nellikani -(athiyamaan- avvai)

122 views
Skip to first unread message

க.இராமச்சந்திரன்

unread,
Oct 14, 2011, 1:51:06 AM10/14/11
to minT...@googlegroups.com


--
 அன்பு மின்தமிழ் நண்பர்களே ...
வணக்கம்.

அதியமான் அவர்கள்  அவ்வை மூதாட்டிக்கு நெல்லிக்கனி  கொடுத்தார்கள் என்றும்
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் காய்க்கும் அக்கனி என்றும்  ,
அக்கனி உண்டால் இளமை திரும்பும் என்றும் ...
நாம் அறிந்திருந்தாலும் ,
அக்கனி பற்றிய  சிந்தனை செய்திகள்  எதாவது  உண்டா..?
அறிந்தவர்கள்   தெரிவிக்கலாம்
உதாரனத்திற்க்கு...

இக் கனி  இருந்திருக்கும்  ஊர் எது?
இக் கனி அங்கு  இருந்திருக்க காரணம் என்ன ?....போன்று..

நன்றி.
 
க.இராமச்சந்திரன்,
வரலாற்று ஆர்வலர் குழு,
நாகப்பட்டினம்.

Selva Murali

unread,
Oct 14, 2011, 4:41:55 AM10/14/11
to mint...@googlegroups.com
நெல்லியில் பலவகை உண்டு. அதியன் அவ்வைக்கு கொடுத்தது கருநெல்லி.

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil


--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------------------------------------
India`s Leading Web Hosting Providers
www.rupeeshost.com
India`s First Cloud Hosting Provider
www.cloudsindia.in
----------------------------------------------------------

s.bala subramani B+ve

unread,
Oct 14, 2011, 4:44:54 AM10/14/11
to mint...@googlegroups.com
அவ்வை அதியமான் தொடர்புகள் தர்மபுரி தகடுரை விட
அதிகன்  பற்றிய தரவுகளை அதிகம் உள்ளடக்கிய கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள
குட தொடர்ச்சி மலைகளில் தகட மலை ,முத்துக்குளி வயல் உள்ளிட்ட இடங்களில் இந்த நிகழ்வுகள் நடந்து  இருக்கலாம் .அதியனுர்,அதிகனேறி,எளிணிபரம்பு ,நெய்யாற்றங்கரை  அதியனுர்  என்று பல பல இடங்கள் அதியர்களின் எச்சங்களை கூறும்  . இன்றும் அந்த காடுகளில் விளையும் பெரு நெல்லிக்கனி மற்றும் குறு மிளகு  மிகவும் சுவை மற்றும் பசி அடக்க கூடியது .

பல தடவை கடலுக்கு செல்லும் போது எடுத்து சென்று இருக்கிறேன் .
குலசேகரம் சந்தையில் இன்றும் மலை பொருள்கள் காணி மக்களால் விற்க படுகிறது

சிவ பாலசுப்ரமணி


2011/10/14 க.இராமச்சந்திரன் <mura...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S.Balasubramani B+ve
My Blog
http://balubpos.blogspot.com/

s.bala subramani B+ve

unread,
Oct 14, 2011, 5:41:35 AM10/14/11
to mint...@googlegroups.com
நெல்லிக்கனி தொடர்பான  பயனுள்ள தளங்கள் 

http://en.wikipedia.org/wiki/Indian_gooseberry








2011/10/14 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

seshadri sridharan

unread,
Oct 14, 2011, 6:53:25 AM10/14/11
to mint...@googlegroups.com
//இக் கனி  இருந்திருக்கும்  ஊர் எது? இக் கனி அங்கு  இருந்திருக்க காரணம் என்ன ?....போன்று..//

திருவண்ணா
 
க.இராமச்சந்திரன்,
வரலாற்று ஆர்வலர் குழு,
நாகப்பட்டினம்.

