தமிழ் என்கிற வார்த்தை கொண்ட திருக்குறள்.

1,845 views
Skip to first unread message

Dinesh Babu

unread,
Mar 1, 2015, 11:59:37 AM3/1/15
to mintamil@googlegroups com
தமிழ் என்கிற வார்த்தை கொண்ட திருக்குறள்
உண்டா?

தினேஷ்

Singanenjam Sambandam

unread,
Mar 1, 2015, 12:28:24 PM3/1/15
to mint...@googlegroups.com
"இல்லை"  என  படித்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்..

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Mar 1, 2015, 1:57:37 PM3/1/15
to mint...@googlegroups.com
திரு. தினேஷ், பாண்டியராஜா ஐயா உருவாகியுள்ள ...

பக்கத்தில் சென்று பாருங்கள்.  திருக்குறளில்  எந்தந்த சொற்கள் உள்ளன என்று தேட உதவும் 

கேள்வி :தமிழ் என்கிற வார்த்தை கொண்ட திருக்குறள் உண்டா?
பதில்: இல்லை 

..... தேமொழி

Dinesh Babu

unread,
Mar 1, 2015, 3:51:30 PM3/1/15
to mintamil@googlegroups com, kkdines...@gmail.com

தமிழ் மொழியில் எழுதப்பட்ட உலக பொதுமறையில், தமிழ் வார்த்தை இடம் பெறாதது ஆச்சரியம் தான் ஆனாலும் உன்மை.
சுட்டிக்கு மிகவும் நன்றி. மிகவும் பயனுள்ள சுட்டி.

--

N. Ganesan

unread,
Mar 1, 2015, 6:53:11 PM3/1/15
to mint...@googlegroups.com

On Sunday, March 1, 2015 at 12:51:30 PM UTC-8, kkdineshbabu78 wrote:

தமிழ் மொழியில் எழுதப்பட்ட உலக பொதுமறையில், தமிழ் வார்த்தை இடம் பெறாதது ஆச்சரியம் தான் ஆனாலும் உன்மை.
சுட்டிக்கு மிகவும் நன்றி. மிகவும் பயனுள்ள சுட்டி.

உண்மை. 

வருக நற்றமிழ் தருக

நா. கணேசன்

N D Logasundaram

unread,
Mar 2, 2015, 1:54:25 AM3/2/15
to mintamil
தமிழ் என்கிற வார்த்தை கொண்ட திருக்குறள்  உண்டா?
தினேஷ்
தமிழ் மொழியில் எழுதப்பட்ட உலக பொதுமறையில், தமிழ் வார்த்தை
இடம் பெறாதது ஆச்சரியம் தான் ஆனாலும் உன்மை

இந்த இழையில் .இவ்வாறு தினேஷ் எனும் பெயருடைய ஒரு மடலாடல் உறுப்பினர் எழுதினா ர் 

திரு தினேஷ் அவர்களுக்கு ,
இந்த வினா  எழுந்ததன் அடிப்படை தமிழை மறைமுகமாக சிறு பிள்ளை போல் கிண்டலடிக்கும்
மனநிலையில் உள்ளவராகத் எனக்குத் தோ ன்றுகின்றது இல்லை இல்லை நான் தமிழ் மொழி
என் தாய் மொழி அதன் மேல் மிகுந்த பற்றுடையவன் அதனால் தான்  கேட்கின்றேன் என சொல்
வீர்களனால் தமிழ் மொழியை மேலும் நன்றாக கசடறக் கற்று க்கொள்ள முயற்சிக்கலாம். 
அது உங்கள் விருப்பம் இதை கீழ்கண்டவற்று டன்சேர்த்து வைத்துள்ளது படிக்கலாம்  என்பது 
என் விருப்பம்

(1) குறள் எண் 391 தனை பொருளுடன் கற்றறிந்து மனதில் நிறுத்திக் கொள்ளலாம் 

(2) நீங்கள் முதலில் வைத்த தங்களின் வினா எந்த வகை ?
     தமிழ் மொழியை அதன் இயலை  உயர்நிலைப்பள்ளியில் படித்தவரானால் வினாக்களில் பலவகை
     உண்டு என அறிவீர்கள் . அறிவினா / அறியாவினா / ஐயவினா / கொளல் வினா / ஏவல்  வினா  / எனவருவன 
    அந்த நிரலில் உங்களது ஐயவி னாவாக தோற்றமளித்தாலும் அறிவினா  தான் என்பதன் அடிப்படையில் இந்த மடல் 

(3) தமிழ் மொழியில் ம ட்டுமல்லாமல்  நீங்கள் கற்றுள்ள எ ந்தமொழியாயினும் தான் எழுத நினைக்கும் கருத்தை 
      சொற்றொடர் தவறின்றி எழுதுவது சிறப்புடையது அல்லவா? நீங்கள் எழுதி ய சொற்றொடரில் 
     "தமிழ் வார்த்தை "  இடம்பெறாதது என மட்டும் எழுதி உள்ளீர்கள் எதுவே தமிழ் +எனும்+ வார்த்தை (அல்லது 
      மேலும் சிறப்பாக தமிழ் எனும் சொல் ) இடம் பெறாதது என இருப்பது தவற்ற சொற்றொடர் ஆகும் 
     முதலில் நீங்களும் பின் அவ்வாறே தேமொழியாரும் குறித்துள்ளார் இது ஒரு  மிக மிகச்சிறு விடுபட்ட தவறுதான் 
      அதாவது சரியானது " உலக பொதுமறை யில் தமிழ் எனும் சொல் (வார்த்தை) இடம் . . . . . . . . "  என வரும் 
      மேலும்
      தமிழ் எனும் சொல்லிற்கு ஓர் மொழியை அதன்  பண்பின் வழி குறிக்கும் என்பதுடன் மேலும் சி லபொருட்கள் உண்டு
      பாரதி தாசன் எழுதிய "தமிழுக்கும் அமுதென்று பேர் " எனும் திரைப்படத்திலும் வந்த அந்த பாடலைக் கேட்டிருக்கலாம் 

(4) தினேஷ் பாபு எனும் உங்களின் பெயர் எந்த மொழியில் உள்ளது அதனில் அந்த இரு சொற்களுக்கு பொருள் என்ன அன்று
      அறிவீரா ?? இது ஓர் அறி வினா ஆயினும் ஐயவினா வாக வைக்கப்படு கின்றது விடை  தங்களின் கல்வி நிலை பொறுத்தது
      அல்லவா? 
      
நூ த லோ சு
மயிலை 

Dinesh Babu

unread,
Mar 2, 2015, 12:22:57 PM3/2/15
to mintamil@googlegroups com, kkdineshbabu78@gmail com

முதலில் கிண்டல் செய்யும் நோக்கில் இக்குலுமத்தில் இணையவில்லை என்பதை தெரிவித்துகொள்கிறேன்.
எனது பதிவுகள் அவ்விதம் அமைந்திருந்தால் மன்னிக்கவும்.

சுட்டிகாட்டிய தவறுகளை, திருத்திகொள்ள முயற்சிக்கிறேன்.

முதல் வினாவிற்கு விடையாய் இப்படியா மிரட்டுவது.

Suba.T.

unread,
Mar 2, 2015, 1:37:38 PM3/2/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-03-02 18:22 GMT+01:00 Dinesh Babu <kkdines...@gmail.com>:

முதலில் கிண்டல் செய்யும் நோக்கில் இக்குலுமத்தில் இணையவில்லை என்பதை தெரிவித்துகொள்கிறேன்.
எனது பதிவுகள் அவ்விதம் அமைந்திருந்தால் மன்னிக்கவும்.

நீங்கள் கிண்டல் செய்யும் வகையில் எழுதவில்லை என்பதை அறிவேன். தயங்காமல் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் தினேஷ்.

சுபா​

--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
ராம் காமேஸ்வரன்

unread,
Mar 2, 2015, 1:50:34 PM3/2/15
to mint...@googlegroups.com
//தமிழ் மொழியை அதன் இயலை  உயர்நிலைப்பள்ளியில் படித்தவரானால் வினாக்களில் பலவகை
     உண்டு என அறிவீர்கள் . அறிவினா / அறியாவினா / ஐயவினா / கொளல் வினா / ஏவல்  வினா  / எனவருவன //
 
கொடை வினாவினை விட்டுவிட்டீர்கள்
 
1) அறிவினா
2) அறியாவினா
3) ஐயவினா
4) கொளல்வினா
5) கொடைவினா
6) ஏவல் வினா
 
On Monday, March 2, 2015 at 1:54:25 AM UTC-5, selvi...@gmail.com wrote:

N D Logasundaram

unread,
Mar 2, 2015, 2:32:27 PM3/2/15
to mintamil
மிக மிக நன்றி திரு காமேஸ்வரன் 

மடல் எழுதும் போது முயற்சி செய்து முயற்சி செய்து பார்கிறேன் தொண்டையில் இருக்கின்றது 
கைக்கு வரவில்லை என நீண் டநேரம் யோசித்து பிறகுதான் அனுப்பினேன் இப்போதெல்லாம் 
மூளையில் உள்ள Ram ல் ADRESSING SYSTEM சரியாக  வேலை செய்ய மறுக்கின்றது 

நன்னூல் hard copy  இருக்கின்றது அறையை மாற்றுவதால்  இரவில் மடியில் உள்ள தை தேடி பிடி க்க
சோம்பேறித்தனம் பட்டு சரி இது போதும் என வைத்தேன் 
 மீண்டும் நன்றி 

அன்புடன் 
நூதலோசு 
 
அன்புடன் 
நூ த லோ சு 

ராம் காமேஸ்வரன்

unread,
Mar 2, 2015, 3:34:28 PM3/2/15
to mint...@googlegroups.com
ஐயா,
நன்றி என்ற பெரிய வார்த்தையெல்லாம் வேண்டா.
ப்ராஜக்ட் மதுரை, தமிழ் இணையக் கல்விக் கழகம், போன்ற அரிய பெரிய வேலைகளையெல்லாம் செய்து வைத்துள்ளீர்கள்.
எனது வேலை சுலபமாக கூகுள் செய்து கொடுத்ததுதான்.

On Monday, March 2, 2015 at 2:32:27 PM UTC-5, selvi...@gmail.com wrote:
 
Seshadri Sridharan

unread,
Mar 2, 2015, 11:33:08 PM3/2/15
to mintamil
2015-03-02 22:52 GMT+05:30 Dinesh Babu <kkdines...@gmail.com>:

முதலில் கிண்டல் செய்யும் நோக்கில் இக்குலுமத்தில் இணையவில்லை என்பதை தெரிவித்துகொள்கிறேன்.

தமிழுக்கு சிறப்பு தரும் ழகரத்தை ஏன் இப்படி லகரமாக்கி கொன்று உங்களை தமிழ் பகைஞர் என்று காட்டிக்கொள்கின்றீர்   

கைத்தொழுவான் 

N. Ganesan

unread,
Mar 2, 2015, 11:47:34 PM3/2/15
to mint...@googlegroups.com, kkdines...@gmail.com

On Monday, March 2, 2015 at 9:22:57 AM UTC-8, kkdineshbabu78 wrote:

முதலில் கிண்டல் செய்யும் நோக்கில் இக்குலுமத்தில் இணையவில்லை என்பதை தெரிவித்துகொள்கிறேன்.
எனது பதிவுகள் அவ்விதம் அமைந்திருந்தால் மன்னிக்கவும்.

