18 சித்தர்கள் கூறிய காயகல்ப முறைகள் --ஏ.சுகுமாரன்
முதலில் சித்தர் போகர் கூறியதில் இருந்து ஆரமிப்போம் .
இது திரட்டியது .தான்
இதன் மூலம் சதுரகிரி புராணத்தில் உள்ளது
அறிமுக உரை மட்டும் என்னுடையது
இந்த தொடரின் இறுதியில் நூல்
கிடைக்கும் இடம் முகவரி தருகிறேன்
.
காயகல்ப முறைகளை மூலத்தில் உள்ளபடியே தருகிறேன் .
செய்து பார்ப்பது அவரவர் விருப்பம் .
நான் சிபாரிசு செய்யவில்லை
இது பதிவு செய்யப்படவேண்டும் எனவே
இதை எழுதுகிறேன் .
தங்குந்த குருவின் துணை தேவை .
பொதுவாகவே சித்தர்கள் எவரும் அவரவர்களது சொந்தப் பெயரால் அழைக்கப்படுவதில்லை. அவர்களது சித்தம் தெளிந்து சித்தர்கள் நிலையை அவர்கள் அடையும்போது அதுவரை வாழ்ந்து வந்த வாழ்க்கையும் அவர்கள் சொந்த பெயர், அதனை ஒட்டிய அவரது நிகழ்வுகள், அனுபவங்கள் மறைந்து சித்தர் என்ற பொது வழியிலே செல்ல ஆரம்பிக்கும்போது, மக்கள் அவர்களது அப்போதைய நிலையைக் குறிக்கும் வேறு ஒறு உருவப் பெயரால் அழைக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
அப்படித்தான் பாம்பாட்டி சித்தர், அழுகுணி சித்தர், சட்டைநாதர், என்று அந்த நாட்களிலும் , விசிறி வைத்திருந்ததால் விசிறி சாமியார் என்று இந்த நாள் வரை மரபு தொடர்ந்து வருகிறது.
சித்தர் போகர் தமிழ்நாட்டில் பிறந்த பொற்கொல்லர் மரபை சேர்ந்தவர் என்று கருதப்படுகிறார். இவரது சீடர் புலிப்பாணி என்னும் சித்தர் ஆவார். அவர் புலி மேல் ஏறி பயணம் செய்து வந்ததால் புலிப்பாணி என்று அழைக்கப்பட்டதாக கூறுவார்கள்.
போகர் இயற்றிய நூலில் போகர் 7000 என்பது மிக முக்கியமானது. துவாத காண்டம் என்ற நூலும் குறிப்பிடத்தக்கது. . இவர் தனது சீடர்களுடன் சீனா தேசம் சென்று அங்கு ரசவாதக்கலையும், விமானம் முதலியன செய்வதைப் பற்றியும் நூல்கள் செய்தும் உபதேசங்கள் செய்தும் சிலகாலம் இருந்ததாக கூறப்படுகிறது .
பின் தமிழ்நாடு திரும்பி ஆவினன் குடியை அடுத்த சிறுகுன்றில் நவபாஷாணத்தால் 'தண்டாயுதபாணி' என்ற தெய்வத்தை படைத்து அதற்கு பூஜா விதிகளையும் விதித்தார்.குறிப்பிட தக்கது அந்த சிலை தண்டு ( குச்சி )வைத்திருந்ததால் தண்டாயுதபாணி. --முருகர் கீழே ஆவினன் குடியில் தான் உள்ளார் .
பிறகு அங்கு தண்டாயுதபாணிக்கு அருகிலேயே தனக்கு ஒரு சமாதியை செய்து அதில் சமாதி ஆனார்.
சித்தர்கள் கூறிய காயகல்ப முறைகள்
முதலில் சித்தர் போகர் கூறியதில் இருந்து ஆரமிப்போம் .
இது திரட்டியது .தான்
இதன் மூலம் சதுரகிரி புராணத்தில் உள்ளது
அறிமுக உரை மட்டும் என்னுடையது
இந்த தொடரின் இறுதியில் நூல்
கிடைக்கும் இடம் முகவரி தருகிறேன்
அறிமுக உரை மட்டும் என்னுடையது .
காயகல்ப முறைகளை மூலத்தில் உள்ளபடியே தருகிறேன் .
செய்து பார்ப்பது அவரவர் விருப்பம் .
நான் சிபாரிசு செய்யவில்லை
இது பதிவு செய்யப்படவேண்டும் எனவே
இதை எழுதுகிறேன் .
தங்குந்த குருவின் துணை தேவை .
