கல்லால மரம் பற்றி நான் ஏதும் அறியேன். ஓரிரு வரிகள் எழுதுங்கள்.ஆனால் , இது கல்மரமாக இருக்க வாய்ப்பில்லை. நம் நாட்டில் இதுவரை அறியப்பட்ட கல்மரங்கள் அனைத்துமே கிடைநிலையிலேயே கிடைத்திருக்கின்றன. அதிலும் கிளைகளுடன் எதுவுமே இல்லை. ஆதலின் கல்லால மரம் , கல்மரமாக இருக்க இயலாது.--2018-01-06 17:08 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:நம் புராணங்கள் தட்சிணாமூர்த்தியை கல்லால மரத்தின் அடியிலிருந்து உபதேசிப்பதாகக் காட்டுகின்றன.கல்லாலமரம் =???நீங்கள் சொல்லும் கல்மரத்துடன் தொடர்புடையதா ?தெரியவில்லை.கண்மணி--2018-01-06 11:55 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:தெளிவு படுத்தியமைக்கு நன்றி திரு.சம்பந்தன் அவர்களே .கண்மணி2018-01-06 8:58 GMT+05:30 Singanenjam Sambandam <singa...@gmail.com>:நன்றி
சதுரகிரி, கரிவலம் வந்த நல்லூர், மதுரை, திருநெல்வேலி போன்ற திருக்கோவில்களின் இலிங்க வடிவங்கள் பற்றி அறிந்தேன் , மகிழ்ச்சி. இவையெல்லாம் கள்ளி, கடம்பம், மூங்கில் போன்ற மரங்களின் / புதர்களின் அடிப்பாகமாக இருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால் இவை கல் மரங்கள் ஆகா.
Petrification எனும் நிகழ்வின் போதே மரம் கல்லாக மாறுகிறது.(Petra என்றல் கல் அல்லது பாறை என்று பொருள் - Petra oleum (oil)) .கல்மரங்கள் படிவப்பாறைகளில் மட்டுமே உருவாகும். நீங்கள் குறிப்பிட்டுள்ள நான்கு இடங்களில் எந்த இடத்திலும் படிவப் பாறைகள் (Sedimentary rocks) இல்லை. எனவே இங்குள்ள இலிங்கங்கள் கல்மரங்கலாக இருக்க வாய்ப்பில்லை. மாறாக மரங்களின் / புதர்களின் அடிப்பாகமாக இருக்க வாய்ப்புகள் உண்டு.
Siliconisation என்பது தவறு. சிலிகா வேறு, சிலிகான் வேறு. சிலிசிஃபிகஷன் என்ற சொல் உண்டு ; ஆனால் அதன் பொருள் வேறு. கல்லாய் சமைதல் என்பதை Petrification என்றுதான் எழுத வேண்டும்.
வணக்கம்.
மாற்று கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
--2018-01-05 17:50 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:திரு.சம்பந்தன் அவர்களிடம் தெளிவிற்காக கேட்கும் ஐயம் இது.நம் கோயில்களில் உள்ள சுயம்பு லிங்கங்கள் ---மரங்களின் படிவங்கள் தானே ?கல்மயமான (siliconisation)மரத்துண்டுகள் வடிவத்தால் லிங்கமாக இருப்பின் அவை வழிபாட்டிற்குரியன என்பது நம் பண்பாடு.அதனால் அவற்றைப் பற்றி புராணங்கள் தோன்றி விட்டன.எடுத்துக் காட்டாக ---சதுரகிரி மலையிலுள்ள மகாலிங்கம்"சதுரகிரி மலையோரம் சாஞ்சிருக்கும் திருகுகள்ளி ----திருகுகள்ளிப் பூவெடுக்க திரிஞ்சேனடி சிலகாலம் "---சித்தர் பாடல் .அது மரத்துண்டின் படிவம் என்று புரிந்து பாடிய பாடல் தானே இது.ஏனென்றால் ---மகாலிங்க மலைக்கு நேரில் சென்று பார்த்த போது தான் பாடலடியின் முழுப் பொருளும் புரிந்தது.அந்த லிங்கமே சாய்ந்து தான் உள்ளது.அது சாய்ந்து வளர்ந்திருந்த ஒரு மரத்தின் படிவம்---அதை அவ்விடத்திலிருந்து நீக்கவும் முடியாது.---அதுகள்ளிமரத்தின்படிமம்என்றுஅனுமானித்திருந்தேன்கரிவலம் வந்த நல்லூரில் இருக்கும் சுயம்பு லிங்கம்---ராஜபாளையத்திலிருந்து சங்கரன்கோயில் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது.இந்த லிங்கத்தின் தனித்தன்மை என்னவென்றால் ---நெற்றிப் பகுதியில் வெண்மையாக பொட்டு வைத்தது போல் ---இயற்கையாக விளைந்திருக்கும்மீனாட்சி அம்மன் கோவிலில் இருக்கும் ஸ்வாமி சந்நிதியின் லிங்கம் ---கடம்பமரத்தின் படிவம் என்றுதானே கருதுகின்றனர் (ஏ .வி .ஜெயச்சந்திரன் -The Madurai Temple Complex)இந்த லிங்கத்தை அவ்விடத்திலிருந்து அகற்ற முடியாது என்பதால் தான் அதன் கருவறை சில நூறறாண்டுகள் பூட்டப்பட்டு வெளியே உள்ள முதல் திருச்சுற்றில் ஒரு போலி லிங்கத்தை வைத்து ஏமாற்றி பிற சமயத்தாரிடம் இருந்து காப்பாற்றினர் .கடம்பவனக் காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட லிங்கம் என்று மதுரைத் தலபுராணம் கூறுகிறது.திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள லிங்கம் ---மூங்கில் காட்டில் கண்டு வழிபடப்பட்ட லிங்கம்.---தலபுராணம் அப்படித்தானே சொல்கிறதுஒருவேளை நீங்கள் சொல்லும் கல்மரங்களினின்று இவை வேறுபட்டவையா?.கண்மணி--2018-01-05 15:39 GMT+05:30 Singanenjam Sambandam <singa...@gmail.com>:--தமிழ்நாட்டில் கல்மரங்கள் .......ஒரு சிறு குறிப்பு
(பாகம் – 1 : அரியலூர் – பெரம்பலூர் – திருச்சி பகுதி)
கல்மரம் என்பது ஒரு தொல்லுயிர் எச்சம் (FOSSIL). மரம் எப்படிக் கல்லாக மாறுகிறது ? சாதரணமாக மரம் மண்ணில் புதையுண்டு போகும்போது, மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளால் அவை மட்கிப் போகும் வாய்ப்புகளே அதிகம். மாறாக, அந்த மரம் புதையுண்ட இடத்தில் மேலும் மேலும் படிவங்கள் படியும் போது அதனால் ஏற்படும் அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக மரம் தகன நிலைக்கு உட்பட்டு குமைந்துபோய் கரியாக மாறக்கூடும். நிலக்கரி, பழுப்பு நிலக்கரிப் படிவங்கள் இப்படித்தான் உருவாகியுள்ளன. இதனை CARBONAISATION அல்லது கரியாக மாறுதல் எனக் குறிப்பிடலாம். மூன்றாவதாக மண்ணில் புதைந்த மரம் மட்கிப்போகும் முன்பே அந்த மரத்திலுள்ள செல்களின் இடைவெளிகளிலும், செல் அடுக்குகளின் இடைவெளிகளிலும் , நிலநீர் புகுந்து விடுகிறது. அந்த நீரில் கரைந்துள்ள சிலிகா அந்த இடைவெளிகளை ஆக்கிரமித்து தாவரப் பொருளான செல்லுலோசை இடமாற்றம் செய்து விடுகிறது. இந்த நிகழ்வின் போது மரத்தின் அமைப்பு உருக்குலையாமல் அப்படியே காப்பாற்றப் படுகிறது. மரம் கல்லாக சமையும் இந்நிகழ்வு “PETRIFICATION” (PETRA என்றால் பாறை என்று பொருள்) என்று அழைக்கப்படுகிறது. நிலநீரில் கரைந்துள்ள கனிமங்களின் தன்மைக்கேற்ப கல் மரத்தின் நிறம் மாறுபடுகிறது.
கல்மரம் உள்ளிட்ட பலவகையான தொல்லுயிர் எச்சங்கள் அரியலூர், விருதாச்சலம், புதுச்சேரி, திருப்பெரும்புதூர், சிவகங்கை போன்ற பகுதிகளில் நெடுங்காலமாகவே கிடைத்து வருகின்றன. நம் முன்னோர்கள் நிச்சயமாக இவற்றைக் கண்டிருப்பார்கள். ஆனால் இவற்றைப் பற்றியக் குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை. அரியலூர் மாவட்டத்தில் வாரணவாசி என்று ஒரு கிராமம். வாரணம் என்றால் யானை; சோழ மன்னர்களின் யானைப்படை இங்கேதான் இருந்தது; அதனால்தான் இந்தப் பெயர் என்று சிலர் கருதுகிறார்கள் . மாறாக, வாரணம் என்றால் கடல்; கடலில் வாசம் செய்யும் உயிரினங்களின் படிமங்கள் இங்கே உள்ளதால் இது வாரணவாசி என்று அழைக்கப்படுகிறது என்பாரும் உளர். இதைத் தவிர இலக்கியங்களிலோ அல்லது வரலாற்று செய்திகளிலோ தொல்லுயிர் எச்சங்கள் பற்றிய குறிப்புகள் இல்லை.
