ஆதிச்ச நல்லூர், கொற்கை, சிவகளை போன்ற பொருநை நாகரிகம் செழித்து காணப்பட்ட பகுதியில் கிடைத்த நூற்றுக்கணக்கான தொல்லியல் பொருட்களை கொண்டு, தற்போது தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகம் கீழடிக்கு சவால் விடும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் பழம்பெரும் நதியான தாமிரபரணியின் கரைகளில், நூற்றாண்டுகள் முந்தைய பண்டைய தமிழ் நாகரிகம் புதைந்து கிடந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அந்த நாகரிகத்தின் பெயர் பொருநை. தாமிரபரணி நதி பண்டைக்காலத்தில் பொருநை நதி என்றே அழைக்கப்பட்டது. அதன் நதிக் கரையில் தோன்றியதே பொருநை நாகரிகம்.