அன்பு முகத்துடன், அருள் உள்ளத்துடன், நெற்றியில் நீறுடன், கழுத்தில்
உத்திராட்சத்துடன், கையில் வேலுடன் குழந்தை முருகன் இருக்கும் இந்தப்
படத்தைப் பாருங்கள்,
இப்படத்தில் எனக்கு கருத்துவேறுபாடு உள்ளது,
மெய்யன்பர்களே,
நாரதமுனி கொண்டு வந்து ஞானப்பழத்தைப் பெருவதில் பிரச்சனை ஏற்பட்டது,
ஞானப்பழத்தைப் பெற ஞானம் உள்ளதா? எனச் சோதனை செய்தான் சிவன், வெற்றி
பெற்று விநாயகன் ஞானப்பழத்தைப் பெற்றான். முருகன் கோபித்துக் கொண்டு
பழநிமலை வந்து குன்றேறி மேற்கு நோக்கி நிற்கிறான். (அருளுகிறான்?)
அவன் கையில் தண்டம் உண்டு. இடையில் கோவணம் உண்டு,
வேல் எங்கே வந்தது?
வேல் எப்போது வேலவன் கைக்கு வந்தது?
அசுரர்களை வெல்லப் போருக்குச் செல்லும் முன், அன்னை பராசக்தி வேலை
முருகனுக்கு வழங்கினாள்,
குழந்தை முருகனுக்கு வேல் எப்படி வந்தது?
இது தவறல்லவா?
கும்பிடு முருகன்,
இப்படத்தில் முருகன் பவ்வியமாகக் கும்பிட்டபடி இருக்கிறார்!
முருகன் வரலாற்றை அறிந்த ஆன்மிக மெய்யன்பர்களே
நீங்கள் சொல்லுங்கள்.
முருகன் யாரையாவது கும்பிட்டுள்ளானா?
தாய்தந்தையுடன் கோபித்துக் கொண்டு வந்துள்ளான்!
தந்தைக்கு உபதேசம் செய்துள்ளான்!
அசுரனை வென்றுள்ளான்,
தேவசேனையை மணந்துள்ளான்
வள்ளியை மணந்துள்துள்ளான்,
நக்கீரனுக்கு அருளியுள்ளான்,
ஆனால், எந்த இடத்திலாவது யாரையாவது கும்பிட்டுள்ளானா?
இந்தப் படம் தவறல்லவா?
இப்படம் இப்போது அதிகான இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது!
தவறான ஒரு படத்தை வணங்குவதும் தவறாகுமல்லவா?
மெய்யன்பர்களின் கருத்து என்ன?
அன்பன்
கி.காளைராசன்
On Jan 19, 5:16 am, kalairajan krishnan <kalairaja...@gmail.com>
wrote:
ஆம் ஐயா. கிறித்துவத்தில் மேரி மாதா கும்பிடுவதைப் பார்த்து
ஓவியர் திருமுருகனை வடித்துள்ளார் போலும்.
மேரியைப் பாருங்க:
http://miracle-witness.blogspot.com/2010/10/why-tears.html
மாமன்னர்களையும் (சேர சோழ பாண்டிய ராசாக்கள்),
அனுமன், நாயன்மார்கள், சண்டி, ... போன்றோரை
கைகுவிந்த நிலையில் பார்க்கலாம்.
மேரி போல் முருகன்! புதுமைதான்.
அன்புடன்,
நா. கணேசன்
> மெய்யன்பர்களின் கருத்து என்ன?
> அன்பன்
> கி.காளைராசன்
>
> muruvan vanakam.jpg
> 4KViewDownload
On 1/19/11, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
ஐயா கணேசன் அவர்களுக்கு வணக்கம்,
சண்டி, சிவனைத்தவிர வேறுயாரையும் வணங்கியதில்லை.
மாமன்னர்கள், இறைவனைத்தவிர யாரையும் வணங்கியதில்லை. நாயன்மார்களும் அப்படியே,
அனுமன், சீதாஇராமனைத் தவிர வேறுயாரையும் வணங்கியதில்லை, தூதனாகச்
சென்றவன் இலக்கேசுவரனையே வணங்கவில்லை, அதுவே போருக்கு ஒரு காரணமும்
ஆகியது,
சென்னை சென்றிருந்தேன், நங்கநல்லூரில் பெரிய ஆஞ்சனேயர், என்னை நண்பர்
அழைத்துச் சென்றார், வழிபட்டேன்,
ஸ்ரீஅனுமன் யாரைப்பார்த்துக் கும்பிடுகிறார்? என்று கேட்டேன்,
அவர் பக்த அனுமன் என்றார்?
அவர் யாருடைய பக்தன் என்றேன்?
ஸ்ரீராமனுடைய பக்தன் என்றார்?
அப்படியானால், கும்பிடுஅனுமன் முன் ஸ்ரீராமன் இருக்க வேண்டுமே என்று கேட்டேன்?
என் நண்பர் என்னை வேகமாக வெளியே அழைத்து வந்து விட்டார்?
அன்பன்
கி.காளைராசன்
சில மாதங்களுக்கு முன் சென்னை சென்றிருந்தேன்,
நண்பர் என்னை
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,

சென்னை சென்றிருந்தேன், நங்கநல்லூரில் பெரிய ஆஞ்சனேயர், என்னை நண்பர்
அழைத்துச் சென்றார், வழிபட்டேன்,
ஸ்ரீஅனுமன் யாரைப்பார்த்துக் கும்பிடுகிறார்? என்று கேட்டேன்,
அவர் பக்த அனுமன் என்றார்?
அவர் யாருடைய பக்தன் என்றேன்?
ஸ்ரீராமனுடைய பக்தன் என்றார்?
அப்படியானால், கும்பிடுஅனுமன் முன் ஸ்ரீராமன் இருக்க வேண்டுமே என்று கேட்டேன்?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மெய்யன்பர்களே,
நாரதமுனி கொண்டு வந்து ஞானப்பழத்தைப் பெருவதில் பிரச்சனை ஏற்பட்டது,
ஞானப்பழத்தைப் பெற ஞானம் உள்ளதா? எனச் சோதனை செய்தான் சிவன், வெற்றி
பெற்று விநாயகன் ஞானப்பழத்தைப் பெற்றான். முருகன் கோபித்துக் கொண்டு
பழநிமலை வந்து குன்றேறி மேற்கு நோக்கி நிற்கிறான். (அருளுகிறான்?)
அவன் கையில் தண்டம் உண்டு. இடையில் கோவணம் உண்டு,
வேல் எங்கே வந்தது?
அருத்திகொள் குமரன் இனையசொல் வினவி அப்பணி புரிகுவ னென்னப்,
புரத்தினை யட்ட கண்ணுதல் பின்னர்ப் பொள்ளென உள்ளமேற் பதினோர்,
உருத்திரர் தமையும் உன்னலும் அன்னோர் உற்றிட இவன்கையிற் படையாய்,
இருத்திரென் றவரைப் பலபடை யாக்கி ஈந்தனன் எம்பிரான் கரத்தில். 36
பொன்றிகழ் சடிலத் தண்ணல்தன் பெயரும் பொருவிலா உருவமுந் தொன்னாள்,
நன்றுபெற் றுடைய உருத்திர கணத்தோர் நவிலருந் தோமரங் கொடிவாள்,
வன்றிறற் குலிசம் பகழியங் குசமும் மணிமலர்ப் பங்கயந் தண்டம்,
வென்றிவின் மழுவு மாகிவீற் றிருந்தார் விறல்மிகும் அறுமுகன் கரத்தில். 37
வேல் எப்போது வேலவன் கைக்கு வந்தது?
அசுரர்களை வெல்லப் போருக்குச் செல்லும் முன், அன்னை பராசக்தி வேலை
முருகனுக்கு வழங்கினாள்,
வேல் சிவனால் அளிக்கப்பட்டது என்று கந்த புராணம் பாடும் இடம் (மேற்படிப் பாடல்களுக்கு அடுத்த பாடல்)
ஆயதற் பின்னர் ஏவில்மூ தண்டத் தைம்பெரும் பூதமும் அடுவ,
தேயபல் லுயிரும் ஒருதலை முடிப்ப தேவர்மேல் விடுக்கினும் அவர்தம்,
மாயிருந் திறலும் வரங்களுஞ் சிந்தி மன்னுயிர் உண்பதெப் படைக்கும்,
நாயக மாவ தொருதனிச் சுடர்வேல் நல்கியே மதலைகைக் கொடுத்தான். 38
கொடுத்தான் என்றிருக்கிறதா, கொடுத்தாள் என்றிருக்கிறதா? கச்சியப்ப சிவாசாரியாரும் அருணகிரியாரும் தவறாகவா சொல்கிறார்கள்?