தினேஷ்,

z or zh in your Tamil editor will produce ழ். For இக்குழுமத்தில், type ikkuzumaththil

நா. கணேசன்

Pandiyaraja

unread,
Mar 3, 2015, 12:15:52 AM3/3/15
to mint...@googlegroups.com
அடேங்கொப்பா! வினாக்களில் இத்தனை வகை உண்டு என்று மீண்டும் நினைவுபடுத்திக்கொண்டேன். மிக்க நன்றி ஐயா.
வினாக்களில் எத்தனை வகை உள என்று ஆசிரியர் மாணவர்க்குக் கேள்வித்தாளில் கேட்கும் வினா, மாணவர் அறிந்துள்ளனாரா, அறியாதிருக்கின்றனரா என்ற ஐயத்தைத் தெரிந்துகொளல்வேண்டி, அவருக்கு மதிப்பெண் கொடைவழங்க ஆசிரியர் ஏவல்விடும் வினா!! இது எந்த வகை வினா?
சும்மா!!!
ப.பாண்டியராஜா

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 3, 2015, 12:29:33 AM3/3/15
to mintamil
கொடைவினா என்றால் என்னவாக இருக்கும் என்று எண்ணினேன். அறியாததை ஐயவினாவாகக்கேட்க தயக்கம்.

அருமையாக ஒரு சொற்றொடரில் விளக்கியுள்ள பேராசிரியருக்கு நன்றி.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

செல்வன்

unread,
Mar 3, 2015, 12:29:37 AM3/3/15
to mintamil

2015-03-02 22:32 GMT-06:00 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
தமிழுக்கு சிறப்பு தரும் ழகரத்தை ஏன் இப்படி லகரமாக்கி கொன்று உங்களை தமிழ் பகைஞர் என்று காட்டிக்கொள்கின்றீர்   

ஒரு சாதாரண எழுத்துபிழைக்கு இப்படிப்பட்ட பெரிய வார்த்தைகள் அவசியமா சேசாத்திரி?

--

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 3, 2015, 1:31:51 AM3/3/15
to mintamil, kkdines...@gmail.com
2015-03-02 2:21 GMT+05:30 Dinesh Babu <kkdines...@gmail.com>:

தமிழ் மொழியில் எழுதப்பட்ட உலக பொதுமறையில், தமிழ் வார்த்தை இடம் பெறாதது ஆச்சரியம் தான் ஆனாலும் உன்மை. 

ஆச்சரியப்பட்டதின் விளைவு எப்படியெல்லாம் பொருள்கொள்ளப்படுகின்றன என்பதற்கு இவ்விழை ஒரு எடுத்துக்க்காட்டு.
மேற்கண்ட சொற்றொடரில் திரு தினேஷ் ஆச்சரியப்பட்டது 1.அவர் அறிந்துகொண்டே கேள்விகேட்டுத் திருக்குறளை உலகப்பொதுமறை என்கிறீர்களே அந்த தமிழில் எழுதப்பட்ட நூலில் தமிழ் என்ற சொல் கூட இல்லையே என்று குறைகூறுகிறார் என்று சில நண்பர்களை நினைக்கவைத்துவிட்டது என எண்ணுகிறேன்.
அந்த எண்ணத்தில் தங்கள் கருத்தைப்பதிவிடுகிறார்கள்.

தமிழ்ப்பகைவர், வேண்டுமென்றே பதிவிட்டுள்ளார் என்பவை கடுமையான சொற்கள். 
எழுதியதை சரிபார்க்காவிட்டால் அனைவருக்குமே பிழை நேர்ந்துவிடுகிறது.
இயன்றவரை எழுதியதைச்சரிபார்த்து அனுப்பவேண்டும் என்பதும் எல்லோருக்குமான பாடம்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

Hari Krishnan

unread,
Mar 3, 2015, 1:41:10 AM3/3/15
to mintamil, kkdines...@gmail.com

2015-03-03 12:01 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
2015-03-02 2:21 GMT+05:30 Dinesh Babu <kkdines...@gmail.com>:

தமிழ் மொழியில் எழுதப்பட்ட உலக பொதுமறையில், தமிழ் வார்த்தை இடம் பெறாதது ஆச்சரியம் தான் ஆனாலும் உன்மை. 

ஆச்சரியப்பட்டதின் விளைவு எப்படியெல்லாம் பொருள்கொள்ளப்படுகின்றன என்பதற்கு இவ்விழை ஒரு எடுத்துக்க்காட்டு.

திருக்குறளில் ‘தமிழ்’ என்ற பெயர் மட்டுமா இல்லை.  வேறு என்ன என்னவெல்லாம் இல்லை என்பதை இசைக்கவி ரமணனுக்காகத் தொகுத்துக் கொடுத்திருந்தேன்.  அவருடைய திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை தொடர் சொற்பொழிவில் அச்சடித்து வழங்கப்பட்ட முன்னுரையிலிருந்து ஒரு பகுதியைத் தருகிறேன்:

சரி, 1330 குறட்பாக்களை எழுதியிருக்கிறாரே, அவற்றுள் கிடைக்கும் சில துப்புகளை வைத்துக்கொண்டு இவரை அடையாளம் கண்டுகொள்ளலாம் என்று எத்தனையோ அறிஞர்கள் ஆராய்ச்சி செய்துவிட்டார்கள். ஊஹூம்!

  • ஏதாவதொரு மலை, ஆறு, அரசன் பெயர் வருகிறதா என்றால் இல்லை. (இமயம், மேரு, விந்தியம், என்று இலக்கியங்களில் வழங்கி வரும் மலைப் பெயர்கள்; கங்கை, காவேரி என்பன போன்ற ஆற்றுப் பெயர்கள் எதுவுமே இல்லை. நாம் காண்பதெல்லாம் ஆறு, நதி, மலை, குன்று. வேந்தன், இறைவன் என்பன போன்ற பொதுப்பெயர்கள் மட்டுமே.)
  • உவமைகளிலாவது, பாரியைப்போல், பாண்டியனைப்போல் என்பதாக ஏதேனும் இருந்தால் காலத்தை ஓரளவு நிர்ணயம் செய்துகொள்வோம் என்றால் ஒன்றுமே இல்லை
  • சிவயோகி, சமணர், என்று பலரும் பலவிதமாக இவரைச் சொந்தம் கொண்டாடிக் கொள்கிறார்கள். எந்தக் குறிப்பிட்ட கடவுளையும் இவர் குறிப்பிடவில்லை. எந்த மதத்தையும் பிரத்யேகமாக அடையாளம் காட்டவுமில்லை. தவறிப்போய் விழுந்திருப்பது, மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு (61:மடியின்மை:10) சோம்பல் இல்லாத அரசன், தன் அடிகளால் இறைவன் உலகளந்த நிலப்பரப்பு யாவையும் ஒருசேர அடைவான். தாமரைக் கண்ணான் உலகு என்பது வைகுந்தத்தைக் குறிக்கிறது என்றீர்களானால் அதற்கு எதிர்விளக்கம் வைத்திருக்கிறார்கள் சமணர்கள். ஆனால், ஹரி கிருஷ்ணன் சொல்வதுபோல், `இந்தக் கள்ளனுக்குத் தப்பியவன் அந்தக் குள்ளன்,` என்று சொல்லலாம். திரிவிக்கிரமாவதாரம் மட்டுமே அசைக்க முடியாத ஆதாரமாக விளங்குகிறது. திரு என்பது திருமகளைக் குறிக்கிறது என்றால் அதற்கும் சமணர்களிடம் சமாதானம் இருக்கிறது. முகடி, தவ்வை என்ற மூதேவியின் அடையாளங்களை மட்டுமே தப்பாமல் காண முடிகிறது. ஆனால், இவை அன்றைய சமூகத்தில் புழக்கத்தில் இருந்த பொதுப்பெயர்கள் – அடியளந்தான் என்பதைத் தவிர  -- என்பதால் உறுதியான அடையாளம் என்று அடித்துச் சொல்ல முடியவில்லை. ஆயினும், உள்ளே ஆன்மிகம், வெளியே அறவாழ்க்கை என்னும் பழைய பாரதப் பண்பாட்டில் ஊறித் திளைத்தவர் வள்ளுவர் என்று கொள்வதற்கு, நுணுக்கமான ஆராய்ச்சிகள் தேவைப்படவில்லை என்பது என் கருத்து.

  • ஒரு காவியம் காலங்கடந்து நிற்பதற்கு அதன் கதைப் பொருள் காரணமாக இருக்கலாம்; ‘தன்னேரில்லாத் தலைவனைக் கொண்டு’ என்று சொல்வார்களே, அதுபோன்ற, மக்களைக் கவரும் நாயகர்களுடைய பாத்திரப் படைப்பால் இருக்கலாம்.  ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்கள் போலவோ, அல்லது புராணங்கள் போலவோ இதில் ஏதாவது கதையம்சம் இருக்கிறதா என்று பார்த்தால் ஒரு குட்டிக் கதைகூட இல்லை. நூற்றுக் கணக்கான கதைகளுக்கு ஆதாரமாகத் திருக்குறள் விளங்குகின்றது என்பது வேறு.  கதையம்சமோ, கதாபாத்திரமோ தேவைப்படாமலேயே மக்களைப் பற்பல நூற்றாண்டுகளாக வசியப்படுத்தி வைத்துள்ள நூல் திருக்குறள் என்பது முதல் வியப்பு. 
  • இவருடைய பெயர் நூலில் எங்கும் இல்லை. தேவாரம், பிரபந்தம் போல சமய முத்திரை இல்லவே இல்லை. அடையாளம் காணத்தக்க சித்தாந்தங்கள் (schools of thought) எதுவும் காணப்படவில்லை. இது அடுத்த வியப்பு.

இந்த நூல் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது, குறட்பா யாப்பில் அமைந்திருக்கிறது என்பவற்றைத் தவிர வேறெதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இதில் தமிழ் என்னும் சொல் ஓரிடத்தில்கூட வரவில்லை என்பது தூக்கி வாரிப்போடச் செய்யும் அடுத்த வியப்பு என்றாலும் இதை எழுதியவர் தமிழர் என்பதையும் நாம் நம்பலாம்தானே!

