பொதிகை புனித யாத்திரை #2

265 views
Skip to first unread message

Krishnan S

unread,
Aug 17, 2013, 5:06:44 AM8/17/13
to tamil_ulagam, mint...@googlegroups.com

பொதிகை புனித யாத்திரை #2

பொதிகை மலையின் உயரம் 6200 அடி.தமிழுக்கு இலக்கணம் வகுத்த தெய்வச்சித்தர் அகஸ்தியர் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதாக ஐதீகம். பொதிகைமலையில் அகஸ்தியரது சிலை 1970 ஆண்டில் சுந்தரம் பிள்ளை என்பவரால் நிறுவப்பட்டது. அச்சிலை திருட்டு போய் விட்டது.பின்னர் 1985-ம் ஆண்டு புதியதொரு அகஸ்தியர் சிலையை விஷ்ணு தேவானந்தா என்பவர நிறுவ,அதுவும் களவு போனது! அதன் பிறகு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைதான் தற்போதுள்ளது.

 திகாசங்களும்,புராணங்களும் போற்றும் குறுமுனியான அகத்தியருக்கு கேரளத்தில் கோயில் ஒன்று உள்ளது.தமிழ் தந்த மாமுனிக்கு கேரளத்தில் அமைந்துள்ள கோயில்,கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாழ் 1800 மீட்டர்உயரத்தில் உள்ளது.அகத்திய குடி கொண்டுள்ள மலை அகஸ்தியர் கூடம் என அழைக்கப்படுகிறது

 சித்தர்களுக்கெல்லாம் குருவாகக் கருதப்படும் அகத்திய முனிவரை தரிசிக்கச் செல்லும் இடமெல்லாம்மருத்துவ குணம் நிறைந்த மூலிகைச் செடிகளைக் காணலாம்.மலையடிவார கிராமங்களுக்கு குடி நீர்வழங்கும் பல நதிகளும், இம்மலையில் இருந்துதான் உற்பத்தியாகின்றன. நாற்பத்தொரு நாட்கள் விரதமிருந்து இருமுடி கட்டி அகஸ்தியர், கூடத்திற்கு பக்தியுடன் செல்லும் பக்தர்கள் பலருண்டு.திருவனந்புரத்திற்கு அருலில் உள்ள போணக்காடு கிராமத்தில் இருந்து 24 கி.மீ. மலைகளுக்கிடையே உள்ள காட்டுப் பாதையில் நடந்து சென்றுதான் குறுமுனியைக்காண முடியும். இயற்கை அன்னையின் பரிபூரணத்துவத்தை நாம் கண்டு இன்புறலாம்.தெளிந்த நீரோடைகளும்,அருவிகளும் நாம் செல்லும் பாதியில் எராளம்.அகத்திய முனிவர் சிலை,செங்குத்தான பாறையில் அமைந்துள்ளது.இங்கு செல்லும் பக்தர்கள்,தாங்கள் கொண்டு செல்லும் பூஜைக்கான பொருள்களை தாங்களே முனிவருக்குப் படைத்து பூஜை செய்கிறார்கள். 1890 மீட்டர் உயரமென்றால் காற்றிற்குப் பஞ்சமில்லை. ஆனால் அதிசயமாக-அகத்தியர் சிலை உள்ள இடம் மட்டும் சலனமற்று இருக்கும்.

 பக்தர்கள் கல்விளக்கில்  ஏற்றி வைக்கும் தீபம்,அசையாமல் சுடர்விட்டு எரியும்.முனிவரை தரிசித்து விட்டு இறங்கினால்,காற்று ஆளைத் தூக்குவது போல அடிக்கும்.சில இடங்களில் தவழ்ந்தபடிதான் இறங்க வேண்டும்.அகத்திய முனிவரை தரிசித்து வரும் அனைவரும் அங்கே அனுபவித்தாக ஒருமித்த குரலுடன் சொல்வது புத்துணர்வு.அகநிறைவு.அந்த சித்த புருஷனை தரிசித்தால்,மனதில் மட்டுமல்ல வாழ்விலும் புத்துணர்வு பிறக்கும்.

 அகஸ்தியர் கூடத்திற்கு நாம் நினைத்த மாத்திரம் சென்று விட முடியாது சனவரி,பிப்ரவரி,மார்ச்,ஏபரல் மாதங்களில் மட்டுமே செல்லலாம்..அதற்கு கேரள வனத்துறைபினரின் முன் அனுமதி பெற வேண்டும்.ஒருமுறை சென்று குறைந்தது 

மூன்று தினங்கள் தேவைப்படும்.திருவனந்த புரத்தில் ...உள்ள வன வகுப்பு அலுவலகத்தில் இருந்து இங்கு செல்வதற்கான அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.

பாண்டி பதின்நான்கு என்று அழைக்கப்படும் பாடல் பெற்றத் தலங்களுள் திருக்குற்றாலமும்                      ஒன்று.பொதிகைமலையுடன் சார்ந்த மலை,மூர்த்தி,தலம்,தீர்த்தம் மூன்றும் சிறப்புடையதாகும்.                             பொதிகைமலைக்கு செல்லும் வழியில் அகத்திய முனிவர் இங்கு வந்தார்.

பாபநாசம் அடுத்துள்ள விக்கரம சிங்கபுரம் சேர்ந்த செல்லையா சிவபவனன் என்ற  இதனை ஒரு சேவையாக செய்து வருகிறார்..இவர்கள் முறையாக அகஸ்தியர்ரை வணங்கி,பூஜைகள் செய்து அனப்ர்களை அழைத்துசெல்கிறார்கள்.

 திருநெல்வேலியிருந்து சுமார் 85 கி.மீ. தொலைவிலுள்ளது பொதிகை மலை.                                                        உயரம் 6200 அடி.தமிழுக்கு இலக்கணம் வகுத்த தெய்வச்சித்தர் அகஸ்தியர்                                                          இன்றும் வாழ்ந்து கொண்டுடிருப்பதாக ஐதீகம்.

 பொதிகை மலை ஏக பொதிகை என்றும் கூறுவர்.சிவபெருமான் பார்வதி திருமண கோலத்தைக் காண வந்த அகஸ்தியர், சிவபெருமானின் உத்தரவு பேரில் தென்பகுதியான பொதிகைக்கு வந்ததால் இந்த மலை அகஸ்தியர் மலை என்றும் அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் சித்திரை மாதம் இப்புனித பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

காரையார் அணை சென்று பின்னர் இந்திரப் படகில் அக்கரை செல்ல வேண்டும்.பின்னர் நடை பயணம் ஆரம்பமாகிறது. நாம் நடக்கும் ஒவ்வொரு அடியும் பொதிகைச் சிகரத்தை நோக்கியே செல்கிறது.

பொதிகை மலை உயரம் 6125 அடியாகும். வழியில் துலுக்கமொட்டை என்னும் இருக்கிறது.

இதன் உயரம் 1867 அடி. இம்மலையைக் கடந்துதான் செல்லவேண்டும்.சிரமான நடைப்பயண என்பதால் களைப்படைந்துவிடும்.முதல் நாள் நடை யாத்திரையில் இதுவே மிகவும் சிரமான பகுதியாகும். சுமார் ஒரு மணி நேர நடைக்கு பயணத்திற்கு பின் உள்ளாறு என்ற ஆறு குறுக்கிடும். தெளிந்த நீரோடை.

மதிய உணவுக்கு பிறகு ஓய்வு . சுமார் ஒரு மணி நேர ஓய்வுக்குப்பின்,மீண்டும் நடைப்பயணம் ஆரம்பமாகும். ஒரு மணி நேர பிரயாணத்திற்குப் பின் கன்னிகட்டி என்ற பகுதியை அடைந்து விடலாம்.இங்கு ஆங்கிலயர்களால் கட்டப்பட்ட வன இலாகா பங்களா உள்ளது.இன்று நவீனப்படுத்தப்பட்டுள்ளது.பங்களாவைச்சுற்றி அகழிகள் தோண்டப்பட்டு, பங்களா செல்வதற்கு ஒரு நபர் செல்லக்கூடிய பலகை பாதை இருக்கிறது. இது யானைகள் வராதபடி செய்துள்ள ஏற்பாடு. முதல் பயணத்தின் இறுதியில் இந்த பங்களாவில் தங்கி செல்லாம். இரவில் விலங்குகளின் நடமாட்டமும், அதன் சத்தங்களை கேட்கலாம்.நேரம் செல்ல குளிர் அதிகமாக இருக்கும்.