2011/1/19 kalairajan krishnan <kalair...@gmail.com>மெய்யன்பர்களே,
நாரதமுனி கொண்டு வந்து ஞானப்பழத்தைப் பெருவதில் பிரச்சனை ஏற்பட்டது,
ஞானப்பழத்தைப் பெற ஞானம் உள்ளதா? எனச் சோதனை செய்தான் சிவன், வெற்றி
பெற்று விநாயகன் ஞானப்பழத்தைப் பெற்றான். முருகன் கோபித்துக் கொண்டு
பழநிமலை வந்து குன்றேறி மேற்கு நோக்கி நிற்கிறான். (அருளுகிறான்?)
அவன் கையில் தண்டம் உண்டு. இடையில் கோவணம் உண்டு,
வேல் எங்கே வந்தது?
ஆண்டியின் கோலம் கொண்ட சமயத்தில் தண்டாயுதம். மற்ற கோலங்களில் வேலாயுதம். சுவாமிமலையில் முருகனுக்குக் குலிசாயுதம் என்பது தெரியுமல்லவா? என்றும் சற்று விளக்கினால் கற்றுக் கொள்ளலாம்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Jan 19, 10:06 am, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> செல்வன்,...
>
> read more »
>
> காளைராசன் அவர்கள் முருகன் எங்கும் யாரையும் வணங்கியதில்லை என்று சொன்னார்.
> ஆனால் திருச்செந்தூரில் முருகன் சிவனை அர்ச்சித்தகையோடு தாமரை மலர் கொண்டு
> அருளுகிறான். அதையே குறிப்பிட்டேன். மேலும் பக்த ஆஞ்சநேயர் எங்கிருந்தாலும்
> கூப்பிய கரங்களோடு தான் காட்சியளிப்பார்.
>
> ராஜசங்கர்
>
எங்கும் கூப்பிய கரங்களுடன் முருகன் இல்லை. இதைத்தான்
காளைராஜன் குறித்தர் என்பது என் புரிதல்.
காளைராசன் கேட்ட கேள்விக்கு முன்பு கொடுத்த படம்:
http://4.bp.blogspot.com/_5qrrVukeElY/RuLlzFBTPbI/AAAAAAAAAMA/VCHrtw30AnA/s1600-h/anantha+sayanam+-+newwe.JPG
ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன் - சிலம்பு.
முழுக்கப் பொன்னால் இயன்றது என்கிறார்கள்.
இதிலும் பூவால் லிங்கத்தை அர்ச்சிக்கிறார் அனந்தபத்மநாபர்.
உடுப்பி கிருஷ்ணன், திருமலை வேங்கடவன், செந்தில்வேலவர்
... சில ஒற்றுமைகளை தேவ் போன்றோருடன் முன்னர் கதைத்தோம்.
அடியார்கள் கூப்பிய கரங்கள் வாஸ்தவம்.
பெருந்தெய்வம் முருகன்?
நா. கணேசன்
> காளைராசன் ஐயா சொல்வது சரிதான்.நாமக்கல் ஆஞ்சனேயர் எதிரே மலையில் இருக்கும்
> சிங்கபெருமாளை தான் கும்பிடுகிறார்.அதற்கு பின்புலமாக ஒரு புரானம்
> உள்ளது.
ஆகா. புராணம் கிடைத்தால் கூறுங்களேன், படிக்க ஆவலாய் உள்ளேன், மேற்கண்ட
தகவலுக்கு நன்றியுடையேன்,
>
> தெய்வங்களை கும்பிட்ட நிலையில் ஓவியர்கள் வரையலாம்.
அன்பிற்கு உரிய ஐயா, எனக்கு, தங்களது இக் கருத்தில் உடன்பாடு இல்லை,
தெய்வங்கள் கார்ட்டூன் படங்கள் அல்ல,
தெய்வங்களை அவற்றின் செயல் மற்றும் தவத்துவங்களின் அடிப்படையிலேயே ஓவியர்
வரைய வேண்டும், தவறாக வரைவதற்கு அதிகாரம் இல்லை, இது பிழையாகும்.
தானும் பிழை செய்து பிறரையும் பிழை செய்ய வழிவகுத்துக் கொடுப்பது ஒரு
பாவமாகும்,
ஆனால் அதை வைத்து நாம் பூஜை
> செய்யவேண்டியதில்லை.
அது கலைபடைப்பு மட்டுமே.ஆர்ட் மியூசியத்தில் வேண்டுமானால்
> வைக்கலாம்.
தெய்வங்கள் பூசைக்கு உரியன, அவற்றை வேறு நோக்கிற்குப் பயன்படுத்தக்
கூடாது என்பது என் கருத்து,
உடைந்த சிதைந்த வடிவங்களைக்கூட மியூசியத்தில் வைக்கக் கூடாது, சேதுக்கரை
சென்று கடலில் விட்டுவிட வேண்டும்,
தெய்வ உருவங்கள் எந்நிலையிலும் காட்சிப் பொருள் அல்ல,
தெய்வங்களை உரிய ஆகமமுறையில் சித்தரித்த திருஉருவங்களை வணங்குவதே
> முறை.
ஆமாம் ஐயா, மிகவும் சரியாகச் சொல்லியுள்ளீர்கள்,
தங்களது விளக்கம் உண்மைய அடியார்கள் உணர்ந்திட வழிவகுக்கும் வகையில்
உள்ளது, மகிழ்ச்சி,
அன்பன்
கி.காளைராசன்,
> காளைராசன் அவர்கள் முருகன் எங்கும் யாரையும் வணங்கியதில்லை என்று சொன்னார்.
> ஆனால் திருச்செந்தூரில் முருகன் சிவனை அர்ச்சித்தகையோடு தாமரை மலர் கொண்டு
> அருளுகிறான்.
ஐயா, மிகவும் சரியாகச் சொல்லியுள்ளீர்கள், முருகன் யாரையும் வணங்கியதே இல்லை,
சிவனையும் அர்ச்சித்ததோடு சரி,
அதையே குறிப்பிட்டேன். மேலும் பக்த ஆஞ்சநேயர் எங்கிருந்தாலும்
> கூப்பிய கரங்களோடு தான் காட்சியளிப்பார்.
ஐயா, என்னுடைய கருத்து.
பக்த ஆஞ்சநேயர் ஸ்ரீரான் முன்தான் அவ்வாறு வணங்கினார்.
அவர் ஸ்ரீராமனை ஸ்ரீசீதாவைத் தவிர வேறுயாரையும் வணங்கியது இல்லை,
திருவிராமேச்சுரத்தில், ஸ்ரீசீதாதேவியால் பிரதிட்டை செய்யப் பெற்ற
சிவலிங்கத்தை உன்னால் முடிந்தால் அகற்றிக்கொள் என ஸ்ரீராமன் அனுமனிடம்
கூறுகிறார், அந்த ஒரு நேரத்தில் மட்டுமே ஸ்ரீராமனை மனதில் நினையாமல்
அனுமன் தன் வாலால் சிவலிங்கத்தை எடுக்க முயற்சிக்கிறார், ஸ்ரீராமனை
வழிபடவில்லை, ஆதலால், தன்முயற்சியில் அனுமன் தோற்கிறார்,
ஸ்ரீராமன் உருவம் இல்லாத இடத்தில் ஸ்ரீபக்தஅனுமனை கூப்பிய கரங்களுடன்
உள்ளதுபோன்று உருவாக்குவது தவறு என்று என் மனதிற்குத் தோன்றுகிறது,
தவறான தெய்வ உருவங்கள், தவறான வழிபாடுகள் தவறான பலன்களையே கொடுக்கும்
என்றும் நம்புகிறேன்,
--
> நங்கநல்லூரில்தானே?
ஆமாம் ஐயா, ஆனால் நான் கேள்வி கேட்ட ஆரம்பித்தவுடன் எனது நண்பர் என்னை
திரும்ப அழைத்துக் கொண்டு வந்து விட்டார்,
பேஷாக ராமன் இருக்கிறாரே! நுழைந்ததும் இடதுகைப் பக்கம்
> ராமர் சன்னதிதான்.
நம்மை (மனிதர்களை) வணங்கும் நிலையில் இல்லாமல், ஸ்ரீராமனை வணங்கும்
நிலையில் ஸ்ரீஅனுமன் இருப்பதே சரியாக இருக்குமென என அடியேன் மனத்தில்
தோன்றுகிறது,
தங்களது தகவல் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,
மீண்டும் ஒரு முறை வந்து ஸ்ரீராமரை வணங்க விரும்புகிறேன்
தங்களது இந்தப் பதிவு மிகவும் முக்கியம், மகிழ்ச்சி,
அதுவும் தைப்பூசம் அன்று வெளியாகி இருப்பது சிறப்புடையதாகிறது,

சுவாமி : ஸ்ரீ ஆஞ்சநேயர்
பிறபெயர் : பக்தஆஞ்சநேயர்
பிரம்மாண்டம் : சிலை
உயரம் : 22 அடி
பீடம் : 4 அடி
கோபுரம் : இல்லை
ஊர் : நாமக்கல்
புராணபெயர் : ஸ்ரீசைலஷேத்ரம்
பிறபெயர் : நாமகிரி
மாவட்டம் : நாமக்கல்
* இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் நற்புத்தி, சரீரபலம், கீர்த்தி, அஞ்சாமை, பயமின்மை,நோயின்மை, தளர்ச்சி இன்மை, வாக்குசாதுர்யம் முதலிய நன்மைகள் ஏற்படும். நவகிரக தோஷங்கள் நீங்குகின்றன. தவிர கடன் தொல்லைகள், விரோதிகள் தொல்லைகள் நீங்குகின்றன. நோய் நொடியால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட்டால் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைகின்றன.