பொதுவாகவே சித்தர்கள் எவரும் அவரவர்களது சொந்தப் பெயரால் அழைக்கப்படுவதில்லை. அவர்களது சித்தம் தெளிந்து சித்தர்கள் நிலையை அவர்கள் அடையும்போது அதுவரை வாழ்ந்து வந்த வாழ்க்கையும் அவர்கள் சொந்த பெயர், அதனை ஒட்டிய அவரது நிகழ்வுகள், அனுபவங்கள் மறைந்து சித்தர் என்ற பொது வழியிலே செல்ல ஆரம்பிக்கும்போது, மக்கள் அவர்களது அப்போதைய நிலையைக் குறிக்கும் வேறு ஒறு உருவப் பெயரால் அழைக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
அப்படித்தான் பாம்பாட்டி சித்தர், அழுகுணி சித்தர், சட்டைநாதர், என்று அந்த நாட்களிலும் , விசிறி வைத்திருந்ததால் விசிறி சாமியார் என்று இந்த நாள் வரை மரபு தொடர்ந்து வருகிறது.
சித்தர் போகர் தமிழ்நாட்டில் பிறந்த பொற்கொல்லர் மரபை சேர்ந்தவர் என்று கருதப்படுகிறார். இவரது சீடர் புலிப்பாணி என்னும் சித்தர் ஆவார். அவர் புலி மேல் ஏறி பயணம் செய்து வந்ததால் புலிப்பாணி என்று அழைக்கப்பட்டதாக கூறுவார்கள்.
போகர் இயற்றிய நூலில் போகர் 7000 என்பது மிக முக்கியமானது. துவாத காண்டம் என்ற நூலும் குறிப்பிடத்தக்கது. . இவர் தனது சீடர்களுடன் சீனா தேசம் சென்று அங்கு ரசவாதக்கலையும், விமானம் முதலியன செய்வதைப் பற்றியும் நூல்கள் செய்தும் உபதேசங்கள் செய்தும் சிலகாலம் இருந்ததாக கூறப்படுகிறது .
பின் தமிழ்நாடு திரும்பி ஆவினன் குடியை அடுத்த சிறுகுன்றில் நவபாஷாணத்தால் 'தண்டாயுதபாணி' என்ற தெய்வத்தை படைத்து அதற்கு பூஜா விதிகளையும் விதித்தார்.குறிப்பிட தக்கது அந்த சிலை தண்டு ( குச்சி )வைத்திருந்ததால் தண்டாயுதபாணி. --முருகர் கீழே ஆவினன் குடியில் தான் உள்ளார் .
பிறகு அங்கு தண்டாயுதபாணிக்கு அருகிலேயே தனக்கு ஒரு சமாதியை செய்து அதில் சமாதி ஆனார்.
போகர்ரின் காயகல்ப முறை
இது கேள்வி பதில் பாணியில் அமைத்துள்ளது :
"சுவாமீ! இனி நாங்கள் தேக சித்தி யடைவதன் பொருட்டு ஏதாவது சில கற்ப முறைகளைக் கூறியருள வேண்டுமென்று கேட்க,
அதற்கு முனிவர் ஐவர்களே! உலகத்தில் நம்மைப் போன்ற சித்தர்கள் அனுபவத்திலிருந்து வருகிற அநேக கற்ப முறைகளிற் சிலவற்றை இப்பொழுது உங்களுக்குக் கூறுகிறேன்.
அதாவது, இவ்வனத்தின் மேற்குத்திசைக் கன்னி மூலையில் தில்லை விருக்ஷமென் றொன்றுண்டு. அதனை முகம்வீங்கி விருக்ஷமென்றுஞ் சொல்லுவார்கள். அவ்விருக்ஷம் கறுப்பு நிறமாகவும், கிளைகள் சாம்பல் வர்ணமாகவும், சிறிதாகவும், இலை அகத்தியிலை போலவும் இருக்கும். அதன் பாலைக் கரத்தாற்றீண்டாது அரைக்காற் படிகொண்டு வந்து தாமிரத் தகட்டை இலேசாகத் தட்டி அப்பாலில் ஒரு மண்டலம் ஊறப்போட்டுப் பின்பு அதையெடுத்து வீரமும் பூரமும் சேர்த்து அப்பாலேயே விட்டு அரைத்துத் தகட்டை யெடுத்துக் கவசஞ்செய்து குக்குடபுடமிடச் சுண்ணமாகும். அச்சுண்ணத்தை ஆவின் நெய்யிற் குழப்பி மூன்றுநாள் சாப்பிடக் காயசித்தியாகும்.
