[MinTamil] ஆறுமுக நாவலர் பதிப்பு நெறிமுறைகள்

175 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
May 16, 2010, 5:19:47 AM5/16/10
to மின்தமிழ், ksuba...@gmail.com
சுவடிப்பதிப்புக்குத் தகுந்த  நெறிமுறைகளை வகுத்து தக்க முறையில் பதிப்பித்த பதிப்பாசிரியர்கள் சிலரது வரிசையில் பேராசிரியர்.வையாபுரிப்பிள்ளை  உ.வே.சாமிநாதய்யர்,  தணிகைமணியார் பற்றிய கட்டுரைகளை முன்னர் இங்கு பதிப்பித்தேன். அந்த வரிசையில் இன்று மேலும் ஒரு கட்டுரை இணைகின்றது.
 
இந்தக் கட்டுரை ஆறுமுக நாவலரின் பதிப்பு நெறிமுறைகளை விளக்குகின்றது. கட்டுரையில் அடிப்பகுதியில் அவர் பதிப்பித்த நூல்களின் பெயர்கள் அகர வரிசையில் வழங்கப்பட்டுள்ளன.
 
இந்தக் கட்டுரை தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடான "சுவடிப்பதிப்பு நெறிமுறைகள்" என்ற கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து பதிப்பிக்கப்படுகின்றது. இந்தக் கட்டுரையை தட்டச்சு செய்து வழங்கியுள்ள திரு.வடிவேலு கன்னியப்பன் அவர்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
 
அன்புடன்
சுபா
 
 

ஆறுமுக நாவலர்  பதிப்பு நெறிமுறைகள்

சி. இலட்சுமணன்


             பத்தொன்பதாம் நூற்றாண்டின் பதிப்பு ஆசிரியர்களில் ஆறுமுக நாவலர் அவர்கள் குறிப்பிடத்தக்கவராவார். இவர் சைவ சமயப் பற்றுடையவராகவும், தமிழ் ஆர்வலராகவும் விளங்கியமைக்கு அவரது பதிப்புகள் சான்று பகர்கின்றன. நாவலர் அவர்கள் பதிப்பாசிரியர் என்பதோடமையாமல் நூலாசிரியராகவும் உரையாசிரியராகவும் விளங்கியமை குறிக்கத்தக்கது.

 

 

நாவலர் பதிப்பித்த நூல்கள் 
             
           
ஆறுமுக நாவலரவர்கள் பரிசோதித்தும் புத்துரையாத்தும் புதியதாய் எழுதியும் பதிப்பித்தநூல்கள்1 ஏறத்தாழ அறுபத்துமூன்று எனத் தெரியவருகிறது. அவற்றுள் நிகண்டு, இலக்கிய இலக்கண நூல்கள், திரட்டுகள், நீதிநூல்கள், போன்றவை அடங்கும்.அப்பதிப்புகளைத் தொகுப்பு பதிப்பு, சுருக்கப் பதிப்பு, குறிப்பெதிர் பதிப்பு, எனமூன்று வகைக்குள் அடக்கலாம். தொகுப்பு பதிப்பாவது ஒருவருடைய அல்லது பலருடையபடைப்புகளிலிருந்து சில பகுதிகளைத் தொகுத்துத் தருவதாகும். அகத்தியர் அருளியத்தேவாரத் திரட்டு, தாயுமானவ சுவாமிகள் திருப் பாடல் திரட்டு, நீதிநூல் திரட்டுஎன்பன. தொகுப்புப் பதிப்புகளாகும். ஒரு நூலினது மூலத்தை மட்டும் அல்லது நூற்பொதிகருத்துகளைப் பக்க அளவால் சுருக்கி வெளியிடுதல் சுருக்கப் பதிப்பாகும். இலக்கணச்சுருக்கம், இலக்கண வினா விடை, பால பாடம், போன்றவற்றைச் சுருக்கப் பதிப்பிற்குஎடுத்துக் காட்டாகக் கொள்ளலாம்.
 
              
அருஞ்சொற்பொருள்,  இலக்கணக்குறிப்பு பாடவேறுபாடு போன்றவற்றை அடிக்குறிப்பாகத் தந்து நிற்பவை குறிப்பெதிர்பதிப்புகளாம். சேது புரானம், கந்தபுராணம், திருக்குறள்சூடாமணி போன்ற இவர்தம்பெரும்பான்மை நூல்கள் குறிப்பெதிர் பதிப்புகளேயாகும்.

 பதிப்பு நெறிமுறைகள் 


               
மேற்குறிப்பிட்ட பதிப்புகளில் காணப்படும் பதிப்புநெறிமுறைகளைச் சுருக்கமாகக் கூற முயல்வதே இக்கட்டுரைரையின் நோக்கமாகும்.
 
பதிப்பாசிரியர் நோக்கம்

                 
எந்தவொரு பதிப்பாசிரியரும் தமக்கெனச் சில பதிப்புநோக்கங்களைக் கொண்டிருப்பர். அத்தகைய நோக்கங்கள் அவர்தம் பதிப்புகள் சிறப்புற ஏதுவாகும். பழம் பதிப்பாசிரியர்கள் தத்தமக்கெனப் பதிப்பு நோக்கங்களை அவருடைய பதிப்புகளினின்று காணலாம். 
                  