*நவக்கிரக தோஷம் நீங்குதல் : இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் நவக்கிரகங்களை வழிபட்டற்கு இணையானது என்பதால் நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள ஆஞ்சநேய சுவாமியை வழிபட ஆயிரக்கணக்கில் குவிகின்றனர்.
நேர்த்தி கடன்
ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துதல் , எலுமிச்சம் பழம் மாலை சாத்துதல், துளசி மாலை சாத்துதல், வடைமாலை சாத்துதல், பூமாலை சாத்துதல் ஆகியவை நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகின்றன. தவிர வெண்ணெய் காப்பு போன்ற சிற்ப்பு அபிஷேகங்களும் இங்கு செய்யப்படுவது வழக்கம்.
வடைமாலை சாத்துவது ஏன் ? : முன்பு ஒருசமயம் நவகிரகங்களில் அதிக குரூரமான ராகுவும், சனியும் ஸ்ரீ ஆஞ்சநேயரிடம் தோல்வியுற்றதனால் ஆஞ்சநேயருக்கு கீழ்ப்படிந்தார்கள்.பூவுலகில் மாந்தர்களுக்கு சனியாலும் ராகுவாலும் ஏதேனும் இடையூறு ஏற்படின் அவர்களை திருப்தி படுத்துவதின் பொருட்டு ராகுவுக்கு பிடித்த உளுந்தும் சனிக்கு பிடித்த எள்எண்ணெய்யாலும் செய்த வடைமாலையை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சாத்தி வழிபட்டால் சனி ராகு இவர்களுடைய இடையூறிலிருந்து மனிதர் விடுபடுகிறார்கள் என்பதற்காகவே தான் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துகிறார்கள்.
கோயிலின் சிறப்பம்சம்
சிலை அமைப்பு
மிக பிரம்மாண்டமாக காற்று , மழை, வெயில் இவைகளை தாங்கிக் கொண்டு திறந்த வெளியில் தொழுத கைகளோடு நின்றிருக்கிறார்
கோபுரம் இல்லாதது ஏன் ? : லோகநாயகனான ஸ்ரீ நரசிம்மரே (எதிரில் உள்ள ஆலயம்) கிரி உருவில் மேல் விதானம் இல்லாமல் இருப்பதால் தாசனான எனக்கும் விதானம் தேவையில்லை என்று ஸ்ரீ ஆஞ்சநேயர் திறந்த வெளியில் கோபுரம் இல்லாமல் நின்றிருக்கிறார்
தல பெருமைகள் :
*இங்குள்ள ஆஞ்ச நேயர் சிலை மிகவும் பிரம்மாண்டமானது. பீடத்திலிருந்து 22 அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது.
*இங்குள்ள ஆஞ்சநேயர் முகம் மிகவும் அழகாக தேஜஸ் உள்ளதாக இருப்பது மிக முக்கியமான சிறப்பம்சம்.
*திறந்த வெளியில் கோபுரம் இல்லாமல் இருக்கும் சன்னதி இது.
*தமிழகம் முழுவதும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கும்பிட்டுச் செல்லும் புகழ் பெற்ற கோயில்.
*எதிரே உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தின் உப கோயில்தான் இந்த ஆஞ்சநேயர் சன்னதி என்றாலும் இச்சன்னதியில்தான் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
*இச்சா சக்தி (நாமகிரி அம்மன்), கிரியாசக்தி (நரசிம்மர்), ஞானசக்தி(ஆஞ்சநேயர்) ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற கோயில் இது.
*இங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு நேரெதிராக இருக்கும் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை தொழுதபடி இருக்கிறார்.
தல வரலாறு :
நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் சாதாரணமாக ஒரு துளை உள்ள சாளக்கிராமம்
கிடைக்கும். ஆஞ்சநேயருக்கு இந்த நதியில் குளிக்கும் போது 2 துளையுள்ள
சாளக்கிராமம் கிடைக்கிறது. சஞ்சீவி மலையை ஆஞ்சநேயர் எடுத்த இடத்தில்
வைத்து விட்டு திரும்பி வரும்போது நாமகிரித்தாயாரிடம் இதை கொடுத்த விட்டு
ராமஜெபம் செய்கிறார்.நீண்ட நேரம் ஆனதால் தாயாரும் அதை கீழே வைத்து
விடுகிறார். ஆஞ்சநேயர் ஜெபம் முடித்து விட்டு வந்து பார்க்கையில்
சாளக்கிராமம் பெரிய மலையாக மாறிவிட்டிருந்தது.அதை அசைக்ககூட
முடியவில்லை.அப்போது மகாவிஷ்ணு நரசிம்ம கோலத்தில் காட்சி தந்து ராமருக்கு
நீ பணிவிடை செய்துவிட்டு என்னை தொழ வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டிய
காரியங்களை செய்து கொடு என்று கூற அதுபடியே இங்கு ஆஞ்சநேயர் குடிகொண்டு
பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

முக்கிய திருவிழாக்கள்
*மார்கழி மாதம் அம்மாவாசை அனுமத் ஜெயந்தி அன்று மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கோயிலில் கூடுவர்.
வாரத்தின் ஒவ்வொரு சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலில் கூட்டம் மிக அதிக அளவில் இருப்பது இத்தலத்தின் சிறப்பு. தீபாவளி,பொங்கல், கிருஷ்ணஜெயந்தி,வைகுண்ட ஏகாதசி, தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு தினங்கள் ஆகிய வருடத்தின் முக்கிய விசேஷ நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் மிக அதிகஅளவில் இருக்கும்.
பொது தகவல்கள்
முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : நாமக்கல் பேருந்து நிலையத்தி லிருந்து 1.5 கி.மீ.தூரம் மட்டுமே தங்கும் வசதி : குடும்பத்தோடு வரும் பக்தர்கள் நாமக்கல் நகரில் தனியார் லாட்ஜ்களில் தங்கிக்கொண்டு கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.
கட்டணம் ரூ.200 முதல் ரூ.500 வரை.
போக்குவரத்து வசதி : *நாமக்கல் நகர பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கி.மீ. தொலைவில் நகருக்குள்ளேயே கோயில் இருப்பதால் எளிதில் கோயிலை அடையலாம்.
*அருகிலுள்ள ரயில் நிலையம் கரூர்
*அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
> பௌராணிகர்கள் கூறுவார்கள் எங்கே ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கே தவறாமல்
> ஹனுமன் விஜயம் செய்வார் என்று
ஆமாம் ஐயா, ஆனால், அவ்வாறு அங்கே தோன்றும் ஸ்ரீஅனுமன் அந்த ராம நாமம்
சொல்பவரை வணங்கினானா? இதுவே எனது ஐயம்,
>
> ஹனுமனை கூப்பிய கரங்களுடன் உருவாக்குதல் தவறே அல்ல
>
> ஏனென்றால் அந்தக் கூப்பிய கரங்கள் ஸ்ரீராமனுக்கு மட்டுமே கூப்பிய கரங்கள்
>
> அந்தக் கரங்கள் எங்கிருந்து கூப்பினாலும் அது ராமனுக்கே போய்ச்சேரும்
ஐயா உண்மை, இதுவே எனது கருத்து எண்ணம்,
>
>
> ஹனுமன் கைகூப்பினால் எதிரே இருப்பவன் கிருஷ்ணனானலும் ராமனே!
ஐயா, ஸ்ரீகிருஷ்ணருக்கு வேண்டுமானால் இது பொருந்தலாம்,
ஆனால்,
ஸ்ரீராமனுக்கு இணையான மனிதன் யாரும் இல்லை,
எனவே "மனிதர்களை வணங்கும் ஸ்ரீஅனுமன்???"