=================

இதைத் தொடர்ந்து, கள்ளனுக்குத் தப்பிய குள்ளன் சூரியன்தான் என்றும் இன்னும் மற்ற மற்றவர்கள்தாம் என்றும் பொழுதுபோகாவிட்டால் வாதிடலாம்.  என்னுடைய ஆசிரியர் நாகநந்தி அவர்கள் எப்போதும் சொன்னதைப் போல, ‘வள்ளுவரின் சிண்டு அவ்வளவு சுலபத்தில் சிக்கிவிடாது’  :)

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Hari Krishnan

unread,
Mar 3, 2015, 1:46:37 AM3/3/15
to mintamil, kkdines...@gmail.com

2015-03-03 12:11 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
திருக்குறளில் ‘தமிழ்’ என்ற பெயர் மட்டுமா இல்லை.  வேறு என்ன என்னவெல்லாம் இல்லை என்பதை இசைக்கவி ரமணனுக்காகத் தொகுத்துக் கொடுத்திருந்தேன்.  அவருடைய திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை தொடர் சொற்பொழிவில் அச்சடித்து வழங்கப்பட்ட முன்னுரையிலிருந்து ஒரு பகுதியைத் தருகிறேன்:

எழுதிய புத்தகத்துக்குப் பெயரே வைக்காத ஒருவர் உண்டா என்றால் அதுவும் வள்ளுவர்தான்.  குறள், திருக்குறள் என்ற பெயரே மிகப் பிற்காலத்தில் வந்ததுதான். முப்பால் என்பது பழைய பெயர்.  மேற்படி கையேட்டில் இன்னொரு பகுதி:

அட, நூலுக்குக்கூட இவர் பெயர்வைத்ததாகத் தெரியவில்லை. பாக்களின் யாப்பு, குறட்பா வடிவத்தில் அமைந்திருப்பதால் இது குறள் எனவும், ஒரு சிறப்பு அடைமொழி கொண்டு திருக்குறள் எனவும் வழங்கி வருகிறது. இந்த யாப்பில் ஒரு நூல் என்பது பழங்காலத்தில் இல்லை என்பதும் இந்தப் பெயர் வந்ததற்குக் காரணமாயிருந்திருக்கலாம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை வகுத்துச் சொல்லும் வெண்பா,

நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்

பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்

இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே

கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு.

 அட போகட்டும், வள்ளுவர் என்ற பெயராவது விவாதத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை!

தேமொழி

unread,
Mar 3, 2015, 1:51:22 AM3/3/15
to mint...@googlegroups.com, kkdines...@gmail.com

On Monday, March 2, 2015 at 10:41:10 PM UTC-8, Hari wrote:
‘வள்ளுவரின் சிண்டு அவ்வளவு சுலபத்தில் சிக்கிவிடாது’  :)

அவர் சிண்டு வைத்திருந்தாரா அல்லது மொட்டைத் தலையா என்பதுதான் ஆராய்ச்சியே.

..... தேமொழி

Hari Krishnan

unread,
Mar 3, 2015, 1:54:20 AM3/3/15
to mintamil, kkdines...@gmail.com

On 3 March 2015 at 12:21, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
அவர் சிண்டு வைத்திருந்தாரா அல்லது மொட்டைத் தலையா என்பதுதான் ஆராய்ச்சியே.

:)))

மொட்டத்தலைன்னா அதான் சிக்கவே போறதில்ல.  அதனால, சிக்காதுங்கறதுக்கு ஒரே டீஃபால்ட் சிண்டுதான்.  ம்க்கும்.

Pandiyaraja

unread,
Mar 3, 2015, 2:33:20 AM3/3/15
to mint...@googlegroups.com, kkdines...@gmail.com
தம்பி தினேஷ் வாழ்க. அவர் எங்கேயோ ஓர் அம்பினை ஏவிவிட அது எங்கெல்லாமோ பாய்ந்து வாழை, பலா, மா, நாவல், கொய்யா என விதவிதமான கனிகளை உதிர்த்துக்கொண்டே செல்கிறது. இன்னும் கனிகள் வருமோ? ஐயா ஹரி அவர்களின் கனிக்கு மிக்க நன்றி.
ப.பாண்டியராஜா

Seshadri Sridharan

unread,
Mar 3, 2015, 4:30:45 AM3/3/15
to mintamil
30 அகவை வரை ழகரம் நன்றாக பலுக்கியவன் எல்லாம் இன்று 40ல் அதை லகரமாக்குகிறான். எல்லாம் மதுரை நெல்லை சார்ந்த படங்களைப் பார்த்து தொற்றிய நோய். மிக வேகமாக பரவிவரும் நோய்.

கைத்தொழுவான்.  

Suba.T.

unread,
Mar 3, 2015, 5:18:18 AM3/3/15
to மின்தமிழ்
​ஆம். சரியாகச் சொன்னிர்கள்.

தெரிந்து கொள்ள வேண்டும் என கேட்கும் ஒரு புதியவரை ஏதாவது ஒரு வகையில் தாக்கினால் அடுத்து அவர்கள் தொடர்ந்து பங்கெடுப்பார்களா..
எல்லாவற்றிற்உம் ஏதோ உள் அர்த்தம் இருக்கும் என நினைத்து சந்தேக ஆன்ஓண்டு பார்க்கும் போக்கை சேசாத்ரி போன்றோர் தவிர்க்க வேண்டும்.
அதே போல திரு.நூ த லோ சுச் அவர்களும்  திணேஷ் குறிஅ கூற் எழுதுகின்றார் என நினைத்து எழுதுவதும் சரியல்ல.
என்ன நோக்கம் என கேள்வி கேட்டு அறிந்து கொள்ளும் பொறுமை மடலாடலில் மிக அவசியம்.

புதியவர்களை எழுத ஊக்குவிப்போம். 
ஆரம்பத்திலேயே தாக்கி அவர்கள்து ஊக்கத்தை கெடுக்க வேண்டாம்​
 
​சுபா​

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Meenavan M

unread,
Mar 3, 2015, 7:00:26 AM3/3/15
to mint...@googlegroups.com
எந்த மொழியையும் வள்ளுவர் சுட்டவில்லை.ஆனால் அவர் தமிழர்
இசுலாமியர் தங்களவர் என்பர்.
“கழாக்கால் பள்ளியுள் வைத்தற்று “என்ற குறளைச் சொல்லுவார்கள்.
பள்ளிவாசலில் காலைக் க்ழுவியபின் செல்வதுதான் அவர்கள் வ்ழக்கம்
மீனவன்

N. Ganesan

unread,
Mar 3, 2015, 9:14:34 AM3/3/15
to mint...@googlegroups.com, Santhavasantham, housto...@googlegroups.com, vallamai, thami...@googlegroups.com, மு இளங்கோவன், Iravatham Mahadevan, Dr. Krishnaswamy Nachimuthu, Erode Tamilanban Erode Tamilanban, sirpi balasubramaniam, podhuvan sengai, mozhitrust
On Tuesday, March 3, 2015 at 4:00:26 AM UTC-8, meenavan2 wrote:
எந்த மொழியையும் வள்ளுவர் சுட்டவில்லை.ஆனால் அவர் தமிழர்
இசுலாமியர் தங்களவர் என்பர்.
“கழாக்கால் பள்ளியுள் வைத்தற்று “என்ற குறளைச் சொல்லுவார்கள்.
பள்ளிவாசலில் காலைக் க்ழுவியபின் செல்வதுதான் அவர்கள் வ்ழக்கம்
மீனவன்

புலவர் மீனவன்,

அரேபியாவிலேயே இஸ்லாமோ, முகமதுநபியோ பிறக்காத காலத்தில்
வாழ்ந்தவர் திருவள்ளுவர். அவர் எப்படி பள்ளிவாசலைப் பாடுவார்?
அறபிகள் முதல்பள்ளிவாசலை இந்தியாவில் 8-ஆம் நூற்றாண்டில் கேரளாவில்
கட்டியுள்ளனர். பார்ப்பதற்கு கேரளாவின் அம்பலம் - ஹிந்துக் கோவில் போல
ஓட்டுவில்லை, மரத்தால் ஆக கட்டடம். பள்ளிவாசலைப் பாடினார்
என்றால் வள்ளுவர் 8-ஆம் நூற்றாண்டா???

சமணர்கள் பள்ளிகளை தமிழ்ப்பிள்ளைகளுக்குத் தொடங்கி நடாத்தியவர்கள்.
கல்வெட்டுக்களிலே, இலக்கண இலக்கியங்களிலே (தொல்காப்பியம், திருக்குறள், நாலடி, சிந்தாமணி,
நன்னூல், இளம்பூரணம், ...) சமணரின் தமிழ்க்கொடை ஏராளமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
எனவே, அப்பள்ளிகளுக்குத் தோட்ட வேலைகளில் இருந்தும், மண்ணில்
விளையாடிவிட்டும் வரும் பிள்ளைகளைக் கை, கால், முகம் எல்லாம்
கழுவிச் சுத்தமாய் வரச் சொன்னார்கள். அதனை வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
பள்ளி = School என்ற பொருளில் வரும் முதல் தமிழ் ஆட்சி இஃது.

வள்ளுவர் காலத்திலோ, அல்லது சற்றுப்பின்னரோ வாழ்ந்த ஔவைக்
குரத்தியார் ஆத்திசூடி பார்சுவநாத தீர்த்தங்கரரை வாழ்த்திச் செய்த
நூல். அதுதான் தமிழ் கற்பிக்க வள்ளுவர் கூறும் பள்ளிகளில்
முதலில் குழந்தையர் கற்கும் முதனூல் ஆகும். இன்றைக்கும்.

ஆத்திசூடி அமரும் தேவர் பார்சுவநாதர் - "முக்குடை” ஜைந இளைஞர் மன்ற இதழில் வெளியான கட்டுரை
இங்கே பிடிஎப் கோப்பைத் தரவிறக்கிப் படித்தருளுக.
இம் மடலிலும் இணைத்துள்ளேன். 

நண்பர் தினேஷ்பாபு போன்றோர் எழுதத் தமிழ் வளரும் என்பது நம்பிக்கை.
வள்ளுவர் பற்றிய சில செய்திகளைக் குறிப்பிடலாம்.

நா. கணேசன்
Germany_Tamil_Conf_2014.pdf

Dev Raj

unread,
Mar 3, 2015, 11:42:06 AM3/3/15
to mint...@googlegroups.com
  • சிவயோகி, சமணர், என்று பலரும் பலவிதமாக இவரைச் சொந்தம் கொண்டாடிக் கொள்கிறார்கள். எந்தக் குறிப்பிட்ட கடவுளையும் இவர் குறிப்பிடவில்லை. எந்த மதத்தையும் பிரத்யேகமாக அடையாளம் காட்டவுமில்லை. தவறிப்போய் விழுந்திருப்பது, மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு (61:மடியின்மை:10) சோம்பல் இல்லாத அரசன், தன் அடிகளால் இறைவன் உலகளந்த நிலப்பரப்பு யாவையும் ஒருசேர அடைவான். தாமரைக் கண்ணான் உலகு என்பது வைகுந்தத்தைக் குறிக்கிறது என்றீர்களானால் அதற்கு எதிர்விளக்கம் வைத்திருக்கிறார்கள் சமணர்கள்.
 
