திருப்பதி ஸ்தலபுராணம்

96 views
Skip to first unread message

Thamizth Thenee

unread,
Dec 15, 2010, 8:27:10 PM12/15/10
to மின்தமிழ்
ஏற்கெனவே திருப்பதி பற்றி அறிந்தோர் இருப்பர், ஆயினும் என்னுடைய
மனத்ருப்திக்காக என்னுடை பாணியில் திருப்பதியைப் பற்றிக் கூற ஆசை

அதனால் “திருப்பதி மகாத்மியம்” என்னும் இத்தொடரை எழுதுகிறேன்

” திருமலை திருப்பதி “


(சூதக மஹரிஷி தன் குருவான வியாசரை மனமார வேண்டிக்கொண்டு வேங்கடேச
பெருமானின் அவதார மஹிமையை கூறுகிறார், முனிவர்கள் அவர் கூறும் வேங்கடேச
மஹாத்மியத்தை பக்தி ஸ்ரத்தையோடு கேட்கின்றனர், நாமும் சற்றே செவி
மடுப்போமே)


Half Way Opening :-

நாரதர் தன்னுடைய தந்தையைப் பார்க்க பிரும்மலோகம் வந்தார், ஆம்
பிரும்மாவின் புதல்வர் நாரதர். நான்முகன் அமர்ந்திருக்க பக்கத்திலே
சரஸ்வதி தேவி வீணையில் சாமகானத்தை இசைத்துக்கொண்டிருந்தாள். இந்திரன்,
அஷ்டதிக் பாலகர்கள், சப்த ரிஷிகளும் ,சூரியன் முதலான கிரகங்களும் அங்கே
இருந்தனர். நாரதர் தந்தைக்கும் தாய் சரஸ்வதிக்கும் முதல் வணக்கத்தை
தெரிவித்து மற்ற அனைவரையும் வணங்கினார்.

ப்ரம்மன் தன்னுடைய புத்திரனான நாரதரிடம் நாரதா நீ மிகவும்
புத்திசாலி எப்படியும் எடுத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வல்லவன்,
கலியுகத்தில் ஸ்ரீமன் நாராயணன் அவதரிக்க மாட்டார், ஆகவே எப்படியாவது
நாராயணனை கலியுகத்திலே அவதரிக்கச் செய்யவேண்டும்,அது உம்மால்தான்
முடியும் உன்னால்தான் நடக்கவேண்டும் என்றார்.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்னும் வாசகத்துக்கு ஏற்ப
பிரும்மதேவனின் வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்றுக்கொண்டு வணங்கிப்
புறப்பட்டார் நாரதர்.

நாரதர் தன்னுடைய வழக்கமான பாணியில் பணியை ஆரம்பித்தார். முதற்கட்டமாக
பல மஹரிஷிகள் ஒன்றாகக் கூடி புனிதமான கங்கைக் கரையில் ஒரு பெரும்
யாகத்தை செய்து கொண்டிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார், மஹரிஷிகளும்
நாரதருக்கு மரியாதை செய்து வரவேற்றனர். நாரதர் அவர் வேலையைத்
தொடங்கினார். ஆமாம் யாரை நோக்கி இந்த யாகத்தை நடத்திக்
கொண்டிருக்கிறீர்கள்? இந்த யாகம் நடத்தினால் எந்த தெய்வம் பலனளிக்கப்
போகிறது என்று உங்களுக்கு தெரியுமா? மும்மூர்த்திகளில் இந்த யாகத்தை
ஏற்றுக்கொள்ளத் தகுதியானவர் யார், ஏற்றுக்கொண்டு சாந்த குணத்தோடு
மோக்‌ஷம் அருளவல்ல தெய்வம் யார் என்று தெரியுமா? அதை முதலில் சோதித்து
தெரிந்துகொள்ளாமல் யாகம் செய்து என்ன பயன் என்று வினவினார்

மஹரிஷிகளுக்கும் அது நியாயமாகப் பட்டது, ஒரு சாரார் எல்லாம் வல்ல ஈசன்
சிவனே என்றனர், இன்னொரு சாரார் எங்கள் நாராயணனைத் தவிர வேறு யாருக்கு
அந்தத் தகுதி உள்ளது என்றனர், இன்னொரு சாரார் உலகையே படைக்கும்
ப்ரும்மதேவனுக்கு இருக்கும் தகுதியே மிகவும் பெரியது என்றும்
வாதிட்டனர், யாகத்தின்மேல் உள்ள அக்கறை குறைந்து சமயச்சண்டை
ஆரம்பமானது !

சமயச் சண்டை தொடங்கினாலே அங்கு இறைஉணர்வு குன்றிப்போய் அரசியல்
தலையெடுக்குமே, ஆளாளுக்கு விவாதத்தை தீவிரப்படுத்தினர்,ஒரு கட்டத்தில்
எந்த இறைவன் பெரியவன் என்னும் வாதம் மறைந்து எந்த மஹரிஷி பெரியவர்?
எந்த மஹரிஷி சொன்னால் அனைவரும் தலைவணங்கவேண்டும் என்று விவாதம் திசை
திரும்பியது, சண்டை முற்றியது, அனைவருக்குமே சுயகௌரவம்தான் இறையை
விடப் பெரியது என்று தோன்றியது,

கூச்சலும் குழப்பமும் அவயைத் தள்ளிவைக்கும் அளவுக்கு போய்விட்டது, சரி
அவையைத் தள்ளி வைக்கலாம் யாகத்தையும் அல்லவா நிறுத்தி
தள்ளிவைக்கவேண்டும், அவை நடந்தாலும் நடக்காமல் இருந்தாலும் மக்களின்
நலன்கருதி செய்யும் யாகம் தடையில்லாமல் நடக்கவேண்டும் என்னும் எண்ணம்
கொண்ட நல்லவர்கள் அப்போது இருந்ததால் மக்கள் தப்பித்தனர், எப்போதும் தன்
நிலை இழக்காத சில பெரியவர்கள் அனைவரையும் அமைதியாக இருக்கச்சொல்லி
வேண்டிக்கொண்டு கலந்து ஆலோசித்து ஒரு நல்ல யோசனையைக் கூறினர்.

எந்த தெய்வத்திடம் சாந்த குணம் இருக்கிறதோ அந்த தெய்வத்தால் மட்டுமே
அமைதியான இனிமையான மோக்‌ஷத்தை அளிக்க முடியும், ஆகவே மும்மூர்த்திகளில்
சாந்த குணம் கொண்டவர் யாரென்று பரிசோதிப்போம், தகுதியானவரை நியமித்து
இந்த யாகத்தை அவருக்கு செய்து பலன் பெறுவோம் என்றனர், அனைவருக்கும்
அது சரியென்று மனதில்படவே ஒப்புக்கொண்டனர்,

அடுத்ததாக அப்படி மும்மூர்த்திகளையும் சோதிக்கும் திறன் கொண்டவர் யார்
என ஆராய்ந்து, நம் அனைவரிலும் இந்த செயலைச் செய்யத் தகுதியானவர்
பிருகு முனிவர் தான் என்று எல்லோரும் ஏகமனதாக ஒப்புக்கொண்டனர்.
பிருகு முனிவரும் மிகுந்த தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார்,

சரி இனி நம் வேலை எளிதே நிறைவேறும் என்னும் திருப்தியுடன் நாரதர்
புன்னகையுடன் நாராயண நாராயண என்று ஜபித்துக்கொண்டே ஆகாய மார்கமாக
செல்லத் தொடங்கினார் ஆமாம் அடுத்தடுத்து அவருக்கு வேலை இருக்கிறதே


அன்புடன்
தமிழ்த்தேனீ

Selva Murali

unread,
Dec 15, 2010, 9:18:57 PM12/15/10
to mint...@googlegroups.com
அய்யா மிக நல்ல பணி. 
இந்தக் கதையை திரு.மணிரத்தினம் பார்த்தால் உடனே பல கதைகளை உருவாக்கிவிடுவாரே :)

2010/12/16 Thamizth Thenee <rkc...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------------------------------------
India`s Leading Web Hosting Providers
www.rupeeshost.com
India`s First Cloud Hosting Provider
www.cloudlayer.in
----------------------------------------------------------

Krishnan S

unread,
Dec 15, 2010, 10:02:07 PM12/15/10
to mint...@googlegroups.com
அன்பு திரு, தமிழ்த்தேனீ அவர்களுக்கு,
வணக்கம்.
திருப்பதியின் பயணம் ஒரு ஆன்மீகம் பயணம்.
எல்லோரும் பயன் பெற இது ஒரு நல்ல தருணம்
அன்புடன்
கிருஷ்ணன்
சிங்கை

2010/12/16 Selva Murali <mural...@gmail.com>



--
எளியெனின் நன்றிகள்,
வணக்கம்
அன்பொடு,

கிருஷ்ணன்,
சிங்கை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/
http://singaporekovilgal.blogspot.com/