பெரியோர் இருவர் கூறுவதால் பேசாதிருக்கிறேன்,
வணக்கம் பல,
அற்புதமான தகவல்கள்,
ஒருமுறை அவசியம் நாமக்கல் சென்று வணக்கிவர வேண்டும் என விரும்பம்
கொண்டிருக்கிறேன்,
அதேபோல் அடுத்தமுறை சென்னை செல்லும் போது அவசியம் நங்கநல்லூர் சென்று
ஸ்ரீராமனையும் வணங்கி வர வேண்டும்,
தங்களது அன்பிற்கு அடியேன்,
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

> நாமக்கல் செல்வது தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறாக இருக்குமாறு
> பார்த்துக்கொண்டால் விசேஷம். அன்று சிறப்பு பூஜைகள் நடக்கும்.
ஐயா, அவசியம் அவ்வாறே செய்கிறேன்.
நன்றியுடன்
அன்பன்
கி. காளைராசன்
//பட்டாபிஷேகத்தின் போது சீதா தேவி பரிசளித்த முத்துமாலையிலும் ராம நாமத்தின் சுவை இருக்கிறதா என்று கடித்துப் பார்த்தவர் ஹனுமான்//
அய்யா இதை என் மனம் ஒப்பவில்லை. கண்டிப்பாக இப்படி நடந்து இருக்க வாய்ப்பில்லை. ரா கணபதி அவர்கள் எழுதிய ஹனுமன் புத்தகத்தில் இதை வேறு விதமாகக் கூறியிருப்பார். சரியாக நினைவு இல்லை
பட்டாபிஷேகத்தின் போது சீதா தேவி பரிசளித்த முத்துமாலையிலும் ராம நாமத்தின் சுவை இருக்கிறதா என்று கடித்துப் பார்த்தவர் ஹனுமான்
> * நரசிம்மர் கோயில் தமிழ்நாட்டில் உள்ள குடைவரை
> கோயில்களில் முக்கியமானது ஒன்று .* மேலும் எதிரே இருக்கும் நரசிம்மர் கோயில்
> இருந்து பார்த்தால்* **ஆஞ்சநேயர் அருமையாக தென்படுவார்*
நன்றி ஐயா,
அவசியம் ஒருமுறை சென்று வணங்கி வருகிறேன்,
On Jan 20, 1:36 am, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> அன்பின் காளைராசன்,
>
> முருகன் கும்பிட்டு அர்சித்தானா இல்லை கும்பிடாமலேயா என கந்தபுராணத்தை
> பார்த்தால் தெரியவருமே
>
கும்பிட்டு அர்ச்சித்த சிலாமரபு பழையதன்று,
நா. கணேசன்
> ராஜசங்கர்
>
> 2011/1/20 kalairajan krishnan <kalairaja...@gmail.com>
கணபதியை பல விதமாக கார்ட்டூன் கேரக்டர் போல்
வரைவது இருக்கிறது. தற்காலத்தில், ஆனால் மூல பேரமாக
இருக்க முடியாது.
> தெய்வத்தில் என்ன பெருந்தெய்வம் சிறுந்தெய்வம்? எல்லாம் தெய்வம் தான். கதை
> சொல்ல வசதியாக வேண்டுமானல் சொல்லிகொள்ளலாம். ஆனால் தான் வணங்கும் தெய்வத்தை
> எப்படி வரையவேண்டும் என்பது பக்தரின் விருப்பம்.
>
21-ஆம் நூற்றாண்டில் வரைய முடியும். ஆனால் பழைய
கலைமரபை காளைராஜன் குறிப்பிடுகிறார்.
செந்தில் வேலன் மலரை வைத்திருப்பது அர்ச்சிக்கத்தான்
என்றும் எனக்கு உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை.
அது ஒரு தக்காண மரபு. பல ஊர்களில் உண்டு.
பழைய தாமரை மலர் ஏந்திய வடிவம் சிவனிலும்
பல் உண்டு, பௌத்தத்தில் அவலோகிதனிடம் பூ
இருக்கும். ஏன்? என்று பலர் எழுதியிருக்கிறார்கள்.
உ-ம்: ஆனந்த குமாரசாமி.
> சிவனை காலால் மிதிக்கும் காளியின் சிலைகள், படங்கள் உண்டு. அப்புறம்
> அதையெல்லாம் என்ன செய்வது?
>
கிழக்கிந்தியாவில் பல நூற்றாண்டுகளாய் வழங்கிவருவது.
பல புராணங்கள் அங்கே இதன் தத்துவத்தை விளக்க
எழுந்துள்ளன.
தமிழ்நாட்டுக் கோயில்களில் இல்லை.
நா. கணேசன்
> ராஜசங்கர்
>
> 2011/1/20 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
> > On Jan 19, 10:06 am, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> > > செல்வன்,...
>
> > > read more »
>
> > > காளைராசன் அவர்கள் முருகன் எங்கும் யாரையும் வணங்கியதில்லை என்று சொன்னார்.
> > > ஆனால் திருச்செந்தூரில் முருகன் சிவனை அர்ச்சித்தகையோடு தாமரை மலர் கொண்டு
> > > அருளுகிறான். அதையே குறிப்பிட்டேன். மேலும் பக்த ஆஞ்சநேயர் எங்கிருந்தாலும்
> > > கூப்பிய கரங்களோடு தான் காட்சியளிப்பார்.
>
> > > ராஜசங்கர்
>
> > எங்கும் கூப்பிய கரங்களுடன் முருகன் இல்லை. இதைத்தான்
> > காளைராஜன் குறித்தர் என்பது என் புரிதல்.
>
> > காளைராசன் கேட்ட கேள்விக்கு முன்பு கொடுத்த படம்:
>
> >http://4.bp.blogspot.com/_5qrrVukeElY/RuLlzFBTPbI/AAAAAAAAAMA/VCHrtw3...
>
> > ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன் - சிலம்பு.
> > முழுக்கப் பொன்னால் இயன்றது என்கிறார்கள்.
>
> > இதிலும் பூவால் லிங்கத்தை அர்ச்சிக்கிறார் அனந்தபத்மநாபர்.
>
> > உடுப்பி கிருஷ்ணன், திருமலை வேங்கடவன், செந்தில்வேலவர்
> > ... சில ஒற்றுமைகளை தேவ் போன்றோருடன் முன்னர் கதைத்தோம்.
>
> > அடியார்கள் கூப்பிய கரங்கள் வாஸ்தவம்.
> > பெருந்தெய்வம் முருகன்?
>
> > நா. கணேசன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -
| 964 | குணதிசை அமர்புரி கொடியர் உய்த்திடுங் கணையென விரிகதிர் காட்டி அங்கவை அணைதலுங் குருதிநீர் அடைந்த தன்மைபோல் இணையறு செக்கர்பெற் றிரவி தோன்றினான். | 30 |
| 2965 | அப்பொழுது தவ்விடை அமரா¢ கம்மியன் கைப்படு செய்கையாற் கந்த வேள்ஒரு செப்பரு நிகேதனஞ் செய்வித் தீசனை வைப்புறு தாணுவில் வருவித் தானரோ. | 31 |
| 2966 | ஆமயம் முதலிய ஐந்து கந்திகள் மாமலர் மஞ்சனம் அமிர்தம் வான்துகில் தூமணி விளக்கொடு தூபங் கண்ணடி சாமரை ஆதிகள் அமரர் தந்திட. | 32 |
| 2967 | முழுதொருங் குணர்ந்திடு முருகன் யாவருந் தொழுதகும இறைவனுல் தொடர்பு நாடியே விழுமிய கண்ணுதல் விமலன் தாள்மலர் வழிபடல் புரிந்தனன் மனங்கொள் காதலால். | 33 |
நன்றி ஐயா,
அன்பன்
கி. காளைராசன்
On 1/20/11, Raja sankar <errajasa...@gmail.com> wrote:
> //செந்தில் வேலன் மலரை வைத்திருப்பது அர்ச்சிக்கத்தான்
> என்றும் எனக்கு உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை.
> //
>
> செந்தில் வேலன் சிவலிங்கத்தை அர்ச்சிக்கும்போது தேவர்களின் அழைப்பை
> கேட்டு அதே கோலத்தில் திரும்பி காட்சியளித்தார் என்பது கந்தபுராணம்.
> திருச்செந்தூர் முருகனின் பழைய படங்களில் சிவலிங்கமும் ஓர் ஓரமாக
> காட்சியளிக்கும். இப்போது வரும் படங்களில் அது இல்லை.
>
> http://madhavipanthal.blogspot.com/2009/07/blog-post.html
>
> இதிலிருக்கும் முதல் படத்தில் சிவலிங்கம் உள்ளது.