 மறுநாள் பயணம் அதிகாலை 5 மணிக்கே ஆரம்பித்து விடும். கருக்கலாக இருப்பதால் டார்ச் லைட் வெளிச்சத்தில் நடைபயணம் தொடர்ந்து விடும். முப்பது நிமிட பயணத்தில் கன்னிகட்டி சிற்றாறு குறுக்கிடும். அங்கு காலைக்கடனை முடித்துக்கொண்டு, நீண்டு வானளாவிய மரங்களை இரசித்துக்கொண்டும்,,சந்தன மரங்களின் சுகந்தத்தை சுமந்துக்கொண்டும், ''குறுமுனிக்கு அரோகரா, கும்பமுனிக்கு அரோகரா'' என்று பாடிக்கொண்டும் செல்வதால் அகஸ்தியரின் திருவருள் கிட்டுவதுடன், மனமும் உடலும் உற்சாகம் பெற்கிறது.அத்துடன் வனவிலங்களையும் விரட்டவும் உதவுகிறது.

சுமார் எட்டு மணிபோல் பேயாறு வந்தடையலாம்.கோடைக்காலங்களிலும் இந்த ஆற்றில் நீர் நிறைந்தே ஓடும்.இந்த ஆற்றில் குளித்துவிட்டு காலை உணவினை முடித்து விட்டு பயணத்தை தொடர வேண்டும்.90 நிமிடநடைப்பயணத்திற்கு பின் கல்லாறு என்ற இடத்தை அடையலாம். இங்கு சிறிது நேர ஓய்வுக்குப்பின்,அடுத்தஇலக்கு பயண ஆரம்பமாகும்.அடுதத இலக்கு சங்கு மித்திரை.

கல்லாற்றிலிருந்து சங்குமித்திரை அடையும் வரை மூங்கில் காடுகள்.இங்கு கல்தாமரை என்னும் அபூர்வமூலிகைகளை காணலாம்.உயரமான பகுதியால் நடையில் தளிர்வும் சோர்வும் ஏற்படும்.90 நிமிட நடைக்குப்பின் சங்கு மித்திரை அடையலாம். சங்கு மித்திரை கேரளாவின் எல்லை ஆரம்பமாகிறது.மலையாளிகள் பொங்கலப்பாறை என்று அழைப்பார்கள்.இதன் பொருள் சமையல் செய்யுமிடம் என்பதாகும்.இங்கிருந்து கேரளாக்குச் செல்லலாம்.போனக்காடு நென்மன்காடு சென்று திருவனந்தப்புரத்தை அடையலாம். சிறிய ஓய்வு, உணவுக்குப் பின் சற்றே களைப்பை போக்கிக்கொண்டு பயணம் தொடரும்.

 மீண்டும் கடுமையான பயண மலை ஏற்றம்.வெறும் காலுடன்தான் செல்லமுடியும்.அபாயகரமான பாறைகளை கவனமாக கடந்து செல்லவேண்டும். இருபுறமும் படுபாதாளம். காற்று பலமாக வீசுவதால் மெதுவாக ஊர்ந்தும், குனிந்தும் நடந்து செல்லவேண்டும்.      

இப்படி மெல்ல நடந்து 6125 அடி கொண்ட பொதிகை மலை உச்சிடையவேண்டும். பயணத்தின் போது நாகபொதிகை,                                                     ஐந்து தலைப்பொதி கை மற்றும் இதர பொதிகைமலையின் முழு தரிசனம் கிடைக்கும்.

இந்த இடம் கேரளா அரசுக்கு சொந்தமானது. இங்குதான் அகஸ்தியர் சிலை கம்பீரமாக இருக்கிறது. சிலைக்கண்ட பக்தர் ஓடி சென்று அகஸ்தியர் சிலை வணங்கியும்,கண்ணீர் மல்கியும்,கீழே வீழ்ந்தும் புரள்வார்கள். நினைத்த பொழுது சென்று பார்க்க இயலாது இடத்திலிருக்கும் இவ்விடம் ஆண்டுக்கு ஒரு முறைதான் சென்று காணமுடியும் வழிபடமுடியும்.தற்போதுள்ள அகத்தியர் சிலை கேரள அரசுக்கு சொந்தமானது. கேரள யாத்திரிகர்கள் சிவராத்திரிக்கு வந்து வணங்கி செல்வதுண்டு.

அகஸ்தியர் சிலைக்கு பட்டு ஆடைகள் அணிவித்து, வாசனை திரவியங்கள்,பால் அபிஷேகம், தீபார்த்தினை காட்டி இரண்டு மணி நேரம் அகத்தியர் வழிபாடும்,பன்னிரு திருமுறை பதிக பாடலையும் பாடியும் பிராத்தினைகளும் நடைபெறும்.  வானிலை ஒரு பொழுது மறு பொழுது மாறும்.மேகங்கள் கூடும்,மழை பெய்யும்.குளிர்வாட்டும், பின்னர் நீங்கும்.மீண்டும் மேகம் கூடும்மழை  பெய்யும் இப்படி மாறி மாறி நிகழும்.பொதிகை        மலையில் எவ்வளவுமழையில் நனைந்தாலும்,கடுங்குளிரில் வாடினாலும் எவர் உடம்பும்,உடல்  நலமும் பாதிக்கப்படுவதில்லை. இதற்கு அகத்தியர் திருவருளே என்று இங்கு வரும் சாதுக்கள் கூறுகிறார்கள். பயணத்தின் போது கோடை மழை  கண்டிப்பாக பெய்யும்.மழை இல்லாத பயணம் இல்லை என்று கூறலாம்

பிரயாணத்தில் அட்டையின் பாதிப்பு தவிர்க்க இயலாது.நம்மை அறியாது நம் இரத்ததை உறிஞ்சிவிடும்.இந்த அட்டைகள் நம்மை பற்றாது இருக்க காலில் வேப்பெண்ணை புகையிலை,புகையிலை போன்ற தடவிக்கொண்டால் சிறிது பாதுகாப்பு அளிக்கும்.சிறந்த வைத்தியம் உப்பு.நீரில் கரைத்த உப்பை தடவினால் உடன் பயன் தரும். [ சமீபக் கால விஞ்ஞானம் இந்த அட்டை கடித்தால் அதனால் பல நோய் நீங்குகிறது என்கிறது. சில நாடுகளில் இந்த அட்டை வைத்தியம் நடக்கிறது ]

 பொதிகை மலை செல்ல இரண்டு நாட்களாகும்.பொதிகையிலிருந்து திரும்ப ஒரு நாள் போதும்.காலை ஆறு மணிக்கு புறப்பட்டால் மாலை காரையார் வந்து விடலாம். குறுமுனி அகஸ்தியார் அடியார்களுடன் என்றும் இருக்கிறார் மனத்தளவில்                                                                                          

என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே                        

     இருங்கடல் வையத்து

     முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை

     முழுமணித் தரளங்கள்

     மன்னு காவிரி சூழ் திருவலஞ்சுழி

     வாணனை வாயாரப்

     பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும்

     வழிபடும் அதனாலே.

                       -திருஞானசம்பந்த நாயனார்-

   அன்பொடு,

கிருஷ்ணன்,
சிஙகை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore

For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/

 



--
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை
..............................
..........
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/
http://singaporekovilgal.blogspot.com/

Rathinam Chandramohan

unread,
Aug 17, 2013, 11:42:32 PM8/17/13
to mint...@googlegroups.com
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே        Ikkaturai vasikka. Singaiil Irundu kuttrallathin Thendralla. Agathiyar arul petren Indru. 
Thank you very much.


2013/8/17 Krishnan S <krishna...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
Dr.R.Chandramohan
Principal
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India

Mgram Lingam

unread,
Aug 17, 2013, 11:51:47 PM8/17/13
to mint...@googlegroups.com
மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு ,
 
வணக்கம்.தங்களின் பொதிகை புனித யாத்திரை இரண்டாவது கட்டுரை மிக மிக சிறப்பாக உள்ளது.அந்த கட்டுரையை படித்தபின் ,கருணை உள்ள அகத்தியரை தரிசனம் செய்ய அவா மேலோங்குகிறது . மகா சித்தர் அகத்தியரின் அருள் கூட்டுவித்தால் ,அகத்தியரை தரிசிக்க பயணிக்கலாம் என்று எண்ணுகிறேன்.எல்லாம் வல்ல திருவருள் கூட்டுவிக்க வேண்டும்.மிக பல நன்றிகள்.
 
என்றும் அன்புடன் ,
மு.குருபர இராமலிங்கம்
திருநெல்வேலி .

2013/8/18 Rathinam Chandramohan <rathinam.c...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Aug 18, 2013, 4:40:50 AM8/18/13
to மின்தமிழ்
சிறப்பான பகிர்வு.  அருமையான அனுபவங்கள்.  நன்றி.  இந்தப் பயணம் இது வரை கேட்டு அறியாத ஒன்று.


2013/8/18 Rathinam Chandramohan <rathinam.c...@gmail.com>
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே        Ikkaturai vasikka. Singaiil Irundu kuttrallathin Thendralla. Agathiyar arul petren Indru. 
Thank you very much.
Reply all
Reply to author
Forward
0 new messages