ஆம், அவர்கள் இந்திரனைத் தாமரைக் கண்ணானாகச் சொல்வர். ஆனால் நிகந்தர் ஒருவரால் தொகுக்கப்பட்டு
வடநூலார் அனைவராலும் மிகச் சிறந்த நிகண்டாக ஏற்கப்பட்டுள்ள அமரகோசத்தில் அச்சொல் ஏன்
காணப்படவில்லை ? ‘ஹரி’ என்பதுகூட இந்திரனின் பெயராகச் சொல்லப்படுகிறது.அதில் 34ம் பெயராக 
அமைந்திருப்பது ஸஹஸ்ராக்ஷ - ஆயிரங்கண்ணான். அரவிந்தாக்ஷ - தாமரைக் கண்ணான் பெயர்ப்பட்டியலில் இல்லை :

அர்த₂​: :: இந்த்₃ர​: |  
வர்க₃​: :: ஸ்வர்க₃வர்க₃​: |  

இந்த்₃ர, மருத்வத், மக₄வந், பி₃டௌ₃ஜஸ், பாகஶாஸந, வ்ருʼத்₃த₄ஶ்ரவஸ், ஸுநாஸீர, புருஹூத, புரந்த₃ர, ஜிஷ்ணு, லேக₂ர்ஷப₄, 
ஶக்ர, ஶதமந்யு, தி₃வஸ்பதி, ஸுத்ராமந், கோ₃த்ரபி₄த்₃, வஜ்ரிந், வாஸவ, வ்ருʼத்ரஹந், வ்ருʼஷந், வாஸ்தோஷ்பதி, ஸுரபதி, 
ப₃லாராதி, ஶசீபதி, ஜம்ப₄பே₄தி₃ந், ஹரிஹய, ஸ்வாராஜ், நமுசிஸூத₃ந, ஸங்க்ரந்த₃ந, து₃ஶ்ச்யவந, துராஷா, மேக₄வாஹந, 
ஆக₂ண்ட₃ல, ஸஹஸ்ராக்ஷ, ருʼபு₄க்ஷிந், கௌஶிக, க₄நாக₄ந, பர்ஜந்ய, ஹரி

  • ஆனால், ஹரி கிருஷ்ணன் சொல்வதுபோல், `இந்தக் கள்ளனுக்குத் தப்பியவன் அந்தக் குள்ளன்,` என்று சொல்லலாம். திரிவிக்கிரமாவதாரம் மட்டுமே அசைக்க முடியாத ஆதாரமாக விளங்குகிறது. திரு என்பது திருமகளைக் குறிக்கிறது என்றால் அதற்கும் சமணர்களிடம் சமாதானம் இருக்கிறது. முகடி, தவ்வை என்ற மூதேவியின் அடையாளங்களை மட்டுமே தப்பாமல் காண முடிகிறது. ஆனால், இவை அன்றைய சமூகத்தில் புழக்கத்தில் இருந்த பொதுப்பெயர்கள் – அடியளந்தான் என்பதைத் தவிர  -- என்பதால் உறுதியான அடையாளம் என்று அடித்துச் சொல்ல முடியவில்லை.

உழுதொழுலின் மேன்மை, இல்வாழ்க்கைச் சிறப்பு , உயிர் நீத்தாருக்குரிய கடன் - இவற்றை உயர்த்தி, வலியுறுத்திச் சொல்லும் சமண நூல்கள் இருப்பின் 
தெரியப்படுத்தலாம். மறதிக்கு இடம்கொடாமல் பயிற்றுவிக்கும் வாக்யம், பதம்,க்ரமம், ஜடை, மாலை, சிகை, ரேகை, த்வஜம், தண்டம், ரதம், கனம்
எனும் கடினமான ஓத்து முறைகள் எழுதா மறைக்கே சொந்தமானவை. ஒருகால் மறதி நேர்ந்தாலும் பிழையில்லை, ஒழுக்கம் பிழையாமை வேண்டும் என வலியுறுத்துகிறது வள்ளுவம்.

தேவ்

தேவ்

N. Ganesan

unread,
Mar 3, 2015, 9:04:28 PM3/3/15
to mint...@googlegroups.com, santhav...@googlegroups.com, housto...@googlegroups.com, vall...@googlegroups.com, thami...@googlegroups.com, muela...@gmail.com, iravath...@gmail.com, tamiz...@gmail.com, erodetam...@gmail.com, sirpip...@gmail.com, podh...@gmail.com, mozhi...@yahoo.com
வள்ளுவர் சிரமணர்களின் சமணப் பள்ளியைப் பாடியுள்ளமை தெளிவு. சமணர் என்ற வார்த்தை சிரமணர் என்னும் சொல்தான்.
சிரமண சமயங்கள் இரு வகைத்து: ஜைநம், பௌத்தம். சமணப் பள்ளிகளில் குழந்தைகளுக்குக் கல்வி, சான்றோர்களின்
ஆராய்ச்சி எல்லாம் நடந்தன. இந்திய தத்துவ இலக்கியங்கள் பெரும்பாலானவை அந்த (சிரமணப்) பள்ளிகளில் உருவானவையே. வள்ளுவர் வாழ்ந்து 1000 ஆண்டு ஆனபின் வாழ்ந்தவர் பரிமேலழகர். அவருக்கு சமணப் பள்ளிகளும்,
அதன் தெய்வீகப் புனிதத் தன்மையும், கால் கழுவி சுத்தமாக அடியார்கள், மாணவர்கள் அவற்றில் புகுந்து கல்வி கற்ற வரலாறும் குறிக்கவில்லை. அப்போது கல்வெட்டாய்வுகளும், இலக்கியங்களைக் காலவரிசையில் பார்க்கும் வரலாற்று ஆய்வுகளும் தமிழில் தோன்றாக் காலம். எனவே, பள்ளி = படுக்கை என்று சொல்லிவிட்டார். ஆனால், கல்வி பற்றி முக்கியமான குறள் ஒன்றும் வள்ளுவர் அவ்வதிகாரத்திலே வைப்பதும் “ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும்” முக்கியமானது. இக்குறளை முழுமையாக தமிழின் முதற் கவிச்சக்கரவர்த்தி செயங்கொண்டார் தன் வளமடலில் ஆள்கிறார். அந்நூல் விஞ்ஞானபூர்வமாக உயிரிகள் தோன்றுவதை விளக்குவது. 

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்

இங்கே, பள்ளி = (சமணப்) பள்ளி “School where the village youth got educated".

பரிமேலழகரின் உரையைவிடச் சிறப்பான பொருளைப் பள்ளிக்கு குறள் 840-ல் கொள்ளவேண்டும்
என்று புலவர் பலர் விளக்கிவிட்டனர். மாதிரிக்கு, தேவநேயப் பாவாணர் உரையும், நாமக்கல் கவிஞர்
உரையும் தருகிறேன்.

ஞா. தேவநேயப் பாவாணர்
பேதை சான்றோர் குழாத்துப் புகல்-பேதையானவன் அறிவொழுக்கங்களால் நிறைந்த பெரியோர் அவையின்கண் புகுதல்; கழாக்கால் பள்ளியுள் வைத்த அற்று--கழுவித் துப்புரவு செய்யாத காலைத் தெய்வ நிலையமான கோவிற்குள் வைத்தாற் போலும்.

இக்குறளிலுள்ள உவமக் கூற்றில் 'பள்ளி' என்பது பலபொருளொருசொல். பிறரெல்லாம் படுக்கை அல்லது படுக்கையறை யென்றே பொருள் கொண்டனர். பரிமேலழகர் அமளியென்னுஞ் சொல்லையாண்டார். மணக்குடவ பரிபெருமாளர் பள்ளியென்னும் மூலச் சொல்லையே ஆண்டனர். "தூய வல்ல மிதித்த காலை இன்பந் தரும் அமளிக்கண்ணே வைத்தாற்போலும்" .என்னும் பரிமேலழகர் உவமவுரை பொருத்தமாகத் தோன்றுவதே . ஆயின், முழுப்பொருத்தமாகத் தோன்றவில்லை.'இன்பந்தரும் அமளி' என்பது சான்றோரவையில் இன்பத்தன்மையையும் துப்புரவுத் தன்மையையும் குறிக்குமேயன்றி , அதன் சிறப்பியல்பான தெய்வத்தன்மையை எடுத்துக் காட்டாது .

"அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்குந்
திங்களுஞ் சான்றோரு மொப்பர்மன் -திங்கள்
மறுவாற்றுஞ் சான்றோரஃ தாற்றார் தெருமந்து
தேய்வ ரொருமா சுறின்."

[ நாலடி. 151]

என்பதனால் சான்றோரின் தெய்வத்தன்மை உணரப்படும். 'கழாக்கால்' என்பது,அழுக்குந் தூசியும் நீராற்போக்கப்படாத காலையும். வெளிச் சென்று கழுவாத காலையும், நரகலை மிதித்துக் கழுவாதகாலையுங் குறிக்கும். அத்தகைய துப்புரவற்ற காலைப் படுக்கைறையில் வைத்தாலும், சமையலறை, ஊணறை, சரக்கறை, இருக்கையறை, அலுவலறை முதலிய பிறவிடங்களில் வைத்தாலும், ஏறத்தாழ ஒன்றே. ஆதலால், இங்குப் பள்ளி யென்பது , அருகிலுள்ள திருக்குளத்திற் குளித்தோ குளியாதோ காலை நீரால் துப்புரவாக்கியல்லது புகக்கூடாத, தேவகமாகிய கோவிலைக் குறித்ததாகக் கொள்வதே சிறப்புடையதாம். 'உள்' என்னும் இடவேற்றுமையுருபு கோவிற்கன்றி அமளிக் கேற்காமையையும் நோக்குக. வீட்டிலும் வேறிடத்திலும் குளித்து வருவார்க்கும் வரும்வழியிற் காலிற் படிந்த மாசைப் போக்குவதற்கே, கோயில்தோறும் திருக்குளமும் அருகிலுள்ளது. இதனால்,'கோயில் குளம்' என்பது ஓர் இணைச் சொல்லாகவும் வழங்கி வருகின்றது . எப்பொருளதாயினும் , பள்ளி யென்பது தூய தமிழ்ச்சொல் லெனபதைப் பின்னிணைப்பிற் கண்டு தெளிக.
கழாஅக்கால் என்பது வெளிச்சென்று கழுவாத காலைக் குறிப்பின் இடக்கரடக்கல். 'கழா அ', 'குழா அத்து' இசைநிறையளபெடைகள். 'ஆல்' அசைநிலை.

நாமக்கல் கவிஞர்

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்

பதவுரை: சான்றோர் குழாஅத்து பேதை புகல் கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்று = அறிவாளிகள் சபைக்குள் முட்டாள் புகுவது கழுவாத (அசுத்தமுள்ள) காலைச் சுத்தமான இடத்தில் வைப்பது போன்றது.

பொழிப்புரை: அறிவாளிகள் கூடியுள்ள சபையில் ஒரு முட்டாள் புகுவது கழுவாத அசுத்தமுள்ள காலைச் சுத்தமான இடத்தில் வைத்ததுபோல் கருதப்படும்.

விளக்கம்: குழாஅம் = குழாம் - கூட்டம். கழாஅக் கால் - கழுவாத கால் - அசுத்தத்தோடு கூடிய கால். பள்ளி - படுக்கை, மடைப்பள்ளி, பள்ளிக்கூடம், தேவாலயம் முதலான பரிசுத்தமாக உள்ள இடங்கள். அறிவாளிகள் கூடிய சபைக்குள் ஒரு முட்டாள் வருவது அந்த சபையை அசுத்தப்படுத்துவது போலக் கருதப்படும்.