>
> கீழே கந்த புராணப்பகுதி
>
>
> 964குணதிசை அமர்புரி கொடியர் உய்த்திடுங்
> கணையென விரிகதிர் காட்டி அங்கவை
> அணைதலுங் குருதிநீர் அடைந்த தன்மைபோல்
> இணையறு செக்கர்பெற் றிரவி தோன்றினான்.302965அப்பொழுது தவ்விடை அமரா¢
> கம்மியன்
> கைப்படு செய்கையாற் கந்த வேள்ஒரு
> செப்பரு நிகேதனஞ் செய்வித் தீசனை
> வைப்புறு தாணுவில் வருவித் தானரோ.312966ஆமயம் முதலிய ஐந்து கந்திகள்
> மாமலர் மஞ்சனம் அமிர்தம் வான்துகில்
> தூமணி விளக்கொடு தூபங் கண்ணடி
> சாமரை ஆதிகள் அமரர் தந்திட.322967முழுதொருங் குணர்ந்திடு முருகன் யாவருந்
> தொழுதகும இறைவனுல் தொடர்பு நாடியே
> விழுமிய கண்ணுதல் விமலன் தாள்மலர்
> வழிபடல் புரிந்தனன் மனங்கொள் காதலால்.33
>
>
>
> ராஜசங்கர்
>
>
>
> 2011/1/20 N. Ganesan <naa.g...@gmail.com>
>
>> செந்தில் வேலன் மலரை வைத்திருப்பது அர்ச்சிக்கத்தான்
>> என்றும் எனக்கு உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை.
>>
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,
உள்சுற்றில் செந்திலாண்டவனுக்கு வலப்புறத்தில் உள்ள சிவலிங்கங்கள்,
கரத்திலிருக்கும் மலர் அர்ச்சிக்கத்தான் என்பதை உறுதி செய்கின்றன
தேவ்
> > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit our
> > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > To unsubscribe from this group, send email to
> > > minTamil-u...@googlegroups.com
> > > For more options, visit this group at
> > >http://groups.google.com/group/minTamil-Hide quoted text -
எங்கள் மாவட்ட கோயில் புராணம் அளித்து மிக்க மகிழ்ச்சி . ஆனால் ஒன்று விட்டு விட்டீர்கள் எதிரே இருக்கும் நரசிம்மர் கோயில் தமிழ்நாட்டில் உள்ள குடைவரை கோயில்களில் முக்கியமானது ஒன்று . மேலும் எதிரே இருக்கும் நரசிம்மர் கோயில் இருந்து பார்த்தால் ஆஞ்சநேயர் அருமையாக தென்படுவார் அதை நீங்களே படத்தை போட்டு உள்ளீர்கள்கீழே உள்ள படத்தை பார்த்தால் தெரியும் .
அம்மா சொல்லியபடி
கி. காளைராசன்
நாமக்கல் ஆலயம் கணித மேதை ராமாநுஜம் அவர்களுடனும் தொடர்புடையது
தேவ்
On Jan 21, 12:56 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/1/20 Sathees Kumar <satheeskumar.r...@gmail.com>
>
> > எங்கள் மாவட்ட கோயில் புராணம் அளித்து மிக்க மகிழ்ச்சி . ஆனால் ஒன்று விட்டு
> > விட்டீர்கள் எதிரே இருக்கும்* நரசிம்மர் கோயில் தமிழ்நாட்டில் உள்ள குடைவரை
> > கோயில்களில் முக்கியமானது ஒன்று .* மேலும் எதிரே இருக்கும் நரசிம்மர் கோயில்
> > இருந்து பார்த்தால்* **ஆஞ்சநேயர் அருமையாக தென்படுவார்* அதை நீங்களே படத்தை
> > போட்டு உள்ளீர்கள்கீழே உள்ள படத்தை பார்த்தால் தெரியும் .
>
> நன்றி சதீஷ் ஐயா.நரசிம்மர் கோயில் அபூர்வமான பழங்கால கோயில் என்பதை
> அறிவேன்.குடைவரை கோயில் என்பதை தாங்கள் கூறியே தெரிந்து கொண்டேன்.நன்றி
>
> --
> செல்வன்
>
> வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
> பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி
> நல்ல சமத்துவம் வந்தாகணும் அதிலே மகத்துவம் உண்டாகணும்
> நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும் - நாட்டுக்கு
> படிப்பினை தந்தாகணும்.
>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On 1/21/11, செல்வன் <hol...@gmail.com> wrote:
> நாமகிரி தாயார் அவர் குலதெய்வம். தாயார் வந்து ராமனுஜனை இங்கிலாந்து அனுப்ப
> உத்தரவிட்டார்.அதன்பின்னரே ராமானுஜன் இங்கிலாந்து செல்ல அவரது அன்னை அனுமதி
> அளித்தார்
ஐயா, தாங்கள் ஒரு தகவல் சுரங்கம், கொடுக்கக் கொடுக்க குறையாத databank.
அன்பன்
ஐயா, தாங்கள் ஒரு தகவல் சுரங்கம், கொடுக்கக் கொடுக்க குறையாத databank.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
2011/1/21 kalairajan krishnan <kalair...@gmail.com>
செல்வன் கொடுத்து வைத்தவர். மண்டபப்படி கிடைக்க..
:-))
செல்வன், உங்களுக்கு ஷண்முகார்ச்சனை பத்தி தெரியுமா ?
தேவ்
On Jan 21, 1:53 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/1/21 kalairajan krishnan <kalairaja...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அதே அதே
தேவ்
செல்வன், உங்களுக்கு ஷண்முகார்ச்சனை பத்தி தெரியுமா ?

> ஒருதரம் தங்கமணியோட கோயிலுக்கு போயி அர்ச்சனை செய்ய அவரது நட்சத்திரம் என்ன என
> அர்ச்சகர் என்னிடம் கேட்டார்.எனக்கு மறந்துவிட்டது.
ஏன் மறந்துவிட்டது?
காரணம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தாக்கம், மற்றும் பெண் அடிமை
செய்யும் ஆணாதிக்கம்.
லட்சத்து ஒன்னாவது அர்ச்சனை இது,
லட்சத்து ஒன்னாவது அர்ச்சனை இது,
:-))
பணம் செலுத்தாமலேயே
தேவ்
On Jan 22, 3:27 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/1/22 kalairajan krishnan <kalairaja...@gmail.com>
>
> > லட்சத்து ஒன்னாவது அர்ச்சனை இது,
>
> அந்த நட்சத்திரம் நிஜமாவே சக்தி வாய்ந்த நட்சத்திரமா இருக்கணுங்க காளைராசன்
> ஐயா.லட்சத்திஒண்னார்ச்சனை, சண்முகார்ச்சனை, மண்டகபடி எல்லாம் சேர்த்து நடத்தி
> விட்டதே?:-)
>
> எனக்கு பொதுவாவே மறதி அதிகங்க..கூகிள் காலண்டரும் செல்போன் அலாரமும் மட்டும்
> இல்லைன்னா நான் செத்தேன்:-)
>
> --
> செல்வன்
>
> "கடவுள் இல்லை" என்றேன்
> நான் கடவுள்
> என்பதை உணரும்வரை
>
:-))
பணம் செலுத்தாமலேயே

2011/1/22 devoo <rde...@gmail.com>:-))
பணம் செலுத்தாமலேயே
பணம் வேற செலுத்தி திட்டு வாங்கிக்கணுமா?:-)
--
நன்றி, ராஜசங்கர். அப்போது செந்தூர் முருகன் வடிவம்
கந்தபுராணத்திற்குப் பிற்பட்ட காலமா? முருகாற்றுப்படையில்
சிவவழிபாடு குறிப்புண்டா?
ஐரோப்பாவில் கைகளைக் குவித்தலுக்கு வேறுபொருள்.
ஆண்டானிடம் கைவிலங்குபூட்ட அடிமை கைகளைச்
சேர்த்துக் கொடுப்பது என்று படித்திருக்கிறேன்.
நமஸ்கார முத்திரை பற்றிக் கட்டுரையே எழுதலாம்.
சிந்து சமவெளியும் குழந்தை விளையாடும் நாயின்
பொம்மை ஒன்று இருக்கிரது. பின்னங்கால்களில்
நின்றுகொண்டு, முன்கால்களைக் கரம்குவித்தால்
போல் செய்யும். begging dog?
மத்திய ஆசியாவில் BMAC கலாச்சாரத்தில் மரத்தைச்
சுற்றி மாந்தர் இருந்துகொண்டு கைகளைக் கூப்பி
இருப்பர். ஆக்ஸஸ் நதிக்கரை நாகரிகமும் (BMAC civ.)
சிந்து நதிக்கரையும் மிகுதொடர்புடையன.
இச்சிலை நியூயார்க் மெட்ரோபாலிட்டன் ம்யூஸியத்தில்
கண்டிருக்கிறேன். பார்த்தவுடன் பெருவியப்பு.
உலகின் முதல் நமஸ்கார முத்திரை - சிந்துவினpaa
தொடர்புடையது - என்று நினைக்கிறேன்.
ஆஸ்கோ பார்ப்போலா அறையில் - கோவை ரெஸிடென்சி
- அவருடன் சொன்னேன். படம் அனுப்பச் சொல்லிக் கேட்டார்
- அவர் சகோதரர் சிமோவுடன் பேசுவதாயும் சொன்னார்.
