கமான் காமம் காமன் எல்லாவற்றுக்கும் காமனா (common)

110 views
Skip to first unread message

பேரா.நாகராசன்

unread,
Mar 4, 2011, 10:35:27 PM3/4/11
to mint...@googlegroups.com
வடக்கிலும் தெற்கிலும் வாழ்வியல் மரபில் நீக்கமற நிறைந்துருப்பது காமம்
வடக்கே காம லோகா தெற்கே காமத்துப் பால்
காமம் என்ற சொல் இரண்டுக்கும் பொதுவா அல்லது தனித் தனி வேற்சொற்களா
காமத்திற்கு ஆரம்பம் வத்சாயனரிலிருந்தோ அல்லது அதிவீர ராம பாண்டியர்டில் இருந்தோ தொடங்குவதில்லை
சன்க கால்த்திலிருந்தும் வேத காலத்தில் இருந்தும் தொடக்கம்
காமன் முதன்மைக் கடவுள்
இந்திய சமயங்கள் அனைத்திலும் காமனுக்கோர் இடமுண்டு
Sensual pleasure and sexula pleasure என்ற நுண்ணிய வேறுபாட்டை இந்திய மரபு வலியுறுத்துகிறது
இது பற்றி மேலும் சில தகவல் தேடிக்கொண்டிருக்கிறேன்
Human Development and Adulty Education is an important but often neglected area of learning
நாகராசன்

Geetha Sambasivam

unread,
Mar 4, 2011, 11:04:55 PM3/4/11
to mint...@googlegroups.com
அருமையான ஆய்வு. வெற்றியடைய வாழ்த்துகள்.  செய்திகளைப் பகிர்ந்து கொள்ளவும் காத்திருக்கிறேன். நன்றி.

2011/3/5 பேரா.நாகராசன் <radius.co...@gmail.com>
வடக்கிலும் தெற்கிலும் வாழ்வியல் மரபில் நீக்கமற நிறைந்துருப்பது காமம்
வடக்கே காம லோகா தெற்கே காமத்துப் பால்
காமம் என்ற சொல் இரண்டுக்கும் பொதுவா அல்லது தனித் தனி வேற்சொற்களா
காமத்திற்கு ஆரம்பம் வத்சாயனரிலிருந்தோ அல்லது அதிவீர ராம பாண்டியர்டில் இருந்தோ தொடங்குவதில்லை
சன்க கால்த்திலிருந்தும் வேத காலத்தில் இருந்தும் தொடக்கம்
காமன் முதன்மைக் கடவுள்
சமயங்கள் அனைத்திலும் காமனுக்கோர் இடமுண்டு
Sensual pleasure and sexula pleasure என்ற நுண்ணிய வேறுபாட்டை இந்திய மரபு வலியுறுத்துகிறது
இது பற்றி மேலும் சில தகவல் தேடிக்கொண்டிருக்கிறேன்
Human Development and Adulty Education is an important but often neglected area of learning
நாகராசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

karuannam annam

unread,
Mar 4, 2011, 11:52:32 PM3/4/11
to mint...@googlegroups.com
நல்ல ஆய்வு.

2011/3/5 பேரா.நாகராசன் <radius.co...@gmail.com>
வடக்கே காம லோகா தெற்கே காமத்துப் பால்
காமம் என்ற சொல் இரண்டுக்கும் பொதுவா அல்லது தனித் தனி வேற்சொற்களா
தனித்தனி என்று படித்தேன். தமிழில் காமம் என்பது "கமம்" என்ற சொல் அடியாக "நிறைவு" என்ற பொருளில்  பொருள் கொள்ளவேண்டும் எனவும் அந்தக் கட்டுரையில் குறித்திருந்தது. வடமொழியில் காமம் என்பது வேறு "பேரவா".திருவள்ளுவர் இரண்டு வழியிலும் பயன்படித்தியுள்ளார். வடமொழி வழக்கில் வருவது "காமம் வெகுளி கெடக் கெடும்' என்றும் 'நிறைவு' என்ற தமிழ் வழக்கில் காமத்துப்பால் என்றும் குறிப்பிட்டிருந்தது. நண்பர்கள் கருத்து அறிய ஆவல். 