------------------------------

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 3, 2015, 10:39:07 PM3/3/15
to mint...@googlegroups.com, housto...@googlegroups.com, vall...@googlegroups.com, thami...@googlegroups.com, tamiz...@gmail.com

On Tuesday, March 3, 2015 at 6:04:28 PM UTC-8, N. Ganesan wrote:
வள்ளுவர் சிரமணர்களின் சமணப் பள்ளியைப் பாடியுள்ளமை தெளிவு. சமணர் என்ற வார்த்தை சிரமணர் என்னும் சொல்தான்.
சிரமண சமயங்கள் இரு வகைத்து: ஜைநம், பௌத்தம். சமணப் பள்ளிகளில் குழந்தைகளுக்குக் கல்வி, சான்றோர்களின்
ஆராய்ச்சி எல்லாம் நடந்தன. இந்திய தத்துவ இலக்கியங்கள் பெரும்பாலானவை அந்த (சிரமணப்) பள்ளிகளில் உருவானவையே.

பொங்கு போதியும் பிண்டி யுமுடைப் புத்தர் நோன்பியர் பள்ளி யுள்ளுறை,
 தங்கள் தேவரும் தாங்களு மேயாக என்நெஞ்சமென்பாய்!” (திவ். பெரியதி. 2 1 5)
சமணப் பள்ளி = புத்தர் சைனர் பள்ளி

“கோவல னிறந்தபின் கொடுந்துய ரெய்தி, 
மாதவி மாதவர் பள்ளியு ளடைந்ததும்” (மணிமே. 18 8).

பள்ளியி லோதி வந்ததன் சிறுவன் வாயிலோ ராயிர நாமம்
ஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக் கொன்றுமோர் பொறுப்பிலனாகி 

- திருமங்கையாழ்வார் (திவ். பெரியதி. 2 3 8)

செல்வன்

unread,
Mar 3, 2015, 11:45:21 PM3/3/15
to vallamai, mintamil
வள்ளுவரின் இதயம் கண்டவர் பரிமேலழகர் என்பதற்கு இக்குறளும் இன்னொரு சான்று.

சான்றோர் அவையின் கண் பேதையாயினான் புகுதல்; 
கழாக்கால் பள்ளியுள் வைத்தற்று

இதில் உள்ள பள்ளியை படுக்கை என மிக நுணுக்கமாக ஆராய்ந்து பொருள் கண்டுள்ளார் பரிமேலழகர். பள்ளி என்பது சமணர் கோயிலைக்குறிக்கிறதா? அல்லது படுக்கையை குறிக்கிறதா என்பதில் 20ம் நூற்றாண்டு உரையாசிரியர் இருவரைத்தவிர யாரும் அப்பொருளைக்கூறவில்லை என்பதைக்காண்க. 

மேலும் படுக்கையில் தான் காலை வைப்போம்...கோயிலில் காலால் நடப்போம்.இதில் உள்ள பள்ளி என்பது கோயிலென்றால் "கழாக்காலுடன் பள்ளியில் புகுந்தாற்போல்.." என்பது போலவே இக்குறள் அமைந்திருக்கவேண்டும். இக்குறளில் உள்ள இடக்கரடக்கலை அழகாக இனம் கண்டு படுக்கையில் அடையும் இன்பத்தை கழாக்கால் கெடுப்பது போல சான்றோர் அவையில் அடையபடும் கவிதை, பாடல் முதலான இன்பத்தையும் பேதை கெடுத்துவிடுவான் என்பதை உணர்த்துகிறார் பரிமேலழகர்

மேலும் பள்ளி என்பது சமணர் பள்ளியை மட்டும் குறிப்பது அல்ல. வேதம் ஓதும் அந்தணர் வசித்த இடமும் பள்ளி என்ரே அழைக்கபட்டதாக மதுரைக்காஞ்சி கூறுகிறது. காண்க

அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்
    பெரியோர் மேஎய் இனிதின் உறையும்
    குன்றுகுயின் அன்ன அந்தணர் பள்ளி (468 474)

Pandiyaraja

unread,
Mar 4, 2015, 12:12:51 AM3/4/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
பள்ளி என்பது படுத்திருக்கும் இடம். ஊரை அடுத்துள்ள குன்றுகளில் இருக்கும் குகைபோன்ற இடங்களில் செதுக்கப்பட்ட கற்படுக்கைகளில் சமணர்கள் படுத்திருப்பராதலால் அவை சமணப் பள்ளி எனப்பட்டன. பின்னர் அவர்கள் ஊருக்குள் வந்து (மதுரைக்காஞ்சி) தமக்குக் கட்டிக்கொண்ட இருப்பிடங்களும், வழிபாட்டு இடங்களும் பள்ளி என்றே அழைக்கப்பட்டன. மதுரைக்காஞ்சி அந்தணர் பள்ளி, கடவுட்பள்ளி (பௌத்தப் பள்ளி) எனப் பிற மதத்தவரின் வழிபாட்டிடங்களையும் பள்ளி என்கிறது.
சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பள்ளி என்பது சாதாரண மக்கள் முதல் அரசன் வரை படுத்திருக்கும் இடமாகவே குறிக்கப்படுகிறது.விலங்கினங்கள் படுத்திருக்கும் இடமும் பள்ளி என்றே குறிக்கப்படுகிறது.

    பள்ளி (28)
குளவி பள்ளி பாயல்கொள்ளும் - சிறு 46
மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி - பெரும் 89
பாம்பு_அணை பள்ளி அமர்ந்தோன் ஆங்கண் - பெரும் 373
ஒரு கை பள்ளி ஒற்றி ஒரு கை - முல் 75
நெடு நகர் வீழ்ந்த கரி குதிர் பள்ளி/குடுமி கூகை குராலொடு முரல - மது 169,170
இலை வேய் குரம்பை உழை அதள் பள்ளி/உவலை கண்ணி வன் சொல் இளைஞர் - மது 310,311
ஒள் இழை மகளிர் பள்ளி அயர - மது 623
மதலை பள்ளி மாறுவன இருப்ப - நெடு 48
வேனில் பள்ளி தென்_வளி தரூஉம் - நெடு 61
தவ பள்ளி தாழ் காவின் - பட் 53
சேய் அளை பள்ளி எஃகு உறு முள்ளின் - மலை 300
மெய் உரித்து இயற்றிய மிதி அதள் பள்ளி/தீ துணை ஆக சேந்தனிர் கழி-மின் - மலை 419,420
கல் அளை பள்ளி வதியும் நாடன் - நற் 98/7
பள்ளி யானையின் வெய்ய உயிரினை - நற் 253/2
விடர் அளை பள்ளி வேங்கை அஞ்சாது - நற் 386/4
இல் இறை பள்ளி தம் பிள்ளையொடு வதியும் - குறு 46/5
பள்ளி யானையின் உயிர்த்து என் - குறு 142/4
சிறு வீ ஞாழல் வேர் அளை பள்ளி/அலவன் சிறு_மனை சிதைய புணரி - குறு 328/1,2
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇ - குறு 359/4
பொய்கை பள்ளி புலவு நாறு நீர்நாய் - ஐங் 63/1
நிவந்த பள்ளி நெடும் சுடர் விளக்கத்து - அகம் 93/14
ஆன் நிலை பள்ளி அளை பெய்து அட்ட - அகம் 107/8
பள்ளி கொள்ளும் பனி சுரம் நீந்தி - அகம் 197/15
பள்ளி யானை பரூஉ புறம் தைவரும் - அகம் 302/3
ஒதுக்கு இன் திணி மணல் புது பூ பள்ளி/வாயில் மாடம்-தொறும் மை விடை வீழ்ப்ப - புறம் 33/20,21
ஒள் அழல் பள்ளி பாயல் சேர்த்தி - புறம் 245/5
பரல் பெய் பள்ளி பாய் இன்று வதியும் - புறம் 246/9
பொதியில் ஒரு சிறை பள்ளி ஆக - புறம் 375/3

    பள்ளி-தொறும் (1)
பல் வேறு பள்ளி-தொறும் பாய் இருள் நீங்க - நெடு 105

    பள்ளிகொள்ளான் (1)
நள்ளென் யாமத்தும் பள்ளிகொள்ளான்/சிலரொடு திரிதரும் வேந்தன் - நெடு 186,187

    பள்ளிகொள்ளும் (1)
தில்லை அம் பொதும்பில் பள்ளிகொள்ளும்/மெல்லம்புலம்ப யான் கண்டிசினே - நற் 195/3,4

    பள்ளிபுக்கது (1)
பள்ளிபுக்கது போலும் பரப்பு நீர் தண் சேர்ப்ப - கலி 121/6

    பள்ளியும் (3)
சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும்/சிறந்த வேதம் விளங்க பாடி - மது 467,468
குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளியும்/வண்டு பட பழுநிய தேன் ஆர் தோற்றத்து - மது 474,475
பண்ணு பெயர்த்து அன்ன காவும் பள்ளியும்/பல் நாள் நிற்பினும் சேந்தனிர் செலினும் - மலை 451,452

    பள்ளியுள் (1)
எழினி வாங்கிய ஈர் அறை பள்ளியுள்/உடம்பின் உரைக்கும் உரையா நாவின் - முல் 64,65

இப்போது பள்ளி என்பது கல்விக்கூடம் என்ற பொருளில் வழங்கப்பட்டாலும், அங்கும் சில அறைகளில் சில மாணவர்கள் கண்விழித்தே தூங்குவதை நான் கணக்கிலெடுத்துக்கொள்ளவில்லை!!!
ப.பாண்டியராஜா

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Mar 4, 2015, 12:42:15 AM3/4/15
to mintamil

2015-03-04 7:34 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்

இங்கு பள்ளி என்பது படுக்கையையோ சமணர் பள்ளியையோ கோவிலையோ குறிக்காது.

இங்கு பள்ளி என்பது அறச்சாலையைக் குறிக்கும். 

மக்கள் கைகாலைக் கழுவிக்கொண்டு வரிசையாக அமர்ந்து உணவு உண்ணும் தூய இடமாகிய அறச்சாலைக்குள் கழுவாத அசிங்கமான கைகால்களுடன் ஒருவன் அவசரப்பட்டு நுழைந்துவந்தால் என்னாகும்?
அங்கு உணவு உண்டு கொண்டிருப்போர் அருவெறுப்புற்று மேற்கொண்டு உண்ணமுடியாமல் எழுந்து வெளியேறிவிடுவர்.

அதைப்போல ஆன்றோரின் அவைக்குள் ஒழுக்கங்கெட்ட பேதை ஒருவன் அவசரப்பட்டு நுழைந்தால் என்னாகும்?. அவன் ஒழுக்கங்கெட்ட பேதை என்பதால் நுழையும்போதே எதையாவது உளறிக்கொண்டு தான் வருவான். இதனால் அவையில் இருக்கும் ஆன்றோர்கள் மனம் வருந்தி அவையை விட்டு வெளியேறிவிடுவர். 