Tthamizth Tthenee

unread,
Dec 15, 2010, 11:44:06 PM12/15/10
to mint...@googlegroups.com
திருப்பதி மஹாத்மியம்  பாகம் 2
 
பிரும்மதேவன் தங்க அரியணையில் அமர்ந்திருந்தார்,ஒரு புறத்தில் மஹரிஷிகளும், தேவரிஷிகளும்,ராஜ ரிஷிகளும், மற்றொரு பக்கத்தில் கந்தர்வர்,கின்னரர், கருடர் முதலானோர்  அமர்ந்திருந்தனர்,பிரும்மதேவர் தருமோபதேசம் செய்துகொண்டிருந்தார், பிருகு முனிவர்  வேண்டுமென்றே சபைக்கு  மரியாதை தராமல், பிரும்மதேவனுக்கும் மரியாதை செய்யாமல் ஒரு இருக்கையில் சென்று அமர்ந்தார், அனைவருக்கும் அப்போதே விரோத பாவம் தொடங்கியது பிருகு முனிவர்மேல்,
 
பிரும்மாவுக்கு கேட்கவே வேண்டாம், ஒரு தலை இருந்தாலே கோபம் தலைக்கேறுமே, பிரும்மனுக்கு   நான்கு தலக்குமேறிற்று கோபம்.    பிருகு முனிவரே  உம்மை  எல்லாம் அறிந்தவர் ,த்ரிகால ஞானி என்று எண்னியிருந்தேன், சபையின் மரியாதைகூடத் தெரியாமல் இந்த பிரும்ம லோகத்தின் தலைவன் நானென அறிந்தும் எனக்கும் மரியாதை தராமல், அறிவிப்புமில்லாமல், அனுமதியும் இல்லாமல் வந்து ஆசனத்தில் அமருகிரீர்களே  இது முறையல்லவே!     உம்மை  தர்ம நியாயங்கள் தெரிந்தவர் என்று எண்ணியிருந்தேன்,  இப்போது புரிகிறது  நீர் ஒரு மூடர் என்று.  .இங்கே சபையில் இருக்கும் முனிவர்களை விட நீர் உயர்ந்தவரா?  மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக்கி விளையாடிய அத்திரி முனிவரை விட நீ உயர்ந்தவரா? இந்திரனுக்கே சாபம் கொடுத்த கௌதமரை விட நீர் உயர்ந்தவரா? ஜமதக்னி முனிவரை விட உயர்ந்தவரா  நீர்?    என்று கடுங்கோபத்துடன்  வினவினார் பிரும்மதேவன்
 
சாந்த குணம் இருந்தால் பிறர் புகழவேண்டும் என்று நினைக்க மாட்டார்களே, யார் தவறு செய்தாலும் இதமாக பதமாக எடுத்துச் சொல்லித்தானே திருத்த முயலுவார்கள்,இந்த பிரும்மதேவனுக்கு தான் என்னும் அஹங்காரம் இருக்கிறதே, இது போன்ற ராஜச குணம் உள்ளவரை எப்படி பரமன் என்று மதிக்க முடியும்  என்றெல்லாம் மனதுக்குள்ளே நினைத்துக்கொண்டு  பிரும்மனுக்கு பதிலும் கூறாமல் அங்கிருந்து  அகன்றார் பிருகுமுனிவர்.
கையிலாயத்தில் நந்தீஸ்வரர்,சண்டீஸ்வரர் போன்றோர் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டிருநதனர்,ஈசனும் உமையவளும்  தனித்திருந்தனர்.காவலர்கள் தடுத்தும் கேளாமல் சட்டை செய்யாமல் உள்ளே நுழைந்தார் பிருகுமுனிவர்.--
 
அங்கே  ஈசன் பார்வதியுடன் சரசமாடும் நோக்கில் இருந்தார்.அறிவிப்பே இல்லாமல் உள்ளே நுழைந்த பிருகுமுனிவரைக் கண்ட பார்வதி அம்மை வெட்கத்துடன் விலகினார்.
ஈசனும் பிருகு முனிவரைக் கண்டு சுதாரித்துக்கொண்டார்.  பிருகு முனிவரே  இது நியாயமா? தம்பதிகள் தனியே இருக்கும் இடத்துக்கு  அனுமதியில்லாமல் வரக்கூடாதென்று உமக்கு தெரியாதா? பிரும்மகுலத்தில் பிறந்து நீண்ட தவம் புரிந்தும் உனக்கு இன்னமும் தர்மம் எதுவென்று தெரியவில்லையே  தம்பதிகள் தனித்திருக்கும்போது  அவர்களின் அந்தரங்கத்தை பார்ப்பவனுக்கு  பாவம் வரும் எனத் தெரியாதா? நான் உன்னை சபிப்பதற்குள் இங்கிருந்து அகன்றுவிடு என்றார் முக்கண்ணும் சிவந்து.
 
பிருகு முனிவர் அங்கிருந்து வெளியேறினார்
துறவிகளுக்கெல்லாம் முதல்வன், ஆதிமுதற்கடவுளான இவரிடம் இவ்வளவு தாமச குணமிருக்கிறதே .இவரை எப்படி ஒப்புக்கொள்வது என்று நினைத்தபடி வைகுண்டம் நோக்கிப் புறப்பட்டார்.
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 
2010/12/16 Krishnan S <krishna...@gmail.com>

kalairajan krishnan

unread,
Dec 16, 2010, 2:46:54 AM12/16/10
to mint...@googlegroups.com
ஐயா தமிழ்த்​தேனியார் அவர்களுக்கு வணக்கம்,
தமிழ்ப்பாண​ரே நீவிர் வாழிய பல்லாண்டு,

திருப்பதி மஹாத்மியம் படித்து வருகி​றோம்,  முழுவ​தையும் கூறுங்கள், ஏழும​லையானின் க​தை​ அ​​னைத்​தையும் கேட்க ஆவலாய் உள்​ளோம்,

அன்பன்
கி.கா​ளைராசன்




--
​திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/

அன்னதானம் ​செய்வோம்,  கண்தானம் ​செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான் ஏற்றுக் ​கொள்கிறார்,

Tthamizth Tthenee

unread,
Dec 16, 2010, 10:10:39 AM12/16/10
to mint...@googlegroups.com
திருப்பதி மஹாத்மியம் -பாகம்  3.
 
வைகுண்டத்திலே ஸ்ரீமன் நாராயணன் ஆதிசேஷன்மேல் ஆனந்தமாக சயனித்திருக்க, திருமகள் அவருடையை திருவடிகளைஇதமாக பிடித்துவிட்டபடி இருந்தாள்.அருகே சென்ற  . ஸ்ரீமன்  நாராயணனுடைய பாதம்  தங்கள் மேல் படாதா என்று ஏங்கிக்கொண்டு  உலகமே காத்துக்கிடக்க,  பிருகு முனிவர் அந்த ஸ்ரீமன் நாராயணனின் மார்பிலே  அதுவும் மஹாலக்‌ஷ்மி இருக்கும் திருமார்பிலே பிருகு முனிவர்   எட்டி ஒரு உதைவிட்டார்.
யார் யாருக்கு  என்ன செய்தால் கோவம் வரும்  என்று தெரிந்தும் நாம் பல நேரங்களில்  அவர்களுக்கு கோபம் வரவேண்டும் என்பதற்காகவே  சில காரியங்களைச் செய்கிறோமே ,  அதைப் போல முற்றும் உணர்ந்த பிருகு மஹரிஷி தெரிந்தே, வேண்டுமென்றே  செய்தார் இந்தச் செயலை. கோபப்படுத்தி  அப்படியும் கோபமடையாமல் சாந்த சொரூப்பிய்யய் இருக்கும் தகுதியை சோதிக்க வந்தவர்தானே  அவர் .அவருக்குத் தெரியாதா  எப்படி நடக்கவேண்டும் என்பது.
 
ஆதிசேஷன் மேலிருந்து  கீழே இறங்கி  பிருகு முனிவரின் காலைப் பிடித்துக்கொண்டு  தங்களைப் போன்ற தவசியின் பாதம்பட நான் என்ன தவம் செய்தேன்  , என்று கூறிக்கொண்டே  பிருகு முனிவரின் காலில்  இருந்த (கண்ணை அப்படியே) அழுத்திவிட்டு
என் போன்ற கடினமான தேகத்தை  உதைத்ததால் உங்களுடைய மிருதுவான கால்கள் வலிக்குமே  என்கிற கவலைதான் எனக்கு என்று இதமாக கூறி அவரை ஆசுவாசப்படுத்தினார் ஸ்ரீமன் நாராயணன்
 
இப்போது  பிருகுமுனிவர்  நாராயணா எல்லாம் நீ அறிவாய், ஆனால்  உன் திருமேனியை உதைத்து நான் பாவம் சேர்த்தேனே,  நான் எப்படி இந்தப் பாவத்தை நீக்கிக்கொள்வேன், என்று வருந்தினார்,  பிருகுமுனிவரே  ஒரு காரண காரியத்தோடுதான் எல்லாமே  நடக்கிறது ,உங்கள்மேல் தவறில்லை நீங்கள் மனம் வருந்தவேண்டாம், என்று ஆறுதல் கூறி  பிருகு முனிவரை அனுப்பினார்.
 