அ. ஓலைச் சுவடியில் உள்ளநூல்களை அச்சில் கொணர வேண்டும் என்பது அவர் நோக்கங்களுள் ஒன்றாகும். ஏட்டிலுள்ள நூல்களை எல்லாரும் எளிதில் பெறும்படி அச்சிற் பதிப்பித்தல் வேண்டும் என்னும் ஆசையும் இவருக்கு உண்டாயிருந்தது2 என்ற கூற்றிலிருந்து மேற்கருத்துநன்கு விளக்கம் பெறும். 
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

srirangammohanarangan v

unread,
May 16, 2010, 6:11:55 AM5/16/10
to mint...@googlegroups.com
>>> ஆறுமுக நாவலரவர்கள் பரிசோதித்தும் புத்துரையாத்தும் புதியதாய் எழுதியும் பதிப்பித்தநூல்கள்1 ஏறத்தாழ அறுபத்துமூன்று எனத் தெரியவருகிறது. அவற்றுள் நிகண்டு, இலக்கிய இலக்கண நூல்கள், திரட்டுகள், நீதிநூல்கள், போன்றவை அடங்கும்<<<
 
 
நல்ல பணி. திரு வடிவேலு கன்னியப்பனுக்கு நன்றிகள். 
மேல் காட்டில்  பதிப்பித்த நூல்கள் என்பதற்குப் பக்கத்தில் மேலே சூப்பர்ஸ்கிரிப்டாக நம்பர் 1 அடிக்கப் பட்டிருக்கிறது. 
 
அவ்வாறு சூப்பட்ஸ்க்ரிப்ட் நம்பர் அடிப்பது எப்படி? யாரேனும் சொல்லி உதவினால் நன்றாக இருக்கும்.

Subashini Tremmel

unread,
May 16, 2010, 6:34:06 AM5/16/10
to mint...@googlegroups.com


2010/5/16 srirangammohanarangan v <ranga...@gmail.com>

>>> ஆறுமுக நாவலரவர்கள் பரிசோதித்தும் புத்துரையாத்தும் புதியதாய் எழுதியும் பதிப்பித்தநூல்கள்1 ஏறத்தாழ அறுபத்துமூன்று எனத் தெரியவருகிறது. அவற்றுள் நிகண்டு, இலக்கிய இலக்கண நூல்கள், திரட்டுகள், நீதிநூல்கள், போன்றவை அடங்கும்<<<
 
 
நல்ல பணி. திரு வடிவேலு கன்னியப்பனுக்கு நன்றிகள். 
மேல் காட்டில்  பதிப்பித்த நூல்கள் என்பதற்குப் பக்கத்தில் மேலே சூப்பர்ஸ்கிரிப்டாக நம்பர் 1 அடிக்கப் பட்டிருக்கிறது. 
 
இந்த கட்டுரை ஜூம்லா CMSல் உள்ளதால் எண்களை சூப்பர்ஸ்கிரிப்ட் ஆக மாற்ற அதில் நான் பொறுத்தியுள்ள எடிட்டரை பயன்படுத்தினேன். MS Word ல் கூட நீங்கள் இதனைச் செய்து பின்னர் வெட்டி ஒட்டிக் கொள்ளலாம். Please check "Font" properties,  under effect section.
 
anbudan
Suba

srirangammohanarangan v

unread,
May 16, 2010, 6:35:59 AM5/16/10
to mint...@googlegroups.com
மிக்க நன்றி திருமதி சுபாஷினி

Raja sankar

unread,
May 16, 2010, 6:39:47 AM5/16/10
to mint...@googlegroups.com
இணையத்தில் கிடைக்கும் writer.zoho.com, docs.google.com போன்றவற்றிலும் இந்த வசதி உண்டு. இவை இலவசமாகவே கிடைக்கின்றன.



ராஜசங்கர்



2010/5/16 srirangammohanarangan v <ranga...@gmail.com>

srirangammohanarangan v

unread,
May 16, 2010, 6:42:21 AM5/16/10
to mint...@googlegroups.com
ஓ நன்றி திரு ராஜசங்கர். இதைப்போலவே ஸப்ஸ்கிரிப்டாகவும் நம்பர் இட வசதி இருக்கும் என்று எண்ணுகிறேன். 

Innamburan Innamburan

unread,
May 16, 2010, 8:11:03 AM5/16/10
to mint...@googlegroups.com
முழுதும் படித்து பெரும்பயன் அடைந்தேன். நன்றி பல, திருமதி. ஸுபாஷிணி.
இன்று ஹார்வர்ட் நெறிமுறை என்று ஆய்வு, பதிப்பு செய்யும் கண்டிப்பான
நெறிமுறைகளுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளன, ஆறுமுக நாவலரின் நெறிமுறைகள்.
முதற்கண்ணாக, "...  ”பதிப்பாசிரியர், நூலாசிரியர் மீது
மேலாதிக்கிம்செலுத்துபரல்லர். நூலாசிரியருக்கு உதவி செய்பவரே" என்ற
கோட்பாட்டைப் போற்றவேண்டும். ஸூப்பர்/ஸப் ஸ்கிர்ப்டுக்கள், வோர்ட்
டாக்குமேண்டிலேயே எளிதாக உள்ளனவே. மற்ற வழிகள் எதற்கு?
இன்னம்பூரான்

2010/5/16 srirangammohanarangan v <ranga...@gmail.com>

Reply all
Reply to author
Forward
0 new messages