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எமக்கு நல்லது எதுவென்று
எம்மைக் காட்டிலும் நன்றாக
எம்பெருமானே அறியும் - மன்றுடைய
எம்பெருமானைக் காட்டிலும் நன்று
எம்மையிலும் வேறில்லை என்று
எமக்கும் தெரியும் அன்றோ!
----------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

தேமொழி

unread,
Mar 4, 2015, 1:02:01 AM3/4/15
to mint...@googlegroups.com

மடைப்பள்ளி

வீட்டில் சமையல் செய்யும் இடம் சமையலறை என்று சொல்லப்படுகிறது. இந்து சமயக் கோயிலில் சமையல் செய்யும் இடம் “மடைப்பள்ளி” என்று அழைக்கப்படுகிறது. வீட்டில் சமையல் செய்யுமிடத்தை மடைவாயில் எனக் கூறும் வழக்கும் உண்டு. [1]

பள்ளி என்னும் சொல் இடத்தைக் குறிக்கும். [7] எனவே சமையல் செய்யுமிடம் மடைப்பள்ளி எனப்பட்டது

மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம்
சொல்லிய பள்ளி நிலையின ஆயினும்,
மூக்கின் வளிஇசை யாப்புறத் தோன்றும். (தொல்காப்பியம் 1-100)

..... தேமொழி

Meenavan M

unread,
Mar 4, 2015, 2:38:16 AM3/4/15
to mint...@googlegroups.com
நான் பள்ளி என்ற சொல் பள்ளிவாசலைத்தான் குறிக்கும் என்று சொல்ல வரவில்லையே.
இப்படி சிலவற்றைப் பிடித்துக் கொண்டு அவர்கள் மனம் போனப்டியெல்லாம் ஆய்வு
செய்கிறார்கள் என்றுதான் சொல்ல வந்தேன்.நான் இசுலாமியர் பள்ளி வாசல் ஒன்றையே
குறித்துச்; சொன்னதாக எடுத்துக் கொண்டு ஆளாளுக்கு விளாசித் தள்ளிவிட்டீர்கள்.உங்கள்
உதவியால் பள்ளி என்ற சொல் எங்கெங்கெல்லாம் இருக்கின்றது என்பதை அறிந்தேன்.
அனைவருக்கும் நன்றி- மீனவன்

--

Banukumar Rajendran

unread,
Mar 4, 2015, 4:49:10 AM3/4/15
to மின்தமிழ், vallamai
செல்வன், அந்தணர் என்பதால் அது வைதிக வேதம் ஓதும் பிராமணர் என்று முடிவுக்கு வந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். சரிதானே.

அந்தணர், பார்ப்பர், பார்ப்பான், மறையாளன் போன்ற சொற்களுக்கு உள்ளூரையாக பொருள் கொள்ளவேண்டும். தனித்து சொற்களுக்கு பொருள் கொண்டால் அவை வேறுப் பொருளையேத் தரும்.

மேலே வரும் பாடலில், குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும் என்னும் தொடரில் வரும் குன்று குயின்றன்ன என்று வருவதால் அது வைதீகவேதம் ஓதும் பிராமணர்களைக் குறிக்காது. இதற்கு வரலாற்றுச் சான்றுகள் அரண்செய்யாது.

இரா.பானுகுமார்

Pandiyaraja

unread,
Mar 4, 2015, 6:16:59 AM3/4/15
to mint...@googlegroups.com
>>இங்கு பள்ளி என்பது அறச்சாலையைக் குறிக்கும். <<

ஒரு சொல் எங்கு பயன்படுத்தப்படுகிறதோ, அங்கு உள்ள சூழ்நிலைக்குப் பெரும் சிறப்பைத் தரும் பொருளையே கொள்ளவேண்டும் என்பது மிகச் சரியான கூற்று.
ப.பாண்டியராஜா

துரை.ந.உ

unread,
Mar 4, 2015, 6:53:21 AM3/4/15
to Groups
2015-03-04 16:46 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
>>இங்கு பள்ளி என்பது அறச்சாலையைக் குறிக்கும். <<

ஒரு சொல் எங்கு பயன்படுத்தப்படுகிறதோ, அங்கு உள்ள சூழ்நிலைக்குப் பெரும் சிறப்பைத் தரும் பொருளையே கொள்ளவேண்டும் என்பது மிகச் சரியான கூற்று.
ப.பாண்டியராஜா

​வாழ்க ஐயா .... மிக அருமையாகச் சொன்னீர்கள் .... 
 
On Wednesday, March 4, 2015 at 11:12:15 AM UTC+5:30, வேந்தன் சரவணன் wrote:

2015-03-04 7:34 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்

இங்கு பள்ளி என்பது படுக்கையையோ சமணர் பள்ளியையோ கோவிலையோ குறிக்காது.

இங்கு பள்ளி என்பது அறச்சாலையைக் குறிக்கும். 

மக்கள் கைகாலைக் கழுவிக்கொண்டு வரிசையாக அமர்ந்து உணவு உண்ணும் தூய இடமாகிய அறச்சாலைக்குள் கழுவாத அசிங்கமான கைகால்களுடன் ஒருவன் அவசரப்பட்டு நுழைந்துவந்தால் என்னாகும்?
அங்கு உணவு உண்டு கொண்டிருப்போர் அருவெறுப்புற்று மேற்கொண்டு உண்ணமுடியாமல் எழுந்து வெளியேறிவிடுவர்.

அதைப்போல ஆன்றோரின் அவைக்குள் ஒழுக்கங்கெட்ட பேதை ஒருவன் அவசரப்பட்டு நுழைந்தால் என்னாகும்?. அவன் ஒழுக்கங்கெட்ட பேதை என்பதால் நுழையும்போதே எதையாவது உளறிக்கொண்டு தான் வருவான். இதனால் அவையில் இருக்கும் ஆன்றோர்கள் மனம் வருந்தி அவையை விட்டு வெளியேறிவிடுவர். 

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எமக்கு நல்லது எதுவென்று
எம்மைக் காட்டிலும் நன்றாக
எம்பெருமானே அறியும் - மன்றுடைய
எம்பெருமானைக் காட்டிலும் நன்று
எம்மையிலும் வேறில்லை என்று
எமக்கும் தெரியும் அன்றோ!
----------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

N. Ganesan

unread,
Mar 4, 2015, 7:21:14 AM3/4/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Tuesday, March 3, 2015 at 9:12:51 PM UTC-8, Pandiyaraja wrote:
பள்ளி என்பது படுத்திருக்கும் இடம். ஊரை அடுத்துள்ள குன்றுகளில் இருக்கும் குகைபோன்ற இடங்களில் செதுக்கப்பட்ட கற்படுக்கைகளில் சமணர்கள் படுத்திருப்பராதலால் அவை சமணப் பள்ளி எனப்பட்டன. பின்னர் அவர்கள் ஊருக்குள் வந்து (மதுரைக்காஞ்சி) தமக்குக் கட்டிக்கொண்ட இருப்பிடங்களும், வழிபாட்டு இடங்களும் பள்ளி என்றே அழைக்கப்பட்டன. மதுரைக்காஞ்சி அந்தணர் பள்ளி, கடவுட்பள்ளி (பௌத்தப் பள்ளி) எனப் பிற மதத்தவரின் வழிபாட்டிடங்களையும் பள்ளி என்கிறது.
சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பள்ளி என்பது சாதாரண மக்கள் முதல் அரசன் வரை படுத்திருக்கும் இடமாகவே குறிக்கப்படுகிறது.விலங்கினங்கள் படுத்திருக்கும் இடமும் பள்ளி என்றே குறிக்கப்படுகிறது.

திருமூர்த்திசாமியை (தீர்த்தங்கரர்) வழிபடும் சமணர்கள் தங்கியிருக்கும் (படுக்கும்) இடம் பள்ளி.
அம் மடங்களுக்குப் பிள்ளைகளை அனுப்பித் தமிழ் கற்பிக்கச் சொல்லிக் கேட்டனர் தமிழ்மக்கள்
பல ஊர்களில். எனவே, சமணப் பள்ளிகள் ஸ்கூல் பள்ளிகள் ஆயின. இதனால் தான் இன்றும்
பள்ளி = ஸ்கூல் என்றே தமிழ்ச்சொல் உருவாகியது. வள்ளுவர் புனிதமான இப் பள்ளியில்
- சமணர்களிடம் மாணவர்கள் தமிழ், கணிதம், வானியல், ... கற்க வரும் பள்ளிகள் - 
அசுத்தமான காலுடன் நுழைதல் எவ்வளவு தகாதோ, அதேபோல் சான்றோர் அவைவில்
பேதை நுழைவது என்று குறிக்கிறார்: கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல்

பொங்கு போதியும் பிண்டி யுமுடைப் புத்தர் நோன்பியர் பள்ளி யுள்ளுறை,
 தங்கள் தேவரும் தாங்களு மேயாக என்நெஞ்சமென்பாய்!” (திவ். பெரியதி. 2 1 5)
சமணப் பள்ளி = புத்தர் சைனர் பள்ளி

“கோவல னிறந்தபின் கொடுந்துய ரெய்தி, 
மாதவி மாதவர் பள்ளியு ளடைந்ததும்” (மணிமே. 18 8).

பள்ளியி லோதி வந்ததன் சிறுவன் வாயிலோ ராயிர நாமம்
ஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக் கொன்றுமோர் பொறுப்பிலனாகி 

- திருமங்கையாழ்வார் (திவ். பெரியதி. 2 3 8)

நா. கணேசன்

பின்னாளில் மதராஸா மசூதிகளில் இணைந்தே இயங்கிவருகின்றன.
எனவே, கல்வி புகட்டும் இடம் ஆனதால் பள்ளிவாசல் என்று தமிழ்ப்பெயர் உண்டானது.

N. Ganesan

unread,
Mar 4, 2015, 7:24:59 AM3/4/15
to mint...@googlegroups.com

On Tuesday, March 3, 2015 at 11:38:16 PM UTC-8, meenavan2 wrote:
நான் பள்ளி என்ற சொல் பள்ளிவாசலைத்தான் குறிக்கும் என்று சொல்ல வரவில்லையே.
இப்படி சிலவற்றைப் பிடித்துக் கொண்டு அவர்கள் மனம் போனப்டியெல்லாம் ஆய்வு
செய்கிறார்கள் என்றுதான் சொல்ல வந்தேன்.நான் இசுலாமியர் பள்ளி வாசல் ஒன்றையே
குறித்துச்; சொன்னதாக எடுத்துக் கொண்டு ஆளாளுக்கு விளாசித் தள்ளிவிட்டீர்கள்.உங்கள்
உதவியால் பள்ளி என்ற சொல் எங்கெங்கெல்லாம் இருக்கின்றது என்பதை அறிந்தேன்.
அனைவருக்கும் நன்றி- மீனவன்

ஆம், ஐயா. பள்ளிவாசலை வள்ளுவர் குறிக்கவில்லை என்பது தெளிவு.

பின்னாளில் மதராஸா மசூதிகளில் இணைந்தே இயங்கிவருகின்றன.
எனவே, கல்வி புகட்டும் இடம் ஆனதால் பள்ளிவாசல் என்று தமிழ்ப்பெயர் உண்டானது.
ஆனால், வள்ளுவர் காலத்தில் கல்வி புகட்டும் இடம் சமணப் பள்ளிகள் தாம்.
எனவேதான், வள்ளுவர் சொல்வது புனிதமான இடமாகிய சமணப் பள்ளி
என்ற பொருள்.

நா. கணேசன்
 
2015-03-04 11:32 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

N. Ganesan

unread,
Mar 4, 2015, 7:33:06 AM3/4/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Tuesday, March 3, 2015 at 8:45:21 PM UTC-8, செல்வன் wrote:
வள்ளுவரின் இதயம் கண்டவர் பரிமேலழகர் என்பதற்கு இக்குறளும் இன்னொரு சான்று.