பிருகு முனிவரும் யாகத்தின் பலனை ஏற்றுக்கொண்டு  அனைவருக்கும் மோக்‌ஷம் கொடுக்கக் கூடியவன் நாராயணனே  என்பதைப் புரிந்துகொண்டு மிகவும் மகிழ்ச்சியாக மீண்டும் கங்கைக் கரைக்கு வந்து  யாகத்தை முடித்தார்.
 
ஆனால்  தான் இருக்கும் மார்பில் நாராயணனையும், தன்னையும் மதிக்காமல் பிருகுமுனிவர் உதைத்தும்  அவரை கண்டிக்காமல்  தன்னையும் அவமானப்படுத்திவிட்டார். மனைவியை அவமானப்படுத்தியவன் யாராக இருந்தாலும் மனைவியின் மரியாதையைக் காக்கவேண்டியது கணவனின் கடமை,அந்தக் கடமையிலிருந்து  வழுவிய நாராயணனிடம் இனி இருக்க மாட்டேன் என்று  கோபம் கொண்டு  பிருகு முனிவர் ஒரு பிராமணராக இருந்தும் அவளை அவமானப்படுத்தியதால் பூலோகத்தில் இருக்கும் பிராமணர்கள் வேதமுறைகளைக் கைவிட்டு, கல்வியை விற்றுப்பிழைக்கும் இழி செயலைச் செய்யட்டும்  என்று சாபம் கொடுத்துவிட்டு  மஹாலக்‌ஷ்மி நாராயணனைப்  பிரிந்து பூலோகம் வந்து  கோதாவரி நதிக்கரையினில் “கொல்லாபுரம் ‘ என்னும் இடத்தில்  ஒரு குடிசையை நிர்மாணித்து  அதிலிருந்து தவம் செய்ய ஆரம்பித்தாள்
 
மனைவியின் பிரிவால் வாடிய நாராயணன் மிகவும்வருந்தி எப்படியும் திருமகளைக் கண்டுபிடித்து அவளுடன் சேர விருப்பம் கொண்டு அவளைத்தேடி பூலோகம் வந்து,காடுமேடெல்லாம் சுற்றி திரிந்தலைந்து, மழையில் நனைந்து,வெய்யிலில் காய்ந்து, கண்ணில் படும் வாயில்லாத மிருகங்கள், பறவைகள் எல்லோரிடமும் விசாரித்தும். மரம் செடிகொடிகள், புல் பூண்டுகள் போன்றவற்றையெல்லாம் கேட்டும்  பலனில்லாமல் திருமகளைக் காணமுடியாமல் ஏங்கி (சேஷாத்திரி) என்னும் திருவேங்கடம் வந்து சேர்ந்தார் ஸ்ரீமன் நாராயணன்.
 
தொடரும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 
2010/12/16 kalairajan krishnan <kalair...@gmail.com>

--

Tthamizth Tthenee

unread,
Dec 16, 2010, 11:06:40 AM12/16/10
to mint...@googlegroups.com
நன்றி  சிங்கை கிருஷ்ணன் அவர்களே
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
2010/12/16 Krishnan S <krishna...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Dec 16, 2010, 11:07:30 AM12/16/10
to mint...@googlegroups.com
அப்படியாவது  நல்ல கதைகள் உருவானால் சரி
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
2010/12/16 Selva Murali <mural...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Dec 16, 2010, 11:08:16 AM12/16/10
to mint...@googlegroups.com
வணக்கம் திரு காளை ராஜன் அவர்களே
 
தொடர்ந்து எழுதுகிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/12/16 kalairajan krishnan <kalair...@gmail.com>

--

Tthamizth Tthenee

unread,
Dec 17, 2010, 1:17:51 AM12/17/10
to mint...@googlegroups.com
திருப்பதி மகாத்மியம்  பாகம் 4
 
திருவேங்கடத்துக்கு  சேஷாத்திரி  என்னும் பெயர் எப்படி வந்தது ?

ஒரு முறை ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் யார் பலசாலி என்பதில் ஒரு தகராறு வந்தது,வழக்கு நாரதரிடம் வந்தது. நாரதர் இருவரையும் பார்த்து நீங்கள் இருவருமே  சமமான பலசாலிகள்தான், ஆனால் உங்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்பதை  அறிய நான் ஒரு யோசனை சொல்கிறேன்.   ஆதிசேஷனே  நீ  மேருபர்வதத்தின் குமாரரான ஆனந்த பர்வதத்தை வலம் வருவாயாக,!  வாயு தேவனே நீ ஆதிசேஷன் வலம் கொண்ட ஆனந்த பர்வதத்தை உன் வலிமையால் அசைத்து நகர்த்து, இருவரில் யார் இந்த செயலைச் செய்கிறீர்களோ  அவரே பலசாலி  என்று ஒப்புக்கொள்வோம்  என்றார் ,இருவரும் கட்டுப்பட்டனர்.
 
 
ஆதிசேஷன் மிக வலிமையாக ஆனந்தபர்வதத்தைப்   பற்றியிருந்தான், வாயுதேவனோ  அந்த பர்வதத்தை  அசைக்க புயலாக வீசிக்கொண்டிருந்தான்,இந்த வலிமைப் போராட்டத்தில்  அனைத்து உயிர்களும் நடுங்கின, இதைக்கண்ட இந்திரன் ஆதிசேஷனிடம் வந்து  உங்கள் சண்டையால் உயிரினங்கள் பாதிக்கப்படலாமா  ,ஆகையால் இந்த போராட்டத்தைக் கைவிடுங்கள் என்று வேண்டினார்,  
 
ஆதிசேஷன் சற்றே மனமிறங்கி தன் பிடியைத் தளர்த்தினான், இந்த நேரத்தை மிகச்சரியாக வாயுதேவன் உபயோகித்துக்கொண்டு அந்த ஆனந்த பர்வதத்தை தூக்கி எறிந்தார் தன் வலிமையால்,  வாயுதேவன் வெற்றி கண்டான், ஆனால் ஆதிசேஷனின் பிடியிலிருந்து தூக்கி எறியப்பட்டு  பூலோகத்தில் இருந்த ஆதிவராக ‌ஷேத்திரம் என்னும் இடத்தில் விழுந்தது.  அதனால் அந்த ஆனந்த பர்வதத்துக்கு  சேஷாத்திரி  என்னும் பெயர் வந்தது.
 
 
ஸ்ரீமன் நாராயணன் .லக்‌ஷ்மிதேவியைத் தேடிக்கொண்டு சேஷாத்திரி மலையை வந்தடைந்தார்.,சக்தி இல்லாத சிவம் போல் மிகவும் சோர்வாக இருந்தார்,அப்படியே தளர்ந்து ஒரு புளிய மரத்தினடியில் இருந்த பாம்புப் புற்றுக்குள்  ஓய்வெடுக்கலாம்  என்று உள்ளே போனார்.  ஆக திருமகள் கொல்லாபுரத்திலும், நாராயணன் சேஷாத்திரி மலையில் பாம்புப் புற்றிலும்  இருக்க வைகுந்தமே சோபை இழந்தது,
 
நாரதர் சத்திய லோகம் சென்று தன்  தந்தையான பிரும்மாவிடம் தந்தையே நீங்கள் கூறியபடி செய்தேன், இப்போது  நாராயணன் பாம்புப் புற்றிலே சக்தியற்றுக் கிடக்கிறார்,அவருக்கு  உணவளிக்க ஏதேனும் ஏற்பாடு செய்யுங்கள் என்றார்.  பிரும்ம தேவனும் கையிலாயம் சென்று ஈச்னாரிடம் நடந்த அனைத்தையும் கூறி நாம் இருவரும் பசுவும் கன்றுமாக அங்கே சென்று நாராயணனுக்கு உணவளிப்போம்  என்றார்.
 

இருவரும்  முதலில் கொல்லாபுரம் சென்று திருமகளைப் பார்த்து உங்கள் கோபத்தின் விளைவைப் பார்த்தீர்களா? நாங்கள் இருவரும் பசுவும் கன்றுமாக வரப்போகிறோம், நீங்க இடையர்குலப் பெண்மணிபோல் வாருங்கள் .நாராயணனுக்கு  உணவளிப்போம் என்றனர்.
பிரும்மதேவன் பசுவாகவும் ,ஈசனார் கன்றாகவும், மஹாலக்‌ஷ்மி இடைப்பெண்ணாகவும் உருவெடுத்து சோழ அரசனின் தலைநகரான சந்திரிகிரியை அடைந்தனர்.
 