seshadri sridharan

unread,
Oct 14, 2011, 7:01:30 AM10/14/11
to mint...@googlegroups.com
//இக் கனி  இருந்திருக்கும்  ஊர் எது? இக் கனி அங்கு  இருந்திருக்க காரணம் என்ன ?....போன்று..//
   திருவண்ணாமலைக்கு 25 கி.மீ வடக்கே அமைந்துள்ள பர்வத மலையிக்குச் சென்றிருந்த போது  அதியமான் அங்கிருந்து தான் கிடைத்தர்கரிய நெல்லிக்  கனியை பறித்துச் சென்றதாக தூண்டுத் தாளில் அம்மலையின் சிறப்பு பற்றிய செய்தியில் அச்சடித்து போவோர் வருவோர்க்கெல்லாம் கொடுத்துக கொண்டிருந்தார்கள்.  அங்கு தான் காஞ்சிப் பெரியவர் சந்திர சேகரேந்திரர் கோலுக்கான கல் மூங்கில் கொணரப்படுவதாகவும் சொல்லப்பட்டது.
 
சேசாத்திரி 
 
.


N. Kannan

unread,
Oct 14, 2011, 9:46:38 AM10/14/11
to mint...@googlegroups.com
நெல்லியின் ஔடத்தன்மையை வைத்து உருவானதுதான் ‘சவனப்பிராஷ்’ எனும் மூலிகை க்களி.

நா.கண்ணன்

2011/10/14 seshadri sridharan <ssesh...@gmail.com>:

க.இராமச்சந்திரன்

unread,
Oct 16, 2011, 1:30:37 PM10/16/11
to mint...@googlegroups.com


2011/10/14 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
நெல்லிக்கனியை தேடும்  அன்பர்களுக்கு வணக்கம்,

இந்த புரட்டாசி சனிக்கிழமை -15-10-2011 அன்று ...
 சேலம்,  கஞ்சமலை மீதிருக்கும் எங்கள் குல தெய்வமான "கரிய ராமரை "வணங்கிடுவதற்கு
சென்று வந்தேன் ...

சேலத்தில் இருந்து  ஈரோடு செல்லும் வழியில்   கொண்டலாம்பட்டி   பய்பாஸ் வழியாக  செல்லும்போது   சாலையின் வலதுபுறம் தெரியும் உயர்ந்த மலை தான் கஞ்சமலை .

அதன்  இரண்டாவது மடிப்பின் உச்சியில் வெள்ளை நிறம் கொண்ட ஒரு கோயில் தெரியும்.
அது தான் "கரிய ராமர்கோயில்"


 கஞ்சமலைவடமேற்கு  அடிவாரத்தில் சித்தர் கோயில் என்று ஒரு கோயிலும்  இருக்கிறது.

இம்மலை பகுதிக்கு  திருமூலர் மற்றும் அவரதுவயதான  சீடர் கோலங்கி என்பவரும் வந்திருந்ததாகவும் ,
திருமூலர்  சீடரிடம் உணவு தயாரிக்க சொல்லிவிட்டு இயற்க்கைகடன்களை முடிக்கசென்றுவிட்டபோது ..
கோலங்கி  உணவை கிண்டிவிட அருகில் இருந்த குச்சியை பயன்படுத்தி கிண்டியதால்,
 உணவு கருநிறமாய்  ஆனதாகவும் ,  ஆசான் திட்டுவார் என்று அந்தகரிய உணவை தானே உண்டுவிட்டு
வேறு உணவு தயாரிக்க எத்தனித்தபோது
தனது வயோதிக தோற்றம் மாறி இளமை தோற்றம் அடைந்ததாக வும்...

திரும்பிவந்த திருமூலர்  நடந்த செய்தி கேட்டு   அக்குச்சியை கண்டறிந்து முதுமையை வெல்லும்   சக்திக்கு வழி கண்டுபிடித்ததாக இப்பகுதியில்  செவிவழி செய்தி பேசபட்டுவருவது....

அதற்க்கு ஏற்ப
 "இளம்பிள்ளை" என்ற ஊரும்  அருகிலே உள்ளது...

இம்மலையின்
தெற்கே உள்ள  உத்தம சோழ புரத்திற்கு ஔவையார்   வந்துள்ளாதாகவும்
அவரின் ஆணையின் படி  அன்னதானம் இட்டதால் "அன்னத்தான பட்டி" - என்ற கிராமம் சங்ககிரி      வட்டத்தில்  உள்ளது ம ,
 அன்னதானம்செய்ய  அயிந்து வெலி நிலத்தை  ஒதுக்கிடத்தால் "  ஐ வெலி " என்று ஒரு கிராமமே உள்ளதும் நேரில்  கேள்வியுரபட்டது.. நேரிலும் கண்டு உணரப்பட்டது...

அதியமான்- அவ்வை தொடர்பான  கரு நெல்லி  இங்குதான் இருந்துள்ளது   என்று நான் கூறமுடியாவிட்டாலும் ..
 இங்கு இந்த நிகழ்ச்சி நடந்திருபதர்க்கு  சாத்தியங்கள் இருப்பதாகவே  கிடைத்த செய்திகள் நினைக்க்கவைகின்றன ..

                                                  அதற்க்கான காரணங்கள்

அதியமான் நெடுமான் அஞ்சி
தொடர்புடைய பகுதியின் எல்லை யில்,
மலையின் மீது ,யாரும் பறிக்க கடினமான  உச்சிபகுதியில் ..
12   ஆண்டுகளுக்கு ஒருமுறை கருநெல்லி காயிததாகவும்,அதை காத்துவந்த வீரனே   "கரிய ராமன்" என்று மலையுச்சியில் உள்ள வீரன் என்ற செவிவழி(நெடுங்கால வாய்வழி செய்தி) செய்தியை
என் தாத்தா அவர்கள்  சொல்ல கேட்டிருந்தாலும் ..

 
"தன்முயற்சியில் மெய்ஞானம் " என்ற புத்தரின் மொழிக்கேற்ப 
இந்த செவி வழி செய்திஉண்மையாக இருபதற்கு தாவர  அறிவியல் பார்வையில் சாத்தியகூறுகள்  இருக்கிறதா என்று  நோக்கிட என் மனது  அறிவுறிதியது......
இந்த ஆய்வில்
         வரலாறு ஆர்வம்,  (தேடுதலுக்கு உத்வேகம்)
        தொல்லியல்,           ( இரும்புக்காலம்  பற்றிய சுவடுகள் இப்பகுதியில் உள்ளனாவா?
                                            கல்வெட்டில்இப்பகுதி   குறித்து என்ன சொல ல பட்டிருக்கு ? )
                                 
        தாவரவியல்,           (தாவரத்தில் கரு நெல்லிக்கு சாத்தியம் இருக்கா?)
        வனவியல்,              (இப் பகுதி நெல்லிவளற்வதர்க்கு சரியான இடமா?)
        உயிர் அறிவியல்  ( திடீர்  மாற்றம் எனும் -முட்டேசன் நடந்திட வாய்ப்புள்ளதா?)
        கனிம அறிவியல்  (ஒவொரு தாதினுக்கும்  உள்ள தன்மை என்ன?)
       மண்வளம் அறிவியல் (இப்பகுதி மண் எந்த தாது நிறைந்துள்ளது?

போன்ற பல வாய்ப்புக்களில் நோக்கியபோது

(தாலிபானை - கூந்தல்   பனை போன்ற  தாவரங்கள் 60 வருடங்களுக்கு ஒருமுறையே பூத்து  காய்க்கும் -12  இன் மடங்குதான்  60 ..)எனவே இந்த தாவரத்தில் 12 ஆண்டுகள் என்னும் ஆண்டு கணக்கும்  மெய்யாக இருக்க வாய்ப்புள்ளது

மேலும் ......

கஞ்சமலை  இரும்பு தாது உள்ள இடம்.

