சிறு தவறு. தலையைப் பின் புறமாய் வைத்து தண்ணீருள் முங்கி சேற்றில் இறை தேடும். சிறு தூரம் அப்படி நடந்த பின் அனைத்து நாரைகளும் திரும்பி வந்த வழியே நடக்கும். இதற்கு ஒரு காரணம் அவை தண்ணீருள் தலை விட்டு நடப்பதால் அவற்றைப் பிடிக்க எதிரிகள் வந்தால் தெரியாதல்லவா? அதனால்தான் அப்படி அவை திரும்புகின்றன வந்த வழியே எங்கிறார் சிலர். இந்தப் பறவை கோண மூக்கு நாரை எனப்படும் Flamingo. இப்படி வினோதமாக அவை இரை தேடுவாதை கோடியக் கரையில் நேரில் பார்த்திருக்கிறேன்.
2016-06-04 3:24 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:--
On Thursday, June 2, 2016 at 9:58:28 PM UTC-7, Natrajan Kalpattu Narasimhan wrote:நாரையயணம்
வளைந்த மூக்கு நாரை யொன்று நாராயணா
தண்ணீருள் தலை விட்டு நாராயணா
பின் புறமாய் நடந்து சென்றே நாராயணா
சேற்றில் இரை தேடுமிது நாராயணா
பறந்தால் இன் நாரை கூட்டமாய் நாராயணா
வானமே சிவந்திடும் நாராயணா
இந்த பின்புறமாய் நடக்கும் நாரையின் ஆங்கிலப் பெயர் என்ன? மற்ற பறவைகள் என்னவென்று தெரிகிறது.நன்றி,நா. கணேசன்
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
மிக்க நன்றி காணொளிக்கு. இப்படி ஒரு காட்சியாய் இன்றுதான் பார்க்கிறேன்.
நான் பார்த்தது நூற்றுக் கணக்கில் கூட்டமாய் நீருள் தலையை விட்டு, (அப்போது அதன் கண்களும் அலகும் பின் புறம் நோக்கி இருக்கும்) கொஞ்ச தூரம் நடந்து பின் திடீரென அனைத்தும் ஒன்றாய்த் திரும்பி, தலையை மீண்டும் தண்ணீருள் விட்டுக் கொண்டு வந்த இடத்தையே சென்றடையும்.
நாரையயணம்
நாரைகளில் தான் எத்தனை வகை நாராயணா
நாளெல்லாம் பார்த்து ரசிக்கலாம் அவை நாராயணா
கொக்கென்று பொதுவாய் அழைப்பாருண்டு அவற்றை நாராயணா
பக்கென்று கொன்று புசிப்போரும் உண்டு அவை நாராயணா
முதலில்,
வண்ணாத்தி நாரை (Wool1y-necked Stork, a.k.a White-necked Stork, Bishop's bird)
வண்ணாத்திநாரையின் பறவையியற் பெயர்: Ciconia episcopus
https://en.wikipedia.org/wiki/Woolly-necked_stork
வண்ணாத்தியின் பொதி போல, - வெள்ளை வேட்டி (அ) சீலையில் கட்டிச் சலவைத் தொழிலாளி சுமக்கும் பொதி – போல இதன் வெள்ளையான கழுத்து இருப்பதால் தமிழர்கள் வழங்கும் பெயர். தமிழ் மக்கள் அழைக்கும் பெயர் பறவை நூல்களில் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆங்கிலத்தில், Bishop’s bird!
வண்ணாத்தி நாரை (Ciconia episcopus)
கோயம்புத்தூர் - சிங்காநல்லூர் குளத்தில்
https://en.wikipedia.org/wiki/List_of_birds_of_Singanallur_Lake
பழனி அருகே லேக்ஸைட் கஸ்ட்ஹவுஸ்
https://lakesideindia.wordpress.com/tag/woolly-necked-stork/
https://lakeside.co.in/ லேக்ஸைட் கஸ்ட்ஹவுஸ் பார்க்கலாம்: https://www.youtube.com/watch?v=H2qrba-ACkc

http://birds.thenatureweb.net/woolly_necked_stork.aspx
![]()
வண்ணாத்தி நாரையின் வாழ்பரப்பு:
http://www.planetofbirds.com/ciconiiformes-ciconiidae-woolly-necked-stork-ciconia-episcopus
நா. கணேசன்
http://scrapboktravelblog.blogspot.com/2012/06/birds-woolly-necked-stork.html
இன்று பெண்பறவையாளர் ஒருவரின் நினைவைப் போற்றி கூகுள் முகப்பில் பலநாடுகளில் காட்டுகிறது. ஸ்நெட்சிங்கர் வாழ்ந்த காலத்தில் birder என்றால் ஆண்களே. இப்பொழுது மாறிவருகிறது.
http://www.google.com/doodles/phoebe-snetsingers-85th-birthday
தமிழில் வண்ணாத்திநாரை எனப்படும் Woolly-necked stork பற்றிப் பார்த்தோம். சங்க இலக்கியத்திலே புலைத்தி எனப்படும் தொழிலாளி பெயரால் மக்கள் வழங்குகின்றனர். "களர்ப்படு கூவல் தோண்டி, நாளும் புலைத்தி கழீஇய தூவெள் அறுவை''. (புறம் - 311) துணிவெளுக்கும் வண்ணாத்தி களர் நிலத்தில் கிணறு தோண்டி, தூய வெள்ளை ஆடைகளின் அழுக்கைத் துவைத்தாள், அந்தக் கிணறும் கூவல் எனப்பட்டது. சு. ஆவுடையப்பன் (மதுரை வானொலி, தினமணி, 2011) அழுக்குவண்ணாத்தி என மைனாவுக்குப் பொதுப்பெயர்போல. வெள்ளைத் துணிமூட்டை கழுத்தில் என கற்பனை செய்து பெயரிட்டுள்ளனர். சங்கப் பெயருக்கு நேரான ஹிந்திப் பெயர் ரஜகி, மலையாளத்திலும் இப்பெயர் உண்டு.’இரசகி நாரை’ என வடசொல் பயனித்தும் சொல்லலாம். கழுத்தில் பட்டை இருப்பதால் பிஷப் பறவை என ஆங்கிலத்தில் சொல்வர். மக்கள் வாழ்ந்த சூழ்நிலையில் எது எளிதில் புரியுமோ அவ்வாறு பேர் வைப்பது மரபு.
கருநாரை: ஸ்நெட்சிங்கர் பிறந்தநாளில் இன்னொரு நாரை. தமிழில் கருநாரை என அழைக்கப்படுகிறது என்கிறார் பேரா. க. ரத்னம். பெரிய நாரைகளில் ஒன்று இக் கருநாரை. ஆங்கிலத்தில் “Black necked stork” என்கிறார்கள். https://en.wikipedia.org/wiki/Black-necked_stork
கருநாரை இளம்பருவத்தில் கறுப்பாகவே இருக்கும். விடலைப் பருவத்தில் உடலின் சில பாகங்களும், சிறகுகளும் வெள்ளையாக மாறும் தன்மை கொண்டது. 4-4.5 அடி உயரம் வளரும் பெரிய நாரை இது.
சிறுபருவத்தில் கருநாரை: Juvenile Black-necked Stork
வளர்ந்த கருநாரை (adult plumage)


சிறகின் முனை கருப்பாக உள்ள கருநாரை:
![]()
சிறகின் முனை வெண்மையாக உள்ள கருநாரை: (பரத்பூர், ராஜஸ்தான்)

--