உணர்வின் உயிர்ப்புகள்

441 views
Skip to first unread message

Mohanarangan V Srirangam

unread,
Oct 27, 2024, 3:03:23 AM10/27/24
to min tamil
நெடுநாள் கழித்து இப்பொழுதுதான் கணினி முன்னர் அமரும் பழைய பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சோடியம் உப்பின் அளவு குறைந்து, அதன் காரணமாக ஆஸ்பத்திரி, மருத்துவம் என்று கொஞ்சம் ஆளைப் புரட்டி எடுத்தது ஒரு விதத்தில் நன்மைக்கே. ‘வேதம் புதுமை செய்த பாரதி’ நூலுக்குப் பின்னர் ஒரு நெடிய இடைவெளி. என்ன நூல் எழுதி யார் படிக்கிறார்கள் என்னும் விரக்தியும் சேர்ந்து ஒரு ஓய்ந்து போன மனநிலை. ஆனால் உணர்வு மட்டும் உயிர்ப்புடன் இயங்குகிறது. ப்ளாக்கில் ஏதாவது தோன்றும் கருத்துகளை இட்ட வண்ணம் போகிறது கணினிப் பொழுது, அமரும் வரையில். இதில் ஆங்கிலத்தில் ஒன்றும், தமிழில் ஒன்றுமாக மனித குலத்தில் பொதுவாகத் திகழும் கருத்துகளைக் குறித்து எழுதத் தொடங்கினேன். ஆர்வம் இருப்போர்க்கு - 




கையில் ஸ்மார்ட் ஃபோன், வாட்ஸப் எல்லாம் வந்ததும் மின்னஞ்சல் குழுக்களில் வருவது குறைந்துதான் போய்விட்டது, என்னைப் பொறுத்தவரையிலாவது. வணக்கம். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***
.

Mohanarangan V Srirangam

unread,
Nov 20, 2024, 10:08:19 AM11/20/24
to min tamil
நண்பர்களிடையே பேசும் போதும் சில சமயம்
சுயநிலைப்பாட்டைக் கறாராக விளக்கிவிடுவதே
குறைந்தபட்சம் நமக்கு நிம்மதி.

Mohanarangan V Srirangam

unread,
Nov 22, 2024, 7:13:05 AM11/22/24
to min tamil
சுய நிலைப்பாடு குறித்த தொடர்ச்சி --


***

Mohanarangan V Srirangam

unread,
Nov 23, 2024, 3:29:52 AM11/23/24
to min tamil
நிலைப்பாடு என்ற தொடரின் தொடர்ச்சி --


***

Mohanarangan V Srirangam

unread,
Nov 24, 2024, 5:23:35 AM11/24/24
to min tamil
நிலைப்பாடு தொடர்கிறது - பகுதி 5


***


Mohanarangan V Srirangam

unread,
Nov 25, 2024, 3:55:53 AM11/25/24
to min tamil
நிலைப்பாடு - பகுதி 6


***


Mohanarangan V Srirangam

unread,
Nov 26, 2024, 6:03:20 AM11/26/24
to min tamil
நிலைப்பாடு - பகுதி 07


***

Mohanarangan V Srirangam

unread,
Nov 27, 2024, 4:41:12 AM11/27/24
to min tamil
நிலைப்பாடு தொடர்ச்சி - பகுதி 08


***

Mohanarangan V Srirangam

unread,
Nov 28, 2024, 3:28:10 AM11/28/24
to min tamil
நிலைப்பாடு மேலும் தொடர்கிறது --