மேரி கைகளைக் கூப்பிக் கும்பிடும் மரபு ஐரோப்பாவில்
புதிது. ஹிந்து சமயத்தின் தாக்கம் என்று கருதுகிறேன்.
தெருவோர ஓவியர்கள் (பஜார் பெயிண்டிங்ஸ் ஆஃப் கல்கத்தா)
வரைவதில் இந்த மரபுகள் எல்லாம் கலக்கின்றன.
காலண்டர் பிரிண்ட்ஸ் பெரிய துறை. முருகன் கும்பிடு
(எம்எல்ஏ-வா? :) ) தமிழில் புதிது. பார்க்கவேண்டும்.
முருகனை காலண்டர்களில், பஜார் பெயிண்டிங்ஸ் எப்படி
வரைகின்றன என்று ஆராய நிறைய இடம் உண்டு.
கோயில் சுவர்களில் வர்ண பெயிண்ட் சித்திரங்களாய். ....
100-120 வருஷமாய். ரவிவர்மா மயிலூரும் முருகனை
மேல்நாட்டு நுட்பங்களுடன் முதலில் வரைந்து காட்டினார்
வள்ளி தேவயானை சமேதராய்.
துர்க்கையை வங்காளிகள் பாரதமாதா ஆக்கினர்.
நிலைநிறுத்தியதில் பாரதிக்குப் பெரும்பங்குண்டு.
http://nganesan.blogspot.com/2009/10/popular-prints-bhaaratamata.html
(இதை விரிவு செய்ய இன்னும் ஏராளமான ஆய்வுக் குறிப்புகள்
உள.)
நா. கணேசன்
> 2011/1/20 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
> > செந்தில் வேலன் மலரை வைத்திருப்பது அர்ச்சிக்கத்தான்
> > என்றும் எனக்கு உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை.- Hide quoted text -
இது எவ்வளவோ பரவாயில்லேபொண்டாட்டி பேரே மறந்து போறவங்கல்லாம் இருக்காங்க
On Jan 22, 10:08 am, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> //நன்றி, ராஜசங்கர். அப்போது செந்தூர் முருகன் வடிவம்
> கந்தபுராணத்திற்குப் பிற்பட்ட காலமா? முருகாற்றுப்படையில்
> சிவவழிபாடு குறிப்புண்டா?//
>
> கச்சியப்ப சிவாச்சாரியாரின் காலம் கிபி 1400 அல்லது அதற்கு முன்பு எனவும்
> திருச்செந்தூர் முருகன் அதற்கு வெகுகாலம் முன்பே இருந்திருக்க வேண்டும். ஆக
> திருச்செந்தூர் முருகன்
> கந்த புராண காலத்திற்கு அப்புறமா என்ற கேள்வி எழ வேண்டிய அவசியமில்லை.
>
திருச்செந்தூர் முருகனின் வடிவ அமைப்பைச் சொன்னேன்.
> முருகன் கூப்பிய கரங்களுடன் திருச்செந்தூரில் இல்லை. ஒரு கரத்தில் உருத்திராஷ
> மாலையும் இன்னொரு கரத்தில் தாமரை மலரும் ஏந்தியே காணப்படுகிறான்.
>
கையில் ருத்திராக்கமும், மலரும் ஏந்திய பல வடிவங்கள்
உள்ளன.உ-ம்: அவலோகிதன்.
சிவனின் பல மூர்த்தங்களில் கையில் மலர் உண்டு.
சிவன் யாரை அர்ச்சிக்க கையில் மலர் வைத்துள்ளார்?
முருகன் கூப்பிடு கரங்களுடன் உள்ள பஜார் பெயின்ட்டிங்
- புதிய சிந்தனை. முன்னர் இல்லை.
அன்புடன்,
நா. கணேசன்
> ராஜசங்கர்
>
> 2011/1/22 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
> > நன்றி, ராஜசங்கர். அப்போது செந்தூர் முருகன் வடிவம்
> > கந்தபுராணத்திற்குப் பிற்பட்ட காலமா? முருகாற்றுப்படையில்
> > சிவவழிபாடு குறிப்புண்டா?- Hide quoted text -
On Jan 22, 10:08 am, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> //நன்றி, ராஜசங்கர். அப்போது செந்தூர் முருகன் வடிவம்
> கந்தபுராணanத்திற்குப் பிற்பட்ட காலமா? முருகாற்றுப்படையில்
> சிவவழிபாடு குறிப்புண்டா?//
>
> கச்சியப்ப சிவாச்சாரியாரின் காலம் கிபி 1400 அல்லது அதற்கு முன்பு எனவும்
> திருச்செந்தூர் முருகன் அதற்கு வெகுகாலம் முன்பே இருந்திருக்க வேண்டும். ஆக
> திருச்செந்தூர் முருகன்
> கந்த புராண காலத்திற்கு அப்புறமா என்ற கேள்வி எழ வேண்டிய அவசியமில்லை.
>
திருச்செந்தூர் முருகனின் வடிவ அமைப்பைச் சொன்னேன்.
> முருகன் கூப்பிய கரங்களுடன் திருச்செந்தூரில் இல்லை. ஒரு கரத்தில் உருத்திராஷ
> மாலையும் இன்னொரு கரத்தில் தாமரை மலரும் ஏந்தியே காணப்படுகிறான்.
>
கையில் ருத்திராக்கமும், மலரும் ஏந்திய பல வடிவங்கள்
உள்ளன.உ-ம்: அவலோகிதன்.
சிவனின் பல மூர்த்தங்களில் கையில் மலர் உண்டு.
சிவன் யாரை அர்ச்சிக்க கையில் மலர் வைத்துள்ளார்?
முருகன் கூப்பிடு கரங்களுடன் உள்ள பஜார் பெயின்ட்டிங்
- புதிய சிந்தனை. முன்னர் இல்லை.
> ராஜசங்கர்
அன்புடன்,
நா. கணேசன்
>
> 2011/1/22 N. Ganesan <naa.gane...@gmail.com>
>> > சிவவழிபாடு குறிப்புண்டா?- Hide quoted text -
>
>
> > நன்றி, ராஜசங்கர். அப்போது செந்தூர் முருகன் வடிவம்
> > கந்தபுராணத்திற்குப் பிற்பட்ட காலமா? முருகாற்றுப்படையில்
>
> - Show quoted text -
சூரியனார் இரு கரங்களிலும் தாமரை தாங்கி இருப்பார்;
சந்திரனாருக்கும் குமுத மலர் உண்டு.
http://tnhrcetemple.org/TempleList/NavagrahTemplesMain.htm
பெண் தெய்வ வடிவங்களும் மலர் தாங்கியனவாக இருக்கும்.
http://www.vimalassery.ch/tag/goddess/page/3/
இவர்கள் யாரை அருச்சிக்கின்றனர் ?
வரலாறு முருகப் பெருமான் சிவவழிபாடு செய்ததாக இருப்பதால் கந்த புராணம்
அதைக் கூறுகிறது. கந்த புராணத்திற்குப்பின் திருச்செந்தூர் தோன்றியது
என்று கூறுவது சரியா ?
வேங்கடம், அரங்கம் இவற்றைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
சிலப்பதிகாரத்திற்குப்பின் இத்தலங்கள் தோன்றின என்று முடிவு செய்வீர்களா?
ஸ்ரீ சைலம், காஞ்சி, மதுரை, மாலிருஞ்சோலை, சீரலைவாய், குமரி, கோகர்ணம்
போன்றவை பலராமரின் தென்னக யாத்திரையில் இடம் பெறும் தலங்கள். பாகவதம்
தோன்றியது 50 ஆண்டுகளுக்கு முன் என மேற்கத்திய முடிவு இருந்தாலும்
வியப்பதிற்கில்லை
தேவ்
On Jan 23, 3:25 pm, "naa.gane...@gmail.com" <naa.gane...@gmail.com>
wrote:
அனுமன் ராமர் சிலையைத் தான் வணங்கவேண்டுமா? தன் எதிரில் வரும் ஒவ்வொரின் உள்ளே இருக்கும் கடவுளை அதாவது ராமனை வணங்கலாமே?
ஐயா, தாங்கள் கூறியது போல், ஸ்ரீஅனுமன் எந்த மனிதனையாவது வணங்கியுள்ளானா?
ஐயா கால்கரி சிவா அவர்களுக்கு வணக்கம்,
ஸ்ரீராமன் மனிதனாகத்தான் அவதரித்தான்,
ஸ்ரீராமன் காலத்திலேயே ஸ்ரீராமரைத் தெய்வமாகவே வழிபட்டுள்ளனர், அப்படி
யிருந்தாலும்,
ஸ்ரீஅனுமன் அந்த ஸ்ரீராமனைத் தவிர வேறு எந்த மனிதனையும் வணங்க வில்லை,
நாம் ஸ்ரீஅனுமனை வழிபாடு செய்வது நமக்குப் புண்ணியம்,
ஸ்ரீஅனுமன் நம்மை வழிபடுவது நமக்குப் ,,,?