இன்னொரு முறையாவது, அந்தத் தில்லை விருக்ஷமிருக்கு மிடத்திற்குத் தென்திசையில் ஒரு திட்டு இருக்கிறது. அதன் கீழே மணல் வாரி யோடை யென்ற ஓர் வாய்க்கால் இருக்கிறது. அவ்வாய்க்காலின் கரையில் சிவந்த இலைக்கள்ளி யென்றொரு மூலிகை உண்டு. அதனுடைய இலை சிவப்பு நிறமாக இருக்கும். அதன் பாலைக் குன்றிமணியிடை சர்க்கரையிற் சேர்த்து மூன்றுநாள் புசிக்கவேண்டும். மறு மூன்றுநாள் வரை பத்தியத்துடனிருந்து, பகலில் மோரன்னமும், இரவில் பாலன்னமும் அருந்தத் தேகசித்தியாகும் என்று கூறி யருளினர். "
இது குறித்து விவாதங்களை எதிர்பார்க்கிறேன் .
அன்புடன் ,
ஏ.சுகுமாரன்
18 சித்தர்கள் கூறிய காயகல்ப முறைகள் -ஏ.சுகுமாரன்
முதலில் சித்தர் போகர் கூறியதில் இருந்து ஆரமிப்போம் .
இது திரட்டியது .தான்
இதன் மூலம் சதுரகிரி புராணத்தில் உள்ளது
அறிமுக உரை மட்டும் என்னுடையது
இந்த தொடரின் இறுதியில் நூல்
கிடைக்கும் இடம் முகவரி தருகிறேன்
ஹா..ஹா!!
அப்படித்தான் 8 வருடமாய் த.ம.அ. நடத்திவருகிறோம்.
ஊக்கமது கைவிடேல்!! :-)
க.>
2008/10/11 annamalai sugumaran <amirth...@gmail.com>
காயகல்பம் செய்யும் மூலிகைகள் இன்று கிடைக்கிறதா என்பதை
ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் அறிவியல் பெயர்களை அறிந்து கொள்ள
வேண்டும். முனைவர் வேங்கடமணி இதில் முனைவர் பட்டம் பெற்றவர். சங்கம்
பேசும் தாவரங்களும் விலங்குகளும் வெகுவாக அழிந்துவிட்டன. (habitat
destruction). போகரின் காலம் எது என்று தெரியவில்லை. அவர் குறிப்பிடும்
இடங்கள், தாவரங்கள் இருக்கின்றனவா?
பல்கலைக்கழகங்கள் இதில் மும்முரமாக ஆய்வு செய்யவேண்டும்.
கண்ணன்
திரு நாராயணன் கண்ணன் அவர்களேசமீபத்தில் திரு இர் வாசுதேவன் அவர்கள் மூலிகை ஆராய்ச்சிப் பயணம் ஒன்றை மேற்கொண்டார்கள்அவரிடம் மூலிகை ஆரய்ச்சி பற்றிய கட்டுரை எதிர்பார்த்தேன்அது கிடைக்கவில்லை நமக்குஅன்புடன்தமிழ்த்தேனீ
2008 அக்டோபர் 14 09:59 அன்று, Narayanan Kannan <nka...@gmail.com> எழுதியது:
நான் ஒருவாரம் தஞ்சைப் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறைத் தலைவருடன் என்
களப்பணியின் போது இருந்தேன். தஞ்சை வட்டாரத்து சித்த மருத்துவர்களைச்
சந்தித்தேன். இதை ஒரு சிடியாக (குறுந்தகடாக த.ம.அ. வெளியிட்டுள்ளது).
(தொடுப்பு கொடுக்க முடியாத அளவு எங்கள் ஆய்வக firewall கெடுக்கிறது, எனவே
நமது தளம் சென்று பார்க்கவும்)
காயகல்பம் செய்யும் மூலிகைகள் இன்று கிடைக்கிறதா என்பதை
ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் அறிவியல் பெயர்களை அறிந்து கொள்ள
வேண்டும். முனைவர் வேங்கடமணி இதில் முனைவர் பட்டம் பெற்றவர். சங்கம்
பேசும் தாவரங்களும் விலங்குகளும் வெகுவாக அழிந்துவிட்டன. (habitat
destruction). போகரின் காலம் எது என்று தெரியவில்லை. அவர் குறிப்பிடும்
இடங்கள், தாவரங்கள் இருக்கின்றனவா?
பல்கலைக்கழகங்கள் இதில் மும்முரமாக ஆய்வு செய்யவேண்டும்.
கண்ணன்
--
மனிதமும்,உலகமும் காப்போம்,
மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புள்ள
--
மனிதமும்,உலகமும் காப்போம்,
மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புள்ள
உங்கள் மடல்களில் பின்னொட்டு அப்படியே விடப்படுகிறது. அதை வெட்டி
விடுங்கள். உதாரணமாக இ.ர.வாசுதேவன் என்பதுதான் சேதி. ஆனால் 'வால்' கூட.