Sensual pleasure and sexula pleasure என்ற நுண்ணிய வேறுபாட்டை இந்திய மரபு வலியுறுத்துகிறது
கண்களவு கொள்ளுஞ சிறுநோக்கங் காமத்திற் 
செம்பாக மன்று பெரிது. 
என்ற குறளும் கருத்தில் கொள்ளத்தக்கது.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

devoo

unread,
Mar 5, 2011, 3:07:43 AM3/5/11
to மின்தமிழ்
>> வடக்கே காம லோகா தெற்கே காமத்துப் பால் காமம் என்ற சொல் இரண்டுக்கும் பொதுவா அல்லது தனித் தனி வேற்சொற்களா

Sensual pleasure and sexula pleasure என்ற நுண்ணிய வேறுபாட்டை இந்திய

மரபு வலியுறுத்துகிறது <<

காம: - வடசொல், வேர் ‘கம்’;
பல தொகைகளுக்கு வழி வகுக்கிறது.

தமிழில் இதற்கான வேர் உள்ளதா தெரியவில்லை. ‘காம லோகா’ என்று எதைக்
கூறுகிறீர்கள் புரியவில்லை. காம புருஷார்த்தம் என்று கூறுவர்.
இரு மொழிகளிலும் sensual pleasure and sexual pleasure இரண்டிற்குமே
பயனாகிறது.

’காமம்’ விருப்பம், பாலுணர்வு இரண்டையும் குறிப்பது. விருப்பம் மனம்
உள்ளவரை தொடரும்; பாலுணர்வு பருவம் உள்ளவரை நீடிப்பது.
’காமம் செப்பாது, கண்டது மொழிமோ’ (இறையனார்) – மனம் விரும்பியதைக்
கூறாமல் பார்த்ததை உள்ளபடியே சொல் என்று தும்பியிடம் கூறுமிடத்தில்
காமம் விருப்பத்தைக் குறிப்பது.

முப்பால்களுள் ஒன்றாகும் காமத்துப்பால் தாம்பத்யத்தை மையமாகக் கொண்டது.

‘ஜஹி ஸ²த்ரும் மஹாபா³ஹோ காம ரூபம் து³ராஸத³ம்’ (கீதை) என்னுமிடத்தில்
கண்ணபிரான் விருப்பங்கள் (காமனைகள்) அனைத்தையும் வெல்லுமாறு சொல்கிறார்.
விருப்பம் என்பதே அனைத்தையும் உள்ளடக்கியதுதானே என்று கேட்டாலும் ஆம்
என்றுதான் விடை கூறியாக வேண்டும்; ஆனால் காமன் பருவ இச்சைக்கே உரிய
கடவுளாவதால், தனியாகவும் அதன் பொருளை வகைப்படுத்தி இருப்பதாகவே கொள்ள
வேண்டும், பயன்பாட்டை ஒட்டியதாக.

’யத் க்ரௌஞ்சமிது²நாத் ஏகமவதி⁴: காம மோஹிதம்’ (வால்மீo ராமாo) – ஜோடிப்
பறவைகள் பற்றி இங்கு கூறப்படும் காமம் பாலுணர்வுடன் தொடர்புடையது.

இச்சொல்லைப் பொருத்தமட்டில் பயன்பாட்டில் இரு மொழிகளுக்கிடையே வேறுபாடு
இல்லை என்றுதான் தெரிகிறது.

உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்

தேவ்

Nagarajan Vadivel

unread,
Mar 5, 2011, 3:29:45 AM3/5/11
to mint...@googlegroups.com
Kamam - desires and their fulfillment
Loka- realm
Kaman - God
According to the philosophy of pleasure
Kama-loka comprises of
lower level of hell
1. pretas
2. raksasas
3. asuras
4. kumbahandas
5. nagas
6. yaksas
middle level earth
1.men
2.beasts
seeking sensual pleasure
iccha - will
kama -desire
top level
1.garudas
2.gandarvas
3.apsaras
Above kama-loka Brahma-loka
Kama is the first of Gods and the youngest too
This is the first part of the synoptic ourline to compare the writings in Tamil and Sanskrit
Nagarajan

2011/3/5 devoo <rde...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Mar 5, 2011, 3:55:17 AM3/5/11
to mint...@googlegroups.com
காமம் என்பதே ஆசை ,இச்சை, போன்ற பொருட்களில் வந்தாலும்

காமம் என்பது லோகாயதமான இயங்கு முறை

காமம் மட்டுமில்லையென்றால் ப்ரபஞ்ச வளர்ச்சியே இல்லை
பரிணாம வளர்ச்சிகளும் இல்லை

”சிற்றின்பம் எனப்படும் காமம் நிச்சயமாய்ப் பேரின்பத்துக்கு அழைத்துச்செல்லும் பாதை என்கிறார்  ஒஷோ அவர்கள்’

முறையான காமம் முழுமையான ஆன்ம சக்தி என்கிறார்கள் மூத்தோர்
காமத்தை அடக்கி தியானம் செய்தால்தான் மனது ஒருநிலைப்படும் என்றுசொல்கிறார்கள் ஞானிகள்

நம் வாழ்வில் மிகச்சிறிய  

காமன் உலகின் முதல் சக்தி 

காமம் என்னும் அடிப்படை இல்லாவிட்டால் இது வரை காதல் என்று வர்ணிக்கப்பட்ட அனைத்துமே  பொய்யென்றாகிவிடும்.  

அன்புடன்
தமிழ்த்தேனீ 

2011/3/5 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

devoo

unread,
Mar 5, 2011, 5:29:36 AM3/5/11
to மின்தமிழ்
>>> Above kama-loka Brahma-loka. Kama is the first of Gods and the youngest too

This is the first part of the synoptic ourline to compare the writings
in <<<

காம லோகம் – இது சரியன்று; ப்ரம்ம லோகமும் காம லோகத்தோடு சேர்ந்ததுதான்.
சந்தனு கங்கையைப் பார்த்து மோகம் கொண்டது இங்குதான். ப்ருகு மஹர்ஷி
ப்ரம்மதேவரிடம் சினம் கொண்டு சாபம் கொடுத்ததும் இங்குதான். ப்ரக்ருதி
மண்டலம் முழுவதும் காம க்ரோதங்களுக்கு இடமளிப்பதால் காம லோகம்தான்.
திரும்பத் திரும்பக் கூறுவது சலிப்பைத் தரலாம். மூல நூல்களை உள்ளபடியே
வாசித்தறிவதுதான் நல்ல புரிதலுக்கும், ஆராய்ச்சிக்கும் துணை செய்யும்

தேவ்

On Mar 5, 2:29 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

Nagarajan Vadivel

unread,
Mar 5, 2011, 7:30:23 AM3/5/11
to mint...@googlegroups.com
aஅன்புடை தேவ்
இந்த இழையின் முக்கிய நோக்கமே மொழி பெயர்ப்புகளில் உள்ள குறைகளை மூலநூல் அறிஞர்களின் வழிகாட்டுதலில் அறிந்துக் கொள்வதே
நாகராசன்

2011/3/5 devoo <rde...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Nagarajan Vadivel

unread,
Mar 5, 2011, 10:14:26 AM3/5/11
to mint...@googlegroups.com
இன்பம் பற்றிய இந்தியத் தத்துவங்கள் காமதேவன் பற்றி குறிப்பிடும் தகவல்
கிரேக்க வெளிப்பாடான காதல் தேவதை வீனஸின் மகன் குபிட் சிறு குழந்தை  
venus putto.jpg