சான்றோர் அவையின் கண் பேதையாயினான் புகுதல்; 
கழாக்கால் பள்ளியுள் வைத்தற்று

இதில் உள்ள பள்ளியை படுக்கை என மிக நுணுக்கமாக ஆராய்ந்து பொருள் கண்டுள்ளார் பரிமேலழகர். பள்ளி என்பது சமணர் கோயிலைக்குறிக்கிறதா? அல்லது படுக்கையை குறிக்கிறதா என்பதில் 20ம் நூற்றாண்டு உரையாசிரியர் இருவரைத்தவிர யாரும் அப்பொருளைக்கூறவில்லை என்பதைக்காண்க. 

தவறான செய்தி. மணக்குடவரும், பரிப்பெருமாளும் பள்ளி என்றுதான் சொல்லியுள்ளனர்.
அவர்கள் சமணப் பள்ளியை வள்ளுவர் சொல்லியதை உரையில் மாற்றாமல் இருக்கிறார்கள்.
பள்ளி என்றால் என்ன? - என்று தமிழ் இலக்கியங்கள் எப்பொழுதும் தெளிவுசெய்கின்றன:

பொங்கு போதியும் பிண்டி யுமுடைப் புத்தர் நோன்பியர் பள்ளி யுள்ளுறை,
 தங்கள் தேவரும் தாங்களு மேயாக என்நெஞ்சமென்பாய்!” (திவ். பெரியதி. 2 1 5)
சமணப் பள்ளி = புத்தர் சைனர் பள்ளி

“கோவல னிறந்தபின் கொடுந்துய ரெய்தி, 
மாதவி மாதவர் பள்ளியு ளடைந்ததும்” (மணிமே. 18 8).

பள்ளியி லோதி வந்ததன் சிறுவன் வாயிலோ ராயிர நாமம்
ஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக் கொன்றுமோர் பொறுப்பிலனாகி 

- திருமங்கையாழ்வார் (திவ். பெரியதி. 2 3 8)

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 4, 2015, 7:39:44 AM3/4/15
to mint...@googlegroups.com

On Wednesday, March 4, 2015 at 3:53:21 AM UTC-8, துரை.ந.உ wrote:

2015-03-04 16:46 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
>>இங்கு பள்ளி என்பது அறச்சாலையைக் குறிக்கும். <<

ஒரு சொல் எங்கு பயன்படுத்தப்படுகிறதோ, அங்கு உள்ள சூழ்நிலைக்குப் பெரும் சிறப்பைத் தரும் பொருளையே கொள்ளவேண்டும் என்பது மிகச் சரியான கூற்று.
ப.பாண்டியராஜா

​வாழ்க ஐயா .... மிக அருமையாகச் சொன்னீர்கள் .... 

ஆம். பெரும் சிறப்பைத் தரும் பள்ளி = ஸ்கூல் என்பதையே கொள்ளவேண்டும். சமணப் பள்ளிகளால்
பள்ளி என்ற பெயரே கல்விகற்பிக்கும் நிலையங்களுக்கு ஏற்பட்டது பண்டைக்காலச் சூழ்நிலைக்கு
பெரும் சிறப்புடன் தமிழர் அனைவரும் ஏற்ற பெயர், இன்றும் நிலைத்துள்ளபெயர், 

கல்விநிலையங்கள் இணைந்த மசூதி பள்ளிவாசல் என்று பின்னாளில் பெயர்.
 
நா. கணேசன்

செல்வன்

unread,
Mar 4, 2015, 8:08:27 AM3/4/15
to mintamil, vallamai

2015-03-04 6:33 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
தவறான செய்தி. மணக்குடவரும், பரிப்பெருமாளும் பள்ளி என்றுதான் சொல்லியுள்ளனர்.
அவர்கள் சமணப் பள்ளியை வள்ளுவர் சொல்லியதை உரையில் மாற்றாமல் இருக்கிறார்கள்.
பள்ளி என்றால் என்ன? - என்று தமிழ் இலக்கியங்கள் எப்பொழுதும் தெளிவுசெய்கின்றன:

பள்ளி என்றால் என்ன என்பதுதான் விவாதமே. ஆக அவர்கள் இங்கே பள்ளி என்பது சமணப்பள்ளி என கூறவே இல்லை. பள்ளிக்கு தமிழில் பலபொருட்கள் உண்டு. அந்தணர் பள்ளி, சமணர் பள்ளி, படுக்கை, பள்ளிகூடம், அறச்சாலை என பலபொருட்கள் உண்டு. 

--

N. Ganesan

unread,
Mar 4, 2015, 8:13:03 AM3/4/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
மணக்குடவர் சமணர். சமணர்களுக்குப் பள்ளி என்றால் சமணப் பள்ளி. அங்கே அவர்கள் ஊர்ப் பள்ளிப்பிள்ளைகளுக்குக்
கல்வி போதித்தனர். உ-ம்: ஔவைக் குரத்தி இயற்றிய ஆத்திசூடி. ஆத்திசூடி அமரும் தேவர் திருமூர்த்திசாமியை முதலில் வழிபடச்சொல்லித் தந்தனர்.

On Wednesday, March 4, 2015 at 3:53:21 AM UTC-8, துரை.ந.உ wrote:
2015-03-04 16:46 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
>>இங்கு பள்ளி என்பது அறச்சாலையைக் குறிக்கும். <<

ஒரு சொல் எங்கு பயன்படுத்தப்படுகிறதோ, அங்கு உள்ள சூழ்நிலைக்குப் பெரும் சிறப்பைத் தரும் பொருளையே கொள்ளவேண்டும் என்பது மிகச் சரியான கூற்று.
ப.பாண்டியராஜா

​வாழ்க ஐயா .... மிக அருமையாகச் சொன்னீர்கள் .... 
ஆம். பெரும் சிறப்பைத் தரும் பள்ளி = ஸ்கூல் என்பதையே கொள்ளவேண்டும். சமணப் பள்ளிகளால்
பள்ளி என்ற பெயரே கல்விகற்பிக்கும் நிலையங்களுக்கு ஏற்பட்டது பண்டைக்காலச் சூழ்நிலைக்கு
பெரும் சிறப்புடன் தமிழர் அனைவரும் ஏற்ற பெயர், இன்றும் நிலைத்துள்ளபெயர், 

கல்விநிலையங்கள் இணைந்த மசூதி பள்ளிவாசல் என்று பின்னாளில் பெயர்.
 
நா. கணேசன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Mar 4, 2015, 8:15:26 AM3/4/15
to mintamil
சரியாகச் சொன்னீர்கள் பாண்டியராஜா ஐயா

முதலில் ஒரு பேதை சான்றோர் அவைக்குள் நுழைந்தால் என்ன ஆகும் என்று பார்ப்போம்.

அவன் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு சான்றோருக்குப் பிடிக்காத தகாத செயல்களை செய்யத் துவங்குவான். சான்றோர்களின் அறிவுரை அவன் காதுக்கு ஏறாது. அவன் தனது செயல்களுக்காக வெட்கப்படவும் மாட்டான். இறுதியில் சான்றோர்கள் அவையை விட்டு வெளியேற நேரிடும். 

இச் செயலுடன் ஒப்பிட்டிருப்பதில் இருந்து, கழாக்காலை பள்ளியுள் வைத்தாலும், பள்ளியுள் இருப்போர் வெளியேற நேரிடும் என்பது பெறப்படுகிறது. மேலும் இங்கு பள்ளி என்பது அவையினைப் போல ஒரு கூட்டம் கூடும் இடம் என்பது ஒப்புமையில் இருந்து தெளிவாகிறது. எனவே இங்கு பள்ளி என்பது படுக்கை அறையோ சமையல் அறையோ அல்ல என்பது உறுதியாகிறது.

அடுத்து கூட்டம் கூடும் இடம் என்றால் அது கோவிலாகவோ சமணப் பள்ளிகளாகவோ இருக்கலாமே என்றால் அதுவும் முடியாது. காரணம், இங்கெல்லாம் தூய்மை அவசியம் தான் என்றாலும் கழாக்காலொடு ஒருவன் உள்ளே வந்துவிட்டான் என்பதற்காக கோவிலில் அல்லது பள்ளியில் இருப்போர் அனைவரும் வெளியேற வேண்டிய தேவையில்லை. 

எனவே தூய்மை பேணப்படும் முக்கிய இடமாகிய அறச்சாலையே இங்கு பள்ளிக்குப் பொருத்தமான பொருளாக இருக்க வேண்டும் என்பது எனது முடிபு.

2015-03-04 16:46 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Hari Krishnan

unread,
Mar 4, 2015, 8:15:35 AM3/4/15
to vallamai, mintamil

2015-03-04 18:38 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
பள்ளி என்றால் என்ன என்பதுதான் விவாதமே. ஆக அவர்கள் இங்கே பள்ளி என்பது சமணப்பள்ளி என கூறவே இல்லை. பள்ளிக்கு தமிழில் பலபொருட்கள் உண்டு. அந்தணர் பள்ளி, சமணர் பள்ளி, படுக்கை, பள்ளிகூடம், அறச்சாலை என பலபொருட்கள் உண்டு. 

விவாதம் என்னவோ இது மிஸ்டர் மாடரேட்டர்!

On 1 March 2015 at 22:29, Dinesh Babu <kkdines...@gmail.com> wrote:
தமிழ் என்கிற வார்த்தை கொண்ட திருக்குறள்
உண்டா?

தினேஷ்

இதையும் கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கலாம்--

இதைத் தொடர்ந்து, கள்ளனுக்குத் தப்பிய குள்ளன் சூரியன்தான் என்றும் இன்னும் மற்ற மற்றவர்கள்தாம் என்றும் பொழுதுபோகாவிட்டால் வாதிடலாம்.  என்னுடைய ஆசிரியர் நாகநந்தி அவர்கள் எப்போதும் சொன்னதைப் போல, ‘வள்ளுவரின் சிண்டு அவ்வளவு சுலபத்தில் சிக்கிவிடாது’  :)

(நாந்தேன்.)

விவாதத்துக்குள் பள்ளியறைக்கு வந்த புள்ளிமயிலே சினிமா பாட்டு இடம் பெறாததும், அதுக்கான யூட்யூப் ஆதாரங்களைக் கொடுக்காததும் உண்மையிலேயே ரொம்ப ஆச்சரியம்தான்.  Most unusual indeed!
--
அன்புடன்,

N. Ganesan

unread,
Mar 4, 2015, 8:29:43 AM3/4/15
to mint...@googlegroups.com, vallamai

On Wednesday, March 4, 2015 at 5:15:26 AM UTC-8, வேந்தன் சரவணன் wrote:

எனவே தூய்மை பேணப்படும் முக்கிய இடமாகிய அறச்சாலையே இங்கு பள்ளிக்குப் பொருத்தமான பொருளாக இருக்க வேண்டும் என்பது எனது முடிபு.