அது இடத்தை அடைக்கிறது. தி.வா அவர்களும் சுட்டியுள்ளார்கள்.
கண்ணன்
2008/10/14 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
இனி அடுத்ததாக சித்தர்களில் முதன்மையானவரும் ,
காவேரியை தமிழ் நாட்டிற்கு கொண்டு வந்தவராக
கூறப்படும் அகத்தியர் கூறிய காயகலப்பங்களை
பார்ப்போம் .அனேகமாக தமிழகத்தின் பல ஊர்களிலும்
அகத்தியரின் சிலைகளை கோயில்களில் காணலாம்
பல ஸ்தல புராணங்களிலும் அவர் சம்பந்த பட்டிருப்பார் .
பல ஊர்களின் பெயரும் அவர்பெயரில் உள்ளது .
நான் கூட டெல்லியில் இருந்து வெளி வரும்
வடக்குவாசல் என்ற இதழில்
அகத்தியர் வாழ்ந்த சித்தர்கள் பூமிதான் புதுச்சேரியா?
என ஒரு கட்டுரை ஜூலை மாதம் எழுதி இருந்தேன்
அதை மின் தமிழ் லும் கூட இட்டுஇருந்தேன்
அகத்தியர் ஒருவரல்ல பலர் என்று கூட
கருத்து உண்டு .அகத்தியர் என்ற பெயர் அகத்தின் செயல்
அறிந்துக் கூறியதால் வந்ததாக கூறுவர்.இவரது
மாணாக்கரில் புலத்தியர் ,தேரையர் முக்கியமானவர்கள் .
அவர் அகத்தியர் பெருநூல் ,அகத்தியர் பரிபூரணம் போன்ற
பல நூல்களை வைத்திய ,வாத ,ஞான ,சோதிட சாஸ்திரங்களில்
செய்துள்ளார் .
---------------------
இனி அவர் கூறிய காய கல்பம்
இவைகளை நான் மூலத்தில் உள்ளதை
மாற்றாமல் அபடியே தருவதற்கு காரணம்
இதன் பொருளை ஆய்து காணவேண்டும்
என்றுதான் , நான் ஒன்று கூற அர்த்தம்
வேறு இருக்கக்கூடாது அல்லவா ?
மேலும் இது யாருக்கு கிடைக்க வேண்டுமோ
அவருக்கு அகத்தியர் வழி காட்டுவர் .
-------------------------------------------------------------------
இந்த சதுரகிரி வனத்திலே ,கையாந்தகரை என்ற மூலிகை
இருக்கிறது , அதை பிடிங்கி வந்து மை போல் அரைத்து
ஆவின் நெயில் குழப்பி கொதிக்கவைத்து ,சிவந்த பதத்தில்
இறக்கி காலைநேரத்தில் வலது கை பெருவிரலால் தொட்டு ,
உள்நாக்கில் மேல் வாசலில் தடவி வர குகை வாசல்
திறக்கும் .,தேகமும் சித்தியாகும் ,மற்றொரு
முறை சோதி புல் என்றொரு முலிகை உண்டு ,பார்வைக்கு
மலை புல் போலிருக்கும் ,சிறுது மஞ்சள் நிறமாய் இருக்கும் .
நான்கு விரல் அளவுக்கு மேல் வளராது .
அதை சாபம் நீக்கி சமுலதுடன் பிடுங்கி வந்து
இரவு நேரம் பார்த்தால் தீபம் போல் பிரகாசிக்கும்.
இந்த புல்லை ஆவின் பாலில் போட்டால்
ரத்த நிறமே வரும் ..
அப்போது ஒரு கழஞ்சு சூதம் அதனோடு சேர்த்து
நூறு எருமுட்டையில் புடமிட ,அச்ச சூதம் கெட்டி ஆகிவிடும்
பின் அதை செந்துரமாக்கி வெள்ளியில் கொடுக்க ஏமமகும் ,
அதை பற்ப்பமாகிநெய்யில் குழப்பி புசித்து வர தேகம்
சித்தியாகும் என்றார் .
அன்புடன்
ஏ.சுகுமாரன்
முதல் முறையை நான் பல முறை செய்துள்ளேன் .
அடுத்ததற்கு வைத்திய முறை சரிவர தெரிய வேண்டும் .
ஜோதி புல் கிடைப்பது அரிது .
முறையும் கடினம் .
ஆனால் செய்தவர் நிறைய பேர் இருந்திருக்கலாம்
இப்போது தெரியாது . .