***


Mohanarangan V Srirangam

unread,
Nov 29, 2024, 4:38:24 AM11/29/24
to min tamil
நிலைப்பாடு தொடர்ச்சி -

Mohanarangan V Srirangam

unread,
Nov 30, 2024, 4:19:16 AM11/30/24
to min tamil
நிலைப்பாடு தொடர்ச்சி --


***

Mohanarangan V Srirangam

unread,
Dec 3, 2024, 5:17:32 AM12/3/24
to min tamil
தொடர்கிறது நிலைப்பாடு --


***

Mohanarangan V Srirangam

unread,
Dec 11, 2024, 2:19:31 AM12/11/24
to min tamil
சங்க இலக்கியம், பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் தனித்தனியாக மூல நூல்களை
மட்டும் மர்ரே எஸ் ராஜம் போன்றவர்கள் போட்டதுண்டு. முழுமையாக எட்டுத்தொகை நூல்கள்,
பத்துப்பாட்டு என்று நூல்களை ஒரு சேர ஒரே நூல் வடிவிலும் போட்டிருக்கும் பதிப்புகள்
இருக்கின்றன. ஆனால் புலவர் வரிசை என்பது ஒரு தனிரகமான பதிப்பு. அதாவது ஒரே
புலவர் எழுதிய பாடல்கள், அவை எட்டுத்தொகையில் இருந்தாலும் சரி, பத்துப்பாட்டில்
இருந்தாலும் சரி, அந்தப் புலவரின் பெயரின்கீழ் தொகுத்துப் பதிப்பித்திருக்கும் பதிப்பு என்பது
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்களின் பதிப்பாக வந்த பாட்டும், தொகையும் என்பது
என் புரிந்துகொள்ளல் வரையில். அந்தப் புலவர் வரிசைப் பதிப்பு இணையத்தில் முன்னரே
அங்கும் இங்குமாகக் கண்ணில் பட்டதுண்டு. ஆனால் அதுவெல்லாம் ஒன்று அதிக எம்பி அடர்த்தி
அல்லது கண்ணுக்கு இணக்கமான ஸ்கேனாக இல்லை என்று இருந்தன. ஆனால் இப்பொழுது
நல்ல ஸ்கேன் ஆகக் கண்ணில் படுகிறது இங்கே இரண்டு பகுதிகளாக. மகிழ்ச்சியை இதே விஷயத்தில் உவகை
அடையக் கூடியவர்கள் இருந்தால் பகிரலாமே என்று --



***


தேமொழி

unread,
Dec 11, 2024, 2:57:09 AM12/11/24
to மின்தமிழ்
அரங்கனார், மிக்க நன்றி.  

Subashini R

unread,
Dec 11, 2024, 3:10:02 AM12/11/24
to mint...@googlegroups.com

தமிழை விரும்பும் அனைவருக்கும் இது மகிழ்ச்சி தரக் கூடிய பதிவுதான். நன்றி


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/d9e0684a-9c84-4543-b651-2cdd5d5761aan%40googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Dec 11, 2024, 3:41:29 AM12/11/24
to min tamil
தொடர்கிறது நிலைப்பாடு -- 

Mohanarangan V Srirangam

unread,
Dec 11, 2024, 5:10:27 AM12/11/24
to min tamil
1943 ஆம் ஆண்டு. தியாகராயநகரில் வள்ளுவர் குறடு என்ற மாணவர் அமைப்பு இருந்திருக்கிறது.
(அழகான தமிழ்ச் சொல் - அசோசியேஷன் என்பதற்கு வள்ளுவர் குறடு). அதில் 30-10-1943, 1-11-1943
ஆகிய இரண்டு தேதிகளில் புறநானூறு குறித்து ஒரு விழா எடுத்திருக்கிறார்கள். அதில் பேராசிரியர் திரு
வையாபுரிப்பிள்ளை அவர்களின் தலைமையில் நான்கு அறிஞர்கள் புறநானூறு குறித்து உரையாற்றியுள்ளனர்.
அவர்கள் திரு அ.ச.ஞானசம்பந்தம், திரு கி.வா.ஜகந்நாதன், திரு மு.சண்முகம் பிள்ளை, திரு மு.அருணாசலம்
ஆகியோர். தலைமையுரை, மற்றும் நான்கு அறிஞர்களின் உரைகள் அனைத்தையும் சேர்த்து ‘புறநானூறும்,
தமிழரும்’ என்னும் தலைப்பில் சக்தி காரியாலயம் ஒரு நூலாக வெளியிட்டுள்ளது. கணினி, இணையம்
எல்லாம் சேர்ந்து இப்பொழுது அந்த நூலை நம் கண்ணில் காட்டும் பொழுது ஏற்படும் உவகையே ஓர்
அலாதிதான். நீங்களும்தான் பாருங்களேன் -


***

Pandiyaraja Paramasivam

unread,
Dec 12, 2024, 4:00:49 AM12/12/24
to mint...@googlegroups.com
மிக்க நன்றி, ஐயா. என்னுடைய tamilconcordance.in இணையதளத்தில், சங்க இலக்கியங்கள் தலைப்பில், நூல் முழுவதும் காண என்ற பகுதியில் பாடல்-தேடல் என்ற புதிய பகுதி உண்டு. அதைச் சொடுக்கினால், மூன்று விதங்களில் சங்க இலக்கியப் பாடல்களைத் தேடலாம். 1. பாடல் முதல் அடி. 2. பாடல் ஆசிரியர் -அகர வரிசையில் 3. திணை மரபு வரிசையில்.
இதில் 2. பாடல் ஆசிரியர் -அகர வரிசையில் என்பதைத் தெரிவுசெய்தால் ஆசிரியர் பெயர் அகரவரிசையில் இடப்ப்க்கம் கிடைக்கும். தேவையான ஆசிரியர் பெயரைச் சொடுக்கினால், அவர் எழுதிய சங்கப்பாடல்கள் அனைத்தும் கிடைக்கும். இதனை உருவாக்க, வையாபுரியார் பதிப்பு மிக மிக உதவியது.
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Dec 12, 2024, 4:10:11 AM12/12/24
to mint...@googlegroups.com
ஐயா! தங்களுடைய பெரும்பணிக்கு ஒப்பு சொல்லவே முடியாது. ‘வேதம் புதுமை செய்த பாரதி’
என்ற நூல் எழுதும் போது தங்களுடைய தளமும் மிகவும் உதவியது. நூலிலும் உதவித் தளங்கள்
வரிசையில் தங்களைக் குறிப்பிட்டிருக்கிறேன். முழுமையான தமிழ் இலக்கிய உலகிற்குத்
தாங்கள் ஆற்றியிருக்கும் சேவை மிகவும் போற்றுதற்குரியது. பாரதி தளத்தில் சில விடுபடல்கள் கண்ணில் பட்டன.
அதைத் தங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதற்குள் ஸோடியம் ட்ராப்
என்ற பிரச்சனையால் ஆஸ்பிடல், ட்ரீட்மண்ட் என்று கவனம் திசை திரும்பிவிட்டது.

இந்தப் பதிப்பு இணையம் கணினி யுகத்திற்கு முந்தைய காலத்தின் சாதனை. இதை நல்ல இணையப் பிரதியாகக்
கிடைக்காதா என்று தேடினேன். அப்பொழுது கண்ணில் பட்டது. அதைப் பகிரலாமே என்று பகிர்ந்தேன். அவ்வளவே.
என்றும் தங்களுக்கு நன்றிக் கடன்பட்டோரில் ஒருவன் நான்.

***


Pandiyaraja Paramasivam

unread,
Dec 12, 2024, 4:22:46 AM12/12/24
to mint...@googlegroups.com
மிக்க நன்றி, ஐயா.
“பாரதி தளத்தில் சில விடுபடல்கள் கண்ணில் பட்டன.”
தெரிவியுங்கள் ஐயா. சேர்த்துவிடுகிறேன்.
நன்றி,
ப.பாண்டியராஜா

Mohanarangan V Srirangam

unread,
Dec 12, 2024, 5:00:26 AM12/12/24
to mint...@googlegroups.com
பாரதியார் பாடல்களில் நம்பர்.13 கவிதைக் காதலி என்னும்
தலைப்பில் வரும் கவிதை மொத்தம் 172 வரிகள் கொண்டது.

‘வாராய் கவிதையாம் மணிப்பெயர்க் காதலி!’ என்ற வரியில் தொடங்கி
‘வந்தெனக் கருளுதல் வாழிநின் கடனே’ என்னும் வரியில் முடிவடைகிறது
பாரதியார் கவிதைகள், திரு சீனி விசுவநாதன் பதிப்பு நூலில்.

ஆனால் தளத்தில் 84 ஆவது வரியான ‘வாழ்ந்தனன் கதையின் முனிபோல் வாழ்க்கை’
என்னும் வரியோடு முடிந்துவிடுகிறது. மிச்சம் 88 வரிகள் நூலிலிருந்து சேர்க்கப் படவேண்டும்
என்று நினைக்கிறேன். தாங்கள் ஒரு முறை பாருங்கள்.

குறிப்புக்கு அந்த இடத்தைச் சுட்டியில் தருகிறேன்


நன்றி ஐயா.

***


Mohanarangan V Srirangam

unread,
Dec 12, 2024, 7:28:36 AM12/12/24
to mint...@googlegroups.com
தொடர்கிறது நிலைப்பாடு -- 


Pandiyaraja Paramasivam

unread,
Dec 12, 2024, 12:54:47 PM12/12/24
to mint...@googlegroups.com
மிக்க நன்றி, ஐயா.
தாங்கள் குறிப்பிட்ட பாரதியாரின் தனிப்பாடலை நானும் இணையதளங்களில் தேடிப்பார்த்தேன்.
என்னுடைய தளத்தில் கொடுத்துள்ளபடி “வாழ்ந்தனன் கதையின் முனிபோல் வாழ்க்கை” என்பதுவரைதான் அப் பாடல் கிடைக்கிறது. தாங்கள் குறிப்பிடும் மீத வரிகள் எங்கே கிடைக்கும் எனக் குறிப்பிடமுடியுமா?
அன்புடன்,
ப.பாண்டியராஜா

Mohanarangan V Srirangam

unread,
Dec 13, 2024, 1:13:46 AM12/13/24
to mint...@googlegroups.com
ஐயா,

ஆம். தாங்கள் சொல்வது போல் 84 வரிகள் வரைதான் இணையத்தில் கிடைக்கின்றன.
அது மட்டுமின்றி 1948 பாரதி பிரசுராலயப் பதிப்பு, சக்தி காரியாலயப் பதிப்பு (1958)
ஆகிய பதிப்புகளிலும் 84 வரிகள்தாம்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் பதிப்பு, 1987, 1989 ல்தான் 172 வரிகளும்
கிடைக்கின்றன. அதை விட்டால் திரு சீனி விசுவநாதன் பதிப்பில் கிடைக்கின்றன.
ஆனால் பாரதி நூற்றாண்டு விழா ஒட்டி தமிழ்நாட்டரசின் உதவியோடு வந்த 
தஞ்சை ஆய்வுப்பதிப்பு இணையத்தில் ஆர்கைவ்ஸில் கிடைக்கிறது. html காப்பியும்
தந்திருக்கிறார்கள். கீழே அதன் சுட்டியைத் தந்துள்ளேன்.



தாங்கள் அப்படியே விட்டாலும் நன்றுதான். ஏனெனில் பெரும்பாலான அச்சுப் பதிப்புகளிலேயே கூட
84 வரிகள்தாம் உள்ளன. நான் திரு சீனி விசுவநாதன் பதிப்பைப் பயன்படுத்துவதால்
மீத வரிகள் இல்லையே என்று நினைத்தேன். நன்றி ஐயா.

***


Mohanarangan V Srirangam

unread,
Dec 13, 2024, 1:17:04 AM12/13/24
to mint...@googlegroups.com
பின்குறிப்பு:

ஆய்வுப் பதிப்பில் பக்கம் 112 ல் ’கவிதா தேவி’ என்ற தலைப்பில்
தொடங்குகிறது.

***

Mohanarangan V Srirangam

unread,
Dec 13, 2024, 1:53:43 AM12/13/24
to mint...@googlegroups.com
சில சமயம் மாற்றங்களின் சரித்திரத்தை நேரடியாகப் பார்ப்பதற்கு ஒரு வசதி
ஏற்படும். அத்தகைய வசதி ஒரு பழைய நூலைப் பார்க்கும் போது ஏற்படுகிறது.
1825ல் அச்சிட்ட ஒரு நூல். பண்டள ராமசாமி நாயக்கர் என்பவர் எழுதிய
கணித தீபிகை என்னும் நூல்.

தமிழில் எண்களைக் குறிக்கும் போது ஒன்று என்றால் ‘க’ என்றும், இரண்டு என்றால்
‘உ’ என்றும், பத்து என்பதைக் குறிக்க ’க0’ என்றும் இத்தகைய முறை இருக்கிறது என்று அறிவோம்.
ஆனால் இந்த முறையே 1825ல் உண்டான முறைதான் என்பது பண்டளர் எழுதும் நூலில்
தெரிய வருகிறது. அதற்கு முன்னால் எழுத்துக்களாலேயே எண்களைச் சுட்டும் ஒரு முறை இருந்தது.
அது கணித செயற்பாடுகளைக் கற்பிக்க போதிய லாகவம் இல்லாமல் இருந்தது என்றும்,
அதனால் அரசாங்கத்தார் எல்லாம் முடிவு செய்து இவரை நியமித்தார்கள் என்றும்
நூலில் சொல்கிறார். புதிய முறை அதாவது க, க0, உ, உ0 என்று சுட்டும் முறையைப் பற்றி
அவர் எழுதுகின்ற நூல் இந்த ‘கணித தீபிகை’. பழைய காலத்தில் ஏற்பட்ட ஒரு புதிய மாற்றம்.
அதன் சமகாலச் சரித்திரம். நாமே கொஞ்சம் காலத்தில் பயணம் செய்து போய் நேரடியாகக்
காண்பது போன்ற ஒரு மயக்கம் ஏற்படத்தான் செய்கிறது.


***

Pandiyaraja Paramasivam

unread,
Dec 13, 2024, 9:11:45 PM12/13/24
to mint...@googlegroups.com
ஐயா, தாங்கள் கொடுத்த இணைப்புகளைப் பயன்படுத்தி, கவிதாதேவி தனிப்பாடலில் உள்ள மீதமுள்ள அடிகளையும் பிடித்துவிட்டேன். பத்துச் சொற்களுக்குள் இருந்தால் அவற்றுக்கான தொடரடைவில் மாற்றங்களைச் செய்துவிடுவேன். இது ஏறக்குறைய 100 அடிகள். எனவே மொத்தமாக மாறுதல் செய்யவேண்டும். கைவசமுள்ள கம்பராமாயணப் பணியை முடித்தபின் (இன்னும் சுமார் ஒரு மாத காலம் ஆகும்) இதனையும் செய்து முடிக்கிறேன். பாரதியார் கவிதைகள் ஒரு முழுமைபெற இது உதவும். தங்களின் பயனுள்ள தகவலுக்காக மிக்க நன்றி.
அன்புடன்,
ப.பாண்டியராஜா

Mohanarangan V Srirangam

unread,
Dec 14, 2024, 1:43:35 AM12/14/24
to mint...@googlegroups.com
ஐயா!
நன்றி நாங்கள்தாம் தங்களுக்குச் சொல்ல வேண்டும்.
🙏

Mohanarangan V Srirangam

unread,
Dec 14, 2024, 6:52:41 AM12/14/24
to mint...@googlegroups.com
தொடர்கிறது நிலைப்பாடு -- 

Mohanarangan V Srirangam

unread,
Dec 15, 2024, 3:36:35 AM12/15/24
to mint...@googlegroups.com
தொடர்கிறது நிலைப்பாடு -- 

Mohanarangan V Srirangam

unread,
Dec 15, 2024, 10:27:46 PM12/15/24
to mint...@googlegroups.com
தொடர்கிறது நிலைப்பாடு -- 


Mohanarangan V Srirangam

unread,
Dec 18, 2024, 2:51:43 AM12/18/24
to mint...@googlegroups.com
தமிழ் இணைய நூலகத்தில் தேடிக் கொண்டிருந்த பொழுது
எங்கள் திருச்சிராப்பள்ளியைக் குறித்த பெருமையாக ஒரு விஷயம் கண்ணில்
பட்டது. 1887 ஆம் ஆண்டு. அதாவது நூற்றி முப்பத்தியேழு வருஷங்களுக்கு முன்னர்,
ஆம் 1887 ல் ஜனவரி மாதம் ஒரு பத்திரிக்கை ஆரம்பித்திருக்கிறார் திரு தி வீ
வெங்கட்ராயலு நாயுடு என்பவர். மாதாந்திரமாக வரும் பத்திரிக்கையாக.
பெயர் -- திராவிட ரஞ்ஜனி. ஆண்டு ஒன்றுக்குச் சந்தா ரூ 1 அணா 8. வெளிநாடு
ரூ 1 அணா 14. நிருபர்களுக்கு அறிக்கை என்பதில் ஓர் அருமையான வார்த்தையைப்
பயன்படுத்துகிறார். ‘நிருப சீராட்டருக்கு’ என்று.

தாம் பத்திரிக்கையைத் தொடங்கும் காரணம் பற்றி எழுதுமிடத்தே இங்ஙனம் எழுதுகிறார்:

“பலருக்கும் பயன்தரத்தக்க விஷயங்களை நாடி விருத்தி செய்வதே இக்காலத்தியல்பாய் இருக்கின்றமையால்
சிலருக்கு மாத்திரம் பயன்படுகின்ற கருகலான உரைவாசகங்களை விலக்கி
எளிதான வாசக நடையில் வெளிப்படுத்தினால் அது பண்டிதர் பாமரர் அனைவோருக்கும்
பயன்படுமென்பதற் கையமில்லை. ஆதலால் நாம் கருதிய பொருளை யாவரும்
ஐயமின்றி எளிதில் அறியும்பொருட்டு இப்பத்திரிக்கையைத் தெளிவான நடையில்
எழுதிப் பிரசுரஞ்செய்கின்றோம்.’ - திராவிட ரஞ்ஜனி, புத்தகம் 1, இலக்கம் 1.

ஆங்கிலத்தில் விளம்பரம் வாசகம் இப்படிப் போகிறது -

DRAVIDA RANJANI
A monthly Tamil Magazine of LIterature, Philosophy, Science etc.

T V Venkatrayulu Nayudu, Prop Ripon Press, Teppakulam, Trichinopoly.

1887ல் திருச்சியில் இப்படி ஒரு மாதாந்தர தமிழ்ப் பத்திரிக்கை, ‘திராவிட ரஞ்ஜனி’ என்ற பெயரில்.
1887 என்றால் என்னுடைய ஓர்மைக்காக, 1886 ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் மகாசமாதி ஆன ஆண்டு.
அடுத்த ஆண்டு. 137 ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சியில், தெப்பக்குளத்தில் இப்படி ஒரு
பத்திரிக்கை !


***

Mohanarangan V Srirangam

unread,
Dec 27, 2024, 12:41:38 AM12/27/24
to mint...@googlegroups.com
வைணவத்தின் சமுதாயச் செய்தி - என்று பொருள்படும் வகையில் ஆங்கிலத்தில்
The Social Message of Sri Vaishnavism என்னும் தலைப்பில் பல்கலைக் கழக வைணவத்
துறை சார்ந்த அலுமினி அமைப்பின் ஏற்பாட்டில் நான் தந்த சொற்பொழிவு இதுவாகும். ஆங்கிலத்தில்
இருக்கிறது. ஏதோ விஷயமாக யூட்யூபில் பார்த்துக் கொண்டிருந்த போது நானே
இதனை மீண்டும் கேட்டுப் பார்த்தேன். சமீபத்திய நிகழ்வுகள், அதைப் பற்றிய செய்திகள்,
விவாதங்கள் என்ற பின்னணியில் விமரிசன மனப்பான்மையுடன்தான் என்னாலும்
இதைக் கேட்க முடிந்தது. நூல்களில், அந்தக் காலத்தில் சிலருடைய வாழ்க்கைகளில்
இருந்திருக்கலாம் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றன மணிப்பிரவாள நூல்களில்
பதியப் பட்டிருக்கும் செய்திகள். அந்த மணிப்பிரவாள நூல்களையே இப்படி அர்த்தம் கொள்ளக் கூடாது,
அப்படி அர்த்தம் கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று
வாதிப்போர்தாம் அதிகம். இவர்களுக்கு மத்தியில் என்னத்த பேசி, என்னத்த செய்ய.. என்னும்
அலுப்பு நிலவினாலும், படிப்பு என்பது என்றும் இனியது நல்லது உயர்வைத் தருவது. என் கருத்தில்
அர்த்தமுள்ள யோகநெறி என்பது புத்தகம் படித்தலே ஆகும்.


***

Mohanarangan V Srirangam

unread,
Dec 29, 2024, 3:36:58 AM12/29/24
to mint...@googlegroups.com
திருப்பாவையை ரசித்துச் செய்த ஒரு திருப்பாவை


***

Mohanarangan V Srirangam

unread,
Jan 4, 2025, 10:27:40 AM1/4/25
to mint...@googlegroups.com
ஏற்கனவே சொன்னதுதான். போன வருடத்திற்கு முந்தைய ஆண்டில் என்று நினைவு.

தமிழ்த்தாத்தா உ வே சா அவர்களின் பதிப்பு, மணிமேகலை,
புத்த சரித்திரம், பௌத்த தருமம், பௌத்த சங்கம் ஆகிய பகுதிகளும் அடங்கிய
முதல் பதிப்பு 1898ல் வந்தது என்று நினைக்கிறேன். அதன் கருப்பு, வெள்ளைப் பிரதிதான்
முன்னர்க் கண்ணில் பட்டது. ஆனால் அச்சு அசல் அந்தப் பழைய பழுப்புடன்
இயல்பு நிறப் பதிப்பு இன்று கண்ணில் பட்டது. என்னதான் இருந்தாலும்
பழைய நூல்களைப் பார்க்கும் போது ஒரு தனி உவகைதான். இந்த மாதிரியான
பைத்தியம் உங்களுக்கு இருந்தால், உங்களுக்காக இந்தச் சுட்டி


***

Mohanarangan V Srirangam

unread,
Jan 5, 2025, 9:34:31 AM1/5/25
to mint...@googlegroups.com
பத்துப்பாட்டு நச்சினார்க்கினியர் உரையுடன் பொதுவாகத்
தமிழ்நேயர்கள் அறிந்ததே. ஆனால் பத்துப்பாட்டு, வை மு கோ
உரையுடன் -- பலர் அறியாமல் இருக்கலாம். பல நுண் தகவல்கள்
நிறைந்த உரை ஸ்ரீ வை மு கோ அவர்களது உரையாகும். அது கண்ணில்
பட்டது தேடும் பொழுது --


***

Mohanarangan V Srirangam

unread,
Jan 20, 2025, 2:41:09 AM1/20/25
to mint...@googlegroups.com

Dr. Chandra Bose

unread,
Jan 20, 2025, 3:08:19 AM1/20/25
to mint...@googlegroups.com
இந்தக் கேள்வியே கவிதையாக இருக்கிறது.

அன்புடன்
பெ.சந்திர  போஸ்
சென்னை

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Jan 20, 2025, 3:13:27 AM1/20/25
to mint...@googlegroups.com

Mohanarangan V Srirangam

unread,
Feb 7, 2025, 11:19:46 AM2/7/25
to mint...@googlegroups.com
கவிமணியை அறியாதார் தமிழுலகில் இல்லை. கவிமணி தேசிக வினாயகம் பிள்ளையின்
மலரும், மாலையும் மிக இனிய கவிதைகளின் தொகுப்பு. பாரதிக்குப் பின்னர் என்று நாம் தமிழில் நோக்கினால்
பாரதி தாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி, கவிஞர் திருலோக சீதாராம் என்று நட்சத்திரக் கவிஞர்கள் பலர் உண்டு.
அதில் முக்கியமான இடம் கவிமணிக்கு உண்டு. பாரதியால் ‘தம்பி’ என்று விளிக்கப்பட்ட
பரலி சு நெல்லையப்பர் கவிமணியைக் குறித்துப் பாடும் பொழுது இங்ஙனம் கூறுகிறார்.

’தேனைப் பாலை முக்கனியைத்
தெவிட்டா அமுதைச் சிந்திக்கும் 
ஊனம் இல்லா உன்கவியை
உன்னும் போதென் உள்ளந்தான்;
வானேர் நாஞ்சில் நாட்டில்வாழ்
வண்மைப் புலவா வையத்துத் 
தானேர் இல்லாத் தமிழேபோல்
தழைத்து நீடு வாழுதியே .’

அத்தகைய கவிமணியின் பெயரன் வித்துவான் இ குற்றாலம் பிள்ளை 1960ல்
பாடி வெளியிட்ட கவிதைத் தொகுதி ஒன்று ‘கவிதை மணிமாலை’ என்பது.
முதல் பாகம் என்று போட்டிருக்கிறது. மற்ற பாகங்களும் வந்திருக்கலாம்.
ஆனால் இணையம் இப்பொழுதைக்கு என் கண்ணில் காட்டுவது முதல் பாகம்.
என்ன சிறப்பு இதில் என்றால், பெயரன் என்பதற்கேற்ப இவரது கவிநடையும்
கவிமணியைப் போன்றே அமைந்திருக்கின்றது. அது மட்டுமன்று. திரு குற்றாலம்
பிள்ளை அவர்கள் பாட எடுத்துக்கொண்ட பொருள் திருக்குறள். அதாவது திருக்குறளை
எளிய இனிய பாடல்கள் வடிவில், கவிமணி பாடல்களை ஒத்த விதத்தில் பாடும் படியாக
அமைத்துப் பாடியிருப்பது. திருக்குறளுக்கு ஒருவிதத்தில் பாடல் வடிவிலான உரை என்று சொல்லலாம்.

உதாரணத்திற்கு,

’அகரம் எழுத்தின் முதலாகும்
அன்பே அகத்திற் குயிராகும்
இகமும் பரமும் இன்புறவே
இறையோன் முதல்வன் உலகோர்க்கே’

‘வானம் பொழியும் மழையிலையேல்
வையம் வறண்டு மாய்வதனால்
வானம் வழங்கும் மழை நீரே
வையத் தோர்க்கு அமுதாகும்’

‘விசும்பும் கசிந்து உருகாதேல்
. வெம்மை உலகில் நீங்கிடுமோ?
பசும்புல் ஓங்கி வளர்ந்திடுமோ?
பைங்கூழ் கொள்ள வகையுண்டோ?’

‘வானம் வழங்கும் நிலையிலையேல்
வந்தார் தம்மை வரவேற்று
தானம் செய்ய வியன்றிடுமோ?
தவமும் இயற்ற நெறியுளதோ?’

மேலும் இந்த நூலை முழுவதும் காண விரும்பினால் அவர்க்காக இந்தச் சுட்டி -


***

Eskki Paramasivan

unread,
Feb 7, 2025, 5:07:56 PM2/7/25
to மின்தமிழ்
திருமிகு மோகனரங்கம் வி  ஸ்ரீரங்கம் அவர்களே


இணைய வழியாய் எங்கள் இதயங்களையெல்லாம் அள்ளிக்கொண்ட அருந்தமிழ்த் தகையாளரே!
உங்கள் "ரங்கன் மனத்தடம்" ஒற்றினேன்.அது உணர்வுகளின் எங்கோ உள்ள ஒரு ஆழத்துக்கும் உயரத்துக்கும்
இழுத்துக்கொண்டு ஓடிவிட்டது.அது விஞ்ஞானிகளுக்கு கருந்துளை.மெய்ஞானிகளுக்கு "திருக்குகை".அற்புதம்.

உங்கள் "பல் தொகை விருந்து" மிக நன்று தான்.ஒரு ஆத்மீகப்பற்றாளனாய் அந்த "ஆரண்ய காண்டம்"புகுந்தால் அவன் வெளியே வருவது ஒரு "நர நாராயணனாகத்தான்" இருப்பான்.மொழி கடல் தான்.நாரம் எனும் நீரை கடலாகச்சொல்கிறது.அது எப்படியும் திவலை யடிக்கலாம்.நரன் எனும் மனிதனுக்கும் அநரன் எனும் இறைவனுக்கும் இடையில் ஒளிந்திருப்பது அந்த அறிவு எனும் "ஹிக்ஸ் போசான்"  தானே. அறிவுக்குப் பதில் அங்கு எப்போதும் அறியாமை தங்கியிருந்தால் அப்போது  அநரன் அசுரன் ஆகிவிடலாம்.இந்த அறிவுச்சுழல் எனும் அழகிய சக்கரமே அந்த சக்கரத்தாழ்வான்.ஆம் அந்த சக்கரத்தில் ஆழ்ந்து ஆள்பவன்.
உங்கள் இலக்கியப்பணி ஒரு ஒப்பற்ற தமிழ் இயக்கப்பணி.
வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
அன்புடன்
ருத்ரா இ பரமசிவன்

வெள்ளி, 7 பிப்ரவரி, 2025அன்று 9:49:46 PM UTC+5:30 மணிக்கு Mohanarangan V Srirangam எழுதியது:

Mohanarangan V Srirangam

unread,
Feb 7, 2025, 8:29:56 PM2/7/25
to min tamil
மிக்க நன்றி ஐயா. மெய்ப்புகழை விரும்பு என்று அறிவுரை செல்வார்கள் நம் ஆன்ற புலவர்கள். அது ஏன் என்பதைப் புரிய வைக்கின்றன உங்கள் சொற்கள். கவிதை என்பது கவிஞன் தான் தோய்ந்து சொற்களுடன் படியும் புனல் விளையாட்டு. கயம் ஆடிய களி வரிவண்டென மிழற்றும் ரீங்காரம் கருத்தில் இனிக்கும் என்று உணரத் தந்தமைக்கு நன்றி. 

***

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Mar 18, 2025, 3:19:22 AM3/18/25
to min tamil

Mohanarangan V Srirangam

unread,
Apr 3, 2025, 11:53:35 PM4/3/25
to min tamil
 உலக அரசியல் வரலாறு, அறநெறிக் கோட்பாட்டு வரலாறு என்று எந்த விதத்தில் பார்த்தாலும் 
வியப்பின் உச்சத்தைத் தொடுவது கி மு 300 ஆண்டுகளின் வாக்கில் வாழ்ந்து, ஆண்டு, அகப்படுத்தி, மனித 
குலத்தையே அறவழிப்படுத்திய அசோகச் சக்ரவர்த்தியின் வாழ்க்கையும், செயல்களும். அவருடைய 
சாஸனங்கள் அறத்தின் அழியா அடையாளங்கள். அவற்றைப் பற்றிய சில கவன ஈர்ப்புகள் இந்தச் 
சுட்டியில் -- 


***

தேமொழி

unread,
Apr 4, 2025, 12:56:28 AM4/4/25
to மின்தமிழ்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்;  ""சமயச்சார்பற்ற"" என்ற சொற்றொடர் 1976-ம் ஆண்டுதான்   42-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி முகவுரையில் சேர்க்கப்பட்டது. 

ஆனால். . . 
"தேவர்பிரியன் வெளிவேஷமான தானமரியாதைகளை விட சகல சமயங்களுக்குள்ளும் சமரச பாவமும் பக்திபகுமானமுமே முக்கியமெனநினைக்கின்றான். “ 

 என்று அசோகர் அதை எப்பொழுதோ  கல்வெட்டில் எழுதிவிட்டார்!!!! சும்மாவா "Ashoka the Great" என்று கூறுகிறார்கள். 

அருமையான பகிர்வு, நன்றி அரங்கனார்.  

Mohanarangan V Srirangam

unread,
Apr 4, 2025, 3:37:56 AM4/4/25
to mint...@googlegroups.com
ஆம் தேமொழி. அதுவும் அவருடைய மொழிகளை நேரடியாகப் 
படிக்கும் போது அந்த உன்னதத்தின் கதகதப்பு கால இருட்டில் 
மிகவும் இதமாக இருக்கிறது. 

’கதவ்யமதே ஹி மே ஸர்வலோகஹிதம்’ 

’அனைத்துலக நன்மையே என் தலையாய கடமை’ 

’நாஸ்தி ஹி கம்மதரம் ஸர்வலோக ஹிதத்பா’ 

‘அனைத்துலக நன்மையைப் பாதுகாப்பதை விட உயர்ந்த கடமை எதுவும் கிடையாது’ 

‘ந து ததா தாநம் வ பூஜா வ தேவானாம் பியோ மஞ்ஞதே 
யதா கிதி ஸாரவடீ அஸ ஸவ பாஸன்டானம் ஸாரவடீ து பஹுவிதா’ 

‘தானம் அன்று போற்றல் அன்று தேவானாம் பிரியன் கருதுவது 
ஆனால் எதுவெனில் பலவிதமான மதத்தினரும் ஸாரமான கருத்துகளில் 
ஒத்திசைந்து ஒன்றாய் வாழவேண்டும் என்பதே’ 

கி மு 300 ஆண்டுகளில் அசோகனுடைய வார்த்தைகள் என்று நினைக்கும் போது 
உடலில் மயிர்பொடிக்கத்தான் செய்கிறது.. 

***

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Sep 24, 2025, 1:29:37 PM9/24/25
to min tamil
முன்னர் நான் தமிழினி பத்திரிக்கையில் பாரதி பற்றி எழுதிய தொடர், தமிழினி பதிப்பாகப் பல ஆண்டுகளுக்கு முன்னர் 'பாரதிக் கல்வி' என்று வந்தது. இப்பொழுது சந்தியா பதிப்பகத்தின் வெளியீடாக 'பாரதியின் காளி' என்ற தலைப்பில் நூலாக வந்திருக்கிறது. ஆன்லைன் சுட்டி -- 

சந்தியா பதிப்பக முகவரி -- 

***

தேமொழி

unread,
Sep 24, 2025, 6:29:04 PM9/24/25
to மின்தமிழ்
மிக்க மகிழ்ச்சி.     வாழ்த்துகள்  அரங்கனாரே 💐 
Reply all
Reply to author
Forward
0 new messages