அறிவோம் அறிஞர்களை—அந்தமான் கிருஷ்ணமூர்த்தி

784 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 24, 2023, 8:39:39 PM9/24/23
to மின்தமிழ்
தமிழறிஞர் இலக்கண வேந்தர் அரசஞ் சண்முகனார்

ஹலோ… ஒரு நிமிஷம்… ரெண்டு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு போங்களேன்… ப்ளீஸ்

சோழவந்தான் என்று சொன்னவுடனே உங்களுக்கு என்ன ஞாபகம் வருது?

ம்… அடி என்னடி ராக்கம்மா பாட்டு வரும் படம் பட்டிக்காடா பட்டணமா தான் ஞாபகத்துக்கு வருது.

சபாஷ்… சரியான மறத்தமிழனா இருக்கீங்க. சரீ… இன்னொரு கேள்வி. நீங்க ஒரு தமிழ் ஆசிரியர் என்று வச்சுக்கோங்க. உங்க பீரியடை வேறு யாருக்காவது கொடுத்து எடுக்க சொல்றாங்க. அப்போ நீங்க என்ன செய்வீங்க?

செம ஜாலி தான். நாம நம்ம சொந்த பிசினஸ் கவனிக்கக் கிளம்பிட வேண்டியதுதான்.

பொதுவா இப்படித்தான் பதில் வரும். (சில விதிவிலக்குகளும் உண்டு). ஆனால் சோழவந்தானில்  பிறந்த ஓர் அறிஞர் மட்டும் அப்படி பதில் சொல்லவில்லை.

நேராக தலைமையாசிரியரிடம் சென்றார்.

தலைமை ஆசிரிரியர்: அமருங்க.

அறிஞர்: நான் அமர்வது இருக்கட்டும். தமிழை முதலில் அமர வைத்தால் நலம்.  

த ஆ: தமிழ் படிச்சு என்ன ஆகப் போகுது? இங்கிலீஷ் அல்லது கணிதம் படிச்சா சோத்துக்கும் அல்லது ஃபியூச்சருக்கு உதவும்.

அறிஞர்: தமிழ், எதிர்காலத்திற்கும் வயிற்றுக்கும் உதவாது என்று நினைக்கின்ற பள்ளியில் நான் ஆசிரியராக வேலை செய்ய விரும்பவில்லை.

இப்படிச் சொல்லி அப்பவே வேலையை உதறிவிட்டார்.

யார் அந்த தமிழறிஞர் தெரியுமா உங்களுக்கு?

வேந்தர் அரசஞ் சண்முகனார்.jpeg

சோழவந்தானில் பிறந்து தமிழுக்கு மரியாதை தராத்தால் தன் ஆசிரியர் பணியினையே உதறித் தள்ளிய உன்னதமான தமிழறிஞர் இலக்கண வேந்தர் அரசஞ் சண்முகனார். சரியாகக் கண்டுபிடித்துச் சொன்ன வெகுசிலருக்கு பாராட்டுகள்.

தனது 20 ஆம் வயதிலேயே சிதம்பர விநாயகர் மாலை என்னும் நூலை இயற்றி இலக்கண வேந்தர் பட்டத்திற்கு உரியவரானார். இவர் 15 நூல்களை இயற்றியுள்ளார்.

விகடகவி; இதை எப்படியும் வாசிக்கலாம். அப்படி வாசிக்கும் வகையில் அமைந்த ஒரு பாடல் வடிப்பதே சிரமம். இவர் மாலைமாற்று மாலை என்று ஒரு நூலையே படைத்துள்ளார்.

திருவாடுதுறை ஆதீனம் இவரைப் பாராட்டி பொன்னாடையும் ரூ 100ம் பரிசளித்ததாம். அப்பரிசோடு வரும்போது தெருவில் ஒரு கந்தலாடையுடன் வந்த ஏழைப் பெண்ணைப் பார்த்ததும் அந்தப் பொன்னாடையினை அளித்துவிட்டாராம்.

இவரது முதற்குறள் விருத்தி நூலை உங்கள் பார்வைக்கு தருவதில் மகிழ்ச்சி. [இணைப்பில் காண்க] 

நன்றி: தமிழ்ப்ரியன் எழுதிய இரு நூற்றாண்டுகளும் 50 தமிழ் அறிஞர்களும் நூல் தந்து உதவிய கவிஞர் முனைவர் அமிர்தலிங்கம் ஐயா அவர்களுக்கு.

—அந்தமான் கிருஷ்ணமூர்த்தி

WhatsApp share
வாட்சப்-தொல்காப்பியர் பேரவை-குழும பதிவு 

mutharkural_viruththi.pdf

தேமொழி

unread,
Sep 26, 2023, 2:50:28 AM9/26/23
to மின்தமிழ்

கிட்டாதாயின் சட்டென மற… மற்றும் சீ..சீ.. இந்தப் பழம் புளிக்கும் என்பதெல்லாம் இவரிடம் தோற்றுப் போன வாசகங்கள்.

ஒரு நீதிபதியின் மகனாய் பிறந்தவர் இவர். ஆரம்பக் காலங்களில் கல்வியில் அதிக நாட்டமின்றி பாதியில் ஓடி வந்து விடுவாராம்.

நீதிமன்றப் பணியாளர் மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் செல்வாராம். அப்பணியாளரின் கைகளைக் கடித்து, மீசையினை இழுத்தும் துன்பம் தந்தவர்.

பின்னர் தமிழ் மேல் காதல் வந்து பள்ளியின் கதவு  திறக்கும் முன்னரே பள்ளியின் வாசலில் நிற்பாராம்.

ஒருமுறை நோயுற்று இருந்த தமிழ்த் தாத்தா உவேசா அவர்களை சந்திக்கச் சென்றாராம். அவரோ ….. நூலை ஆய்வு செய்த கை அல்லவா இது? என்று இவரின் கையை வணங்கினாராம்.

சங்க நூல் ஏடுகளைத் தேடின கால்கள் உங்கள் கால்கள் அல்லவா? என்று கண்களில் ஒற்றிக் கொண்டாராம் தமிழ்த்தாத்தாவின் கால்களை இவர்..

இந்த அறிஞர் யார் என்று தெரிகின்றதா?

தணிகை மணி வ சு செங்கல்வராய பிள்ளை.jpeg
ஒரு நீதிபதியின் மகனாய் பிறந்து தமிழ் மேல் காதல் கொண்டு பள்ளியின் கதவு  திறக்கும் முன்னரே பள்ளியின் வாசலில் நின்ற அறிஞர் தணிகை மணி வ சு செங்கல்வராய பிள்ளை.

சென்னை கிருத்துவக் கல்லூரியில் இளங்கலை கற்றவர். யார்ரெல்லாம் இவரின் தமிழாசிரியர்கள் தெரியுமா?

பரிதி மாற் கலைஞர், கோபாலாச்சாரியார், தனித்தமிழ்த் தந்தை மறைமலை அடிகள் ஆகியோர்.

தணிகைநாதர் மாலை தான் இவர் எழுதிய முதல் நூல்.

சைவத் திருமுறைப்பாடல்கள் பன்னிரண்டு இருப்பதைப்போல், திருப்புகழ் பாக்களையும் பாகுபடுத்தி உரை எழுதி 1955 களில் வெளியிட்டார்.

அதனால் தான் நோயுற்று இருந்த போதிலும், திருப்புகழ் ஆய்வு செய்த கைகள் ஆயிற்றே என உ வே சா அவர்கள் தன் கண்களில் ஒற்றிக் கொண்டாராம்.

பல தமிழ் நூல்களையும், ஆங்கில நூலையும் படைத்துள்ள இவரைப்பற்றி [https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8luQy.TVA_BOK_0005925
உங்கள் பார்வைக்கு தருவதில் மகிழ்ச்சி. 

தேமொழி

unread,
Oct 1, 2023, 11:47:23 PM10/1/23
to மின்தமிழ்
அறிஞர் சி பாலசுப்பிரமணியனார் 

தேசிங்கு ராஜா பிறந்த செஞ்சி நகரில் பிறந்த தமிழ் அறிஞரைப் பற்றித் தான் இன்று பார்க்க உள்ளோம்.

நாமெல்லாம் பள்ளிக்கூடம் போவதாகச் சொல்லி, விளையாடச் சென்றிருப்போம். கல்லூரி வகுப்பைக்  கட்டடித்துவிட்டு, முந்தானை முடிச்சு படம் எல்லாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால் இவர் கல்லூரியில் பேராசிரியராக ஒன்பது ஆண்டுகள் இருந்த பொழுது, ஒரு நாள் கூட விடுப்பே எடுத்தது இல்லையாம்.

பள்ளிக்கூடத்தில் நாம் எழுதிய பரீட்சை விடைத்தாளை வைத்துக் கொண்டு ஆசிரியர் கமெண்ட் தருவார். அதுவே நமக்கு செம எரிச்சலா இருக்கும்.  

ஆனால் இந்த அறிஞர்  எழுதிய 75 பக்க விடைத்தாளை எடுத்துக்கொண்டு டாக்டர் மு வரதராசனார் அவர்களே ஒவ்வொரு வகுப்பாக சென்று, இந்த விடைத்தாள் இவர் எழுதியது என்றும், மிக அருமையாக விடை எழுதிய இவர் போல் சிறப்பாக அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்றும் பாராட்டப்பட்டவர்.

இவரும் டாக்டர் முவ அவர்களை தனது தந்தையாருக்கு இணையாகவே மதித்தவர். டாக்டர் முவ அவர்களின் திருவுருவப்படத்தை, தன் தந்தையாரின் படத்தின் அருகே வைத்து வழிபட்டவர் இவர். ஆசிரியர் மாணவர் நட்பு என்பது, எப்படி இருக்க வேண்டும்? என்பதை இவரிடமிருந்து நாம் கற்க வேண்டும்.
அறிஞர் சி பாலசுப்பிரமணியனார்.jpeg

சங்க நூற் செல்வர் என அழைக்கப்படும் இவர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகப் பணி ஆற்றியவர்.

டாக்டர் சி பா அவர்களை மு வ அவர்களின் செல்லப்பிள்ளை என்றே அழைப்பர். இவர் பெங்களூருவில் தங்கி முனைவர் பட்டம் வாங்கிட அங்கிருந்த தனது சொந்த வீட்டில் தங்கிப் படித்திட அனுமதி தந்தாராம் முவ அவர்கள். என்ன ஓர் உறவு? அவர்களிடையே இருந்தது தமிழ் உறவு மட்டுமே!  

39 நூல்களை எழுதி உள்ள இவரின் மாணாக்கர்கள் (விஜயலெட்சுமி) நவநீத கிருஷ்ணன், தமிழ்க்குடிமகன், தினத்தந்தி சிவந்தி ஆதித்தனார், அமைச்சர் துரை முருகன் ஆகியோர்.

வறுமையில் துவங்கிய இவரின் காலம் போல், இவர் பணியாற்றிய தமிழ்ப் பல்கலைக் கழகமும் கடன் சுமையில் இருந்ததாம். இரண்டிலிருந்தும் மீண்டு, மீட்டு, மீண்டும் சிறப்பு கொணர்ந்தவர் சி பா அவர்கள்.

இவரின் படைப்பில் பெரும்புகழ்பெற்ற நூல்களில் ஒன்றான தமிழ் இலக்கிய வரலாறு  நூலின் 
PDF வடிவத்தினை உங்கள் பார்வைக்கு தருவதில் மகிழ்ச்சி.

தேமொழி

unread,
Oct 4, 2023, 1:14:12 AM10/4/23
to மின்தமிழ்
டாக்டர் மு கோவிந்தசாமி

நெல்லி மரங்கள் அதிகம் இருந்த காரணத்தால் நெல்லிக்குப்பம் என்று அழைக்கப்பட்ட ஊர் அது. இன்று நெல்லி மரங்கள் இருக்கின்றதோ இல்லையோ, அங்கே பிறந்த ஓர் அறிஞர் நட்ட தமிழ் மரம், அதன் பலனை இன்றும் உலகெங்கும் பரப்பிக் கொண்டுவருகின்றது.

தமிழ் இலக்கியங்கள் வெறும் கதைகள் அல்ல. அவைகளின் பின் புலத்தில் வரலாற்று ஆதாரங்கள் உள்ளது என்பதை உலகத்திற்கு எடுத்துக் காட்டியவர்.

புதுதில்லியில் ஒரு பள்ளியில் தமிழாசிரியராகவும், தமிழகத்தில் ஒரு கல்லூரி முதல்வராகவும், பல்கலைக்கழகம் ஒன்றில் திருக்குறள் ஆராய்ச்சித்துறை இணைப் பேராசிரியராகவும் பணிபுரிந்தவர்.

1996 ஆம் ஆண்டு இவருக்கு திருவள்ளுவர் விருது தமிழக அரசின் சார்பில் தரப்பட்டது. அப்போது இவர் இயற்றிய நூல்களை யானை மேல் ஏற்றிச் சென்னையில் ஊர்வலமாகக் கொண்டு சென்றுள்ளனர்.

இவ்வளவு சிறப்புப் பெற்ற தமிழ் அறிஞர் யார்?

டாக்டர் மு கோவிந்தசாமி.jpeg
கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம் என்ற ஊரில் பிறந்த தமிழ் அறிஞர்தான் டாக்டர் மு கோவிந்தசாமி.  திருக்குறள் செம்மல் என்றே தமிழ்கூறும் நல்லுலகம் இவரை அறிந்துள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேரறிஞர் தெபொமீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தமிழ் இலக்கியத்தில் வரலாற்று ஆதாரங்கள் எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். அப்போது அவருக்கு 50 வயது.

புதுதில்லியில் உள்ள மதராசி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும், தமிழகத்தில் மேலைச் சிவபுரியில் உள்ள கணேசர் செந்தமிழ்க் கல்லூரியின் முதல்வராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் ஆராய்ச்சித்துறை இணைப் பேராசிரியராய் பணிசெய்தவர்.

திருக்குறளில் 13 நூல்களும், வரலாறு தொடர்பாக 4 நூல்களும், 9 ஆய்வு நூல்களும் இயற்றியுள்ளார்.

1996 ஆம் ஆண்டு இவருக்கு, திருவள்ளுவர் விருது தமிழக அரசின் சார்பில் தரப்பட்டது. அப்போது இவர் இயற்றிய நூல்களை யானை மேல் ஏற்றிச் சென்னையில் ஊர்வலமாக்க் கொண்டு வந்தனர்.

இவரின் படைப்பில் பெரும் புகழ் பெற்ற, பலராலும் இன்றும் புரட்டப்படுகின்ற நூல்களில் ஒன்றான இலக்கிய காலம்  நூலின் PDF வடிவத்தினை
https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtek0U9&tag=The%20cholas#book1/

தேமொழி

unread,
Oct 6, 2023, 1:28:59 AM10/6/23
to மின்தமிழ்
 க. வெள்ளை வாரணனார்

அடியேன் யார் என்று உங்களால் அடையாளம் காண முடிகிறதா?

தஞ்சை மாவட்டத்தின் திருநாகேச்சரம் தான் அடியேன் பிறந்த ஊர். எனது பெரிய தந்தையாரின் பெயரே எனது பெயரும். சைவ சமய இலக்கியங்களில் ஆர்வம் கொண்டு தமிழிசையினையும் ஆர்வமுடன் கற்கத் துவங்கினேன்.

கா.சு. பிள்ளை, சுவாமி விபுலானந்தர், நாவலர் ச சோமசுந்தர பாரதியார் போன்றோர்களிடம் மாணவராய் இருந்த்தால் 1935 ஆம் ஆண்டில் வித்வான் வகுப்பில் முதல் வகுப்பில் அதுவும் முதல் மாணவனாக தேர்வு பெற்றேன்.

கரந்தை தமிழ்ச்சங்க்க் கல்லூரியில் விரிவுரையாளராகவும், பின்பு அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளராகவும், இணைப் பேராசிரியராகவும் இருந்துள்ளேன். அதே பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவராகவும் ஈராண்டுகள் பணியாற்றி 1979 இல் ஓய்வு பெற்றேன்.

அடியேனின் தமிழ்ப்பணி மேலும் தொடர்ந்தது.

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திலும், தஞ்சை தமிழ்ப் பலகலை கழகத்திலும் சிறப்பு நிலை பேராசிரியராக நியமிக்கப்பட்டேன்.

எளியேனின் பணிகள் சிறியனவாயினும் அதைப் பெரிதெனக் கருத்தில் கொண்டு திருமறை உரைமணி, திருமுறை தெய்வமணி, திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர், சிவக்கவிமணி என்றெல்லாம் புகழ்ந்துள்ளனர்.

க. வெள்ளை வாரணனாராகிய அடியேனைப் பலர் அறிந்து வைத்திருந்ததில் மெத்த மகிழ்ச்சி.

அடியேனை அடையாளம் அறியாதவர்களுக்காய்,  மேலும் அறிந்து கொள்ள ஏதுவாய் விவரிக்கிறேன்.

அடியேனின் தமிழ்ப்பணியினை இலக்கியப்பணி, இலக்கணப்பணி, சமயப்பணி, இசைத்தமிழ்ப் பணி என கூறுதல் உசிதம் எனக் கருதுகிறேன்.

சங்ககால மக்கள், சங்கத்தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவை இயற்றும் நல் வாய்ப்பும் தமிழன்னை தந்த நல் வாய்ப்பே எனலாம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆய்வுத்துறையில் பணியாற்றியபோது கம்பராமாயண  செம்பதிப்புக் குழுவிலும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது.

தஞ்சைப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த போது, சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் என்னும் கடினமான நூலை வெளிக்கொணர்வதில் அடியேனின் பங்கும் இருந்தது.

தொல்காப்பியம் – நன்னூல் – எழுத்ததிகாரம் , சொல்லதிகாரம், தொல்காப்பிய வரலாறு போன்ற இலக்கண நூல்களும் அடியேனின் படைப்பே!

சமயப்பணியில் அடியேனின் இரு பாகங்கள் கொண்ட பன்னிரு திருமுறை வரலாறு நூல் சிறப்பான் வரவேற்பைப் பெற்றதோடு, தமிழக அரசின் பரிசும் கிடைக்கப் பெற்றது.
 
இசைத்தமிழ்ப் பணிக்காக தமிழிசை சங்கத்தின் உயரிய விருதான இசைப்பேரறிஞர் பட்டம் கிடைத்தமை இனிய நினைகளாய் மனதில் என்றென்றும்.

க. வெள்ளை வாரணனார்.jpeg

வெண்கோழியார் என்ற பெயரில், இந்தி திணிப்பை எதிர்க்கும் விதமாய் அடியேனின் காக்கை விடு தூது நூலினை அப்போதைய தமிழக முதல்வராய் இருந்த இராஜாஜி அவர்களுக்கு அடியேனால் அனுப்பப்பெற்றதும் நினைவு கூறத்தக்கது.

தஞ்சைப் பலகலைக்கழகத்தில் ஒரு பதவிக்கு ஐவர் விண்னப்பிக்க, ஐவரின் திறன் சோதிக்கும் குழுவில் அடியேனும்  ஒருவர். ஏனோ தெரியவில்லை. தருமன் பார்வை தான் எனக்கும் என நினைக்கிறேன். யாரிடமும் எக்குறையும்  என் கண்களுக்குப் புலப்படவே இல்லை. அனைவருக்கும் சமமான திறமைகள் இருப்பதாகப் பட்டது.

அடியேன்  படைப்புகள் அனைத்தும் அரசுடமை ஆக்கப்பெற்று இணையதளத்தில் உள்ளன. https://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-89.htm  தேவைப்படுவோர் சென்று நூல்களைத் தரவிறக்கிப் பயன்படுத்திக் கொள்க.

தொல்காப்பியம் (வரலாறு) நூல் உடனடியாக  படித்துப் பயன் பெறும் வகையில் இதோ உங்களுக்காய் பி டி எப் வடிவில்  https://www.tamilvu.org/library/nationalized/pdf/89-vellaivaranar/tholkappiyamvaralaru.pdf

தேமொழி

unread,
Oct 8, 2023, 2:20:31 AM10/8/23
to மின்தமிழ்
மகா வித்துவான் ச. தண்டபாணி தேசிகர்

இன்று நாம் சந்திக்க இருக்கும் தமிழறிஞர் சிதம்பரத்தில் 1903 ஆம் ஆண்டில் பிறந்தவர். இவருடைய ஆசிரியர்கள் உ வே சாமிநாத ஐயர், பொன்னோதுவா மூர்த்திகள் ஆகியோர்.

1928 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழக வித்துவான் தேர்வில் இந்த அறிஞர் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றவர்.

இந்த தமிழ் அறிஞர் திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகவும், மீனாட்சி கல்லூரி, திருப்பனந்தாள் செந்தமிழ் கல்லூரி, மதுரை ஆதீனக் கல்லூரி ஆகியவற்றில் தமிழ் பேராசிரியராகவும், அண்ணாமலை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி துறையில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

இவர் திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய போது டாக்டர் கலைஞர் அவர்கள் இவருடைய மாணவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவருடைய மாணவர்களாக முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி இஸ்மாயில் அவர்கள், திராவிடர் கழகத்தின் தலைவர் கீ வீரமணி அவர்கள், தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆகியோர் இருந்து இவரிடம் பாடம் கற்றுள்ளனர்.

திருக்குறளுக்கு முதன் முதலில் உரை வளம் கண்ட பெருமையும் இவருக்கு உண்டு. இவருடைய திருக்குறள் பணியினை பாராட்டி தமிழக அரசு இவருக்கு 1988 ஆம் ஆண்டு திருவள்ளுவர் விருது வழங்கிப் பாராட்டி உள்ளது.
 
பக்தி இலக்கியத்தில் பல நூல்களை இவர் எழுதி இருக்கிறார். இவர் எழுதிய திருவாசகப் பேருரை, பஞ்சாட்சர விளக்கு (திருமந்திர உரை) ஆகிய நூல்களைப் பாராட்டி திருவாடுதுறை ஆதீனம் மகாவித்துவான் என்னும் விருது அளித்து மகிழ்ந்துள்ளது .

இவரது சிறப்புகளைப் பாராட்டி இந்திய அரசு பத்ம பூஷன் என்ற உயரிய விருதினையும் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

சிதம்பரத்தில் 1903 ஆம் ஆண்டில் பிறந்து உ வே சாமிநாத ஐயர், பொன்னோதுவா மூர்த்திகள் ஆகியோரின் மாணாக்கராய் இருந்தவர் தான் மகா வித்துவான் ச. தண்டபாணி தேசிகர் அவர்கள்.
மகா வித்துவான் ச. தண்டபாணி தேசிகர்.jpeg
திருக்குறளுக்கு முதன் முதலில் உரைவளம் தந்த பெருமையும் இவருக்கு உண்டு.  இந்நூலை மூன்று பகுதிகளாக தருமபுரம் ஆதீனம் வெளியிட்டுள்ளது. இன்னூல் மதுரை காமராசர் பல்கலைக்கழக வெளியீடாகவும் வந்துள்ளது. தமிழ் ஆர்வலர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல் இது.

இவர் 1983 ஆம் ஆண்டு உரைவளத் திருவள்ளுவர் என்று பாராட்டப் பெற்றுள்ளார். தமிழ் வளர்ச்சித் துறை, ஆயிரம் வெண் பொற்காசுகள் அளித்தும், தமிழ் பல்கலைக் கழகம் முது முனைவர் பட்டம் வழங்கியும் மகிழ்ந்துள்ளது.  1985 ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக் கழகம் பேரவைச் செம்மல் என்னும் விருதையும் அளித்துப் போற்றியுள்ளன.

தமிழக முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் திருக்குறள் பணிக்கென மூன்று லட்ச ரூபாய் ஒதுக்கி மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திலும், அண்ணாமலை பல்கலைக் கழகத்திலும் திருக்குறள் இருக்கைகள் புதிதாகத் துவக்கினார்.

அதற்கு காரணமாய் இருந்த்தே தண்டபாணி தேசிகர் எழுதிய ஆடல் வல்லான் என்ற நூல் தான் என்பது பலரும் அறியாத செய்தி.

அப்போதைய முதல்வர் அண்ணா அவர்கள் டெல்லிக்கு செல்ல இருந்த போது, அவரை விமான நிலையத்தில் வழி அனுப்ப வந்த கலைஞரிடம் பயணத்தில் படிக்க நூல் கேட்டாராம். அப்பொழுது கலைஞர் தன் கையில் வைத்திருந்த, தமது ஆசிரியர் இயற்றிய ஆடல் வல்லான் என்னும் புத்தகத்தைப் படிக்கத் தந்தாராம்.

மற்றொரு சமயத்தில் இந்த ஆடல் வல்லான் புத்தகம் மிகவும் இனிமையாக இருக்கிறது இதை எழுதிய தண்டபாணி தேசிகர் யார்? இப்பொழுது என்ன தொழில் செய்கிறார்? என்றும் விசாரித்துள்ளார் அண்ணா அவர்கள்.  உடனே கலைஞர் அவர்கள், அந்த நூலை இயற்றிய தண்டபாணி தேசிகர் தம்முடைய தமிழாசிரியர் என்றும் அவர் இப்பொழுது பணி இன்றி துன்பப்படுகிறார் என்று சொன்னவுடன், அறிஞர் அண்ணா மனதில் உருவான எண்ணம் தான் அந்த திருக்குறள் இருக்கை.

அண்ணாமலைப் பல்கலைக்கழக திருக்குறள் இருக்கையில் முதல் பேராசிரியராக தண்டபாணி தேசிகர் நியமிக்கப்பட்டார்.

தாய்ப்பால் தந்த அஞ்சுகம் அன்னையைப் போல், தனக்கு தமிழ்ப்பால் தந்த பேராசான் தண்டபாணி தேசிகர் என கலைஞரே பாராட்டிய தமிழறிஞர் தான் இவர்.

இவரின் படைப்பில் ஒன்றான திருக்கோவையார் மூலமும் உரையும்  நூலின் https://archive.org/details/acc.-no.-27919-thirukovaiyar-2016    PDF வடிவத்தினை உங்கள் பார்வைக்கு தருவதில் மகிழ்ச்சி.

தேமொழி

unread,
Oct 10, 2023, 2:40:53 AM10/10/23
to மின்தமிழ்
வித்துவான் ஆ. பூவராகம் பிள்ளை

சிங்கம் படத்தின் கதாநாயகன் யார்?

உடன் பலர் பதில் சொல்வர்.

ஆனால் இலக்கணச் சிங்கம் என்று அறியப்படும் தமிழ் அறிஞர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?

இந்த அறிஞர் சிதம்பரம் வட்டத்தில் உள்ள பெருங்காலூர் என்ற சிற்றூரில் 1899 ஆம் ஆண்டு பிறந்தார்.