சமணர்களின் அறச்சாலை என்பது  சமணப் பள்ளி. அங்கே தான் அறப்பணிகளை ஆற்றினார்கள்.
இந்தியாவிலேயே பழமையான இசைக் கல்வெட்டு எங்கே இருக்கிறது தெரியுமா?
அறச்சலூர் என்று அழைக்கப்படும் ஊரில். இங்கே சமணர்கள் அறச்சாலைப் பள்ளிகளை
நடத்தினார்கள். எனவே, அறச்சாலையூர் என்றே பெயர்.

சமணப் பள்ளி (வள்ளுவர் குறிப்பிடும் பள்ளி) = சமணர்கள் தங்கள் அறநூல்களைப் போதிக்கும் அறச்சாலை.
அங்கே சிராவகர்கள் உணவும் அளிப்பர். செவிக்கு உணவும் உண்டு.

நா. கணேசன்

செல்வன்

unread,
Mar 4, 2015, 8:30:34 AM3/4/15
to mintamil, vallamai
விவாதம் தான் இரன்டு, மூன்றாவது மடலிலேயே முடிந்துவிட்டதே ஹரிகி ஐயா? :-)

வள்ளுவரின் சிண்டு சுலபத்தில் சிக்காது என ஒதுங்கி இருந்தால் அவருக்கு மொட்டை அடிக்கபட்டு அமணகோலத்தில் உட்காரவைக்கபட்டு விடுவார் :-) அதை விட குறள்களுக்கு தவறான பொருள் வருங்கால தலைமுறைக்கு சொல்லபட கூடாது என்பதுக்கு தான் மெனகெட்டு விவாதம் செய்துகொண்டிருக்கிறேன். எதுவும் பேசாமல் சும்மா இருந்தால் அப்புறம் இதுதான் நாளைய வரலாறு என ஆகிவிடும்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Mar 4, 2015, 8:36:42 AM3/4/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Wednesday, March 4, 2015 at 5:30:34 AM UTC-8, செல்வன் wrote:

வள்ளுவரின் சிண்டு சுலபத்தில் சிக்காது என ஒதுங்கி இருந்தால் அவருக்கு மொட்டை அடிக்கபட்டு அமணகோலத்தில் உட்காரவைக்கபட்டு விடுவார் :-) அதை விட குறள்களுக்கு தவறான பொருள் வருங்கால தலைமுறைக்கு சொல்லபட கூடாது என்பதுக்கு தான் மெனகெட்டு விவாதம் செய்துகொண்டிருக்கிறேன். எதுவும் பேசாமல் சும்மா இருந்தால் அப்புறம் இதுதான் நாளைய வரலாறு என ஆகிவிடும்

வள்ளுவர் உருவம் என்றுமே சமணர்களால் வழிபடப்பட்டு வருகிறது. சமண முனிவர் வடிவில். அரசாங்கம் 200 ஆண்டுகளுக்கு முன்னமே அவ் வடிவத்தில் பொற்காசுகளை வெளியிட்டுள்ளது. 

தாடியுடன் வள்ளுவர் பிற்கால வடிவம். 

நீங்கள் மெனக்கெட வேண்டியதில்லை. நல்ல தமிழை ஆழமாகக் கற்று ஆராய்ந்த தமிழறிஞர்கள் விரிவாகவும்,
விளக்கமாகவும் எழுதியுள்ளார்கள் வள்ளுவரின் சமண சமயம் பற்றி, அவற்றில் சில சொன்னால் போதும் -
வள்ளுவரின் உண்மைப் பொருள் தெரிந்துவிடும். அதற்குத்தான் வள்ளுவர் குறிப்பிடும் பள்ளி என்றால் படுக்கை அன்று,
சமணப்பள்ளி அவர்களின் தர்மசாலை, கல்வி போதிக்கும் இடம் எனக் குறிப்பிட்டேன்.

நா. கணேசன்

Oru Arizonan

unread,
Mar 4, 2015, 5:18:02 PM3/4/15
to mintamil
லோகசுந்தரம் ஐயா அவர்களே!

தாங்கள் எழுதிய விளக்கம் மிகவும் அருமை. 

அருள்கூர்ந்து தாங்கள் எழுதிய "ஐந்து விதமான வினா"க்களும் எப்படிப்பட்டவை, அவைகள் எந்தெந்த விதத்தில் எழுப்பப் படுகின்றன என்று விளக்குகிறீர்களா?  அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.

ஒரு அரிசோனன் 

2015-03-01 23:54 GMT-07:00 N D Logasundaram <selvi...@gmail.com>:
தமிழ் என்கிற வார்த்தை கொண்ட திருக்குறள்  உண்டா?
தினேஷ்
தமிழ் மொழியில் எழுதப்பட்ட உலக பொதுமறையில், தமிழ் வார்த்தை
இடம் பெறாதது ஆச்சரியம் தான் ஆனாலும் உன்மை

இந்த இழையில் .இவ்வாறு தினேஷ் எனும் பெயருடைய ஒரு மடலாடல் உறுப்பினர் எழுதினா ர் 

திரு தினேஷ் அவர்களுக்கு ,
இந்த வினா  எழுந்ததன் அடிப்படை தமிழை மறைமுகமாக சிறு பிள்ளை போல் கிண்டலடிக்கும்
மனநிலையில் உள்ளவராகத் எனக்குத் தோ ன்றுகின்றது இல்லை இல்லை நான் தமிழ் மொழி
என் தாய் மொழி அதன் மேல் மிகுந்த பற்றுடையவன் அதனால் தான்  கேட்கின்றேன் என சொல்
வீர்களனால் தமிழ் மொழியை மேலும் நன்றாக கசடறக் கற்று க்கொள்ள முயற்சிக்கலாம். 
அது உங்கள் விருப்பம் இதை கீழ்கண்டவற்று டன்சேர்த்து வைத்துள்ளது படிக்கலாம்  என்பது 
என் விருப்பம்

(1) குறள் எண் 391 தனை பொருளுடன் கற்றறிந்து மனதில் நிறுத்திக் கொள்ளலாம் 

(2) நீங்கள் முதலில் வைத்த தங்களின் வினா எந்த வகை ?
     தமிழ் மொழியை அதன் இயலை  உயர்நிலைப்பள்ளியில் படித்தவரானால் வினாக்களில் பலவகை
     உண்டு என அறிவீர்கள் . அறிவினா / அறியாவினா / ஐயவினா / கொளல் வினா / ஏவல்  வினா  / எனவருவன 
    அந்த நிரலில் உங்களது ஐயவி னாவாக தோற்றமளித்தாலும் அறிவினா  தான் என்பதன் அடிப்படையில் இந்த மடல் 

(3) தமிழ் மொழியில் ம ட்டுமல்லாமல்  நீங்கள் கற்றுள்ள எ ந்தமொழியாயினும் தான் எழுத நினைக்கும் கருத்தை 
      சொற்றொடர் தவறின்றி எழுதுவது சிறப்புடையது அல்லவா? நீங்கள் எழுதி ய சொற்றொடரில் 
     "தமிழ் வார்த்தை "  இடம்பெறாதது என மட்டும் எழுதி உள்ளீர்கள் எதுவே தமிழ் +எனும்+ வார்த்தை (அல்லது 
      மேலும் சிறப்பாக தமிழ் எனும் சொல் ) இடம் பெறாதது என இருப்பது தவற்ற சொற்றொடர் ஆகும் 
     முதலில் நீங்களும் பின் அவ்வாறே தேமொழியாரும் குறித்துள்ளார் இது ஒரு  மிக மிகச்சிறு விடுபட்ட தவறுதான் 
      அதாவது சரியானது " உலக பொதுமறை யில் தமிழ் எனும் சொல் (வார்த்தை) இடம் . . . . . . . . "  என வரும் 
      மேலும்
      தமிழ் எனும் சொல்லிற்கு ஓர் மொழியை அதன்  பண்பின் வழி குறிக்கும் என்பதுடன் மேலும் சி லபொருட்கள் உண்டு
      பாரதி தாசன் எழுதிய "தமிழுக்கும் அமுதென்று பேர் " எனும் திரைப்படத்திலும் வந்த அந்த பாடலைக் கேட்டிருக்கலாம் 

(4) தினேஷ் பாபு எனும் உங்களின் பெயர் எந்த மொழியில் உள்ளது அதனில் அந்த இரு சொற்களுக்கு பொருள் என்ன அன்று
      அறிவீரா ?? இது ஓர் அறி வினா ஆயினும் ஐயவினா வாக வைக்கப்படு கின்றது விடை  தங்களின் கல்வி நிலை பொறுத்தது
      அல்லவா? 
      
நூ த லோ சு
மயிலை 

2015-03-02 2:21 GMT+05:30 Dinesh Babu <kkdines...@gmail.com>:

தமிழ் மொழியில் எழுதப்பட்ட உலக பொதுமறையில், தமிழ் வார்த்தை இடம் பெறாதது ஆச்சரியம் தான் ஆனாலும் உன்மை.

சுட்டிக்கு மிகவும் நன்றி. மிகவும் பயனுள்ள சுட்டி.

On 1 March 2015, at 7:57 pm, தேமொழி <jsthe...@gmail.com> wrote:

திரு. தினேஷ், பாண்டியராஜா ஐயா உருவாகியுள்ள ...

பக்கத்தில் சென்று பாருங்கள்.  திருக்குறளில்  எந்தந்த சொற்கள் உள்ளன என்று தேட உதவும் 

கேள்வி :தமிழ் என்கிற வார்த்தை கொண்ட திருக்குறள் உண்டா?
பதில்: இல்லை 

..... தேமொழி

On Sunday, March 1, 2015 at 8:59:37 AM UTC-8, kkdineshbabu78 wrote:
தமிழ் என்கிற வார்த்தை கொண்ட திருக்குறள்
உண்டா?

தினேஷ்

--

--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Mar 4, 2015, 5:25:36 PM3/4/15
to mint...@googlegroups.com

On Wednesday, March 4, 2015 at 2:18:02 PM UTC-8, oruarizonan wrote:

அருள்கூர்ந்து தாங்கள் எழுதிய "ஐந்து விதமான வினா"க்களும் எப்படிப்பட்டவை, அவைகள் எந்தெந்த விதத்தில் எழுப்பப் படுகின்றன என்று விளக்குகிறீர்களா?  அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.

 திரு. ராம் காமேஸ்வரன் சுட்டி கொடுத்துள்ளார்...பார்க்கவும்...

எளிதாக நினைவு வைத்துக் கொள்ள .... பாண்டியராஜா ஐயா கொடுத்த உதவி கீழே....

வினாக்களில் எத்தனை வகை உள என்று ஆசிரியர் மாணவர்க்குக் கேள்வித்தாளில் கேட்கும் வினா, மாணவர் அறிந்துள்ளனாரா, அறியாதிருக்கின்றனரா என்ற ஐயத்தைத் தெரிந்துகொளல்வேண்டி, அவருக்கு மதிப்பெண் கொடைவழங்க ஆசிரியர் ஏவல்விடும் வினா!! இது எந்த வகை வினா?

..... தேமொழி

Oru Arizonan

unread,
Mar 4, 2015, 6:28:56 PM3/4/15
to mintamil
நினைவில் வைத்துக்கொள்ளலாம்.  நான் ஐயம் திரிபறப் புரிந்துகொள்ளவேண்டி லோகசுந்தரம் ஐயாவிடம் விளக்கம் கேட்கிறேன், தேமொழி.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages