இளைப்பாறும் போது

0 views
Skip to first unread message

Kasumi Chan

unread,
Nov 4, 2009, 7:27:35 AM11/4/09
to மின்தமிழ்
வயிற்றில் சுமக்கும் சிசுவுடன்
வயக்காட்டில் வேலை செய்யும்
குடியானவள் பாவம்தான்.
ஈன்று தொப்புள் கொடி அறுபடும்
முன்னரே, ஓடத்தயாராக இருக்கும்
வனப்பசுவின் கன்றுக்கு ஆறுதல்
யார் சொல்வது?
இயங்கு!
என்பதுதான் ஆணை!
எதிர்ப்பேச்சு கேட்கமுடியாமல்
சுழன்று கொண்டிருக்கும்
மானுட வாழ்வு அலுப்புத்தருகிறது.
இறந்து பட்டுப்போனாலும்
பேயாய் அலையும் கவலை.
இயங்கா இருக்கும் நிலையில்
இந்திரன் இமையாமல் இருப்பான்
எனினும் சலனமுறும் மனது
குறித்து ஆயிரம் கதைகள் அங்கு.
இயக்கமற்ற போதென்று ஏதேனும்
இருந்தால் சொல்லுங்கள்
கொஞ்சம் இளைப்பாற.

காசுமி

--
கடல்வெளி - The Inner Space of Kasumi Chan
http://kasumichan.wordpress.com/

Tthamizth Tthenee

unread,
Nov 4, 2009, 12:10:52 PM11/4/09
to mint...@googlegroups.com
இயக்கமற்ற போதென்று ஏதேனும்
இருந்தால் சொல்லுங்கள்
கொஞ்சம் இளைப்பாற.
 
இயக்கமற்று இருக்கும்  நிலை
கிடைத்தால்  
 
அப்போது  எம் இயக்கங்கள் நின்று போகும்
 
அப்போது  எப்படி உமக்குச் சொல்வது
 
இயக்கமற்ற போது ஏதென்று 
 
யாமப்போது இயக்கமற்று இருப்போம்
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
4-11-09 அன்று, Kasumi Chan <kasum...@gmail.com> எழுதினார்:

srirangammohanarangan v

unread,
Nov 4, 2009, 1:52:56 PM11/4/09
to mint...@googlegroups.com
On 11/4/09, Kasumi Chan <kasum...@gmail.com> wrote:
வயிற்றில் சுமக்கும் சிசுவுடன்
வயக்காட்டில் வேலை செய்யும்
குடியானவள் பாவம்தான்.
ஈன்று தொப்புள் கொடி அறுபடும்
முன்னரே, ஓடத்தயாராக இருக்கும்
வனப்பசுவின் கன்றுக்கு ஆறுதல்
யார் சொல்வது?
இயங்கு!
என்பதுதான் ஆணை!
எதிர்ப்பேச்சு கேட்கமுடியாமல்
சுழன்று கொண்டிருக்கும்
மானுட வாழ்வு அலுப்புத்தருகிறது.
இறந்து பட்டுப்போனாலும்
பேயாய் அலையும் கவலை.
இயங்கா இருக்கும் நிலையில்
இந்திரன் இமையாமல் இருப்பான்
எனினும் சலனமுறும் மனது
குறித்து ஆயிரம் கதைகள் அங்கு.
இயக்கமற்ற போதென்று ஏதேனும்
இருந்தால் சொல்லுங்கள்
கொஞ்சம் இளைப்பாற.

காசுமி
------------------------------------------------------
 
காசுமி!    மனத்தின்    பழக்கத்தைப்  பார்த்தீரா?     இயக்கமற்ற   போது   என்று  கேட்டுவிட்டு,   அங்கும்    இளைப்பாற    என்று  ஒரு    இயக்கத்தை  மூட்டைகட்டிக்கொண்டு    போகிறது  பாருங்கள்.!! 
 
அதனால்தான்     எங்கள்    சிரபுரத்தான்   வெண்பா   கூறுகிறது-- 
 
சும்மா  இருக்கச்  சுகம்  உதயம்   ஆகுமே; 
இம்மாயா  யோகம்   இனி  ஏதடா? -- 
தம்மறிவின்   சுட்டாலே    ஆகுமோ?
சொல்ல  வேண்டாம்;
கன்ம  நிஷ்டா;
சிறுபிள்ளாய்   நீ1
 

Kasumi Chan

unread,
Nov 4, 2009, 6:02:13 PM11/4/09
to mint...@googlegroups.com
2009/11/5 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

> காசுமி!    மனத்தின்    பழக்கத்தைப்  பார்த்தீரா?     இயக்கமற்ற   போது
> என்று  கேட்டுவிட்டு,   அங்கும்    இளைப்பாற    என்று  ஒரு    இயக்கத்தை
> மூட்டைகட்டிக்கொண்டு    போகிறது  பாருங்கள்.!!
>

அட! உண்மைதானே! இளைப்பாறுதலும் ஒரு செயல்தானே. அப்போதும் இதயம் `லபக்,
டபக்`, மூச்சு, `உஸ்,புஸ்` ம்ம்ம்

காலம் என்பதுதான் இயக்கத்திற்கு பொருள் தருவதோ?
காலம் என்பதே மனத்தின் செயற்பாடுதானே?
இயற்கையில் மாற்றங்கள் மட்டுமே உள்ளன. அதைப் பகுத்தறியும் மனம்
அதிலிருந்து பருவங்களை உருவாக்கி, ஆண்டுகள், மாதங்கள், நாட்கள்,மணி,
நிமிடம், என்று பகுத்துக்கொண்டே போய் `காலத்தை` ஸ்தூலமாக உருவாக்கி நம்
வாழ்க்கையை கட்டி விடுகிறது. [என்ன செய்வதென்று தெரியவில்லை!
காலத்தைக்கொல்ல சினிமாவிற்கு வந்தேன்!]
காலத்தை எப்படிக் கொல்வது (to kill the time)?
காலம் அழிந்துபட்டால், `இயக்க உணர்வும்` அழிந்து படுமா?

காசுமி


> அதனால்தான்     எங்கள்    சிரபுரத்தான்   வெண்பா   கூறுகிறது--
>
> சும்மா  இருக்கச்  சுகம்  உதயம்   ஆகுமே;
> இம்மாயா  யோகம்   இனி  ஏதடா? --
> தம்மறிவின்   சுட்டாலே    ஆகுமோ?
> சொல்ல  வேண்டாம்;
> கன்ம  நிஷ்டா;
> சிறுபிள்ளாய்   நீ1
>
> >
>

--

Kamala Devi

unread,
Nov 4, 2009, 6:46:27 PM11/4/09
to mint...@googlegroups.com
கவிதை என்பதே கனவாய் , மழையாய் பொழிவதே.
குறிஞ்சிப்பூவாய் எப்போதாவது வராமல்,
அவ்வப்போது, இந்த கனவு, இந்த பூந்தூறல் மழை பொழியக்கடவது.
இளைப்பாறும்போது--இந்தத் தலைப்பபிடித்துக்கொண்டு 10 நிமிஷங்கள் யோசித்துக்கொண்டிருந்தேன்.
காசுமி- வாழ்த்துக்கள், என்றெல்லாம் சொல்லி நின்னை மகிழ்விக்கப்போவதில்லை.
இப்படியெல்லாம் எழுதுவதால்தான் எங்கள் காசுமி. மனசெல்லாம் மகிழ்ந்தாலும் ஒரு கேள்வி---?
வனப்பசு----கொஞ்சம் விளக்கமுடியுமா?
கமலம்
இந்த சொல் விளையாட்டு ரொம்ப பிடிக்கிறது

http://www.kamalagaanam.blogspot.com
Start chatting with friends on the all-new Yahoo! Pingbox today! It's easy to create your personal chat space on your blogs. http://sg.messenger.yahoo.com/pingbox

Kasumi Chan

unread,
Nov 4, 2009, 8:43:21 PM11/4/09
to mint...@googlegroups.com
2009/11/5 Kamala Devi <saahi...@yahoo.com.sg>:

> வனப்பசு----கொஞ்சம் விளக்கமுடியுமா?
> இந்த சொல் விளையாட்டு ரொம்ப பிடிக்கிறது
>

National Geographic, BBC ஆவணப்படங்கள் பார்த்தால் அடிக்கடி வரும்
காட்சி. திறந்தவெளியில் கன்று ஈனும் காட்சி. திறந்த வெளி என்பதால்
பசியுள்ள மிருகங்கள் உணவுதேடி அலைந்து கொண்டு இருக்கும் வாய்ப்பதிகம்.
எனவே பிறந்த சில நிமிடங்களில் அக்கன்று எழுந்து நின்று தாயுடன்
ஓடத்தயாராக வேண்டும். 'இயங்கு என்பதே ஆணை'. வேறு மாதிரி எப்படியும் இதைச்
சொல்லமுடியாது. ஆங்கிலத்தில் wild beast என்ற பொதுச்சொல்லில்
இம்மிருகங்களை விளிக்கின்றனர்.

வனப்பசு அழகாக உள்ளது.

காசுமி

Kamala Devi

unread,
Nov 4, 2009, 8:52:47 PM11/4/09
to mint...@googlegroups.com
கவிதையே அழகு தான், குழந்தையின் சிரிப்புபோல், காதலியின் கண்சிமிட்டல் போல்,
பென்னேஸ்வரனின் பாஷையில் கூறினால் மோனமே பரிபாஷைபோல் ,
அம்மாடி, இன்னொரு கவிதை -----க்கு இன்னும் எத்தனை நாள் காத்திருக்கணுமோ,
ஹ்ம்ம், காசுமி காட்டில் படு மழையாமே.
ஒரு சாஹித்யக்காரி


உடனே இன்னொரு வனப்பசு கவிதை வேணும்.

http://www.kamalagaanam.blogspot.com



----- Original Message ----
From: Kasumi Chan <kasum...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Thursday, 5 November 2009 9:43:21
Subject: [MinTamil] Re: இளைப்பாறும் போது

2009/11/5 Kamala Devi <saahi...@yahoo.com.sg>:
> வனப்பசு----கொஞ்சம் விளக்கமுடியுமா?
> இந்த சொல் விளையாட்டு ரொம்ப பிடிக்கிறது
>

National Geographic, BBC ஆவணப்படங்கள் பார்த்தால் அடிக்கடி வரும்
காட்சி.. திறந்தவெளியில் கன்று ஈனும் காட்சி. திறந்த வெளி என்பதால்
Reply all
Reply to author
Forward
0 new messages