பிறந்த ஊரிலேயே தொடக்க கல்வி பெற்று, பின்னர் வள்ளல் பாண்டித்துரை தேவர் மதுரையில் ஏற்படுத்திய நான்காம் தமிழ் சங்கத்தில் கற்று பண்டித பட்டம் பெற்றார்.

இவர் சிதம்பரத்தில் உள்ள ராமசாமி செட்டியார் நகர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும், அண்ணாமலை அரசரின் மீனாட்சி கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழக தமிழ் துறையும் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இவருடன் சுவாமி விபுலானந்தர், நாவலர் சோமசுந்தர பாரதியார், கா.சு.பிள்ளை, அ. சிதம்பரநாதனார், தெ பொ மீ, லெ.ப.கரு. ராமநாதன் செட்டியார் போன்ற பேரறிஞர்களும் உடன் பணியாற்றினார்

நமக்கெல்லாம் தமிழில் எளிதாக மதிப்பெண் பெறுவதற்கு எப்படி கோனார் உரை பயன்பட்டதோ, அதே போல் அக்காலத்திலும் உரைகள் தேவைப்பட்டன. மாணவர்கள் எளிதாய் இலக்கணம் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இந்த அறிஞர் சேனா வரையார் உரை விளக்கம் என்னும் நூலை எழுதியுள்ளார்.

இவர் புலவர் பெருமை, திருவாய்மொழி விளக்கம், திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி ஆகிய நூல்களையும் இயற்றி தமிழுக்கு தொண்டு செய்துள்ளார்.

இவரிடம் படித்து  உயர்நிலை அடைந்த பல மாணவர்களைச் சொல்லலாம். குறிப்பாக டாக்டர் வா சுப மாணிக்கனார், டாக்டர் வ அய் சுப்பிரமணியனம், பேராசிரியர் அன்பழகன், சரவண ஆறுமுக முதலியார், நாவலர் இரா நெடுஞ்செழியன், இரா சாரங்கபாணி, செ வைத்தியலிங்கம் ஆகியோர்.

இவர்கள் அனைவருமே நாங்கள் இவரிடம் இலக்கணம் கற்றவர்கள் என பெருமிதத்தோடு சொல்வர்.

வித்துவான் ஆ. பூவராகம் பிள்ளை.jpeg

இலக்கணச் சிங்கம் என்று அறியப்படும் தமிழ் அறிஞர் வித்துவான் ஆ. பூவராகம் பிள்ளை அவர்கள். இந்த அறிஞர் சிதம்பரம் வட்டத்தில் உள்ள பெருங்காலூர் என்ற சிற்றூரில் 18-04-1899 அன்று பிறந்தார்.

பெற்றோர் ஆதி மூலம் பிள்ளை பாக்கியத்தம்மா தம்பதியர். இவருக்கு உயர்திரு நாராயண ஐயங்கார் அவர்கள் ஆசிரியராக இருந்திருக்கிறார்.

பல மொழிகள் கற்றவரும், உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் ஊற்றுக்கென்ன திகழ்ந்த பேராசிரியர் தனிநாயக அடிகளார் இவரை அழைத்து தொன்னூல் விளக்கம் என்னும் இலக்கண நூலை பாடமும் கேட்டார் என்பதே தனி சிறப்பு.

இவரை மாணவர்கள் செல்லப்பெயராக வண்டி வாத்தியார் என்று அழைப்பார்களாம். இவ்வறிஞருக்கும் இதனைக் கேட்டு கோபம் வரவில்லையாம். ஏன்னென்றால் தான் கற்றுவிக்கும் பாடங்கள் மாணவர்களின் உள்ளம் சென்று செல்லத்தக்க வகையில் பாடம் நடத்துவார். வயிறு குலுங்க சிரிக்க வைத்து பாடம் நடத்துவதிலும் வல்லவர். எனவே அவருக்கு கோபம் வர வாய்ப்பே இல்லை ராசா…

பூவராகம் பிள்ளை அவர்களின் சொந்த வீடு சிதம்பரத்தில் இருந்த்து. எனவே அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு செல்ல ஒற்றை மாட்டு வண்டியை பயன்படுத்தினர் அவர். அம் மாட்டு வண்டியை இவரே ஒட்டி வருவாராம். எனவே மாணவர்கள் வண்டி வாத்தியார் என்று அழைத்தார்களாம்.

1930 ஆம் ஆண்டு காசிமடம் இவருடைய இலக்கணம் புலமையை பாராட்டி ஆயிரம் ரூபாய் பரிசளித்துள்ளது.

தமிழுக்குப் புதுச் சொற்கள் வழங்கியதில் இந்த அறிஞருக்கும் பெரும் பங்கு உண்டு. பரமபதம்  எனற அதிகம் பயன்படுத்தும் சொல்லுக்கு  வீட்டுலகம் என்ற தமிழ்ச் சொல்லைத் தந்தவர் இவர்.

இலக்கணம் என்றாலே காது தூரம் ஓடும் நிலை அன்றைய நாட்களிலும் இருந்திருக்கிறது. அதனை தீர்ப்பதற்காக உரை எழுத முன்வந்த இந்த தமிழறிஞர் இலக்கணச் சிங்கம் என்று அறியப்படும் தமிழ் அறிஞர் வித்துவான் ஆ. பூவராகம் பிள்ளை அவர்களைப் போற்றுவோம்.

இன்றைய காலகட்டத்தில் கட்சி மாநாடுகளுக்கே பணமும் மதுவும் தந்தால் தொண்டர்கள் கூடும் நிலையில், 1942களில் நற்றிணைக்கென மாநாடு நடத்திய நன்மக்களைப் போற்றத்தான் வேண்டும்.  அப்போதைய சொற்பொழிவுகள் எழுத்து வடிவமாக ஆக்கத்தக்க வகையிலும் இருந்திருக்கிறது.

இதோ நெய்தல் நிலம் சார்ந்த பாடல் குறித்து பூவராகம் பிள்ளை அவர்கள் ஆற்றிய உரையின் பி டி எஃப் வடிவம்
https://ia802804.us.archive.org/4/items/natrinai/1942-43-%20நற்றிணை%20சொற்பொழிவுகள்_k2opt.pdf
(பக்கம் 125 இல் தொடங்குகிறது)

தேமொழி

unread,
Oct 14, 2023, 11:08:00 PM10/14/23
to மின்தமிழ்
பா வே மாணிக்க நாயக்கர்

தமிழ் அறிஞர்கள் பட்டியலில் தமிழ் புலவர்கள் மட்டுமின்றி அறிவியல் துறையை சார்ந்த பேரறிஞர்களும் இருக்கின்றனர். அத்தகைய தமிழ் அறிஞர்களில் பொறியியல் பயின்ற தமிழ் பேரறிஞர் பற்றித்தான் இன்று பார்க்க இருக்கிறோம்.. யாராய்  இருக்கும்? ஊகிக்கத் துவங்குங்கள்

இந்த அறிஞர் பிறந்த ஊர் சேலத்திற்கு அருகில் உள்ள பாகல் பட்டி என்னும் சிற்றூர்.

இவர் பிறந்த பொழுது சோதிடம் கணித்த வல்லுனர், இவருக்கு 12 வயதில் இறப்பு ஏற்படலாம் என்று சொன்னாராம். ஆனால் இவரோ, 60 வயது வரை உயிருடன் இருந்து, ஜோதிடத்தையும் வென்று காட்டியிருக்கிறார். தமிழ் படித்ததும் ஒரு காரணமாய் இருக்கலாம்.

அந்தக் காலத்தில் சென்னை மாநிலக் கல்லூரியில் இவர் பொறியியல் படித்துக் கொண்டு இருந்தபோது நடைபெற்ற ஒரு போட்டியில், மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் எல்லாம் போட்டியில் கலந்து கொண்ட போதிலும், இவர் 13 பரிசுகளும் ஒரு தங்கப் பதக்கமும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவர் 1896 ஆம் ஆண்டு அரசு உதவி பொறியாளராய்ச் சேர்ந்து, படிப்படியாக கண்காணிப்புப் பொறியாளராகவும் பதவி உயர்வு பெற்றவர்.

1919 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற தமிழ் புலவர் மாநாட்டில் இவர் எழுப்பிய குரல்தான் இவரின் தமிழ் தொடர்பான வீச்சினை உலகுக்கு அறியத் தந்தது. அறிவியல் தமிழுக்கும் அடித்தளமும் இட்டது. புலவர்களால் மட்டும் கையாளப்பட்ட தமிழ், உடற்பயிற்சிக்கும் படை நடத்தவும், அறிவியல் தமிழ் வளர்த்தவும் உரியது என்பதை உரக்கக் கூறினார் இவர்.

பொறியியல் துறை மட்டுமன்றி, வானநூல்‌, விலங்குநூல்‌, தரைநூல்‌, தத்துவம்‌, இசை முதலியவற்றிலும்‌ புலமை வாய்ந்தவர்‌. இவருக்‌குப்‌ பன்மொழிப்‌ பயிற்சியும்‌ உண்டு. இவர்‌ பல கைத்தொழில்களில்‌ கைதேர்ந்‌தவராய்‌ விளங்கினார்‌. தையல்வேலை, பின்னல்வேலை, தச்சுவேலை, ஓவியம்‌, படப்பிடிப்பு முதலியவைகளில்‌ இவர்‌ திறமை வியத்தற்குரியது.

சுருக்கமாய்ச் சொல்தெனில் இவர் ஒரு  சகலகலை வல்லவர்.      

மயிலாப்பூரில் இருக்கும் இவருடைய சமாதியில் இப்படி பொறிக்கப்பட்டுள்ளது. மண்ணில் மறைந்தாலும் மாணிக்கம் தன் ஒளி குன்றாது; காற்றில் கலந்தாலும் கவின்மலர் தன்மணம் மாறாது

அறிவியல் தமிழுக்கு வித்திட்ட இவர்,  அறிவியல் தமிழ் வளர்த்த பேரறிஞர் பா வே மாணிக்க நாயக்கர்
 
பா வே மாணிக்க நாயக்கர்.jpeg
மறைமலையடிகளார் தொடங்கிய தனித்தமிழ் இயக்கத்துக்கு மாணிக்க நாயக்கர் புரவலராக இருந்துள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும்  என்னும் தமது கருத்தை 1931ம் ஆண்டுக்கு முன்பே இவர் மூலமாய் ஒலித்திருக்கிறது.

அறிவியல் தமிழ்ச் சொற்களின் அகராதி என்னும் தலைப்பில் இவரது தொகுப்புகள் சென்னை மறைமலையடிகள் நூலகத்தில் இன்றும் உள்ளன.

1923 களில் செந்தமிழ்ச் செல்வி இதழ் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் இருந்து 48 தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் அந்த இதழில் எழுதிவந்துள்ளார். தமிழகம், மரநூல், அறிவியல் தமிழ்ச் சொற்கள், வடிவு திருந்த அறிவு வளர்ந்த கதை ஆகியவை அவற்றில் சில.

தமிழ் உச்சரிப்பு (Tamil Phonology) என்னும் தலைப்பில் அமைந்த சொற்பொழிவுகளை தமிழ் நாட்டின் பல ஊர்களிலும் நிகழ்த்தியுள்ளார்.

தமிழ் எழுத்துகளின் நுண்பொருள் விளக்கம் என்னும் தமது நூலில் தமிழ் எழுத்துகளுக்கெல்லாம் முளை எழுத்து (Root letter)"ஓ" என்றும் அது எல்லா வடிவங்களும் பிறக்கக் காரணமானது என்றும் கூறி ஓங்காரத் தத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பியர்கள் டார்வின் என்பவருக்குப் பிறகு கண்டறிந்த இயற்கை உண்மைகளையும், இன்னும் காணாதிருக்கின்ற பெரும் பகுதிகளையும் நம் தமிழ் முன்னோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நன்கு உணர்ந்திருக்கிறார்கள் என்பது நாயக்கரின் ஆழ்ந்த நம்பிக்கை.

கம்பன் புளுகும் வான்மீகியின் வாய்மையும், தமிழ் ஒலியிலக்கணம், தமிழ் எழுத்துகளின் நுண்மை விளக்கம் போன்ற நூல்கள் இயற்றி தமிழை வளப்படுத்தியுள்ளார். மாணிக்க நாயக்கர் கம்பராமாயணத்தை திறனாய்வு செய்து எழுதிய நூல்தான் கம்பன் புளுகும் வால்மீகியின் வாய்மையும். இந்த நூலின் தலைப்பு கம்பனைப் பழிப்பது போல் இருந்தாலும் உண்மையிலேயே நாயக்கர் கம்பனை புகழந்தே சொல்கிறார் தன் நூலில். அதன் பி டி எஃப் வடிவம் இதோ உங்களுக்காய்.

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpdjZh8&tag=கம்பன்+புளுகும்+வால்மீகி+வாய்மையும்#book1/

பண்டைத் தமிழ் மொழிச் செவ்வியையும், தமிழகத்தோர் வன்மையும், சிறக்கப் பரக்கச் சிதைவின்றிக் காட்டக் கிடைத்த அழியாப் பெருந்திடரித் (திடர் - மலை) தொல்காப்பியம் ஒன்றே என்னும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார் மாணிக்க நாயக்கர்.

சிவபுரம் ஜமீன் பகுதியில் இவர்களுடைய ஆட்சிகள் இருந்தாலும் கூட எளிய வாழ்க்கையை வாழ்ந்தவர்தான் இவர். சிறு குழந்தைகளை அழைத்து அவர்களுக்குத் திருக்குறள் கற்றுக் தந்து,  அவர்கள் திருக்குறள் சொன்னால் பூரித்துப் போவாராம். உடனே அவர்களுக்கு கனியும் காசும் பரிசாக தந்தும் மகிழ்வாராம்.

மேட்டூர்‌ அணைக்கு முதன்‌ முதல்‌ இடம்‌ தெரிந்தெடுத்துத்‌ திட்டம்‌ வகுத்தவர்‌ மாணிக்க நாயக்கரே ஆவர்‌. ஆனால்‌ மேட்டூர்‌ ‌ ௮ணையின்‌ வரலாற்றில்‌ அவருடைய பெயரைக்‌ காணமுடியாது. என்ன காரணம் எனத் தெரியவில்லை.

தேமொழி

unread,
Oct 20, 2023, 1:40:21 AM10/20/23
to மின்தமிழ்
சி வை தாமோதரம் பிள்ளை

பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால் கொண்டவர் ஆறுமுக நாவலர்; அதன் மேல் சுவர் எழுப்பியதாய் போற்றப்படும் தமிழ் அறிஞர் தான் இவர்.

இவரை உ வே சா அவர்களின்  முன்னோடி என்றும் குறிப்பிடுவர்.

சங்க நூற்பதிப்புகளின் முன்னோடி என்றும் திரு விக அவர்களால் பாராட்டுப் பெற்றவர் இவர்.

1868களில் தொல் சேனாவரையமும், 1881 இல் வீர சோழியமும் 1883 ஆம் ஆண்டில் திருத்தணிகைப் புராணம், இறையனார் அகப் பொருள் ஆகிய நூல்களை சுவடிகளை ஆய்ந்து அச்சிட்டு வெளியிட்டார்.
 
1885 ஆம் ஆண்டில் தொல்பொருளும், எட்டுத் தொகையில் ஒன்றாகிய கலித்தொகை  1887 களிலும் இவரால் வெளியிடப்பட்டது. (என் பதிப்பு கோடிகளைத் தாண்டி விற்பனை ஆகி விட்டது என்றெல்லாம் மார்தட்டிக் கொள்ள முடியாத காலங்கள் அது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.)

தன்னந்தனியாய் பண்டைத் தமிழ்ச் செல்வப் புதையலைத் தமிழ் மக்களுக்கு அகழ்ந்தெடுத்து உதவும் பெருமுயற்சியை மேற்கோண்டவர் இவர் என வாயார வையாபுரியார் வாழ்த்தியுள்ளார். (இவர் யாரூ? இப்படிக் கேட்பவரா நீங்கள்! இவரைப் பற்றி வேறு ஒரு நாளில் சிந்திப்போம்)

பிட்டி தீவு என்று ஒரு சிறு தீவு இலட்சத்தீவுகளில் இருக்கிறது. ஆனால் நம் அறிஞர் பிறந்த சிற்றூர் சிறுப்பிட்டி. இருக்கும் இடமோ இலங்கையின் யாழ்ப்பாணத்தின் அருகில். அங்கே 1932 ஆம் ஆண்டு பிறந்த அறிஞர் இவர்.

தன் இருபதாம் அகவையில் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியராய்ப் பணிக்குச் சேர்ந்தவர்.

இவரின் புகழைக் கேள்வியுற்ற திருத்தந்தை பெர்சிவல், இவரை தமிழகத்திற்கு வரவழைத்து தினவர்த்தமானி வார இதழின் ஆசிரியர் ஆக்கினார்.

தமிழ் ஆங்கிலம் ஆகியவற்றில் புலமை பெற்ற காரணத்தால் இரண்டையும் திறம்பட கற்பிக்கும் வல்லமை பெற்றிருந்தார் இவ்வறிஞர். ஆங்கிலேயர்களுக்கு தமிழ் கற்பித்த காரணத்தால் இவரை சென்னை மாநிலக் கல்லூரியில்  தமிழாசிரியர் ஆக்கியது அன்றைய ஆங்கிலேய அரசு.

பின்னர் கள்ளிக்கோட்டை அரசுக் கல்லூரியில் துணையாசிரியர் ஆகி, சென்னை அரசு வரவு செலவுக் கணக்கு அலுவலர் ஆகி தன் ஐம்பதாம் வயதில் ஓய்வு பெற்றார். இடையே சட்டமும் பயின்றார்.

தான் படித்த சட்டப்படிப்பு அவரை புதுக்கோட்டை அரசின் முறைமன்ற நடுவர்களில் ஒருவராக அமரவும் வைத்தது.

 இவரது தமிழ்த் தொண்டு, கல்வித் தொண்டு முறைத் தொண்டு ஆகியவற்றை நன்கறிந்த அரசு இவருக்கு இராவ் பகதூர் பட்டம் தந்து 1895 ஆம் ஆண்டு சிறப்பு செய்துள்ளது.

யார் இத்தனை சிறப்புகளையும் பெற்றவர்? தெரிகிறதா?
சி வை தாமோதரம் பிள்ளை.jpeg

1832 இல் இலங்கையில் பிறந்த  தமிழ் வளர்த்த சி வை தாமோதரம் பிள்ளை என்ற ஈழத்தமிழ் அறிஞர்.  

பள்ளியில் பயிலும் காலத்திலேயேயே தமிழ்ப்புலவர் என சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் அழைக்கப்பட்டவர் அவர்.

1884 களில் கும்பகோணத்தில் வழக்கறிஞராகவும் தொழில் செய்தார். அதன் மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தையும் தமிழ்நூலகள் வெளியிடுவதில் செலவழித்தார். 1885 இல் இவரின் தொல்காப்பியப் பொருளதிகார உரையினை வெளியிட அக்காலத்தில் 3500 செலவாகி இருக்கிறது. (அவரின் அம்மணி 3 ½ கிலோ தங்கம் வாங்க நிர்ப்பந்தம் செய்திருந்தால், வரலாற்றில் இன்று இவர் பேசப்பட்டிருக்க மாட்டார். அவர் அம்மணியும் அப்படி இல்லை. நம் தமிழறிஞரும் அப்படியில்லை.)
 
சி வை தாமோதரம் பிள்ளை அவர்கள் செலவு செய்ததில் மூன்றில் ஒரு பகுதி யினைத்தான் அவரால் சம்பாதிக்க முடிந்துள்ளது. (அன்றைய அறம் சார்ந்த வக்கீல் தொழில் அப்படி! ) தமிழுக்காய் உதவிக்கரம் நீட்டியோர் பலர்.

சென்னை மாநிலக்கல்லூரிக் கணக்கியல் பேராசிரியர்  பூண்டி அரங்கநாதர், மைசூர் உயர் முறை மன்ற நடுவராக விளங்கிய அ இராமசந்திரரின் கை முதலில் வந்து உதவியுள்ளது. திருவாடுதுறை திருமடம் செய்த உதவியும் அளப்பறியது.

தாமோதரனார் சென்னை வரவு செலவுக் கணக்கு அதிகாராய் இருந்தவர். அப்போது ஒரு நாள் துரையின் மேலதிகாரி, ஒரு சிக்கலான கணக்கை நம் தமிழறிஞரிடம் ஒப்படைத்தார்.

கொடுத்தவர் சும்மா குடுத்தாரா? ”இதனை யானே முடிப்பதாயின் ஒரு கிழமை (7 நாள்) ஆகும். நீர் பத்து நாள்களில் முடித்துத் தருவீரென நம்புகிறேன்” என்று சொல்லிவிட்டுத் தந்தாராம்.

தாமோதரனார் புலமை தமிழில் மட்டுமல்ல கணக்கிலும் என்பது அந்த மேலதிகாரிக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. ஆனால் அப்பணியினை நான்கே நாட்களில் முடித்தது கண்டு அந்த ஆங்கிலேயக் கண் அகல விரிந்திரிக்கும்.

திராவிட சாத்திரி என்று பரிதிமாற் கலைஞரை (சென்னை கிருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய போது) அழைத்த பெருமை தாமோதரனாரையே சாரும்.

நாடு தாண்டி, தன் உடல் பொருள் முழுதும் தமிழுக்காய் தந்த தாமோதரனாரின் ஆவி 1901 இல் பிரிந்த்து தமிழுக்கும் ஒரு பேரிழப்பு தான்.

சி வை தாமோதரம் பிள்ளை அவர்களின் வாழ்வும் பணியும் முனைவர் மு சற்குனவதி அவர்கள் எழுதிய நூல் இதோ உங்களுக்காய் பி டி எஃப் வடிவில் (https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0001683_சி_வை_தமோதரம்_பிள்ளை_வாழ்வும்_பணியும்.pdf). இதனை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தேமொழி

unread,
Oct 23, 2023, 1:23:02 AM10/23/23
to மின்தமிழ்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் – இப்படிச் சொன்னவுடன் அப்துல் கலாம் அவர்கள் நம் நினைவுக்கு வருவார். இங்கே சில கருத்துகளை உங்கள் முன் வைக்கிறேன்.. இதனைச் தமிழ்ச்சமூகம் முன் வைத்து சிந்திக்கவும் செய்த அந்தத் தமிழறிஞரை உங்களால் அடையாளம் காண முடிகிறதா?

பள்ளிப்படிப்பு பிற்கால படிப்புக்கு அடிப்படை. பிற்கால கல்வியால்தான் மாளிகை எழுப்ப வேண்டும். பூட்டி வைத்திருக்கும் நிதியறைத் திறவுகோல் பள்ளிக் கல்வி. பிற்கால கல்வியால் தான் அறையைத் திறந்து செல்வக் குவியலை அடைய வேண்டும்.

அதிகாரிகள் பொதுமக்களின் ஊழியராக இருக்கத்தக்கவரே அன்றித் தலைவர் அல்லர்

ஒரு வழக்கறிஞர், ஒரு வழக்கை தாம் ஏற்றுக் கொள்ளும் முன் அது முறையானது தானா என்பதை நன்கு ஆராய்தல் வேண்டும். அற முறைக்கு மாறான வழக்குகளால் எவ்வளவு வருவாய் வருவதாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளுதல் கூடாது. வருவாய் ஒன்றே கருதி வழக்கை எடுத்துக் கொள்பவர், அவ்வழக்கை கொண்டு வந்த தீயவனினும் தீயவர் ஆவார்.

தமிழ் நியாயாதிபதி முன் ஆங்கிலத்திலே வாதிக்கிற தமிழ் வக்கீல்கள் தமிழ் மொழியையும், தமிழ் மக்களையும் அவமதிக்கிறார்கள்

அன்னை வயிறு எரிய ஆண்டவன் பூசை செய்வது போல் தாய் மொழியை அறவே விடுத்து பிற மொழியைப் படிப்பது ஏற்கத்தக்கதன்று

தமிழ் தெரியாது என்பதிலே பெருமைப்பட்டுக் கொள்ளும் சிறுமை இந்நாட்டிலே உளதாயிற்று. தமிழ்ப் புத்தகங்களைக் கையால் தொடுவதைப் பாம்பின் புற்றுக்குள் இடுவதாய் எண்ணுவதாகவும், கன்னித் தமிழைக் கற்பது வேப்பிலை கசாய நீர் குடிப்பது போலவும் கருதுகின்றனர். இவர்க்கு நாட்டுப்பற்றும் இல்லை. மொழிப்பற்றும் இல்லை

ஆங்கிலேயரை மதிக்கும் இவர்கள், அவர்கள் நம் தாய் மொழியைப் போற்றுவது கண்டேனும் தம் தாய் மொழியை போற்ற வேண்டாமோ? என்னை அறியாமை! திருவள்ளுவருடைய குறளை அவர்கள் எப்போதாவது பார்த்திருப்பார்களா? கம்பனுடைய கற்பனையைக் கனவிலும் கேட்டிருப்பார்களா? நாலடியார் செய்தவர்களுடைய காலடியையாவது கண்டிருப்பார்களா? ஔவையாருடைய நீதி நூல்களைச் செவ்வையாக அறிவார்களா? அதிவீரராம பாண்டியனை அணுவளவும் அறிவார்களா?

தலைவனுடைய நேரமும் புத்தியும் சக்தியும், மக்களுக்குச் சொந்தமே அன்றித் தலைவனுக்குச் சொந்தம் அல்ல.

இப்படியெல்லாம் சொல்லிய அந்தத்  தமிழறிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை.jpeg
தமிழ் நாவல் உலகின் தந்தை எனப் போற்றப்படும் தமிழறிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் சொல் முழக்கம் தான் இவை.

இவர் தமிழோடு ஆங்கிலமும் கற்றறிந்த அறிஞர். மொழிபெயர்ப்பாளர். தமிழ்க்கவிஞர். உரைநடை வளர்ச்சிக்கு வித்திட்டவர். நீதிபதியாகவும், நகரத்தந்தையாகவும் பணியாற்றிய பன்னூல் ஆசிரியர்.

திருச்சியை அடுத்த வேளான் குளத்தூரில் 11-10-1826 ஆம் நாள் பிறந்த வேதநாயகம், நானூறு பாக்கள் கொண்ட நீதி நூல் ஒன்றினை இயற்றியுள்ளார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை உள்ளிட்ட 56 புலவர்களின் சிறப்புப் பாயிரம் பெற்ற நூல் இது. வடலூர் வள்ளலாரின் பாராட்டையும் பெற்ற நூல் அது. இதன் பி டி எஃப் வடிவம் இதோ உங்களுக்காக.
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0038081/TVA_BOK_0038081_நீதி_நூல்_1956.pdf

வேதநாயகர், திருவருள் மாலை, திருவருள் அந்தாதி, தேவமாதா அந்தாதி, தேவ தோத்திர மாலை, சருவவ சமய சமரசக் கீர்த்தனை போன்ற கிருத்தவ சமய சார்புடைய நூல்களை இயற்றியுள்ளார்.