கரு ஊமத்தை ,கரு நொச்சி,கருந  துளசி,மலை வேம்பு போன்ற தாவரங்கள்கருநீலநிறம்   நிறைய  வெளிகாட்டும் தகுதி உள்ளவையாகும் ..
இதற்க்கு இத்தாவரங்கள்  இரும்பு சத்தினை  நிறையவே  உள்இழுத்து வைத்துள்ளதே காரணமாக இருக்க்கலாம் ...
  தாவரங்கள்  இரும்பு தாதுநிறைந்த  இடத்தில வளரும்போது  அந்த தாதை  உள்ளிளுதததன் விளைவால்     கருநீலநிறம் நன்றாக தெரியும்படிக்கும் ...மேலும் சிலசமயம் இரும்பு தாதுவால் தாவரங்கள்  உடலில் செயல்பாடுகள் மாற்றம் பெற்று
                        "ம்முடேசன் "       நடந்து
அந்தந்த தாவரங்களில்   அதிக வீரியம்முடைய  ஒரு பிரிவு உண்டாகி இருக்கலாமோ?.....

அந்தவரிசையில்  இந்த கரு நெல்லியும் உருவாக்கம் அடைந்திருக்கலாமோ? ....
என்று எனக்கு  நினைக்கத்தொன்றுகிறது.. ......

இளமைக்கு
" நெல்லி "என்பது   அனைவருக்கும் தெரிந்த செய்தி..
ஆனால் அதிகவீரியம் உள்ள கரு நெல்லி கூடுமானவரை விரைவில்  மாற்றத்தை செய்யும் சந்தர்ப்பம் இருந்திருக்க்கலாமோ?

ஒருகால் நிறைய நெல்லி கன்றுகளை கஞ்சமலை பகுதிகளில் பயிர் இட்டு வளர்த்தல்
இன்று இல்லாவிட்டாலும் எதிர் காலத்தில் ,பலதாவர தலைமுறைக்குபின்
நாம் இழந்துவிட்ட  "கரு நெல்லி" என்னும் தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டிருக்கும்
அற்புத தாவரம் மீட்கப்படலாம் .........? 

அரசின் வனத்துறை - சமூக காடுகள்வளர்ப்பு திட்டம் என்ற திட்டத்தின் மூலம்  நெல்லி  பயிரிடலும் சாத்தியமே .......


(குறிப்பு :

அதியமான்  ,கன்னியாகுமரி மற்றும  தருமபுரி (தகடூர்) மாவட்டங்களில்  இருந்திருக்க வாய்ப்புகள் குறித்து வரலாற்று  வல்லுனர்கள்  பல கருத்துக்கள் கொண்டிருந்தாலும்  அப்பகுதிகளிலும்   அவ்வையின் தொடர்புகுறித்த செய்திகள் மற்றும் அப்பகுதிகளிலும்  உள்ள மலைகளின் தாதுகள் குறித்தும் ஆய்வு செய்தால் உண்மை தெரியவரலாம்.. )



தாவரவியல், வேளாண்மை அறிஞர்கள் இது குறித்து சிந்திக்க சொல்லலாமே ?... ...



தொலைநோக்கு சிந்தனை யாளர்கள் ,
I,A,S  நிலையில் உள்ள பயிர் அறிவியல் அறிஞர்கள் ,
வனத்துறை அதிகாரிகள் ,
சமூக தொண்டு நிறுவனங்கள் கொண்டு  
"நெல்லிக்கனி" என்ற ஒரு ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து முயற்சி செய்திட  


  தமிழக அரசுக்கும-வனத்துறைக்கும்   மின் தமிழ்  குழுமம்  முன் மொழிவு அனுப்பலாமா?

நெல்லிகனி பற்றிய
இதில் கூறப்பட்டுள்ள கருத்து  மட்டுமே  சரி என்பதல்ல, இது எனக்கு கிடைத்த   சந்தர்பங்களின்  விளைவு அவ்வளவே ..
நண்பர்களின் மாற்று  /வேறு   கருத்துகளையும்   தெரிந்துகொள்ள ஆவலே.. ...
நன்றி .....

Reply all
Reply to author
Forward
0 new messages