சோழனும் பட்டத்து ராணியும்  இந்த பசுவையும் கன்றையும் பார்த்து  அவர்களின் தேஜசைக் கண்டு வியந்து திருமகளிடமிருந்து  விலைக்கு பெற்றுக்கொண்டனர்.   திருமகள் தான்வந்த வழியே திரும்பி கொல்லாபுரம் அடைந்தாள்.  அரண்மனையில் இருந்த பசுவின் பாலை ராணி தன் குழந்தைக்கு கொடுக்க ஆசைப்படவே ஜாக்கிறதையாகப்  பார்த்துக் கொள்ளும்படி இடையர் தலவனிடம் கூறினார்கள்,ஆனால்  அந்தப் பசு   அரண்மனையில் பால் கொடுக்கவே இல்லை  என்னகாரணம்  என்று தெரியாமல் இடையன் குழம்பிக்கொண்டிருந்தான்.  ராணி  அவனை அழைத்து  கேட்டவுடன் நடுங்கிப்போய்  மகாராணி,   இந்தப் பசு பால் கொடுப்பதில்லை என்றான், என்ன பொய் சொல்கிறாயா ,நீ  யாருக்கேனும் விற்று விடுகிறாயா?  நாளை இந்தப் பசுவின் பாலைக் கறந்து கொண்டு வராவிடில் தண்டிப்பேன் என்றாள்.

மறுநாள் வழக்கம் போல அந்தப் பசு சேஷாத்திரி மலைக்கு சென்றவுடன்  அந்தப் புற்று இருக்குமிடத்தை நோக்கிச் சென்று  அதன்மேல் பாலை பொழிந்தது. இதைக்கண்ட இடையன் ஓ   நீ இப்படிச்செய்துதான்  என்னை ஏமாற்றுகிறாயா? நான் உன்னால் மகாராணியிடம் மாட்டிக்கொண்டு  அவதிப்படுகிறேன், என் தலைக்கே  உலை வைத்துவிட்டாயே  என்று கூறிக்கொண்டே   தன் கைக்கோடாரியால் அந்த பசுவை வெட்ட வந்தான்,
 
தனக்கு உதவி செய்த பசுவைக் காக்க நாராயணன் அங்கே வந்தார்,அவர் தலையில் வெட்டு விழுந்தது, ரத்தம் பீரிட்டது,இதைப்பார்த்த இடையன் மயங்கி விழுந்தான். இவர்களைக் கண்காணிக்க அரசனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  பணியாளன் நடந்ததை அப்படியே அரசினிடம் கூறினான்.ஆச்சரியமான  அரசன் அங்கே விரைந்து வந்து பார்க்கையில் இடையன் மயங்கி இருந்தான்.     நாராயணன்   தலையிலிருந்து குருதி வழிந்துகொண்டிருந்தது.
ஏற்கெனவே  லக்‌ஷ்மியைப் பிரிந்து இருந்த பகவான் நாராயணன் சோழ அரசனை நீ பூதமாக மாறக்கடவாய்  என்று சபித்தார்,
 

பக்கத்திலே லோகமாதாவான  லக்‌ஷ்மி இருந்தபோது சாந்தமாக இருந்த நாராயணனே  அவள் இல்லாத தருணத்திலே கோபமடைந்தார்  என்றால் அது இயல்புதானே!
தாயார் இருக்கும் போது ராமாவதாரத்திலே  தன்னையே தவறான எண்ணத்தில் அணுகிய காகாசுரனிடம் கூட  இரக்கம் கொண்டு   தன் காலில் வந்து விழுந்த  அவன் தலையை  கருணையோடு ஸ்ரீராமனின் பாதத்தருகே நகர்த்தி  அவனை மன்னிக்க சொல்லி ஸ்ரீராமனிடம் கூறினாள் சீதா தேவித்தாயார்,  அதனால்தானே  தாயார் மூலமாக  தந்தையிடம் அணுகுகிறோம்.
 
சோழ மன்னன்  தவறு நேர்ந்து விட்டது  ஆகவே தன்னை மன்னித்து  சாபத்திலிருந்து விடுவிக்க இறைஞ்சினான்  .நாராயணன்   மனமிறங்கி  மன்னனே  நான் கொடுத்த சாபத்தை  திரும்பப் பெறமுடியாது,ஆகவே  நீ சோழவம்சத்தில் ஆகாசமன்னன்  என்னும் பெயரோடு வாழுவாய், அப்போது உன் மகளை  எனக்குத் திருமநம் செய்வித்து எனக்கு ஒரு வஜ்ரக்ரீடத்தை  அளிப்பாய், அந்தக் க்ரீடத்தை ஒவ்வொரு வெள்ளியன்றும் நான்அணீவேன்  ,
அப்போதுதான்  இந்த  பூத உரு மறையும் என்றார்,மன்னனும் சரி என்று வணங்கினான்
 
மயங்கி இருந்த இடையன் எழுந்தான் , நாராயணா  எனக்கு கண்பார்வை போய்விட்டதே  உன்னை எப்படிக் காண்பேன் என்று கதறினான், கவலைப்படாதே நான் இந்த சேஷாத்திரி மலையில் அவதரிக்கப் போகிறேன், அப்போது  என்னைப் பார்க்க உன் பார்வை கிடைக்கும்  என்று கூறி விடை பெற்றார் நாராயணன். இது இப்படி இருக்கட்டும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
.
 

 
2010/12/16 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

kalairajan krishnan

unread,
Dec 18, 2010, 1:34:31 AM12/18/10
to mint...@googlegroups.com
ஐயா தமிழ்த்​தேனி அவர்களுக்கு வணக்கம்,


2010/12/16 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
திருப்பதி மகாத்மியம்  பாகம் 4
 
திருவேங்கடத்துக்கு  சேஷாத்திரி  என்னும் பெயர் எப்படி வந்தது ?
 
ஆதிசேஷன் சற்றே மனமிறங்கி தன் பிடியைத் தளர்த்தினான், இந்த நேரத்தை மிகச்சரியாக வாயுதேவன் உபயோகித்துக்கொண்டு அந்த ஆனந்த பர்வதத்தை தூக்கி எறிந்தார் தன் வலிமையால்,  வாயுதேவன் வெற்றி கண்டான், ஆனால் ஆதிசேஷனின் பிடியிலிருந்து தூக்கி எறியப்பட்டு  பூலோகத்தில் இருந்த ஆதிவராக ‌ஷேத்திரம் என்னும் இடத்தில் விழுந்தது. 
ஆகா அற்புதமான ஒரு புவியியல் உண்​மை​யை முனிவர்கள் கூறியுள்ளனர்,
திரு​வேங்கடம​லையானது பூமியிலிருந்து உருவானது அல்ல,
அது ஒரு விண் ​பொருள், மண்ணிற்கு வந்துள்ளது,
ஐயா,நன்றியு​டை​யேன்

அன்பன்
கி.கா​ளைராசன்

செல்வன்

unread,
Dec 18, 2010, 3:07:22 AM12/18/10
to mint...@googlegroups.com
திருப்பதி கோயிலுக்கு நான் மூன்றுதரம் போயிருக்கிறேன்.

முதல்தரம் போனபோது நான் சிறுகுழந்தை.இரண்டாவது,மூன்றாவது தடவைகளில் போனபோது கூட்டம் இருந்தாலும் அதை எல்லாம் தாண்டி தரிசனம் செய்துமுடித்து, திட்டமிட்டபடி அனைத்து இடங்களையும் பார்க்க முடிந்தது.திருப்பதி என்றால் கூட்டம் இருக்கதான் செய்யும்.அதை எல்லாம் தாண்டி,சிறு வசதிகுறைவுகளை பொறுத்து கொண்டு வருவதுதான் பக்தர்களுக்கு சிறப்பு.

நான் கோவையில் இருந்தபோது விஞ்சு இருந்தாலும் நடந்தே தான் பழனிமலை ஏறுவேன்.பழனியிலும் கூட்டம் அலைமோதும்.தரிசனம் சிரமமான காரியம் தான். கோவை அருகே பாலமலை என்ற வைணவதலம் உண்டு.ஏற மிகவும் கடினமான,சிரமமான மலை.மலை அடிவாரத்துக்கு போகவே மூணு மைல் நடக்கணும்.மலை மேல் ஏறுவது மிக சிரமான காரியம்.பல இடங்களில் பாதையே இல்லை.அதை எல்லாம் தாண்டி தான் மலை ஏறுவேன்.கூட என் அம்மா, பெரியம்மா போன்ற வயதானவர்களும் மலை ஏறுவார்கள்.என்னைவிட மலை ஏறுவது அவர்களுக்கு பல மடங்கு சிரமம்.அத்தனை சிரமங்களை தாண்டி தரிசனம் செய்வது தான் சிறப்பு.

உடலை வருத்தி,துன்புற்று தரிசனம் செய்வதே பக்தியின் சிறப்பு.கோயிலுக்கு போகும் அந்த சில நாட்களாவது நம் சொகுசான வாழ்க்கையை தியாகம் செய்வது ஒரு லேர்னிங் எக்ஸ்பீரியன்ஸ் என்றே எடுத்து கொள்ளவேண்டும்.திருப்பதியில் கூட்டம் இருக்கு,நெரிசல்,பிடித்து தள்ளிவிடுகிறார்கள்,லட்டு கிடைப்பதில்லை...என்றெல்லாம் புகார் சொல்ல ஆரம்பித்தால் அதுக்கு முடிவே இல்லை.வாழ்க்கையில் இம்மாதிரி பிரச்சனைகள் இல்லாத இடங்கள் எங்கே உள்ளன?ஒரு ரெண்டு,மூணு நாள் கஷ்டம் அனுபவிக்க விரும்பாமல் பலர் திருப்பதிக்கு போகமாட்டேன் என எளிதான முடிவை எடுத்துவிடுகின்றனர்.

நஷ்டம் யாருக்கு?

ஓம் நமோ,நாராயணா..


--
செல்வன்

"உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே"

— அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்



www.holyox.blogspot.com


Tthamizth Tthenee

unread,
Dec 18, 2010, 3:26:10 AM12/18/10
to mint...@googlegroups.com
“  உடலை வருத்தி,துன்புற்று தரிசனம் செய்வதே பக்தியின் சிறப்பு “
 
இல்லை  அப்படி  உடலை வருத்தி  என்னை நமஸ்காரம் செய் என்று எந்த தெய்வமும்  சொல்லவில்லை, உடலை  வருத்துவதை விட
 
மனதை ஈடுபடுத்தி ஒருமுகமாக  வழிபாடு செய்தலே நல்ல பக்தி
 
அந்த திருப்பதியின் சூழ்நிலையிலும்   சுற்றுப்புற சூழல்கள் தம்மைப் பாதிக்காதவண்ணம்  இறைவனோடு ஒன்றி மனம் முழுவதும் வேங்கடவனை  வியாபிக்க வைத்து  தரிச்னம் செய்து வருவோரும் உண்டு
 
அப்படி மாறவேண்டும் என்பதை வலியுறுத்தியே  சொன்னேன்
 
திரு செல்வன் அவர்களே  என்னுடைய நோக்கமே
 
திருப்பதிக்கு செல்லும் போது நாம் பக்தியில் மூழ்கினாலும் ஜாக்கிறதை உணர்வோடும் இருக்க வேண்டும் என்பதே
 
அது மட்டுமல்ல  சொர்கமும் நரகமும் அவரவர்க்கேற்றபடி இங்கேயே அனுபவிக்கலாம் என்றும் சொன்னேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
2010/12/18 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Dec 18, 2010, 3:30:59 AM12/18/10
to mint...@googlegroups.com
தேனி ஐயா

நீங்கள் திருப்பதி மேல் பாசம் இல்லாமலா ஸ்தலபுராணத்தை எழுதுவீர்கள்? நான் உங்களை சொல்லவில்லை ஐயா. எனக்கே பலதரம் "இத்தனை கஷ்டபட்டு ஏன் திருப்பதி போகணும்" என தோணும்.அப்போது நான் எனக்கு என்ன சமாதானம் சொல்லிக்குவேன் என்பதையே எழுதினேன்.

2010/12/18 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Dec 18, 2010, 3:39:31 AM12/18/10
to mint...@googlegroups.com
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஆஆ
 
நாம் எல்லோருமே  அங்கே எவ்வளவு கஷ்டப்பட்டாலும்  வேங்கடவனை தரிசிக்க அத்துணை கஷ்டங்களையும் சகிக்கத் தயாராய் இருக்கிறோம்  என்பதில் ஐயமில்லை
 
திருப்பதி  நிர்வாகஸ்தர்களும்  இயன்றவரை வசதிகள் செய்து கொடுக்கிறார்கள்
 
கூடுதலாக  இப்போது தானியங்கி நகரும் இயந்திரம் பொருத்தப் போகிறார்கள்
 
ஆனாலும் சில இடைத்தரகர்கள் மக்களின் பக்தியைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க செய்யும் காரியங்களினால் மக்கள் அவதியுறுகிறார்கள்
 
அவற்றை சுட்டிக்காட்டவே  நானும் முயல்கிறேன்
 
எல்லாவற்றிர்க்கும் மேலாக அவன் அருள் இருக்குமேயானால்  நாம் சிறப்பாக தரிசனம் செய்ய முடியும் என்பது உண்மை

செல்வன்

unread,
Dec 18, 2010, 3:44:32 AM12/18/10
to mint...@googlegroups.com
உண்மைதான் தேனி ஐயா

திருப்பதி கிரவுட் மேனேஜ்மெண்ட் பிரச்சனையை எதாவது புரடக்ஷன் & ஆபரேஷன்ஸ் எம்.பி.ஏ வகுப்பில் கேஸ் ஸ்டடியாக எடுத்து செய்யலாம்.செய்தால் நிலையில் பெருத்த மாற்றம் வரலாம் என எண்ணுகிறேன்.

செல்வன்

unread,
Dec 18, 2010, 3:57:36 AM12/18/10
to mint...@googlegroups.com
பாலமலை ரங்கநாதர் ஆலயம் பற்றிய தொகுப்பு.

கோவை பக்கம் போனால் இந்த கோயிலுக்கு கட்டாயம் போய்வாருங்கள்.இப்போது சாலை போட்டுவிட்டார்கள்.காரிலேயே போய்வரலாம்.




அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில்
 
[Image1]
 

 
 

மூலவர்:  ரங்கநாதர்
  உற்சவர்:  -
  அம்மன்/தாயார்:  -
  தல விருட்சம்:   - 
  தீர்த்தம்:   பால்சுனை, பத்மதீர்த்தம், செங்கோதை சுனை, கன்னிமார் சுனை, பசுமானி சுனை
  ஆகமம்/பூஜை :   -
  பழமை :   500-1000 வருடங்களுக்கு முன்  
  புராண பெயர் :  -
  ஊர் :   பாலமலை, பெரியநாயக்கன்பாளையம்
  மாவட்டம் :  கோயம்புத்தூர்
  மாநிலம் :  தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
  -  
     
 திருவிழா:
     
  சித்ராபவுர்ணமி அன்று திருத்தேர் நிகழ்ச்சி நடக்கும்.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு ரங்கநாதர் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
  காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
    
முகவரி:
    
  அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், பாலமலை, பெரியநாயக்கன்பாளையம் - 641020. கோயம்புத்தூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91-94433 48564 
    
 பொது தகவல்:

வழியெங்கும் நிழல் தரும் மரங்கள் இருப்பதால் மலை ஏறும் களைப்பு பக்தர்களுக்கு தெரிவதில்லை. சமீபகாலத்தில் கோயில் கட்டடத்தை கட்ட கற்கள் இல்லாததால் கோயிலின் பக்தர்கள் சஞ்சலமுற்று ஏங்கி தவித்தனர். அப்போது ஒரு நாள் திடீரென பயங்கரமான சப்தம் கேட்டது. மறுநாள் காலை பார்த்தபோது பெரிய பாறை ஒன்று பிளவு பட்டு கிடந்தது.பின்னர் அதில் இருந்த கற்களை கொண்டு கோயில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது கோயிலுக்கு மேலே நான்கு கார்கள் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனம் ஒன்று பெரிய மண்டபம் ஒன்றை கட்டி கொடுத்துள்ளது.கடந்த ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தை ஒட்டி கோயில் புதுப்பிக்கப்பட்டது. மேலும் பத்ம தீர்த்தம் எனப்படும் தெப்பக்குளம் தூர் வாரப்பட்டு அழகுற காட்சியளிக்கிறது.

 
பிரார்த்தனை
    
  சாபங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்தால் பாதிப்பு குறையும் என்பது நம்பிக்கை. 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கும் தாயாருக்கும் விசேஷ திருமஞ்சனம் செய்து, சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் செய்கிறார்கள்.  
    
  தலபெருமை:

கோயிலில் விந்தைகள் பல புரிந்து பக்தர்களின் மனங்களை குளிர வைத்த ரங்கநாதர் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.தாயார் சந்நிதியும் தும்பிக்கையாழ்வார் சந்நிதிகள் தனித்தனியாய் இருக்கின்றன. கோயிலை சுற்றிலும் சுவாமி உற்சவ காலத்தில் திருத்தேர் வலம் வரவும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் ஏக காலத்தில் பெருமாளை தரிசிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.இங்கு நிலவும் தட்ப வெப்ப சூழ்நிலை பல வியாதிகளை போக்ககூடிய வகையில் இருப்பதால் பலர் இக்கோயிலுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். கோயில் அருகே இருளர் என்னும் மலை ஜாதியினர் வசித்து வருகின்றனர். கோயிலுக்கு முன்புறம் உள்ள திருத்தேர் கை தேர்ந்த சிற்பிகளால் செய்யப்பட்டு அழகுற விளங்குகிறது.சனிக்கிழமை மற்றும் அமாவாசை தினங்களில் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து பெருமாளை வழிபட்டு செல்கின்றனர். உட்பிரகாரத் தில்விநாயகர், ஆஞ்சநேயர், ராமானுஜர்ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.

 
  தல வரலாறு:

முன்னொரு காலத்தில் காலவ மகரிஷி இறை வன் நாரயணனைக் குறித்து பல ஆண்டுகள் தவம் இருந் தார். அப்போது, விஸ்வாசு என்ற கந்தவர்னின் குமாரன் துர்தமன் தனது மனைவிகளோடு குளத்தில் நீராடி கொண்டு இருந்தான்.கைலாசத்தில் இருந்த ஈஸ்வரனை வழிபட்டு வசிஷ்ட முனிவர் திரும்பி கொண்டு இருந் தார். அப்போது, துர்தமன் மனைவிகள் நீராடுவதை நிறுத்தி கொண்டு குளக்கரையில் ஏறி கொண்டனர். ஆனால், துர்தமன் தொடர்ந்து ஆடை அணியாமல் குளித்துக் கொண்டு இருந்தான். இதனால் சினமடைந்த வசிஷ்ட மகரிஷி துர்தமனை அரக்கனாக சபித்தார். இதனால் துர்தமனின் மனைவிகள் கலக்கமடைந்தனர்.தங்களுக்கு மாங்கல்ய பிச்சை அளிக்க வேண்டும் என்று வசிஷ்ட மகரிஷியிடம் வேண்டினார்.அவர்கள் பிரார்த்தனையால் மனமிரங்கிய வசிஷ்டரும் இன்னும் சிறிது காலத்தில் உங்கள் நாயகன் உங்களை வந்தடைவான் என்று கூறினார்.அது வரை நீங்கள் பகவானை பூஜித்து வாருங்கள் என்றார். இதன்படியே துர்தமனும் பல ஆண்டு காலம் காடு மேடுகளில் சுற்றி அலைந்தான்.இந்நிலையில் காலவ மகரிஷியை கண்டு ஆந்திரமடைந்த அரக்க உருவில் இருந்த துர்த மன் காலவ மகரிஷியை துன்புறுத்த துவங்கினான். அரக்கனின் பிடியில் சிக்கி தவித்த காலவ மகரிஷி பெருமாளை வேண்ட பெருமாளும் திருக்கரத்தை பயன்படுத்தி அரக்கனை அடக்கினார். பின்னர், காலவ மகரிஷி பெருமாளை வழிபட்டார். துர்தமனும் சாப விமோசனம் பெற்றான். இந்த நிகழ்வு இங்கு நடந்ததாக கூறப்படுகிறது.முன்னொரு காலத்தில் நந்தபூபாலர் என்ற அரசர் ஆட்சிசெய்து வந்தார். இவருடைய மகன் தர்மகுப் தர். நந்தபூபாலர் ஆட்சியைத் துறந்து இறைவனை வழிபட காட்டுக்கு சென்றார். இந்நிலையில் நந்தபூபாலர் மகன் தர்மகுப்தர் நெறிதவறாமல் ஆட்சி செய்து வந்தார்.ஒருநாள். தர்மகுப்தர் வேட்டையாட காட்டுக்கு சென்றார். மாலை மங்கியதும் அடர்ந்த காட்டில் வழிதெரியாமல் தர்மகுப்தர் ஒரு மரத்தின் மீது ஏறி காயத்ரி மந்திரத்தை ஜெபித்து கொண் டிருந்தார். அப்போது சிங்கத்தால் துரத்தப்பட்ட கரடி தர்மகுப்தன் ஏறி இருக்கும் மரத்தின் மீது ஏறி அவனருகே அமர்ந்தது.கீழே சென்றால் இருவரின் உயிருக்கும் ஆபத்து என்பதால், ""முதல் பாதி இரவு நீர் உறங்கி கொள்ளும் நான் காவல் காக்கிறேன். இரண்டாவது பாதி இரவில் நான் உறங்குகிறேன் நீர் காவல் காக்கவேண்டும்,'' என கரடி கூறியது.அதன் படியே தர்மகுப்தர் உறங்கினார். அப்போது கீழே இருந்த சிங்கம் கரடியை பார்த்து தர்மகுப்தரை கீழே தள்ளிவிடு என்றது. ஆனால் கரடி உலகத்திலேயே மிகப்பெரிய பாவம் நம்பிக்கை துரோகம் தான் அதனை நான் செய்ய மாட்டேன் என்றது.ஆனால் தர்மகுப்தரின் ஆதரவில் தூங்கும் கரடியை சிங்கத்தின் வார்த் தையில் மதி மயங்கிய தர்மகுப்தன் கீழே தள்ளிவிட்டான். அதிர்ஷ்டவசமாக தப்பித்த கரடியானது தர்மகுப்தரின் நம்பிக்கை துரோகத்தை பொறுக்காது தர்மகுப்தர் பைத்தியம் பிடிக்கும் படியாக சாபமிட்டது.இதனையடுத்து தர்மகுப்தரும் பல இடங்களில் பைத்தியம் பிடித்தவராக அலைந்து திரிந்தார்.இதனை கேள்விபட்ட நந்த பூபாலர் மகன் தர்மகுப்தனை அழைத்து கொண்டு ஜைமினி முனிவரிடம் சென்றார். அவரும் தற்போது உள்ள பாலமலை பத்மதீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபடுமாறு கூறினார். அதன்படியே செய்ய தர்மகுப்தர் பைத்தியம் தெளிந்தது.

Tthamizth Tthenee

unread,
Dec 18, 2010, 4:01:49 AM12/18/10
to mint...@googlegroups.com
அருமை  !
 
 
நிச்சயம் கோவை செல்லும்போது  இந்த அருள் மிகு ரங்கநாதரை  தரிசித்து புகைப்படங்கள்  எடுந்து வருவேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/12/18 செல்வன் <hol...@gmail.com>
பாலமலை ரங்கநாதர் ஆலயம் பற்றிய தொகுப்பு.

LK

unread,
Dec 18, 2010, 4:05:50 AM12/18/10
to mint...@googlegroups.com
செல்வன் ஜி

கோவையில் இருந்து எப்படி செல்ல வேண்டும் ?

2010/12/18 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Dec 18, 2010, 4:10:21 AM12/18/10
to mint...@googlegroups.com
திருப்பதி மஹாத்மியம் பாகம்  5
 

இறைவனை தரிசிக்கும் ஆசையில்  சில மஹரிஷிகள் குழந்தை வடிவமெடுத்துக்கொண்டு  வைகுந்தம்  சென்றனர்.   அங்கே இருந்த  துவாரபாலகர்கள்  என்னும்  வாயிற்காவலர்கள்  இவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை, இப்போதும் நாம் எந்தக் கோயிலுக்கு சென்றாலும்  முதலில் துவாரபாலகர்களை  வணங்கி  அவர்களிடம் அனுமதி பெற்றுத்தான் மூலஸ்தானத்தில் இருக்கும்  தெய்வத்தை  வணங்கவேண்டும், 
மஹரிஷிகளுக்கு  கோபம் உண்டாகி  துவாரபாலகர்களை  நீங்கள் அரக்கர் குலத்தில் பிறக்கக்கடவது என்று சபித்தனர். அப்போது அங்கே வந்த நாராயணன்  தான் கட்டளையிட்ட படியே  அவர்கள் வாயிலைக் காவல் காத்தனர் ,அவர்களுக்கு  இது போன்ற சாபம் ஏற்பட்டதே   என்று வருந்தி அவர்களைப் பார்த்து  நீங்கள்  நல்லவர்களாகப் பிறந்து  வெகுகாலம் என்னை விட்டு நீங்கி பிறகு என்னை வந்து  அடைகிறீர்களா  ,அல்லது  தீயவர்களாகப் பிறந்து  தீச்செயல்கள் புரிந்து அனைவரும் உங்களை வெறுத்து  ஒதுக்கினாலும், கெட்ட பெயர் எடுத்தாலும் சரி என்று வாழ்ந்து  சீக்கிறம் என்னை வந்துஅடைகிறீர்களா  என்று கேட்கவே 
 
துவார பாலகர்கள் இருவரும்  ஸ்ரீமன் நாராயணா  உன்னை விட்டு நீங்கி நாங்கள் எப்படி இருப்போம் அதுவே எங்களுக்கு தண்டனைதானே  , ஆகவே தீயவர்களாகவே பிறக்கிறோம்  .எப்படியோ  உன்னை நாங்கள் சீக்கிறம் வந்து அடையவேண்டும்  என்று வேண்டினர்.  அவர்களே  இரண்யாட்ச்ச ,இரண்யகசிபர்களாகப் பிறந்தனர்
இரண்யாட்சனும், இரண்யகசிபுவும்  தீமைகளை  மிக அதிகமாக செய்து வரலாயினர் ,ஆம் அவர்களுக்கு சீக்கிறம் ஸ்ரீமன் நாராயணனை வந்து அடையவேண்டும்.
 
இரண்யாட்சன்   பூமியை ஒரு பாயாகச் சுருட்டி  ஓரிடத்தில் மறைத்துவைத்துவிட்டான்,  தேவர்கள் ஸ்ரீமன் நாராயணனிடத்திலே வேண்டிக்கொண்டபடி  ஸ்ரீமன் நாராயணன்  வராக ரூபம் தரித்து இரண்யாட்சனைக் கொன்று  அவனுக்கு முக்தி அளித்து  பூமியைக் காப்பாற்றி மீட்டார், அப்போது  கலியுகத்தில் பக்தர்களைக் காக்க வராக மூர்த்தியாகவே  பூமியில் எப்போதும் இருக்க வேண்டும் என்னும் தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி சேஷாத்திரி மலையிலேயே  வராக மூர்த்தியாக தங்கினார் . வராக மூர்த்திக்கு  சிறந்த பக்தையாக வகுளாதேவி  அங்கே இருந்து சேவை செய்து வந்தாள்.
 
 
ஆமாம் யார் இந்த வகுளாதேவி?
 
துவாபர யுகத்திலே  உலகத்திலே  யாருக்குமே  கிடைக்காத பெரும் பாக்கியத்தை செய்து பகவான் கண்ணனையே குழந்தையாகப் பெற்றவள்  அல்லவெனினும்  வளர்த்து பரமானந்தம் அடைந்தவள், அனுபவித்து மகிழ்ந்தவள்,  என்ன தவம் செய்தனை  என்று ஈரேழு லோகங்களும் வியந்த  பாக்கியசாலி  அவள்தான்  ”யசோதை”, எத்தனை பேருக்கு  கிடைக்கும் இந்த பாக்கியம் !
துவாபர யுகத்திலே  யதுகுலம் மொத்தமும் அழியும் வேளை,
பகவான் கிருஷ்ணனும்  விடை பெறும் வேளை  வந்தது, அப்போது  யதுகுலத்தவர்  அனைவருமே  கிருஷ்ணனைப் பிரிய  மனம் இல்லாமல்  வருந்தினர், அப்போது  கிருஷ்ணன் அவர்களைப் பார்த்து  கவலைப்படவேண்டாம் மீண்டும்  கலியுகத்திலே  நீங்கள் அனைவருமே  பிறந்து என்னுடன் இருப்பீர்கள் என்று அவர்களுக்கு  ஆறுதல்  கூறிவிட்டு , யசோதையிடம் அம்மா நான் உங்களையும் பிரியும் நேரம் வந்துவிட்டது  என்றான்.  யசோதை விக்கித்துப் போனாள். கிருஷ்ணா நான் எப்படி இந்தப்   பிரிவைச் சகிப்பேன்  என்று வருந்தினாள். அம்மா  என்னைப் பெற்ற  தேவகி கூட அனுபவிக்காத பாக்கியத்தை  அனுபவித்த தாயே  விதிப்படியே எல்லாம் நடக்கும் என்று அவளைத் தேற்றினான் கிருஷ்ணன்.

ஈரேழு லோகமும்  என்ன தவம் செய்தனை என்று வியக்கும் வண்ணம் வாழ்ந்த  யசோதைக்கும் ஒரு குறை இருந்தது, ஆம்
கிருஷ்ணனுக்கு நடந்த இரு திருமணங்களையுமே  அவள் பார்க்கவில்லை  என்கிற குறைதான்  அது, ஆகவே  நான் உன் திருமணத்தை பார்க்கவேண்டுமே  என்றாள் யசோதை.
கலியுகத்திலே உங்கள் ஆசை நிறைவேறும். அப்போது  நான் திருவேங்கடதானாக  அவதரிப்பேன், அப்போது  நீங்கள் அங்கே  வகுளாதேவியாக பிறந்து, வராகமூர்த்தியை  வழிப்பட்டு வாருங்கள்.  அங்கே உங்களை நான்  சந்திக்கிறேன், என் திருமணத்தைக் காணும் பக்கியம் அங்கே உங்களுக்கு கிடைக்கும் என்றார் கிருஷ்ணன்.
 
ஆமாம்  தலையிலே வெட்டுக்காயம் ஏற்பட்டதால்  வருந்தும் நாராயணன்   என்ன ஆனார் என்று பார்க்கலாமா?
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/12/18 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

செல்வன்

unread,
Dec 18, 2010, 4:09:00 AM12/18/10
to mint...@googlegroups.com
எல்கே

கோவையிலிருந்து பெரியநாயக்கன் பாளயம் செல்லவேண்டும்.அங்கே பாலமலை பிரிவு உள்ளது.அதில் போனால் நாலைந்து மைலுக்குள் பாலமலை வந்துடும்.

நன்றி தேனி ஐயா..கோவை போனால் பாலமலை, பாலமலை பக்கத்தில் இருக்கும் காரமடை அரங்கநாதர் கோயில் மற்றும் காரமடை அருகே இருக்கும் தென் திருப்பதி மூன்றையும் தரிசிக்கலாம்.

LK

unread,
Dec 18, 2010, 4:16:34 AM12/18/10
to mint...@googlegroups.com
அடுத்த முறை கோவை வரும்பொழுது இதற்க்கு ஒரு நாள் ஒதுக்குகிறேன். செல்வன் இதை ஒரு தனி இழையில் போடுங்க. சிலகாலம் கழித்து படிப்போருக்கு வசதியாக இருக்கும் 

2010/12/18 செல்வன் <hol...@gmail.com>
எல்கே
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Tthamizth Tthenee

unread,
Dec 18, 2010, 4:19:25 AM12/18/10
to mint...@googlegroups.com
அன்பு வேண்டுகோள்
 
திரு  எல் கே, அவர்களே ,திரு செல்வன் அவர்களே மற்ற விவரங்களை வேறு இழையில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்
 
 
இந்த இழையில்  திருப்பதி மஹாத்மியம்  தொடர  உதவி செய்யுங்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

Tthamizth Tthenee

unread,
Dec 18, 2010, 10:03:14 AM12/18/10
to mint...@googlegroups.com
திருப்பதி மஹாத்மியம்  பாகம் 6.
 
நாராயணன் தன் தலையில் ஏற்பட்ட காயத்தை ஆற்றிக்கொள்ள  மூலைகை தேடி அலைந்துகொண்டிருந்தார்,இதைக்கண்ட தேவ குரு பிருஹஸ்பதி  நாராயணனைக் காண சேஷாத்திரி மலைக்கு வந்தார். பிருஹஸ்பதியைக் கண்ட நாராயணன்  தனக்கு காயம் ஏற்பட்ட விதத்தைக் கூறி  தகுந்த மருந்து சொல்லும்படி வேண்டினார்.  நாராயணா  பக்தர்களைக் காக்க நீங்கள் எத்தனை துன்பங்களை  அனுபவிக்கிறாய், எல்லாம் உன் லீலைகளே, உனக்குத் தெரியாததா?  ஆயினும் என்னிடம் கேட்டதால் நான் சொல்லுகிறேன்.  உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் காயத்தினைப் ஆற்ற
அத்தி மரத்தின் பாலைக் கொண்டு வந்து அதிலே எருக்கம் பருத்தியை  நனைத்து  ஒரு வாரம் போட்டால் குணமாகிவிடும் . என்று கூறி விடை பெற்றார் பிருஹஸ்பதி.
 பிருஹஸ்பதி சொன்ன அத்தி மரத்தையும், எருக்கம் பருத்தியையும் தேடிக்கொண்டே வராஹமூர்த்தியின் ஆஸ்ரமத்தை  வந்தடைந்தார்  நாராயணன் ,
வராஹ மூர்த்தியும் நாராயணனை வரவேற்று உபசரித்தார், நாராயணன்  வராஹ மூர்த்தியிடம் தன் கதையைக் கூறி   இந்த மலையில் சில காலம் தங்க அனுமதிக்கவேண்டும்  என்று கோரினார்.  இதைக்கேட்ட வராஹ மூர்த்தி  நான் உங்களுக்கு இலவசமாக இடம் தரமுடியாது  ஆகவே நீங்கள் இங்கே தங்கவேண்டுமென்றால் எனக்கு அதற்கு ஈடாக நீங்கள் ஏதேனும் தரவேண்டும் என்றார்
அதற்கு ஸ்ரீமன் நாராயணன் நானே லக்‌ஷ்மியைப் பிரிந்து இருக்கிறேன் என்னிடத்திலே  ஒன்றுமில்லை,ஆகவே நீங்கள் மனமிறங்கி  என்னை அனுமதிக்கவேண்டும், அதற்கு பதிலாக  என்னைக் காண வரும் பக்தர்கள்  முதலில் உங்களை சேவித்து  உங்களுக்கு  நைவேத்யம் ,காணிக்கை செலுத்திவிட்டு  என்னைக் காணவரட்டும்  என்றார், இந்த ஒப்பந்தத்தை  வராஹரும் ஒப்ப்க்கொண்டார், அதனால்தான் முதலில் ஸ்ரீவாரி  தீர்த்தக் குளத்தின் கரையில் உள்ள வராஹரை தரிசித்து  பின்னரே  வேங்கடவனைக் காணவேண்டும் என்னும் நியதி ஏற்பட்டது
வராஹர் நாராயணனுக்கு இந்த ஒப்பந்தப்படி  100 அடி நிலம் அளித்து
 வகுளாதேவியையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
வகுளாதேவி ஒரு நாள் நாராயணிடம்  உங்களைப் பற்றி நான் அறிந்து கொள்ளவேண்டும் என்றாள்
நாராயணனும்  தன்னுடைய நிராதரவான நிலையையும், தனக்கென்று யாரும் இல்லையென்றும் வகுளாதேவிதான் தன்னை ஒரு தாயாய் இருந்து கவனித்துக்கொள்ளவேண்டும்  என்றும்
அவளைத்  தான் தாயாகவே மதிப்பதாகவும் கூறினார்
இவற்றைக் கேட்ட வகுளாதேவியின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர்  வழிந்தது, குழந்தாய் எனக்கும் யாருமில்லை,குழந்தையற்ற  எனக்கு இனி நீதான் குழந்தை ,இனி உன்னை என் கண் போல் காப்பேன்  என்று கூறிவிட்டு  உனக்கு நான் ஒரு பெயரிடுகிறேன்
இன்று முதல் உன்னை  அனைவரும்  ஸ்ரீனிவாசன் என்று அழைக்கட்டும்  என்று ஆசீர்வதித்தாள்    வகுளாதேவி.    நாமகரணம் ஆயிற்று  ஸ்ரீனிவாசன் என்று வகுளா தேவித்தாயாரால், ஸ்ரீமன் நாராயணனுக்கு  பெயரிடும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும், அதுசரி  வகுளாதேவியின் மூலமாக நாமகரணம் செய்து கொள்ள எத்தனை பேருக்கு  பாக்கியம் கிடைக்கும்?.
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 