இவர் 1876 ஆம் ஆண்டு வெளியிட்ட பிரதாப முதலியார் சரித்திரம் என்று நாவல் தான் தமிழில் தோன்றிய முதல் நாவல். நகைச்சுவையும் நல்லொழுக்க படிப்பினையும் உள்ளடக்கிய நூல் அது. அதனைத் தொடர்ந்து 1887 ஆம் ஆண்டு சுகுணசுந்தரி என்ற நூலையும் இயற்றினர். புனை கதைகளின் தந்தை வேதநாயகர் என்று இந்த நூல்கள் மூலம் அறியப்படுகிறார்.

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதற்கு? என்னும் கருத்து வேதநாயகர் காலத்தில் இருந்தது. பெண் கல்வி, பெண் மானம், பெண்மதிமாலை ஆகிய நூல்களை இயற்றினார். சர்வ சமய சவரச கீர்த்தனைகளிலும் பெண் கல்வி, திருமணம், இல்லறம் ஆகியவை பற்றி இனிய பல பாடல்கள் இயற்றினார். மாயூரம் நகரவை தலைவராக இருந்தபோது பெண் கல்வி வளர்ச்சியில் பேரூக்கம் காட்டினார்.

ஆங்கிலத்தை தமிழாக்கம் செய்வதில் தேர்ந்தவர் வேதநாயகர் 1805 ஆம் ஆண்டு முதல் 1863 ஆம் ஆண்டு முடிய உள்ள சதர் கோர்ட்டு முடிவுகளை திரட்டி மொழி பெயர்த்து சித்தாந்த சங்கிரகம் என்னும் பெயரால் வெளியிட்டார். வேதநாயகர் இயற்றிய இந்தூலே தமிழில் வெளியான முதல் சட்ட நூல்.

தேமொழி

unread,
Oct 25, 2023, 2:46:40 AM10/25/23
to மின்தமிழ்
பேராசிரியர் பூரணலிங்கம் பிள்ளை

அது ஆங்கிலேயர் நம்மை ஆண்ட காலம். ஒரு கல்லூரியின் வகுப்பறை. பேராசிரியரும் ஓர் ஆங்கிலேயர்.

ஷேக்ஸ்பியர் பற்றிய வகுப்பு அது. அந்த வெள்ளைக்காரப்  பேராசிரியரோ, ஷேக்ஸ்பியர் பற்றி ஓர் ஆங்கிலேயத் துரை மிகவும் அழகாய் உரை எழுதி இருக்கிறார். எல்லாரும் இந்த உரை நூலை வாங்கிப் படியுங்கள். எழுதிக் கொள்ளுங்கள் அந்த ஆங்கிலேய துரையின் பெயரை...

பெயரும் சொன்னார் அப்பேராசிரியர். மான்நில் அன்ருப் துரை எனப் பெயர் சொல்லப்பட்டது. எல்லா மாணவர்களும் பெயரைக் குறித்துக் கொண்டார்கள்.

ஒரே ஒரு மாணவர் மட்டும் குறிப்பெடுக்காமல் மனதில் சிரித்துக் கொண்டிருந்தான்.

காரணம்.... நாம் இன்றைக்கு தெரிந்து கொள்ளவிருக்கும் தமிழறிஞரே அந்த மாணவர் தான். ஆம்... ஆங்கிலேய பெயர் போன்று தோன்றும் புனைப் பெயரில் ஆங்கிலத்தில் உரை எழுதியவரே அந்த மாணவர்தான்.

நூல் எழுதிய ஆசிரியரே, மாணவராய் அமர்ந்த நேரத்தில்,  அதே நூலை அந்த மாணவரே படிக்கப் பரிந்துரை செய்யப்பெற்ற வரலாற்று நிகழ்வு நிகழ்ந்தது நம் தமிழறிஞருக்குக் கிடைத்த வெற்றியல்லவா?

இவர் தமிழின் இலக்கியப் பொக்கிசங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகிற்குக் தர நினைத்தே ஆங்கிலம் படித்தவர்.

ஆங்கிலத்தில் 32 நூல்களும், தமிழிலில் 18 நூல்களும் எழுதிய பன்மொழிப் புலவர்.

தனது ஒரு கருதுகோளுக்கு ஒரு நூலகத்தின் மொத்தப் புத்தகங்களையும் புரட்டிப் பார்க்கத் தயங்காத அயர்வு, சோர்வு அற்ற அறிஞர் இவர்.

ஆராய்ச்சிப் போக்கில் தாம் போவதை விட்டு,  அந்தப் போக்கைத் தமக்கு இணங்குமாறு செய்து கொள்ள முயற்சி மேற்கொள்ளும் அபார உழைப்பின் அவதாரம் அவர்.

ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றிய இத்தமிழறிஞர், ஷேக்ஸ்பியர் நாடகத்தை விளக்கிச் சொல்லும் போது கம்பராமாயணத்தையும் சொல்லுவார். ஷேக்ஸ்பியரின் மேதைமைக்குச் சற்றும் இளைத்ததல்ல கம்பனின் மேதைமை எனக் கற்பித்தவர் அவர்.

தமிழில் பெருவழக்காகக் காணப்படும் இலக்கிய வடிவங்களில் எல்லாம் இவ்வறிஞர் தம் மேதைத் தன்மையைப் பதிவு செய்துள்ளார்.

கரிகால் சோழன் வயோதிகராக வந்து நீதி சொன்ன கதைபோல், தன் பெயரை மறைத்து தன் புலமையினை  வெளிக்காட்டிய அறிஞர் இவர்.

தமக்குப் பாடமாக இருக்கும் ஷேக்பியர் எழுதிய நாடகம் ஒன்றிற்கு உரை எழுதி ஊதியமும் பெற்றவர் இவர் படிக்கும் போதே..

மாக்நில் அன்ருப் என்ற புனைப்பெயரை ஊன்றுக் கவனித்தால் இன்றைய தமிழறிஞர் யார் என்பது கிடைத்து விடும்.MAGNIL ANRUP இதனை தலைகீழாக வாசித்துப் பாருங்கள். PURNALINGAM என்ற அவரது பெயர் கிடைத்துவிடும்.

ஆம் தமிழறிஞர் பேராசிரியர் எம் எஸ் பூரணலிங்கம் பிள்ளை தான் அப்பெருமைக்குச் சொந்தக்கார்ர்.
பூரணலிங்கம் பிள்ளை.jpeg
திருநெல்வேலி மாவட்டத்தில் முந்நீர்ப் பள்ளம் என்ற ஊரில் சிவசுப்பிரமணியப் பிள்ளை - வள்ளியம்மைக்கும் 24-05-1866 ஆம் ஆண்டில் பிறந்தவர் இவர்.

இவர் இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது அதன் தலைவராக இருந்தவர் செப்பர்டு என்பவர். அவர் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு ஆங்கிலப் பாடப் புத்தகங்களை எழுதினார். அதனை தமது அழகிய கையெழுத்தால் படியெடுத்துக் கொடுத்தார் பூரணலிங்கம் பிள்ளை. படி எடுத்தவரின் நூலே பிறர் படிக்க நூலானதும் விந்தையான நிகழ்வு தான்.

1895 இல் செய்யுட் கோவை என்ற தலைப்பில் 44 பொருட்பாகுபாட்டில் பாடநூல் ஒன்றினை தொகுத்து வெளியிட்டுள்ளார். 1896 ஆம் ஆண்டு வாசகத்திரட்டு என்ற உரைநடை நூலையும் வெளியிட்டுள்ளார்.

தமிழ் இலக்கியத்தின் வரலாற்றினை முதன் முதலில் எழுதிய பெருமையும் இவரையே சாரும்.

1928 ஆன் ஆண்டு Ravana the Great: King of Lanka என்ற நூலை ஆங்கிலத்திலும், 1936 ஆம் ஆண்டில் தமிழில் ராவணப் பெரியார் என்ற பெயரிலும் வெளியிட்டுள்ளார்.

நீதிக்கட்சி நடத்திய ஜஸ்டிஸ் என்ற ஆங்கில இதழின் துணையாசிரியராகவும் பூரணலிங்கம் அவர்கள் பணியாற்றியுள்ளார்.  

பேராசிரியர் பூரணலிங்கம் பிள்ளை அவர்களைப்பற்றி பரிபூரணமாய் தெரிந்து கொள்ள ஏதுவாக ஒரு நூல் உள்ளது. இதோ உங்களுக்காய் பி டி எஃப் வடிவில். [https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8luQy.TVA_BOK_0001598/mode/2up]. இதனை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.


—அந்தமான் கிருஷ்ணமூர்த்தி

WhatsApp share
வாட்சப்-தொல்காப்பியர் பேரவை-குழும பதிவு   
--------------------

தேமொழி

unread,
Oct 28, 2023, 10:38:14 PM10/28/23
to மின்தமிழ்
சதாவதானி கா ப செய்கு தம்பிப் பாவலர்

சிறை நீத்த செய்யுள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? செவிவழிச் செய்தியாக கேட்டு மகிழ்ந்த கதை அது. தமிழால் இணைந்த கூட்டணியாக அரசன், அமைச்சர், அரசவைப் புலவர் என மூவரும் ஆட்சி செய்த அரசு அது.

இவர்களின் புலமையோ அளப்பரியது. அரசவைப் புலவர், எந்த பாடலையும் ஒரு முறை கேட்டால் போதும் அதனை அப்படியே சொல்லும் வல்லமை படைத்தவர். அமைச்சரோ, ஒரு பாடலை இரு முறை கேட்டால், அதனை மனனம் செய்யும் மனத்திறன் பெற்றவர். மூன்று முறை எந்தப் பாடலைக் கேட்டாலும் அப்படியே மீண்டும் சொல்லிவிடுவார் அரசன். இப்படி ஓர் அசாத்திய தமிழ்க் கூட்டணி அது.

அவர்கள் ஒரு வினோதமான போட்டியை அறிவித்தார்கள். புதிதாக ஏதேனும் பாடல் இயற்றித் தரும் புலவருக்கு பரிசு. ஏற்கனவே அது பிறர் அறிந்த பாடல் தான் என்று யாராவது சொல்லிவிட்டால், அப்புலவரைப் புழல் சிறையில் அடைத்து விடும் ஏற்பாடு.

இப்படிப்பட்ட சூழலில் எந்தப் புலவர், புதுப் பாடல் இயற்றிக் கொண்டு வந்தாலும் ஒரு முறை கேட்டவுடன், அடடா… இந்தப் பாடல் தானா? இது நான் அறிந்த பாடல் தான் என்று அரசவைப் புலவர் சொல்லிவிடுவார். பரிசு வாங்க வந்த புலவரும் அரசவைப் புலவரும் சொல்லிய (இருமுறை கேட்ட பாடலை வைத்து) இந்த பாடல் தானே? எனக்கும் தெரியுமே என அமைச்சரும் திரும்பச் சொல்ல, அதனையும் மூன்றாவது முறையாக கேட்ட அரசன், இந்த பாடல் எனக்கும் தெரியுமே என்றும் சொல்லிவிடுவார்.

பரிசு பெற வந்த அனைத்து புலவர்களும் சிறையில். ஒரு புலவர் வந்தார். பாடல் பாடினார். விக்கா வுக்கா வித்தா விப்போய்... என்று பாட, யாராலும் திரும்பி திருப்பிப் பாட இயலாமல் போனதாம். பரிசாக, சிறையில் இருந்த புலவர்களை விடுவித்தமையால் இப்பாடல் சிறை நீத்த செய்யுள் எனப்படுகிறது என்பது ஒரு செவிவழிச் செய்தி

இந்தச் செவி வழி செய்தியை ஒட்டிய ஒரு நிகழ்வு இன்றைக்கு நாம் காண இருக்கும் தமிழறிஞர் வாழ்விலும் நடந்துள்ளது. அவர் யாரிடம் கல்வி கற்றாரோ அந்த ஆசிரியரை இகழ்ந்து ஏசினாராம் ஒருவர். எங்கே என் பாடல்களைப் பார்.. உனக்குப் புரியுமா? என்று கிண்டலாக கேட்டார். அந்த நூலை எந்திரன் படத்து சிட்டி போல ஒரே ஒரு முறை புரட்டிப் பார்த்துவிட்டு, இவை அனைத்தும் ஏற்கனவே நான் படித்தவை. புதிய  பாடல்கள் என்று பொய் சொல்கிறீரே? என்று அப்படியே எல்லா பாடல்களையும் ஒப்புவித்தாராம்.

அனுமனுக்கு தன்னுடைய திறமையை பிறர் சொன்னால் தான் தெரியும் என்பார்கள். இன்றைய தமிழறிஞரும் அப்படித்தான். அவதானம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்று ஒருவர் கேட்க இதெல்லாம் கட்டுக்கதை என்று நம்ப மறுத்தவர், பின்னர் அதையே பயிற்சி செய்து பதினாறு கவனகம் (சோடச அவதானம்) (ஒரே நேரத்தில் 16 வேலைகள்) செய்து காட்டியவர்.

சீறாபுராணம் பற்றி உரையாற்ற இவரை அழைத்துள்ளனர். சீ என்பதற்கு மட்டும் 9 நாள் உரை சொல்லி தமிழுலகையே மிரள வைத்தவர். திருவிக தலைமையில் நடந்த ஒரு சைவ மாநாட்டில், சைவம் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் மூன்று நாட்கள் தொடர்ந்து பேசியிருக்கிறார்

 எந்திரன் படத்து கற்பனைப் பாத்திரமான சிட்டியின் மெய்யான வடிவம் தான் சதாவதானி கா ப செய்கு தம்பிப் பாவலர்.
 
செய்குதம்பிப் பாவலர்.jpeg
ஒரு நேரத்தில் ஒரு வேலை செய்வதையே பெரிதாக நினைக்கும் சூழலில், ஒரே நேரத்தில் நூறு வேலைகளை, தனது 33 ஆம் வயதிலேயே சென்னை விக்டோரியா மக்கள் மன்றத்தில் செய்து காட்டிவர் இவ்வறிஞர்.

அத்தகைய சதாவதான நிகழ்ச்சியில் செய்கு தம்பிப் பாவலரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று எல்லாச் சமயக் கடவுளையும் சுட்டும் வகையில் ஒரே வரியில் ஒரு கவிதை கூறுங்கள்’ என்பதாகும். உடனே பாவலர், சிலேடையாக,

சிரமாறுடையான் - என்று பாடினார். இதனைச் சிரம் ஆறுடையான் எனவும், சிரம் மாறுடையான் - என்றும் பிரித்துப் பார்க்க இயலும்.

இதனை பல விதமாகவும் பொருள் கூறி அனைவரது பாராட்டையும் பெற்றவர் சதாவதானி செய்கு தம்பிப் பாவலர்.

(1) தலையிலே கங்கை ஆற்றை உடைய சிவபெருமான்
(2) தலையிலே ஆறுமுகங்களை உடைய முருகன்
(3) தலையிலே மாறுபட்ட முகத்தை உடைய கணபதி (சிரம் + மாறு = சிரமாறு உடையான். அதாவது மாறுபாடான முகம் உடையான்)
(4) தலையாய நெறிகளை உடைய அல்லா அல்லது இயேசு அல்லது புத்தர்

திருவருட்பா அருட்பா அல்ல, மருட்பா என்று சொல்லி வந்த வேளையில், அவை அருட்பாதான் என்று உள்ளம் உருகக் கூறி, அறிவார்ந்த வாதங்களையும் தன் இருபத்தியாறே வயதில் முழங்கிய முகமதிய இளைஞர் தான் இந்த செய்கு தம்பிப் பாவலர்.

இதற்காகவே தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம் என்ற பட்டம் சூட்டப்பெற்று காஞ்சியில் பாராட்டப் பெற்றவர்.

நாகர்கோவில், கோட்டாறு அருகில் உள்ள ‘இளங்கடை’ என்னும் சிற்றூரில், பக்கீர் மீறான் ஆமினா ஆகியோருக்கு மகனாக 31-07-1874 ஆம் நாள் பிறந்தார் பாவலர்.

கம்பர் ஆயிரத்தில் ஒருவராக சடையப்ப வள்ளலைப் போற்றியது போல் இவரின் ஷம்சுத்தாசீன் கோவை மிகப் பிரபலமானது. இதன் பி டி எஃப் வடிவம் [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZh8k0hy#book1/] இதோ உங்களுக்காக.

தேமொழி

unread,
Nov 1, 2023, 7:50:42 PM11/1/23
to மின்தமிழ்
பன்மொழிப் புலவர் சா.ஞானப்பிரகாசம்

இவர் இலங்கையினைச் சேர்ந்த ஓர் தமிழறிஞர். பன்மொழிப் புலவர். தமிழின் தொன்மையினை உலகுக்குக் கூறியவர்களில் முதன்மையானவர்.

இவரது தந்தை, இவருக்கு ஐந்து வயதாய் இருக்கும் போது காலமானார். இவரது தாயார், கத்தோலிக்கர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால், இவரது பெற்றோர் இட்ட இயற்பெயரும் மாறியது.

இலக்கணப் பிழையின்றி கவிதை இயற்றும் ஆற்றல் பெற்றிருந்தார். இளம் வயதிலேயே தமிழ், வடமொழி, ஆங்கிலம் மொழிகளைக் கற்றார்.

இறைபணிக்கென தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பள்ளியிலும் கல்லூரியிலும் தெலுங்கு, சிங்களம் கற்றிருந்த நிலையில், பாதிரியாரான பின்னர் பல்வேறு மொழிகளை ஆர்வமுடன் கற்றார்.

தமிழ்மீது தனிப் பற்றுக்கொண்டிருந்த இவர், தமிழ் சொற்களோடு பிறமொழிச் சொற்களையும் ஒப்பிட்டார்.

எழுபதுக்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்றிருந்த இவர், லத்தீன், கிரேக்கம் உள்ளிட்ட 18 மொழிகளில் பேசும், எழுதும் திறன் பெற்றிருந்தார். ஊர்காவல் துறையில் பணியாற்றியபோது, மக்களிடம் நிதி வசூல் செய்து, தமிழில் வெளிவந்த அத்தனை நூல்களிலும் ஒவ்வொரு பிரதியை வாங்கி, ஒரு நூலகத்தை உருவாக்கினார்.

ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்க, கல்வி நிலையங்களைத் தோற்றுவித்தார். வரலாறு, அரசியல், மானிடவியல், சமூகவியல், எழுத்துமுறை, சொல் ஒற்றுமை, இடப்பெயர்கள், சமய வரலாறு, சமய வழிபாடுகள், பழக்க வழக்கங்கள் ஆகிய அத்தனை களங்களிலும் ஆழமான ஆராய்ச்சிகளை மேற் கொண்டார்.

தமிழர் பூர்வீக சரித்திரம், யாழ்ப்பாணத்தரசர்கள், யாழ்ப்பாண சரித்திரம், இந்திய நாகரிகம், சுப்பிரமணியர் ஆராய்ச்சி, பிள்ளையார் ஆராய்ச்சி, தமிழர் வரலாறு, தமிழரிடையே ஜாதி பிறந்த முறை, தமிழ் சொற்பிதிர், தமிழ்த் தாதுக்கள், மொழிக்குடும்பம், தருக்க சாத்திரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தார். அவற்றில் பெரும்பாலானவற்றை இவரே வெளியிட்டார்.

தமிழ் சொற் தொகுதிகள், பெயரீடு, முதற் சொல்லடிகள், வழிச்சொல்லடிகள், சொல் அர்த்தங்கள் வேற்றுமை உருபுகள், காலங்காட்டும் இடை நிலைகள் உள்ளிட்ட தலைப்புகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இவரது தமிழ்ச் சேவையினைப் பாராட்டி இலங்கை அரசு 1981 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதியன்று இவரின் நினைவு அஞ்சல் முத்திரை ஒன்றையும் வெளியிட்டது.
பன்மொழிப் புலவர் சா.ஞானப்பிரகாசம்.jpeg

யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள மானிப்பாய் என்ற ஊரில் பிறந்தவர் (1875). இவரது இயற்பெயர், வைத்தியலிங்கம். இவரது பெயர் ஞானப்பிரகாசம் என மாற்றப்பட்டது. அமெரிக்க மிஷன் ஆங்கிலப்பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்றார்.

‘நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்’ என நேசத்துடன் அழைக்கப்பட்டார். ‘சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி’ என்ற இவரது தமிழ் ஒப்பியல் அகராதி, இன்றும் தமிழின் தலைசிறந்த அகராதியாகக் கருதப்படுகிறது. மொழி ஆக்கத் துறையில் பெரும் சாதனையாக இது குறிப்பிடப்படுகிறது.

இலங்கையில் வெளிவந்த, ஈழகேசரி, இந்து சாதனம், பாதுகாவலன் மற்றும் தமிழகத்திலிருந்து வெளிவந்த கலாநிலையம், கலைமகள், ஞாயிறு உள்ளிட்ட இதழ்களில் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவந்தார். சத்திய வேதப் பாதுகாவலன், குடும்ப வாசகம், அமலோற்பவ ராக்கினி தூதன் உள்ளிட்ட மாத இதழ் களுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார்.

1904 ஆம் ஆண்டு இவரின் மனதிலிருந்து வெளிப்பட்ட கருத்தைப் பாருங்கள்:  இத்தேசத்து வாலிபரிற் பலர், பள்ளிக்கூடம் விட்டவுடனே படிப்பெல்லாம் முடிந்தது என்று எண்ணினாற் போல ஏடுகள், புத்தகங்களைக் கட்டி பூச்சிகள் வாசிக்கும்படி வைத்து விடுவது வழக்கம். வாலிபரே, உங்கள் படிப்பும் இத்தோடு முடிந்து விட்டது என்று எண்ணாது இருங்கள். பள்ளிக்கூடம் விட்ட பின்பு நீங்கள் வாசிக்கும் வாசிப்பினால் தான் அந்த விதை முளைத்து, மலர்ந்து, பூத்துக் காய்த்துக் கனிய வேண்டும் ஆகையால் வாசிப்பைக் கை நெகிழாதிருங்கள்.

இவரை ஜெர்மன் மொழி அறிஞர்கள், தங்கள் நாட்டிற்கு அழைத்து, தமிழின் பழைமையும் பெருமையையும் அறிந்து கொண்டு, இவரைப் பெரிதும் பாராட்டினர். ஜெர்மன் அரசு இவரது உருவம் பொறித்த அஞ்சல் தலை முத்திரை வெளியிட்டு பெருமை செய்ததுள்ளது.

இலங்கை யாழ்ப்பாண வரலாற்று சங்கத்தின் துணைத் தலைவர், பின்னர் தலைவராகவும், ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கத்தின் துணைத் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். ‘சொற்கலைப் புலவர்’ எனப் போற்றப்பட்ட சுவாமி ஞானப்பிரகாசம், 1947-ம் ஆண்டு தமது 72-வது வயதில் மறைந்தார்.

இவரது படைப்பில் 1933 இல் வெளி வந்திருக்கும் அரிய நூலான தருக்கசாத்திரச் சுருக்கத்தினை பி டி எஃப் வடிவில் [https://archive.org/details/TharukaSaththiraSurakkam/mode/2up]தருவதில் மகிழ்ச்சி.

தேமொழி

unread,
Nov 4, 2023, 11:09:41 PM11/4/23
to மின்தமிழ்
பேராசாரியர் ஆறு.அழகப்பனார்

இவர் தமிழின்  பெருமையையும், மொழி மரபையும் கடைபிடிக்கும் உறுதியாளர். இத்தகு தகுதி பல வாய்ந்த அவர் தம் தமிழ்த் தொண்டுக்கும் பல்கலைக்கழக பெருமைக்கும் ஏற்ற பதவிப் பொறுப்பு உரிய தகுதியானவரை வந்து சேர்ந்துள்ளது என்பதறிந்து குடும்பத்தில் ஒருவர் உயர்வு பெற்றார் என எண்ணி வாழ்த்துகிறேன்.
                   --- வ சுப மாணிக்கனார்

மாணவர்களிடமோ, உடனாசிரியர்களிடமோ குறை கண்டு சினந்து கடிந்து பேசினாலும் அதனை நெடுது மனத்துள் வையாது மறந்து பின் பழைய முறையிலே பழகும் அவர்தம் இனிய பண்பை நான் பலமுறை கண்டுள்ளேன். இது போற்றுதலுக்குரிய பண்பாகும். பின்பற்றுதற்கும் உரியது.
                   --- பேராசிரியர் இரா சாரங்கபாணியார்.

இவர் தமிழ் பேராசிரியர் மட்டுமின்றி தமிழினம் உயர்வடைய வேண்டுமென முயலும் புரட்சியாளர் தனித்தமிழ் பற்று மிக்க தகைமையாளர். தம் எழுத்தாலும், சொற்பொழிவாலும், அரும்பெரும் தொண்டாற்றும் தமிழ்க்காவலர். அவர் ”வாழ்க பல்லாண்டு வளனெல்லாம் பெற்றே” என வாழ்த்துகிறேன்
                   --- தமிழ்மறைக்  காவலர் கா பொ இரத்தினம்.

யான் இவரை இளவரசர் என்றே அழைப்பது வழக்கம். தமிழ் உலகில் பலரையும் நாடிப் பிடித்துப் பார்த்து வைத்திருப்பவர். எல்லாருடைய பலங்களையும் பலவீனங்களையும் நன்கு அறிந்தவர். தமிழுக்கு ஓர் இடர் வருகிறது என்றால் தன் தலை கொடுத்தாவது அதனைக் களைய வேண்டும் என்று முன் நிற்பவர்.
                   --- டாக்டர் சி பாலசுப்ரமணியனார்

இப்படிப் பாராடப்பெற்ற தமிழறிஞர் யாரென்று தெரிகின்றதா?
பேராசாரியர் ஆறு.அழகப்பனார்.jpeg
இவருடைய வீட்டின் மேல் மாடியில் திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளார். தனது இல்லத்திற்கும் தமிழ்ச் சுரங்கம் என்னும் பெயரும் சூட்டியுள்ளார்.

பேராசிரியர் ஆறு.அழகப்பனார் அவர்கள் சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடியில் வாழ்ந்த திருவாளர் ஆறுமுகம் செட்டியார், உண்ணாமுலை ஆச்சியார் அவர்களுக்குத் திருமகனாக 10.08.1937 இல் பிறந்தவர்.

1960 முதல் 1998 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர், துணைப்பேராசிரியர், இணைப்பேராசிரியர், பேராசிரியர், துறைத்தலைவர், புலமுதன்மையர், பதிப்புத்துறைப் பொறுப்பாளர் என்று பல நிலைகளில் பணிபுரிந்தவர். சென்னையில் அமைந்துள்ள தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனத்தில் இயக்குநராகவும் பணிபுரிந்தவர்.

சமூகப் பணிகளுக்கு மாத ஊதியம் முழுவதையும் வழங்கியது, பாவலரேறு பெருஞ்சித்திரனாருடன் தொடர்பு, உயர்துணைவேந்தராக விளங்கியது, "அழகப்பனைக் கைது செய்” என்று ஊழியர்கள் முழக்கமிடும் அளவுக்குப் பல்கலைக்கழகத்துக்குச் சார்பாக நின்றமை, ம.பொ.சி.அவர்களுக்கு எடைக்கு எடை நாணயம் வழங்கியமை இவையெல்லாம் இவரின் சிறப்புகளுக்குச் சான்று.

பேராசிரியர் ஆறு.அழகப்பனார் அவர்கள் தெ.பொ.மீ, அ.சிதம்பரநாதனார், மகாவித்துவான் தண்டபாணி தேசிகர், இ்லால்குடி நடேச முதலியார், க.வெள்ளைவாரணனார், மு.அருணாசலம் பிள்ளை, வித்துவான் முத்துசாமி பிள்ளை, மு.சண்முகம் பிள்ளை, செ.வை.சண்முகம், உலக ஊழியர், கே.என்.சிந்தாமணி, மு.இராமசாமி பிள்ளை, மு.அண்ணாமலை, மெ.சுந்தரம், புலவர் தில்லைக்கோவிந்தன், டாக்டர் ஆறுமுகனார், மு.அருணாசலம், வி.மு.சோமசுந்தரம் பிள்ளை உள்ளிட்ட அறிஞர் பெருமக்களிடம் தமிழ் பயின்ற பெருமைக்குரியவர்.

இவர் இயற்றிய நூல்களுள் குறிப்பிடத்தக்கன:
1. திருமலை நாயக்கர்
2. நாடகச் செல்வம்
3. திருவள்ளுவர் நாடகம்
4. எள்ளல் நாடகம்
5. கரிவேப்பிலை
6. நாட்டுப்புறப்பாடல்கள் திறனாய்வு
7. தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (முனைவர் பட்ட ஆய்வேடு)
8. தாலாட்டுகள் 500
9. பெரியார் ஈ.வெ.ரா (சாகித்ய அகாதெமிக்காக)
10. உ.வே.சா.சொல்லும் சுவையும் (உ.த.நி.)
11.இராசா சர் முத்தையா செட்டியார் (வானதி பதிப்பகம்)

தமிழக அரசின் கலைமாமணி விருதும், திருவள்ளுவர் விருதும் பெற்றவர்.  இவரது தலையாய படைப்பான தமிழ் நாடகம் தோற்றமும் வளர்ச்சியும் நூலைப் பி டி எஃப் வடிவில்
(https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8kuQ9&tag=தமிழ்+நாடகம்+தோற்றமும்+வளர்ச்சியும்#book1/)
தருவதில் மகிழ்கிறேன்.

தேமொழி

unread,
Nov 11, 2023, 8:40:25 PM11/11/23
to மின்தமிழ்
பதிப்பு செம்மல் ச மெய்யப்பனார்

பதிப்பு செம்மல் ச மெய்யப்பனார் அவர்கள் மணிவாசகர் பதிப்பகத்தின் மூலம் மிகச் சிறந்த ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டு அன்னைத் தமிழை அழகு செய்த பெருமகனார்.  இவர் பிறந்த ஊர் கடியாப்பட்டி.
பதிப்பு செம்மல் ச மெய்யப்பனார்.jpeg
இவர், தான் பயின்ற அண்ணாமலை பல்கலைக்கழகத்திலேயே விரிவுரையாளராகவும் பணியாற்றினார்; பின்னர் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

தமிழ் மொழியின் மீதிருந்த காதலின் காரணமாக சத்தியமூர்த்தி என்ற தன் இயற்பெயரை மெய்யப்பன் என்று மாற்றிக் கொண்டார்.  

16 நூல்கள் இவர் எழுதியிருக்கிறார். தாகூர், கபிலர், தில்லைத் திருக்கோயில், அறிவியல் சூடி, மதுரை மீனாட்சி போன்றவை இவரின் பெருமைக்கு சான்று தரும் படைப்புகள்.

1961 ஆம் ஆண்டு மணிவாசகர் பதிப்பகத்தை துவக்கினார். ஆராய்ச்சி நூல்களையும், இனிய புத்தகங்களையும் மக்களிடம் பரப்ப வேண்டும் என்னும் நல்நோக்கில். யாரும் வெளியிடத் தயங்கும், வெளியிட்டால் கை சுட்டுக் கொள்ள நேருமோ என சிந்தித்த நிலையில் அதனை தயங்காது பதிப்பித்தமை கூடுதல் சிறப்பு.

இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் மெய்யப்பனாரை விட வேறு ஒரு பதிப்பாளரை காண இயலாது. பொருள் ஒன்றே குறிக்கோளாய்க் கொண்டு நூல்களை வெளியிடும் சில பதிப்பகத்தாருக்கு நடுவே அரிய தமிழில் நூல்களை வெளியிட்டு தமிழுக்கு அணி பூட்டி மகிழ்ந்தவர்.

மணிவாசகர் பதிப்பகத்தின் நூல்கள் பல பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் இவரைப் பாராட்டி தமிழவேள் என்னும் பட்டம் வழங்கியுள்ளார். தர்மபுரம் ஆதீனம் மகா சந்நிதானம், செந்தமிழ் காவலன் என விருது வழங்கி சிறப்பித்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ்த்துறை கதிர்மணி விளக்கச் செம்மல் என்று விருதினையும் வழங்கி உள்ளது

எளிமை இவருடன் எப்போதும். பயணத்தின்போது தரையில் துண்டை விரித்து பையை தலைக்கு வைத்து  உறங்கிடும் உத்தமர். கைக்கு கடிகாரமோ, காலுக்கு செருப்பும் கூட செருக்கு என அணிந்ததில்லை.

ஜூன் மாதம் 1933 ஆம் ஆண்டில் பிறந்து, ஜூன் மாதம் 2004 நம்மை விட்டு பிரிந்தாலும் பதிப்பித்த நூல்கள் அவரின் இருப்பை நமக்கு காட்டிக் கொண்டே இருக்கின்றது.

தமிழ்க்கடல் இராய சொ பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? இதோ அவர் பற்றிய மணிவாசகர் பதிப்பகம் வெளியீட்டின் பி டி எஃப் வடிவம் https://www.tamilvu.org/library/nationalized/pdf/35-subbureddiyar/511-tamilkkadalrayaso.pdf     உங்களுக்காய்.

தேமொழி

unread,
Nov 19, 2023, 7:18:59 PM11/19/23
to மின்தமிழ்
பேராசிரியர் க. த திருநாவுக்கரசு

திருக்குறள் கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்ப பெரும் முயற்சிகள்  மேற்கொண்ட தமிழ் அறிஞர்கள் பலரில் ஒருவர் இவர். இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்கள் எழுதியுள்ளார். இவர் நடமாடும் நூல்நிலையமாய்த் திகழ்ந்தவர். எந்த செய்தியைப் பற்றி கேட்டாலும் உடனே விளக்கம் சொல்லும் பேரறிஞர்.

தமிழ்ப் பேராசிரியர், தமிழ் எழுத்தாளர், அறிஞர், விமர்சகர், மொழி பெயர்ப்பாளர் என இவர் ஒரு பன்முக ஆளுமை.  இவர் வரலாறு, கல்வெட்டு, மொழியியல், சமூகவியல், மானிடவியல், தத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் புலமை பெற்றவர்.

கீழுள்ளவை அவர் எழுதிய வரிகள் . . .

"உலகில் உள்ள மக்கள் ஐந்தில் ஒரு பகுதியினரால் புத்த சமயம் பின்பற்றப்படுகிறது.  புத்த சமயத்தின் புனித மொழி -  வேத மொழி பாலி. பாலி  மொழியில் புத்த சமய நூல்கள் எண்ணற்றவை எழுதப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த பாலி மொழிக்கு முதன் முதலில் இலக்கணத்தை வகுத்துக் கொடுத்த பெருமை தமிழகத்திற்கே உரியதாகும், கச்சாயனார் (கச்சி என்ற காஞ்சியைச் சேர்ந்தவர்)  முதல் முதல், பாலி மொழிக்கு இலக்கணம் எழுதியுள்ளார். இந்நூலே  இன்று வரை பெரு வழக்கு பெற்ற நூலாக விளங்கி வருகிறது.

பழந்தமிழ் இலக்கியங்களில் ஒப்புயயர்வற்று வழங்குவது திருக்குறள். மக்களினத்தின் வேதமாக விளங்கும் திருக்குறளில் மில்டனின் கவி நலனும், தாந்தேயின் காப்பிய அழகும் செகப்பிரியரின் உலகப் பொதுமையும், பிளேட்டோவின் இலட்சிய நோக்கும், மார்க்கசு அரேலியசின் அறவேட்கையும் ஏற்ற அளவில் இணைந்தும், இழைந்தும், கலந்தும் காணப்படுகின்றன. இத்தகைய அரும்பெறும் நூலினை உலகிற்குத் தந்து வான்புகழ் கொண்டது தமிழ்நாடு.  

இந்தியாவில் உள்ள சமயங்கள் ஒவ்வொன்றின் சார்பாக இயற்றப்பட்ட இலக்கியங்களை உடைய மொழியும் தமிழேயாகும். தமிழ் மொழி ஒன்றில்தான் கிறிஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்களும், வழிபாட்டு பாடல்களும் காணப்படுகின்றன. வேற எந்த இந்திய மொழிகளிலும் இந்தியாவில் உள்ள சமயங்கள் அனைத்தும் உடைய திருநூல்களும் இவ்வாறு முதல் நூல்களாக அமைந்திருக்கவில்லை

குழந்தை பிறந்து சில நாட்களுக்குள் அதன் சில மயிரினை மழித்து, காதில் துளையிட்டு அணிகலன் அணியும் வழக்கம் பண்டைத் தமிழருடையதாகும்.
இப்படியெல்லாம் எழுதிய தமிழறிஞர்  திருக்குறள் தொடர்பான நூல்களுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்ற மூவரில் ஒருவர்தான் பேராசிரியர் க. த திருநாவுக்கரசு.
திருக்குறள் மணி க த திருநாவுக்கரசு.jpeg
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தவர். முனைவர் மு. வரதராசனின் படைப்பிலக்கியங்களை ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். திருக்குறள் மணி என்ற பட்டம் இவருக்குத்தந்து தன்னை அலங்கரித்துக் கொண்டது.

பின்னர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணி புரிந்தார். 1974-இல் இவர் எழுதிய திருக்குறள் நீதி இலக்கியம் என்ற இலக்கிய விமர்சன புத்தகத்திற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.

இவர் எழுதிய தமிழ்ப்பண்பாடு நூலிலிருந்து சில பகுதிகள் தான் உங்கள் பார்வைக்கு. முழு நூலையும் படித்திட ஏதுவாய் பி டி எஃப் வடிவத்தில் தந்துள்ளேன்.
(https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0006183_தமிழ்ப்_பண்பாடு.pdf)

இவர் எழுதியுள்ள நூல்களின் பட்டியல்:
Studies in Tamil and Greek Literature
Chieftains of the Sangam age
A Critical study of Dr. Mu. Va’s works
சிந்துவெளி தரும் ஒளி (1959)
வாழ்வும் வரலாறும் (1960)
தமிழர் நாகரிக வரலாறு – விடிவெள்ளி (1962)
தம்மபதம், (1971)
முதலாம் ராசராச சோழன் (1975)
வரலாற்று வஞ்சி (1976)
திருக்குறள் நீதி இலக்கியம் (1977),
அறிஞர் அறவாழி (1978)
இலங்கையில் தமிழ்ப்பண்பாடு (1979)
பர்மாவில் தமிழ்ப்பண்பாடு (1982)
தாய்லாந்தில் தமிழ்ப்பண்பாடு (1982)
தமிழ் நிலவு
திருக்குறளும் இந்திய அறநூல்களும்,
சான்றோர் கண்ட திருவள்ளுவர்
அடிமை விலங்கு
பழந்தமிழ் மொழியியல்
வாழ்வும் இலக்கியமும்
சிந்துவெளி எழுத்து வடிவங்கள் (1982)
திருக்குறள் கற்பனைத் திறனும் நாடக நலனும், (1982)
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு, (1987) ,
திருக்குறள் நூலடைவு
தொல்காப்பிய நூலடைவு,
தமிழ்ப்பண்பாடு, (2009)
ஒளி விளக்கு
மானிடவியல் சொல்லகராதி, (1972),

இவரின் மொழிபெயர்ப்பு நூல்கள் இலக்கியச் சிற்பிகள் வரிசை என சாகித அகாதமி வெளியிட்டுள்ளது.:
ராஜாராம் மோகன் ராய்
ஜீவானந்த தாஸ்
லட்சுமிநாத பெஸ்பருவா

திறனாய்வு அணுகுமுறைகள், (1989) நூலை பதிப்பித்துள்ளார் இவர்.

கூகுள் தேடுபொறி, சொன்னால் எழுதும் வாய்ஸ் டைபிப், காப்பி பேஸ்ட் இப்படி எந்த வசதியும் இல்லாத காலத்தில் எவ்வளவு படைப்புகள்?

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராய்ப் பணியாற்ற்க் கொண்டிருந்த வேளையில் தமது இருக்கையிலேயே இன்னுயிர் துறந்த தமிழறிஞர் தான் திருக்குறள் மணி க த திருநாவுக்கரசு அவர்கள்.

தேமொழி

unread,
Nov 22, 2023, 1:07:44 AM11/22/23
to மின்தமிழ்
முதுமுனைவர் புலவர் இரா.இளங்குமரனார்

இன்று நாம் அறிந்துகொள்ள இருக்கும் அறிஞரின் நூல் ஒன்றின் ஆரம்ப நான்கு வரிகளே, மேலே படிக்க நகர விடாமல் செய்து விட்டன.

அதோ அந்த தமிழறிஞரின் அதே வரிகள்.

மழை நாள்;  மலைசார்ந்த காடு; செடிகள் தூறுகள் புல்வெளி எனப் பச்சைப் போர்வை பரத்திய அழகு.

தொழுவத்தில் இருந்து ஆயன் தன் ஆக்களை மேய்ச்சலுக்கு ஓட்டிக்கொண்டு காட்டுக்குச் சென்றான்

இதில் என்ன ஆச்சரியம் என்று கேட்கிறீர்களா?

நின்றும் அமர்ந்தும் சினிமாப் பாடல்களை நகைச்சுவையில் விளக்கும் அலெக்ஸ் சொன்ன வீடியோ பாத்திருப்பீங்களே? [இல்லையா அப்போ https://www.youtube.com/shorts/ZU0LMYIXNGk இல் பாருங்க.]

இப்பொ இந்த தமிழறிஞர் எழுதிய எளிமையான வரிகள் மறுபடியும் பாருங்கள்.

நான்கு வரிகளில் ல, ள, ழ, ந, ன, ண, ர, ற எல்லாம் வந்திருக்கே!

மலை - ல
நாள் - ள
அழகு – ழ

நாள் - ந
எனப் - ன
ஓட்டிக்கொண்டு - ண

சார்ந்த - ர
தூறுகள் - ற

திருக்குறளுக்குக் கோயில் எழுப்பி, வள்ளுவமாய், வாழும் வள்ளுவராய் வாழ்ந்தவரும், தமிழ்க் கடல் உலகப் பெருந் தமிழர், செந்தமிழ் அந்தணர், முதுமுனைவர் புலவர் இரா.இளங்குமரனார் தான் அந்த எளிய தமிழ்ச் சொற்களின் சொந்தக்காரார்.
முதுமுனைவர் புலவர் இரா.இளங்குமரனார்.jpeg
அந்தச் சொற்கள் இடம்பெற்ற உவமைவழி அறநெறி விளக்கம் நூல் பி டி எஃப் வடிவில் உங்கள் பார்வைக்கு.
[https://www.ulakaththamizh.in/uploads/book/pdf/UvamaivazhiAraneriVilakkam1.pdf]

பள்ளிக் கூடமே இல்லாத, வாழவந்தாள் புரத்தில், பள்ளிக் கூடம் ஒன்றினை உருவாக்கி, தானே ஆசிரியராகவும் பணியாற்றியவர். பின்னர் கரியவலம் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன், தனது குடும்பத்தினரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, தனது ஓய்வூதியத் தொகை முழுவதையும் செலவிட்டு, திருச்சி அல்லூரில் திருவள்ளுவர் தவச் சாலையினை நிறுவித், தமிழ் முனிவராய் வாழ்ந்தவர்.

திருக்குறள் வகுப்புகளைத் தமிழகம் முழுவதும் நடத்தியும், ஐயாயிரத்திற்கும் மேற்பட்டத் திருமணங்களை தமிழ் முறைப்படி நடத்தியும் வைத்தவர். புதுமணை புகுவிழா, பூப்புனித நீராட்டு விழா, காதணி விழா, மணி விழா, பெயர் சூட்டு விழா மற்றும் இறுதிச் சடங்குகள் உட்பட அனைத்தையும், தமிழ் முறைப்படி. தூய தமிழிலே பாங்குடன் செய்து வந்தவர்.

தமிழில் எப்படி விழாக்களை நடத்துவது? என்பதை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், தமிழ் நெறிக் கரணங்கள் என்னும் நூலொன்றினையும் எழுதி வெளியிட்டவர். தனது காலத்திற்குப் பிறகும், இப்பணியினைத் தொடர்ந்து திறம்பட நடத்திட, தமிழகம் முழுவதும் தமிழறிஞர்கள் பலருக்கும் பயிற்சி அளித்து, தமிழின் பெருமையினைக் காத்து வருபவர்.

ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.

இளங்குமரனார் எழுதிய திருக்குறள் கட்டுரைகள் என்னும் நூலின் பத்து தொகுதிகளை, 1963 இல் ஜவகர்லால் நேரு அவர்கள் வெளியிட்டார்.

தமிழ்க் கடல் இளங்குமரன் ஐயா அவர்கள் தனது வாழ்வியல் அனுபவங்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டுள்ளார். நூலின் தலைப்பு ஒரு புல்  பணியுமாம் என்றும் பெருமை

வீட்டிற்கொரு நூலகம் அமைக்கச் சொல்வர். ஆனால் இளங்குமரனாரே நூலகத்தில், தனது இல்லத்தை அமைத்தவர். சுமார் இருபத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள். வெளிநாட்டினர் உட்பட, யார் வேண்டுமானாலும், இங்கு வந்து தங்கி ஆய்வு மேற்கொள்ளலாம்.

தமிழ் இனம், தமிழர் வாழ்வு, தமிழ் இலக்கியங்களுக்காகத் தொண்டாற்றிய, நூற்றுக் கணக்கானத் தமிழறிஞர்களின் படங்களைக் கொண்ட கலைக் காட்சியகம் ஒன்றினையும் தனது இல்லத்திலேயே ஏற்படுத்தி பராமரித்தும் வந்தவர்.
      

தேமொழி

unread,
Nov 26, 2023, 12:27:20 AM11/26/23
to மின்தமிழ்
தமிழ்க்கடல் இராய சொக்கலிங்கம்

இன்று நாம் சந்திக்க இருக்கும் ஒரு தமிழறிஞர் பன்முகத்திறன் கொண்டவர். இவர் திருக்குறளுக்கு விளக்கம் சொல்லிய விதம் பாருங்களேன்...

தகை அணங்கு உறுத்தல்: இது களவியலில் முதல் அதிகாரத் தலைப்பு. இதன் பொருள்  விளங்கவில்லை என்று கருதலாம். தகை -  அணங்கு -  உறுத்தல் என்ற மூன்று சொற்களைக் கொண்ட தொடர் இது.  இதனை அணங்கு -  தகை - உறுத்தல் என்று மாற்றிக் கொண்டால் பொருள் விளங்கிக் கொள்வது எளிதாகும். அணங்கு என்றால் பெண். தகை என்றால் அழகு முதலியன. உறுத்தல் என்றால் வருத்தத்தை உண்டாக்குதல். எனவே இச்சொற்றொடர் மங்கையின் அழகு  முதலியன வருத்தத்தைச் செய்தல் என்ற பொருள் தந்து நிற்கின்றது.  மேலும் இந்த அதிகாரத்தின் பெயர் நிறைந்த பொருளை உள்ளடக்கிக் கொண்டுள்ளது. பெண்ணின் அழகு யாருக்கு வருத்தத்தை தருகின்றது? அந்தப் பெண் யார்? அஃது ஏன் வருத்துகின்றது? என்ற வினாக்கள் எழுகின்றன. இவற்றிற்குரிய விடைகள் முழுவதும் அந்த அரிய சொற்றொடருக்குள் தொக்கி நிற்கின்றன.

வள்ளுவர் பெருமானே தம் காமத்துப் பாலை ஒரு நாடகம் போல் ஆக்கியுள்ளார். (அதில் கூறப்பெறும் செய்திகள் அனைத்தும் நாடக வழக்காக அமைந்தவை.) செய்திகளைக் கூறும் தலைவி, தோழி, தலைவன் முதலியோரும் நாடக வழக்காகப் படைக்கப் பெற்றவர்கள் என்பதை நினைவிலுருத்திக் கொண்டு காமத்துப்பாலை அனுபவிக்க வேண்டும். கவிஞர் பெருமான் திருக்குறளின் மற்ற பகுதிகளை தற்கூற்றாக அமைத்தது போல் காமத்துப்பாலை அமைக்கவில்லை. இப்பகுதியில் வரும் கூற்றுகள் யாவும் பிறர் வாயிலாக வெளிப்படுபவை. இவை யாவும் அகத்துறைகளாக வெளிப்படுகின்றன.

களவியல் என்பது காதல் சேர்க்கை. காதலர் சேர்வதற்கு முதலாவது நிகழ்ச்சி அவ்விருவரின் சந்திப்பு. சோலையில் ஒரு பருவ மங்கை தனித்து நிற்கின்றாள்.  ஆங்கு ஓர் இளைஞன் அந்த அணங்கைக் காண்கின்றான். அணங்கின் அழகு அவ்விளைஞனை வருத்துகின்றது.  இதுதான் தகை அணங்கு உறுத்தல் என்பது. அம்மெல்லியலாளின் பேரெழிலால் தாக்கப்பெற்ற இளைஞன் அம்மங்கை நல்லாளைப் பற்றி  எண்ணமிடுகின்றான். அவன் உள்ளப் பெருக்கம் ஊற்றெடுத்தோடும் அழகே இந்த அதிகாரத்தின் பாக்கள் பத்தும்.

தமிழ்க்கடல் இராய சொக்கலிங்கம்.jpeg

இப்படி விளக்கவுரை எழுதிய தமிழறிஞர் தமிழறிஞர் தமிழ்க்கடல் இராய சொக்கலிங்கம். https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0005922_தமிழ்க்_கடல்_இராய_சொக்கலிங்கம்.pdf

இராய. சொக்கலிங்கம் தமிழறிஞர்; கவிஞர்; சமய அறிஞர்; எழுத்தாளர்; சமூகச் சீர்திருத்தக்காரர்; காந்தியர். இராய. சொ. அழுத்தமான நாட்டுப் பற்றாளர்.  அவர் காலம் நாட்டு விடுதலை உணர்வு கொழுந்து விட்டு எரிந்த காலம். காரைக்குடியில் தேசபக்தர் சுப்பிரமணிய சிவா தேசிய உணர்வை வளர்த்த போது அவருக்கு ஆதரவாக இருந்த நகரத்தார்கள் பலரும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். செட்டி நாட்டு ராஜாராம் மோகன் ராய் என்று அழைக்க பட்ட சீர்திருத்த செம்மல் சொ முருகப்பா, கம்பன் அடிப்பொடி சா கணேசனார், வ வே சு ஐயர், சுப்பிரமணிய சிவா வ.உ.சி போன்ற பெருமக்களின் தொடர்பால் இராய சொவும் எழுச்சிமிக்க விடுதலை வீர்ராகத் திகழ்ந்தார். தமிழ்த்தென்றல் திருவிகவை அரசியல் குருவாக்க் கொண்டார்.

சொக்கலிங்கம் தனது ஆரம்பக்கல்வியை ஆசிரியர் சுப்பையா என்பவரின் திண்ணைப் பள்ளியில் தொடங்கினார். பதினெட்டாவது அகவை முதல் இருபதாம் அகவை வரை பண்டித சிதம்பர் அய்யர் என்பவரிடம் தமிழிலக்கண, இலக்கியங்களைக் கற்றார். இடையில், தனது ஒன்பதாம் அகவையில் தன் தந்தை பாலக்காட்டில் நடத்திய கடையில் வேலை செய்தார். அப்பொழுது மலையாளம் கற்றார். 1911 ஆம் ஆண்டு முதல் 1916 ஆம் ஆண்டு வரை மலேசியாவில் உள்ள பிலாப்பம் என்னும் ஊரில் தன் பெற்றோருடன் வாழ்ந்தார். அங்குள்ள கடையில் பணியாற்றிக்கொண்டே மலாய் மொழியும் ஆங்கிலமும் கற்றார்.

இராய. சொக்கலிங்கம் இளமையிலேயே தமிழார்வம் உடையவராக இருந்தார். குமரன் இதழின் ஆசிரியர் சொ. முருகப்பர் என்பவருடன் இணைந்து செட்டிநாட்டுப் பகுதியில் தமிழ்ப்பணியில் ஈடுபட்டார். 1917 செப்டம்பர் 10 ஆம் நாள் இந்து மதாபிமான சங்கத்தைத் தோற்றுவித்தார்.

விவேகானந்தர் படிப்பகத்தை நிறுவினர். அதன் தலைவராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். இச்சங்கத்திற்கு வருகைதந்த சுப்பிரமணிய பாரதியாயருடன் 1919 நவம்பர் 9 ஆம் நாள் தன் நண்பர்கள் சூழ ஒளிப்படம் எடுத்துக்கொண்டார். பாரதியார் இச்சங்கத்தைப் பற்றி ஹிந்து மதாபிமான சங்கத்தார் என்னும் தலைப்பில் ஏழு விருத்தங்கள் எழுதியுள்ளார்.
தமிழ்க்கடல் இராய சொக்கலிங்கம்2.jpg
சொ. முருகப்பா என்பவர் 1920 ஆம் ஆண்டில் தொடங்கிய தன வைசிக ஊழியன் என்னும் இதழின் ஆசிரியப் பொறுப்பை இராய. சொக்கலிங்கம் 1922 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொண்டார். இதழின் பெயர் ஊழியன் என மாற்றப்பட்டது. 1942 ஆம் ஆண்டு வரை இவ்விதழ் காரைக்குடியிலும் சென்னையிலும் இடம்மாறி வெளிவந்தது.

காந்தியரான ராய.சொக்கலிங்கம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1932 ஆம் ஆண்டில் சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார். 1934 ஆம் ஆண்டில் காந்தியடிகளைத் தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து விருந்து படைத்தார்.

ராய. சொக்கலிங்கம் 1938 ஆம் ஆண்டில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வென்று 1941 ஆம் ஆண்டு வரை காரைக்குடி நகரவையின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். அப்பொழுது அங்கு நான்கு தொடக்கப்பள்ளிகளே இருந்தன. அவற்றைப் பதினேழாகப் பெருக்கினார்.

ராய. சொக்கலிங்கம் 28 சமய நூல்களையும் 5 கட்டுரைத் தொகுப்புகளையும் 8 கவிதைத் தொகுதிகளையும் 2 ஆய்வு நூல்களையும் எழுதியிருக்கிறார். அவை அனைத்தும் தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித் துறையால் 2009-10 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

தமிழ்க்கடல், சிவமணி, சிவம் பெருக்கும் சீலர், வண்கவி வள்ளல் போன்ற பட்டங்கள் இவரை அலங்கரித்தன,

ராய. சொக்கலிங்கம் தான் சேர்த்து வைத்திருந்த நூல்களை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நூலகத்திற்கு வழங்கி விட்டார்.

ராய. சொக்கலிங்கம் 1974 செப்டம்பர் 24ஆம் நாள் காரைக்குடியில் காலமானார்.

இவரது புகழ்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பான 'குற்றாலவளம்' [https://www.tamilvu.org/library/nationalized/pdf/04-rayachokalingam/kutraalavalam.pdf] பி டி எஃப் வடிவில் தருவதில் மகிழ்வு.



—அந்தமான் கிருஷ்ணமூர்த்தி
#WhatsApp share
வாட்சப்-தொல்காப்பியர் பேரவை-குழும பதிவு   
--------------------

தேமொழி

unread,
Dec 1, 2023, 1:38:06 AM12/1/23
to மின்தமிழ்
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

இன்று நாம் சந்திக்க இருக்கும் தமிழறிஞருடைய பெயர் ஒன்றே போதும். இவருடைய பெயர், இந்தியா என்று மட்டுமே எழுதி லண்டனில் இருந்து ஒருவர் கடிதம் அனுப்ப, அது சரியாக அவர் கைகளுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அப்படியெனில் அவர் பெயர் ஒன்றே போதும் தானே!

அவரிடம் பாடம் கேட்கும் இவருடைய மாணவர் ஒருமுறை என்னை போல் ஓலைச்சுவடியில் விரைவாக எழுத உங்களில் யாருக்காவது முடியுமா? என் கை வலிக்கும் அளவுக்கு நம் ஆசானால் பாட்டுக்களைச் சொல்ல இயலாது என்று செருக்குடன் சொல்லியபடி இருந்தார்.

இதனைக் கேட்ட இந்த ஆசிரியர் ஒரு நாள், காலையில் எட்டு மணிக்கு தான் சொல்லுகின்ற தமிழ் பாடல்களை சுவடியில் எழுதுமாறு சொல்லத் துவங்கினார். ஒன்பது மணி ஆயிற்று; பத்து மணியும் ஆயிற்று; காலை உணவு எல்லாவற்றையும் தவிர்த்து ஆசிரியர் சொல்லிக் கொண்டே போக, அந்த மாணவரால் தொடர்ந்து எழுத இயலவில்லை. ஐயனே என்னை தயவு கூர்ந்து மன்னிக்க வேண்டுகிறேன். அடியேனால் மேற்கொண்டு ஒரு வரி கூட எழுத இயலாது. கை வலி அதிகமாகிவிட்டது என் செருக்கும் அடங்கி விட்டது என்று தன் தவறினை ஒப்புக் கொண்டார்.

இவ்வாறாக தன் மாணவர்கள் செருக்கு இன்றி அடக்கமாக வாழ வேண்டும் எனக் கற்பித்த தலைசிறந்த பெரும் புலவர் தான் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.  
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.jpeg
அன்றைய காலகட்டத்தில் ஆசிரியர் மாணவர்களின் உறவு குரு சிஷ்யன் என்ற அளவில் தான் இருந்தது. ஆனால் இந்த தமிழறிஞர் தன்னிடம் கல்வி கற்க வந்த மாணவர்கள் மீது ஒரு தாயை விட மிகுந்த மதிப்பும் பேரன்பும் கொண்டிருந்தார். அதனை அந்த மாணவர்கள் தங்கள் வாயாலேயே பலவாறு புகழ்ந்து கூறியுள்ளனர்.

ஒருவரிடம் சிறிதளவு தமிழறிவு இருந்தாலும் கூட, அவரை பெரிதாக போற்றும் உயர் பண்பாளர் இவர். மேலும் நினைத்த அளவிலேயே விரைந்து கவி பாடும் திறமை இவரின் தனி சிறப்பு எனலாம்.

ஓலைச்சுவடி காலத்திலேயே ஒரு லட்சம் தமிழ் பாடல்களை, மற்றவர் பாடக் கேட்டு மனப்பாடம் செய்து அறிவில் தேக்கி அடுத்த தலைமுறைகளுக்கு கற்றுத் தந்தவர். தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் தமிழ் பற்றுக்கு காரணமாக இருந்த அவரது ஆசான். மகாவித்துவான் என அனைவராலும் ஆழைக்கப்பட்ட மீனாட்சிசுந்தரம் பிள்ளை.

மதுரையில் பிறந்த மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் தந்தை சிதம்பரம் பிள்ளை. தாயார் அன்னந்தாச்சி.

காஞ்சீபுரம் சபாபதி முதலியாரரிடம் புராணங்களையும் திருவேங்கடாசல முதலியாரரிடம் பாகவதம், பிரபந்தம் ஆகியவற்றையும் கற்றுக் கொண்டார். ஆசான்கள் இறைவனுக்கு ஒப்பானவர்களாக கருதப்பட்ட, அச்சு நூல்கள அற்ற அக்காலத்தில் தமிழ் கற்க பலரை ஊர் ஊராக தேடிக் கண்டு அவர்களைப் பாடச் சொல்லி அச்செய்யுள்களை முழுவதுமாய் மனப்பாடம் செய்து தன் அறிவில் மிகப் பெரிய நூலகத்தை உருவாக்கிக் கொண்டார்.

ஒரு முறை தண்டியலங்காரம் கற்ற ஒரு யோகி கஞ்சா பிடித்தபடி திருச்சி நகர வீதிகளில் அலைந்து திரிவது பற்றி கேள்விப்பட்டு அவரைத் தேடி இவரும் திருச்சி சென்றார். அங்கு இவரும் வீதிகளில் அலைந்து அவரை கண்டுபிடித்து அவருக்கு தேவையான கஞ்சா வாங்கி கொடுத்து தண்டியலங்காரத்தை பாடச் சொல்லி கேட்டு அதனை முழுவதுமாக மனப்பாடம் செய்து கொண்டார்.

வித்துவான் அவர்கள் சிறு வயதிலேயே எண்ணற்ற அந்தாதி, பிள்ளைத்தமிழ், கோவை ஆகியவற்றை புனைந்துள்ளார். இவ்வாறாக இவர் இயற்றிய நூல்களின் எண்ணிக்கை 65.

திருவாவடுதுறை மகாசன்னிதானமாக இருந்த அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் மீது இவர் பாடிய கலம்பகம் அரங்கேற்றப்பட்டபோது மகாவித்துவான் எனும் பட்டம் இவருக்கு சூட்டப்ட்டது

பல மாணவர்களுக்கு தமிழ் கற்று தரும் நல்லதோர் ஆசானாக விளங்கியவர். இவரிடம் படித்தவர்களுள் வித்துவான் தியாகராய செட்டியார் மற்றும் சதாவதனம் சுப்புராய செட்டியார் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

தமிழ்த் தாத்தா என அனைவராலும் அழைக்கப்பட்ட உ.வே. சாமிநாத அய்யர் தான், தன் ஆசானை பற்றி ஒரு முறை என் தாயாரைக் காட்டிலும் அதிகமான பாசத்தை என் மேல் காட்டியவர் என புகழ்ந்து கூறியுள்ளார்.

தன் 69ம் வயதில் பிள்ளைவர்கள் இறக்கும் தருவாயில் தனது மாணாக்கன் உ.வே.சா.வை திருவாசகம் ஓதச் சொல்லி அதைக் கேட்டபடியே உயிர் நீத்தார்.

மகாவித்துவான் அருளிய திருப்பெருந்துறைப் புராணம் கையடக்க ஆவண வடிவில் இதோ உங்களுக்காக. . . .https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM8kZYy#book1/




—அந்தமான் கிருஷ்ணமூர்த்தி
#WhatsAppShare

தேமொழி

unread,
Dec 5, 2023, 6:21:02 PM12/5/23
to மின்தமிழ்
தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதர்

ஒரு பல்கலைக் கழகம் ஆற்ற வேண்டிய பணியை தனிமனிதனாக நின்று மேற்கொண்டார். இசைத் தமிழ் இயக்க ஆய்வின் தலைமகனாவும், இசைக் களஞ்சிய முன்னோடியாகவும், இயலிசைப் புலவராகவும்,    ஏழு இசை மாநாடுகளைத் தன் சொந்தக் செலவில் கூட்டிய தலைமகனாகவும், தமிழ் மூலம் இசைப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வாழ்ந்த தமிழன்பராகவும் விளங்கியவர் தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதர்.  
தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதர்.jpeg
ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர் புகழ்பெற்ற தமிழிசைக் கலைஞர், சித்த மருத்துவர் மற்றும் தமிழ் கிறித்தவ கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆபிரகாம் பண்டிதர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர்வத்தினால், முழுநேர மருத்துவராகப் பயிற்சி பெற்றுப் பணியாற்றலானார்.

பள்ளியில் பயிலும் போது  எல்லா பாடங்களிலும் முதன்மையாகத் தேறியவர். ஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் முதன்மை மாணவராகத் தேறினார். ஆபிரகாம் தனது ஆரம்பக் கல்வியை சுரண்டையில் முடித்து, பின்னர் பன்றிக் குளம் என்ற ஊரில்  படித்தார். பின்னர்  சுரண்டைக்கு வடக்கே திருமலாபுரம் என்ற சிற்றூரில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகவும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். 1874 ஆம் ஆண்டு ஆபிரகாம் திண்டுக்கல்லில் இருந்த நார்மல் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றார்.  அங்கும் முதன்மை மாணவராகத் தேறினார். இவரின் அறிவாற்றலைக் கண்ட யார்க் துரை  இவரைத் தனது மாதிரிப் பள்ளியில் ஆசிரியராக நியமித்தார்

தனது 20 ஆவது வயதிலேயே பாட்டு எழுதி இசையமைத்துப் பாடும் திறன் பெற்று ஆங்கியேல துரை யார்க் அவர்களிடமிருந்து வயலின் ஒன்றினையும் பரிசாகப் பெற்றார்.

1912 ஆம் ஆண்டில் தஞ்சையில் மின் விசையினால் இயங்கும் முதல் அச்சகத்தை நிறுவினார் லாலி அச்சகம் என்ற பெயரில்.

இவர் ஒரு புகழ்பெற்ற தமிழிசைக் கலைஞர், சித்த மருத்துவர், சோதிடக் கலைஞர் மற்றும் தமிழ் கிறித்தவ கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர். பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர்வத்தினால், முழுநேர மருத்துவராகப் பயிற்சி பெற்றுப் பணியாற்றலானார். இவர் தமிழிசைக்கு ஆற்றிய பணி சிறப்பானது.

சித்தமருத்துவத்தில் ஆர்வம் கொண்டு அதிலும் வல்லவர் ஆகி பண்டுவர் என அழைக்கப்படலானார். அதுவே பின்னர் மருவி பண்டிதர் எனவும் அழைக்கப்படலாயிற்று.

1907 முதல் 1914 வரையில் இவரது கருணானந்தபுரம் விவசாயப் பண்ணை பல்வேறு விவசாயப் பொருட்காட்சிகளில் பங்குபெற்று  6 தங்கம், 37 வெள்ளி, 7 பித்தளைப் பதக்கங்களையும் வென்றுள்ளது. விவசாயத்தில் இவர் ஆற்றிய பங்கினைப் பாராட்டி ராவ் சாஹேப் விருதினை 1909 இல் வழங்கிப் பாராட்டியது அன்றைய ஆங்கிலேய அரசு.

இவர் மேலை நாட்டு நூல்களில் காணப்படும் செய்திகள் பலவற்றைத் தமிழர் அறிந்துணரும் பொருட்டு மொழிபெயர்த்தும் தந்துள்ளார். இவையல்லாமல் தெலுங்கு மொழியில் உள்ள    தியாகராசருடைய கீர்த்தனைகள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.

இசைத்தமிழ் சம்பந்தமாக இசை ஆய்வாளர்கள், இசை விற்பன்னர்கள், மொழியியல் அறிஞர்கள் ஆகியோரின் கருத்துகளைத் தெரிந்து கொள்ளவும், சுரங்கள், சுருதிகள் மற்றும் பண்கள் பற்றிய சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ல ஏதுவாக 1912-1916 இடையிலான காலத்தில் சங்கீத வித்தியா மகாஜன சங்கம் என ஏழு இசை மாநாடுகளை தன் சொந்த செலவில் நடத்தியவர்.

கருணாமிர்த சாகரம் என்ற நூலில் இசை விற்பன்னர்கள், இயலிசைப் புலவர்கள் வரலாறு பற்றிய செய்திகள் அறுபது பக்கங்களில் தந்துள்ளார். அகர வரிசைப்படுத்தி உரைத்துள்ளார். இத்தகு அறிஞர் பெருமக்களைப் பற்றி ஒரு சேரத் தொகுத்துத் தந்த நூலாக இந்நூல் அமைந்துள்ளது. இதன் முதல் தொகுதி உங்களுக்காய் பி டி எஃப் வடிவில் - https://archive.org/details/KarunamirthaSagaramVolI1917

இவரைத் தொடர்ந்து இவர் குடும்பத்தார் இசைத் தமிழ்ப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.     இவரின்    மகன் பாணர்கைவழி யாழ் என்ற சிறந்த ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். இவரது பேரன் இசைத் தமிழ் வரலாற்றுத் தொகுதிகளையும்,    புதிய இராகங்கள், இராகங்களின் நுண்ணலகுகள் போன்ற நூல்களைப் படைத்ததோடு சிறந்த இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார்.

தேமொழி

unread,
Dec 15, 2023, 8:02:55 PM12/15/23
to மின்தமிழ்
செல்வக் கேசவராய முதலியார்

கூகுள் மொழிபெயர்ப்பு மென்பொருள் என்பது பெருமளவுக்கு நமக்கு உதவினாலும் சிலசமயங்களில் குழப்பி விடுகின்றது. சமீபத்தில் கேரள அரசு புத்திசாலித்தனம் என நினைத்து கூகுளில் மொழிபெயர்த்து தமிழில் வைத்திருந்த தகவல் பலகை சிந்திக்க வைத்தது.

ஆங்கிலத்தில் FAMILY BATHING AREA எனவும், மலையாளத்தில் குடும்ப சம்மேனம் குளிக்கானுள்ள ஸ்தலம் அதாவது குடும்பத்துடன் குளிப்பதற்கான இடம் என்றும், தமிழில் குடும்பம் குளிக்கும் இடம் என்றும் தகவல் தந்தது. குடும்பம் குளிக்கும் இடமா? தொல்காப்பியரே வந்து படித்தாலும் குழம்பி நின்றிருப்பார். நம்ம சொல்லதிகாரத்தில் சொல்லாத வகை சொல்லாக இருக்கே என்று.

வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தமையால் வந்த சிக்கல் இது. இதற்குப் பதிலாக பொருள் உணர்ந்து, அதனை ஒட்டிய பொருள் தரும் மறுமொழி வாக்கியமாய் சொல்வது ஒரு கலை தான்.

சாதாரணமான வரிகளுக்கு பிறமொழி வரிகள் கண்டு சொல்வதே கடினம். ஒரு தமிழறிஞர் பொன்மொழிகளை, தமிழிலிருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தந்துள்ளார். மீண்டும் நினைவில் கொள்க. இவை மொழிபெயர்ப்பு அல்ல. அந்தப் பொன்மொழியினை ஒட்டிய மொழிமாற்றங்கள்.

ஒன்றல்ல…இரண்டல்ல 4500க்கும் மெற்பட்ட பொன்மொழிகள்.

அதுவும் எப்பொழுது எழுதியது தெரியுமா? கிட்டத்தட்ட 120 ஆண்டுகளுக்கு முன்பு.

பச்சையப்பன் கல்லூரியின் தமிழாசியரான கேசவ சுப்பராய முதலியாரின் மகனார்தான் திருமணம் செல்வக் கேசவராய முதலியார். (திருமணம் - அவர் பிறந்த ஊரின் பெயர்). பச்சையப்பன் கல்லூரியில் தமிழில் முதன்முதலாக எம் ஏ பட்டம் பெற்றவர் இவர். பலமொழிகள் கற்றும் தமிழின் உரைநடை வளத்திற்குப் பாடுபட்ட பெரும் புலவர்.
செல்வக் கேசவராய முதலியார்.jpeg
தான் படித்த படிப்பினை வைத்து செல்வாக்கும், பணமும் அதிகம் கிடைக்கும் வேலைகளை உதறித் தள்ளிவிட்டு தமிழ் கற்பிக்கும் பணியினை ஊதியம் குறைவாய் கிடைத்த போதிலும் செய்து வந்தவர்.

தெ பொ மீ, சொல்லின் செல்வர் ராபி சேதுப்பிள்ளை ஆகியோர் இவருடைய மாணவர்கள் என்பதிலேயே ஆசிரியரின் அருமை ஊகிக்க இயலும்.

ஒருமுறை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் சங்க விழாவில் செல்வக் கேசவனார் தலைமை ஏற்று இருந்தார். அப்பொழுது மேடையில் பேசிய ஒருவர், ஆங்கிலக் கவிஞர்கள், தமிழ் கவிஞர்களை விட புலமையில் உயர்ந்தவர்கள் என்று பொருள்படும்படி பேசினார். உடனடியாக  அதற்கு மேடையிலேயே பதிலடி கொடுக்க முன் வந்த நம் தமிழறிஞர், ஷேக்ஸ்பியர் சொன்ன கண்டவுடன் காதல் கொள்ளாதார், பிறகு எப்பொழுதும் உண்மையில் காதல் கொள்ளாதவரே என்ற கருத்தினை அவர் சொல்வதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பாகவே திருவள்ளுவர், கண்ணொடு கண்ணினை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள் என்ன பயனுமில என்று சொன்னதை எடுத்துக்கூறி திருக்குறள் இருக்கும் தமிழை உயர்த்தினார் அதே மேடையில்.

இன்னொரு முறை தமிழ் அறிஞர்களும் ஆங்கில அறிஞர்களும் கூடியிருந்த ஒரு கூட்டத்தில் ஆங்கிலக் கவிஞர் லார்ட் பைரன் அவர்களின் கவிதையை கூறி அதில் கடல் அலைகள் உருண்டு வருவதைப் பற்றிக் கூறி அவ்வோசையே நமது காதில் விழுவது போல் எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார் என்று சொன்னாராம். அதைக் கேட்ட செல்வக்கேசவ ராயர் உடனடியாக, புகழேந்திப் புலவர் எழுதிய பாட்டை எடுத்துக் கூறி இந்தப் பாடலை பாருங்கள் உங்களுக்கு கடலின் அலை ஓசை கேட்கும் என்று சொல்லியபடி பாட்டையும் சொன்னாராம்.

போவாய் வருவாய் புரண்டு விழுந்திறங்கி
நாவாய் குழற நடுங்குறுவாய் – தீவாய்
அரவகற்றும் என்போல ஆர்கலியே மாதை
இரவகற்றி வந்தாய் கொல் இன்று

இவர் எழுதிய சிறப்பான நூல்களில் சில:

கம்பநாடர் (1902)
கண்ணகி சரித்திரம் (1905)
குசேலர் சரித்திரம் (1904)
திருவள்ளுவர் (1904)
வியாசமஞ்சரி
அக்பர்
இராபின்சன் குருசோ
மாதவ கோவிந்தரானடே
பஞ்ச லட்சணம்.

செல்வக் கேசவராய முதலியார் குறித்து நூல் ஒன்று இதோ உங்களுக்கு பி டி எஃப் வடிவில்…
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0008597_இயற்பா.pdf

தேமொழி

unread,
Dec 18, 2023, 7:11:24 PM12/18/23
to மின்தமிழ்
தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்

முத்தமிழின் மூன்றாம் தமிழான நாடகக் கலை யினை வளர்த்த தமிழறிஞர் பற்றித்தான் இன்று. இவரது நாடகங்கள் மொழி வளம் பெற்றவை. இலக்கண இலக்கியப் பயிற்சி, இசைப் பயிற்சி ஆகிய தகுதிகளுடன்தான் முழுநேர நாடக் கலைஞர் ஆனவர் இவர். திருமணம் செய்து கொள்ளாமலேயே தம் வாழ்நாளை வாழ்ந்து முடித்தவர்.

இவர் சனீஸ்வரன் நாடகத்தில் சனிபகவான் வேடம் தாங்கி நடித்தார். விடியும் வரை நாடகத்தில் நடித்துவிட்டு விடியற்காலையில் வேடத்தைக் கலைப்பதற்காக ஏரிக்குச் சென்றார். அங்கே சலவை செய்து கொண்டு இருந்த நிறை மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி சனீஸ்வரன் வேடத்தில் இருந்த இவரைக் கண்டாள்; அதிர்ச்சி அடைந்து அந்த இடத்திலேயே இறந்து விட்டாள்.

சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் எமனாக நடித்தார் இவர். சத்தியவானுடைய உயிரைக் கவர்ந்துவர முடியாத கிங்கரர்களை கோபித்துக் கொள்ளும் காட்சி. எமனாக நடித்த இவரின் தோற்றத்தைக்  கண்டு     பயந்த     ஒரு     பெண் பார்வையாளருக்கு கருவே கலைந்து போனதாம். அந்த அளவுக்கு அவரின் நடிப்புத் திறன் !

இத்தகைய  நிகழ்ச்சிகள் இவரின் உள்ளத்தை வெகுவாகப் பாதித்து விட்டன. இதன் பின்னர் இவர் வேடம் தரிப்பதை நிறுத்தி விட்டார்.

50 க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியவர் இவர்.

தமிழ் நாடகக்கலையைப் பொறுத்தவரையில் இவர் காலத்துக்கு முன், இவர் காலத்துக்குப் பின் என்று பகுத்துப் பார்க்கும் அளவிற்குச் இவரின் நாடகக்கலைத் தொண்டு அமைந்துள்ளது.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் இவரை நாடக உலகின் இமயமலை என்று குறிப்பிட்டார்.

ஆங்கில மோகத்தால் தமிழ் மொழியில் பேசுவதுகூடக் கௌரவக் குறைவு என்று கருதப்பட்ட காலத்தில் நாடக மேடையின் மூலம் தமிழை வளர்த்தவர் இவர். இசையரங்குகளிலே தெலுங்கு மொழி ஆதிக்கும் பெற்றிருந்த காலத்தில் நாடக மேடையில் தீந்தமிழ்ப் பாடல்களைப் பொழிந்து தமிழுலகை மகிழ்வித்தவர்

தமிழ் நாடகக்கலையின் தலைமை ஆசிரியர்  என்று கருதப்படுபவர் சங்கரதாஸ் சுவாமிகள். 

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்.jpeg

சங்கரதாஸ் சுவாமிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடிக்கு அருகில் உள்ள காட்டு நாயக்கன் பட்டி என்ற சிற்றூரில் 7.9.1867ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார் தாமோதரன். அவரை  இராமாயணப் புலவர் என அப்பகுதி மக்கள் அழைத்தனர். தாயார் பேச்சியம்மாள் ஆவர். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் சங்கரன் என்பது. அது நாடக உலகில் சங்கரதாஸ் சுவாமிகளாக மாறிவிட்டது.

சிறுவயதில் தம் தந்தையாரிடமும், பின்னர்ப் பழனி தண்டபாணி சுவாமிகளிடமும் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். தம் 24ஆம் வயதில் முழுநேர நாடகக் கலைஞர் ஆனார். அப்போது நாடகத்துக்கு இசையும் பாட்டும் இன்றிமையாதவைகளாக இருந்த காரணத்தால் சங்கரதாஸ் சுவாமிகள் புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளையிடம் இசைப் பயிற்சி பெற்றார்.

சங்கரதாஸ் சுவாமிகள் நாடக நடிகராகவே தம் நாடக வாழ்க்கையைத் தொடங்கினார். இரணியன், இராவணன், எமதருமன், சனீஸ்வரன், கடோற்கஜன் போன்ற வேடங்களையே ஏற்று நடித்து வந்தார். சிறிது காலத்துக்குப் பின்னர், நாயுடு நாடகக் குழுவில் நாடக ஆசிரியராகப் பணியாற்றினார். பிறகு அவரே நாடகம் எழுதி, இயக்கி, அரங்கேற்றி நாடகத்துக்குப் பெருமை சேர்த்தார்.

சிறிதுகால நாடகப்பணியினைத் தொடர்ந்து சங்கரதாசு சுவாமிகள் துறவுக்     கோலம்     பூண்டார். முருகனின் படைத்தலங்களைக் காண யாத்திரை மேற்கொண்டார். இவ்வாறு அவர் மேற்கொண்ட துறவுக் கோலமே அவருக்கு சுவாமிகள் என்ற அடைமொழியினைப் பெற்றுத் தந்தது.

இவரின் கீழ்கண்ட நாடகங்களை மிகவும் சிறப்புடையனவாகச் சுட்டிக் காட்டலாம்.
1. சத்தியவான் சாவித்திரி
2. பவளக்கொடி சரித்திரம்
3. வள்ளி திருமணம்
4. அரிச்சந்திர மயான காண்டம்
5. கோவலன் சரித்திரம்
6. இராம ராவண யுத்தம்
7. வீரபாண்டிய கட்டபொம்மன்
8. மதுரை வீரன்
9. சித்திராங்கி விலாசம்
10. நளதமயந்தி

சுவாமிகள் எழுதிய அத்தனை நாடகங்களும் ஆயிரக்கணக்கில் அரங்கில் நடிக்கப் பெற்றவை ஆகும். சுவாமிகள் இயற்றிய நாடகங்கள்தாம் தமிழ் நாடகக்கலை வளர்ச்சிக்கு அடிப்படைச் செல்வங்கள் ஆகும்.

ஜி.எஸ்.முனுசாமி நாயுடு, சாமிநாத முதலியார், சீனிவாச ஆழ்வார், நடேச பத்தர், எம்.ஆர்.கோவிந்தசாமிப் பிள்ளை, சி.கன்னையா, சி.எஸ்.சாமண்ணா, சுந்தரராவ், சூரிய நாராயண பாகவதர், மதுரை மாரியப்ப சுவாமிகள், எஸ்.ஜி.கிட்டப்பா, ஆர்.வி.மாணிக்கம், தி.க.சண்முகம் சகோதரர்கள் ஆகியோர்  மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

திருமதி பாலாம்பாள், பாலாமணி, அரங்கநாயகி, கோரங்கி மாணிக்கம், டி.டி.தாயம்மாள் போன்றோர் மாணவிகளில் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

சுவாமிகள் 1922-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ஆம் நாள் புதுவையில் உயிர் துறந்தார்.

முன்பொரு காலத்தில் கலைஞர்களைக் கூத்தாடிகள் எனப் பெயரிட்டழைத்த இழிவான நிலையை மாற்றி அவ்வடைமொழி நீங்கிடும் வண்ணம் நடிகர்களை நல்ல கலைஞர்களாக உயர்த்திய பெருமை சுவாமிகளையே சாரும்.

நாவில் வந்ததைப் பாடுவோம்; நாடகம் தினம் ஆடுவோம்
நாங்கள் சிறுவர் எங்கள் பிழையை நீங்கள் பொறுப்பீர் நாளுமே

எனச் சிறுவர்களும் நாடக மேடையேறிய நிகழ்வின் புதிய பரிணாம வளர்ச்சி தந்தவர் இவர்.

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் கைவண்ணத்தில் லவகுச நாடகம் பி டி எஃப் வடிவில் [https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZY1jZty.TVA_BOK_0006141] இதோ உங்களுக்காக

தேமொழி

unread,
Dec 23, 2023, 1:58:20 AM12/23/23
to மின்தமிழ்
தமிழ் மாமாலை பரிதிமாற் கலைஞர்

கல்லூரி வகுப்பறையில் ஒரு நாள். ஆங்கில இலக்கியப் பாடம் நடந்து கொண்டிருக்கிறது. டென்னிசன் (Tennyson) ஆக்கத்தில் உருவான ஆர்தரின் இறுதி (Morte D’ Arthur) என்ற பாடலின் வகுப்பு தான் அது. அதில் ஆர்தர் அரசனை, அவன் மனைவியருடன் படகொன்றில் வைத்து நதியில் விடுகின்ற காட்சி. துடுப்புகளை அசைத்துச் செல்லும் அப்படகு, ஓர் அழகிய அன்னப் பறவை போல் இருப்பதாய் ஆங்கிலப் புலவன் சொல்லி இருக்கிறான்.

இப்பாடத்தை நடத்தியபோது மாணவராய் நம் தமிழறிஞர். ஆசிரியர் நம் தமிழறிஞரைப் பார்த்து, ”தமிழின் பெருமையை எப்பொழுதும் பேசுகிறாயே! இது போன்று தமிழ் இலக்கியத்தில் இருக்கிறதா? சொல் பார்க்கலாம்.” எனக் கேட்டார்.

சற்றும் தாமதிக்காமல் நம் தமிழறிஞர் சொல்லிய பதில்: டென்னிசனுக்கு எட்டு அல்லது ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பே, கம்பராமாயணத்தில் இப்படி எழுதப்பட்டுள்ளது.

முடுகின நெடுநாவாய் முரிதிரை நெடுநீர்வாய்
கடிதனில் மட அன்னம் கதியது செல நின்றார்

இதைத்தான் பிற்காலத்தில் டென்னிசனும் பயன்படுத்தியுளார்.

இத்தமிழறிஞரின் திறன் அறிந்து அதே கல்லூரியில் பணிபுரிய வாய்ப்பும் தருகிறார் அந்த ஆசிரியர்.

நம் தமிழறிஞர், தனது 33 வயதில் தமிழ்ப்பணி முடித்து இறைவனடி சேருகிறார்.

அச் செய்தி அந்த ஆசிரியருக்கு மிக மனவருத்தம் தருகிறது. அதன் எழுத்து விடிவம் இதோ:

புருவம் சுருக்கம் ஏறி, கண்களை மறைக்கும் முதுமையில் வாடுகிறேன் நான். ஆனால் நடுவயது ஆவதற்கு முன்னரே *** அகன்றானே! எனக் கண்ணீர் வடித்தார் அதே ஆசிரியப் பெருந்தகை.

பரிதிமாற் கலைஞர்.jpeg
ஆசிரியரிடமே வாதிட்டு, அவரின் ஆசியில் பணியில் சேர்ந்து, அதே ஆசிரியரால் பாராட்டும் பெற்றவர் தான்  தமிழறிஞர் தமிழ் மாமாலை பரிதிமாற் கலைஞர். நவீன தமிழ் இலக்கிய வரலாற்று ஆராய்ச்சிக்கு இவர் வாழ்க்கைச் சரிதத்தையும் நூல்களையும் நுணுகிக் கற்றல் இன்றியமையாதது என்பர் சான்றோர். தான் வாழ்ந்த முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குள் அரிய தமிழ்ப் பணிகள் புரிந்த இவரின் வாழ்க்கை வரலாறு வியப்பைத் தரும். புத்துணர்ச்சி ஊட்டும்.

1870-ம் ஆண்டு ஜூலை 6-ந் தேதி மதுரை அருகே விளாச்சேரியில் கோவிந்த சாஸ்திரி- லட்சுமி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தவர் சூரிய நாராயண சாஸ்திரி. இளமைக் காலத்தில் வடமொழியின் மீது ஆர்வமும் திறனும் பெற்றிருந்தது போல், தமிழில் அவ்வளவு கவனம் செலுத்தாது இருந்தார். பின்னர் பசுமலைக் கல்வி நிலையத்தில் பணி புரிந்த தமிழாசிரியர் இவருக்கு தமிழார்வத்தை ஊட்டினார்.
தமிழ், கணிதம், வடமொழி. தமிழ் இலக்கணம், இலக்கியங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுத் தேர்ந்தார். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் பட்ட படிப்பு படித்தவர். மாணவர் காலத்திலேயே விவேக சிந்தாமணி பத்திரிகையில் கட்டுரைகள் எழுதியவர் இவர். 22 வயதில் பி.ஏ.வில் முதல் மாணவராக தேர்வு என கல்வியில் உயர் சிகரம் தொட்டவர்.

சூரிய நாராயண சாஸ்திரி சென்னையில் படித்த காலத்தில் ஈழத்து தமிழறிஞரான சி.வை. தாமோதரம் பிள்ளையும் சென்னையில்தான் இருந்தார். தமிழில் பெரும் புலமையுடன் திகழ்ந்த இளைஞர் சூரிய நாராயண சாஸ்திரியை அழைத்துப் பாராட்டியதுடன் அவரது செந்தமிழ்ப் புலமையை பாராட்டும் வகையில் கொடுத்தது பட்டம்தான் திராவிட சாஸ்திரி'.

சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் படித்த போது டாக்டர் மில்லர், சூரிய நாராயணன் என்ற பெயரை உச்சரிக்க தடுமாற, அப்பெயரை மாற்றிக் கொள்ளச் சொன்னார். அவரோ அடுத்த நாள், தன் பெயரை சூரிய நாராயண சாஸ்திரி என மாற்றிச் சொன்னார். நீங்கள் மாற்றும்படி தானே சொன்னீர்கள்; சுருக்கும்படி சொல்லவில்லையே என்றாராம் சுருக்கென.   பின்னர் காலம் அவர் பெயரை தமிழில் பரிதிமாற் கலைஞர் (சூரிய- பரிதி; நாராயணன்- மால்; சாஸ்திரி- கலைஞர்) என மாற்றிக் கொண்டது.

தமிழ், வடமொழி, ஆங்கிலம் என மும்மொழிகளிலும் சிறப்பான புலமை கொண்டவர் இவர். சென்னை செந்தமிழுரை சங்கம் என்பதை நிறுவினார். 1901-ல் மதுரையில் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. அத்தமிழ்ச் சங்கத்தின் செந்தமிழ் இதழில் உயர்தனிச் செம்மொழி எனும் தலைப்பில் தனித்த கட்டுரை எழுதியவர். தமிழ் மொழி, செம்மொழிதான் என முதன் முதலில் எழுத்துப்பூர்வமாக மெய்ப்பித்து குரல் கொடுத்தவர் இவர்தான்.

மதிவாணன் (நாவல்), 'ரூபாவதி' அல்லது காணாமற் போன மகள், கலாவதி (உரைநடை நாடகங்கள்), மானவிஜயம் (செய்யுள் நாடகம்), தனிப்பாசுரத் தொகை, பாவலர் விருந்து, சித்திரகவி விளக்கம் (கவிதைகள்), தமிழ் மொழியின் வரலாறு (ஆய்வு) என எண்ணற்ற படைப்புகளை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு வழங்கியவர் பரிதிமாற் கலைஞர். அத்துடன் நிற்காமல் 67 தமிழ் நூல்களை பதிப்பித்தும் பெருந்தொண்டாற்றியவர்.

அறிவோம் தமிழறிஞர்கள் தொடர்போல், அக்காலத்தில் இவர் அறிவோம் புலவர்களை என எழுதி வந்ததை பின்னர் நூலாக மாற்றித் தந்துள்ளனர் அவரது வாரிசுகள். அதனை உங்கள் பார்வைக்காய் பி டி எஃப் வடிவில். அவரது பிற படைப்புகளும் தமிழ் இணையக் கல்விக்கழக இணையதளத்தில் தரவிறக்கிப் படித்து மகிழலாம். https://www.tamilvu.org/ta/library-nationalized-html-naauthor-54-235710

தமிழ்ப் பேராற்றலுடன் பெருந்தொண்டாற்றிய பரிதிமாற் கலைஞரை எலும்புருக்கி நோய் காவு கொண்டு போனது!

தேமொழி

unread,
Dec 26, 2023, 8:25:59 PM12/26/23
to மின்தமிழ்
இரா.இராகவையங்கார்

பூவெல்லாம் புகழும் நாவலம் பொழிற்கண் அமிழ்தினுமினிய தமிழ் பயில் தென்னாட்டின் பண்டை அறிவு வளர்ச்சி, அரசியன்மேம்பாடு, இல்லற வாழ்க்கை நலம், கொடைவீரம், படைவீரம், கடவுள் வழிபாடு இவற்றைச், செவியும் உள்ளமும் களிகூரக் கவர்ந்துண்ணும் வண்ணம் இயற்றும் விழுமிய செய்யுட்டிறன் முதலிய நாகரீகப் பெருமைகள் எத்தனையோ அறிந்து கொள்ளற்கு வாயிலாக ஒப்புயர்வற்று விளங்குன சங்க காலத்து வழங்கிய இலக்கண இலக்கிய நூல்கள். அவ்வரியபெரிய நூல்களாற் றெளியக் கிடக்கும் தமிழர் சிறப்பியல்புகள் பலவற்றுள் அறிவு வளர்ச்சியில் ஆண் மக்களொப்ப பெண்பாலாரும் தலைசிறந்து நிலவிய பேரியல்பு நல்லோர் பலரானும் மிகவும் பாராட்டப்படுவது ஒன்று. இக்காலத்து பல பல நாடுகளிற் காணப்படும் பெண் கல்வி முயற்சி சற்றேறக்குறைய ஈராயிரம் வருடங்களுக்கு முன்னரே இத் தென்னாட்டாரால் இனிதாளப்பட்டுப் பயன்பெற்றுச் சிறந்ததென்று துணியப்படுமாயின், அஃது ஒருவர்க்கு எவ்வளவோ வியப்பும் இன்பமும் விளைக்குமென்பதில் ஐயமில்லை.

சென்ற விடத்தார் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு.

என்பதனால், குதிரையை நிலமறிந்து செலுத்தும் வாதுவன் போல மனத்தை புலமறிந்து தீயதி னீக்கி  நல்லதன்கட் செலுத்துவது அறிவு என்று கண்டு அவ்வறிவால் நிரம்பின.

இரா.இராகவையங்கார்.jpeg
நல்லிசைப் புலமை மெப்பியலார்கள் என்ற தலைப்பில் மகாவித்துவான் இரா.இராகவையங்கார் எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி தான் நீங்கள் முன்னர் படித்து இரசித்தது.

இக்காலத்தில் பேசப்படும் பெண்ணியச் சிந்தனைகளை அன்றே இரா.இராகவையங்கார் தமது நூலில் விளக்கியுள்ளார். ஆணியல்பு மிக்க அலி ஆண்பால் எனவும், பெண்ணியல்பு மிக்க பேடி பெண்பால் எனவும் வரையறை சொல்லி ஆதிமந்தியாரில் தொடங்கி, பூங்கணுத்திரையார் முடிய சங்க காலப் பெண்பாற் புலவர்களின் கல்விச் சிறப்பையும் படைப்பாற்றலையும் அந்நூலில் தந்துள்ளார்.  

தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள், மேலைச்சிவபுரி சன்மார்க்கச் சங்கத்தின் ஆண்டு விழாவிற்குத் தலைமையேற்றதோடு, அவ்விழாவில் இரா.இராகவையங்காருக்கு மகாவித்துவான் எனப் பட்டமும் அளித்துச் சிறப்பித்துள்ளார்.

இராகவையங்கார் எனும் பெயர் தாங்கிய இரு அறிஞர் பெருமக்கள் தமிழ்த்தொண்டாற்றி உள்ளனர். இவர்களில் இரா.இராகவையங்காரைப் "பெரியவர்" என்றும், மு.இராகவையங்காரைச் "சிறியவர்" (இரா.இராகவையங்காரின் மருமகனார்) என்றும் அழைப்பர்.
 
இராமநாதபுரம் மாவட்டம், புதுக்கோட்டையில் உள்ள சிவகங்கை ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த இராமானுஜ அய்யங்கார் – பத்மாசினி அம்மையார் தம்பதிக்கு 1870ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி பிறந்தார்.
 
ஐந்து வயதிலேயே தந்தையை இழந்ததால், இராகவையங்காரை அவரது தாய் மாமன் முத்துசாமி ஐயங்கார் தான் வளர்த்து, கல்வி பயிலச்செய்தார். முத்துசாமி ஐயங்கார் சதாவதானம் புரியும் ஆற்றல் உள்ளவர். மேலும் இவர் சேது சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்துவானாகத் திகழ்ந்தார். இவரது உதவியாலும் சமஸ்தானத்தில் இருந்த புலவர்கள் பலரது பழக்கத்தாலும் இராகவையங்கார் கல்வியறிவு பெற்று, சொல் வன்மையோடு கவிபாடும் ஆற்றலும் கொண்டு திகழ்ந்தார்.
 
இராகவையங்கார் தமது இருபதாம் வயதில் திருச்சி சேஷையங்கார் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார். மன்னர் பாஸ்கர சேதுபதி இளம் புலவரான இராகவையங்காரின் திறமையை உணர்ந்து, அவரைத் தமது ஆஸ்தான வித்துவான்களில் ஒருவராக நியமித்தார்.
 
பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் தொடங்கியபோது இராகவையங்கார் அவருக்குப் பெரிதும் உதவியாக இருந்தார். பாஸ்கர சேதுபதியின் விருப்பத்திற்கிணங்க இராகவையங்கார் அத்தமிழ்ச் சங்கத்தில் இருந்து கொண்டு நூற்பதிப்பு மற்றும் ஆராய்ச்சித்துறைகளின் தலைவராகத் தொண்டாற்றினார். இக்காலகட்டத்தில் தென் மாவட்டங்களில் பல இடங்களுக்குச் சென்று பழைய தமிழ் ஓலைச் சுவடிகளைக் கொண்டுவந்து தமிழ்ச் சங்க நூலகத்தில் சேர்த்தார்.
 
1902ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச்சங்கம் தொடங்கிய "செந்தமிழ்" எனும் திங்கள் இதழில் முதல் ஆசிரியராகப் பணியேற்று சுமார் இரண்டரை ஆண்டுகள் இராகவையங்கார் பணி புரிந்தார்.

இராகவையங்காரிடம் தமிழ் பயின்ற இராஜ இராஜேஸ்வர சேதுபதி 1910ஆம் ஆண்டில் இராமநாதபுரம் சேதுபதியானார். அவர் இராகவையங்காரை அழைத்துத் தம் அவைக்களப் புலவராய் அமர்த்திக்கொண்டார். இங்கு இருபத்தைந்து ஆண்டுகள் தங்கியிருந்து பல நூல்களை இயற்றினார் இராகவையங்கார்.

1935ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித்துறை தோற்றுவிக்கப்பட்டபோது இராகவையங்கார் அங்கு முதன்மை ஆராய்ச்சியாளராகப் பதவியேற்று 1941 வரை பல ஆராய்ச்சித்துறை மாணவர்களுக்கு இலக்கண, இலக்கிய நூல்களைப் பயிற்றுவித்தார்.

இராகவையங்கார் பாடிய "பாரிகாதை" எனும் நூலில் கடவுள் வாழ்த்திற்கு அடுத்ததாகத் தம் பெற்றோரைப் போற்றி உள்ளார். இந்நூல்தான் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்நூல் வெளியீட்டில் முதல் நூலாக வெளியிடப்பட்டது. 1937இல் இந்நூல் வெளிவந்ததைத் தொடர்ந்து இரண்டாவது வெளியீடாகவும் இவர் எழுதிய "தமிழ் வரலாறு" 1941இல் வெளிவந்தது. இந்நூலின் பி டி எஃப் வடிவம் [ https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZQ7luMy.TVA_BOK_0003889 ]  இதோ உங்களுக்காக.  

ஏழு உரைநடை நூல்களும், இரு உரை நூல்களும், ஆறு செய்யுள் நூல்களும், மூன்று மொழிபெயர்ப்பு நூல்களும் எழுதியுள்ளார் இராகவையங்கார். மேலும், நான்கு சங்க நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், மூன்று இலக்கண நூல்கள் போன்றவற்றைப் பதிப்பித்து சிறந்த பதிப்பாசிரியராகவும் திகழ்ந்துள்ளார். பரிமேலழகர் உரைவிளக்கம், வஞ்சி மாநகரம், சேதுநாடும் தமிழும் போன்ற அவரது நூல்கள் தமிழ்கூறும் நல்லுலகில் என்றும் அவரது புகழைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் என்பது உண்மை.

இவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல "செந்தமிழ்" இதழில் வெளிவந்துள்ளன. மேலும், "தித்தன்", "கோசர்" எனும் புனைபெயர்களில் எழுதப்பட்டுள்ள இருநூல்களும் இவரது கல்வெட்டு ஆராய்ச்சிக்குச் சான்றாக உள்ளன.

தமிழாசிரியராக, எழுத்தாளராக, ஆய்வாளராக, மொழிபெயர்ப்பாளராக, பதிப்பாசிரியராக பல்வேறு பணிகளைத் தொடர்ந்து செய்துவந்த மகாவித்துவான் இராகவையங்கார் 1946ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.

தேமொழி

unread,
Dec 29, 2023, 1:44:49 AM12/29/23
to மின்தமிழ்
தமிழறிஞர் மறைமலை அடிகள்

ஒரு கல்லூரியில் தமிழாசிரியர் தேவை என விளம்பரம் வருகிறது. அறுபதில் ஒருவராக தமிழறிஞர் மறைமலை அடிகளும் தன் இளமைப் பருவத்தில் விண்ணப்பிக்கிறார்.

அக்கல்லூரியின் மூத்த தமிழறிஞர் இவரை நேர்முகம் கண்டார்.

தொல்காப்பிய இலக்கணத்தில் இருந்து எளிதில் விடையளிக்க முடியாத வகையில் மூன்று கேள்விகள் கேட்கப்பட்டது. மூத்த அறிஞர் எதிர்பார்க்காத வகையில் பதில் தந்தார் இளைஞர். அத்தோடு நிற்க வைக்க விடவில்லை அவரின் இளமை மிடுக்கும், புலமைத் துடுக்கும்.

இவரென்ன நம்மை ஆராய்வது? என்று மூத்த அறிஞரை நோக்கி, யான் கேட்கும் மூன்று வினாக்களுக்கு தாங்கள் விடை  தர வேண்டும் என்று அதே தொல்காப்பியம் தொடர்பான மூன்று நுணுக்கமான ஆய்வுக் கேள்விகளையும் கேட்டார்.

சற்றே யோசித்த அந்த மூதறிஞர், நீரே இம்மூன்றிற்கும் விடையளிப்பீர் என்று கூறிட, அந்த இளைஞரும் பதில் தந்திட்டார்.

தம்மையே கேள்வி கேட்டவர் என்று கருதாது மூத்த தமிழறிஞரோ அந்த இளைஞரிடம் பேரன்பு கொண்டார். கல்லூரி முதல்வரிடம் அழைத்துச் சென்று இவர்தம் ஆழ்ந்த அரும் புலமை, கூரறிவு முதலியவற்றை எடுத்துக் கூறி , இவரையே தமிழாசிரியர் ஆக்கிடுமாறு கேட்டுக் கொண்டார்.  இந்த நிகழ்வு நடைபெற்ற இடம், சென்னை கிருத்துவக் கல்லூரி. மூத்த தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர்.

தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்ற தமிழறிஞர் மறைமலை அடிகள். செம்மொழியாம் தமிழை, வடமொழிக் கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாகத் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள். குலசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுட் பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்து தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர்.
தனித்தமிழ் அறிஞர் மறைமலை அடிகள்.jpeg
மறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம் பிள்ளை. இவர் 1876 சூலை 15-ஆம் நாளன்று திருக்கழுக்குன்றத்திலே பிறந்தார்.  பின்னர்த் தனித்தமிழ்ப்பற்று காரணமாக 1916-இல் தம் பெயரை மறைமலை (வேதம் = மறை, அசலம் = மலை) (அதாவது அவரின் 40-ஆவது வயதில்) என்று மாற்றிக்கொண்டார்.

மறைமலை அடிகள், நாகையில் வெசுலியன் தொண்டு நிறுவனக் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளியில் நான்காம் படிவம் வரை படித்தார். அவருடைய தந்தையாரின் மறைவு காரணமாக அவரால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியவில்லை. ஆனால், நாகையில் புத்தகக் கடை வைத்திருந்த தமிழ்ப்புலமை மிகுந்த நாராயணசாமிப் பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். 'சைவ சித்தாந்த சண்டமாருதம்' என்று புகழ் பெற்றிருந்த சூளை சோமசுந்தர நாயகர் அவர்களிடம் சைவ சித்தாந்தம் கற்றார்.

திருமுருகன் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திப் பல நூல்களை வெளியிட்டார். மணிமொழி நூல்நிலையம் என்னும் நூல்நிலையத்தை உருவாக்கினார்.

மறைமலை அடிகள் பல்லாவரம் முனிவர் என்றும் குறிப்பிடப்பட்டார்.

இவரெழுதிய நூல்களின் பட்டியல்:
பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் (1921)
மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை, இரு தொகுதிகள் (1933)
மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி (1927)
யோக நித்திரை: அறிதுயில் (1922)
தொலைவில் உணர்தல் (1935)
மரணத்தின்பின் மனிதர் நிலை (1911)
சாகுந்தல நாடகம் (சமசுகிருதத்தில் இருந்து மொழி பெயர்த்தது) (1907)
சாகுந்தல நாடக ஆராய்ச்சி (1934)
ஞானசாகரம் மாதிகை (1902)
Oriental Mystic Myna Bimonthly (1908-1909)
Ocean of wisdom, Bimonthly(1935)
Ancient and Modern Tamil Poets (1937)
முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் (1936)
முல்லைப்பாட்டு- ஆராய்ச்சியுரை (1903)
பட்டினப்பாலை-ஆராய்ச்சியுரை (1906)
சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் (1911)
முதற்குறள் வாத நிராகரணம் (1898)
திருக்குறள் ஆராய்ச்சி (1951)
முனிமொழிப்ப்ரகாசிகை (1899)
மறைமலையடிகள் பாமணிக் கோவை (பாடல்கள்) (1977)
அம்பிகாபதி அமராவதி (நாடகம்) (1954)
கோகிலாம்பாள் கடிதங்கள் (புதினம்) (1921)
குமுதவல்லி: அல்லது நாகநாட்டரசி (புதினம்) (1911)
மறைமலை அடிகள் கடிதங்கள் (1957)
அறிவுரைக் கொத்து (1921)
அறிவுரைக் கோவை (1971)
உரைமணிக் கோவை (1972)
கருத்தோவியம் (1976)
சிந்தனைக் கட்டுரைகள் (1908)
சிறுவற்கான செந்தமிழ் (1934)
இளைஞர்க்கான இன்றமிழ் (1957)
திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை (1900)
மாணிக்க வாசகர் மாட்சி (1935)
மாணிக்க வாசகர் வரலாறும் காலமும் (இரு தொகுதி) (1930)
மாணிக்க வாசகர் வரலாறு (1952)
சோமசுந்தரக் காஞ்சியாக்கம் (1901)
சோமசுந்தர நாயகர் வரலாறு (1957)
கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா (1968)
திருவாசக விரிவுரை (1940)
சித்தாந்த ஞான போதம், சதமணிக்கோவை குறிப்புரை (1898)
துகளறு போதம், உரை (1898)
வேதாந்த மத விசாரம் (1899)
வேத சிவாகமப் பிராமண்யம் (1900)
Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge (1940)
சைவ சித்தாந்த ஞானபோதம் (1906)
சிவஞான போத ஆராய்ச்சி (1958)
Can Hindi be a lingua Franca of India? (1969)
இந்தி பொது மொழியா ? (1937)
Tamilian and Aryan form of Marriage (1936)
தமிழ் நாட்டவரும், மேல்நாட்டவரும் (1936)
பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் (1958)
வேளாளர் நாகரிகம் (1923)
தமிழர் மதம் (1941)
பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் (1906)

இவரது நினைவப் போற்றும் விதமாக சென்னையில் உள்ள ஒரு பாலத்துக்கு மறைமலை அடிகள் பாலம் என பெயரிடப்பட்டது.