ஆனால் இந்திய தத்துவத்தில்  காமன் இளைஞன். 
kamadeva.jpg

அவன் மனைவி ரதி
kamadevarati.jpg
காமனுடைய தலைமைத்தளபதி தெழ்ர்கிபிருந்து வீசும் தென்றல் (வசந்தம்)
காமன் கையில் மலர்சூடிய வில் மலர்ந்த மலர்களை முனையில் கொண்ட ஐந்து அம்புகள், பற்றியிழுக்கும் (பாச)கயிறு, பற்றியவனை அருகில் கொண்டுவர இழுகருவி ஆகிய நான்கு கருவிகள்
அம்புகள் - திறக்க ஜம்ப
வில் -மோகம்
கயிறு -ஸ்தம்ப
இழுகருவி - வசப்படுத்த
சிவபெருமானின்மீது காமன் அம்பெய்தல்
kamadevasiva.jpg

பெளத்தத்தில் காமலோகம், ரூபலோகம் அரூபலோகமென்று மூன்று நிலைகள் இருப்பதாகவும்  சாக்கியமுனி போதிமரத்தடியில் அமர்ந்து இன்ப தன்ப எல்லைகளைக்ககும் நிலை எய்த இருந்த நிலையில் காமன்  குழலூதும் இளைஞனாக
அவர்முன் தோன்றி காம உணர்வைத் தூண்ட முயன்றதாகவும் குறிப்புகள் உள்ளது.  காமன் உயிரினத்தை இன்பம் துய்க்க மீண்டும் மீண்டும் தூண்டி மரணத்தைத் தழுவச் செய்வதால் அவன் வாழ்வின் இன்பத்தையும் கடும் மரணத்தயும் அளிக்கவல்ல காம-மாரக் கொடியோன் என்று குறிக்கப்படுகிறான். கவர்தலும் ஒழித்தலும், இரக்கம் இரக்கமிலாமலும், விரும்புதல் வெறுத்தல்என இரு நிலைத் தன்மை உடையவன் என்று பெளத்தம் கருதுகிறது. 
காமனைப் பொருத்தவரையில் இந்து-பெளத்த கருத்துவேருபாடுகள் இவை என்று பட்டியலிடலாம்
இவை ஆங்கில மொழி பெயர்ப்பில் உள்ள கருத்துக்கள்
என்னால் முடிந்த அளவுக்குத் தொகுத்திருக்கிறேன்
இன்னும் தமிழ் காமனைப்பற்றிய குறிப்பைத்தொகுக்கவில்லை.  விரைவில் தொகுத்து வெளியிடுவேன்
நாகராசன்

2011/3/5 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
kamadeva.jpg
kamadevasiva.jpg
venus putto.jpg
kamadevarati.jpg

வேந்தன் அரசு

unread,
Mar 5, 2011, 10:56:51 AM3/5/11
to mint...@googlegroups.com

4 மார்ச், 2011 10:35 pm அன்று, பேரா.நாகராசன் <radius.co...@gmail.com> எழுதியது:

வடக்கிலும் தெற்கிலும் வாழ்வியல் மரபில் நீக்கமற நிறைந்துருப்பது காமம்
வடக்கே காம லோகா தெற்கே காமத்துப் பால்
காமம் என்ற சொல் இரண்டுக்கும் பொதுவா அல்லது தனித் தனி வேற்சொற்களா
காமத்திற்கு ஆரம்பம் வத்சாயனரிலிருந்தோ அல்லது அதிவீர ராம பாண்டியர்டில் இருந்தோ தொடங்குவதில்லை
சன்க கால்த்திலிருந்தும் வேத காலத்தில் இருந்தும் தொடக்கம்
காமன் முதன்மைக் கடவுள்
இந்திய சமயங்கள் அனைத்திலும் காமனுக்கோர் இடமுண்டு
Sensual pleasure and sexula pleasure என்ற நுண்ணிய வேறுபாட்டை இந்திய மரபு வலியுறுத்துகிறது
இது பற்றி மேலும் சில தகவல் தேடிக்கொண்டிருக்கிறேன்

ஆனால் காமம் செப்பாது கண்டது மொழியணும்
 
--
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

Reply all
Reply to author
Forward
0 new messages