 
2010/12/18 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

kalairajan krishnan

unread,
Dec 21, 2010, 5:39:44 AM12/21/10
to mint...@googlegroups.com
ஐயா தமிழ்த்​தேனியார் அவர்களுக்கு வணக்கம்,

திரு​வேங்கடவன் புராணம் படித்துப் பயன​டைந்து வருகி​றேன்,


 அதனால்தான் முதலில் ஸ்ரீவாரி  தீர்த்தக் குளத்தின் கரையில் உள்ள வராஹரை தரிசித்து  பின்னரே  வேங்கடவனைக் காணவேண்டும் என்னும் நியதி ஏற்பட்டது
ஆமாம் ஐயா,
இந்த மு​றை எனது வயதான தா​யை உடன் அ​ழைத்துச் ​சென்றதால் வராக​ரை வணங்க இயவில்​லை,
திரு​வேங்கடவன் எனது தவ​றைப் ​பொருத்தருளட்டும்,

Tthamizth Tthenee

unread,
Dec 21, 2010, 6:12:09 AM12/21/10
to mint...@googlegroups.com

பாகம் 7

வராக மூர்த்தியின் அருளால் நீ கிடைத்திருக்கிறாய்,
என்னை விட்டு இனி நீ  பிரியக் கூடாது என்றாள் வகுளாதேவி
ஒரு முறை பட்ட அனுபவம் போலும்,  நாராயணம் மிகவும் மகிழ்வுற்றவராய்  அம்மா என்று உங்களை அழைக்க நான் பாக்கியம் செய்திருக்கிறேன், நீங்கள்தான் என்னுடைய தாயார், உங்களை விட்டு நான் பிரியமாட்டேன் என்றார், மகிழ்ந்தாள் வகுளாதேவி, நாராயணன் தலையில் இருந்த காயத்துக்கு மூலிகைகளால் ஆன மருந்தை  தடவி , கானகத்திலே இருந்து அவள் பறித்துக்கொண்டு வந்த கனிகளை  அவனுக்கு ஊட்டி  தாய்மையை  ரசிக்க ஆரம்பித்தாள் வகுளாதேவி.

தாயின் மகிழ்ச்சியைக் கண்ட நாராயணன்  தான் லக்‌ஷ்மியைப் பிரிந்து இருப்பதைக் கூறி அவள் மகிழ்ச்சியை  கெடுக்க வேண்டாம்  என்று நினைத்தவராய் வகுளாதேவியிடம் ஒன்றும் சொல்லாமல்  மனதுக்குள்ளே கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்.


மஹாலக்‌ஷ்மி என்ன ஆனாள் என்று பார்க்கவேண்டுமே!

சேஷாத்திரி மலைக்கு அருகே இருந்த  நாராயணபுரம் என்னும் பட்டிணத்தை தலைநகராகக் கொண்டு  சந்திரவம்சத்தில் பிறந்த சுதர்மன் என்னும்  மன்னன் ஆண்டு வந்தான்.  அவனுடைய மூத்த குமாரன் ஆகாசமன்னன், இளைய குமாரன் தொண்டைமான்,
ஆகாச  மன்னனுக்கு  முடி சூட்டிவிட்டு சுதர்மன் தவம் செய்ய கானகம் ஏகினான்.

ஆகாச மன்னனின் இல்லத்தரசிக்கு  தரணிதேவி என்று பெயர்,
ஆகாசமன்னன் நல்லவன், தர்ம வழிப்படி நடப்பவன்நாட்டு மக்களை  மிகவும் சுபிக்‌ஷமாக  வைத்திருந்தான், அரணிதேவியும் தரும நெறி தவறாமல் வாழ்ந்திருந்தாள், நல்லவர்களுக்கு  எப்போதுமே  சோதனைகள் அதிகம் வரும் ,அதே போல  அவர்களுக்கு  குழந்தை பாக்கியம் இல்லை.

பல தெய்வங்களை பூஜித்தனர், தான தருமங்கள் செய்தனர்
ஒரு நாள் ஆகாசமன்னன் ராஜ குரு சுகமாமுனிவரிடம்
மக்கள்பேறில்லாமல் நாங்கள் தவிக்கிறோமே  இதற்கு ஏதேனும் பரிகாரம் சொல்லக் கூடாதா  என்று வேண்டினான்.
அதற்கு ஆகாச மன்னா  தசரதன் புத்திரன் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான் ,நற்புத்திரர்களை அடைந்தான் ,அவ்வழியே நீங்களும் புத்திரகாமேஷ்டியாகம் செய்யுங்கள் உங்களுக்கும் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்றார்

சுக முனிவரின் யோசனைப்படியே ஆகாசமன்னன் புத்திரகாமேஷ்டியாகம் செய்ய ஆயத்தம் செய்தான், ஒரு குறிப்பிட்ட சுப வேளையில் யாகம் செய்யத் தேர்ந்தெடுத்த இடத்தில் தங்கத் ஏரினால் உழுதான், ஏர் எதன் மீதோ  இடித்தது,   மன்னன் பூமியில் எதன்மீது ஏர் இடிக்கிறது என்று பார்க்கையில் அங்கே ஒரு பெட்டி இருப்பதைக்கண்டு அந்தப் பெட்டியைத் திறந்தான் , ஆயிரம் இதழ் கொண்ட தாமரையும்  ,அழகான ஒரு பெண்குழந்தையும் அதிலிருப்பதைக்  கண்ட ஆகாச மன்னனின் கண்கள் வியப்பால் விரிந்தன,
அக்குழந்தையைக் கையிலெடுத்தபோது  ஆகாசமன்னா  நீ இக்குழந்தையை உன் பூர்வ ஜெனம புண்னியத்தினால்  அடைந்திருக்கிறாய், இக்குழந்தையை வளர்க்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது உனக்கு, இக்குழந்தையால் உங்கள் குலமே  புனிதமடையும்  என்று ஒரு அசரீரி கேட்டது

ஆயிரம் இதழ் கொண்ட தாமரையில் இருந்த குழந்தையாதலால் அக்குழந்தைக்கு பத்மாவதி   அலர் மேல் மங்கை  என்று நாமகரணம் சூட்டி  மிகுந்த மகிழ்ச்சியுடன் வளர்த்துவந்தான்

ஆமாம்  யார் இந்த பத்மாவதி?
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/12/21 kalairajan krishnan <kalair...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Dec 21, 2010, 6:15:16 AM12/21/10
to mint...@googlegroups.com
நன்றி காளைராஜன் அவர்களே
 
தொடர்ந்து  படியுங்கள் 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/12/21 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

kalairajan krishnan

unread,
Dec 21, 2010, 6:21:22 AM12/21/10
to mint...@googlegroups.com
ஐயா,

2010/12/21 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

நன்றி காளைராஜன் அவர்களே
 
நன்றி​யை நாங்கள் அல்ல​வோ கூற ​வேண்டும்,
சூத முனிக்கு எங்களது நன்றி,

 
தொடர்ந்து  படியுங்கள் 
ஆமாம் ஐயா
​தொடர்ந்து படித்து வருகி​றேன்

அன்பன்
கி.கா​ளைராசன்

--
Reply all
Reply to author
Forward
0 new messages