இவர் 1936 இல் இயற்றிய முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் நூலினை [ https://archive.org/details/20210331_20210331_1209  ] பி டி எஃப் வடிவில் வழங்குவதில் மகிழ்ச்சி.

தேமொழி

unread,
Jan 2, 2024, 11:54:06 PM1/2/24
to மின்தமிழ்
கா.நமச்சியவாய முதலியார்

சமீபகாலமாக, உடற்பயிற்சி செய்யும் போதே உயிரிழத்தல், தொடர்ந்து பணியில் இருந்து அசதியில் உயிர் இழக்கும் மருத்துவர் போன்ற தகவல்கள் அடிக்கடி காணக்கிடைக்கின்றது.

இதற்கான காரணம் என்ன என்பதை ஒரு தமிழறிஞர் 1925 ஆம் ஆண்டிலேயே தந்திருப்பது உங்களில் எத்தனை நபர்களுக்குத் தெரியும்?

நெடுந்தூரம் நடத்தலும், தன் சக்திக்கு அதிகமாக உழைத்தலும், இரவில் நெடுநேரம் கண் விழித்தலும் நோயை உண்டு பண்ணும் என்கிறார் அந்தத் தமிழறிஞர்.

ஆரோக்கியத்திற்கு அமைந்த நியமங்கள் என்ற தலைப்பில் மேலும் அவர் கூறியதையும் ஒரு பார்வை பாருங்கள்:

1. பிரதி தினமும் மாலை நேரங்களில் சுகந்தமும் துர்கந்தமும் இல்லாத பரிசுத்தமான காற்றை 20 அல்லது 22 தரம் கம்பீரமாக சுவாசித்து விட வேண்டும் அதனால் சுவாசாஸய சம்பந்தமான வியாதிகள் நீங்கும்

2.  இரவில் தூங்குவதற்கு முன்னும், காலையில் தூங்கி எழுந்த பின்னும் குளிர்ந்த நீரால் கண்களை அலம்பி கொள்ளுதல் நலம். இது நம் நேத்திர ரோகங்கள் வரவொட்டாமல் தடுக்கும்

3.  வேம்பு, வேல், ஆல் முதலிய கசப்புள்ளதும் துவர்ப்புள்ளதுமான குச்சிகளால் பல் துலக்குதல் நல்லது

4.  இரவில் படுத்துக் கொள்வதற்கு முன் பல்லை நன்றாக தேய்த்து வாயைக் கொப்பளிக்க வேண்டும்

5.  சூரிய உதயத்திற்கு முன்பே குளிர்ந்த ஜலத்தில் ஸ்நானம் செய்தல் ஆரோக்கியகரமானது

6.  நாள்தோறும் தலையில் கொஞ்சம் எண்ணெய் தேய்த்துக் கொண்டு வெதுவெதுப்பான வெந்நீரில் ஸ்நானம் செய்தல் மிகவும் நல்லது

இப்படியெல்லாம் ஆரோக்கியப் பாடங்களை ஏழாம் வகுப்பு மாணவர்களிடையே கொணர்ந்து சேர்த்த அந்தத் தமிழறிஞர் கா.நமச்சியவாய முதலியார்
கா.நமச்சியவாய முதலியார்.jpeg

ஆரோக்கியத்திற்கு அமைந்த நியமங்களை பாடநூலில் கொண்டு சேர்த்தவரும், தைத் திங்கள் முதல் நாளைத் தமிழ்த் திருநாளாகக் கொண்டாட வழி செய்தவரும், திருவள்ளுவருக்கு முன் – திருவள்ளுவருக்குப் பின் என தமிழகத்துக்கு ஒரு சகாப்தகால அளவு கிடைக்க வழி வகுத்தவருமான தமிழறிஞர் தான்  கா.நமச்சியவாய முதலியார் அவர்கள்.

1906ஆம் ஆண்டு வரை தமிழ்ப் பாடங்களை படிக்க ஆங்கில அறிஞர்கள் எழுதிய பாடங்களையே படிக்க வேண்டிய நிலை இருந்தது. அப்போது இவர் பாடநுல்களை தானே உருவாக்கத் திட்டமிட்டார். எனவே ஆசிரியர் பணியை விட்டு விலகிட முடிவு எடுத்து, முதல்வரிடம் அனுமதி வேண்டினார். அதற்கு முதல்வர் பேட்ஸ் மறுமொழியாக, ஆசிரியர் பணியில் இருந்து கொண்டே பாடநூல் உருவாக்குவதற்கு  அனுமதி வாங்கித் தந்தார். இவர் எழுதிய பாடநூல்கள் அனைத்தும் அப்போது தமிழ் கற்ற பலராலும் ஒப்பற்ற நூலாக பாராட்டப் பெற்றன.

வட ஆற்காடு மாவட்டம் காவேரிப்பாக்கம் என்ற ஊரில் ராமசாமி முதலியார்-அகிலாண்டவல்லி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். தந்தை ராமசாமி முதலியார் நடத்தி வந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நமச்சிவாயர் தம் இளமைக்கால கல்வியைக் கற்றார். நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், விவேக சிந்தாமணி முதலிய நூல்களைக் கற்றுத் தேர்ந்த இவர், தமது பதினாறாவது அகவையில், காவேரிப்பாக்கத்தை விட்டு நீங்கி, சென்னை தண்டையார் பேட்டையில் தங்கி, அங்கிருந்த ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியேற்றார்.

தொண்டை மண்டல துளுவ வேளாளர் பள்ளியில் தமிழ்ப் புலவராகப் பணியாற்றி வந்த மகாவித்துவான் மயிலை சண்முகம் பிள்ளையிடம் மாணாக்கராக இருந்து தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். பன்னிரண்டு ஆண்டுகள், தண்டையார் பேட்டையிலிருந்து மயிலாப்பூருக்கு ஞாயிறுதோறும் நடந்தே சென்று பாடம் கேட்டு வந்தார் நமச்சிவாயர். மகப்பேறு இல்லாத மகாவித்துவான், நமச்சிவாயரைத் தமது மகனாகவே கருதி தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத்தந்தார்.

நமச்சிவாயரின் மூத்த மகன் தணிகைவேல் சென்னை மாநிலக் கல்லூரியில் டாக்டர் நெ.து.சுந்தர வடிவேலுவின் வகுப்புத் தோழர்.

தமிழாசிரியராகப் பணியாற்ற விரும்பிய நமச்சிவாயருக்குத் தொடக்க காலத்தில் அப்பணி எளிதில் கிட்டவில்லை. 1895-இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு சிறிய வேலையில் சேர்ந்தார். ஓராண்டுக்குப் பிறகு அதிலிருந்து நீங்கி, சென்னை செயிண்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியில் சேர்ந்தார்.

பின்னர், ராயபுரத்தில் இருந்த “நார்த்விக்’ மகளிர் பாடசாலையிலும் அதன் பிறகு “சிங்கிலர்’ கல்லூரியிலும் தமிழ்ப் பணியாற்றினார். 1902 முதல் 1914 வரை சென்னை வேப்பேரியில் இருந்த எஸ்.பி.ஜி. உயர்நிலைப் பள்ளியில் (தற்போது புனித பால்ஸ் பள்ளியில்) தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.

1914-ஆம் ஆண்டில் பெண்களுக்கென அரசினரால் தொடங்கப்பட்ட ராணிமேரி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக ஆண்கள் எவரும் பணியாற்ற முன்வராத நிலையில், துணிவோடு அப்பணியை ஏற்றுச் சிறப்பித்தார் நமச்சிவாயர். இறுதியாக, ராஜதானிக் கல்லூரி (மாநிலக் கல்லூரி) யில் தமிழ்ப் பேராசிரியர் பணி இவரைத் தேடி வந்தது.

உ.வே.சாமிநாதய்யர், மறைமலை அடிகளார், திரு.வி.க., ஆகியோர் நமச்சிவாயர் காலத்து வாழ்ந்த சான்றோர்களாவர்.

சென்னைப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் நெ.து.சுந்தர வடிவேலு, சென்னை விவேகானந்தா கல்லூரி தமிழ்த்துறை மேனாள் தலைவர் சி.ஜெகந்நாதாசாரியார், உச்ச நீதிமன்ற மேனாள் நீதியரசர் பி.எஸ்.கைலாசம், மேனாள் மத்திய அமைச்சர் ஓ.வி.அளகேசன்,நீதிபதி அழகிரிசாமி, முன்னாள் சென்னை மாநகராட்சி மேயர் எஸ்.ராமசாமி ஆகிய பெருமக்கள் பேராசிரியர் கா.நமச்சிவாயரிடம் பயின்ற மாணாக்கர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

1917-ஆம் ஆண்டில் அப்போதிருந்த தமிழ்க் கழகத்தின், தலைமைத் தேர்வாளராக நமச்சிவாயரை அன்றைய ஆங்கிலேய அரசு நியமித்தது. 1918-ஆம் ஆண்டில் தமிழ்க்கல்வி அரசாங்க சங்கத்தில் உறுப்பினர் பதவியை ஏற்றார். 1920-இல் இச்சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1934 வரை இப்பதவியில் தொடர்ந்தார்.

அந்நாளில் வித்துவான் பட்டங்கள் வடமொழி கற்றவருக்கே வழங்கப்பட்டன. “தமிழ்க்கல்வி அரசாங்க சங்க’த்தின் தலைவரான நமச்சிவாயர், அத்தடையை அகற்றி, தமிழ் மொழியில் இலக்கண, இலக்கியங்களைக் கற்றவர்களுக்கும் “வித்துவான்’ பட்டம் அளிக்க அரசுக்குப் பரிந்துரை செய்தார். அரசும் இவர் கருத்தை ஏற்றுக் கொண்டது. தமிழ் மட்டுமே படித்தவர்களும் வித்துவான் பட்டம் பெற வழிவகுத்த பெருமை கா.நமச்சிவாயரையே சாரும்.

பிருதிவிராசன், கீசகன், தேசிங்குராசன், சனகன் என்ற தலைப்புகளில் நாடக நூல்களையும் இவர் எழுதியுள்ளார். மேலும் நாடகமஞ்சரி என்ற பெயரில் பத்து நாடகங்கள் இவரால் எழுதப்பட்டு, மேடைகளில் அரங்கேறின. இவரின் நாடகப் படைப்பான நாடகமஞ்சரி [https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZYejuQy.TVA_BOK_0004341] நூலினை உங்களுக்கு பி டி எஃப் வடிவில் தருவதில் மகிழ்கிறேன்.  

சிறந்த குழந்தைக் கவிஞராகவும் திகழ்ந்த நமச்சிவாயர், ஆத்திசூடி, வாக்குண்டாம், நல்வழி முதலான நீதி நூல்களுக்கும் உரை எழுதியுள்ளார். “நன்னூல் காண்டிகை’ என்னும் இலக்கண நூலுக்கும் உரை கண்டார்.

தமிழ்க்கடல் என்ற பெயரில் அச்சகம் ஒன்றை நிறுவி, தணிகை புராணம், தஞ்சைவாணன் கோவை, இறையனார் களவியல், கல்லாடம் முதலான நூல்களைப் பதிப்பித்தார்.

நல்லாசிரியன் என்ற பெயரில் செய்தித்தாள் ஒன்றை, பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். ஜனவிநோதினி என்ற மாத இதழில் சிறந்த கட்டுரைகளையும் எழுதிவந்தார் நமச்சிவாயர்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் இவர் பெயரால் அமைந்த “நமச்சிவாயபுரம்” என்றும் குடியிருப்புப் பகுதி இவரது தமிழ்த்தொண்டுக்குப் பெருமை சேர்க்கின்றது.

தேமொழி

unread,
Jan 8, 2024, 3:01:40 AM1/8/24
to மின்தமிழ்
மூதறிஞர் மு இராகவையங்கார்

சகலகலா வல்லவன் என்றவுடன் உங்களுக்கு ஒரு நடிகர் பெயர் தான் நினைவுக்கு வரும். ஆனால் அகிலகலா வல்லவன் என்றால் யார் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

1937 ஆம் ஆண்டில், அகிலகலா வல்லவன் சேரமான் பெருமாள் வஞ்சி மார்த்தாண்டன் எனக் குறிப்பிட்டு, அவரைப் பற்றி விளக்கமாக ஒரு நூலில், ஒரு தமிழ் அறிஞர் குறிப்பிட்டுள்ளார் இப்படி:

திருவிசைப்பா ஆசிரியர்களுள் வேணாட்டியார்களைப் பற்றிக் கூறுமிடத்து தென் திருவாங்கூர்ச் சீமையாகிய வேணாட்டு வேந்தர்கள் தமிழ் வல்லவராய் அம் மொழியை ஆதரித்து வந்தமை குறிக்கப்பட்டது. சோணாட்ட மூவலூர்ச் சிவாலயத்தின் கோபுர வாயிலிலே சிலாலிகிதமான பாடல்கள் சில உள்ளன. அவையொன்றனுள் -

அகிலகலாவல்லவன் சேரமான் பெருமாள் வஞ்சி மார்த்தாண்டன் திருப்பா மூத்த திருவடி சொல்லிவரக்காட்டின பாகுடக் கவி என்ற குறிப்புடன் செய்யுட்கள் சிதைந்து காணப்படுகின்றன.

இதனால் வஞ்சி மார்த்தாண்டன் என்பார் கலைகள் பலவற்றிலும் வல்லவராகவும் தமிழ்ப் புலமையாளராகவும் விளங்கிய சேரவேந்தர் என்பது தெரியலாம்.

இவ்வேந்தரைத் திருப்பா மூத்த திருவடி என்று கூறுதலால் திருப்பாப்பூர் குடியைச் சார்ந்த வேணாட்டரசராகவும், வஞ்சி என நகரம் சேரமான் பெருமாள் என மரபும் கூறப்படுதலின் பழைய சேர வமிசத்தின் கிளையினராகவும் விளங்கியவர் இவர் என்பது அறியப்படும்.

இத்தகையோர் சேதிபர் குலத்தோன்றலும் புதுவைச்சடையன் என்பார் மகனுமான பிள்ளைப்பெருமாள் என்ற தலைவனைப் புகழ்ந்து கூறியவை. புதுவை என்பது புதுச்சேரி என்பதன் மரூஉ; இது சோணாட்டுள்ளதோர் ஊராகும். கம்பநாடரை ஆதரித்து இராமாயணம் பாடுவித்த சடையவள்ளல் இவ்வூர் தலைவர் என்பதும், இப்பிள்ளைப் பெருமானின் முன்னோர் என்பதும் அறியத்தக்கன.

இப்பிள்ளைப் பெருமாளைச் சோழமண்டலத் தாபனாசாரியன் என்றதால், சோழ ராஜ்ஜியத்துக்கு நேர்ந்த இடையூறு நீக்கி அதனை நிலைநிறுத்திப் புகழ்பெற்றவன் இத்தலைவன் என்பது தெரியலாம். இதனால் தென்னாட்டரசியலில் விஜயநகர அரசர் காலத்தில் பெரும் தலைமையும் அதிகாரமும் வகுத்திருந்தவன் பிள்ளை பெருமாள் என்பது பெறப்படுகிறது.

இப்படி எழுதி அகிலகலா வல்லவரை அக்காலத்தே அறிமுகம் செய்வித்த அந்தத் தமிழறிஞர்  மூதறிஞர் மு இராகவையங்கார் அவர்கள்.
மூதறிஞர் மு இராகவையங்கார்.jpeg
இராமநாதபுரம் சதாவதானி முத்துசாமி ஐயங்காரின் திருமகனாகத் தோன்றியவர் இவர். முத்துசாமி ஐயங்கார் பாண்டித்துரைத் தேவருக்குத் தமிழாசிரியராக விளங்கியவர்.

கம்பராமாயணப் பதிப்புக் குழு, பேரகராதிப் பதிப்பு, வரலாற்றுப் பேராசிரியர் எனப் பல நிலைகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்தான் மு இராகவையங்கார்.

தமிழ்நேசன் இதழின் சிறப்பாசிரியர். செந்தமிழ் இதழின் துணை ஆசிரியர். ஆராய்ச்சித் தொகுதி, செந்தமிழ் வளர்த்த தேவர்கள், கட்டுரை மணிகள், வேளிர் வரலாறு, சேரன் செங்குட்டுவன், ஆழ்வார்கள் காலநிலை, சாசனத் தமிழ்க் கவிசரிதம், இலக்கிய சாசன வழக்குகள், சேரவேந்தர் செய்யுட்கோவை, தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, திருக்குறள் பரிமேலழகர் உரை, நரிவிருத்தம், சிதம்பரப் பாட்டியல், விக்கிரம சோழன் உலா, சந்திரலோகம், திருக்கலம்பகம், இரட்டைமணிமாலை போன்ற நூல்கள் இவரின் ஆய்வுப் புலமைக்கும் பதிப்புத் திறனுக்கும் சான்று பகர்வன.

"தமிழ்க் கல்வியிலும், தமிழாராய்ச்சியிலும் பேரவாக் கொண்ட தமிழ் மக்கட்கு உறுதுணையாய் நின்றது செந்தமிழ்ப் பத்திரிகையேயாம். ஒவ்வொரு மாதத்துப் பத்திரிகையிலும் அதுவரை அறியாத அரிய விஷயங்கள் குறித்துச் சிறந்த கட்டுரைகள் பல வெளிவந்து கொண்டேயிருந்தன. பத்திராசிரியர் எழுதியனவெல்லாம் தமிழ்மணமும், ஆராய்ச்சி நலமும் செறிந்து விளங்கின; கற்பார்க்குப் பெருவிருந்தாயமைந்தன. ஒவ்வொரு மாதமும் செந்தமிழ் எப்போது வெளிவருமென்று பேராவலோடு தமிழன்பர்கள் எதிர்பார்த்த வண்ணமாயிருந்தார்கள். தமிழ் நாட்டுப் பெரும் பேராசிரியனாயமைந்து, தமிழ்மக்கள் வீடுதொறுஞ் சென்று, தமிழ்க்கல்வி நலத்தை அவர்கள் நுகரும்படி செய்துவந்த பெருமை செந்தமிழ்ப் பத்திரிகைகே உரியதாயிருந்தது. இப்பத்திரிகையின் உயிர் நிலையாயிருந்தவர் மு. இராகவையங்காரவர்களே. பலர் சிறந்த தமிழறிஞர்களாக விளங்குவதற்கும், அறிவுநலமிக்க பலர் தமிழாராய்ச்சியை மேற்கொள்ளுதற்கும் அவரே காரணமாயிருந்தார்," என்று ச.வையாபுரிப்பிள்ளை, "தமிழ்ச்சுடர் மணிகள்" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

"செந்தமிழ்" இதழில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதைய்யர் இறைவன் திருவடி நீழலடைந்த பொழுது பாடிய 12 கவிதைகளும், சேதுபதியின் 34ஆவது வெள்ளணி நாள் விழாவையொட்டிப் பாடிய 5 கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. இக்கவிதைகள் பாடியதன் மூலம் ஒரு கவிஞராகவும் விளங்கியதைக் காண முடிகிறது.  

மு.இராகவையங்கார் தம் 24 ஆம் வயதில் முதன்முதல் "செந்தமிழ்" இதழ் மூலம் ஆய்வுப்பணியைத் தொடங்கி ஏறத்தாழ 58 ஆண்டுகள் வரை எழுத்துப் பணியைத் தம் மூச்சாகக் கொண்டிருந்தார். இன்றைய இளம் ஆய்வாளர்களுக்கு இவர் ஆய்வுப் போக்கு, நெறிமுறைகள் பெரிதும் உறுதுணை புரியும்.

மதுரைத் தமிழ்ச் சங்கத்திலுள்ள நூல்களில் அருமையான சில நூல்களைப் பற்றிய சிறப்புச் செய்திகளை நூலாராய்ச்சி எனும் தலைப்பில் எழுதியுள்ளார்.

பெருந்தொகை (இரண்டு தொகுதிகள்) ,  நிகண்டகராதி, திருக்குறள் பரிமேலழகர் உரை (கையடக்கப் பதிப்பு), நரி விருத்தம் போன்ற நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

மு. இராகவையங்கார் ஆராய்ச்சித் தொகுதி, ஆழ்வார்கள் கால நலை, இலக்கியக் கட்டுரைகள் , கட்டுரை மணிகள், சேரன் செங்குட்டுவன், தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி , வேளிர் வரலாறு போன்ற உரைநடை நூல்கள் இயற்றியுள்ளார்.

இவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள ஏதுவாய் மூதறிஞர் மு இராகவையங்கார் நூலின் பி டி எஃப் [https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8luQy.TVA_BOK_0005945]வடிவம்தனை இணைத்துள்ளேன்.

தேமொழி

unread,
Feb 1, 2024, 7:35:14 PM2/1/24
to மின்தமிழ்

தமிழறிஞர் நாவலர் ச சோமசுந்தர பாரதியார்

கம்பராமாயணத்தை எரிப்பதா? வேண்டாமா? என்ற விவாதம் தமிழகத்தில் எழுந்த போது கம்பனுக்கு ஆதரவாக தன் தரப்பு வாதம் வைத்தார் ஒரு தமிழறிஞர் இப்படி:
கம்பராமாயணம் எரிக்கப்பட வேண்டும் என்று கூறுபவர்கள் சொல்லும் காரணங்களை எல்லாம் கவனித்தேன். எனக்கு நான் படித்த அளவிலே கம்பராமாயணத்தை கொளுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தோன்றுகிறது.

கம்பராமாயணத்தை எரிக்கக் கூடாது என்று இரு பிரிவினர் கூறுகின்றனர். கம்பராமாயணம் ஒரு பெரிய சமய நூல். ஆகையினால் அதை எரிக்கக் கூடாது என்று ஒரு பிரிவினர் கூறுகின்றனர். மற்றொரு பிரிவினர் அது ஒரு சிறந்த கவி. ஆகவே அதை எரிக்கக்கூடாது என்று கூறுகின்றனர். ஒரு சிறந்த கவியை எரிப்பது நல்லதல்ல என்றெ நான் கருதுகிறேன். அது தமிழ் நெறி அன்று. ஆபாசக் கருத்துக்களை எரிக்க செய்யப்படும் முயற்சியிலே, நான் தொண்டு செய்ய முன் வருவேன். நூலை எரிப்பதால், ஆபாசக்கருத்தை எப்படி அழிக்க முடியும்? கம்பராமாயணத்திலே தசாவதாரக் கருத்திருக்கிறது. இராமனைத் தெய்வமாக்கியிருக்கிறது. இதெல்லாம் கம்பனா உண்டாக்கினான்? அவன்காலத் தமிழர் கொண்ட கருத்தை கவி உபயோகித்தார். அதனால் நாம், ஓர் நல்ல கவியை இழந்தோம். வைணவமோ, ஆரியமோ கம்பன் உண்டாக்கினதல்ல.

கம்பராமாயணத்தை கொண்டாடுபவர்கள் தமிழர்கள். இன்னும் ஆரியர்கள் வால்மீகி ராமாயணத்தை தான் விசேடமானது என்று கருதுகிறார்கள். ஆகவே கம்பராமாயணத்தை கொளுத்துவது தமிழர்களுக்கே கோபமூட்டி, தமிழர்களுக்குள் பிளவை உண்டாக்கும். வெறிநாய் மேலே விழுந்து கடித்தால், நாயை திரும்பிக் கடிக்க முடியுமா? சமய நெறி பிடித்த மக்கள் கம்பராமாயணத்தை கொளுத்த சுயமரியாதைக்காரர்கள் துணிந்தால், எதிர்த்து நூலை எரிப்பவர்களையே எரிக்க ஆரம்பித்தால் என்ன செய்வது என்றே நான் அஞ்சுகிறேன். எந்த சமயமும் வெறி தான். ஆகவே இந்த எதிர்ப்பை கிளப்பும் காரியத்தை செய்ய வேண்டாம் என்று கூறுகிறேன்.

தமிழனுடைய நிலை, பிற மதக் கருத்துப் படிந்ததும் கெட்டே விடும், அழிந்தே போகும் என்று ஏன் அஞ்ச வேண்டும்? கிறித்துமத நூலைப் படிக்கவில்லையா? சேக்சுபியரின் நூல்களிலே கிறித்துவ மத தத்துவங்கள் நிரம்ப இல்லையா?

நான் கம்பராமாயணத்தையும், சங்க நூல்களையும் எந்த தமிழ் பண்டிதனுக்கும் குறையாத அளவு ஆராய்ந்து படித்திருக்கின்றேன். முன்னால் இருந்த இலக்கிய நூல்களில் இருந்து வெளிவந்த மலராகக் கம்பராமாயணம் இருக்கிறது. கம்பன் போல் நான் கவி எழுதலாமே என்று நண்பர் கூறினார். ஏன் எழுதவில்லை? முடியாது. இந்த அகில உலகிலும் கம்பனை போல் ஒரு சிறந்த கவிதை நான் கண்டதில்லை.

கம்பன் வேண்டுமா? தமிழ்நாடு வேண்டுமா? என்று என்னைக் கேட்டால், கம்பன் வேண்டும் தமிழ்நாடு வேண்டாம் என்றே கூறுவேன். தமிழர்களுக்கு ஆத்திரம் உண்டாகும் செயல் வேண்டாம் என்பது என் கருத்து.
தமிழறிஞர் நாவலர் ச சோமசுந்தர பாரதியார்.jpg
இப்படி தன் வாதம் மூலம் கம்பனுக்கு ஆதரவு தந்த தமிழறிஞர் . . . 1943 ஆம் ஆண்டில் சேலத்தில் நடந்த ஒரு மாநாட்டில் இப்படி கம்பனுக்கு ஆதரவாக உரையாற்றிய தமிழறிஞர் தான் நாவலர் ச சோமசுந்தர பாரதியார்.

1937-ஆம் ஆண்டு இந்தித் திணிப்பிற்கு எதிராக முதன்முறையாகத் தமிழறிஞர்கள் ஒன்று கூடிப் போர்க்குரல் எழுப்பினர். அக்காலத்தில் முப்பத்தைந்து ஆண்டு காலமாகக் காங்கிரசுக் கட்சிக்குத் தம்மை ஒப்படைத்து இந்திய விடுதலைக்குப் போராடி வந்த தமிழறிஞர் நாவலர் சோம சுந்தர பாரதியார் அக்கட்சியிலிருந்து வெளியேறி தமிழறிஞர்களோடு இணைந்து போராடினார்.

எட்டப்ப பிள்ளை – முத்தம்மாள் இணையருக்கு மகனாக 27.07.1879 இல் பிறந்தவர்தாம் சோமசுந்தரம். எட்டையபுரம் அரண்மனையில் பணியாற்றி வந்த சின்னச்சாமி ஐயரின் மகன் சுப்பிரமணியனும் அரண்மனையில் வளர்ந்து வந்த சோமசுந்தரமும் சிறுவயது முதலே நல்ல நண்பர்கள். தமிழ் மீதான ஆர்வமே இருவரையும் ஒன்று சேர்த்தது.

எட்டையபுரம் அரண்மனைக்கு வருகை தரும் தமிழ்ப் புலவர்களின் பாடல் கேட்டு பா புனையும் ஆற்றலை இருவரும் பெற்றிருந்தனர். ஒருமுறை யாழ்ப்பாணத்திலிருந்து புலவர் ஒருவர் அரண்மனைக்கு வந்தார். அவர் இருவரிடமும் சென்று ஈற்றடி கூறி , பாடலொன்றை இயற்றித் தருமாறு வேண்டினார். இருவரும் எழுதுகோல் பிடித்து உடனடியாக அந்த ஈற்றடிக்கு பாடல் தந்தனர். அதனைப் பாராட்டி, இருவருக்கும் பாரதி பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்.

1905ஆம் ஆண்டு சென்னையில் சட்டத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சோமசுந்தர பாரதியார் தூத்துக்குடிக்குச் சென்று வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார். அப்போது வ.உ.சி. யோடு நெருக்கம் கொண்டு பழகியதன் மூலம் இந்திய விடுதலையின் மீது தீராப் பற்றுக் கொண்டார்.

வ.உ.சி.தோற்றுவித்த கப்பல் நிறுவனத்திற்குப் பொறுப்பேற்று செயல்படவும் பாரதியார் துணிந்தார். அதன் காரணமாகவே , வ.உ.சி. இரண்டு சரக்குக் கப்பலோடு சேர்த்து மூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் என்னிடமுண்டே என்று விளையாட்டாக மற்றவரிடம் பேசுவதுண்டு. அதாவது “எஸ்.எஸ்.பாரதி ” என்பதை (steam ship ) “தமிழ்க் கப்பல் ” என்று வ.உ.சி. விளித்துக் கூறுவது வழக்கம்.

ஆங்கிலேயர்கள் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீது தொடுத்த இராசதுரோக வழக்குகளை எதிர் கொண்டு இவர் வாதாடினார்.

காந்தியடிகள் சென்னைக்கு வந்த போது அவரை சோமசுந்தர பாரதியார் தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்று பொதுக் கூட்டங்களில் உரையாற்றும்படி செய்தார். காங்கிரசுப் பேரியக்கத்தில் தான் மட்டுமல்லாது, தம் குடுமத்தினரையும் ஈடுபடுத்தினார்.

1933ஆம் ஆண்டு அண்ணாமலை அரசரின் வேண்டு கோளுக்கிணங்க வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராக பாரதியார் பொறுப்பேற்றார். அங்கு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக தமிழ்ப் பணியாற்றினார்

இந்தி எதிர்ப்புப் போரில் உருவான தமிழ் மொழி, தமிழின அடையாளத்தை இழக்க சோமசுந்தர பாரதியாருக்கு மனம் வரவில்லை. பெரியார் உருவாக்கிய ஆரியத்திற்கு எதிர்வகை குறியீட்டுச் சொல்லாகிய திராவிடத்தை சோமசுந்தர பாரதியார் ஒப்புக் கொள்ள மறுத்தார். ஆரியர் x தமிழர் என்பதே அவரது கொள்கை நிலைப்பாடாகும்.

1937ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் “தமிழர் கழகம்” எனும் அமைப்பை நிறுவினார். தமிழ்மொழி ஆக்கத்திற்கும், இந்தி எதிர்ப்புக்கும், தமிழர் முன்னேற்றத்திற்கும் வெவ்வேறு பெயர்களில் அமைக்கப் பெற்ற இயக்கத்தினர்களெல்லாம் தமிழர் கழகக் கிளைகளை ஆங்காங்கே அமைக்க வேண்டுமென்று பாரதியார் பேரழைப்புக் கொடுத்தார். பிறகு ‘தமிழர் கழகம்’ எனும் இதே பெயரில் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் அமைப்பைக் கட்டிய போதும் அதன் தலைவராக பாரதியார் பொறுப்பு வகித்தார்.

தசரதன் குறையும் கைகேயி நிறையும், அழகு சேரர் தாய முறை, சேரன் பேரூர், தமிழும் தமிழரும், திருவள்ளுவர், தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை ஆகியவை நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதிய நூல்களில் மிக முக்கியமானவையாகும்.

27.07.1959 அன்று பாரதியாரின் 80வது அகவை நிறைவு விழா மதுரையில் தமிழ்ச்செம்மல் கி.பழனியப்பனார் ( பழ.நெடுமாறன் அவர்கள் தந்தையார்) முயற்சியில் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. 14.12.1959இல் அவர் தமது தமிழ் மூச்சை நிறுத்திக் கொண்டார்.

அவரின் படைப்புகளில் ஒன்றான தமிழும் தமிழரும் நூலின் பி டி எஃப் வடிவத்தினை [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2l0M0&tag=தமிழும்%20தமிழரும்#book1/] மகிழ்வுடன் பகிர்கிறேன்.

தேமொழி

unread,
Feb 21, 2024, 7:33:38 PM2/21/24
to மின்தமிழ்
தமிழறிஞர் வித்வான் தியாகராசச் செட்டியார்

திருவிளையாடல் படத்தில் ஏழைப் புலவன் தருமியிடம் ஒரு கேள்வி கேட்கப்படும். இந்தச் செய்யுளை இயற்றியது நீர்தானா? அல்லது மண்டபத்தில் யாராவது எழுதிக் கொடுத்தார்களா?

ஒரு தமிழ் அறிஞரின் வாழ்க்கையிலும் இதே போன்று,  ஒரு புலவர் மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்த செய்யுளைக் கொண்டு வந்திருக்கிறார். இதோ அந்தப் புலவர்க்கும் தமிழறிஞருக்கும் இடையே நடக்கும் உரையாடலை சற்றே பாருங்கள்.

தமிழறிஞர்: பாடல் செய்து கொண்டு வந்திருக்கிறேன் என்று சொல்கிறீரே! உமக்கு பாடல் செய்கிற பழக்கம் உண்டா?

புலவர்: ஏன் இல்லை? நான் செய்வேன் என்பது உங்களுக்கு மட்டும் தெரியாது! பல இடங்களுக்கு போய் போய், பாடி பாடி பரிசு பெற்று வருவது எனக்கு வழக்கம்.

த:  பாடுவது என்றால் படித்திருக்க வேண்டுமே?

பு: ஏன் படிக்கவில்லை? படித்திருக்கிறேன், என்று சிலரைப் போல் நான் பறையறைந்து கொண்டு திரிகிறதில்லை.

த:  படித்தவர்கள் எல்லாம் படித்திருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டுதான் திரிகிறார்களா? எங்கே! நீர் செய்து கொண்டு வந்ததாக சொன்ன பாடலை சொல்லும் கேட்போம்!!

பாடல் சொல்கிறார்.

த:  இதனை இன்னும் ஒரு முறை சொல்லும்!

 பாடல் மீண்டும் ஒருமுறை சொல்கிறார்

த:  இருக்கட்டும்.. இந்தப் பாடலை நீரே செய்தீரா? வேறு யாரேனும் செய்து கொடுத்தார்களா? உமக்கு இப்படிப் பாட வருமா?

பு: ஏன் வராது? நானேதான் செய்தேன்!

த:  பொருள் சொல்வீரா?

பு: திவ்யமாக சொல்லுவேன்

த:  முழுவதற்கும் சொல்ல வேண்டாம். இதில் உள்ள ஒரே ஒரு சொல்லுக்கு மட்டும் பொருள் சொன்னால் போதும். இந்த சொற்பிரயோகத்தை வேறு எந்த நூலில், எந்த இடத்தில் கண்டிருக்கிறீர் சொல்லும்?

பு: இடம் ஞாபகம் இல்லை

த: இடம் தெரியாத போது நீர் இந்த சொல்லை அறிந்தது எப்படி? எனக்குச் சந்தேகமாகத்தான் இருக்கிறது.

பு: நீங்கள் செய்யும் செய்யுள்களில் அமைக்கிற சொற்கள் உள்ள இடங்கள் எல்லாம் உங்களுடைய ஞாபகத்தில் இருக்குமா?

த: நீர் பேசுகின்ற பேச்சே, நீர் படிக்கவில்லை என்பதை நன்றாக அறிவிக்கின்றன. இந்த பாட்டை நீரே செய்ததாக சத்தியம் செய்வீரா?

பு: இதோ செய்கிறேன்! எந்த மாதிரியாக செய்ய வேண்டும்?

த:  துணியை போட்டு தாண்ட வேண்டும் அது செய்வீரா?

அப்படியே அந்த புலவர் செய்யப் போக, அந்தத் தமிழறிஞர் தடுத்து நிறுத்தி,

 த:  நீர் சத்தியம் செய்தாலும் இப்பாடலை நீர் செய்ததாக நான் நினையேன். துணியைத் தாண்ட வேண்டாம்.  இதோ உமக்கு தேவைப்படுகின்ற பரிசுப் பொருள்கள்.

தியாகராசச் செட்டியார்.jpg
இப்படி  மண்டபத்தில் யாரோ ஒருவரின் செய்யுளை கண்டு கொண்டு பரிசளித்த தமிழறிஞர் வித்வான் தியாகராசச் செட்டியார் அவர்கள். அந்த யாரோ வேறு யாருமில்லை, மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையே தான்.

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகாவில் உள்ள பூவாளூரில் 1826 ஆம் ஆண்டில் பிறந்தவர் தான் வித்வான் தியாகராசச் செட்டியார். இளம் வயதில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தியாகராசச் செட்டியார் கல்வி கற்கத் தொடங்கினார். ஆரம்பப் படிப்பில் அவர் தமிழும் கணிதமும் கற்றாலும் வர் மனதைக் கவர்ந்த்து என்னவோ தமிழ்தான். அதனால் பூவாளூரை அடுத்துள்ள ஊர்களில் வாழ்ந்த பல புலவர்களைச் செட்டியார் போய்ப் பார்த்து அவர்களிடம் பல தமிழ் நூல்களைப் பாடம் கேட்டார். ஆயினும் தமிழில் ஆழமான புலமை பெறும்படி தனக்கு ஒரு நல்ல தமிழாசான் வேண்டும் என்று ஆவலுடன் காத்திருந்தார்.

அந்த நாளில் திரிசிரபுரம் என்று அழைக்கப்பட்ட திருச்சியில் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தமிழ் பீடத்தில் கொலுவிருந்து அரசோச்சிய காலம். 1844ம் ஆண்டு பிள்ளயவர்களிடம் தியாகராசச் செட்டியார் மாணாக்கராகச் சேர்ந்தார். அந்த நாளில் பிள்ளையவர்களிடம் செட்டியார் தமிழ்ப்பாடம் கேட்ட போது, திருத்தான்தோன்றி மருதநாயக முதலியார், கடம்பர் கோயில் சுப்பராய முதலியார் போன்றோரும் உடன் பயின்றனர்.

செட்டியார் மிக அழகாகவும் விரைவாகவும் பனை ஓலையில் எழுத வல்லவர். இத்திறமையால் பாடம் கேட்ட நேரம் போக மற்ற நேரங்களில் பிள்ளையவர்களின் பிரத்தியேக எழுத்தராகவே செட்டியார் இருந்தார். பிள்ளையவர்கள் இயற்றிய நூல்களையெல்லாம் தன் கைப்பட எழுதியதால் அவை மனத்தில் பதிந்ததுடன் ஆசிரியருடனான உறவையும் சிறப்பாக வளர்த்தன. பின்னாளில் பிள்ளையவர்களின் மூத்த மாணவர் என்ற சிறப்பை செட்டியார் பெற்றார்.

காலப்போக்கில் பிள்ளையவர்களிடம் பல்வேறு இலக்கண நூல்களையும், ஏராளமான இலக்கியங்களையும் பாடம் கேட்ட செட்டியார் இணையற்ற பெரும் புலமையைப் பெற்றவரானார். குறிப்பாக இலக்கணத்தில் நிகரற்ற புலமை படைத்தவராய் விளங்கினார் செட்டியார்.

பிள்ளையவர்களின் மூத்த மாணவர் என்ற வகையில் அவர் உத்தரவுப்படி பிறருக்கு சிறு நூல்களைச் செட்டியார் பாடம் சொல்லத்தொடங்கினார். அதனால் அவரது தமிழறிவு மேலும் ஆழப்பட்டது. தான் புலமையோடு சிறந்து விளங்குவது மட்டுமின்றி, கடினமான பாடங்களையும் மாணவர்கள் மனத்தில் பதியவைக்கும் அருங்கலை இயல்பாகவே செட்டியாருக்குக் கை கூடிற்று.

இலக்கணத்தில், "மருவூ மொழி" என்பதை செட்டியார் மாணவர்களுக்கு விளக்கும் அழகைப் பாருங்கள்.

"என் சொந்தக்காரர்களில் ஒருவரை "விராட்டி" என்று நாங்கள் கூப்பிடுவோம். ஏன் தெரியுமா?" என்று கேட்பார்.

மாணவர்கள், "அவர் விராட்டி விற்பவராக இருக்கலாம்," என்பார்கள்.

"இல்லை. அவர் பெயர் வீரராகவச் செட்டி. அதுதான் விராட்டியாகிவிட்டது," என்பார்கள்.

வகுப்பு முழுவதும் கொல்லென்று சிரிக்கும். வீரராகவச் செட்டி என்பது விராட்டி என்று வந்துவிட்டதல்லவா? அதுதான் மருவூ மொழி.

பூவராகன் என்பதைப் "பூரான்" என்பதும், மகாலிங்கத்தை "மாஞ்சு" என்பதும் தர்மராஜப் பிள்ளையை "தம்பாச்சியா"ப் பிள்ளை என்பதும் குலோத்துங்கச் சோழன் இருப்பு என்பதை "குளத்துக்கிருப்பு" என்று சொல்வதும் மருவூ மொழிகளே என்பார் செட்டியார். இப்படி நகைச்சுவை ததும்ப இலக்கணத்தை புகட்டுவதில் செட்டியாருக்கு நிகர் அவரே.

இந்தத் திறமையே பிற்காலத்தில் அன்று மிக உயர்ந்த பதவியாகக் கருதப்பட்ட கும்பகோணம் பள்ளியின் தமிழாசிரியர் பதவியை 1865ல் அவருக்குத் தேடியும் கொடுத்தது.

அந்தப் பதவியிலிருந்து தான் ஓய்வுபெறும் காலம் வந்தபோது தான் மிகவும் அன்பு வைத்தவரான உ.வே.சாமிநாதய்யர் இந்த வேலையைப் பெறும்படி செய்தார். பின்னாளில் சென்னையிலுள்ள தன் இல்லத்தின் பெயரையே செட்டியார் நினைவாக "தியாகராச விலாசம்" என்று வைத்து நன்றி பாராட்டினார் ஐயர்.

தியாகராசச் செட்டியார் அவர்கள்  இயற்றிய நூல்கள்:
1. ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை அந்தாதி.
2. வீரை உமையம்மை பிள்ளைத்தமிழ்.
3. சவராயலு நாயகர் இரண்டை மணிமாலை.
4. திருச்சிற்றம்பலம வெண்பாவந்தாதி
5. திருவாரூர் பாதி திருவெற்றியூர் பாதி வெண்பாவந்தாதி
6. திருவாரூர் மருந்து வெண்பா மாலை
7. வியாசைக் கோவையின் பிற்பகுதி

 இவர் பதிப்பித்த நூல்கள்:
1. உறையூர் புராணம்
2. திருக்குடந்தை புராணம்
3. திருப்பெருமண நல்லூர்த் திரு வெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ்
4. திருத்தவத்துறைப் பெருந்திருப் பிராட்டியார் பிள்ளைத்தமிழ்
5. திருவிடைக்கழி முருகன் பிள்ளைத்தமிழ்
6. திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி மாலை
7. பூவளூர்ப் புராணம்

இவர் தாம் சேமித்து வைத்திருந்த பொருள் முழுவதையும் பூவாளூர் ஆலயத்திற்கு உரிமை ஆக்கிவிட்டார். அந்தப் பொருளைக் கொண்டு அவருடைய அன்பர்கள் பத்து ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் வாங்கி இவரின் கருத்துக்கிணங்க ஆலயத்தில் கட்டளைகளை நடத்தி வருகின்றனர்.

பள்ளியில் பாடம் நடத்திய நேரம் போக பொருள் ஏதும் பெறாமல் பலருக்குச் செட்டியார் பாடம் சொல்லி வந்தார். நாள் முழுவதும் தமிழையே சிந்தித்து, தமிழையே கற்பித்து வந்த தியாகராசச் செட்டியார் 19-1-1888 ஆம் ஆண்டு காலமானார்.

இவரைப்பற்றிய  மேலும் பல சுவையான சம்பவங்கள் அறிய  தமிழ்த்தாத்தா உ வே சா அவர்கள் எழுதிய வித்துவான் தியாகராச செட்டியார் நூலைப் படிக்கவும், அதன்  பி டி எஃப் வடிவம் https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU9lZMy#book1/ இதோ உங்களுக்காக.

தேமொழி

unread,
Feb 23, 2024, 3:46:08 AM2/23/24
to மின்தமிழ்
ஊத்துமலை இருதயாலய மருதப்ப தேவர்

உனக்காக எல்லாம் உனக்காக… என்று தொடங்கும் ஒரு பழைய சந்திரபாபுவின் பாடல் உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.

அந்தப்பாடலில் மேலும் சில வரிகள் இப்படியாக தொடரும்…

பள்ளியிலே இன்னுமொரு தரம் படிக்கணுமா?
இல்லே பைத்தியமாப் பாடி ஆடி நடிக்கணுமா?
துள்ளி வரும் காவேரியில் குதிக்கணுமா?
சொல்லு சோறு தண்ணி வேறு ஏதுமே இல்லாம கெடக்கணுமா?

காதலுக்காக இதெல்லாம் செய்யவா? என்று நாயகியிடம் கேட்கிறார் அந்த நிழல் நாயகன்.

இங்கே ஒரு நிஜ நாயகன் தன் காதலுக்காக செய்த செயல்கள் பட்டியல் போடலாம்.
1.  சிற்றாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டியது
2.  அதிலிருந்து கால்வாய் வெட்டியது
3.  கால்வாயின் இருபுறங்களிலும் அரண்மனையைக் கொணர்ந்தது
4.  அருகிலேயே கோயிலையும் அமைத்தது.

ஆமாம் …இத்தனையும் ஏன் செய்தார் அவர்?

நம் நாயகன் பணக்காரர். அவருக்கு பெண்  பார்க்க போன இடத்தில்,  அந்த  கிராமத்து ஏழைப் பெண் நீர் இருக்கும் ஊர் எல்லாம் தண்ணியில்லாக் காடு; அதைநம்பி நான் வந்து உன்னுடன் வாழ முடியாது என்றாளாம் அந்த ஏழை அழகி.

அவள் பொருட்டு, நாயகர் நிகழ்த்தியவை தான் மேலே சொன்ன பட்டியல். வறண்டபூமி குளிர்ந்தது;  திருமணமும் கை கூடியது.

அந்த நாயகன் தன் நாயகியினை அடைய வேண்டி  மட்டும் தன் ஆதரவுக் கரத்தினை நீட்டவில்லை. தமிழ் தழைக்கவும் ஆதரவு நல்கியவர்.
ஊத்துமலை இருதயாலய மருதப்ப தேவர்.jpg
யார் அந்த நாயகன்?
அந்த  நாயகர் ஊத்துமலை இருதயாலய மருதப்ப தேவர்.

வீரகேரளம்புதூர் பகுதியில் இருந்த சேற்றூர் (சேத்தூர்) ஜமீன்தார் வடகரை ஜமீன்தார் உதவியுடன் தென்கரை ஜமீன்தாரையும் ஊற்றுமலை ஜமீன்தாரையும் வென்றார். ஊற்றுமலை ஜமீன்தாரின் மனைவி பூசைத்தாயார் தன் இரு மைந்தர்களுடன் தென்காசி சென்று தலைமறைவாக வாழ்ந்து வந்தார். அவருடைய முதல் மைந்தரே இருதயாலய மருதப்பர். இளையவர் சீவலவ தேவர். பின்னர் அவர்கள் வடகரை சேற்றூர் ஜமீனின் ஆலோசகரான பொன்னம்பலம் பிள்ளை என்பவரின் ஆதரவுடன் தங்கள் ஜமீனை மீட்டனர். இதை உ.வே.சாமிநாதையர் குறிப்பிடுகிறார்.

இருதயாலய மருதப்ப தேவர் ஊற்றுமலைக்கு அருகிலுள்ள குருந்தன்மொழி கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த மீனாட்சி சுந்தரம்மாள் என்னும் பெண்ணை கண்டு மணக்க விரும்பி தனது உடைவாளை அனுப்பி அவரிடம் மணம் முடிக்க சம்மதம் கேட்டார். அவர் வரண்ட ஊற்றுமலைக்கு வரமாட்டேன் என்று சொன்னமையால் இருதயாலயமருதப்பர் சிற்றாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி அதிலிருந்து கால்வாய் வெட்டினார்.

வீரகேரளம்புதூர் என்ற இடத்தில் கால்வாயின் இருபுறங்களிலும் அரண்மனையைக் கட்டினார். அது தாயார் தோப்பு என அழைக்கப்படுகிறது. அருகிலேயே நவநீத கிருஷ்ண சுவாமி கோயிலை கட்டினார். தன் அரண்மனையை வீரகேரளம் புதூருக்கு மாற்றினார். 25.5.1864 அன்று இருதாலய மருத்தப்பதேவருக்கும் மீனாட்சி சுந்தர நாச்சியாருக்கும் திருமணம் நடந்தது.

ஊற்றுமலை இருதயாலய மருதப்ப தேவர் உ.வே.சாமிநாதையருக்கு பொருளிதவி செய்தார். உ.வே.சாமிநாதையர் ஊற்றுமலையில் உ.வே.சாமிநாதையரின் உபசரிப்பில் தங்கியிருந்து, அவரை பாராட்டி பாடல்களும் புனைந்துள்ளார்.

ஆதரித்த புலவர்கள்
அண்ணாமலை ரெட்டியார்
தண்டபாணி சுவாமிகள்
புளியங்குடி முத்துவீரக் கவிராயர்
செவற்குளம் கந்தசாமிப்புலவர்
வண்டானம் முத்துசாமி ஐயர்
முகவூர் கந்தசாமிக் கவிராயர்
முகவூர் மீனாட்சி சுந்தரக் கவிராயர்
இராமசாமிக் கவிராயர்
உ.வே.சாமிநாதையர்

இருதயாலய மருதப்ப தேவர் மீது பாடப்பட்ட செய்யுள்களை "ஊற்றுமலை தனிப்பாடல் திரட்டு" என்ற நூலாகத் தொகுத்தனர்.

மருதப்பத் தேவரிடம் ஒரு சமயம் தமிழறிஞர் வண்டானம் முத்துசாமி ஐயர் அவர்கள் சில செய்யுட்களைப் பாடிக்காட்டித் தமக்கு விவாகம் ஆகவேண்டியிருப்பதால் அதற்குரிய பொருளுதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். ஜமீன்தார், "நீர் முகூர்த்தம் வைத்துக் கொண்டு வந்தால் நான் நூறு ரூபாய் தருவேன்" என்றார்.

தமிழறிஞரும்  தம்மூர் சென்று சிலகாலங் கழித்து வந்து தமக்குக் கல்யாணம் நிச்சயமாகிவிட்டதென்றும் பொருளுதவி செய்ய வேண்டுமென்றும் கேட்டார்.

ஜமீன்தார்: எவ்வளவு தருவேனென்று முன்பு சொன்னேன்?

முத்துசாமி ஐயர்: நானூறு ரூபாய் தருவேனென்றீர்கள்.

ஜமீன்தார்: இராதே! அப்படிச் சொன்னதாக எனக்கு ஞாபகம் இல்லையே!

முத்துசாமி ஐயர்: (அச்சங்கொண்டவர்போல்) முந்நூறு தருவேனென்றீர்கள்.

ஜமீன்தார்: அப்படியும் சொல்லவில்லையே.

முத்துசாமி ஐயர்: இல்லை; இருநூறு தருவேனென்றீர்கள்.

ஜமீன்தார்: என்ன பொய் சொல்லுகிறீரே.

முத்துசாமி ஐயர்: இல்லை! நூறு ரூபாய் தருவதாகச் சொன்னீர்கள்.

ஜமீன்தார்: பின் எதற்காக நாநூறு, முந்நூறு, இருநூறென்று ஏமாற்றுகிறீர்?

முத்துசாமி ஐயர்: நான் உள்ளதைத் தானே சொன்னேன். நீங்கள், "நான் நூறு தருவேன்" என்று சொல்லவில்லையா? முன் (நான் வந்தபொழுது) நூறு தருவதாகச் சொல்லவில்லையா? இரு (காத்திரு); நூறு தருகிறேனென்றதும் பொய்யா?

இவ்வாறு உடனுடன் சாதுரியமாக விடை பகர்ந்ததைக் கேட்ட ஜமீன்தார் வியந்து தான் வாக்களித்த நூறு ரூபாயோடு மற்றொரு நூறு ரூபாயும் சேர்த்து இருநூறாக அளித்தார் மருதப்பத் தேவர் அவர்கள்.

எழுத்தாளர் ஜெயமோகன் இவரைப் பற்றிச் சொல்வதையும் படியுங்கள்:

இன்று பெருஞ்செல்வந்தர்கள் இரண்டு வகையினர். ஒருவகையினர் பிறப்பால் உயர்குடியினர். அவர்களுக்கு தமிழ்ச்சமூகம் மற்றும் தமிழ்ப்பண்பாட்டு அறிதலே இருக்காது. முற்றிலும் ஆங்கிலேயர்களாக இருப்பார்கள். இன்னொருசாரார் சுய உருவாக்கச் செல்வந்தர்கள். அவர்கள் ஈவிரக்கமில்லாத போட்டி வழியாக சமரிட்டு மேலே வந்தவர்கள். அவர்களுக்கு சிக்கனம் குருதியில் ஊறி இருக்கும். தொழில் தவிர எதுவுமே தெரிந்திருக்காது. இருதயாலய மருதப்ப தேவர் சென்ற நூற்றாண்டின் மாபெரும் கலையிலக்கியப் புரவலர். அவருடைய நேரடி பங்களிப்பு குறைவாக இருக்கலாம். ஆனால் அவரைப்போன்றவர்கள் இங்கே இருந்தனர் என்பது நம் நினைவில் நிறுத்திக்கொள்ளப்பட வேண்டும். 
Reply all
Reply to author
Forward
0 new messages