel, N. Kannan, rajam ramamurti
பாண்டியர்கள் தமிழ்க் கல்விக்கு கொடுத்த கொடையை சேரர் சோழர் தந்தார் இலர் என்பார் பேரா. இரா. மதிவாணர்.

அகலன் 

Suba.T.

unread,
Oct 28, 2015, 12:49:41 PM10/28/15
to மின்தமிழ், Subashini Tremmel
​சிறிய பதிவென்றாலும் சுவாரசியமான தகவல்.
சரி.. தமிழ பாடம் போதிக்கப்பட்டதாக இக்கல்வெட்டுக்கலில் தகவல்கள் இல்லையா? வேதாந்தமும் மீமாம்சமும் மட்டும் தானா? அப்படியானால் அரசு ஆதரவுடன் இயங்கிய பள்ளிகள் சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தன என்ற கருத்துக்கு இட்டுச் செல்ல வாய்ப்பாகி விடுமே. 

இந்தப் பதிவை மின் தமிழ் மேடையில் இணைத்து வைக்கப் பரிந்துரைக்கின்றேன்.

சுபா
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba.T.
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

தேமொழி

unread,
Oct 28, 2015, 8:13:55 PM10/28/15
to மின்தமிழ்


On Wednesday, October 28, 2015 at 9:49:41 AM UTC-7, Suba.T. wrote:

சரி.. தமிழ பாடம் போதிக்கப்பட்டதாக இக்கல்வெட்டுக்கலில் தகவல்கள் இல்லையா? வேதாந்தமும் மீமாம்சமும் மட்டும் தானா? அப்படியானால் அரசு ஆதரவுடன் இயங்கிய பள்ளிகள் சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தன என்ற கருத்துக்கு இட்டுச் செல்ல வாய்ப்பாகி விடுமே. 

இந்தப் பதிவை மின் தமிழ் மேடையில் இணைத்து வைக்கப் பரிந்துரைக்கின்றேன்.


மின்தமிழ் மேடையில் ...

வேதக்கல்லூரி இயங்கிய “எண்ணாயிரம்” 

..... தேமொழி 


 

சுபா
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages