(வெருளி நோய்கள் 776-780 தொடர்ச்சி0
வெருளி நோய்கள் 781-785)
கிச்சிலிப் பழச் சாறு(orange juice) குறித்த வரம்பற்ற பேரச்சம் கிச்சிலிச் சாறு வெருளி.
Chymo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சாறு.
Portokali என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் கிச்சலிப் பழம் (ஆரஞ்சு).
கிச்சிலிப் பழ வெருளி – Portokaliphobia
00
செயல்பாடின்றிக் கிடப்பில் போடுதல் அல்லது நின்று போதல் தொடர்பான தொடர்பான வரம்பற்ற கிடப்பு வெருளி எனப்படும்.
Adhaesito என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் ஒட்டிக் கொள்ளுதல். ஒட்டிக்கொள்ளுதல் என்றால் அ்சையாமல் அதே இடத்தில் இருத்தல்தானே. இந்த இடத்தில் ஒட்டிக் கொள்ளுதல் பே்ால் செயல்பாடின்றி நின்று போதலைக் குறிக்கிறது.
00
ஒவ்வொரு இன்பண்டத்திலும் ‘s’ என்னும் ஆங்கில எழுத்து இருக்கும்.
00
கிணறு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கிணற்று வெருளி.
பொதுவாக நீர்நிலைகள் மீது பேரச்சம் உடையவர்களுக்குக் கிணறு வெருளி வரும் வாய்ப்புள்ளது. கிணற்றில் விழுந்துவிடுவோமோ, மூழ்கி விடுவோமோ என்பன போன்ற அச்சத்திற்கும் கவலைக்கும் உள்ளாகிக் கிணறு வெருளிக்கு ஆளாகின்றனர்.
00
கிண்ண இன்மா(cupcake) குறித்த வரம்பற்ற பேரச்சம் கிண்ண இன்மா வெருளி.
பழைய நோர்சு மொழிச்(Old Norse)சொல்லான காகா என்பதிலிருந்து கேக்கு( )உருவானது.
அணிச்சல், அப்பம் போன்ற சொற்களால் கேக்கு என்பதைக் குறிப்பிட்டாலும நான் இன்மா என்றே குறிக்கின்றேன்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
(சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 6: தொடர்ச்சி)
சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 7
செம்மொழி அரசு ஏற்பால் தமிழ் பெறும் பயன்கள் என்று பல்வேறு அறிஞர்கள் கட்டுரை அளித்தார்கள். நானும் கட்டுரை யளித்தேன். அது மலேசிய இதழ் ஒன்றிலே வந்திருந்தது, புதிய பாரதம் இதழிலும் ஒரு கட்டுரை அளித்தோம். ஆனால் அவை அனைத்தும் கற்பனை! கற்பனை! கற்பனைதான்! அவற்றில் கதை அளந்திருப்போம். எங்கெங்கெல்லாம் தமிழ் வளரும் என்று பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் தமிழ் வளரும், பல்கலைக்கழகங்கள், கல்விக்கூடங்கள், பன்னாட்டு அமைப்புகள், மொழி கலை பண்பாட்டு அமைப்புகள், இலக்கிய படைப்புகள், தகவல் ஊடகங்கள் எங்கு பார்த்தாலும் இங்கே தமிழ் வளரும் செழிக்கும் என்று எழுதினோம். ஆனால் ஒன்றும் நடைபெறவில்லை. ஏதோ இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விடுவது போன்று காற்று வாக்கில் போவது போல் ஆகிவிட்டது. ஆனால் அவர்கள் தவறான கருத்தைத் தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள். மறுப்பு தெரிவித்தோம். தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்? உண்மையான தமிழ் ஆய்ந்த தமிழ் அறிஞர்களைக் கொண்டு, ஏன் உண்மையான என்றால் தமிழ் அமைப்பு என்றால் தமிழ் பயின்றவர்க்கு முதலிடம் தர மாட்டார்கள். தமிழர்கள் இடம் பெற மாட்டார்கள். எந்தக் கட்சி ஆட்சி நடத்தினாலும் தமிழ் பயின்றவர்க்கு முதலிடம் தர மாட்டார்கள். அது அப்படி யாரேனும் தமிழ் அறிந்தவர்கள் வந்திருந்தால் அவர்கள் தன் அறிவுத்திறனை வெளிப்படுத்தாமல் அரசிடம் ஆதாயம் பெறுவதற்காக ஏதும் ஒரு செல்வாக்கு, செல்வத்தை அடைய வந்தவர்களாக இருப்பார்கள். தமிழுக்குக் குரல் கொடுக்க மாட்டார்கள். அவ்வாறல்லாமல் தமிழாய்ந்த தமிழ் அறிஞர்களைக் கொண்டு ஒரு பெரிய குழுவை நியமிக்க வேண்டும். நியமித்து இந்த ஒன்றிய அரசின் மூலமாக என்னென்ன செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு என்னென்ன செய்ய வேண்டும். தமிழுக்கு எவ்வாறெல்லாம் நிதி ஒதுக்கீடு கேட்க வேண்டும் என்றும் அதன் அடிப்படையிலே நாம் ஒன்றிய அரசை நிதி கேட்க வேண்டும். நிதி கேட்காமல், நிதி கொடுத்தார்களா கொடுத்தார்களா என்று கேட்காதே, அதேபோல் மீண்டும் சொல்கிறேன் ஒன்றிய அரசு நிதி கொடுப்பது தவறு அல்ல. ஏன் தவறு அல்ல என்றால் சமற்கிருதத்திற்காக அத்தனைத் திட்டங்களைச் செயல் படுத்துகிறார்கள். அதற்குப் பணம் தேவைப்படுகிறது. அதே நேரம் என்ன தவறு என்றால் இத்தனைத் திட்டங்களும் தேவையற்ற திட்டங்கள், மக்களை ஏமாற்றும் திட்டங்கள், போலித் திட்டங்கள், சமற்கிருதத்தை உயர்வாகச் சொல்லக்கூடிய திட்டங்கள் . ஆக அந்த வகையிலே தேவை இல்லைதான், ஆனாலும் கூட நடைமுறையில் இருக்கும் வரை செய்யத்தானே செய்வார்கள். அந்த நடைமுறைத் திட்டங்களைத் தூக்கி எறிய வேண்டும். ஒரேடியாக இல்லாவிட்டாலும் படிப்படியாக சமற்கிருத நிறுவனங்களை எல்லாம் குறைக்க வேண்டும். எண்ணிக்கை குறைத்து அவ்வாறு குறைப்பதன் வாயிலாக அந்த இடங்களில் தமிழைக் கொண்டு வர வேண்டும் .இவ்வாறு திட்டங்கள் தீட்ட வேண்டும். ஆக அரசு அமைக்கிற ஆணையமோ அமைப்போ என்ன செய்ய வேண்டும். முதலில் குறிப்பிட்டது போன்று மாநிலங்கள் தோறும் தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் எப்படி அமைப்பது- எப்படி தமிழ்க் கல்வி நிறுவனங்களை அமைப்பது எனச் சிந்தித்து ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்கள் நிறுவ வேண்டும்.
இந்த மேத் திங்கள் அமித்துசா அவர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில்தான் புதுதில்லி முதலமைச்சர் அவர்கள் தெய்வ மொழி சமற்கிருதம் என்று மீண்டும் பேசினார். அது என்ன நிகழ்ச்சி தெரியுமா? 2008 ஆவது சமற்கிருத உரையாடல் நிகழ்ச்சி. தில்லியில் உள்ள 2000 பேருக்கிடையேயான சமற்கிருத உரையாடல்- பேசுவது எப்படி?, பிற மொழிக் கலப்பின்றி சமற்கிருதத்தில் பேசுவது எப்படி? என்ற நிகழ்ச்சி. இது நாடெங்கிலும் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் இருக்கிறது. சென்னையிலும் இருக்கிறது. அது மட்டுமல்ல அந்த பத்து நாள் உரையாடல் முகாம் முடிந்த பிறகு அவர்களை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்று அரசின் – சொந்த செலவில் அழைத்துச் சென்று – தங்க வைத்து அங்கு முழுக்க முழுக்க சமற்கிருதத்தில் பேச வேண்டும் என்று பயிற்சி கொடுக்கிறார்கள். இவ்வாறெல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இங்கு எங்கே தமிழைப் பேசுகிறார்கள். அலைபேசியில் தமிழ் இல்லை ,தொலைக்காட்சியில் தமிழ் இல்லை , தமிழைக் கொலை பண்ணால்தான் தொலைக்காட்சி வாய்ப்பு என்றாகி விட்டது. இப்பொழுதெல்லாம் ஊடகங்களில் தமிழே இல்லாமல் இருக்கிறது. இதற்கெல்லாம் அரசு பயிற்சி தருவது மட்டும் அல்ல பயிற்சிக்கான நிதி ஒதுக்கீடும் தரவேண்டும் . ஆகத் தமிழாய்ந்த தமிழ் அறிஞர்களைத் தலைவராகக் கொண்டு, தமிழாய்ந்த தமிழ் அறிஞர்களை உறுப்பினராகக் கொண்டு, தமிழுக்குச் செய்ய வேண்டியன என்ன என்ன என்று திட்டம் தர வேண்டும். அ’தாவது இதுவரை பலர் எழுதி இருக்கிறார்கள் அதில் இருந்து கருத்துகளை வாங்கிக் கொண்டு அல்லது எடுத்துக் கொண்டு திட்டத்தைக் கொடுக்க வேண்டும்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
இணைய வழி உரையின் எழுத்தாக்கம்
13.07.2025