செய்தவர் நம்மிடம் இருந்து விலகியே இருப்பார் .
மேலும் தற்ப்போது இதை பயன்படுத்துவது அரிது .
செய்துப்பார்க்க நமக்கு மனித எலிகளும்
பொறுமையும் தேவை ,
இது பழைய நூல்களில் என்ன இருக்கு என
பார்ப்பதே தவிர சிபாரிசு செய்ய இல்லை
சோதனை தேவை
கண்டவர் யாரும் இப்போது நம்மிடம் இல்லை .
விண்டு வதற்கும் யாருமில்லை
அன்புடன் ,
ஏ.சுகுமாரன்
நான் நேற்று முழுவதும் சென்னையில் இருந்தேன் .
//கையாந்தகரை"= கரிசலாங்கண்ணி?????///
ஆம் கரிசலாங்கண்ணிதான் , ஆனால் மஞ்சள் பூ பூக்கும் ஒரு வகை
சாதா கரிசலாங்கண்ணி வெள்ளையாய் பூ பூக்கும்.
வள்ளல் ராமலிங்கர் இதை ஞான மூலிகைகளில்
முதன்மையாக கூறுகிறார் .
இதன் மூலம் வழலை அகற்ற ஆயுள் கூடும்
ஆனால் சிரத்தை வேண்டும் .
அன்புடன்,
ஏ.சுகுமாரன்
2008/10/16 annamalai sugumaran <amirth...@gmail.com>
//டாகடர். தர்மலிங்கம் என்பவர் சென்னை அடையாற்றில் மருத்துவமனை (தர்மா
க்ளினிக்) நடத்தி வருகிறார். கொல்லி மலையிலும் மூலிகை ஆராய்ச்சிகளை
மேற்கொண்டுள்ளார்; நாஞ்சில் நாட்டவர்; நிறைந்த பண்பாளர்.//
இப்போது புசுண்டர் எனப்படும் காக புசுண்டர் கூறிய மூன்று காயகல்ப முறைகளை பார்ப்போம் .இவர் ரோம ரிஷிக்கு குரு ஆவார் .இவர் பிரளயம் தோறும் அவிட்ட நாள் என்ற நக்ஷத்ர பதவி அடைந்து ,மீண்டும் உலகம் தோன்றும் போது இங்கு சித்தர் குழாமுடன் வந்து வாழ்பவர் .அவிட்ட நாளில் காக்கை உருவில் இருப்பதால் காக புசுண்டர் எனப்படுவர் .
இவர் செய்த நூல்கள்
வைத்திய வாத யோகா ஞானம்
ஞாசுத்திரம்
ஞானக்குறள் இன்னும் பல
இவரின் நாடி ஜோதிடம் ஏடுகள் ஜீவநாடி எனப்படும் , இதன் மூலம்
பல சரித்திர உண்மைகள் ,வைத்திய முறைகள் இதுவரை வெளிப்பட்டுள்ளது .
இது தேவையானவர்கள் கேட்டால் இந்த நாடி இருக்கும் இடம் , மேலும் சில
விபரங்கள் கூறுகிறேன் .
ஆனால் இதை வைத்து பல சரித்திர சான்றுகள் கிடைத்தது மட்டும் உண்மை
நானே பார்த்திருக்கிறேன் .
இனி .காக புசுண்டர் கூறிய காயகல்ப முறைகளை பார்ப்போம்
மகாலிங்கம் சன்னதிக்கு வட திசையில் ஒரு நாழிகை வழி தூரத்திற்கு அப்பால் முண்டக வனம் இருக்கிறது ,அவ வனத்திற்கு வட மேற்கு மூலையில் முண்டக விர்ஷம் என்ற ஒரு மரம் இருக்கிறது .
அது ஆல மரம் போலவும் இலை சிறிதாகவும் காய்கள் கல்லத்தி காய போலிருக்கும் .மரத்தை தட்டினால் பால் வரும் ,அப்ப பாலை அரைக்கால் படியாக முப்பது நாளைக்கு சாப்பிட மூர்ச்சை ஆகும் .அச்சமயத்தில் ஒருவர் கூட இருந்து
ஆவின் பால் காய்ச்சி தேன் விட்டு அடிக்கடி ஒரு கரண்டி கொடுத்துவர முர்ச்சை
தெளிந்து ஒருவாரத்தில் தேகத்தில் சட்டை கழலும் ,அப்போது தேகம் தங்க நிறமாய்
மாறும் ,மலஜலம் பேதிக்கும் ,காயசித்தியாகும் .