இதில், எனது கருத்து, ஸ்ரீ அனுமன், ஸ்ரீராமனைத் தவிர வேறு எந்த ஒரு
மனிதனையும் (ஸ்ரீராமனைத் தெய்வமாக ஏற்றுக் கொண்ட மனிதர் உட்பட எவரையும்)
வணங்கியதில்லை,
அன்பன்
கி. காளைராசன்
On Jan 25, 12:35 am, kalairajan krishnan <kalairaja...@gmail.com>
wrote:
எனக்கும் இக் கருத்தே.
மலையாளியர் கும்பிடும் பழனி முருகன் வடிவம் 100 ஆண்டுகளாய்
இருக்கும். அந்தப் பழனி முருகன் கரம்கூப்பிக் கும்பிடுவதும் நமக்கு
மிகப் புதிதுதான்.
அன்பொடு,
நா. கணேசன்
On Jan 20, 7:40 am, devoo <rde...@gmail.com> wrote:
> >>செந்தில் வேலன் மலரை வைத்திருப்பது அர்ச்சிக்கத்தான்
>
> என்றும் எனக்கு உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை. <<
>
> உள்சுற்றில் செந்திலாண்டவனுக்கு வலப்புறத்தில் உள்ள சிவலிங்கங்கள்,
> கரத்திலிருக்கும் மலர் அர்ச்சிக்கத்தான் என்பதை உறுதி செய்கின்றன
>
> தேவ்
>
குருவாயூர் கிருஷ்ணனும் செந்திலாண்டவர் போலவே
வலக்கையில் மலரேந்தி, இடைக்கை கடிஹஸ்தமாய்
வைத்திருக்கிறார்.
http://pkmohan.files.wordpress.com/2010/04/guruvayoorappan.jpg
http://3.bp.blogspot.com/_tapLtlb5SeU/SxDSX8HZYKI/AAAAAAAABz8/WUOBVz5KcHc/s1600/Guruvayurappan.jpg
அதிகாலை 3 மணிக்கு எண்ணெய் முழுக்காட்டியபின்
வாகை மரப்பட்டைப் பொடியைச் சாத்தும் சீர்
’வாகை சார்த்து’ எனப்படுகிறது.
(தமிழ் இலக்கியத்தில் வாகைப் பொடி நறுமணத்துக்குப்
பயன்படுவதாகப் பாடல் உண்டா? இருக்கலாம்.)
பின்னர் சிறுகுழந்தையாக அலங்காரம் நடக்கிறது.
மலர்க்கை நவநீதத்தையும், இடக்கையில் புள்ளாங்குழலும்
ஏந்துகின்றான் உண்ணிக்கண்ணன்.
வாகை சார்த்தைத் தரிசித்தபின் கண்ணதாசன் பாட்டு:
http://kannansongs.blogspot.com/2007/05/50.html
மலயாளப் பாட்டு - வாகசாத்து:
http://www.youtube.com/watch?v=kQnHJbG4lMQ
கணேசன்
> On Jan 20, 4:18 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
> > On Jan 20, 1:26 am, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
>
> > > கணேசன்,
>
> > > கூப்பிய கரங்களுடன் என்பது ஓவியரின் கற்பனை தான். சிவனை அர்ச்சித்து வணங்கும்
> > > போது கரம் கூப்பாமல் இருக்க முடியுமா?
>
> > கணபதியை பல விதமாக கார்ட்டூன் கேரக்டர் போல்
> > வரைவது இருக்கிறது. தற்காலத்தில், ஆனால் மூல பேரமாக
> > இருக்க முடியாது.
>
> > > தெய்வத்தில் என்ன பெருந்தெய்வம் சிறுந்தெய்வம்? எல்லாம் தெய்வம் தான். கதை
> > > சொல்ல வசதியாக வேண்டுமானல் சொல்லிகொள்ளலாம். ஆனால் தான் வணங்கும் தெய்வத்தை
> > > எப்படி வரையவேண்டும் என்பது பக்தரின் விருப்பம்.
>
> > 21-ஆம் நூற்றாண்டில் வரைய முடியும். ஆனால் பழைய
> > கலைமரபை காளைராஜன் குறிப்பிடுகிறார்.
>
> > செந்தில் வேலன் மலரை வைத்திருப்பது அர்ச்சிக்கத்தான்
> > என்றும் எனக்கு உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை.
> > அது ஒரு தக்காண மரபு. பல ஊர்களில் உண்டு.
> > பழைய தாமரை மலர் ஏந்திய வடிவம் சிவனிலும்
> > பல் உண்டு, பௌத்தத்தில் அவலோகிதனிடம் பூ
> > இருக்கும். ஏன்? என்று பலர் எழுதியிருக்கிறார்கள்.
> > உ-ம்: ஆனந்த குமாரசாமி.
>
> > > சிவனை காலால் மிதிக்கும் காளியின் சிலைகள், படங்கள் உண்டு. அப்புறம்
> > > அதையெல்லாம் என்ன செய்வது?
>
> > கிழக்கிந்தியாவில் பல நூற்றாண்டுகளாய் வழங்கிவருவது.
> > பல புராணங்கள் அங்கே இதன் தத்துவத்தை விளக்க
> > எழுந்துள்ளன.
>
> > தமிழ்நாட்டுக் கோயில்களில் இல்லை.
>
> > நா. கணேசன்
>
> > > ராஜசங்கர்
>
> > > 2011/1/20 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > > > On Jan 19, 10:06 am, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> > > > > செல்வன்,...
>
> > > > > read more »
>
> > > > > காளைராசன் அவர்கள் முருகன் எங்கும் யாரையும் வணங்கியதில்லை என்று சொன்னார்.
> > > > > ஆனால் திருச்செந்தூரில் முருகன் சிவனை அர்ச்சித்தகையோடு தாமரை மலர் கொண்டு
> > > > > அருளுகிறான். அதையே குறிப்பிட்டேன். மேலும் பக்த ஆஞ்சநேயர் எங்கிருந்தாலும்
> > > > > கூப்பிய கரங்களோடு தான் காட்சியளிப்பார்.
>
> > > > > ராஜசங்கர்
>
> > > > எங்கும் கூப்பிய கரங்களுடன் முருகன் இல்லை. இதைத்தான்
> > > > காளைராஜன் குறித்தர் என்பது என் புரிதல்.
>
> > > > காளைராசன் கேட்ட கேள்விக்கு முன்பு கொடுத்த படம்:
>
> > > >http://4.bp.blogspot.com/_5qrrVukeElY/RuLlzFBTPbI/AAAAAAAAAMA/VCHrtw3...
>
> > > > ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன் - சிலம்பு.
> > > > முழுக்கப் பொன்னால் இயன்றது என்கிறார்கள்.
>
> > > > இதிலும் பூவால் லிங்கத்தை அர்ச்சிக்கிறார் அனந்தபத்மநாபர்.
>
> > > >உடுப்பிகிருஷ்ணன், திருமலை வேங்கடவன், செந்தில்வேலவர்
> > > > ... சில ஒற்றுமைகளை தேவ் போன்றோருடன் முன்னர் கதைத்தோம்.
>
> > > > அடியார்கள் கூப்பிய கரங்கள் வாஸ்தவம்.
> > > > பெருந்தெய்வம் முருகன்?
>
> > > > நா. கணேசன்
>
> > > > --
> > > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmaylike to visit our
> > > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/minTamil-Hidequoted text -
>
> > > - Show quoted text -- Hide quoted text -
ஐயா வணக்கம்,
இணைப்பில் உள்ள பாரதமாதா படத்தைப் பாருங்கள்,
இந்தப் படத்தைத்தான் அனைவருமே பயன் படுத்துகின்றனர்,
ஆனால்,
இந்தியத் தெய்வங்கள் ஏதுவும், பாரதமாதா உட்பட,
இவ்வாறு ஒய்யாரமாக தங்களது வாகனங்களில் மேல் சாய்ந்திருப்பது இல்லை,
தெய்வங்களின் வாகனங்களும், தெய்வங்களின் பின்னால்(ஒழிந்துகொண்டு)
நிற்பதும் இல்லை,
மாறாக, வாகனங்கள் எப்போதும் தயார் நிலையில் கம்பீரமாகத் தெய்வங்களின்
முன்தான் இருக்கும், படுத்திருந்தாலும், ஒரு காலைமட்டும் மடக்கி
எழுந்திடத் தயார் நிலையில், கண் காது தலை அனைத்தும் தெய்வத்தைப்
பார்த்தபடியே இருக்கும்,
வீரம் மிகுந்த பாரதமாதாவை இவ்வாறு
வாகனத்தின் மீது ஒய்யாரமாகச் சாய்ந்திருப்பதுபோன்று வரைவது தவறல்லவா?