1840 ஆம் ஆண்டி வெளிவந்த MADRAS JOURNAL OF LITERATURE AND SCIENCE (Vol: 12) எனும் இதழில், ‘Observations on the fossilised beds near Pondicherry and the district of South Arcot’ எனும் தலைப்பில் C.T, Kaye எனும் அறிஞர் எழுதியுள்ள கட்டுரையில் தன்னிடம் திருச்சி பகுதியிலிருந்து கிடைத்த கல்மரத்துண்டு ஒன்று இருப்பதாக மகிழ்சசியோடு குறிப்பிடுகிறார். இதுதான் இந்தப் பகுதியில் கிடைக்கும் கல்மரங்கள் பற்றிய முதல் பதிவு.
இந்திய புவியியல் துறை 1851 ஆம் ஆண்டு துவங்கப்பட்டாலும் ஏழு ஆண்டுகள் கழித்துதான் தமிழகத்தில் முறையான புவியியல் ஆய்வுகள் துவங்கின. தொல்லுயிர் எச்சங்கள் அறியப்பட்ட பகுதிகளான புதுச்சேரி, விருதாச்சலம், அரியலூர் போன்ற பகுதிகளில் Henry Francis Branford அவர்களின் தலைமையின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவரது ஆய்வறிக்கை இந்திய புவியியல் ஆய்வுத்துறையின் நினைவேடுகளில் (Memoirs of Geological Survey of India , Vol. IV 1862) வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், சாரதாமங்களம், கருடமங்களம், ஆணைப்படி போன்ற பகுதிகளில் கல்மரத்துண்டுகள் கிடைப்பதாகக் குறிப்பிடும் Blandford, மழவை பகுதியில் சுமார் எட்டைரை அடி நீள கல்மரத்துண்டு ஒன்றைக் கண்டதாகவும் ஆனால் இது சுமார் 25 அடி நீளமும் மூன்றடி விட்டமும் கொண்ட கல்மரத்தின் எஞ்சிய பகுதியே என்றும் எழுதியிருக்கிறார். தொடர்ந்து, வேறொரு பகுதியில் சுமார் 6௦ அடி நீளமுள்ள கல்மரம் ஒன்றினைக் கண்டதாகவும் இவர் பதிவு செய்துள்ளார். இவர் குறிப்பிடும் இந்த 6௦ அடி நீளமுள்ள மரம் எங்கே உள்ளது என்று தெரியவில்ல.
இந்திய புவியியல் ஆய்வுத்துறைக்கு தலைமையேற்ற முதல் இந்தியர் எனும் பெருமை பெற்ற எம். எஸ். கிருஷ்ணன் தனது Geology of India and Burma (1942) எனும் நூலில் சாத்தனூரில் தான் கண்டுபிடித்த கல்மரம் 86 அடி நீளமும் 56 அங்குல விட்டமும் கொண்டிருந்ததாகக் குறிப்பிடுகிறார். கருடமங்களம் கிராமத்திற்கு தென்கிழக்கே நிறைய கல்மரத்துண்டுகள் கிடைப்பதாக அவர் பதிவு செய்திருக்கிறார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு, சாத்தனூரில் இருந்து சுமார் 17 கி.மீ. தூரத்தில் , திருச்சி மாவட்டம், லால்குடி தாலுக்காவில் தப்பை கிராமத்திற்கு வட கிழக்கே (வரகுப்பை கிராமத்திற்கு தெற்கே), 1.24 மீ. நீளமும் 80 செ.மீ. விட்டமும் கொண்ட கல்மரம் ஒன்றை இந்திய புவியியல் ஆய்வுத்துறையைச் சேர்ந்த புவியியலாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்தப் பகுதி அரியலூரிலிருந்து 32 கி.மீ. தூரத்திலும், பெரம்பலூரிலிருந்து 38 கி.மீ. தூரத்திலும் உள்ளது.
இவையனைத்தும் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன் , கிரிடேஷியஸ் காலத்தில் வாழ்ந்த கனிதரா/ பூக்காத தாவர வகையை சார்ந்த CONIFER MARANGAL குறிப்பிடத்தக்கது.
கல்மரங்கள் மிக அரிதாக பூமியின் சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கின்றன. இவை பூமியின் வரலாற்றுப் புத்தகத்தின் ஏடுகள். இவற்றை முறையாக பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.