இன்னொரு முறையும் உண்டு .அதாவது முண்டக விர்ஷம் பக்கத்தில் வட்ட பாறை ஒன்று உண்டு .அதற்க்கு மேற்கே கண் தண்ணீர் கசிவும் ,நெரி கற்களும் நிறைந்த இடத்தில் அழு கண்ணி என்ற ஒரு முலிகை உண்டு .
அதன் இல்லை பலா சுளை போல் இருக்கும் .எந்நேரமும் நீர் வடிந்து கொண்டிருக்கும் .பூ மஞ்சள் நிறமாகவும் ,காய்கள் செந்த்தட்டி காய்கள் போலவும் இருக்கும் .
அதை பூர்வ பக்ஷம் பூச நக்ஷத்திரதன்று சாபம் நீக்கி சமூலதையும் பிடிங்கிவந்து
சூரணித்து ஆவின் நெய்யுடன் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வர நரை திரை
மாறும் .
இனொரு முறையும் உண்டு அதாவது அழு கண்ணி மூலிகை இருக்கும் இடத்திற்கு
மேல்ப்புரமாக தொழுக கண்ணி என்னும் ஒரு மூலிகை உண்டு .
அதன் இலை அலறியிலை போலிருக்கும் .பூ வெண்மையாகவும் , தூர் கருமையாய்
இருக்கும் ,அது கதிரவனை நோக்கியே நிற்கும் .
இத் தொழுக கண்ணி இலையில் கொஞ்சமும் ,அழு கண்ணி இலையில்
கொஞ்சமும் சமஎடை சேர்த்து சூரணித்து ,உலக்கை சப்ப்தம் வராத இடத்தில்
திரிகடி பிரமாணம் ஆவின் பாலில் போட்டு அருந்தினால் தேகம் சித்தியாகும் .
என்று அருளிச்செய்தார் .
அன்புடன்,
ஏ .சுகுமாரன்
நான் இந்த இழையில் எழுதி வருவது சித்தர்கள் அருளிய காயகல்ப முறைகளைப்
பற்றி மட்டுமே .
அதுவும் இந்த முறைகளை மட்டும் எழுதக் காரணம் நமது சித்தர்கள் அருளிச் செய்து , நடை முறைப் படுத்திவந்த பல ரகசிய முறைகள் இன்னும்
நம்மால் ஆராயப் படாமல் ,இருக்கிறது .
இதை பதிவு செய்வதன் மூலம் அது அடுத்த தலைமுறைக்கும் கிடைக்கசெய்வதே
முக்கிய நோக்கம் .
மேலும் அதன் மூலம் சிதையாமலும் நான் தருவது ,பின்னால் இதை
ஆராய்ச்சி செய்பருக்கு எந்த கருத்து வேறுபடும் வரக் கூடாது என்பதற்க்காகதான் .
சித்தர்களது தத்துவ விளக்கங்களும் , பாடல்களும் ,வைத்திய முறைகளும்
தமிழர்தம் சொத்துதான் . அவைகளும் ஒருவகை இல்லகியம் தான் .
.அந்த முறைகளில் சில சுலபமானவை, பல மிகக் கடினமானவை .
சித்தர்களை பற்றிய வரலாறுகளையும் ,கதைகளையும்
திரு இந்திரா சௌதர்ராஜன் அவர்கள் மிக அழகாக எழுதி
நீண்ட நாட்களாக தமிழத்திற்கு அறிமுகம் செய்துள்ளார் .
சித்தர்களை பற்றிய கதைகளையும் ,வரலாறுகளையும்
தெரிந்துகொள்ள ,
http://chithargal.blogspot.com/
என்ற வலைப்பூவில் சித்தர்ககள் ராஜ்யம் என்ற பெயரில்
இதுவரை 16 சித்தர்களை பற்றி எழுதிஉள்ளார் .
இதைப் பற்றிகூட திருமதி சுபா ஒருமுறை
கேட்டிருந்தார் . படித்து மகிழுங்கள் .
இனி உரோம ரிஷி என்னும் சித்தர் அருளிச்செய்த காயகல்ப்ப
முறைகளைக் காண்போம் .----
இந்த ஆசரமத்திற்கு கிழப் புறம் , செங்க்கொடிவேலி என்ற ஒரு செடி
இருக்கிறது .அச்செடியின் பூ பிச்சிப்பூ போலவும் ,நிறம் சிவப்பாகவும் ,வேர்
ரத்த நிறமாகவும் இருக்கும் .
அச்செடிக்கு சாபம் நீக்கி சமூலத்தையும் பிடிங்கி வந்து , இரும்பினால் செய்த
ஒரு குழாயில் போட்டு ,அத்துடன் அமுரி சேர்த்து எட்டு நாள் உறிய பிறகு எடுக்க
இரும்பு சுத்தியாகும் .
அந்த இரும்பை உலையில் இட்டு தகடாக அடித்து , அத்தகடை ஆட்டு எருவில்
புடமிட்டு ,ஏரஞ்சி தயலத்தில் சுருக்கிட பேதிக்கும் .
அதை மறுபடி உலையில் காய்ச்சி செங்க்கொடிவேலி சாற்றில் சுர்க்கிட பத்து
வயதாகும் .
அதை சுண்ணம் செய்து பசுவின் நெய்யில் ஒரு வாரம் புசித்துவர
தேக சித்தியாகும் .
மற்றொரு முறை அந்த செங்க்கொடிவேலி செடிக்குப் பக்கத்தில் ,
கருங்கொடி வேலி என்ற ஒரு செடி இருக்கிறது .அதன் இலை
நொச்சியிலை போல் இருக்கும் .
அந்த இலையை பிடிங்கி வந்து கசக்கி சாறு பிழிந்து ,,
வெந்த சோறில் ஒருக் கைப்பிடி எடுத்து ,அதில் அந்த சாரை முன்று
துளியிட்டு அந்த சாதத்தை முன்று நாள் வரை சாப்பிட்டு வர
தேகசிதியாகும் என்றார் .
அன்புடன் ,
ஏ .சுகுமாரன்
இப்போது புசுண்டர் எனப்படும் காக புசுண்டர் கூறிய மூன்று காயகல்ப முறைகளை பார்ப்போம் .இவர் ரோம ரிஷிக்கு குரு ஆவார் .இவர் பிரளயம் தோறும் அவிட்ட நாள் என்ற நக்ஷத்ர பதவி அடைந்து ,மீண்டும் உலகம் தோன்றும் போது இங்கு சித்தர் குழாமுடன் வந்து வாழ்பவர் .A.Sugumaran
2008/11/26 annamalai sugumaran <amirth...@gmail.com>
2008/11/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>
--
அச்செடிக்கு சாபம் நீக்கி சமூலத்தையும் பிடிங்கி வந்து , இரும்பினால் செய்த
ஒரு குழாயில் போட்டு ,அத்துடன் அமுரி சேர்த்து எட்டு நாள் உறிய பிறகு எடுக்க
இரும்பு சுத்தியாகும் .
சிறு இடைச் செறுகலுக்கு மன்னிக்க,
அமுரி சேர்த்து என்றால் என்ன?---புரியவில்லை.
பிறகுஏரஞ்சி தைலம் என்றீர்களே?---அப்படியல்ல, --இறாஞ்சி தைலம் எனும் தைலம் தான் வழக்கில் உள்ளது
உபயோகத்திலும் புழங்குவது.
கமலம்
Subject: [MinTamil] Re: 18 சித்தர்கள் கூறிய காயகல்ப முறைகள் -ஏ.சுகுமாரன்http://chithargal.blogspot.com/
அச்செடிக்கு சாபம் நீக்கி சமூலத்தையும் பிடிங்கி வந்து , இரும்பினால் செய்த
ஒரு குழாயில் போட்டு ,அத்துடன் அமுரி சேர்த்து எட்டு நாள் உறிய பிறகு எடுக்க
இரும்பு சுத்தியாகும் .
சிறு இடைச் செறுகலுக்கு மன்னிக்க,
அமுரி சேர்த்து என்றால் என்ன?---புரியவில்லை.
பிறகுஏரஞ்சி தைலம் என்றீர்களே?---அப்படியல்ல, --இறாஞ்சி தைலம் எனும் தைலம் தான் வழக்கில் உள்ளது
உபயோகத்திலும் புழங்குவது.
கமலம்
--
அன்புள்ள திருமதி கமலம் ,
புதுச்சேரியில் மழையினால் ,கடும் பாதிப்பு . ,வீதிஎங்கும்
மரங்கள் விழ்த்து மின் தடை .
கடல் சிவப்பு நிறம் ஆகிவிட்டது ,அலைகள் மலை யளவு
உயரம் வருகிறது என மக்கள் பரபரப்பு .
எனவே பதில் எழுத இயலவில்லை .
ஏற அழிஞ்சில் என்பது ஒரு மரம் தான் .இதிலேயே
இறங்கு அழிஞ்சில் என்ற ஒரு வகை இருக்கிறது .
ஆனால் அது வீடுகளில் உபயோகித்தல் ராசி இல்லை
எனக் கூறுவார்கள் .
ஆனால் இந்த காயகல்ப முறையில் வருவது ஏற அழிஞ்சில் தான் .
நீங்கள் கூறும் இறாஞ்சித்தைலம் பற்றி வேறு எதாவது
வைத்தியக் குறிப்பு கிடைக்கிறதா எனப் பார்ப்போம் .
அன்புடன்
ஏ.சுகுமாரன்
இந்த ஒரு வரிக்காக அதன் கீழே உள்ள அத்தனை baggageஐயும்
இணைக்கிறீர்களே! மின்தமிழை digest modeஇல் பார்க்கும்போது
நீண்டு போய் சோர்ந்து போகிறது.
இப்படித்தான் ஒரு சிறுகதைக்கு ஒரு வரி பாராட்டு எழுதுபவர்களும்
ஓவ்வொரு முறையும் முழுச் சிறுகதையையும் இணைத்து அனுப்புகிறார்கள்.
நம் பின்னூட்டம் எழுதிய பிறகு கீழுள்ள வேண்டாத பகுதிகளை
அடித்துவிடுவது நல்ல பழக்கம் அல்லவா? நம் வலை குரு இதற்கு
முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா?
அன்புடன்
ரெ.கா.
On Nov 27, 3:07 am, "Subashini Tremmel" <ksubash...@gmail.com> wrote:
> இந்த 12 படங்களுடன் ...
>
> 2008/11/26 Subashini Tremmel <ksubash...@gmail.com>
//ஏறஞ்சில் என்று ஒரு மரம் உள்ளது , அதன் காய் முதிர்த்து கிழே விழும்போது,
அது தரையில் விழாமல் மீண்டும் தானே மேலே சென்று அந்த மரத்திலேயே
ஒட்டிக்கொள்ளும் என்பார்கள் .
அதன் மரத்தைக் கொண்டு வீடுகளில் நிலைப் படி செய்வதுண்டு .அதில் ராசி உண்டு என்பதாக நம்பிக்கை .//
நீங்கள் கூறுவது உண்மைதான் ஏற அழிஞ்சில் பற்றி பல மந்த்ரா சம்பந்தப் பட்ட விஷயங்கள் உள்ளது . நமது சித்தர்களின் சிகிச்சை முறையே மணி ,மந்த்ரா , ஒவ்ஷதாம் ( மருந்து )தான் .. .
ஆனால் மூலிகைகளைப் பற்றியே இன்னும் முழு ஆய்வு நடைபெறவில்லை .
இன்னும் பல செய்திகள் பிறரின் APPROVAL க்காக காத்திருக்கின்றன நம்மிடம் .
அன்புடன் ,
ஏ .சுகுமாரன்
சுந்தரானந்தர் கூறியகாயகல்ப முறை !
இந்த வனத்தின் மேற்கே , செங்கடுகாய் மரமும் ,
கர்ப்பதரு மரமும் உள்ளது .
செங்கடுகாய் மரம் கடுக்காய் மரம் மாதிரியே இருக்கும் ,
காய்கள் சிவப்பாக இருக்கும் .
கர்ப்பதரு மரம் ஐந்து கிளைகள் கொண்டதாக இருக்கும் ,
ஐந்து கிளைகளுமே ஐந்து வித இலைகள் கொண்டது .
இந்த செங்கடுகாய் மற்றும் கர்ப்பதரு மரத்தின் பச்சை பட்டையை
காடி நீரில் முன்று நாட்கள் ஊறவைத்து ,பிசைந்து தண்ணீர் வடித்து ,
அதற்க்கு அளவாக உப்பு ,மிளகு சேர்த்து ,அவைகளுடன் இஞ்சி ,
எலும்பிட்சை சாறுவிட்டு அரைத்து ,பழகின ஒரு மண் பாத்திரத்தில்
வைத்து 48 நாட்கள் காலை ,மாலை புசித்துவர தேகம் சித்திக்கும் என்று
சுந்தரானந்தர் கூறினார் .
சுந்தரானந்தர் அகத்தியரின் சீடர் எனகூறபபடுவார்,
போகர் ,மற்றும் சட்டை முனியிடம் சில பாடம் கேட்ருக்கிறார்
இவர் எழுதிய நூல்கள் பல ,அவைகளில் சில இதோ !
வைதியத்திரட்டு 1500
வகாரம் ௨00
அதீத சூத்திரம் 104
முப்பூ 25
சுத்தஞானம் 51
மற்றும் பல
அன்புடன் ,
ஏ .சுகுமாரன்
//ஏறஞ்சில் என்று ஒரு மரம் உள்ளது , அதன் காய் முதிர்த்து கிழே விழும்போது,
அது தரையில் விழாமல் மீண்டும் தானே மேலே சென்று அந்த மரத்திலேயே