அன்பன்
கி. காளைராசன்
--
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
என்னுடைய கருத்து,
தெய்வத்தைச் சார்ந்து வாகனம் இருக்கும்,
வாகனத்தைச் சார்ந்து எந்தத் தெய்வமும் இருக்காது,
இந்தப் படத்தில் வாகனத்தின் (சிங்கத்தின் பிடரியில்) பாரதமாதா கையை
வைத்துச் சாய்ந்துள்ளாள்,
இதனால், சிங்கம் சிறிது நகர்ந்தாலும், பாரதமாதா சாய்ந்துவிடலாம்,
வானத்தின் supportல் பாரதமாத நிற்பது தவறாகத் தோன்றுகிறது,
On Feb 20, 1:04 am, kalairajan krishnan <kalairaja...@gmail.com>
wrote:
> On 2/20/11, LK <karthik...@gmail.com> wrote:
>
> > தவறாகத் தோணவில்லை
>
ஸ்ரீ காளைராஜன்,
நீங்கள் பழைய இந்திய சித்திர மரபு பேசுகிறீர்கள்.
ஆனால், இந்த பாரதமாதா படம் மேலை நாடுகளின்
சித்திர மரபில் உதித்த பாரதமாதா.
---------
வங்காளியரும், பாரதியாரும் துருக்கை/கொற்றவையை
பாரதாமாதாவாக 120-100 வருஷத்தில் உருவமைத்த கதையில்
சில குறிப்புகள் கொடுத்தேன். நிறைய எழுதலாம்.
http://nganesan.blogspot.com/2009/10/popular-prints-bhaaratamata.html
தமிழ்த்தாய் உருவாக்கமும் இவ்வாறே. முக்கியப் பங்கு
பெ. சுந்தரம் பிள்ளை.
நா. கணேசன்
> என்னுடைய கருத்து,
> தெய்வத்தைச் சார்ந்து வாகனம் இருக்கும்,
> வாகனத்தைச் சார்ந்து எந்தத் தெய்வமும் இருக்காது,
>
> இந்தப் படத்தில் வாகனத்தின் (சிங்கத்தின் பிடரியில்) பாரதமாதா கையை
> வைத்துச் சாய்ந்துள்ளாள்,
> இதனால், சிங்கம் சிறிது நகர்ந்தாலும், பாரதமாதா சாய்ந்துவிடலாம்,
>
> வானத்தின் supportல் பாரதமாத நிற்பது தவறாகத் தோன்றுகிறது,
> அன்பன்
> கி. காளைராசன்
> --
> திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,http://www.freewebs.com/thirupoovanam/
2011/1/19 kalairajan krishnan <kalair...@gmail.com>மெய்யன்பர்களே,
நாரதமுனி கொண்டு வந்து ஞானப்பழத்தைப் பெருவதில் பிரச்சனை ஏற்பட்டது,
ஞானப்பழத்தைப் பெற ஞானம் உள்ளதா? எனச் சோதனை செய்தான் சிவன், வெற்றி
பெற்று விநாயகன் ஞானப்பழத்தைப் பெற்றான். முருகன் கோபித்துக் கொண்டு
பழநிமலை வந்து குன்றேறி மேற்கு நோக்கி நிற்கிறான். (அருளுகிறான்?)
அவன் கையில் தண்டம் உண்டு. இடையில் கோவணம் உண்டு,
வேல் எங்கே வந்தது?
ஆண்டியின் கோலம் கொண்ட சமயத்தில் தண்டாயுதம். மற்ற கோலங்களில் வேலாயுதம். சுவாமிமலையில் முருகனுக்குக் குலிசாயுதம் என்பது தெரியுமல்லவா? குலிசாயுதத்தை யார் அவன் கையில் கொடுத்தார்கள் என்றும் சற்று விளக்கினால் கற்றுக் கொள்ளலாம்.எனக்குத் தெரிந்து கந்தபுராணம் உற்பத்திக் காண்டம், விடைபெறுபடலத்தில் குலிசமும் சிவனால் கொடுக்கப்பட்டதே என்று காணப்படுகிறது. பாடல்கள் இவை:அருத்திகொள் குமரன் இனையசொல் வினவி அப்பணி புரிகுவ னென்னப்,
புரத்தினை யட்ட கண்ணுதல் பின்னர்ப் பொள்ளென உள்ளமேற் பதினோர்,
உருத்திரர் தமையும் உன்னலும் அன்னோர் உற்றிட இவன்கையிற் படையாய்,
இருத்திரென் றவரைப் பலபடை யாக்கி ஈந்தனன் எம்பிரான் கரத்தில். 36
பொன்றிகழ் சடிலத் தண்ணல்தன் பெயரும் பொருவிலா உருவமுந் தொன்னாள்,
நன்றுபெற் றுடைய உருத்திர கணத்தோர் நவிலருந் தோமரங் கொடிவாள்,
வன்றிறற் குலிசம் பகழியங் குசமும் மணிமலர்ப் பங்கயந் தண்டம்,
வென்றிவின் மழுவு மாகிவீற் றிருந்தார் விறல்மிகும் அறுமுகன் கரத்தில். 37
ஆனை வாகனமும் ஆட்டு வாகனமும் முருகனுக்கு உண்டு. மஹாபாரதத்தில் உள்ள கந்தபுராணத்தில் காணப்படும் சுப்ரமண்ய அஷ்டோத்திரத்தின்படி, முருகனுக்கு வாகனமும், கொடியும் மயிலே. (சிவனுக்கு வாகனமும் கொடியும் எருது;விஷ்ணுவுக்கு இவையிரண்டும் கருடன் என்பதைப்போல்.) கோழிக்கொடி என்ற வழக்கம் எந்தக் காலகட்டத்தில் தோன்றியதென்பது தெரியாது. அருணகிரிநாதர் வாக்குப்படி கோழிக்கொடியோன் முருகன். மஹாபாரதத்தில் இந்த வேற்றுமை காணப்படுகிறது.வேல் எப்போது வேலவன் கைக்கு வந்தது?
அசுரர்களை வெல்லப் போருக்குச் செல்லும் முன், அன்னை பராசக்தி வேலை
முருகனுக்கு வழங்கினாள்,
பராசக்தி முருகனுக்கு வேல் வழங்கியதாக எந்தப் புராணத்தில் காணப்படுகிறது? ஏழெட்டுப் பாக்களில் அருணகிரிநாதர் வேலை அளித்தவன் சிவன் என்று பாடுகிறார். இடங்கள் அவசியம் தேவை என்றால் கொஞ்சம் தேடி எடுத்துத் தருகிறேன்.
வேல் சிவனால் அளிக்கப்பட்டது என்று கந்த புராணம் பாடும் இடம் (மேற்படிப் பாடல்களுக்கு அடுத்த பாடல்)
ஆயதற் பின்னர் ஏவில்மூ தண்டத் தைம்பெரும் பூதமும் அடுவ,
தேயபல் லுயிரும் ஒருதலை முடிப்ப தேவர்மேல் விடுக்கினும் அவர்தம்,
மாயிருந் திறலும் வரங்களுஞ் சிந்தி மன்னுயிர் உண்பதெப் படைக்கும்,
நாயக மாவ தொருதனிச் சுடர்வேல் நல்கியே மதலைகைக் கொடுத்தான். 38
கொடுத்தான் என்றிருக்கிறதா, கொடுத்தாள் என்றிருக்கிறதா? கச்சியப்ப சிவாசாரியாரும் அருணகிரியாரும் தவறாகவா சொல்கிறார்கள்?
சரி. குழந்தை முருகன் ஆறுபேர்களையும் பராசக்தி ஒன்றுசேர்த்த நாள் தொடங்கி, முருகனுடைய பால லீலைகள் அனைத்தும் நடந்து முடிந்ததாகச் சொல்லப்படும் காலகட்டம் என்ன தெரியுமோ? ஆறே நாள்.படத்தில் உள்ள முருகன் ஆண்டியின் கோலத்தில் இல்லை. மொட்டைத் தலையும் கோவணதாரியுமாக இல்லை. ‘யாமிருக்க பயமேன்’ என்ற வாசகத்துடன் இந்தப் படம் என் சிறுவயதிலிருந்து புழக்கத்திலிருக்கிறது. அதற்கு முன்னாலும் இருந்திருக்கலாம். கொண்டைய ராஜு வரைந்த படம் என்று நினைவு. காவி வஸ்திரம் உடுத்து, சடை அவிழ்ந்து பரந்திருக்கும் கோலத்துடன் கூடிய முருகன் தொடர்பான விவரங்களைக் காணவேண்டும். தேடுவோம்.
--
அன்புடன்,
ஹரிகி.